செவ்வாய், 27 ஏப்ரல், 2010

விடுமுறைப் புதிர்

புதிர்களுக்கு விரைவாக நிறைய பதில்கள் தருவதும் படைப்பாற்றல்தான் என்று ஏற்கெனவே பார்த்தோம். இதோ சில சுலபமான கேள்விகள். பதில்களை பின்னூட்டமாகப் பதியலாம் அல்லது எங்கள் ஜி மெயிலுக்கும் (engalblog@gmail.com) அனுப்பலாம். 

விடை / (பொருள்)  எட்டு (8) என்று வருகின்றாற்போல், சில கேள்விகளை நீங்கள் அமைக்கவேண்டும். எழுத்துக்களால் அல்ல, தீக்குச்சிகள் கொண்டு.
1) பத்து தீக்குச்சிகள் கொண்டு.
2) ஒன்பது தீக்குச்சிகள் கொண்டு.
3) எட்டு தீக்குச்சிகள் கொண்டு.
4) ஏழு தீக்குச்சிகள் கொண்டு. ** (ஒரு விடை கீழே காண்க)
5) ஆறு தீக்குச்சிகள் கொண்டு.
6) ஐந்து தீக்குச்சிகள் கொண்டு.
# ஒன்றிலிருந்து நான்கிற்குள் தீக்குச்சிகள் உபயோகித்து எட்டு கொண்டு வருபவர்களுக்கு சிறப்புப் பாராட்டுகள் உண்டு.

ஏழு தீக்குச்சிகளைக் கொண்டு எட்டு வரவழைத்த சுலபமான வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
                                                                  
பின் குறிப்பு: 
ஒவ்வொரு கேள்விக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட விடைகளும் இருக்கக்கூடும். 

யோசியுங்கள், விடை அளியுங்கள், உங்களை யார் என்று எங்கள் மூலம் உலகுக்கு உணர்த்துங்கள். 

21 கருத்துகள்:

  1. ||# ஒன்றிலிருந்து நான்கிற்குள் தீக்குச்சிகள் உபயோகித்து||

    uh...உடைத்தா உடைக்காமலா?

    பதிலளிநீக்கு
  2. எட்டு போட்டு காட்டிரணும்னு தோணுது, ஆனா தீக்குச்சி இல்ல்ல்ல்ல்லியே?!

    பதிலளிநீக்கு
  3. ஏழு (2 குச்சி) கூட்டல் சின்னம் (2 குச்சி) ஒன்று (1 குச்சி)

    ஒன்பது (5 குச்சி) கழித்தல் சின்னம் (1 குச்சி) ஒன்று (1 குச்சி)

    நான்கு (3 குச்சி) கூட்டல் சின்னம் (2 குச்சி) நான்கு (3 குச்சி)

    பதிலளிநீக்கு
  4. உங்கள் இமெயிலுக்கு என் பதிலை அனுப்பி இருக்கிறேன். சரியா என்று சொல்லவும்.--கீதா

    பதிலளிநீக்கு
  5. ரோமன் நம்பர் எட்டு போட ஐந்து குச்சிகள்.

    பதிலளிநீக்கு
  6. சீக்கிரம் யாராவது வந்து விடையை
    சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  7. CROSS ரெண்டு குச்சி. மேலும் கீழும் ரெண்டு குச்சி. நான்கு குச்சில எட்டு வந்துடுச்சா.

    பதிலளிநீக்கு
  8. இருக்கற கொஞ்ச நஞ்ச மூளையையும் இப்படி வேலை வாங்கறீங்களே சார்....Jokes apart, nice useful posts to increase aptitude skills. I will try to do it. Thanks

    பதிலளிநீக்கு
  9. சுகமானதா பாத்து நீங்க போட்டுக் காட்டிட்டு எங்களுக்கு கஸ்டமானதை விட்டு விளையாடச் சொல்றீங்க.நான் வரல இந்த விளையாட்டுக்கு.

    பதிலளிநீக்கு
  10. துரை சார், தீக்குச்சிகளை உடைக்கக்கூடாது.
    மீனாக்ஷி வழக்கம்போல கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள். இதுவரை நீங்க சொல்லியிருப்பது,
    அஞ்சு குச்சிகள் (இரண்டு வழிகள்)
    ஏழு குச்சிகள் மற்றும் எட்டு குச்சிகள்.
    பத்து, ஒன்பது, ஆறு, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று - இவை எல்லாம் முயற்சி செய்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறோம்.
    மெயில் மூலம் அனுப்பியவர்களின் பதில்களை எங்கள் நிபுணர் குழு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்று நினைக்கிறோம்.
    தமிழ் உதயம் - நீங்க சொல்லியிருந்தபடி தீக்குச்சிகள் அமைத்து, எங்க வீட்டுப் பாப்பாவிடம் காட்டினேன் - அதற்கு அது என்ன என்று தெரியவில்லை. எங்க வூட்டு அம்மா எட்டிப் பார்த்து, 'உடுக்கு' என்றார்கள்.
    பதில் சொல்லாமல் பாராட்டியவர்களுக்கு நன்றி.
    ஹேமா - நாங்கதான் சொல்லி இருக்கோமே - எங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்!
    இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, குரோம்பேட்டைக் குறும்பன் அவர்கள் ஒரு தீக்குச்சியை மட்டும் பயன்படுத்தி எட்டு போட்டுக் காட்டியிருக்கிறார் !!

    பதிலளிநீக்கு
  11. 1) பத்து தீக்குச்சிகள் கொண்டு
    ஏழு (5 குச்சிகள்) கூட்டல் சின்னம் (2 குச்சிகள்) ஒன்று (3 குச்சிகள்)
    2) ஒன்பது தீக்குச்சிகள் கொண்டு.
    ஒன்பது (6 குச்சிகள்) கழித்தல் சின்னம் (1 குச்சி) ஒன்று (2குச்சிகள்)
    3) எட்டு தீக்குச்சிகள் கொண்டு.
    நான்கு (3 குச்சிகள்) கூட்டல் சின்னம் (2 குச்சிகள்) நான்கு (3 குச்சிகள்)
    4) ஏழு தீக்குச்சிகள் கொண்டு.
    ஒன்பது (5 குச்சிகள்) கழித்தல் சின்னம் (1 குச்சி) ஒன்று (1 குச்சி)
    5) ஆறு தீக்குச்சிகள் கொண்டு.
    ரோமன் நம்பர் பத்து (2 குச்சிகள்)கழித்தல் சின்னம் (1 குச்சி)ஒன்று (1 குச்சி)ஒன்று (1 குச்சி)
    6) ஐந்து தீக்குச்சிகள் கொண்டு.
    ரோமன் நம்பர் பத்து (2 குச்சிகள்)கழித்தல் சின்னம் (1 குச்சி)ரோமன் நம்பர் இரண்டு (2 குச்சிகள்)
    டிஸ்கி;ஒன்றிலிருந்து நான்கிற்குள் தீக்குச்சிகள் உபயோகித்து மணல் அல்லது மண்தரையில் எட்டு போடலாம்.
    --
    எங்கள் மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுத்ததுற்க்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  12. தாமஸ் ரூபன். பிரமாதம். அசத்திட்டீங்க. வாழ்த்துகள்.
    இன்னமும் நிறைய விடைகள் உள்ளன. மற்றவர்களும் முயற்சி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. நிபுணர் குழு, 'பெயர் சொல்ல விருப்பமில்லை' அனுப்பிய ஹெச் டி எம் எல் ஃபைலைத் திறக்கமுடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். திறந்தாலும் அதில் படங்கள் ஏதும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கீதா சந்தானம் மூன்று விடைகள் அனுப்பியுள்ளார். அதிலும் உடுக்கு உள்ளது. நிபுணர் குழு முழி பிதுங்கி உட்கார்ந்துள்ளனர். விரைவில் அவர்கள் அறிக்கை வெளியிடுவார்களா என்பது சந்தேகமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  14. making '8' with a single match stick --

    Easy.. take the stick.. sink the stick back side on ink (containing in a bottle), one can easily writh the character '8' on a paper.

    பதிலளிநீக்கு
  15. மாதவன்,
    அதுக்கு
    எதுக்கு
    தீக்குச்சி?
    ஈர்க்குச்சி
    போதாதா? !!

    பதிலளிநீக்கு
  16. இரண்டு தீக்குச்சிகளை வைத்துக்கொண்டு கூட்டல் சின்னம் போட்ட பிறகு, மீண்டும் அதன் மேல் ஸ்டார் போல மேலும் இரண்டு குச்சிகளை கொண்டு பெருக்கல் சின்னம் போட்டு அதன் முனைகளை எல்லாம் கூட்டிப் பார்த்தால் எட்டு வரும், எட்டு திசைகளை குறிக்க நாம் வரைவது போல்.

    பதிலளிநீக்கு
  17. //தாமஸ் ரூபன். பிரமாதம். அசத்திட்டீங்க. வாழ்த்துகள். //

    நன்றி சார்.

    //இன்னமும் நிறைய விடைகள் உள்ளன.//
    மற்ற எல்லாவற்றிக்கும் உண்டு.ஆறு தீக்குச்சிகள்க்கு வேறு விடை உள்ளதா சார்?

    பதிலளிநீக்கு
  18. ஏலே மக்கா இதுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்ல

    பதிலளிநீக்கு
  19. குரோம்பேட்டைக் குறும்பன்29 ஏப்ரல், 2010 அன்று 11:24 AM

    10:
    XII - II - II ; 6 + II ;
    9:
    XV - VII
    8:
    9 - I ; IV + IV ; XI - II - I ;
    XVI / II
    7:
    V + III ; VI + II ; VII + I
    6:
    X - I - I ;
    5:
    X - II ; II ** III (2 power 3);
    Some more answers.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!