புதன், 21 செப்டம்பர், 2016

புதிர் 160921


சென்ற வார முதல் கேள்விக்கு, 
மாதவன், பெசொவி, நெல்லைத்  தமிழன், கீதா சாம்பசிவம்,   துளசிதரன் ஆகிய  அனைவருமே சரியான பதில்களைக் கூறியுள்ளனர். முதல் பதில் மாதவன். வெரி  குட்  அண்ட் வெல் டன். 
    
இரண்டாம் கேள்விக்கு ஏற்கெனவே பதில் கூறிவிட்டேன். கேள்வியில் இருந்த திருத்தங்களை மட்டும்  கூறியுள்ளேன். 

மூன்றாவது  கேள்விக்கு  நெல்லைத்  தமிழன் அதிக முயற்சி  எடுத்திருக்கிறார். வாழ்த்துகள். 

ஆனால் இது ஒரு வில்லங்கக் கேள்வி. 

ACE BEHIND ........  என்று கேள்வி இருப்பதால், மூன்றாவது  வார்த்தை KING / TWO இரண்டுமே சரியான பதில். 

எப்படி? 

இந்தப்  படங்களைப்  பாருங்கள். 

Image result for playing cards   Image result for playing cards 4 3 2 A

இனி, இந்த  வாரக்  கேள்விகள்:  

ஒன்று :  

மக்கள் திலகத்துடன் ஜோடியாக  நடித்த  கதாநாயகிகளில்,  சிவாஜிக்கு ஜோடியாக நடிக்காத  நடிகைகள் யார்? யார்? 


இரண்டு :

அடுத்த  எழுத்து  அல்லது எண்  எது?

2 D U C 1 T 3 _  


மூன்று : 

 Here, Success comes before you try. Where? 


28 கருத்துகள்:

  1. எனக்குத் தெரிந்து சச்சு ஜிவாஜி, எம்ஜிஆர் இரண்டு பேருடனும் ஜோடியாக நடிக்கலை! :) மத்தபடி சினிமா மன்னர்கள், மன்னிகள் பதில் சொல்லட்டும்.

    பதிலளிநீக்கு
  2. வி.என்.ஜானகியும் ஜிவாஜியும் ஜோடியா நடிக்கலைனு நினைக்கிறேன். அப்புறமா டி.ஆர்.ராஜகுமாரி? ம்ஹூம் அவர் வில்லியாத் தானே நடிப்பார்? மத்ததுக்கு மெதுவா வரேன். :)

    பதிலளிநீக்கு
  3. // ACE BEHIND ........ என்று கேள்வி இருப்பதால், மூன்றாவது வார்த்தை KING / TWO //

    சூப்பர்!

    #சமாளிஃபையிங்
    நமக்கெங்கே சீட்டாடுற பழக்கமெல்லாம்... இல்லேன்னா கண்டு புடுச்சிருப்போமுல்ல...

    பதிலளிநீக்கு
  4. வி.என்.ஜானகி எம்ஜியாருடன் நடித்துள்ளார். சிவாஜியுடன் நடிக்கவில்லை. அதுபோல் பண்டரிபாய் சிவாஜியுடன் கதானாயகியாக நடித்துள்ளார். ஆனால் கதானாயகியாக எம்ஜியாருடன் நடிக்கவில்லை. மூன்றாவதுக்கு யோசிப்பதுக்குள் சகலகலாவல்லவன் மாதவன் பதில் கண்ணில் பட்டுவிட்டது. அப்புறம் வேறு என்ன யோசிக்க?

    பதிலளிநீக்கு
  5. 3. 2DUC1T3 என்பதை B 4 you see a T C என்று புரிந்துகொள்கிறேன். (நம்பருக்கு ஏற்ற alphabet மற்றும் alphabetக்கு ஏற்ற நம்பர் இது தவிர u - you, c - see T - T) அப்படி வைத்துக்கொண்டால், TCயை ticket checker என்று புரிந்துகொண்டு அடுத்த வாக்கியமாக have the ticket in your hand என்ற அறிவுரை வருமாறு வரலாம்.

    அப்படிக் கொண்டால் h அல்லது 8 எது வேண்டுமானாலும் வரலாம்.

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.............முடியல! (எழுதின நமக்கே இப்படி மூச்சு வாங்குதே, படிக்கிறவங்க கதி? )

    :)

    பதிலளிநீக்கு
  6. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மீட்டா பெங்ரூட்டா (பெயர் சரியா?) என்னும் ஜப்பானிய நடிகை எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.

    இதயக்கனியில் ராதா சலூஜா எம்.ஜி.ஆரோடு நடித்தார்.

    இந்த இருவரும் சிவாஜிக்கு ஜோடியாக நடித்ததில்லை

    பதிலளிநீக்கு
  7. உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மீட்டா பெங்ரூட்டா (பெயர் சரியா?) என்னும் ஜப்பானிய நடிகை எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.

    இதயக்கனியில் ராதா சலூஜா எம்.ஜி.ஆரோடு நடித்தார்.

    இந்த இருவரும் சிவாஜிக்கு ஜோடியாக நடித்ததில்லை

    பதிலளிநீக்கு
  8. My answers:
    1. As it is relating to Cinema I don't know.
    2. I think the answer of Sri PESOVI is correct.
    3. In "Dictionary" only, "Success" will come before "Try","Work".

    By the by, regarding last week puzzle, I found three other words (apart from Six words) also from the picture given.
    They were (i) RAW ( in Straw), (ii) OR (in Mirror / Cord) and (iii) AT (in CAT).
    Why can't these three words also mentioned as hidden?
    N.B.!. I could not peruse the puzzles or even any blog last week as I was too busy.

    பதிலளிநீக்கு
  9. For 2. இதயக்கனியில் ராதா சலூஜா எம்.ஜி.ஆரோடு நடித்தார். Yes Radha Saluja did not act with Sivaji Ganesan.

    பதிலளிநீக்கு
  10. இதயக்கனியை ஏத்துக்கலாம். உலகம் சுற்றும் வாலிபனில் சோம் ஸாய்தான் நடிகை பேர்னு நினைக்கிறேன். அந்தப் பொண்ணு சகோதரியாத்தானே நடிச்சது. ராதா சலூஜா - சரிதான். இதெல்லாம் ஏன் ஞாபகத்துக்கு வரலைனு யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. // They were (i) RAW ( in Straw), (ii) OR (in Mirror / Cord) and (iii) AT (in CAT).
    Why can't these three words also mentioned as hidden? //

    The six words are 'noun' and they are written on the 'object' then represent.

    பதிலளிநீக்கு
  12. Though 'Success' comes before 'Try' and 'Work,
    it comes only after
    (1) Commitment
    (2) Execution
    (3) Implement
    (4) Involvement, etc.

    பதிலளிநீக்கு
  13. உ.சு.வா.வில் அந்த ஜப்பானிய நடிகை ஒரு தலையாக எம்ஜிஆர்ஐ காதலிப்பார்.என்னுயிர் நீதானே,உன்னுயிர் நான்தானே என்று ஒரு கனவுப் பாடல் கூட உண்டு. அப்போது கதாநாயகிதானே?. இறுதியில் தலைவர் அவளை சகோதரி என்று கூறி விடுவார்.

    பதிலளிநீக்கு
  14. உ.சு.வா.வில் அந்த ஜப்பானிய நடிகை ஒரு தலையாக எம்ஜிஆர்ஐ காதலிப்பார்.என்னுயிர் நீதானே,உன்னுயிர் நான்தானே என்று ஒரு கனவுப் பாடல் கூட உண்டு. அப்போது கதாநாயகிதானே?. இறுதியில் தலைவர் அவளை சகோதரி என்று கூறி விடுவார்.

    பதிலளிநீக்கு
  15. பானுமதி மேடம்... 'என்னுயிர் நீதானே உன்னுயிர் நாந்தானே' அது ப்ரியா படத்துக்கு இசைஞானி போட்ட பாடல். உ.சு.வாவில், பன்சாயி... காதல் பறவைகள் பாடும் கவிதைகள்..' பாடல்தான் அந்தப் பாடல்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. Even in Dictionary, Success is only after Hard-work, Labour,Intelligence, Perseverance & Sincerity :)

    பதிலளிநீக்கு
  17. நல்லது கேள்வி பதில் ஆராய்ச்சிகள் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  18. நினைவுக்கு வந்து எம் ஜி ஆரின் மனைவியாகிய ஜானகி அவர்கள் எம் ஜி ஆருக்குச் சோடி ஆனால் சிவாஜிக்குச் சோடியாக நடித்ததில்லை...

    இன்னும் ஓரிருவர் இருக்கிறார்கள்...அந்தப் பெயர்கள் நினைவுக்கு வரவில்லை..பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  19. //// The six words are 'noun' and they are written on the 'object' then represent//

    My point is there was no such condition that the names are written on the object itself.
    The question is just to find SIX WORDS. That's why I raised my point.

    பதிலளிநீக்கு
  20. நீங்கள் புதிர்களை யோசிக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது!

    பதிலளிநீக்கு
  21. // My point is there was no such condition that the names are written on the object itself. //

    I took it as 'implied' (felt it was 'obvious'). That seemed like an unique property.

    பதிலளிநீக்கு
  22. // அடுத்த எழுத்து அல்லது எண் எது?

    2 D U C 1 T 3 _ //

    அடுத்த எழுத்து 'M'
    எப்படின்னா.. இதுதான், நா, மொதோமொதல்ல வெச்சிருந்த ஜி-மெயில் பாஸ்வேர்டு.

    பதிலளிநீக்கு
  23. லதா எம்ஜி யார், சிவாஜி இரண்டு பேருடனும் நடித்துள்ளார் அது பலருக்கு தெரியாது சிவாஜியுடன் நடித்த படம் பெயர் நினைவுக்கு வரவில்லை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!