திங்கள், 19 செப்டம்பர், 2016

திங்கக்கிழமை 160919 :: ப்ரெட் காலிஃப்ளவர் ஸ்நாக்ஸ்



ஒரு பொழுது போகாத மாலை. 


மழைமேகம்.  சென்னையில் மழைமேகம் அபூர்வம்.  மழை அதை விட அபூர்வம். .   வந்தால் வெள்ளம்தான்.  ஆனால் வராது!  காஞ்சா(காய்ந்தால்) கரு.. பேஞ்சா (பெய்தால்) பெரு!


எல்லோரும் வீட்டில் இருக்க, இப்போ என்ன நடக்கும்?  நாக்கு நமநம என்று வரும். 

வந்தது!



கைகளும், கண்களும் தேடி கைக்கு கிடைத்ததை எடுத்தன.  இரண்டு நாட்களுக்கு முன்னால் செய்தது போக மிச்சமிருந்த எம்ப்டிப்பூ!  அதாங்க.. காலிஃப்ளவர் கிடைத்தது.  ஆனால் தேடிய கடலை மாவு உள்ளிட்ட சில துணைப் பொருட்கள் கிடைக்கவில்லை.





பெரிய வெங்காயம் இரண்டு, சிறிய வெங்காயம்  நான்கு, நான்கைந்து பல் பூண்டு, கொஞ்சம் இஞ்சி, காய்ந்த மிளகாய் தேவையான அளவு உப்பு எல்லாம் போட்டு (கொஞ்சம் யோசித்து சிறிது புளியும் சேர்த்துக் கொண்டேன்) மிக்சியில் அரைத்து எடுத்துக் கொண்டேன்.  வெங்காயம் பூண்டை வதக்கிக் கூடச் சேர்த்திருக்கலாம். ஒரு சோதனைதானே!  அதெல்லாம் அடுத்தடுத்த முறைகளில்.  அதுவும்  பொறுமை இருந்தால்!





காலிஃப்ளவரை வெந்நீரில் போட்டு சோதனை செய்து எடுத்துக் கொண்டேன்.  அரைத்த கலவையில் போட்டேன்.  ரவா கொஞ்சம், அரிசி மாவு கொஞ்சம் சேர்த்துப் பிசறி (பிசிறி?) எண்ணெயில் பொறித்து எடுத்தேன்.



ஸ்லைஸ்ட் பிரெட் எடுத்து சிறிய துண்டுகளாக்கி எண்ணெயில் பொறித்து எடுத்துக் கொண்டேன்.  அதைத்தவிர சில முழு ஸ்லைஸையும் தோசைக்கல்லில் போட்டு எடுத்துக் கொண்டேன்.





இப்போது என் முன்னால் இருந்த ஆப்ஷன்ஸ்.. பிரெட் டோஸ்டின் நடுவே இதை வைத்து எடுத்துச் சாப்பிடலாம்.  அல்லது பிரெட்டுக்கு இதைத் தொட்டுக்க கொண்டு சாப்பிடலாம்.



நாங்கள் செய்தது :  பொறித்து எடுத்த காலிஃப்ளவரில் பொறித்து எடுத்த பிரெட் துண்டுகளை போட்டோம்.  லேசாகப் புரட்டி விட்டோம்.  சாப்பிட்டு விட்டோம்.  என்னதான் பொறித்து எடுத்திருந்தாலும் காலிஃபிளவர் கொஞ்சம் சவசவ என்றுதானிருக்கும்.  அதற்கு எதிர்த்திசையாக மொறுமொறு என்று ப்ரெட் துண்டுகள்.  சாப்பிடும்போது வித்தியாசச் சுவை!



கொஞ்சம் யோசித்திருந்தால் இன்னும் திருத்தமாக வேறு மாதிரிக் கூடச் செய்திருக்கலாம்தான்.  ஏதோ அவசரத்துக்கு ஒன்று!


21 கருத்துகள்:

  1. காலிஃப்ளவரைப் பொரித்து எடுத்துக்கொண்டு, தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி கலந்த குழம்பு செய்து (க்ரேவிக்குத் தமிழாக்கம்) அதைப் பொரித்தக் காலிஃப்ளவரின் மேல் ஊற்றிக் கொடுத்தால் காலிஃப்ளவர் மஞ்சூரியன். ஆனால் நம்ம வீட்டில் போணி ஆகாது. காலிஃப்ளவரையும் மசாலா எல்லாம் சேர்த்துப் பொரிச்சுக்கணும். அப்புறமா விரிவா எழுத முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கடலைமாவு இல்லைனாலும் பரவாயில்லை. பொட்டுக்கடலை இருந்தால் மிக்சியில் நைசாக அரைத்துக் கொண்டு கொஞ்சமே கொஞ்சம் மைதாமாவு உப்பு, மி.தூள், பெருங்காயம் சேர்த்துக் கொண்டு சுத்தம் செய்த காலிஃப்ளவரைத் தண்டோடு இருக்கும்படியாக நீளமாக எடுத்துக் கொண்டு கலந்த மாவில் தோய்த்து பஜ்ஜியாகப் போட்டுடலாம். பொரித்த காலிஃப்ளவரைக் கூட இந்தக் கலவையில் பஜ்ஜியாகப் போடலாம்.

    பதிலளிநீக்கு
  3. மைதா மாவு சேர்க்க மாட்டோம்னு போர்க்கொடி உயர்த்தறவங்க அரிசி மாவோ, கோதுமை மாவோ, சோள மாவோ சேர்த்துக்கலாம். முழுக்க முழுக்கச் சோள மாவிலேயே பண்ணவும் பண்ணலாம். :)

    பதிலளிநீக்கு
  4. காலிப்ளவர் நமக்கு அவ்வளவு தோதுப்படாது. குருமாவுக்கும், வேற வழியில்லைனா காலிஃப்ளவர் மஞ்சூரியன் ஓகே. பிரெட், காலிஃப்ளவர் காம்பினேஷன் எனக்குச் சரிவராது. எதுனா என்ன. நல்ல மழை, குளிர் இருக்கும்போது, எதை ஃப்ரை பண்ணிக்கொடுத்தாலும் கொஞ்சம் காரமாக இருந்தால் நல்லாத்தான் இருக்கும். கீதா மேடம் எழுதியிருக்கும் காலிஃப்ளவர் பஜ்ஜி நல்லா இருக்கும்போல் இருக்கு.

    பதிலளிநீக்கு
  5. எப்படியோ காலிப்ளவர் காலியானா சரிதானே :)

    பதிலளிநீக்கு
  6. நாக்கு நமநம என்பதற்கு தீனி கொடுத்து விட்டீர்கள்.
    வீட்டில் எல்லோரும் ரசித்து சாப்பிடுவது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. காலிஃப்ளவர் பஜ்ஜி நல்லாவே இருக்கும்! :) பஜ்ஜி சாப்பிட்டிருக்கேன்! பொதுவாச் சப்பாத்திக்குத் தான் தொட்டுக்கக் காலிஃப்ளவர் பயன்படுத்தறது. வெஜிடபுள் சாதம் செய்தாலும் காலிஃப்ளவர் இருந்தால் சேர்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  8. அந்த ப்ரெட் மொறு மொறுன்னு மினு மினுன்னு தங்க கலர்ல இருக்கு. யார் டோஸ்ட் பண்ணா .. நெய் நிறைய விட்ட மாதிரி தெரியுதே. யம்மி யம்மி. எங்க ப்ரெட் எங்க ப்ரெட். ஹாஹா காலிஃப்ளவர பல மாதிரியாவும் சமைப்போம். சாப்ஸ், குருமா, கட்லெட், பஜ்ஜி, ஃப்ரிட்டர்ஸ், புலவ், பிரட்டல், மசாலா, சூப் என்று :)

    பதிலளிநீக்கு
  9. லண்டன்ல (பெங்களூர் ரெஸ்டிரான்ட், லண்டன் மையப் பகுதி) வெஜிடபிள் பிரியாணில நிறைய காலிஃப்ளவர் போட்டிருந்தாங்க. ரொம்ப நல்லா இருந்தது (எனக்குப் பொதுவா காலிஃப்ளவர் பிடிக்காது). நம்ம ஊர் காலிஃப்ளவர் கொஞ்சம் தகுதி கம்மிதான்.

    பதிலளிநீக்கு
  10. காலிஃப்லவர் மஞ்ச்சுரியனை க்ரேவியாகவோ துண்டாகவோ சமைத்து சாப்பிடுவது வழக்கம் மற்றபடி எக்ஸ்பெரிமெண்ட் செய்ததில்லை

    பதிலளிநீக்கு
  11. காலிபிளவர்,குருமா,கறி,பரோட்டா எல்லாமே செய்யலாம். நல்ல குளிர்நாளில் அப்போது விளைந்த அதுவும் குளிர்பிரதேசத்தில் விளைந்த பூவிற்கு ருசி அதிகம். எந்தமாவானாலும்
    கெட்டியாகக் கரைத்து,உப்புக்காரம்,பெருங்காயம்சேர்த்து, கொஞ்சம் பிடித்தவர்கள் வெங்காயம் மஸாலா சேர்த்து, வென்னீரில் நினைத்து சுத்தம் செய்த பூவைச் சிறு இதழ்களாக மொக்குமாதிரி பிரித்துத் கரைத்தமாவில் தோய்த்துப்போட்டு எண்ணெயில் பொரித்தால் அவ்வளவு நன்றாக அழகாக இருக்கும். ரவை,தோசைமாவு,எதுவும் சேர்க்கலாம். அவஸரத்துக்குப் போடும் விதம் இது. நிதானமாகச் செய்வதானால் விசாரமே இல்லை. எதுவானாலும் சுடச்சுட.அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. உங்கள் முறையும் நன்றாக இருக்கு. அவஸரமா செய்து சாப்பிடும் போது மனதுக்குத் தன்றியமாதிரி செய்து சாப்பிடுவதில் ஒரு அஸாத்திய ஸந்தோஷமிருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மேலும் இருப்பதை வைத்துக்கொண்டு என்பதுதான் இதன் விசேஷமே. அன்புடன்

    பதிலளிநீக்கு
  13. தோன்றியமாதிரி திருத்தி வாசிக்கவும். அன்புடன்

    பதிலளிநீக்கு
  14. காலிபிளவரை காலி செய்துவிட்டீங்க போல....


    காலிப்ளவர் மஞ்சுரியனுக்கும் பஜ்ஜிக்கும்தான் மிக நன்றாக இருக்கும். எங்கவீட்டில் காலிப்ளவரில் சாம்பார் வைப்போம் உருளைக்கிழங்கு காலிபிளவர் ப்ரை பண்ணுவோம் இது வத்தகுழம்பிற்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும். நான்செய்யும் ம்ஞ்சூரியன் என் நண்பர்கள் வட்டாரத்தில் மிகவும் பாப்புலர்.

    பதிலளிநீக்கு
  15. இங்கு கொடுத்திருப்பதைத் தனித்தனியாகச் செய்ததுண்டு. இப்படிச் சேர்த்துச் செய்து நீங்கள் சொல்லியிருப்பது போல் ப்ரெட் சான்ட்விச்??!!! சாப்பிடணும். ஒரு ஸ்லைஸ்ல கொஞ்சம் சட்னி தடவி இதை வைத்துச் சாப்பிட்டால்ல்ல்ல்ல்

    பதிலளிநீக்கு
  16. மதுர சகோ...அதுல பிரபலம்...இதுல பிரபலம்னு சொல்லிக்கறதுல...!!!!!ஹும் இதுக்கொண்ணும் குறைச்சலில்லை!!!! எங்கேயோ உக்காந்துட்டு சொன்னா நாங்கல்லாம் எப்ப சாப்பிட்டு நீங்க எங்க மத்தில சாப்பாட்டுக்குப் பிரபலம் ஆகறதாம்!!!!!! அடுத்தவாட்டி இங்க வரும் போது தலையக் காட்டி ஏதாவது சமைச்சுக் கொண்டுத் தரணும்..சொல்லிப்புட்டேன்...பாட்லக் போட்டுரலாமா??!!! ஹிஹிஹி ஸ்ரீராம், கௌதம்ஜி, கீதாக்கா, நெல்லைத்தமிழன்,காமாட்சிமா, மனோ அக்கா வந்தாங்கனா அவங்களும் சேர்ந்துக்குவாங்க..அபயா அருணா. நான் எல்லாரும் ரெடி நீங்க!!!!!?

    கீதா

    பதிலளிநீக்கு
  17. காலிஃப்ளவர் நமக்கு அலர்ஜி! அதனாலே ..!

    பதிலளிநீக்கு
  18. நல்ல குறிப்பு. தொடரட்டும் உங்கள் சோதனைகள்!

    பதிலளிநீக்கு
  19. ஆஹா... இப்படியும் செய்யலாமோ அண்ணா....
    செஞ்சி சாப்பிட்டுடுவோம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!