வியாழன், 29 செப்டம்பர், 2016

முன்னூறு வருடங்களுக்குப் பின் கண்திறந்து பார்த்த சிறுமியும், 96 ஆண்டுகளாகத் தூங்கும் அழகியும்.


தெற்கு இத்தாலி.  பாலெர்மோ சிசிலி என்கிற இடம்.


இங்கு இருக்கிறது தனிமுகமூடி அணிந்த ஒருவகைத் துறவுக் குழுவினரின் நிலவறைக் கல்லறை.

உலகிலேயே மிக அழகான மம்மி என்று சொல்லப்படும் ரோசாலியோ லோம்பார்டோ என்கிற 12 வயதுச் சிறுமியின் உடல் இங்குதான் வைக்கப்பட்டிருக்கிறது. 


அங்கு வைக்கப் பட்டிருக்கும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மம்மிகளில் இதுதான் அழகு மட்டுமல்ல, அப்படியே தூங்குவது போலவும் இருக்கிறதாம்.1920 டிசம்பர் 6 இல் நிமோனியாவால் இறந்துபோன இந்தப் பெண்ணின் பிரிவைத் தாங்க முடியாத அவள் தந்தை, அப்போதைய புகழ் பெற்ற, இறந்த உடல்களை பாடம் (embalm) செய்யும் Alfredo Salafiaவை அணுகி, மகள் உடலைப் பாடம் செய்யச் சொல்கிறார்.

இவர்தான் Alfredo Salafia. 

அரிதான இந்த வழியைக் கண்டுபிடித்தவர்.  முதலில் விலங்குகள் மீதும் பின்னர் மனிதர்கள் உடல் மீதும் சோதனை நிகழ்த்தியிருக்கிறார். தனது தந்தையின் உடலைக்கூட அவர் இப்படி பாடம் செய்து வைத்திருந்திருக்கிறார்.   


யு எஸ் வந்து தனது கண்டுபிடிப்பை விற்றுக் கொண்டிருந்திருக்கிறார்.  அப்புறம் என்ன காரணத்தினாலோ தனது நாட்டுக்கே திரும்பி விட்டார்.  அவர் சாகும்வரை தந்து கண்டுபிடிப்பின் தயாரிப்பு ரகசியத்தை வெளியிடவில்லை.கல்லறையில் கண்ணாடியால் மூடப்பட்ட சவப்பெட்டியில் ஒரு மரப்பலகையில் மீது வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் பெண்ணின் உடல்.அந்த உடம்பை எக்ஸ்ரே எடுத்துக் பார்த்தபோது இத்தனை வருடங்கள் கழித்தும் அதன் உறுப்புகள் பிரியாமல், சிதையாமல் ஒன்றோடொன்று இணைந்தே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சலாஃபியாவால் இறந்த உடம்பைப் பாடம் செய்யப் பயன்படுத்தப்பட்ட முறை சமீபத்தில் ஒரு பேப்பரில் எழுதப்பட்டுக் கிடைத்துள்ளது. அவர் அந்தப்பெண்ணின் ரத்தத்தை எடுத்துவிட்டு  பார்மலின் கலந்த திரவத்தை உள்ளே செலுத்தியுள்ளார்.  அது பாக்டீரியாவை அழிக்க வல்லது.  மேலும் ஆல்கஹால், கிளிசரின், சாலிசிலிக் ஆஸிட் ஆகியவற்றையும் உபயோகப்படுத்தி உள்ளார்.
தலைமுடியில் கட்டப்பட்ட ரிப்பனுடன் இரண்டு வயதுக்கு குழந்தை போலக் காட்சியளிக்கும் இந்தப் பெண்ணின் மம்மியில் ஆச்சர்யம் என்னவென்றால் குறிப்பிட்ட இடைவெளியில் அது கண்ணைத் திறந்து பார்க்கிறதாம்.  

தொடர் படமெடுக்கும் முறையில் படம் எடுத்தபோது இது தெரிந்ததாம்.  சில வருடங்களுக்கு எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கி, கேள்விக்குறிகளை எழுப்பியது இந்தத் தகவல்.


ஆனாலும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இப்போது அதற்கு ஒரு பதிலை வைத்திருக்கிறார்களாம்.

அந்த ஹாலில் இருக்கும் ஜன்னல்களிலிருந்து வரும் வெளிச்சத்தால் ஏற்படும் காட்சிப்பிழை என்று சொல்லியிருக்கிறார்கள்.ரோசாலியாவின் உடலை அங்கிருந்து நகர்த்தி வேறு இடத்தில் வைத்து, அவள் கண்ணிமைகளை நன்றாகக் பார்க்கும் வகையில் வைத்தபோது இது தெரியவில்லை.
300 வருடங்களுக்குப் பின் இந்தச் சிறுமி கண்திறந்து பார்த்தாள் என்று சமீபத்தில் கூட ஒரு பரபரப்பு தோன்றியது.  அதுவும் இது போன்ற ஒரு காட்சிப் பிழையாகத்தான் இருக்க வேண்டும்!
 


42 கருத்துகள்:

 1. அரிய செய்தியாக இருக்கிறது. அறிவியலின் வளர்ச்சி நிலை இதுதான்.

  பதிலளிநீக்கு
 2. ஸ்லீப்பிங்க் ப்யூட்டி பற்றி அறிந்ததுண்டு ஆனால் இத்தனைத் தகவல்கள் அறிந்ததில்லை. அறிந்து கொண்டோம்.

  பதிலளிநீக்கு
 3. //300 வருடங்களுக்குப் பின் இந்தச் சிறுமி கண்திறந்து பார்த்தாள்// அப்பவும் ஆவி இருக்குன்னு நம்ப மாட்டீங்க.. என்னவோ போங்க

  பதிலளிநீக்கு
 4. //லும் ஆல்கஹால், கிளிசரின், சாலிசிலிக் ஆஸிட் ஆகியவற்றையும் உபயோகப்படுத்தி உள்ளார்.
  // ஆல்கஹால் நல்லதுன்னு சொல்றீங்க? ;)

  பதிலளிநீக்கு
 5. வியப்பாக இருக்கிறது....தகவல்கள் பலவற்றை அறிந்து கொண்டோம்...நன்றி சகோ
  தம +1

  பதிலளிநீக்கு
 6. பரபரப்பான செய்தி பகிர்வுக்கு நன்றி.அவ்வப்போது இது மாதிரியான தகவல்கள் வெளிவந்து பரபரப்பை உண்டு பண்ணுவது வாடிக்கைதான். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஒரு மாட்டின் கண்ணில் எம்ஜிஆர் தெரிந்தார் என்று ஒரு பரபரப்பு செய்தி.

  பதிலளிநீக்கு
 7. பாலெர்மோ, சிசிலி என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே, 'The Godfather' புத்தகமும் அதைச் சார்ந்த கதைகளும் நினைவுக்கு வருகின்றன. அது ஒரு காலத்தில் மாஃபியா கூட்டத்தை உற்பத்தி செய்த மாகாணமாகத் திகழ்ந்தது. டக்குன்னு 'கூட்டாஞ்சோறு' பிளாக்குக்கு வந்துவிட்டோமா என்று தோன்றியது.

  நல்ல தகவல். காலைல முதல்ல படிக்கறதுக்கு ஒரு மாதிரித்தான் இருந்தது. மனிதர்களுக்குத்தான் எந்த எந்த வகையான எண்ணங்கள் உற்பத்தியாகின்றன. உடலை மம்மியாக்கிவைப்பது என்பது தனித்த ஆசைதான்.

  இந்தியாவில இந்த கல்ச்சர் இல்லாததற்கு நம் நம்பிக்கைகள்தான் காரணம் என்று நினைக்கிறேன். (ராமானுஜனர் சிலை மாத்திரம் அவர் உயிரோடு இருந்தபோது எப்படி இருந்தாரோ அவ்வாறு மூன்று முறை செய்யப்பட்டது என்று சொல்வார்கள். நாலாவது சுதைச் சிற்பம் அவருடைய பள்ளிப்படையில் இருக்கிறது. இப்படிச் சொன்னா நிறையபேர் சண்டைக்கு வந்துடப்போறாங்க. சுதைச் சிற்பம் அவருடைய உடல் என்று நிறையபேர் நம்பிக்கை வைத்துள்ளார்கள்).

  நினைத்துப்பார்த்தேன்... தமிழர்க்குப் பெருமை சேர்த்த, வள்ளுவர், பல்லவேந்திரர், ராஜ ராஜன், ராஜேந்திரசோழன்.... போன்றவர்கள் மம்மியாகக் கிடைக்க நேர்ந்தால்?....

  பதிலளிநீக்கு
 8. பாடம் செய்து இருப்பது அறிவியலின் உச்சம் ,கண்திறந்து பார்த்தது என்பது எல்லாம் சும்மா டாவு !நம்ம ஊரில் பிள்ளையார் பால் குடித்த மாதிரி :)

  பதிலளிநீக்கு
 9. #// ஆல்கஹால் நல்லதுன்னு சொல்றீங்க? ;)#
  ஆவி ஜி ,// ஆல்கஹால் நல்லதுதான் ,எப்போ ?செத்த பிறகு :)

  பதிலளிநீக்கு
 10. இதுவரை கேட்காத செய்தி. பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 11. மிகவும் பயனுள்ள அரிய தகவலகள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. அனைத்தும் செய்திகளும் பிரமிப்பாக இருக்கின்றது நண்பரே

  பதிலளிநீக்கு
 13. ஏற்கெனவே இந்தச் செய்தி வாட்சப்பிலும், முகநூலிலும் சுற்றிக் கொண்டிருந்தாலும் மீண்டும் ரசித்துப் படித்தேன். அமானுஷ்யங்களே மனதை ஈர்க்கின்றன.

  பதிலளிநீக்கு
 14. ஆச்சரியமூட்டும் தகவல்கள்
  நேரடியாகப் பார்ப்பது போன்று
  அற்புதமான புகைப்படங்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. கீழே கீதா என்கிற கையெழுத்தில்லாததால்) நன்றி துளஸிஜி!

  பதிலளிநீக்கு
 16. //அப்பவும் ஆவி இருக்குன்னு நம்ப மாட்டீங்க..//

  ஹா... ஹா... ஹா... ஆவி!.. நான் நம்பறேன். கோவை ஆவி, நீராவி.. இப்படி!!!

  பதிலளிநீக்கு
 17. ஆல்கஹால் நல்லதுன்னு நான் எங்கே சொன்னேன் ஆவி! அவிங்க அதை யூஸ் பண்ணிக்கறாங்க..

  பதிலளிநீக்கு
 18. நன்றி தமிழ் இளங்கோ ஸார். நீங்கள் சொல்வது நம் நாட்டுச் செய்தி.இது அயல்நாட்டுச் செய்தி!

  :)))

  பதிலளிநீக்கு
 19. வாங்க நெல்லைத்தமிழன். கூட்டாஞ்சோறு பதிவுக்கு வந்தது போல இருந்ததா? ஹா... ஹா.. ஹா.. ஆனால் நாங்கள் முன்னாலேயே இது மாதிரி பதிவுகள் எல்லாம் எழுதி இருக்கோம். உதாரணமாக நிலவில் கிடந்த உடல்! நீங்கள் சொல்வது போல நம் மன்னர்களின் உடல்கள் மம்மியாகக் கிடைத்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். நல்ல கற்பனை!

  பதிலளிநீக்கு
 20. வாங்க பகவான்ஜி. படித்தால் சுவாரஸ்யமாகப் பொழுது போகணும்! அவ்வளவுதான்!

  பதிலளிநீக்கு
 21. வாங்க பகவான்ஜி.. அட, உங்களிடமிருந்து இரண்டாவது கமெண்ட்!

  //ஆவி ஜி ,// ஆல்கஹால் நல்லதுதான் ,எப்போ ?செத்த பிறகு :) //

  ஹா..... ஹா.... ஹா....

  பதிலளிநீக்கு
 22. நன்றி நண்பர் உமேஷ் ஸ்ரீனிவாசன். முதல் வருகை?

  பதிலளிநீக்கு
 23. நன்றி கீதாக்கா... நீங்கள் சொல்லும் செய்தி "300 வருடங்களுக்குப் பின்" செய்தியாக இருக்கும். 'தூங்கும் அழகி' வாட்ஸாப்பில் வந்திருக்காது! இரண்டும் வெவ்வேறு செய்திகள்.

  பதிலளிநீக்கு
 24. ஸ்ரீராம் கீதானு இல்லாம இப்படி வந்துச்சுனா ரெண்டுபேரும் ஒரே கருத்து....

  ரெண்டு பேரும் போட்டு.... கீதானு தனியா போட்டு கருத்தும் வரும்....

  இல்ல கீதா மட்டும்னா கீதானு பேர் போட்டு வரும் ...ஒரே கன்ஃப்யூஷன்ல ஹிஹிஹி...

  இந்தப் பதிவுக்குக் கருத்து ரெண்டு பேரும் ஒரே கருத்து அதான்....

  பதிலளிநீக்கு

 25. அருமையான தகவல்
  சிந்திக்க வைக்கும் பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.

   நீக்கு
 26. முகநூலில் பார்த்தேன் அண்ணா...
  இங்கு விவரமாய் படங்களுடன் மீண்டும் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி குமார். முகநூலில் பார்த்தது வேறு, இது வேறு. கடைசிப்படம் பற்றிய செய்தி மட்டுமே அங்கு பகிர்ந்திருந்தேன்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!