Saturday, September 17, 2016

ரகுராம் ராஜனுக்குப் பாடம் நடத்தியவர்.
1)  9 வயதுப் பெண்குடிசையில் நூலகம்.  நன்றி எல்கே.


2)  ".... இப்பவாவது சேவை பணியில் ஈடுபடாமல், தேர்வில் மட்டும் கவனம் செலுத்து' என, உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால், என் சுயநலத்துக்காக அப்படி விட்டால், படிப்பை பாதியில் நிறுத்தும் வழக்கம் இந்த கிராமத்தில் மறுபடியும் ஆரம்பித்து விடும். விழிப்புணர்வு, மக்கள் மன மாற்றம், நான் விதைத்தது, அது துளிர்விட இன்னும் கொஞ்சம் ஆண்டு உழைக்க வேண்டியுள்ளது; உழைப்பேன்..."இசவன்குளம் கிராமத்தின் முதல் பட்டதாரியும், 'முன்னுதாரண மகளிர் விருது' வாங்கியவருமான, தாயம்மாள்.


3)  ஐ.ஐ.டி., பேராசிரியர் என்ற கவுரவம், லட்சணக்கனக்கில் மாத சம்பளம் இவை அனைத்தையும் உதறிவிட்டு கடைகோடி மனிதர்களான ஆதிவாசிகளின் நன்மைக்காக 32 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி வருகிறார் அலோக் சாகர்.


முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு 1980 ஆம் ஆண்டில் பாடம் நடத்தியுள்ளார். 1982ல் தன் பேராசிரியர் பணியை ராஜினாமா செய்த அவர் தன் வாழ்நாள் முழுவதையும் கடைகோடியில் இருக்கும் பழங்குடியினர்களின் நலனுக்காக அர்ப்பணித்துள்ளார்.
4)  இப்படியும் ஒரு மனிதர்..  81 வயதில் சமூக சேவை.
 


11 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தம இணைப்பும் தம+1

Dr B Jambulingam said...

அனைத்தும் அருமை. 9 வயது பெண்ணின் வாசிப்பு ஆர்வம், நூலக ஆர்வம் அதிகம் ஈர்த்தது.

Thulasidharan V Thillaiakathu said...

9 வயதுப் பெண் முஸ்கான் அஹ்ரிவார் வியக்க வைக்கிறார். புத்தகச் சேகரிப்பு, நூலகம் வாசிப்பு ஆர்வம்!!! வாழ்த்துகள். அது போன்றே ஐஐடி பேராசிரியர் அலோக் மற்றும் தாயுமானசாமியும், வியக்க வைக்கிறார்கள். தாயம்மாளும் !!! நல்ல செய்திகள்

வெங்கட் நாகராஜ் said...

அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். சில செய்திகளை நானும் முன்பே படித்தேன்.

பரிவை சே.குமார் said...

அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்...
அந்தக் குழந்தையை வாழ்த்துவோம்.

பரிவை சே.குமார் said...

அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள்...
அந்தக் குழந்தையை வாழ்த்துவோம்.

G.M Balasubramaniam said...

நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க

புலவர் இராமாநுசம் said...

அனைவரும் பாரட்டத் தக்வர்களே! நன்றி!

Bagawanjee KA said...

எளிமையுடன் சமூக சேவை செய்யும் அலோக் சாகரின் கருத்து ,சுருக்கென்று மனதைத் தைத்தது !

ஜீவி said...

ர.ரா-வுக்கு பாடம் நடத்தியதை வைத்துத் தான் பெருமைக்குரிய அலோக் சாகரையும் முன்னிலைப்படுத்த முடிகிறது, பாருங்கள்! அவரின் இந்த புகைப்படம் தான் பத்திரிகைகாரர்களுக்கு கிடைத்ததா என்ற நினைப்பு மேலிட்டாலும் அந்தப் படமே அவரின் எதார்த்த வாழ்க்கை நிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் பணியைச் செய்வதையும் மறுப்பதற்க்கில்லை.

கோமதி அரசு said...

அருமையான மனிதர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
இது போன்ற நல்லோர்களால் நிறையட்டும் நாடு.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!