செவ்வாய், 13 செப்டம்பர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: பொன்மகள்



          எங்களின் இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதிக்கு வந்திருக்கும் நண்பர் தில்லையகத்து கீதா ரெங்கன்.  'எங்களை' போலவே ஆனால் இரண்டுபேர் மட்டும் எழுதும் வலையகம் தில்லையகத்து க்ரானிக்கிள்ஸ்.


          இந்த வாரம் திருமதி கீதா ரெங்கனின் கதை இடம் பெறுகிறது.  இன்னொரு வாரத்தில் துளசிஜியின் படைப்பு(ம்) இடம் பெறும்.


          தில்லையகத்து கீதா ஒரு பல்கலை வித்தகி.  குறும்படம் இயக்குவார், வசனம் எழுதுவார், நடிப்பார்...  எங்களின் நல்ல நண்பர்.  


இவை எல்லாவற்றையும் விட இனிமையாகப் பாடுவார்.  இவர் ஒரு கலகல மனுஷி.  தனது படைப்புப் பற்றிய சில வரிகளுக்குப் பிறகு அவரின் படைப்பு தொடர்கிறது.


===============================================================

     நண்பர் ஸ்ரீராம் கேவாபோக விற்காக என்னைத் தொடர்பு கொண்டதும், நான் இப்போதுதான் ஒரு கதை எழுதி முடிக்கும் தருவாயில் இருக்கிறேன். அதையே உங்கள் “எங்கள் ப்ளாகில் வெளியிட அனுப்புகிறேன். அதன் பின் எங்கள் தில்லைஅகத்திலும் போட்டுக் கொள்கிறேன் என்றேன். 

     கதை பிறந்த கதை. வண்டியில் சென்று கொண்டிருந்த போது “பெண்குழந்தைகள் விற்பனை. 6,00,000 லட்சம் என்று பிரபல இதழின் பரபரப்பான பெட்டிச் செய்தி தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த ஓர் உண்மைச் சம்பவத்தையும் இணைத்துக் கொஞ்சம் அலங்காரம் செய்ததில் “பொன்மகள்” பிறந்தாள். வந்தாள். இதோ அவளை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறேன். அவளைப் பற்றிய முடிவுகள் இரண்டு. மூன்றாவதாகவும் ஒரு முடிவு இருக்கிறது எது உங்களுக்குப் பிடித்ததோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.


     இதை “எங்கள் ப்ளாகில்” வெளியிடுவதில் மிகவும் பெருமைப்படுகின்றேன். வெளியிட்டு சாதாரணமான என்னையும் கௌரவப்படுத்தும் “எங்கள் ப்ளாகிற்கு” மனமார்ந்த நன்றிகள் பல.

==========================================================================

பொன்மகள் 


கீதா ரங்கன்

 

என் நண்பன் கார்த்தியிடமிருந்து அலைபேசி அழைப்பு.


“அக்கா எப்படி இருக்க? வெளியே இருக்கியா? பிஸியா? ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”


இப்படித்தான் அடுத்தடுத்து கேள்வி கேட்டு, பிசியா என்றும் கேட்டுவிட்டு முற்றுப் புள்ளி வைக்காமல் தொடர்ந்து பேசுவான். அன்றைக்கு முக்கியமான விஷயம் என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்தான்.


“நல்லாருக்கேன் கார்த்தி!. கடைக்கு வந்தேன். என்ன விஷயம் சொல்லுடா” என்று சொல்லிக் கொண்டே கடையை விட்டு வெளியில் வந்து, யாரும் இல்லாத இடம் பார்த்து ஒதுங்கி நின்றேன்.


“எனக்குப் பெண் குழந்தைனா ரொம்பப் பிடிக்கும் உனக்குத் தெரியும்ல.. இப்ப எங்க வீட்டுக்கு ஒரு “பொன்மகள்” வந்தால்?!.….ஒரு பக்கம் சந்தோஷம்…இன்னொரு பக்கம்… அக்கா என் வயசு என்ன? 47. என் வீட்டுக்காரி வயசு 45. அக்கம் பக்கம் என்ன சொல்லும்னு ஒரு வெட்கம்….அதான் உங்கிட்ட ஒரு ஆலோசனை கேட்கலாம்னு”
இப்படிப் பேசிக் குழப்புவதும் அவன் வழக்கம். 


“ஓ! கார்த்தி! புரியல.. இருந்தாலும் என் யூகம்……..சந்தோஷமான விஷயம்தான்….. உனக்கும் உன் மனைவிக்கும் இந்த வயசுலயும் பெத்து, வளக்க ஆரோக்கியமும், பொறுமையும் இருக்குன்னா எதுக்கு எங்கிட்ட கேக்கணும்? அக்கம் பக்கத்துக்குப் பயப்படணும்டா?


“ஐயோ! அக்கா….போதுமே உன் யூகம்….”பெத்து”ல “பெ” எடுத்துட்டுத் “த” போட்டுக்க…
“அட! “ தத்து” அதுவும் நல்ல விஷயம்தான். ஆனா, நல்லா யோசிச்சுச் செய்யணும்.. சரி விஷயத்தைச் சொல்லு.”


அவன் விவரித்தான். அவனது மனைவியின் தூரத்து உறவினரான பெண்ணிற்கு மூன்றாவதாகப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்கள் இருவரும் பார்க்கச் சென்ற போது அந்த வீடு இழவு வீடு போல் துக்கத்தில் ஆழ்ந்திருந்ததைக் கண்டதும் இவர்களுக்குக் குழப்பம்.


ஒரு வேளை குழந்தை?……என்று மனதில் தோன்றிய எதிர்மறைச் சிந்தனையைப் புறம் தள்ளிவிட்டு மெதுவாக உள்ளே சென்றால், அங்கே அந்தப் பெண், “ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்க. தினப்படி வாழ்க்கையே கஷ்டமா இருக்குது, இதுல மூணாவதும் பொண்ணு”. என்று அழுது கொண்டே இருந்திருக்கிறாள். இரு வீட்டாரும் பெண் குழந்தை என்று வசை பாடிக் கரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். 


கார்த்திக்கும், அவனது மனைவிக்கும் என்ன சொல்வது என்று தெரியாமல், குழந்தைக்கான பரிசுப் பொருளைக் கொடுப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில், வாசலில் மூன்று பேர் புதிய முகங்களாகத் தோன்றவே, கார்த்தி எட்டிப்பார்த்திருக்கிறான்.


அப்பெண்குழந்தையை விற்பதற்கான ஏற்பாடு என்பதை அறிந்ததும் கார்த்திக்கும் அவனது மனைவிக்கும் பதட்டம். வெளியில் விற்கப்பட்டுத் தவறான இடத்திற்குப் போய்விட்டால்?…என்ற பயம் தோன்ற, தாங்களே அக்குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளலாமா என்று ஆலோசனை கேட்கத்தான், வெளியில் வந்து என்னை அழைத்திருக்கிறான்.


எனக்கோ கோபம்! வீட்டு நிலைமை சரியில்லை. மூன்றாவதாக ஆண் குழந்தை பிறக்காதா என்ற ஆசை…. சரி… தவறில்லை....ஆனால் மூன்றாவதும் பெண் என்றால் ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாதபோது எதற்கு இப்படி? அப்படியென்றால், இனியும் ஆண் குழந்தை ஆசையில் பெற்றுக் கொள்ள நினைப்பார்களோ? நான்காவதும் பெண் ஆகிப் போனால் மீண்டும் இப்படித்தானோ?……இப்படியே தொடர்ந்தால்…


.ஹும். என்ன உலகம் இது? நம் மக்களின் பாமரத்தனமான, மூட நம்பிக்கை நம் மக்களை அறிவிலிகள் ஆக்குகிறதே என்ற எண்ண அலைகளுடன், கார்த்தியிடம் எனது கோபத்தையும் வெளியிட்டுவிட்டு…


“கார்த்தி, அனாதைக் குழந்தைன்னா மறுவார்த்தை சொல்லாம “தத்தெடு” னு சொல்லிடுவேன்.. ஆனா இது அப்படி இல்லையே. கார்த்தி! ஒரு குழந்தை அதோட அம்மா அப்பாகிட்ட வளர்ரதுதான் நல்லது. அம்மா அப்பா இருக்கும் போது விற்க நினைக்கறது ரொம்ப அதிச்சியா இருக்கு. உனக்குத் தைரியம் இருந்தா போலீஸ்ல புகார் கொடு…. 


இல்லைனா வேறு வழி?....ம்ம்ம் உங்க வயசு, உங்க மகன்களின் சம்மதம், அந்தக் குழந்தைக்குப் பருவ வயசு வரும் போது உங்க ரெண்டு பேர் வயசும் 60 ஆகியிருக்கும். அந்த வயசுல கவனமா பாத்துக்க முடியுமா, படிப்பு, எதிர்காலம், உங்க காலத்துக்குப் பிறகு உங்க பசங்க தங்கச்சியா நினைச்சு அன்போடு பாத்துக்குவாங்களா… எல்லாம் நல்லா கலந்தாலோசிச்சு, சட்டரீதியா தத்தெடு” 


என்று அரைகுறை மனதோடு சொன்னதும் கார்த்திக்கும் கொஞ்சம் வருத்தம்தான். நான் என் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டேன். போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு நின்ற போது, பெட்டிக்கடையில், பரபரப்புச் செய்தியுடன்  பிரபல இதழின் தாள் தொங்கிக் கொண்டிருந்தது. “பெண் குழந்தைகள் விற்பனை. 6,00,000 லட்சம்” என்ற செய்தியைப் பார்த்ததும் மனம் பரபரத்தது. வீட்டை அடைந்ததும் முதல் வேலையாக கார்த்தியை அலைபேசியில் அழைத்தேன்
“அக்கா, நான் உன்னைக் கூப்பிட உன் நம்பர ட்ரை பண்றேன்…… நீ கூப்பிடற… “
அவன் குரலில் மகிழ்ச்சி. 


“அக்கா, உன்னக் கூப்பிட்டுத் தத்தெடுக்கறத சொல்லிட்டு அவங்க வீட்டுக்குப் போனேனா…….அப்போ அவங்க வீட்டு ஜோசியர் வந்திருந்தாரு. அவரு, இந்தக் குழந்தை நல்ல நாள்ல பிறந்திருக்கு. இந்த வீட்டுக்கு நல்லதே நடக்கும். உங்க வீடு லட்சுமிகரமாகும். சுபிட்சம் வரும். இவ பெண்குழந்தை மட்டுமில்ல….”பொன்குழந்தை”, உங்க வீட்டு “பொன்மகள்” னு சொன்னதும், அவங்க முடிவ மாத்திக்கிட்டாங்கக்கா.”
என்றதும், “ஹும்! பாரு கார்த்தி! நம் சமூக அவலத்தை. ஜோசியர் சொன்னதும், அதுவும் பொன்குழந்தைனு சொன்னதும் அதுவரை திட்டு வாங்கின குழந்தைக்குக் கிடைக்கும் மரியாதையைப் பாரு. இல்லைனா அந்தக் குழந்தையோட மதிப்பு சில லட்சங்கள், இல்லைனா குப்பையோடு குப்பையாய்த் தடம் மாறிப் போயிருக்கும்.” 


“பரவாயில்லைக்கா. ஏதோ, இப்படியாச்சும் அவங்க முடிவு மாறிச்சே! உன் விருப்பப்படியே அந்தக் குழந்தை ஆங்க அம்மா அப்பாகிட்டயே வளரப் போகுதேனு நினைச்சுச் சந்தோஷப்படுவோம்.” 


“பொன்மகள்” என்று ஜோசியரின் வாக்கினால் காப்பாற்றப்பட்டாள் என்று நேர்மறை எண்ணமாய் என் மனதை மாற்றிக் கொண்டு ஜோசியருக்கும் நன்றி சொன்னேன்


“பரவாயில்லைக்கா. ஏதோ, இப்படியாச்சும் அவங்க முடிவு மாறிச்சே! உன் விருப்பப்படியே அந்தக் குழந்தை அதோட அம்மா அப்பாகிட்டயே வளரப் போகுதேனு நினைச்சுச் சந்தோஷப்படுவோம்.” 


“பொன்மகள்” என்று, ஜோசியரின் வாக்கினால் காப்பாற்றப்பட்டாள் என்ற நேர்மறை எண்ணமாய் என் மனதை மாற்றிக் கொண்டு ஜோசியருக்கும் நன்றி சொன்னேன்!


(அந்த ஜோசியர் வெளியில் வந்ததும் ”நான் என் வாழ்க்கைல முதல் முறையா ஒரு பெரிய நன்மை செஞ்சுருக்கேன். இவங்க சொல்லி அனுப்பி அஞ்சு நாளாச்சு. இன்னிக்குத்தான் வரேன். நான் இன்னும் குழந்தையோட ஜாதகம் கூட குறிக்கல. வந்தப்ப, அந்தப் பையன் யார்கிட்டயோ பேசிக்கிட்டுருந்ததைக் கேட்டதுனாலதான்  மனசு சங்கடமாகி நான் அப்படிச் சொன்னேன். தப்போ, ரைட்டோ நான் ஒரு பெண் குழந்தைய காப்பாத்த முடிஞ்சுச்சு. அப்படிக் கேட்டுருக்கலைனா?? கேக்க வைச்ச அந்த ஆண்டவனுக்கு நான் நன்றி சொல்லணும்” என்று குழந்தை காப்பாற்றப்பட்ட ரகசியத்தை நினைத்துக் கொண்டே மன நிறைவுடன் சென்றார். பெண்மகள் “பொன்மகள்” ஆனது பொன்னான ரகசியமாகவே இருக்கட்டும்.

70 கருத்துகள்:

  1. பொன்மகள் வந்தாள் புதுச் சேதி சொன்னாள். :)

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதை
    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான கதை.
    எனது சித்தி மகள் 20 வருடமாக குழந்தை இல்லாமல் இருக்கிறார். அவருக்கு ஒரு தத்து குழந்தைக்கு வேண்டும் என்பதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வேளையில் இப்படியொரு கதை என்பது மனதை தொட்டுவிட்டது.

    எழுத்தாளர் கீதா பதிவு மட்டும்தான் எழுதுவார் என்று நினைத்திருந்தேன். அவருக்குள் இப்படியொரு பன்முகப் படைப்பாளி ஒளிந்து கொண்டிருப்பது இன்றுதான் தெரிந்தது. சகோ கீதாவைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள வைத்த எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.
    த ம 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் சகோ...நீங்கள் நினைக்கும் அளவிற்கு எல்லாம் இல்லை சகோ..ஸ்ரீ நண்பர் என்பதால் கொஞ்சம் ஹைப் கொடுத்து விட்டாரோ😉😊
      மிக்க நன்றி சகோ

      நீக்கு
  4. மிக்க நன்றி எங்கள் பிளாக் ! என்ன சொல்ல என்று தெரியவில்லை..ஸ்ரீராம் நீங்கள் என்னைப் ற்பற்றி அதிகமாகவே எழுதிவிட்டீர்கள்....அத்தனை இல்லை என்னிடம். இதுவரை குறும்படம் இயக்கியதில்லைலை தனியாக. உத்வியாளர்தான்....என்னையும் பொருட்படுத்தி அறிமுகப்படுத்தி கதை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. மிக்க நன்றி எங்கள் பிளாக் ! என்ன சொல்ல என்று தெரியவில்லை..ஸ்ரீராம் நீங்கள் என்னைப் ற்பற்றி அதிகமாகவே எழுதிவிட்டீர்கள்....அத்தனை இல்லை என்னிடம். இதுவரை குறும்படம் இயக்கியதில்லைலை தனியாக. உத்வியாளர்தான்....என்னையும் பொருட்படுத்தி அறிமுகப்படுத்தி கதை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி எங்கள் பிளாக் ! என்ன சொல்ல என்று தெரியவில்லை..ஸ்ரீராம் நீங்கள் என்னைப் ற்பற்றி அதிகமாகவே எழுதிவிட்டீர்கள்....அத்தனை இல்லை என்னிடம். இதுவரை குறும்படம் இயக்கியதில்லைலை தனியாக. உத்வியாளர்தான்....என்னையும் பொருட்படுத்தி அறிமுகப்படுத்தி கதை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. பொன்னான ரகசியத்தை நானும் பாதுகாக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  8. மிக அருமை. வாழ்த்துகள் கீதா மா. அருமையான நடையில் கதையைக் கொடுத்திருக்கிறர்கள் இது போல நல்ல ஜோசியர்கள் இருந்தால் நாடே வளம் பெறும்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லி மா. தங்கள் ஊக்கம் மிகு வார்த்தைகளுக்கு மீண்டும் நன்றிமா.

      நீக்கு
    2. மிக்க நன்றி வல்லி மா. தங்கள் ஊக்கம் மிகு வார்த்தைகளுக்கு மீண்டும் நன்றிமா.

      நீக்கு
    3. மிக்க நன்றி வல்லி மா. தங்கள் ஊக்கம் மிகு வார்த்தைகளுக்கு மீண்டும் நன்றிமா.

      நீக்கு
  9. நல்ல கதை. வாழ்த்துக்கள் கீதா.
    கேட்டு வாங்கி நல்ல கதையை அளித்தவர்களுக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.

    பெண்குழந்தையை காப்பாற்ற பொய் சொல்லப்பட்டாலும் காப்பாற்றிய சோதிடருக்கு நன்றி.
    பெண்மகள் பொன்மகளாக வாழட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா....நல்லத்திற்கு பொய் செல்லலாம்தான்

      நீக்கு
  10. கீதாவின் முதல் கதை நன்றாகவே வந்திருக்கிறதுஓரிரு இடங்களில் ஒரே வரிகள் ரிபீட் ஆகின்றன/ அதே போல் மறுமொழியிலும் காண்கிறேன் 600000 லட்சம் சரியா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி எம் பி சார், மிக்க நன்றி. இது எனது முதல் கதை அல்ல. எங்கள் தளத்தில் முன்னால் எழுதியுள்ளேன். பெயர் இருக்காது.

      சார் அது ரூபாய் என்று வந்திருக்க வேண்டும். திருத்திக் கொள்கின்றேன். நன்றி சார். இன்று இங்கு இணையம் இல்லை. மொபைலில் இருந்து பதில் கொடுப்பதால் மீண்டும் மீண்டும் வந்துவிடுகிறது....அழுத்துவதில் தவறு ஏற்படுவதால்....

      கருத்திற்கு மிக்க நன்றி சார்

      நீக்கு
    2. ஜி எம் பி சார், மிக்க நன்றி. இது எனது முதல் கதை அல்ல. எங்கள் தளத்தில் முன்னால் எழுதியுள்ளேன். பெயர் இருக்காது.

      சார் அது ரூபாய் என்று வந்திருக்க வேண்டும். திருத்திக் கொள்கின்றேன். நன்றி சார். இன்று இங்கு இணையம் இல்லை. மொபைலில் இருந்து பதில் கொடுப்பதால் மீண்டும் மீண்டும் வந்துவிடுகிறது....அழுத்துவதில் தவறு ஏற்படுவதால்....

      கருத்திற்கு மிக்க நன்றி சார்

      நீக்கு
  11. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தி வைத்தாலும் புண்ணியம் என்பார்கள். ஒரு பொய் சொன்னாலும் குழந்தை விலைபோகாது காப்பாற்றப்பட்டது பொன் மகளாக மாறியது ஒரு வித்தியாஸமான கருவைக் கொண்ட ஒரு கதை. நிஜமான ஸம்பவமாகக்கூட சில இடங்களில் மாறி இருக்க வாய்ப்புண்டு. என்னுடைய தொட்டில் கதைகளின் ஒரு காட்சியோ என்று நினைக்க வைத்தது. பாராட்டுகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  12. கதை கருத்து நல்லா இருக்கு. It inspires me to write similar story with same theme. எங்கள் பிளாக்குக்கு அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத் தமிழன். உங்கள்.கதையையும் எதிர்பார்க்கிறோம்...

      நீக்கு
    2. மிக்க நன்றி நெல்லைத் தமிழன். உங்கள்.கதையையும் எதிர்பார்க்கிறோம்...

      நீக்கு
  13. கேவாபோக விற்காக - இதைப் புரிந்துகொள்ள இவ்வளவு நேரமாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  14. கதையைப் பற்றி சொல்லவேண்டுமெனின் இது ஒரு நீதியைச் சொல்லவந்த கதை .

    பொய்மையும் வாய்மையிடத்த..புரை தீர்ந்த
    நன்மை பயக்குமெனின்.

    என்ற வள்ளுவப் பெருந்தகையின் குரலுக்கு குறளுக்கு சரியான உதாரணம். .

    இரண்டாவது கீதா ரங்கன் பாடுகிறார்கள் என்று மட்டும் ஸ்ரீராம் சொல்லி இருக்கிறார்கள். அது போதுமா ?

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று அம்மன் பாட்டு என்னும் ஆன்மீக வலைத் தளத்தில் திருமதி கவிநயா அவர்கள் பத்து ஆண்டுகளாக அம்மனைப் போற்றி கவிதை /பாடல் எழுதுகிறார்கள்.

    அண்மைய காலத்தில் திருமதி கீதா அவர்கள் அந்தப் பாடல்களை கர்நாடக சங்கீத இசையில் ஒரு ராகத்தில் மெட்டு அமைத்து பாடுகிறார்கள். இந்த அவரது ஆன்மீகப் பனியைப் போற்றும் விதத்தில்

    ஸ்ரீராம் அவர்கள் , அவர்கள் பாடி வரும் பாடல்களை பதிவு செய்ய வாரத்தில் ஆன்மீக தினம் ஒன்று ஒதுக்க வேண்டும்.

    வசந்த, வராளி , போன்ற ராகங்களில் இவர் அமைத்த பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன.

    கதைக்கு வருவோம்.

    எனது நண்பன் ஒருவன். ராமசாமி என்று பெயர்.
    1961 ல் முதல் பெண். என்னிடம் பெயர் என்ன வைப்பது என்று கேட்டான். நானும் நாள், நக்ஷத்திரம் பார்த்து,
    வசுமதி என்று சொன்னேன்.

    1963 ல் இரண்டாவதும் பெண். அவனுக்கு வருத்தமில்லை. அவன் மனைவிக்கு மட்டும் கொஞ்சம் இருக்கும் போலும்.
    என்ன பெயர் என்று கேட்டு என்னிடம் வந்தான்.
    நான் சொன்ன பெயர்: சுமதி.

    1966ல் மூன்றாவது குழந்தை. அதுவும் பெண்ணாகப் பிறந்தது. என் நண்பனிடம் இருந்து சேதி வரவில்லை. அவன் மனைவியிடமிருந்து வந்தது.

    அண்ணா, உங்க சிநேகிதர் உங்க மேலே ரொம்ப கோவமா இருக்காரு. நீங்க வைச்ச பெயர் ராசி தான் அடுத்தடுத்து பெண்ணாவே புறக்கிறது என்கிறார். " என்றாள் .

    இந்த எக்ஸ் ஒய் எல்லா க்ரோமோசோம் பற்றி நான் சொல்லி புரியவைக்கும் நேரம் இல்லை. அந்த பெண்மணி சொல்கிறாள்: " எனக்கென்னவோ நீங்கள் தான் வழக்கமா பெயர் வைக்கிறது. நீங்களே வையுங்கள். " என்றாள் .

    நான் இட்ட பெயர்: மதி ( போதும் என்ற பொருளில் ; சந்திரன் என்றும் பொருள்.)

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தாத்தா உங்கள் கருத்திற்கு....மதி...ஹஹஹநல்ல பெயர்....உங்கள் எழுத்து, கருத்து, பாடல்கள் மதியாகண்டா....

      நீக்கு
    2. மிக்க நன்றி தாத்தா உங்கள் கருத்திற்கு....மதி...ஹஹஹநல்ல பெயர்....உங்கள் எழுத்து, கருத்து, பாடல்கள் மதியாகண்டா....

      நீக்கு
    3. சுப்பு தாத்தா..... துளசி, நான் பாடுவதை அவரது யூட்யூப் ல் போடச் சொல்லியிருக்கிறார். கவிநயா ம்மாவிற்கு நன்றி உரைத்து...அந்தந்த பாடல்களுக்கு ஏற்ற.கோயில்ககளுடன், கவிநயா அம்மாவின் அனுமதியுடன்..செய்யலாம் என்றுறு சொல்லியிருக்கிறார்....மிக்க நன்றி தாத்தா

      நீக்கு
  15. அருமையான கதை கீத்ஸ். அசத்திட்டீங்க. நல்ல தீம்.

    பை த பை சுப்பு சார் மதியை ரசித்தேன்

    அருமையான கதையைப் பகிர்ந்த ஸ்ரீராமுக்கும் எங்கள் ப்லாகுக்கும் நன்றி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தேனு! நீங்கள் எல்லாம் எவ்ளவு அழகாக எழுதுபவர்கள்....உங்களின் ஊக்கம் மிகு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி

      நீக்கு
    2. மிக்க நன்றி தேனு! நீங்கள் எல்லாம் எவ்ளவு அழகாக எழுதுபவர்கள்....உங்களின் ஊக்கம் மிகு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  16. மனதை தொட்ட மிக அருமையான கதை. ஒரு நன்மைக்காக யாரையும் பாதிக்காத பொய் வாழ்வின் சில நேரங்களில் அவசியமாகிறது !

    தொடருவோம்

    நன்றி
    சாமானியன்

    எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சாமானியன் சாம்....தங்களின் கருத்திற்கு

      நீக்கு
    2. மிக்க நன்றி சாமானியன் சாம்....தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  17. அருமையான கதை...வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  18. வாங்க சுப்பு தாத்தா.. நீங்கள் சொல்லும், கீதா ரெங்கன் இசையமைத்துப் பாடும் கவிந(ய)யாப் பாடல்களை வாராவாரம் நானும் ரசித்துக் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் டபுள் ட்ரிப்பில் ஆனது எல்லாம் டெல் பண்ணிடவா?

      நீக்கு
  19. அழகான கதையை எழுதிய கீதா அவர்களுக்கு பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  20. மிக மிக அற்புதமான கதை
    கனக்கச்சிதமாக சொல்லிப் போன விதம்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார் தங்களின் ஊக்கம் தரும் கருத்திற்கு

      நீக்கு
    2. மிக்க நன்றி ரமணி சார் தங்களின் ஊக்கம் தரும் கருத்திற்கு

      நீக்கு
  21. கதையைச் சொல்லிச் சென்ற விதம் நன்றாக இருந்தது.

    ஒரேயடியாக மெளபைல் உரையாடலாக இல்லாமல், 'அவன் விவரித்தான்...' என்று கார்த்தி மெளபைலில் சொன்னதை விவரித்து, 'கார்த்தி அனாதைக் குழந்தைனா.' என்கிற இடத்தில் மீண்டும் மொபைல் உரையாடலுக்குத் தாவினது நேர்தியாய் கதை சொன்னதற்கு எடுத்துக் காட்டு.

    'அந்த ஜோசியர் வெளியில் வந்ததும்' என்று அடைப்புக்குறிக்குள் இருப்பது தான் கதைக்கு ஒட்டாமல் போய் விட்டது. அந்த விஷயமும் கார்த்தி மூலமாகவேத் தெரிய வந்ததாகக் காட்டியிருக்கலாம்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவி சார். உங்களைப் போன்றோரது விமர்சனம் ஊக்கம் அளிக்கிறது சார். முதலில் கார்த்தி சொல்லுவது போலத்தான் எழுதி...பின்னர் மாற்றினேன்...இன்று வாசித்தபோது ஒட்டாமல் இருக்கிறதே என்று தோன்றியது..உங்கள் கருத்தினை மனதில் கொள்கின்றேன் சார்...மிக்க நன்றி சார்

      நீக்கு
    2. மிக்க நன்றி ஜீவி சார். உங்களைப் போன்றோரது விமர்சனம் ஊக்கம் அளிக்கிறது சார். முதலில் கார்த்தி சொல்லுவது போலத்தான் எழுதி...பின்னர் மாற்றினேன்...இன்று வாசித்தபோது ஒட்டாமல் இருக்கிறதே என்று தோன்றியது..உங்கள் கருத்தினை மனதில் கொள்கின்றேன் சார்...மிக்க நன்றி சார்

      நீக்கு
  22. அருமையான கதை கீதா மேடம்...
    பகிர்வுக்கு நன்றி அண்ணா....

    பதிலளிநீக்கு
  23. எப்படியோ கடைசியில் அந்த பிஞ்சுக்குழந்தை தன் தாய்-தந்தையரை விட்டுப்பிரியாமல் இருப்பது கேட்க மகிழ்ச்சியே.

    கதாசிரியர் அவர்களுக்கும், படிக்க வாய்ப்பளித்த எங்கள் ப்ளாக்குக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  24. சிறப்பான கதை! முடிவும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  25. கதை என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை, கீதா. உண்மை நிகழ்வு என்றே தோன்றுகிறது. எனக்கு ஒரு மாணவர். (என் மாணவர்கள் பல்வேறு வயதுகளில் உள்ளவர்கள்) திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள். மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று அவரது மனைவி ஆசைப்பட்டாள். இவருக்கோ மூன்றாவதும் பெண் குழந்தையாகிவிட்டால் என்ன செய்வது என்று தயக்கம். அதை மனைவியிடம் சொன்னபோது அவள் என்ன சொன்னாள் தெரியுமா? அவள் சொன்னதைக் கேட்டு என் இதயம் ஒருநிமிடம் துடிக்க மறந்துவிட்டது. அவள் சொன்னாளாம் அவள் ஊர் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் குழந்தை ஆணா பெண்ணா என்று சொல்லுவார்களாம் - பணம் கொடுத்தால். ஆண் குழந்தை என்றால் வைத்துக் கொள்ளலாம். பெண் குழந்தை என்றால் கலைத்துவிடலாம் என்று. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக கருவை அழிக்கவும் ஒரு பெண் துணிவாள் என்று அன்று தான் அறிந்து கொண்டேன். பல வருடங்கள் கழித்து இப்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக சமீபத்தில் தொலைபேசியில் சொன்னபோதும் என் இதயம் துடிக்க மறந்து போனது!

    இப்படி எத்தனை எத்தனை சம்பவங்களோ!
    நீங்கள் சொல்லியிருக்கும் இந்த நிகழ்வில் அந்தக் குழந்தை காப்பாற்றப்பட்டது மிகப்பெரிய விஷயம். நேர்மறையாக ஒரு முடிவினைக் கொடுத்திருப்பது சந்தோஷமாக இருந்தது. இன்னொரு முடிவு, உங்கள் நண்பர் கார்த்திக் அந்தக் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டிருப்பார் என்பது இல்லையா? மூன்றாவது முடிவை வாசகர்களின் யூகத்திற்கு விட்டுவிட்டீர்கள். சபாஷ்!
    பாராட்டுக்கள்!


    பதிலளிநீக்கு
  26. பொன்மகள் ..ஜொலிக்கிறாள் :) வாழ்த்துக்கள் கீதா .நன்றி எங்கள் பிளாக் ..
    இந்த ஜோசியர் மாதிரி ஒரு நாலஞ்சு பேர் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும் ..நல்ல விஷயத்துக்கு பொய் சொல்வதில் தப்பே இல்லை ..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!