சனி, 24 செப்டம்பர், 2016

மதுரையில் பஸ்ஸில் வந்து இறங்கும் அந்த இளம்பெண் சத்யா...1)  தமிழக அரசின் சுகதார துறையின் கீழ் இயங்கக்கூடிய கும்பகோணம் வட்டார சுகாதரா மேற்பார்வையாளர் சங்கரன் ஆவார்.  நோய்தடுப்பு நடவடிக்கை எடுக்கும் சுகாதார ஆய்வாளர்களின் பணிகளை ஆய்வு செய்தல்,முடுக்கி விடுதல்,மேலதிகாரிகளுக்கு தகவல் சமர்ப்பித்தல் போன்ற சுகாதாரம் தொடர்பான வேலைகளை செய்யும் அரசு அதிகாரி.  
 
 


2)  இன்னா செய்தாரை..   சபாஷ் தமிழக போலீஸ்...ஜோயல் பிந்துவின் அனுபவம்.  (நன்றி எல்கே)
 
 3)  
நாட்டுக்குச் சேவை செய்தவர்களுக்கு திரு மஹேஷ் பாய் சவானி செய்யும் மரியாதை.
 
 


4)  விஷால சேவை.

5)  கலெக்டர், குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் என, அனைத்துத் தரப்பினரும் விசாரித்தும், ஒரு வழக்கைக்கூட பதிவுசெய்ய முடியவில்லை.  அந்த ரயில் நிலைய, ஆர்.பி.எப்., ஆய்வாளர் தான், இவர்கள் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்தனர் என, அவர்களின் பெயர்களை புத்திசாலித்தனமான முறையில் பதிவு செய்தார். அவர், அந்த வழக்கைப் பதிவு செய்வதற்குக் கூட பல்வேறு இடையூறுகள் வந்தன... 

ரயில்வே சில்ரன்ஸ்' அமைப்பின் மூத்த திட்ட அலுவலர் திரிபுரசுந்தரி.

6) 
ஞாயிற்றுக்கிழமை என்றால் வேலை செய்யாமல் வெட்டியாக துாங்கி சினிமா சீரியல் பார்த்து பொழுது போக்கும் நாள் என்றாகிவிட்ட நிலையில் அன்றைய தினம் ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு ஊரை, குறிப்பாக வெளிநாட்டவர் வந்து போகும் சுற்றுலா தலங்களின் குப்பை கூளங்களை அள்ளி சுத்தம் செய்யக் கிளம்பிவிடுவார் மதுரையில் பஸ்ஸில் வந்து இறங்கும் அந்த இளம்பெண் சத்யா....   100 சதவிகித பாஸிட்டிவ் பெண் சத்யா.

 

12 கருத்துகள்:

 1. அனைத்தும் நல்ல செய்திகள், இளம் பெண் சத்யாவிற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஸ்ரீராம். ஸ்பெஷல் மென்ஷன் சத்யா அண்ட் சங்கரன். நன்றக இருக்கனூம்..........

  பதிலளிநீக்கு
 3. அருமையான செய்திகள்...
  இன்றைய இளைஞர்கள் மத்தியில் சத்யா பாராட்டப்பட வேண்டியவர்.
  இறந்த 17 ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்ற மஹேஷ் அவகளை வாழ்த்துவோம்...

  பதிலளிநீக்கு
 4. நம்பிக்கையை விதைத்து விட்டுப் போகும் பாசிடிவ் செய்திகளுக்கு நன்றி. செல்வி சத்யா , திரு சங்கரன் போன்றவர்கள் இன்னும் நடமாடுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய நிம்மதி அளிக்கும் விஷயம்!
  இவர்கள் பொருட்டு 'எல்லோர்க்கும் பெய்யுமாம் மழை' !

  பதிலளிநீக்கு
 5. தமிழக காவல்துறையை நினைத்து பெருமிதம் ஏற்படுகிறது! திரு.சங்கரன் போன்ற உண்மையான ஊழியரை காண்பது அரிது. கைகூப்பி அவருக்கு நன்றி சொல்லுதல் வேண்டும்!
  சத்யாவை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. வருங்கால இளைஞர்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கிறார்கள்!

  சனிக்கிழமை தோறும் இப்படிப்பட்ட புத்துணர்ச்சி தரும் செய்திகள் வெளியிட்டு வரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
 6. நம்பவே முடியலே ,தமிழக் போலீஸ்தானா :)

  பதிலளிநீக்கு
 7. சத்யா வியப்புக்குறிய பெண்மணிதான் வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
 8. அனைத்தும் அருமையான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. எல்லாம் நல்லா இருக்கு. அதுவும் இளம் பெண் சத்யாவின் 'குப்பை கூளங்களை, அதுவும் சரியான முறையில் கையில் கையுறை அணிந்துகொண்டு சுத்தம் செய்வது' பார்ப்பவர்களையும் கலந்துகொள்ள, இதைப் போன்று செய்யத் தூண்டும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. சங்கரன் சூப்பர் சங்கரன்!!! சத்யாவிற்கு அவரது ஐஏஎஸ் கனவு நனவாக வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!