வியாழன், 15 செப்டம்பர், 2016

பலாத்காரம்... ஸாரி கொஞ்சம் ஓவர்.


 
"வேண்டாம்..  விட்டுடுங்க... எனக்கு இதெல்லாம் பிடிக்காது.."  கெஞ்சினேன்.

இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.  

ஏழு மணிக்கே வேலை முடிந்து கிளம்பியிருக்க வேண்டும். ஒரே ஒரு வேலை, ஒரே ஒரு வேலை என்று சொல்லியே இந்த மூவரும் என்னைக் கிளம்ப விடாமல் லேட் செய்து கொண்டே இருந்தார்கள்.  'அதை எடுத்து வா, இதை எடுத்து வா' என்று அலைய விட்டுக் கொண்டே இருந்தார்கள்.

ஒன்பது  மணிக்கு மேல் அவர்கள் அருகே சென்ற போதே மதுவின் வாடை தெரிந்தது.  


வெறுப்பாக இருந்தது.  கிளம்பி விடலாம் என்று வெளியில் வந்தால் மறுபடி அழைத்து மாற்றி மாற்றி ஏதாவது ஒரு வேலை சொல்லி என்று ஒரே ரோதனை.


கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வேலை விஷயமாக என்பதிலிருந்து திசை மாறத் தொடங்கியபோதே என்னுள் அபாய மணி ஒலித்தது.

"இந்தா... அறிவே இல்லையா?  நாம மூணு பேர் மட்டுமே குடிக்கிறோமே...  வித்யாவுக்கும் தர வேண்டாமா?"

"ஓ... எஸ்..  இந்தா வித்யா..  தயங்காம நீயும் ஒரு பெக் எடுத்துக்கோ"

"வேண்டாம்..  எனக்குப் பழக்கமில்லை.  நான் கிளம்பறேன்" 

"பழகிட்டா எல்லாம் தானா பழகிடலாம்..வா.. இதுக்கே முடியாதுன்னா எப்படி?  இன்னும் எவ்வளவோ இருக்கே..."

"கையை விடுங்க..  எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. நான் கிளம்பறேன்"

"பிடிக்காதா?  ஹா...ஹா....ஹா...  இதெல்லாம் பிடிக்காமக் கூட இருக்குமா?  வா இங்கே.."

என் மேல் விழுந்த கைகளை வெறுப்புடன் தட்டி விட்டேன். எளிதாகத் தப்பி விடலாம் என்று போட்ட கணக்கு தப்பாயிருந்தது.

அவர்கள் மூன்று பேர்.   நான் ஒரே ஆள்.  

திட்டம் போட்டேதான் தாமதப் படுத்தி இருக்கிறார்கள் போலும்.. வெளியில் தண்ணி அடிப்பார்கள் என்று தெரியும்.  அலுவலகத்திலேயே ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.  மது உள்ளே போனால் அதுவரை நல்லவர்களாய் இருப்பவர்கள் கூட என்ன செய்கிறோம் என்று அறியாமல் மாறி விடுகிறார்கள்.  அல்லது அப்படி நினைத்துக் கொள்ளட்டும் என்று அவர்கள் சுயரூபம் வெளிவருகிறதோ என்னவோ! 


இப்போது தப்பிக்க வேண்டும்.  

என்னுடைய கைகளை இறுகப் பற்றினார்கள்.  அவர்கள் கைகளைத் தட்டி விட்டு விட்டு மூவரையும் ஒரே தள்ளாகத் தள்ளி விட்டு வெளியே ஓடி வந்தேன்..

வெளியே வந்து மெயின் கேட்டுக்கு வரும்வரை படபடப்பு ஓயவில்லை.  செக்யூரிட்டி என்னைப் பார்த்ததுமே புன்னகைத்தான்..

"என்ன வித்யாபதி ஸார்?  பதட்டமா இருக்கீங்க?  உடம்பு சரியில்லையா?"

ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்து விட்டு வெளியில் சென்றேன்.  என்ன சொல்ல முடியும்?  


 'மது அருந்தும் பழக்கத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்கிற பதட்டம்' என்றால் சிரிப்பார்கள்!  நீண்ட நாட்களாக என்னையும் அவர்கள் குழுவில் சேர்த்து விடத் துடிக்கிறார்கள்.  இன்று தப்பித்து விட்டேன்.  இனியும் தப்பிக்க வேண்டும்.  கடவுளே.. மனா உறுதியைத் தா!  மனம் வேண்டிக் கொண்டது!

41 கருத்துகள்:

  1. அவர் ஆண்தான் என்பதை ஏனோ என்னால், ஊகிக்க முடிந்தது....

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. மன உறுதியும் நம்பிக்கையும் போதும். எதையும் எதிர்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  4. பாவி பசங்க குடிகார பசங்க குடிச்சிட்டா நிதானம் இழந்து விடுக்கிறார்கள் அறிவு கெட்ட பசங்க........ நானாக இருந்தால் முதலில் ஊற்றிக் கொடுத்து அவரை சாப்பிட வைச்சிட்டு அல்லவா நான் குடிச்சு இருப்பேன், குடிச்சா இவங்களுக்கு புத்தி இல்லாமல போய்விடுகிறது

    பதிலளிநீக்கு
  5. சொல்லி சென்றவிதம் நன்றாக இருந்தது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  6. அழகாக உள்ளது கதை....வித்யா என்பது வித்யாசாகராக இருக்கும் அதாவது ஆணாக இருக்கும் என்று....யூகம் தோன்றியது......

    பதிலளிநீக்கு
  7. வித்யா யாருனு முதல்லேயே புரிஞ்சுடுச்சே!

    பதிலளிநீக்கு
  8. 'ராதா'கிருஷ்ணன் என்றால் இன்னும் கொஞ்சம் சுவாரசியம் கூடி இருக்குமோ :)

    பதிலளிநீக்கு
  9. முடிவை guess பண்ண முடிந்தது. கதை சொல்வதுபோல்தான் நிஜ வாழ்வும். எந்த எந்தக் காரியங்களை பெற்றோர் முன்பு செய்யமுடியாதோ, அதைப் பழகிக்கொண்டவர்கள், நண்பர்களையும் அந்த வளையத்தில் இழுத்துவிட முயல்வர். இது சைகலாஜிகலாக, அவர்களுக்குத் தான் செய்யும் செயலை (டிரிங்க்ஸ், புகைப்பது போன்றவை) மனதுக்காவது justify பண்ண உதவியாக இருக்கும்போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீராம் பிடியுங்கள் ஒரு பூங்கொத்தை.அருமையாகச் சொல்லிச்சென்ற விதம் கவர்ந்ததுகடைசியில் அது என்ன பாதி கற்பனை...?

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் வித்யாபதி என்று சொல்லியிருக்கிறீர்கள், நான் வித்யாசாகர் என்று நினைத்தேன். அவ்வளவு தான் வித்தியாசம்.

    அந்தக்கால குமுதம் பாணிக்கதை. இந்த மாதிரி எத்தனை படித்திருப்போம்?..

    பதிலளிநீக்கு
  12. தலைப்பு ‘பலாத்காரம்... ஸாரி கொஞ்சம் ஓவர்’ என்று இருப்பதால் வித்யா ஓர் ஆண் என்பதைக் காட்டிக்கொடுத்து விட்டது.

    தலைப்பினில் ’ஸாரி கொஞ்சம் ஓவர்’ என்ற வார்த்தைகள் இல்லாமல் இருந்திருக்கலாமோ என நினைத்தேன்.

    ஸாரி .... கொஞ்சம் ஓவர் ஆக ஏதேனும் நானும் இங்கு சொல்லிவிட்டேனோ! :)

    பதிலளிநீக்கு
  13. வித்யாபதி தப்பித்தது அதிசயமே. அழகா சொல்லி இருக்கிறிர்கள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  14. வித்யாவோட பதி அன்னிக்கு மாட்டிக்காம இருந்திருந்தா...



    காலா காலத்துலே வித்யாவுக்கும் பாதி ஊத்தித் தந்து



    இன்று நீ ஒரு பாதி, நான் ஒரு பாதி



    என்று பாட்டு பாட.....



    அமக்களம் தான்....



    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  15. என்னுடைய கமெண்ட் முதல் வரி ...



    அன்னிக்கு மாட்டி இருந்தா....." என்று துவங்க வேண்டும்.





    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  16. //‘பலாத்காரம்... ஸாரி கொஞ்சம் ஓவர்’ என்று இருப்பதால் வித்யா ஓர் ஆண் என்பதைக் காட்டிக்கொடுத்து விட்டது. //

    True..

    பதிலளிநீக்கு
  17. நான் ஒரே ஆள்.ஓ நீ வித்யாதரனாக மாறப்போகிராய் என நினைத்தேன். ஐயோ வித்யாபதியாக மாற்றி விட்டீர்கள். பாவம் மற்றவர்கள். குடியற்றவனாக அவன் சித்தரிக்கப் பட்டு விட்டான். நல்ல காரியம் செய்தீர்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி மாதவன். பெண்ணை வைத்து இப்படியான கதைகள், சம்பவங்கள் நானோ, எங்கள் பிளாக்கோ எழுத மாட்டோம் என்கிற நம்பிக்கையாக இருக்கலாம்! கடைசியாக வரும் பொது விளக்கத்தையும் தயவு செய்து படிக்கவும்!

    பதிலளிநீக்கு
  20. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  21. பாராட்டுக்கு நன்றி மதுரைத் தமிழன்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி கீதா ரெங்கன். கடைசியாக வரும் பொது விளக்கத்தையும் தயவு செய்து படிக்கவும்!

    பதிலளிநீக்கு
  23. நன்றி கீதா மேடம். கடைசியாக வரும் பொது விளக்கத்தையும் தயவு செய்து படிக்கவும்!

    பதிலளிநீக்கு
  24. வாங்க பகவான்ஜி. பெண்/ஆண் கலந்த பெயர்கள் நிறைய இருக்கின்றன!

    பதிலளிநீக்கு
  25. வாங்க நெல்லைத்தமிழன். நன்றி கருத்துக்கு. கடைசியாக வரும் பொது விளக்கத்தையும் தயவு செய்து படிக்கவும்!

    பதிலளிநீக்கு
  26. வாங்க ஜி எம் பி ஸார்... இது மாதிரி சம்பவங்கள் எனக்குத் தெரிந்தே இரண்டு மூன்று இடங்களில் நடந்திருப்பதால் "பாதி கற்பனை" என்று எழுதினேன்! கடைசியாக வரும் பொது விளக்கத்தையும் தயவு செய்து படிக்கவும்!

    பதிலளிநீக்கு
  27. நன்றி ஜீவி ஸார்.. விளக்கம் கடைசியாகப் பொதுவில்!

    பதிலளிநீக்கு
  28. நன்றி வைகோ ஸார்.. விளக்கம் கடைசியில்.

    பதிலளிநீக்கு
  29. ஒரு விளக்கம் :: ஃபேஸ்புக்கில் போட்டிருந்த என்னுடைய ஸ்டேட்டஸ் நிறைய பேர்கள் படித்திருப்பீர்கள். இன்று வெளியிடுவதாக இருந்த பதிவு காணாமல் போனதால் நீண்ட நாட்களுக்குமுன் எழுதி டிராப்டில் வைத்திருந்த இதை வெளியிட்டேன்.

    கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன் இதை எழுதியதும், கேஜிஜிக்கும், கேஜிக்கும் அனுப்பி அபிப்ராயம் கேட்டேன். அப்போது ஸாரி, கொஞ்சம் ஓவர் என்று சப்ஜெக்ட் லைனில் எழுதி இருந்தேன். முன்னதாக நான் வைத்திருந்த தலைப்பு "பலாத்காரம்" மட்டுமே.

    மட்டுமில்லாமல், முடிவு வேறு மாதிரி வைத்திருந்தேன். அதைப் போட்டால் எதிர்ப்பு வரும் என்று அதற்கு ஆதாரமாக இரண்டு மூன்று லிங்க் எடுத்தும் வைத்திருந்தேன். கேஜிஜி மற்றும் கே ஜி எஸ் மாற்றி அபிப்ராயப்பட்டதால் ஒதுக்கி வைத்திருந்ததை, சற்றே மாற்றி அவசரத்துக்கு வெளியிட்டு விட்டேன்!

    இவ்வளவு நீண்ட விளக்கம் தேவை இல்லைதான். எனினும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  30. எதிர்பாரா முடிவுக் கதை! ஆனால் முடிவு முதலிலேயே தெரிந்துவிட்டது! இருப்பினும் உரையாடல்கள் நகர்த்தியவிதம் சிறப்பு! வாழ்த்துக்கள்! சார்!

    பதிலளிநீக்கு
  31. //எதிர்பாரா முடிவுக் கதை! ஆனால் முடிவு முதலிலேயே தெரிந்துவிட்டது//

    நன்றி சுரேஷ். உங்கள் இரண்டு வரிகளும் ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன!

    பதிலளிநீக்கு
  32. மரியாதைக்குரிய ஸ்ரீராம் ஐயா அவர்களே, விளக்கம் தேவையில்லை. கதையில் தவறேதும் இல்லையே !

    பதிலளிநீக்கு
  33. ** //எதிர்பாரா முடிவுக் கதை! ஆனால் முடிவு முதலிலேயே தெரிந்துவிட்டது//

    நன்றி சுரேஷ். உங்கள் இரண்டு வரிகளும் ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன! **

    முடிவை guessபண்ணதால, வேற முடிவை எதிர்பாத்தார்போல.. அந்த எதிர்பார்ப்பு நடக்கல..

    பதிலளிநீக்கு
  34. ம்ம்ம். பதிவு வெளியிட வேண்டுமென்பதால் வெளியிட்ட பதிவு! :)

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  35. கதை ஓட்டம் சிறப்பாக இருந்தது. நான் சமீபத்தில் இதே மாதிரி இதே பெயர் வித்யாபதிக்கு பதிலாக வித்யா சாகர் என்று அமைதி எழுதி இருந்ததாலோ என்னவோ முடிவை யூகிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!