ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

ஞாயிறு 160918 :: செயற்கை ஒளியில் இயற்கை எழில்


நன்றி : நண்பர் திரு இளங்கோ ரங்கராஜன் அவர்களுக்கு! 
 


படத்திற்குப்  பொருத்தமான கவிதைகள் பதியுங்கள் நண்பர்களே!
     

15 கருத்துகள்:

 1. ஞாயிறு ஒளி இல்லையேல்
  செயற்கை ஒளி தானே கிடைக்கும்.
  இரவு எடுத்தபடம் தானே?
  மின் ஒளியில் சிரிக்கும் இயற்கை.
  கவிதை தெரியாது.

  பதிலளிநீக்கு
 2. ரசனைக்கு பாராட்டுகள். கவிதைக்கும் எனக்கும் வெகுதூரம்.

  பதிலளிநீக்கு
 3. செயற்கை ஒளி பட்டு

  சாயம் போன மரங்கள்...

  நிலமெல்லாம்

  பச்சை வண்ணம்..!


  ( கவிதையா இது..தெரியவில்லை)

  பதிலளிநீக்கு
 4. இயற்கை அழகிகளுக்கு
  செயற்கைச் சாயம் கொடுப்பது
  ஃபேர் & லவ்லி மட்டுமல்ல.

  பதிலளிநீக்கு
 5. இருட்டிய கருவான் எழில்தரு புற்கள்
  மருட்டிய விழிக்கு மருந்து.
  (குறள் வெண்பா)

  பதிலளிநீக்கு
 6. ஒளிக்குள் சிக்கிய
  பச்சை மரங்கள்....
  இன்னும் அழகாய்
  பசுமை போர்த்தி...

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. எனக்குத் தோன்றிய நேரிசை வெண்பா:

  பச்சையத் தாற்தான் பயனென் ஒளிச்சேர்க்கை
  நிச்சயம் இங்கே நிகழாது - நிச்சலும்
  நன்மை இயற்கையே நல்கும் செயற்கையால்
  புன்மையே சேரும் புகுந்து!

  பதிலளிநீக்கு
 9. ஒரு திருத்தம். 'இருட்டிய கருவான்' மற்றும் 'மருட்டிய விழிக்கு' -- இலக்கணப் பிழை இருப்பதால் (தளை தட்டுகிறது -- 'விளம்' முன் 'நேர்' வரவேண்டும்)
  எனவே, இவ்வாறு மாற்றுகிறேன். (தற்போது 'மா' முன் 'நிரை'' வருவது இலக்கணப்படியே).
  --------------------
  இருண்ட கருவான் எழில்தரு புற்கள்
  மருண்ட விழிக்கு மருந்து
  (குறள் வெண்பா 1)
  ----------------------
  பச்சை விளக்கோ பனிநீர்ப் பசும்புல்லோ
  இச்சை யளிக்கும் இனிது
  -----------------
  (குறள் வெண்பா 2)

  பதிலளிநீக்கு
 10. இயற்கைக்கும்
  செயற்கைமுகம் போர்த்தப்பார்க்கும்
  மனிதன்

  பதிலளிநீக்கு
 11. கவிதை எழுதிக் கலக்கிய,

  கோமதி அரசு,
  அனுராதா பிரேம்,
  நெல்லைத் தமிழன்,
  மாதவன்,
  பரிவை சே குமார்,
  பெசொவி,
  தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
  ஆகியோருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.


  படத்தைப் பாராட்டிய டாக்டர் ஜம்புலிங்கம், வெங்கட் நாகராஜ் ஆகியோருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. // Madhavan Srinivasagopalan said...
  ஒரு திருத்தம். 'இருட்டிய கருவான்' மற்றும் 'மருட்டிய விழிக்கு' -- இலக்கணப் பிழை இருப்பதால் (தளை தட்டுகிறது -- 'விளம்' முன் 'நேர்' வரவேண்டும்)
  எனவே, இவ்வாறு மாற்றுகிறேன். (தற்போது 'மா' முன் 'நிரை'' வருவது இலக்கணப்படியே).
  --------------------
  இருண்ட கருவான் எழில்தரு புற்கள்
  மருண்ட விழிக்கு மருந்து
  (குறள் வெண்பா 1)
  ----------------------
  பச்சை விளக்கோ பனிநீர்ப் பசும்புல்லோ
  இச்சை யளிக்கும் இனிது
  -----------------
  (குறள் வெண்பா 2)//

  சூப்பர் மாதவன்!

  பதிலளிநீக்கு
 13. // பெசொவி said...
  எனக்குத் தோன்றிய நேரிசை வெண்பா:

  பச்சையத் தாற்தான் பயனென் ஒளிச்சேர்க்கை
  நிச்சயம் இங்கே நிகழாது - நிச்சலும்
  நன்மை இயற்கையே நல்கும் செயற்கையால்
  புன்மையே சேரும் புகுந்து!//

  ஆஹா! பிரமாதம்!
  பொளந்து கட்டிட்டீங்க!
  எங்கேயோ போயிட்டீங்க!


  பதிலளிநீக்கு
 14. அருமையான அழகான படம்

  கீதா : கவிதை வகுப்பிற்குத் தாமதமாகிவிட்டது...மன்னித்துவிடுங்கள் சார்...ஹிஹிஹி

  செயற்கை ஒளியில் ஒளிர்ந்தாலும்
  மனிதரைப் போல்
  வாழ்வதில்லை செயற்கையாய்
  இயற்கையே எப்போதும்

  (கவித கவித....)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!