நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
செவ்வாய், 28 பிப்ரவரி, 2017
திங்கள், 27 பிப்ரவரி, 2017
திங்க"க்கிழமை 170227 :: வாழைப்பழ கோதுமை மாவு அப்பம் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
நான்
சமையல் செய்வது ரொம்ப
ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017
சனி, 25 பிப்ரவரி, 2017
வெள்ளி, 24 பிப்ரவரி, 2017
வியாழன், 23 பிப்ரவரி, 2017
இதுவும் அதுவும் - சின்ன வீடு
================================================================
சின்ன வீடு
புதன், 22 பிப்ரவரி, 2017
செவ்வாய், 21 பிப்ரவரி, 2017
திங்கள், 20 பிப்ரவரி, 2017
"திங்க"க்கிழமை 170220 :: ஆலு பனீர் கிரேவி
கிச்சன் பக்கம் சென்று நாளாகி விட்டது. ஆயிரத்தில் ஒருவன் எம் ஜி ஆர் மாதிரி நேற்று என் பாஸிடம் "பூங்கொடி.. இரு.. சற்று விளையாடி விட்டு வருகிறேன்" என்று கிச்சனைப் பார்க்கக் கிளம்பியதும் பாஸ் என் பக்கம் திரும்பி புன்னகைக்கு பதில் பீதிப்பார்வை பார்த்தார்.
கத்தரிக்காய் - முருங்கைக்காய் - இதை என் மாமியார் ஏனோ "முருங்கிக்காய்" என்பார்! - வெந்தயக்குழம்பு செய்து (ப்பூ.... இதெல்லாம் ஜுஜுபி! ஆனால் அதை பற்றி நாம் கதைக்கப் போவதில்லை சகோதரி அதிரா..) ) ஓரமாக வைத்து விட்டு... கறிக்கு (கரமது, பொரியல் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்) என்ன செய்யலாம் என்று பார்த்தேன். சேனைக்கிழங்கு கண்ணில் பட்டது. வேண்டாம். ஒரே ஒரு கத்தரிக்காய் (மீதி) இருந்தது. வேண்டாம். கண்ணில் பட்ட முட்டைக்கோஸையும் பன்னீர்செல்வத்தை ஒதுக்கிய 122 எம் எல் ஏக்கள் போல விலக்கினேன்.
உருளைக்கிழங்கை வைத்து விளையாட முடிவு செய்தேன்! ஆம், விளையாட்டுத்தான். கைக்கு கிடைத்ததை எல்லாம் எடுத்து ஒரு குழந்தை விளையாடுமே.. அது போல அடுத்த கொஞ்ச நேரத்துக்கு நானும் ஒரு குழந்தையாகிப் போனேன்.
அரசியலில்தான் பன்னீரைக் கொண்டு வர முடியவில்லை. சமையலில் பனீரைக் கொண்டு வருவோம் என்று முடிவு செய்தேன்.
நடுத்தர அளவில் ஐந்து உருளைக் கிழங்கை வேகவைத்து எடுத்துத் தோலுரித்துக்கொண்டு..
பனீரை நறுக்கி எடுத்துக்கொண்டு..
இரண்டு தக்காளி, நான்கு பச்சைமிளகாயை அரை ஸ்பூன் பெருஞ்சீரகம், கொஞ்சூண்டு பட்டையுடன் வதக்கி எடுத்துக் கொண்டு,துருவிய அரைமூடித் (சிறிய மூடி!) தேங்காயுடன் கொஞ்சம் கொத்துமல்லி சேர்த்து மிக்சியில் அரைத்துத் தனியாக வைத்துக்கொண்டு.....
தோல் நீக்கிய உருளையில் உப்பு, காரப்பொடி, பெருங்காயம், தூவிக் கொண்டு,
குடை மிளகாயையும், வெங்காயத்தையும் தனித்தனியாக உப்பு கொஞ்சம் சேர்த்து வதக்கி எடுத்துக் கொண்டு.. (தனித்தனியாக உப்பு சேர்ப்பதால் மொத்தமாக எவ்வளவு போடுவது என்று வேண்டாமே என்று இந்தமுறை இப்படி)
காரத்தில் ஊறிய உருளையை வாணலியிலிட்டுத் திருப்பி,
குடைமிளகாய் சேர்த்து...
வெங்காயம் சேர்த்து... இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்து..
அரைத்த கலவையைச் சேர்த்து...
பனீரைப் போட்டுத் திருப்பி.. செஷ்வான் பொடியை தூவி, திருப்பி...
வெளியில் வந்தால் மேஜையில் பாஸ் காலை வாங்கி வைத்திருந்த ப்ரெட்! விடலாமா? எடுத்தேன். வாணலியில் இட்டு புரட்டினேன்.
இறக்கி வைத்து விட்டு வெளியில் வந்தால் கண்ணில் பட்ட கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கி அதன்மேல் தூவி..
வறுத்த ப்ரெட் துண்டங்களை போட்டுப் புரட்டி..
"இதைச் செய்த நேரத்துக்கு நான் ஒரு ஃபுல் சமையலே செய்திருப்பேன்" என்று பாஸ் இடது தாவாங்கட்டையையையும் இடது தோள்பட்டையையும் இணைத்துக் கொண்டதை நான் இங்கு சொல்லப்போவதில்லை.
பெரியவன் கருத்து : "குடைமிளகாயை இன்னும் சிறிதாக நறுக்கி, இன்னும் கொஞ்சம் வதக்கி இருக்கலாம்!" சற்றுப் பெரிய அளவில் இருந்ததால் அது வதங்கவில்லை என்னும் முடிவுக்கு வந்துவிட்டான் போல! இருக்கலாம். திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சிறியவன் கருத்து : "ஓக்க்க்க்கே.... ஆனால் ஒன்று சொல்லணும்... இது மாதிரி சாப்பிட்டதில்லை. பனீர் செமையாய் சேர்ந்திருக்கு!"
அண்ணன் மகன் கருத்து : "நல்லாயிருக்கு. இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாம். " ஆமாம்.... தக்காளியும், தேங்காய்த்துருவலும் காரத்தைக் குறைத்திருக்கும்.
கணினியை வைத்தியம் இளைஞரின் கருத்து : "இதுவரை இதுமாதிரி சாப்பிட்டதில்லை ஸார். நன்றாக இருக்கு" செய்முறையைச் சொல்லியிருந்தால் தெறித்து ஓடியிருப்பார். அப்புறம் என் கணினி எப்படிச் சரியாகும்! எனவே நன்றி கூறிப் புன்னகைத்து விட்டு மௌனமானேன்.
நன்றி... மீண்டும் ஒரு திங்கறகிழமையில் உங்களைச் சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடை பெறுவது.. உங்கள்...
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017
ஞாயிறு 170219 :: Ghum இந்தியாவின் உயரமான ரயில்வே ஸ்டேஷன்
Ghum ரயில்வே ஸ்டேஷன். இந்தியாவிலேயே உயரமான இடத்தில் இருக்கும் ஒரே ரயில்வே ஸ்டேஷன் என்ற பெருமை இதற்கு. உலக அளவில் 20 வது இடம்.
அதோ அந்த நாலுகால் செல்லங்களுக்குப் பின்னால் நிற்பது டென்சிங் நார்கேயின் உறவினராகக் கூட இருக்கலாம்!!
இங்கிருந்து 52 கிலோமீட்டர் சிலிகுரி வரை இந்த ரயில்வே டிராக் செல்கிறது / வருகிறது.
எனக்கும் இந்த உயரமான இடம் ஒரு துயரமான இடமாக - மறக்க முடியாத இடமாக - அமைந்தது. (நான் என்றால் ஸ்ரீராம் இல்லை. இங்கு ஸ்ரீராம் பார்ப்பது பிள்ளையார் வேலை)
அதாவது இங்குதாங்க என் செல் தொலைந்தது. அலைந்து திரிந்து தேடியும் கிடைக்கலை. கும் ஹை மைனே செல் கா... என்று கிஷோர் குரலில் பாடி விட்டு (சோகமாகத்தான்) நகர்ந்தோம்! புதிய செல் வாங்கும் அதிருஷ்டம் தேடித் தந்த இடம்!
இணையத்திலிருந்து எடுத்த இதே இடத்தின் படங்களை கீழே இணைக்கிறேன்.
சனி, 18 பிப்ரவரி, 2017
சேவைக்கு வயதேது?
1) பக்தி கடோல். ஒன்பது வயதில் கேன்சரில் பார்வை இழந்தார். இருபத்தியொரு வயதில் I A S Officer ஆனார்.
2) கேன்சரை எதிர்க்க, கண்டறிய புதிய வழிகள்..
..... Future seems better
Thankfully a lot of new tests are changing the cancer diagnosis landscape. New cancer markers CA 15.3 (often elevated in breast cancer), CA 19.9 (for pancreatic or stomach cancer), CA 125 (measured for cancers of the reproductive system), and Carcinoembryonic antigen (CEA), a cancer marker to screen for colorectal cancer, are helping the care givers and doctors screen better. DR-70 is another new test that is a landmark discovery. It is a simple blood test that screens for 13 different cancers at the same time, and is also now available.......
3) ஒய்வு பெற்ற பின்னும் ஓய்வில்லாத மக்கள் சேவையில் மேலூர் மீன்வளத்துறை ஆய்வாளர் பாலசுப்ரமணியன்.
4) இந்த வாரமும் ஒரு போலீஸ் பாஸிட்டிவ்! இந்த முறை பீகாரில். அன்பைக் கொண்டாடும் பிப்ரவரி பதினாலாம் தேதி நிர்மலகுமாரி, சாலை விபத்தில் தந்தையை இழந்த ஒரு ஏழைப்பெண்ணின் திருமணத்தை நடத்த உதவியிருக்கிறார்.
வெள்ளி, 17 பிப்ரவரி, 2017
வெள்ளிக்கிழமை வீடியோ 170217 :: பொருந்தாத காட்சிகள்
உண்மை வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கும்போது திரைப்படங்களில் பாடல் காட்சிகளே பொருத்தமில்லைதான். ஆனாலும் சில சமயங்களில் தேவை இல்லாத இடத்தில் பாடல் காட்சிகள் தலை காட்டும்.
சமயங்களில் அவை இனிமையான பாடல்களாயிருந்தால் இந்தத் தவறு மறக்கப்பட்டு, பாடல் மட்டுமாவது நினைவில் நிற்கும்.
இந்த வகையில் எனக்குத் தெரிந்து தமிழ்ப்பட பாடல் காட்சிகளில் பொருத்தமில்லாத இடத்தில் வருவதாக முதல் இடத்தில் இருக்கும் பாடலை இங்கு பகிர்கிறேன்.
கற்பழிக்க ஒருவன் வரும்போது, ஒன்று அவனை அடித்து உதைக்க வேண்டும். இல்லாவிட்டால் தப்பி ஓடிவிட வேண்டும். இரண்டுமில்லாமல், ஜானகி குரலில் இசையமைத்து பாட்டுப் பாடிக் கொண்டிருப்பார்களோ...! [ஆனால் அதே சமயம் புன்னகை படத்தின் கிளைமேக்ஸ் காட்சி எனக்குப் பிடித்த காட்சிகளில் ஒன்று.]
அடுத்த பாடல்.
பெற்ற அம்மாவை ஒருவன் கடத்திக் கொண்டு போய்விட்டான். அதே சமயம் எதிர்பாராமல் ஒரு சகோதரன் கிடைத்து விட்டான்தான். அதற்காக கடத்திப் போகப்பட்ட அம்மாவைத் தேடிக்கொண்டு இப்படிப் பாடிக்கொண்டே போவார்களோ...!.
உங்களுக்குத் தெரிந்த பொருத்தமில்லா பாடல் காட்சிகளை இங்கே சொல்லலாம் நண்பர்களே..
வியாழன், 16 பிப்ரவரி, 2017
குடையாளி கொடையாளி ஆன கதை
குடையாளி கொடையாளி ஆன கதையும், 250 ரூபாய் மிச்சம் பிடித்த கதையும்!
ஞாயிறு மாலை பாகடோக்ரா விலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் இருக்கும் டார்ஜீலிங் வந்து சேரும் பொழுது மழை வந்து வரவேற்றதால் புத்த மடத்துக்கு செல்லும் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு சூடு சூடாக கொடுக்கப் பட்ட தேநீர் பிஸ்கட் இவற்றை சாப்பிட்டுவிட்டு ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தோம். ஆகையால் ஒரே இடத்திலிருந்து வேறு வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட கூரை மீது சின்டெக்ஸ் டாங்க் மசூதி இவை திருமபத் திரும்ப வந்து எல்லோர் பொறுமையையும் சோதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்..
சென்னையிலிருந்து ஒரே நாளில் ஏற்பட்ட வெப்ப நிலை மாறுதல் காரணமாக தூக்கம் சற்று தாமதமாக வந்தது. இருப்பினும் தீபாவளி அன்று எழுப்புவது போல காலையில் 0345 க்கு டிரைவர் கபில் சர்மா ஆஜராகி சீக்கிரம் கிளம்பினால் மட்டும் முன்னே போய் இடம் பிடிக்க முடியும் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி எல்லோரையும் எழுப்பி விட்டார்.
ஆனால் நண்பர் விங்ஸ் மட்டும் நான் குளிரில் எங்கும் வருவதாக இல்லை என்று சொல்லிவிட்டுப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டதனால் நாங்கள் நால்வர் மட்டும் டைகர் ஹில் நோக்கிப் புறப்பட சாலை பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டி ருந்தமையால் பக்கத்தில் இருந்த இன்னொரு குன்றின்மேல் போய் நின்றவுடன் மழையும் 'நானும் வந்தேன் உங்களோடு' என்று வந்தே சேர்ந்தது.
மணி 0420. குன்றின் உச்சியில் நின்றதால் காற்றும் மழையும் கடும் குளிருடன் போட்டி போட "சாய் ...சாய் " என்ற குரலைக் கேட்டதும் கடவுள் நம்மிடம் பேசினால் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது..
இதற்குள் ஒரு குரல் பக்கத்தில் இருக்கும் கடையில் குடை விற்கிறார்கள் என்று கூவ, 'அப்பா காசு வச்சிருக்கியா?' என்று பெண் கேட்டதும் முதலில் 'இல்லை' என்று சொன்னாலும், பின்னர் நாம்தான் நம் ஃபோன் கவரில் ஒரு 500 ரூபாய் வைத்திருப்போமேன்னு கவரைக் கழற்றினால் .... இருந்தது ஒரு 500.
குடை வாங்கி குழந்தைகளுக்கு பிடித்துக் கொண்டு தலையில் ஒரு கைக்குட்டையை போட்டுக் கொண்டு முடிந்த வரை படங்கள் எடுத்து திருப்தி பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பலத்த காற்று கைக்குட்டையை கொண்டு போய் பள்ளத்தில் போட்டதும் காமெராவை குடைக்குள் இருப்பவரிடம் கொடுத்து விட்டு மழையில் நனைந்தவாறே போன் காமெராவை மட்டும் உபயோகித்து ஹில் விஜயத்தை ரெகார்ட் செய்தோம்.
இதோ நாலரைக்குத் தெரியும் ஐந்தேகாலுக்கு ஆறு மணிக்கு என்று பொழுது போய் ஏழரை என்றதும் இங்கே வராத வெயிலா கஞ்சன் ஜங்கா மேல் வீசப்போகிறது என்ற ஏமாற்றத்துடன் காரில் வந்து உட்கார்ந்தால்.......
முதலில் வந்தவர் கடைசியில் என்ற கூற்றுப்படி 30 நிமிடங்கள் தாமதத்துக்குப் பின் நகர்ந்து ஊர்ந்து ஒரு வழியாக கூம் ரயில்வே ஸ்டேஷன் வந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை யுனெஸ்கோ வின் உலக சரித்திரத் தளங்களில் ஒன்று என்ற அறிவிப்புப்பலகை யை மட்டும் ஒரு படம் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன் வண்டியை தண்டவாளம் அருகே நிறுத்துங்கள் என்று சொல்லி மழையில் காமெரா நனையாமல் இருக்க ஒரு சின்ன டவல் போட்டுப் போர்த்திக் கொண்டு மழையில் இறங்கி ஓடிப்போய் நிலையத்துக்குள் அடைக்கலம் புகுந்து எடுத்த காட்சிகள் தான் ஞாயிறு படங்களில் நீங்கள் பார்த்தது.
பின்னர் வண்டியில் ஏறி 3 அல்லது 4 நிமிடங்கள் பயணித்த பின்னரே போன் இல்லாதது தெரியவர வண்டியைத் திருப்பிக் கொண்டு வர ஒரு 5 அல்லது 6 நிமிடங்கள். தொலைந்தது தொலைந்ததுதான் . கிடைக்கவில்லை.
அஜாக்கிரதையாய் இருந்ததன் பலாபலன்கள் :
15000 பெறுமான கைபேசி நஷ்டம்
சென்னையில் கிளம்பி டார்ஜீலிங் டைகர் ஹில் வரை எடுத்த படங்கள் அவ்வளவும் கிடைக்காமல் போனது [எங்கள் நஷ்டம் ..உங்கள் நஷ்டமும் தான்]
103 வயது பாட்டி கீபோர்டில் வாசித்த பாட்டுக்கள் போயே போயிந்தி.[இருந்தால் வெள்ளிக்கிழமை போடலாமோ ?]
தொலைந்த போனுக்குப் பதில் வாங்கிய 1+3 லாபம்.
குடை வாங்கியதால் ஒரு குடையும் 250 சில்லரையும் மிச்சம்.
குடையை அங்கு உபயோகப் படுத்திய பின் ஹோட்டல் காவலரின் பெண்ணுக்கு கொடுத்ததுதான் நாங்கள் டார்ஜீலிங்கில் செய்த நல்ல காரியங்களில் உயர்வானது என்று ஒரு எண்ணம்.
இரண்டு படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து...