திங்கள், 3 ஏப்ரல், 2017

"திங்க"க்கிழமை :: வல்லாரைக் கீரை சாம்பார் - ஏஞ்சல் ரெஸிப்பி




வல்லாரை கீரை சாம்பார் :)



 

எப்பவுமே வெந்தயக்கீரை அப்புறம் கேல் கீரையில் சாம்பார் அடிக்கடி செய்வதுண்டு ..இந்த வல்லாரையை கீரை சாலட் கீரை தொக்கு அரைத்து மோரில் போட்டு குடிப்பது,  ஸ்மூத்தி என பல செய்யலாம் ..  சரி கொஞ்சம் வித்யாசமாக இருக்கட்டுமேன்னு இந்த வல்லாரை கீரையில் சாம்பார் செய்தேன் ..  சும்மா சொல்லக்கூடாது ருசி அபாரமா  இருந்தது ..


தேவையான பொருட்கள் 
------------------------------------------------

துவரம்பருப்பு .....3/4 கோப்பை (சிறிது நேரம் நீரில் ஊறவைக்கவும் )
வல்லாரை இலைகள் ...2 கோப்பை
சின்ன வெங்காயம் என்றால் ....8
பெரியவெங்காயம் என்றால் ...மீடியம் அளவு ..1
தக்காளி ......2
கறிவேப்பிலை ,கொத்தமல்லி சிறிதளவு
நெய் .... 2 தேக்கரண்டிகள்
பூண்டு ...3 பற்கள்
சீரகம் ...1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் ...1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் ....1 தேக்கரண்டி
சாம்பார் பவுடர் ....3 தேக்கரண்டிகள்
பெருங்காயத்தூள் ..1/4 தேக்கரண்டி
1/2 தேக்கரண்டி ப்ரவுன் சுகர் அல்லது சிறிதளவு வெல்லம் ..

இது சேர்த்தால் வல்லாரையின் கசப்புத்தன்மை சுத்தமாக தெரியவில்லை ..
மசாலா மற்றும் உப்பு  அவரவர் விருப்பத்துக்கேற்றவாறு போட்டுக்கலாம் 
நெல்லிக்காய் அளவு புளி ....நீரில் கரைத்து வைக்கவும் 


தாளிக்க 
-----------------
கடுகு .....1 தேக்கரண்டி
வெந்தயம் ....1/2 தேக்கரண்டி
சோம்பு .....1/2 தேக்கரண்டி
நெய் அல்லது நல்லெண்ணெய் 


படத்தில் இருப்பதுபோல காய்களை நறுக்கி வைக்கவும். புளியைக் கரைத்துக்கொள்ளவும் 

பிறகு முக்கால் கோப்பை பருப்பை நீர், மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் கொஞ்சூண்டு நெய் சேர்த்து இரண்டு அல்லது மூன்று  விசில் வரும்வரை வேகவைக்கவும்.



பிறகு ஆவி அடங்கியதும் மெதுவாக  குக்கரைத் திறந்து  கரண்டியால் கலக்கினால் பருப்பு மசிந்துவிடும்.  அதில் வல்லாரை இலைகள் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து மூடி மீண்டும் ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.  சிறிது நேரம் கழித்து திறந்து கலக்கவும்.


பின்பு சட்டியில் ..(நான் மண் சட்டியில் தாளித்தேன் ..)  நெய் அல்லது நல்லெண்ணெய் தாளிக்கும் அளவு ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் சோம்பு, கரிவேப்பிலை  இவற்றைத் தாளித்து அதில் சாம்பார் பவுடர் மற்றும் மிளகாய்த்தூள் அளவாக சேர்த்து, உப்பும் சரி பார்த்துச் சேர்க்கவும்.

பிறகு கரைத்து வைத்த புளியை அதில் ஊற்றி மசாலா வாடை ,புளி வாடை போன பின் அதில் பருப்பு, கீரைக் கலவையை சேர்த்து,  ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும் ..  இறக்குமுன் சிறிது வெல்லம் அல்லது பிரவுன் சர்க்கரை சேர்க்க, சுவை அபாரமாக இருக்கும் ..


வல்லாரையை நறுக்கியும் வேகவைக்கலாம் அல்லது வெங்காயம் ,மசாலா தாளிக்கும்போது நறுக்கி வதக்கலாம்.  ஆனால் எனக்கு அப்படியே முழுவதுமாக போட பிடித்திருந்தது.



78 கருத்துகள்:

  1. வல்லாரைக்கீரையை நன்கு பொடியாக நறுக்கிக் கழுவிட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கலந்து வைத்துவிட்டுப் பின் பிழிந்து தாளிதத்தில் சேர்த்து வதக்கிச் சேர்த்தால் சாம்பாரில் கசப்புத் தெரியாது. கேல் கீரையையும் நான் நன்றாக வேகவிட்டுத் தாளிதம் செய்து பின் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கித் தொட்டுக்கொள்ள வைத்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
  2. நாங்கள் வெந்தயக் கீரையில் சாம்பார் செய்ததுண்டு. வல்லாரை மிக மிக அபூர்வமாகச் சமைப்போம். உடம்புக்கு நல்லது பாருங்கள்.. அதனால்!!! அவ்வப்போது வல்லாரை சாக்லேட் சாப்பிட்டிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. வல்லாரை மனசுக்கும் நல்லது. நல்லதொரு பகிர்வு . மிக நன்றி எபி.

    பதிலளிநீக்கு
  4. வல்லாரைக் கீரையில் சாம்பார்! நல்ல குறிப்பு. செய்து பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்

    செய்முறை விளக்கத்துடன் அசத்தலான விளக்கம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. வல்லாரைக் கீரை இதுவரை செய்துபார்த்ததில்லை. மண்சட்டி சமையலா? ருசிக்குக் கேட்பானேன். கேல் கீரைனா என்னது?

    பதிலளிநீக்கு

  7. தேவையான பொருட்களில் அடுப்பு மிஸ் ஆகிவிட்டதே அது இல்லாமல் எப்படி சமைக்கிறதாம்

    பதிலளிநீக்கு
  8. என்னது சாம்பாருக்கு சோம்பு சேப்பீங்களா ? இது புதுமையாக அல்லவா இருக்கு?

    பதிலளிநீக்கு
  9. வல்லாரைக்கீரை சாம்பார் ரெசிப்பி போட்டால் மட்டும் போதுமா? அந்த கீரையின் பலனைஉம் சொல்லனும்லா

    நீங்க சொல்ல தவறியதை நான் இங்கே சொல்லுகிறேன்

    வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. சரஸ்வதி கீரை என்று இன்னொரு பெயரும் உண்டு. இந்தக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'சி', ஏராளமான தாதுஉப்புக்கள் அடங்கியுள்ளன.

    ரத்தத்துக்குத் தேவையான சத்துகளை, சரியான அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவேதான், இதைச் சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இதனாலேயே 'வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே' என்ற பழமொழியும் ஏற்பட்டது.

    மருத்துவப் பயன்கள்

    அவரை விதை வடிவமுடைய இலைகளைக் கொண்ட வல்லாரை, ஏழு பிரதான நரம்பமைப்பைக் கொண்டது. இந்தத் தாவரத்தின் எல்லாப் பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.

    l உடலின் வலு அதிகரிக்கவும் வைரஸ் நோய்க்குப் பிறகு உடல் தேறவும் உதவுகிறது.

    l தூக்கமின்றித் தவிப்பவர்களுக்கு நல்ல மருந்தாகிறது.

    l ரத்தக்குழாய்களை நெகிழ்வடையச் செய்கிறது.

    l நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

    l காலை வேளையில் வல்லாரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை செயலாற்றல் பெறும்.

    l இனப்பெருக்க ஆற்றலை அதிகரிக்கும்.

    l இதிலுள்ள ஏஸியாடிக்கோசைடு என்னும் பொருள், புண்களைக் குணமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

    l மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கிச் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.

    மனநோய்கள் மறைய...

    சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் பசும்பால் அருந்தவும். கூடியவரை உப்பு, புளி குறைத்த உணவை உண்டுவந்தால், மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல மனம் சார்ந்த நோய்களும் தீரும்.

    தவிர்க்க வேண்டியவை

    l இதை உண்ணும் காலங்களில் மாமிச உணவு, அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றை உண்ணக் கூடாது. புளி, காரத்தை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.

    l இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப் பயன்படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும்.

    l வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

    எளிய வைத்தியம்

    ரத்தச் சோகைக்கு (Anaemia):

    1/2 தேக்கரண்டி வல்லாரை இலைச்சாற்றுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1 மாதம் அருந்தவும்.

    மன அமைதிக்கு:

    வல்லாரை இலைகளைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தினமும் 1/4 தேக்கரண்டி சூரணத்தைத் தேன் அல்லது பசும்பாலோடு சேர்த்து உட்கொள்ளவும்.

    தூக்கமின்மை:

    1/2 தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 க தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, இரவில் படுக்கும் முன் குடிக்கவும்.

    ஞாபகமறதி:

    5 வல்லாரை இலைகளை இடித்துச் சாறெடுத்து, ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்துத் தினமும் உண்ணவும்.

    அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று, அடுத்த நான்கு மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், பயம் போன்ற மனநோய்கள் விலகும்.

    பதிலளிநீக்கு
  10. கிராமத்திலிருந்த போது வல்லாரை இலையை இஷ்டத்துக்குப் பறித்துத் தின்பது வழக்கம்.. வீட்டின் பக்கத்திலிருந்த வாய்க்காலின் கரை நெடுக வல்லாரை தான்..

    அதெல்லாம் ஒரு கனாக்காலம்..

    பயனுள்ள குறிப்புகளைக் கண்டு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  11. சூப்பர் குறிப்பு ஏஞ்சல்!!! எல்லாத்துலயும் புகுந்து விளையாடறீங்கப்பா பாராட்டுகள்! வாழ்த்துகள்!! உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவே நிறைய இருக்கு...
    வல்லாரை தொக்கு, சட்னி, மற்றும் சப்ஜிக்களில் மற்ற கீரைகளுடன் சேர்த்து மசியல், வத்தக்குழம்பு, பாகற்காய் குழம்பு செய்வது போல் என்றும் சாம்பாரிலும் சேர்த்ததுண்டு. ஏஞ்சல் வல்லாரையை உப்பிட்டு (பாகற்காய் செய்வது போல்) சிறிது நேரம் வைத்தால் கசப்பு அவ்வளவாகத் தெரியாது. வல்லாரை மிகவும் நல்ல கீரை ஆனால் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று எங்கள் குடும்ப டாக்டர் ஆயுர்வேத டாக்டர் சொல்லியதுண்டு. ஏனென்று தெரியவில்லை. ஆனால் கண்ணில் படும் போதெல்லாம்நான் செய்வதுண்டு. இப்பொது வீட்டிலும் வல்லாரை வளர்க்கலாம் என்று யோசனை தோன்றியிருக்கிறது

    சாம்பாரில் சோம்பு சேர்ப்பதில்லை....உங்க ரெசிப்பியும் செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்...

    நீங்க கட் பண்ணி வைச்சுருக்கறது ரொம்ப அழகா இருக்கு ஏஞ்சல்...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நானும் மண் சட்டியில் சமைப்பதுண்டு, வற்றல் குழம்பு, கூட்டு என்று. தாளிப்பது எல்லாமும்...அதில் சமைப்பது ரொம்பப் பிடிக்கும்..அதிலேயே தாளித்து அப்படியே செய்துவிடலாம்...பாத்திரமும் குறைவாகும் பாருங்க...ஹிஹீஹிஹ்ஹி...இப்ப அதுவும் எங்க ஊர்ல தண்ணிக் கஷ்டம்..ரொம்பவே..

    கீதா

    பதிலளிநீக்கு
  13. இனிய காலை வணக்கம் நட்புக்களே :)
    மிக்க சந்தோஷமும் நன்றிகளும் எங்கள் பிளாக் மற்றும் ஸ்ரீராமுக்கு ..
    கொஞ்சம் தயங்கி தயங்கித்தான் ரெஸிப்பியை அனுப்பி வைத்தேன் :) இனிமே தைரியம் வந்துவிட்டது ..

    பதிலளிநீக்கு
  14. @ கீதா சாம்பசிவம் அக்கா ..மிக்க நன்றி ..நீங்க சொன்ன மாதிரி நறுக்கி எலுமிச்சை பிழிந்து சாலட் போல அடிக்கடி சாப்பிடுவோம் பச்சையாகவே .சின்ன வயசில் இருந்து சாம்பாரில் காய் மிதக்கணும்னு மனசுக்கு ஆழமா பட்டிடுட்சி அதான் முழுதாவே இலைகளை போட்டேன் ..கேல் கீரையை நீங்க சொன்ன மாதிரி செயகிறேன் அடிஷனல் டிப்ஸ் குறிப்புகளுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  15. @ஸ்ரீராம் மிக்க நன்றி வெந்தயக்கீரை சாம்பார் நீங்க சொல்லித்தான் நானும் செய்திருக்கேன் நினைவிருக்கா எங்க வீடு மேத்தி அறுவடை பின்னூட்டத்தில் நீங்க சொன்னீங்களே :)
    அதிராmiyaav மயங்கி விழப்போறார் முழு பதிவும் நீல எழுத்தில் வந்திருப்பதை பார்த்து :)

    பதிலளிநீக்கு
  16. @வல்லிசிம்மன் ..வல்லிம்மா மிக்க நன்றி மனதுக்கும் புத்துணர்ச்சி இந்த கீரை உடலுக்கும் நல்லது

    பதிலளிநீக்கு
  17. @கில்லர்ஜீ ..மிக்க நன்றிங்க ..இந்த கீரையின் அருமை பெருமை நம்ம ஊரில் இருந்த வரை தெரில இங்கே இலங்கை தமிழர் கடையில் கிடைக்குது ஊர்ல கூட சாப்பிட்டதில்லை இங்கே தான் சாப்பிட்டு பழகினோம்

    பதிலளிநீக்கு
  18. @வெங்கட் நாகராஜ் ..மிக நன்றிங்க அங்கே உங்க ஊரிலும் கிடைக்குமா ..? செய்து பாருங்க ருசியும்சுவையும் நல்ல இருக்கும் உடலுக்கும் நல்லது

    பதிலளிநீக்கு
  19. @கரந்தை ஜெயக்குமார் ..மிக்க நன்றி அண்ணா ..நம்ம ஊரில் நான் பார்த்ததே இல்லை இந்த கீரையை ..உடலுக்கு மிகவும் நல்லதென்று இங்கே கடைகளில் கொடுக்கோலா என்ற பெயரில் பவுடராக்கி விற்கிறாரகள்

    பதிலளிநீக்கு
  20. @கவிஞர் ரூபன் .மிக்க நன்றிங்க

    பதிலளிநீக்கு
  21. @நெல்லை தமிழன் .மிக்க நன்றிங்க ..மண்சட்டி சமீபத்தில் வாங்கினேன் இங்கே ஒரு கடையில் அதில் சமைக்க ஆரம்பித்ததில் இருந்து நான் ஸ்டிக் தூக்கி போட்டாச்சு நல்ல வித்தியாசம் சுவையில் தெரியுது ..மணமும் நிறமும் அபாரம் எந்த கீரையானாலும் ..கேள் கீரை வெளிநாட்டில் பிரபலம் உங்க ஊரிலும் கிடைக்குமே ..முருங்கை கீரை ருசியில் இருக்கும் ..நான் லிங்க் தரேன் இருங்க

    பதிலளிநீக்கு
  22. @ http://www.nalam.net/2014/06/kale.html

    ஹீ ஹி :) ஒரு சின்ன விளம்பரம் நலம் நெட்டில் என் பதிவையே தரேன் .ரெசிபி என் பிளாக்கில் இருக்கு அதையும் தரேன் இந்த கீரையையு கேரட்டையும் நறுக்கி பொரியலா செய்யலாம்

    ஆஸ்திரேலியா கீதா கூட இதில் நிறைய ரெசிப்பி சொல்லியிருக்காங்க

    பதிலளிநீக்கு
  23. @அவர்கள் உண்மைகள் ஹா ஆஹா :) உண்மையில் உங்களை நினைச்சி பயந்திட்டே தான் ரெசிப்பி அனுப்ப டிலே செஞ்சேன் :)
    ஏன்னா ஏதாச்சும் சொதப்பி உங்ககிட்ட மாட்டிப்பேன்னு பயம் :))





    பதிலளிநீக்கு
  24. ஆவ்வ்வ்வ் வழிவிடுங்கோ வழி விடுங்கோ..:) வல்லாரையில் சாப்பாறாமே.. பாட்டி ரெசிப்பியா இருக்கும் என ஓடோடி வந்தேன்ன்.. ஏஞ்சல் ரெசிப்பியாஆஆஆஆஆ?:) இது என்ன பிரித்தானியாவுக்கு வந்த சோதனைஐஐஐஐஐஐஐ:)..

    சகோ ஸ்ரீராம் ஒரு கடைக்கண்ணால ஜாடை காட்டியிருந்தாலே நான் அந்தாட்டிக்காவுக்கு ஜம்ப் பண்ணியிருப்பேனே:).... ஆண்டவா இப்போ என்ன பண்ணுவேன்ன்... இங்கு முழுவதும் படிச்சுப் பின்னூட்டங்கள் போட்டு முடிக்கும் வரையாவது எனக்கு மனதுக்கும் உடம்புக்கும் தென்பைக் கொடப்பா:)..

    பதிலளிநீக்கு
  25. @அவர்கள் உண்மைகள் //நீங்க சொல்ல தவறியதை நான் இங்கே சொல்லுகிறேன்//

    ஹையோ கலக்கிட்டீங்க .நானா நேற்று நைட் ஸ்ரீராமுக்கு இன்னொரு மெயிலில் இந்த டீட்டெயில்ஸ் அனுப்புவோமான்னு நினைச்சேன் ..ஆனா இவ்ளோ சீக்கிரம் பதிவு வரும்னு நினைக்கலை ..வல்லாரை பயன்கள் இங்கே பகிர்ந்ததற்கு மிக நன்றிங்க




    பதிலளிநீக்கு
  26. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  27. @துரை செல்வராஜூ ஐயா .மிக்க நன்றி ..நான் இந்த கீரையை ஊரில் பார்த்ததில்லை இங்கே வெளிநாட்டில் தான் இலங்கை தமிழர் புண்ணியத்தில் அவங்க கடைகளில் பார்க்கிறேன் எப்பவாவது வாழைத்தண்டு கிடைக்கும் ..இதை தொட்டியில் வளர்க்க முடியும்னு கேள்விப்பட்டேன் வெயில் வந்ததும் ட்ரை பண்ணனும்

    பதிலளிநீக்கு
  28. விடிய எழும்பி நித்திரைக் கண்ணோடு ரைப் பண்ணுகிறேனா... பச்சைப் பிழைகள் வருது எழுத்தில்.. அதனால அழிச்சிட்டுத் திருத்திடுறேன்ன்..


    சின்ன வயதிலிருந்தே வல்லாரை, குறிஞ்சா, தூதுவளை இலை... அதிகமாக சாப்பிட்டு வளர்ந்தேன் நான். எங்களிடத்தில் சண்டே ஃபெயார் ... மார்கட் இருக்கும்.. ஒவ்வொரு ஞாயிறும் அனைத்து இலைவகைகளும் வரும்.. அதனால இந்த வல்லாரை, பச்சையாக குட்டி குட்டியா நறுக்கிய சம்பல், அல்லது வதக்கி சட்னி அடிக்கடி அம்மா செய்வா.

    இது சாம்பாறா? பார்க்க மிக அழகாக இருக்கு, பருப்பும், புளியும் சேர்ந்தாலே இலையின் கசப்பு போய் விடும்.

    ஆனா அவர்கள் ட்றுத் சொன்னதைப்போல, நானும் எங்கோ படித்தேன், வல்லாரையுடன் புளி சேர்த்தால் அதன் மருத்துவக் குணங்கள் அழிஞ்சிடுமாம் என... இதுக்குப் பதில் தேசிக்காய்ப்புளி சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. @கீதா அன்ட் துளசி அண்ணா .மிக்க நன்றி :) இந்த பின்னூட்டம் பார்த்து தேம்ஸில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுதாம் :) வாங்க ஒரு கை குடுங்க இதுதான் தக்க சமயம் அதிராவை தள்ளி விட . :) இதை தொட்டியில் வளர்க்கலாமாம் கீதா முயற்சித்து பாருங்க ..நானா வாரம் ஒருமுறை இதை சாலட் மற்றும் ஸ்மூத்தியா செய்து சாப்பிடறேன் மிகவும் நல்லது .எந்த கீரையும் நானா வாரம் ஒன்று என்ற கணக்கில் சாப்பிடறேன்

    அந்த சோம்பு எப்படி சேர்த்தேன்னு ஒரு வரலாறே இருக்கு வந்து சொல்றேன் :)
    ஒரு ரகசியம் சொல்றேன் என் கணவர் இதைவிட அழகா காய்கறி நறுக்குவார் :)
    கீரைலாம் அவர்தான் நறுக்கி தருவார் மெலிசா

    பதிலளிநீக்கு
  30. ///Avargal Unmaigal said...

    தேவையான பொருட்களில் அடுப்பு மிஸ் ஆகிவிட்டதே அது இல்லாமல் எப்படி சமைக்கிறதாம்///

    ஆங்ங்ங்ங்ங்ங்ங்.. அத்தோடு சமைத்தவர் யாரெனச் சொல்லவே இல்ல:).. குறிப்புக் கொடுத்தவர் ஏஞ்சல் எனத் தெரியுது:).. நமக்கு ரெசிப்பியை விட... இப்பூடியான புறு:)ணங்கள்தானே முக்கியம்:)..

    பதிலளிநீக்கு
  31. @கீதா நான் ரெண்டு மண் சட்டி வச்சிருக்கேன் ..அதில் சமைக்கும்போது கிடைக்கும்ருசி தனி ருசி

    பதிலளிநீக்கு
  32. @பூனை இங்கே வந்தார்களா ..இல்லை பிளாக் ஒரு பக்கமா சரிஞ்சு போன மாதிரி இருக்கே :)

    பதிலளிநீக்கு
  33. //Angelin said...
    இனிய காலை வணக்கம் நட்புக்களே :)
    மிக்க சந்தோஷமும் நன்றிகளும் எங்கள் பிளாக் மற்றும் ஸ்ரீராமுக்கு ..
    கொஞ்சம் தயங்கி தயங்கித்தான் ரெஸிப்பியை அனுப்பி வைத்தேன் :) இனிமே தைரியம் வந்துவிட்டது ..///

    என்னாதூஊஊ இனிமேல் தைரியம் வந்து விட்டதோ?:) ஹையோ இது நாட்டுக்கு நல்லதில்லயே... நானும் எத்தனை நாளைக்குத்தான் முருங்கி மரத்திலேயே இருப்பதாம் கர்ர்ர்ர்:).

    பதிலளிநீக்கு
  34. @athiraa ..ஆமாம் இந்த சாம்பாருக்கு புளி தேவையில்லை தக்காளியே போதும் நானும் சும்மா கொஞ்சூண்டுதான் சேர்த்தேன் படத்தில் பெரிதா தெரியுது

    பதிலளிநீக்கு
  35. @அதிரா ..நீங்க கொடுத்து வைத்தவர் ,,நானா அந்த கீரைங்க எதையும் பார்த்ததில்லை .
    வல்லாரை ஸ்மூத்தி அடிக்கடி குடிக்கிறேன் :) இலங்கை தமிழர் கடையில் வாராவாரம் வருதே

    பதிலளிநீக்கு
  36. @அதிரா ..ஹா ஆஹா :) நீங்க தேம்ஸில் ஜம்ப் செய்யணும்னே தான் சொல்லாம செய்தொம்

    பதிலளிநீக்கு
  37. @நெல்லைத்தமிழன்

    http://geethamanjari.blogspot.co.uk/2015/10/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  38. எங்கள் வீடுகளில் சாம்பார் என்பது எப்போதாவது அபூர்வமாகத்தான் செய்வோம்... வெள்ளிக்கிழமைகளில் இட்லி செய்தால் செய்வதுண்டு, மற்றும்படி நம் நாட்டில் சாம்பார் பேமஸ் இல்லை... கறிவகைகள்தான் செய்வோம். இப்போகூட வீட்டில் யாருக்கும் எந்தச் சாம்பாறும் பெரிதாக பிடிக்காது, அதனால நான் மினக்கெடுவதில்லை.. செய்து போட்டு நானே சாப்பிட்டு முடிக்க வேண்டி வந்திடும்.

    ஆனா ரசம் செய்வோம் அடிக்கடி.. அதுவும் சாப்பாட்டில் ஊற்றி யாரும் குடிக்க மாட்டினம், கப்பில் தான் குடிப்போம். ரசத்தினுள் இப்படி இலைகளைப் போட்டு விடுவேன்.. எந்த வகையிலாவது உடம்புக்குள் சத்து ஊறட்டும் என.

    வல்லாரை இலையை வதக்கி சட்னியாக செய்து எப்படியாவது தீத்தி விட்டிடுவேன் .. வல்லாரை வீட்டில் வளர்க்கலாம், காலநிலை கொஞ்சம் வெப்பமாக இருக்கோணும்.

    சகோ ஸ்ரீராம் வல்லாரையில் சொக்கலேட் சாப்பிட்டாரா... நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை... கப்சூல்ஸ் பார்த்திருக்கிறேன்.. அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, இப்படி “திரிஷா” வாங்கி... ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே.. இப்பூடி “ப்ரெஷா” வாங்கி சமைப்பதில்ல்தான் அதிக பயன் கிடைக்கும் என நம்புறேன்.

    பதிலளிநீக்கு
  39. ///Angelin said...
    @அதிரா ..நீங்க கொடுத்து வைத்தவர் ,,நானா அந்த கீரைங்க எதையும் பார்த்ததில்லை .
    வல்லாரை ஸ்மூத்தி அடிக்கடி குடிக்கிறேன் :) இலங்கை தமிழர் கடையில் வாராவாரம் வருதே//

    இலங்கையில் நம்மவர்களிடத்தில் இந்த இலைவகைகள் பேபஸ்.. இப்போ எங்கள் தமிழ் கடையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அப்படியே ஃபிரெஷா... பொன்னாங்காணி, வல்லாரை, அகத்தி, முளைக்கீரை வருகிறது. குறிஞ்சா இலைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன், இனி வந்திடும் என்றார்... ஊரில் எங்கள் வளவில் குறிஞ்சா கொடி நிண்டது.. அதனாலோ எனமோ நான் குறிஞ்சாப் பிரியை:)

    பதிலளிநீக்கு
  40. @அதிரா //நானும் எத்தனை நாளைக்குத்தான் முருங்கி மரத்திலேயே இருப்பதாம் கர்ர்ர்ர்:).//

    நீங்க இறங்கவே முடியாது இனிமேல் சமையல் குறிப்புக்கள் இடைவிடாது தொடரும்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  41. @அதிரா ..ஹா ஆஹா :) ஸ்ரீராம் சாக்லேட் சாப்பிட்டுருக்கார் நம்க்கு தராம :) அனுப்பி வைக்க செல்லுங்க அவரை ..
    நானும் இங்கே பவுடராவும் காப்சூல்சாவும் பார்த்திருக்கேன் ஆனால் பிரெஷா சாப்பிடறமாதிரி பலன் கிடைக்காதே ..
    குறிஞ்சான் கொடி எங்க வீட்ல இருந்தது ஆனா சும்மா அழகுக்கு வச்சிருந்தோம் சாப்பிட்டதில்லை அப்போ அதன் அருமை தெரிலா

    பதிலளிநீக்கு
  42. ///Angelin said...
    @அதிரா ..ஹா ஆஹா :) நீங்க தேம்ஸில் ஜம்ப் செய்யணும்னே தான் சொல்லாம செய்தொ///

    எதுக்கும் யாராவது எனக்கு காசிக்கு ஒரு “விண்டோ சீட்” ரிக்கெட்டா புக் பண்ணி அதுவும் ஒபின் ரிக்கெட்டா தாங்கோ பிளீஸ்ஸ்:).. எப்போ ட்றுத் ட ரெசிப்பி வருமோ என நான் தினமும் அஸ்பிரின் எடுக்கிறேன்:)).. ஹா ஹா ஹா ஹார்ட் அட்டாக் வந்திடக்கூடாதில்லயா அதிராக்கு:)...

    இது இன்று அட்டாக் என்ன அட்ட்டாக்:) ஹாட்டே கழண்டு உழுந்து போச்ச்ச்ச்ச்:)).. சரி விடுங்கோ மனிசர்தாங்க முக்கியம்.. ஹார்ட்டு இல்லயாம்ம்:)) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  43. ///Angelin said...
    @அதிரா ..ஹா ஆஹா :) ஸ்ரீராம் சாக்லேட் சாப்பிட்டுருக்கார் நம்க்கு தராம :)///

    கண்ணில கூட அவர் காட்டல்ல பாருங்கோ:) பிடுங்கிட்டு ஓடிடப்போறோம் எனப் பயந்திருப்பார்... :) எதுக்கும் அந்த மரம் பற்றிய ஆராச்சிக்காக:) போகிறோம் தானே அவரது மொட்டை மாடிக்கு, அப்போ தருவார் என நினைக்கிறேன்:)..

    பதிலளிநீக்கு
  44. வல்லாரை கீரை கூட்டு செய்வேன் ஏஞ்சலின்.
    (வெந்த துவரபருப்பு,
    சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு பல் சேர்த்து அரைத்த தேங்காய் கலவை போட்டால் கசப்பே தெரியாது ருசியாக இருக்கும்.) குறிப்புகள், படங்கள் செய்முறை விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  45. அவர்கள் உண்மைகள் கீரை பலன் எல்லோருக்கும் உதவியாக இருக்கும், நன்றி.

    பதிலளிநீக்கு
  46. அருமை,பயனுள்ள குறிப்புகளைக் கண்டது மகிழ்ச்சி...
    தமிழ்செய்திகள்

    பதிலளிநீக்கு
  47. //அதிராmiyaav மயங்கி விழப்போறார் முழு பதிவும் நீல எழுத்தில் வந்திருப்பதை பார்த்து :) //

    ஓ... இப்படி ஒன்று இருக்கா!

    பதிலளிநீக்கு
  48. //எங்கள் வீடுகளில் சாம்பார் என்பது எப்போதாவது அபூர்வமாகத்தான் செய்வோம்... //

    அதிரா எப்போதாவதுதான் "சாம்பாற்" செய்வார் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது எங்களுக்கு! நாங்கள்லாம் ஒன்று விட்டு ஒரு நாள் சாம்பாற் வைக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  49. மிகவும் ருசியாகத்தானேஇருக்கும்

    பதிலளிநீக்கு
  50. மிகவும் ருசியாகத்தானேஇருக்கும்

    பதிலளிநீக்கு
  51. ஆவ்வ்வ்வ்வ் தலைப்பைப் பார்த்து மயங்கிய இடத்தில்... ஹையோ முருகா இந்த சுவீட் 16 லயே பொசுக்கெனப் போயிடுவேன் போல இருக்கே என நெஞ்சை இறுக்கிப் பிடிச்சபடி கொமெண்ட்ஸ் போட்டேனே தவிர வோட் பண்ண மறந்தே போயிட்டேன்:)..

    இப்போ “அங்கின” ஸ்ரீராம் வந்து வோட் போட்டேன் என்றதும் தான்.. அச்சச்சோ அப்படி ஒன்று இருப்பதையே மறந்திட்டமே என மின்னல் வேகத்தில் வந்து போட்டிட்டேனாக்கும்.. வோட்டை:).. நமக்கு முக்கியம் கடமை... நேர்மை... எருமை:).

    பதிலளிநீக்கு
  52. ////ஸ்ரீராம். said...
    //அதிராmiyaav மயங்கி விழப்போறார் முழு பதிவும் நீல எழுத்தில் வந்திருப்பதை பார்த்து :) //

    ஓ... இப்படி ஒன்று இருக்கா////

    ஹா ஹா ஹா நான் காக்கா போனாலும்:) விடமாட்டினம்:)... நீல நிறத்தில தெரிஞ்சாலே.. அது சகோ ஸ்ரீராம்ம்ம்ம்தேன்:) நல்லவேளை இங்கே கலப்படமில்லாமல் நீஈஈஈஈஈஈஈலத்திலேயே இருந்தமையால் பேசாமல் போயிட்டேன்ன்:).

    பதிலளிநீக்கு
  53. //ஸ்ரீராம். said...
    //எங்கள் வீடுகளில் சாம்பார் என்பது எப்போதாவது அபூர்வமாகத்தான் செய்வோம்... //

    அதிரா எப்போதாவதுதான் "சாம்பாற்" செய்வார் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது எங்களுக்கு! நாங்கள்லாம் ஒன்று விட்டு ஒரு நாள் சாம்பாற் வைக்கிறோம்!///

    ஹா ஹா ஹா கர்ர்:)... உண்மையைச் சொன்னால், சைவ நாட்களில் அதிக கறிகள் இருப்பின் மட்டுமே சாப்பாடு உள்ளே போகும்.. அதனால ஒரு உறைப்புக்கறி, ஒரு வெள்ளைக்கறி ஒரு சுண்டல், ஒரு பொரியல் இது மினிமம் இருக்கும் வீட்டில். சாம்பாறு செய்வது இட்லி தோசைக்கு மட்டும்தான்.. அல்லது புட்டு இடியப்பத்துக்கும் எப்போதாவதுதான்:)...

    சோறுக்கு சாம்பாறு செய்வது குறைவு/இல்லையென்றே சொல்லுவேன்.

    இதனாலேயோ என்னமோ கோயிலில் சோறும் சாம்பாறும் சாப்பிடும்போது தேனாமிர்தமாக இருக்கும்:).. ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  54. ஒரு உண்மையை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும் இந்த கீரை வகைகளை அடையாளம் கண்டு சொல்வதே எனக்கு இயலாத ஒன்று மனைவி ஏதேதோ கீரைகள் சமைப்பாள் முளைக்கீரை என்பது அடியோடு பிடுங்கி எடுப்பது.அரைக் கீரை என்பது மேல் பாகத்தை அவ்வப்போது அறுத்து எடுப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறேன் கீரையை ஹிந்தியில் பாலக் என்கிறார்கள் பாலக் பன்னீர்போன்றவை

    பதிலளிநீக்கு
  55. ஏஞ்சலின் - LINKsக்கு நன்றி. இந்தக் கீரையை நான் இங்கு பார்த்திருக்கிறேன். ப்ராக்கோலியும் என் குழந்தைகள் நல்லா இருக்குன்னு சொன்னதுனாலதான் வாங்கியிருக்கிறேன். (நான் சாப்பிட்டதில்லை).

    பதிலளிநீக்கு
  56. @நெல்லைத்தமிழன் சகோ .எங்களுக்கு அகத்தி முருங்கை க்கு பதில் இந்த கீரைதான் தண்டு நன்கு குண்டா இருக்கும் சாம்பாருக்கு நல்லா இருக்கும் மற்ற கீரைகளை விட இதில் இரும்பு சத்தும் அதிகம் தேங்காய் போட் டு வேணும்னா காரட் அரிந்த துண்டுகள் சேர்த்து பொரியல் கீரையாக சமைங்க பிள்ளைங்களுக்கு நல்லது ..எனக்கும் ப்ரோக்கோலி டேஸ்ட் பிடிக்காது ஆனா oven இல் போட்டு லேசா பட்டர் போட்டு வெந்ததும் மேலே சீஸ் தூவி அது உருகி வரும்போது சாப்பிடலாம் .pizza விலும் போடலாம்

    பதிலளிநீக்கு
  57. @ G.M.Balasubramaniyam ஐயா

    இங்கே இங்கிலிஷ் கீரை நம்மூர் கீரையெல்லாம் விதவிதமா சம்மருக்கு கிடைக்கும் ..கோங்குரா அப்புறம் பருப்பு கீரை கூட சம்மரில் கிடைக்குது ..பாலக் ..அது ஸ்பினாச் பசலை கீரைதானே ..இங்கே அலாட்மெண்ட்ல நிறைய வளரும் அதனால் இலவசமா ப்ரண்ட்ஸ் கொடுப்பாங்க ..வட இந்தியர் கடையில் விதவிதமா இருக்கு தமிழ் ஆங்கில பேர்கள் இல்லாததல் கொஞ்சம் குழம்பி வாங்காம வருவேன் .இன்றும் தாமரை தண்டு மாதிரி ஒன்றி இருந்தது சந்தேகத்தில் வாங்கலை :) நல்லா கன்பார்ம் பண்ணிட்டு வாங்குவேன் மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  58. @ஸ்ரீராம் :) இலங்கை தமிழர் உணவு காரசாரமான டைப் பருப்பு மைசூர்ப்பருப்பு மட்டும் கட்டியா செய்திருப்பாங்க புளி அப்புறம் தேங்காய்ப்பால் நிறைய எண்ணெயில் பொரித்த கத்திரிக்கா முருங்கை வெண்டைக்கா காராமணி ,பஜ்ஜி மிளகாய் கூட்டு இப்படி இருக்கும் எல்லாவற்றிலும் ரெட் ஸ்ப்ளிட் சில்லி போடுவாங்க
    சாம்பார் கூட நம்மள மாதிரி தளர தளர ரன்னிங் கன்சிஸ்டன்சி இருக்காது திக்கா இருக்கும் நிறைய வெரைட்டி காய் போட்டு

    பதிலளிநீக்கு
  59. @அதிரா எங்களுக்கு பொங்கலுக்கு சாம்பார் அப்புறம் ஒருநாள் விட்டு ஒருநாள் சாம்பார் இருக்கும் வற்ற குழம்பு அவியல் மோர் இப்படி ஒவ்வோர் நாளும் ஒரு விதமா செய்வோம் இந்த சாம்பார் இருக்கே அதோட நெய் கொஞ்சம் சேர்த்து சாப்பிட யம் யம்

    பதிலளிநீக்கு
  60. @கோமதி அரசு ..அக்கா ..இன்னும் ஒரு புது ரெசிப்பி கற்றுக்கொண்டேன் உங்களிடமிருந்து ..தக்காளி சேர்க்காம இம்மாதிரி செய்து பார்க்கிறேன் அக்கா மிக நன்றி

    பதிலளிநீக்கு
  61. @அசோகன் ..மிக நன்றிங்க ..சுவையா இருக்கும் செய்து பாருங்க

    பதிலளிநீக்கு
  62. @@கீதா ..நான் ஸ்கூல் படிக்கும்போது டிவில ஒரு விளம்பரம் வரும் அதில் நம்ம மந்திரா பேடி கிச்சனில் பிஸி பேலா பாத் செய்ய போவாங்க அப்போ ஒரு பாட்டி ingredients ஒவ்வொண்ணா சொல்வாங்க :) அப்போ காதில் விழுந்ததை அதான் சோம்பு பெருஞ்சீரகம் இப்பவும் சாம்பாருக்கு தாளிக்கபோடறேன் :) அந்த மந்திரா கடைசீல mtr மசாலாவை போட்டு செஞ்சு முடிப்பாங்க :)

    பதிலளிநீக்கு
  63. நான்ன் வந்துட்டேன்ன்ன்:) நா திரும்ப வந்திட்டேன்ன்ன்ன்:)).. ஹா ஹா ஹா..:)

    “தனக்குத் தனகெண்டால் சுளகு:) படக்குப் படக்கெண்ணுமாமே”... இண்டைக்குப் பாருங்கோ.. 5 மணிக்கே எலாம் வச்சு ஓடியாந்து மின்னி முழக்குவதை:).. இல்லையெனில் குளிருது... வோக் போறேன்ன் ஈவினிங் வாறேன்ன் என சாட்டு வேற:).. ஆவ்வ்வ்வ்வ் இண்டைக்கு நான் தேம்ஸ் பக்கம் தலை வச்சுக்கூடப் படுக்க மாட்டேன் ஜாமீஈஈஈஈஈ:)... என்னைத் தள்ளிடப்போறாவே.. ஆராவது காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்:)...

    பதிலளிநீக்கு
  64. இங்கே எல்லோருக்கும் ஓர் அறிவித்தல்.. வரும் திங்கள் அன்று காலை:).. மிதுன லக்கினமும்.. மேச ராசியும் பங்குனி உத்தரமும் கூடிவரும் சுபமுகூர்த்த வேளையில்.. பிரித்தானிய இளவரசியின் செல்லப் பேத்தியும், சுவீட் 16 இல் இருப்பவரும், ட்ரம்ப் அங்கிளின் பேசனல் செகரட்டறியும், தேம்ஸ் நதியின் ஓனரும் ஆகிய:) அதிரா அவர்களின் சமையல் குறிப்பு வர இருக்கிறது:)..

    அதனால எல்லோரும் அலாரம் :) வச்சு, அடிச்சதும் எழும்பி ஓடிவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்... டும்..டும்...டும்ம்ம்ம்:)..

    அச்சச்சோஓஓஒ இப்போ எதுக்கு எங்கட ஸ்ரீராம் மொட்டை மாடியில் இருந்து சூறாவளி வேகத்தில, கையில தும்புத் தடியோடு ஓடிவாறார்ர்ர்ர்ர்ர்.... ஆவ்வ் தடக்கிப் படியில விழுந்திடப்போறாரே... அப்பூடி நான் என்ன டெல்லிட்டேன்ன்ன்ன்:))..

    வெயார் இஸ் மை முருங்கிமரம்ம்ம்ம்ம்ம்ம்:))

    https://www.kimballstock.com/preview.asp?db=a&image=CAT+03+WF0003+01

    பதிலளிநீக்கு
  65. garrrrrrrrrrr 😇தேம்ஸில் தள்ளாம விட மாட்டேன் .இப்ப கூட நடக்க போறேன்

    பதிலளிநீக்கு
  66. @அவர்கள் உண்மைகள் சோம்பு போட ரீசன் //படிக்கும்போது டிவில ஒரு விளம்பரம் வரும் அதில் நம்ம மந்திரா பேடி கிச்சனில் பிஸி பேலா பாத் செய்ய போவாங்க அப்போ ஒரு பாட்டி ingredients ஒவ்வொண்ணா சொல்வாங்க :) அப்போ காதில் விழுந்ததை அதான் சோம்பு பெருஞ்சீரகம் இப்பவும் சாம்பாருக்கு தாளிக்கபோடறேன் :) அந்த மந்திரா கடைசீல mtr மசாலாவை போட்டு செஞ்சு முடிப்பாங்க :)

    பதிலளிநீக்கு
  67. ////வரும் திங்கள் அன்று காலை:).. மிதுன லக்கினமும்.. மேச ராசியும் பங்குனி உத்தரமும் கூடிவரும் சுபமுகூர்த்த வேளையில்.. பிரித்தானிய இளவரசியின் செல்லப் பேத்தியும், சுவீட் 16 இல் இருப்பவரும், ட்ரம்ப் அங்கிளின் பேசனல் செகரட்டறியும், தேம்ஸ் நதியின் ஓனரும் ஆகிய:) அதிரா அவர்களின் சமையல் குறிப்பு வர இருக்கிறது:)..////oh lord save this world

    பதிலளிநீக்கு
  68. செய்முறை மறந்து போச்சே ,வல்லாரை சாம்பார் சாப்பிட்டா நினைவுக்கு வருமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா. வாங்க பகவான்ஜி ஒரு கட்டு வல்லரை வாங்கி நாலு இலை சாப்டா ரெசிபி நினைவு வரும். மற்றத சாம்பார் செய்ய வும் மிக்க நன்றி..

      நீக்கு
  69. ஸாதாரணமாக யாவரும் ஸாம்பாருக்கு பெருஞ்சீரகம் தாளிப்பதில்லை. பிடித்தவர்களுக்கு அது இல்லாமல் ஸரிப்படாது. வல்லாரை ஸாம்பார் பார்க்க,சுவைக்க நன்றாக இருந்தது. ஏஞ்ஜலின் கைமணமும் சேர்ந்து. அன்புடன்

    பதிலளிநீக்கு
  70. மிக்க நன்றி காமாட்சியம்மா.. நலமா இருக்கீங்களா உங்களை இங்கே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ....குறித்துக்கொண்டேன் ..அது நானே கண்டுபுடிச்சது அந்த விளம்பரத்தில் வந்ததை காது வழி கேட்டு :) இனிமேல் சோம்பு இல்லாமல் தாளிக்கறேன்

    பதிலளிநீக்கு
  71. மிக்க நன்றி புலவர் ஐயா ..

    பதிலளிநீக்கு
  72. வல்லாரை கீரை
    எல்லோருக்கும்
    நலம் தரும் மருந்தே!
    சிறப்பான
    சமையல் வழிகாட்டல்!

    பதிலளிநீக்கு
  73. @ஜீவலிங்கம் சகோ மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!