வியாழன், 26 அக்டோபர், 2017

சும்மா ஒரு பேச்சுக்கு ... வெட்டி அரட்டை!


எச்சரிக்கை: "மனோ தத்துவப் பதிவு."
Don't get emotional. Think logically. 

-------------------

இங்கே காணப்படும் பெயர்கள் , சம்பவங்கள் யாவும் கற்பனையே. ஆனால் இறுதியில் ஒரு கேள்வி உள்ளது. பதில் பதியுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~


மிகப் பழைய காலம்.

ஒரு அமாவாசை நாள். 




அரசன் என்ற ஓர் இளைஞன். நல்லவன். திருமணம் ஆகாதவன். தன்  ஊரிலிருந்து படகில் ஏறி, பக்கத்து ஊர் செல்கிறான். அவன் ஊர் எக்ஸ் . சென்ற ஊர் ஒய். அது ஒரு தீவு.
  

அங்கே ஒரு பூங்காவில், ஓர் இளம்பெண் தனியே அமர்ந்து அழுதுகொண்டு இருக்கிறாள். அரசன் அவளருகே சென்று, யார், என்ன என்று விசாரிக்கிறான்.
   



மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு, அவள் கூறிய விவரங்கள் :

பெயர் : குட்டி.
திருமணம் ஆகிவிட்டது. பெற்றோர், உற்றார், உறவினர் இவ்வூரில் இல்லை.

கணவனுக்கு வேறு ஒரு ஊரில் வேலை. காலை சூரிய உதயத்திற்கு முன் கிளம்பிச் சென்று, அஸ்தமனத்திற்குப் பின் வீடு திரும்புவான். கோபக்காரன், முரடன். வீட்டில் மாமனார், மாமியார், நாத்தனார் எல்லோருமே கொடுமைக்காரர்கள் - வார்த்தைகளால் சுடுபவர்கள். குட்டியின் சந்தோஷத்தை திட்டமிட்டு அழிப்பவர்கள். 

குட்டிக்கு அமாவாசை தினங்களில் மட்டும் முழுநாள் சுதந்திரம். அவளை வீட்டு வேலைகளைச் செய்யவிட்டு, மற்றவர்கள், கோயில், குளம், சுற்றுலா, பக்கத்து ஊர்களுக்குப் படகுப் பயணம் என்று சென்றுவிடுவார்கள். மறுநாள்தான் வருவார்கள். 

அரசன், விவரங்களைக் கேட்டபின், அவளுக்கு, சில யோசனைகளைக் கூறி, அவைகளைக் கடைபிடித்தால், பிரச்னைகள் தீருமா என்று பார்க்கச் சொல்கிறான். குட்டி, சம்மதிக்கிறாள். 

அடுத்த அமாவாசை. அதே பூங்கா. அரசன். குட்டி. ஊஹூம். முன்னேற்றமில்லை. 

வேறு சில யோசனைகள். 

அடுத்த, அடுத்த, அடுத்த அமாவாசைகள். பிரயோஜனம் இல்லை. 

இறுதியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். 

அந்தத் தீவிலிருந்து குட்டி தப்பித்து, 'இசட்' என்ற இடத்திற்கு அடுத்த அமாவாசை இரவு, யாருக்கும் தெரியாமல் சென்றுவிடுவது. படகில் சென்று அங்கே அவள் கரை இறங்கியவுடன்,  அங்கு தயாராக வந்து காத்திருக்கும் அரசன், அவளை 'எஸ்' என்ற ஊருக்குக் கூப்பிட்டுச் சென்று, அவளை மணந்துகொண்டு, இருவருமாக புதுவாழ்க்கை தொடங்குவது. இதுதான் திட்டம். 

இந்த ஒய் தீவிலிருந்து இசட் இடத்திற்குப் போக, இரண்டு வழிகள் உள்ளன. 




ஒன்று படகு மார்க்கம். படகோட்டியின் உதவி தேவை. இரண்டு படகோட்டிகள் உண்டு. ஆனால் ஒரே படகுதான். 

இரண்டாவது வழி: ஒற்றைப் பாலம், அடர்ந்த காட்டின் வழியே, வனவிலங்குகளுக்கு நடுவே சென்று இசட் இடத்தை அடையவேண்டும். 

அந்த அமாவாசை நாள் வந்தது. 

குட்டி நள்ளிரவில் ஆற்றுப்பக்கம் வந்து பார்க்கிறாள். ஐயகோ - படகு உள்ளது, படகோட்டிகள் இல்லை. குட்டிக்கு நீச்சலும் தெரியாது, படகோட்டவும் தெரியாது. 



ஒற்றைப்பாலம் செல்கிறாள். கடந்துவிட்டாள். 



அடர்ந்த காட்டுவழி. செல்கிறாள். ஒரு புலி அவளைப் பார்த்துவிட்டது. குட்டியால் அதன் பிடியிலிருந்து தப்பிக்க இயலவில்லை. புலி, அவளைக் கொன்று, தின்றுவிட்டது. 



இப்போ, என் கேள்வியைக் கேட்டுவிடுகின்றேன். 

" குட்டியின் மரணத்திற்கு, யார் அல்லது எது காரணம்? ஏன்?"

பதில் சொல்லுங்க. 

41 கருத்துகள்:

  1. நிச்சயமா நான் இல்லை! இல்லவே இல்லை! ஆளை விடுங்க! :)

    பதிலளிநீக்கு
  2. பாலத்தைக் கடந்ததும் போய்ச் சேர வேண்டிய இடம் வந்துடுமே! அங்கே ஏது புலி? காட்டிலே தானே இருந்திருக்கணும்? அவதான் காட்டைக் கடந்து விட்டாளே!

    பதிலளிநீக்கு
  3. குட்டிக்குப் போய்ச் சேர வேண்டிய நேரம் வந்துடுச்சு! போயிட்டா! அம்புடுதேன்!

    பதிலளிநீக்கு
  4. நேத்து அல்வா கொடுத்ததுக்காக
    இன்னைக்கு இந்தக் கதையா?..

    பதிலளிநீக்கு
  5. ஆறுமணிக்கு வரவேண்டிய குட்டி நேரம் தவறினதால இப்படி ஆகியிருக்குமோ?..

    பதிலளிநீக்கு
  6. வியாழக்கிழமை பொழுது இப்படி ஆகிடுச்சே.. இதுக்குத் தான் சொன்னாங்க.. அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்... ந்னு...

    பதிலளிநீக்கு
  7. குட்டியின் மரணத்துக்கு அவளே தான் காரணம்! தவறாக அரசனை நம்பினாள், புருஷனைக் கைவிட்டாள்!! :-))

    பழமொழி தவிர, திட்டமிட்ட அமாவாசை இரவே அந்த இளைஞன் துணையுடன் போயிருக்கலாமே, ஒய் வெய்ட் ஃபார் நெக்ஸ்ட் அமாவாசை?

    பதிலளிநீக்கு
  8. புலியைச் சொல்லிக் குற்றமில்லை – அந்தக்
    கிளியைச் சொல்லிக் குற்றமில்லை
    அரசன் செய்த குற்றமுமில்லை - அந்த
    ஆண்டவன் செய்த குற்றந்தான்
    ஆண்டவன் செய்த குற்றந்தான்..

    பதிலளிநீக்கு
  9. ஏகாந்தனுக்குக் கவிதை மழை கொட்டியவண்ணம் இருக்கு! ஹிஹிஹி, அவர் தான் உணர்ச்சி வசப்படறாரோ? எனக்கெல்லாம் சிரிப்புத் தான் வருகுதையா! :))))

    பதிலளிநீக்கு
  10. புலி, சிங்கம் போன்றவற்றுக்கெல்லாம் இரவிலும் கண் நன்றாகத் தெரியும்! அது அமாவாசையாக இருந்தாலும்! அது ஏன் அமாவாசையைத் தேர்ந்தெடுத்தாங்க?

    பதிலளிநீக்கு
  11. காலம் செய்த கோலம்
    கடவுள் செய்த குற்றம்...
    அந்தப் பெண்ணுக்கு தெய்வ நம்பிக்கை அதிகமாக இருக்கும்போல, அதனால ஒரு நரகத்திலிருந்து காப்பாறி... மீண்டும் ஒளிவாக, கெட்ட பெயரோடு வாழாமல் சொர்க்கத்தில் போயாவது நிம்மதியாக இரு எனக் கடவுள் அனுப்பிய தூதுவர்தான் புலி....:)...

    நான் ஏகாந்தன் அண்ணனின் கொமெண்ட்டைப் பார்த்துப் பாடவில்லை:) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  12. இருந்ததே ஒரே படகு! அதில் குட்டியின் மாமியார், நாத்தனார் வகையறாக்கள் சென்று விட்டால் அங்கே படகு ஏது? மறுநாள் தானே அவங்கல்லாம் திரும்புவாங்க! ஆகவே எப்படி ஆனாலும் குட்டிக்குக் காட்டு வழிதான் தேர்ந்தெடுத்தாகணும்!

    பதிலளிநீக்கு
  13. கீதா சாம்பசிவம் மேடம்-ஏகாந்தன் அவர்கள், 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி' பாடலை ஒட்டி எழுதியிருக்கிறார்.. இது அநியாயமில்லையோ?

    பதிலளிநீக்கு
  14. நேற்றைக்கு தப்பிச்சு இன்று வந்து பார்த்தா இப்படி மனோதத்துவ பதிவு எங்கே சேர்த்து டைட்டில் யோசிச்சிட்டு வரேன்

    பதிலளிநீக்கு
  15. கேஜிஜி சார்.... உங்களுக்கான கேள்விகள்/பதில்கள்

    1. அமாவாசை அன்று நிலவு தெரிவதுபோல் படம் எங்கிருந்து எடுத்தீர்கள்? இப்போல்லாம் எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவில் ஏகப்பட்ட புகைப்பட நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வைத்திருக்கும் பவர்ஃபுல் கேமராவில் அமாவாசை அன்றும் நிலவின் கீற்று தெரியுமா?

    2. குட்டியின் புகுந்த வீட்டார், அமாவாசை அன்று படகுப் பிரயாணம் செய்வார்கள். மறு'நாள் திரும்பி வருவதால் அந்தப் படகு அவர்கள் திரும்பிவரும்வரை அவர்களுடந்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது வேறு எந்தப் படகு அந்தத் தீவில் இருக்கும்? நீங்களோ ஒரு படகுதான் இருக்கிறது ரெண்டு படகோட்டிகள் உள்ளார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

    3. எனக்குத் தெரிந்து குட்டியின் மரணத்துக்குக் காரணம் கேஜிஜி சார்தான். அவர் நினைத்திருந்தால் குட்டியைக் காப்பாற்றியிருக்கலாமல்லவா? இப்படி ஒரு குரூர மனதா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமாவாசையில படம் எடுத்தா படம் முழுவதுமே அட்டர் ப்ளாக் ஆக வரும் என்பதால் அமாவாசைக்கு அரை நாழிகை முன்பு படம் எடுத்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்.

      நீக்கு
  16. திருமிகு நெ.த. அவர்களுக்கு..
    நேற்றைய பதிவில் காசி அல்வா செய்த விதம் சொல்லியிருக்கேன்.. கொஞ்சம் கவனியுங்களேன்..

    பதிலளிநீக்கு
  17. tha.ma.2 - நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

    பதிலளிநீக்கு
  18. துரை சார்... பதில் போட்டுட்டேன். இனி ஸ்ரீராமுக்கு படம் அனுப்புவதற்குப் பதில் ( நான் தி.தி பதிவைச் சொல்லலை), எங்கள் பிளாக் வாட்சப்பில் போட்டுவிடுங்களேன் செய்த படத்தை.

    பதிலளிநீக்கு
  19. அட! ஆமா இல்ல! அமாவாசை அன்னிக்கு ஏது நிலா? அதுவும் கீற்றுநிலா? ஒருவேளை நிலாவிலேயே போய் எடுத்திருப்பாங்களோ? :)

    பதிலளிநீக்கு
  20. கேஜிஜி ஜி நினைத்திருந்தால்
    "ஆ கேரளகுட்டியை காப்பாற்றி இருக்கலாம்" பாவம் ஆ பெண்குட்டி.

    அவன் அரசனாக இருக்க சாத்தியமில்லையே...
    நித்தியானந்தா வம்சாவழியினராக இருக்குமோ... ?

    பதிலளிநீக்கு
  21. காரணம், கதாசிரியரே ! ஏனென்றால்
    Ref : // இங்கே காணப்படும் பெயர்கள் , சம்பவங்கள் யாவும் கற்பனையே. //
    குட்டி இறக்கும்படி கற்பனை செய்தவர் அவர்தானே...

    பதிலளிநீக்கு
  22. அடிச்சு கேட்டாலும் நானில்ல

    பதிலளிநீக்கு
  23. குட்டியின் மரணத்திற்கு புலி தான் காரணம் :)

    பதிலளிநீக்கு
  24. இருளுக்கு பயந்து குட்டி அபிராமி அந்தாதி சொன்னதால் நிலாக் கீற்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  25. பெளர்ணமி காலத்தில் படகு சவாரி செய்யலாம், அமாவாசை இரவை ஏன் தேர்ந்து எடுத்து வந்தார் அரசர்?
    இரவு நேரத்தில் நகர் வலம் வந்து மக்கள் குறைகளை கண்டு அறிந்து தீர்வு சொல்வரோ?

    அந்த பெண்ணுக்கு நல்ல தீர்வு சொல்லவில்லையே!

    பதிலளிநீக்கு
  26. //குட்டிக்கு அமாவாசை தினங்களில் மட்டும் முழுநாள் சுதந்திரம். அவளை வீட்டு வேலைகளைச் செய்யவிட்டு, மற்றவர்கள், கோயில், குளம், சுற்றுலா, பக்கத்து ஊர்களுக்குப் படகுப் பயணம் என்று சென்றுவிடுவார்கள். மறுநாள்தான் வருவார்கள்//
    இருளில் என்ன படகு சவாரி வேண்டி இருக்கு? பெளர்ணமி நாளில் முழுநிலவில் படகு சவாரி இனிமையாக இருக்கும்.

    எல்லோரும் பேய்களோ! அமாவாசை இருளில் பேய்கள் நடமாட்டம் உண்டா?

    பதிலளிநீக்கு
  27. குட்டியின் மரணத்திற்கு அரசன் காரணமாக இருக்க கூடும் இல்லை கணவன் இன்று முழுவதும் இதையே யோசித்து குழம்பி போயிருக்கிறேன் அதனால் பதிலை உடனடி தெரிவித்துவிடுங்கள்

    பதிலளிநீக்கு
  28. அரசன் வந்த படகு எங்கே?

    மாதவன் சொன்னது போல் எல்லாம் கற்பனை என்று விடையை சொல்வார் கேஜிஜி சார்.

    பதிலளிநீக்கு
  29. புலியின் பசி (எது காரணம் )

    பதிலளிநீக்கு
  30. எது காரணம். விதிதான். எப்பவும் போல அழுதுட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதானே. ........\\\\\]]]]]]]]]\\\\

    பதிலளிநீக்கு
  31. இது ஒருவேளை, சீதை ராமனை மன்னித்ததற்கு எழுதப்பட்ட கதையோ? (குட்டி கடைசியில் அரசனை மன்னித்தாள்)

    பதிலளிநீக்கு
  32. இந்த வியாழனும் போய் வெள்ளியும் வந்தாச்சு! விடை எங்கே? எங்கே? எங்கே? கேஜிஜி சார் எங்கே போய் ஒளிஞ்சுட்டு இருக்கார்? அவருக்கே விடை தெரியலையோ (வழக்கம் போல்) :))))))

    பதிலளிநீக்கு
  33. கீதா மேடம், you hit the nail on the head I think!! :-)) இல்லை, யாரும் சொல்லாத விடையைத் தேடிக் கொண்டிருக்கிறாரோ என்னவோ? :-))

    பதிலளிநீக்கு
  34. இது பல ஆண்டுகளுக்கு முன்பு டிரெயினிங் வகுப்பு ஒன்றில் கேட்கப் பட்ட ஒரு கேள்வி. அதில் காரணம் யார் / எது என்று பேசியவர்கள் ஒவ்வொரு ஆளும் ஒவ்வொருவரைக் குறிப்பிட்டு கடுமையாக வாதிட்டார்கள். ஒவ்வொருவருடைய வாதத்தையும் ஊன்றிக் கேட்ட ஒருங்கிணைப்பாளர், அந்தந்த நபர்களைப் பற்றி சில அனுமானங்களைக் கூறினார். கடைசியில் அவர் கூறிய கருத்து, இந்த சம்பவத்தில் கூறப்பட்ட ஒவ்வொரு ஆளும், படகோட்டி உட்பட ... ஒவ்வொரு பொருளும் குட்டியின் மரணத்திற்கு ஏதோ ஒருவகையில் காரணம் என்பதே உண்மை நிலை. மாதவன் கூறிய பதிலைதான் நான் கூற நினைத்திருந்தேன் என்ற உண்மையையும் இங்கே ஒப்புக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதை இது தானோ? இதனால் தான் இந்த பழமொழி வந்ததோ? விக்ரமாதித்தன் கதை போல இருக்கிறது. கே ஜி ஜி விடை சொன்னவுடன் வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிவிட்டதா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!