திங்கள், 19 மார்ச், 2018

"திங்க"க்கிழமை 180319 : கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி

கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர்  

தேவையான பொருட்கள் :

பொரிக்கக் கூடிய கார்ன்ஃபளேக்ஸ்  1/4 கிலோ.
சமையல் எண்ணெய் 
காரப்பொடி
உப்பு
முந்திரி பருப்பு 
கிஸ்மிஸ் 
கறிவேப்பிலை 


காரப்பொடி, உப்பு இரண்டையும் கலந்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.



அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து அது காய்ந்ததும் கார்ன்
ஃப்ளேக்ஸை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும்.



பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ் சூடாக இருக்கும் பொழுதே உப்பு கார கலவை பொடியை அதன் மீது பரவலாக தூவவும். பின்னர் உடைத்த முந்திரி, கிஸ்மிஸ், கறிவேப்பிலை இவைகளை தனித்தனியாக வறுத்து சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக குலுக்கி காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.




மிகவும் சுவையான அதே சமயத்தில் செய்வதற்கு மிகவும் எளிமையான மிக்ஸர் இது.



சிலர் இதோடு ஓமப்பொடியும் சேர்ப்பதுண்டு. ஆனால் நான் ஓமப்பொடி சேர்க்க மாட்டேன். முந்திரியும், கிஸ்மிஸ்ஸும் நிறைய சேர்ப்பேன். பிடித்திருந்தால் பாதாம் பருப்பும் வறுத்து சேர்க்கலாம்.


34 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா, பானுக்கா மற்றும் எல்லோருக்கும்….

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. மொறு மொறு தீனி பானுக்கா!!! வாவ்!! சூப்பர்...இதோ வரேன்...இது டக்கென்று செய்ய முடியும்...முழுவதும் வாசித்து வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கீதாக்கா இன்று லீவு!!! மறந்து போச்சு! ஸோ இன்னிக்கு காபி கஞ்சி கிடையாது!!!! ஹா ஹா
    கீதா

    பதிலளிநீக்கு
  5. கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்ஸர் சரி...

    சுடச்சுட காஃபி இல்லையே!..

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  8. காஃபி, கஞ்சிக்கு ஒரு வாரம் விடுப்பு துரை ஸார்...

    பதிலளிநீக்கு
  9. வெரி ஈசி ஆனால் சுவையான மிக்ஸர் அக்கா..தீபாவளி நாலே மிக்ஸர் பொதுவா எல்லா வீட்டுலயும் செய்வாங்க இல்லையா....நானும் முதலில் பல வருடங்களுக்கு முன் செய்து கொண்டிருந்தேன். அப்புறம் வீட்டில் குழந்தைகள் வர வர (எப்பவுமே தீபாவளி என்றால் மாமியார் வீட்டில் எல்லோரும் கூடிவிடுவோம்...) புதுசு புதுசா செய்ய நினைத்து....இப்படி... மாமியார் வீட்டில் எப்பவுமே நிறைய வகை வகையான நட்ஸ், ட்ரை ஃப்ரூட்ஸ் இருக்கும்....நாத்தனாரின் உபயத்தினால்..அவை என்னென்ன என்று பார்த்து வைத்துக் கொண்டு....பாண்டிபஜாரில் இருக்கும் பாய் கடையில் அல்லது பாம்பே ஸ்டோற்சில்..அப்போ நட்ஸ் அண்ட் ஸ்பைஸல் வராத காலம்...வாங்கி இப்படிச் சேர்த்துவிடுவது உண்டு...வால்னட் பிஸ்தா கூடப் போட்டு...வால்னட் ஒமேகா 3 இருக்குனு சொல்லுவாங்க இல்லையா அது தெரிந்ததும் அதையும் போட்டுவிடுவது..

    ஆமாம் அக்கா.பாதாமும் சேர்த்து...அப்புறம் ஒவ்வொரு ட்ரைஃபுரூட்ஸா தெரிய வர தெரியவர சேர்ப்பது...நிலக்கடலையும் இதோடு...என்று

    சூப்பர் பானுக்கா....நானும் ஓமப்பொடி சேர்க்க மாட்டேன்...வீட் ஃப்ளேக்ஸ் அவல் வறுத்து அதுவும் சேர்க்கலாம் அக்கா ரொம்ப நல்லாருக்கும்...இதெல்லாம் அப்போது கூட்டுக் குடும்பமா ஒவ்வொரு விசேஷத்துக்கும் சேர்ந்த்து என்று இருந்ததால் செய்தது....இப்போது அவை எல்லாமே நினைவுகளாய்...பல இனிய நினைவுகளையும் கூடவே இழுத்தது உங்கள் மிக்ஸர் பானுக்கா!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. தொண்ணூறுகளில் நம்முடன் இணைந்து கொள்ள முயன்று தோற்றுப் போன கார்ன்ஃபிளேக்ஸ் பின்னாளில் 2000 ல் காலை உணவு , நொறுக்ஸ் என்ற பெயரில் ஊடகங்களின் பரப்புரையுடன் ஒட்டிக் கொண்டது..


    சோளத்தைப் போட்டு அவித்து இடிக்கிற இடியில் இதனுள் நிறைந்திருக்கும் சத்துகள் எல்லாம் அழிந்தே போகின்றன..

    அதன் பின் இந்த சோள அவல் சத்துகளால் செறிவூட்டப்படுவதாக மேலைத்தேசத்து தயாரிப்புகள் சொல்கிறன...

    இந்தியத் தயாரிப்புகள் எப்படியோ தெரியவில்லை...

    2000 ல் சோள அவல் + பால் காலை உணவாக இருந்திருக்கிறது.. அதன் நுணுக்கம் பிடிபட்டதும் விலகி விட்டேன்...

    இப்போது சோள அவல் கலக்கப்படாத மிக்ஸரை இங்கே தேடுகின்றேன்...

    ஓட்ஸைப் போலவே தான் கார்ன்ஃப்ளேக்ஸூம்....

    கேள்விக்குறியுடன் முன் நிற்கின்றது...

    பதிலளிநீக்கு
  11. இது ஈசி மிக்சர்தான். நான் விரும்புவதில்லை.

    துரை சார் சொல்வதுபோல், கார்ன்ஃப்ளெக்ஸ், ஓட்ஸ், செரியல்ஸ் இதையெல்லாம் விட்டுவிட்டு வெகு தூரம் வந்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. இதன் இந்திய வெர்ஷனா அவல் என்று நான் நினைப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  13. அவல் நமது பாரம்பர்யம்..

    ஸ்ரீ கிருஷ்ணனுக்காக குசேலர் கொண்டு செல்லப்பட்டது..

    ஆனால் அவர் கொடுக்கவில்லை...

    பரம்பொருள் அவனே எடுத்துக் கொண்டான்...

    அவல் தான் Flakes...

    அவல் என்பதனை நல்ல மனம் என்று பொருள் கொள்வர் ஆன்றோர்...

    நல்லகாரியங்களில் முன் நிற்பது அவல்..
    மிக எளிய பிரசாதம்...

    பதிலளிநீக்கு
  14. அவசர நேரத்திற்கு செய்து கொள்ளும் ஸ்நாக்ஸ்

    பதிலளிநீக்கு
  15. குழந்தைகளுக்கு பிடித்த ஸ்நாக்ஸ்.
    செய்முறை படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. நல்லாத்தான் இருக்கும் போலயே...

    பதிலளிநீக்கு
  17. காலை வணக்கம். நேற்று இரவு கொசுத் தொல்லையால் தூங்க முடியவில்லை. உறங்க ஆரம்பித்து பொழுதே மூன்று மணி ஆகி விட்டது. இப்போதுதான் எழுந்து கொண்டேன். காலை வணக்கம்!

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    நல்ல மிகவும் எளிதான செய்முறையுடன் கூடிய மிக்சரை அறிமுகப்படுத்திய பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றிகள். இது போல் செய்ததில்லை. எளிதாக இருக்கிறது. சுவையாக இருக்குமெனவும் நினைக்கிறேன்.இனி செய்துபார்க்கிறேன். முன்பெல்லாம் வீட்டில் மிக்சர் தீபாவளிதோறும் கண்டிப்பாக உண்டு. சமையல் சாப்பாட்டுக்கு நடுவே அது ஒரு பெரிய வேலையாய்,..மலரும் நினைவுகளை ஏற்படுத்தியது தங்கள் பதிவு. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. இந்த சோள அவல், சத்துக்கள் சேர்த்து செறிவூட்டப்பட்டது இல்லை என்று நினைக்கிறேன். இங்கெல்லாம் மக்கைகா போஹா என்று கேட்டால் இது கிடைக்கும். மக்காச்சோள அவல். இதைப் பொரித்துச் செய்வதுதான் இந்த மிக்சர். நம்முடைய நெல்லிலிருந்து அவல்தயாரிக்கவும் ,ஊறவைத்து,வேகவைத்து,உலர்த்தி,வறுத்து,இடித்து,புடைத்து என்றான பிறகுதான் அவல் கிடைக்கிறது. சோளத்தில் தயாரிக்கும் முறை தெரியாது. இதிலும் எல்லா விதங்களும் செய்யலாம். நான் செய்வது மிக்சர் ஒன்றுதான். ஸத்து எதுவும் இல்லாவிட்டால் என்ன செய்யமுடியும்? காயும் எண்ணெயில் ஒரு பெரிய அளவுகொண்ட டீ வடிக்கட்டியை வைத்து, அதில் சோள அவலைப்போட்டுபிரட்டி ,பொரிந்ததும் மேலே எடுத்து சுலபமாகவே தயாரிக்கலாம். நான் சிறிது பெருங்காயமும் சேர்ப்பேன். கரகரெவென்று நன்றாக உள்ளது. எப்போதாகிலும் ஒருமுறை செய்து பாருங்கள். நல்ல குறிப்பும்மா. அன்புடன்
    .

    பதிலளிநீக்கு
  20. ஆஹா பானுமதி அக்கா ரெசிப்பியோ.. அப்போ கிச்சினுக்குள் போகவே தேவையில்லை:) வாசலில் நின்றே சமைச்சிட்டு ஒடிடலாம்:) அவ்ளோ சிம்பிளா இருக்குமே..

    அருமையான கோன் ஃபிளேக்ஸ் மிக்ஸர்.. இது நானும் இடைக்கிடை செய்வேனே.. இவற்றோடு கடலை, பயறு எல்லாம் பொரிச்சும் போடுவேன்.. கொஞ்சம் சீனியும் சேர்ப்பேன்...

    பதிலளிநீக்கு
  21. என்னாதூஊஊஊ ஸ்ரீராமைக் கடிச்ச அந்த லேடி நுளம்பு பானுமதி அக்காவையும் கடிச்சிடுச்சாஆஆஆஆஆஆ?:) நீங்க சென்னையில எல்லோரும் ஓவராத்தான் செல்லம் குடுக்கிறீங்க நுளம்புக்கு கர்ர்ர்:))..

    பிரித்தானியாவுக்கு கொஞ்சம் அனுப்பி விடுங்கோ.. இங்கு வல்லாரை ஊஸ் குடித்த ரத்தம் எல்லாம்:)) இருக்கு:).. கொஞ்சம் குடிச்சிட்டுப் போனால் நுளம்பு ஞாபக சக்தி அதிகமாகி:) கடிச்சாக்களை மீண்டும் கடிக்காது:)..

    பதிலளிநீக்கு
  22. காமாட்ஷி அம்மா சொன்ன ரெசிப்பியைக் கவனத்தில் கொள்கிறேன்..

    மீ கொஞ்சம் பிஸி லேட்டா வாறேனே:)..

    பதிலளிநீக்கு
  23. இனிப்பும் காரமுமாய் நல்லதொரு மிக்சர்! நன்றி!

    பதிலளிநீக்கு
  24. பார்க்கும் போதே சாப்பிட தோணுது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  25. கார்ன்ஃப்ளேக்ஸ் மிக்சர். பிரமாதம். க்ராண்ட் ல முதன் முதலாக வாங்கின நினைவு.
    நல்ல மொறு மொறுப்பாக இருக்கும். பானுவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. நான் ஸ்கூல் படிக்கும்போது ட்ரெயினில் இதை பாக்கெட் பண்ணி விப்பாங்க நிறைய சில்லி பவுடர் போட்டு வச்சிருக்கும் .அப்புறம்தான் இதெல்லாம் வற்றல் கடைகளில் விற்க ஆரம்பிச்சாங்க

    இங்கே பாக்கெட்டில் வறுக்காத கார்ன் பிளேக்ஸ் கிடைக்குது .ஒருதரம் வாங்கி பொரிச்சேன் ஃபுல்லா எண்ணெய் காப்பு போட்டமாதிரி வந்தது :) அப்டியே வீசிட்டேன் .காமாட்சியம்மா சொன்ன மாதிரி கண் வச்ச பாத்திரத்தில் பிரென்ச் fries பொரிக்கிறமாதிரி எடுத்தா எண்ணெய் குடிக்காதுனு நினைக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  27. ஹையோ கை காலெல்லாம் பரப்பரங்குதே இப்போ அந்த corn flakes ,oats பற்றிலாம் ஒருகாலத்தில் அலசி ஆராய்ஞ்சி சாப்பிடக்கூடாதவைன்னு போஸ்ட்டெல்லாம் போட்டிருக்கேன் முக்கியமா quakers ஓட்ஸ் பற்றி ..பசுமை விடியலில் போட்ட போஸ்ட் தேடிபார்க்கணும்

    பதிலளிநீக்கு
  28. //athira said...
    ஆஹா பானுமதி அக்கா ரெசிப்பியோ.. அப்போ கிச்சினுக்குள் போகவே தேவையில்லை:) வாசலில் நின்றே சமைச்சிட்டு ஒடிடலாம்:) அவ்ளோ சிம்பிளா இருக்குமே..//

    கர்ர்ர்ர் :)
    ஓஹோ அப்போ அடுப்பை பற்றவைக்கவேணாம் எண்ணெய் காய்ச்ச வேணாம் வாசலில் நின்னு இதெல்லாம் எப்படி உங்க வாலை நீட்டியா ஷெல்பிலிருந்து எடுப்பீங்க

    பதிலளிநீக்கு
  29. //பிரித்தானியாவுக்கு கொஞ்சம் அனுப்பி விடுங்கோ.. இங்கு வல்லாரை ஊஸ் குடித்த ரத்தம் எல்லாம்:)) இருக்கு:).. கொஞ்சம் குடிச்சிட்டுப் போனால் நுளம்பு ஞாபக சக்தி அதிகமாகி:) கடிச்சாக்களை மீண்டும் கடிக்காது:)..//

    வல்லாரை ஜூஸ் ரத்தம் பரவாயில்லை அந்த ஸ்கொட்லான்ட் ரத்தம் குடிச்சா அந்த கொசு fusion கொசுவாகி தமிழ் ழ ள ல எல்லாம் மறக்கவச்சிரும் :)

    பதிலளிநீக்கு
  30. கார்ன்ஃப்ளேக்ஸ் சாதாரணமா தீபாவளிக்குச் செய்யும் மிக்சரிலேயே இப்போல்லாம் எல்லோரும் பொரித்துச் சேர்க்கிறாங்க. எங்க வீட்டிலே நாங்க அசாதாரணமானவங்களாச்சே! ஆகையால் ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் எல்லாம் உள்ளே வராது. கொஞ்ச நாட்கள் ரொம்பவே உறவினர் ஒருத்தர் வற்புறுத்தியதால் ஓட்ஸ் கஞ்சி குடிச்சோம். அதுவும் பின்னர் பிடிக்கலை. சிறுதானியக் கஞ்சி தான்! கார்ன்ஃப்ளேக்ஸ் பாலில் போட்டும் சாப்பிட்டதில்லை. ஆனால் மிக்சர் எல்லோரும் கொடுத்துச் சாப்பிட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  31. புனே, நாக்பூரில் லக்ஷ்மிநாராயண் (ச்)சூடானு கடைகளில் விற்பாங்க. நம்ம நெல் அவலே கெட்டி அவலோடு, பாதாம், முந்திரி, திராக்ஷை, கொப்பரைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து மஞ்சள் பொடி, காரப்பொடி, உப்பு, பெருங்காயம், சோம்பு, கொஞ்சம் சாட் மசாலா, கருகப்பிலை எல்லாம் சேர்த்து வறுத்துக் கொடுப்பாங்க! எனக்கு அது ரொம்பப் பிடிக்கும். அவ்வப்போது வீட்டிலேயும் செய்து கொள்வது உண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!