விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சு... எங்கள் பிளாக்ல ஞாயிறு படம் வர்ல....
இரட்டைப்பூ!
இன்றைய பூவைப் பறித்தால் நாளைய மொட்டும் கையோடு சேர்ந்து வரும். நாளைய பூவுக்காகக் காத்திருந்தால் இன்றைய பூ வாடித்தான் போகும். இரண்டும் சேர்ந்து மலர்ந்திருக்காதோ....! மலர்ந்த மலரும் மலரப்போகும் மொட்டும்.
"காத்திருந்து.... காத்திருந்து..." என்று மறுநாள்...
ஆனால் விஷயம் வேறு மாதிரி ஆகியிருந்தது! மறுபாதி மலரவில்லை சரியாய்...
இப்போ என்ன வரணும்? சோகமும், அதனால் ஒரு கவிதையும்....!! வந்ததே!
இரட்டைப்பூ - இன்றைய நிலை :
பறித்து விட்டதால்
பாதிதான் மலர்ந்தாயோ..
பரிதவிக்கிறேன்
நேற்று மலர்ந்த மலர்
இன்னமும் கூம்பாமல் இருக்க
இன்று மலரவேண்டிய
நீயோ
பாதி கூட மலரவில்லையே
இரட்டையரில்
முதலில் மலர்ந்தவள்
உன் உணவையும்
சேர்த்தெடுத்தாளோ...
பறிக்காமல்
செடியிலேயே விட்டிருந்தால்
நீ கூட
முழுவதும் மலர்ந்திருப்பாயோ...
இரு மல்லிகை மொட்டு....
நாளை மலரும் நாள் வரும்!
மஞ்சப்பூ... மஞ்சப்பூ... கொஞ்சம்தான் வந்ததுப்பூ ....
ஒற்றை இலை!
தோசைப் பூ கிடைக்கவில்லை!
சூரிய வெப்பத்தைத் தான் தாங்கி, பழுத்தும்...... 'நீ சாய்ந்தால் நான் தாங்குவேன்..
'நாளை நீ மலரலாம்' என்று மொட்டைப் பாதுகாக்கிறதோ இந்த இலை?
சென்ற மாதம் கல்யாணமாகாதேவி சென்றபோது ஓடும் பேருந்திலிருந்து க்ளிக்கிய ஒரு அதிகாலைக் காட்சி...
"கோலம் போட்ட தாயே.. கொஞ்சம் சோறு போடுங்க தாயே.."
"கொஞ்ச நேரமாகும் என் அன்பு நாயே.."
"அப்போ இடைக்கால நிவாரணமா ஒரு வருக்கியாவது போடுங்கம்மா.."
இந்தவாரம் வித்தியாசமான படங்கள். கோவிலும் குளமும் அழகு.
பதிலளிநீக்குஎப்போதும் வரும் படங்கள்தானே என்று யாரும் முதலில் வர முயலவில்லையோ?
பதிலளிநீக்குகாலை வணக்கம் துரை செல்வராஜா சார், கீசா மேடம், ஶ்ரீராம், கீதா ரங்கன், மற்றும் அனைவருக்கும்
பதிலளிநீக்குGood morning Nellai! முதல் வருகையை இன்று நெல்லை எக்ஸ்பிரஸ்! வழக்கமாக வெளிவரும் காலை ஆறு மணிக்கு பதிவை வெளியிட முடியவில்லை. முதல் நாளே வரவேண்டிய 'படப்பொட்டி' வரவில்லை! எனவே இன்று என் சரக்கிலிருந்து எடுத்து ஒட்டியிருக்கிறேன், ஓட்டியிருக்கிறேன்!
பதிலளிநீக்குதாமதத்துக்கு மன்னிக்க வேண்டும் துரை செல்வராஜூ ஸார். கீதா ரெங்கன்.. இனிய காலை வணக்கங்கள்.
பதிலளிநீக்கு:)))
எப்படியோ
பதிலளிநீக்குபதிவு வெளியானதே...
நான் நினைத்தேன் - சிரியா சண்டையினால் சிக்கலானதோ என்று!...
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா, பானுக்கா….தேம்ஸ் மக்காஸ்
பதிலளிநீக்குகாத்திருந்து காத்திருந்து......
ஒகே ஒகே.....கலக்கல் படங்கள்!!!!!!!!வாக்கிங்க் முடித்து வந்தேன்...அடுத்து மிச்சமிருக்கும் உகாதி கடமை ஆற்றுவதற்கு முன்... இதோ ஒவ்வொன்றாய் பார்த்துவிட்டு போறென்...
கீதா
காலை வணக்கம் நெல்லை!!!!
பதிலளிநீக்குகீதா
/// வரவேண்டிய படப்பொட்டி வரலையா!...///
பதிலளிநீக்குஅப்போ மாவு வாங்கித்தான் தோசையா!..
காலை வணக்கம்
பதிலளிநீக்குதூக்கம் வராதோர் சங்கத்தின் முன்னோடிகள் அனைவருக்கும் வணக்கம்....
பதிலளிநீக்குநெல்லை சூப்பர் பாஸ்ட் வாழ்க...
முடிவில் தந்த பைரவரின் கவிதையை மிகவும் இரசித்தேன் ஸ்ரீராம்ஜி
பதிலளிநீக்குமுதலில் கண்ணில் பட்டது செல்லம் என் தங்கச் செல்லம்...!!! சிரித்துவிட்டேன் செமை கலக்கல் வரிகள்...இன்று மிக மிக வித்தியாசமான எபி ஞாயிறு!!
பதிலளிநீக்கு//"கோலம் போட்ட தாயே.. கொஞ்சம் சோறு போடுங்க தாயே.."
"கொஞ்ச நேரமாகும் என் அன்பு நாயே.."
"அப்போ இடைக்கால நிவாரணமா ஒரு வருக்கியாவது போடுங்கம்மா.." //
என் செல்லமே
வருக்கி... உன் கப்பம் இதோ
கருப்பன் உன் பங்காளி வருகிறான் அதோ
வருக்கி ரெண்டு அவனுக்கும் கொடு
இல்லை என்றால் அவன் வைப்பான் கெடு
கீதா
கோயில் குளம்...மாடுகள் அழகோ அழகு!!
பதிலளிநீக்குகீதா
துரை ஸார்... சிரியாவில் பெரிய சண்டை. ஆ 'சிரிய' தாமதம் சண்டை வராது! மாற்று வழி பிறக்கும் - சற்று தாமதமாகவேனும்!
பதிலளிநீக்கு// அப்போ மாவு வாங்கித்தான் தோசையா!.. //
ஆமாம். சொல்லி இருக்கேனே... எங்கள் ஆசிரியர்களில் ஒருவர் சென்று வந்த சுற்றுலாப் புகைப்படங்களைத் தவணை முறையில்..... நேற்று சென்னையில் டிராஃபிக் ஜாம்!!
நெல்லை பாஸஞ்சர்தான். ஆனால் பாசஞ்சர் வந்த நேரம் பூ விற்பனை!!
காலை வணக்கம் பானு அக்கா...
பதிலளிநீக்குவாங்க கில்லர்ஜி.. ரசித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க கீதா...
பதிலளிநீக்குஉகாதிக் கடமை ஆற்றுங்க... வாழ்த்துகள்.
// கருப்பன் உன் பங்காளி வருகிறான் அதோ//
ஆமாம்.. நிஜமாகவே ஒருகண் சித்தாந்த கருப்பன் ஒருவன் அழகிக்குத் துணை!
கோவில் குளம் மாடு படம் எடுக்கப்பட்டு சில மணித்துளிகளில் கூகிள் அன்று எடுத்த அத்தனை படங்களிலிருந்து அதைத் தனியாக எடுத்து கருப்பு வெள்ளையாக மாற்றி எனக்கே அனுப்பி எப்படி என்று கேட்டிருந்தது!!!
ஓடும் பேருந்திலிருது கிளிக்கியது செமையா வந்துருக்கு !!!! அதான் கோயில் குளம் எலலம்...வாவ்!!
பதிலளிநீக்குமொட்டு செம யா இருக்கு கமென்ட் அதுக்கு நிகராய்....கலக்கல்!!!
கீதா
ஆமாம்.. நிஜமாகவே ஒருகண் சித்தாந்த கருப்பன் ஒருவன் அழகிக்குத் துணை!//
பதிலளிநீக்குஓ!!அட!!!! அப்ப இது வீட்டுப் பக்கத்தில் நான் அன்று தடவிக் கொடுத்தேனே அந்த அழகியா...
பாஸ் போட்ட கோலமா!!! வாவ்!!! செமையா இருக்கு!!! பாஸுக்கு சொல்லிடுங்க...பாருங்க அழகி கோலத்தைக் கலைக்காம....அதன் அழகையும் ரசித்துக் கொண்டிருக்கிறாள்!!!
கீதா
நேற்று சென்னையில் டிராஃபிக் ஜாம்!!
பதிலளிநீக்குநெல்லை பாஸஞ்சர்தான். ஆனால் பாசஞ்சர் வந்த நேரம் பூ விற்பனை!!//
ஆஹா ஆஹா ஆஹா...படங்களை ரசிக்கவா இந்தக் கருத்துகளை ரசிக்கவா...போட்டியோ போட்டி!!
கீதா
சூரிய வெப்பத்தைத் தான் தாங்கி, பழுத்தும்...... 'நீ சாய்ந்தால் நான் தாங்குவேன்..//
பதிலளிநீக்குஅட! அட! எங்கேயோ போறீங்க ஸ்ரீராம்....உங்கள் வரிகள் பாத்து என் மண்டைக்குள்ளயும் பொறக்குது!! ஹா ஹா ஹா
தோசைப்பூ கிடைக்க வில்லை// ஹா ஹா ஹா ஹா ஹா
இட்லி பூ என்ன அழகு இல்ல? அந்தக் கலர்...அழகு!!
ஒற்றை இலை// உங்கள் ரசனையை ரசிக்கிறேன்!! இலை அழகு!!! என்ன டிசைன்பா...இயற்கை அன்னையின் கை வண்ணம்!!!
கீதா
அருமை
பதிலளிநீக்குஅருமை
ரசித்தேன்
மஞ்சள் கூட்டம் அழகு என்றால்.....
பதிலளிநீக்குபதின்பருவத்தில் இருக்கும் இரு மொட்டு குமரிகளும்.....நடுவில் அப்போதுதான் பிறந்திருக்கும் அந்த மொட்டுக் குழந்தையும்...மனதைக் கவர்கின்றன....இவற்றை எல்லாம் பார்க்கும் போது என்ன மகிழ்ச்சி!!!
கீதா
செம்பருத்திப் பூ படம் அழகு என்றால் செம்பருத்திக் கவிதை ஆஹா ஆஹா!!! போட வைக்கிறது.....ரொம்ப ரொம்ப அழகு!வரிகள்!!! ரசித்தேன் ஸ்ரீராம்..பூவைப் பார்த்ததும் உங்கள் மனதில் ஓடிய எண்ணங்கள்...வாவ்..
பதிலளிநீக்குஅனைத்து செம்பருத்திப் படங்களும் அதற்கான வரிகளும் கலக்கல்...
காக்கையாரே உங்கள் கரைதல் கேட்டதும் ஸ்ரீராம் ஓடோடி வந்து படங்களைப் போட்டுவிட்டார் பாருங்கள்!!! உம்மையும் சேர்த்துத்தான்!!! நீங்களும் எபி ரசிகரோ!!! அப்போ வாங்க இங்க சேர்ந்து கரைவோம்!!!
ஆனா ஒன்னே ஒன்னு ...தேம்ஸ்லருந்து பூனையார் வருவார்!!! அவரிடம் மட்டும் ஜாக்கிரதையாக இருக்கனும்...! ஹா ஹா ஹா ஹா
கீதா
Padangalum commentsum kavithai....kavithai
பதிலளிநீக்குதலைப்பு(பூ) சூப்பரப்பு(பூ)!!!
பதிலளிநீக்குகீதா
பதிலளிநீக்கு"கோலம் போட்ட தாயே.. கொஞ்சம் சோறு போடுங்க தாயே.."
"கொஞ்ச நேரமாகும் என் அன்பு நாயே.."
"அப்போ இடைக்கால நிவாரணமா ஒரு வருக்கியாவது போடுங்கம்மா.." .
செம்ம
நன்றி கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குநன்றி மிடில்க்ளாஸ்மாதவி
பதிலளிநீக்குஒரு மல்லிகை மொட்டு'ன்னு ஒரு எஸ் பி பி பட்டு இருக்கு தெரியுமோ கீதா?
பதிலளிநீக்கு// ஆஹா ஆஹா ஆஹா...படங்களை ரசிக்கவா இந்தக் கருத்துகளை ரசிக்கவா...போட்டியோ போட்டி!! //
ரசனைத்திலகம் நீங்கள்.
//தலைப்பு(பூ) சூப்பரப்பு(பூ)!!! //
ஹா... ஹா... ஹா,,,,
அவளேதான் அழகி! உங்க (கோல) பாராட்டை பாஸ் கிட்ட சொல்லிட்டேன் கீதா...
இரட்டைப்பூ ஜனவரி மாதம் முக நூலில் பகிர்ந்து!
ரசித்ததற்கு நன்றி அனுபிரேம் சகோ......
பதிலளிநீக்குபனிமலைச்சிகரங்களிலிருந்து சமவெளிக்குத் திரும்பியிருக்கிறீர்கள். வண்ணப்பூக்கள், வசீகரமாய் இலைகள், மொட்டுகள்:
பதிலளிநீக்குஇலையாய் மொட்டாய் பூவாய் காயாய்
செழித்து பூமியில் வளர்ந்தாய் உயர்ந்தாய்
பழுத்தபின்னும் இலையே பூவானாய் – தின்று
கொழுத்துத் திரிபவனுக்கு புரியுமா இதெல்லாம்?
**
கோலம்போட்ட பெண்ணிற்கு நாயின் கோலம் கண்ணில்படவில்லையா? மரியாதையாகத் தள்ளியிருந்து கோலத்தைப் பார்த்துவிட்டுத்தான் வீட்டின் வாசலைப் பார்க்கிறது போலும். என்ன நினைக்கிறதோ :
அம்மணி எப்போ வருவாரோ
அள்ளித்தான் ஏதாவது தருவாரோ
அடச்சீ நாயே போ என்பாரோ
நான் என்னத்தைக் கண்டேன்?
நாக்கைத் தொங்கப்போட்டு
நாய் நான் உட்காந்திருக்கிறேன் ..
//பாதிதான் மலர்ந்தாயோ..
பதிலளிநீக்குபரிதவிக்கிறேன்
நேற்று மலர்ந்த மலர்
இன்னமும் கூம்பாமல் இருக்க
இன்று மலரவேண்டிய
நீயோ
பாதிகூட மலரவில்லையே ..//
நன்றாகச் செல்கிறது கவலைக் கவிதை..
காலை அழகில் ஜொலிக்கும் இலைகள், மலர்கள். நல்ல கேமராவண்ணம்.
மிகவும் ரசித்தேன்...
பதிலளிநீக்குவெவ்வேறு இடங்களில் நான் பார்த்த பூக்கள் பலவற்றையும் இங்கு ஒருங்கே கண்டேன். எங்கள் வீட்டிலும் வெட்சி மலர் ( LXORA ) எனப்படும் இட்லிப் பூ செடி உள்ளது. (இந்த வெட்சிப்பூ பற்றிய ஒரு பதிவையும் நான் எழுதி இருக்கிறேன்) - தொடர்கின்றேன்.
பதிலளிநீக்குகவிதையைப் பாராட்ட மறந்துவிட்டேன். பூக் கவிதை அருமை. நாயின் எண்ணம் ரசித்தேன். ஒவ்வொரு பிராணியும் மனதில் நினைப்பது நமக்குக் கேட்குமானால் இன்னும் மனித்த்தன்மை பெறுவோம் (சக மனிதர்கள் நினைப்பது மட்டும் கேட்டுவிடக் கூடாது. நட்பும் நிம்மதியும் போய்விடும்)
பதிலளிநீக்குபடங்கள், கவிதைகள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குகுளமும், கோவிலும், மாடுக்ளும் அழகு.
நாய் எதிர்ப்பார்ப்பு படமும் கவிதையும் அருமை.
வாங்க ஏகாந்தன் ஸார் ..
பதிலளிநீக்குஇலையே பூவாய்... ஆமாம் அழகாக இருக்கிறது. அப்படித்தான் எனக்கும் தோன்றியது.
கோலம் போட்ட பெண் ஒரு டோஸ் வருக்கிக் கொடுத்தும் திருப்தியில்லாமல் காத்திருக்கிறாள் அந்த அழகி. அவள் பேராசைக்காரி. நடன அசைவு காட்டி மயக்கும் சாகஸக்காரி! "அடச்சீ நாயே போ" என்று சொல்ல மாட்டார். எங்களுக்கெல்லாம் அவள் "அழகி"
கவலைக்கவிதையை ரசித்தமைக்கு நன்றி. கேமிரா - மொபைல் க்ளிக்தான் எல்லாமே!
நன்றி டிடி.
பதிலளிநீக்குவாங்க தமிழ் இளங்கோ ஸார்... உங்கள் மலர் பதிவு நானும் படித்தேன். உங்கள் உடல்நலம் தேவலாமா?
பதிலளிநீக்குவாங்க நெல்லை... கவிதையை சிலாகித்ததற்கு நன்றி. ஏதோ ஒரு படத்தில் விவேக்குக்கு முதலில் மனிதர்கள் நினைப்பதும், பின்னர் விலங்குகள் நினைப்பதும் கேட்குமே.... அது நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... அனைத்தையும் ரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅடச்சீ நாயே போ என்பாரோ
பதிலளிநீக்குநான் என்னத்தைக் கண்டேன்?//
ஏகாந்தன் அண்ணா இப்பெண்மணி அப்படிச் சொல்ல மாட்டாராக்கும்!!!!!
அந்த அழகியின் காதலரின் பாஸ் என்கிற மனைவி!!!!ஹா ஹா ஹா ஹா அக்கோலத்தைப் போட்டவரும் அவரே!!!!
கீதா
இந்த அழகி (செல்லம்) ஸ்ரீராம் வீட்டு முன்னாடிதான் இருக்கும்...ரொம்ப சாது........
பதிலளிநீக்குஒரு மல்லிகை மொட்டு'ன்னு ஒரு எஸ் பி பி பட்டு இருக்கு தெரியுமோ கீதா?//
தெரியலை ஸ்ரீராம் கேட்கிறேன்..கேட்டுட்டுச் சொல்கிறேன்...
கீதா
மல்லிகை மொட்டு மனசை தொட்டு பாட்டா? அது அருண்மொழி, ஸ்வர்ணலதா பாடியிருப்பதாக
பதிலளிநீக்குயூட்யூப் தகவல் சொல்லுது .....படம் சக்திவேல்? அப்படி ஒரு படமா? இசையமைப்பு இளையராஜா.....அந்தப் பாட்டா?
கீதா
///விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சு... எங்கள் பிளாக்ல ஞாயிறு படம் வர்ல.... //
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ் வழமையான படங்கள்தானே என விட்டிட்டேன்ன்.. இப்போ பார்த்தால்
பூப்புவாய்ப் பூத்திருக்கு பூமியிலே ரெண்டு பூ... அது ஸ்ரீராம் வீடுப்பூஊஊஊ:)..
வாவ்வ்வ்வ்வ்வ் இன்று நெல்லைத்தமிழனோ 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ?:) வாழ்க்கையில் முதேல் தடவையா 1ஸ்ட்டா வந்திருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்... சிதறு தேங்காய் தேம்ஸ்கரையில் உடைச்சுக் கொண்டாடுவோம்ம்ம்ம்ம்:))
முதல் படத்தில கரைவது அண்ணங்காகமோ?:) அப்போ ஆரோ விருந்தினர் வருகை இன்று:)
// வாங்கப்பு...//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எதிர்ப்பாலாரை மட்டுமே அழைச்சிருக்கிறார்ர்:)) வாங்கம்மா என அழைக்கேல்லை:).. ச்ச்சோஓஓஓஓஓஓஓஓஒ மீ உள்ளே வரமாட்டேன்ன்ன்ன்ன்ன்:).. நேங்களுக்கும்:) வெயிக்கம் மானம் உரோசம்:).. கடமை நேர்மை எருமை அல்லாம் இருக்குதாக்கும்..க்கும்..க்கும்..:))..
///இரட்டையரில்
முதலில் மலர்ந்தவள்///
அதெப்பூடி இவ்ளோ கரீட்டா????? பெண் குழந்தையேதானா அது?:)).. எங்கள் வீட்டிலும் ஒரு மாம்பூ வந்திருக்கு அது என்ன கொயந்தை என கொஞ்சம் பார்த்துச் சொல்ல முடியுமோ?:)..
///பறிக்காமல்
செடியிலேயே விட்டிருந்தால்
நீ கூட
முழுவதும் மலர்ந்திருப்பாயோ...//
அதேதான் நடந்திருக்கும்.. முழுவதும் மலர விடாமல் பாதியில் பறிச்ச குற்றத்துக்காக ஸ்ரீராமை பிரித்தானிய நீதிமன்றம் அழைக்கிறார்.. நீசிபதி:))
அது “அண்டங்காகம்” ஸ்பெலிங்கு மிசுரேக்கு ஆயிட்டுதே கர்:))
பதிலளிநீக்குமஞ்சள்பூ அது பொன்னிச்சை தானே? பிள்ளையாருக்கு மாலை கட்ட்டிக் கட்டிக் குடுத்தேன் ஊரில்... அதனை கண்ணால் பார்த்தே எத்தனையோ வருசமாச்சு..
பதிலளிநீக்குபழுத்த இலையும் மொட்டும் மிக அழகாக படம் எடுக்கப்பட்டிருக்கு.. படமெடுத்த ஆளுக்கு ஒரு கமெரா பரிசு:).. பரிசை கீதா, தன் கைகளாலேயே வழங்குவா:)..
//சென்ற மாதம் கல்யாணமாகாதேவி சென்றபோது//
பதிலளிநீக்குஅச்சச்சோ அச்சச்சோ.. விடிஞ்சு இவ்ளோ நேரமாச்சே.. ஆரி கண்ணிலும் இதுபடேல்லையோ கர்ர்ர்ர்ர்ர்:)) போனமாதம் காலை 6 மணி பஸ்ல ஸ்ரீராம் சத்தம் போடாமல் ரகசியமாப் போனாரே:)) அதுக்கு இதுதான் காரணமோ?:))..
கல்யானமாகாத ... தேவியுடன் போனாராமே:)) ஹையோ நேக்கு காண்ட்ஸும் ஓடல்ல லெக்ஸும் ஆடல்ல:))
கோயில் படம் வேறு போட்டிருக்கிறார்:) ஹையோ அக்கோயில்லதான் ரகசியமாய்... சே..சே.. எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்:) எல்லோரையும் போல மீக்கும் ஒண்ணும் பிரியாதமாதிரி இருந்திடுறதே இக்காலத்தில பெட்டர்ர்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊஊ:))..
அழகிய கோலம்.. கோலம் போட்ட கைகளுக்கு ஒரு சோடி வைர வளையல்.. அது ஸ்ரீராமின் பொஸ் தான் போட்டா என போஸ்ட்டில ஜொள்ளியிருக்கலாமெல்லோ.. கீதா கொமெண்ட் படிச்சே அறிஞ்சேன்..
பதிலளிநீக்குஏன் நாயாருக்குப் பேரில்லையோ?:))..
//நேற்று சென்னையில் டிராஃபிக் ஜாம்!!
///
ஹா ஹா ஹா வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு ஞாயிறும் இப்பூடி ட்றபிக் ஜாம் ஏற்படுத்தி விடச் சொல்லி மோடி அங்கிளுக்கு மனுக்குடுக்கப் போறேன்ன்ன்ன்:))..
அப்போ ஸ்ரீராமும், என் செக் ஐப்போல:) வந்தபின் காப்போனோ?:)).. ஹா ஹா ஹா:)..
come on Geethaa..
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=U8I3XtAgWkU
அருமை பாராட்டுகள்
பதிலளிநீக்குவாவ்வ்வ்வ்வ்வ் இன்று நெல்லைத்தமிழனோ 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ?:) வாழ்க்கையில் முதேல் தடவையா 1ஸ்ட்டா வந்திருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்... சிதறு தேங்காய் தேம்ஸ்கரையில் உடைச்சுக் கொண்டாடுவோம்ம்ம்ம்ம்:))//
பதிலளிநீக்குஹலோ இன்று பதிவு லேட்டு அதான் நெல்லை ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஉ...ஹா ஹா ஹா ஹா ஹா...இல்லைனா துரை அண்ணாதான்...இல்ல கீதாக்கா...
கீதா
ஏன் நாயாருக்குப் பேரில்லையோ?:))..//
பதிலளிநீக்குஹலோ டொக்டர்....அழகி என்பதுபெயரில்லையோ?!!! ஹிஹிஹி
கீதா
https://www.youtube.com/watch?v=U8I3XtAgWkU//
பதிலளிநீக்குகேட்டுட்டேன் அதிரா...நான் மல்லிகை மொட்டு என்ற போது அந்தப் பாட்டுதானே வந்தது....ஒரு மல்லிகை மொட்டுனு போடனும் போல...எனக்குப் பாட்டு ஞானம் ரொம்பக் குறைவு....அதிரா...கேட்டாலும் பல பாடல்கள் பேர் சொன்னாலும் தெரியாது பாடிக் காட்டினால்தான் தெரியும்...ஹிஹிஹிஹி
கீதா
///அழகி என்பதுபெயரில்லையோ?!!! ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா///
நோஓஓஓஓஒ கவிதையில் போட்டிருக்கோணும் அழகியே என:) இது அவர் அப்பூடிப் போடல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
பூக்கள், இலைகள், கவிதைகள் இனிப்பூ!!
பதிலளிநீக்குசேரன்மாதேவி கேள்விப்பட்டிருக்கிறேன், கல்யாணமாகாதேவி முதல் முறையாக கேள்விப்படுகிறேன். எங்கிருக்கிறது இந்த ஊர்?
இரட்டைப்பூ செம்பருத்திக் கவிதை அழகு. முன்பே பூக்களைப் போட்டிருந்தீர்கள். ஒவ்வொரு பூவும் வெவ்வேறு அழகு. ரஸிக்க வைக்கும் கலர்களும், அமைப்பும். கோலம்போட்ட தாயே கோலமும் அருமை. வசனங்களின் அமைப்பும் என்ன ஒரு அழகு. வர்ணித்துக் கொண்டே போகலாம். மொத்தம் வர்ணனை செய்தது வகையுடனிருக்கிறது. அன்புடன்
பதிலளிநீக்கு@ கீதா: //.. ஹா ஹா அக்கோலத்தைப் போட்டவரும் அவரே!!!!
பதிலளிநீக்குஅடடா! யாரும் சொல்லவில்லையே. வைரவரைப்பார்த்து வரைந்துவிட்டேன் பின்னூட்டம். இப்போதுதான் பார்க்கிறேன். கோலம் அழகாக வந்திருக்கிறது.
அருமையாக எடுத்துள்ளீர்கள். முடிந்த வரையிலும் மலர்களைச் செடியில் இருக்கையிலேயே எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். கடைசிப் படமும் வாசகமும் அருமை:).
பதிலளிநீக்குஒரு மல்லிகை மொட்டு மலர்த்துளி பட்டு
பதிலளிநீக்குசில்லெனப் பூத்தது இதழ் விரித்து....எஸ்பிபி
தேன் குரல், ரங்கராட்டினம் படம் @ஏஞ்சல்.
Sriram , whenever you take the flowers keep them in water. they will immediately come alive.
ஆனால் உங்க கவிதை எல்லாம் மிஸ் ஆகி இருக்கும்.
மிக அருமையான படங்கள். நன்றி மா.
கோலம், கோயில், அழகி அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குகல்யாண மஹாதேவி கருணை கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
//அந்த அழகியின் காதலரின் பாஸ் என்கிற மனைவி//
பதிலளிநீக்குஹா.... ஹா... ஹா... கீதா...!
மல்லிகை மொட்டு பாட்டை ஞானகுரு எடுத்துக் கொடுத்துட்டாங்க... இதிலும் ஒரு கேள்வி... இந்தப் பாடல் ஒரு ஹிந்திப் பாடலிலிருந்து உருவப்பட்டது! அது இந்தப் பாடல் என்று ஏகாந்தன் ஸார் சொல்லக்கூடும்!
வாங்க டொக்டொர்...! மற்ற படங்களா இருந்தால் வரமாட்டீங்களா என்ன! வான்காப்பு என்பது இருபாலாருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!! (சமாளிப்பூ!!)
பதிலளிநீக்கு//பெண் குழந்தையேதானா அது?://
அதிரா குரு...
பதிலளிநீக்குமலர் என்றால் பெண்தானே? ஹிஹிஹி...
//முழுவதும் மலர விடாமல் பாதியில் பறிச்ச //
இல்லை அதிரா... முதல் பூவைப் பறிக்காமல் விட்டு மறுநாள் பறித்தார்கள். ஆனாலும்...
அதிரா....
பதிலளிநீக்கு//படமெடுத்த ஆளுக்கு ஒரு கமெரா பரிசு//
அந்த அண்டங்காகத்துக்கு கிட்ட கொடுத்து எங்க வீட்டு மொட்டை மாடில போட்டுறச் சொல்லுங்க! கல்யாணமாகாத தேவையா? கௌ அங்கிள்... இங்க பாருங்க உங்க ஊரைக் கிண்டல் பண்றங்க...
//கோலம் போட்ட கைகளுக்கு ஒரு சோடி வைர வளையல்..//
அதையும் அகா கிட்ட கொடுத்தனுப்பி மொமா ல போட்டுடுங்க!
நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்குபானுக்கா....
பதிலளிநீக்கு//சேரன்மாதேவி கேள்விப்பட்டிருக்கிறேன், கல்யாணமாகாதேவி முதல் முறையாக கேள்விப்படுகிறேன். எங்கிருக்கிறது இந்த ஊர்?//
உடனே சொல்லணும்னா கௌதமன் பேர்ல ஆரம்பத்துல இருக்கு! சரியாகி சொல்லணும்னா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் இருக்கு!
வாங்க காமாட்சி அம்மா... பூக்களை முக நூலில் பகிர்ந்திருந்தேன். நீங்களும் நிறைய பதில் சொல்லி இருந்தீர்கள். பாராட்டுக்கு நன்றி ம்மா.
பதிலளிநீக்குஏகாந்தன் ஸார்... கோலத்துக்கான பாராட்டை பாஸ் கிட்ட சொல்லிட்டேன்! உங்களுக்கு ஒரு கேள்வி கேட்டிருக்கேன், கீதா ரெங்கனுக்கான பதிலில்!
பதிலளிநீக்குவாங்க ராமலக்ஷ்மி... இந்தப் படங்களை முக நூலிலேயே பார்த்திருப்பீர்கள்! இரண்டாம் பூ மலர்ந்த இரண்டாம் நாளில் நான் பார்க்கும் முன்னரே மலரைப் பறித்து விட்டார்கள்.
பதிலளிநீக்கு//அருமையாக எடுத்துள்ளீர்கள்.//
இந்த வார்த்தையை உங்களிடமிருந்து கேட்கும்போது வரும் மகிழ்ச்சியே தனிதான். முதல் மார்க் மாணவனை ஆசிரியர் பாராட்டுவது போல...
வாங்க வல்லிம்மா... பாட்டின் வரிகள் கிட்டத்தட்ட சரி! "ஒரு மல்லிகை மொட்டு/ மழைத்துளி பட்டு /சில்லெனப் பூத்தது இதழ் விட்டு....
பதிலளிநீக்கு//ஆனால் உங்க கவிதை எல்லாம் மிஸ் ஆகி இருக்கும்.//
ஹா... ஹா... ஹா....
//கல்யாண மஹாதேவி கருணை கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.//
நிறைய!
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று நேரம் இப்போதுதான் கிடைத்தது. ஒவ்வொரு போட்டோவும் அருமை. கவிதைகள் எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை.பூக்களைப் பார்த்து தங்கள் கவிதை பிறந்ததா? இல்லை தங்கள் கவி மழையில் நனைந்து மலர்கள் மலர்ந்ததுவா? மிக அருமை.கண்ணுக்கு நிறைவான கோலமும், குளக்கரை மாடுகளின் உல்லாசமும், கோபுரஅழகுடன் எடுக்கப்பட்ட படங்களும் மிக அழகு. அந்த ஒற்றை இலை வெகு ஜோர். மலரைத்தாங்கும் நம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கும் பழுத்த இலை நம்பிக்கைச் சின்னம். அத்தனையும் மிகச்சிறப்பு. நான்தான் தாமதமாக வந்திருக்கிறேன்.என் தாமத வருகைக்கு மன்னிக்கவும். அழகுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
@ ஸ்ரீராம்: .. பாடலிலிருந்து உருவப்பட்டது! அது இந்தப் பாடல் என்று ஏகாந்தன் ஸார் சொல்லக்கூடும்!//
பதிலளிநீக்குஹிந்திப்பாடலா? தெரியவில்லையே..
அழகான வித்தியாசமான படங்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குபடங்கள் வசன கவுஜ எல்லாமும் அருமை. அந்தச் செல்லத்துக்கு வர்க்கி கிடைச்சதா இல்லையா? இந்தப் பூக்களை முகநூலில் போட்டிருந்ததை நான் பார்க்கலைனு நினைக்கிறேன். கௌதமன் சார் பேரே கல்யாணமஹாதேவி கோபால கௌதமன் இல்லையோ? யாருக்குமே தெரியலை! கும்பாபிஷேஹத்துக்குப் போயிருந்தீங்களா ஶ்ரீராம்? எப்போ?
பதிலளிநீக்கு// கும்பாபிஷேஹத்துக்குப் போயிருந்தீங்களா ஶ்ரீராம்? எப்போ? //
பதிலளிநீக்குஎன்ன கீதாக்கா... அப்பவே சொல்லாம கிளம்பிட்டேன்னு நீங்க கூட சொன்ன நினைவு.. பிப்ரவரி 4 ஆம் தேதி! இரண்டாம் தேதி பதிவுகளில் ஸ்ரீரா, பஸ்ல போயிட்டிருக்கார் என்று கமெண்ட்ஸ் வந்ததாகவும் நினைவு!
// படங்கள் வசன கவுஜ எல்லாமும் அருமை. //
நன்றி.
// அந்தச் செல்லத்துக்கு வர்க்கி கிடைச்சதா இல்லையா//
முதலிலேயே இரண்டு வர்க்கி சாப்பிட்டு விட்டுதான் காத்திருக்கிறது அந்தப் போக்கிரி!
// இந்தப் பூக்களை முகநூலில் போட்டிருந்ததை நான் பார்க்கலைனு நினைக்கிறேன்.//
ம்ம்ம்.... அங்க உங்க லைக் இல்லையோ? எனக்கும் நினைவில்லை.
// கௌதமன் சார் பேரே கல்யாணமஹாதேவி கோபால கௌதமன் இல்லையோ? //
ஆமாம்.. அதைத்தான் பானு அக்காவுக்கு பதிலா கொடுத்திருக்கேன்!!
ஏகாந்தன் ஸார்.. அந்தப் பாடல் 'கடி பதங்' படத்தில் வரும் 'யே ஜோ மொஹபத் ஹை..'
பதிலளிநீக்குநன்றி தளிர் சுரேஷ்.
பதிலளிநீக்குநன்றி கமலா ஹரிஹரன் சகோ...
பதிலளிநீக்கு