மதர்லேண்ட் பிக்சர்ஸ், கோவைத்தம்பி படம் என்றால் பாடல்கள் நன்றாய் இருக்கும் என்ற எண்ணம் இருந்தது அப்போது. இதுவும் அவர்கள் படம்தான்.
இந்தப் படத்தில் இந்த ஒரு பாடல் சிறப்பு. பார்த்திபனுக்கு சோகம் செட் ஆகாது என்பதும் என் எண்ணம். ஆனாலும் சோகரசத்தில் இழையும் எஸ் பி பி குரலில் இனிமையான ஒரு பாடல்.
பாடல் வரிகளையும் ரசிக்கலாம். பாடல் வாலி என்று நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் பாடல்களை வாலி, கங்கை அமரன், நா காமராசன், மு மேத்தா, பிறைசூடன், முத்துலிங்கம் ஆகியோர் எழுதியதாய் இருக்கிறதே தவிர, எந்தப் பாடலை யார் எழுதியது என்கிற விவரம் இல்லை. இந்தப் பாடலில் வரும் பெண்குரல் மின்மினி. காட்சி இல்லாத கானம்தான். தைரியமாக பாடலை ரசிக்கலாம்! "எங்கிருந்த போதிலும் நீ வந்துவிடு தேவி.." என்று எஸ் பி பி பாடும்போது எங்கிருந்தாவது அந்தக் காதலி எதிரில் வந்துவிட மாட்டாளா என்று நமக்கே தோன்றும்.
பால் நெலவு சூரியன்போல் சுட்டதென்ன நியாயம்
பச்சக்கிளி தோளக்கொத்தி வந்ததிந்த காயம்
ஓடிவந்த வைகை நதி காஞ்சதென்ன மாயம்
கூட வழி இல்லையென்றே ஆனது பெண் பாவம்
ஒரு மாலைச் சந்திரன் மலரைத் தேடுது மலையடிவாரத்திலே
இள மானைக் கண்டிட கானம் பாடுது மன்மத ராகத்திலே
குளிர் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி
அது பேசும் பாஷையிலே ஒரு காதல் விரகமடி
ஒரு தேகம் வெந்தது மோகத் தீயினிலே
வெண்ணிலவில் தேடுகிறேன் கன்னிமுகம் காணோம்
புன்னகையும் நானிழந்தேன் என் மனதில் சோகம்
சித்திரத்தைப் பார்க்க வந்தேன் கற்குவியல் கண்டேன்
தென்மலையைப் போலிருந்தேன் தென்னிலங்கையானேன்
செல்லக் குயில் கூவ மெல்ல வரும் நேரம்
சொல்லில் வரும் சோகம் கங்கை நதியாகும்
எங்கிருந்த போதிலும் நீ வந்துவிடு தேவி
நித்திரையில் பூவெடுத்தேன் நெஞ்சில் ஒரு காயம்
காயம் கொண்ட போதினிலும் பூவில் எந்தன் மோகம்
தெற்குக் கடல் ஆழத்திலே முத்தெடுக்கப் போனேன்
மூச்சடங்கிப் போனதடி முத்தை இன்னும் காணேன்
உந்தன் முகம் தேடி உள்ளம் அலை பாயும்
தென்றலின்றிப் போனால் தேகம் அனலாகும்
எங்கிருந்த போதிலும் நீ வந்துவிடு தேவி
vanthutten
பதிலளிநீக்குவாழ்க..
பதிலளிநீக்குwhere is Durai, Thi/Geetha?
பதிலளிநீக்குஇனிய வெள்ளி வணக்கம் . ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா....பானுக்கா
பதிலளிநீக்குகீதா
அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா அக்கா. வரமாட்டேன் லேட் ஆகும்னு சொல்லி ஏமாத்திட்டு முதலில் வந்துட்டீங்க!!!!
பதிலளிநீக்குஹை கீதாக்கா....நீங்க பார்Oஊஊஊஊ..கடமை...ஆத்தியாச்சா.....நான் வந்துட்டேன்....குஜராத் ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வரேன்....
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். எங்கள் தளம் எனக்கே திறக்க ஆட்டம் காட்டுகிறது!
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குஇந்தப் பாடலை இப்போ தான்
பதிலளிநீக்குகேட்கிறேன்...
// இந்தப் பாடலை இப்போ தான்
பதிலளிநீக்குகேட்கிறேன்..//
அடடே... அடிக்கடி கேட்டிருக்கிறேன் என்கிற பதிலை எதிர்பார்த்தேன்.
ஆஆஆஆ...கீதாக்கா வர மாட்டேன்னு சொல்லுட்டு. முதல்ல.....நோ..நோ..இது கள்ள ஆட்டம்..!!!!!!!!!!!.அதான் துரை அண்ணா லேட்டாகிட்டார் போல..பஞ்சாயத்து..கூட்டுங்கோ...ஹாஹாஹா
பதிலளிநீக்குகீதா
/// குஜராத் ஒரு ட்ரிப் அடிச்சிட்டு...///
பதிலளிநீக்கு.... கீதா...
அப்படியே நம்ம ஊருக்கும் போய்ட்டு வாங்கோ!...
// கீதாக்கா வர மாட்டேன்னு சொல்லுட்டு. முதல்ல//
பதிலளிநீக்குகீதா... "வா வா என்கிறதும்.... வரமாட்டேன் போ என்கிறதும்......" ஹா... ஹா... ஹா...
இன்னிக்குதான்.... முதல்ல கேட்கிறேன் ஸ்ரீராம்....நல்லாருக்கு...
பதிலளிநீக்குகீதா
இந்த பாடல் கேட்ட நினைவே இல்லை.
பதிலளிநீக்குமுதன் முதலில் கேட்கிறேன்.
பாட்டு செம...பெண் பாடுவது மோகனமாய்....அப்படியே...இன்டெர்லூட் கல்யாணியை அழைத்து..ஆண்குரல் கல்யாணியி ல்....குழைந்து....அழைக்கிறது...காதலியை....
பதிலளிநீக்குராஜா கலந்து கட்டி அடித்திருக்கார்....சூப்பர்
கீதா
பாடல் கேட்டது போல நினைவில்லை. இந்த சினிமா விஷயத்துல நான் ரொம்பவே வீக்!
பதிலளிநீக்குபுதிய பாதை படத்திற்குப் பிறகு பார்த்திபன் அதே மாதிரி படங்களில் நடித்துக் கொடுமைப் படுத்தினார். பல படங்களில் ரெட்டை அர்த்த வசனங்கள்.... கவிதைகள் கொஞ்சம் நன்றாக எழுதுவார் .
நன்றி நண்பரே
பதிலளிநீக்குஇதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்
இப்பாடல் நான் கேட்டதாக நினைவில் இல்லையே... நன்றாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குதுரை அண்ணா நீங்கள் சொல்லும் முன்பே உங்கள் ஊருக்குள் நுழைய முயன்று கொண்டே இருக்கிறேன்...குஜராத்தில் ஒரு காலும் உங்கள் ஊரில் ஒரு காலும்....எபியில் ஒரு கையுமாக ஆனால்...உங்கள் ஊருக்குள் நுழைய முடியலையே!!! இடையில் எங்கும் நுழைய முடியாமல் இணையம் போய்விட்டது.....இப்ப வந்தும்.... இப்ப வரைக்கும்...உங்கள் ஊருக்குள் நுழைய முடியலை....உள் நாட்டுக்குள்ளயே இப்படி....அப்புறம் தேம்ஸ் க்கெல்லாம் விசா வேண்டுமே...ஹா ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குகீதா.
// கீதாக்கா வர மாட்டேன்னு சொல்லுட்டு. முதல்ல//
பதிலளிநீக்குகீதா... "வா வா என்கிறதும்.... வரமாட்டேன் போ என்கிறதும்......" ஹா... ஹா... ஹா...//
ஹா ஹா ஹா ஹா ஹா சிரிச்சுட்டேன் ஸ்ரீஆம்...
அது சரி உங்கள் தளம் உங்களுக்கே ஆட்டம் காட்டுதா!!! எனக்கு இன்று மீண்டும் தஞ்சாவூர் ஆட்டம் காட்டுது!!!! எங்கள் வீட்டுல படம் போட முடியாம இருக்கு அதான் பதிவு போட முடியல...பதிவு படம் நிறைந்ததாச்சே!!!!
கீதா
இதெல்லாம் வேறு இருக்கிறதா!...
பதிலளிநீக்குதேவகோட்டையார் வந்து பூ எடுத்துக் கொண்டு போயிருக்கிறாரே...
தேம்ஸ்க்கு விசா வேணுமா!?....
இல்லே..ன்னா கதவு அடைச்சிடுவாங்களா...மா!...
அதிரா பேரைச் சொன்னா..
அதிராத கதவும் உதிராதா!...
பதிவையும், இதில் உள்ள பாடல் வரிகளையும் படித்தேன். நன்றி.
பதிலளிநீக்குஹாஹாஹா, முதல்லே வர முடியாதுனு நினைச்சுட்டுச் சொன்னேன். அப்புறமா வந்து பார்த்தா வெளியீடே ஆகலை! ஆகவே மீ த ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! இந்தப் படம் அங்கே, இங்கேனு சில, பல காட்சிகள் பார்த்திருக்கேன். பாட்டுக் கேட்டதில்லை. படம் பிடிக்காது! ஹிஹிஹி! :) காரணம் நான் சொன்னா எல்லோரும் அடிக்க வருவாங்க! மீ த எஸ்கேப்பு!
பதிலளிநீக்குஇந்தப் படம் அங்கே, இங்கேனு சில, பல காட்சிகள் பார்த்திருக்கேன்//
பதிலளிநீக்குஆஹா!! கீதாக்கா படம் பாத்திருக்காங்க!!!!! டோய்!!! பிடிக்காததுக்குக் காரணம் சொல்லாம எஸ்கேப்பு!!!! அதிரா அங்க வந்து தேம்ஸ்ல ஒளிஞ்சுருக்காங்களானு பாருங்கோ.....இல்ல காவேரிலயா??!!! காரணம் சொல்லாம விடமாட்டோம்...பிடிங்கோ பிடிங்கோ!! அதிரா...
கீதா
இதெல்லாம் வேறு இருக்கிறதா!...
பதிலளிநீக்குதேவகோட்டையார் வந்து பூ எடுத்துக் கொண்டு போயிருக்கிறாரே...//
ஆமாம் துரை அண்ணா நானும் வந்து பூ கொய்து வந்துட்டேனே!!! அப்படியும் இப்படியுமா விட்டுருச்சு வந்துவிட்டேன்..
தேம்ஸ்க்கு விசா வேணுமா!?....
இல்லே..ன்னா கதவு அடைச்சிடுவாங்களா...மா!...//
ஹா ஹா ஹா ஹா....அதை கேக்கறீங்க...அவங்க வீடு பனியினால மூடியே இருக்குது....நான் போகும்போது திறக்க கஷ்டமா இருக்கு....இனிமே நாமே ஒரு தாக்கோல் செஞ்சுக்க வேண்டியதுதான்...
அதிரா பேரைச் சொன்னா..
அதிராத கதவும் உதிராதா!...//
ஹா ஹா ஹா ஹா ஹா... ஆஹா!!!!! ரைமிங்க்!!!! வரும் போதே யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேனு அதிர அதிர சலங்கை ஒலியோடத்தான் வருவாங்க...ஹையோ ஏஞ்சல் எப்ப வருவாங்க இதைப் பார்க்க..!!!! ஹா ஹாஹா ஹா ஹாஹா
கீதா
பூசாரை ஆனையாக்கிய இந்தக் கீதாவுக்கு இன்னிக்க என்ன பூசையோ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தம் கேக்குது தூரத்துல.....மீ யும் எஸ்கேப்...கீதாக்காவோட போய் ஒளிஞ்சுக்கறேன்...
பதிலளிநீக்குகீதா
இனிமை குரலில் அருமை பாடல்
பதிலளிநீக்கு//இன்னிக்குதான்.... முதல்ல கேட்கிறேன் ஸ்ரீராம்....நல்லாருக்கு...//
பதிலளிநீக்குநன்றி கீதா...
//பெண் பாடுவது மோகனமாய்....அப்படியே...இன்டெர்லூட் கல்யாணியை அழைத்து//
மோகனமாய் கல்யாணி! இளையராஜாவுக்கென்ன...
//உங்கள் தளம் உங்களுக்கே ஆட்டம் காட்டுதா!!! //
காலையில் இருந்ததற்கு இப்போது தேவலாம்!
// இந்த பாடல் கேட்ட நினைவே இல்லை. முதன் முதலில் கேட்கிறேன்.//
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு அக்கா.
//கவிதைகள் கொஞ்சம் நன்றாக எழுதுவார் .//
பதிலளிநீக்குநன்றி வெங்கட். அவர் புதுசு புதுசாக முயற்சிகள் செய்வார். ஆம், இரட்டை அர்த்த வசனம் எல்லாம் பேசி இருக்கார். காமெடி நன்றாய் வரும் அவருக்கு!
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் கில்லர்ஜி.
பதிலளிநீக்கு//அதிரா பேரைச் சொன்னா.. அதிராத கதவும் உதிராதா!...''
பதிலளிநீக்குஆஹா... துரை செல்வராஜூ ஸார்..
நன்றி தமிழ் இளங்கோ ஸார்.
பதிலளிநீக்குசிலபல காட்சிகள் பார்த்திருக்கீங்களா? நான் அது கூடப் பார்த்ததில்லை கீதாக்கா... பாடல் ரசிப்பதோடு சரி..
பதிலளிநீக்குநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்குநோஓஓஓஓஓஓஓஓஓஓஒ இது அநியாயம் அக்கிரமம்:).. பேச்சுப் பேச்சா இருக்கோணும்:).. கொடுத்த வாக்கை மீறிட்டா கீசாக்காஆஆஆஆஅ இது அலாப்பி ஆட்டம்:) நான் ஒத்துக்க மாட்டேன்ன்ன்.. லேட்டா தான் வருவேன் என ஜொள்ளிப்போட்டு 1ஸ்ட்டா ஜம்ப் பண்ணிட்டா:))... துரை அண்ணனும் நெம்ம்ம்ம்பி இருந்தாரே கர்ர்ர்ர்:)) இனிமேலும் ஆரையும் நம்பிடாதீங்க துரை அண்ணன்[எக்செப்ட் அதிரா:)) ஹா ஹா ஹா]..
பதிலளிநீக்கு///Geetha Sambasivam said...
where is Durai///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
எங்கள் புளொக்கின் 3 வது ஆசிரியரைக் கூப்பிட்டு போஸ்ட்டைத் திரும்பப் போடச் சொல்லுங்கோ:)) மீக்கு நீதி வேணும்ம்ம்ம்ம்ம்:))..
///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு//அதிரா பேரைச் சொன்னா.. அதிராத கதவும் உதிராதா!...''
ஆஹா... துரை செல்வராஜூ ஸார்..///
ஹையோ மீ ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழயே ஒளிச்சிடப்போறேன்:) இன்று ராசி எப்பூடி?:) ல ஜொள்ளிட்டினம் பிள்ள அடக்கி வாசி என:)) ச்ச்சோ மீ நல்ல பிள்ளையா கொமெண்ட்ஸ் போடப்போறேன்.. ஆரும் டோண்ட் டிசுரேப்பூ மீ:))
மெட்டுக்காக சந்தம்வரவேண்டுமென்றும் எழுதிய பொருள் சரியாகச் சேராத பாடல் ரசிக்கவில்லை பாடலுக்கு காட்சிஅமைக்க டைரக்டர்சிரமப் பட்டிருப்பார் என்று தோன்றுகிறது
பதிலளிநீக்குஎனக்கு பார்த்தீபன் அங்கிளை ரொம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும்.. பேஸ்புக்கில்கூட அவரின் ஃபலோவராக இருந்தேனே:).. அவரின் நகைச்சுவைக்காகவே... ஏன் அவருக்கு சோகத்தை வெளிப்படுத்த தெரியாதெனச் சொல்றீங்க ஸ்ரீராம்.. எனக்கென்னமோ அவரின் முகமே ஒரு சோகம் போலதான் தெரியும்.
பதிலளிநீக்குநான் அவரின் படங்கள் தேடித் தேடிப் பார்ப்பேன்.. ஆனா கோவைத்தம்பியை மிஸ் பண்ணிட்டேன்.
இப்போதெல்லாம் பாட்டுக்களை வச்சே படம் பார்க்கிறேன்.. நேற்றுத்தான் அபூர்வராகங்கள் படம் பார்த்து முடிச்சேஎன்.. என்னா ஒரு படம்.. எப்பூடி மிஸ் பண்ணினேன் இவ்ளோ காலமும் என யோசிக்கிறேன்.
ஒரு மாலைச் சந்திரன்... கேட்டிருக்கிறேன் ரேடியோவில் பலதடவைகள்.. அழகிய பாடல்... அழகிய இசையுடன் கூடி உற்சாகம் தரும் பாட்டு.
பதிலளிநீக்கு///புயல் வீசும் மாசியிலே ஒரு ஆசை மேகமடி///
வசனத்தில் தப்பிருக்கிறது:) பரிசைக் குறைக்கபோறேன்ன்:)).. பாட்டைக் கேளுங்கோ.. அது புயல் வீசும் அல்ல:) குளிர் வீசும் மாசியிலே...:))
///பூசாரை ஆனையாக்கிய இந்தக் கீதாவுக்கு இன்னிக்க என்ன பூசையோ...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தம் கேக்குது தூரத்துல.....மீ யும் எஸ்கேப்...கீதாக்காவோட போய் ஒளிஞ்சுக்கறேன்...
பதிலளிநீக்குகீதா//
ஹா ஹா ஹா என்னாதூஊஊ கீசாக்கா ஒளிச்சிருக்கிறாவோ?:) ஹா ஹா ஹா நல்லவேளை டப்பிட்டா:)) இல்லை எண்டால்ல்ல்ல்ல்ல்ல்ல்:)).. இல்லயே நா எதுவும் ஜொள்ள வரவில்லை:).. பிக்கோஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்:).
பாடலை ரசிக்கலை ஶ்ரீராம் (auto correction ரசிக்கலாம் னு போட்டது)
பதிலளிநீக்குதுரை செல்வராஜு சார்... "அதிரா பேரைச்..." - எனக்கு இதைப் படித்ததும், "முருகா என்றதும் உருகாதா மனம் மோகனப் புன்னகை மணவாளா" பாடல்தான் நினைவுக்கு வந்தது.
பாடலை ரசிக்கலை ஶ்ரீராம் (auto correction ரசிக்கலாம் னு போட்டது)
பதிலளிநீக்குதுரை செல்வராஜு சார்... "அதிரா பேரைச்..." - எனக்கு இதைப் படித்ததும், "முருகா என்றதும் உருகாதா மனம் மோகனப் புன்னகை மணவாளா" பாடல்தான் நினைவுக்கு வந்தது.
///துரை செல்வராஜு சார்... "அதிரா பேரைச்..." - எனக்கு இதைப் படித்ததும், "முருகா என்றதும் உருகாதா மனம் மோகனப் புன்னகை மணவாளா" பாடல்தான் நினைவுக்கு வந்தது.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா அதிரா பற்றி ஆரும் ஒரு கவிதை ஜொள்ள விடமாட்டாரே:)) எப்பூடித்தான் தேடிக் கண்டு பிடிக்கிறாரோ:))
ஓ... இதற்குள் இப்படியும் ஒன்றா!...
பதிலளிநீக்குஇப்போது தான் எனக்கும் தோன்றுகின்றது...
/// எப்பூடித்தான் தேடிக் கண்டு பிடிக்கிறாரோ///
- அதிரா...
உண்மையில் போன ஜன்மத்தில் செண்பகப் பாண்டியனின் தமிழ்த் திருச்சபையில் வெள்ளைத் தாடியுடன் இருந்திருப்பாரோ!?....
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபாடல் அருமையாக இருந்தது. இன்றுதான் முதல் முறையாக கேட்கிறேன். படமும் கேள்விபட்டதில்லை. எஸ்.பி.பியின் குரலில் இளையராஜாவின் இசையால் பாடல் மிகவும் நன்றாக இருந்தது. இனிமையான பாடலை ரசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
அருமை
பதிலளிநீக்கு//ஹையோ ஏஞ்சல் எப்ப வருவாங்க இதைப் பார்க்க..!!!! ஹா ஹாஹா ஹா ஹாஹா
பதிலளிநீக்குகீதா//
இப்பெல்லாம் டைம் கிடைக்கறதில்ல கீதா அதனால் மியாவ் நான் இல்லாத நேரம் வந்து பானை பாத்திரத்தை உருட்டி போட்டு போறார் :)
/// எங்கிருந்த போதிலும் நீ வந்துவிடு தேவி.." என்று எஸ் பி பி பாடும்போது எங்கிருந்தாவது அந்தக் காதலி எதிரில் வந்துவிட மாட்டாளா என்று நமக்கே தோன்றும்.//
பதிலளிநீக்குபார்த்திபன் எதிரில் ன்னு தெளிவா சொல்லணும் :) ஸ்ரீராம்
பார்த்திபனுக்கு சோக சீன்ஸ் நல்லா இருக்காது காமெடி தான் நல்லா இருக்கும் .
பதிலளிநீக்குஅப்போல்லாம் ஒரு ஹீரோ ஒரு படம் ஹிட்டானா உடனே பரபரன்னு ஒரே கான்செப்டில் பல படங்களை ரிலீஸ் பண்ணுவாங்க
பாட்டு கேட்டேன் spb க்காக .நல்லா இருக்கு
பாடல் சுகமாக இருக்கிறது. வரிகள் மிக அருமை. இந்தப் படமும் தெரியாது. பாடலும் கேட்டதில்லை. 26 வருடங்களுக்கு முன்னால் எங்கே போனேன்.
பதிலளிநீக்குஇருந்தும் அருமை .நன்றி ஸ்ரீராம்.
வாங்க ஜி எம் பி ஸார்...
பதிலளிநீக்கு//மெட்டுக்காக சந்தம்வரவேண்டுமென்றும் எழுதிய பொருள் சரியாகச் சேராத பாடல் ரசிக்கவில்லை பாடலுக்கு காட்சிஅமைக்க டைரக்டர்சிரமப் //
எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. வரிகள் பரவாயில்லை ரகம். கீதா ரெங்கன் சொல்லியிருப்பது போல மோகனத்திலும், கல்யாணியிலும் இழைகிறது!
வாங்க அதிரா...
பதிலளிநீக்குநேற்றுதான் அபூர்வ ராகங்கள் பார்த்தீர்களா? பரவாயில்லை... நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் ஏற்கெனவே... புயலைக் குளிராக்கி விட்டேன் மதியமே!
வாங்க நெல்லை.. பாடல் ரசிக்கலையா? ஏன்? ஆச்சர்யமில்லை. நீங்கள் பாடல்கள் (அதிகம்) கேட்காதவர் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குநன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீகாந்த்.
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சல்...
பதிலளிநீக்கு"பார்த்திபன் எதிரில்" போதுமா?!! பாட்டின் ஜீவனே எஸ் பி பிதான்... இளையராஜா தயவில்!
வாங்க வல்லிம்மா.. பாடலை ரசித்ததற்கு நன்றி.
பதிலளிநீக்குஇன்று எதேச்சையாக சீக்கிரம் எழுந்தேன். இன்னும் இடுகை வரலை.
பதிலளிநீக்குஅருமையான பாடல் கண்ணோட்டம்
பதிலளிநீக்கு