வெள்ளி, 30 மார்ச், 2018

வெள்ளி வீடியோ 180330 : குப்பைத்தொட்டி மட்டும் ஒரு பிள்ளை ஈன்றதாம்...



   பட்டாக்கத்தி பைரவன்.  1979 இல் வெளிவந்த படம்.  

   இளையராஜா இசையில் மூன்று பாடல்கள் தேறும்.  



   'எங்கெங்கோ செல்லும்' பாடல் முதலிடத்தையும், 'யாரோ நீயும் நானும் யாரோ' பாடல் இரண்டாமிடத்தையும், 'தேவதை ஒரு தேவதை' பாடல் மூன்றாமிடத்தையும் பிடிக்கிறது - என் ரசனையில். 



   பாடல் வரிகளில் பெரிய கவர்ச்சி இல்லை.  இளையராஜாதான் பெரிய கவர்ச்சி.



   காட்சியில் சிவாஜியும் ஜெயசுதாவும் என்றாலும் காட்சி இல்லாமல் கானம் மட்டும் வரும்படி முதல் பாடல்.




   மகாபாரதக் கர்ணன் கதைதான்.  இதில் சிவாஜி பெயரும் கர்ணன்தான்.  போலீஸ் அதிகாரி ஜெய்கணேஷ் பெயர் அர்ஜுன்.  தளபதியும் இதே கதைதானே?



   அடுத்து இரண்டாவது பாடல்.   மற்ற பாடல்களில்  சிவாஜி நடந்துகொண்டே பாடுவார்...  மாடிப்படி ஏறி இறங்கி பாடுவார்...  இந்தப் பாடல் இருக்கும் இடத்திலேயே பெரும்பாலும் நின்று கொண்டு பாடுவார்...  அதாவது வாயசைப்பார்.

   ஸ்ரீதேவி சிவாஜிக்கு தங்கையாகவும் ஜெயசுதா ஜோடியாகவும் நடித்திருக்கிறார்கள்.  குந்தியாக சௌகார் ஜானகி!




   கண்ணதாசன் பாடல்.  ஒரு மெலிதான சோகம் இழையோடும் பாடல்.  தான் அனாதை என்கிற எண்ணத்தில் நாயகன் பாடும் பாடல். 



   பாடல்களுக்கு இடையில் வரும் இளையராஜாவின் இசையும், எஸ்  பி பி குரலும், ஜானகி குரலும் விசேஷம் - வழக்கம் போல.  

   இந்தப் பாடல் காட்சியுடன்...

52 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பட விவரங்கள் எல்லாம் உங்க மூலமாத்தான் தெரியுது...

    பாடல்கள் கேட்கிறேன்...ஜெயசுதா கொஞ்சம் நதியா மாதிரி இருக்காங்களோ சைட் போஸில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. காபி கடமை ஆத்தியாச்சு...மத்த கடமை ஆத்திட்டு நிதானமா பாடல் கேட்டுட்டு வரேன் அப்பால...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீத்ச அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  5. காலை காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

    பதிலளிநீக்கு
  6. பட்டாக்கத்தி பைரவன் பார்த்துள்ளேன். ஜெயிலிலிருந்து சிவாஜி கணேசன் விடுதலையாகி பைக்கில் சூயிங் கம்மை மென்று கொண்டே வரும் அழகு அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜம்புலிங்கம் ஸார்... நீங்க சொல்றது எங்கள் தங்கராஜா படம்.

      நீக்கு
  7. //காட்சியில் சிவாஜியும் ஜெயசுதாவும் என்றாலும் காட்சி இல்லாமல் கானம் மட்டும் வரும்படி முதல் பாடல்.//

    அருமையான இனிமையான பாடல்.

    கேட்டு மகிழ்ந்தேன்.

    பாடல் பகிர்வு, செய்திகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பாடல்கள் இணைத்திருக்கிறேன் கோமதி அக்கா.... கேட்டீங்களா?

      நீக்கு
  8. சிவாஜியும் மஞ்சுளாவும் ஜோடியாக நடித்த வேறு ஏதோ ஒரு படத்தில் சிவாஜி பட்டாகத்தி பைரவன் என்னும் பாத்திரத்தில் வருவார். அந்த பெயரில் ஒரு படமே வந்ததா? சிவாஜிக்கு ஜோடி ஜெயசுதாவா?? இந்த கொடுமையை எல்லாம் சகிக்க முடியாமல் சிவாஜி படங்களை பார்ப்பதை நிறுத்தி விட்ட காலத்தில் வந்த படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு பானுக்கா... நீங்கள் சொல்வது எங்கள் தங்கராஜா படம். ஙஜம்புலிங்கம் ஸாரும் அந்தப்படக் காட்சியைப் பற்றிதான் குறிப்பிட்டிருக்கிறார்.

      நீக்கு
    2. மொபைல் டைப்பிங்! எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும்.

      நீக்கு
  9. காலை வணக்கம்.

    பாடல்கள் இனிமேல் தான் கேட்க வேண்டும். காட்சி இல்லாமல் பாடல் மட்டும் கேட்பது தான் சுகம் - எனக்கு!

    பதிலளிநீக்கு
  10. சிவாஜி ரசிகர்களே நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படியான திரைப்படங்கள் பல உண்டு...

    அவற்றுள் இதுவும் ஒன்று...

    இன்றளவும் மனம் வருந்தும் - அந்தப் படங்களைப் பார்க்க நேர்ந்தததற்காக...

    பதிலளிநீக்கு
  11. எங்கெங்கோ செல்லும் பாடல் னிறைய தடவை கேட்டதுண்டு ஆனால் இது இப்படம் என்று தெரியவில்லை....மற்றொன்று படமும் பார்த்ததில்லை காட்சியும் பார்த்ததில்லையா....இந்தப் பாடலைக் கேட்ட போதெல்லாம் கமலுக்காகப் பாடப்பட்ட பாடல் என்றே தோன்றியது...இப்போதும் கேட்ட போது....ஆனால் உங்கள் மூலம் தான் இது ஜிவாஜி படப்பாடல் என்றே தெரிந்தது ஹிஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  12. நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு பானுக்கா... நீங்கள் சொல்வது எங்கள் தங்கராஜா படம். ஙஜம்புலிங்கம் ஸாரும் அந்தப்படக் காட்சியைப் பற்றிதான் குறிப்பிட்டிருக்கிறார்.//

    பானுக்காவின் ஞாபகசக்தியை நான் வியந்ததுண்டு....அதே போல உங்க ஞாபகசக்தியையும் நினைத்து வியப்பதுண்டு ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  13. எங்கெங்கோ செல்லும் பாடல் செம....ரொம்பப் பிடித்த பாடல்....உங்க மூலமாவும் எங்க வீட்டு க்ரூப் சேன்ர்ந்துச்சுனாலும் தான் இப்படியான பழையபாடல் பேசப்பட்டு கேட்டு ரசிப்பதுண்டு.........ரொம்ப நன்றி அதுக்கு....காட்சிகள் இல்லாம கேக்கறதுதன நல்லாருக்கு...இந்தப்பாட்டு..சுத்ததன்யாசி ராகம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. எங்கெங்கோ செல்லும் பாடல் மிக அருமை. சிவாஜி-பட்டாக்கத்தி பைரவன் - பாவம்... அவரை வைத்து சம்பாதித்த புரொடியூசர்களை கடைசி காலப் படங்கள்மூலம் போண்டியாக்கிவிட்டார் சிவாஜி.

    பதிலளிநீக்கு
  15. அந்தப் புரொடியூசர்களை சிவாஜி போண்டியாக்க வில்லை....

    அவர்களே தங்களை அவ்வாறு ஆக்கிக் கொண்டார்கள்...

    பதிலளிநீக்கு
  16. மூன்றும் முத்தான பாடல்களே...

    பதிலளிநீக்கு
  17. பாடல் என்கிற பெயரில் பல அசுத்தங்கள் காதில் விழுந்துகொண்டிருக்கும் இந்நாட்களில் ‘இந்தப்பாட்டு..சுத்ததன்யாசி ராகம்’ என்கிறாரே கீதா, சரி கேட்போம் எனக் கேட்டதில் எங்கெங்கோ கொண்டுசென்றது இந்தப்பாடல். சுத்ததன்யாசி நம்மை சன்யாசி ஆகிவிடாமல் அவ்வப்போது தடுத்துவந்திருக்கிறது...ம்..

    வெள்ளிக்கிழமை விரியும் காலைப்பொழுதில், இப்படியெல்லாம் சிலரை இசையில் கொஞ்சநேரமாவது மயங்கவைக்கும் புண்ணியம் உங்களைத் தேடி வந்துகொண்டிருக்கிறது ஸ்ரீராம். வாசற்கதவைத் திறந்துவைத்திருங்கள்.

    பதிலளிநீக்கு
  18. யாரோ நீயும் நானும் யாரோ....நல்லாருக்கு ரசித்தேன் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. சிலருக்கு சில துறைகளில் நினைவாற்றல் அதிகம் ஆனால் பெரிதும் மறக்கப்பட்ட பாடல் களையே நீங்கள் எடுத்தாள்வதாகத் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  20. இந்தப்பாட்டு..சுத்ததன்யாசி ராகம்’ என்கிறாரே கீதா, சரி கேட்போம் எனக் கேட்டதில் எங்கெங்கோ கொண்டுசென்றது இந்தப்பாடல். சுத்ததன்யாசி நம்மை சன்யாசி ஆகிவிடாமல் அவ்வப்போது தடுத்துவந்திருக்கிறது...ம்..//

    ஹா ஹ் ஆ ஹா ஹா ஹா.....ஏகாந்தன் அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. யாரோ நீயும் நானும் யாரோ பாடலும் நன்றாக இருக்கிறது.
    தலைப்பு பாடல் வரி வ்ரும் பாட்டை கேட்டேன் இனிமை.
    பாலசுப்பிரமணியன் குரல் மிக இனிமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. எலோருக்கும் இனிய காலை வணக்கம் ஃபுரொம் தேம்ஸ்கரை மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    பட்டாக்கத்தி பைரவன் படம் பார்த்ததில்லை, ஆனா இன்றைய பாடல்கள் அருமையான செலக்சன்ஸ்.

    எங்கெங்கோ செல்லும் பாடல்... அடிக்கடி ரேடியோவில் தவழ்ந்து வரும்... கேட்டுக் கேட்டுப் பழகிப்போன பாட்டு.

    ஆனா யாரோ நியும் நானும் பாட்டு கேட்டதாகத்தான் இருக்கு பெரிசா இல்லை.
    இன்று கேட்ட நேரம் தொடங்கி. அந்த முதல்வரிகள் ரிப்பீட்டில் ஒலிக்குது காதில். இதுவும் இக நல்லாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  23. //இந்தப்பாட்டு..சுத்ததன்யாசி ராகம்’//

    ஹையோ கீதா அது... கோமேதகவல்லி ராகம்:).. தப்புத் தப்பா ஜொள்றீங்க:) இங்கு கேட்க ஆட்களில்லை ஆருக்கும் ராகம் தெரியாது எனும் நினைப்பில் கர்ர்:)) மீக்கு ராகமெல்லாம் ரத்துப்படி ஹையோ டங்கு ஸ்லிப்ட் ஆகிக் கெடுக்குதே:) அது அத்துப்படி:)..

    பதிலளிநீக்கு
  24. ///ஏகாந்தன் Aekaanthan ! said...

    கொஞ்சநேரமாவது மயங்கவைக்கும் புண்ணியம் உங்களைத் தேடி வந்துகொண்டிருக்கிறது ஸ்ரீராம். வாசற்கதவைத் திறந்துவைத்திருங்கள்.///

    ஹா ஹா ஹா லேடீஸ் நுளம்பெல்லாம் உள்ளேபோய் ஸ்ரீராமைக் குத்தி மயங்க வைக்கட்டும் என்றுதானே இந்த ஜதீஈஈஈஈஈஈஈ:))...

    ஸ்ரீராம் மயங்கிடாதீங்க:). நாளைக்கு போஸ்ட்டை பின்பு போட ஆருமில்லை:)).. வாசல்கதவை பூட்டியே வச்ச்சிருங்கோ:))

    பதிலளிநீக்கு
  25. 'எங்கெங்கோ செல்லும்' பாடல் என் நினைவுகளை எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டது. நான் இது ரஜினி அல்லது சிவகுமார் பாடல் என்று நினைத்தேன். மிகவும் பிடித்த பாடல். எங்கள் வீட்டில் சினிமா பாடல்கள் கேட்க முடியாது(டீக்கடை மாதிரி என்ன சினிமா பாட்டு?). அப்பா வீட்டில் இருக்கும் பொழுது இந்த பாடல் ஒலிபரப்ப பட்டால் எங்கள் வீட்டு ஜன்னல் வழியே பக்கத்து வீட்டில் கொஞ்சம் பெரிதாக வைக்கச் சொல்வோம். பக்கத்து வீட்டு அப்பா வீட்டில் இருந்தால் அவர்கள் எங்கள் வீட்டில்
    வேண்டிக் கொள்வார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  26. இனிமை பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  27. வாங்க வெங்கட்... 99 சதவிகிதம் காட்சி இல்லாத கானம்தான் பெஸ்ட்!

    பதிலளிநீக்கு
  28. துரை செல்வராஜூ ஸார்.. இந்தப் படம் பரவாயில்லை என்று சொல்லும் அளவு அப்புறம் படங்கள் வந்தன! நான் அவரை எல்லாம் பார்க்கவில்லை. அவர் பழைய படங்களே நிறைய பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
  29. அடடே கீதா.. சுத்த தன்யாசியா? மாஞ்சோலைக் கிளிதானோ, புஞ்சை உண்டு நஞ்சை உண்டு போன்ற பாடல்களும் அதே ராகம்தான்!

    பதிலளிநீக்கு
  30. சிவாஜியின் தயாரிப்பாளர்கள் போண்டியானார்களா, ஆண்டியானார்களா தெரியாது நெல்லை. நமக்குத் தேவை பாட்டு... பாட்டு... பாட்டு!

    :)))))

    பதிலளிநீக்கு
  31. //வெள்ளிக்கிழமை விரியும் காலைப்பொழுதில், இப்படியெல்லாம் சிலரை இசையில் கொஞ்சநேரமாவது மயங்கவைக்கும் புண்ணியம் உங்களைத் தேடி வந்துகொண்டிருக்கிறது ஸ்ரீராம். வாசற்கதவைத் திறந்துவைத்திருங்கள்.//

    நன்றி ஏகாந்தன் ஸார்.

    பதிலளிநீக்கு
  32. கீதா.. யாரோ நீயும் நானும் யாரோ வில் ஒரு மெல்லிய சோகம்!

    பதிலளிநீக்கு
  33. //ஆனால் பெரிதும் மறக்கப்பட்ட பாடல் களையே நீங்கள் எடுத்தாள்வதாகத் தோன்றுகிறது//

    இல்லை ஜி எம் பி சார்.

    பதிலளிநீக்கு
  34. வாங்க கோமதி அக்கா... மீள்வருகையில் மீண்டும் அடுத்த பாடலைக் கேட்டு கருத்து சொன்னமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு



  35. வாங்க அதிரா... பாடல்களை ரசித்ததற்கு நன்றி. அதென்ன கோமேதகவல்லி? எங்கிருந்து பிடித்தீர்கள் இந்தப் பெயரை!

    // ஸ்ரீராம் மயங்கிடாதீங்க:). //

    மயஙகினாலும் "மயங்கும் வயது.." என்று பாடி விடுவேன்!
    https://www.youtube.com/watch?v=4zWhe0De1bM

    பதிலளிநீக்கு
  36. மீள் வருகைக்கு நன்றி பானு அக்கா... அந்தக் காலத்தில் அப்பாக்கள் எல்லாம் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்! எங்கள் வீட்டு பிலிப்ஸ் வால்வ் ரேடியோ நினைவுக்கு வருகிறது!

    பதிலளிநீக்கு
  37. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  38. எங்கெங்கோ செல்லும் பாடல் முதல்.
    காட்சி இல்லாமல் கேட்டதே அருமை.
    பட்டாக்கத்தி பைரவன் படக் கதை இப்போதுதான் தெரியும் ஸ்ரீராம். இனிமையான நாட்களை நினைவுக்குக் கொண்டுவந்தது.
    @ பானு, நான் சமைக்கும் போது என் ட்ரான்ஸீஸ்டர் என்னுடன் மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருக்கும் . யாராவது வந்தால் சர்ஃப் டப்பா பின்னால் ஒளிந்து கொள்ளும்.ஹாஹாஹா.

    பதிலளிநீக்கு
  39. // யாராவது வந்தால் சர்ஃப் டப்பா பின்னால் ஒளிந்து கொள்ளும்.ஹாஹாஹா. //

    ஹா... ஹா... ஹா... சத்தம் கேட்டு கண்டுபிடிக்க மாட்டாங்களாம்மா? பட்டாக்கத்தி பைரவன், கர்ணன், தளபதி.. எல்லாம் ஒரே கதைதான் வல்லிம்மா....

    பதிலளிநீக்கு
  40. ஹா ஹா ஹா ஸ்ரீராம் பாடுவதைக் கேட்டேன்:).... இருப்பினும் புறா வந்து தலையில் இருப்பதுகூடத் தெரியாமலோ மயக்கம் வரும்:)..

    வைக்கோல் பட்டடை... வாழைமரம் ... நிலவு... பாடல் நன்று.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் சகோதரரே

    இந்த படம் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் படம் பார்த்ததில்லை. மூன்று பாடல்களும் இனிமையாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  42. மயங்கும் வயது பாடலை ரசித்தீர்களா அதிரா? எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று!

    பதிலளிநீக்கு
  43. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  44. படம், பாடல், கருத்து மழை எல்லாம் புதுசு!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!