திங்கள், 12 மார்ச், 2018

"திங்க"க்கிழமை 180312 : எக்ஃப்ரீ ஸ்விஸ் ரோல் - ​கீதா ரெங்கன் ரெஸிப்பி

எக்ஃப்ரீ ஸ்விஸ் ரோல்  
Egg free Swiss roll
வணக்கம்! நண்பர்களே! இன்றைய கிச்சன் ஷோ கொஞ்சம் ஸ்பெஷலானது. ஃபெப்ருவரி 22 ஆம் தேதி தனது பிறந்த நாளை எல்லா வீடுகளுக்கும் ஓடி ஓடி, இந்தியா, யுகே, கானடா, யுரோப், கல்ஃப் என்று உலகம் முழுவம் பறந்து பறந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடிய, கத்தரிக்காய் ரெசிப்பி புகழ் பூஸார் அன்று ரொம்ப பிஸியாக இருந்ததால் இன்று நம் எபி கிச்சனில் ஸ்விஸ் ரோலுடன் கொண்டாடிடுவோம். பார்ற்றி முடிந்ததும் உங்கள் எல்லோருக்கும் ஒரு ஸர்ப்ரைஸ்! எல்லோரும் வாருங்கள் எபி கிச்சனுக்கு! மியாவ்! மியாவ்! மியாவ்! (வெல்கம்!) 
Image result for cat celebrating gif
  Image result for cat celebrating gif
வெல்கம்மியாவ்! வெல்கம்மியாவ்! பர்த்டே பேபியும் எல்லோரையும் வாங்க வாங்கனு சொல்கிறார்!!
அது யாரு? அது என்ன ஸர்ப்ரைஸ்னு சொன்னாத்தான் நாங்க வருவோம்னு குரல் கொடுக்கறது?!! ஆ! துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா எல்லார் குரலும்!! அதெல்லாம் சொல்ல முடியாது. தைரியமா வாங்க! ஆனா, வெங்கட்ஜியும் நானும் எங்க கர்ண கவசத்தோடு ரெடி! புரிஞ்சுருக்குமே!! யெஸ் அதேதான்! ஓகே நிறைய வேலை இருக்கு. பர்த்டே பேபிக்கு இன்று மட்டும் பணி கிடையாது! அவங்க அப்படி ஷோக்கா நிக்கட்டும்! மத்தவங்க எல்லாம் வாங்கப்பா நாம இப்ப ஸ்விஸ் ரோல் செய்யப் போவோம்….
Image result for cat celebrating birthday gif
முதல்ல என் அளவு கோல்களை எல்லாம் உங்களுக்கு அறிமுகப்படுத்திவிடுகிறேன்.
                                                                                                          1, 1/2 டேபிள் ஸ்பூன், 1, 1/2, 1/3, 1/4 டீஸ்பூன் மற்றும் 1/4ல் பாதி(மஞ்சள் ஸ்பூன்)
1, 1/2, 1/3, 1/4 என்று 2 செட் கப்புகள்                                                       
ஸ்விஸ் ரோல் செய்யத் தேவையானவை. முதலில் கேக் செய்ய.... கேக் ஃப்ளார் – ½ கப் கூம்பலாக. கேக் ஃப்ளார் என்பது மைதா ஒரு கப் விளிம்பு வரை (150 க்ராம்) எடுத்துக் கொண்டு அதில் 2 டேபிள் ஸ்பூன் மைதாவை அகற்றிவிட்டு அதை ஈடு செய்ய 2 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளார் சேர்த்து நன்றாகச் சலித்துக் கலந்து வைத்துக் கொண்டால் கேக் ஃப்ளார் ரெடி) 
கேக் ஃப்ளார்                                          பேக்கிங்க் பௌடர்      
மில்க் பௌடர் – 30 கிராம் (அமுல்யா மில்க்பௌடர் 10 ரூபாய் பாக்கெட் 1 நாம எடுத்துக்கறோம்)

பேக்கிங்க் பௌடர் : ½ டீ ஸ்பூன் 
சோடா உப்பு : ¼ டீ ஸ்பூனிலும் பாதி (படத்தில் காட்டியுள்ள மஞ்சள் ஸ்பூன் அளவு)
அன் ப்ளீச்ட் சர்க்கரை (ப்ரௌன் சுகர்) – 2 டேபிள் ஸ்பூன் - ¼ கப் விளிம்பினுள் வரை
வெண்ணை – 1 டீ ஸ்பூன் + 1 டீ ஸ்பூன் எண்ணைய்
பால் (இளம் சூட்டில்) : ¼ கப் + 2 டேபிள் ஸ்பூன்
வெனிலா எஸன்ஸ் : ¼ டீ ஸ்பூன்
கேக் மாவு தயாரிக்கறதுக்கு முன்னாடி, பேக்கிங்க் ஓவனை 180 டிகிரியில் வைத்து ஒரு 10 நிமிடம் ப்ரீஹீட் செஞ்சுப்போம். முதலில் உலர் பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்துக்கோங்க. அப்புறம் அதில், வெண்ணை, எண்ணை, பால், வெனிலா எஸன்ஸ் விட்டு நன்றாக அடித்துக் கலக்கவும். தோசை மாவு பக்குவத்தில் இருக்கணும். இதில் இரு டேபிள் ஸ்பூன் சாக்கலேட் பௌடர் சேர்த்தும் செய்யலாம். நாம் இங்கு வெனிலாதான் செய்யறோம்.
அதன் பின் பேக்கிங்க் ட்ரேயில் வெண்ணை கொஞ்சம் க்ரீஸ் செய்து அதில் கொஞ்சம் மைதா தூவி ட்ரேயை நன்றாகத் தட்டி வைக்கவும். நாம இங்க 2 ட்ரேக்கள்  8.5"x4.5" மற்றும் 6.5"x6.5" ட்ரேக்களைப் பயன்படுத்தப் போறோம். வேறேந்த ட்ரேயிலும் செய்யலாம். ஆனால் கேக் ஊற்றுவது தின் லேயராக ஊற்றும்படியான ட்ரேக்களைப் பயன்படுத்த வேண்டும்.படத்தில் உள்ளது போல். 180 டிகிரியில் 15 நிமிடங்கள் வைச்சு எடுங்க.
                                  
கேக் 15 நிமிடம் வைச்சுட்டோம்னு அசந்துவிடாதீங்க. அப்பப்ப செக் பண்ணனும். ஏன்னா இந்தக் கேக் ரொம்ப மெலிதாக, ஆழம் இல்லாம செய்யறதுனால மேல லேசா ப்ரௌன் ஆகி வரும் போது ஒவனை ஆஃப் செய்துவிடணும். அது 15 நிமிடம் ஆகலைனாலும். ப்ரௌன் ஆவதற்குச்  சில சமயம் 15 நிமிடத்திற்கும் கொஞ்சம் மேலே எடுக்கும். ஸோ கண் கொத்திப் பாம்பா இருக்கணும். சரியா பேக் ஆகலைனா  கேக் ரோல் செய்யும் போது உடையும். எனக்கு உடைந்ததும் உண்டு. ஆனாலும் ரோல் செய்துவிடலாம்.
கேக் பேக் ஆவதற்குள் ரோல் செய்ய உள்ளே வைப்பதைச் செஞ்சுடுவோம். கேக்கின் மேல் வைத்து ரோல் செய்ய எந்த ஜாமும் வைக்கலாம். அல்லது வெனிலா க்ரீம், சாக்கலேட் க்ரீம், இப்படி எது வேண்டுமானாலும் உங்கள் கற்பனைக்கேற்ப செய்து வைக்கலாம். நாம இப்ப ஆப்பிள் காரமெல் செய்து வைத்து செய்வோம் ஓகேயா?
ஆப்பிள் கேரமல் செய்யத் தேவையானவை
பெரிய ஆப்பிள் – 1   (நாம செய்யற கேக் அளவுக்கு.)
ப்ரௌன் சுகர் – 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணை – 1 டீஸ்பூன்.  நல்லா கொஞ்சம் விளிம்பின் மேல இருக்கட்டும்
வெனிலா எஸன்ஸ் – ¼ டீஸ்பூன்
ஆப்பிளை நன்றாகக் கழுவிக் கொண்டு துடைத்துவிட்டு, மெழுகு இருந்தால் தோல் நீக்குங்க. இல்லைனா அப்படியே துருவிக்கலாம் அல்லது நறுக்கிக் கொண்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நல்ல அரைச்சு வைச்சுக்கங்க. நாம இங்க அரைச்சு செய்யறோம். ஒரு சின்ன வாணலி (இரும்பு வாணலி கூடாது) 
 
  
அல்லது அடி கனமான பாத்திரம். அதைச் சூடாக்கிக் கொண்டு ப்ரௌன் சுகரைப் போடுங்க. சிம்மில் வைச்சுக்கோங்க. தண்ணீர் எதுவும் சேர்க்கக் கூடாது. (ட்ரைஃப்ரூஸ், நட்ஸ், பழக்கலவை இப்படி எது ஃபில் செஞ்சாலும் இப்படிச் செய்யலாம்.) நன்றாக இளகி வரும் போது வெண்ணையைப் போட்டு, ஆப்பிள் துவியது அல்லது அரைத்ததைப் போட்டு நல்லா கிளறுங்க. கெட்டியாகி ஜாம் போல வரும். அப்ப வெனிலா எஸன்ஸ் விட்டு கலந்து இறக்கி ஆற விடுங்க.
              
அதுக்குள்ள கேக் ரெடியாகி இருக்கும். கேக் கொஞ்ச நேரம் ஓவனில் இருக்கட்டும். அப்புறம் வெளியில எடுத்து நல்லா ஆறியதும் மெதுவா கேக்கை ஒரு ப்ளாஸ்டிக் ஸ்பாட்டுலா கொண்டு பிரித்து எடுங்க. எப்பவுமே கேக் கிண்ணங்கள், தட்டுகளுக்கு வேற எதுவும் போட்டு கேக்கை எடுக்கக் கூடாது. தட்டில் கீறல் விழுந்துரும். இப்ப கேக்கின் ஓரங்கள் கொஞ்சம் ஹார்டாக இருப்பது போல் இருந்தா அதை மட்டும் கட் செய்துக்கோங்க. கேக்கை ரோல் செய்யறாப்புல உடைச்சுராம ஒரே ஒரு வளைவு சுருட்டிப் பாருங்க. அப்புறம் ஒரு 10, 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு எடுத்து மீண்டும் ரூம் வெப்ப நிலைக்கு வரும் வரை காத்திருங்கஇப்படிக் காத்திருக்கும் நேரத்தில் நாம க்ளீன் செஞ்சுநம்ம கிச்சனை டெக்கரேட் செஞ்சுடலாம். ஓகேயா கைஸ்!
                                            
சரி இப்ப கேக்கை ஒரு ஃபுட் கவர் மேலயோ, அலுமினியம் ஃபாயில் மேலயோ வைச்சு, மேல ஆப்பிள் காரமெலை நல்லா தடவி நிறையவே ஃபில் செய்யலாம். அப்புறம் கேக்கை மெதுவாக பாய் சுருட்டுவது போல பேப்பரோட ரோல் செய்யனும். மடங்கும் போது பேப்பரக் கொஞ்சம் விலக்கிக்கோங்க. அப்புறம் மெதுவா பேப்பரோடயே அடுத்த சருள். முழுசும் சுருட்டிட்டு லைட்டாக அமுக்கி அமுக்கி தடவிக் கொடுத்து பேப்பரோட சேர்த்து மிட்டாய் சுருட்டுவது போல சுருத்தி லைட்டா ப்ரெஸ் செய்து கொடுத்தீங்கனா ஃபில்லிங்கோட கேக் ஒட்டிக்கும். அப்புறம் ஃபிரிட்ஜில் ஒரு 20 நிமிடம் அல்லது 30 நிமிடம் வைச்சுடுவோம். ஃபில்லிங்க் நிறைய வைச்சா கேக் சுருட்ட எளிதாக இருக்கும்.
                       
ஓரங்கள் ஹார்டாக இருந்தால் கட் செய்து விடவும்
                      
பாருங்க பர்த்டே பேபி தூங்கியே போயிருச்சு!! 
Image result for cat sleeping in celebrating birthday gif
சரி கைஸ் அது ரெடியாகிடும் அதுக்குள்ள பேபிய எழுப்பி, டெக்கரேட் செஞ்சுடுவொம். 
Image result for cat celebrating gif
கேக் ரெடி…இப்ப பூஸார் ஸ்லைஸ் போட வேண்டியதுதான்….பாடுங்க எல்லாரும்..!!! பல்லாண்டு இதே சந்தோஷத்தோடு எல்லாரையும் சந்தோஷப்படுத்தி வாழணும்!! பூஸார்!!!!!  எல்லாரும் எடுத்துக்கோங்க!
பார்ற்றி முடிஞ்சாச்சு! இப்ப அந்த ஸ்ர்ப்ரைஸ் என்னனு சொல்லறேன்… தனது பிறந்த நாள் பரிசாக நம் எல்லோரையும் தனது செலவிலேயே, அதுவும் தானே விமானம், போட் எல்லாம் ஓட்டிக் கொண்டு உலகம் முழுக்கச் சுற்றிக் காட்டுகிறேன் என்று சொல்லியிருக்கார் பூஸார். தைரியம் இருப்பவர்கள் எங்களுடன் ஏறிக் கொள்ளலாம். எதற்கும் இன்சுரன்ஸ் எடுத்துக் கொண்டு வந்துவிடுங்கள். வைச்சுருக்கீங்க தானே!!! ஹான் சொல்ல மறந்துட்டேன். கௌ அண்ணாவும் வரார்!!!
ஸ்ரீராம் அண்ட் ஏஞ்சல் உங்கள் இருவருக்கும் உயரம் என்றால் தலை சுத்தும். எனவே நீங்கள் இருவரும் எங்களின் நடுவில் அமர்ந்து கொண்டுவிடுங்கள். நாங்கள் ஜன்னல் சீட்டெல்லாம் பிடித்துக் கொண்டுவிடுகிறோம் உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் கியாரண்டி!!
இத்தனையும் ஏற்பாடு செஞ்சு தந்த எபி ஆசிரியர்களுக்கும், டைரக்டர் ஸ்ரீராமுக்கும் மிக்க நன்றி! எங்களை தனது செலவில் அழைத்துச் செல்லும் பூஸாருக்கும் நன்றி!! 
Image result for cat celebrating gif
பூஸாரும் எல்லோருக்கும் நன்றி சொல்கிறார்!!
Image result for cat celebrating gif
Image result for cat celebrating gif
Image result for cat celebrating birthday gif
சரி நாங்கள் எல்லோரும் பூஸாருடன் உலகம் சுற்றக் கிளம்பியாச்சு!! இனி அடுத்த ஷோ வரும் வரை எபி கிச்சன் ஷோ நேயர்கள் காத்திருக்கவும்! டாட்டா!! பை பை!!!

47 கருத்துகள்:

 1. காலை வணக்கம்...ஸ்ரீராம்....துரை அண்ணா....கீதாக்கா...பானுக்கா...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 3. ​இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
 4. ஆச்சரியம்.. திங்க...இப்பதிவு வந்தது....வாங்க..எல்லாரும் பூசாருடன் பற ப்போம்....

  நான் கொஞ்சம் லேட்டாகும்....என் சீட்டை ரிசர்வ் பண்ணிக்கோங்க ஸ்ரீராம்...துரை அண்ணா...

  கீதா

  பதிலளிநீக்கு
 5. ஸ்விஸ் ரோல் எனக்கு மிகவும் பிடிக்கும்..

  இங்கே வாரத்தில் மூன்று நாள் மெனு..
  ஸ்ட்ராபெர்ரி, மிக்ஸ்ட் ஃபுரூட், க்ரீம் - என...

  வேலை அதிகம்.... முறையாக செய்து விட்டால் சுவையும் அதிகம்....

  சிறப்பான செய்முறை...

  வாழ்க வளமுடன்...

  பதிலளிநீக்கு
 6. மிகச் சிறப்பான செய்முறையோடு ஸ்விஸ் ரோல் பிரமாதம். படங்களும்
  வெகு அழகு. பூசாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

  கீதாவின் அற்புத சமையல் முறைக்கு வாழ்த்துகள்.
  இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு
 7. நல்லா இருக்கு. கேக் செய்து சாப்பிட்ட நாட்களை நினைவூட்டுகிறது. இங்கே இப்போ அவன்(oven) தானம் கொடுத்தாச்சு. மைக்ரோவேவில் கேக் செய்யும் ஆப்ஷன் இல்லை. நினைச்சுப் பார்த்துக்கறேன். :))))

  பதிலளிநீக்கு
 8. இப்போல்லாம் காப்பி ஆத்தறதுக்கே நாழி ஆயிடறது! வர முடியலை! :(

  பதிலளிநீக்கு
 9. அருமையான செய்முறை கீதா ரங்கன். வெகு அழகாக வந்திருக்கு. என் பெண்ணுக்கு இவற்றையெல்லாம் செய்வதில் மிகுந்த ஆர்வம்.

  ஆனா பாருங்க, எங்க வீட்டில் மற்ற மூவருக்கும் இதெல்லாம் மிகவும் பிடிக்கும். எனக்கு பாரம்பர்ய உணவு தவிர வேறு எவற்றிலும் இஷ்டமில்லை.

  நல்லா செய்முறை எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. அருமையான செய்முறை கீதா ரங்கன். வெகு அழகாக வந்திருக்கு. என் பெண்ணுக்கு இவற்றையெல்லாம் செய்வதில் மிகுந்த ஆர்வம்.

  ஆனா பாருங்க, எங்க வீட்டில் மற்ற மூவருக்கும் இதெல்லாம் மிகவும் பிடிக்கும். எனக்கு பாரம்பர்ய உணவு தவிர வேறு எவற்றிலும் இஷ்டமில்லை.

  நல்லா செய்முறை எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. படங்கள் ஆசையை தூண்டும் அழகில் உள்ளது.
  கடைசி படம் ஸூப்பர்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  அருமையாக ஸ்விஸ் ரோல் செய்முறையை வெகு அழகான படங்களுடன் செய்து காண்பித்த கீதா ரெங்கன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..மிகவும் அருமையாக இருக்கிறது. படங்களும் செய்முறை விளக்கங்களும் மனம் நிறைவாகவும் பிரமாதமாகவும் உள்ளது.பாராட்டுக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
 13. படங்களும் செய்முறையும் சொன்ன விதமும் அருமை.
  பூஸாருடன் உலகம் சுத்த கிளம்பி விட்டீர்களா?
  சிறப்பாய் பயணம் அமைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. ஸ்விஸ் ரோல் ...சூப்பர் கீதாக்கா

  படங்களுடன் செய்முறை மிக எளிமையாக இருக்கு...நோட் பண்ணிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 15. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் வழிவிடுங்கோ வழிவிடுங்கோ.. மீ லாண்டிங்ங்ங்ங்ங்ங்:)

  http://www.ripleys.com/wp-content/uploads/2014/08/Cat-Landing-Grass-SMALLtrim.gif

  சே..சே.... லாண்ட் ஆகவே முடியாமல் ஒரே புகை மண்டலமாக இருக்கே:) எங்கள்புளொக் கிச்சினில் ஏதும் கருகிட்டுதோ என நினைச்சேன்:)) பிறகுதானே தெரிஞ்சுது புகை கிச்சினுக்குள் இல்லை:))... ஹையொ மழை விட்டும் தூவானம் விடாததுபோல இன்னும் தொடருதா பேர்த்டே:)) ஹா ஹா ஹா..

  கீதா ஏதோ சேர்பிறைஸ் எனச் சொன்னாவே அதென்ன அது என கேட்க நினைச்சு நினைச்சு கேட்க மறந்திருந்தேன்:) இப்போதான் புரிஞ்சுது:).. அழகிய சுவிஸ் ரோல்..

  அதென்ன ஸ்விஸ்:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சுவிஸ் எனச் சொல்லோணும்:) எங்கே ஜொள்ளுங்கோ.. சு..சு... வி....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))

  பதிலளிநீக்கு
 16. // ஃபெப்ருவரி 22 ஆம் தேதி தனது பிறந்த நாளை////

  ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்:)).. சுவீட் 16 பி.நாளை எனத் தெளிவாச் சொல்லோணும் கீதா:) இல்லை எனில் யோசிப்பினமெல்லோ எத்தனையாவதோ என:))..

  //கத்தரிக்காய் ரெசிப்பி புகழ் பூஸார் ///
  ஹா ஹா ஹா அது கத்தரிக்காய்த் தொக்கூஊஊஊஊஊஉ:))

  சரி சரி இம்முறை ஆரெல்லாம் கிச்சினில் நிக்கினம் எனப் பார்ப்போம்:)).. ஓ துரை அண்ணன் தான் கேக் க்கு மா எடுக்கிறாரோ ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 17. சில வருடங்களுக்கு முன், நானும் ஒருதடவை சுவிஸ் ரோல் செய்தேன் கீதா, அது இப்படி கேக் செய்து செய்யாமல், மாஅறி பிஸ்கட்டை உடைத்து அதைக் குழைத்து பேப்பர் போல ஆக்கி ரோல் செய்ததுபோல ஒரு நினைவாக இருக்கு... அது பெரிதாக சரி வரவில்லை.

  உங்கள் பேப்பர் கேக் செய்முறை பார்க்க நன்றாக இருக்கு.. தட்டையாக வருமளவுக்கு ட்ரேயிலே ஊத்தி பேக் பண்ண வேண்டும் என்ன..

  பதிலளிநீக்கு
 18. //ப்ரௌன் ஆவதற்குச் சில சமயம் 15 நிமிடத்திற்கும் கொஞ்சம் மேலே எடுக்கும். ஸோ கண் கொத்திப் பாம்பா இருக்கணும்.//

  ஹா ஹா ஹா நானும் எப்பவும் அவணையும் ரைமையும் நம்புவதிலை கீதா, கேக்கை யொ இல்லை எப்பொருளையோ அவணுள் வைத்தால்.. அலேர்ட்டாவே இருப்பேன்ன்.. கண்ணால பார்த்தே சரியாகிவிட்டது எனப் புரிஞ்சு ஓஃப் பண்ணுவேன்..

  //சரியா பேக் ஆகலைனா கேக் ரோல் செய்யும் போது உடையும்.//
  இதைத்தான் யோசித்தேன், கொஞ்சம் பாண், பன்... பதமாக மா இருப்பின் தான் உருட்டும்போது உடையாமல் வரும்..

  பதிலளிநீக்கு
 19. கரமல் அப்பிள் நன்றாகவே வந்திருக்கு... அழகாக உடையாமல் சுருட்டிட்டீங்க..

  //பாருங்க பர்த்டே பேபி தூங்கியே போயிருச்சு!! //
  ஹா ஹா ஹா அது மீ ரோல் சாபிடப்போறேன் என.. அஞ்சு எனக்கு நித்திரைக் குளிசை தந்திட்டா யூஸ்ல விட்டு:)) நான் அப்பவும் வாணாம் மீ கீதாவின் சுவிஸ் ரோல் சாப்பிடோணும் எனச் சொன்னேன்.. இல்ல ரயேட்டா இருக்கிறீங்க லெமன் ஊஸ் குடிங்கோ எனத் தந்தாவா... நெம்ம்ம்ம்ம்ம்ம்பிக் குடிச்சிட்டேன்ன்:)) ஒரே மயக்கமாப் போச்ச்ச்ச்ச்ச்:) கர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
 20. பதமா செய்தெடுக்க அழகான வழிமுறைகள் சுவிஸ் ரோல். கீதா மிகவும் நன்றாக இருக்கு. படங்களும், வெகு அருமை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 21. மிக அழகழகா கட் பண்ணி அடுக்கிட்டீங்க கீதா, நல்லா இருக்கு பார்க்கவே. அதுசரி கேக் மட்டும்தானா?:) வெள்ளையா என்வலப் ஏதும் கைக்குள் வைக்கலியோ?:) ஒரு வைர நெக்லெஸ் வாணாம்:)) ஒட்டியாணம்..:) வைரச் சங்கிலி அப்பூடி ஏதும்:)) சரி சரி அதெல்லாஅம் பபுளிக்குல பேசக்குடாதுபோல:))

  ///தைரியம் இருப்பவர்கள் எங்களுடன் ஏறிக் கொள்ளலாம். எதற்கும் இன்சுரன்ஸ் எடுத்துக் கொண்டு வந்துவிடுங்கள். வைச்சுருக்கீங்க தானே!!! ஹான் சொல்ல மறந்துட்டேன். கௌ அண்ணாவும் வரார்!!!////

  எல்ல்லோரும் வாங்கோ வாங்கோ:) ஆனா தயவு செய்து:)) எங்கள் புளொக்கின் 2 வது ஆசிரியரை மட்டும் ஏறவே விட மாட்டேன்ன்ன்ன்ன்:)).. ஹையோ பிறகு அவர் பிளேன் ஜன்னல் , சீட் எல்லாம் படமெடுத்து இன்னும் 2020 வரை ஞாயிறு போஸ்ட் ஓடவிட்டிடுவார்:)) ஹா ஹா ஹா இது நமக்குள் இருக்கட்டும் கீதா:) படிச்சதும் கிழிச்சு பிளேன் ஜன்னலுக்குள்ளால எறிஞ்சிடுங்கோ.. அம்பேரிக்கால போய் விழட்டும்:))

  பதிலளிநீக்கு
 22. கடசிப் பூஸார் ஹப்பி பேர்த்டேயுடன் பறகும் படம் சூப்பர் கீதா...

  எப்படி இதுக்கு நன்றி சொல்வதெனத் தெரியவில்லை கீதா.. தன்யனாகிட்டேன்ன்[இதை நான் ஆரிட்டயும் இருந்து கொப்பி பண்ணல்ல:) என் ஜொந்தக் கிட்னியில் இருந்து கண்டுபிடிச்சேன்ன்ன் என்பதனை அந்தப் பிளேன் மீது அடிச்சுச் சத்தியம் பண்றேன்ன்:))].. தன்யை:) ஆகிட்டேன் எனத்தானே வரோணும்:)..

  மிக்க மிக்க நன்றிகள் கீதா.. நைட் ஏதோ ஒரு உள்ளுணர்வு தூண்டியது முழிச்சிருந்து ஜம்ப் பண்ணலாமோ ஆருடைய ரெசிப்பியோ தெரியலியே என.. ஆனா முடியல்ல..

  இந்த மாதக் கடசியுடோடு எங்களுக்கு ரைம் மாத்துவார்கள். இப்போ எங்களுக்கும் உங்களுக்கும் 5.1/2 மணி நேர இடைவெளி.. பின்பு 4 1/2 மணி நேரமாக குறையும்.. அப்போ போஸ்ட் போடும்போது எங்கள் நேரம் நைட் 1.30 ஆக இருக்கும்.. அதனால இனிமேல் துரை அண்ணன் கீசாக்கா ரென்ச்ஷனாக தேவையில்லை.. ஹா ஹா ஹா நம்மால் ஜம்ப் பண்ண முடியாமல் இருக்கும்...

  மீண்டும் மிக்க நன்றி கீதா.. மிக்க சந்தோசம்... கீதாக்கு ஒரு பச்சைக்கல்லு மோதிரம் அணிவித்து மகிழ்கிறேன்:))

  https://sc01.alicdn.com/kf/HTB1ocMZHpXXXXcLXVXXq6xXFXXX0/221967451/HTB1ocMZHpXXXXcLXVXXq6xXFXXX0.jpg

  பதிலளிநீக்கு
 23. இது ரெஸிப்பி பதிவா, பூஸார் பதிவா?

  ஒன்னுமே புரியலே ஒலகத்திலே...
  என்னமோ நடக்குது
  பூனையாய்த் திரியுது
  ஒன்னுமே புரியலே ஒலகத்திலே...

  பதிலளிநீக்கு
 24. ஈசியான எக்லெஸ் சுவிஸ்ரோல். எனக்கும் பிடித்தமானது. அழகழகான பூசார் படங்கள்.கடைசி படம் சூப்பர். அளவுக்கான கப்,ஸ்பூன் காட்டியிருப்பது அருமை.

  பதிலளிநீக்கு
 25. ///ஒன்னுமே புரியலே ஒலகத்திலே////
  ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன்.. அது ஒண்ணுமே “பிரியல்லே” ஒலகத்திலே:) என வரோணுமாக்கும்:)...

  பதிலளிநீக்கு
 26. ஸ்விஸ் ரோல்ஸ் குறிப்பும் படங்களும் மிக அருமை!

  பதிலளிநீக்கு
 27. வாவ் !!ஸ்விஸ் ரோல் நல்லா இருக்கே .ஆனா நான் பார்க்கத்தான் முடியும் சுவைக்க மைதாக்கு பதில் வேற மாவு சேர்த்தாதான் சாப்பிட முடியும் .ஆரோரூட் மாவு /க்ளூட்டன் இல்லா மாவு வாங்கி வச்சிருக்கேன் செஞ்சி பார்க்கிறேன் கீதா .
  வயசானவங்களுக்கு வருஷம் முழுக்க பிறந்த நாள்தான் அந்த வகையில் தனது 66 வைத்து பிறந்த நாளை வருஷம் பூராவும் கொண்டாடும் மியாவுக்கு வாழ்த்துக்கள் :)
  இன்னிக்கும் நாளைக்கும் கொஞ்சம் பிசி அதனால் கும்மியில் கலந்துகொள்ள முடியலை .bye for now :)  பதிலளிநீக்கு
 28. படங்கள் எல்லாம் அழகா எடுத்திருக்கிங்க செய்முறை சுலபமா விளக்கப்படுத்தியிருக்கிங்க கீதா

  பதிலளிநீக்கு
 29. அனைவருக்கும் மிக்க நன்றி... 3 நாட்களாக நெட் இல்லவே இல்லை...ஸோ இன்று தனித்தனியாக பதில் அளிக்க முடியல....நாளை மாமியார் வீட்டில் இருப்பேன்...ங்க நெட் உண்டு...ஸோ நாளை எல்லோருக்கும் பதில் தருகிறேன்...பூசார்..உங்களுடன் இன்று கொண்டாட முடியல.....நாளை....தயவாய்...எக்ஸ்க்யூஸ் கேட்டுக்கறேன்....

  கீதா

  பதிலளிநீக்கு
 30. சாப்பிட வைக்கும் ரெசிபி பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 31. துரை அண்ணா உங்களுக்கும் பிடிக்கும் என்றது அறிந்து மிக்க மகிழ்ச்சி அண்ணா...ஆமாம் கொஞ்சம் வேலை கூடுதல் போன்று தோன்றினாலும்...செய்யப் பழகிவிட்டால் எளிது. என்ன பாய் போல் சுருட்டச் சரியான பக்குவத்தில் பேக் செய்துவிட்டால் போதும். இடையில் உடைந்தாலும் கூட பரவாயில்லை ஒருவிதமாகச் சுருட்டிவிடலாம் தான்..

  மிக்க நன்றி துரை அண்ணா...நீங்கள் ஏறிவிட்டீர்கள் பூஸாரின் விமானத்தில், போட்டில் எங்களுடன்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 32. வல்லிம்மா மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு....சுற்றியதும் பூஸார் உங்களைப் பத்திரமாக சிக்காகோவில் இறக்கி விடுவார்...ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 33. கீதாக்கா....ஒரு வயதுக்கு மேல் வீட்டில் குழந்தைகளும் வெளியே வேறு இடங்களில் வசிப்பவர்கள் ஆகிவிட்டால் செய்வது குறைந்துவிடும் தான் இல்லையாக்கா...நானுமே குறைந்துவிட்டது.
  அது சரி ஏன் காபி கஞ்சி கடமை ஆத்த லேட்டாகுது? பட்டுக் குஞ்சுலுவோடு விளையாட்டா?!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 34. நெத மிக்க நன்றி!!!! வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் எனக்கும் உங்கள் பெண்ணிடம் கற்றுக் கொள்ள வேண்டும்...நீங்க ரெசிப்பி போடுங்க அவங்ககிட்ட வாங்கி...

  கீதா

  பதிலளிநீக்கு
 35. //அது சரி ஏன் காபி கஞ்சி கடமை ஆத்த லேட்டாகுது? பட்டுக் குஞ்சுலுவோடு விளையாட்டா?!!!//

  கீதா! அதெல்லாம் இல்லை. நம்ம ரங்க்ஸ் சில நாட்கள் ஐந்தரைக்கு மேலே தான் எழுந்துக்கறார். அதான் காஃபி ஆத்த நேரம் ஆகுது! :) கஞ்சிக் கடமை முடிஞ்சுடும். போட்டு வைச்சுடுவேன். பட்டுக் குஞ்சுலு வாரம் இரண்டு, மூன்று நாட்கள் தான் வரும்! :))) வெள்ளி, சனி, ஞாயிறு!

  பதிலளிநீக்கு
 36. கில்லர்ஜி ஹா ஹா ஹா கடைசி படம் சூப்பர் பின்ன....மிக்க நன்றி...

  மிக்க நன்றி கமலா ஹரிஹரன் தங்களின் கருத்திற்கு...முடிந்தால் செய்து பாருங்கள்..

  கோமதிக்கா மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...அக்கா நீங்க ஏறலியா அப்ப? எல்லாரையும் தான் பூசார் ஏற்றிக் கொள்ள அழைப்பு....ஹலோ பூஸார் வெயிட்...கோமதிக்கா இன்னும் ஏறலை அவங்களையும் ஏத்திக்குவோம்.....ஹா ஹாஹா

  மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு....

  அனு மிக்க நன்றி கருத்திற்கு செய்து பாருங்க...பிள்ளைங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்....என்ன பிடிக்குமோ அவங்களுக்கு அதை ஸ்டஃப் செய்யுங்க....அனு அனு..அனு...ஆஜர் சொல்லுங்க...பூஸார் அட்டெண்டன்ஸ் கேக்குறாங்க...

  வாங்க டிடி...ரொம்ப நாளாச்சு....உங்களை இங்குக் கண்டு...மிக்க மகிழ்ச்சி...நீங்களும் ஏறிக்கோங்க..எல்லாரும் ஏறினப்புறம்தான் வண்டி புறப்படும்...ஹா ஹா..

  கீதா

  பதிலளிநீக்கு
 37. அதிரா உங்கள் எல்லா கருத்துக்கும் முடிந்த அளவு சேர்த்து இங்கு பதில்....ஏன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க வீட்டுக்குப் போகனும்...கண்ணழகி வெயிட் பண்ணிட்டுருப்பா....நான் இல்லைனா சாப்பிட மாட்டா...காலையில கூட ஃபுட் வைச்சுட்டுத்தான் வந்தேன்...நான் புறப்படும் வரை சாப்பிடவே இல்லை...எங்க வீட்டுக்குப் போனா நோ நெட்..

  உங்களோடும் ஏஞ்சலோடும் நேத்து கும்மி அடிச்சு கொண்டாட முடியலை..நேத்துனு இல்லை கொஞ்சநாளாவே.....எல்லாரும் ஏறிட்டாங்களானு செக் பண்ணோனும் அதிரா..அப்புறம் யாராவது ஏறாம அப்புறம் பூசார் என்னை விட்டுப் போட்டு போயிட்டார்னு கம்ப்ளெயின்ட் வரக்கூடாது பாருங்க....

  உங்க கிஃப்ட்க்கு ரொம்ப ரொம்ப ரொம்ப தங்க்யூ.....ஹையோ அதிரா உங்கக் காதைக் கொடுங்க இங்க யாருக்கும் கேட்கக் கூடாது ரகசியம்....வெள்ளை என்வெலப் நிறைய கலெக்ஷ்ன்..வெளில சொல்லக் கூடாது.....உங்க செக் கிட்ட கொடுத்துடறேன் ஓகேயா....ஏற்கனவெ ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடில வைச்சுருக்கோமே....நீங்க எல்லாரையும் இறக்கிவிட்டப்புறம் அதே ஃப்ளைட்டுல எல்லா மூட்டையையும் எடுத்துட்டுப் போயிடலாம் ஓகேயா....ஹா ஹா ஹாஹா..

  கீதா

  பதிலளிநீக்கு
 38. அதிரா மேரி பிஸ்கட் வைச்சு ரோல் எஸ் நல்லா வரும் அதிரா....இன்னும் நிறைய இருக்கு...எனக்குத்தான் இங்க எழுதி திங்கக்கு அனுப்ப முடியாம இருக்கு....நீங்க முடிஞ்சா உங்க மேரி பிஸ்கட் ரெசிப்பி போடுங்க...

  ஆமாம் பேக் செய்யும் போது கவனம் ரொமப்த் தேவை....ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அதிரா...

  கீதா

  பதிலளிநீக்கு
 39. காமாட்சி அம்மா மிக்க நன்றி அம்மா...நீங்கள் எல்லாம் செய்யாததா...என்ன உங்கள் அனுபவங்கள் எல்லாம் மிகவும் பொக்கிஷங்கள்!!

  பிரியசகி மிக்க நன்றி...உங்கள் தளம் இனிதன் வரணும்...வரணும் என்று நினைத்துள்ளேன்....பின்ன அதிராவைக் கலாய்க்க ஒரு கூட்டம் வேணுமல்லோ?!!!!

  ஏகாந்தன் அண்ணா கருத்திற்கு மிக்க நன்றி.....இப்படி எல்லாம் கொஞ்சம் பூஸாரை கவனிச்சாத்தான் எனக்கு வர வேண்டிய பங்கு எல்லாம் வரும்..அவங்க செக் ஏஞ்சலுக்கெ இன்னும் பாக்கி இருக்கு.....ஹிஹிஹி....

  மிக்க நன்றி மனோ அக்க்கா கருத்திற்கு....உங்கள் ரெஸ்டாரண்டில செய்திருப்பீங்களே நீங்க!! உங்களுக்குத் தெரியாத ரெசிப்பியா....அப்படிக் கலக்குவீங்களே...உங்களை உங்கள் முகம் மட்டும் தெரியாது ஆனால் நாம் நிறைய பேசியிருக்கோம் அப்போ 2011ல் எல்லாம்....எனக்கு இன்னும் நினைவிருக்கு....இங்கு வந்த பிறகுதான் உங்கள் முகம் கண்டேன்....

  மிக்க நன்றி அசோகன் குப்புசாமி சகோ கருத்திற்கு....

  கீதா

  பதிலளிநீக்கு
 40. வாங்க ஏஞ்சல்!! ஓ நீங்களும் இன்று வரை பிஸியோ....நானும் வர முடியலை கும்மி அடிக்க....இன்று, நாளை நெட் எனக்கு இங்கு மாமியார் வீட்டில் மாலை வரை...அப்புறம் எப்போ சரியாகுமோ எங்க வீட்டுல தெரியலை...

  ஏஞ்சல் க்ளூட்டன் ஃப்ரீ முயற்சி செய்யணும்னு அன்றே முடிவு செய்துட்டேன்...உங்களை நினைத்துத்தான்.....இன்ஃபேக்ட் வரகு, சாமை ரெண்டும் போட்டு பைனாப்பிள் அப்சைட் டௌன் கேக் செய்தேன் நன்றாக இருந்ததாகச் சொன்னாங்க...யாருனு எல்லாம் ரகசியம்...ஹாஹாஹாஹாஹா....

  கீதா

  பதிலளிநீக்கு
 41. பட்டுக் குஞ்சுலு வாரம் இரண்டு, மூன்று நாட்கள் தான் வரும்! :))) வெள்ளி, சனி, ஞாயிறு!//

  ஹா ஹா ஹா பின்ன ராணி!! விஐபி இல்லையா!!!!!! க்யூட்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 42. எல்லாரையும் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்...விடுபட்டிருக்கானு தெரியலை...
  ஓகே நாளைதான் இனி...இன்றைய கோட்டா எனக்கு ஓவர்...நெட் இல்லா கானகத்திற்குப் போறேன்!! (எங்க ஏரியா பெயர் கானகம் தான்!!!!)

  பை பை ஸீயு ஆல் டுமாரோ இன் எபி...

  கீதா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!