புதன், 7 மார்ச், 2018

180307 புதன் புதிர்.




இரண்டு வாரங்களுக்கு முன்னால் நான் கேட்ட பாடல் புதிரில் பலர் பங்கு பெற்று, பாடல்களை சொல்லியிருக்கிறீர்கள். 










யாரும் 7, 9, 10 எண் கேள்விகளுக்கு பதில் எழுதவில்லை. 

எட்டாம் எண் கேள்விக்கு பதில் எழுதிய பால கணேஷ் அவர்களுக்கு சிறப்புப் பாராட்டுகள். ஏன் என்றால், ஏழு முதல் பத்தாம் எண் கேள்வி வரை, நான் சும்மா , கைக்கு வந்தபடி முதல் எழுத்து & கடைசி எழுத்து கொடுத்தேன். அதில் ரொம்ப பேருங்க மண்டை காய்ஞ்சு போவாங்க என்று நினைத்தேன்! அதற்குள் புகுந்து சிக்சர் அடித்ததால் பால கணேஷுக்குப் பாராட்டுகள்! 

மூன்றாம் கேள்விக்கு, நான் நினைத்திருந்த பதில் : 

"இன்னொருவர் வேதனை ..... இவர்களுக்கு வேடிக்கை! இதயமற்ற மனிதருக்கு, இதுவெல்லாம் வாடிக்கை!" என்ற பாடல். இது நாட்டை காக்கும் கை என்று எல்லோரும் சொல்வார்கள், ஆனால் ஓரிருவராவது நான் நினைத்த பாடலை சொல்கிறார்களா என்று பார்த்தேன். யாரும் சொல்லவில்லை!

அஞ்சாம் நம்பர் புதிருக்கு சரியான விடை, தைமாத மேகம் அது தரையில் ஆடுது என்பதுதான். எப்படி? நான் குறிப்பிட்டிருப்பது அந்தப் படத்தில் வருகின்ற  ஆண்கள் குரலில் (TMS, Dharapuram Sundararajan, A Veramani ) பாடிய பாடல். அந்தப் பாடலை சரியாகக் கேட்டுப் பாருங்கள். பாடலின் முதல் வரி, இப்படித்தான் ஆரம்பிக்கும்: 

"தை மாத மேகம் ......  .......  ததன்னா   ததன்னா  ததரின்ன னாவ் ..." 

##########  



மேலும், கேள்வியில் , பாடலின் என்று எழுதாமல் பாலின் என்று எழுதியது தவறுதான். மன்னிக்கவும். அதை அப்புறம் கூட திருத்த இயலாமல், இணைய உலகின் உள்ளே நுழைய இயலாமல் ஒரு வாரம் இருக்கவேண்டியதாகிவிட்டது. 

=================

Now, for this week, I am giving some clues for old Tamil films. You have to find the film. 

அதாகப்பட்டது, நான் சில பழைய தமிழ்ப் படங்களின் பெயர்களை, பூசி மெழுகி கேள்வியாக வடித்துள்ளேன். அவற்றை உரித்துப் பார்த்து, படங்களின் பெயர்களைக் கண்டுபிடியுங்கள். 

1) Government Young Girl.

2)   See N

3)  Milk & Fruit

4) Don't beat mother's word

5) Who is the bridegroom? 

----------------------------------------------------------------

44 கருத்துகள்:

  1. ஹை நான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

    இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா, கீதாக்கா (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தத்துடன் வருவார் காபி கஞ்சி கடமை ஆத்திட்டு!!!) பானுக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஏதேச்சையாக எ பி திறந்தேன் ஆஆஆஆஆஆஆ அதிர்ச்சியில் உறைந்தேன்!!! நல்ல காலம் மயங்கி விழலை!! ஹா ஹா பு பு வந்துடுச்சு!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஹையோ இன்னிக்கு காலைல வணக்கம் வைக்கறவங்க எல்லாரும் காண்டுல இருபாங்க...எபில சீக்கிரம் 6 மனிக்கு முன்னயே பு பு வந்ததுக்கு ....ஹா ஹா ஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இது அநியாயமா இல்லையோ! போங்கு ஆட்டம்! இதை நான் ஒத்துக்கவே மாட்டேன். வழக்கமா ஆறு மணிக்குத் தானே வெளியாகணும்! இன்னிக்கு புதன்கிழமை! கௌதமன் சார் குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருப்பார்னு நினைச்சால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  5. இது அநியாயமா இல்லையோ! போங்கு ஆட்டம்! இதை நான் ஒத்துக்கவே மாட்டேன். வழக்கமா ஆறு மணிக்குத் தானே வெளியாகணும்! இன்னிக்கு புதன்கிழமை! கௌதமன் சார் குறட்டை விட்டுத் தூங்கிட்டு இருப்பார்னு நினைச்சால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

    அக்கா இதை இதை இதைத்தான் எதிர்ப்பார்த்தேன்....ஹா ஹாஅ ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  6. 4 அம்மா சொல்லைத் தட்டாதே (இப்படி ஒரு படம் இருக்கா!!!!!!?????)

    கீதா

    பதிலளிநீக்கு
  7. 4. ஸாரி தவறா வந்துருச்சு தாய் சொல்லைத் தட்டாதே

    கீதா

    பதிலளிநீக்கு
  8. 3. பாலும் பழமும் 4. தாய் சொல்லைத் தட்டாதே! 5. யாருக்கு மாப்பிள்ளை யாரோ 1. இளவரசி 2. ம்ம்ம்ம்ம்? அப்புறமா வரேன்! 5. தப்புனு நினைக்கிறேன். அதையும் வேறே இருக்கானு யோசிச்சுட்டு வரேன்.

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கம் கீதா அக்கா.

    பதிலளிநீக்கு
  11. துரை ஸார் இன்று பதிவு லேட்டாதான் வரும்னு நம்.....பி மெதுவா வரலாம்னு இருக்காரோ!....

    பதிலளிநீக்கு
  12. 5 தப்பு என்னோட ஆன்ஸர்...கீதாக்கா சரியா சொல்லிட்டாங்கோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. துரை ஸார் இன்று பதிவு லேட்டாதான் வரும்னு நம்.....பி மெதுவா வரலாம்னு இருக்காரோ!....//

    ஸ்ரீராம் எஸ் எஸ்

    கீதா

    பதிலளிநீக்கு
  14. 5. ஹை கீதாக்கா தான் தப்புனு சொல்லிருக்காங்க அப்ப நான் தான் ரைட்டா..வாவ்!! ப்ரவால்ல கீதா உன் இத்துனூண்டு சிகே வைச்சு பின்னிப்புட்ட போ!!!!!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  15. 1. அரசிளங்குமரியாகக் கூட இருக்கலாம். ஏன்னா முதல்லே கவர்ன்மென்ட் என வந்திருக்கு. அப்போ அரசு வரணுமே! ம்ம்ம்ம்ம்ம்?

    பதிலளிநீக்கு
  16. 1.ராஜகுமாரி (நான் முதலில் சொன்னது தப்புனு நினைக்கிறேன்...)

    கீதா

    பதிலளிநீக்கு
  17. க்ர்ர்ர்ர்ர்ர் 5 நான் சொன்னது தான் ரைட்டோ ரைட்டு! இரண்டு தான் புரியலை! கண்ணே நீ? யார் நீ? னு வந்திருக்கு! பார் நீனு வந்திருக்கோ?

    பதிலளிநீக்கு
  18. 1. ராஜகுமாரி. 2. என்னைப் பார். 3. பாலும் பழமும், 4. தாய் சொல்லைத் தட்டாதே 5. இதுதான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு....யார் அந்த மாப்பிள்ளை (ஆங்கில அர்த்தத்தின் படி பார்த்தால்) இல்லைனா கீதாக்கா சொன்னது...சரி இனி அப்பால....மிச்சம் இருக்கற கடமை ஆத்தனும்...4 மணிக்கு எழுந்ததால் சமையல் ஒவர்.... கொஞ்சம் வர இயன்றது...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. அன்னைக்கே சொன்னேன்..
    இது பன்னாட்டு சதியாக இருக்கும்..
    அப்படி..ந்னு....


    இப்போ உறுதியாகி விட்டது...

    இருந்தாலும் சங்கத்தின் முன்னோடிகள் அனைவருக்கும் வணக்கம்....

    பதிலளிநீக்கு
  20. ஹா... ஹா... ஹா... வாங்க துரை செல்வராஜூ ஸார்.. இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  21. போட வேண்டிய புதிரை அஞ்சு மணிக்குப் போட்டதே ஒரு புதிர் தான்..

    ஆகையால்
    பொற்கிழி கிழிஞ்சிருந்தாலும் பரவாயில்லை...

    நமக்கே அனுப்பி வைக்கவும்...

    ஏ..சாமீ!... இதென்ன ஸ்ரீராம் கையில் இருக்கிற முடிச்சு..ந்னு நெனைச்சேளா!...

    இன்னைக்கு Kgg அவங்களோட மண்டகப்படியாக்கும்....

    பதிலளிநீக்கு
  22. எல்லோரும் விடை சொல்லிவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  23. நான் 1,3,4 கண்டுபிடித்தேன்; எனக்குமுன்பே அவை பதிவாகிவிட்டன. அதனால் நான் ஓரமாக இருந்து கை தட்டுகிறேன்...!!!

    பதிலளிநீக்கு
  24. கௌதம் அண்ணா அண்ட் ஸ்ரீராம் எங்கியாவது ஓடி ஒளிஞ்சுக்கோங்க..இன்னிக்கு மக்கள் கொந்தளிப்பு!!! கரெக்டுதானே!!! இப்படி வழக்கத்துக்கு மாறா போட்டா!!!?.ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  25. யார் சரியாக சொல்கிறார்கள் ???
    என்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. துரை அண்ணா ஆ!! 5 மணிக்கே வந்துருச்சா பு பு...நான் எப்பவும் போல ஒரு 5.50 க்குத் திறந்தேன்....வெங்கட்ஜி பதிவு வந்ததும் அங்கு வாசித்துவிட்டு....பார்த்தா எபி ல புபு...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. இதுவரை அஞ்சாவது கேள்விக்கு சரியான பதில் இல்லை. யார் அந்த மாப்பிள்ளை என்ற படத்தை புருடா புருஷோத்தமன் தயாரிப்பில் , கற்பனை பிலிம்ஸார் , டகல் பாஜியை வைத்து எடுத்திருப்பாரோ என்னவோ!

    பதிலளிநீக்கு
  28. துரை அண்ணா இது பன்னாட்டு சதியில்லை உள்நாட்டு சதி ஹா ஹா ஹா ஹா ஹா

    இன்னைக்கு Kgg அவங்களோட மண்டகப்படியாக்கும்....// ஹா ஹா ஹா ஹா ஹா கண்டிப்பா!!!! நாம இன்று கௌ அண்ணாவுக்கு மண்டகப்புடி!!!!!!!! ஹிஹிஹிஹி...தானைத்தலைவி எங்க போனாங்க கேய்வி கேக்காம....

    கீதா

    பதிலளிநீக்கு
  29. இதுவரை அஞ்சாவது கேள்விக்கு சரியான பதில் இல்லை. யார் அந்த மாப்பிள்ளை என்ற படத்தை புருடா புருஷோத்தமன் தயாரிப்பில் , கற்பனை பிலிம்ஸார் , டகல் பாஜியை வைத்து எடுத்திருப்பாரோ என்னவோ! //

    ஹா ஹா ஹா ஹா ...அப்ப இருங்க கண்டு பிடிச்சுருவோம்ல.....பாலக்காட்டு மண்டபத்துல போய் கேட்டுட்டு வரேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  30. பாலகணேஷ் ஏன் காணலை...வந்திருந்தா சொல்லிருப்பார்....ஒரு வேளை அவரும் இன்னிக்கு இப்படி புபு முன்னாடியே வரும் நு எதிர்பார்க்கலை போல....

    கீதா

    பதிலளிநீக்கு
  31. வல்லிம்மா சரியா சொல்லிட்டாங்க!!! 5 வது விடை....பாலக்காட்டிலிருந்து விடை வந்துச்சு ஆனா வல்லிம்மா சொல்லியாச்சு....கௌதம் அண்ணா அப்ப அந்த ஒரு விடைக்குக் கழித்துக் கொண்டு - அது வல்லிம்மாவுக்கு - பொற்கிழி கீதாக்கா எனக்கு எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுத்துருங்க...அண்ணா கமென்ட் மாடரேஷன் வைச்சுருக்கலாமோ....பாவம் மதியம் வர தேம்ஸ் காரங்களுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சுருக்கும்ல பொற்கிழி பங்கில்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. இன்று லேட்டாக புதிர் வரும் என்று நினைத்தேன். மற்றவர்கள் சொன்ன விடையை கழித்து விட்டால் பாக்கி இருப்பது ஐந்தாவது கேள்வி மட்டுமே. அதற்கு விடை
    யார் பையன்?
    பேச்சு வழக்கில் மணமகனை பையன் என்று சொல்வதுண்டே...ஹிஹி

    பதிலளிநீக்கு
  33. // Who is the bridegroom? // யாரந்த பிரகாசமான விளக்கமாறு, if d=t and g=b ?

    பதிலளிநீக்கு
  34. 5. யார் அந்த மணமகன் - இது எப்போ வெளியானதுன்னு தெரியலை. லிஸ்டைப் பார்த்தால் இதுவும் 1961ல் வெளியாயிருக்குமோ?
    4. தாய் சொல்லைத் தட்டாதே - இதுவும் 1961ல் வெளிவந்த தேவர் பிலிம்ஸ் படம். எம்ஜியார் நடித்தது.
    3. பாலும் பழமும் - கீசா மேடத்தின் தலைவர் ஜிவாஜி நடித்தது. 1961, பீம்சிங் இயக்கம் (பா வரிசையில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக வந்துகொண்டிருந்தது அப்போது. துரதிருஷ்டவசமாக எம்ஜியாருக்கு அந்த வருடம் சிறந்த நடிகர் பாரத் பட்டம் கொடுக்கப்பட்டது)
    2. என்னைப் பார் - டி.ஆர் மகாலிங்கம் நடித்த 1961ம் ஆண்டு வெளியான படம்
    1. அரசிளங்குமரி - 1961ல் வெளியான எம்ஜியார் நடித்த படம்

    பதிலளிநீக்கு
  35. kgg sir உங்க மண்டகப்படியா? ஹாஹாஹா! சரி தான். :)

    பதிலளிநீக்கு
  36. .// பாலும் பழமும் - கீசா மேடத்தின் தலைவர் ஜிவாஜி நடித்தது.// அநியாயமா இல்லையோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். போகட்டும்! மெயில் பார்க்கும் வழக்கமே இல்லையோ?

    பதிலளிநீக்கு
  37. நண்பர்கள் அனைவருக்கும் ஓர் வேண்டுகோள்! என்னுடைய பழைய எண்ணையே பிஎஸ் என் எல்லிடம் இருந்து வாங்கிக் கொண்டிருக்கிறேன். என்னுடன் வாட்சப்பில் இணைந்திருந்த நட்புகள் அனைவரும் வாட்சப் மூலம் அந்த எண்ணில் என்னைத் தொடர்பு கொண்டால் உங்கள் அலைபேசி எண்கள் எனக்குத் திரும்பக் கிடைக்கும். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் சகோதரரே

    இந்த வார புதிர்களுக்கு அனைவரும் விடைகளை சரியானபடி தந்து விட்டார்கள் என நினைக்கிறேன். அனைவருக்கும் பாராட்டுகளுடன் கூடிய கை தட்டல்கள்...முதலில் வந்திருந்தால் மூளைக்கு வேலை! கடைசியில் வந்திருப்பதால் கைகளுக்கு வேலை! பாராட்டும் சுகமும் அலாதியானதுதான்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  39. புதிர் கண்டுபிடித்தவர்களுக் மனமார்ந்த வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!