வியாழன், 29 மார்ச், 2018

இந்நேரம் முடிவெடுத்திருப்பார்கள்!!​



வருமான வரித்துறையிடமிருந்து வந்திருந்த அந்த மெஸேஜ் எங்களை அசைத்துதான் விட்டது.  

ரிடர்னோ, ஈ ஃபைலிங்கோ...     என்ன இழவோ 2015 -2016 க்கு  நாங்கள் செய்யவில்லை என்றும், பலமுறை ஏற்கெனவே நேரம் கொடுத்து விட்டதால், இந்த மார்ச் 31 க்கு மேல் நேரம் கொடுக்க முடியாதென்றும், அதற்குள் முடிக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் அபராதம் என்கிற வரி கூட பாதிக்கவில்லை,  இரண்டு மாத சிறைத்தண்டனையும் கிடைக்கும் என்கிற செய்திதான் அதிர்ச்சியூட்டியது.  சொன்னது சக ஊழியர் ஒருவர்.

"எனக்கு அப்படி எதுவும் மெஸேஜ் வரவில்லையே சகா..."

"எனக்கும் வரவில்லை..   என் ஃபிரெண்டு சொன்னான்.."

"அவனுக்கு அவன் ஃபிரெண்ட் சொன்னானாமா?"

ஆடிட்டருக்கு அலைபேசினோம்.

"கவலைப்படாதீங்க...    முடிச்சுடலாம்..  நல்லவேளை, இன்னும் நேரம் இருக்கு..  2015 -2016  வருஷத்து டீட்டெயில் எல்லாம் குடுங்க..." என்றார்.

மாதா மாதம் சம்பளத்திலேயே வருமானவரி பிடித்தம் செய்யப்பட்டு, ஜனவரிக்கு மேல் கணக்குப் போட்டு எவ்வளவு அதிகம் வருகிறது என்று பார்த்து அதையும் கட்டி விட்டு, ஏப்ரல் மே மாதங்களில் ஃபார்ம் 16 வாங்கி TDS வாங்கி வைத்து....

இதெல்லாம் போதாதாம்..   இன்னும் என்னவோ செய்யவேண்டுமாம்...  இல்லாவிட்டால் அபராதமும், சிறையுமாம்..   

என்ன உலகமடா...   

ஆடிட்டர் கேட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்து ஓடிபி சொல்லி, "வேலை முடிந்தது" என்று வார்த்தை கேட்டு நிம்மதியானோம்.

ஆனாலும் அதற்கும் என்னவோ மெஸேஜ் வரவேண்டுமாம்.  இல்லாவிட்டால் ஆபத்தாம்.  நண்பர் சொன்னார்.

"இல்லை ஸார்...   இதற்கான டாகுமெண்ட் அப்புறம் அனுப்பறதா ஆடிட்டர் சொன்னார்"

"விடுங்க ஸார்..   இந்த டென்ஷன்லிருந்து மூன்று மாதம் விடுதலை" என்றார் உடன் பணிபுரியும் பெண்மணி.  

"புழல்லயா போடுவாங்க? அங்க காத்து வருமா?  அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்குமே... "  கவலைப்பட்டார் இன்னொரு சகா.

"அங்க லேடீஸ்க்கு தனி இடம்...  ஜெண்ட்ஸுக்கு தனி செல் ஒதுக்குவாங்க"   என்றார் முதலாமவர். 

'இதுதான் இப்போ கவலை!'

'அப்போ நாம எப்போ பார்த்துக்கறது?"  -  இவங்க அதற்கு மேல....

"ஜெயில்ல எல்லாம் ஏதாவது வேலை செய்யச் சொல்லுவாங்க.   கல்லுடைக்கச் சொல்லுவாங்க இல்லே..  அப்போ பார்க்கலாம்"

"ஸார்..   உங்களை எல்லாம் செக்கிழுக்கச் சொல்வாங்க..  எங்களை அங்க விடமாட்டாங்க..  அதனால நாம அங்க பார்த்துக்க முடியாது"  என்றார் பெண்மணி.

"சேச்சே...   அந்தமான்லதான் செக்கெல்லாம்..    புழல்ல இருக்காது...  "  - கவலையான நம்பிக்கையுடன்  இலேசாகத் தழுதழுத்த குரலில் தன் கருத்துக்கு ஆதரவு தேடினார் நண்பர்.

"அது சரி, மூணு மாசம் ஜெயில் தண்டனை முடிஞ்சவுடன் ஓகே ஆயிடுமா?  இல்லை, மறுபடி அந்த ரிட்டர்ன் தாக்கல் செய்யணுமா?"

"தெரில்லையேப்பா...   எனக்குத் தெரில்லையே...."  

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஈர நினைவுகள்...







=======================================================================================================


இந்நேரம் முடிவெடுத்திருப்பார்கள்!!
​  



2014 ஆம் ஆண்டு படித்த செய்தி இது.  இதில் கதை  எழுத ஒரு கருவே இருக்கிறது!​

பாம்பு கடித்து இறந்த வாலிபர் 11 ஆண்டுக்கு பின் திரும்பினார் :

பரேலி: பாம்பு கடித்து இறந்து போனதாக கருதப்பட்ட வாலிபர், 11 ஆண்டுக்கு பின் உயிருடன் திரும்பி வந்தார். இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  உத்தர பிரதேச மாநிலம் பரேலி தேவர்னியா பகுதியில் உள்ளது பத்வா கிராமம். 

இந்த கிராமத்தை சேர்ந்த சத்ராபால் (25) என்ற வாலிபரை பாம்பு கடித்து விட்டது. அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் கருதினர். 

அவர்களுடைய வழக்கப்படி சத்ராபாலின் சடலத்தை ஆற்றில் வீசி இறுதி சடங்கு செய்து விட்டனர்.  சத்ராபாலின் மனைவி ஊர்மிளா, அப்போது கர்ப்பமாக இருந்தார். கணவன் இறந்த 2 மாதங்களுக்கு பிறகு ஊர்மிளாவுக்கு அபார்ஷன் ஆகிவிட்டது.  இளம் வயதில் கணவனை இழந்ததால், அவருக்கு சத்ராபாலின் தம்பியை திருமணம் செய்து வைத்தனர்.

அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு சத்ராபால் உயிருடன் கிராமத்துக்கு கடந்த திங்கட்கிழமை திரும்பி வந்தார். 

அவரை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சத்ராபால் கூறுகையில், "பாம்பு கடித்து இறந்ததாக நினைத்து ஆற்றில் சடலத்தை வீசியுள்ளனர். ஆற்றில் மிதந்து சென்ற சடலத்தை பாம்பாட்டிகள் சிலர் மீட்டு சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்" என்றார். 

இப்போது சத்ராபால் அவருடைய தம்பி இருவரையுமே, தனது கணவன்களாக ஊர்மிளா நினைக்கிறார். அவர்கள் இருவர் மற்றும் குடும்பத்தார் ஒப்புக் கொண்டால் இருவருக்கும் மனைவியாக இருக்க ஊர்மிளா சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்சமயத்துக்கு சத்ராபாலின் தம்பியுடன் ஊர்மிளா உள்ளார். இந்த பிரச்னையில் குடும்பத்தினர் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

-  
​2014 ​
தினகரனிலிருந்து -


​========================================================================================================



பொறாமை கூடாதுங்க.....





=====================================================================================================


இந்தப் படம் சென்ற வருடம் ராஜியின் 'காணாமல் போன கனவுகள்' தளத்தில் பார்த்தேன்.  அப்போதே சுட்டு வைத்தேன்.  இந்தப் படத்தைப் பார்க்கும்போது மனதில் என்னென்னவோ எண்ணங்கள், நினைவுகள்...


இந்தப் படத்துக்குப் பொருத்தமான கதை ஒன்று எழுதி கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதிக்கு அனுப்புங்களேன்...




===================================================================================================


இது சமரச பூமி 





நான் உயரமோ, குள்ளமோ - மற்றவர்களை அளக்க என்னை நானே ரசமட்டமாக்கிக் கொள்வதுதான் இயல்பாக நடக்கிறது.

இதன் அடிப்படையிலேயே விருப்பு வெறுப்புகள் - இது எந்த அளவுக்கு சரி?

என் புருவமட்டம்தான் என் பார்வை உயர முடிகிறது.

எல்லோரையும் எடைபோட இவை போதுமா?  இது சரியான அளவுகோல்தானா?

இந்த முன் யோசனை எனக்கு ஏனோ இருப்பதில்லை.

என் கணக்குகள் எப்போதாவது சரியாகவும் இருக்கலாம்.  எப்போதும் தப்பாகவோ, எல்லாமே தப்பாகவும் கூட இருக்கலாம்.

ரசமட்டம் யோசிப்பதில்லை. 

'நான்' என இங்கே குறிப்பிட்டிருப்பது இதை எழுதுகிற 'நான்' மட்டுமா? 

படிக்கிற ஒவ்வொருவரும் அப்படித்தானே படிப்பார்கள்?


- பாஹே -


==============================================================================================

82 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை செல்வராஜு அண்ணா, பானுக்கா…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஹை துரை அண்ணா வந்தாச்சு!!! எப்படி இருக்கீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  6. தஞ்சை வந்தாச்சா துரை செல்வராஜூ ஸார்?

    பதிலளிநீக்கு
  7. பறிப்பதற்கு முன் மலரைப் படம் எடுக்க வேண்டும் என்று கீழே போய்விட்டதில் சற்றே தாமதமாகி விட்டது!!!!

    பதிலளிநீக்கு
  8. தஞ்சைக்கு வந்து நான்கு நாட்கள் ஆகின்றன... இணைய இணைப்பு உடனடியாக அமைய வில்லை...

    தங்கள் அன்பினுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  9. // தஞ்சைக்கு வந்து நான்கு நாட்கள் ஆகின்றன...//

    இன்னும் நிறைய கோவில் பதிவுகள் அருமையான விவரங்கள், படங்களுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

    பதிலளிநீக்கு
  10. ஆனாலும்

    அனுக்காவிற்காக உதிர்க்கப்பட்ட முத்துக்கள் அருமை...

    (அப்படித்தான் சொல்லணுமாம்!?...)

    பதிலளிநீக்கு
  11. // அனுக்காவிற்காக உதிர்க்கப்பட்ட முத்துக்கள் அருமை...
    (அப்படித்தான் சொல்லணுமாம்!?...) //

    ரசனையான விஷயங்கள் என்றாலே அனுஷ் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லையே துரை செல்வராஜூ ஸார்...!!

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராம் முதலில் கண்ணில் பட்டது தூறல்கள்!! நீங்கள் கொடுத்த பொக்கிஷம்! அந்தப் புத்தகத்தை அவ்வப்போது எடுத்துப் படிப்பது வழக்கம்! அத்தனை அருமையான புத்தகம்...எண்ணச் சிதறல்கள். பாஹே அப்பாவை நினைத்து வியந்தேன்!! இந்த வரிகள் வாவ். ஒவ்வொன்றையும் தனிதனிக் கருத்தாகப் போடலாம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஓ துரை அண்ணா தஞ்சைக்கு வந்தாச்சா...அதான் இட்லு சுடும் ஊர் என்று ஸ்ரீராம் சொல்லியிருந்தீங்களா....ஆஹா!! துரை அண்ணா வணக்கம்!! எப்படி இருக்கீங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  14. துரை அண்ணா மகிழ்ச்சியுடன் இருப்பார்!! பின்னே...குடும்பத்துடன் எனும் போது!! நிறைய பதிவுகள் வரும்!!! இல்லையா அண்ணா!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. உங்கள் சுட்ட படம் பார்த்ததும் எனக்கும் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் எழுகின்றன ஸ்ரீராம்! ஏற்கனவே ஒரு கதை சில மாதங்கள் முன் எழுதத் தொடங்கியிருக்கிறேன்..வழக்கம் போல் பாதியில்....இப்படத்திற்கும் அக்கதைக்கும் பொருத்தம் இருக்கிறது என்றே தோன்றுகிறது....ஆனா என்ன? மனசு ஒத்துழைக்கணும் ஒத்துழைச்சா முடிச்சு அனுப்பறேன் ஸ்ரீராம்....கொஞ்சம் உணர்வு பூர்வமான கதை...அதுவும் இப்படியான படம் கூட ஒன்று நான் அந்தக் கதைக்காகத் தேடினேன்.கோயில் குளத்தின் ..படிக்கட்டில் ஒரு பெண் அமர்ந்து பெரியவரைப் பார்க்கும் போது அவள் மனதில் எழும் எண்ணங்கள்...என்று விரியும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. // எண்ணச் சிதறல்கள். பாஹே அப்பாவை நினைத்து வியந்தேன்!! //

    வரும் சனிக்கிழமை அப்பாவின் திதி கீதா... அந்த நினைவில் பகிர்ந்தது தூறல்கள்...

    பதிலளிநீக்கு
  17. துரை அண்ணன் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சி கீதா. அவருக்கு உங்கள் எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. // கொஞ்சம் உணர்வு பூர்வமான கதை...அதுவும் இப்படியான படம் கூட ஒன்று நான் அந்தக் கதைக்காகத் தேடினேன்.//

    எழுதுங்க கீதா.. நல்லா எழுதறீங்க. இந்தப் படத்துக்கு உங்களிடமிருந்து சிறப்பான கதை வரும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  19. தத்துப்பித்துவம் செம!!!...இப்படியான தத்துப்பித்துவங்களைப் பார்க்கும் போது....உனக்கும் கீழே உள்ளவர் கோடி வரிகள்தான் நினைவுக்கு வரும்...

    அது சரி அனுஷ் எதற்கு இப்படிச் சிரிக்கிறார்?!!! சூப்பர் ஸ்ரீராம் என்று சொல்லிருக்க வேண்டாமோ?!! ஹிஹிஹிஹிஹி...அனுஷ் எப்படினாலும் அழகுதான்...பெருமூச்சு!! ஹா ஹா தத்துவபித்துவத்தை நினைத்து அடக்கி.....

    கீதா

    பதிலளிநீக்கு
  20. வரும் சனிக்கிழமை அப்பாவின் திதி கீதா... அந்த நினைவில் பகிர்ந்தது தூறல்கள்...//

    புரிகிறது பாஹே அப்பாவிற்கு நமஸ்காரங்கள்...

    //எழுதுங்க கீதா.. நல்லா எழுதறீங்க. இந்தப் படத்துக்கு உங்களிடமிருந்து சிறப்பான கதை வரும் என்று நம்புகிறேன்.//

    நன்றி ஸ்ரீராம்!! நிச்சயமாக அதை முடித்து அனுப்ப முயற்சி செய்கிறேன்....ஒன்று எழுதி முடித்துவிட்டேன்...செக் செய்து கொண்டே இருக்கிறேன்...அதை முதலில் அனுப்புகிறேன்....

    மற்ற இரண்டு...அதான் அப்பா என்ற தலைப்புதான் இந்தக் கதை.....மற்றொன்றும் கொஞ்சம் மாறுபட்ட கோணத்திலான கதை (அப்படினு நான் நினைச்சுட்டுருக்கேன்..ஹிஹிஹி) முக்கால்வாசி முடிந்துவிட்டது...முடித்து .....???? அனுப்ப முயற்சிசெய்கிறேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  21. பாம்பு கடித்த கதை நிஜமாகவே நம்மைப் பொருத்தவரை உறவுச் சிக்கல் கதை ...பாலச்சந்தர் கதை போன்று...ஆமாம் இப்போது முடிவு எடுத்திருப்பாங்க...என்ன முடிவு எடுத்தாங்களோ? ஆமாம் ஸ்ரீராம் கதைக் கரு....பார்ப்போம் ...முடிகிறதா என்று...நான் சொல்லுறேன் ஆனால் செய்வது இல்லை.....

    கீதா

    பதிலளிநீக்கு
  22. துரை அண்ணன் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சி கீதா. அவருக்கு உங்கள் எங்கள் வாழ்த்துகள்.//

    ஆமாம் ஸ்ரீராம்!! நிச்சயமாக!!! நம் அனைவரது அன்பும் எப்போதும் உண்டு அவருக்கு!!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. முதல் செய்திக்கு....எப்படி விடுபட்டது?...என்னவோ நடக்குதுப்பா ஆஃபீஸில்..

    டயலாக்ஸ் சிரிப்பை வரவழைத்தாலும்...(துன்பம் வரும் வேளையில சிரிங்க!!)..புழல்ல இடம் இல்லைனா வேலூரா? இல்லை பாளையங்கோட்டையா என்றெல்லாம் ஆராய்ச்சி தேவையில்லை!!!!!!! என்றாலும் ஓ இப்படியா என்றும் தோன்றிட ரென்ஷனும்...ஆ அதிராவின் வார்த்தை...சரி நல்லதே நடக்கும் என்று நினைப்போம்...

    சரி ஸ்ரீராம் சாதாரண மனிதர்கள் பாவம் இப்படிக் கவலைப்படுகிறார்கள்...அரசு பயமுறுத்துகிறது சிரை அது இது என்று சொல்லி....அப்படினா வெளிநாட்டில் ஒளிந்திருக்கும் நபர்களை ஏன் அரசு பிடிக்கவில்லை? கேள்விகேட்கலை? ஏன் இங்கேயே பல விஐபிக்கள்? முதலில் சிக்க வேண்டியது அரசியல்வியாதிகள், பிஸினஸ் மேக்னெட்ஸ், திரைநட்சத்திரங்கள் இல்லையோ?!!

    என்னவோ போங்க....ஒன்னும் புரியலை...ஹும்

    கீதா

    பதிலளிநீக்கு
  24. இந்நேரம் முடிவெடுத்து இருப்பார்கள் ஆமாம் நான்கு வருடமாகி விட்டதே...

    "தூறல்கள்" உங்களது தந்தையாரின் நூல்தானே... ?

    பதிலளிநீக்கு
  25. காலை வணக்கம் - கொஞ்சம் லேட்டாக! பட் லேட்டஸ்டாக....

    பதிலளிநீக்கு
  26. கணவன் இறந்து விட்டால் அவரது தம்பியுடன் திருமணம் - வடக்கில் இது சகஜமான விஷயம்.

    என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவார்கள்!

    படம் - கதைக்கான படம் - பலவித உணர்வுகளை கொடுத்தது.....

    பதிலளிநீக்கு
  27. ஈரநினைவுகள் அட்டகாசம் ஸ்ரீராம்....செமை! ரொம்ப ரசித்தேன் வரிகளை....ஆனால் மனதில் நீரில்லா ஆறுகள் தோன்றி வருத்தமடையச் செய்தன...

    கீதா

    பதிலளிநீக்கு
  28. அரசு ஆணை என்ற ஒன்றைச் சொல்லியே, நடுத்தர சம்பள வர்க்கத்தினரை அல்லாட வைக்கும் சில துறைகள்; இதைப்பற்றி இங்கு யாரும் வெளிப்படையாக எழுதுவதில்லை.

    உங்கள் ஈர நினைவுகள், எனக்குள் இருந்த ஈர நினைவுகளை எழுப்பி உணர்ச்சி வயமாக்கின.

    பதிலளிநீக்கு
  29. //இருநூறு ரூபாய் அபராதம் என்கிற வரி கூட பாதிக்கவில்லை, இரண்டு மாத சிறைத்தண்டனையும் கிடைக்கும் என்கிற செய்திதான் அதிர்ச்சியூட்டியது. //

    அதிர்ச்சியாகதான் இருக்கிறது.

    ஈரநினைவுகள் கவிதை நன்றாக இருக்கிறது.

    தத்துபித்துவம் சரியாக சொல்கிறது.
    வயதானவரின் பிரார்த்தனை என்னவாக இருக்கும் என்று கதை எழுதலாம் இல்லையா?
    அருமையான கதைகள் வர போகுது.

    அப்பாவின் தூறல்கள் பகிர்வு அருமை.




    பதிலளிநீக்கு
  30. வித்தியாசமான செய்திக் கலவைகள். அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு எண்ணச் சுழலைத் தோற்றுவித்தது.

    பாம்பு கடித்து இறந்ததாகக் கருதப்பட்டவர் வாழ்க்கை அப்புறம் என்னவாயிருக்கும்? ஆற்றின் கரையில் இருக்கும் பெரியவர், கடந்த காலத்தைப் பற்றி வருத்தம் கொள்கிறாரா அல்லது செய்த தவறுகளுக்கு மனதால் ப்ராயச் சித்தம் தேடுகிறாரா?

    பதிலளிநீக்கு
  31. எனக்கும் அந்த படம் ரொம்ப பிடிக்கும். அதேநேரம் மனசுல ஏதேதோ தோணும். ஏதோ கையறு நிலை மாதிரி இருக்கும் எனக்கு.

    பதிலளிநீக்கு
  32. இந்த படத்துக்கு எதாவது எழுத முடியுமான்னு பார்க்கனும்

    பதிலளிநீக்கு
  33. ​வணக்கம் வெங்கட் - நானும் கொஞ்சம் லேட்டாக!

    வடக்கின் வழக்கங்கள் (எனக்குப்) புதிதாய் இருக்கின்றன!​

    // கதைக்கான படம் - பலவித உணர்வுகளை கொடுத்தது.....//

    நீங்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது வெங்கட்? எங்களுக்காக, எனக்காக.. இந்தமுறை ஒரு கதை அனுப்புங்களேன்...

    பதிலளிநீக்கு
  34. // தத்துப்பித்துவம் செம!!!...//

    நன்றி கீதா.

    // அது சரி அனுஷ் எதற்கு இப்படிச் சிரிக்கிறார்?!!! //

    அனுஷுக்கு எல்லாமே சிரிப்புதான்!

    // ஒன்று எழுதி முடித்துவிட்டேன்...செக் செய்து கொண்டே இருக்கிறேன்...அதை முதலில் அனுப்புகிறேன்....//

    அனுப்புங்க... அனுப்புங்க... ஐயம் வெயிட்டிங்...!

    // அதான் அப்பா என்ற தலைப்புதான் இந்தக் கதை....//

    அப்பாதான் நினைவில் வருகிறாரா?

    வருமான வரி அனுபவத்தை சற்று அனா பினா தனமாக நீட்டி இருக்கிறேன். சும்மா நகைச்சுவைக்காக..

    ஈர நினைவுகள் பாராட்டுக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  35. வாங்க கில்லர்ஜி...
    // இந்நேரம் முடிவெடுத்து இருப்பார்கள் ஆமாம் நான்கு வருடமாகி விட்டதே...//

    ஆமாம்.. வெங்கட் சொல்லி இருப்பதைப் பாருங்கள்.

    // "தூறல்கள்" உங்களது தந்தையாரின் நூல்தானே... ? //

    ஆமாம் ஜி.

    பதிலளிநீக்கு
  36. வாங்க தமிழ் இளங்கோ ஸார்..

    ஈர நினைவுகள் பற்றிய உங்கள் வரிகள் மகிழ்ச்சி தருகின்றன.

    // அல்லாட வைக்கும் சில துறைகள்; இதைப்பற்றி இங்கு யாரும் வெளிப்படையாக எழுதுவதில்லை.//

    உண்மைதான். ஒழுங்காக வருமான வரி கட்டுபவர்கள் (தப்பிக்கவும் முடியாது!) அரசாங்க அலுவலர்கள். அவர்களுக்கு இது மாதிரித் தொல்லையும் அதிகம். சற்று மிகைப்படுத்தி நகைச்சுவை சேர்க்க முயற்சித்தேன்!

    பதிலளிநீக்கு
  37. வாங்க கோமதி அக்கா..

    தத்துபித்துவம், ஈரநினைவு பாராட்டுக்கு நன்றி. சிறைத்தண்டனை என்று மெசேஜில் இருப்பதாகத் தெரியவில்லை. அது அந்த ஊழியர் அதிகப்படியாகச் சொன்னதை வைத்து சற்று நீட்டி இருக்கிறேன்!

    அப்பாவின் தூறல்கள் மற்றும் இன்னும் சில எழுத்துகளை நைஸாக அவ்வப்போது பகிர உத்தேசம்... எச்சரிக்கை!!!!

    // வயதானவரின் பிரார்த்தனை என்னவாக இருக்கும் என்று கதை எழுதலாம் இல்லையா?
    அருமையான கதைகள் வர போகுது.//

    ஆஹா... அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வித்தியாசமான விதம் விதமான கதைகளுக்காக விருந்து சாப்பிடக் காத்திருப்பவன் போலக் காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  38. வாங்க .நெல்லைத்தமிழன்...


    // பாம்பு கடித்து இறந்ததாகக் கருதப்பட்டவர் வாழ்க்கை அப்புறம் என்னவாயிருக்கும்? ஆற்றின் கரையில் இருக்கும் பெரியவர், கடந்த காலத்தைப் பற்றி வருத்தம் கொள்கிறாரா அல்லது செய்த தவறுகளுக்கு மனதால் ப்ராயச் சித்தம் தேடுகிறாரா? //

    ஆஹா... உங்களிடமிருந்து இரண்டிரண்டாக நான்கு கதைகளாவது தேறும் .. போலிருக்கே. வித்தியாசமாக நினைப்பவர் ஆச்சே நீங்கள்... ஓவியமும் சேர்ந்தே வந்து விடும்... காத்திருக்கிறேன் நெல்லை ஆவலுடன்...

    // வித்தியாசமான செய்திக் கலவைகள். அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது.//

    நன்றி. நன்றி.

    பதிலளிநீக்கு
  39. வாங்க மிடில்க்ளாஸ்மாதவி..

    // evoking different thoughts...//

    சுருக்கமாக முடித்து விடுகிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வாங்க ராஜி... உங்கள் தளத்திலிருந்து சுட்டதுதான் அந்தப் படம். நீங்களும் ஒரு கதை எழுதி அனுப்பும் பட்சத்தில் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் சகோதரரே

    வருமானவரி தகவல்கள் பயமுறுத்துகிறது. /விடுங்க ஸார்.. இந்த டென்ஷன்லிருந்து மூன்று மாதம் விடுதலை" என்றார் உடன் பணிபுரியும் பெண்மணி./ நகைசுவைக்காக சொல்லப்பட்டதோ என்ற எண்ணம் வந்தாலும், வரி விசயம் கலக்கந்தான்.

    ஈர நினைவுகள் கவிதை மிக அருமை. நச்சென்ற வரிகளில் கவிதை முடிந்தாலும், ஈரமான நினைவுகள் மனதை ஈரமாக்கி கொண்டேயிருக்கின்றன..கனமான வரிகளுடன் ஆழம் மிகுந்த கவிதை. எப்படி பாராட்டுவது எனத் தெரியவில்லை. சூப்பர்.

    பாம்பு கடித்து இறந்தவர் 11 வருடங்கள் கழித்து உயிர் பிழைத்து வந்த நிகழ்ச்சி வியப்பூட்டுகிறது. அக்குடும்பத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குடும்பத்தை பாதிக்காமல் இருக்குமா? வடமாநிலங்களில் இவ் விசயங்கள் சகஜமானவையா?

    தத்துபித்துவம் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். அடுத்தவர்களை பார்த்து நம் சுயங்களை இழந்து விடுகிறோம்.

    அருமையான கதைகள் உருவாக்க அடித்தளம் போடும் படம் அருமை. மனதை நெகிழச் செய்கிறது அந்த படம்.

    தங்கள் தந்தையாரின் தூறல்கள் மிகவும் அருமை. ஓவ்வொரு வரிக்குள்ளும் உண்மையின் எதார்த்தங்கள் குடி கொண்டுள்ளன.அருமை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.


    பதிலளிநீக்கு
  42. வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்..

    வருமான வரி - நண்பர்கள் பேசிக்கொண்டதை பதிவாக்கினேன். அவ்வளவுதான். சற்றே மிகைப்படுத்தி!

    ஈர நினைவுகளுக்குப் பாராட்டு - நன்றிகள்! __/]__

    // வடமாநிலங்களில் இவ் விசயங்கள் சகஜமானவையா? //

    சகஜமானவை என்றுதான் டெல்லி வாழ் வெங்கட் சொல்லி இருக்கிறார்!


    // அடுத்தவர்களை பார்த்து நம் சுயங்களை இழந்து விடுகிறோம்.//

    சரியாய்ப் புரிந்து கொண்டீர்கள். அழகாய்ச் சொன்னீர்கள்.

    உங்களிடமிருந்தும் ஒரு கதை எதிர்பார்க்கலாமா? அனுப்பவேண்டிய மெயில் ஐடி sri.esi89@g.mail.com

    தூறல்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  43. நமக்குதான் பயமுறுத்தல் கோடி கணக்கில் ஏமாத்தறவங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து கொண்டாடும் உலகம்

    பதிலளிநீக்கு
  44. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  45. அரசாங்க வேலையில் இருப்பவர்கள் கவனம் குறைந்தால் நடவடிக்கை எடுப்பார்கள் ஆனால் எத்தனுக்கு எத்தன் என்று பல பணக் காரர்கள் எப்படியும் தப்பித்து வ்டுகிறர்கள் அரசாணை அவர்களை ஏதும் செய்யாது பெண்களுக்கு பைகாமி ஓக்கேவா

    பதிலளிநீக்கு
  46. எடப்பாடியின் மேஜையில் எப்போதும் இருக்கும் அம்மாவின் படம்போலே, உங்கள் மேஜையில்
    ஒரு மூலையில், ஒரு குறிப்பிட்ட ஆங்கிளில் இந்த சிரிக்கும் சிங்காரி இருக்கிறாரோ! இவரைப்பார்த்ததும்தான் பித்துத்தத்துவம், பாடல், கவிதை என்றெல்லாம் ஆரம்பித்துவிடுகிறீர்களோ என்கிற சந்தேகம் உதித்து உடன் வலுக்க ஆரம்பிக்கிறது !

    பதிலளிநீக்கு
  47. தலைப்பைப் பார்த்தவுடன், புதன்கிழமைபற்றி கௌ&கோ.வின் முடிவைப்பற்றித்தான் சொல்கிறீர்களோ என நினைத்தேன்..

    பதிலளிநீக்கு
  48. வாங்க ஏகாந்தன் ஸார்...
    // ஒரு குறிப்பிட்ட ஆங்கிளில் இந்த சிரிக்கும் சிங்காரி இருக்கிறாரோ!//

    எதற்கு மேஜையில்? மனசுல.... மனசுல இருக்காங்க ஸார்....!!!!!!

    :))))

    பதிலளிநீக்கு
  49. சிறப்பான தொகுப்பு. ஒவ்வொன்றும் தனி ரகம். தொகுத்தளித்த உங்களுக்கு நன்றி. தொடருங்கள். தொடர்வோம்.

    #084/2018/SigarambharathiLK
    2018/03/29
    கவிக்குறள் - 0014 - நன்றும் தீதும் நாக்கே செய்யும்! #SigaramCO
    https://newsigaram.blogspot.com/2018/03/KAVIK-KURAL-14-NANDRUM-THEEDHUM-NAKKE-SEIYUM.html
    பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி
    #திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை
    #சிகரம்

    பதிலளிநீக்கு
  50. ...எதற்கு மேஜையில்? மனசுல.... மனசுல இருக்காங்க ஸார்....!//

    ஓ! நெஞ்சினிலே.. நினைவு முகம்...

    பதிலளிநீக்கு
  51. பின்னூட்டங்கள் படித்து ‘தூறல்கள்’பற்றி அறிந்தேன். உங்க அப்பா வாழ்வில் நிறைய உருகியிருக்கிறார் எனத் தெரிகிறது. பகிருங்கள்.

    ஆற்றங்கரைப் பெரியவரின் படம் .. இப்படி கங்கைக்கரையில் ஹரித்வாரில், ரிஷிகேஷில் பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கே கூட்டம் அதிகம். இந்தப்படம் பர்சனலாக நம்மை நெருங்க முயற்சிக்கிறது.

    பதிலளிநீக்கு
  52. அனைத்தும் சுவாரஸ்யம். படித்துறை அப்பாவைப் பற்றி நிறைய எழுதலாம்.

    உங்கள் டாக்ஸ் பிரச்சினை முடிந்ததா.
    மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  53. 1. வேறென்ன செய்வ்து?.. நடப்புகளை கதை, உரையாடல் என்று என்னவாவது செய்ய வேண்டியது தான்.

    2. ஈரமாகவே எப்போதும்?.. இன்னும் ஒரு வரி சேர்த்து முடித்திருக்கலாம்.

    3. சில நிஜங்கள் கதை பண்ணுவதற்குக் கூட தயக்கத்தை ஏற்படுத்துகின்றன.

    4. அடுத்த பகுதிக்கு படம் தான் முக்கியம் என்றால் இதற்கு படம் முக்கியமில்லாது போன நிதர்சனம்.

    5. //'காணாமல் போன காணவுகள் //
    காணாமல் போல கனவுகள்?..

    எவ்வளவு அற்புதக் காட்சி?.. 'நச்'சென்று கதை பண்ணலாம் என்றாலும் புகைப்படக் காட்சியே கதையில் வராமல்-- அந்தக் காட்சிக்கென்று வலிந்து நாலு வரி எழுதிக் கெடுக்காமல்-- கதை பண்ணினால் பிரமாதமாக இருக்கும்.

    5. பாஹே.. இரண்டே எழுத்துக்களில் எவ்வளவு நினைவுகளைச் சுமந்திருக்கிறார் என்று அவரை வாசிக்கும் பொழுதெல்லாம் மனமெங்கும் வியாபிக்கிறார்.

    பதிலளிநீக்கு
  54. சிறையில் அனுபவங்கள் என்று ஆரம்பிப்போம்...!

    பதிலளிநீக்கு
  55. வாங்க வல்லிம்மா..

    // படித்துறை அப்பாவைப் பற்றி நிறைய எழுதலாம்.//

    1. உங்களுக்கும் அப்பா என்றுதான் தோன்றுகிறதா?

    2. அப்போ உங்களிடமிருந்தும் கதை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்கள்!

    டாக்ஸ் பிரச்னை எல்லாம் முடிந்தது!

    பதிலளிநீக்கு
  56. வாங்க ஏகாந்தன் சார்...

    உங்களிடமிருந்தும் கதை எதிர்பார்க்கிறேன். அவ்வப்போது அப்பாவின் எழுத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  57. வாங்க ஜீவி ஸார்...

    //நடப்புகளை கதை, உரையாடல் என்று //

    :)))))

    //ஈரமாகவே எப்போதும்?.. இன்னும் ஒரு வரி சேர்த்து முடித்திருக்கலாம்.//

    நீங்கள் அந்த வரியைச் சொல்லுங்களேன்.

    //சில நிஜங்கள் கதை பண்ணுவதற்குக் கூட தயக்கத்தை ஏற்படுத்துகின்றன.//

    உண்மை. ஆனால் மாற்றி எழுதலாம். அதில்தானே நமது கற்பனை இருக்கிறது!

    காணவுகள்

    நன்றி ஸார்... திருத்தி விட்டேன். இவ்வளவு நேரம் இதைப் பார்க்கவேயில்லை.

    கதைக்கு நீங்கள் சொல்லி இருக்கும் குறிப்பு நல்ல குறிப்புதான். அந்தக் காட்சி கதையில் வரவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஏன், வராமலேயே இருந்தால் கூட நல்லதுதான்!

    பாஹே பற்றிய வரிகளுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  58. வாங்க தனபாலன். ...

    //சிறையில் அனுபவங்கள் என்று ஆரம்பிப்போம்...!//

    ஹா... ஹா... ஹா.. நமக்குச் சொல்லித்தரணுமா!

    பதிலளிநீக்கு
  59. மிகிமா... உங்க இதே கமெண்ட் முன்னாலேயே ஒரு தரம் வந்திருக்கிறதே... நன்றி.

    பதிலளிநீக்கு
  60. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  61. வரி செலுத்தும் முறையினை எளிமையாக்காமல், இந்த கணினி யுகத்திலும்
    தபால் போட்டு பயமுறுத்தத்தான் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  62. அருமையான தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒரு வகையில் முக்கியத்துவம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  63. ஜீவி ஸார்..

    படத்தின் தாக்கத்தில் சட்டென ஒரு ஆரம்பத்தைக் கொடுத்து விட்டீர்கள். பார்ப்போம், இதை யாராவது பிடித்துக் கொண்டு தொடர்கிறார்களா, அல்லது அவர்கள் வேறு நூல் பிடிக்கிறார்களா என்று பார்க்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  64. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  65. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  66. சுந்தரேனனைக் காணோம்; கிராமமே அவரைத் தேடுகிறது' என்ற செய்தி வந்த பொழுது நம்ப முடியாமல் திகைத்தேன்.

    மனசை என்னவோ செய்தது. இன்றைக்கு நேற்றைக்கு பழக்கமா?.. முப்பது வருஷ பழக்கம். ஒன்றாக ஒரே பள்ளியில் படித்து, ஒரே நேரத்தில், ஒரே ஊரில் இருவருக்கும் வேலை கிடைத்து... அம்மாடி!.. எங்கே போயிருப்பார் என்று மனசு கிடந்து தவியாய்த் தவித்தது.

    ஒருகால் லலிதாவைத் தேடிப் போயிருப்பாரோ?.. 'இத்தனை வருஷத்திற்கு அப்புறமா' என்ற எதிர்க் கேள்வியில் முதல் கேள்வி பதில் கிடைக்காமல் மனசுக்குள்ளேயே புதைந்தது.

    ரசத்தோடு இலையை விட்டு எழுந்து விட்டேன். மனுஷன் பசி பொறுக்க மாட்டாரே என்று சடக்கென்று நினைவில் பதிந்த எண்ணம் அதற்கு மேல் உட்கார்ந்து சாப்பிடப் பிடிக்கவில்லை. பாவம் எங்கே போனாரோ என்ன செய்கிறரோ என்று தவிப்பாக இருந்தது.

    கடைசியாக குளாக்கரை படிக்கட்டில் தான் அவரை யாரோ பார்த்திருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது. சூரியோதய சமயத்தில் ஊர்க்கோடியில் இருக்கும் குளத்தில் குளித்து
    கைகூப்பி கொஞ்ச நேர்ம் கடவுளைத் தியானித்தால் தான் குளக்கரையை விட்டு வெளிவரவே அவருக்குத் தோணும்.

    ஆக, குளித்து குளக்கரையை விட்டு வந்த பிறகு தான் காணாமல் போயிருக்கிறார் என்பதைக் கேள்விப் பட்ட தகவலிருந்து அனுமானிக்க முடிந்தது.

    சுந்தரேசன் காணாமல் போனது இந்நேரம் விமலாவுக்கும் தெரிந்திருக்கும். இந்த நினைப்பு வந்ததும் சட்டென்று உள் அறைக்குப் போய் கோட் ஸ்டாண்டில் மாட்டியிருந்த சட்டையை உதறிப் போட்டுக் கொண்டு வெளியில் வந்தேன்.

    (ஏதோ நம்மால் முடிந்தது.. கதைக்கான ஆரம்பத்தை எடுத்துக் கொடுத்தாகி விட்டது.. இஷ்டப்பட்டவர்கள் தொடரலாம்..)

    பதிலளிநீக்கு
  67. படத்துக்குப் பொருத்தமான முதல் கதை நேற்றிரவே வந்து விட்டது!

    பதிலளிநீக்கு
  68. //"ஜெயில்ல எல்லாம் ஏதாவது வேலை செய்யச் சொல்லுவாங்க. கல்லுடைக்கச் சொல்லுவாங்க இல்லே.. அப்போ பார்க்கலாம்"///

    ஹா ஹா ஹா முக்கியமான கேப்பங்கழியை மறந்திட்டீங்களே:).. நல்ல உரையாடல்கள்.. ஒபிஸ் நேரம் போவது தெரியாமல் ஈவினிங் ஆகியிருக்குமே அன்று:).

    ஈரநினைவுகள் அருமை.. அதில எல்லோ அனுக்கா படம் இணைச்சிருக்கோணும்:) சரி ரொம்ப ஷையாகி விட்டிட்டீங்கபோல:)

    பதிலளிநீக்கு
  69. அனுக்காவுக்கு வெக்கையாக இருக்குதுபோல:) ஒரு ஏசி வாங்கிக் குடுக்கலாமே ஸ்ரீராம்:)) இது கூடச் செய்யாமல் என்ன சங்கம் வச்சிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்:))..

    அப்படம் பார்த்ததும் வேதம்புதிது படம் தான் என் நினைவுக்கு வருது.

    புத்தகத்தில் இருக்கும் பெயரில் இருக்கும் ஹேமாவுக்கும் நீங்கள் அடிக்கடி பேசும் ஹேமாவும் ஒருவரோ ஸ்ரீராம்??

    பதிலளிநீக்கு
  70. வாங்க அதிரா...


    //ஒபிஸ் நேரம் போவது தெரியாமல் ஈவினிங் ஆகியிருக்குமே அன்று:).//

    அப்படிப் பேச முடியாது அதிரா... வேலை கடுமையாக இருக்கும்!

    //அதில எல்லோ அனுக்கா படம் இணைச்சிருக்கோணும்:)//

    அடடா... அதிலயும் இணைச்சுருக்கலாமே...

    //அப்படம் பார்த்ததும் வேதம்புதிது படம் தான் என் நினைவுக்கு வருது.//

    அது வரட்டும்... கதை எழுதுவது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே....

    பதிலளிநீக்கு
  71. அதிரா....


    //புத்தகத்தில் இருக்கும் பெயரில் இருக்கும் ஹேமாவுக்கும் நீங்கள் அடிக்கடி பேசும் ஹேமாவும் ஒருவரோ ஸ்ரீராம்??//

    புத்தகத்தில் இருக்கும் ஹேமா பெயர் என் அம்மா. அந்தப் புத்தகத்தை எழுதியது என் அப்பா. என் அம்மா மறைந்ததும் அவர் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டே புழங்கி வந்தார். மற்ற சமயங்களில் நான் சொல்லும் ஹேமா என் அலுவலகத் தோழி. இவர்கள் தவிர இரண்டு பதிவுலக ஹேமாக்கள் தெரியும் ஒன்று ஸ்விஸ் ஹேமா. இன்னொருவர் ஹேமா (HVL)

    பதிலளிநீக்கு
  72. ///
    அது வரட்டும்... கதை எழுதுவது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே....///
    ஹா ஹா ஹா சும்மாபேச்சுக்காக வாக்குக் குடுத்துவிட்டுப் போவது எனக்குப் பிடிக்காது:) அதனாலதான் எதுவும் சொல்லாமல் விட்டேன்... அது திடீரென தானா உதிக்கும்:) அப்படி உதிச்சால் எழுதிடுவேன் ..... ஆனா இப்போ எதுவும் வருதில்லையே:)..

    பதிலளிநீக்கு
  73. // அது திடீரென தானா உதிக்கும்:) அப்படி உதிச்சால் எழுதிடுவேன் ..... ஆனா இப்போ எதுவும் வருதில்லையே:).. //

    ஹா.... ஹா... ஹா... நல்ல பாலிஸி! உதிக்கும் பொழுது எழுதி அனுப்புங்கள் அதிரா..

    பதிலளிநீக்கு
  74. படத்துக்குப் பொருத்தமான கதை வெளிவந்துவிட்டதா? எழுதியவர் யாரோ? எள் என்பதற்கு முன்னால் எண்ணெயைக் கொண்டு வந்து நீட்டி இருக்காரே! :))) நம்மை மாதிரி சோம்பேறி இல்லை போல! :)

    பதிலளிநீக்கு
  75. நடுத்தர வர்க்கத்தை முக்கியமாக அரசு ஊழியர்களைத் தான் வருமானவரி அலுவலகம் கசக்கிப் பிழியும்! :( நிறையப் பட்டாச்சு!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!