ஞாயிறு, 25 மார்ச், 2018

காரைத் தாண்டிச் செல்லும் காரிகை!







காரைத் தாண்டிச் செல்லும் காரிகை!  



பள்ளி செல்லும் பாலகர்கள்...



குப்பையா?  குப்பையையே மூடி வைத்திருக்கிறார்களா?! 


மங்கலாக இயற்கைக் காட்சி!


கார்க் கூட்டம்!


சாலை கடக்கக் காத்திருக்கும் மனிதக் கூட்டம்!


"தலைவாரிப் பூச்சூட்டி உன்னை...


பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை..."


"காருக்குள்ளே யாரு...?"


சிக்கல் இல்லாத போக்குவரத்து!


கற்பவர்கள் சென்று விட்டார்கள்..   இவர்கள் கற்பிப்பவர்களோ...?

27 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா...(கீதாக்கா பட்டுக் குஞ்சுலுவோடு டைம்...அதனால ) பானுக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் சிக்கிம் போயாச்சா!!!

    படங்கள் நல்லாருக்கு....தலைவாரிப் பூச்சூட்டி பாடல் ஆஹா! எனக்கு ஆவியினால் அறிமுகமான பாடல்!!! அதற்கு முன் அந்தப் பாடலைக் கவிதையாக அறிந்திருந்தேனே தவிர மெட்டுடன் அறிந்தது ஆவி அதன் வரிகளைக் கொஞ்சம் மாற்றி பாட வைத்தார்.!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. படங்கள் எல்லாம் அருமை. இன்னிக்கு முதல்லே இங்கே வர முடியலை! பிசி! :))))) நாளைக்கு வர முடியாத்! பட்டுக்குஞ்சுலு சென்னையிலே இருக்கு. இனிமேல் தான் இங்கே வரும்!

    பதிலளிநீக்கு
  4. சென்ற வாரம் டிராஃபிக்கில் சிக்கி, தாமதமாக வந்த படங்கள் இந்த வாரம் இடம் பெற்றுவிட்டன கீதா...!

    பதிலளிநீக்கு
  5. சிக்கிம் படங்கள் ஒரு பெரிய தொகுப்பு இருக்கும் போல!

    பதிலளிநீக்கு
  6. வாங்க கீதா அக்கா... பேத்தியைப் பார்க்கும் ஆவலில் இருப்பீர்கள்..

    பதிலளிநீக்கு
  7. // சிக்கிம் படங்கள் ஒரு பெரிய தொகுப்பு இருக்கும் போல! //

    ஆமாம் அக்கா... கிட்டத்தட்ட முடியப் போகிறது!

    பதிலளிநீக்கு
  8. சென்ற வாரம் டிராஃபிக்கில் சிக்கி, தாமதமாக வந்த படங்கள் இந்த வாரம் இடம் பெற்றுவிட்டன கீதா...!//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அதைத்தான் கேக்க வந்தேன் அடுத்த கமென்டாக....அதுக்குள்ள அடுப்பை பாக்கப் போனேன்...ஹிஹிஹிஹி...

    ட்ராஃபிக் ல "சிக்கி" மீண்டும் சிக்கிம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. மீண்டும் என்பதை "மீண்ட" என்றும் வாசித்துக் கொள்ளலாம்!!!
    கீதா

    பதிலளிநீக்கு
  10. // ட்ராஃபிக் ல "சிக்கி" மீண்டும் சிக்கிம்!!! //

    டைப் செய்யும்போதே நானும் இதை யோசித்தேன் கீதா...!

    // மீண்டும் என்பதை "மீண்ட" என்றும் வாசித்துக் கொள்ளலாம்!!! //

    லாம்!

    பதிலளிநீக்கு
  11. இனிய காலை வணக்கம். மீண்டாலும் சிக்கலில்லாத சிக்கிம் படங்கள். அள்ள அள்ளக் குறையாத
    படச் சுரங்கம்.அழகாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. புது செய்தி. பட்டுக் குஞ்சலம் இந்தியா வந்திருக்கிறதா.
    மிக அருமை கீதா. எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே.
    நலவரவு.
    ஸ்ரீரங்கம் வெய்யிலில்லாமல் இருக்கட்டும். பேத்திக்கு என் அன்பு.

    பதிலளிநீக்கு
  13. டைப் செய்யும்போதே நானும் இதை யோசித்தேன் கீதா...!//

    ஹைஃபைவ்!!! ஸ்ரீராம்!! சைக்கிள் காப்ல ஒன்னு சொல்லிக்குவோம்!! என்ன சொல்றீங்க ஸ்ரீராம்.."க்ரேட் மைன்ட்ஸ் திங்க் அலைக்!!!!!!!" ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    சிக்கிம் புகைப்படங்கள் எல்லாம் தெளிவாக அழகாக இருக்கின்றன.படங்களுகேற்ற வரிகளும் அருமை.நேற்று என்னால் வலைப்பக்கம் வர இயவில்லை. அதனால் இன்று சற்று சீக்கிரமாகவே வருகை.என் தளம் வந்து கருத்துக்கள் தந்திருப்பதற்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. நல்ல பல காட்சிகள்.. அதற்கேற்ற வாசகங்கள்..!

    பதிலளிநீக்கு
  16. //புது செய்தி. பட்டுக் குஞ்சலம் இந்தியா வந்திருக்கிறதா.
    மிக அருமை கீதா. எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே.// முந்தாநாள் வந்தாங்க ரேவதி. அவங்க பாட்டி வீட்டிலே மடிப்பாக்கத்தில் இருக்காங்க. இன்னும் இரண்டு நாட்களில் ஶ்ரீரங்கம் வருவாங்க!

    பதிலளிநீக்கு
  17. அருமையான விண்ணப்பங்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  18. அநேகம்பேர் புகைப்படங்களைவெளியிடுகிறார்கள் ஆனால் நல்லகாப்ஷனுடன் வெளியிடுவது சிறப்பாக
    இருக்கிறது

    பதிலளிநீக்கு
  19. குப்பையா? குப்பையையே மூடி வைத்திருக்கிறார்களா?! //

    குப்பை இல்லை ஸ்ரீராம், அவர்கள் உடமைகளை இப்படி மூடி வைத்து இருப்பார்கள்.

    வாத்து மேய்ப்பவர்கள் இது போல் தங்கள் உடமைகளை வைத்து அதன் மேல் கல் எல்லாம் வைப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

    படங்களும் வாசங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  20. படம் எடுத்ததில் புகைப்படம் (அந்தக் கால பெயர். செல்லில் எடுக்கும் படங்களுக்கு என்ன பெயர்?)
    எடுத்தவரின் திறமை மிளிர்கிறது என்றால் ஒவ்வொரு படத்திற்கும் குறிப்பு கொடுத்தவரின் திறமை ரசனையில் விஞ்சுகிறது. இருவரும் ஒருவரே என்றால்?..

    பதிலளிநீக்கு
  21. காரைத் தாண்டிச் சென்ற காரிகையைவிட, அந்தக் காரிகையைக் கூட விடாத, காமிராக் கண்கள் பாராட்டுக்குறியது (?)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!