வியாழன், 15 மார்ச், 2018

அடி உதவற மாதிரி....



அடி உதவற மாதிரி.... 



   தென்னங்கன்றுகள் நன்றாக ஓங்கி வளர்ந்த பின்னும், அதாவது, பத்து ஆண்டுகள் கழித்தும் காய்க்கவில்லை என்றால், அந்த மரங்களுக்கு, உலக்கை பூஜை நடத்தினால், நன்றாக காய்க்க ஆரம்பிக்கும். வெகுநாட்கள் காய்க்காத மரம் எதுவென்று தெரிந்து, அந்த மரத்தை உலக்கையைக் கொண்டு, நன்றாக அடிக்க வேண்டும்.

   மரத்தின் அடிப்பக்கம், சுமார் மூன்று அடி உயரம் வரை சுற்றிச் சுற்றி வந்து, ஐம்பது அடியாவது அடிக்க வேண்டும். அதன்பின், உலக்கையின் பூண் சேர்க்கப்பட்ட பக்கத்தை கொண்டு, ஓங்கி ஓங்கிக் குத்த வேண்டும்.
உலக்கையின் பூண், மரத்தின் மேல், வட்ட வட்டமாக காயம் உண்டாக்க வேண்டும். அந்த அளவிற்கு அடிக்க வேண்டும். இவ்விதம், மூன்று தினங்களுக்கு ஒரு தரம், ஐந்து முறை செய்தால் போதும். அந்த மரம் நன்றாக காய்க்க ஆரம்பிக்கும்.



கொடுமையான முறையா இருக்கே....!!!



— ஆசைராஜா எழுதிய, 'தென்னைமரம்' என்ற நூலிலிருந்து.


=====================================================================================================






===============================================================================================================



ஓ...  தேவதாஸ்.....


​   
சரத் சந்திரர் எழுதிய தேவதாஸ் நாவலைத்தான் திரைப்படமாக எடுத்தார்கள்.

   //திரைப்படமாக எடுக்கப்பட்ட முதல் இந்திய நாவல் என்ற புகழ் பெற்ற தேவதாஸ் படத்தின் மூலக்கதையை எழுதியவர் வங்காள எழுத்தாளர் சரத் சந்திரர். 1917இல் எழுதப்பட்ட இந்த நாவல் 18 வருடங்களுக்குப் பிறகு படமாக்கப்பட்டது. தேவதாஸ், காதல் தோல்விப் படங்களின் முன்னோடி.//

   திரைப்பட வரலாற்றில் மிக அதிக முறை எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்குமோ... சந்திரமுகியாக லலிதா, வைஜயந்திமாலா, ஜெயந்தி, ரம்யா கிருஷ்ணன், மாதுரி தீக்ஷித் (ஐஸ்வர்யா ராய் பார்வதியாக), நடித்திருக்கிறார்கள்.   மலையாள வெர்ஷனில் நடிகை பார்வதியே பார்வதியாக நடித்திருந்திருக்கிறார்! 

   தமிழ் / தெலுங்கு படத்தின் பாடல்கள் வெகு பிரபலம்.  கண்டசாலா, சி ஆர் சுப்பாராமன், விஸ்வநாதன் ராமமூர்த்தி உபயத்தில். (படம் ரிலீஸ் ஆகும் முன் சி ஆர் சுப்பராமன் காலமாகி விட்டார்.  எனவே இந்த இரட்டையர்கள் முடித்து வைத்தார்கள். உலகே மாயம் பாடல் இந்த இரட்டையர் இசை அமைத்தது.  படம் அபார வெற்றி அடைந்தாலும் சி ஆர் சுப்பராமன் மனைவி தனக்கு சேர வேண்டிய பணத்துக்கு கோர்ட் படி ஏறவேண்டி இருந்ததாம்..  அதே போல சந்திரமுகியாக நடித்த லலிதாவும் கோர்ட் படி ஏறி தன் பங்கு பணத்தைப் பெற்றுக்கொண்டாராம்.

   இரட்டை இசை அமைப்பாளர்களில் 'ஜெகமே மாயா'  பாடலை தான் இசை அமைத்ததாய் டி கே ராமமூர்த்தி சொல்ல, கண்டசாலா ஒரு பேட்டியில் அந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் எம் எஸ் விஸ்வநாதன் என்று சொல்லியிருந்தாராம்.


   தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் இருந்த ராஜேந்திரா டூரிங் தியேட்டரில் நான் இந்தப் படத்தைப் பார்த்து அழுதேன்!



நன்றி விக்கி.



=================================================================================================






துணையில்லா வாழ்க்கையின்
வெறுமையை 
சொல்லிக்கொண்டே
இருக்கிறது 
ஓரமாய் ஒதுங்கிக் கிடக்கும் 
ஒற்றை  இருக்கை 





ஒத்தையா காத்திருக்கேன்
உட்கார ஒரு சோடிக்காய்ப் 
பார்த்திருக்கேன்.





இருக்கை கூட
ஈரமாகிறது 
அமர 
ஆள் இல்லாமல்.





அமர ஆளில்லாத 
தனிமை
எங்களுக்கில்லை 
ஒருவருக்கொருவர் 
துணையாய் 
நாங்களே  இருக்கிறோம்.




                                 


ஜோடி ஜோடியாய்
நீங்கள் 
அமர்ந்து 
கதைபேசிக் களித்திருந்துவிட்டு
சென்றபின்னர் தெரிகிறது 
தனிமையின் வெறுமை எங்களுக்கு.



=================================================================================================================






==================================================================================================

116 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  3. காலை வந்தது.. இன்னும்
    காஃபி வரலையே...

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.....துரை அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. காஃபி வரவில்லை. ஆனால் 'படுத்தல் இல்லா நெட்' வந்து விட்டது துரை ஸார்.

    காலை வணக்கம் கீதா ரெங்கன்!

    பதிலளிநீக்கு
  6. ஆகா...
    தொந்தரவு இல்லாத இணையம்....

    அதுவே மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  7. கலக்கல் காலை வணக்கம்.

    இருக்கை கவிதைகளுக்கு இரு கை தட்டி பாராட்டு

    பதிலளிநீக்கு
  8. ஜியோ மொபைல் டேட்டாவை கணினியில் கனெக்ட் பண்ணி தக்னிக் பண்ணி முயற்சி செய்ததில் இப்போது கிடைத்துள்ளது....ஒரு தளம் பார்த்ததுமே மொபைலில் மெஸேஜ் வருது....இவ்வளவு டேட்டாதான் அலவ்ட் என்று ஹா ஹா ஹா...ஒன்னும் புரியலை ...ஏதோ இந்த அளவு முடியுதேனு சந்தோஷம்...பார்ப்போம் எவ்வளவு டேட்டா அத்னோட பாஷையில அலவ் பண்ணுதுனு

    கீதா

    பதிலளிநீக்கு
  9. காலை வணக்கம் ரிஷபன் ஸார்.

    கவிதையைப் பாராட்டியதற்கு சந்தோஷமான நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. தென்னை மரத்துக்கு அடி உதை என்பதெல்லாம் கேள்விப்பட்டதே இல்லை..

    பத்து வருடம் தென்னந்தோப்புகளுக்குள் வாழ்ந்திருக்கிறேன்...

    இது அவர்களுடைய சொந்த அனுபவமாக இருக்கும்...

    தென்னை பூத்ததும் அதற்கு பட்டு கட்டி திருஷ்டி கழித்து சடங்கு செய்வார்கள்..

    பசுஞ்சாணத்தை எருவாகப் போடும் போது தென்னையின் மீது படாமல் போடுவார்கள்...

    ஏனென்றால் தென்னையை பிள்ளையாக பாவிப்பதால்....

    பதிலளிநீக்கு
  11. காஃபி வரவில்லை. ஆனால் 'படுத்தல் இல்லா நெட்' வந்து விட்டது துரை ஸார்.

    காலை வணக்கம் கீதா ரெங்கன்!//

    ஹா ஹா ஹா ஹா ஹா ...இடுக்கண் வருங்கால் நகுக!!! ஹிஹிஹி மொபைல் டேட்டா இப்ப கை கொடுக்குது...பிஎஸ்என்எல் மீண்டும் ரெஜிஸ்டர் செய்திருக்கேன்...பார்ப்போம்....நாங்க ராபர்ட் ப்ரூஸாக்கும்!!! விட மாட்டோம்ல..ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  12. காபி சொல்லிருந்தாங்களே!!! இப்பல்லாம் காபி ஆத்த லேட்டாகுதுனு...மாமா எழுவது லேட் ஆவதால்....ஹா ஹா ஹா ஹா

    கீதா
    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஹை ரிஷபன் ஸாரும் வணக்க ஜோதியில் வந்துவிட்டார்!!! வணக்கம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வாங்க கீதா... எனக்கு இன்று தனி மகிழ்ச்சி. பெரிய கையால் ஒரு பாராட்டு கிடைத்துள்ளது! மாமாவைக் காரணம் சொல்லி கீதாக்கா தப்பிக்கறாங்க..

    பதிலளிநீக்கு
  15. அதிரா பிளாக் எனக்குத் திறக்க மாட்டேன் என்கிறது...

    பதிலளிநீக்கு
  16. // ஏனென்றால் தென்னையை பிள்ளையாக பாவிப்பதால்.... //

    ஆமாம் துரை ஸார்.. அதனால்தான் இதனை இங்கு பகிர்ந்தேன்... சில மரங்களுக்கு செருப்பு, துடைப்ப மாலை போடச் சொல்வார்கள் - அவை காய்க்கவேண்டும் என்பதற்காக. அதிலும் எனக்கு உடன்பாடில்லை.

    பதிலளிநீக்கு
  17. ஆ!!!! பாவம் தென்னை மரம்....இதென்னபா மனுஷன்லதான் "அடி உதவறாப்புல அண்ணன் தம்பி உதவ மாட்டான்னு" சொல்றதுண்டுனா...மரத்துக்குமா.....பாவம்...ஒரு வேளை அப்படி அடிப்பதால் அதன் தசைகள் அதாவது மரத்தின் செல்கள் எல்லாம் நன்றாக சேர்ந்து இறுகி வளர்க்குமோ.....பொட்டானிஸ்ட் யாராவது சொல்லுங்க!!!

    அதுவும் இப்பத்தான் "நம்ம ஊர் பாரம்பரியம் அறிவியல் மிக்கது...அது விளக்கப்படலை...வெளிநாட்டு அறிவியலை பின்பற்றி கெட்டுவிட்டோம்னு வாட்சப் அலறிக் கொண்டே இருக்கிறதே!!! எனது சீரியஸான கேள்வி இதற்கு யாரேனும் அறிவியல் பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  18. தனிமை இருக்கை கவிதைகள் அபாரம்!

    தென்னை மரத்தை உலக்கையால் அடிப்பதா? சே! சே! பாவம்!

    ஆனால் காய்க்காத முருங்கை மரத்தை செருப்பால் அடிப்பதால் அல்லது அப்படி செய்வேன் என்று மிரட்டுவதால் அந்த மரம் காய்க்கத் தொடங்கும் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. பொதுவாகவே விருக்ஷ ராஜன் என்பார்கள்..

    மரங்கள் எல்லாம் செல்வங்கள்..

    செருப்பு விளக்குமாறு இதெல்லாம் கட்டிப் போட்டால் அந்தப் பாவத்தைத் தொலைக்கவே முடியாது...

    பதிலளிநீக்கு
  20. இனிய காலை வணக்கம்.
    இரட்டை பென்ச் கவிதை சூப்பர்.
    தென்னை மரத்துக்கு மருந்து வைப்பார்கள் உரம் போடுவார்கள். அடிப்பார்களா. அனியாயமாக இருக்கே.
    தேவதாஸ் படம் பார்த்து அழாதவர்கள் கிடையாது அப்போது.
    அவ்வளவு நல்ல நடிப்பு.
    இரட்டையர்கள் இசையா. இப்போதுதான் தெரியும்.

    பதிலளிநீக்கு
  21. தென்னை மரம் பற்றிய முதல் தொகுப்பை மட்டும் படிச்சேன். இதைக் காய்க்காத எல்லா மரங்களுக்கும் செய்வார்கள். ஶ்ரீராம் சொல்வது எனக்கு உடன்பாடில்லை என்பது! அப்படி எல்லாம் இல்லை. மரங்களுக்கும் உயிர் உண்டு! ஆகவே இம்மாதிரி செய்வதால் அவற்றுக்கும் ரோஷம் வந்து பூத்துக் காய்க்கும் என்பதே அடிப்படை.

    பதிலளிநீக்கு
  22. எங்க அம்பத்தூர் வீட்டில் ஐந்து வருஷங்களுக்கும் மேல் பூக்காமல் இருந்த எலுமிச்சை மரத்திற்குப் பௌர்ணமியும் கிரஹணமும் சேர்ந்து வரும் நாள் அன்று மாலை புட்டுச் சமைத்து நிவேதனம் செய்து பத்து வயதுக்கு உட்பட்ட கன்னிப் பெண்ணின் கையால் செருப்பு அல்லது விளக்குமாறால் மூன்று முறை வேரின் பக்கம் அடிக்கச் சொல்லி என் அம்மா ஒரு பரிகாரம் செய்தார். அப்படிக் கன்னிப் பெண்கள் இல்லைனாலும் பரவாயில்லை. புட்டு நிவேதனம் செய்துட்டு அடி மரத்தில் கத்தியால் ஒரு கீறல் கீறினால் போதும்! ஒரு மாதத்துக்குள் பூக்க ஆரம்பிக்கும். இது காலம் காலமாக இருக்கும் ஓர் வழக்கம் என்றும் கேள்விப் பட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  23. தென்னை மரத்திலும் பாளை விடவில்லை எனில் அடி மரத்தில் வெட்டுப் போடுவது உண்டு. தென்னை பாளை விட்டால் புட்டுச் சமைத்து நிவேதனம் செய்து ஊரெல்லாம் விநியோகம் செய்வார்கள். எங்க வீட்டுத் தென்னைக்கு நாங்க செய்திருக்கோம். அதே போல் கடந்த பத்து வருஷங்களுக்கு முன்னால் வீட்டில் இருந்த நாரத்தை மரம் ஆறு வருஷங்களுக்கும் மேல் பூக்காமல் இருந்ததுக்கு நான் என் கையால் புட்டுச் சமைத்துப் போட்டுப் பரிகாரம் செய்திருக்கேன். அதன் பின்னர் நாரத்தை பூத்துக் காய்த்தது எனில் காய்கள் தாங்காமல் காய்த்தன! முக்கியமாப் பௌர்ணமியும் கிரஹணமும் சேர்ந்து வரும் நாள் செய்யணும்.

    பதிலளிநீக்கு
  24. ஶ்ரீராம், கவிதையில் கலக்கல். இன்னிக்குக் காலம்பர ஐந்தரைக்குத் தான் எழுந்தேன். ஒரே தலைவலி! தலை தூக்க முடியலை! :(

    பதிலளிநீக்கு
  25. தென்னை மரம் புதிய விடயமாக இருக்கிறதே...

    நல்லவேளை இந்த வைத்தியத்தை மனுஷனுக்கும் சொல்லி வைக்கவில்லை.

    கவிதைகளை இரசித்தேன் ஸ்ரீராம்ஜி.

    பதிலளிநீக்கு
  26. அப்போவே அடித்த கமென்ட் காணாமல் போயிடுச்சே!!! வரவே இல்லை...மீண்டும் என்ன அடித்தேன் என்பதை நினைவுபடுத்திப் பார்த்து..ம்ம்ம்

    ஹான் ஸ்ரீராம் எனக்கும் அதிரா ப்ளாக், துரை அண்ணா, ராஜியின் தளங்கள் பல சமயங்களில் திறப்பதில்லை...நேற்று மாமியார் வீட்டிலிருந்து கொஞ்சம் மிஸ் ஆகிப்போனதெல்லாம் பார்த்தால் அதிரா ரெண்டு பதிவு காட்டியது....அங்கும் நெட் ரொம்ப ஸ்லோ...இருந்தாலும் கமென்ட் போட்டுவிட்டு இங்கு எங்கள் வீடு வர லேட்டாகிப் போச்சு....

    அப்புறம் இன்று காலை மொபைல் டேட்டாவை இதில் போட்டுப் பார்ப்போம் என்று முயன்றதில் இதோ இப்படி...பார்ப்போம் எவ்வளவு டேட்டா வரை இது அனுமதிக்கிறது என்று...

    ஆமாம் ஸ்ரீராம் ரிஷபன் அண்ணாவின் பாராட்டு!! பெரிய மகிழ்ச்சியான ஒன்று...பூஸாரின் பாஷையில் சொல்வதென்றால்..."ஹேன்ட்ஸும் ஓடலை....லெக்ஸும் ஆடலை" தானே?!!!! (எனக்கு எங்கள் ஊர்பழக்கப்படி சிறு வயது முதலே அண்ணா, சிறீயவர் என்றால் பெயர் சொல்லி..., அண்ணி, அக்கா மாமா, என்று சொல்லிப் பழகிவிட்டதால் இந்த ஸார் என்பது ரொம்ப என்னவோ மாதிரி இருக்கு...அதுவும் இங்கு எபியில் எல்லோரும் ஒரே குடும்பம் போல் பழகிவருவதால்...ரிஷபன் ஸார் என்பதை என்னைவிடப் பெரியவராக இருப்பார் எனதால் ரிஷபன் அண்ணா என்று சொல்லுகிறேன். ரிஷபன் அண்ணா தப்பா எடுத்துக்க மாட்டீங்கனு நினைக்கிறேன்....!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  27. ஸ்ரீராம் மரம் பற்றிய கவிதை அட்டகாசம்!!! வாவ்!!! கலக்கறீங்கப்பா..

    கீதா

    பதிலளிநீக்கு
  28. ரெட்டை பெஞ்ச் கவிதைகள் வாவ்!! ஸ்ரீராம் எங்கேயோ போய்ட்டீங்க!! செம....ஏன் இப்பல்லாம் எழுதுவதில்லையா ஸ்ரீராம்!! இப்படியான ஒரு கவிஞரை இந்த உலகம் மிஸ் செய்யலாமோ!!! ப்ளீஸ் மீண்டும் உங்கள் கவி மனதை ஆக்டிவேட் செய்யுங்க...அடிக்கடி!!!

    பெஞ்சுகள் கலங்க வேண்டாம்!! அதான் ஆவி ரூபத்திலும் ஜோடிகள் வந்து அமர்கிறதாமே!!! கோஸ்ட் பெஞ்சு என்று நம்ம பூஸார் போட்டிருந்தாரே!!! ஸோ பெஞ்சஸ் பீ அலர்ட்!! கூர்ந்து பாருங்க ஜோடிகள் அமர்ந்திருப்பது தெரியலாம்!!!!

    ஸ்ரீராம் கலக்கிட்டீங்க!! ரொம்ப ரசித்தேன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. தேவதாஸ் படத்துக்கு இவ்வளவு தகவல்களா!!!

    தேவதாஸ் ரொம்ப சோகக் கதையோ?! பார்த்ததில்லை. ஆனால் பலரும், யாரேனும் ஆண்கள் தாடி வளர்த்தால் "என்ன தேவதாஸா? காதலில் தோல்வியாஅ...இப்படி தாடி வளர்த்து சோகமா இருக்க?" என்பாங்க...

    அதான் ஸ்ரீராம் அழுதிட்டீங்களா?!!! ஸ்ரீராம் அப்படி ஒரு சோகம்னு தெரிஞ்சுருந்தா கூடவே ஒரு மக் அல்லது பக்கெட் எடுத்துட்டுப் போயிருப்பீங்களோ??!!!!!!!!!!!!ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  30. ஹயோ ஸ்ரீராம்!!!!! கடைசி ரத்ததானம் உங்கள் சிந்தனை என்னை வாவ் போட வைத்தது!! செம செம!!!! மை காட்!சத்தியமா அதை வாசிச்சு அப்ப்டியே கொஞ்ச நேரம் ஆஹா ஸ்ரீராமின் கிட்னி எப்படி எல்லாம் சிந்திக்கிறது!!! வாவ்!!! என்று வியந்து பார்த்துக் கொண்டே இருந்தேன்... ஸ்ரீராம் உங்கள் கவித்திறன்...எங்கு போச்சு?!!! அதை கொஞ்சம் உசுப்பி விடுங்க...இல்ல ஒரு வேளை ஃபேஸ்புக்ல போடுறீங்களோ?!! அதை இங்கயும் போடலாம்ல....சுடச் சுட....

    எழுத்தாளரின் பையன் என்றால் சும்மாவா!!!! அதான் பல அடிகள் பாயுது!!! ரசித்தேன்...ரசிக்கிறேன் ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  31. //..மழைபொழிய வானுக்கு வழியில்லை..//

    உங்களை அவ்வப்போது புகழ்வதைத் தவிர வேறு வழியில்லை.

    ஓரத்து பெஞ்சைப் பார்த்து ஓயாது எழுதியிருக்கிறீர்கள் கவிதை.
    தனிமை வாட்டும்தான். அதற்காக குண்டு ஆர்த்தியையாப் பக்கத்தில் உட்கார்த்திவைத்துக்கொள்ளமுடியும் பெஞ்ச் காலியாயிருக்கிறதென்று! அதற்கு ஏகாந்தமே எக்ஸலண்ட்டாயிற்றே !

    //கட்டாய ரத்ததானம்..//

    பின்னே ’மயிலே மயிலே… இறகு போடு-ன்னா போட்டுடுமா?’ – இது மனிதனைப் பார்த்துக் கொசு கேட்கும் கேள்வி.

    பதிலளிநீக்கு
  32. பொதுவாகவே விருக்ஷ ராஜன் என்பார்கள்..

    மரங்கள் எல்லாம் செல்வங்கள்..

    செருப்பு விளக்குமாறு இதெல்லாம் கட்டிப் போட்டால் அந்தப் பாவத்தைத் தொலைக்கவே முடியாது...//
    துரை அண்ணா உங்கள் கருத்தே எனதும்!!!!!
    ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் இதெல்லாம் மனம் ஏற்க கொஞ்சம் அல்ல நிறையவே முரண்டு பிடிக்கிறது..அவர் கருத்தையும் டிட்டோ செய்கிறேன்….
    கீதா அக்கா மற்றும் பானு அக்காவின் மரம் பூக்க காய்க்க செய்பவை வியப்பான அறிந்திராத தகவல்கள். அதுவும் கீதாக்கா தான் செய்து நார்த்தை காய்த்தது என்று சொல்லியிருப்பது வியப்பா இருக்கு……நான் இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. //மாமாவைக் காரணம் சொல்லி கீதாக்கா தப்பிக்கறாங்க..// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதெல்லாம் இல்லை. செல்ஃபோன் தொலைந்ததில் போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்கும் அவர் அலைச்சல். நேத்திக்குத்திடீர்னு ராத்திரி கூப்பிட்டுச் சாப்பிடக் கூட உட்கார முடியாமல் போயிட்டு எட்டு மணிக்கு வந்தார். சாப்பிட்டுப் பின்னர் குடியிருப்போர் நலச் சங்கச் சந்திப்பு! ராத்திரி வர நேரம் ஆயிடுச்சு! காலை அவரும் ஐந்தரைக்கு எழுந்தார்! நானும் தலைவலியால் ஐந்தரைக்குத் தான் எழுந்தேன்! :)

    பதிலளிநீக்கு
  34. //கீதா அக்கா மற்றும் பானு அக்காவின் மரம் பூக்க காய்க்க செய்பவை வியப்பான அறிந்திராத தகவல்கள். அதுவும் கீதாக்கா தான் செய்து நார்த்தை காய்த்தது என்று சொல்லியிருப்பது வியப்பா இருக்கு……நான் இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன்! // ஒரு விதத்தில் நீங்க சொல்வது சரி தான். என் மாமியார் வீட்டிலும் இதைக் கேள்விப் பட்டதில்லை என்றிருக்கிறார்கள். அதுவும் மதுரையில் நாங்க இருந்த வீடுகளில் எல்லாம் தோட்டம் என்று கிடையாது. தொட்டிச் செடிகள். ஆகவே அவங்க எங்களுக்குப் பயிர்களைப் பற்றியோ வயல்வெளி வேலைகள் குறித்தோ, செடி, கொடிகள் பற்றியோ எதுவும் தெரியாமல் சொல்லுகிறோம்னு சொல்லிச் சிரிப்பாங்க! அவங்க எவ்வளவோ சிரிச்சும் ஒரு பௌர்ணமி, கிரஹணத்தன்று மாலை என் அம்மா வந்து புட்டுச் சமைத்து எலுமிச்சை மரத்துக்குப் போட்டுவிட்டு மரத்தின் அடியில் எங்கள் பெண்ணை விட்டு (அப்போ அவளுக்கு எட்டு, ஒன்பது வயசு) ஒரு கத்தியால் லேசாகக் கீறச் சொன்னாங்க. ஒரு மாதத்துக்குள் மரம் பூத்துக் குலுங்கிப் பின்னர் இரண்டாவது மாதம் காய்கள்! மரம் கொள்ளாமல் காய்க்கும். ஒரு எலுமிச்சை சின்னக் கமலா ஆரஞ்சு அளவு பெரிதாக இருக்கும். அதே போல் நாரத்தை மரத்துக்கும் நான் என் கைகளால் செய்து அதை அறுவடை செய்திருக்கேன். இதெல்லாம் மரத்துக்குக் கெடுதல் செய்வது என்றெல்லாம் வராது. அதிகக் கிளைகள் இருந்தால் வெட்டுவோம். உதிர்ந்த இலைகளை எடுப்போம். தென்னை மரத்தில் மாதம் ஓர் ஓலை மட்டை கீழே தானாக விழும். விழவில்லை எனினும் பன்னாடைகளைக் கழிப்போம். அப்போத் தான் பாளை விடும் என்று. அந்த வகையில் தான் இதுவும் சேர்த்தி. இதனால் மரங்களுக்குப் பாதிப்பு இல்லை. என்றும் விருக்ஷராஜன் விருக்ஷ ராஜனே தான்! விருக்ஷ ராஜனுக்கும் உடம்பு சரியில்லை எனில் உரம் வைக்க மாட்டோமா! இது முன்னோர் சொன்ன ஒரு வழி!

    பதிலளிநீக்கு
  35. //செருப்பு விளக்குமாறு இதெல்லாம் கட்டிப் போட்டால் அந்தப் பாவத்தைத் தொலைக்கவே முடியாது...//
    துரை அண்ணா உங்கள் கருத்தே எனதும்!!!!!//

    தவறான புரிதல். ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் கருத்து! அதில் நான் தலையிடவில்லை. ஆனால் செருப்பையோ விளக்குமாறையோ மரங்களில் கட்டிப் போட மாட்டார்கள். வேருக்கு மேல் அடி மரத்தில் லேசாகக் கீறல் போடச் சொல்லுவார்கள். அல்லது லேசாக அடிக்கச் சொல்லுவார்கள். அவ்வளவே! நாம் நம் குழந்தை என்பதால் சில(பல) சமயம் குழந்தை செய்யும் குறும்புகள் அதிகமானால் கண்டிக்காமல் இருப்பதில்லை! அது எப்படிச் சரியோ அதே போல் இதுவும்!

    பதிலளிநீக்கு
  36. //நல்லவேளை இந்த வைத்தியத்தை மனுஷனுக்கும் சொல்லி வைக்கவில்லை.// கில்லர்ஜி, மனிதருக்கும் வேறு மாதிரி உண்டு. திருமணம் ஆகி நீண்ட வருடங்கள் குழந்தை பிறக்கவில்லை எனில் முதலில் செய்வது என்ன தெரியுமா? யாரேனும் ஓர் தெரிந்த பெண்ணிற்கு ஒரு வருடத்திற்குள் குழந்தைப்பேறு கிட்டி வளைகாப்பு நடந்தால் அவளுடன் இந்தக் குழந்தை பிறக்காத பெண்ணையும் உட்கார்த்தி வைத்து வளை அடுக்குவார்கள்.

    அப்படியும் குழந்தை பிறக்கவில்லை எனில் முதல் குழந்தை பெற்றவளுக்குப் புண்யாஹவசனம் ஆகும் போது இந்தக் குழந்தை பிறக்காத பெண்ணையும் அழைத்து வந்து குழந்தைக்குக் குளிப்பாட்ட உதவச் செய்வார்கள். அதற்கு முதலில் அவர்கள் செய்வது ஓர் அம்மிக்குழவியைக் குழந்தை போல் பாவித்து அதைக் குளிப்பாட்டச் சொல்லுவது தான். அம்மிக்குழவிக் குழந்தைக்குக் குளிப்பாட்டி உடல் துடைத்துப் பின்னர் கண் மை திருஷ்டிப் பொட்டு வைத்துப் பாலூட்டச் சொல்லுவார்கள். இதை எல்லாம் குழந்தை இல்லாத பெண் செய்வாள். பின்னர் முதல் குழந்தை பெற்றவளின் குழந்தையைக் குளிப்பாட்டித் துடைத்து அலங்காரம் செய்து தொப்புளில் வெல்லத்தை உருட்டி வைத்துச் சுளகில் போட்டுக் குழந்தை பெறாதவளிடம் கொடுப்பார்கள். குழந்தை பெறாதவள் அந்தக் குழந்தையை எடுத்து அணைத்துக் கொண்டு வெல்லத்தைக் குழந்தை பெற்றவளிடம் கொடுப்பாள். பின்னர் சற்று நேரம் குழந்தையைச் சீராட்டிய பின்னர் தாயிடம் குழந்தை திரும்பப் போகும். வெல்லத்தைக் கொடுத்துக் குழந்தையைப் பெற்றேன். இனியாவது எனக்கென ஒரு குழந்தையைத் தா எனக் கேட்பதுவாம் அது! இதை நான் சிறு வயதில் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  37. எலுமிச்சை மட்டும் கிளைகளை வெட்டினாலோ அல்லது ஓர் இலையைக் கிள்ளினாலோ திரும்ப வராது. பட்டுப் போய்விடும். ரொம்பவே உணர்வுகள் மிகுந்த மரம் அது! வர வைக்கிறதும் கஷ்டம். பாதுகாப்பதும் கவனமாக இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  38. தேவதாஸ் படம் நான் பார்த்ததில்லை. என்னமோ கதையோ படமோ என்னைக் கவரவில்லை. ஆசைராஜா தென்னை மர வளர்ப்புக் குறித்து நன்கு தெரிந்து கொண்டு தான் எழுதி இருப்பார்.

    தி/கீதா, இதற்கெல்லாம் அறிவியல் ரீதியான காரணங்கள் இல்லை. நம்பிக்கை தான்! எனக்கு அனுபவங்கள் ஏற்பட்டிருப்பதால் நம்புகிறேன். இனியும் நம்புவேன். :)

    பதிலளிநீக்கு
  39. இன்னும் சிலவற்றுக்கும் இந்த உரல், உலக்கை பூஜை உண்டு. அது குறித்துப் பின்னர் வேறோர் சமயம்! :)))))) இதெல்லாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையால் தெரிந்து கொள்ள முடிந்த விஷயங்கள்.

    பதிலளிநீக்கு
  40. @ KILLERGEE Devakottai said...

    >>> நல்லவேளை இந்த வைத்தியத்தை மனுஷனுக்கும் சொல்லி வைக்கவில்லை..<<<

    தப்பித்தோமடா ஜாமீய்...ய்ய்ய்!....

    பதிலளிநீக்கு
  41. கீதாக்கா என் அம்மாவின் அம்மா வயல் வைத்திருந்தார்கள். உளுந்து, நெல் என்று மாற்றி மாற்றிப் பயிரிட்டார்கள், வீட்டில் வாழை உண்டு, மா உண்டு....ப்ராசு இலை மரம் உண்டு...நார்த்தை, எலுமிச்சை இருந்தது....பூச்செடிகள் இருந்தன....வீட்டில் இருந்த வாழை மொந்தன் வாழை....அப்புற்ம் பாடவரைககய் என்பதும் காய்க்கும்....என்றாலும் இப்படிச் செய்ததில்லை...

    அது போன்று இப்போது மாமியார் வீட்டிலும், அருநெல்லி, சப்பொட்டா, தென்னை, மா, எலுமிச்சை கொயா எல்லாம் இருக்கு...இப்படிச் செய்ததில்லை....காய்கள் குறைந்துவிட்டது குறிப்பாக எலுமிச்சை...கொய்யா, சப்போட்டா எல்லாம் அணில்களுக்கு!!! ஹா ஹா ஹா அல்லது கிளிகள் வரும்....கறிவேப்பிலை மட்டும் மோர் விடுவதுண்டு....நுனியில் கொப்பாகக் கிள்ளி பறிக்க வேண்டும் என்பதால் அப்படிப் பறிப்பதுண்டு...நன்றாக வளரும்....

    உங்க தக்னிக்கை எலுமிச்சைக்குச் செய்து பார்க்கிறேன்.....

    கீதா

    பதிலளிநீக்கு
  42. எலுமிச்சை மட்டும் கிளைகளை வெட்டினாலோ அல்லது ஓர் இலையைக் கிள்ளினாலோ திரும்ப வராது. பட்டுப் போய்விடும். ரொம்பவே உணர்வுகள் மிகுந்த மரம் அது! வர வைக்கிறதும் கஷ்டம். பாதுகாப்பதும் கவனமாக இருக்கணும்.//

    ஆம் கீதாக்கா இது என் அனுபவம்....வீட்டிற்கு வருபவர்கள் இலையைக் கிள்ளி மணம் இருக்கிறதா என்று பார்ப்பார்கள்...நான் தயவாய் செய்யாதீர்கள் என்று சொல்லி எலுமிச்சையிடம் மன்னிப்பு கேட்டுப் பேசுவதுண்டு..அதை சமாதானப்படுத்துவது போல் பேசுவதுண்டு...அது போல் நாம் துளசி இல்லை பூக்களைப் பறித்தால் அவற்றின் அனுமதி கேட்டுப் பறிக்க வேண்டும் என்று சின்ன வயதில் எனக்கு என் பாட்டி சொல்லியதால் (அப்பாவின் அம்மா) அது இப்போது வரை தொடர்கிறது...என்றாலும் பெரும்பாலும் பறிக்கும் பழக்கம் எனக்கில்லை என்பதால் பறிப்பதில்லை...பெரியவர்கள் இறைவனுக்குக் கொடுக்கவேண்டிப் பறிக்கச் சொன்னால் மட்டும் பறிப்பது ..எல்லா தாவரங்கள் மரங்கள் எலலவற்றிற்கும் உணர்வுகள் உண்டு....இதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  43. கீதாக்கா குழந்தை பிறப்பதற்கு குழவி குளிப்பாட்டல், சுளகு, வெல்லம் எல்லாம் ஆம் எங்கள் ஊரிலும், எங்கள் குடும்பங்களிலும் செய்து பார்த்திருக்கேன்....

    கீதா

    பதிலளிநீக்கு
  44. அருமையான தகவல்கள் பாவம் தென்னைமரம்

    பதிலளிநீக்கு
  45. பெஞ்ச் கவிதை அருமை பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  46. தென்னை மர வளர்ப்புக்கு இப்படி ஓர் உத்தி உள்ளதேர்?

    பதிலளிநீக்கு
  47. அனைத்தும் அருமை...

    கவிதைகள் சூப்பர்...!

    பதிலளிநீக்கு
  48. ரெட்டை பெஞ்ச் கவிதைகள் சூப்பர். தென்னை மரத்தினை அடித்து காய்க்க வைப்பது எனும் தகவல் மனதுக்கு கஷ்டமாக இருக்கு. அதுவும் ஓர் உயிர்தானே. எங்க ஊரில் இப்படி செய்து பார்த்தோ,கேள்விப்பட்டதோ இல்லை.
    கொசு, மரம் பற்றிய கருத்து செம. தேவதாஸ் படம் பற்றிய தகவல்கள் அறியாதது.

    பதிலளிநீக்கு
  49. ///மரத்தின் அடிப்பக்கம், சுமார் மூன்று அடி உயரம் வரை சுற்றிச் சுற்றி வந்து, ஐம்பது அடியாவது அடிக்க வேண்டும். ///

    ஓ இதுதான் “தென்னை மரத்தில தென்றல் அடிக்குது நந்தவனக்குயிலே”... என மாறியிருக்குமோ?:).. என்ன கொடுமை வைரவா.. எப்படியோ காய்ச்சால் சரிதான்.

    எங்கள் வீட்டில் மாமரம் பூக்க லேட்டானால்.. கீழே புகைப் போட்டு விட்டால் பூக்கும்.. தென்னை அடியிலும் இப்படி புகைப் போட்டு விடுவதாக நினைவு.

    பதிலளிநீக்கு
  50. 1. அடி உதவறமாதிரி - இது ஒரு கான்செப்ட். செடி கொடி மரங்களுக்கு உயிர் உண்டு. அவைகள் நம்மை அறிந்துகொள்ளும். இதுவே நெருப்புக்கும் இன்ன பிற ஜடப்பொருட்கள் என்று நாம் நினைப்பவை அனைத்துக்கும். திட்டும்போது செடிகள் வாடுவதும், நம் விருப்பத்தை அன்புடன் தெரிவிப்பதால் அவை மகிழ்ந்து செய்வதும், சிலவற்றை பயமுறுத்துவதால் அவை பயந்து நாம் நினைப்பதைச் செய்வதும் நடப்பவைகள்தான்.

    2. பெஞ்ச் கவிதைகளை ரசித்தேன். ஆனால் அதிரா இடுகையில் வந்த, 'பூங்கொத்து' வைக்கப்படும் பெஞ்சுகள் ஞாபகம் வந்தன.

    3. தேவதாஸ் படம் இப்போது உள்ள ஜெனெரேஷன் நிச்சயம் ரசிக்காது.

    4. எமன்: ஏனப்பா ஒரு உதவியும் வாழ்ந்தபோது செய்யவில்லை. உனக்கு எண்ணெய்க் கொப்பரைதான் தயாராக இருக்கிறது.
    ..ம்: நான் ஒன்றும் செய்யவில்லை என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள். கட்டாய ரத்த தானமாவது செய்தேனே, எங்களூர் கொசுக்களுக்கு.
    எமன்: ஆமாம். கொஞ்சம் புண்ணியம் சேர்ந்தது. ஆனால், இடை இடையே கொசுக்களைக் கொன்றதன்மூலம், தானம் கொடுத்த ரத்தத்தையும் திருப்பி வாங்கிக்கொண்டுவிட்டாய். அதற்குமேல் கொலை பாதகமும் செய்திருக்கிறாயே. அதற்காகத்தான் எண்ணெய்க் கொப்பரை.

    பதிலளிநீக்கு
  51. 'உலக்கை பூஜை' என்பது மிகக் கொடூரமானது. யோசித்துப் பாருங்கள்... குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக நம் 'பெண்'/'நண்பி'களுக்கு இந்த பூஜையை அவர் கணவர் செய்தால் நாம் அதை எப்படி எடுத்துக்கொள்வோம் என்று. இதற்குத்தான் 'உயிர்களிடத்து அன்பு வேணும்' என்று பாடியது.

    பதிலளிநீக்கு
  52. ஆஹா இம்முறை விசாழக்கிழமை முழுக்க முழுக்க ஸ்ரீராமின் ஹைக்கூவோ?:).... முதலாவதே இரண்டு வரியில் நச்சென இருக்கு...

    தேவதாஸ் கேள்விப்பட்டேன் பார்க்கவில்லை படம்.. பார்த்து நானும் ஒரு தடவை அழோணும்:).. அழுதிடுவேனோ எனும் பயத்திலேயே பலபடம் பார்ப்பதை தவிர்த்திடுவேன். தாடியோடு ஆராவது உலாவினால் தேவதாஸ் வேசம் எதுக்கு என்போம்.. ஆனா இப்போ சந்தோசம் வந்தாலும் தாடிதான் வளர்க்கிறார்கள்.

    //தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் இருந்த ராஜேந்திரா டூரிங் தியேட்டரில் நான் இந்தப் படத்தைப் பார்த்து அழுதேன்!///

    ஹா ஹா ஹா நினைச்சேன் சிரிச்சேன்ன்... நண்பனின் மரணம் இன்னும் வரல்லியே சே.. சே.. மருந்து குடிச்சும் இன்னும் ஏதும் ஆகல்லியே எனத் துணிவாக இருந்த ஸ்ரீராமா.. தேவதாஸ் பார்த்து அழுதார்???:). அப்போ படம் ஒருதடவை பார்த்தே தீரோணும்.

    பதிலளிநீக்கு
  53. //நெ.த. said...
    'உலக்கை பூஜை' என்பது மிகக் கொடூரமானது. யோசித்துப் பாருங்கள்... குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக நம் 'பெண்'/'நண்பி'களுக்கு இந்த பூஜையை அவர் கணவர் செய்தால் நாம் அதை எப்படி எடுத்துக்கொள்வோம் என்று//

    ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்ர்ர்:)) நெஞ்சு பொறுக்குதில்லை...:)) கர்ர்ர்ர்:)) குழந்தை பிறக்கவில்லை எனில்.. கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கோணும் என எழுதியிருக்கோணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)).. இதென்ன மனைவிக்கு கணவன் அடிப்பது.... விடுங்கோ என்னை விடுங்கோ தடுக்காதீங்கோ.. இப்பவே போகிறேன்ன் பிரித்தானியா சுப்பையா அங்கிள் கோர்ட்டுக்கு.. நேக்கு நீடி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்:)))..

    ஓடுறார் ஓடுறார் விட்டிடாதையுங்கோ.. ஹையோ கீசாக்கா.. விரைவா ஓஒடிப்பிடியுங்கோ நெ.தமிழனை.. நான் ஸ்கொட்லாண்ட்யாட்டைக் கூட்டி வாறேன் ஓடிப்போய்:)).. ஹா ஹா ஹா:)).. பின்ன ஆ எண்டாலும் ஊ எண்டாலும் எப்போ பெண்களைத் தாக்கலாம் என நினைப்பு:))

    பதிலளிநீக்கு
  54. பெஞ் கவிதைகள்.. ஆஹா என்ன ஒரு அழகிய கற்பனை... அத்தனையும் அருமை..

    ஆனா ஏன் கவிதைகள் அப்புறிக்காவுக்கும் அந்தாட்டிக்காவுக்கும் போய் நிக்குது.. ஒரே பக்கமா போட்டு விடலாமெல்லோ.. வலப்புறக் கவிதை என் கண்ணுக்கு தெரியவே இல்லை.. கொம்.ஸ்கிறீனின் வலது பக்கம் போய் நிக்குதே.. கண்டுபிடிச்சுப் படிச்சிட்டேன்:))

    //இருக்கை கூட
    ஈரமாகிறது
    அமர
    ஆள் இல்லாமல்.//

    மழை பெய்திருக்குமோ? இல்ல வைரவரின்[பப்பி] சேட்டையாக இருக்குமோ ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  55. //அமர ஆளில்லாத
    தனிமை
    எங்களுக்கில்லை
    ஒருவருக்கொருவர்
    துணையாய்
    நாங்களே இருக்கிறோம்.//

    ஆஹா போதுமென்ற மனமே....:)) நினைவுக்கு வருது..

    பதிலளிநீக்கு
  56. ///ஜோடி ஜோடியாய்
    நீங்கள்
    அமர்ந்து
    கதைபேசிக் களித்திருந்துவிட்டு
    சென்றபின்னர் தெரிகிறது
    தனிமையின் வெறுமை எங்களுக்கு.///

    ஐந்தறிவான
    பெஞ்சுக்கும் இது
    புரியுது
    ஆனா 6 அறிவான
    மனிசர்தான்
    ஜோடியை எங்காவது கண்டால்
    கண்டறியாத காதல்
    பப்புளிக்கில என்ன உரசல்
    வேண்டிக்கிடக்கு
    எனத் திட்டுறாங்க:))
    ..... இது பெஞ் அருகில் இருக்கும் மாமரக் குருவியின் புலம்பல்.. ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  57. ///4. எமன்: ஏனப்பா ஒரு உதவியும் வாழ்ந்தபோது செய்யவில்லை. உனக்கு எண்ணெய்க் கொப்பரைதான் தயாராக இருக்கிறது.
    ..ம்: நான் ஒன்றும் செய்யவில்லை என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள். கட்டாய ரத்த தானமாவது செய்தேனே, எங்களூர் கொசுக்களுக்கு.
    எமன்: ஆமாம். கொஞ்சம் புண்ணியம் சேர்ந்தது. ஆனால், இடை இடையே கொசுக்களைக் கொன்றதன்மூலம், தானம் கொடுத்த ரத்தத்தையும் திருப்பி வாங்கிக்கொண்டுவிட்டாய். அதற்குமேல் கொலை பாதகமும் செய்திருக்கிறாயே. அதற்காகத்தான் எண்ணெய்க் கொப்பரை.///

    ஹா ஹா ஹா வை திஸ் கொலை வெறி:).. புரிஞ்சுபோச்சு:) இன்று தமனாக்கா ரேன்:)) எதிர்பார்த்தேன் இளங்கிளியைக் காணல்லியே:)) ஸ்ரீராம் ஏமாத்திப் போட்டார் என்றதன் வெளிப்பாடுதேன்ன் இந்த எண்ணெய்க் கொப்பரை:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  58. கட்டாய ரத்த தானம் மிக அருமை.. ஒரு நாளைக்கு விசம் குடிச்சுப் போட்டு கட்டாய ரத்த தானம் நாம் செய்யோணும்:)) ஹா ஹா ஹா:).

    பதிலளிநீக்கு
  59. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  60. கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கோணும் - அதிரா... தென்னைக்கு மட்டும் இந்த சட்டம் இல்லையா? அதன் பூவின் மகரந்தச் சேர்க்கை நடந்தால்தானே தென்னங்குலை வரும்? அப்போ பக்கத்துல இருக்கற மற்ற தென்னை மரங்களை அடிப்பதுண்டா? இல்லை. அதனால் இங்கு 'மனைவியை' மட்டும் எடுத்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு

  61. ///Geetha Sambasivam said...
    எலுமிச்சை மட்டும் கிளைகளை வெட்டினாலோ அல்லது ஓர் இலையைக் கிள்ளினாலோ திரும்ப வராது. பட்டுப் போய்விடும். ரொம்பவே உணர்வுகள் மிகுந்த மரம் அது! வர வைக்கிறதும் கஷ்டம். பாதுகாப்பதும் கவனமாக இருக்கணும்.///

    யாரங்கே. கீசாக்காவுக்கு கொஞ்ச நேரம் கறண்டைக் கட் பண்ணுங்கோ:) ஓவரா துள்ளுறா:)) ஹையோ கலைக்கப் போறாவே:))..

    இந்த எலுமிச்சைக்கு பிழிஞ்ச தேங்காய்ப்பூக்களைத் தூவினால் பூக்கும் எனவும் ஒரு நம்பிக்கை இருக்கு.

    இதை வெட்டக்கூடாதாஆஆஆஅ?:) கர்ர்:) எங்கள் வீட்டில் இங்கு சாடியில்.. தானாஅ முளைச்ச மரம் தனியாக நின்றமரம்.. ஏன் முளைச்சுதோ என நினைச்சு வளர்த்தேன்ன்ன்ன்...:)

    அது மேல் சீலிங்கை முட்டுமளாவுக்கு வளர்ந்துதா.. பேஎஸ்புக்கில் கேட்டேன்ன் குறுக்க வெட்டி விடு என்றார்கள் வெட்டி விட்டேன் கிளைகள் வந்துது ஆனா பின்பு மொத்தமா பட்டுப் போச்சு.. தூக்கி வெளியே வச்சேன் ஒரு வருடமா குளிரிலும் மழையிலும் இருந்து, போன சமரில மீண்டும் முளைச்சு 4 இலை வந்துது திரும்ப தூக்கி இப்போ உள்ளே வச்சிருக்கிறேன்.. இப்ப்போவும் 4 இலையோடயே குட்டியா நிக்குது...

    நானும் அறிந்தேன் துப்பரவாக இருக்கோணும்.. அழுக்கு, துன்பம் தாங்கதாமே தேசிமரம்.

    எழுத்துப்பிழை மேலே அதனாலேயே மீண்டும்:)..

    பதிலளிநீக்கு
  62. ///நெ.த. said...
    கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கோணும் - அதிரா... தென்னைக்கு மட்டும் இந்த சட்டம் இல்லையா? //

    ஹா ஹா ஹா நீங்க சாட்டுச் சொல்லி சமாதானப் படுத்துறீங்க:)).. நோஓஓஓஓஓஓ நான் சுப்பையா அங்கிளை சந்திக்கப் போறேன்ன்:)) நேக்கு நீடி வேணும்:)) ஹையோ இதென்ன என் செக் கூட துணைக்கு இல்லையே:))

    .. தென்னையில் ஆண் தென்னை இல்லையோ? மரங்களிலும் ஆண் மரம் கேள்விப்பட்டிருக்கிறேன்.. பப்பா மரத்தில் இருக்கு ஆண்மரம் காய்ப்பதில்லை பூ மட்டும் வரும்... ஆனா பல மரத்தில எந்த ஆண்மரத்துக்கு என தேடி அடிப்பது கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா ஸ்ரீராமால ஒரே கொயப்பமா இருக்கெனக்கு:)) நேரமாச்சு பின்பு வாறேன்ன்:))

    பதிலளிநீக்கு
  63. நீ காய்க்க வில்லை என்றால் வெட்டிபோட்டு விடுவேன் என்று அதன் கிட்டே போய் பேசுவார்கள் என்பார்கள்.
    இப்படி கேள்வி பட்டது இல்லை.
    காய்க்கவில்லை என்றால் மருந்து வைப்பார்கள்.
    கிராமத்தில் நிறைய விஷயங்க்கள் இருக்கும்.

    எங்கள் தாத்தாவீட்டில் நிறைய தென்னைமரம் இருந்தது,
    இப்போது குறைந்து 15 மரங்கள் இருக்கிறது
    அவர்களிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.


    //சரத் சந்திரர் எழுதிய தேவதாஸ் நாவலைத்தான் திரைப்படமாக எடுத்தார்கள்//.


    தேவதாஸ் சாவித்திரி, நாகேஸ்வரராவ் நடித்த படமும், நாவலும் படித்து இருக்கிறேன்.
    செய்தி தொகுப்பு அருமை.

    மழை கவிதை அருமை, மரம் நடுவோம், மழை பெறுவோம் என்பதை சொல்கிறது.

    இருக்கை கவிதை அருமை.
    கொசு கவிதையும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  64. நான் வைத்த காலை வணக்கமும், இருக்கை கவிதைகளுக்கு அனுப்பிய பாராட்டுகளும் என்ன ஆனது?கீதா ரங்கனுக்கு முன்பாகவே அனுப்பி விட்டேனே...:(( எதிர் கட்சிகளின் சதியோ??

    பதிலளிநீக்கு
  65. / ஒரு நாளைக்கு விசம் குடிச்சுப் போட்டு கட்டாய ரத்த தானம் நாம் செய்யோணும்:)) ஹா ஹா ஹா:).//

    கர்ர்ர் :) நான் சொன்னேன்ல போலி டொக் tear :)

    பதிலளிநீக்கு
  66. //வெகுநாட்கள் காய்க்காத மரம் எதுவென்று தெரிந்து, அந்த மரத்தை உலக்கையைக் கொண்டு, நன்றாக அடிக்க வேண்டும்.//

    noooo இது அநியாயம் rspca மாதிரி TSPCA இருக்கணும் .அந்த மரம் பாவமில்லையா .மரங்களுக்கும் உணர்விருக்கு
    ஸ்கொட்லாந்தில் ஒரு மரத்தை வெட்டினதும் அதன் பக்கத்தில் இருந்த ப்ரண்டு மரம் பட்டுப்போச்சாம் :( யார் வீட்லனு தெரியும்தானே

    எங்க வீட்ல கீரைச்செடியை போட்டுட்டு அதை பறிக்கும்போதே ரொம்ப டென்ஷன் ஆகிடுச்சு எனக்கு .
    அந்த மரத்துக்கிட்ட போய் அன்பா பேசினா அது தேங்காய் தராதா என்ன .


    மரம் /மழை .கவிதை சூப்பர் ..ஆனா சென்னைக்காரங்களுக்குத்தான் மரம் வளர்க்கவே இடம் இல்லையே
    எங்க ஊரில் மழை கொட்டிட்டு இருக்கு இப்பவும்

    பதிலளிநீக்கு
  67. //நான் வைத்த காலை வணக்கமும், இருக்கை கவிதைகளுக்கு அனுப்பிய பாராட்டுகளும் என்ன ஆனது?கீதா ரங்கனுக்கு முன்பாகவே அனுப்பி விட்டேனே...:(( எதிர் கட்சிகளின் சதியோ??//

    இருக்கே பானு அக்கா... 19, 20 ஆவது கமெண்ட்.

    பதிலளிநீக்கு
  68. ஓஹோ !அப்போ இந்த தேவதாஸ் படம்தான் எல்லாரையும் காதல் தோல்வினா சோம சுராபானத்தில் மூழ்க வச்சதோ ??
    இதை பார்த்து இதை சாக்கிட்டு எத்தினிப்பேர் பாட்டிலுக்கு அடிமையாகிருப்பாங்க

    கர்ர்ர் .இந்த படம் பார்த்ததில்லை உலகே மாயம் பாட்டு டிவில பார்த்து அழுத்திருக்கேன் .நாலு கால் செல்லாம் நாகேஸ்வரராவோடு தெருவில் இருக்கும் .அப்போவே இந்த ட்ரங்கர்ட் குழந்தைக்கு மம்மு ம்கொடுத்தாரா இல்லையான்னு கவலைப்பட்டேன் ..

    ஆனா அப்பாவும் சின்னதா ஒரு சந்தோசம் நாகேஸ்வரராவ் பார்த்து அங்கே ஜெமினி இல்லைன்றத்தால் சந்தோசம் :)

    பதிலளிநீக்கு
  69. வெரி sorry அவசர டைப்பிங் கூகிள் ரொம்ப மிஸ்டேக் தருது ..

    பதிலளிநீக்கு
  70. //ஜோடி ஜோடியாய்
    நீங்கள்
    அமர்ந்து
    கதைபேசிக் களித்திருந்துவிட்டு
    சென்றபின்னர் தெரிகிறது
    தனிமையின் வெறுமை எங்களுக்கு//

    கர்ர்ர் :) பேசறதை ஒட்டுகேட்டுட்டு வெறுமையாம் :)

    பதிலளிநீக்கு
  71. எங்க ஊரில் அதிகம் இப்படி பெஞ்சுகள் இருக்கும் பலசமயம் பஞ்சாபி குஜராத்தி தாத்தாக்கள் உக்கார்ந்து பேசுவாங்க .அவ்வழி கடந்தா .in 1955 இப்படி வார்த்தை கட்டாயம் காதில் விழும் :)
    சிலநேரம் தேவதாஸ்கள் இருப்பாங்க மெய்மறந்து ஸ்லீப்பிங் பைகளுடன் .எங்கூர் பெஞ்சுகள் லோனிலியா feel பண்றதில்லை :)
    கொஞ்சம் லண்டன் வந்து எங்கூர் பெஞ்சுகள் பற்றியும் கவிதை வடிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்

    பதிலளிநீக்கு
  72. //கீதாக்கா என் அம்மாவின் அம்மா வயல் வைத்திருந்தார்கள். உளுந்து, நெல் என்று மாற்றி மாற்றிப் பயிரிட்டார்கள், வீட்டில் வாழை உண்டு, மா உண்டு....ப்ராசு இலை மரம் உண்டு...// வயல்னு பார்த்தா எங்க அப்பா, அம்மா வீடுகளிலேயும் உண்டு தான். ஆனால் கிராமத்தில் இருந்து கொண்டு பயிர் செய்தது இல்லை. குத்தகைக்கு விடுவாங்க. நஞ்சை, புஞ்சை இரண்டும் இருந்தது. இந்தப் புஞ்சை என்னும் வார்த்தையோ அது குறித்தோ எங்க புக்ககத்தார் அறிந்ததே இல்லை. நான் கல்யாணம் ஆகிப் போனப்போ நிலம் குறித்துப் பேச்சு வந்தது. உளுந்து, பயறு, கடலை எல்லாம் எப்போப் போடுவாங்கனு கேட்டதுக்கு நான் எப்போ வேணாப் போடுவாங்கனு பதில் சொன்னதும் ஒரே சிரிப்பு! ஏனெனில் தஞ்சை ஜில்லாவில் நஞ்சை நிலத்திலேயே நெல் அறுவடைக்குப் பின்னர் பயறு , உளுந்து தெளித்தல் என நடக்கும். ஆகவே நான் சொன்னது அவங்களுக்குச் சிரிப்பு! பின்னே நெல் எப்போப் போடுவாங்கனு கேட்டதுக்கு அது பாட்டுக்குப் போடுவாங்க! மூணு போகமும் நெல் தான் என்றதும் இன்னமும் சிரிப்பு. அப்போவும் விடாமல் நான் நெல் நஞ்சையிலும், பருப்பு வகைகள் புஞ்சைக்காட்டிலும் போடுவாங்க என்றேன். யாருக்கும் நம்பிக்கை வரவே இல்லை. சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க! அப்படி ஒருதரம் வீட்டுக்கு வந்த ஒருத்தரிடம் சொல்லிச் சிரித்தப்போ அவர் சொன்னார். தென் மாவட்டங்களில் நஞ்சை, புஞ்சை என உண்டு என்று! அதுக்கப்புறமாத் தான் எங்க பெற்றோரிடமும் கேட்டுட்டு நம்பினாங்க! அதே போல் தான் இந்த மரத்தை அடிக்கும் விஷயமும்!

    பதிலளிநீக்கு
  73. வளர்ந்த பெண் குழந்தை வயதுக்கு வரவில்லை எனில் வைத்தியம் செய்ய மாட்டோமா? இதை வைத்து "வாசந்தி" ஒரு கதை/நாவல்(?) எழுதி இருந்த நினைவு! அதே மாதிரித் தான் இங்கேயும். வளர்ந்து விட்ட பிறகும் தென்னை மரங்கள் பாளை விடவில்லை எனில், எலுமிச்சை, நாரத்தை, முருங்கை போன்றவை பூத்துக் காய்க்கவில்லை எனில் இப்படிச் செய்வது உண்டு! நம் முன்னோர்கள் காரணமில்லாமல் செய்திருக்க மாட்டார்கள். இப்போதும் இப்படி நடக்கிறதா என்று தெரியாது! இப்போத் தான் கான்க்ரீட் காட்டு வாசம் ஆச்சே!

    பதிலளிநீக்கு
  74. //மழை பெய்திருக்குமோ? இல்ல வைரவரின்[பப்பி] சேட்டையாக இருக்குமோ ஹா ஹா ஹா:))// ஹிஹிஹி, அதிரடி, வைரவரா? இல்லைன்னா........................ அவசரமோ?

    பதிலளிநீக்கு
  75. கட்டாய ரத்ததானம் :) ஹாஹ்ஹா :)
    பெண் கொசுக்கள் தான் கடிக்கும் ரத்தத்தை உறியுமாம் :)

    பதிலளிநீக்கு
  76. நம் கை, கால்களில் நகம் நீளமாக வளர்ந்தால் வெட்டுவது இல்லையா? பிறந்த குழந்தையின் நகங்களைக் களைவது இல்லையா? அது மாதிரிப் புரிஞ்சுக்கணும். மொத்த மரத்துக்கும் தொல்லை கொடுப்பது இல்லை. வாழை தார் போடவேண்டும் எனில் பக்கத்தில் வளரும் கன்றுகளைக் கழிப்பார்கள். அப்போத் தான் தாய் வாழை தார் போடும்! இம்மாதிரி எத்தனை வேணும்? :))))) அதே போல் தாய் வாழையின் இலைகளைச் சீவவோ, வெட்டிச் சாப்பாட்டுக்குப் பயன்படுத்தவோ மாட்டார்கள். இலைக்கு எனத் தனி மரங்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
  77. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  78. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  79. ஹெஹெஹெ, எரர் காட்டியதால் மறுபடி கொடுத்தேனா, மூணு தரம் வந்திருக்கு! :))))

    பதிலளிநீக்கு
  80. அருமை. கொசு பதிவு - ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  81. @கீதாக்கா ஓகே ஓகே .மொத்தமா வெட்டி சாய்க்கிறத விட லேசா அடிகுடுக்கறது பெட்டர்தான் :)

    பதிலளிநீக்கு
  82. //ஓடுறார் ஓடுறார் விட்டிடாதையுங்கோ.. ஹையோ கீசாக்கா.. விரைவா ஓஒடிப்பிடியுங்கோ // அதிரடி, எங்கே ஓடுவார்? இங்கே தமிழ்நாட்டுக்குத் தானே வரப் போறார்! அப்போப் பிடிச்சுட மாட்டோம்? :)

    பதிலளிநீக்கு
  83. வணக்கம் சகோதரரே

    தென்னை மரம் அடிப்பது பாவமான செயல். ஒருவேளை அவர் அப்படி அடித்து.காய்த்து அவரின் அனுபவ பாடமோ என்னவோ? ஆனாலும் மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது. ஓரிரண்டு அடியானல் கூட ஏதோ பரவாயில்லை எனலாம்.ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாயிருக்கும் மரத்தைப்போய் சினிமா பாணியில் வளைத்து, வளைத்து குத்தினால் சே!பாவம். அந்த பாபத்துக்கு,அது நமக்கு பலன் தராமலேயே இருந்து விட்டு போகட்டும் எனத் தோன்றுகிறது.

    மழைக்கவிதை, பெஞ்ச் கவிதை, கொசுக்கவிதை அனைத்தும் படு சூப்பர். தங்களின் கவிதைகள் மிக அருமையாக உள்ளது. மிகவும் ரசித்துப் படித்தேன்.

    நாகேஷவராவ் நடித்த தேவதாஸ் படம் எப்போதோ பார்த்ததாய் நினைவு.எந்த ஒரு உறவும், பிரிவை சந்திக்கும் காலகட்டத்தில் மன வருத்தந்தான்! அந்த படத்தைப்பற்றிய தகவல்கள் அறிந்திராதது. கதம்பம் சுவையாக இருந்தது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  84. /////AngelMarch 15, 2018 at 2:37 PM
    கட்டாய ரத்ததானம் :) ஹாஹ்ஹா :)
    பெண் கொசுக்கள் தான் கடிக்கும் ரத்தத்தை உறியுமாம் :)/////

    ஹையோ அப்போ ஸ்ரீராமுக்கு கடிச்சது லேடிக் கொசுவாஆஆஆஆ? ஹா ஹா ஹா...

    எனக்கும் தெரியும்:) பசுபதிப்பிள்ளை றீச்சர் சொல்லித் தந்தவ:)

    பதிலளிநீக்கு
  85. ///Geetha SambasivamMarch 15, 2018 at 2:49 PM
    //ஓடுறார் ஓடுறார் விட்டிடாதையுங்கோ.. ஹையோ கீசாக்கா.. விரைவா ஓஒடிப்பிடியுங்கோ // அதிரடி, எங்கே ஓடுவார்? இங்கே தமிழ்நாட்டுக்குத் தானே வரப் போறார்! அப்போப் பிடிச்சுட மாட்டோம்? :)///

    கீசாக்கா இனி ஊரோடயே வந்திடப்போறாராம் என நேக்கு வட்சப்பில மெசேஜ் போட்டார்ர்( இந்தச் சாட்டில குடும்பத்திலயும் குழப்பத்தை மூட்டிடுவோம்:)) ஹா ஹா ஹா அதனால விளக்கெண்னெய் விட்டபடி இருங்கோ கீசாக்கா:)..

    பதிலளிநீக்கு
  86. நானும் எவ்ளோ நேரம்தான் என் வாயைக்கட்டி:) மூக்கைப்பொத்திப் பொறுமை காப்பதாம்:).. என் செக்:) க்கு எவ்ளோ சார்ப் கிட்னி பார்த்தீங்களோ...

    //Angel said...
    @கீதாக்கா ஓகே ஓகே .மொத்தமா வெட்டி சாய்க்கிறத விட லேசா அடிகுடுக்கறது பெட்டர்தான் :)//

    ஆரம்பம் முதலே கீசாக்காதான் உலக்கைக்கே சப்போர்ட் பண்ணிக்கொண்டு வாறா:)).. விடாதீங்கோ கீசாக்கா அதிலென்ன இருக்கு மீயும் சப்போர்ட் பண்றேன்:))..
    ---------------------------------------------------------------
    அசைவம் சாப்பிடுவோரை விடுத்து:)..

    ஏனையோர்...
    இலைகள் காய்களை உசிரோடு பிடுங்கி வந்து, அப்படியே சாப்பிட்டாக்கூட பறவாயில்லை:) அதுக்கு உப்புத்தண்ணி போட்டு கழுவி..[அதிலிருக்கும் புழுப் பூச்சிகளைக் கொல்லவாம்:))].. இப்படிக் கொன்று.. அத்தோடு விடாமல்.. அதுக்கு மிளகாய்த்தூள் உப்பு கண்ணில மூக்கில எல்லாம் கொட்டிப் பிரட்டோ பிரட்டெனப் பிரட்டி:)

    பின்பு அத்தோடு விடாமல் அடுப்பில வச்சு அவிச்சு:).. அதுக்கு மேல கடையோ கடையெனக் கடைஞ்சு:)).. பின்பும் தேசிக்காய் பெப்பர் உப்பு எனப் போட்டு எரிச்சுப் பிரட்டிச் சாப்பிடுவதை விடவா.. உலக்கை அடி பெரிசு?:))..

    இங்கின ஆருமே ஸ்ரீராம் பற்றி ஒரு துளிகூடக் கவலைப்படல்லியே:))... சென்னை லேடி நுளம்பக்கா[சென்னை அக்கா தானே கடிச்சிருப்பா பின்ன என்ன பாண்டிச்சேரியில் இருந்து வந்தா ரத்தத்தை உறிஞ்சியிருப்பா?:))] அதுவும் விரும்பிக் குடுக்காமல் ரத்தத்தை உறிஞ்சி எடுத்தபோது ஸ்ரீராமுக்கு எவ்ளோ வலிச்சிருக்கும்:))

    அந்த வலியை விடவா? அந்தாப் பெரிய தென்னைக்கு ஒரு குட்டி உலக்கையால அடிச்சது பெரிய வலிப்பைக் கொடுக்கும்:) எனக் கூறி அமர்கிறேன் யுவர் ஆனர்ர்:))

    ஹையோ இண்டைக்கு மீ... கம்பி தான் எண்ணப்போறேனோ தெரியல்லியே:) ஏதும் அசம்பாவிதம் எனில்.. மீக்கு கரண்ட் இல்லை எனச் சொல்லிட்டு கீசாக்காவும் ஓடிப்போய் ஒளிச்சிடப்போறாவே:))

    பதிலளிநீக்கு
  87. யாராவது எனக்கு நாலே நாலு சமோசா அனுப்புங்க ப்ளீஸ் :) அதை சாப்பிட்டாதான் பூஸை ஓட்ட முடியும் :)
    தயவுசெஞ்சி நாலு மைதா சமோசா ப்ளீஸ்

    பதிலளிநீக்கு
  88. //Angel said...
    / ஒரு நாளைக்கு விசம் குடிச்சுப் போட்டு கட்டாய ரத்த தானம் நாம் செய்யோணும்:)) ஹா ஹா ஹா:).//

    கர்ர்ர் :) நான் சொன்னேன்ல போலி டொக் tear :)////
    ஹலோ மிஸ்டர்:) அஞ்சு:))... கில்லர்ஜியின் அன்புத்தங்கையாக.. சே..சே.. டங்கு ஸ்லிப்ட்:) அன்புப் பெரியக்காவாக:).. இருப்பாவோ இவ:)).. ஒழுங்கா சொல்லொணும் எங்கே சொல்லுங்கோ.. டொ.... க்க்க்க்க்..டர்ர்ர்ர்ர்:)) இப்பூடி:)).. கஸ்டப்பட்டு பட்டம் வாங்கினால் என் இமேஜ் ஐ டமேஜ் பண்ணப் பார்க்கினம்:) கர்ர்ர்ர்ர்:)).

    -----------------------------------------------
    ///Angel said...
    யாராவது எனக்கு நாலே நாலு சமோசா அனுப்புங்க ப்ளீஸ் :) அதை சாப்பிட்டாதான் பூஸை ஓட்ட முடியும் :)
    தயவுசெஞ்சி நாலு மைதா சமோசா ப்ளீஸ்///

    இன்று ஒரு பெக்:) அடிச்சிட்டுப் போனால்தான் என் மனைவியை நாலு கேள்வி கேட்கும் தெகிறியம் வரும் என்பது போலவே இருக்கே இது?:)) ஹையோ ஹையோ:)))

    பதிலளிநீக்கு
  89. https://1.bp.blogspot.com/-ockNZeQD9Zs/Wqg5Np--VlI/AAAAAAAAO60/FPU310On0oEgWn507j1UCFIy5aZ07ufhACLcBGAs/s1600/12109830_492684344233449_1293856802515153591_o.jpg

    இந்த லிங்கில் இருப்பதுதான், வெட்டியபின் முளைச்ச என் தேசிமரம்.. ஆவ்வ் எலுமிச்சை மரம்.. இப்போ இதுவும் பட்டு ஒன்ல்ய் 4 லெக்ஸ்.. சொறி 4 லீவ்ஸ்:) உடன் இருக்கிறா:)

    பதிலளிநீக்கு
  90. என்ன இது ஆரையும் காணம்:)... கட்டாய ரத்த தானம் செய்தவரும் வோட்டிலயோ இப்ப:)... சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்பு:) மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..

    பதிலளிநீக்கு
  91. .வாங்க வல்லிம்மா... ரசித்ததற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  92. கீதாக்கா ஒரு சொற்பொழிவே ஆற்றி விட்டீர்கள். கவிதைக்குப் பாராட்டியதற்கு நன்றிகள். ஏன் தலைவலி? தூக்கம் சரி இல்லையோ? மொபைலுக்குத் தந்த புகாரை பேசாமல் வாபஸ் பெற்றுவிடலாம். அதற்குப் படும் அவஸ்தை, அலைச்சல் எரிச்சலாக இருக்குமே... விளக்குமாறு வைத்தியம் நாங்கள் கூட சமீபத்தில் மிக மென்மையாக எங்கள் முருங்கை மரத்துக்குச் செய்தோம்!

    பதிலளிநீக்கு
  93. கீதா ரெங்கன்.. அடுக்கடுக்கடுக்கடுக்கடுக்கடுக்காய் பாராட்டி இருக்கிறீர்கள். நன்றியோ நன்றி. தேவதாஸ் விரும்பி எல்லாம் பார்க்கவில்லை. என் அப்பாவின் அம்மா சினிமாப பிரியை! அவர் போய்ப் பார்த்து அழும்போது என்னையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்! வாட்ஸாப்பில் சொன்னது போல பென்ச் கவிதைகள் எல்லாம் சுடச்சுட இப்போது பத்து நாட்களுக்குள் எழுதியவைதான்!

    பதிலளிநீக்கு
  94. வாங்க ஏகாந்தன் ஸார்... // புகழ்வதைத் தவிர வேறு வழியில்லை! // நன்றி ஸார். (வேறொன்றும் உள்குத்து இல்லை இல்லே?)

    //அதற்கு ஏகாந்தமே எக்ஸலண்ட்டாயிற்றே !//

    ஆமாம் ஸார்... ஏகாந்தன் ( ஸார்) எக்ஸலண்ட்தான்.. :)))
    நீங்கள் ஏன் இப்படி ஒரு புனைப்பெயர் வைத்துக் கொண்டீர்கள் என்று அறிய ஆவல்

    பதிலளிநீக்கு
  95. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  96. வாங்க அதிரா...

    தென்னை மரத்துல தென்றலா அடிக்குது? உலக்கையால் ஆதி வாங்குது அது!!!!! புகை போடுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கவிதைகள் இங்குமங்கும் அலையவில்லை. ஒவ்வொன்றும் தனித்தனிக் கவிதைகள் என்பதால் தள்ளித்தள்ளிப் போட்டிருக்கிறேன்! பெஞ்ச் ஈரமானதற்கு உங்கள் ஜோக் ரசித்தேன். சுஜாதா சொல்வார், "மழை பெய்தால் ரோடு ஈரமாகும்தான்... ஆனால் ரோடு ஈரமானாலே மழைதான் பெய்திருக்கு என்று அர்த்தமா?"

    ஹைக்கூ இல்லை இவை... வசனங்கள்! ஹைக்கூவை அவமானப் படுத்தாதீர்கள் அதிரா!!! பாவம். நண்பனின் மரணம் சம்பவம் ஒரு.. ஒரு...ஒரு... ஒரு... என்ன சொல்ல... அது வேற...!!

    //ஒரு நாளைக்கு விசம் குடிச்சுப் போட்டு கட்டாய ரத்த தானம் நாம் செய்யோணும்://

    ஹா... ஹா... ஹா... ஆனால் இந்த கொசுக்களுக்கு பிளட் க்ரூப் பிரச்னை எதுவும் இல்லாமல் எல்லாம் சேர்கிறதே... அது எப்படி!

    பெண் கொசுக்கள்தான் கடிக்கும் என்று எனக்கும் தெய்வசிகாமணி ரீச்சர் சொல்லிக் கொடுத்திருக்கா...

    // கட்டாய ரத்த தானம் செய்தவரும் வோட்டிலயோ இப்ப:).//

    முடிந்த வரை பதில்கள் ரெடி செய்து கொண்டிருந்தேன்!

    பதிலளிநீக்கு
  97. வாங்க நெல்லைத்தமிழன்... எமனிடம் கொசுவைக் கொல்வது கொலை என்றால் பெருமாள் செய்த வதங்கள் எந்த வகையில் சேர்த்தி என்று வாதிடுவேன்!! மரங்களுடன் மங்கையரை ஒப்பிட்டு நீங்கள் செய்திருக்கும் கற்பனை பயங்கரமாயிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  98. வாங்க கோமதி அக்கா.. நானும் தேவதாஸ் நாவல் சுருக்கமாக ராணி முத்துவின் படித்திருக்கிறேன். எழுதியவற்றைப் பாராட்டியிருப்பமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  99. வாங்க ஏஞ்சல்... தேவதாஸ் படத்தில் லோரும் நாகேஸ்வர யாவையும், சாவித்ரியையும் பார்த்து கொண்டிருக்க, நீங்கள் நாலு கால் செல்லத்தைப் பார்த்திருக்கிறீர்கள்.... அட!

    //பேசறதை ஒட்டுகேட்டுட்டு வெறுமையாம் :)//

    ஹா... ஹா... ஹா...

    //கொஞ்சம் லண்டன் வந்து எங்கூர் பெஞ்சுகள் பற்றியும் கவிதை வடிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்//

    இந்தக் கவிதைகளையே அங்கும் உபயோகித்துக் கொள்ளவும். :))))

    சமோசாவுக்கும் அதிராவைச் சமாளிப்பதற்கும் என்ன சம்பந்தம்!!

    பதிலளிநீக்கு
  100. வாங்க கமலா ஹரிஹரன் சகோ.. வரவுக்கும், படித்து ரசித்து பாராட்டிக் கருத்திட்டமைக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  101. தென்னம்பிள்ளை பாவம்..அடிப்பதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசனை.
    தேவதாஸ் - இவ்ளோ விஷயம் இருக்கா? பெரிய அட்டவணையே இருக்கே!
    மனிதருக்கு மட்டுமா, பெஞ்சுக்கும் தனிமை - டாய் ஸ்டோரி படம் நினைவிற்கு வருகிறது. கவிதைகள் அருமை..கருத்துரைகள் அனைத்தும் குடும்ப அளவளாவல் - மகிழ்வாக இருக்கிறது வாசிப்பதற்கு.

    பதிலளிநீக்கு
  102. இரண்டு அடி திருக்குறளும் நான்கு அடி நாலடியாரும் உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்பது ஒரிஜினல் அர்த்தமாம். முனைவர் குணசீலன் அவர்கள் தளத்தில் இன்றுதான் பார்த்தேன் - கேட்டேன். :)) வானொலி!

    பதிலளிநீக்கு
  103. தேவதாஸ் , கவிதைகள் அருமை. தென்னைமரம் பாவம். கமெண்ட்ஸ் அட்டகாசம்

    பதிலளிநீக்கு
  104. @ Sriram: நீங்கள் ஏன் இப்படி ஒரு புனைப்பெயர் வைத்துக் கொண்டீர்கள் என்று அறிய ஆவல்//

    பதின்ம வயதில் பழைபாடல்களை ரேடியோவில் கேட்டுக்கொண்டிருந்தபோது, இப்படி ஒரு பாடல் ஒரு மாலையில் மனதை மருளவைத்தது:

    ஏகாந்தமாம் இம்மாலையில்
    எனை வாட்டுது உன் நினைவே..

    (’அவன்’ என்னும் 1953 படத்தில் ஜிக்கி உருகுகிறார். வரிகளை வழங்கியவர் கம்பதாசன். இசை இனிப்பு: சங்கர் ஜெய்கிஷன்).

    ஏகாந்தம் எனும் வார்த்தை என்னுள் குடியேறிவிட்டது. பிறகு ஒரு நாள் புனைப்பெயர் எனத் தேடியபோது தலைகாட்டிவைத்தது!

    பதிலளிநீக்கு
  105. இனிமேல்தான் படிக்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!