செவ்வாய், 13 மார்ச், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - மாநிறம் - துரை செல்வராஜூ



மாநிறம்

துரை செல்வராஜூ 

=======


உர்ர்ர்ர்.. - என்றிருந்த மகனைக் கண்டு
ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும் மறுபுறம் பாவமாகவும் இருந்தது...

அவனே வாய் திறந்து பேசட்டும் என்று காத்திருந்தாள் தங்கலக்ஷ்மி...

ஏன்.. இப்படியிருக்கேன்..ன்னு கேக்க மாட்டியா!?.. -

தாயின் மனம் அறிந்தவனாக திருவாய் மலர்ந்தான் சுரேஷ்..

சரி.. சொல்லு!.. ஏன்.. இப்படியிருக்கே?...

அவன் என்ன சொல்றான்!?..

அவந்தான் அன்னைக்கே சரி..ன்னு சொல்லிட்டானே!..

அவனுக்கென்ன... சொல்லிட்டான்!..

அவன் என்றால் - இவனுடைய அண்ணன் நரேஷ்!..

இவனும் அவனும் இரட்டையர்கள்.. பத்து நிமிட வித்தியாசம்..

நரேந்திரன் - நரேஷ்..
சுரேந்திரன் - சுரேஷ்..

இருவருக்கும் இப்போது இருபத்திரண்டு வயது..

கடந்த இரண்டாண்டுகளாகவே பெண் தேடல்...

இருவருக்கும் ஒரே மேடையில் முகூர்த்தம் என்பது சம்பிரதாயம்..

சரி.. அதிலென்ன பிரச்னை?...

இதே மாதிரி இரட்டையைத் தேடினால்
இந்தப் பசங்களின் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை...

சரி...  ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறந்த பெண்களாக வேண்டும்!..
- என்ற ஆசையுடன் வலையை வீசினார்கள்..

ஓராண்டுக்குப் பின் சிக்கின இரண்டு ஜாதகங்கள்...

அப்பாடா.. - என்றிருந்தது காசிலிங்கத்திற்கு...
கால் வலிக்க நடந்ததற்கு பலன் கிடைத்து விட்டது..
இவர் தான் ஜாதகப் பரிவர்த்தனை செய்தவர்..
தங்கலக்ஷ்மிக்கு தூரத்து சொந்தமும் கூட...

ஆண்டுக்கு ஆண்டு மாசி மகத்திற்கு முன்பாக வளர்பிறை பஞ்சமியில்
குல தெய்வத்தின் கோயிலில் கூட்டுப் பொங்கல் வழிபாடு நடைபெறும்..

அது பொங்கல் விழா மட்டுமல்ல... சுயம்வர விழாவும் கூட!...

அங்குமிங்குமாக பரந்து கிடக்கும் சொந்தங்கள் எல்லாரும்
தேரிக் காட்டில் கூடி விடுவார்கள்...

அடி.. ராக்கு.. என்ன!...
ஒம்மகன் இப்படி ஒட்டகம் மாதிரி வளந்துருக்கான்?...

ஏன்.. அவனுக்கென்ன?..
இவ தானே உம்மக... மூக்கழகி முத்தழகு!?..

ஆனாலுங் கெளவிக்கு கொழுப்புத் தான்!...

இப்படி ஒருபக்கம்...

மளிகைக் கடையப் போட்டு எங்கே..ன்னு கிளம்பறது?...
ஏதோ மாசிப் பொங்கல் வந்துச்சா..
மக்க மனுசரைப் பார்த்தமா..ன்னு இருக்கு..

எம் மகன் துபாய்...க்கில்ல அடுத்த மாசம் போறான்!...
கல்யாணம் எல்லாம் ரெண்டு வருசங் கழிஞ்ச பொறவுதான்!..

அப்புறம் எதுக்குடி இங்ஙன கூட்டியாந்தே?...

உம் மகளை அவங் கண்ணுல காட்டலாம்...ன்னு தான்!...

எம்மகளைப் பார்த்துட்டு இங்கேயே இருந்துடப் போறான்!?..

அதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணுமடி!..

இப்படியும் ஒருபக்கம்...

உறவு முறைகளின் சந்தோஷமான பேச்சுகளுக்கிடையில்
காசிலிங்கம் தங்கலக்ஷ்மியைத் தேடி வந்தார்...

ஏற்கனவே ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்தாயிற்று..
மாப்பிள்ளைகள் பெண்களை நேரில் பார்க்க வேண்டும்..

அது தான் பாக்கி...

குல தெய்வத்தின் கோயிலில் குறிக்கப்படும் சம்பந்தங்களில்
வரதட்சணை கேட்கக் கூடாது என்பது சம்பிரதாயம்...
மற்ற சீர்வரிசைகள் எல்லம் அவரவர் விருப்பம்...

என்ன ஆச்சு!.. பொண்ணு வீட்டுக்காரங்க எங்கே?...

அந்த மண்டபத்தில இருக்காக...ல்லே!..

தங்கலக்ஷ்மி குடும்பத்தினர் விரைந்தனர்..

மண்டபம் முழுதும் புத்தம் புதிய ஜமக்காளம் விரிக்கப்பட்டிருந்தது...
ரொம்பவும் வயதானவர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு நாற்காலி தடை..

இரண்டு குடும்பத்தினரும் முன்னதாகவே வந்து அமர்ந்திருக்க
சொல்லி வைத்தாற்போல ரெண்டு பெண்களும்
பெற்றோரின் முதுகுக்குப் பின் ஒளிந்து கொண்டிருந்தார்கள்..

வெட்கமாம்!..

இவர்களைக் கண்டதும் எழுந்து நின்று வரவேற்றார்கள்...
அப்போது கூட - அந்த ரோசாக்களின் முகம் பிடிபடவில்லை..

ஒருவருக்கொருவர் சந்தனம் வழங்கிக் கொண்டார்கள்..

முதலில் மூத்தவனுக்கு குறிக்கப்பட்ட பெண் அறிமுகம்..

மன்மதனின் மலர்க்கணைகள் அங்குமிங்குமாகப் பாய்ந்ததில்
இருவரின் முகத்திலும் ஆயிரந்தாமரை மொட்டுகள்...

நரேஷ்.. என்னய்யா.. சொல்றே!?..

நரேஷ் முகத்தில் ஆனந்தப் பிரகாசம்...

இளையவனுக்கான பெண் அறிமுகம் செய்யப்பட்டதும்

நீ.. என்னய்யா.. சொல்றே!?..

அரைகுறையாக நிமிர்ந்து பார்த்து விட்டு
அம்மாவின் முதுகைச் சுரண்டினான்...

என்னப்பா?...

இப்போ சரி..ன்னு சொல்லாதே!... - மெல்ல முணுமுணுத்தான்..

ஆனாலும் அது பயனற்றுப் போனது...

சரி.. ரொம்ப சந்தோஷம்.. ஊருக்குப் போயி சேதி சொல்லி விடுறோம்...

அதெப்படி!.. இங்கேயே சாமி சந்நிதியில
கருக்கு வேலுக்கு முன்னால சொல்லணும்....ங்கறது தானே முறை!...

காசிலிங்கம் எடுத்துச் சொன்னார்..

அப்படியா!... சரி.. ஐயனார் சாட்சியா எங்களுக்கு பரிபூரண சம்மதம்...
ஊருக்குப் போனதும் நல்ல நாளாப் பார்த்து மத்த சேதிகளைப் பேசிக்கலாம்!...

தங்கலக்ஷ்மி தம்பதியினர் சொன்னதும்
சுரேஷ் மற்றும் அவனுக்காகக் குறிக்கப்பட்ட பெண்
இந்த இருவரின் முகங்களைத் தவிர -
மற்ற அனைவரது முகத்திலும் சந்தோஷ மின்னல்கள்...

குலதெய்வக் கோயிலுக்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பாக
தலைக்கட்டுப் பணம் 108 x 2 கொடுக்கப்பட்டது....

கோயில் பூசாரிகளுக்கு தட்சணை வைக்கப்பட்டது...
தீர்த்தம் திருநீறு பெற்றுக் கொண்டார்கள்.. புறப்பட்டார்கள்..

நரேஷின் டூயட் கண்களால் புன்னகைத்து விட்டுச் சென்றது...

ஆனால், இங்கோ -
சுரேஷூம் அவனுக்காகக் குறிக்கப்பட்டவளும்
விளக்கெண்ணெய் குடித்த மாதிரி இருந்தனர்..

அது ஒருபுறம் இருக்கட்டும்..
சுரேஷ் முகத்தில் ஏன் மகிழ்ச்சி இல்லை?...

அது தானே இந்தக் கதைக்கே ஆதாரம்...

அவன் சொல்றது இருக்கட்டும்.. நீ என்ன சொல்றே?..

அவனுக்கு மட்டும் சிவப்பழகா பார்த்துட்டு
எனக்கு மட்டும் மா நிறமா பார்த்தா என்னா அர்த்தம்!..

ஏண்டா.. மாநிறம்.. ன்னா என்ன?.. அந்தப் பொண்ணு நல்லா இல்லையா?..
நான் கூட மா நிறந்தான்!... உங்க அப்பா என்னைக் கட்டிக்கலையா!..

அம்மா.. நீ இன்னும் உன்னோட பதினெட்டு வயசிலேயே இருக்கிற!.....
நீ அவனுக்கும் மா நிறமா பார்த்திருந்தா பிரச்னை இல்லை...
இல்லே... என்னை நீ தனியா பெத்திருந்தாலும் பிரச்னை இல்லை...

அப்புறம்!?.. - பிள்ளையின் பேச்சைக் கேட்டு தாய் பூரித்திருந்தாள்...

தாத்தா உனக்கு பதினெட்டு வயசில கல்யாணம் செஞ்சு வெச்ச மாதிரி
எனக்கும் செஞ்சிருக்கலாம்!..

ஏன்டா.. நீ என்ன கிறுக்குப் பயலா?..

ஏம்மா?...

உனக்கு வயசு பதினெட்டு..ன்னா வர்ற பொண்ணுக்கு என்ன பதினாலா?..

ஓ.. அப்படி ஒன்னு இருக்கோ!?... சரி.. எனக்கு ஒரு பதிலைச் சொல்லு!..

நீ தானடா போட்டோவைப் பார்த்துட்டு சரி..ன்னு சொன்னே!..

அன்னைக்கு சொன்னேன்...  - கெஞ்சினான்..

கோயில்ல வைச்சி சம்மதம் சொல்லியிருக்கோம்!..

சாமிக்குத் தெரியும் எம்மனசு!.. நீதான் எப்படியாவது!?..

என்ன பாடுபட்டு இந்தப் புள்ளையத் தேடிக் கண்டுபிடிச்சிருக்கோம்...
இப்ப போயி இந்த மாதிரி சொன்னா அந்த புள்ளை மனசு வருத்தப்படுமே..டா!....

அந்த வேளையில், சில்...சில்... - என்றது கைத்தொலைபேசி...

ஓடி எடுத்து - நோக்கினான் சுரேஷ்..

எதிர் முனையின் எழுத்துகள் மின்னின..

அமிர்தவல்லி!.. இது அந்தப் பொண்ணு பேரு இல்லே!..
அந்தப் புள்ளையோட நம்பர் வேற வெச்சிருக்கிறியா?..

உஷ்... பேசாதே!..

- விரலால் குறிப்பு காட்டி விட்டு தொலைபேசியை வாங்கினாள் தங்கலக்ஷ்மி...

ம்.. நல்லா இருக்கியா...ம்மா அமிர்தா!..

ரொம்ப நல்லாயிருக்கேன்... நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க?...

அம்மாவின் முகத்தோடு தன் முகத்தையும் வைத்துக் கொண்டு
ஒட்டு கேட்கத் தொடங்கினான் சுரேஷ்..

நாங்களும் நல்லா இருக்குறோம்...
திடீர்..ன்னு என்ன விஷயம்?... அவங்கிட்ட ஏதும் பேசணுமா!..

இல்லே.. இல்லே.. உங்க கிட்ட தான் பேசணும்...

சொல்லுடா செல்லம்?...

அன்னைக்கு கோயில்...ல நீங்க சரி..ன்னு சொல்லிட்டீங்க...
ஆனா, எனக்குத் தான்.. திக்கு..ன்னு ஆயிடிச்சு...

அப்பா அம்மாவை எதிர்த்து பேசினதில்லை...
அதனால தான் அன்னைக்கு அங்கே வந்தேன்..
ஆனாலும் - எப்படியாவது நீங்க தான் உதவணும்...

என்னா...ன்னு?...

என்னையப் பிடிக்கலே...ன்னு சொல்லணும்!..

என்னது உன்னைய பிடிக்கலே...ன்னா!...
ஏன்... சுரேஷை உனக்குப் பிடிக்கலையா?..
இல்லே வேற எதும் பிரச்னையா?..

அப்படியெல்லாம் இல்லை... எங்க அப்பா அச்சாபீஸ்...ல இருந்து கஷ்டப்பட்டு
எங்களைப் படிக்க வைச்சாங்க... டெக்னாலஜி மாறிப் போனதால வேலை குறைஞ்சு
போச்சு.. இப்போ கொஞ்சம் கஷ்டம் தான்... அதுக்காக கல்யாணத்துல எந்த
குறையும் வைக்க மாட்டாங்க...

சரி.. அப்புறம் என்ன பிரச்னை!?..

எனக்கு இப்போ தான் ஒரு மெடிகல் ஏஜன்ஸியில அக்கவுண்டட் ...வேலை
கிடைச்சிருக்கு... அந்த சம்பாத்தியத்தில எங்க அப்பா அம்மாவையும்
காப்பாத்தணும்...ன்னு ஆசை.... தம்பிக்கு வேலை கிடைக்கிற வரைக்கும்..

அதுக்காக!..

நீங்க பெரிய இடம்.. என்னையப் பொண்ணு பார்த்ததே எங்களுக்குப் பெருமை..
கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேலைக்குப் போறது... ன்னா நீங்க என்ன
சொல்லுவீங்களோ.. தெரியாது...

அதனால!?...

அதுனால.. என்னையப் பிடிக்கலே..ன்னு சொல்லிட்டீங்க...ன்னா
எங்க வீட்ல... பெரிய மகன் இல்லாத குறை தீர்த்து வைப்பேன்..
பெத்தவங்களுக்கு சோறு போட்ட புண்ணியம் எனக்குக் கிடைக்கும்!...

இதைக் கேட்டதும் தங்கலக்ஷ்மியின் கண்கள் கலங்கி விட்டன...

சட்டெனத் திரும்பி மகனுடைய முகத்தை நோக்கினாள்...

அவனுடைய விழிகளும் ததும்பி இருந்தன....

கோயில்...ல வெச்சி கொடுத்த வாக்கு...
எப்படி...ம்மா மாத்துறது?.. தெய்வ குத்தம் ஆகிடாதா!?..

மனசுக்குப் பிடிக்காதவங்கள சாமி சேர்த்து வைக்கமாட்டார்...ன்னு நம்பறேன்..
உங்க பையனும் அன்னைக்கு ஒரே குழப்பமா இருந்தாங்க!..
அவங்களுக்கும் என்னையப் புடிக்கலை.. போல!..

எப்படிடா.. சொல்றே!...

அந்தப் பிள்ளை நல்ல சிவப்பு..
நான் ஒரு நூல் கம்மி.. மாநிறம் தானே!...
அதனால அந்தக் குழப்பமோ...னு ஒரு சந்தேகம்...

அந்தப் பெண்ணின் நுண்ணறிவைக் கண்டு தங்கலக்ஷ்மிக்கு பெருமிதம்...

அதனால என்னடா... செல்லம்!..
அந்தப் பொண்ணு சிவப்பு..ல அழகு..ன்னா
மா நிறத்துல நீ அழகு!.. எனக்கு நீங்க ரெண்டு பேருமே ஒன்னு தான்!..

அப்போ.. என்னையப் பிடிக்கலே..ன்னு சொல்ல மாட்டீங்களா!...

அதெப்படி சொல்றது?.. உன்னை எனக்கு ரொம்ப ரொம்பப் புடிச்சிருக்கு!..

சுரேஷ் தாயின் கையிலிருந்த கேலக்ஸியில் முத்தாடினான்..

அடி ஆத்தீ.. இது யாருங்கறேன்.. இடையில?...

நான் தான் சுரேஷ்.. பங்குனி...ல உனக்குத் தாலி கட்டப் போறவன்!..
இப்போதைக்கு.....ம்ம்... என்னம்மா சொல்றது?...

ஏன்டா.. இதெல்லாமா... டா எங்கிட்ட கேட்கிறது?...

- என்று, வெட்கப்பட்ட தங்கலக்ஷ்மி
மகனைத் தன்னுடன் அணைத்துக் கொண்டவளாக சொன்னாள்..

அமிர்தா... நீ வேலைக்கு வர்றதே எங்களோட கம்பெனிக்குத்தான்...
பசங்க கிட்ட அப்புறமா சொல்லலாம்..ன்னு இருந்தோம்....

இடைமறித்த சுரேஷ் -

இனிமே நீதான் எங்க கம்பெனிக்கு எல்லாமே!..
உனக்கு வேணுங்கறதை சம்பளமா எடுத்துக்கோ!..
இனி நீ வேற இல்லை.. நான் வேற இல்லை!..

- ஆனந்தக் கூத்தாடினான்...

தங்கலக்ஷ்மி சட்டெனெ கைத்தொலைபேசியை இறுக மூடிக் கொண்டாள்..

ஏன்டா.. மாநிறம் பிடிக்கலை... ன்னு சொன்னே!... இப்போ கிடந்து குதிக்கிறே!..

மாநிறம் தான்.. ஆனாலும் மனசு நிறம் தங்கமா இருக்கே...ம்மா!..

தங்கலக்ஷ்மி தொடர்ந்தாள்..

நரேஷ் கல்யாணத்துக்கு அப்புறம் மலேஷியாவுக்குப் போய்டுவான்..
சுரேஷ் தான் எங்களுக்குக் கதி.... ஆனாலும்,
அப்புறம் என்னாகுமோ.. ஏதாகுமோ?...
வர்ற பொண்ணு எப்படி இருப்பாளோ.....ன்னு இருந்தோம்...

நீ உங்க அப்பா அம்மாவுக்கு சோறு போடணும் ..ன்னு
சொன்னதைக் கேட்டதும் எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி...டா செல்லம்...
சுரேஷ் கொடுத்து வைச்சவன் தான்!...

சீக்கிரம் வாடியம்மா..  மருமகளே!...

ஏன்!... இப்பவே வரச் சொல்லேன்... உன் மருமகளை!...

தாயை அன்புடன் கட்டிக் கொண்டான் சுரேஷ்...

அங்கே எதிர்முனையில் - ஆனந்த விம்மல் ஒன்று
மன மகிழ்ச்சியுடன் வெளிப்பட்டது. 

79 கருத்துகள்:

  1. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் கீதா அக்கா... லேட் இல்லை. சரியான நேரம்!!!!!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

    பதிலளிநீக்கு
  4. கீதா ரெங்கனுக்கு நெட் படுத்தலாயிருக்கும்! அவர் வீட்டு நெட்!

    பதிலளிநீக்கு
  5. மிக அருமை. எல்லோரும் இப்படியே இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. இந்த வலை இங்கேயும் ரொம்பவும் சிக்கலா இருக்கு...

    5G வந்துட்டா சரியாகும்...ந்னு நினைக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  7. அன்பின் ஸ்ரீராம்..

    கதையை பதிப்பித்ததற்கு நெஞ்சார்ந்த மகிழ்ச்சி... நன்றி...

    பதிலளிநீக்கு
  8. துரை ஸார்... உங்கள் கதையை வெளியிடுவதில் எங்களுக்கும் மகிழ்ச்சி. நெகிழ்வான சந்தோஷமான கதை.

    பதிலளிநீக்கு
  9. இந்த மனசு இருக்கே.. சினிமாவோ.. கதையோ.. நல்ல மனிதர்கள் பற்றி படித்தாலே குஷியாகி விடுகிறது..
    கதை போன வேகம் படு ஸ்பீட்.
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. கதை மிகவும் அருமை.
    மனது ஒத்து போனது.
    குழந்தைகள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்.

    //மண்டபம் முழுதும் புத்தம் புதிய ஜமக்காளம் விரிக்கப்பட்டிருந்தது...
    ரொம்பவும் வயதானவர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு நாற்காலி தடை.//

    அருமை.
    உரையாடல் மூலம் கதை நகர்வது கண்முன் காட்சியாக விரிகிறது.
    சிவகாசியில் இருக்கும் போது நிலாசோறு பொங்குவது என்று இரவு வாசலில் பொங்கல் வைப்பார்கள் அது மாசி பொங்கல் தானா?

    பதிலளிநீக்கு
  11. எத்தனை அருமையான கதை. மிக நன்றாக இருக்கிறது. மனம் நிறை வாழ்த்துகள் சார்.

    பதிலளிநீக்கு
  12. நேற்றுதான் எங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம், "எல்லோரும் பெண்களை குறை சொல்கிறார்கள்,எல்லா பெண்களும் மோசம் கிடையாது"என்று,அமிர்தமான பெண்ணை அடையாளம் காட்டியதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  13. பெரியவர்கள் எல்லாரும் பாராட்டி வாழ்த்தும் போது ஆனந்தக் கண்ணீர் வருகின்றது...

    பத்து வயது கூடினாற்போல இருக்கின்றது...

    இதுவரை தளத்திற்கு வந்தோர்க்கும்
    இனி வருவோர்க்கும் மனமார்ந்த நன்றி...

    நேற்று இரவு வேலைக்கு வந்தது...
    இன்று மதியம் வரைக்கும் தொடர வேண்டியதாகி விட்டது...

    மதியத்திற்கு மேல்
    அனைவருக்கும் தனித்தனியாக நன்றி கூறுகிறேன்...

    பதிலளிநீக்கு
  14. அன்பின் ஜி
    தொடக்கத்தில் திருமணம் நின்று விடுமோ... என்று மனம் திக் திக் திக் திக்

    முடிவு கண்டு மனம் டிக் டிக் டிக் டிக் இது மனதுக்கு தாளம்.

    பதிலளிநீக்கு
  15. மிக மிக அருமையான கதை...

    உண்மையில் படிக்கும் போது மனம் நிறைகிறது ஆம்...இது போல் உள்ள கதைகள் மட்டுமே ரொம்ப பிடிக்கும்...

    இயல்பான...எதார்த்தமான கதை கரு...

    மிக மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  16. இன்று காலையில் வர முடியலை.வணக்கம் சொல்ல.மொபைல் வழியாகவும் வர முடியலை...மாமியார் வீட்டிற்கு வந்திருப்பதால்...இங்கு நெட் இருப்பதால் இதோ இப்ப வந்துட்டேன். கடமை ஆத்திட்டு....
    இன்று முடிந்த அளவு தளம் செல்ல வேண்டும்...
    கீதா

    பதிலளிநீக்கு
  17. ஹை துரை அண்ணா கதை! அப்படியே அண்ணாவின் மனம் பளிச் பளிச்!! அழகான கதை. மகிழ்வான குடும்பத்தைப் பார்க்கும் போது மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது. அது மட்டுமல்ல அந்த மகிழ்வான குடும்பத்தை இத்தனை அழகான வரிகளில் சொன்னால் மனதில் பதியாமல் போகுமோ?!!!

    முடிவு கண்டிப்பாக எதிர்மறையாகாது என்பது திண்ணம்! ஏனென்றால் இது துரை அண்ணாவின் கதை. நேர்மறையாக சுபமாகத்தான் முடியும்!!! அண்ணா ரசித்தேன் அண்ணா...வரும் மருமகளை தங்கலட்சுமி செல்லம், வாடா என்றெல்லாம் சொல்லுவது செம!!! என் மனதைச் சொல்லியது போன்று இருந்தது...அதைவிட அந்த இடத்தில் வல்லிம்மா ரொம்பவே நினைவுக்கு வந்தார்கள்!!!!

    ரசித்தேன் அண்ணா....வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அட !! டிடி மீண்டும் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி...

    கில்லர்ஜி உங்க கமென்ட் கண்ணில் பட்டது....செமை ரொம்ப ரசித்தேன் கில்லர்ஜி உங்க கமென்டை...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. காலையில் படித்துவிட்டேன். இப்போது பின்னூட்டத்துக்காக மீண்டும் ஒருமுறை படித்தேன்.

    கதை நல்லா இருந்தது. நல்ல உரையாடல்கள். நல்ல முடிவு, நியாயமாக சிந்தனை செய்யும் மக்கள், நல்லகுணம் உடையவர்கள், இவர்களைப் பற்றிப் படிக்கும்போதே மனதுக்கு சந்தோஷம் வந்துவிடுகிறது. பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.

    பதிலளிநீக்கு
  20. உறவு முறைகளின் சந்தோஷமான பேச்சுக்கள் மிக யதார்த்தமானது, வீட்டு விஷேசத்தினை ஞாபகப்படுத்தியது. . மாமியார் மருமக உரையாடல் அழகு. அருமையான கதைக்கரு. நல்ல தலைப்பு. நல்லதொரு கதை வாசிச்சது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  21. மாநிறமாக இருந்தால் என்ன மனம் நல்ல நிறமாக இருந்தால் போதும்...
    அருமையான கதை.
    செம கலக்கல்.
    அடி ஆத்தி... ஐயா சிறுகதைகள்ல கலக்குறாங்க...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. ஆஆஆஆஆவ்வ்வ்வ் மீ அங்கின அடிபட்டு இங்கின அடிபட்டு இப்போதானே வந்து லாண்ட் ஆகிறேன்ன்:)).. ஓ துரை அண்ணனின் கலக்கல் கதை... பொறுமையா படிச்சேன்.. அழகிய உரையாடல்... இது எங்கோ காதில் கேட்ட உண்மைகளைத் தொகுத்து எடுத்து கதையாக்கி இருக்கிறாரோ.. ஏனெனில் இது கற்பனை என்பதைத் தாண்டி இப்படி உண்மையிலும் நடக்க வாய்ப்பிருக்கு...

    மிக அழகிய... மனதைச் சஞ்சலப்படுத்தாத கதை....

    பதிலளிநீக்கு
  23. ///
    உர்ர்ர்ர்.. - என்றிருந்த மகனைக் கண்டு
    ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும் மறுபுறம் பாவமாகவும் இருந்தது...

    அவனே வாய் திறந்து பேசட்டும் என்று காத்திருந்தாள் தங்கலக்ஷ்மி...

    ஏன்.. இப்படியிருக்கேன்..ன்னு கேக்க மாட்டியா!?.. -//

    ஹா ஹா ஹா இது பல குடும்பங்களில் நடக்கும் ஒன்றுதான்... அம்மாவுக்கு/மனைவிக்கு முகம் தெரிகிறமாதிரி தூரத்தில இருந்துகொண்டு, முகத்தை உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என வைத்திருப்பது:).. அப்போதானே என்ன விசயம் எனக் கேட்போம் என:)).

    ஆனா இப்படி நேரம் கேய்க்கக்கூடா:).. இந்த உரையாடலில் வருவதைப்போல அவர்களே ஆரம்பிக்கும் வரை தவிக்க விடோணும் ஹா ஹா ஹா:)...

    இது எங்கள் சின்னவரும் கையாளும் ஒன்று.... நாம் கவனிக்காமல் இருந்தால்[காரணம் தெரிந்திருந்தால்:) கவனிக்காமல் இருப்போம்:)] தானே சொல்லுவார்.. ஐ ஆம் சாட்:)) என:) ஹா ஹா ஹா:)...

    பதிலளிநீக்கு
  24. இரட்டையர்கள் என்றதும் நினைவுக்கு வந்த ஒரு சம்பவம்...

    எங்கட ஒரு மாமாவின் மகனுக்கு பெண் பார்த்தார்கள்.. அவர் நடிகர் மம்முட்டியைப் பார்ப்பதுபோலவே இருப்பார்...

    அவருக்கு அழகான பெண் அமைந்தால் போதும் வேறேதும் வேண்டாம் என்றார்... ஆனா அவருக்குப் பயம் இந்தப் பெரிசுகள் பெண்பார்க்கிறேன் எனப் போய் ஏமாத்திப் போடுவினம் என்பதால், எங்கள் அண்ணாவை[ஒரு 15 வயதிருக்கலாம்] .. பெரியவர்களோடு பெண் பார்க்க அனுப்பி வைத்தார்[புரோக்கர் மூலம் பொருந்திய ஒரு வீட்டுக்கு].. நம் முறையில் திருமணம் ஓகே ஆனால் மட்டும்தான் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து பெண்ணைப் பார்க்கலாம்.. அதுவரை ஏனையோர் மட்டுமே வந்து பார்க்க அனுமதி..

    மாப்பிள்ளை, பெண்ணை நேரில் பார்க்க வேண்டுமெனில், பெண்ணுக்கு தெரியாமல்.. எங்காவது கோயிலுக்கு அல்லது.. இந்த வீதியால் கூட்டிப் போகிறோம்.. ஒளிச்சிருந்து பார்க்கச் சொல்லுங்கோ என்பார்கள்.. நேராகப் பார்க்க அனுமதி இல்லை.

    அதனால வீட்டுக்கு பெண் பார்க்க போனபோது அண்ணாவை கூடவே அனுப்பி வைத்தார்.. எனக்கு உண்மையை வந்து சொல்லிடு என.

    போய்ப் பார்த்திட்டு வந்ததும்.. வீட்டிலே ஆஹா ஓஹோ என எல்லோரும் புகழ்ந்தார்களாம்.. பெண் ஓகே.. அதெல்லாம் நல்ல குடும்பம் என...

    இவர் அண்ணனைக் கூப்பிட்டுக் கேட்டிருக்கிறார்.. அண்ணன் சொல்லிட்டார்... “அது பொம்பிளை நிறம் சரியான குறைவு.. எனக்குப் பிடிக்கவில்லை, இவர்களின் பேச்சை நம்பாதீங்கோ” என.

    அப்போ இந்த மாமியின் மகன் குழம்பத் தொடங்கிட்டார்.. பெரியவர்கள் பேசினார்கள் அது எல்லாம் நல்லதுதான் செய்யலாம் என.. அப்போ மாப்பிள்ளை வீட்டார் குழம்புகிறர்கள் என புரோக்கர் மூலம் தகவல் எட்டியிருக்கு பெண் வீட்டினருக்கு.. அவர்களுக்கு இந்த மாப்பிள்ளையை விட மனமில்லை...

    அதனால பெண்ணின் அப்பா சொல்லியிருக்கிறார்.. பெண்ணை கோயிலுக்கு அழைச்சு வாறோம்.. மாப்பிள்ளையை மறைவாக நின்று பார்க்கச் சொல்லுங்கோ என... அதேபோல கோயிலுக்குப் போனால்.. பெண் நல்ல வெள்ளையாம்.. அழகாக இருந்தாவாம்... இவர் பெண்ணை ஒளித்திருந்து பார்த்து விட்டு குழப்பத்தோடு வீட்டுக்கு வந்து அண்ணனைக் கூப்பிட்டுக் கேட்டிருக்கிறார்.. நீ கறுப்பு என்றாயே ஆனா இன்று நான் பார்த்தனே நல்ல வெள்ளையா அழகா இருக்கிறா என...

    அண்ணன் சொல்லியிருக்கிறார் சத்தியமா இல்லை.. நாம் வீட்டுக்குப் போய்ப் பார்த்த பெண் கறுப்பு என...

    ஒரே குழப்பமாகி புரோக்கரைக் கூப்பிட்டு வெருட்டிய இடத்தில் உண்மை வெளி வந்தது.. அவர்கள் இரட்டையர்களாம்.. அப்போ முதலில் நிறம் குறைவான பெண்ணைக் காட்டியிருக்கிறார்கள்.. ஹா ஹா ஹா.. அதன் பின்பு அத் திருமணம் நடக்குமோ?:)..

    பதிலளிநீக்கு
  25. ஆஆஆங்ங் இனித்தான் கதையின் மட்டருக்கே வரப்போறேன்:) அதாவது கதை ஓகேதான் ஆனா இது எழுத்தோட்டம்தானே இனிமேல்தானே கதையே ஆரம்பம்:).. அதாவது தாலி கழுத்தில் ஏறியபின்புதானே இருக்கு விசயம்:))..

    1.நீங்க என்னை பிடிக்கவில்லை எனத்தானே சொன்னீங்க?:)

    2.அன்று நான் ஃபோன் பண்ணிப் பேசியிருக்காட்டில், என்னைக் கட்டியிருக்க மாட்டீங்கதானே?:)..

    3.இப்போ எதுக்கு மானே தேனே மயிலே எனக் குழையுறீங்க?:)..

    இப்பூடி ஆரம்பமாகப்போகுது பாருங்கோ பூகம்பம்:)) ஹா ஹா ஹா நல்லவேளை மாமி மட்டும் சேஃப் சோன் ல இருக்கிறா:))

    பதிலளிநீக்கு
  26. இதில இன்னொரு விசயமும் அடங்கியிருக்குது பாருங்கோ.... அது என்னவெனில் உண்மையில 90 வீதம் ஆண்களும் எதையும் எதிர்பார்ப்பதில்லை.. அவர்கள் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதாங்க.. அதாவது அன்பை மட்டும்தான்... அதுவும் கூடையால எல்லாம் அள்ளிக் கொட்டத் தேவையில்லை.. அன்பா பாசமா 4 வார்த்தை பேசிட்டாலே போதும் அப்படியே சரண்டராகிடுவினம்....

    இதைப் புரிந்து கொள்ளத் தெரியாத பெண்கள் இருக்கும் குடும்பங்களில்தான் அதிக பிரச்சனையாகிறது..

    ஆனா அந்த 10 வீத மிகுதி ஆண்கள் இருக்கிறார்கள் அவர்கள் முற்றிலும் விதிவிலக்கானவர்கள்... அவர்களை எதைக் கொடுத்தும் சீர்ப்படுத்த முடியாது!!.

    அச்சச்சோ இன்று என் செக்கும் பிஸி.. வரமாட்டா என்றே நினைக்கிறேன். மீ தனியா எல்லாம் கல்லெறி படமாட்டேன்ன் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
  27. மாநிறமாக இருந்தாலும் மனசு தங்கமாக இருக்கும் அமிர்தா கொடுத்து வைத்தவள்தான்! மிகவும் அருமையான கதை! கடைசிவரை சுவாரஸ்யமாக இருந்த உரையாடல்கள்! அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் சகோதரரே

    உயிரோட்டமுள்ள அழகான கதை. படித்துக்கொண்டே போகும் போது என்னவாகுமோ என்ற ஆர்வம் குறையாமல் சுவாரஸ்யாக இருந்தது, எதார்த்தமான நகர்வோடு சுபமாக முடிந்தது மன நிறைவை தந்தது. கதை எழுதிய துரை செல்வராஜு சகோதரருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    பகி்ர்ந்த தங்களுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  29. @ Geetha Sambasivam...

    எங்கள் வீட்டு விசேஷத்துக்கு முதலாவதாக வந்த தங்களுக்கு நன்றி.. மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  30. @ ஸ்ரீராம். said...

    >>> வணக்கம் கீதா அக்கா... லேட் இல்லை. சரியான நேரம்!..<<<

    சரியான நேரம்.. அதோட நல்ல நேரமும் கூட!...

    பதிலளிநீக்கு
  31. @ ஸ்ரீராம். said...

    >>> கீதா ரெங்கனுக்கு நெட் படுத்தலாயிருக்கும்!..<<<

    எப்படியோ அடிச்சி பிடிச்சுக்கிட்டு வந்துட்டாங்க!...

    பதிலளிநீக்கு
  32. @ Geetha Sambasivam said...

    >>> மிக அருமை. எல்லோரும் இப்படியே இருக்கப் பிரார்த்தனைகள்... <<<

    தங்களுடைய பிரார்த்தனைகளே எங்களுடையதும்!... வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  33. @ ஸ்ரீராம். said...

    >>> உங்கள் கதையை வெளியிடுவதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.
    நெகிழ்வான சந்தோஷமான கதை...<<<

    ஸ்ரீராம் தங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  34. @ ரிஷபன் said...
    >>> இந்த மனசு இருக்கே.. சினிமாவோ.. கதையோ.. நல்ல மனிதர்கள் பற்றி படித்தாலே குஷியாகி விடுகிறது..>>>

    சந்தோஷம் - அதுதானே வேண்டும்...
    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  35. @ கோமதி அரசு said...

    >>> கதை மிகவும் அருமை...மனது ஒத்து போனது...
    குழந்தைகள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்...<<<

    கதாபாத்திரங்களைக் குழந்தைகளாகப் பாவித்து வாழ்த்துரைத்த விதம் அருமை.. அருமை..
    மனம் நெகிழ்ந்து கண்ணீர் வந்து விட்டது...

    இப்படியான கருத்துரைகளுக்கெல்லாம் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...
    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  36. @ வல்லிசிம்ஹன் said...

    >>> எத்தனை அருமையான கதை. மிக நன்றாக இருக்கிறது. மனம் நிறை வாழ்த்துகள்...<<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  37. @ Bhanumathy Venkateswaran said...

    >>> எல்லா பெண்களும் மோசம் கிடையாது..<<<

    நிதர்சனமான வார்த்தைகள்.. எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும்...

    >>> அமிர்தமான பெண்ணை அடையாளம் காட்டியதற்கு நன்றி..<<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. @ KILLERGEE Devakottai said...

    >>> தொடக்கத்தில் மனம் திக் திக் திக் திக்...
    முடிவு கண்டு மனம் டிக் டிக் டிக் டிக்... <<<

    தங்களுக்கே உரித்தான பாணியில் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  39. @ Anuradha Premkumar said...

    >>> மிக மிக அருமையான கதை...
    இயல்பான...எதார்த்தமான கதை கரு... மிக மகிழ்ச்சி.. <<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  40. @ திண்டுக்கல் தனபாலன் said...

    >>> கதை அருமை..<<<

    அன்பின் தனபாலன் அவர்களது வருகை கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  41. @ Thulasidharan V Thillaiakathu said...

    >>> அழகான கதை. மகிழ்வான குடும்பத்தைப் பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது..
    //// கீதா.. <<<

    மகிழ்ச்சி எங்கெங்கும் நிறைந்திருக்க வேண்டும்...

    அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  42. @ middleclassmadhavi said...

    >>> Super!..<<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  43. @ Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

    >>> நல்ல திருப்பம். ரசித்தேன்..<<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

    பதிலளிநீக்கு
  44. @ நெ.த. said...

    >>> கதை நல்லா இருந்தது. நல்ல உரையாடல்கள். நல்ல முடிவு..<<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. பாராட்டுரைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  45. @ priyasaki said...

    >>> உறவு முறைகளின் சந்தோஷமான பேச்சுக்கள் மிக யதார்த்தமானது..
    நல்லதொரு கதை வாசிச்சது மகிழ்ச்சி..<<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  46. @ பரிவை சே.குமார் said...

    >>> மாநிறமாக இருந்தால் என்ன மனம் நல்ல நிறமாக இருந்தால் போதும்...
    அருமையான கதை.. செம கலக்கல்... <<<

    முத்திரைக் கதைகளைப் படைக்கும் தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  47. @ athiraமியாவ் said...

    >>> இது எங்கோ காதில் கேட்ட உண்மைகளைத் தொகுத்து எடுத்து கதையாக்கி இருக்கிறாரோ.. ஏனெனில் இது கற்பனை என்பதைத் தாண்டி இப்படி உண்மையிலும் நடக்க வாய்ப்பிருக்கு... <<<

    ஏ.. யக்கா!... (66 வயசு..ன்னு சொன்னாங்களே.. அதான்!..)
    இது நெஜமாலுமே கதை தானுங்கோ!...

    வரும்போதே சலங்கை சத்தம்.. காதெல்லாம் அதிருது!...
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  48. @ athiraமியாவ் said...

    >>> இது எங்கள் சின்னவரும் கையாளும் ஒன்று.... நாம் கவனிக்காமல் இருந்தால்[காரணம் தெரிந்திருந்தால்:) கவனிக்காமல் இருப்போம்:)...<<<

    வீட்டுக்கு வீடு வாசப்படி தானே!...

    ஆனால் இதெல்லாம் எத்தனை அழகு!.. நினைக்கவே மனம் இனிக்கின்றது..
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  49. @ athiraமியாவ் said...

    >>> முதலில் நிறம் குறைவான பெண்ணைக் காட்டியிருக்கிறார்கள்.. ஹா ஹா ஹா.. அதன் பின்பு அத் திருமணம் நடக்குமோ?:)..<<<

    பொய் சொல்லப் போக நல்ல சம்பந்தத்தை இழந்து விட்டார்கள்..

    மேலதிக தகவல் சொல்லியதற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  50. இரட்டையர்களுக்கு... இரட்டையர்கள்... ஆரம்பமே சூப்பர ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்...!! சுபமாக முடிந்தது மகிழ்ச்சி....!!!

    பதிலளிநீக்கு
  51. @ athiraமியாவ் said...

    >>> ஆஆஆங்ங் இனித்தான் கதையின் மேட்டருக்கே வரப்போறேன்:) அதாவது கதை ஓகேதான் ஆனா இது எழுத்தோட்டம்தானே... இனிமேல்தானே கதையே ஆரம்பம்:).. <<<

    ஆகா.. புகைய கிளப்பி உட்டுட்டாங்களே!..
    எவ்வளோ கஷ்டப்பட்டு இந்தப் புள்ளைய முடிச்சிருக்கம்!...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!...

    இப்படியொரு கோணத்தைக் காட்டியதும் நல்லது தான்...
    இருந்தாலும் இன்னும் மூனு மாசத்தில வெளங்கிடும்!...

    குழந்தைக்கு சீனித் தண்ணி தொட்டு வெக்க வந்துருங்கோ...

    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  52. @ @ athiraமியாவ் said...

    >>> அன்பா பாசமா 4 வார்த்தை பேசிட்டாலே போதும் அப்படியே சரண்டராகிடுவினம்..<<<

    இது ரெண்டு பேருக்கும் பொருந்தி வரும் தானே...

    அன்புக் கயிறு இதுதான்.. அறுக்க யாராலும் ஆகாதையா!...
    பராசக்தி பாட்டு ஞாபகத்துக்கு வருது..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  53. @ ‘தளிர்’ சுரேஷ் said...

    >>> கடைசிவரை சுவாரஸ்யமாக இருந்த உரையாடல்கள்!..
    அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!..<<<

    சுரேஷ் தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  54. @ Kamala Hariharan said...

    >>> உயிரோட்டமுள்ள அழகான கதை.
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்... <<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் பாராட்டுரைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  55. @ பாரதி said...

    >>> இரட்டையர்களுக்கு... இரட்டையர்கள்...<<<

    இரட்டையர்களைத் தான் தேடினார்கள்.. ஆனால் அமையவில்லை..
    இவர்கள் வேறு வேறு வீட்டுப் பெண்கள்..

    >>> சுபமாக முடிந்தது மகிழ்ச்சி... <<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  56. //துரை செல்வராஜூ said...
    @ athiraமியாவ் said...

    ஏ.. யக்கா!... (66 வயசு..ன்னு சொன்னாங்களே.. அதான்!..)
    ...///

    அச்சச்சோ என் செக்:) ஐ இப்போ தேம்ஸ்ல தள்ளாமல் மீ ரீ குடிக்கவே மாட்டேன்ன்ன்ன்ன்:)). அண்டைக்கு ஆரிட கண்ணிலயும் அக்கொமெண்ட் பட்டிடக்கூடாது முருகா என நேர்த்தி வச்சனே:) கரீட்டாத் துரை அண்ணன் பார்த்திருக்கிறாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    அது துரை அண்ணன்.. ஆரம்பம்.. 81 எண்டிச்சினம் பிறகு 80 எண்டார்கள்.. இப்போ கீழால ஜம்ப் பண்ணி 66 இல வந்து நிக்குது:) இதில இருந்து உங்களுக்கு என்ன பிரியுது?:) ஹையோ புரியுது?:)..

    வயசு இறங்க இறங்க..:) அடிராவுக்கு சேசே அதிராவுக்கு இழமை திரும்பி அயகு கூடுதூஊஊஊஊஊஊஊ:)) ஹையோ ஹையோ ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  57. கதை சுவாரஸ்யமாகச் சென்று இனிதே முடியவேண்டும் என்கிற டெம்ப்லேட்டில் இருப்பதால், எல்லாம்..

    சுபம்
    வணக்கம்
    நன்றி மீண்டும் வருக !

    பதிலளிநீக்கு
  58. இயந்திரத்தனமான பேஸ்புக் டிவிட்டர் கதை போல இல்லாமல் உணர்வுபூர்வமான கதை மிகவும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  59. அருமையான கதை நகர்வு
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  60. அருமை. கதையைக் கொண்டு செல்லும் விதம் அழகு.

    பதிலளிநீக்கு
  61. 'மாநிறம்’ கதையை இன்று அடியேன் படிக்க நேர்ந்தது.

    கதையின் ஆரம்பப் பகுதியில் ...........
    ஓர் பரபரப்பு, விறுவிறுப்பு + எதிர்பார்ப்பு

    இடைப் பகுதியில் ............. மதில் மேல் பூனையாக
    கொஞ்சம் படபடப்பு ..... மனதில் ஓர் திக்....திக்....திக் !

    நிறைவுப்பகுதியில் ..............
    மனதுக்கு ஓர் முழு நிறைவு. திருப்தி !

    கதையில் வரும் ’அமிர்தவல்லி’ போல ஒரு பெண் மனைவியாக அமைய ஒருவன், உண்மையிலேயே மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    //மாநிறம் தான்.. ஆனாலும் மனசு நிறம் தங்கமா இருக்கே...ம்மா!..//

    ’சுரேஷ்’ என்ற கதாபாத்திரம் சொல்லிடும் இந்த ஒரு வாக்யம் .... வாசித்த எனக்கு அமிர்தம் போல இனித்தது.

    ஒருவரின் மனதைப் புரிந்துகொள்ளும் வரை மட்டுமே அனைத்துக்குழப்பங்களும் ..... அதனை நன்கு புரிந்துகொண்டதும் .... தெளிவு தானே வந்து விடும்.

    பாஸிடிவ் ஸ்டோரி எழுதி அசத்தியுள்ள கதாசிரியர் ’மை டியர் பிரதர்’ திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  62. @ @ athiraமியாவ் said...

    >>> அச்சச்சோ என் செக்:) ஐ இப்போ தேம்ஸ்ல தள்ளாமல் மீ ரீ குடிக்கவே மாட்டேன்ன்ன்ன்ன்:))<<<

    இப்போ ரீ குடிச்சாச்சா.. இல்லையா!?..

    பதிலளிநீக்கு
  63. @ ராஜி said...
    >>> நல்லா இருக்கு..<<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..நன்றி..

    பதிலளிநீக்கு
  64. @ஏகாந்தன் Aekaanthan ! said...

    >>> சுபம்
    வணக்கம்
    நன்றி மீண்டும் வருக !..<<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. சுபமான கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  65. @ Asokan Kuppusamy said...

    >>> உணர்வுபூர்வமான கதை மிகவும் நன்று பாராட்டுகள்.. <<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. பாராட்டுரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  66. @ Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

    >>> பாராட்டுகள்..<<<

    தங்களது வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  67. @ சிவகுமாரன் said...

    >>> அருமை.. <<<

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  68. @ ஸ்ரீராம். அன்புடன் கோபு said...

    >>> மனதுக்கு ஓர் முழு நிறைவு. திருப்தி!..<<<

    அன்பின் அண்ணா...

    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. பாராட்டுரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  69. நேற்று கொஞ்சம் பிசியா இருந்ததில் வலைப்பக்கம் வர தாமதமாகிடுச்சி .
    மிகவும் அழகானா பாசிட்டிவ் எண்ணங்களை விதைக்கும் கதை ..
    மிகவும் பிடித்திருந்தது மாநிறம் மனதை கொள்ளைகொண்டது துரை அண்ணா

    பதிலளிநீக்கு
  70. மாநிறம். தங்கமனஸு தங்கம். இப்போதுதான் எங்கள் பிளாகே திறக்கமுடிந்தது. மூன்றுநாளாக ஸ்ட்ரைக். என்ன அருமையான கதை. இருபத்திரண்டு வயது கொஞ்சம் சலனத்தை உண்டாக்கிவிட்டது. கதை அருமை. விருந்தும் சாப்பிட்ட பிறகே இங்கு வர முடிந்தது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  71. @ Angel said...

    >>> கதை மிகவும் பிடித்திருந்தது மாநிறம் மனதை கொள்ளை கொண்டது.. <<<

    அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  72. @ காமாட்சி said...

    >>> கதை அருமை. விருந்தும் சாப்பிட்ட பிறகே இங்கு வர முடிந்தது..<<<

    அம்மா., தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!