(நன்றி.. சமீபத்தில் மீண்டும் பார்த்த ஏ.பி.நாகராஜனின் திருவிளையாடல் படம்)
வாருங்கள் எங்கள் பிளாக் ஆசிரியரே. உமக்கு வணக்கம்.
நன்றி ‘நண்பர்களே. எங்கள் பிளாக் வளர்ச்சிக்குக் காரணமாய் இருக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
உங்கள் வாழ்த்தில் சுரத்தே இல்லையே! என்ன காரணம் என்று இந்தச் சபை அறியலாமோ.
உங்களிடம் சொல்லியிருந்தேனே.. எனக்கு இருக்கும் கவலைக்குத் தீர்வு சொல்ல யாராகிலும் வரலாம் என்று எல்லோருக்கும் சொல்லியாகிவிட்டதா?
‘என்ன கவலை என்று எங்களிடம் சொல்லியிருந்தால் நாங்களே பிரச்சனையைத் தீர்த்துவிடுவோம். நீங்களோ, ஏதோ காரணத்திற்காக வெளிப்படையாக என்ன பிரச்சனை என்று சொல்லத் தயங்குகிறீர். ஆயினும், நாங்கள் எல்லோரிடமும், உங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சனை, அதைத் தீர்த்துவைக்கும் ரெசிப்பியை திங்கக் கிழமைக்குத் தாருங்கள் என்று சொல்லிவிட்டோம்”
‘இன்னுமா யாரும் வரவில்லை’?
எங்கள் பிளாக் அனைவருக்கும் வணக்கம். நான் நெல்லைத் தமிழன். இந்த வார திங்கக் கிழமைப் பதிவுக்கு……..
ஐயா… எங்கள் பிளாக் ஆசிரியர் ஸ்ரீராம் அங்கு இருக்கிறார். அவரிடமல்லவா முதலில் சொல்லவேண்டும். எங்களிடம் சொல்லி என்ன பயன். அங்கே போய்ச் சொல்லும். அவர் ஏற்றுக்கொண்டு வெளியிட்டால் நாங்கள் படித்துப் பார்த்துக் கருத்து சொல்றோம்.
ஸ்ரீராம்… வணக்கம். உங்கள் பிரச்சனையைத் தீர்க்கும் ரெசிப்பி வேண்டும் என்று எல்லோரும் அறிவித்திருந்தார்களே. அதைக் கொண்டு வந்திருக்கிறேன்.
"வருக நெல்லைத் தமிழரே.. இந்த வாரத்துக்கு என்ன எழுதிக்கொண்டு வந்திருக்கிறீர்?"
எங்கள் பிளாக் ஆசிரியரே… நான் செய்துபார்த்து எழுதிக் கொண்டு வந்திருப்பது ‘கருவேப்பிலைக் குழம்பு’.
‘ஆஹா.. அருமை.. அற்புதம்.. இதனைத்தான் நாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். நடிகர் அஜீத் போல் தலைமுடி சால்ட்-பெப்பர் நிறத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறதே.. எங்கே விரைவில் தலைமுடி முழுவதும் பஞ்சுப்பொதியாகிவிடுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது, எமக்கு உதவும் முகமாக நல்ல ரெசிப்பி கொண்டுவந்திருக்கும் நெல்லைத் தமிழரே நீவிர் வாழ்க. மற்ற எல்லா இடுகைகளையும் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு இதனை உடனே யாம் வெளியிடுவோம். உங்கள் ரெசிப்பியைச் சொல்லும் பார்ப்போம் நிச்சயம் அது எம் தலையாய பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்து, மீண்டும் Dye அடிக்காமல் எம் தலைமுடியைக் கருகருக்கச் செய்யும் என்ற நம்பிக்கை எமக்கு வந்துவிட்டது. ம்.. ஆரம்பியும். சற்றுப்பொறுங்கள்.. அதற்கு முன்னால் ஒரு சந்தேகம்.. கருவேப்பிலையா? கரிவேப்பிலையா"
(‘நெல்லை மனதுக்குள்: என்னது... மெயின் விஷயத்தை விட்டு விட்டு சம்பந்தமில்லாத பிரச்னை எல்லாம் கிளப்பறார்... சிலபஸ்லயே இல்லாத விஷயம்னா இது? அதைவிட, தலையாய பிரச்னையை ஒரேநாளில் தீர்த்தா? இது ஒரே நாள் வித்தையா? அரச மரத்தைச் சுத்தினால் வயிற்றில் புழு பூச்சி உண்டாகும் என்பதைப் படித்துவிட்டு, நாலுமுறை அரசமரத்தைச் சுற்றிவந்து அடி வயிற்றைத் தொட்டுப்பார்த்த கதையாக இருக்கிறதே. நம்மை நம்பி இதை ஸ்ரீராம் செய்துபார்த்து, மறு நாளே தலைமுடி கன்னங்கரேல் என்று இருக்கும் என்று எதிர்பார்ப்பாரோ… என்னவெல்லாம் பிரச்சனை இந்த இடுகை கொண்டுவரப்போகிறதோ… சொக்கா… ஐயோ.. அவரைக் கூப்பிட்டுப் பயன் இல்லை. ரங்கா… இந்த ஸ்ரீராமிடமிருந்து பிரச்சனை வராமல் நீங்கள்தான் என்னைக் காப்பாற்றவேணும். வேணுமென்றால், அத்தி பூத்தார்ப்போல் உம்மைத் தரிசிக்க வரும் கீ.சா மேடத்தை அடிக்கடி வரச்சொல்லுகிறேன்)
***
செய்முறை
தேவையானவை
ஆய்ந்த கருவேப்பிலை 1 கப் (சிறிது அதிகமாக இருந்தால் நல்லது)
மிளகு 2 ஸ்பூன்
வற்றல் மிளகாய் 2 அல்லது 3. மிளகைக் குறைத்தால், மிளகாயை அதிகமாக்கிக்கொள்ளலாம்.
பெருங்காயத் துண்டு சிறிது
புளி ஜலம் – 1 ½ டம்ளர். (புளிப்பு இருக்கணும். 1 எலுமி சைஸ் புளி உபயோகப்படுத்தணும். நான் 1 ஸ்பூன் புளிப் பேஸ்ட் உபயோகித்தேன்)
மஞ்சள் தூள் கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடாயில் சிறிது நல்லெண்ணை விட்டு, மிளகு, வற்றல் மிளகாய், பெருங்காயத் துண்டுகளை நன்கு வறுத்துக்கொள்ளவும்.
அதே கடாயில், அடுப்பை அணைத்தபின்பு, சூட்டோடு சூடாக, கருவேப்பிலையைப் பிரட்டிக்கொள்ளவும்.
கொஞ்சம் ஆறினபின்பு, வறுத்தவற்றை மிக்சியில் ஒரு சுத்து சுத்திவிட்டு, அதிலேயே கருவேப்பிலையையும் போட்டு நன்றாக அரைக்கவும். தேவைன, துளி தண்ணீர் விட்டு வழுமூன அரைக்கவும்.
புளி கரைத்து 1 ½ டம்ளர் புளி ஜலம் தயார் செய்துகொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் புளி ஜலமும், மஞ்சத்தூளும் போட்டு கொதிக்கவைக்கவும். கொஞ்சம் கொதிக்கும்போதே, கருவேப்பிலை பேஸ்டையும் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். இப்போது இதில் 1 ½ ஸ்பூன் நல்லெண்ணையும் சேர்க்கவும்.
எண்ணெய் பிரிவது தெரிந்தபின்பு, அடுப்பை அணைக்கவும். இதில் கடுகு திருவமாறிவிடவும்.
கருவேப்பிலைக் குழம்பு, சூடான சாதத்திற்கு சாப்பிட ரம்யமா இருக்கும்.
‘நான் இதைச் செய்துபார்த்த அன்று, தொட்டுக்கொள்ள சேம்பு ரோஸ்ட் செய்திருந்தேன். கருவேப்பிலைக் குழம்பு சாதத்திற்கு எந்தப் பச்சிடியும் நன்றாக இருக்கும். இது கடுத்த தோசைக்கும் தொட்டுக்கொள்ள யம்மியாக இருக்கும்.
இதைச் சாப்பிட்டு உங்கள் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளுங்கள் ஸ்ரீராம்.
ஸ்ரீராம் ; "இன்னொரு சந்தேகம் நெல்லையாரே... பச்சிடியா? பச்சடியா?"
நெல்லை : (மைண்ட்வாய்ஸில்) போச்சுடா... இவர் எது முக்கியமோ அதைப் பார்க்க மாட்டார் போலிருக்கே...
****
இப்போது, எங்கள் பிளாக்கில் பெரும்பாலும் முதல் பின்னூட்டம் எழுதி ஆரம்பித்துவைக்கும் துரை செல்வராஜு சார்…..
நெல்லைத்தமிழரே… இப்படி வருகீறீரா?
“ வரமாட்டேன். வெளியிடும் தேதி வாங்கி பின்னர் வருவேன். அதற்குள் என்ன ஐயா அவசரம்?
அதில்தான் பிரச்னை இருக்கிறது.. சற்று இப்படி வாரும்...
வந்தேன்... என்ன ஐயா பிரச்னை? எதற்கு? என்ன இப்போது’
‘இல்லை.. இந்தச் செய்முறையை நீர்தான் எழுதினீரா?’
உமக்கென்ன சந்தேகம் ஐயா.. எங்கள் பிளாக்கே ஒத்துக்கொண்டுவிட்டது. ஸ்ரீராமுக்கு வராத சந்தேகம் உமக்கு ஏன் வருகிறது?
நீங்களே செய்துபார்த்து அனுப்பிய ரெசிப்பியை எங்கள் பிளாக் வெளியிடுகிறது என்றால் படித்துப்பார்த்துவிட்டு, மகிழ்ச்சியோடு முதல் பின்னூட்டம் இடுபவன் நாந்தான். அதே சமயம், வேறு யாரோ சொன்ன செய்முறையைக் காப்பி அடித்து தங்களுடைய ரெசிப்பி என்பதுபோல் எழுதி அனுப்பினால் அதைக்கண்டு சீறுபவனும் நான்தான்.
ஓஹோ.. இந்த எங்கள் பிளாக்கில் எல்லாமே நீர்தானோ. இதைவிட வேறு எப்படி ஐயா செய்முறை எழுதுவது? கருவேப்பிலையை கடாயில் விட்டு... எண்ணெய் விட்டு... எல்லாம் சரியாய்த்தானே இருக்கிறது? சரி..சரி.. என்ன பிழை கண்டீர்? செய்முறையிலா அல்லது எழுதிய விதத்திலா?
செய்முறையில் பிழையிருந்தாலும் சுட்டிக் காட்டிவிடலாம். அது மன்னிக்கக்கூடிய விஷயம்தான். ஆனால் நீர் எழுதிய விதத்தில்தான் பிழையிருக்கிறது.
என்ன பிழை இருக்கோ அதைத் தனியாக என்னிடம் சொன்னால் போதாதா? இப்படி எல்லார் முன்னிலையிலும் என்னைக் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்யவேண்டுமா?
‘அது சரி… கருவேப்பிலைக் குழம்பு தலைமுடியை கருகருவென ஆக்கும் எனச் சொன்ன உமக்கு தலைமுடி ஏன் சால்ட்-பெப்பர் நிறத்தில் இருக்கிறது?’
‘நானென்ன எங்கள் பிளாக் ஓனரா ஐயா… தினமும் கருவேப்பிலைக் குழம்பு சாப்பிடுவதற்கு. அல்லது கீதா சாம்பசிவம் மேடமா. கருவேப்பிலையிலேயே பத்துவகை செய்முறைகளைச் செய்து சாப்பிடுவதற்கு? இல்லை.. தினமும் எனக்குச் செய்து தருவதற்கு என் மனைவிதான் என்னுடன் இந்த ஊரில் இருக்கிறாளா? ஏதோ அப்போ அப்போ நேரம் கிடைக்கும்போது திங்கக் கிழமைப் பதிவுக்கு ஆடிக்கு ஒன்று, அமாவாசைக்கு ஒன்றுமாக செய்முறை எழுதி அனுப்புபவன். என்னைப் போய் கூண்டில் நிற்க வைத்து, நீர் கேள்விகள் கேட்கிறீரே’
அது இருக்கட்டும். இந்தச் செய்முறை.. உங்களுடைய சொந்த செய்முறையா? இப்படித்தான் நீங்கள் இதுவரை கருவேப்பிலைக் குழம்பு செய்துவந்தீர்களா?
ஏன்… உமக்கு அதில் என்ன சந்தேகம். நான்… நான்... நானேதான்… எங்கள் பாரம்பர்ய முறையில்தான் செய்துபார்த்து படங்களோட அனுப்பியிருக்கேன் ஐயா.. போட்டிருக்கும் படத்தில் எங்கள் வீட்டு பெருமாள் சன்னிதியும் வந்திருக்கிறதே… அப்படியும் உமக்கு ஏன் சந்தேகம்?.
எனக்குப் பதில் சொல்லும்போது ஏன் இப்படி நடுங்குகிறீர்… இந்தச் செய்முறையை நாங்கள் எல்லோரும் இதற்கு முன்பே, எங்கேயோ படித்தமாதிரி இருக்கிறதே. உண்மையைச் சொல்லுகிறீரா இல்லையா?
(மனதுக்குள்: அட இந்த ஆளுகிட்டேர்ந்து தப்பிக்க வழியே இல்லை போலிருக்கிறதே. இப்படி கண் கொத்திப் பாம்புபோல் படித்த இடுகைகளையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு குற்றம் சுமத்தும் இவர் போல் பலர் இருந்தால்… ஏன் இவர் ஒருவரே போதும்.. இணையஉலகம் உருப்பட்டாற்போல்தான். எழுதி எழுதி விரலும் வலிக்குது. புலம்பிப் புலம்பி குரலும் போயிடப்போகுது)
ம்ம்..இல்லை ஐயா. சமீபத்தில் ஒரு பிளாக்கில் கருவேப்பிலைக் குழம்பு செய்முறையைப் படித்ததிலிருந்து ஆசைப்பட்டு, எங்கள் வழக்கப்படி சில மாறுதல்கள் செய்து, எழுதி அனுப்பினேன்.
அப்படியானால், அவருடைய பெயரையும் அவருடைய பிளாக்கையும் இங்கே குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே. அதை ஏன் செய்ய மறந்தீர்.
‘போற வர்றவங்கள்ளாம் அப்படித்தானே அடுத்தவங்க இடுகைகளை அபேஸ் பண்ணறாங்க. சொந்த இடுகைபோல் தங்கள் தளத்துல போட்டுக்கறாங்க. நான் வாழ்க்கைல ஒருமுறை அதுமாதிரி அபேஸ் பண்ணினா அதுல உமக்கு என்ன ஐயா பிரச்சனை?”
‘இன்றைக்கு ஒருமுறைதான் அபேஸ் பண்ணினேன் என்பீர். நாளை எம் தளத்தில் உள்ள இடுகைகளையும் இதேபோல அபேஸ் செய்வீர். இதையெல்லாம் எப்படிப் பார்த்துக்கொண்டு சகிப்பது?”
(மனதுக்குள்: ம்.. அவருக்கு இருக்கும் பரந்த மனம் உமக்கு எங்கே இருக்கிறது? எதையும் காப்பி அடிக்கவிடாமல் உம்மைப் போல் உள்ளவர்கள், Lock செய்து வைத்துக்கொள்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் பின்னூட்டமிடுவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. இந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுது. இதில் என்னைக் குறை சொல்ல வந்துவிட்டார்)
திங்கக் கிழமைப் பதிவுக்கு ஒரு செய்முறை எழுதி படங்களோடு அனுப்பியது குத்தமாய்யா? இதற்கா இப்படி என்னை காலையில் முதல் ஆளாக வந்து வறுத்தெடுக்கிறீர்? சரி..சரி.. உங்களிடம் ஏன் எனக்கு வீணான பிரச்சனை? இதோ, இதையும் இடுகையோடு சேர்த்து வாசித்துக்கொள்ளுங்கள். இனி ஆளை விடுங்கள். நான் வருகிறேன். முடிந்தால் ஸ்ரீராமிடம் சொல்லுங்கள்... அவர் வெளியிடும் தேதியை எப்போது வேண்டுமானாலும் வச்சுக்கட்டும்...
ஸ்ரீராம் : நெல்லை... தாவு என்றால் என்ன? எங்கிருந்து, எப்போது, எவ்வளவு கிடைக்கும்? அது எப்படி தீரும்?
இந்த கருவேப்பிலை குழம்பு நான் செய்து பார்ப்பதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது இரண்டு. ஒன்று பிரபல பதிவர் கீதா சாம்பசிவம் மேடம். சமீபத்தில் அவர்கள் தளமான ‘சாப்பிடலாம் வாங்க’வில் எழுதியிருந்த கருவேப்பிலை குழம்பு செய்முறைக் குறிப்பு. அவரது தளம்/இடுகை http://geetha-samba sivam.blogspot.com/2018/01/ blog-post_24.html. அவங்களோட உணவுக் குறிப்புகள் மிக உபயோகமானவை, பெரும்பாலும் எங்கள் வழக்கத்தில் அமைந்தவை. Practicalஆ எது செய்தால் சரியா வருமோ அப்படி எழுதியிருப்பாங்க. இரண்டாவது, என்னிடம் மிக அதிக அளவில் இருந்த கருவேப்பிலை (உங்க ஊர் மாதிரி இல்லை. நினைத்தபோதெல்லாம் எல்லா இடத்திலும் கருவேப்பிலை கிடைப்பதற்கு. அப்போ அப்போ காய்கறி வாங்கும்போது, இலவசமா கொடுக்கற சில ஆர்க்குகளைச் சேகரித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்போம்). கருவேப்பிலை ஜாஸ்தியா இருந்தால் நான் அடைக்கு அரைப்பேன். ஆனால் இந்த முறை, கருவேப்பிலைக் குழம்பு.
பின் குறிப்பு :
உரிமையோடு ஸ்ரீராம், துரை செல்வராஜு சார், கீதா சாம்பசிவம் மேடம் பெயர்களை உபயோகப்படுத்தியுள்ளேன். நகைச்சுவையாக எடுத்துக்கோங்க.
ஸ்ரீராம் : ரெஸிப்பி உண்மையானதுதானா? இல்லை, அதுவும் நகைச்சுவையா?!!
கொடுத்துள்ள படம் ஸ்ரீராமோடது இல்லையே என்பவர்கள்.... (இதற்குப்பின் வரும் வரிகள் ஆ'சிரி'யரால் நீக்கப்பட்டது!)
நெல்லை? ஏன் என்னுடைய கேள்விகள் எதற்கும் பதில் வ(ர)ல்லை?
first?
பதிலளிநீக்குவாழ்க..
பதிலளிநீக்குDurai or Thi.geetha?
பதிலளிநீக்குhehehehe me firshtttttttttuuuuu
பதிலளிநீக்குஎன்ன இது..பன்னாட்டு சதியாக இருக்குமோ!...
பதிலளிநீக்குமுதலிடத்தைப் பிடித்த மூத்த பதிவர், வலையுலக மார்க்கண்டேயனி கீதா அக்காவுக்குப் பாராட்டுகள். இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் மற்றும் தூக்கம் வராதோர் சங்கத்தின் கண்மணிகள் அனைவருக்கும் வணக்கம்....
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா நானும் லேட்டு இப்பத்தான் திறந்தது....
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம், கீதாக்கா பானுக்கா துரை அண்ணா
கீதா
அடடே... பானு அக்காவும் ஜோதியில்... இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குகீதாக்காவும் பானுக்காவும் போட்டி போட்டதில் நானும் துரை அண்ணாவும் பின்னாடி போய்ட்டோம் இல்லையா துரை அண்ணா ஹா ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
அவ்விடத்தில இன்னைக்கு சீக்கிரமே காஃபி ஆத்தியாச்சா!?...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
பதிலளிநீக்குகீதா அக்காதான் சரியாய் நேரம் பார்க்காமல் லேட் லேட் என்கிறார். நீங்களுமா?!!!
ஹாஹாஹா, நானும் மாட்டிக் கொண்டேனா? ஹிஹிஹி!
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் முடியைப் பற்றி ஏதோ பிரச்சனை என்றுஎழுதுவதாக இருக்கேன் என்று சொன்னாரோ இல்லையோ இங்கே ஹா ஹா ஹாஹாஹஹ்ஹ...கறிவேப்பிலை குழம்பு!!!
பதிலளிநீக்குகீதா
பனி கொட்டுது...
பதிலளிநீக்குவெளியில உட்கார்ந்து எபி..க்காக தவங்கிடந்தா இந்த நெட்டு இரக்கம் காட்டலையே...
அங்கே யாரோ சிரிக்கிற சத்தம் கேக்குது..
காஃபி இன்னிக்கு ஐந்தரைக்கே ஆத்தியாச்சு. நோ கஞ்சிக்கடமை! :) சங்கட சதுர்த்தி!
பதிலளிநீக்கு// அங்கே யாரோ சிரிக்கிற சத்தம் கேக்குது.. //
பதிலளிநீக்குதுரை ஸார்.. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனந்தச் சிரிப்பு.. !!!
ஆனால் சிரிக்கறவங்க மதியத்துக்கு மேல்தானே வருவாஹ....!
//கீதா அக்காதான் சரியாய் நேரம் பார்க்காமல் லேட் லேட் என்கிறார். நீங்களுமா?!!!// என்னோட மடிக்கணினி காட்டுவது அம்பேரிக்க நேரம். மாத்திக்கலை! ஆனால் பதிவுகளுக்குக் கருத்துச் சொல்லும்போது வருவது இந்திய நேரம். எங்க வீட்டு கடிகார நேரப்படி இந்தக் கணினி காட்டும் நேரம் 2 நிமிடம் தாமதம்! :))))
பதிலளிநீக்குநெல்லை செம!!!! பத்வு!! ஹையோ அஜித் பெயரைப் பார்த்ததும் டங்க் ஸ்லிப் பத்வு நு வந்துருச்சு ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஅது சரி அப்ப ஸ்ரீராம் உங்க முடி விக் கா!!! ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா ஹா ஹா...
அதிரா வரட்டும் இன்று செம வேட்டை....மாட்டிக்கிட்டார் ஸ்ரீராம்...இப்பத்தான் புரியுது ஸ்ரீராம் முடியைப் பற்றி என்ன பிரச்சனை சொலல் நினைத்தார்னு.....அதுவும் யாரோ ரெண்டுபேர் பேசிக்கிட்டாங்களாம் ஹா ஹா ஹா ஹா
கீதா
// ஸ்ரீராம் முடியைப் பற்றி ஏதோ பிரச்சனை என்றுஎழுதுவதாக இருக்கேன் //
பதிலளிநீக்குகீதா.. வரவர இது பெரிய பிரச்னையாப் போச்சே....!!
//அங்கே யாரோ சிரிக்கிற சத்தம் கேக்குது..// நாந்தேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அப்புறமா வரேன்!
பதிலளிநீக்கு// என்னோட மடிக்கணினி காட்டுவது அம்பேரிக்க நேரம்.//
பதிலளிநீக்குஒரு தரம் அப்டேட் செய்துகொண்டால் போதும்! கரெக்ட்டா நேரம் அமையும்!
துரை ஸார்.. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனந்தச் சிரிப்பு.. !!!
பதிலளிநீக்குஆனால் சிரிக்கறவங்க மதியத்துக்கு மேல்தானே வருவாஹ....!//
ஹா ஹா ஹா ஹா
இங்க எபி திறக்க லெட்டானாலும் இப்ப டக் டக்குனு போடுது கமென்டை...லேட்டானலும் லேட்டஸ்டா...ஹா ஹா
கீதா
நெல்லை, இலவசமா விளம்பரம் கொடுத்ததுக்கு நன்னி ஹை! :)))) எல்லோரும் எனக்குத் தெரியாமல் பேசி வைச்சுக்கிறீங்க போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))
பதிலளிநீக்கு// இப்பத்தான் புரியுது ஸ்ரீராம் முடியைப் பற்றி என்ன பிரச்சனை சொலல் நினைத்தார்னு.//
பதிலளிநீக்குகீதா... இது இப்போ 'தலை'யாய பிரச்னையா என்ன!!!!
கீதா அக்காதான் சரியாய் நேரம் பார்க்காமல் லேட் லேட் என்கிறார். நீங்களுமா?!!!//
பதிலளிநீக்குஇல்லை ஸ்ரீராம் நீங்க சரியாத்தான் போட்டிருக்கீங்க...எனக்கு இங்கு ஓபன் ஆனது 6.02 க்குதான் அதூம் தாண்டினு நினைக்கிறேன்...
கீதா
ஸ்ரீராம் நோ நோ... கீதாக்காவை மார்க்கண்டேயனி என்று சொன்னதற்கு தானைத்தலைவி சார்பில் நான் அதிரா ஏஞ்சல் எல்லோரும் கண்டனம்....ஹா ஹா ஹா
பதிலளிநீக்குஅவங்க இன்னும் சின்ன குழந்தையாக்கும்!!!!பட்டுக் குஞ்சுலுவுக்குப் போட்டியா...
கீதா
ஆகா.. இப்போதான் பதிவைப் படித்தேன்...
பதிலளிநீக்குஇப்படித்தானே வேணும்..ங்கறது...
நல்லவேளை நெற்றிக் கண்ணோட கறிவேப்பிலை ஜாமி வரலை...
அந்த மட்டுக்கும் தப்பித்தோம்..
வாழ்க நெல்லை..
ஆனா... நெல்லையைப் பத்தி ரெண்டு பதிவு போட்டேன்.. ஐயா வந்தார்களா..ந்னு தெரியலை...
மற்றபடிக்கு
வாழ்க நலம்.. வாழ்க நகைச்சுவை...
வாழ்க கறிவேப்பிலை...
கீதா... இது இப்போ 'தலை'யாய பிரச்னையா என்ன!!!!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா பின்ன பின்ன நீங்களே சொல்லிட்டீங்க ஸால்ட் அண்ட் பெப்பர்னு!!! ஹிஹிஹிஹி....இங்க எல்லாரும் அதுவும் 81 வயசு கொண்டாடின அ அ கூட பாருங்க அதை வெளியில் காட்டக் கூடாதுனு கட் பண்ணிக்கிட்டாங்க...ஹா ஹா ஹா ஹா ஹா..
கீதா
// நீங்களே சொல்லிட்டீங்க ஸால்ட் அண்ட் பெப்பர்னு!!! //
பதிலளிநீக்குநானா? இது எப்போ?
நல்லவேளை நெற்றிக் கண்ணோட கறிவேப்பிலை ஜாமி வரலை...//
பதிலளிநீக்குவரும் வரும் துரை அண்ணா...அது மதியமாத்தான் வரும்...வந்து என்ன அலப்பறை நடக்கப் போகுதோ..எனக்கு வர கொடுத்துவைக்கனுமே வைரவா...
கீதா
// என்னோட மடிக்கணினி காட்டுவது அம்பேரிக்க நேரம்.// அந்த நேரம் தெரியணும் என்பதற்காக மாத்தலை! :)))))
பதிலளிநீக்குபடத்தில் இருப்பது ஶ்ரீராமா? அப்படித் தெரியலையே?????????????????
பதிலளிநீக்கு//படத்தில் இருப்பது ஸ்ரீராமா?//
பதிலளிநீக்குஅவ்வளவு அப்பாவியா அக்கா நீங்க... யாருன்னு தெரியலையா? வயசானா மறதி வரும்தான்! என்ன செய்ய... வுடுங்க... அடுத்தடுத்த பின்னூட்டங்களுக்குக் காத்திருக்கவும்!!!!!!!
மாற்றவேண்டாம் அக்கா.. அமெரிக்க நேரத்தின் எந்த நேரத்தில் நம்ம நேரம் காட்டும் என்று பார்த்து வைத்துக் கொண்டால் போதும்!
பதிலளிநீக்குநெல்லை அசத்திட்டீங்க!!! திருவிளையாடல் பாணியில்!!!
பதிலளிநீக்குஇதேதான் செய்முறை ஆனால் எங்கள் பாட்டி உ பருப்பும் சேர்த்து வறுத்து அரைத்துவிடுவாங்க...ஸோ அதேதான் நானும்....தோழி ஒருவர் கூடவே கொஞ்சம் கடலைப்பருப்பும் வறுத்து அரைப்பார். மற்றொருவர் இத்துடன் து பருப்பு மட்டும் போட்டு வறுத்து அரைத்துச் செய்வார். இது எல்லாம் செய்திருக்கேன்
பருப்பு எதுவும் சேர்க்காமல் செய்வதான உங்க/கீதாக்கா ரெசிப்பியையும் செய்து பார்த்துடறேன்....
கீதா
படத்தில் இருப்பது ஸ்ரீராம் இல்லை இல்லவே இல்லை என்று நான் அதிராவின் கைமீதான கற்பூரத்தில் அடித்துச் சொல்லுவேன்!!
பதிலளிநீக்குகீதா
// நீங்களே சொல்லிட்டீங்க ஸால்ட் அண்ட் பெப்பர்னு!!! //
பதிலளிநீக்குநானா? இது எப்போ?//
ஆ ஆ ஆ!!!! நான் என்ன நெல்லை மாதிரி மண்டபத்துல கனவு கண்டு சொன்னேனாக்கும்!!! அதான் நீங்களும் நெல்லையும் பேசிக்கிட்டிருக்கிங்களே!!! ஹையோ பப்ளிக்கா வந்துருச்சே!!! ஸ்ரீராமின் ரகசியம்.... ஹா ஹா ஹா ஹா ஹா....
கீதா
சுவையான குறிப்பு. எங்கள் வீட்டிலும் அடிக்கடிச் செய்வதுண்டு.
பதிலளிநீக்குஅம்மணி எழுதிய பகிர்வுக்கான சுட்டி - http://kovai2delhi.blogspot.in/2011/07/blog-post.html. சும்மா ஒரு விளம்பரம் தான்!
அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நவீன திருவிளையாடலை இரசித்தேன்.
பதிலளிநீக்குஇதோ உமக்கு ஆயிரம் நன்றிகள் பெற்றுக் கொள்ளும்.
/.. ஒரு சந்தேகம்.. கருவேப்பிலையா? கரிவேப்பிலையா //
பதிலளிநீக்குஆதிகாலத்தில் அதன் பெயர் கருகருவேப்பிலை என்றிருந்ததாம். காலப்போக்கில்…
என்று மூலிகைமணி ஆசிரியரின் தாத்தா சொன்னதாக எங்கோ படித்த ஞாபகம்..
ஸ்ரீராம் தலைமுடி பிரச்சனை பற்றி என்ன எழுதப் போகிறார் என்று யூசித்து யூசித்து...என் முடி போயே போய்ருச்சு....அதனால இன்னிக்கே நெல்லை உங்க ரெசிப்பி செஞ்சு சாப்ப்ட்டிட்டு என் தலை முடி வளரலைனா...இதோ இதே எபி கொற்றவையில் நியாயம் கேட்பேன்!!!! போராடுவேன்...!! ஹா ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குகீதா
நெல்லை/கீதாக்கா குழம்பு செய்தும் விட்டேன்...அப்போ போட்ட கமென்ட் இப்பத்தான் போயிருக்கு போல!!! குழம்பே செஞ்சாச்சு!! சூப்பரா இருக்கு !!!
பதிலளிநீக்குகறிவேப்பிலை என்பதுதான் சரி என்றே எனக்குத் தோன்றுகிறது. கறி செய்ய பயன்படுத்தப்படுவதால் கறிவேப்பிலை....
கரி என்றால் அர்த்தம் வேறன்றோ? அப்புறம் கரு என்றால் ஒரு வேளை கரி கரு இரண்டும் கருப்பு என்பதைக் குறிப்பதாக இதில் அயர்ன் சத்து இருப்பதால் தலைமுடி கரு கரு என்று வளரும் கரியைப் போன்ற கலரில் வளரும் என்பதால் இருக்குமோ?!!
சரி இங்கு நக்கீரர் யாரோ?!!! ஹிஹிஹிஹி...
கீதா
ஓ துரை அண்ணாதான் கீர் கீர் என்று கீறும் நக்கீரரோ!!!! அப்படினா துரை அண்ணா சொல்லுங்க றி? ரி? ரு> எது என்று..என் எழுத்தில் கறிவேப்பிலை என்றுதான் எழுதுவேன் எப்போதும்....என் அர்த்தம் கறியில் பயபடுத்துவதால்...அது போல ஆங்கிலத்திலும் பார்த்தீர்கள் என்றால் ...curry leaves...என்றுதான் வரும்...
பதிலளிநீக்குகீதா
//அம்மணி எழுதிய பகிர்வுக்கான சுட்டி - http://kovai2delhi.blogspot.in/2011/07/blog-post.html. சும்மா ஒரு விளம்பரம் தான்!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா வெங்கட்ஜி!!! இப்படி நாம் சைக்கிள் காப்ல சூப்பர்!!!! இதோ பார்க்கிறேன் ஆதியின் ரெசிப்பியை...நன்றி சைக்கிள் காப்ல நுழைத்தது.
கீதா
மனைவி எழுதிய பதிவுகளையும் இப்படி அழகாக எடுத்துச் சொல்லி மனைவிக்குப் பெருமை சேர்த்து கணவர் என்ற ஸ்தானத்தின் கடமையாற்றி கணவர்மார்களின் ஆதரவைப் பெற்று புகழ் சேர்க்கும் வெங்கட்ஜி வாழ்க!!! வளர்க!!!!
பதிலளிநீக்குகீதா
படம் கெளதம் அண்ணா படம் போல் இருக்கே!
பதிலளிநீக்குஅவ்ர் முகம் காட்டுவாரே!
சிவன், தருமி உரையாடல் வழியாக கருவேப்பிலை குழம்பு செய்முறை சூப்பர்.
ஸ்ரீராம் கேள்வி கேட்கும் இடங்கள் அருமை.
செய்முறை விளக்கும், படங்களும் அருமை.
இதை பார்த்தவுடன் வெகு நாட்கள் ஆகிவிட்டது கருவேப்பிலை குழம்பு செய்து, செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
அதுதானே பதிவின் வெற்றி !
மற்ற எல்லா இடுகைகளையும் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு இதனை உடனே யாம் வெளியிடுவோம். //
பதிலளிநீக்குஹா ஹா ஹா அதிரா வாங்க குரல் கொடுங்க இதுக்கு!!!!
கீதா
‘நெல்லை மனதுக்குள்: என்னது... மெயின் விஷயத்தை விட்டு விட்டு சம்பந்தமில்லாத பிரச்னை எல்லாம் கிளப்பறார்... சிலபஸ்லயே இல்லாத விஷயம்னா இது? //
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா அதானே!!! ஹையோ சிரிச்சு முடில நெல்லை...ரொம்பவே சிரிச்சுட்டுருக்கேன்...
கீதா
ருசித்தேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஇப்படி அடையாளம் காட்ட விரும்பாத படம் ஏன் ? யூகிக்கலாம் தவறானால் ஏன் வம்பு ஒரு கருவேப்பிலை குழம்புக்கு இத்தனை அலம்பல்களா
பதிலளிநீக்குஆஆஆஆஆஆஆ நான் நெல்லைத்தமிழனைப் பார்த்திட்டேன்ன்.. நெல்லைத்தமிழனைப் பார்த்திட்டேன்.... கண் மூக்கு வாய் தெரியாட்டில் என்ன. பேசுவதை வச்சே அதெல்லாம் போட்டிடுவோம் நாங்க:)... அஞ்சூஊஊஊஊஊஊஉ இன்னும் நித்திரையா ஓடியாங்கோஒ நெல்லைத்தமிழன் படத்தோடு ரெசிப்பியும் சேர்த்துப் போட்டிருக்கிறார்ர்ர்ர்ர்ர்.. பை வன் கெட் வன் ஃபிரீஈஈஈஈஈஈஈஈஈயாமே:))...
பதிலளிநீக்கு[ஹா ஹா ஹா புரளியைக் கிளப்பிப் போட்டு ஓடிப்போய்ப் புளியமரத்தில இருந்து புறுணம்:) பார்ப்போம்:) காசா பணமா:)]...
ஹையோ இண்டைக்கு கீசாக்காவோ 1ஸ்ட்டூஊஊஊஊஊ... ஆஆஆஆஆஆ இது நாட்டுக்கு நல்லதில்லையே:))
///
பதிலளிநீக்குகருவேப்பிலைக் குழம்பு///
ஐ ஒப்ஜக்ஷன் யுவர் ஆனர்:).. தலைப்பிலே தப்பிருக்கிறது:).. தமிழைக் கரைச்சு குடிச்ச தமிழாசிரியருக்கே தமிழில் கொயப்பமோ?:)... மீக்கு டமில்ல டி ஆக்கும்:). அது ரு வும் இல்லை ரி யும் இல்லை... கறிவேப்பிலை எனத்தான் வரோணும்.... அதாவது சமையலுக்கு ஏற்ற வேப்பிலை எனப் பொருள்படும் என எங்கோ படிச்ச நினைவு.. அதனால்தான் கறிவேப்பிலை... கறி+வேப்பிலை.[வேப்பிலை போன்ற பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியது] இது கேள்வி ஞானம்தேன்:) இன்னும் ஆரவது சொல்லக்கூடும்:).
கருவேப்பில என்பது முள்ளு மரமெல்லோ.. என்னிடம் ஒரு தமிழ் அகராதி மொத்தப் புத்தகம் இருக்கு.. ஒரு பி ஏச் டி[ஹெமிஸ்ரி] முடிச்ச அக்கா ஒருவர் இங்கிருந்து ஒஸ்ரேலியா போனபோது தூக்கிப் போக முடியவிலை என தந்திட்டுப் போனா[அவ எதுக்கு இதை வச்சிருந்தாவோ தெரியல்லியே].. இன்றுவரை அதைத் திறந்து பார்த்ததில்லை.. பொன்னியின் செல்வனை விட மொத்தம்:).. கறிவேப்பிலை இருக்கோ எனத் தேடப்போறேன்:)..
///ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு// நீங்களே சொல்லிட்டீங்க ஸால்ட் அண்ட் பெப்பர்னு!!! //
நானா? இது எப்போ?///
ஹா ஹா ஹா நல்ல நல்ல விசயங்களை எல்லாம் கரீட்டா என் கண்ணில காட்டிடுறீங்களே வைரவா:)..
ஆனா மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ் படத்தில இருப்பது ஸ்ரீராம் அல்ல:) அவருக்கு ஃபிரெஞ் பியேர்ட் இருக்காக்கும்:)[ஹையோ கீதாவை நெம்பிச் ஜொள்ளிட்டேனே.. கீதா பீஸ்ஸ்ஸ்ஸ் சேஃப் மீஈஈஈஈஈ:)]..
///G.M Balasubramaniam said...
இப்படி அடையாளம் காட்ட விரும்பாத படம் ஏன் ?///
ஆங்ங்ங்ங்... இது கேள்வி:) அப்பூடிக் கேளுங்கோ ஜி எம் பி ஐயா:).... இப்போ எங்களுக்கு கறிவேப்பிலைக் குழம்பு முக்கியமில்லை:) இதுதான் முக்கியம்ம்ம்ம்:)) ஹா ஹா ஹா:) ஹையோ வழி விடுங்கோ.. நான் ரெசிப்பி படிக்கோணும்:)...
ஆவ்வ்வ்வ்வ்வ் ஒரு ரெசிப்பிக்கு 18 படங்கள்.. படமே சொல்லிவிட்டது குறிப்பை.. படிச்சுப் பார்க்கத் தேவையில்லை.
பதிலளிநீக்குகிட்டத்தட்ட துவையலை.. குழம்பாக்கியிருப்பதுபோல இருக்கு. ஆனா குழம்பில் வாய்க்கு கரகர என இருக்குமே.. பார்க்க நல்லாத்தான் இருக்கு.. ஆனா வீட்டில் சாப்பிடுவார்கள் என நம்பிக்கை இல்லை எனக்கு..
நான் எதையும் துவையலாக செய்தே குடுத்திடுவேன் இப்படி பெருசாக்கினால் மிஞ்சிவிடும்.
பானுமதி அக்காவின் புதினா கறி செய்து.. முடிவில் நானே சாப்பிட வேண்டியதாப் போச்சு.. சுவை சூப்பர் ஆனா எங்கள் வீடு வித்தியாசம்.
ஓ கீசாக்கா பக்கம் போட்டாவோ நான் பார்க்கவில்லை.
///
பதிலளிநீக்கு(மனதுக்குள்: ம்.. அவருக்கு இருக்கும் பரந்த மனம் உமக்கு எங்கே இருக்கிறது? எதையும் காப்பி அடிக்கவிடாமல் உம்மைப் போல் உள்ளவர்கள், Lock செய்து வைத்துக்கொள்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் பின்னூட்டமிடுவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. இந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுது. இதில் என்னைக் குறை சொல்ல வந்துவிட்டார்)///
ஹா ஹா ஹா சந்தடி சாக்கில கில்லர்ஜி யையும் சேர்த்து திட்டலியே நெ.த?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..
ஹா ஹா ஹா ஸ்ரீராமோடும் துரை அண்ணனோடும் நல்ல உரையாடல்தான்:) ரசித்துச் சிரிக்க வைக்கிறது திருவிளையாடல் நாகேஷ் தாத்தா பாணியில்:)..நல்லவேளை லேடீஸ் ஆரும் உள்ளே வரவில்லை. கிச்சினுக்குள்ளே:) ஹா ஹா ஹா... வந்திருந்தால் கேள்விக்களைகள் பாய்ந்திருக்குமே:)..
பதிலளிநீக்குஅதுசரி நெல்லைத்தமிழன்.. நீங்களும் வாரும்.. இரும்.. உமக்கு... வந்தனீர்? சொன்னீரா? இப்படிப் பாஷையில்தான் பேசுவீங்களோ? ஏனெனில் யாழ்ப்பாணத்துத் தமிழர்களிடையே மட்டும்தான் இப்பாஷை பிரபல்யம்...
///கொடுத்துள்ள படம் ஸ்ரீராமோடது இல்லையே என்பவர்கள்.... (இதற்குப்பின் வரும் வரிகள் ஆ'சிரி'யரால் நீக்கப்பட்டது!)///
பதிலளிநீக்குகொடுத்துள்ள படம் ஸ்ரீராமோடது இல்லையே என்பவர்கள்..... தேம்ஸ் இல் குதியுங்கள்:)).. ஹா ஹா ஹா 3வது ஆசிரியராலா நீக்கப்பட்டது:))
காலை வணக்கம்
பதிலளிநீக்குநல்லதொரு ரெசிப்பி. இன்னிக்கு நைட் என்ன செய்யலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்
பதிலளிநீக்குவெளியிட்ட எங்கள் பிளாக்குக்கும், கொஞ்சம் எடிட் செய்த ஸ்ரீராமுக்கும் நன்றி. பார்க்கலாம் இன்னைக்கு எல்லாத்துக்கும் மறுமொழி கொடுக்க முடிகிறதா என்று.
பதிலளிநீக்குமுதலில் இருப்பது பேய் படமா? மூஞ்சி இல்லியே!
பதிலளிநீக்குஸ்ரீராம் - எனக்குத் தெரிந்து அரசருக்கு எப்போவும் சந்தேகம் எதுவும் வராது. அமைச்சருக்கு அதிலும் நக்கீரருக்குத்தான் நிறைய சந்தேகம் வரும். அந்த கான்செப்டை மாத்திடாதீங்க, நிறைய கேள்விகள் கேட்டு.
பதிலளிநீக்குதாவு - இதுக்கு ஜீவி சார்தான் பதில் சொல்லணும்.
ரெசிப்பி உண்மையானதுதான். அதுலயுமா சந்தேகம். நல்லா இருந்தது.
வாங்க துரை செல்வராஜு சார். கருத்துக்கு நன்றி. உங்கள் பதிவுகளை ரெகுலராக படிக்கிறேன். அதிலும் நெல்லையைப் பற்றி படிக்காமல் இருப்பேனா. அம்மை கோவிலுக்கு சில முறைகளே சென்றிருக்கிறேன். ஆனால் 'காவல் தெய்வங்கள்' பற்றி நீங்கள் எழுதியது எனக்கு புதுசு.
பதிலளிநீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம். உங்கள் செய்முறை பல, நன்றாக இருக்கு.
பதிலளிநீக்குஅதிசயமாக வந்திருக்கும் கேஜி கௌதமன் சார்... வருக. அது ஸ்ரீராம் படமோ என்று பலர் குழம்பட்டும் என்று போட்டிருந்தேன். ஆமாம்... இந்தப் படம் எங்கு எடுத்தது என்று சரியாகச் சொல்ல முடியுமா? (திங்கள் புதிர் உங்களுக்கு)
பதிலளிநீக்குஅந்தப் படம் எங்கள் ஸ்ரீரங்கப் பயணக் கட்டுரைப் பதிவு பக்கத்தில் வெளியான படம். வைகோ சார் படத்தை எடிட் செய்து, என் படத்தை மட்டும் போட்டோ இமேஜ் பண்ணியிருக்கீங்க. சட்டையின் வலது கைப் பக்கம் கோடுகள் மிஸ்மேட்ச் ஆவதால், அங்கே இருந்த வைகோ சார் கையை போட்டோ ஷாப் எடிட் பண்ணியிருக்கீங்க என்று தெரிகிறது.
நீக்குவருகைக்கு நன்றி ராஜி. சாதம் குழம்பு என்றாலும் இது நல்லா இருக்கும். தொட்டுக்கொள்ளவும் இது நன்றாக இருக்கும். செய்துபாருங்கள்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அசோகன் குப்புசாமி.
பதிலளிநீக்குவாங்க அதிரா. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குபடம் என்னுடையது அல்ல. நான், அந்த இரண்டு படங்களையும் சேர்த்து, திராவிட நிறத்தில், 5 அடி உயரத்தில் ஒரு ஆளை கற்பனை செய்தால், என்னைப்போல் இருக்கும்.
கறிவேப்பிலையும் சரிதான். கரு (லைட்டா கறுப்பா இருக்கும்) வேப்பிலையும் சரிதான்.
கெமிஸ்டிரி டாக்டர் பட்டம் பெற்றவர், அவ்வளவு பெரிய புத்தகத்தை, தூங்கும்போது தலையணையாக உபயோகப்படுத்தியிருப்பாரோ?
அதிரா... நீங்கள் சொன்னதுபோல் துரை சாரையும் கில்லர்ஜியையும் மனதில் வைத்துத்தான் அந்த வரிகளை எழுதினேன். அவங்க தளத்துல, இந்த வரிகள் நல்லாருக்கு என்றெல்லாம் எழுதணும்னா, நாம திருப்பி தட்டச்சு செய்யணும். இப்படி அ'நியாயம் பண்ணறவங்களை யார்தான் கேட்பது?
தமிழகத்துல, 'வாரும், இரும்' என்றெல்லாம் பேசமாட்டோம். வாங்க, இருங்க என்றுதான் பேசுவோம். இருந்தாலும், நெல்லையில், அதுவும் பிள்ளைமாரில், இந்தமாதிரி, 'வாரும், இப்படி இரும்' என்றெல்லாம் பேசும் வழக்கம் உண்டு.
ஸ்ரீராம் என்ன வரியை நீக்கியுள்ளார் என்று நான் எழுதமுடியாது. ஆனால் நீங்கள் சொன்னதல்ல.
ஜி.எம்.பி சார்.. வருகைக்கு நன்றி. கருவேப்பிலைக் குழம்பு ரெசிப்பிதான் விலாவாரியாக கீசா மேடம் எழுதியிருக்காங்களே. அதுனால, நான் வித்தியாசம் இருக்கட்டும் என்பதற்கு இந்த மாதிரி எழுதினேன். எல்லாம் கலாட்டாதான்.
பதிலளிநீக்குஸிம்பிளா கறிவேப்பிலைக்குழம்பு அசத்தலாகப்பதிவு. ரொம்பநன்னா வந்திருக்கு. வடாம் வத்தல்கூடவும் சாப்பிடலாம். என்பின்னூட்டம் கூட ஸிம்பிள்தான். அதிகம் எழுதுவதில்லை. அன்புடன்
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நாகேந்திர பாரதி.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி ஜம்புலிங்கம் சார்.
தில்லையகத்து கீதா ரங்கன் - உங்கள் வருகைக்கும் நிறைய பின்னூட்டங்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குசிலபஸ்லயே இல்லாத விஷயம்னா இது? - இது ஸ்ரீராம் சேர்த்தது. நல்ல எடிட்டர் ஸ்ரீராம்.
நீங்க உடனேயே செய்துட்டீங்களா? பாராட்டுகள். நிறைய சமயம் 'இன்னைக்கு என்ன பண்ணலாம்'னு ரொம்ப குழப்பமா உங்களுக்கெல்லாம் இருக்கும் இல்லையா?
// அதனால இன்னிக்கே நெல்லை உங்க ரெசிப்பி செஞ்சு சாப்ப்ட்டிட்டு என் தலை முடி வளரலைனா...இதோ இதே எபி கொற்றவையில் நியாயம் கேட்பேன்!!!! போராடுவேன்...!! ஹா ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குகீதா//
ஆமா நானும் சேர்ந்துக்கறேன் இந்த கூட்டணில :)
காமாட்சியம்மா - உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்க பின்னூட்டம் போடலைன்னாத்தான் கவலையா இருந்திருக்கும். நலம்தானே. வடாம் வத்தல் நல்ல காம்பினேஷன். ('நலம் பெற வேண்டும் என்று நாளும் என் நெஞ்சில் நினைப்பதுண்டு.. உங்களையும் வல்லிம்மாவையும்)
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் சார்.. 'மூலிகைமணி' என்றெல்லாம் எழுதியதால், நீங்கள் சொல்வதை நாங்கள் கேள்வி கேட்க முடியுமா?
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி அரசு மேடம். நீங்க ஒரு திருனெவேலி செய்முறை எழுதுங்களேன்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி கில்லர்ஜி. ரசித்தது சந்தோஷம்.
பதிலளிநீக்குவருக கரந்தை ஜெயக்குமார் சார். கருத்துக்கு நன்றி.
பதிலளிநீக்குகீசா மேடம்.... நான் உங்களுக்கு 40 வயசுக்கு மேல் ஆகியிருக்காது என்று நம்பிக்கொண்டிருந்தால், சந்தடி சாக்கில் ஸ்ரீராம், உங்களுக்கு ஏகப்பட்ட வயசாச்சு, அதனால் மறதியும் அதிகம் என்று சொல்லியிருக்கிறாரே.. கவனிக்க விட்டுட்டீங்களா?
பதிலளிநீக்குவாங்க வெங்கட் நாகராஜ். ஒரே பின்னூட்டத்துல ரெண்டு மாங்காய் அடிச்சிட்டீங்க. கோவை2தில்லி, 'சரி.. நம்ம ஆளு நம்மளை மறந்துடலை. நாம எழுதுனதை இவ்வளவு ஞாபகம் வச்சுக்கிறாரே' என்று நினைக்க வச்சுட்டீங்க (அந்த இடுகையைக் கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் செலவழித்தீர்களோ?)
பதிலளிநீக்குநெல்லைத்தமிழன் .ரெசிப்பி சூப்பரா இருக்கு இப்போ கடைக்கு போறேன் அநேகமா நாளைக்கு கறிவேப்பிலை குழம்புதான் :)
பதிலளிநீக்குஇன்னிக்கு கீதாவின் கடுகோரை செஞ்சேன் படமெடுக்கல .தனி போஸ்ட்டா போடணும் எல்லா ரெசிப்பியும் சேர்த்து
உங்களோட புளியோதரை ரெசிப்பி 7,8 டைம்ஸ் செய்தாச்சு
எல்லோரும் தூங்கி செவ்வாய் வரும் நேரம் திங்க பதிவுக்குப் பின்னூட்டம்.
பதிலளிநீக்குநெ.த. கருவேப்பிலைக் குழம்பு பித்தத்துக்கு நல்லது. பருப்புத் துகையலும்
தொட்டுக் கொண்டால் இன்னும் அமிர்தம். அழகான படங்கள். நான் உ.பருப்பு சேர்த்துக்
கொள்வேன். து.பருப்பும் நன்றாக இருக்கும். குழம்பு கெட்டியாக வரும்.
'முதல்ல வருவது' - இதற்கு பரிசு கொடுக்கணும்னா, துரை செல்வராஜு சாருக்கோ (காலை 3.30) அல்லது எப்போவாவது முதலில் வரும் அதிராவுக்கோதான் ('நள்ளிரவு) கொடுக்கணும். மற்றவங்கள்லாம், இந்தியாவுலேயே இருந்துக்கிட்டு 6 மணிக்கு பின்னூட்டம் கொடுக்கறது கஷ்டமா என்ன?
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சலின். என் மனைவி, 'கடுகோரை' ஆஹா ஓஹோ என்றாள். என் பெண் (சாதாரணமா புளியோதரை பிடிக்காது) ஒன்றும் சொல்லாமல் முழுவதும் சாப்பிட்டாளாம். நான் இன்னும் செய்துபார்க்கலை. எனக்கு உதவி செய்ய (எதை மட்டும் இந்தியா எடுத்துப்போனால் போதும் என்று) என் மனைவி 5 நாள் இங்கு வர்றா. அப்போ செய்யச் சொல்லலாம்னு இருக்கேன். நீங்க கருவேப்பிலைக் குழம்பு செய்துபாருங்கள்.
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா. உங்களுக்கு விரைவில் வலி குணமாகணும்னு நினைத்துக்கொள்வேன் (காமாட்சியம்மாவும் ஆரோக்கியமா இருக்கணும்னு நினைப்பேன்). என் மனைவி, கண்டதிப்பிலி சாத்துமதுக்குத்தான் பருப்புத் துவையல் பண்ணுவா. கருவேப்பிலைக் குழம்புக்கும் நன்றாக இருக்குமா?
பதிலளிநீக்குகர்ர்ர்ர் மியாவ்
பதிலளிநீக்கு// கருவேப்பில என்பது முள்ளு மரமெல்லோ//
நீங்க சொல்றது கருவேலம் சீமை கருவேலம்
ஏன் என்னுடைய கேள்விகள் எதற்கும் பதில் வ(ர)ல்லை?
பதிலளிநீக்குஏன் என்ற கேள்வி இங்கு கேட்பது மிகவும் எளிது
பதில் சொல்லும் திறமை எனக்குக் கிடையாது (ஏன் என்ற... கேட்காமல் வாழ்க்கை இல்லை பாடல்)
நெல்லைத்தமிழன் நீங்க சேம்பு னு சொல்றது சேப்பங்கிழங்கா ??
பதிலளிநீக்குநான் வாழை உருளை சேம்பு கொஞ்சம் குவான்டிட்டி எடுத்து ஸ்டிம் செஞ்சு பொரியலை செய்வேன் ருசி நல்லா இருக்குன்னு என் பொண்ணு சொல்றா .
இன்னிக்கு கடுகோரை முழுசாக காலியாகிடுச்சி :) எங்க வீட்டில் இவர் சொல்றார் நான் அவரை சைவமாகிட்டேனாம் :)
எல்லாம் இங்கே பார்க்கிற ரெசிபியும் பின்னூட்டங்களில் வரும் டிப்ஸும் தான் :)
ஆமாம் ஏஞ்சலின். சேம்பு-சேப்பங்கிழங்கு. நெல்லைல, இதனை அப்படியே மண்ணில் விட்டுவிட்டால், கொஞ்சம் முற்றி, அந்தக் கிழங்கை, 'முட்டான்' என்று சொல்வார்கள். அதுவும் கறிக்கு நன்றாக இருக்கும் (வழுவழுப்பு அவ்வளவு இருக்காது).
பதிலளிநீக்குவலைத் தளத்தின் அனைத்து மகா ஜனங்களுக்கும் ஒரு நற்செய்தி!...
பதிலளிநீக்குகருத்துரை கற்றார்க்குக் கண்ணான வாய்ப்பு!..
நம்ம தஞ்சையம்பதி தளத்துல -
நாளைக்குச் செவ்வாய்க்கிழமை விடியக்காலை ஆறு மணிக்கு
செண்பகப் பாண்டியனின் ராஜசபை மறுபடியும் கூடுதுங்கோ!...
அவசியம் எல்லாரும் வந்துடுங்கோ....வ்!...
நெல்லைத்தமிழன் ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு முளை விட்ட கிழங்கை தொட்டியில் நட்டு வச்சேன் .அழகா வளர்ந்தது ஆனா 3 மாசம் அறுவடை வரைக்கும் தாங்கலை :( குழி வந்து செடி சாமிகிட்ட போச்சு .அதோட இலைகளை கூட வட இந்தியர் சமைக்கிறாங்க
பதிலளிநீக்குarbi லீவ்ஸ் என்பார்கள்
குளிர் வின்ட்டர் வந்து
பதிலளிநீக்குஅன்பின் நெ.த அவர்களுக்கு..
பதிலளிநீக்குஎனது தளத்தின் பதிவுகள் எடுக்கப்பட்டு வேறு பெயர்களில் Fb ல் சுற்றி விட்டு எனக்கே வருகின்றன... திரும்பி வர்றப்போ - ஏகப்பட்ட Likes.. - அதுக்கு!..
சில வலைத்தளங்களிலும் வந்திருந்தன... பார்த்தேன்.. இழுத்துப் பூட்டி விட்டேன்...
இதுதான் காரணம்...
மற்றபடிக்குத் தங்களது பதிவுகளால் தூண்டப்படுகின்றவன் நான்...
மாங்காய்களைப் பற்றிய பதிவுகளுக்குக் காரணம் தாங்களே..
காலையில் வந்ததும் குளித்துவிட்டு விளக்கேற்றியதும் City க்குச் சென்று வீட்டுக்குச் சம்பளத்தை அனுப்பி வைத்தேன்... சமையலுக்கு வேண்டியதை வாங்கினேன்...
அறைக்குத் திரும்பியதும் சமையல் சாப்பாடு... முடிந்ததும்
நாளைக்கு வெளியாகும்படிக்கு இந்தப் பதிவின் தொடர்ச்சியை தயார் செய்து முடித்துள்ளேன்...
இப்போது மாலை ஐந்து மணி. இரவு எடு மணிக்கு வேலைக்காக ஆயத்தமாக வேண்டும்..
இதில் உறக்கம் எங்கே!?...
எல்லாரும் சொல்கிறார்கள்.. ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்!.. - என்று..
அது என்னால் இயலவில்லை.. காரணம்
எனது தமிழும்.. எனது தளமும்!..
என்றென்றும் அன்புடன்...
//வாங்க வெங்கட் நாகராஜ். ஒரே பின்னூட்டத்துல ரெண்டு மாங்காய் அடிச்சிட்டீங்க. கோவை2தில்லி, 'சரி.. நம்ம ஆளு நம்மளை மறந்துடலை. நாம எழுதுனதை இவ்வளவு ஞாபகம் வச்சுக்கிறாரே' என்று நினைக்க வச்சுட்டீங்க (அந்த இடுகையைக் கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் செலவழித்தீர்களோ?)//
பதிலளிநீக்குபெரிதாக ஒன்றும் இல்லை. எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அவரது வலைப்பூவில் மேலே உள்ள Search option மூலம் சுலபமாக எடுத்துவிட்டேன்.
கேஜிஜி சார்... உங்களுக்கு சிறிய வயதுதான். ஞாபக சக்தி நல்லா இருக்கு. பிடிங்க என் சர்டிபிகேட்டை.
பதிலளிநீக்குஸ்ரீராம் கீசா மேடத்துக்கு - வயசானா மறதி வரும்தான்! என்ன செய்ய... வுடுங்க..
துரை செல்வராஜு சார் - அதில் நான் குறிப்பிடணும்னு நினைத்தேன். உங்க பதிவுகள்ல, அதுவும் கோவில்கள், அதற்குரிய தெய்வப் படங்கள், சரியான பாடல்கள் - இதற்கு நிறைய உழைப்பு தேவைப்படும். அதுல நான் ரொம்ப பெரிய விஷயமா நினைப்பது, பொருத்தமான பாடல்கள்-சைவ சமயக் குரவர்கள் பாடியது, திவ்யப் ப்ரபந்தம் என்று- இணைப்பது. ஈசியா பலர் சுருட்டிடுவாங்க. பூட்டி வச்சிருக்கிறது சரிதான்.
பதிலளிநீக்குஎப்போவாவது சந்தேகம் (அர்த்தத்துல) எழும்போது, நான் தட்டச்சு செய்யவேண்டியிருக்கிறது. ஆனால் உங்கள் பதிவில், பாடலின் அர்த்தம் தெரிந்துகொள்ளாமல் தாண்டிச் செல்லமாட்டேன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசுவையான கறிவேப்பிலை குழம்பு அபாரமாக இருந்தது.. சுவாரஸ்யமான திருவிளையாடலுடன் கறிவேப்பிலையை கலந்தெடுத்து அற்புதமாக நகைச்சுவை உணர்வுடன் நெல்லை தமிழன் அவர்கள் தந்த கறிவேப்பிலை குழம்பை மிகவும் ரசித்தேன்.
ஆனால் நான் வரும் போது (இன்று பயங்கர லேட்) குழம்பு ஆறி அவலாய் போய் விட்டது. பரவாயில்லை! ஆறிய உணவுக்கு ருசி அதிகம். நன்றி வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அச்சாச்சோ நான் தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.... அதெப்பூடி ???, ஹஸ்பண்டை மனைவி ஆக்கிட்டார்ர்ர்ர்ர்ர்:)... ஒருவேளை இனி ஊரோடே போய்விடப் போகிறேன் என்றார்... அதனால மாத்திட்டாரோ இருப்பினும் இது சரீல்லை டக்குப் பக்கென எப்பூடி மாத்தலாம்ம்ம்ம்ம்ம்:)..
பதிலளிநீக்கு//அவ்வளவு அப்பாவியா அக்கா நீங்க... யாருன்னு தெரியலையா? வயசானா மறதி வரும்தான்! //நேத்திக்கு இருந்த மனோநிலையில் வர முடியலை! யார் சொன்னது எனக்கு வயசாச்சுனு! நான் கிட்டத்தட்டக் கண்டு பிடிச்சுட்டேன். அதுக்குள்ளே இங்கே அந்த ஃபோட்டோவில் இருக்கும் கௌதமன் சாரே வந்து "எங்கப்பா குதிருக்குள் இல்லை" னு சொல்லிட்டுப் போயிருக்கார்!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் அவர்கள். கருவேப்பிலைக் குழம்பு ஆற ஆற நன்றாக இருக்கிறது. (உண்மையா)
பதிலளிநீக்குஅதிரா - டக்குப் பக்கென எப்பூடி மாத்தலாம்ம்ம்ம்ம்ம்:).. - விரைவில் வீடு திரும்புகிறேன். அதனால் மாறியிருக்கும். ஹா ஹா ஹா. கிட்டத்தட்ட 5 1/2 வருடங்கள் தனிமை வாசத்துக்குப் பிறகு.
பதிலளிநீக்குஅனைத்தும் நலமே அமைய வாழ்த்துக்கள்.. நெ.த.
பதிலளிநீக்குஇதுல ஒன்றைக் குறிப்பிட விட்டுப்போய்விட்டது. முதலில் கொடுத்திருப்பது கௌதமன் சாரின் போட்டோ. இது, அவர்கள் 2015ல் ஸ்ரீரங்கம் விசிட்டின்போது கோபு (வை கோபாலகிருஷ்ணன் http://gopu1949.blogspot.com/2015/01/blog-post_30.html) சார் எழுதின இடுகையிலிருந்து எடுத்துக்கொண்டேன். மாமா மாதிரிதானே மருமகனும் இருக்க வாய்ப்பு இருக்கு என்ற நம்பிக்கைதான். கோபு சாருக்கு நன்றி (அவருக்குத் தெரியாமல் எடுத்தபோதிலும்)
பதிலளிநீக்குநான் முதலில் யார் படம் என்று சொல்லி விட்டேனே.
பதிலளிநீக்குஆமாம் கோமதி அரசு மேடம். நீங்கள் முதலில் சொல்லிவிட்டீர்கள். (ஆனால் சம்பந்தப்பட்டவருக்குத்தான் நிறைய நேரம் எடுத்தது, இது யாராக இருக்கும் என்று கண்டுபிடிக்க. நான் கேஜிஜி சாரைச் சொல்லலை :-) )
பதிலளிநீக்கு