வியாழன், 31 ஜனவரி, 2019

என் எஸ் கிருஷ்ணனின் பெருந்தன்மை


  எங்கள் ஆறுபேர்களுக்கு அந்த ஒரு அறை போதவில்லை.  நான் வேறு ஒரு கூடுதல் அறை எடுக்கவும் தடை விதித்திருந்தார் மணப்பெண்ணின் அப்பா...   அவர்களே ஒரு அறை ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார்.

அடுத்த நிகழ்ச்சி என்ன, எப்போது என்று தெரியாத நிலையில் அறையில் குளிருடன் படுத்திருந்தோம்.  யாராவது காஃபி கொடுத்தால் தேவலாம் பல இருந்தது. 

கீதா அக்கா கல்யாண வீட்டார் முன்னதாகச் சென்று உணவு வகைகள் தயார் செய்யவில்லையா என்று கேட்டிருந்தார்.  இல்லை.  அவர்கள் நிகழ்ச்சியில் முதலில் முதல் நாளில் எந்த நிகழ்ச்சியும் இல்லை.  நேராக மறுநாள் திருமணம்.  ஆனால் ஒரு திடீர் ஏற்பாடாக நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்தார்கள்.



மாலை ஆறுமணி போல எதிர் அறைக்காரர் தொலைபேசியில் தகவல் வந்ததாகச் சொன்னார்.  கிளம்பி மண்டபத்துக்கு வந்தால் காஃபியும் கிடைக்கும் என்றதும் மனம் பரபரத்தது.

குறைந்த மாற்று உடைகளோடு வந்ததால் அதே பேண்ட்டுக்கு ஒரு டீ ஷர்ட் மட்டும் மாற்றிக்கொண்டு மண்டபம் வந்தோம்.  காஃபி!  ஒரே சர்க்கரை.  தனியாக சர்க்கரை குறைவாகப் போட்டுக் கலக்கும் வசதி இல்லை.  சரி...  கிடைத்த வரை லாபம்!



நிச்சயதார்த்தம் என்றால் ஏதோ ஏழு ஏழரைக்குள்ளாவது முடித்து விடுவார்கள் என்று பார்த்தால், ஆறரை மணிக்கு ஸ்நாக்ஸ் ரெடி என்றார்கள்.  வேண்டாம் என்று முதலில் தோன்றினாலும் நாவாசை விடவில்லை!  சென்று குட்டி குட்டியாய் இரண்டு போண்டாக்கள், அசோகா போல ஒரு ஸ்வீட் துணுக்கு சாப்பிட்டு மேலே வந்தோம்!

நிச்சயதார்த்தத்துக்கு மேடையில் ஆயத்தங்கள் தொடங்கி இருந்தது.





காத்திருந்தோம்...   காத்திருந்தோம்...    எங்கள் எதிர் அறை நண்பர்கள் வராகப்பெருமாளை தரிசித்து விட்டு வந்தார்கள்.

"சொல்லி இருக்கக் கூடாதோ,,,   நாங்களும் வந்திருப்போமே.."

"ஹிஹிஹி...   வேகமா போயிட்டு நிச்சயதார்த்தம் ஆரம்பிப்பதற்குள் வந்து விட வேண்டுமென்று ஓடிவிட்டு ஓடிவந்தோம்"

"சரி சரி...  ஸ்நாக்ஸ் சாப்பிட்டு வந்துடுங்க... "

"ஐயோ..   இப்போ அதெல்லாம் சாப்பிட்டால் ராத்திரி சாப்பாடு சாப்பிட முடியாமல் போகும்.."

"ரெண்டு மினி போண்டா, ஒரு ஸ்பூன் அல்வா சாப்பிட மாட்டீங்களா?"

"அவ்வளவுதானா?"

"அவ்வளவேதான்!"

"இதோ வர்றோம்..."

மணி ஏழை  நெருங்கிக் கொண்டிருக்கையில் மணப்பெண் வாயிலாக ஒரு விஷயம் காதில் விழுந்தது.

"மாப்பிள்ளை வீட்டார் கீழ்த் திருப்பதிக்கு வந்து விட்டார்கள்..."

சரிதான்!

காத்திருந்த நேரத்தில் எழுந்து வெளியில் வந்து வாயிலை நோக்கி இரவின் இருளில் ஒரு க்ளிக்!



அலங்கார யானைகள்!




சிறு மண்டபத்துக்குள் மகான்...   ஆதி சங்கரர்...


பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் முக்கிய சம்பந்திகள் உட்கார இருபக்கமும் இதுபோன்ற இருக்கைகள் தாயார்...  சே... தயார்!


சாப்பிட்டு விட்டு நிச்சயதார்த்தம் அட்டென்ட் செய்வதா,  நிச்சயதார்த்தம் பார்த்துவிட்டு சாப்பிடுவதா என்று பூவா தலையா பார்த்ததில் இரண்டாவது ஜெயித்தது.  சுற்றிச்சுற்றி வந்த பிறகு ஒரு வழியாக நிச்சயதார்த்தம் ஒன்பதுமணியளவில் தொடங்கியது.

திருப்பதி சாஸ்திரிகள் ஒருவர் ஏழு மணிக்கே வந்து காத்திருந்தார்.  மாப்பிள்ளை வரும்வரை மொபைலில் பொறுமையாக வாட்சாப்போ எதுவோ பார்த்துக்கொண்டிருந்தார்.

மா. வந்தபிறகு காட்சிகள் மின்னல் வேகத்தில் அரங்கேறின.  தமிழில் விளக்கம் சொல்லிச் சொல்லி நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தார்.

முன்னதாக அங்கிருந்த நாதஸ்வர வித்வான்கள் கல்யாணி போல ஒன்றும் சுநாத வினோதினி போல ஒரு பாடலும் வாசித்துக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு ஒரு விபரீத ஆசை வந்தது.  நிச்சயதார்த்தமோ தொடங்குவதாக இல்லை.  நேரம் செல்லவே வேண்டும்.  என்ன செய்வது என்று யோசித்து நாதஸ்வரக்குழுவை நோக்கி நடந்தேன்!

என் இளைய மகன் "வேண்டாம்ப்பா...   எதற்கு வீணாக.." என்று சொல்லிக் கொண்டிருந்ததைக் காதில் வாங்காமல் மெல்ல அவர்களை நோக்கி நடந்தேன்.

பீப்பியை வாயிலிருந்து விலக்கி நா. காரர் என்னைப் பார்க்க, மேளக்காரரும் திரும்பி என்னைப் பார்த்தார்.

என் இளைய மகன் பெரியவனிடம் சென்று ஏதோ சொல்ல, அவனும் எழுந்து திரும்பி என்னைப் பார்க்கத் தொடங்கினான்.  

நான் அவர்களை நெருங்கினேன்........  

தொடரும்!


=============================================================================================================

ஒரு முறை படித்தால் போதும்!




திகில் கதை 

படித்துக் கொண்டிருந்தேன்.

திகிலே இல்லை.

முதல் வரியை மறுபடி படிக்கவும் 

என்றது 

கடைசி வரி.

மீண்டும் மேலே சென்றேன்.

எந்த வரிகளையுமே காணோம்!




==================================================================================================


ஒரு பழைய மதன் ஜோக்கும்....




மிகப்பழைய கோபுலு ஜோக்கும்...



======================================================================================================


இப்படியும் நேர்மையாக இருந்தார்கள் அப்போது!   என் எஸ் கே பற்றி ஒரு ருசிகரமான தகவல்....



1948
தாஸி அபரஞ்சி என்று ஒரு படம் வந்து வெற்றி பெற்றதும் 'தாஸி' இணைத்து இன்னும் சில படங்கள் வந்தன. அதில் ஒன்று 'தேவதாஸி'.
படம் நன்றாக ஓடவேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் அந்தக் காலத்தில் என் எஸ் கிருஷ்ணனைச் சரணடைவர். அவர் தன்னுடைய நகைச்சுவையில் தனிக் கதை ஒன்றைப் புகுத்தி இணைத்துத் தருவார். அப்படி இணைக்கப் பட்ட இந்தப் படத்தை என் எஸ் கிருஷ்ணன் தன் மனைவி டி ஏ  மதுரமுடன் சென்னைப் பாரகன் தியேட்டரில் பார்க்கப் போனாராம். கூட்டமே இல்லை.
வீட்டுக்குத் திரும்பி வந்தவர், அந்தப் படத்தின் தயாரிப்பாளரைக் கூப்பிட்டனுப்பியவர், "நான் நடித்தும் உன் படம் சரியாப் போகலே... தப்பு என்னுடையதுதான் இந்தா நீ கொடுத்த பணம்" என்று கூறி அவர் வாங்கிய முழுத் தொகையையும் திருப்பிக் கொடுத்து விட்டாராம்.
படித்ததில் ரசித்தது. 

==================================================================================================


இன்றைய தினத்தைப் பற்றி அன்று...    முகநூலில் பிரபல சிங்கைவாழ் எழுத்தாளர் ஹேமா பகிர்ந்து கொண்டது..   நன்றி ஹேமா...



=================================================================================================

105 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா தொடரும் அனைவருக்கும்..
      வல்லிமாவுக்கு குட் ஈவினிங்க்!!!
      கீதா

      நீக்கு
    3. காலை வணக்கம். துரைக்கு இப்போதெல்லாம் வர முடியறதில்லை போல!

      நீக்கு
    4. காஃபி! ஒரே சர்க்கரை. தனியாக சர்க்கரை குறைவாகப் போட்டுக் கலக்கும் வசதி இல்லை. சரி... கிடைத்த வரை லாபம்!//

      ஹா ஹா ஹா ஹா....

      கீதா

      நீக்கு
    5. ஸ்ரீராம் மணி 7 ஐ நெருங்கி என்று வர வேண்டுமோ?!!!!

      கீதா

      நீக்கு
    6. காஃபி.... நம் அதிருஷ்டம் எப்போதும் இப்படிதான்!

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  3. அந்தத் துறவி ஆதி சங்கரர்! என்ன பாட்டுப் பாடச் சொல்லவா அல்லது பேட்டி எடுக்கவா நாதஸ்வரக் கலைஞர்களைப் போய்ச் சந்தித்தீர்கள்? இப்படித் தான் நானும் ஒரு கல்யாணத்தில் மாயவரத்தில் நாதஸ்வரக் கலைஞர்களைப் பேட்டி எடுத்துவிட்டுப் பின்னர் அதைப் பற்றிச் சொல்ல முடியாமல் விட்டு விட்டேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ஒரு கவனம் எனக்கு! மாற்றி விட்டேன் அக்கா. உண்மையில் அங்கேயே அவர் பெயரும் எழுதி இருந்ததையும் படம் பிடித்திருந்தேன்!

      நீக்கு
  4. சிறு மண்டபத்துக்குள் யாரூரு மகான்... (மன்னிக்கவும், பெயர் மறந்து விட்டது!)//

    ஆதிசங்கரர்!!!

    அலங்கார யானைகள் அழகா இருக்கு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. திகில் கதை நல்லாத்திகிலாவே இருக்கு! மதன் ஜோக்ஸ் முகநூலில் கூடப் பகிரப்படுகின்றன. கோபுலுவோடதும். நல்லாவே இருக்கு. ஒரு காலத்தில் நானும் இப்படித் தான் ஒல்லியாக 35 கிலோவைத் தாண்டாமல் இருந்தேன் என்பதை நினைத்து ஆறுதல் கொள்கிறேன். :))) கல்யாணத்தின் போது 28 கிலோ! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... நானும் 30ஓ 35ஓ கிலோதான். அவ்வளவுதான் எனக்கும் காட்டியது. அப்புறம் மத்தவங்க சொன்னாங்க, நான எடை மிஷினில் ஏறி நின்னுருக்கணுமாம். ஒரு கால் மாத்திரம் வைத்தா எடை சரியாக் காட்டாதாம்.

      I am obsessed with weight. எனக்கு ரொம்ப ஒல்லியா இருக்கணும், சில பேர் மாதிரி நல்லா சாப்பிட்டாலும் உடல் ஒல்லியா இருக்கடும்னு ஆசை. தண்ணி குடித்தாலே வெயிட் ஏறுகிறது.

      நீக்கு
    2. @ கீதா சாம்பசிவம்:
      //..என்பதை நினைத்து ஆறுதல் கொள்கிறேன். //
      அங்கேயே நிறுத்திக்கொண்டிருக்கலாமே! இப்படி ‘’ கல்யாணத்தின் போது 28 கிலோ!’’ என்றெல்லாம் சொல்லி திகில் கிளப்பினால் எப்படி? ஸ்ரீராம் ஏற்கனவே கதை படித்த திகிலில் இருக்கிறாரே..!

      நீக்கு
    3. @ நெ.த. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நிஜம்மாத் தான் சொல்றேன். எனக்கு வேலைக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்கச் சென்ற மருத்துவப் பரிசோதனையில் திரும்பத் திரும்ப 28 கிலோவே காட்ட அந்த மருத்துவர் இப்படி இருந்தா வேலையிலே சேர்த்துக்க மாட்டாங்கனு சொல்லிட்டு 32 கிலோனு போட்டுக் கொடுத்தார். அதுக்கப்புறமாத் தான் 35 கிலோவுக்கு வந்து இப்போத் திருப்பிப் போட்டால் வரும் 53 கிலோ இருந்தால் தேவலையேனு தோணுது! ))))))) நம்ம ரங்க்ஸே சொல்லி இருக்கார், என்ன இவ்வளவு மோசமா இருக்கானு! இப்போவும் அதையே சொல்றார் வேறே அர்த்தத்துடன். மொத்தத்தில் அவர் மாறவே இல்லை, அன்னிலேருந்து இன்னி வரை! :)))

      @ஏகாந்தன், ஶ்ரீராம் என்னை நிறையத் தரம் நேரிலேயே பார்த்துட்டார். ஆகையால் இனிமேல் திகிலெல்லாம் வராது! :))))))

      நீக்கு
    4. கீதாக்கா.. கல்யாணத்தின்போது 28 கிலோவா? அடேங்கப்பா... நம்பவே முடியவில்லை.

      நீக்கு
    5. ஆமாம், ஶ்ரீராம், மாமாவிடம் கேட்டுக்கோங்க. எங்க கல்யாணம் ஆன ஒரு மாதத்திலே எடுத்த ஃபோட்டோ கூட பதிவில் பகிர்ந்திருப்பேனே! அதில் பார்த்தால் தெரியும்! :)))) இப்போ அதே எண்களை மாத்திப் போட்டுக்கலாம்னு மாமா சொல்றார்! :))))) சுட்டி கிடைச்சால் தரேன், பாருங்க! :))))

      நீக்கு
  6. என்.எஸ்.கே. பற்றிய இந்தத் தகவல் படிச்சிருக்கேன். உங்கள் சிநேகிதி கொடுத்திருக்கும் தகவல்கள் புதியது. படித்ததில்லை. கேள்விப்படவும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் சிநேகிதி //

      நம் பதிவர் ஹேமா ஹெச் வி எல் அவர்.... தெரியவில்லையா?

      நீக்கு
    2. ஓ, தோணவே இல்லை! :( அதிகம் போய்ப் படிப்பதில்லை அல்லவா? அதான்!

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  8. திருப்பதி அனுபவங்கள் ஸ்வாரஸ்யம்....

    மதன், கோபுலு ஜோக்ஸ் - செம....

    பதிலளிநீக்கு
  9. என்ன சொல்லப்போகிறீர்கள் எனும் ஆவலுடன்...

    துணுக்குகள் அருமை...

    பதிலளிநீக்கு
  10. அரேன்ஞ்மென்ட் நல்லாப் பண்ணலையோ? இப்படி இருந்தால் ஜாலியா பயணம் போனோம்னு இல்லாம ஏண்டா போனோம்னு ஆயிடாது?

    பதிலளிநீக்கு
  11. இந்த வருஷம் திங்கள்-வியாழன் ரொம்ப ரசனையாப் போகுது. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொன்னது திங்கள் முதல் வியாழன் வரை என்று அர்த்தம். திங்களும் வியாழனும் மட்டும் என்று அர்த்தமல்ல.

      நீக்கு
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஸ்லோ கல்யாணமா.
    சங்கடம் பா. ஏதாவது பாட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டீர்களோ.
    என் எஸ்கே நல்லவர்தான்.
    ஆதி சங்கர பகவத்பாதாள் மிக அழகு.

    மதன் கோபுலு சூப்பர் ஜோக்ஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... ஆமாம் என்றுதான் சொல்லவேண்டும்!

      நன்றிம்மா.

      நீக்கு
  13. //மணப்பெண் வாயிலாக ஒரு விஷயம் காதில் விழுந்தது//

    இன்றைய தகவல்களின் வழி இப்படித்தான்.

    ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா! எங்கேயோ சென்று விட்டீர்கள் கில்லர்ஜி!

      நீக்கு
    2. மாப்பிள்ளைபையன் மணப்பெண்ணுக்கு செய்தி அனுப்பி இருப்பார்.

      நீக்கு
    3. நன்றி கில்லர்ஜி. ஆமாம்... கோமதி அக்கா சொல்லி இருப்பது சரிதான்!

      நீக்கு
  14. உங்களால் மறக்க முடியாத திருமணமாகி விட்டது போலும்!
    மதனின் மறக்க முடியாத ஜோக் . ஒவ்வொரு முறை எடை மிஷினில் ஏறி நிற்கும் பொழுதும் இந்த ஜோக் நினைவுக்கு வரும். அதனால் இப்போது டிஜிட்டல் மிஷினுக்கு மாறி விட்டேன்.
    கோபுலு சாரின் படத்தில் அந்த சிறுவனின் வேகத்தை நாம் உணர முடிகிறது பார்த்தீர்களா?
    ஒரு திகில் கதையாக்கக் கூடிய கவிதை.
    என்.எஸ்.கே. பற்றி முதல் முறையாக படிக்கிறேன்.
    சுவையான கதம்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொழுது போவதில் சிரமம் இருந்தது பானு அக்கா. ராஜுவின் ஜோக்ஸ் நிறைய எடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் அவற்றில் பெரிய சிரிப்பு எதுவும் வரவில்லை. சாதாரணமான நடைமுறை கார்ட்டூன்கள் போல இருக்கின்றன. பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  15. ஹேமாவின் முகநூல் பதிவு சுருக்கமாகவும், சுவையாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அதனால்தான் பகிர்ந்தேன். அப்புறம் ஃபேஸ்புக் காட்டும் மெமரிஸ் பக்கம் பார்த்ததும் சொந்த விஷயம் ஒன்றைப் பகிராமல் விட்டேனே என்று தோன்றியது!

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. உங்களுக்கு பிடித்த பாடலை வாசிக்க சொல்லி போனீர்களா?
    தொடரும் போட்டு விட்டீர்கள், ஆவலை அதிகமாக்கி.

    திகில் நடுவில் பக்கத்தை காணோம் என்று இல்லாமல் மேலே வரிகளை காணோமா? அப்போ திகில் கதைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரம் சொல்கிறேனே... ஹிஹிஹி...

      //மேலே வரிகளை காணோமா? அப்போ திகில் கதைதான்//

      ஹா... ஹா.... ஹா....

      நீக்கு
  18. பழைய சிரிப்புகள் நன்றாக இருக்கிறது.

    என் எஸ் கிருஷ்ணன் அவர்களின் நல்ல குணம் தெரிகிறது.
    அவரைப் பற்றி நிறைய நல்ல செய்திகள் இருக்கிறது.

    காஸ்வே பாலம் பற்றி தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  19. ஹா ஹா ஹா ஹா //என் இளைய மகன் "வேண்டாம்ப்பா... எதற்கு வீணாக.." என்று சொல்லிக் கொண்டிருந்ததைக் காதில் வாங்காமல் மெல்ல அவர்களை நோக்கி நடந்தேன்.//

    அப்ப ஏதோ இருக்கு....கல்யாணியா சுனாதவினோதினியான்னு அவங்களையே கேக்கப் போனீங்களோ?!!!! இல்ல ஒழுங்கா ஏதோ ஒன்னு கரெக்ட்டா வாசிங்கனு சொல்லவா?!!!! ஹா ஹா ஹா
    இளைய மகன் உங்களை பார்க்க, பெ மகன் உங்களை பார்க்க. நினைச்சுருப்பாங்க ..இந்த அப்பாவுக்கு என்ன ஆச்சு...நா காரர் உங்களைப் பார்க்க த காரர் உங்களைப் பார்க்க!!!!!!..உங்க பாஸ் கிட்ட பசங்க சொல்லலியா??!!!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் நல்லாதான் யூகிக்கறீங்க.... சொல்றேன்... சொல்றேன்!

      நீக்கு
  20. 9 மணிக்குத்தான் நிச்சயதார்த்தமேவா...ஓ அப்ப எல்லாமே ரொம்பவே மெதுவாக போல!!! மறக்க முடியாத கல்யாணம், அனுபவம் ஆகியிருக்கும்...

    மணப்பெண் வாயிலாக ஒரு விஷயம் காதில் விழுந்தது//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
    இப்பல்லாம் கல்யாணப் பெண் மூலமாத்தான் மாப்பிள்ளை வீட்டார் செய்தியே வருதாக்கும்...எங்க வீட்டு சமீபத்து கல்யாணத்தில் கூட அப்படித்தான் நாங்க பெண் வீட்டு சைட். நிச்சயம் ஆன சமயத்துலருந்து கல்யாணம் வரை...கல்யாணத்தன்னிக்குகூட பெண்ணுக்கு வாட்சப்பில செய்தி வந்துட்டே இருந்துச்சு...அப்ப கூட செல்ஃபி எல்லாம் வந்துச்சு தெரியுமோ..!!! மாப்பிள்ளை கோயில்லருந்து கிளம்பி வரார்னு ஒரு செல்ஃபி, கார்ல ஏறிட்டார்னு ஒரு செல்ஃபி.... எல்லாம் மண்டபம் வாசல்ல வந்தாச்சுன்றது வரை...!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருப்பதியில் நிச்சயதார்தங்கள் எப்போதுமே ஒன்பதுமணிக்கு மேல்தான் செய்வார்கள் என்று அங்கு ஒருவர் சொன்னது உண்மையோ, பொய்யோ!

      மணப்பெண் மொபைலை நாம் பார்க்க முடியாது... அங்க என்னென்ன வந்ததோ!

      நீக்கு
    2. நாங்க எதுவும் திட்டமிடாமலே எங்க பெண்ணின் நிச்சயதார்த்தம் ஒன்பது மணிக்கு நடந்தது. மறக்க முடியா நினைவுகள்.

      நீக்கு
  21. ஆஆஆஆஆஆஆ திகில் கதை திகிலாத்தான் இருக்கு.!!!

    முதல் வரியை மறுபடி படிக்கவும்

    என்றது

    கடைசி வரி.//

    மறுபடியும் முதல்லேருந்தானு போயி ஆஆஆஆஆஆஆஆ...

    ரசித்தேன் ஸ்ரீராம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. மதன் மற்றும் கோபுலு ஜோக்ஸ் நல்லாருக்கு....படங்கள் எத்தனை சொல்லுகிறது இல்லையா...?கோபுலுவின் படத்தில் அந்தக் குட்டிப்பையன் ஓடும் பரபரப்பு!!

    என் எஸ் கிருஷ்ணனின் பெருந்தன்மை அருமை..புதிய செய்தி.

    காஸ்வே பாலம் பற்றிய தகவல் புதியது.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஸ்நாக்ஸ் என்பதற்கு என் அகராதியில் நான் நினைத்துக் கொண்டிருக்கும் அர்த்தம் வேறே...

    பதிலளிநீக்கு
  24. //பீப்பியை வாயிலிருந்து விலக்கி நா. காரர் // - பெங்களூரில் ஓரிரு மாதங்களுக்கு முன்னால் சென்றிருந்த கல்யாணத்தில், நாதஸ்வரக்காரர் மிக அட்டஹாசமாக வாசித்தார். அப்புறம் அவர்கிட்ட போய் கேட்டு, சிலவற்றை வாசிக்கச் சொன்னபோது இப்போது வாசிக்கக்கூடாதுன்னு சொல்லி (அந்த அந்த சந்தர்ப்பத்துக்கு அந்த அந்த ராகம்தான் என்று சொல்லிட்டார்) வாசிக்கவே இல்லை.

    நாச்சியார் கோவில் கருட சேவையின்போது, 7-8 நாதஸ்வரம், 5-6 தவில் என்று ஒரு குழு, இரவு நாதஸ்வர, தவில் சேர்ந்த மழைதான். அதிலும் ஒருவர் தனித் தவில் வாசித்தார்.... அடடா... என்ன திறமை என்ன திறமை.

    மற்றபடி பெரும்பாலான இடங்களில் நான் கவனித்தது, நாதஸ்வரத் திறமையற்ற கலைஞர்களைத்தான். அப்போதெல்லாம் இப்போ நாதஸ்வரத்தை யாரும் சரியாக் கத்துக்கொள்வதில்லை என்று நினைத்துக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான கல்யாணங்களில் ஏனோதானோ என்று நாதஸ்வரக்காரர்களை ஒப்பந்தம் செய்து விடுகிறார்கள். இங்கு அவ்வப்போது ஸ்ருதி பிசகியது.

      நீக்கு
  25. //பீப்பியை வாயிலிருந்து விலக்கி நா. காரர் எண்ணெய் பார்க்க...//

    திருத்தம் வேண்டி காத்திருக்கும் வரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தி விட்டேன் ஜீவி ஸார்!

      நீக்கு
    2. இன்றைக்கு கொஞ்சம் அதிக எழுத்துப்பிழை. நான் ஸ்ரீராம் ரொம்ப அவசர அவசரமாக தட்டச்சியிருப்பார், நேரமின்மை காரணம் என்று ஒன்றையும் குறிப்பிடலை.

      நீக்கு
    3. /நான் ஸ்ரீராம் ரொம்ப அவசர அவசரமாக தட்டச்சியிருப்பார், நேரமின்மை காரணம் என்று ஒன்றையும் குறிப்பிடலை.//

      அதேதான். அவசரம்தான் காரணம். திங்கள் பதிவும் இன்றைய பதிவும் கடும் வேலைகளுக்கு நடுவில் பத்து நிமிடங்கள் நேரம் எடுத்துக்கொண்டு தட்டச்சியதுதான் நெல்லை... திங்கள் பதிவு பற்றி கீதாவிடம் அன்றே சொல்லி இருந்தேன்.

      நீக்கு
  26. தலைப்பு பற்றி. எல்லாக் காலங்களிலும் சினிமா செய்தி நிருபர்கள் சொல்வதை முற்றிலும் நம்புதற்கில்லை.

    'நீயே வச்சுக்க, உன் பிச்சாத்து காசை!.. -- (கதை பண்ணுவதற்கு எத்தனை மடைமாற்றுகள், இல்லை? )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விஷயத்தில் என்னால் அப்படி நினைக்க முடியவில்லை ஜீவி ஸார்.

      நீக்கு
    2. ஜீவி சார்... நான் என்.எஸ்.கே அவர்களைப் பற்றி சில புத்தகங்களில் படித்திருக்கிறேன். அவருடைய கேரக்டர், பணத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல், பிறருக்கு தானம் வழங்குவது. பரமக்குடியில் ஒரு நாடகம் போட்டபிறகு, நிகழ்ச்சி ஏற்பாடுசெய்தவர் அவரைப் பார்க்க வரும்போது (அந்த சமயத்தில்), 'இதோ அவர் வந்து வசூலாகலை அதனால் பணத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்' என்று கேட்பார் பாருங்கள் என்றாராம் (நாடகம் ஹவுஸ்புல்). அதன்படியே அவர் கேட்டதும் பரவாயில்லை பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாராம்.

      என்.எஸ்.கே, எம்ஜியார் போன்றவர்கள் இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கியவர்கள்.

      நீக்கு
  27. சில விஷயங்கள் சினிமா நிருபர்களின் கைபட்டு செய்திகளாகும் நேர்த்தி அலாதியானது. அதனால் சொன்னேன். விட்டுத் தள்ளுங்கள். உங்கள் நம்பிக்கைகளைக் குலைப்பானேன்?..

    பதிலளிநீக்கு
  28. முக நூலில் பழைய கார்ட்டூன் படங்களை ஆர்வத்துடன் திரு பாலகணேஷ் பகிர்கிறார்ஃப்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியும் ஜி எம் பி ஸார். நானும் அதற்கு முன்னாலிருந்தே அங்கு இதே போல பகிர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
  29. மாசக் கடைசி...

    Stock list கேக்குறானுவோ..
    நாம என்ன தூக்கிக்கிட்டா ஓடிட்டோம்!..
    கொஞ்சங்கூட பொறுப்பு இல்லாதவங்க!..

    இன்னைக்கே எல்லாக் கணக்கையும் முடி.. ந்னு சொன்னால் ஒரு மனுசன் எத்தனை அவதாரம் தான் எடுக்குறது!..

    அதெல்லாம் கிடக்கட்டும்...

    நிச்சயதார்த்த கோலாகலம் - அழகு...
    வாழ்க மணமக்கள்...

    பதிவு கலகலப்பு..
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்.. மாசக்கடைசி வேலைப்பளுவில் அவஸ்தைப்படுகிறீர்கள். பார்த்து கவனமாக, நிதானமாக செய்யுங்கள். எனக்கும் வேலைப்பளு மிக அதிகமே... இன்னும் இரண்டு வருடம் இந்நிலை தொடரும்!!!

      ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    திருப்பதி திருமணம் சுவாரஸ்யமாக நடந்து நிச்சயதார்த்தம் வரை விட்டது. நாதஸ்வர கலைஞரிடம் இசை பற்றி அளவளாவ சென்றிருக்கிறீர்கள்.. அல்லது தங்களுக்கு பிடித்தமான பாடலை இசைக்க சொல்லி கேட்டு நேரத்தை கழிக்கும் ஆவலில் அவர்களை அணுகியிருக்கிறீர்கள்.. என்று அனைவரும் யூகிப்பது போலவே நானும் எண்ணுகிறேன். நீங்கள் நல்ல சமயத்தில் தொடரும் போட்டு விட்டதால்,என்னவென்று அறிந்து கொள்ள பரபரக்கும் மனதை, இதோ.! அடுத்த வியாழன் அசுர கதியில் ஓடி வந்து சந்தேகங்களை போக்கி விடுமே.!என என் அறிவு சமாதானமாக்கி செல்கிறது. அங்கு எடுத்த படங்கள், யானை படங்கள் எல்லாம் அருமை.

    திகில் கதை நன்றாக உள்ளது. "கடைசி வரிகளின் சொல்படி முதல் வரிகளை காணச்செல்ல முதல் வரிகளை காணோம்." என்றது திகிலை கூட்டியது. இரவில் படிக்கும் போது உண்மையிலேயே அந்த புத்தகத்திலிருந்து எழுத்துக்கள் நம் கண்ணெதிரே பறந்தால் எவ்வளவு திகிலாக இருக்கும் என எண்ணும் போது இன்னமும் திகிலாக இருந்தது.

    மதன் ஜோக், கோபுலு ஜோக் நன்றாக இருக்கிறது.

    கலைவாணர் செய்த நல்ல காரியம். இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    இன்றைய தேதியில் நடந்தது என முகநூலிலிருந்து அறிமுகபடுத்தியதும் இன்றுதான் கேள்விப்படுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. கதம்பம் நன்றாக உள்ளது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      திருமண ஏற்பாடுகளையும் படங்களையும் ரசித்ததற்கு நன்றி.

      திகில் க(வி)தையை ரசித்ததற்கு நன்றி.

      மொத்தமாக கதம்பத்தையே ரசித்ததற்கு நன்றி.

      உங்களிடமிருந்து பதிவு வந்து நெடு நாட்களாகி விட்டது போலவே... உங்கள் கால் தேவலையா?

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      பதிவுகள் எழுத வேண்டும் என நினைக்கிறேன். எழுத முடியாதபடிக்கு ஏதோ தடைகள். இல்லையென்றால் மனச்சோர்வு. அதை ஒதுக்கி கலகலப்பாகவே அனைவரின் பதிவையும் படித்து கருத்துக்கள் போட்டு வருகிறேன்.
      அதற்கு உங்களனைவருக்கும் நான் மிகவு‌ம் நன்றி தெரிவிக்கிறேன். என் கால் இப்போதுதான் குணமாகி வருகிறது. ஒருவார காலமாக வலியின்றி "காலூன்றி" நிற்கிறேன். நடக்கிறேன். அன்புடன் விசாரித்தமைக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. மீள் வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி கமலா அக்கா. கால்கள் குணமானது குறித்து சந்தோஷம். சீக்கிரம் கலகலப்பான பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்!

      நீக்கு
  31. இப்பலாம் படம் வெளிவரலைன்னாலும் எனக்கென்னன்னு இருக்காங்க?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களுக்கான பங்கு அவர்களுக்கு கிடைத்து விட்டால் போதும் என்று இருந்து விடுகிறார்கள்!

      நீக்கு
  32. போண்டா தெரியும் அதென்ன மினி போண்டா ? அந்த சம்பந்தி நாற்காலியில் மதன் கோபுலு கேரக்டர்ஸ் மாதிரி ஆட்கள் அமர இடமுண்டா :))

    ஆரம்பத்தில் கோபுலு ஆண்களை கலாய்த்து இப்போ பெண்களில் மதன் நிற்கிறார் :)) இரண்டு கருது சித்திரங்களும் ர:)சிரித்தேன்

    இப்போல்லாம் என் எஸ்கெ போன்றோர் இல்லை அதாவது மனம் குற்றம் அடைந்து நஷ்டத்தை ஈடு செய்ய . அதனால் இப்போ படம் வாங்கினவங்களே கேஸ் போட்டு நஷ்டத்தை வாங்கிடுவாங்க :)

    வரலாறு பொல்லாத விஷயங்களை கூறுகிறது .உண்மை குத்தும் சுடும் என்பதாலேயே இங்கே பள்ளிகளில் பிரிட்டிஷ் colonial history சொல்லித்தரப்படுவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்க முடியாதது என்று எழுத வந்தது... அப்படி ஆகிவிட்டது! நிரந்தர நீக்கம் செய்துவிட்டேன்!!

      நீக்கு
  33. அனைத்தும் அருமை கண்ணுக்கினியவை. என்.எஸ். கிருஷ்ணனின் பெருந்தன்மை அளப்பரியது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  34. உங்கள் கல்யாணத்திற்கான பயண அனுபவங்கள் கொஞ்சம் கஷ்டமாகிவிட்டதோ? யானை படங்கள் அலங்காரப் படங்கள் ஆதிசங்கரரின் சிலை எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. கல்யாணத்தில் கூட விஐபி சீட்ஸ் எல்லாம் உண்டோ?

    திகில் கவிதையை திகிலோடு ரசித்தேன்! ஸ்ரீராம்ஜி!

    என் எஸ் கிருஷ்ணனின் பெருந்தன்மை பாராட்டிற்குரியது. இதுவரை அறியாத ஒன்று.

    காஸ்வே பாலம் பற்றிய வரலாற்றுத் தகவலும் அறிந்தேன்.

    மதன் மற்றும் கோபுலு ஜோக்ஸ் அருமை. தமிழ்நாட்டில் இருந்த போது பார்த்து படித்து ரசித்தவை அதுவும் நூலகத்திற்குச் செல்லும் போது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டம் என்று இல்லை, அதுவும் ஒரு அனுபவம்...

      நன்றி துளஸிஜி.்்.

      நீக்கு
  35. //நான் அவர்களை நெருங்கினேன்........

    தொடரும்!
    ///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏதோ தான் பெரிய மர்மக் கதை ஆசிரியர் எனும் நினைப்பு:).. ஸ்ரீராம் நம்மை எப்பவும் ரென்சனாக்கிறார் யுவர் ஆனர்:))..

    படங்கள் அழகாக இருக்கு.. மாப்பிள்ளை பொம்பிளையைக் காட்டுவீங்களோ மாட்டீங்களோ என நினைச்சே இன்னும் ரென்ஷன்.. சே..சே.. ஒரெ டென்ஷனாக இருக்கு:))... அதிலயும் இன்னும் டின்னர் மெனுவும் வரல்ல:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @அதிரா... அப்போ கொஞ்சம் சஸ்பென்ஸ் எபெக்ட் இருக்குதான் போல... சபாஷ் ஸ்ரீராம்... இப்படியே மெயின்டெயின் பண்ணிக்கோ....!!!!!!

      நீக்கு
  36. ///ஒரு முறை படித்தால் போதும்!//

    ஹா ஹா ஹா கர்:) எனக்கு திகில், துப்பறியும் கதைகள் மர்மக் கதைகள்.. இப்படியானவை பிடிக்கவே பிடிக்காது. படமும்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ... என்ன இப்படி சொல்லிட்டீங்க அதிரா... அதெல்லாம் ஒரு ஸ்பெஷல் மையில் எழுதியதாய் நினைத்துக் கொள்ளுங்களேன்...

      நீக்கு
  37. //ஒரு பழைய மதன் ஜோக்கும்...//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).. அவட ஒரு கை, தோழில போட்டாலே ஆள் நசுங்கிடுவார்ர்.. அதில முள்ளு 2,3 தடவை சுத்தினதைப் பார்த்தாராம்.. பீஈஈஈஈஇ கெயார்ஃபுல்:)) அந்த குட்டிக்கு சொன்னேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆ ஸ்ரீராம் என்ன இது ஜாமத்திலே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))

      நீக்கு
    2. இரவு மூன்று பரோட்டா சாப்பிட்டேன். படுத்துகிறது! வெந்நீர் குடித்துவிட்டு ப்ளாக் பக்கம் வந்தேன்!

      நீக்கு
    3. ஹா ஹா ஹா இதுதான் அன்று ட்றைவர் பஸ் படியில இருக்கச் சொன்னாரோ அவ்வ்வ்வ்வ்:))

      நீக்கு
  38. ஜோக் ல கோபு அண்ணனை நினைவுபடுத்திட்டீங்களே ஹா ஹா ஹா கோர்த்து விட்டாச்ச்ச்ச்:)..

    படத்தில் இருப்பவர் ராதிகா ஆன்ரியின் அப்பா இல்லையோ?.. அவரைப்போலவே இருக்கிறார்ர்ர்.

    ஹேமா வின் ஸ்டேட்டஸும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://i.pinimg.com/originals/90/63/38/90633846f707af920e67093a7eec4a7a.gif

      மியாவ் நீங்க பிக் பாஸ் 2 பார்த்தீங்க இல்லியா அதில் தலைமுடிக்கு வெள்ளை பெயிண்ட் அடிச்சிட்டு வந்துச்சே ஒரு பொண்ணு அதோடா தாத்தாதான் இவர் .என் எஸ் .கிருஷ்ணன் :) அவரைப்பார்த்தா உங்களுக்கு சித்தியோட அப்பா மாதிரியா தெரியுது :)
      பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து இந்த பாட்டை 1000 டைம்ஸ் சொல்லுங்க .உங்களுக்கு இம்போசிஷன்

      நீக்கு
    2. நீங்கள் குறிப்பிடிவது எம் ஆர் ராதா அதிரா.... இது என் எஸ் கிருஷ்ணன். அவர் வில்லன். இவர் காமெடியன்!

      நீக்கு
    3. ///பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து//

      ஆவ்வ்வ்வ்வ் இது என் பேவரிட் ஆச்சே:)) ஆராட்சி அம்புஜத்துக்கு எப்பூடித் தெரிஞ்சுதூஊஊ.. ஹை பிச் ல பாடும்போது எல்லோரும் கண்ணீர் வடிப்பினம் தெரியுமோ... பக்தியாலதேன்ன்:)..

      நீக்கு
    4. //ஹை பிட்ச்ல பாடும்போது எல்லோரும் கண்ணீர் வடிப்பினம் //

      எனக்கு இதைப் படிக்கும்போதே கண்ணீர் வருகிறது..... பக்தியாலதான்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!