திருப்பதி. நான் திருப்பதி கடைசியாக 2002 இல் சென்று வந்தது. பாஸ் 96 இல் சென்று வந்தது!
பதினாறாம் தேதி கணு அன்று சகோதரிகளை அழைத்து மரியாதை செய்து அனுப்பினோம். எனக்கு அன்று காலை முதலே தொண்டையில் எச்சில் விழுங்க முடியாமல் என்று தொடங்கி மதியம் எல்லாம் ஜுரம் இருந்தது. இரவும் அவஸ்தை. இதில் மறுநாள் எப்போது கிளம்ப வேண்டும், எங்கு இணைய வேண்டும், எதில் செல்லப்போகிறோம், எங்கு தங்கப்போகிறோம்.... ஒன்...........றும் தெரியாது!
ஜனவரி பதினேழாம் தேதி காலை ஒன்பது மணி போல கிளம்புவார்கள் என்று நினைத்தால் (அப்படிதான் முதலில் சொல்லி இருந்தார்கள்) ஆறு மணிக்கு முன்னதாகவே கிளம்பவேண்டும் என்றார்கள். அவர்கள் வண்டி வைத்து அழைத்துப்போகிறார்கள். அவர்கள் பெண்ணுக்கு கல்யாணம். ஆறு டு ஏழரை எமகண்டமாம். எனவே ஆறு மணிக்கு முன்னரே கிளம்ப வேண்டிய நிர்ப்பந்தம். பதினெட்டாம் தேதி அன்றுதான் கல்யாணம்.
அதையும் நாங்களே முதல் நாள் இரவு ஒன்பது மணிவரை காத்திருந்துவிட்டு கேட்ட பிறகுதான் சொன்னார்கள். இல்லாவிட்டால் எப்போது சொல்லி இருப்பார்களோ!
டூர் அரேஞ் செய்து அழைத்துச் செல்வதும் ஒரு கலை. அது இவர்களிடம் இலை!
எங்களை எங்கள் போக்கில் விடவும் மாட்டேன் என்கிறார்கள். அவர்களும் நேரத்துக்கு எதுவும் செய்ய மாட்டேன் என்கிறார்கள். அடுத்து என்ன நிகழ்ச்சி நிரலில் என்றும் சொல்லவில்லை!
நாங்கள் ஆறுபேர் பனியில் காலை ஐந்தேமுக்கால் மணியிலிருந்து சாலையில் காத்திருந்தால் அவர்கள் ஆறேமுக்காலுக்கு வந்தார்கள்!
சென்னையிலிருந்து திருப்பதி மூன்றரை மணிநேரத்தில் சென்று விடலாம் என்று கணக்கு. எனவே அவர்கள் காலை ஆகாரம் ஏதும் இல்லை என்று சொன்னதையும் ஏற்றுக்கொண்டு கிளம்பினோம்.
திருப்பதிக்குள் நுழையும்போது எம் எஸ் அம்மா அமர்ந்திருப்பது போல சிலை இருந்தது. ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். நான் பதினேழு வருடங்களுக்குப் பின் திருப்பதி செல்கிறேன்! நான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து படம் எல்லாம் எடுக்க முடியவில்லை.
மேல் திருப்பதியை அடைந்தபோது மணி பன்னிரண்டரை! இறங்கி அறையைக் காட்டினால் சாப்பிடக் கிளம்பலாம் என்று பார்த்தால் ஒன்றரை மணிவரை வண்டியை விட்டு இறங்கவிடவில்லை! அறை கிடைப்பதில் ஏதோ சிக்கல்!
நாம் இறங்கலாம் என்றால் அதிலும் சில பிரச்னைகள். கடைசியில் பொறுக்கமுடியாமல் இறங்கி கல்யாணப் பெண்ணிடமே சென்று "அம்மையீர், எங்களால் இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்பதால், எங்களை சாப்பிட்டு வர அனுமதிக்க" வேண்டினேன்! கண்முன்னால் தரிசனத்துக்குச் செல்லும் கூண்டில் இலவசச் சாப்பாடு வேறு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். காலியாக இருந்த அந்த வரிசை நான் இறங்கிய நேரம் பெரிய கியூ ஏற்பட்டிருந்தது!
பெண் சுதாரித்து எங்களை ஹோட்டல் செல்ல அனுமதித்து ஓட்டுனரிடம் சொல்லி அனுப்பியதோடு, மற்ற இரு வண்டிகளையும் கூட ஹோட்டலுக்கு விடச் செய்தார்! ஓட்டுநர் என்னை நன்றியோடு பார்த்துவிட்டு, (அவருக்கு மிகவும் பசியாம்) அவர் தொலைபேசி எண்ணை என்னிடம் கொடுத்து வைத்தார். வண்டியில் வந்த இன்னும் இரண்டு மூன்று பேர்களும் என்னைத் தாற்காலிகத் தலைவனாக ஏற்று என் அலைபேசி எண்ணைக் கேட்டனர்!
ஹோட்டல் உள்ளே சென்றால், நாம் பாட்டுக்கு சென்று அமரமுடியாதபடிக்கு அங்கிருந்தவர் ஒருவர் எங்களை அழைத்து ("என்ன... வெயிட்டிங் லிஸ்ட்டா...?") பெயர் குறித்துக்கொண்டு, எத்தனை ஸீட் என்று கேட்டுக்கொண்டார். "ஆறு... எல்லோர் பெயர் கொடுக்க வேண்டுமா? ஆதார் கார்ட் கூட வைத்திருக்கிறோம்... டேய்.. அந்த ஆதார் கார்ட் எடுடா..."
"வேண்டாம் ஸார்... ஒருவர் பெயர் போதும். இடம் காலியானதும் சொல்கிறோம்"
"எவ்வளவு நேரமாகும்?"
"சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் சாப்பிட்டு முடிப்பதைப் பொறுத்தது..."
"பக்கத்தில் வேறு ஹோட்டல்...."
"சால தூரம் போவாலண்டி...."
காத்திருந்தோம். ஒரு ஆந்திரவாரு வந்து 'மீல்ஸ் 320 ரூபாயா?' அநியாயம் என்று பொங்கினார்.
"எந்துகைய்யா அந்த்த ரூபாய்லு? குவாலிட்டியும் லேது..." என்று கோபப்பட்டவரை அழைத்து நான் விவரம் விசாரித்தேன். ஏனெனில் அவர் பாதி என்னைப் பார்த்தே பொங்கிக் கொண்டிருந்தார். (இருபத்தைந்து வயதிலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும்) ஹோட்டல்காரர் அவர் சொல்வதை ஒரு ஜென் துறவி போல கேட்டுக்கொண்டிருந்தார். அவர் பொங்கிவிட்டுப் போனதும் என்னிடம் அந்த இடத்துக்கு என்ன வாடகை தரவேண்டி இருக்கிறது, கரண்ட் பில், வாட்டர் பில் எவ்வளவு போன்ற விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு எனக்கென்ன ஆகப்போகிறது! மேலும்,
"ஆ... 320 ரூபாயா? அங்கே இலவசச் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்ததை மிஸ் செய்துவிட்டோமோ...' என்று எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு வழியாய் இடம் கிடைத்து ("ஆறாம் நம்பர் சீட்டுக்கு போங்க") அமர்ந்தோம். மாமியார் ஒரு தயிர் சாதம் வாங்கினார். 125 ரூபாயாம். பாஸ் சாம்பார் சாதம் வாங்கினார். சாம்பார் 125 ரூபாய். சாதம் 50 ரூபாய் என்று நினைவு!
நானும் மகன்களும் தென் இந்தியன் தாலி உணவு வாங்கினோம். 250 ரூபாய். அதைத்தவிர மகன் மிர்ச்சி பன்னீர் ஸ்டார்ட்டர் மற்றும் வெஜ் ரோல்ஸ் வாங்கினான். ஆளுக்கு இரண்டு பூரி, பருப்புடன் கொஞ்சம் வெஜ் பிரியாணி, சாம்பார், ரசம் (சிறு வாளியில் கொண்டு வந்து வைத்தார்கள்!) தயிர். வெண்டைக்காயை பூண்டுடன் சேர்த்து மொறுமொறுவென்று பொரித்து கொடுமை செய்திருந்தார்கள். ஆனால் என் மகன்களுக்கு அது பிடித்திருந்தது! வெண்டைக்காய் போன்ற பச்சைக் காயை இப்படி ஃப்ரை செய்வார்களோ...
அவரைக்காய் பொரியல், ஏதோ ஒரு துவையல் ஒன்றும் வைத்திருந்தார்கள். சாதம், சாம்பார், ரசம், பொரியல் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். ஆனால் எவ்வளவு வாங்க முடியும்? சாம்பார் பரவாயில்லை ரகம். வாளிரசம் கூட அப்படியே... பூண்டு இருந்ததா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தெளுவாக இருந்தது.
பாஸ் வாங்கிய சாம்பார் சாதத்துக்கு கொடுத்த சாம்பார் வேறு, எங்கள் தாலியில் கொடுத்த சாம்பார் வேறு... (எவ்வளவு நுண்ணிய அவதானிப்பு!)
தயிர் சாதத்துக்கு ஒரு வறுத்த மிளகாய். மேசையில் ஆவக்காய் ஊறுகாய் வைத்திருந்தார்கள். பரவாயில்லை. ஆந்திரா என்றால் காரம் என்பார்கள். அதைக் காணோம்!
மன்னிக்கவும்... திருப்பதி கதையில் சாப்பாடு அதிக இடம் பிடிப்பதற்கு! எல்லாவற்றையும் சொல்லவேண்டும் அல்லவா!!!
அங்கே சாப்பாடு முடித்தபின் வாசலில் சற்றுநேரக் காத்திருத்தலுக்குப்பின் தங்க இருக்கும் இடத்துக்குச் சென்றோம். பாபநாசம் தாண்டி செல்லவேண்டி இருந்தது. அங்கும் நீண்ட நேரம் காத்திருந்தபின் ஒரு அறையின் சாவி கைவசம் வந்தது.
ஆறுமணி போல நிச்சயதார்த்தம் என்றார்கள். அதுவரை ரெஸ்ட்!
அடுத்த வாரம் தொடர்கிறேனே....
=======================================================================================================
புத்தகக்கண்காட்சி நிறைவு பெற்று விட்டது. 18 கோடிக்கு வியாபாரம் ஆனதாகச் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை, ரொம்ப நஷ்டம் என்கிறது இன்னொரு கோஷ்டி.
தேசிய விருது பெற்ற எஸ்ராவின் நாவல்தான் இந்த வருடத்தின் டாப் விற்பனையாம். எஸ்ரா தனி (சொந்த) பதிப்பகம் கண்டுவிட்டார். தேசாந்திரி பதிப்பகம். ராயல்டி விஷயத்தில் பதிப்பாளர்கள் நிறைய ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு.
இது இப்போதல்ல, ஐந்து வருடங்களுக்கு முன்னரே இந்துவில் வந்த கட்டுரை கீழே...
சுரண்டப்படுகிறார்களா எழுத்தாளர்கள்?
தமிழ்ப் பதிப்புத் துறை இப்போது எவ்வளவோ முன்னேறிவிட்டது. சென்னைப் புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகத் தலைப்புகளின் எண்ணிக்கை மட்டும் ஐந்து லட்சம் என்பது, பதிப்பகத் தொழிலில் எவ்வளவு கோடிகள் புரளுகின்றன என்பதற்கு ஓர் உதாரணம். புத்தகத் தயாரிப்பு, விளம்பரங்கள், சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் எல்லாம் ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையாக மேம்பட்டிருக்கின்றன தமிழ்ப் புத்தகங்கள். ஆனால், புத்தகங்களை எழுதும் படைப்பாளிகளுக்குக் கொடுக்கும் சொற்பத் தொகையான ‘ராயல்டி’யைத் தருவதில் எந்த அளவுக்கு நியாயமாக நடந்துகொள்கின்றன?
அன்று முதல் இதே கதை!
கடந்த நூற்றாண்டில் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய சமயப் பின்னணி கொண்ட பதிப்பகத்தின் கதை இது. “அந்தப் பதிப்பகத்தில் வெறும் கருப்பட்டி காபி கொடுத்தே நூல்களை எழுதி வாங்கிவிடுவார்கள்” என்று புலம்பினார்கள் கருப்பக்கிளகம் சு.ராமசாமிப் புலவர் போன்றோர். பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாருக்கு பிரியாணி பிரியம் என்பதால், ஒரு பொட்டலம் பிரியாணியை வாங்கிக் கொடுத்து, மொழிபெயர்ப்பு வேலையை வாங்கிவிடுவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. புதுமைப்பித்தன் போன்றோர் பதிப்பக முதலாளியைத் தேடிப்போய் பணத்துக்காக நின்றதையும், அவர்கள் கூடுமானவரை பணம் தராமல் இழுத்தடிப்பதையும் நொந்துபோய் எழுத்திலேயே பதிவுசெய்துள்ளனர்.
பிரபஞ்சனின் கதை அப்படி
“என் அனுபவத்தில் இரு பதிப்பகங்கள் என்னை ஏமாற்றி யிருக்கின்றன. முதலாவது, இடதுசாரி இயக்கத்தோடு பிணைந்திருக்கும் ஒரு நிறுவனம். நான், எஸ். பொன்னுதுரை, வளர்மதி மூவரும் எழுதிய ஆறு நாடகங்களை எங்களது அனுமதி பெறாமலேயே அச்சிட்டு, 30 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்றிருந்தது அது. கடைசியில், தோழர் நல்லகண்ணுவை அணுகி அவர் முன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்குரிய பணத்தைப் பெற்றோம். இன்னொரு பதிப்பகம், இலக்கியப் பத்திரிகை நடத்திக்கொண்டு, தொலைக்காட்சிகளில் சர்வதேசப் பிரச்சினைகள் முதல் டிஎம்டி கம்பிகள் வரை எதுபற்றிக் கேட்டாலும் தொலைக் காட்சிகளில் அபிப்பிராயம் சொல்வாரே அவர் நடத்துகிற நிறுவனம். என் இரண்டு புத்தகங்களுக்கு அவர் எனக்கு ராயல்டியே தரவில்லை. எழுத்தாளர்களின் மரணத்துக்காகக் காத்திருக்கும் பதிப்பாளர்கள் உண்டு. ஏனெனில் அவர்கள் இறந்தவுடன் அவர்களது படைப்புகள் கிட்டத்தட்ட நாட்டுடைமையாகிவிடுவதைப் போல. அதற்குப் பிறகு ராயல்டி தொகையைத் தராமலேயே புத்தகங்களைப் பிரசுரிக்கலாம் என்பதுதான் காரணம் “ என்கிறார் பிரபஞ்சன்.
சாருவின் கதை அப்படி
“ஒரு விஷயம் சொல்லட்டுமா? எனக்குப் பதிப்பாளர்கள் தரும் ‘ராயல்டி’ தொகை செல்பேசி டாப் அப் செய்வதற்கு மட்டுமே உதவுகிறது. என்னுடைய சிறந்த நாவலான ‘ராச லீலா’ 80 பிரதிகள்தான் போயிருப்பதாகச் சொல்கிறார் பதிப்பாளர். என்னைப் போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கு வருடத்துக்கு 20 ஆயிரம் பிரதிகள் விற்க வேண்டும். அப்போதுதான் ‘ராயல்டி’ கௌரவமாக இருக்கும். அதுவரை இதுபற்றிப் பேசுவதே அபத்தம்” என்கிறார் சாரு நிவேதா.
இது கண்ணதாசன் கதை
“எங்கள் அப்பா எழுதிய புத்தகங்களுக்குச் சரியான ராயல்டி தொகையைப் பதிப்பாளர்கள் கொடுக்கவில்லை. அந்த நிலையில்தான் நாங்களே அப்பா பெயரில் ‘கண்ணதாசன் பதிப்பகம்’ தொடங்கினோம்” என்று சொல்லும் கவிஞர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன் “தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிடுவதற்குப் புத்தகத்தின் முகப்பு விலையில் 10%; முன்பணமாக ரூ. 10,000; மொழிபெயர்ப்பாளர்களுக்குக் காப்புரிமைத் தொகையாக அன்றி, உள்ளடக்கத்தைப் பொறுத்து ஒரு பக்கத்துக்கு ரூ. 125 முதல் ரூ. 150 வரை தரும் வழக்கத்தைத் தாம் கடைப்பிடிப்பதாகத் தெரிவிக்கிறார்.
பிரதிகளும் ராயல்டிதான்!
மூன்று விதமான முறைகளை ‘ராயல்டி’ விஷயத்தில் கடைப்பிடிப்பதாகச் சொல்கிறார் ‘அடையாளம் பதிப்பகம்’ சாதிக். “சந்தையில் எப்போதும் தேவை இருக்கக் கூடிய நூலாசிரியர்களுக்கு 5% முதல் 8% தொகையை முன்பணமாகக் கொடுத்துவிடுவோம். ஓரளவு விற்பனை வாய்ப்புள்ள எழுத்தாளர்களுக்கு முகப்பு விலையில் 10% தொகையைப் புத்தகங்கள் விற்க விற்கக் கொடுப்போம். தொடக்க நிலை எழுத்தாளர்கள் என்றால், புத்தகத்தின் 25 பிரதிகளை மட்டுமே ‘ராயல்டி’யாகக் கொடுப்போம்” என்கிறார். புத்தகம் விற்ற எண்ணிக்கையைப் பொறுத்து ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் 7.5% முதல் 10% வரை ‘ராயல்டி’யாகத் தரும் முறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார் ‘கிழக்குப் பதிப்பகம்’ பத்ரி சேஷாத்ரி.
சர்ச்சையின் நாயகன்
சமீப காலமாக இணைய விவாதங்களிலும், முகநூலிலும் காப்புரிமைத் தொகை தொடர்பாக அதிகம் சர்ச்சைக்குள்ளாகிவரும் பதிப்பகம் ‘உயிர்மை பதிப்பகம்’. இதுகுறித்து அதன் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரனிடம் கேட்டபோது, “நாங்கள் 10% ‘ராயல்டி’ வழங்குகிறோம். அதிகமாக விற்பனையாகும் எழுத்தாளர்களின் நூல்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இந்தத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், இளம் எழுத்தாளர்கள் பெரும்பாலானோரின் நூல்கள் ஆண்டுக்கு 100 முதல் 150 பிரதிகள்கூட விற்பதில்லை. கவிதைத் தொகுப்புகளின் நிலை இன்னும் மோசம். ஆண்டுக்கு 50 பிரதிகள்கூட விற்பனையாகாத ஒரு புத்தகத்தை எழுதிய கவிஞர், ‘பதிப்பாளர் ராயல்டி தராமல் ஏமாற்றுகிறார்’ என்று கூசாமல் எழுதினால் என்ன செய்ய முடியும்? விற்பனையாகாத நூல்கள் மீது ஏகப்பட்ட தொகையை முதலீடு செய்துவிட்டுத் தவிக்கிறேன்” என்கிறார்.
என்னதான் நடக்கிறது?
ஆண்டுதோறும் ஒருபுறம் புத்தக வெளியீடுகளும் விற்பனையும் அதிகரிக்கின்றன; இன்னொருபுறமோ எழுத் தாளர்கள் ‘ராயல்டி’ தரப்படுவது இல்லை என்கிறார்கள்; பதிப்பாளர்கள் ‘நஷ்டத்தைச் சந்திக்கிறோம்’ என்கிறார்கள். எனில், எதை நம்பி ஓர் எழுத்தாளர் எழுதுகிறார்? எதை நம்பி ஒரு பதிப்பாளர் பதிப்பிக்கிறார்?
- தி இந்து -
===================================================================================================================
கோபமும் ரோஷமும் மனிதர்களுக்கு மட்டும்தானா? விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இருக்காதா என்ன? இதோ சில நாட்களுக்கு முன்னால் தினமலரில் படித்த செய்தி...
பாலும், பழமும் கொடுத்து வளர்த்தவர், 'போ' என்றதால் கோபம் கொண்ட கிளி கோவிலில் தஞ்சம் அடைந்தது. வளர்த்தவர் கெஞ்சி அழைத்த போதும் கிளி வர மறுத்தது.
கோவை, பாப்பநாயக்கன்பாளையம் பழையூரை சேர்ந்தவர் முருகேசன், 48; கிரைண்டர் தொழிலாளி.
வீட்டில், கிளி வளர்த்து வந்துள்ளார். வீட்டிற்கு வெள்ளை அடித்ததால், கிளிக்கூண்டை வெளியில் வைத்துள்ளனர். இதனால், கிளி கூச்சல் போட்டுள்ளது. முருகேசன் மகன் பிரசாந்த், கிளியிடம் கோபத்துடன் பேசியுள்ளார். இதனால், கிளி கூண்டை விட்டு, பறந்து சென்றது.
இதன் பின், கிளி அங்குள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில், அம்மன் சிலை தோளில் அமர்ந்திருப்பதாக தெரிந்ததும், முருகேசன் கோவிலுக்கு சென்று கிளியிடம், 'வீட்டிற்கு வா,' என கெஞ்சினார்.
ஆனால், கிளி கண்டுகொள்ளாததால் வீடு திரும்பினார். நேற்றும், முருகேசன் குடும்பத்தினர் கிளியை அழைத்தனர். அப்போதும் கிளி வர மறுத்தது.
கோவில் பூசாரி ஹரிபிரசாத் கூறியதாவது : கோவிலில் நுழைந்த கிளி, அம்மன் சிலையின் தோளில் அமர்ந்தது. பிடிக்க முயன்றபோது கொத்த முயற்சித்தது. கொய்யாப்பழம், மிளகாய் வைத்ததும் சாப்பிட்டது. இரவு கோவில் நடை சாத்தும்போதும், கிளி வெளியில் வரவில்லை.
நேற்று நடை திறக்கும்போதும், கிளி அம்மன் சிலை தோளில்தான் இருந்தது. அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்தபோது, வெளி மண்டபத்தில் அமர்ந்தது. அலங்காரம் செய்தபின் அம்மன் தோளில் அமர்ந்தது.
முருகேசன் கூறியதாவது : நாங்கள் கிளியை பாசமாக வளர்த்தோம். என் மனைவியை,'பாப்பு' என்றுதான் கிளி கூப்பிடும். என் மகன் பிரசாந்த், கோபத்துடன், 'போ' என்ற கூறியதால், கிளிக்கு வருத்தம் போலிருக்கிறது; கோவிலில் வந்து உட்கார்ந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
====================================================================================================
"மாத்தி யோசித்த" ஒரு பொழுதில்....
======================================================================================================
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசுவாரஸ்யமான திருப்பதி பயண அனுபவங்கள். அடுத்த வாரமும் எதிர் நோக்குகிறேன். பாக்கி அனைத்தையும் படித்து விட்டு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஆகா... நான்தான் இன்று முதலாவதா... என்ன ஒரு அதிசயம்.. என்ற திகைப்பில் கடைசி கவிதையையும் படித்தேன்.கவிதை அருமை. (அனுஷ்கா மாதிரி சிரித்துக்கொண்டே) அதுதான் யோசிக்காமலே அடுத்த கருத்து. ஹா.ஹா. பிறகு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க மெதுவா கமலா அக்கா... நன்றி.
நீக்குதிருப்பதி தரிசனம் பற்றி...? அடுத்த வாரமோ...?
பதிலளிநீக்குமாத்தி யோசித்ததில் கிளி வெட்கப்படுதே...!
DD! பெருமாள் தரிசனம் மறுநாள் மாலை நான்கு மணிக்கு ஆன்லைனில் புக் செய்யப்பட்டிருந்தது. எனவே அன்று இல்லை.
நீக்குதிருப்பதி அனுபவம் ரசித்தேன். கிளி பற்றிய செய்தியை இதழில் படித்தேன். அருமை.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.
நீக்குஅனைத்தையிம் படித்துவிட்டேன்.
பதிலளிநீக்குதிருப்பதி திருமண ஏற்பாடுகள் அருமை. மீதி அனுபவங்களையும் எழுதுங்க. 250ரூபாய் கொடுத்ததை ஜஸ்டிஃபை பண்ணியிருப்பீங்க. அவ்வளவு பசி இருந்திருக்குமே.
நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....திருப்பதி திருமண ஏற்பாடுகள் அருமை//
நீக்குபாவம் ஸ்ரீராம் ஏற்கனவே உடம்பு சரியில்லாமல் பயணம் செய்து நூடுல்ஸ் போலாகி சொல்லிருக்கார்....நீங்க வம்புக்கிழுக்கறீங்களே!!!! ஹா ஹா ஹா ஹா
கீதா
ஸ்ரீராம் அதில் அந்த ஸ்டார்ட்டர் மிர்ச் பனீர் நன்றாக இருந்ததா...சில்லி பனீர் தான் மிர்ச் பனீர்னு சொல்லிருக்காங்கனு நினைக்கிறேன். நீங்க ஸ்டார்ட்டர்னு சொல்லிருக்கறதுனால அது ட்ரையா இருந்துருக்கும்....இல்லைனா மிர்ச் பனீர்னு ஜோத்பூர் மிர்ச் பனீர் நு ஒரு சப்ஜி உண்டு. ஷிம்ல மிர்ச் பனீர்னு சப்ஜி உண்டு....எல்லாம் கிட்டத்தட்ட ஒரே போல சப்ஜி தான்...பெயர் தான் இப்படி!!!!அட்ராக்டிவா!!!!
நீக்குகீதா
நெல்லை... திருமண ஏற்பாடுகள் அருமை! ஹா.. ஹா... ஹா... நிஜமாக திருமண ஏற்பாடுகளில் குறை ஒன்றுமில்லை. பயண ஏற்பாடுகளில்தான்...!!!
நீக்குகீதா... நீங்கள் சொன்ன பிறகு அது மிர்ச்சி பனீரா, சில்லி பனீரா என்று சந்தேகம் வருகிறது. ஆனால் என்ன சுவை... என்ன சுவை!
நீக்குஅநேகமா அது பனீரோடு கொத்துமல்லிச் சட்னியைவைச்சு வறுத்ததாக இருக்கும். இப்போல்லாம் ஸ்டார்டரில் சிலான்ட்ரோ பனீர் அல்லது தனியா பனீர் எனக் கொடுக்கிறார்கள். பையர் வந்தப்போ சாப்பிடப் போனப்போ தான் முதல் முதலா அதை ருசி பார்த்தேன். நன்றாகவே இருந்தது. ஷிம்லா மிர்ச்சியோ அல்லது மிர்ச் பனீரோ இங்கே இன்னும் வரவே இல்லை னு நினைக்கிறேன்.
நீக்குஇன்றைய தலைப்பு, அடுத்தமுறை உங்களை திருப்பதியில் நடக்கும் திருமணத்துக்கு கூட்டிச் செல்கிறேன் என்று சொல்பவர்களுக்கு ஏற்ற தலைப்பா?
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா நெல்லை இது நல்லாருக்கே!!!!
நீக்குஅப்படியும் சொல்லிக்கலாம் இனி அப்படி யாராவது சொன்னா ஸ்ரீராம் "கோவிந்தா கோவிந்தா" நு சொல்லி அனுப்பிடுவார்!!!!
கீதா
ஹா... ஹா... ஹா... இது கூட நல்லா இருக்கே நெல்லை!
நீக்குஅப்படிக் கூப்பிட்டால் வாழ்க வளமுடன் என்று சொல்லி மொய்க்கவரில் பணத்தைப்போட்டு இங்கேயே கொடுத்துடலாம்.
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஆஹா பயணம் பற்றிய தகவல்கள்.... மகிழ்ச்சி. நான் கடைசியாக திருப்பதி சென்றது 1990-இல்.
மற்ற விஷயங்கள் ஸ்வாரஸ்யம்.
மாத்தி யோசிச்சாலும் அனுஷ்கா! :)))))
வணக்கம் வெங்கட்.
நீக்குஅடடே... திருப்பதிக்கு எனக்கு முன்னர் சென்றிருக்கிறீர்கள். அப்போ நான் தயங்கித் தயங்கியல்லவா சொன்னேன்.. தேவை இல்லைன்னு சொல்லுங்க!
எப்படி யோசிச்சாலும் அனுஷ்!!!
அன்பு ஸ்ரீராம் இப்போது உடல் நலம் தேவலையா. இப்படிக்கூடவா அலைக்கழிப்பார்கள்.
பதிலளிநீக்குகிளிக்கதை சுவாரஸ்யம். ரோசமான கிளிதான்.
திருப்பதி பயணம் திருப்திகரமாக பூர்த்தி ஆகி இருக்கும் என்று நம்புகிறேன்.
கவிதை சூபர். அதிலும் அனுஷ்காவா. நல்ல பைத்தியம்தான்.
ராயல்டி பற்றி எல்லாம் நமக்கு எதுக்கு சார். புத்தகம் போடும் போது பார்த்துக் கொள்ளலாம்.
வாங்க வல்லிம்மா... அவர்களை சொல்லியும் குற்றமில்லை. பாவம். அவர்களுக்கு ஏகப்பட்ட கஷ்டங்கள்.
நீக்குகிளியின் ரோஷம் என்னை ரொம்பவே கவர்ந்தது.. என் கவிதையைப் பார்த்து அனுஷ்க்கா சிரிக்கிறார்!
தொண்டை வலியும் காய்ச்சலும் சரியாச்சா? சாப்பாடு புராணம் முடிந்தது(அப்படித்தானே? அல்லது கல்யாண சாப்பாடு புராணம் இருக்கிறதா?),பெருமாள் தரிசன புராணம் எப்போது? குடும்பத்தோடு சென்றிருப்பதால் நெருங்கிய நட்பு அல்லது உறவு என்று தெரிகிறது.
பதிலளிநீக்குதொண்டை ஓகே பானு அக்கா. ஆனால் இந்த இருமல்... அதுதான் விடமாட்டேன் என்கிறது. மாத்திரைகளுக்கு அடங்காத இருமல். மிகவும் வருந்தியழைத்ததால் குடும்பதோடு சென்றோம். சாப்பாடு புராணம் ஓவர்.
நீக்குஆஹா! எத்தனை நாட்களுக்குப் பிறகு அனுஷ்கா..!!😊😊
பதிலளிநீக்குஆஹா... இதுவல்லவோ ரசனை! நீங்களல்லவோ ரசிகர்!!
நீக்குரோஷக்கார கிளிதான். எழுத்தாளர்கள் vs பதிப்பகங்கள், படிக்க வருத்தமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஎழுத்தாளர்கள் இதே புலம்பலை இந்த வருடமும் சொல்லியிருந்தார்கள்.
நீக்குஸ்ரீராம் தாமதமான காலை வணக்கம்.
பதிலளிநீக்குகிளி விஷயம் சூப்பர். தன்மானமுள்ள/சுயமரியாதை காக்கும் கிளி!!!!!!! ரொம்பவே ரசித்தேன் கிளியை.
ஸ்ரீராம் கண்டிப்பாக மனிதன் அல்லாத ஜீவராசிகளிடமும் உண்டு. இப்படி சுயமரியாதை உள்ளவையும் உண்டு. துரத்தினாலும் நம்மை விட்டுச் செல்லாமல் நம்முடனேயே ஒட்டிக் கொள்ளும் ஜீவ ராசிகளூம் உண்டு. அவற்றுக்கும் பாசம், நேசம், கோபம், ரோஷம் எல்லாம் உண்டு. அனிமல் சைக்காலஜியில் உண்டு. ஆனால் நாம் நேரடியாகக் காட்டுகிறோம் சொற்களால் கூட. ஆனால் அவை அவற்றின் செய்கையால் காட்டுகின்றன.
இன்று உங்கள் பதிவில் கிளிதான் என்னக் கவர்ந்த டாப் செய்தி!!!!!!
எனக்கும் இப்படியான அனுபவம் எங்கள் செல்லத்தின் வழி உண்டு சொல்லுறேன்.
கீதா
வாங்க கீதா... வணக்கம்.
நீக்குநான் ஏற்கெனவே இதே ரோஷத்தை நாய்மனம் கதையில் கற்பனையாகச் சொல்லி இருந்தேன்!
கிளி! செல்லக்கிளி!
ஆமாம் ஸ்ரீராம் நினைவுக்கு வருது...ப்ரௌனியோடு ஆட்டோவில் சென்றது, நாவால் நக்கியது....தெரிந்திருக்குமோ இவர்களுக்கும் என்றேல்லாம் எழுதியிருப்பீங்களே!!! ஐயோ அதை வாசித்து நான் ரொம்பவே மனம் கனத்துப் போன ஒன்று...
நீக்குஅதன் பின் அதன் பேஸில் நம்ம ஏஞ்சல் வீடு மல்டி அவங்க வீட்டுல் என்ட்ரி போட்ட கதை எழுதினாங்களே!!! ஹையோ அது இன்னமும் நினைவில்....அந்த மல்டி இப்ப என்ன லூட்டி அடிக்குது ஜெஸ்ஸியோடு!!!!
கீதா
ஆஹா அனுஷின் அழகான படம்!!! உங்க மாற்றி யோசித்த ஒரு பொழுதை நினைத்து இப்படி நாம பலரும் செய்யறதுதானே இதுனு கண்ணை மூடி சிரிப்போ!
பதிலளிநீக்குபடுக்கும் முன் தூங்கு// ஹா ஹா ஹா ஹா நான் சில சமயம் உக்காந்துகிட்டே தூங்கிருவேன்!!!!
கீதா
நான் தப்புத்தப்பாக யோசித்திருப்பது பற்றி அனுஷ் கிளுக்கிச் சிரிக்கிறார் கீதா! தலையில் அடித்துக் கொள்ளாத குறை!
நீக்குஹா அஹ அஹ ஹைஃபைவ் ஸ்ரீராம் நானும் காலையில் இந்த கமெண்டோடு "தலையில் அடித்துக் கொள்ள மட்டும்தான் இல்லை" அப்படினு எழுத நினைத்து சரி சரி வேண்டாம்னு டெல் பண்ணிட்டு மீதி கமென்டை போட்டேன்...ஹா அஹ
நீக்குகீதா
அன்பின் ஸ்ரீராம் ..
பதிலளிநீக்குவாழ்க நலம்...
வாங்க துரை செல்வராஜூ ஸார்....
நீக்குதிருப்பதி மகாத்மியம் அருமை....
பதிலளிநீக்குஅந்த கிளியைப் பற்றிய சேதியைப் போட்டு விடலாம் என்று நினைத்தேன்...
ஆனாலும், நேரம் அமைய வில்லை...
காணொளி வேறு இருக்கிறது...
தரவிறக்க முடியவில்லை...
சரி... எபியோட ராஜாக்கள் விடமாட்டார்கள் என்று நினைத்தேன்...
அதேபோல ஆயிற்று...
வாழ்க நலம்...
அண்ணா அந்தக் கிளி வீடியோ எப்படியயவது தரவிறக்கிப் போடுங்க ப்ளீஸ்!!
நீக்குகீதா
துரை அண்ணா பார்த்துட்டேன் அந்த வீடியோவை...சுயமரியாதை கிளியை....ஹையோ சமத்தா உக்காந்துருக்கு....அம்மனின் தோளிலேயே தன் வேலையையும் முடித்துக் கொண்டு என்ன அழகு!!! கரெக்டா அம்மனின் தோள்தான் தன் இடம் என்று எப்படி அதற்குத் தெரிந்திருக்கு பாருங்க....செம க்யூட்!!!
நீக்குஏஞ்சல், அதிரா (பூசார் பார்த்து....கிளியைக் கொஞ்சிட்டுப் போனும் சொல்லிப்புட்டேன்...வா இழுத்து ஓனர்கிட்ட விடறேன்னு மிரட்டிச் சொல்லி தலையைக் கவ்விடக் கூடாதாக்கும்!!! ஆமாம்!!! ஹா ஹா ஹா) சுட்டி இதோ அந்தக் கிளியின் வீடியோ...
https://tamil.samayam.com/news-video/news/near-coimbatore-parrot-came-to-amman-temple-and-not-leaving-as-the-owner-scolded-it/videoshow/67525483.cms
கீதா
அக்கிளியியின் மற்றுமொரு சுட்டி காணொளி...இதுவும் தரவிறக்கம் செய்ய முடியாலி
நீக்குhttps://www.newsflare.com/video/270273/animals/angry-pet-parrot-takes-shelter-in-temple-in-india
கீதா
திருப்பதி மகாத்மியத்தை ரசித்ததற்கு நன்றி.
நீக்குஓ... கிளி மேட்டர் உங்களுக்கும் ஏற்கெனவே தெரிந்திருக்கிறதா!!!
டூர் அரேஞ் செய்து அழைத்துச் செல்வதும் ஒரு கலை//
பதிலளிநீக்குஉண்மை உண்மை...சரியாகச் சொல்லி கம்யூனிக்கேட் செய்து....தாமதமானால் உடனே தெரிவித்து அதற்கு மன்னிப்பு கேட்டு, தாமதாகும் பட்சத்தில் சாப்பாட்டிற்கு அரேஞ்ச் செய்து என்று பலதும் உண்டு.
நீங்க உடம்பு முடியாமல் பயணம் செய்திருக்கீங்களே! பெரிய விஷயம்...அடுத்த அனுபவங்கள் என்னவோ?!!!! அறிய ஆவலுடன்...அடுத்த வியாழன் வரை கூடவே அனுஷ் படம் வரும் என்........ஓ அடுத்த வாரம் தமனா வாரமா இருக்கும்!!!!!!! சரி சரி எனக்கெதுக்கு கலகமூட்டல் வேலை!!! எனிவே வெயிட்டிங்க்
கீதா
இரவெல்லாம் ஜுரம். காலை ஆறரை மணிக்கு வண்டியில் ஏறினால் ஏ ஸி...! அணைக்கச் சொல்லலாம் என்றல் கொசு கடிக்குமாம்... எண்ணெய் பார்த்துக்கொண்டிருந்த ஏ ஸி வழிகளை அடைத்துவிட்டாலும் ரொம்ப நேரம் கஷ்டம். அப்புறம் அவர்களே அணைத்து விட்டார்கள்!!!
நீக்குபுத்தக விற்பனைக்கு ராயல்டியா நான் உமி கொண்டு வரு கிறேன் நீ அரிசி கொண்டு வா என்னும்கதைதான் அறிமுகமில்லா எழுத்தாளர்களின் நூல் வெளியீடு எதொ ஒரு நப்பாசை நம் புத்தகமும் வெள் இடுகிறார்களே என்று போனால் நம் தேவை தெரிந்து பதிப்பகத்தார் நடக்கிறார்கள் ஒரு நண்பர் புத்தகம் வெளியிடுவது நம்பேரக் குழந்தைகள்என் தாத்தாவின் புத்தகம் என்று பெருமயடித்துக் கொள்ளவேண்டுமானால் பிரயோசனப்படலாம் ( அவர் புத்தகம்வெளியிட்டு இருக்கிறார் என்பது வேறு கதை) தெய்விகக் கிளி என்று யாரும் சொல்லவில்லையே என் மனைவியும்திருப்பதுக்கு செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறாள் இப்போதெல்லாம்சீனியர் சிடிசன்களுக்கு தனி வரிசையாமே
பதிலளிநீக்குவாங்க ஜி எம் பி ஸார். என் அப்பாவும் இரண்டு மூன்று புத்தகங்கள் வெளியிட்டார். கடைசியில் வெளியிட்ட புத்தகம் பரணில் நிறைந்திருக்கிறது.
நீக்குஆமாம், திருப்பதியில் சீனியர் சிட்டிசனுக்கு ஒருவர் உடன்வர சிறப்பு அனுமதி உண்டு என்று அங்கு நானும் கேள்விப்பட்டேன்.
ஜி எம் பி சார், ஸ்ரீராம் - திருப்பதியில் அங்கு சென்ற பிறகு (கீழ் திருப்பதி பஸ் ஸ்டாண்ட் அல்லது மேல் திருப்பதியில்) தரிசனத்துக்கு (பொது) டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம் (இலவசம்). 3 மணி நேரத்துக்குள் தரிசனம் செய்யும் வாய்ப்பு.
நீக்குசீனியர் சிடிசனுக்கான அனுமதியை திருப்பதில தர்றாங்க (நாம டாகுமெண்ட் வச்சுக்கணும்). அவங்களுக்கு காலை மதியம் என்று 2 ஸ்லாட்டில் ஓரளவு கஷ்டப்படாமல் நேரடி தரிசனம். இதுல பார்வை இழந்தவர்கள் மத்தவங்க என்று மொத்தம் 700 பேருக்கு தரிசனம்.
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ, போன ஃபெப்ரவரியில் நான் சீனியர் சிடிசன் ஒதுக்கீட்டில் திருப்பதி போயிட்டு வந்து அனுபவங்களை எழுதி இருக்கேன். இங்கே யாருமே அதைச் சொல்லலை! அம்புட்டு மறதியா? நானெல்லாம் பரவாயில்லை போல! ஞாபகம் வைச்சிருப்பதோடு லேபல் எல்லாம் இல்லாமலேயே தேடியும் எடுப்பேன். :P :P :P :P
நீக்குhttps://sivamgss.blogspot.com/2018/04/1.html தொடர்ந்து நான்கு பதிவுகள் பார்க்கலாம்.
நீக்குஆறுமணி போல நிச்சயதார்த்தம் என்றார்கள். அதுவரை ரெஸ்ட்!//
பதிலளிநீக்குஸோ எங்களுக்கும் ரெஸ்ட்?!!!! காத்திருப்பு! அடுத்த வியாழன் காலை 6 மணிக்கு மீண்டும் திருப்பதி அனுபவங்கள் வரும் வரை..குறிப்பா நிச்சயதார்த்த சாப்பாட்டு மெனு அனுபவம்! ஹிஹிஹிஹி
கீதா
நிச்சயகார்த்த சாப்பாட்டு மெனு! ஹா.. ஹா.. ஹா... அது சரியாய் அந்ததை நேரத்துக்கு வந்துவிடும்!
நீக்குஅனுஷ் கிளியே உங்க படம் தான் ஏற்கனவே எங்க ஸ்ரீராம் போட்டிருக்காரே அப்புறம் எதுக்கு இந்த முறை அவர் உங்க படம் போடட்டுமான்னு கேட்டதும் இந்த வெட்கச் சிரிப்போ?!!!!!
பதிலளிநீக்குகீதா
அனுஷ் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக சிரிக்கிறார் ஏதா!
நீக்குஎழுத்தாளர் - பதிப்பகத்தார் செய்தி ரொம்பவும் வேதனை. கொஞ்சம் தெரிஞ்ச விஷயம்தான்...புது எழுத்தாளர்கள் என்றால் கஷ்டமே. ஆமாம் எஸ்ரா தேசாந்திரி என்று தன் சொந்தப் பதிப்பகம் அவர் வலையில் பார்த்த நினைவு..ஹான் புத்தக விழா பத்தி சொல்லியிருந்த பதிவில் நினைவுக்கு வந்துருச்சு...
பதிலளிநீக்குஇனி அமேசான் கிண்டிலில் போடலாமோ?!! ஏற்கனவே இது வந்தாச்சே...பானுக்கா கூட இன்று அது பற்றி பதிவு போட்டிருக்கார் கூடுதல் தகவலுடன்...
கீதா
ராயல்டி பிரச்னைகள் எல்லாம் நிறையவே பார்க்கிறார்கள் எழுத்தாளர்கள். சுஜாதாவுக்கே உயிர்மையில் நிறைய பாக்கி என்று கிசுகிசு கேட்ட நினைவு!
நீக்குஆமாம் ஸ்ரீராம் சுஜாதாவுக்கு உயிர்மை பதிப்பகம் பாக்கி வைத்திருப்பது நானும் கேள்விப்பட்டிருக்கேன். சுஜாதாவுமே இருந்த வரை யாரிடமும் அதைப் பற்றி கேட்கவும் மாட்டாராமே!
நீக்குகீதா
திருப்பதி பயணத் தொடர், அருமையான ஆரம்பம். வழக்கம் போலவே இரசிக்க வைத்தது அழகான நடை.
பதிலளிநீக்குசுய மரியாதை கொண்ட கிளி. மனம் மாறி மன்னிக்குமா தெரியவில்லை. கோவிலில் தஞ்சம் புகுந்ததும் ஆச்சரியமானது.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குகிளி... கோவிலில் அதுவும் மீனாட்சி தோளில் அமர்வதுபோல அமர்ந்தது மிக் ஆச்சர்யம்.
தகவல்கள் சுவாரசியம்.
பதிலளிநீக்குபதிப்பாளர்/எழுத்தாளர் நிலை உயர வாங்கிப் படிக்கும் வாசக எண்ணிக்கை உயர வேண்டும். அதற்கு சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது. படிக்கிற ஆசை குறைந்து போய் விட்டது
வாங்க ரிஷபன் ஸார்... உங்கள் வருகையும் பின்னூட்டமும் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.
நீக்கு//படிக்கிற ஆசை குறைந்து விட்டது//
அளவுக்கு மிஞ்சி விட்டதோ!!
கிளியை அம்மன் "பரவால்ல போனா போகுது வீட்டில எப்பவாது இப்படி சொல்றதுதானே இதுக்காகக் கோச்சுக்கிட்டு இப்படி ஓடி வரதா? போ போய் அவங்களோடு இரு இனி அவங்க உன்னை வெளிய போன்னு சொல்லாம நான் பாத்துக்கறேன்னு" சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பாரா?!!!!!
பதிலளிநீக்குகீதா
அம்மனுக்கு கிளியின் கோபம் புரிந்திருக்கும் கீதா...! அங்கு உன் நேரம் முடிந்து விட்டது. என் தோளுக்கு வா என்று அவரே அழைத்திருப்பார்!!!
நீக்குஹை! அட! இப்படியும் இருக்குமோ!! ஸ்ரீராம் பாருங்க எனக்கு அப்படித் தோனவே இல்லை!! ஹிஹிஹி
நீக்குகீதா
திருப்பதி பயணம் அதிருப்தியாகத் தொடங்கியுள்ளது போலும். அடுத்து வரும் அனுபவங்கள் திருப்தியாகவும் இனிமையாகவும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அறிய அடுத்த வாரம் வரை!
பதிலளிநீக்குஎழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகம் குறித்த செய்தி வருத்தம்தான். பெரிய எழுத்தாளர்களுக்கே இப்படி என்றால் வளரும் எழுத்தாளருக்குக் கடினம் தான் என்று தோன்றுகிறது.
கிளி குறித்த விஷயம் மிகவும் வியப்பை ஏற்படுத்தியது. எப்படி அம்மன் கோயிலில் சென்று தஞ்சமைடந்தது என்பது மேலும் வியப்பு.
மாத்தி யோசித்த பொழுதில்...சம்பாதிக்கும் முன் செலவழி என்றால் கடன் ஏறிவிடுமே! ஒரு வேளை அப்பா காசோ?
பசிக்கும் முன் சாப்பிடு...இது எனக்கு சில சமயங்களில் உண்டு. பயணம் செய்யும் போது உணவம் எதுவும் சரியாக இல்லாதப்ப பசி இல்லை என்றாலும் நல்ல உணவகம் வரும் போது சாப்பிட்டுக் கொண்டுவிடுவதுண்டு. அடுத்து பசி எடுக்கும் போது சரியாக எதுவும் இல்லை என்றால்?
துளசிதரன்
//திருப்பதி பயணம் அதிருப்தியாகத் தொடங்கியுள்ளது போலும். //
நீக்குஹா... ஹா... ஹா... உண்மைதான். சுகவீனத்துடனும்!
வளரும் எழுத்தாளர்கள் பாடு ரொம்பவே கஷ்டம். சமீபத்தில் புத்தகம் வெளியிட்ட உங்கள் அனுபவத்தை அறிய விரும்புகிறேன் துளஸிஜி.
மாத்தி யோசிச்சது என்னவென்றால், இதைச் செய்யவேண்டும் என்கிறார்களோ அதற்கு நேர் எதிராக மாற்றி யோசித்தது!
நன்றி துளஸிஜி.
ஏகாந்தன் சாரை ரொம்ப நாட்களாய்க் காணோம். மெயில் அனுப்பினேன். பதில் இல்லை!
பதிலளிநீக்குஸ்ரீராம் நானும் இன்று நினைத்துக் கொண்டு இங்கு கேட்கலாம் என்று எழுத நினைத்து வந்தால் உங்கள் கருத்தைப் பார்த்துட்டேன்...ஆமாம் காணவே இல்லை...பயணத்தில் இருக்கிறாரோ இல்லை இன்னும் ஏதேனும் உபனிஷத தத்துவப் புத்தகத்தில் "ஏகாந்தமாய்" மூழ்கியிருக்காரோ!!!!!!!!!!!!!!!!!!
நீக்குகீதா
மூன்று வாரம் முன்பு லேப்டாப் க்ராஷ் ஆனது. பிறகு நான். தாயார், போதும் இந்த உலகமெனப் போய்விட்டார். டெல்லி போயிருந்தேன். மந்திரங்கள், சடங்குகளென சில நாட்கள். முந்தா நாள் திரும்பினேன். ஏதேதோ சிந்தனைகள். ஏதும் செய்யாது உட்கார்ந்திருக்கிறேன்.
நீக்குஆழ்ந்த இரங்கல்கள் ஏகாந்தன் ஸார். அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நீக்கு//ஏதேதோ சிந்தனைகள். ஏதும் செய்யாது//
மனம் முழுவதும் அம்மாவால் நிறைந்திருக்கும். புரிகிறது.
எங்கள் ஆறுதல்கள்.
வணக்கம் ஏகாந்தன் சகோதரரே
நீக்குதங்களின் தாயார் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களும். தங்களது மனம் வருத்தத்தை தாங்கிக் கொள்ள காலம் துணை புரிய வேண்டுமென ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
கமலா ஹரிஹரன்.
ஏகாந்தன் சார்.... ஆழ்ந்த இரங்கல்கள்......
நீக்குஅம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் இந்த சூழ்நிலையில் இறைவன் உங்களுக்கு மன ஆறுதலை தர பிரார்த்திக்கின்றேன் ஏகாந்தன் சார் ..
நீக்குஇரங்கல் தெரிவித்த அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நீக்குஏகாந்தன் , அம்மாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
நீக்குஅம்மாவின் நினைவுகள் வந்து கொண்டே இருக்கும்.
எத்தனை வயதானலும் தாயை இழப்பது வருத்தம் தான்.
இறைவன் மன ஆறுதலை தருவார்.
என்ன வயசானாலும் அம்மான்னா அம்மா தான். ஏகாந்தன் சார், உங்கள் மன வருத்தம் புரிகிறது. உங்களுக்கு வேண்டிய மனோபலத்தை அளிக்கும்படிப் பெருமாளிடம் பிரார்த்திக்கிறேன்.
நீக்கு@ கோமதி அரசு, கீதா சாம்பசிவம்:
நீக்குஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றிகள் பல.
நானும் ஒருதடவை வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி பக்கத்து வீட்டுக்காரர்களுடன் திருப்பதி போய் நொந்து விட்டேன்.
பதிலளிநீக்குஅறை கிடைக்காமல் மகனுடன் குளிரில் வெட வெடத்துக் கொண்டு. (புரட்டாசி மாதம் வேறு) சிலர் பயணத்தை நன்கு திட்டமிட மாட்டேன் என்கிறார்கள். மகன் பிறந்த போது வேண்டிக் கொண்ட பிரார்த்தனை , மகன் வளர்ந்து விட்டான். இனியும் தாமதம் செய்ய கூடாது என்று அவர்களுடன் சென்றேன் என் கணவருக்கு வர முடியாத சூழ்நிலை.
உங்களுக்கு உடல் நலம் இல்லாதபோது குளிரில் கஷ்டபட்டு இருப்பீர்கள். தரிசனம் நன்றாக செய்தீர்களா என்பதை அறிய ஆவல்.
அப்புறம் மூன்று தடவை கணவருடன் முன்பே அறைகள் புக் செய்து அருமையான தரிசனம் செய்தேன்.திருப்பதி
ஓட்டல்களில் சாப்பாடு பகிர்ந்து கொள்ளகூடாது என்பார்களே ! நன்றாக இல்லை சாப்பாடு. இரண்டு தடவையும் டிபன் சாப்பிட்டோம்.
வாங்க கோமதி அக்கா... அதே அதே... உடம்பு சரியில்லாமல், குளிரில்...
நீக்குஆனால் இருகோடுகள் தத்துவம் போல பசிப்பிணியில் உடல்பிணி காணாமல் போனது அப்போதைக்கு!
ஆமாம் அந்த உணவகத்திலும் 'நோ ஷேரிங்' போர்ட் வைத்திருந்தார்கள். ஆனால் பரிமாறுபவரே நான்கு வாங்கவேண்டாம், மூன்று வாங்கினாலே நால்வருக்கு அதிகம் என்றெல்லாம் கொடுத்த டிப்ஸில் தாராளமாக எல்லாவற்றையும் எல்லோரும் சாப்பிட்டோம்! ஒரே ஒரு பிரச்னை பாஸம்மா (பாஸின் அம்மா!) வெங்காயம் போட்ட எதையும் சாப்பிட மாட்டார். அது இல்லாததாய் பார்த்துப் பார்த்து சாப்பிடுவார்.
மலையோடு உள்ள திருப்பதி படம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஎழுத்தாளர்கள நிலை அன்று மிகவௌம் கஷ்டம் தான்.
இப்போதும் ஏமாந்து போகிறவர்கள் உண்டுதான், ஏமாற்றுபவர்களும் உண்டுதான்.
மலையுடன் கூடிய படங்கள் இயற்கையாக எப்போதுமே அழகாய் இருக்கும் இல்லையா? நன்றி கோமதி அக்கா.
நீக்குசுடுச்சொல் பொறுக்காத கிளி போல . இருந்தாலும் அன்னை மீனாட்சியிடம் தஞ்சம் அடைந்து விட்டது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவளர்த்தவர்களுக்கு கஷ்டமாய் இருக்கும் கிளையை பிரிவது.
பாலூட்டி வளர்த்தகிளி, பழம் கொடுத்து வளர்த்த கிளி பாட்டுதான் நினைவுக்கு வருது.
மற்ற விலங்கு, பறவைகளை விட கிளி இன்னும் soft ஆக இருக்கும் என்று நினைக்கிறேன் கோமதி அக்கா.
நீக்குகவிதை மாற்றி யோசிப்பா? நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடுக்குமுன் தூங்க முயற்சி செய்கிறாரா அனுஷ்கா ?
படுக்கும் முன் தூங்கு, சம்பாதிக்கும் முன் செலவளி என்றெல்லாம் பார்த்ததும் "பைத்தியக்காரா" என்று அனுஷ் சிரிக்கிறார் அக்கா!
நீக்குமீண்டும் அனுஷ்கா?!
பதிலளிநீக்குதிருப்பதிக்குலாம் போனால் இப்படி பெர்ர்ர்ர்ரிய ஹோட்டலுக்குலாம் போகக்கூடாது. அங்க ரூம்க்கு கிட்டக்கவே கூடையில் இட்லி கொண்டு வர்றவங்கக்கிட்ட சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் செமயா இருக்கும். அடுத்த தபா போகும்போது திருக்குளத்தின் இடதுபக்கம், அதாவது இலவச சாப்பாடு போடும் மண்டபத்துக்கு வலது பக்கமிருக்கும் கடைகளில் உளுந்து போண்டாவும் கார சட்னியும் இருக்கும் பாருங்க. வாங்கி சாப்பிடுங்க குளிருக்கு இதமா செமயா இருக்கும். அங்க நம்மை யாருக்கு தெரியபோகுது?! அதனால் ரோட்சைட் கடைங்கதான் எங்க சாய்ஸ். என்ற புருசந்தான் அசிங்கப்படுவார்.
//மீண்டும் அனுஷ்கா?!//
நீக்குAlways Anushka!
பெரிய ஹோட்டலுக்கு வண்டிக்காரர் அழைத்துச் சென்று விட்டார். ரோடோரக்கடை என்ன, நாங்கள் இலவச சாப்பாடே சாப்பிடுவோமாக்கும்! ஆனால் இதுவரை சாப்பிட்டதில்லை! என் டி ஆர் போட்ட இலவசசாப்பாடு நன்றாய் இருந்ததாய்ச் சொல்வார்கள். அதைச் சாப்பிட்டுப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்ததுண்டு அப்போது!
ரோஷக்கார கிளி போல!
பதிலளிநீக்குஆமாம்... பாசத்தைவிட அதிகமாய் ரோஷம் வைத்திருக்கிறது!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபொதுவாக உடல்நலமில்லாத போது எந்த பயணமும் கூடுதல் சோர்வைத் தரும். (அதுவும் ஆகாரமில்லாத அவஸ்த்தை வேறு..) இதை நானும் என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். எப்படியோ நல்ல விதமாக ஏடு கொண்டலவாடுவை தரிசிக்கும் பாக்கியம் தங்களனைவருக்கும் கிடைத்ததே.! அப்படி அவனே அழைக்காமல் விட்டால்,நாம் என்ன நினைத்தாலும் திருப்பதி பயணமும் அமையாது.
எழுத்தாளர்களும், பதிப்பகமும் கதை வருத்தம் தர வைத்தது.
கிளியின் செய்கை அதிசயமாக உள்ளது. அதுவும் தன்னிடம் எதுவென்று சரியாக உணர்ந்து கொண்டு சரணடைந்த விதம், இறையருள் பற்றி நாம் உணர்ந்ததை மெய்ப்பிக்கும் விதமாய் உள்ளது. இந்த பிறவியிலேயே
ஞானம் வரப்பெற்ற ஜீவன். நாம்தான் இன்னமும் அஞ்ஞானத்தில் உழன்று வருகிறோம்.
யோசித்தல் கவிதை அருமை. அதை அனுவும் மிகவும் ரசித்து ஏற்றுக்கொண்டு விட்டார். கதம்பம் நன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி.
அது சரி..நான் இன்று முதலாவதாக வந்ததற்கு யாரும் எ. கொடி காட்டவில்லையே.! அதுவும் ஒரு அதிசயந்தான்..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//அப்படி அவனே அழைக்காமல் விட்டால்,நாம் என்ன நினைத்தாலும் திருப்பதி பயணமும் அமையாது.//
நீக்குவாங்க கமலா அக்கா...
இப்படி எல்லோரும் சொல்கிறார்கள். நிஜமோ பொய்யோ!
அந்தக்கிளி வியாசரின் வாரிசாக இருக்குமோ!
நீங்கள் முதலாவதாக வந்ததற்கு யார் அக்கா எதிர்ப்புக்கொடி காட்டுவார்கள்! அதெல்லாம் இல்லை!
நன்றி அக்கா.
வணக்கம் சகோதரரே
நீக்கு/நீங்கள் முதலாவதாக வந்ததற்கு யார் அக்கா எதிர்ப்புக்கொடி காட்டுவார்கள்! அதெல்லாம் இல்லை!/
சும்மா ஜோக்குகாகச் சொன்னேன். நான்தான் 1ஸ்ட்டூன்னு ஒரு குரல் கேட்குமே. அந்த குரலின் சொந்தக்காரரை காணமேன்னு தமாஷாக கேட்டேன்.வேறு ஒன்றுமில்லை.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஐ ஒப்ஜக்ஷன் யுவர் ஆனர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. திருப்பதிக்குப் போறேன் பெருமாள் கழுத்தில் அட்டியல் இருக்கோ எனப் பார்த்து வாறேன் என்றெல்லாம் சொல்ல.. நானும் நினைச்சுட்டேன்ன்ன்.. ஸ்ரீராம் பெருமாள் தரிசனத்துக்குத்தான் போகிறார் என.. கல்யாண வீட்டுக்குப் போன இடத்தில திருப்பதிப் பெருமாளைப் பார்த்திருக்கிறார்ர்ர்.. என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது:)).. ஹையோ ஆண்டவா.. பெருமாளே என்னைக் காப்பாத்துங்கோ:).
பதிலளிநீக்குஆ... அதிரா... அட்டிகையைப் பார்க்க மட்டும் திருப்பதி என்று நினைத்தீர்களா? இருமனம் இணையும் திருமணம் ஒன்று திருப்பதியில். அதை அட்டென்ட் செய்துவிட்டு அப்படியே பெருமாளையும் பேட்டி கண்டு வரலாம் என்று....!!!
நீக்கு//டூர் அரேஞ் செய்து அழைத்துச் செல்வதும் ஒரு கலை. //
பதிலளிநீக்குஉண்மைதான் .. அது பெரிய வேலை, உண்மையில் இப்படி டூர் அரேஞ் பண்ணுவோர்தான் அழுவார்கள்.. இது அதில் சேர்ந்த நீங்க எல்லோ அழுகிறீங்க...
/// அது இவர்களிடம் இலை!// இல்லை .. இலையாகிட்டுதோ எப்பவும் இரட்டை இலை நினைப்புப்போல அவ்வ்வ்வ்வ்:).
யாராவது ஒருவருக்கு கஷ்டமாய் இருக்க வேண்டும். இங்கு இதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் போல!!!!!
நீக்கு//எங்களை எங்கள் போக்கில் விடவும் மாட்டேன் என்கிறார்கள். அவர்களும் நேரத்துக்கு எதுவும் செய்ய மாட்டேன் என்கிறார்கள். அடுத்து என்ன நிகழ்ச்சி நிரலில் என்றும் சொல்லவில்லை!//
பதிலளிநீக்குசரியான தப்பான அரேஞ்மெண்ட்.. இனி இவர்கள் பக்கம் நினைச்சும் பார்த்திடாதீங்க.. இதைவிடத் தனியே போகலாம்.. அது சுகந்திரமும் கூட.
திருப்பதிக்கு வேண்டுமானால் அவர்கள் அழைத்தால் போகவேண்டாம். ஆனால் மற்ற விஷயங்களுக்கு போய்த்தான் ஆகவேண்டும்! நிலைமை!
நீக்குஅதென்ன அந்த முதல் படம் திருப்பதி மண்டபமோ? நந்தியாவட்டைப்பூக்களோ? சூப்பரா இருக்கு பார்க்க.. படமும் நல்லா வந்திருக்குது.
பதிலளிநீக்கு//ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன் நான் பதினேழு வருடங்களுக்குப் பின் திருப்பதி செல்கிறேன்! நான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து படம் எல்லாம் எடுக்க முடியவில்லை.//
17 வருடத்தால திருப்பதிக்குச் செல்வதற்கும்... படமெடுபதற்கும் என்ன சம்பந்தம்?:) புரியவில்லையே..
ஆம், அதுதான் திருமலையின் கீழே உள்ள நுழைவு வாயில். இங்கு வலது புறமாக உள்ள பாதையில் நடந்தே மலை ஏறுபவர்கள் செல்வார்கள். நாங்கள் இங்கு எங்கள் உடைமைகளில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு மேலே அனுப்புவார்கள்.
நீக்குபாஸ் கைக்குட்டையை வாயில் பொத்தி, கண்கள் மூடி வாந்தி வராமலிருக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். பெருமாள் புண்ணியத்தில் வாந்தி வரவில்லை!
//பாஸ் கைக்குட்டையை வாயில் பொத்தி, கண்கள் மூடி வாந்தி வராமலிருக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.//
நீக்குஏன் ட்ரவலிங் சிக் இருக்கோ? இப்போ குளிசைகள் கிடைக்குது ஸ்ரீராம், பிரயாணம் தொடங்க முன் எடுத்தால் ஓகே.. ஹப்பியாக பயணம் செய்யலாம்.. இனிமேல் அதை வாங்கிக் குடுங்கோ பயணத்தின்போது.. பாமசிகளில் கேட்டால் தருவார்கள்... பிரெஸ்கிரிப்ஷன் தேவை இல்லை.
குளிகை போட்டிருந்தாரே... ஆனாலும் பயம். அவருக்கு மலை என்றால் பயம். கொண்டை ஊசி வளைவு என்றால் பயம். பஸ் என்றால் பயம், வாகனம் என்றால் பயம்.. பயணம் என்றாலே பயம்!
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).
நீக்குஅது குளிகை அல்ல குளிசை ஹாஅ ஹா கர்ர்ர்ர்ர்:)..
நீக்குஶ்ரீராமுக்குத் தெரியாத மாத்திரைகளா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஆனால் வயிற்றில் ஏதும் இல்லைனாத் தான் எனக்கெல்லாம் வாந்தி வரும். அதனால் கொஞ்சமாக ஆகாரம் எடுத்துப்பேன். ஒரு ஸ்லைஸ் ப்ரெட், ஒரே ஒரு இட்லி இது போல!
நீக்குபல வருடங்களுக்கு முன்னால் ஒரு இன்டர்வியூவுக்கு முடிஸ் செல்ல வேண்டி இருந்தது. பொள்ளாச்சியில் இறங்கி பரோட்டா ஒரு கட்டு கட்டிவிட்டு பஸ் ஏறினேன்... என்ன நடந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. ... நடத்துனர் என்னை படியில் அமரச் சொல்லிப் பிடித்துக் கொண்டார்!!!!
நீக்கு//"ஆ... 320 ரூபாயா? அங்கே இலவசச் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்ததை மிஸ் செய்துவிட்டோமோ...' என்று எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:)).
//மன்னிக்கவும்... திருப்பதி கதையில் சாப்பாடு அதிக இடம் பிடிப்பதற்கு! எல்லாவற்றையும் சொல்லவேண்டும் அல்லவா!!!//
இது எங்களுக்கொண்டும் புதிசில்லையே:)) நீங்க சாப்பாட்டைப் பற்றிப் பேசாட்டில்தான்.. யோசிப்போம்:) ஸ்ரீராம் ஞானியாகிட்டார்போல என ஹா ஹா ஹா:).
//அடுத்த வாரம் தொடர்கிறேனே....//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
பேசாமல் ஒருமுறை இலவசச் சாப்பாடும் முயற்சித்து விட்டு மற்ற உணவு முறைகளும் ருசித்திருப்பேன், தனித்துப் போயிருந்தால்! கட்டிப்போடப்பட்டிருந்தேன்!
நீக்குஹா ஹா ஹா அதென்னமோ உண்மைதான், காசு பணம் என்றில்லை.. எங்கும் இலவசமாகக் கொடுக்கிறார்கள் எனில் எனக்கும் அது என்ன என வாங்கிப்பர்க்க ஆசை... அது உணவாயினும் சரி வேறு பொருளாயினும் சரி.. அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.
நீக்குஓசியில் கொடுத்தால் இரண்டாய்க் கொடு என்பார்கள்....அதுபோல...
நீக்குபுத்தகம் வாங்க ஆசை.. படிப்பதற்கு நேரம் கிடைத்தாலும் மனம் இடங் கொடுப்பதில்லை.. இண்டநெட் இருப்பதால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
பதிலளிநீக்குகிளி பற்றிய செய்தி ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு அது என்னமோ சாதாரண கிளியாகத் தெரியவில்லை.. ஏதோ கடவுளுக்கும் கிளிக்கும் சம்பந்தம் இருப்பதைப்போலவே இருக்கு.
ஏனெனில் கிளி, கோபம் வந்து வீட்டை விட்டுப் போனால், எங்காவது பச்சை மரத்தில்தான் போய் அமரும்... இப்படி கோயிலில்.. ஆட்கள் வந்து போகும் இடத்தில் பயப்பிடாமல் இருக்காது.
புறாக்கள்தான், மணிச்சத்தத்தமும், புகையும், மக்களின் கூச்சல்.. அனைத்துக்கும் பழக்கப்பட்டவர்கள்.. ஆனா கிளிகள் அப்படி இல்லையே... சின்ன மணிச்சத்தம் கேட்டாலே ஓடி விடுவினம்.. அப்போ இது என்னமோ இருக்கு.. அதுவும் எதுக்கு அம்மனின் தோளில் போய் இருக்கோணும்... ஆச்சரியம்..
//சாதாரண கிளியாகத் தெரியவில்லை.. ஏதோ கடவுளுக்கும் கிளிக்கும் சம்பந்தம் இருப்பதைப்போலவே இருக்கு.//
நீக்குபோச்சு... அது தெய்வக்கிளியோ! தெய்வ மச்சான் போல தெய்வக்கிளி!
இனி எல்லோரும் கிளியைக் கும்பிட்டு.. சாத்திரம் கேட்கத் தொடங்கினாலும் ஆச்சர்யப்பட முடியாது:).
நீக்கு//"மாத்தி யோசித்த" ஒரு பொழுதில்...//
பதிலளிநீக்குஹா ஹா ஹா நல்லாத்தான் மாத்தி யோசித்திருக்கிறீங்க:)..
சுவீட் 16 இல் அனுஸ்கா போலும்.. இப்போதான் அனுக்காவுக்கு வயசாகிட்டுதே.. குண்டும் ஆகிட்டார்ர்.. :) இப்படி இளமையில் இருந்தபோது ஸ்ரீராம் பார்கல்லியே அனுக்காவை:)).. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).
எதிர்மறையாய் சிந்தித்த ஒரு பொழுதில் என்று போடாமல் மாத்தி யோசித்த பொழுது என்று சொன்னேன். ஆமாம், அதென்ன, இதை எல்லாம் இப்போதுதான் பார்க்கிறீர்களா? முதலில் கமெண்ட் போடும்போது படிக்கவில்லையா?!!!
நீக்குஅது கடசியாகத்தானே ஸ்ரீராம் வருது.. நான் எப்பவும் இரண்டு பேஜ் ஓபின் பண்ணி வைத்து விட்டு, ஒன்றில் மேலிருந்து படிச்சுப் படிச்சு.. மற்றதில் கொமெண்ட் போட்டுக்கொண்டிருப்பேன்ன்.. எப்பவுமே போஸ்ட் ஐ முழுமையாகப் படிச்சுப் போட்டுக் கொமெண்ட் போட்டது கிடையாது...
நீக்குகதைகள்கூட பல சமயம் அப்படித்தான், ஆனா இப்போ கதையின் நோக்கம், முடிவு அறியாமல். அவசரப்பட்டு நான் ஏதும் கொமெடி எழுதி, அது மனதுக்கு ஏதும் சங்கடத்தைக் கொடுத்திடக்கூடாதே என நினைச்சு.. கதையைப் படிச்ச பின்னர்.. மீண்டும் அதேபொல ரெண்டு பேஜ் ஓபின் பண்ணிப்போட்டு டக்கு டக்கென அடிச்சு அனுப்புவேன்ன் ஹா ஹா ஹா:))..
மேலே போய் படிச்சு.. கீழே வந்து கொமெண்ட் போட்டு திரும்ப மேலெ போய் படிப்பது ரைம் வேஸ்ட்.. ஒவ்வொரு தடவையும் பேஜ் ரிபிரெஸ் ஆகும்.. நீண்ட ரைம் எடுக்குமெல்லோ.
ஓ... ஓகே ஓகே புரிந்தது புரிந்தது அதிரா...
நீக்கு//சுவீட் 16 இல் அனுஸ்கா போலும்.. இப்போதான்// - நமக்கு வயசாகும்போது, முடியை கருப்பாக்கிக்கலாமா என்று தோணும். சிலர் அவ்வப்போது தங்களுடைய சின்ன வயது போட்டோவைப் பார்த்து 'எப்படி இருந்த நான்..' என்று பெருமூச்சு விட்டுப்பாங்க. அப்படி ஒருவேளை நினைத்து 'அ' படத்தை ஸ்ரீராம் போட்டிருப்பாரோ?
நீக்குநெ.த//
நீக்குநான் ஒண்ணுமே பேச மாட்டேன் ஜாமீஈஈ:) மீ ரொம்ப நல்ல பொண்ணு.. 6 வயசிலிருந்தே:)) ஹா ஹா ஹா..
பொதுவா ஸ்ரீராம்... பகல் நேரம்னா நேர இலவச உணவு வழங்கும் இடத்துக்குப் போனீங்கன்னா அங்க ஏகப்பட்ட உணவு ஹால் (ஒவ்வொண்ணும் 500-800 பேர் கொள்ளளவு) இருக்கு. அதிலும் பஃபே முறையில் ஒரு ஹால் இருக்கு (ஆனால் அங்க நீங்க எடுத்துட்டுப் போற தட்டுல அவங்க, சாம்பார் சாதம், சிப்ஸ், சர்க்கரைப் பொங்கல்-இப்போ இருக்கான்னு தெரியலை, வெண் பொங்கல்-சட்னி, தயிர் சாதம்னு கொடுப்பாங்க).
பதிலளிநீக்குஅதை விட்டுட்டு ஹோட்டல்லாம் அவ்வளவு ருசியாக இருக்காது.
தகவலுக்கு நன்றி நெல்லை. ஆனால் அந்த ஹோட்டல் போனது என் தெரிவல்ல.அந்த நேரத்தில் எடுக்கவைக்கப்பட்ட முடிவும் கூட அது! எங்கே? அங்கே ஆற அமர யோசிக்கக் கூட நிறமிலை, வழியில்லை... அவ்வளவு நேரங்கள் இருந்தது போல தோண்டினாலும்!
நீக்குதிருப்பதிக்கு போய்ட்டுவந்து ஒரு குட்டித்துண்டு லட்டையோ இல்லேன்னா அந்த புளியோதரை ப்ரஸாதத்தையோ கண்ணில் காட்டாதவங்க கூட நான் டூ .
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... ஏஞ்சல்... அந்த நேரத்தில் அதைப் புகைப்படம் எடுக்கக்கூட தோன்றவில்லை பாருங்கள்!
நீக்குஆனா ரோஷக்கார கிளி செல்லம் நியூஸ் சூப்பர் ..சரியா அலங்காரம் செஞ்சு அம்மனின் தோளில் அமர்கிறதுன்னா உண்மையில் அதற்க்கு எதோ ஒன்று அங்கே ஆறுதலை தந்திருக்கு ..இதுமாதிரி எல்லா செல்லங்களுக்கும் ரோஷம் அதிகமுண்டு விரைவில் ஜெஸியின் ரோஷம் பற்றி கூறுகிறேன்
பதிலளிநீக்குசொல்லுங்கள்... சொல்லுங்கள்... இவை எல்லாம் எப்போதுமே சுவாரஸ்யங்கள்!
நீக்குகிளி பத்திப் படிச்சேன். நம்ம ரங்க்ஸ் காட்டினார்னு நினைக்கிறேன். திருப்பதி அனுபவங்கள் வெறுப்பைத் தந்திருக்கின்றன போலும். நாங்க கீழே வந்து தான் பீம விலாஸில் சாப்பிட்டோம். காலை டிஃபன் மேலே தேவஸ்தானமே கொடுத்து விட்டது. இரண்டு தரம் காஃபி, ஒரு தரம் பால் காலை ஆகாரம் எல்லாம். ஆனால் நாங்கதான் கல்யாணத்துக்குப் போகலையே! கல்யாணத்துக்குப் போயிட்டுக் கல்யாணச் சாப்பாடு சாப்பிடாமல் ஹோட்டல்லே சாப்பிட்ட முதல் ஆள் நீங்க தான்னு நினைக்கிறேன். அதாவது நீங்களும் உங்க குடும்பமும்! இஃகி, இஃகி!
நீக்குதிருப்பதி அனுபவங்கள் வெறுப்பைத் தந்திருக்கின்றன என்று சொன்னால் பாஸ் கோச்சுப்பார்!
நீக்குஅங்கு போய் இறங்கும்போதே கல்யாணச் சாப்பாடு ரெடியாய் இருக்குமா என்ன! மேலும் கல்யாணம் மறுநாள்தான்!
ஆச்சரியமா இருக்கே. கல்யாணம் என்னிக்கு இருந்தால் என்ன? முதல்நாள் நிச்சயதார்த்தம் உண்டு இல்லையா? அதில் எப்படியும் ஐம்பது பேராவது கலந்துட்டு இருக்க மாட்டாங்களா? அத்தனை பேரும் பட்டினியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கல்யாணம் எங்கே சத்திரம்? ஓட்டல்? எதுவா இருந்தாலும் தங்குமிடத்தில் இருந்து எத்தனை பேர் எந்த எந்த நிகழ்ச்சிக்குக் கலந்துப்பாங்க என்பது வரை உத்தேசமாத் தெரிஞ்சிருக்குமே! ஓட்டலாக இருந்தால் ஓட்டல் பணியாளர்கள் இதுக்குனு தனியா வந்து கவனிப்பாங்க. சத்திரமாக இருந்தால் நாம் ஏற்பாடு செய்யும் சமையல் காரர் முன்கூட்டியே தன் குழுவினருடன் போய் இடத்தைப் பார்த்து சாமான்கள் சேகரித்து நாம் வரும்போது சூடான காஃபியுடன் வரவேற்க வேண்டாமோ?
நீக்குஎங்க சஷ்டிஅப்தபூர்த்தி திருக்கடையூரில் நடந்தது. நாங்க சுமார் 20 பேர் ஒரு வானில் சென்னையில் இருந்து கிளம்பிப் போனோம். முதல் நாள் காலை ருத்ர ஏகாதசி வைச்சுக்க இடம் இல்லைனாங்க ஆகையால் மாலையில் ருத்ர ஜபம்! ஆகவே காலம்பரத்தான் சென்னையில் இருந்தே கிளம்பினோம். மதியம் சாப்பிட வரீங்களானு கேட்டாங்க. சாப்பாடு எடுத்து வரோம்னு சொல்லிட்டோம். ஆகவே திருக்கடையூரில் அவங்க எங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த வீட்டில் வந்து இறங்கியதும் ஏற்பாடுகள் செய்து வந்த குருக்கள் சார்பாக அவர் வீட்டில் இருந்து நான்கு பேர் இரண்டு பெண்மணிகள் உட்பட வந்து ஆரத்தி எடுத்து எங்களை வரவேற்றதோடு அல்லாமல் சூடாகக் காஃபியும் கொடுத்தாங்க. பின்னர் நான்கு மணிக்கு மாலை டிஃபன் ரெடியா இருக்கும்னு எங்கே சாப்பிட வரணும்னு சொன்னாங்க. ஒருத்தர் அங்கேயே தங்கி இருந்து எங்களை அழைத்தும் சென்றார்.
நீக்குகல்யாணங்களில் கூட நிச்சயதார்த்தத்துக்கு முதல்நாள் இரவே சமையல் குழுவினர் சத்திரம் போய்ச் சேர்ந்து காலை செய்ய வேண்டியவை மற்ற பக்ஷணங்கள் என்று செய்ய ஆரம்பித்து விடுவார்கள். எங்க பொண்ணு, பையர் இருவர் கல்யாணங்கள் மற்றும் எங்க வீட்டுக் கல்யாணங்களில் இப்படித் தான் ஏற்பாடுகள் நடந்தன. கூடவே நம்ம வீட்டு சார்பாக ஒரு நபர் அங்கே இருந்து அவங்களிடம் நம்ம வீட்டுக்கு எப்படிச் செய்யணும், என்ன செய்யணும் என்றெல்லாம் வகுப்பு எடுத்துடுவார். எங்க நாத்தனார் கல்யாணத்தில் நாங்க கிராமத்தில் இருந்து கும்பகோணம் சத்திரம் போக வேண்டி இருந்ததால் நம்ம ரங்க்ஸும் அவர் தம்பியும் முன்னால் போய் வேண்டிய ஏற்பாடுகள் செய்தார்கள்.
நீக்குஇப்போவும் போன வருஷம் நடந்த குஞ்சுலுவின் காது குத்துக்கு என் தம்பி தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.
பதிலளிநீக்கு