வெள்ளி, 18 ஜனவரி, 2019

வெள்ளி வீடியோ : தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகாராணியே



இது ஒரு பழைய டி எம் எஸ் பாடல்.  அதே சமயம் இளையராஜா பாடலும் கூட.

இளையராஜா இசையில் குறைந்த பாடல்களே பாடியிருக்கிறார் டி எம் சௌந்தர்ராஜன்.  இதுவும் அதில் ஒன்று.



படம் ரிஷிமூலம்.  எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா நடித்த படம்.



கணவன் மனைவிக்குள் ஒரு பிரிவு வந்து விடுகிறது.  இருவரும் மீண்டும் சேரும் சமயம் வரும் பாடல் இது என்று ஞாபகம்.  பாடல் கண்ணதாசன்.  இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அவர்தான் எழுதி இருக்கிறார்.  இன்னும் இரண்டு நல்ல பாடல்கள் கூட இந்தப் படத்தில் உண்டு.  முதலாம் இடம் இந்தப் பாடலுக்கு. 



பிற்கால சிவாஜி படங்களில் ரசிக்க வைத்த படங்களில் இதுவும் ஒன்று.  1980 ஆம் வருடம் வெளிவந்த படம்.

ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும் 
இதில் அந்தரங்கம் கிடையாதம்மா 
நாள் செல்ல நாள் செல்ல சுகம்தானம்மா 

என்றென்றும் பதினாறு போலே இருப்பது உன்மேனியே 
வீடுவரும்போது ஓடிவரும் மாது நினைவில் 
இன்னும் நிற்கின்றாள் 
ஆறுசுவை செய்தாள் அருகிலிருந்து தந்தாள் 
அன்புமிக்க தாயாகினாள் 


சம்சாரம் தன்னோடு பேச சுவரேறிக் குதித்தேனம்மா.
தாலிகட்டும் தாரம் வேலிகட்டினாலும் 
தனியே நினைத்தாள் துடிக்கின்றாள் 
காலமெனும் ஒன்று கனிந்துவரும்போது 
கணவனுக்கே உயிராகின்றாள் 

தெய்வத்தால் உருவான பந்தம் விலகாது மகாராணியே 
பெற்றெடுத்த பிள்ளை கற்றுக்கொண்ட தொல்லை 
இடையில் இருக்கும் தடையாகும் 
செய்தவளும் நீதான் சேர்த்தவளும் நீதான் 
என்னிடத்தில் தவறில்லையே 



35 கருத்துகள்:

  1. இளையராஜா இசையில் TMS.... ஓ.... கேட்கிறேன் பாடலை..

    பதிலளிநீக்கு
  2. இந்தப் பாடல் கேட்ட, ரசித்த பாடல் தான்.... மீண்டும் கேட்டு ரசித்தேன். இப்பாடல் வந்த படத்தை பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ரிஷிமூலம் படம் அப்பொழுது நிறைய பேசப்பட்டது.
    இந்தப் பாடலும் தான். சிவாஜி, விஜயா சைஸ் வைஸ்
    பொருத்தம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா காலை வணக்கம்.

      சைஸ்வைஸ் பொருத்தம்...

      ஹா.... ஹா.... ஹா....

      நீக்கு
  5. ஐம்பதிலும் ஆசை வரும் பாடலைக் கேட்கும்போது சற்றொப்ப அதே நிலையிலான ஆனால் எதிர்மறைப் பொருளில் அமைந்த பாரத விலாஸ் படத்தில் வருகின்ற நாற்பது வயதில் நாய்க்குணம் அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்.....என்ற பாடல் நினைவிற்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... இதே ஜோடி! நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.

      நீக்கு
  6. இலங்கை வானொலியில் தினமும் தேவகோட்டைக்காக ஒளி(லி)பரப்பாகும் பாடல் இது. நல்ல பாடலே...

    பதிலளிநீக்கு
  7. ஹா.... ஹா.... ஹா...

    நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  8. ரிஷிமூலம் கதை கூட இயக்குனர் மகேந்திரனுடையதுதான். முதலில் நாடகமாக வந்தது. நான் நாடகம் பார்த்தேன், படம் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் ஸ்ரீராம்..

    நல்லதொரு பாடலை இன்றைய பதிவில் வழங்கியமைக்கு மகிழ்ச்சி..

    இத்துடன் அன்பின் முனைவர் அவர்கள் குறிப்பிட்டுள்ள
    பாரத விலாஸ் படப்பாடலையும் ஏதாவதொரு வாரத்தில் பதிவேற்றுமாறு
    அனைத்து சிவாஜி ரசிகர்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  10. நேற்று நடிகர் திலகம் அவர்களைப் பற்றிய செய்திகள்...
    இன்றும் நடிகர் திலகம் அவர்களின் படப்பாடல்!...

    *** *** ***

    ஏன்...ந்ணே.. ஏதாவது வேண்டுதலா இருக்குமோ...
    அப்போ பிரசாதம் கெடைக்கும்...ன்னு சொல்லுங்க!...

    இருந்தாலும் இருக்கும்..
    எதுக்கும் நீ போயி ரெண்டு தொன்னை வாங்கிட்டு வா..
    புளியோதரை வாசம் வருது!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நேற்று நடிகர் திலகம் அவர்களைப் பற்றிய செய்திகள்...//
      எனக்கும் இதேதான் தோன்றியது. வேறு ஒன்றுமில்லை, இப்போது ஜல்லிக்கட்டு சீசன் அல்லவா? ஜிவாஜி கிரிட்டிக்குகளையும், சிவாஜி ரசிகர்களையும் மோதவிட்டு பார்க்கிறார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  11. பாடலும் கேட்டு இருக்கிறேன்.
    படமும் பார்த்து இருக்கிறேன்.
    பாரதவிலாஸ் படத்தில் தான் குண்டாக இருப்பார், இந்த படத்தில் ஒல்லியாகதான் இருப்பார் விஜயா.

    பதிலளிநீக்கு
  12. ஆஆஆஆஆஆஆஆஆ அபச்சாரம்:) அபச்சாரம்:)).. திருப்பதியில் நின்றுகொண்டு போடும் பாடலா இது:)).. ஹா ஹா ஹா இப்போ ஸ்ரீராம் ஓடிவந்து சொல்லுவார்ர்...

    இல்லை அதிரா இது ஏற்கனவே செட் பண்ணி வச்சிட்டேனே..:).

    சரி விடுங்கோ.. ரசிக்கக்கூடிய பாடல்தான்.. பெரும்பாலும் இப்பாடல் கேட்காதவர்கள் இருக்க மாட்டினம்.. அடிக்கடி ரேடியோவில் போகும்.

    ஆனா இப்போ அம்பதில ஆரார் எல்லாம் இருக்கினம் என ஆராட்சி பண்ணப் புறப்படுறேன்ன்ன்ன்ன்ன்:)).. ஏன் நெ.தமிழனை இங்கு காணம்.. ஹா ஹா ஹா நான் ஒண்ணும் ஜொள்ள மாட்டேன் ஜாமீ.. மீ ரொம்ப நல்ல பொண்ணு:))..

    அஞ்சுவையும் காணம்:).. அஞ்சுவுக்கும் அம்பது?:)) ஹையோ என் நாக்கில ஜனி:) பகவான் வந்து ஏறிட்டார் போல மீ ரன்னிங்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 50 aanavanga thaan inge commenting

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா ஏஞ்சல் ஆஹா கரீக்டுதான் கீதாக்கா குயந்தை அதான் இங்க காணலை அவங்களை ஹா ஹா ஹா ஹா...

      அதிரா பாட்டியாச்சே...

      கீதா

      நீக்கு
  13. @ அமுதசுரபி:) அதிரா...

    திருப்பதியில் நின்றுகொண்டு போடும் பாடலா இது:))..
    ஹா ஹா ஹா இப்போ ஸ்ரீராம் ஓடிவந்து சொல்லுவார்ர்...

    இல்லை அதிரா இது ஏற்கனவே செட் பண்ணி வச்சிட்டேனே..:

    ஒரு பதிவைப் போட்ட பிறகு
    இந்த அப்பாவிப் பதிவர்கள் படும் பாடு இருக்கிறதே!...

    அப்பப்பா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா இப்படிச் சண்டை போடுவதில்தானே சுவாரஷ்யம் இருக்கிறது துரை அண்ணன்..:)).. சூப்பர், நல்லா இருக்கு என மட்டும் சொல்லி விட்டுப் போக எனக்கென்ன தெரியாதோ?:)).

      நீங்க எப்பவும் பக்திப் போஸ்ட்டாகப் போடுவதால், உங்களோடு தனக முடிவதில்லை என்னால:)) ஹா ஹா ஹா கஸ்டப்பட்டு, மீயும் பக்தியாக பதில் போட்டுவிட்டு வர வேண்டிக் கிடக்கு:))..

      கொமெண்ட் போடும் அதிராதானே அப்பாவி?:)) இதென்ன இது பதிவர்கள் அப்பாவி எனச் சொல்றீங்க:)) ஆவ்வ்வ்வ்வ் இப்போ நெல்லைத்தமிழன் வந்தாலும் வருவார்ர் இதுக்கு:)) ஹா ஹா ஹா.

      நீக்கு
    2. அதிரா சொல்லுங்க அப்படி. கோயிலுக்குப் போனா கெக்கெபிக்கேனா சிரிக்க முடியும்?!!!

      கீதா

      நீக்கு
  14. தொலைக்காட்சி தயவில் இந்தப் படமும் பார்த்திருக்கேன். பாட்டையும் கேட்டு இருக்கேன்.அப்படி ஒண்ணும் ரசிக்கும்படி, ................. சரி, சரி, வேண்டாம், எனக்கு எதுக்கு வம்பு! மீ த எஸ்கேப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ கீதா அக்கா, சிவாஜி ரசிகர்கள் சிவாஜி படத்திற்கு செல்வதற்கு யோசித்த காலத்தில் வந்த படம்தான், அதனால் நீங்கள் தைரியமாக உங்கள் கருத்தை சொல்லலாம். படம் ஸோ ஸோ தான். சிவாஜி படங்கள் ஸோ ஸோவாக இருக்கலாம், ஆனால் அவர் ஸோ ஸோ என்பதுதான் எங்கள் வாதம்.

      இன்று மதியம் கே. டி.வி.யில் மூன்றாம் பிறை போட்டார்கள். நீ...ண்...ட வருடங்களுக்குப் பிறகு போட்டதால் முழுவதும் பார்த்தேன். எனக்கு கமலோ, ஸ்ரீதேவியோ கண்ணுக்குத் தெரியவில்லை சீனுவும், விஜியும்தான் தெரிந்தார்கள். இதிலும் சில்க் ஸ்மிதா காட்சிகள், ஒரு சண்டை காட்சி போன்ற கமர்ஷியல் காம்ப்ரமைஸ்கள் உண்டு. என்ன செய்வது? கலையைத்தாண்டி அதில் வியாபாரமும் இருக்கிறதே?

      நீக்கு
    2. சிவாஜி படங்கள் ஸோ ஸோவாக இருக்கலாம், ஆனால் அவர் ஸோ ஸோ இல்லை என்று வாசிக்கவும்.

      நீக்கு
    3. ஹாஹா, இதிலே தைரியம் என்ன வேண்டிக்கிடக்கு? அதுவும் ஜிவாஜி பட விமரிசனத்திலே. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவானும் ஓட்டினேன். அம்புடுதேன். மத்தபடி எல்லா ஜிவாஜி படங்களுக்கும் என்னோட கருத்து! ம்ஹூம், வேண்டாம், வேண்டாம் தான்! போனால் போகுதுனு முதல் மரியாதை மட்டும்! :))))))))

      நீக்கு
    4. மூன்றாம் பிறை கடைசிக் காட்சியிலே, கமல் தான் தெரிவார். இஃகி, இஃகி, பல படங்களிலோ அல்லது ஏதோ ஒரு படத்திலோ இதை விவேக்?? கிண்டல் செய்து நகைச்சுவைக்காட்சியாக அமைத்திருந்ததைக் காமெடி காட்சிகளில் கண்டிருக்கிறேன்.

      நீக்கு
    5. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ கீதாக்கா முதல்ல இந்த ப்ளாகர் உங்க கமென்டைக் காட்டவே இல்லை....அதான் ஏஞ்சலுக்கு அதான் கீதாக்கவைக் காணலைன்னு பதில் போட்டேன்...ஹையோ இப்ப அசடு வழியறேன் ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  15. எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும். படம் மொக்கைன்னு நினைக்குறேன்

    பதிலளிநீக்கு
  16. இந்தப் பாட்டு அடிக்கடி கேட்டு ரசித்த பாடல் ஸ்ரீராம்ஜி! தமிழ்நாட்டில் இருந்தவரை. அப்புறம் இப்போதுதான் கேட்கிறேன். அப்போது நான் மதுரையில் தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். படமும் பார்த்திருக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  17. பாடல் கேட்டிருக்கேன் ஸ்ரீராம். எல்லாம் உபயம் இலங்கை வானொலி இருந்தவரை..

    இளையராஜாவா இசை??!!!! இதுவரை அறியாதது...இந்தப் படத்துலதான் இந்தப் பாட்டுன்றதும் இப்பத்தான் தெரிஞ்சுச்சு

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!