திங்கள், 7 ஜனவரி, 2019

"திங்க"க்கிழமை : உருளைக்கிழங்கு கரேமது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


நான் முன்னமேயே எழுதினதுபோல, உணவில், நான் புதிதாக முயற்சிப்பதை (அதாவது நாங்கள் எப்போதும் பண்ணும் விதத்தில் இல்லாது, அந்நிய முறையில் சமைப்பதை) என் மனைவி ரொம்பவும் வரவேற்கமாட்டாள். 


எங்கள் இருவருக்கு என்றால் ஒன்றும் சொல்லமாட்டாள் (அதுக்கும் அவளுடைய முறையைவிட்டு விலகி -அவள் வார்த்தைகளில், கண்டமுறையில் செய்து நாக்கைப் பழக்கக்கூடாது என்பாள்). பசங்களுக்கு என்றால் அவள் பொதுவா ஒத்துக்கவே மாட்டாள். இதுல என் பையனுக்கு எங்கள் உணவில் வெங்காயம் சேர்ப்பது பிடிக்காது. வட நாட்டு உணவு-மட்டர் பனீர், பாவ் பாஜி போன்று செய்யும்போது வெங்காயம் சேர்த்தால் ஒன்றும் சொல்லமாட்டான். 

இந்த மாதிரி கால நேரம் பார்த்து ஒருநாள் நான் இன்றைய செய்முறையில் உருளைக்கிழங்கு கரேமது செய்தேன்.  ரொம்ப வித்தியாசம் இல்லை என்றாலும், எங்களுக்கு இந்த முறை புதிது என்பதால் எ.பிக்கு இந்த வாரம் அனுப்பியிருக்கேன். (சில சமயம் லாட்டரிச் சீட்டு மாதிரி, உடனே வெளிவந்துவிடலாம். இல்லைனா மெதுவா ஸ்லாட் கிடைக்கும்போதுதான் ஸ்ரீராம் வெளியிடுவார். அந்தப் பொறுமை என்னிடம் இருப்பதால், அவருக்கு நிம்மதி என்றே நினைக்கிறேன்… ஹா..ஹா..ஹா).

செய்முறை

பெரிய உருளைக்கிழங்கை (அல்லது 1 ½), சிறிய சதுரத் துண்டுகளாக திருத்திக்கொண்டு, வேகவைத்து, தண்ணீரை வடிகட்டிக்கோங்க. நான் பெரும்பாலும் தோலை உரித்து எறியமாட்டேன்.  உருளைக்கிழங்கை மிக நன்றாகச் சுத்தம் செய்துவிடுவேன். அதனால் தோலுடனேயே வேகவைப்பேன், இந்த மாதிரி கரேமதுக்கு.

2 சிவப்பு மிளகாய்
1 சிறிய ஸ்பூன் மிளகு (10-12 மிளகு)
½ சிறிய ஸ்பூன் சீரகம்
1 மேசைக்கரண்டி கொத்தமல்லி விரை
2 ஸ்பூன் தேங்காய்

இதனை மிக்சில நல்லா பொடிபண்ணிக்கோங்க. நான் மிக்சரின் மூடியை எடுக்கமாட்டேன், அந்தப் பொடியை உபயோகப்படுத்தும்வரை. அப்போதான் வாசனை அப்படியே இருக்கும்.  (புது டிப்ஸ்)

1 பெரிய வெங்காயம். தோலை எடுத்துவிட்டு நீளவாக்கில் கட் பண்ணிக்கோங்க. கொஞ்சம் மெல்லிசா.  

கடாயில் 2 ஸ்பூன் எண்ணை விட்டு, சூடானதும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு திருவமாறியபிறகு அத்துடன் 1 ஆர்க் கறிவேப்பிலையையும் சேர்த்துக்கோங்க.

இதில், வெங்காயத்தைப் போட்டு நல்லா வதக்கிக்கோங்க.

பிறகு அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சப்பொடி சேர்த்துக்கொள்ளவும்.

கொஞ்சம் பிரட்டிப் போட்டபிறகு, அதில் அரைத்துவைத்துள்ள பொடியைச் சேர்க்கவும். தேவையான உப்பும் சேர்த்துக்கோங்க. இப்போ ஓரளவு நல்லா கிளறணும். அப்போதான் மசாலா வதங்கும், அதன் வாசனை உருளைக்கிழங்கில் சேரும்.

அவ்வளவுதான். உருளைக்கிழங்கு கரேமது ரெடி.

இதுல நீங்க நினைவில் வச்சிருக்கவேண்டியது, உருளை நன்றாக வெந்திருக்கவேண்டும். அதுக்காக மாவு மாதிரிக் குழைந்தால் கரேமது சரியாக வராது. இந்த எச்சரிக்கை (பிரிந்துபோக நினைத்தாலும் பிரிந்துபோக முடியாதபடி)  லண்டன் தயவில் வாழ்பவர்களுக்காக

நான் இந்த உருளைக்கிழங்கு கரேமது செய்த அன்று, புளிசேரியும் (சிலர் இதனைச் சட்டினிக் குழம்பு என்கிறார்கள்), யம்மி கத்திரிக்காய் புளிக்கூட்டும் செய்தேன்.  (கத்தரிக்காய் புளிக்கூட்டு அட்டஹாசமா வந்தது. ஆனால், என்னைப்போல், என் மனைவியோ இல்லை பெண்ணோ, கூட்டுப் பிரியர்கள் இல்லை.  அதனால் ஆஹா ஓஹோ என்று பாராட்டுவதில்லை. ஆனா என் மனசுல அவங்க ‘வாலண்டியராப் பாராட்டலையே’ என்று நினைக்கும்போது, நான் மட்டும் மனைவி செய்த சமையலை ஆரம்ப காலங்களில் பாராட்டியிருக்கிறேனா என்று யோசித்து என்னை சமாதானப்படுத்திக் கொள்வேன்.. ஹா ஹா ஹா)

இந்த மாதிரி உருளைக் கிழங்கு கறியை நீங்கள் இதுவரை செய்திருக்கவில்லை என்றால், செய்துபாருங்கள்.

அன்புடன்

நெல்லைத்தமிழன்

141 கருத்துகள்:

 1. இனிய “திங்க” காலை வணக்கம் மற்றும் இனியநாள் வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   நீக்கு
  2. காலை வணக்கம் கீதா ரங்கன்.

   பெங்களூர் நகர நெரிசலில் குளிர் குறைவாக உணர்ந்தேன். உங்க இடத்தில் குளிர் அதிகமாக இருக்கிறதா?

   நீக்கு
  3. எங்க ஏரியாவுல நல்ல குளிர் நல்லாருக்கு. நைட் 12 போகுது. போனவாரம் 10 வரை போச்சு...காலைல நல்ல ஃபாக் /ஸ்மாக்...பனி கீழ வருது...இப்ப கூட நல்ல சில் 16 டிகிரி. வெயில் எட்டிப் பார்த்தாலும் வீட்டினுள் சிலு சிலு...

   அப்ப பெங்களூரா இப்ப?

   கீதா

   நீக்கு
  4. இப்ப வாக்கிங்க் போனப்ப கூட நல்ல தணுப்பு...14, 15ல இருந்துச்சு...

   நான் ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் எதுவும் யூஸ் செய்வதில்லை. குளிர் பழக்கம்...எனக்கும் பிடிக்கும்...என்பதால்

   கீதா

   நீக்கு
  5. இங்கே கூட இந்த வருஷம் குளிர் ஜாஸ்தியாத் தெரியுது! இஃகி, இஃகி, நானே மின்விசிறியை அணைச்சுடறேன்னா பார்த்துக்குங்க!

   நீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  ஆஹா உருளைக் கிழங்கு கரமேது.... தோ வரேன் ருசிக்க....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாரிங்கள் வெங்கட். என் அனுபவத்தில், சமையலில் சட் என்று கை கொடுக்கும் வித்த்தில் உருளை நம்பர் ஒன்.

   இன்று என்ன செய்யலாம்னு நினைத்தால் நான் இருக்குறேன் என்று சொல்லும் அது.

   உருளையை உபயோகித்து, சாப்பிடுபவர்கள் பிடிக்கலைனு சொல்வது அபூர்வம்.

   உங்களுக்கு சப்பாத்திக்கு உற்ற துணைவன்

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஆ.... இனிய ஆச்சர்யத்துடன் காலை வணக்கம் மி கி மா...

   நீக்கு
  2. காலை வணக்கம் மிடில் கிளாஸ் மாதவி அவர்கள். ஆச்சர்யமா விரைந்து வந்திருக்கீங்க.

   பிறகு வந்து கருத்துடுங்கள். “வெண்டை புளி குத்தின கறி’க்கு அப்புறம் எழுதலையே. நான் அதை ஒருநாள் செய்துபார்த்தேன்

   நீக்கு
  3. ஹை ஆச்சரியம்...மிகிமா காலை வணக்கம்!!!

   கீதா

   நீக்கு
 4. ஆஹா உருளை கிழங்கு...வரேன் வரேன்....

  காஃபி ஆத்தனும், காலிஃபளவர் ஸ்டஃப்ட் பராத்தா....அப்புறம் தஞ்சைக்கு போய் லைட்டா அமுதம் பார்த்துட்டு ஏஞ்சலின் அவளும் நானும் இல் பாதில இருக்கு...வரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலிப்ளவர் ஸ்டஃப்டா ... ஆ... இப்பவே கிளம்பி வரணும் போல இருக்கே!

   நீக்கு
  2. நெல்லை இது என் மாமியாரிடம் நான் தெரிந்துகொண்டது அவங்க எப்பவுமே இந்தப் பொடி ஸ்டாக் வைச்சுருப்பாங்க...கொத்தமல்லிப் பொடினு மிளகு ஜீரகம் போட்டு போடாமன்னு...தேங்கா மட்டும் அந்த டயத்துல சேர்த்து ஒரு சுற்று...என் மாமியார் தனியா எல்லாத்துலரும் சேர்ப்பது வழக்கம். அதுவும் உருளைக்கு இப்படிச் செய்தால் அவ்வளவா கேஸ் ஃபார்ம் ஆகாம டைஜஸ்ட் ஆகும்னு சொல்லுவாங்க...அவங்க வெங்காயம் போட மாட்டாங்க நான் சேர்த்தும் செய்வதுண்டு.....

   சூப்பரா இருக்கு...

   கீதா

   நீக்கு
  3. கீதா ரங்கன்.. நான் ஒரு வாரமா பதிவுகள் அனேகமா பார்க்கலை. வியாழன் ஜோதீல கலந்துக்காத்து (நல்ல டாபிக்.. அதிரா பாஷையில் கலைக்கக்கூடிய டாபிக்) வருத்தம்தான்.

   ஶ்ரீராம், எப்போனாலும் கருத்து எழுதுங்க, அனேகமா எல்லோரும் படிப்பாங்க என்று சொல்லியிருக்கிறார்.

   நானும் தினமும் இடதுபக்க மீட்டரைப் பார்த்து, இந்தவாரம் 1 1/2 மில்லியன் பக்கப் பார்வைகளைத் தொட்டுவிடும்னு நினைத்துப்பேன். இதற்கு எங்கள் பிளாக் குழுவை வாழ்த்தறேன். கேஜிஜி சாருக்கு மட்டும் “கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ சொல்லிக்கறேன். அபூர்வ 365 நாளும் பதிவுகள் என்ற இலக்கை “திருஷ்டி”க்காக கோட்டை விட்டதற்கு.

   நீக்கு
  4. ஸ்ரீராம் வாங்க வாங்க செஞ்சு தரேன்...

   நெல்லை ஆமாம் வியாழன் எதிர்பார்த்தேன்...என்னாலும் அன்று அதிகம் பேச முடியலை...காலையில் வந்துட்டு அப்புறம் ரொம்ப வர முடியலை...

   எபி ராக்ஸ்!!!!! ஆல்வேய்ஸ்!!! இந்த வருடம் 365ம் ஃபில் ஆகிடும் நெல்லை பாருங்க..!!! வாழ்த்திடுவோம்...

   கீதா

   நீக்கு
 5. நல்ல குறிப்பு. பொதுவாக வட இந்தியாவில் உருளை கிழங்கு பயன்பாடு அதிகம். விதம் விதமாக பயன்படும். எதனுடனும் உருளை கலந்து சப்ஜி செய்வார்கள். நானும் செய்வது உண்டு.

  தேங்காய் சேர்த்து உருளை செய்தது இல்லை. செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வெங்கட். செஞ்சு பாருங்க.... ஆனா உங்கள் தளத்தை வாசிக்கும்போது, மார்கழி மாசம் முழுவதும் உங்களுக்கு கோவில் பிரசாதமோ நண்பர்கள் வீட்டு விருந்தோ கிடைக்கிறது போலிருக்கே...

   நீங்க உங்க சையலில் தில்லில வெங்காயம் எல்லா நாளும் உபயோகிப்பீங்களா இல்லை அபூர்வமா?

   நீக்கு
 6. பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜு சார்..

   “காலம் ஒருநாள் மாறும் நம் கவலை யாவும் தீரும்” என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றது.

   அந்தக் காலம் தை பிறக்கும்போது நல்ல வழியுடன் வரட்டும்.

   நீக்கு
  2. அன்பின் நெ.த.,

   நெஞ்சில் ஒரு களங்கமில்லை..
   சொல்லில் ஒரு பொய்யுமில்லை..
   வஞ்சமில்லா வாழ்க்கையிலே
   தோல்வியுமில்லை....

   - கவியரசரின் வைர வரிகள்...

   ஆறுதலாக இருக்கிறது மனம்...
   நெஞ்சார்ந்த நன்றி தங்களுக்கு...

   நீக்கு
 7. இது புது மாதிரியாக இருக்கிறது...

  நேரம் கிடைக்கும்போது செய்து பார்க்கலாம்...

  ஏனெனில் முந்தைய சூழல் இப்போது இல்லை....

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @துரை, விரைவில் நிலைமை சரியாகப் பிரார்த்தனைகள். புதுவருடம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொண்டு வரட்டும்.

   நீக்கு
  2. துரை அண்ணா உங்களுக்காக எல்லாரும் பிரார்த்திக்கிறோம்...தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்...பாடல் தான்...பிரார்த்தனைகள்

   கீதா

   நீக்கு
  3. அன்பின் கீதாக்கா மற்றும் கீதா ..
   தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி..

   நீக்கு
 8. நெல்லை தமிழின் நானும் இது மாதிரி செய்வேன் ஆனால் சிவப்பு மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாய் சேர்ப்பேன் கொத்தமல்லி சேர்க்கமாட்டேன் இனிமேல் கொத்தமல்லி சேர்த்து செய்து பார்க்கிறேன் நன்றாக இருந்தால் பாராட்டு இல்லையென்றால் இந்தியா வரும் நல்ல அடி கொடுப்பேன்...ஆமாம் நான் எப்ப வருவேன் என்று கேட்கிறீங்களா ரஜினி கட்சி ஆரம்பிக்கும் போது வருவேன் ஹீஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க மதுரைத் தமிழன். புதுவருடம் சிறப்பா அமையட்டும்.

   நீங்க இந்தியா வந்தால் செங்கோட்டை அருகிலுள்ள ரஹமத் பரோட்டா கடையில்தான் குடியிருப்பீர்கள். மற்றவர்களை சந்திக்க உங்களுக்கு ஏது நேரம்?

   புதுவருடத்தில் எத்தனை முறை பூரிக்கட்டை ஆசீர்வாதம் கிடைத்தது என்பதற்கு உங்கள் தளத்தில் ஒரு கவுன்டர் வைங்களேன்

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஹா பூரிக்கட்டை ஆசிர்வாதம்...ஹையோ சிரிச்சுட்டேன் நெல்லை...இன்னும் தொடங்கலை போல..இப்ப மதுரையும் பிஸியா இருக்கறதுதானல் இல்லை போல... இல்லைனா பதிவு வந்துருக்குமே ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 9. பதில்கள்
  1. வாங்க முனைவர் ஜம்புலிங்கம் சார்.

   எங்க அப்பாதான், ஒரு விஷயத்தைப் பற்றி கேள்விகேட்டால் தெளிவாகப் புரியும்படி விளக்கமா சொல்லுவாங்க. புரிஞ்சுக்கிட்டாங்களான்னும் சரிபார்ப்பார்.

   உங்கள்ட பேசும்போது அந்த தெளிவான அருமையான பேச்சைக் கேட்டேன். மிக்க நன்றி. Clear thought process. Very much talented. பாராட்டுகள் சார்

   நீக்கு
 10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  @துரை செல்வராஜு நிலைமை சீக்கிரம் மாறும் மா.

  எங்க வீட்டுப் பொடிமாசில் இது போல அரைத்துச் சேர்ப்பதுண்டு. நோ வெங்காயம்.
  கட்டம் கட்டமாக திருத்தி, மிளகாய்ப்பொடி உப்பு போட்டு பெருங்காய மணத்துடன் வதக்கிய உ..கிழங்கே அனைவருக்கும் பிடித்தம்.
  உகி மசாலா தோசைக்குத் தொட்டுக்க உண்டு.
  நெல்லையின் முறை வித்தியாசமாக இருக்கிறது. செய்து பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது ஆறுதல் வார்த்தைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி அம்மா...

   நீக்கு
  2. வல்லிம்மா.... வருகைக்கு நன்றி...

   இந்தமுறை பார்த்தசாரதி சபால (மயிலாப்பூர்ல கல்யாண மண்டபத்தில், கச்சேரியோடு, 1ம்தேதி மவுன்ட்ரோடு மணி ஐயர் ஸ்பெஷல் லஞ்சில் இதுவரை கேள்விப்படாத உருளைக்கிழங்கு பருப்புசிலி.... எப்படி பருப்பும் கிழங்கும் சேரும்? சுமார்தான்....

   நீக்கு
 11. இந்தப் பொடி எப்போதுமே கைவசம் இருக்கும். அத்துடன் தேங்காயும் சேர்த்து அநேகமாகப் பயறு கூட்டு, காராமணிக் கூட்டு போன்றவை சப்பாத்திக்குச் செய்யும்போது பயன்படுத்துவேன். கூடவே வெங்காயம் சேர்க்கும் நாட்களில் வெங்காயத்தையும் வதக்கிச் சேர்த்து அரைத்துக் கூட்டில் விடுவேன். ஆகவே இது ஒண்ணும் புதுசே இல்லையாக்கும்! ஜாலிலோ ஜிம்கானா! மஹாராஷ்ட்ரா சமையலில் இந்தக் கூட்டணி மசாலா அதிகம் உண்டு. இதை வெறும் பொடியாக வைத்திருக்கும்போது ஒரு மாற்றாக இந்தப் பொடி போட்டு ரசமும் செய்யலாம். நெ.த. செய்த உடுப்பி ரசமெல்லாம் ஒண்ணுமே இல்லைனு ஆயிடும்! ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா சாம்பசிவம் மேடம்.. இந்தப் பொடிப் பையன் ஒவ்வொண்ணாச் செய்து பார்த்து நளன் ரேஞ்சுக்குப் போயிடலாம்னு கற்பனை பண்ணினால், விட மாட்டீங்களே... உடனே ஏணியிலிருந்து இரண்டடி கீழே தள்ளினால்தான் உங்களுக்கு நிம்மதி.

   உங்க நல்ல நேரம் மாமா இந்த மாதிரி தளங்களைப் படிப்பதில்லை. படித்திருந்தால், “ஏம்மா.. இந்த நெல்லைத் தமிழன் செய்முறையில் இன்றாவது வித்தியாசமா ருசியா பண்ணு” என்று ஒருநாள் சொல்வதைக் கேட்கும் வாய்ப்பு வந்திருக்கும்....

   ஹா ஹா ஹா....

   மிகுதிக்கு அப்புறம் வரேன். பையருக்கு தரிசனம்லாம் நல்லபடியா முடிஞ்சு, குலதெய்வ தரிசனமும் ப்ராப்தமானது ரொம்ப சந்தோஷம்.

   நீக்கு
  2. ஹப்பா நான் தப்பிச்சேன்!!!! நெல்லை...

   நெல்லை நீங்க நளனே தான் அதில் மாற்றுக் கருத்தே இல்லை...நாங்க எல்லாம் ஒரு நாள் படையா வரோம்...திங்க!!!!!!!!

   கீதா

   நீக்கு
  3. கீதா ரங்கன்.. சமையல் கலையில் ஆண்கள் மட்டுமே வரலாற்றில் நிபுணர்களாக்க் காட்டப்பட்டிருப்பதன் மர்மம் என்ன? “நளி” என்று நான் கேள்விப்பட்டதில்லை.

   (நமக்குள் ஒரு ரகசியம்...

   अंध जल गागरी छलकत जाए - எப்படிக் கஷ்டப்பட்டு கத்துக்கொண்டிருக்குறேன். எனக்கு சரியான பழமொழிதானே.. ஹா ஹா

   நீக்கு
  4. என்னாது பழமொழியா இது?... பிறகு இதை தமிழில் மொழிபெயர்த்திடுவேன் ஜாக்க்க்க்க்ர்ர்ர்ர்ர்தை:)... ஹா ஹா ஹா.

   நீக்கு
  5. நெல்லை அது கக்ரி இல்லையோ? காக்ரி வருமா என்ன? ஹிந்தி இதில் அடிக்க முடியலை...

   கீதா

   நீக்கு
  6. ஹிந்தில அடிக்க பார்த்தேன் நடக்கலை...

   ஆப் காலி பர்தன் நஹி ஹோ! ஆப் கே பாஸ் கானா பக்கானே மேன் அச்சா கௌஷல் ஹை!!!! ஹிஹிஹிஹி (நெல்லை இது பட்லர் ஹிந்தி....இங்க ஹிந்தி எக்ஸ்பெர்ட்ஸ் கீதாக்கா, வெங்கட்ஜி, கில்லர்ஜி, துரைஅண்ணா எல்லாரும் இருக்காங்களாக்கும்...ஸ்ரீராம்கும் கூடத் தெரியும்னு நினைக்கிறேன்.....ஹிந்திப்பாட்டு கேட்டு கேட்டே கத்துக்கிட்டுருப்பார் ஹா ஹா ஹா

   கீதா

   அதிரா தமிழ்ல சொல்லியாச்சு பாருங்க!!! ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  7. என்னாது? பொடிப்பையரா? நீங்களா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))

   நீக்கு
  8. அதிரா.... Sorry... ஹிந்தில எழுதுனதுக்கு. அந்தப் பழமொழியின் சுருக்கமான அர்த்தம்,

   நிறை குடம் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும் (என்னைச் சொல்லிக்கொண்டேன்... சமையலில் குறை குடம் என்று........... இதைப் படிச்ச உடனே ரொம்ப ஹேப்பியா முகம் ஆகியிருக்குமே... அடுத்த செய்முறை நீங்க எழுதற வரைல காத்திருந்து அங்க வச்சிக்கறேன் கச்சேரியை...)

   நீக்கு
  9. கீதா சாம்பசிவம் மேடம்.... ஆமாம் நான் பொடிப் பையன்தான்... நீங்க டைம் மெஷின்ல அட்வான்ஸா போய் 40 வருடம் கழித்து என்னைச் சந்தித்துவிட்டு வந்தால் அதுக்கு நானா பொறுப்பு?

   நீக்கு
  10. கீதா ரங்கன்... இல்ளோலாம் ஹிந்து என்கிட்ட டிரை பண்ணாதீங்க. எனக்குத் தெரியாது.

   சில நாட்கள் முன்னால் என் பி.இன்.லா வீட்டுக்கு வந்த ஜெயின் வீட்டு புரோக்கரோட பேசினான். இரண்டுபேரும் ஹிந்தி ஆங்கிலம் மிக்ஸ்ல. மறுநாள் நான் அந்த பொரோக்கரிடம் இரண்டு வார்த்தை ஹிந்தில விட்டேன். அவர் எனக்கு இந்தி தெரியும்னு பட படன்னு ஹிந்தில பேசினார். நீன் அம்பேல். அப்புறம் ஆங்கிலத்தில்தான் மாட்லாடினேன்.

   நீக்கு
  11. நெல்லை ஹைஃபைவ்!!!! நானும் அப்படித்தான்...ஹிஹிஹி இங்க பெரிசா நேக்கு பட்லர் ஹிந்தி தெரியும்ன்ற ஒரு கெத்துல கடைல ஒரு லைன் ஹிந்தில பேசி கேட்டேன்...அவன் சொன்ன விவரம் அப்புறம் விலை ஹா ஹா ஹா மீ கு புரியவே இல்லை...உடனே நான், பாயிசாப் அங்க்ரேசி மேம் பதாயியே ந்னேன் அவர் பாவம்...விலை மட்டும் ஆங்கிலத்தில் சொல்ல அப்புறம் ஹிஹிஹி...நானும் எனக்கு தோடா தோடா தான் தெரியும்னு கொஞ்சம் இளிச்சுட்டு வந்தேன்..ஹிந்தி கூட யாராவது ரொம்ப ஃபாஸ்டா பேசினா எனக்குப் புரியாது நெல்லை. ஹிந்தினு இல்ல ஆங்கிலமும் கூட.. ரொம்ப ஃபாஸ்டா பேசினா டக்குனு புரியறது இல்லை. அதுவும் இந்த காம்பியர் பேசற ஆங்கிலமும் சரி தமிழும் சரி புரியறதே இல்லை...

   கீதா

   நீக்கு
  12. //காம்பியர் பேசற ஆங்கிலமும் சரி தமிழும் சரி // - கீதா ரங்கன்... அவங்க, அவங்க பேசறது புரியணும் என்பதற்கா பேசறாங்க? நொடிக்கொருதரம் அவங்க முடியை சரி செய்வதைப் பார்க்கணும் என்பதுதான் அவங்களோட விருப்பமா இருக்கும். பெரும்பாலான காம்பியர்களின் பொது அறிவு பூஜ்ஜியத்துக்கும் கீழே. சிலர் செய்தி வாசிக்கும்போது, அந்த மாதிரி இடங்களையோ அல்லது தலைவர்களையோ இதுவரை கேள்விப்பட்டதில்லை என்பதுபோல்தான் வாசிப்பாங்க.

   நீக்கு
  13. ஓ அது உண்மையிலேயே பயமொயி:) தானோ , நான்சும்மா நெ தமிழன் அடிச்சு விடுறார் என நினைச்சுட்டேன்ன்ன்ன்:)... ஹா ஹா ஹா

   நீக்கு
 12. உருளைக்கிழங்கு வடமாநிலங்களில் நீரில் விட்டு ஊறவைத்துக் கழுவினால் தோல் தானாகவே பலசமயங்களிலும் உரிந்து விடும். வெள்ளையாக இருக்கும் என்பதோடு உ.கி. தித்திப்பாகவும் இருக்கும். இங்கே ஊட்டிக்கிழங்கு எனில் தோல் உரியும். மற்றபடி நன்கு ஊறவைத்துக் கழுவினாலே போதும். தோலை நீக்காமலேயே உ.கி.யைச் சாப்பிடணும் என்பார்கள். எனக்கு உகி. ஒத்துக்கும். சே.கி. தான் ஒத்துக்காது. வயித்தைத் தொந்திரவு செய்யும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீசா மேடம்.. அந்த ஊரில் இருக்கும்போது அப்போ அப்போ சேப்பங்கிழங்கு வாங்குவேன். இங்க வந்து வாரம் மூன்று முறையாவது சே.கி பண்ணிக்கொண்டிருந்தேன்.

   மனைவியும் பண்ணும் ஒருநாள் நெற்றிக்கண்ணைத் திறந்துட்டாங்க (அவங்க நெற்றிக்கண்). அன்னைக்கு கிழங்கு வகைகளை வாங்குவதை நிப்பாட்டிட்டேன். ஆச்சு இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கும்

   நீக்கு
  2. நானும் உகி பல சமயங்கள்ல தோல் எடுக்காமலேயே நல்லா ஊற வைச்சுக் கழுவிட்டு செய்யறது உண்டு...ஆனா நல்லா தேச்சு தேச்சு கழுவணும்...இங்க பங்களூர்ல ஊட்டி உகி கிடைக்குது..நல்லா வெள்ளையா இருக்கு...அது ஈசியா இருக்கு கழுவ...

   சேகியும் மாசத்துல ரெண்டு தடவையாவது செய்யறதுண்டு..

   கீதா

   நீக்கு
  3. உருளைக்கிழங்கின் தோலில் அதிக சத்திருக்கு, நீக்கக்கூடாது...

   நீக்கு
 13. உகி ஆவலைத் தூண்டுகிறது ஸூப்பர் படங்கள்.

  பதிலளிநீக்கு
 14. ​இது இங்கே பிரட்டல் என்று சொல்வார்கள். பிரட்டலில் கடுகு உளுந்து வெங்காயம் சேர்ப்பதில்லை. ஆனால் தே எண்ணெய் விடுவது உண்டு. கிழங்கு தோல் உரிக்கப்படும். கொஞ்சம் தண்ணீர் சேர்ப்பது உண்டு. ஆமாம் மஞ்சள் பொடியை மறந்து விட்டீர்களா? அல்லது தீர்ந்து விட்டதா?​.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! ஜேகே அண்ணா பிரட்டலின் பெருமையை சொல்லிட்டார்...நான் ஒவ்வொன்னா சொல்ல நினைத்து வந்தா...கீதாக்கா சொல்லியாச்சு, ஜேகே அண்ணாவும் சொல்லியாச்சு...மதுரைதமிழனும் சொல்லிட்டார்.

   மதுரை தமிழனும் நளன்!!!!

   கீதா

   நீக்கு
  2. ஏதாவது விட்டுருக்கான்னு பார்த்துட்டு வரேன்...

   கீதா

   நீக்கு
  3. ஜெ கே சார்.. மஞ்சள் பொடி செய்முறையிலும் படத்திலும் இருக்கு. நம் சமையலில் மஞ்சள், மிளகு சீரகம்லாம் எப்போவும் இருக்குமே...

   மிகுதிக்கு பிறகு வருகிறேன்.

   நீக்கு
  4. ஜெ.கே சார்... எனக்கு நான் சமையல் வேலையை ஆரம்பிக்குமுன்பு, கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள், பெருங்காயம், மிளகாய் வற்றல், சீரகம்/மிளகு/வெந்தயம் இதெல்லாம் இருக்கணும். துவரை/கடலைப் பருப்பும் இருக்கணும். கறிவேப்பிலை, மிளகாய், கொத்தமல்லி தழை... அப்போதுதான் எனக்கு சமையல் ஆரம்பிக்கும் மூடே வரும்.

   சமையல் அறையில் நுழைந்த பிறகு, நிறைய முறை (அனேகமாக) சமையலை மாற்றியிருக்கிறேன். இதுதான் இன்று ப்ராப்தம் என்று மனதில் தோன்றும். இதுபோல மற்றவங்களுக்கும் நடக்கிறதான்னு தெரியலை.

   மோர்க்குழம்பு பண்ணலாம்னு நினைப்பேன்.. உள்ள போனபிறகு மாற்றிடுவேன். இது அனேகமா எல்லா நாளும் நடக்கும்.. ஹா ஹா

   நீக்கு
  5. ஹையோ நெல்லை ஹைஃபைவ் எனக்கும் நடக்கும்...அதெல்லாம் சர்வ சகஜமப்பா...ஆனா அதன் பின்விளைவுகளையும் ஃபேஸ் பண்ண வேண்டியிருக்கும்...ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  6. சில சமயம் அப்படி மாறும் போதோ இல்லை நினைத்த பொருள் இல்லாமல் மாற்றிச் செய்யும் போது புது சுவை பதார்த்தம் கூடக் கிடைக்கும்....ஹிஹிஹி அப்படி ட்ரையல் அண்ட் எரரில் கற்றவை அதிகம்...

   கீதா

   நீக்கு
 15. வணக்கம் நெல்லைத் தமிழன் சகோதரரே

  தங்கள் செய்முறையில், உ. கி கலவன் சாதம் மிகவும் ருசிகரமாக உள்ளது. செய்முறை படங்களும், செய்முறை விளக்கங்களுடன், தங்கள் நகைச்சுவையான வார்த்தைகளுமாக கலந்து தந்த பதிவு மிகவும் அமர்க்களம்..இது போல் நானும் செய்து பார்க்கிறேன். நன்றி.. உ. கி யை பிடிக்காதவர்கள் யார்? அதுவும் நம்மை சில சமயங்களில் "பிடித்துக்" கொண்டு விடாமல் "அன்புத்தொல்லலை" தரும். ஹா ஹா ஹா
  பதிவை மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா ஹரிஹரன் அம்மா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

   உருளைக் கிழங்கில் அல்வா செஞ்சிருக்கீங்களோ? நான் ஹோட்டல்கள்ல சாப்பிட்டிருக்கேன் (அட... இவ்வளவுக்கு இத்தனை விலையா?... வீட்ல செஞ்சா மூணுல ஒரு பகுதிகூட விலை ஆகாதேன்னு தோணும்)

   நீக்கு
  2. ஆஆஆஆஆஆஅ அம்மாவா??!!!!! எனக்கு ஸ்ரீராமுக்கு எல்லாம் அக்கா! எங்க வயசு உங்களுக்கு அம்மாவா?!!! ஆஆஆஆஅ கமலாக்கா நீங்க கேக்க மாட்டீங்களா?!!! அதிரா ஏஞ்சல் எங்க? வாங்க இங்க ஒரு பஞ்சாயத்து.....ஹா ஹா ஹா ஹா ஹா...

   கீதா

   நீக்கு
  3. பெண்களை 'அம்மா' என்று கூப்பிடுவது தமிழ் மரபு. பெங்களூர் சென்றுவிட்டதால் அந்த மரபு மறந்துவிட்டதா?

   என்னுடைய பெரியப்பா (நான் 7வது படிக்கும்போது) கர்நாடகா பார்டரில் இருந்த எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். பக்கத்து வீட்டில் இருந்த ஹெட்மாஸ்டரின் மனைவியை, 'என்னம்மா 'என்று கேட்டார். அவர், 'இது என்ன... அம்மான்னு சொல்றாரே'ன்னு அப்புறம் எங்கள்ட சொன்னார்.

   'அம்மா' என்பது மரியாதையான வார்த்தைதானே...

   நீக்கு
  4. ஆஆஆஆஅ பொயிண்ட்டைப் பிடிச்சிட்டேன்ன்ன்ன்ன் அப்போ நம்மை எல்லாம் ஏன் மறு:) வாதையா அழைப்பதில்லையாக்கும்:)...(அதிக்காக உடனே என்னை அப்படி அழைச்சிடாதீங்க கர்ர்ர்ர்:))

   நீக்கு
 16. கவனமாக செய்ய வேண்டும் போல... படிப்படியான விளக்க படங்களுடன் செய்முறை அருமை... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் திண்டுக்கல் தனபாலன். ரொம்ப கவனம்லாம் தேவையில்லை.

   ஆமாம் நீங்கள் உருளைக்கிழங்கு உபயோகிக்கிறீர்களோ? (சுகர் என்று விட்டுவிட்டீர்களோ என்று கேட்டேன்)

   நீக்கு
 17. இதனை மிக்சில நல்லா பொடிபண்ணிக்கோங்க. நான் மிக்சரின் மூடியை எடுக்கமாட்டேன், அந்தப் பொடியை உபயோகப்படுத்தும்வரை. அப்போதான் வாசனை அப்படியே இருக்கும். (புது டிப்ஸ்)//

  ஹா ஹா ஹா ஹா ...நீலவண்ணக்கண்ணனின் குறிப்பு...

  நெல்லை நான் பெரும்பாலும் போட வேண்டிய நேரத்தில்தான் பொடிப்பது, அரைப்பது எல்லாமே...கொஞ்சம் முன்னாடி அரைத்தாலும் அது அப்படியே இருக்கும்...அரைத்தது, பொடிப்பது எல்லாமே..ஆனா அது வாசனை போகும்னு நினைச்சதில்லை...அது ஒரு பழக்கமாகிப் போனதால்....வாசம் போயிடும்ன்றது உங்க மூலம் தெரிஞ்சுகிட்டென்....வாசனை போய்விடுமோ இல்லைனா? தெரியலை...இதுவரை நம்ம வீட்டுல யாரும் சொன்னதில்லை...நோட்டெட் உங்க பாயின்ட்...

  சில சமயம் கொஞ்சம் நிறைய பேர் சாப்பாடு என்றால் மெனு அதிகம் இருக்கும் பட்சத்தில் பொடிகள் எல்லாம் செய்து முதல் நாள் வைத்துக் கொள்வது வழக்கம். ஏர்டைட்டில் போட்டு வைப்பதுண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா ரங்கன்... சும்மா புகழ்ச்சிக்கெல்லாம் சொல்லலை. சமையல் வேலை, தயாரிப்பு வேலைகள், இடத்தை, பாத்திரங்களைச் சுத்தம் செய்வது, அப்புறம் உடனே அடுத்த வேளைக்கு யோசிக்கணும்.... பொதுவா பெண்களோட இந்த கஷ்டங்களை ஆண்கள் இக்னோர் பண்ணிடறாங்க. விருந்தினர்கள் வந்தாலும், ஆண்கள்தான் பேச்சு இதெல்லாம் கவனிச்சுக்கறாங்க. அப்போதும் பெண்கள் அடுப்படில இருக்கவேண்டியிருக்கு.

   நாம செஞ்சு பார்க்கும்போதுதான் அதன் உண்மையான கஷ்டங்கள் தெரிய வருது.

   உங்களுக்கு என் பாராட்டுகள் கீதா ரங்கன்.

   நீக்கு
  2. நெல்லை ஹானஸ்ட்லி ஸ்பீக்கிங்க்...மீ நத்திங்க்...இங்க இருக்கற சீனியர்ஸ் (ஹையோ கீதாக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சொல்லப் போறாங்க!!! அவங்க குயந்தை!!!) பலரும் கிச்சன்ல பெரிய பெரிய குடும்பத்தோடு பல வருடங்கள் பல மணிக்கூர் வேலை செஞ்சவங்க அதுவும் பல கட்டுப்பாடுகளோடு......அப்படி பார்க்கும் போது அவங்களுக்குத்தான் பாராட்டு எல்லாம் கொடுக்கனும். எவ்வளவு மணிக்கூர் கிச்சன்ல இருந்து ஒவ்வொரு பூஜைக்கும், நாள்கிழமைக்கும், வேண்டுதலுக்கும் கீதாக்கா செய்யறாங்க பாருங்க....அதெல்லாம் பாருக்கும் போது மீ நத்திங்க் நெல்லை...ஸோ அப்படியான பெண்களுக்கு...இங்கு வரும் காமாட்சிம்மா, வல்லிம்மா, கீதாக்கா எல்லாருக்கும் நாம பாராட்டுகள் சொல்லிடுவோம் நெல்லை...

   ஒரு புது விஷயம் யார் சொன்னாலும் கற்றுக் கொள்ளலாமே நெல்லை...அப்படித்தான்...உங்களின் இந்த பாயின்ட்!!

   கீதா

   நீக்கு
  3. கீதா ரங்கன்... //சீனியர்ஸ் பலரும் கிச்சன்ல// - உண்மை. இது பற்றி நான் நிறைய எழுதலாம். நான் சமீபத்தில் நின்றுகொண்டு, கட கடவென 20-24 தோசைகள் வார்த்தேன். அப்போதான் அதன் கஷ்டங்கள் தெரியும்.

   கொஞ்சமாகச் செய்தாலும் எஃபர்ட்ஸ் அனேகமாக ஒன்றுதான். ஒவ்வொரு நல்ல நாளுக்கும், இவங்கள்லாம் இனிப்பு, வடை இதெல்லாம் சம்பிரமாகச் செய்து படங்கள் போடுவதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யம்தான் வரும். ஒரு ஈடுபாட்டோட, முடியுதோ முடியலையோ.. செய்யறாங்க.

   தாய்குலத்துக்குப் பாராட்டுகள்.

   நீக்கு
 18. புது ரெசிப்பி. நன்றி நெல்லைத்தமிழன் & ஸ்ரீராம். கொத்துமல்லி விதை பொடித்துப் போட்டு செய்ததில்லை. மிளகாய்ப்பொடி ரோஸ்ட்தான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தேனம்மை லக்‌ஷ்மணன் அவர்கள். புதுவருடத்தைய முதல் வருகையா?

   மிளகாய்ப்பொடி ரோஸ்ட்தான் எல்லார் வீட்டிலும் வழக்கம். நான் இந்தத் தளத்தில் எழுதியிருக்கிற உருளை கூட்டும் செஞ்சு பாருங்க. ரொம்ப நல்லா இருக்கும்.

   நீக்கு
 19. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 20. இப்படி நீங்கள் உருளை துண்டங்கள் போட்டது போட்டு மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் பொடி போட்டு எண்ணெயில் வதக்கி காரப்பொரியல் செய்வேன். எங்கள் வீட்டுக் குழந்தைகள், பெரியவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.
  நீங்கள் செய்த முறையும் நன்றாக இருக்கிறது, ஒரு நாள் இது போல் செய்து கொடுக்கலாம்.


  //ஆனா என் மனசுல அவங்க ‘வாலண்டியராப் பாராட்டலையே’ என்று நினைக்கும்போது, நான் மட்டும் மனைவி செய்த சமையலை ஆரம்ப காலங்களில் பாராட்டியிருக்கிறேனா என்று யோசித்து என்னை சமாதானப்படுத்திக் கொள்வேன்.. ஹா ஹா ஹா)//

  உண்மையை ஒத்துக் கொண்டது மகிழ்ச்சி.
  பாரட்டுவேண்டி இருக்கிறது ஒவ்வொருக்கும் என்பதை உணர்ந்தால் சரி.
  இப்போது பாராட்டதயக்கம் தான் உங்களுக்கு.
  பாராட்டுங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.


  படங்கள் , செய்முறை விளக்கம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி அரசு மேடம்... வருகைக்கும் கருத்திற்கும்.

   உண்மையைச் சொல்ல எதுக்கு வெட்கம்? ஆனாலும் பாருங்க... பாராட்டறது என்பது என் அளவில் ரொம்பக் கம்மிதான். அதுனால, பசங்களைப் பாராட்டினால், அவங்க 'இது என்ன புது வழக்கம்... இவர் பாராட்டறாரா இல்லை கிண்டல் பண்ணறாரா' என்று பார்ப்பார்கள். என் மகளை அவளின் பல திறமைகளுக்கு (அது ஒரு ஸ்பார்க் மாதிரி அப்போ அப்போ வெளிப்படும்) சின்ன வயசிலிருந்தே பாராட்டுவேன், ஆனால் கடைசி வரியாக 'என்னைப் போல' என்று சேர்த்துக்குவேன். ஹா ஹா.

   நீக்கு
  2. பாராட்டுவது கேட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.
   'என்னைப் போல; என்று சேத்துக் கொள்வதில் தப்பே இல்லை.
   உங்களைப் போல் பன்முகதிறமையாளிதான் மகளும்.
   வாழ்த்துக்கள்.

   நீக்கு
 21. உ.கி. கிழங்கு கறி குறிப்பும், படங்களும் அபாரம்.
  உங்களிடமும், அதிராவிடமும் எனக்கு பிடித்தது மற்றவர்களுக்கு புரியுமோ புரியாதோ என்றெல்லாம் கவலைப்படாமல் திருத்தி கொண்டு, திருவமாறிய பிறகு,கண்டருள பண்ணி என்றெல்லாம் எழுதி உங்களின் பிரத்யேக மொழியை நாங்களும் புரிந்து கொள்ளும்படி செய்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் அவர்கள்.

   புதுசு புதுசா ஒவ்வொருத்தரோட ப்ரத்யேக வார்த்தைகளையும் தெரிஞ்சுக்கோங்க. இந்த 'கண்டருளப் பண்ணுவது' நான் ரேவதி நரசிம்ஹன் அவர்களிடம் களவாண்ட சொல். (நாங்கள் அமிஸ்யை பண்ணுவது என்றுதான் சொல்லுவோம்)

   முதலில் ஸ்ரீராம் அந்தக் காலத்தில் முதன் முதலில் எழுதினபோது, இந்த மொழிலயே வெளியிட்டுவிடவா என்று கேட்டார். நானும் ஒரு ஆர்வத்தில், அப்படியே போட்டுடுங்க, புரியாதவங்களுக்கு விளக்கிடறேன்னு சொன்னேன்.

   நம்ம, நம்ம வழக்கத்தைத் தொடரும்போது, அதை சின்னவங்க சுலபமா அப்சர்வ் பண்ணி கத்துக்குவாங்க (நாம இப்படிச் சொல்லுன்னு சொன்னா அதைச் செய்யமாட்டாங்க. நாம செய்வதுதான் அவங்களுக்குப் புரியும்). ஒரு தடவை கிச்சனில் புழங்கும் பாத்திரத்தை எடுத்து என் பெண்ணிடம், அவள் சாப்பிடுவதற்குக் கொடுத்தேன். அவள் உடனே புருவத்தை நெறித்து இது என்ன புது வழக்கம்... அம்மா இப்படி பண்ணமாட்டாளே என்றாள். அதனால என் மனைவி தொடரும் பல வழக்கங்கள் (எங்களுக்கென்றே வீடுகளில் பிரத்யேகமாக உள்ளது) அப்படியே அவளும் கவனித்துவந்திருக்கிறாள். Hopefully தொடருவாள்.

   நீக்கு
 22. ஆஆஆ தலைபுப் பார்த்து... உருளைக் கிழங்கில் காரம் ஏது?:).... எனப் படிச்சிட்டேன்ன் ஹா ஹா ஹா...

  இது நல்லா வந்திருக்கு..... ஈசியும்தானே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அ(ட)ப்பாவி அதிரா... இந்த மாதிரியும் பிரித்துப் படிக்கலாமா? எனக்குத் தோணாதது உங்களுக்குத் தோன்றியிருக்கே..

   பிரில்லியண்ட்.

   நீக்கு
  2. யுவர் ஆனர் அதில க தான் போட்டிருக்கார் நெல்லை! கா அல்ல எனவே க என்று வாசிக்கவும் (ஆஹா! அப்துல் ஹமீது வேறு நினைவுக்கு வந்துவிட்டார்!!!)

   டமில்ல டி ஆக்கும்!!!! ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. கூடவே க ரே.... கார அல்ல டமில்ல டி கம்பபுலவரே!!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 23. நானும் செய்வேன், உங்கள் தேங்காய்ப்பூவுக்குப் பதில் கச்சானும் கடலைப்பருப்பும் சேர்த்து, மல்லி சேர்க்காமல் நன்கு வறுத்து அரத்துப் போடுவேன்... நீங்க பச்சையா அரைச்சிருக்கிறீங்க....
  இன்று ஓவராப் பேச முடியல்லியே:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா... உங்கள் செய்முறையை ஒரு முறை முயற்சிக்கிறேன். எனக்கென்னவோ... உருளையில், வேர்க்கடலை, பருப்புலாம் சேருமா என்று சந்தேகம்... அதையும் பார்த்துவிடலாமே... நன்றி.

   நீக்கு
  2. நெல்லை உ கி யில் வறுத்த கச்சான்/வேர்க்கடலை பொடித்துப் போட்டுச் செய்யறாங்க...நல்லாருக்கும்...அதிரா சொல்லியிருப்பது போல...

   மஹாராஷ்டிராவில் சாபுதானா கிச்சடி செய்யறாங்களே அதுல உகி போட்டும் செய்யறாங்களே அதோட கடலையும் போடுவாங்கல்லியா பொடித்தும் அல்லது அப்படியேவும் அப்படியான உகி கடலை சேர்த்த டேஸ்ட் நல்லாருக்கும் நெல்லை...நிலக்கடலை பொடி நிறைய டிஷஸ்ல சேர்க்கறாங்க....நான் பாகற்காய் செய்யும் போது கூடச் சேர்ப்பேன் பொடி சேர்த்துச் செய்யும் போது பருப்புகள் பொடித்துப் போடுவது....நல்லாவே இருக்கு

   கீதா

   நீக்கு
  3. நான் வரும் போது நீங்க வர முடியலை அதிரா நீங்க வரும் போது நான் வர முடியலை....இல்லைனா இன்று நெல்லைய ஒரு பிரட்டல் செஞ்சுருக்கலாம் ஹா ஹா ஹா ஹா ஹா...

   கீதா

   நீக்கு
  4. கீதா ரங்கன்.... நீங்க சொல்றதைப் பார்த்தால், அதிரா எனக்குப் பயந்து எஸ்கேப் ஆயிட்டாங்கன்னு சொல்றீங்களா?

   நீங்க விரைவில் ஒரு இனிப்பு செய்து எ.பிக்கு அனுப்புங்க. இனிப்பு எழுதி (கேக் இல்லை) ரொம்ப நாளாகிவிட்டது.

   நீக்கு
  5. அரைக்கும்போது பவுடர் ஆக்கிடக்கூடாது, ரவ்வைப் பதமாக கர கர என இருக்கோணும்:)

   நீக்கு
  6. நெல்லை ஹா ஹா ஹா ஹா அப்படியும் இருக்கலாம்!!!! பாருங்க வந்தும் கமென்டைப் பார்க்காம கர கரன்னு சொல்லிட்டு ஓடி போயிட்டாங்க...இன்று பிஸி போல....பேச முடியலைன்னு சொல்லிருக்காங்களே!!!

   நெல்லை ஸ்வீட்டு ரெசிப்பிக்கு என்ன குறை நிறையவே இருக்கு...ஆனால் இப்ப செய்யறது கம்மியாயிடுச்சே...சென்னைனா மக்கள் யாராவது கேப்பாங்க...செஞ்சா அனுப்ப முயற்சி செய்யறேன்...அது சரி நீங்களும் தான் இப்ப ஸ்வீட் சாப்பிடறது இல்லையே...ரஸத்துல வெல்லம் போட்டாலே ஸ்வீட்டுன்னு தள்ளி நிக்கறதாகிருக்கே இப்ப!! ஹா ஹா ஹாஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  7. ///நீங்க விரைவில் ஒரு இனிப்பு செய்து எ.பிக்கு அனுப்புங்க. இனிப்பு எழுதி (கேக் இல்லை) ரொம்ப நாளாகிவிட்டது.///
   எழுதி அனுப்போணுமோ? அப்போ கீசாக்காட கிச்சின் கோனர் மாஆஆஆஆறியே இருக்குமோ:)... அவதான் படம் போடாமல் எழுதிட்டே இருப்பாவே:)...

   நீக்கு
  8. என்ன அதிரா.. இப்படிச் சொல்லிட்டீங்க. அவங்க திரிபாகம்தான் சென்ற வருடம் ரொம்ப நாள் ஓடிய படம். வெள்ளி விழாலாம் கொண்டாடி எங்க வீட்டுக்கு ஃபோர்மாகம் இனிப்பு செஞ்சு அனுப்பியிருந்தாங்களே.

   கீதா ரங்கனைப்கு படம் அனுப்ப முடிலனா நான் செய்து படங்கள் அனுப்பி அவங்க எழுத்துல வரும்.

   நீக்கு
  9. கீதா ரங்கன்... திரும்பவும் இனிப்பு கன்னா பின்னான்னு சாப்பிட்டு வெள்ளி காலைலேர்ந்து இனிப்பு சாப்பிடறது இஸ்டாப்பு, exception கோவில் பிரசாதம்.

   ஆனா, குரங்கை நினைக்காம மருந்து சாப்பிடணும்னு சொன்னபிறகு குரங்கு மட்டுமே நினைவுல இருக்கற மாதிரி, இனிப்பு மட்டுமே கண்ணில் நிழலாடுது. ஹா ஹா ஹா

   “மக்கள்ஸ்” ல நானும் ஒருவனா?

   நீக்கு
 24. புதுசா இருக்கு. செஞ்சு பார்த்திடலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு நாள் செஞ்சு பார்த்திடுங்க ராஜி... நல்லா வந்ததுன்னா உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். சரியா வரலைனா, 'ஏதோ கோபம் போலிருக்கு, சமாதானப்படுத்துவோம்'னு உங்களுக்கு பரிசுகள் கிடைக்கலாம். எதுவா இருந்தாலும் உங்களுக்கு நல்லதுதானே... நன்றி..

   நீக்கு
 25. நன்றாக இருக்கிறது கரேமது. பொடிபோட்டுச் செய்யும் கரேமதில் கறிப்பொடி போட்டுச் செய்வதுண்டு. அது பருப்புகளும் சேர்த்தது. இதில் தேங்காய்,மிளகு சீரகம் அதிகப்படி. தோலுடன் திருத்திய உ.கிழங்கு. படங்களெல்லாம் ஸூப்பர். உங்களுடைய பாலிஸியையும் எழுதியிருக்கிறீர்கள். சின்ன உருளை தோல் சற்று பசுமை நிறத்துடன் வெளிநாட்டில் கிடைக்கும். அதை இரண்டாக்கி சற்று நேரம் வதக்கினால்,வேகவைத்த வேர்க்கடலை ருசியுடன் மிகவும் நன்றாக இருக்கும். இங்கும் சிலஸமயம் தோல் மெலிதான உ,கிழங்கைப் பார்க்கும்போது அந்த ஞாபகம் வரும். இப்போது உங்கள் கரேமதுவும் மனதில்ப் பதிந்து விட்டது. சும்மா எழுதுவதற்கு மட்டிலும் லாயக்கு. நான் அப்படியும் உங்களுக்கு எழுதறேன். அழகா,புதுசா ,தட்டோடு சாப்பாடு. ருசியுங்கள். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதில் போட்டுக்கொண்டிருக்கும்போதே காமாட்சி அம்மா என்றைக்குப் படிப்பார்கள் என்று இப்போ தோணினது. உடனே உங்க பின்னூட்டம்.

   என்ன இப்படி எழுதுவதற்கு மட்டும்தான் லாயக்குனு பட்டுனு சொல்லிட்டீங்க... இத்தனை வருட உழைப்புக்கு இப்போ கொஞ்ச நாள் ஓய்வு கிடைச்சிருக்குன்னு நினைத்துக்கோங்க... பண்டிகைகள்லாம் வருது... வெளி இடங்களிலேயே இருந்ததனால் பொங்கல் வாழ்த்து சொல்ல மறந்துடாதீங்க.

   லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தேன்னு சொல்லி ஒரு இனிப்பு இடுகையோடு மீண்டும் எழுதும்போது ஆரம்பிங்க.

   "மலை போலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கிவிடும்" என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள்தானே

   நீக்கு
 26. உருளைக்கிழங்கு எங்களுடைய வீட்டில் பசங்களுக்கு ரொம்பப் பிடிக்கும், ஆனால் இந்த பாணி போணியாகாது. காரணம் சின்னவருக்கு மிளகு பிடிப்பதில்லை, மிளகு ரசம் கூட சாப்பிடுவது இல்லை :(. மிளகு விஷத்தை முறிக்கும், என் சமையலையும் சேர்த்து என்று ஆசை காட்டினாலும் கூட!! :)
  காரப்பொடியும் சிறிது சாம்பார் பொடியும் போட்டு இப்படிச் செய்வதுண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மிடில் கிளாஸ் மாதவி.... எங்கள் வீட்டிலும் பசங்களுக்கு சீரகம், மிளகு பிடிக்காது. இது அநியாயம் இல்லையோ.

   எனக்கு மிளகு ரொம்பப் பிடிக்கும். நான் செய்யும்போது பசங்க தூரப்போடக்கூடாதுன்னு கொஞ்சம் பொடித்துவிடுவேன். அதுனாலயும் அவங்களுக்கு இன்னும் பிடிக்காது. வெண்பொங்கல்னா, வேலை மெனக்கெட்டு மிளகைப் பொறுக்கி தூரப்போடுவாங்க.

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....

   நீக்கு
 27. நெல்லை தட்டில் இருக்கும் தயிர்சாதம் யும்மி யும்மி! யா இருக்கு பார்க்கவே! அப்படியே எடுத்துச் சாப்பிடனும் போல இருக்கு...நல்ல க்ரீமியா இருக்கு பார்க்க...சூப்பர் நெல்லை நளன்...

  இங்கு ஆண்கள் நளன் நான் அறிந்தவரை கௌ அண்ணா, ஸ்ரீராம், நெல்லை, மதுரைதமிழன்....கலக்குங்கப்பா!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

   அது சுட சுட சாதம், அதற்கு மேல் புளிசேரி (தேங்காய், மிளகாய், தேவைனா சீரகம் அரைத்து மோரில் கலக்கி பதைக்க வைப்பது). எனக்கு ரொம்பப் பிடித்தது.

   இந்தப் புளிசேரி, சேவைக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

   ஆனா பாருங்க... சென்னைல நல்ல சேவை கிடைப்பதில்லை.

   //ஆண்கள் நளன் தான்// - உண்மை. அப்படி நினைக்கறவங்க சாப்பிட்டுப் பார்க்காதவரை (னு என்னைப் பொறுத்தவரைல சொல்லலாம். நான் பண்ணுவது, சில சமயங்களில் நல்லா வராது)

   நீக்கு
  2. //ஆனா பாருங்க... சென்னைல நல்ல சேவை கிடைப்பதில்லை.//


   சேவைனா இடியாப்பம் aka நூலாப்பம் தானே ..இல்லைன்னா சந்தகைன்னு மாவை ஆவியில் ஸ்டிம் செஞ்சு சந்தகை அச்சில் பிழியறதா .?

   நான் வீட்டில் elite ப்ராண்ட் வாங்கி இடியப்பம் செய்றேன் நல்லா வருது .

   நீக்கு
  3. நெல்லை சேவைக்கு புளிசேரி சூப்பரா இருக்கும்..எனக்கு புளிசேரி ரொம்பப் பிடிக்குமாக்கும்!!!

   எதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....தாளிச்ச தயிர்சாதம்னு நினைச்சுட்டேம்பா ஸாரி சாரி!! இதுக்குத்தான் படத்தப் பார்த்து ஜொள்ளக் கூடாதுன்னு!!! கண்ணால் பார்ப்பதும் பொய் போய்...காதால் கேட்பதும் பொய்..போய்..தீர விசாரிப்பதும் பொய் போய் இப்ப டேஸ்ட் பார்த்தலே மெய்ன்னு ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  4. ஏஞ்சல் சேவை வேற, இடியாப்பம் வேற ப்ராஸஸ்..

   சேவை புழுங்கலரிசியில (எங்க பிறந்த வீட்டு பாஷைல சொன்னா டொப்பி அரி ல செய்யறது...நல்ல வாசனை தேங்காய் எண்ணெய்...வாங்க நான் செஞ்சு தரேன் ஏஞ்சல்...) ஊற வைச்சு அரைச்சு வாணலில தேங்காய் எண்ணெய் போட்டு இந்த மாவைப் போட்டு சுருள கெட்டியாக்கி, (இல்லைன்னா அப்படியே மாவை இட்லி போல செஞ்சு கீதாக்கா செய்யறது போல...ஆனா நான் இப்பவும் கொழுக்கட்டை செஞ்சே பிழியறேன் அது அப்படியே பழகிடுச்சு...)
   கொழுக்கட்டை செய்து ஸ்டீம் பண்ணிட்டு சேவை நாழில பிழியறது..

   இடியாப்பம் இதுக்குன்னு பச்சரிசி ஊற வைச்சு நிழல்ல உலர்த்தி கொஞ்சம் காஞ்சதும் ஈர அரிசியை நல்லா திரிச்சு வாணலில போட்டு கொஞ்சமா வறுத்து அதாவது மாவை எடுத்து இழை போட்டா கோலம் போட வரனும் அவ்வளவுதான் ஆற வைச்சு....இல்லைனா திரிச்ச மாவை நல்லா காய வைச்சு எடுத்து வைக்கலாம் இல்லைனா அந்த மாவை துணில கட்டி ஸ்டீம் பண்ணிட்டு எடுத்து நல்லா காய வைச்சு...இப்படி பதப்படுத்தின மாவை நல்ல கொதிக்கற தண்ணி விட்டு கிளறிட்டு இடியாப்ப அச்சில் மாவை போட்டு தட்டில் பிழிந்து ஸ்டீம் செய்வது....(என்னிடம் சிலோ மர அச்சு இருக்கு!!! என் அப்பா வழி பாட்டி, அத்தை அப்புறம் அம்மா யூஸ் செஞ்சு எனக்கு வந்துச்சு சீர்!!!!!)

   கீதா

   நீக்கு
  5. கீதா ரங்கன்.. நீங்க இடியாப்பம் பிழியற அச்சைப் பற்றி எழுதியிருப்பதைப் பார்த்தால் ரொம்ப பழைய இடியாப்பமா இருக்கும் போலிருக்கே.

   எனக்கு சேவை ரொம்பப் பிடிக்கும். இதுக்காகவே திருவனந்தபுரத்துல செட்டிலாகணும்.

   இடியாப்பம் அவ்வளவு பிடிக்காது (உங்க தகவலுக்குச் சொன்னேன் கீதா ரங்கன். அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கக்கூடாது பாருங்க)

   Jokes apart, சேவை இடியாப்பம் பண்ணறது கொஞ்சம் கடினமான வேலை. அதுல கடைசில தயிர் விட்டுக்கொண்டு சாப்பிடுவதைப் போல் அநியாயம் வேற எதிலுமில்லை. ஹாஹ்ஹா

   நீக்கு
  6. ஆஆஆஆஆஆஆ தயிரா?!!! ஆராக்கும் அப்படிச் சாப்பிடுவது...

   //கீதா ரங்கன்.. நீங்க இடியாப்பம் பிழியற அச்சைப் பற்றி எழுதியிருப்பதைப் பார்த்தால் ரொம்ப பழைய இடியாப்பமா இருக்கும் போலிருக்கே.// ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என் இடியாப்ப அச்சை புகைப்படம் எடுத்து போடறேன்...அப்ப தெரியும்...அந்த மரம் என்னா மரம் தெரியுமோ ரொம்ப ஸ்மூத்தா இருக்கும்...எத்தனை வருஷமா இருக்கு பாருங்க புராதனச் சொத்தாக்கும்...

   நெல்லை நீங்க இடியாப்பத்துக்கு இலங்கை சொதியோடு சாப்பிட்டதில்லைன்னு நினைக்கிறேன் அதான் பிடிக்கலைனு சொல்றீங்க....அந்தக் கோம்போ சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க...(.இதுவும் உங்க தகவலுக்காகச் சொன்னேன் ஹா ஹா ஹா)

   சேவை இடியாப்பம் எல்லாம் ஒன்னும் கடினமான வேலையே இல்லை நெல்லை....

   கீதா

   நீக்கு
  7. ஏஞ்சல் நிரப்பாரா இடியாப்ப மாவும் சூப்பரா வரும்...

   கீதா

   நீக்கு
  8. நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சென்னைல நல்ல சேவை கிடைக்கலையா!! நான் அங்க இருந்தவரை ஜஸ்ட் 25 நிமிஷ நடை தூரத்துல இருந்துட்டு நல்ல சேவை கிடைக்கலைன்னு சொல்றீங்களே!!! சேவையுடன் சேவையும் கிடைத்திருக்கும்!!!

   கீதா

   நீக்கு
 28. /இதனை மிக்சில நல்லா பொடிபண்ணிக்கோங்க. நான் மிக்சரின் மூடியை எடுக்கமாட்டேன், அந்தப் பொடியை உபயோகப்படுத்தும்வரை. அப்போதான் வாசனை அப்படியே இருக்கும். (புது டிப்ஸ்)//

  அப்போ திறந்து பார்க்காம எப்பிடி பொடியா அரைஞ்சிருக்குன்னு கண்டுபிடிக்கிறது ???


  அப்புறம் இதே பொடி மிக்சிங் தான் நான் கொக்கும் ரசத்துக்கு சேர்ப்பது தேங்காய் ஒரு துண்டுதான் அப்புறம் எங்க மேடம் மியாய் காரம் ஏது னு படிச்சிருக்காங்க ஆனா மீ கார அமுது என்று படிச்சேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னடா இது இந்த நெல்லைத் தமிழனுக்கு வந்த சோதனை.

   மிக்சி ஜாரை திறந்தே வச்சிருந்தால் வாசனைலாம் போயிடும்னு சொன்னா, ஏஞ்சலின் இதுமாதிரி கேட்கறாங்களே..

   நீக்கு
 29. //(பிரிந்துபோக நினைத்தாலும் பிரிந்துபோக முடியாதபடி) லண்டன் தயவில் வாழ்பவர்களுக்காக///
  ஹாஹா ஸ்கொட்லான்ட் கண்ணில் இது படல்லைன்னு நினைக்கிறேன் :)))))

  அப்புறம் நெல்லைத்தமிழன் எங்கம்மா திருநெல்வேலி இல்லை ஆனா நீங்க யூஸ் பண்ற பல சொற்களை அவங்க சொல்லி கேட்டிருக்கேன் பாவக்கா பிட்லை ,சாத்தமுது , தான் , இப்படி பேசுவாங்க ...

  .நாங்கல்லாம் இப்போ உங்ககிட்ட கத்துக்கிட்ட மாதிரி யாரோ எங்கம்மாக்கு சமையல் டியூஷன் எடுத்திருக்காங்கன்னு தெரியுது :).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னிக்கு ஸ்காட்லாந்து யார்டு ரொம்ப பிஸி போல அதான் பலதும் கண்ணுல படலை!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. ஸ்கூல் தொடங்கிட்டுது இன்று கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

   நீக்கு
  3. ஏஞ்சலின்... பக்கத்து வீட்டு காரங்கட்ட பேசியும் இந்த மாதிரி வார்த்தைகள் வந்துடும்.

   நான்கூட நிறைய தடவை “இன்ஷா அல்லா”னு உபயோகப்படுத்துவேன். சில சமயம் இதைச் சொல்லக்கூடாத இடத்திலும் பழக்க தோஷத்துல வந்துடுது.

   நீக்கு
 30. நான் இது வரைக்கும் இந்த மாதிரி பொடி அரைச்சு செஞ்சதில்லை நிச்சயம் விரைவில் செஞ்சு பார்த்து சொல்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏஞ்சல் உங்க புடலங்கா தோசை செஞ்சு சூப்பர்!!!

   தோசை படம் மட்டும் எடுத்துருக்கேன் எப்ப பதிவு போடறேனோ அப்ப வரும் ஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  2. /////Angel7 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 5:30
   நான் இது வரைக்கும் இந்த மாதிரி பொடி அரைச்சு செஞ்சதில்லை நிச்சயம் விரைவில் செஞ்சு பார்த்து சொல்றேன்////
   ஏதோ மற்ற ஸ்டைல்ல எல்லாம் செய்திட்ட மாதிரியே ஒரு பேச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... ஹையோ நேக்கு பெட் அடிக்கப்போகுதூஊஊஊ:)..

   நீக்கு
  3. அதிரா.. நாங்கள்லாம் உங்களுக்குப் பயந்தாலும், நீங்க பெல் சத்தம் பார்த்துப் பயப்படறீங்களே.. படிக்கவே சந்தோஷமாக இருக்கு

   நீக்கு
  4. அப்புறம் அதிரா... ஏஞ்சலினை ரொம்ப சீண்டாதீங்க. அப்புறம் கத்தரி தோசை, ஸ்டிராபெர்ரி தோசை, உருளைக்கிழங்கு தோசைனு வரிசை கட்டி வெளியிட்டுடுவாங்க.

   ஏகப்பட்ட ரெசிப்பிகள் அவர்கிட்ட இருந்து வரத் துடிச்சிக்கிட்டிருக்கு

   நீக்கு
  5. வாங்க ஏஞ்சலின். நீங்க நிச்சயம் செஞ்சு பார்ப்பீங்க. எனக்குத் தெரியும்.

   பள பள உருளைகள் உங்க வீட்ல விளையுது. டிரை பண்ணுங்க. காரம் கம்மியாப் போட்டுக்கோங்க.

   உங்களுக்கு உருளை பொடிமாஸ் தெரியும் இல்லையா? வெங்காயம்லாம் சேர்க்காம எலுமிச்சை பிழிந்து எங்கம்மா செய்வாங்க. அதுவும் நல்லாருக்கும்

   நீக்கு
  6. நீங்க பெல் சத்தம் பார்த்துப் பயப்படறீங்களே.. படிக்கவே சந்தோஷமாக இருக்கு//

   ஹா ஹா ஹா ஹா நெல்லை பின்ன பூனைக்கு பெல் நா பயம் தானே!!! நாம பெல் கட்டிடுவோமோன்னு!!

   கீதா

   நீக்கு
  7. உங்களுக்கு உருளை பொடிமாஸ் தெரியும் இல்லையா? வெங்காயம்லாம் சேர்க்காம எலுமிச்சை பிழிந்து எங்கம்மா செய்வாங்க. அதுவும் நல்லாருக்கும்//

   ஹையோ நெல்லை அதே அதே ரொம்பவே நல்லாருக்கும்...நாவூறுது...ரொம்ப நாளாச்சு செஞ்சு... இப்படி கிளப்பி விடுறீங்களே..நன்றி நன்றி நினைவூட்டியமைக்கு..அதுவும் ப மி போட்டு கடைசிய எலுமிச்சை பிழிந்து கொஞ்சம் கொத்தமல்லியும் தூவி....என் பையன் அதை சின்ன வயசுல உருளைக் கிழங்கு உப்புமான்னு சொல்லுவான்...

   கீதா

   நீக்கு
  8. உருளைக்கிழங்கு தோசைனு வரிசை கட்டி வெளியிட்டுடுவாங்க.//

   ஹா ஹா ஹா ஆனா நெல்லை உகி தோசை சூப்பரா இருக்கும்....

   கீதா

   நீக்கு
  9. அதே போல மரச்சீனிக்க்ழங்கு தோசை, அடை எல்லாம் செய்யலாம் ...

   கீதா

   நீக்கு
 31. //அப்புறம் கத்தரி தோசை, ஸ்டிராபெர்ரி தோசை, உருளைக்கிழங்கு தோசைனு வரிசை கட்டி வெளியிட்டுடுவாங்க.//

  ஹாஹாஆ :) ஒரு விஷயம் சொல்லிடறேன் ..ஆகஸ்ட் மாசம் பீர்க்கை தோல் /வெறும் பீர்க்கை /நேந்திரங்கா அப்புறம் zucchini தோசை எல்லாம் செஞ்சேன் ..படம் எடுத்தேன் அதுங்கள தேடி போட்டே தீருவேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்தனையோ பிரச்சனைகளை சந்திச்சுட்டோம். இதையும் சந்திச்சுடுவோம்.

   நீக்கு
 32. naaaaannnnn செஞ்சிட்டேன் :) அப்படியே சட்டியோட சுட சுட படமெடுத்து ரசித்து ருசித்த குறிப்புக்களில் சேர்த்தாச்சு .எல்லாமே இருந்தது வீட்டில் எக்செப்ட் curry லீவ்ஸ் ..அதை பெரிசா யூஸ் பண்றதில்லை நான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. https://2.bp.blogspot.com/-PUJHF7vacsY/XDOC_W8ENII/AAAAAAAAQzg/xHdLep39WocJdQ13M14huzNYrLPCObOJgCLcBGAs/s400/20190107_163805-1.jpg

   நீக்கு
  2. ரொம்ப அழகா வந்திருக்கு ஏஞ்சலின். அதுவும் அடுத்த இடுகை வருமுன்.

   பாராட்டுகள். இதை இரயிலில் destination reach பண்ண 15 நிமிடங்கள் இருக்கும்போது எழுதறேன்

   தேவதை கிச்சனில் பகிருங்கள்

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!