புதன், 9 ஜனவரி, 2019

புதன் 190109 : பார்க்க முடியாத ப்ளாக் ஹோலையும் எலெக்ட்ரான்சையும் நம்பும் சிலர் ...

        

ஏஞ்சல் : 
 
1, தம்மடிக்கும் காட்சி ,பியர் வாங்கும் காட்சி ஆண்களை டீஸ் செய்யும் காட்சிகள் போன்றவற்றை பார்க்கும்போது சில நேரங்களில் பெண்கள் தங்களை தாங்களே கேவலப்படுத்திக்கொள்வது போல் தோன்றுகிறது .இது போன்ற காட்சிகள் சினிமாவுக்கு அவசியமா ?



$ காட்சிகள் சினிமாவுக்கு என்ன நிஜ வாழ்க்கைக்கே தேவயற்றவை.

 ஆண்கள் தம்மைக் கேவலப் படுத்திக் கொள்ளலாம் பெண்கள் அப்படிச் செய்ய வேண்டாம் என்பது சமத்துவ சித்தாந்தத்துக்கு ஏற்பாகாது. அசட்டுத்தனம் அடாவடித்தனம் ஆபாசம் யாரானாலும் கேடுதான்.

& அத்தகைய காட்சிகளை தங்கள் படங்களில் சேர்த்தவர்களும் ஆண்களே!   
                 

2, தலைமுறை இடைவெளி இப்போ அதிகமா இருக்கா ? ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் சில பல புரிதல்கள் இல்லாமற்போவதன் காரணம் என்னவாயிருக்கும் ? யாரில் குறை இருக்கு ?
                 
$ தலை முறை என்பது முன்பு வெறும் வயதை மட்டும் வைத்து, தாத்தா மகன், பேரன் என்று நிர்ணயிக்கப் பட்டது போய்,  
படித்தவர்கள் x படிக்காதவர்கள் 
விவசாயி x உத்யோகம் செய்பவர்
வியாபாரி x அரசியல் செய்பவர் என்று மாறி 
பின்னர் அடுத்தடுத்து
கணினி கையாளத் தெரிந்தவர் x தெரியாதவர்
Smart phone உபயோகிப்பவர் x தெரியாதவர் 
இப்படி தலைமுறை இலக்கணம் மாறி விட்டது இப்போதெல்லாம் தலைமுறை இடைவெளியை ஒரு கை விரலில் எண்ணி விடலாம்.

# தலைமுறை இடைவெளி இயல்பு. சூழலில் மாற்றம் காரணமானது.  ஒத்த கருத்துக்கள் தலைமுறை இடைவெளியை மீறி இருப்பது அடிப்படை தர்மத்தின்பால் பிடிப்பு இருப்பதன் அடையாளம். அது தேய்வது காலத்தின் கட்டாயம். யுக தர்மம் என்று சொல்வதை நினைத்துப் பாருங்கள். 

& மாற்றங்கள் என்பது  நீர்வீழ்ச்சி போன்றது. மேலிருந்து கீழே, யார் தயவும் இன்றிப் பாயும். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மூத்த தலைமுறைக்கு தேவை. அது இருந்துவிட்டால், தலைமுறை இடைவெளி அதிகம் பாதிக்காது. முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், மாற்றம் என்பது முன்னேற்றத்தை நோக்கி இருக்கவேண்டும். 

3,adapting ,accepting இதில் நாம் பின்பற்றவேண்டியது எது ?



$ Adapting கு நாம் கொஞ்சம் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்
Acceptance கு மனதைத் தயார் செய்யவேண்டும்.

# நாம் மாறாமல் இளந்தலைமுறையினரின் மனநிலையை அறிந்து இணக்கமாக இருப்பது,  அது எது பற்றியது என்பதைப் பொறுத்திருக்கும்.

& Adapting ourselves to changes. 

4, யாராவது 5 பேரை உங்க வீட்டுக்கு டின்னர் சாப்பிட அழைக்கலாம் என்றால் உங்கள் சாய்ஸ் யார் ? யார் அந்த 5 அதிர்ஷ்டசாலிகள்? ஏன் ? (பதிலில் தமன்னா அனுஷ் கீ.சு போன்றோருக்கு தடை :)


$ த,அ,கீ தவிர்த்த எந்த 5 பேரும். அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பது நான் தீர்மானிப்பதற்கில்லை.

# அபிமான எழுத்தாளர், பாடகர், டாக்டர், ஐ ஏ எஸ் அதிகாரி , இவர்களுடன் ஒரு தீவிரவாதி டெரரிஸ்ட்.

& Angel, Athira, Nellaiththamizhan, Banumathi Venkateswaran, Geetha Sambasivam. அடேடே ஐந்து ஆகிவிட்டதே! மற்றவர்கள் காத்திருங்கள். இவர்களை அழைக்கக் காரணம் : எனக்குக் கேள்விகள் கேட்பவர்களை ரொம்பப் பிடிக்கும்.   

5, இளவயது அதாவது 10-15 வயதில் நீங்கள் அனுபவிக்க முடியாத இயலாமற்போன சந்தோஷம் ஏதாவது இருக்கா ?
அப்படி உங்களுக்கு கூடாமற்போனதை உங்கள் வாரிசுகளுக்கு அனுமதித்தீர்களா ?


# இளவயதில் விட்டுப் போனது "காதல் திருமணம்". அனுமதிக்கவும் வாய்ப்பு வரவில்லை.

& சின்ன வயதில் அனுபவிக்க இயலாமல் போனது அந்தக்காலத்தில் அஞ்சு பைசாவிற்கு விற்கப்பட்ட பால் ஐஸ். அப்போ எல்லாம் இரண்டு பைசா குச்சி ஐஸ்தான் வாங்கி சாப்பிட முடிந்தது. வாரிசுகளுக்கு அதே விலையில் அதை வாங்கித்தர நிச்சயம் இயலாது. பேரன்களுக்கு ஜெம் பாக்கெட் வாங்கிக் கொடுத்ததற்கே எனக்கு ஏகப்பட்ட அர்ச்சனை !


6,உங்களை சமீபத்தில் உருகி அழ வைத்த சினிமா பாடல் எது? ஏன் ? 

       

# எதுவும் இல்லை.
              

& சமீபத்தில் இல்லை. பழங்காலத்தில் ஒரு தியேட்டரில், சாந்தி படம் பார்க்கும்பொழுது, "யார் அந்த நிலவு ...." பாடல் காட்சியில், சிவாஜி விதம் விதமாக புகை விட்டதைப் பார்த்த ரசிகர் ஒருவரும் புகைக்க ஆரம்பித்ததால், அவர் விட்ட புகை என்னை அழவைத்தது! 





7, பழமொழிகள் /sayings அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் உள்ளவையா ?


$ சில.  காலத்தால் மாற்ற முடியாதவை.

# ஆமாம் நிச்சயமாக.

& பழமொழி என்று பெயர் வந்ததற்குக் காரணமே, அவற்றை பழங்களைப் போல அப்படியே சாப்பிடலாம் / பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால்தான். சில பழமொழிகள் தற்காலத்திற்கு சரிவராதவை. உதாரணம் : " நெருப்பில்லாமல் புகையுமா? " அந்தக் காலத்தில், induction stove, microwave oven எல்லாம் கிடையாது. இப்போது அவைகள் நெருப்பில்லாமல் புகைக்கின்றன! 

8, காரணமில்லாமல் காரியமில்லை என்பது என்ன ?


$ ஏன் என்று. கேட்காமல்/தெரியாமல் எந்த ஒரு காரியமும் நடப்பதில்லை.

# காரணமில்லாத காரியம் பற்றி ஏன் ஐயம் எழவேண்டும் ? எதுவானாலும்  மன உந்துதல் மட்டுமாவது காரணமாக இருக்குமே.

& காரணம் = Cause. காரியம் = Action. பலன் = Effect.

1. Cause is the producer of an effect, while an effect is produced by a cause. 2. The cause can be a person, object, situation, or event that can result in something, while an effect is the result of the actions of the person or the outcome of some chain of events that have happened.
(குழப்பிட்டேனா ?) 

9, நம்பிக்கைதானே வாழ்க்கை? பார்க்க முடியாத ப்ளாக் ஹோலையும் எலெக்ட்ரான்சையும் நம்பும் சிலர் இறைவன் இருக்கார்னு நம்ப மாட்டேங்கிறாங்களே ?




$ எலெக்ட்ரானை விட சிறியதாக இருந்தாலும், பிளாக் hole ஐக்காட்டிலும் பெரிதாக இருந்தாலும் நம் பார்வைக்கு எட்டக் கூடியது சில மட்டுமே. கண்ணுக்குத் தெரியாத காற்றையோ காந்த சக்தியையோ கொண்டு, கடவுளை நிரூபிக்க முயல்வது இயலாத காரியம்.  அது நம் உள்ளுறை உணர்வாகவே இருக்கலாம்.
நம் வேண்டுதல்கள் நமக்கு நாமே தயார் செய்யும் பட்டியல் தான்.  தேங்காயோ ஒரு வேளை பட்டினியோ 10 கிமீ நடையோ நம் எந்த வேண்டல்/ஆசைக்கும் விலை ஆகாது.

# நம்புவது என்றால் நிரூபணத்துக்கு அப்பால் என்றுதான் பொருள். இறைவன் என்ற சித்தாந்தத்தை நம்பித்தான் ஆக வேண்டுமா ?

& கண்ணதாசரே ! இங்கே வாங்க! 

(கவியரசு கண்ணதாசன்)

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்
புரிந்துகொண்டால் அவன்தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத்
தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

வெள்ளருவிக் குள்ளிருந்து
மேலிருந்து கீழ்விழுந்து
உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை
நாடிவிட்டால் அவன்தான் இறைவன்

அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே
ஆசைமலர் பூத்திருந்தால்
நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை
நினைத்துக்கொண்டால் அவன்தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்
தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்

கற்றவர்க்குக் கண் கொடுப்பான்
அற்றவர்க்குக் கை கொடுப்பான்
பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனை
பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்

பஞ்சுபடும் பாடுபடும்
நெஞ்சுபடும் பாடறிந்து
அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான்
ஆறுதலைத் தந்தருளும் இறைவன்

கல்லிருக்கும் தேரைகண்டு
கருவிருக்கும் பிள்ளை கண்டு
உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன் - அதை
உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்

முதலினுக்கு மேலிருப்பான்
முடிவினுக்குக் கீழிருப்பான்
உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை
உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்

நெருப்பினில் சூடு வைத்தான்
நீரினில் குளிர்ச்சி வைத்தான்
கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம்
கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்

உள்ளத்தின் உள் விளங்கி
உள்ளுக் குள்ளே அடங்கி
உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர்
உருவமில்லா அவன்தான் இறைவன்

ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றை வைத்து
சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் -அவன்
தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்றுவைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்

சின்னஞ்சிறு சக்கரத்தில்
ஜீவன்களைச் சுற்ற வைத்து
தன்மைமறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத்
தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்

தான் பெரிய வீரனென்று
தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்
நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன்தான்
நாடகத்தை ஆடவைத்த இறைவன்

10, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் மனுஷங்களோட சந்தோஷம் அதிகரிச்சிருக்கா ? இல்லை குறைந்திருக்கா ?



$ science மீது பழி சுமத்துவது நமக்குப் பழகிப் போயிற்று.
தகவல் பரிமாற்றத்துக்கு மொரசுக்கு முன்னரே எம் முன்னோர் முரசு உபயோகித்து வந்தனர் என்கிற வாதங்களை விட்டு இந்தியா சுதந்திரம் பெற்ற போதிருந்த 35 கோடி மக்கள் அறைவயிறு மட்டுமே உண்ண உணவிருந்தது இன்று மூன்று மடங்கு உயர்ந்த ஜனம் குறுகிய நிலப் பகுதியில் வேண்டிய உணவை உற்பத்தி செய்து கொள்வதோ க்ளாஸ்கோ விலிருந்து ஆடை இறக்குமதி செயததை ஒழித்து நம் தேவைகளை ப் பூர்த்தி செய்து கொள்வதும் முன்னேற்றமில்லையா?
சந்தோஷப் படுவதும் படாததும் அவரவர் மனப்பாங்கு.

# வசதி கூடித்தான் இருக்கிறது. சந்தோஷம் நம் மன வளர்ச்சியின் அடிப்டையிலிருக்கும்.

& தொழில் நுட்ப வளர்ச்சி சந்தோஷ அதிகரிப்புதான். இதில் சந்தேகம் இல்லை. 

11, அடம் ,பிடிவாதம் இரண்டும் ஒன்றா இல்லை வெவ்வேறா ?



$ அடம் காரணத்தை ஆதாரமாகக் கொண்டது;  பிடிவாதம் காரணங்களுக்கு அப்பாற்பட்டது.

# அடம் வன்முறை கலந்த பிடிவாதம்.

& அடம் குழந்தைகளின் இயல்பு. பிடிவாதம் சில பெரியவர்களின் பிடிப்பு.

12,கெட்ட எண்ணங்கள் எங்கிருந்து உருவாகுது ?


$ நல்ல எண்ணங்களிலிருந்துதான்...

# கெட்டது "நல்லது" எல்லாமே காம குரோதாதிகளால் எழுகின்றது.

13, பணம் பொருள் அளவில்லாமல் பெற்ற பல பிரபலங்கள் பாதியிலேயே வாழ்வை தொலைத்ததேன் ? 


$ பணம் பொருள் இவை மட்டும் நாம் தேடும் எல்லாவற்றையும் கொடுக்க முடிவதில்லை என்பதால் இருக்கலாம்.

# ஆசை பேராசை மடத்தனம் காரணமாகத்தான்.

& குடி. 

14, சில பாடகர்கள் அவர்களின் இனிய குரலால் மனதை கொள்ளை கொண்டாலும் பெருமளவில் பரிமளிக்க முடியாமல் போனதேன் ?



$ சர்க்கரை இனிப்பு. ஆனால் மற்ற சரக்குகளுடன் சேர்ந்த சர்க்கரைதானே தின்பண்டமாக இனிக்கிறது? இனிமையான குரல் மட்டும் சங்கீதம் ஆவதில்லை.

# நல்ல இசைக்கு குரலினிமை மட்டும் காரணமல்ல. 

15, இப்போதெல்லாம் நீல வண்ண நிற பதில்களை இங்கே பார்க்க முடிவதில்லையே ? ஏன்? 


$ ஸ்ரீராம் மேலே இருப்பவை எல்லாவற்றையும் நீல வண்ணத்தில் போடுங்கள்.

# இப்போது பார்க்கிறீர்கள் !

& வாரத்தில் ஒருநாளாவது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் அவருக்கு அன்புக் கட்டளை இட்டிருக்கோம்! (என்று பொய் சொல்கிறேன்!) 
               


83 கருத்துகள்:

  1. கேள்வி பதில் நிறைய இருக்கு. வரேன் பொறுமையா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க.... நான் பங்களாதேஷ் வனவிலங்குப் பூங்காவைப் பார்த்துட்டு சிவா தாமஸ் அலியைச் சந்திச்சுட்டு வந்தேன்!

      நீக்கு
    2. பட்டாபிராமன் ஸாரின் சிந்தனைச்சிதறல் பக்கம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க அதிரா. என்ன ஆச்சர்யம் இந்த நேரத்தில்....

      நீக்கு
  3. கீதா லேட்டூஊஊஊஊ ஊஊஊஊஊஉ லலலாஆஆஆஆ:).... ச்சும்மா எட்டிப் பார்த்தேன் நாளை வருகிறேன்:).. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்_()_

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம். கீதாவுக்கு ஜுரம். அதுதான் காணோம்.

      நீக்கு
  4. ஆஹா... எத்தனை கேள்விகள். இன்றைக்கு ஏஞ்சல் அவர்களது கேள்விகள் மட்டும் தானா.... கேள்விகள் கேட்க க் கேட்கத் தான் பல விஷயங்களை தெரிந்து கொள்ள உதவும். பதில்கள் அனைத்தும் சிறப்பு.

    கண்ணதாசனின் கவிதை வெகு சிறப்பு. அர்த்தம் பொதிந்த கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்விகள் ஏஞ்சல் கேட்கும் அளவு வேறு யாரும் கேட்கவில்லை!!!

      நீக்கு
    2. நன்றி சகோ வெங்கட் அண்ட் ஸ்ரீராம் :)

      அது தொட்டில் பழக்கம் :) சின்ன வயசில் ரொம்ப கேள்வி கேட்டு ஒரு கட்டத்தில் வாயை திறந்தா அவ்ளோதானனு மிரட்டி வச்சிட்டாங்க . அப்புறம் இப்போதான் வசமா நாலுபேர் மாட்டியிருக்காங்க :) விடுவேனா இந்த சான்சை .

      நீக்கு
  5. கீதாஜி நேற்று ஜூரம் என்று சொன்னாரே... Take care கீதாஜி.

    பதிலளிநீக்கு
  6. சிகரெட் புகை - எரிச்சல் தரும் பழக்கம்.

    பதிலளிநீக்கு
  7. தி கீதாவும், துரையும் ஆரம்பிச்சு வைக்காத பதிவும் ஒரு பதிவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ரெண்டு பேருடைய உடல், மனம் நலமடையப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ தப்பித் தவறி முதல்ல வந்துட்டேன். ஹாஹா...

      கீதாஜி/துரை இருவரும் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. Oh!!!!!!! sorry venkat! Did not mean you. :))))))) Hope you will understand. :)

      நீக்கு
    3. //Geetha Sambasivam9 ஜனவரி, 2019 ’அன்று’ முற்பகல் 6:18
      தி கீதாவும், துரையும் ஆரம்பிச்சு வைக்காத பதிவும் ஒரு பதிவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ரெண்டு பேருடைய உடல், மனம் நலமடையப் பிரார்த்தனைகள்.///

      வாங்கோ வெங்கட் மற்றப் பக்கம் பிடிங்கோ.. ஸ்ரெயிட்டாஆஆஆஆஆஆ காவேரியிலதேன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கீழ விழுந்திட்டாவே கெதியில நலமாகோணும் என நேர்த்தி எல்லாம் வச்சிருக்கிறேன்ன்.. இது என்னடாண்ணா....:))..

      ஒருவருக்கு உடல் நலமில்லை என்றால் திருப்பதிக்கு வந்து மொட்டை போடுவேன்ன்..:)).. ஆண்டாள் ஆனைப்பிள்ளைக்கு வாழைக்குலை வாங்கிக் குடுப்பேன் என நேர்த்தி வைப்பதை விட்டுப்போட்டு இங்கின வந்து ட்றாமா பண்ணிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      கெக்கூ..கெக்கூ..கெக்கூ.. இது அதிரா இருமுறேனாக்கும்:).. மீக்கும் 7 நாளாக காச்சல் எனச் சொல்லிப் பார்க்கிறேன்ன் ஒரு பூஸ்குட்டிஊடக் கவனிக்குதில்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ஆஆஆஆஆ புளொக் ஆடுதே.. கீசாக்கா லாண்டிங் போல.. வெங்கட் ஓடுங்கோ ஓடுங்கோ.. ஹரிதுவாரில குதிச்சிடுங்கோ.. மீ ஆல்ரெடி/ஓல்ரெடி தேம்ஸ்லதான் நிற்கிறேன்ன்ன்ன்ன்:))

      நீக்கு
  8. சில கேள்விகளுக்கு $ பதில் இல்லை. டாலர் மதிப்புக் கூட என்பதாலா? கேள்விகளும், பதில்களும் சுவாரசியம். ஏஞ்சல் ஒட்டுமொத்தக் குத்தகை எடுத்திருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா ஆக்சுவலி நானா வியாழ கிழமை பார்த்தப்போ யாரும் கேள்வி கேக்கலை அதான் ஏஎப்படி கௌதமன் சாரை ரிலாக்ஸ்ட்டா விட்டு வைக்கலாம்னு கேள்விகளை உருவி எடுத்து கேட்டுட்டேன்

      நீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

    //மாற்றங்கள் என்பது நீர்வீழ்ச்சி போன்றது. மேலிருந்து கீழே, யார் தயவும் இன்றிப் பாயும். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மூத்த தலைமுறைக்கு தேவை. அது இருந்துவிட்டால், தலைமுறை இடைவெளி அதிகம் பாதிக்காது. முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், மாற்றம் என்பது முன்னேற்றத்தை நோக்கி இருக்கவேண்டும். //

    அருமையான பதில்.

    பதிலளிநீக்கு
  12. ,// நம்பிக்கைதானே வாழ்க்கை? பார்க்க முடியாத ப்ளாக் ஹோலையும் எலெக்ட்ரான்சையும் நம்பும் சிலர் இறைவன் இருக்கார்னு நம்ப மாட்டேங்கிறாங்களே ?//

    நல்ல பதில்.

    பதிலளிநீக்கு
  13. கண்ணதாசன் பாடல் எனக்கு பிடித்தது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. கீதா , சகோ துரைசெல்வாராஜூ இருவருக்கும் உடல்நலம் சரியில்லையா?
    குளிர் அதிகமோ?
    உடல் நலம் பெற பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  15. //அத்தகைய காட்சிகளை தங்கள் படங்களில் சேர்த்தவர்களும் ஆண்களே//

    ஸூப்பர் பதில் ஜி மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான கேள்விகள், அட்டகாசமான பதில்கள். நீங்கள் கேள்வி பதில்களைத் தொடர்ந்து விவாதத்திற்கான டாபிக்குகளை கொடுத்து வந்தீர்களே?, என்ன ஆச்சு, நிறுத்தி விட்டீர்கள்?

    பதிலளிநீக்கு
  17. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ, வாங்கோ, சௌக்கியமா?

      நீக்கு
    2. வாங்கோ.. சௌக்யம் தான்...

      அவ்விடத்லேயும் க்ஷேமம்..சுபம்.. லாபம் தானே!...

      நீக்கு
  18. சில தினங்களுக்கு முன் ரண்டு நாள் காய்ச்சல்...

    ஆறடி உயரத்துக்கு கண்ணாடி ஜன்னல்..
    அதிகமான குளிர் காற்று....

    அறையின் அமைப்பு சரியாகாது.. ஆனாலும், இப்போது உடல் நலம் சரியாகி விட்டது....

    இன்று நள்ளிரவு 1.55 க்கு விழிப்பு வந்து விட்டது...

    எபியைத் தேடினால்..
    இன்னும் பதிவு வெளியாகவில்லை என்று காட்டியது...

    விடியற்காலையில் பார்த்தால் இணையம் இணைக்கப்படாமல் இருந்திருக்கிறது...

    மற்றபடி
    சபரிமலையில் தரிசனம் செய்து விட்டு இன்று அதிகாலையில் வீடு திரும்பி விட்டார் மகன்...

    சாமியே சரணம் ஐயப்பா...

    பதிலளிநீக்கு
  19. //Cause is the producer of an effect, while an effect is produced by a cause. 2. The cause can be a person, object, situation, or event that can result in something, while an effect is the result of the actions of the person or the outcome of some chain of events that have happened.
    (குழப்பிட்டேனா ?)//
    உங்களின் இப்படிப்பட்ட விசுத்தனமான பதிலளிக்கும் காரியத்திற்கு காரணம் ஏஞ்சலின் கேள்விகள் என்பது புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா :) பானுக்கா :) எனக்கும் இப்படி கேள்வி கேட்பது இப்படி பதில் வரும்னு தெரிஞ்சே தான் :) எல்லாம் ஒரு ஜாலிதான்

      நீக்கு
  20. ஆகா..

    கேள்வி கேக்கலை..ன்னா
    சாப்பாடு இல்லை..ன்னுட்டா!..

    ஆகையாலே
    நாமும் கேட்டு வைப்போம்..

    (ஏஞ்சல் அளவுக்கு இல்லைன்னாலும்..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி கேக்கலை..ன்னா
      சாப்பாடு இல்லை..ன்னுட்டா!..//

      ஹா ஹா ஹா ஹா ஹா

      ஆமாம் துரை அண்ணா!!!

      //ஆகையாலே
      நாமும் கேட்டு வைப்போம்..

      (ஏஞ்சல் அளவுக்கு இல்லைன்னாலும்..)//

      அதானே!!!! அண்ணா நாமளும் கேப்போம்...

      கேள்வி கேட்க அப்பால வரேன்...யோசிக்கனுமே.

      கீதா

      நீக்கு
  21. 1) கேள்விக்கும் பதிலுக்கும் எவ்வளவு தூரம்?..

    2) உலகின் மிகச் சிறந்த பதிலாக யுதிஷ்ட்ரர் கூறியதைக் கருதுகிறேன்.. தாங்கள்?..

    3) திருவள்ளுவர் கேட்கும் கேள்விகளுள் உங்களுக்குப் பிடித்தமானது எது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஅ துரை அண்ணனுக்கும் அஞ்சுட காத்துப் பிடிச்சிட்டுதுபோல கிளவி கேய்க்க. ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே கேள்வி கேட்கத் தொடங்கிட்டார்ர்.... ஹையோ இப்போ மீ எங்கின போய்க் குதிப்பேன்ன்ன்:))

      நீக்கு
  22. தலைமுறை இடைவெளி பற்றிய பதில்கள் அருமை...

    அதிலும்
    அநாச்சாரமான காட்சிகளைத் திரைப்படத்தில் சேர்ப்பவர்கள் ஆண்கள் தான் ... ஆயினும் -

    அதீத ஆர்வத்துடன் பங்களிப்பு செய்யும் பெண்களை என்னவென்று சொல்வது?..

    பதிலளிநீக்கு
  23. 15 வது கேள்வி கண்ணில் முதல்ல பட்டுருச்சே...அது நீலவண்ணக்கண்ணன் பத்தி சொல்லிருக்கறதாலயோ?!!!!

    பதில்களை வாசிச்சு சிரிச்சுக்கிட்டே லொக்குகிறேன்..லொக்கிக் கொண்டே சிரிக்கிறேன்...கண்ணுல தண்ணி வேற..ஹா ஹா ஹா செம பதில்...அதுவும் அந்த ப்ராக்கெட்டுக்குள்ள கௌ அண்ணாவின் குறும்பு...ஹா ஹா..

    அப்புறம் அந்த காஸ் அண்ட் எஃபெக்ட்...ஆஆஆஆஆஆஆஆஅ இங்கு சினிமா விசு எப்படி வந்தார்நு அந்த விசுத்தனமான பதிலை வாசிச்சு....சாமியே சரணம்!!!!ஹா ஹா ஹா ஹா ஹா..

    உடம்பு முதல்ல வலை அப்புறம்னு ஸ்ரீராம் சொன்னாலும்...இன்னிக்கு புதனல்லோ எபில எட்டிப் பார்க்காம இருக்க முடியல...கொஞ்சமாச்சும் எட்டிப் பார்ப்போம்ன்னு வந்துட்டேன்...கொஞ்சம் தான்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, நானும் லொக் லொக் தான்.
      இருமி, இருமி முதுகு வலி வேறு.

      நீக்கு
  24. கண்ணதாசன் பாட்டு செம...

    3 வது கேள்வி அடாப்டிங்க், அக்செப்டிங்க் இதற்கான பதில்கள் செம...

    இந்த இரண்டுக்கும் நடுல அட்ஜஸ்ட்டிங்க் உண்டு இல்லையோ!!! இந்த அட்ஜஸ்ட்டிங்கும் சரி அக்செப்டிங்கும் சரி...ரெண்டுமே முழு மனசோடு செஞ்சாதான் இல்லைனா அதுல பிரச்சனைகள் நிறையவே வரும்...அதுவும் குறிப்பா அட்ஜஸ்டிங்க்ல... சில பெண்களுக்கு பாட்டில்ட் அப் ஆகி ஒரு வயசு வரும் போது வெடிக்கும். இல்லைனா அவ்வப்போது சொல்லிக் காட்டத் தோனும்...அக்செப்டன்ஸ் முழுசா வந்துருச்சுனா அடாப்ட் ஆகிடுவோம்.னு தோனும்...

    எல்லா கேள்விகளும் பதில்களும் சூப்பர்...ரசிக்கும்படியாகவும் இருந்துச்சு...

    கீதா

    பதிலளிநீக்கு
  25. இன்னிக்கு கௌதமன் சார் பதில் சொல்ற முறைநாளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று ஆசிரியர்கள் பதில் கூறியுள்ளனர்.

      நீக்கு
    2. எப்படி இருக்கீங்க எஸ் கே? பார்த்து ரொம்ப நாளாச்சு!

      நீக்கு
  26. கேள்வியும் பதில்களும் நல்லா இருக்கு.. மினக்கெட்டு பதில் சொல்லி இருக்கிறீங்க அதுக்கு நன்றியோடு வாழ்த்துக்கள்.

    புதுவருடத்தில கொஞ்சம் மாற்றி அமைக்கலாமோ புதன் கிழமையை எனும் எண்ணம் வருது.. நெடுகவும் கேள்வி பதில் போரடிக்குது... எதுக்கும் அஞ்சுவிடம் இன்னும் கேள்விகள் இருக்கோ இல்லை முடிஞ்சுதோ என ஒரு வார்த்தை கேட்டிட்டு மாற்றுவது நல்லது:).. இல்லாட்டில் வேறு ஆரிடமாவது கேள்வி கேட்க வெளிக்கிட்டிடுவா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா..

    நாங்கள் ஏ லெவல் படிக்கும்போது, கோயில் தேர்த் திருவிழாவிலன்று நைட்.. நல்ல நிலவு வெளிச்சத்தில்.. சாறி கட்டி பூமாலை கட்டி.. ஒரு 7,8 கேள்ஸ்.. அம்மம்மாக் குழல் வாங்கி ஊதிக்கொண்டு ரோட்டால வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம்ம்..

    அப்போது அங்கு வந்த 4,5 அண்ணன்மார்ர்.. “சின்ன வயசில வாங்கிக் குடுத்திருந்தால், இந்த வயசில ஏனடா இதை ஊதிக்கொண்டு போகிறார்கள்?:) “எனச் சத்தமாகச் சொல்லிக் கொண்டு போனது நினைவுக்கு வருது ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புதுவருடத்தில கொஞ்சம் மாற்றி அமைக்கலாமோ புதன் கிழமையை எனும் எண்ணம் வருது.. நெடுகவும் கேள்வி பதில் போரடிக்குது... எதுக்கும் அஞ்சுவிடம் இன்னும் கேள்விகள் இருக்கோ இல்லை முடிஞ்சுதோ //
      அதுல்லாம் அள்ள அள்ள குறையாத அமுத சுரபி தெரியுமோ :) ஆனாலும் கொஞ்சம் மாற்றி அமைக்கலாம் னு தான் தோணுது ..பார்ப்போம் ஆசிரியர்களின் முடிவே இறுதி தீர்ப்பு :)

      நீக்கு
    2. ஒரு டாப்பிக்கை கொடுத்து அதில் நிறைய கேள்வி கேட்கவும் சொல்லலாம் ,இல்லைனா pros and cons கேட்கலாம் இப்படி நிறைய இருக்கு

      நீக்கு
    3. அப்பகூட கேள்வி கேட்கும் ஐடியாத்தானோ கர்ர்ர்ர்ர்ர்ர்:).. கேள்வி கேட்பதுபோல ஒவ்வொருவரும் நகைச்சுவைகள் அனுப்பலாம்...

      நீக்கு
    4. கேள்வி கேட்டாத்தான் ஞானம் அங்கிள் ஆன்டி நம்ம வீட்டுக்கு வருவாங்க

      நீக்கு
  27. கௌதமன் சார் மற்றும் எனது கேள்விகளுக்கு பதிலளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றீஸ் :)

    பதிலளிநீக்கு
  28. /நாங்கள் ஏ லெவல் படிக்கும்போது, கோயில் தேர்த் திருவிழாவிலன்று நைட்.. நல்ல நிலவு வெளிச்சத்தில்//
    அதாகப்பட்டது சுமார் 50 வருடங்களுக்கு முன் என்று அனைவரும் அறிக :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லோ மிஸ்டர்ர்ர்ர் கேய்ட்டாங்களோ? ஆராவது கேட்டாங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... ஒரு சுவீட் 16 இன் இமேஜ் ஐ டமேஜ் பண்ணவென்றே கங்கணம் கட்டிக்கொண்டு. இருக்கிறாபோல கர்ர்ர்ர்ர்ர்:).

      நீக்கு
  29. அருமையான கேள்விகள் அர்த்தமுள்ள பதில்கள்.
    மிக மிக நன்றி எபி ஆசிரியர்களுக்கு.
    சில சமயம் அதுவும் இந்த வயதில் கேள்வி எழுவதில்லை.
    அனுபவங்களே பதிலாகிவிடுகின்றன.

    கேள்வி கேட்பதே மற்றவர்களுக்குப் பிடிப்பதில்லையே அது ஏன்.
    இதுவே என் கேள்வி.
    நீங்கள் பொறுமையாக அலசி ஆராய்ந்து சொல்வது உங்கள்
    அனுபவத்தைக் காண்பிக்கிறது

    மன்னிக்கணும் நீலவண்ணக் கண்ணன் என்றால் யார்.___
    பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம் மிகப் பிடித்த பாடல்.

    அன்பு துரை செல்வராஜு, அன்பு கீதாரங்கன், அன்பு கோமதி அனைவரும் நலம் பெற
    என் பிரார்த்தனைகள்.
    ஓ சொல்லிகொண்டிருக்கும்போதே இருமல் சத்தம் கேட்கிறது. சின்னப் பேரன்.
    23டிக்ரீ ஃபாரன் ஹீட். குளிரில் குல்லாய் போட்டுக் கொள்ள மறுத்தான். இதோ இருமல் வந்துவிட்டது,

    அனைவரின் நலத்துக்கும் என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  30. கண்ணதாசன் அங்கிளின் வரிகள் அத்தனையுமே சூப்பர்ப்

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் மிகவும் அருமையாக உள்ளது. கேள்விகள் கேட்வருக்கும், பதில்கள் சொன்னவர்களுக்கும், பாராட்டுக்கள்.

    /12,கெட்ட எண்ணங்கள் எங்கிருந்து உருவாகுது ?

    $ நல்ல எண்ணங்களிலிருந்துதான். /

    நல்ல பதில். ரசிக்க வைத்தது.

    கண்ணதாசனின் பாடல் வரிகள் அருமை. நம்மை மீறிய ஒரு சக்தி கண்டிப்பாக இருக்கிறது. அதனை நம்முள் உள் கடந்து பார்த்தால். கடவுள் தோன்றுவார். மரா,மரா நாமம் வேடனுக்கு ராமரை காட்டுவித்த மாதிரி உள்கட என்ற நாமம் கடவுளை நம்பாதவருக்கும். கடவுளை காண்பித்து விடும். அருமையான பாடல். தாமதமாக வந்து படித்து கருத்திடுவதற்கு வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  32. கேள்வி பதில்களை ரசித்தேன்.

    கேள்வி கேட்பவர் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆமாம்ல! நான் கவனிக்கவில்லை. எல்லா கேள்விகளையும் கேட்டவர் ஏஞ்சல். காபி பேஸ்ட் பண்ணிய பொழுது பெயர் விட்டுப் போயிடுச்சு. நன்றி நெ த. + சாரி ஏஞ்சல்.

      நீக்கு
    2. அச்சோ :) இதுக்கெல்லாம் எதுக்கு சார் ஸாரி :)

      நீக்கு
  33. ஜோதிடம், ஜாதகம் எவ்வளவு தூரம் நம்பிக்கைக்கு உரியது?

    ஆயிரம் வருடத்தைய பழைய கோவில்களுக்கு, நாம் படித்த மன்னர்கள் வாழ்ந்த இடத்திற்கு, கட்டிய கோவில்களுக்குச் செல்லும்போது வரும் தனிப்பட்ட உணர்வை அனுபவித்திருக்கிறீர்களா?

    ஒரு இடத்திற்கு போகும்போது முன்பின் அறிமுகமில்லாதவரோடு பேச்சு கொடுத்து தகவல் பறிமாற்றம் செய்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  34. காதல் திருமணம் செய்வதை நீங்கள் எந்த ஸ்டேஜுல மனசளவுல ஏத்துக்கிட்டீங்க, ஏற்றுக்கலை? (நமக்கு 20 வயதில் அதனை மனசு ஏற்றுக் கொள்வதும், 50 வயதில் ஏற்றுக்கொள்ளாத்து, அல்லது இன்னும் தீவிரமாக ஆதரிப்பது மாதிரியான)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நமக்கு 20 வயதில் அதனை மனசு ஏற்றுக் கொள்வதும், 50 வயதில் ஏற்றுக்கொள்ளாத்து, அல்லது இன்னும் தீவிரமாக ஆதரிப்''//

      athiraav :) note this :)

      நீக்கு
    2. ஏஞ்சலின், நேற்று முந்தினம் அதிரா அவங்க பிரச்சனைகளை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதனைத்தான் நான் கேட்டிருக்கிறேன்.

      இப்போ பு ரி ஞ் சு தோ? போனாப் போகுதுன்னு உங்க பேரைப் போடாமல், அதிரா பேரைப் போட்டிருக்கேன்.

      நீக்கு
    3. ஆஆஆஆவ்வ்வ் மீ இங்கினதான் இருக்கிறேன் அஞ்டூஊஊஉ அப்போ அம்பது பிளஸ் ஆஆஆஆயிடுத்தாஆஆஆ நெ தமிழனுக்கூஊஊஉ கரீட்டூஉ 80 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பில் இருந்தார் ஹா ஹா ஹா விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:)

      நீக்கு
    4. நம்ம கண்ணில் படக்கூடாதுன்னு பழைய போஸ்டுக்கு லேட்டா கமெண்ட் போடறார் மியாவ் இவர் :) ஆனா நாங்க சுற்றி சுற்றி வருவோம் :) எப்படியாவது மாட்டிப்பிங்க ஹாஹாஹா

      நீக்கு
  35. சின்னச் சின்ன பொருட்களை, அது தரும் நினைவுக்காகப் பாதுகாக்கறீங்ககளா, பாதுகாத்திருக்கீங்களா? (பையன் தந்த பேனா, அப்பா எழுதிய லட்டர் போன்று)

    நம் குழந்தைகளுக்கு என்று விருப்பு, வெறுப்பு, இன்டிபென்டன்ட் திங்கிங் வரும்போது அதை இயல்பா ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கா? சின்னப் பசங்களா நம் விருப்பத்தை ஒட்டி அவங்க செய்வாங்க... அப்புறம் அவங்க எண்ணப்படி செய்ய ஆரம்பிப்பாங்க.

    ஒரு இடத்துக்குப் போனால் அங்க என்ன உணவு ஸபெஷல், போய் ருசிக்கணும் என்றெல்லாம் ஆசைப்படுவீங்களா?

    வெளியூர் பயணம் போனால் (3-8 நாட்கள்), ஓரளவு முழுமையாத் திட்டமிடுவீங்களா? (நான் ஒவ்வொரு முறை பயணத்தின்போதும், அந்த அந்த நாளில் roughஆ என்ன பண்ணப்போறேன், உணவு எங்க சாப்பிடுவேன், அந்த ஊரில் பார்க்க வேண்டியது, வாங்க, சுவைக்க வேண்டியதுன்னு குறிப்புகள் எடுத்துப்பேன். ஒரு நாள் உங்களைச் சந்திக்க வரணும்னாலும் basic plan இருக்கும்)

    இப்போ ரயில்வே கேன்டீன் உணவுகள் சாப்பிட்டிருக்கீங்களா? அப்படிச் சாப்பிடும் வழக்கம் உண்டா?

    பதிலளிநீக்கு
  36. இந்த வாரம் நிறைய கேள்விகள் இருக்கு அதனால் மீ அப்புறம் வரும் வாரமி ல் கேட்கிறேன்

    பதிலளிநீக்கு
  37. அருமையான பாடல் கேட்டு மகிழ்ந்தேன் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!