வியாழன், 3 ஜனவரி, 2019

கசிந்துருகும் கண்ணீர் / வருவாய் என நாம் வறட்சியில் இருந்தோம் / பழங்கணக்கு




கடந்த வருடத்தில்  


2018 புள்ளி விவரங்கள்: 

அதிக பார்வையாளர்கள் :


குறைந்த பார்வையாளர்கள் : 


அதிக கமெண்ட்ஸ் : 
225. 


குறைந்த கமெண்ட்ஸ் : 
(14). 


     53 திங்கட்க்கிழமையில்  55 வகையான 'திங்கற' ஐட்டங்களை பற்றிப் பார்த்திருக்கிறோம்.  ஏதோ ஒரு வாரம் நெல்லைத்தமிழனின் மூன்று ரெசிப்பிகளைஒன்றாக வெளியிட்ட நினைவு என்பதால் ப்ளஸ் டூ!





     நமது தளத்தில் 52 சிறுகதைகள் வெளியாகியுள்ளன.  நண்பர்களின் திறமை முழுவதும் வெளிவந்த படைப்புகள்.  வருடம் முழுவதும் ஆதரவளித்த வலையுலக நண்பர்களுக்கும், ஸ்பெஷலாக திரு ரிஷபன் ஜி அவர்களுக்கும் நன்றிகள்.  தொடர்ந்து ஆதரவளிக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.







     புதன் கிழமைகளில் வம்பு பேச ஆரம்பித்து, பின்னர் புதிர்களில் நுழைந்து தற்சமயம் கேள்வி பதில்களில் நிற்கிறது.












     வியாழன் கதம்பம்...   சொல்ல என்ன இருக்கிறது?  எந்த வகையிலும் சேராதது அது! இலக்கியம், வெட்டி அரட்டை, சிறுகதை, கவிதை எடுத்துக் போட்டது என்று சகல திசைகளிலும் பரவும் பதிவு.



     52 வெள்ளிகளில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை வெள்ளியில் பகிர்ந்திருக்கிறோம்.  சில வெள்ளிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் பகிரப்பட்டதால் அதிகம் சொல்கிறேன்.



     சனிக்கிழமைகளில் பகிரப்பட்ட நற்செயல்களையும் ஞாயிறு புகைப்படங்களையும் அளக்க முடியுமா என்ன?





         
     வருடத்தில் ஏதோ ஒருநாள் பதிவில்லாமல் போனதால் 364 பதிவுகள்.  விவரம் கீழே!

​     வார வம்பு பகுதிக்கு தொடர்ந்து 24 . 1. 18 அன்றும் 15 கமெண்ட் வந்ததால் பதிவாசிரியர் வெறுத்துப்போய் 31.1.18 புதன் அன்று மௌன (எழுதா) விரதம் மேற்கொண்டார்.  ஆம்! இந்த வருடத்தில் 364 பதிவுகள். பதிவு வெளியாகாத ஒரே நாள் :   31.1.18. புதன்.

     எங்கள் ப்ளாக் இதுவரை :   அதிக பதிவுகள்:  2018 = 364.  குறைந்த பதிவுகள் : 2011 = 249.  இன்றைய பதிவையும் சேர்த்து எங்கள் ப்ளாக்கின் மொத்த பதிவுகள் 3,049.

     தொடர்ந்து எங்களுக்கு சமையல் ரெஸிப்பிகளும், அவ்வப்போது கதைகளும் தரும் நெல்லைத்தமிழனுக்கு நன்றி.  இந்த வருடம் அவர் கதைகளில் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டுகிறோம்.

     பின்னூட்டப் புயல்கள் உணர்வுக்கதைகள் ஸ்பெஷலிஸ்ட், சமையல் வித்தகி கீதா ரெங்கன், விளையாட்டாய்ப் பேசினாலும் ஆழமான எண்ணங்கள், கருத்துகள் கொண்ட அதிரா, கொசு உட்பட எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்தும் ஏஞ்சல்...  

     உங்கள் அன்பாலும் ஆதரவாலும் நண்பர்கள் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி ஒரு மாலைநேரப் பூங்காவில் அரட்டையடிக்கும் உணர்வோடு கலந்து பேச முடிகிறது.  பெரும்பாலான நேரங்களில் செவ்வாய்க்கு கதைகள் பற்றி கதை பற்றி ஒரு கலந்துரையாடலே நடத்துகிறோம்.  சமையல் ரெசிப்பிகளை அலசி ஆராய்ந்து புது வகைகளை பேசிப் பகிர்கிறோம்.

     பழம்பெரும் பதிவர்கள் வல்லிம்மா, கீதா அக்கா போன்றவர்களின் அன்பிலும் ஆதரவிலும் கட்டுண்டு கிடக்கிறோம்.  அனுபவப் பதிவுகளுக்கு ஒரு வல்லிம்மா,  ஆன்மீகப் பதிவுகளுக்கு அரட்டைக்குப் பெயர்போன எல்லோரிலும் மனதளவில் வயது குறைந்த கீதாக்கா...

      முன்பெல்லாம் பெரும்பாலும் தவறாது வருகை தந்துவிடும் ஜீவி ஸார்...  அப்புறம் கதைகளுக்கு மட்டும் வருகை தந்து கொண்டிருந்தார்.  பின்னர் வருகை குறைந்தாலும் நம் தளத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறார் என்று நம்புகிறோம்.  நமது வாட்ஸாப் குழுமத்தில், தனி மடலிலும் வேறு என்னென்ன மாற்றங்கள் இந்த தளத்தில் செய்யலாம் என்று எல்லாம் ஆலோசனை சொல்பவர்..

     சமையலில் ஸ்பெஷலிஸ்ட் என்றாலும் அனுபவத்திலும் வயதிலும் மூத்த காமாட்சி அம்மாவுக்கு நமஸ்காரங்கள்.  

     சமீப காலங்களில் கதைகளாகட்டும், அனுபவப் பகிர்வாகட்டும், அப்புறம் சமையல் பதிவாகட்டும் எல்லாவற்றிலும் கலக்கி வருபவர் கமலா ஹரிஹரன்.  மிகுந்த தன்னடக்கத்தோடு பதிவுகளும், பின்னூட்டங்களும் கொடுத்தாலும் பெரும் திறமைசாலி.

     பட்டும் படாமலும் பின்னூட்டமிட்டாலும் விடாமல் ஆதரவளிக்கும் ஜி எம் பி ஸார், ஒவ்வொரு பதிவிலும் ஏதாவதொரு பாடலை நினைவுகூரும் ஏகாந்தன் ஸார், அழகான கதைகளையும், கவிதைகளையும் படைக்கும் ஆற்றல் பெற்ற ஆன்மீக ஸ்பெஷலிஸ்ட் எங்கள் தஞ்சை மண்ணைச் சேர்ந்த துரை செல்வராஜூ ஸார்,  'வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு..  என்னுடைய நோக்கம் நேர்மை, வாய்மை' என்று போரிடும் கில்லர்ஜி..   பயணப்பதிவர், எந்த வம்பு தும்பிலும் சிக்காமல் நழுவும் நண்பர் வெங்கட் நாகராஜ்...

     எல்லாப் பதிவுகளுக்கும் வந்து பின்னூட்டமிடுவதுமட்டுமல்ல, தளங்களில் ஏதேனும் பிரச்னை என்றால் முதலில் வந்து உதவி செய்யும் குறள்சித்தர்  DD..

     புகைப்படப் பகிர்வுகளுக்கு இப்போதும் தவறாது வந்து விடும் சகோதரி ராமலக்ஷ்மி...  அவர் கதைகளையும் கவிதைகளையும் மிஸ் செய்கிறோம்.  எதையும் விடாமல் படித்து எல்லாவற்றுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் (விட்டுப்போன கடந்தவாரப் பதிவுகளைக் கூடப் படித்து இப்போது கூட அரியர்ஸ் முடித்தார்!!) கோமதி அரசு அக்கா, முனைவர் ஜம்புலிங்கம் ஸார்..

     சுருக் நறுக் கதைகளாகட்டும், சுருக்கமான ரெசிப்பிகளாகட்டும் அனைத்திலும் கலக்கும் பானு அக்கா, தனது இறுக்கமான பள்ளி வேலைகளுக்கு நடுவிலும் தொடர்ந்து வந்து படித்து பின்னூட்டமிடும் எங்கள் தஞ்சைக்காரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார், அதே எங்கள் தஞ்சைப்பதிவர் மனோ சாமிநாதன் மேடம், இன்னொரு ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்த துளஸிஜி...  பல்சுவைப்பதிவர் ராஜி..

     அபூர்வமாக வருகை தரும் வைகோ ஸார், ஜேகே அண்ணா, தேனம்மை, மாதேவி, அனுபிரேம், இளமதி, பட்டாபிராமன் ஸார் ஆகியவர்களுக்கும் நன்றிகள்.  பதிவுகள் இப்போது எழுதா விட்டாலும் அவ்வப்போது பின்னூட்டமிடும், ஆனால் நம் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் (அப்படித்தானே மிகிமா?) மிடில்க்ளாஸ்மாதவி...

     நட்பில் புதிதாக இணைந்திருக்கும், மண்வாசனைக் கதைகள் புகழ் விமலன் பேராளிக்கும் நல்வரவு.

     யாரையாவது குறிப்பிட மறந்திருந்தால் அவர்கள் மன்னிப்பைக் கோருகிறோம்.
  
     இவை அனைத்தும் நண்பர்களே...   உங்களால் சாத்தியமானது.  நன்றி உங்கள் அனைவருக்கும்.  வரும் காலங்களிலும் நம் அன்பும் இணைப்பும் தொடர்ந்திருக்கப் பிரார்த்திக்கிறோம்.  


          
சகோதரி தேனம்மை எப்போதும் சொல்வது போல 'வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்; என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்'.

              
வல்லிம்மாவின் வார்த்தைகளையும் கடன் வாங்கி கொள்கிறேன்.  "எல்லோரும் நன்றாக வாழவேண்டும்"


================================================================================================


பாவமன்னிப்பு!  ஒரு துளி கண்ணீரின் மகத்துவம்!




=================================================================================================

"இது பட்டாபிராமன் ஸார் பதிவிலிருந்து திருடியது"!



=====================================================================================================

இது இந்த வருடத்துக்கும் பொருந்தி விட்டது...... சோகம்!




=========================================================================================================

இந்த வியாழன்ல அவ்ளோதாங்க...

163 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
    கீதா

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. ஹை ஏஞ்சல்!!! இந்த அர்த்த ராத்திரில!!!

      குட்மார்னிங்க்!

      கீதா

      நீக்கு
    2. ஹீஈ ஹீ அது 4 ஹவர்ஸ் தூங்கினேன் இப்போ தூக்கம் வரலை :) இப்போ போய்டுவேன்

      நீக்கு
    3. ஆஹா... இனிய காலை வணக்கம் ஏஞ்சல்...

      நீக்கு
    4. ஹீஈ ஹீ அது 4 ஹவர்ஸ் தூங்கினேன் இப்போ தூக்கம் வரலை :) இப்போ போய்டுவேன்//

      ஓ அப்ப குர்மார்னிங்க் அண்ட் குட்னைட்!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  3. இன்னிக்கு என் கணினில 6 நு வந்ததும் டக்குன்னு பதிவு வந்துருச்சே!!!!!

    வல்லிம்மா எல்லாம் இருக்காங்க ...இதோ வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஆ :) எப்படி ரெண்டு பேரும் 6 மணிக்கு ஜம்பிருக்கோம் :))))))
    எல்லாருக்கும் காலை வணக்கம் லண்டனிலிருந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஏஞ்சல் அதே அதே.....ஆனா பாருங்க நாம முட்டாம மோதாம வந்துட்டோம்!! பூஸார் வந்துருந்தாங்கனா பெரிய சத்தத்தோடு வந்து முந்தி வந்ததுல விழுந்துட்டேன் அப்படினு ஹா ஹா ஹா ஹா ஹா...மிஸ்ஸிங்க்

      கீதா

      நீக்கு
    2. ஹையோ ஆமா என்னோட அடுத்த காலும் உடைஞ்சிருக்கும் :)

      நீக்கு
    3. நான் எப்போ வருவேன் எதுக்காக வருவேன் என எனக்கே த்ர்ரியாது ஹாக் ஹாக் ஹாக் மகிழ்ச்சி:).. இந்த பிஸ்சூ ஞாமத்தில ஜம்ப்பாவா எனத் தெரிஞ்சிருந்தா நித்திரைக் குளிசை குடுத்திருப்பேன் ஜஸ்ட்டூ மிஸ்ட்டூஊ.... மீ இப்போதான் எழும்பினேன் இன்னும் டார்க்காவே இருக்கு வெளியே... சன் அங்கிள் ஸ்ரைக்:)...
      கொஞ்சம் லேட்டா வாறேன்...

      நீக்கு
  5. ஆமாம் ல இந்த வாட்டியும் மழையே இல்லை! உங்கள் கவிதை அருமை ஸ்ரீராம்.

    வாழமரம் இப்படி ஓட்டை போட்டு என்பது வாசித்திருக்கேன்...நல்ல விஷயம் இல்லையா. இயற்கையோடு இயற்கையாய் என்று....எப்படி எல்லாம் அங்கு மக்கள் சிந்திக்கின்றார்கள்...நம்மூரில் இப்படி எல்லாம் செய்தால் நன்றாக இருக்கும்னு கூடவே தோனுது...யாராவது செய்யுறாங்களானு பார்க்கனும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா... சென்னையில் மழை நிலவரம் படுமோசம்...

      நீக்கு
  6. கசிந்துருகும் கண்ணீர் //

    வாவ்!! ரொம்ப நல்லாருக்கு!!! ஸ்ரீராம்...உண்மைதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பழங்கணக்கும் அனைவரையும் நினைவு கூர்ந்ததும் சூப்பர் ..

    பதிலளிநீக்கு
  8. அதிக கமெண்ட்ஸ் :
    20.12.18 வியாழன்.
    225. //

    யம்மாடியோவ் ரெக்கார்ட்!!!!!!

    நெல்லை அப்பவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு சொல்லிருந்தார் அவர் தனி தனியா கொடுத்திருந்ததை சேர்த்து போட்டுட்டீங்களே ஹா ஹா ஹா ஹா ஹா...பரவால்ல ஒன்னு சொல்லுவாங்க தெரியுமா....காரம் மட்டும் கொடுக்கக் கூடாது கூடவே ஸ்வீட்டும் கொடுக்கனுன்னு...அப்படித்தான் அது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2009, 2010 மற்றும் அதற்கு முன்னாலசில வலைத்தளங்களில் இதையெல்லாம் தாண்டியும் பின்னூட்டங்கள் மழையாய்ப் பொழிந்ததுண்டு. சமீபத்தில் அதிரா பதிவில் கூட பின்னூட்டங்கள் இதைத் தாண்டி இருக்கிறது என்று நினைவு.

      நீக்கு
    2. ஶ்ரீராம் என்பக்கம் எங்கோ 400 கொமெண்ட்ஸ்சும் வந்திருக்கு முன்பு.... இப்போ அந்த நம்மவர்கள் எல்லாம் பேஸ்புக்கோடு போய் விட்டார்கள்...

      நீக்கு
  9. அஆவ் !! யாரோ தலையில் நங்குன்னு குட்டுன இருந்துச்சே !! சரி சரி சரி பதிவுக்கு போறேன்

    பதிலளிநீக்கு
  10. வாவ்!!! பழங்கணக்கு....எல்லோரையும் நினைவு கூர்ந்தது நன்றி உரைத்தது வாவ். அதுல நாங்களும்..இருக்கோம்...என்பது மிக்க மகிழ்ச்சி தருது ஸ்ரீராம். ஆனா நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லி சந்தோஷப்படனும்.

    இத்தனை கமென்ட்ஸ் போட கருத்து சொல்ல விவாதிக்க கலந்து பேச, சிரிக்க, என்றும் எல்லோரையும் உற்சாகப்படுத்தி ஊக்குவித்துக் கதை, ரெசிப்பிஸ் எழுத வைத்து படைப்பாளிகளாகவும் உருவாக்கும் எபி தளத்தைச் சொல்ல வார்த்தைகள் உண்டோ?!!!!!

    வார்த்தைகள் இல்லை ஸ்ரீராம். ஆனந்தக் கண்ணீருடன் ஆன நன்றிகள் பல!

    இன்னும் வரேன் வேலை முடிச்சுட்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவருக்கொருவர் நன்றி சொல்லிக் கொள்ள வேண்டாம்தான். ஆனால் அதுவும் அவசியமாகிறது அவ்வப்போது. இல்லையா கீதா?

      நீக்கு
    2. கீதா சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன் :) நாம தைரியமா நம் ரிலேட்டிவ்ஸ் வீடு போல் நினைச்சி உள்ளே வந்து கலாட்டா பண்றதுக்கு ஒரு இடம் இருக்கேனு சந்தோஷமா இருக்கு :)

      நீக்கு
    3. நன்றி ஏஞ்சல்... சந்தோஷம் எங்களுக்குள்ளும் பரவுகிறது.

      நீக்கு
    4. ஏஞ்சல் அதே அதே...நீங்க கூட சொல்லிருந்தீங்களே அவங்கவங்க ரூம்ல இருந்துகிட்டு பொதுவான நடு ஹால்/முற்றத்தில் வந்து கும்மியடிப்பது என்று...அதேதான் நினைவுக்கு எனக்கு வரும்...

      மற்றொன்று எபி போர்ட் அறிவிப்பு போர்டாவும் வைச்சுக்கலாமில்ல ஹா ஹா ஹா ஹா ..

      கீதா

      நீக்கு
  11. அந்த 20 /12 2018 இல் 200 வைத்து கமெண்ட் நான் :)))))))))))))))))))))))))
    இதே 20 ஆம் தேதி 2016 மல்ட்டி ஸ்டோரி இங்கே வந்த்துச்சு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், ஆம்... உங்கள் ஞாபக சக்திக்கு சொல்லவும் வேண்டுமோ!

      நீக்கு
    2. https://media.giphy.com/media/VF8mXlF8hNPEY/giphy.gif

      danks :)))))

      நீக்கு
    3. அடடா... உங்கள் ஞாபக சக்தி பற்றி பதிவில் சேர்க்க மறந்தேன்... ஞாபக சக்திக்கு நீங்கள்.. மறதிக்கு நான்!

      நீக்கு
    4. அதே அதே ஏஞ்சல்!!! 200 வது கமென்ட்...அதுவும் வெயிட் செஞ்சு போட்டீங்களே...மோகன்ஜி வந்து போட்டதும்...ஹா ஹா ஹா நல்லாவே நினைவு இருக்கு...

      கீதா

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  13. "எங்கள் பிளாக்" வாழ்க வளமுடன் அனைவரும் நினைவு கூர்ந்த விதம் அருமை.

    பட்டியல் கூட்டத்தில் கோவிந்தா போடும் நானும்... தமன்னாவானேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் 'தன்யனானேன்' என்பது 'தமன்னாவானேன்' என்று எழுத்துப் பிழையாகி விட்டது.

      நீக்கு
    2. கில்லர்ஜி சிரிச்சுட்டேன்!! அப்ப்புறம் என்னாதுனு என்னைக் கிள்ளிப் பார்த்துக்கிட்டேன்...கில்லர்ஜியாஆஆஆஆஆஆஆஆஆஆஅ தமன்னாநு....சொன்னதுன்னு....!!!

      நீங்க என்னதான் எழுத்துப் பிழைன்னு சொன்னாலும் தன்யனானேன் என்பது தமன்னாவானேன்னு ஆட்டோ கரெக்ஷன் எல்லாம் ஆகியிருக்காது...பெரிய மீசையாச்சே!!!!!! ஹிஹிஹிஹிஹிஹிஹி..

      கீதா

      நீக்கு
    3. கில்லர்ஜி... உங்களை, தளத்திற்கு வரும் அனைவரையும் பிடிக்கும்தான்...... இருந்தாலும் ... இது டூ மச் இல்லையோ....

      நீக்கு
    4. கீதா ரங்கன்.... கில்லர்ஜி என்னதான் சினிமாக் கார்ர்களை வெறுத்தாலும், தமன்னா தேவகோட்டைல தேர்தலுக்கு நின்னா முதல் ஆளாக அவருக்கு வாக்களிப்பார்னு சொல்ல ஆசைதான். ஆனா இதைப் படிச்சு அவருக்குக் கோபம் வந்தால் நான் எங்கே ஒளிவது?

      நீக்கு
    5. எழுத்துப்பிழைக்கு வருந்தி மன்னிப்பு கேட்டும் மனசாட்சியின்றி
      இருவரும் இப்படி பேசுவது நியாயமா ?

      நீக்கு
    6. நெல்லை ஹையோ சிரிச்சு சிரிச்சு முடியலைப்ப்பாஆஆஆஆஆஆஆ....ஹையோ.....

      கில்லர்ஜி பரவால்லப்பா...பரவால்ல...ஹா ஹா

      கீதா

      நீக்கு
    7. கில்லர்ஜி... என்ன இருந்தாலும் ஊர்க்காரர்கள் ஒன்று சேர்ந்து விட்டீர்கள் பார்த்தீர்களா? தமன்னா என்று சொன்ன உங்களால் அனுஷ்கா பெயரைக் கொண்டுவர முடியவில்லையே!!!!!

      நீக்கு
    8. /எழுத்துப்பிழைக்கு வருந்தி //

      எழுத்துப் பிழையா? வார்த்தைப்பிழையா? பெயர்ப்பிழையா ஜி?!!!!!

      நீக்கு
  14. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏.

    அடியேனையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. 9 ஆண்டுகளாக வலையில் பலவிதமான யாராலும் கவனிக்கப்படாத பல தகவல்களை அளித்துள்ளேன். அதில் ஒன்றை உங்கள் நேயர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு நன்றி. சிந்தனை சிதறலில் ஏராளமான முத்துக்கள். சிதறிக் கிடக்கின்றன அந்த தகவல்கள் அனைவருக்கும் போய் சேரவில்லை. என்பது உண்மை. யாரும் என் வலைக்கு வருவது கிடையாது. கடந்த 3 ஆண்டுகளாக எழுதுவதை நிறுத்திவிட்டேன்.மன சோர்வு ஏற்பட்டது. அப்போது என் வீடு பக்கத்தில் இருந்த மரத்தில் பாடிக்கொண்டிருந்த குயில் கூறியது. "கூவுவது மட்டும்தான் உன் வேலை" மற்றவர்கள் கேட்கிறார்களா என்பதை பற்றி நீ கவலைப்படவில்லை. அது (ஸ்ரீராம் போன்றவர்களுக்கு )கேட்கவேண்டியவர்களுக்கு மட்டும் தவறாமல் கேட்கும் .எனவே நீ பாட்டுக்கு கூவி கொண்டே போய்க்கொண்டிரு. திரும்பிப் பார்க்காதே என்றது. மவுத்தார்கண் இசையில் என் கவனம் நிலைத்துவிட்டது.அதில் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருப்பேன் என் மூச்சு உள்ள வரை. அன்பு பயணிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா அவர்களுக்கு வணக்கம் என்னை நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்...

      //சிந்தனை சிதறலில் ஏராளமான முத்துக்கள். சிதறிக் கிடக்கின்றன அந்த தகவல்கள் அனைவருக்கும் போய் சேரவில்லை. என்பது உண்மை. யாரும் என் வலைக்கு வருவது கிடையாது//

      இது நிதர்சனமான உண்மையே...

      மூன்று வருடங்களுக்கு முன்பு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன் தங்களது திறமை இவ்வுலகுக்கு அறியப்படல் வேண்டும் என்பதை உங்களைவிட பன்படங்கு அகவையில் சிறியவனான நான் எனது சிற்றறிவுக்கு எட்டியதை பக்குவமாக மன்னிப்பு கோரலோடு விவரித்து சொன்னேன்.

      அதை தாங்கள் உணரவில்லை.எனக்கு பதிலும் அளித்தீர்கள் பிறகு விட்டு விட்டேன்.

      முன் கை நீண்டால்தான் முழங்கை நீளும் என்ற சொல்வடை நம்மில் உண்டு என்று அன்று சொன்னதையே இன்றும் நினைவு கூர்கிறேன்.

      இப்படிக்கு மூன்று வருடங்களுக்கு முன்புவரை உங்களை தொடர்ந்த கில்லர்ஜி.

      குறிப்பு-என்னைப்பற்றி மேலே ஸ்ரீராம்ஜி குறிப்பிட்டது இன்று மட்டுமல்ல! என்றும் பொருந்தும்.

      அடிக்குறிப்பு-உங்கள்மீது எமக்கு துளியும் வருத்தமில்லை, உங்களது கொள்கையில் கோபம் உண்டு.

      என்றும் நேசமுடன்
      தேவகோட்டை கில்லர்ஜி

      நீக்கு
    2. கொள்கையும் நானும் ஒன்றுதான். இரண்டும் கலந்த கலவை நான். கொள்கை மீது கோபம் என்றால் என்மீதும் கோபம்தான்.But I love your boldness expressing your views face to face.அளவில்லா துன்பத்தின் இடையில் ஆனந்தமாக வலையில் நடமாடும் எனக்கு எல்லாம் ஒன்றுதான்.

      நீக்கு
    3. இரண்டு அரசியல்வாதிகள் கருத்துகளால் போரிடலாம், மனதால் மோதுதல் கூடாது என்ற கொள்கையாளன் நான்.

      நன்றி ஐயா.

      நீக்கு
    4. வாங்க பட்டாபிராமன் ஸார். உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால் அதற்கு நீங்களே பதிலும் சொல்லி விட்டீர்கள். கில்லர்ஜி உங்கள் பதிவில் சொன்ன விஷயம் எனக்கு நினைவில்லை. "முன் கை நீண்டால்தான் முழங்கை நீளும்" அழகாய்ச் சொல்லி இருக்கிறார். சமீபத்தில் கூட உங்களுக்கு ஒரு டெல்லி வாய்ப்பு வந்தது என்று நினைவு.

      நீக்கு
    5. எதிர்பார்ப்பும் இல்லை ஏமாற்றமும் இல்லை.இருந்தும் சில நேரங்களில் மனம் புலம்புவது அதன் இயல்பு . ஆனால் அது வந்த வேகத்திலேயே மறைந்துவிடும். ஓய்வில்லாமல் என் வாழ்க்கை சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது.நேரம் கிடைக்கும்போது உங்கள் வலைக்கு வருவேன். அவ்வளவுதான். டெல்லி வாய்ப்பு -read only

      நீக்கு
  16. காலையில் படித்துவிட்டேன். நன்றாக நினைவுகளைப் புரட்டிப் போட்டிருக்கீங்க. எ பிக்கு வாழ்த்துகள்.

    பின்னூட்டமிடும் அனைவருக்கும் பாராட்டுகள். துரை செல்வராஜு சார், கீதா ரங்கன்(க்கா), கீதா சாம்பசிவம் மேடம், ....கோமதி அரசு மேடம், அதிரா, ஏஞ்சலின் போன்றவர்கள் ஒன்றுக்குமேல் பின்னூட்டமிட்டு அரட்டை அரங்கத்தை ரசனையாக்குபவர்கள். அவர்களுக்கும் பாராட்டுகள் (இந்த மாதிரி individual பெயர்கள் எழுதும்போது நமது கவனக்குறைவால் பெயர் விட்டுப்போயிடும். வருந்தற்க)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹூம்க்கும்....நெல்லை உங்களின் குறும்பு இருக்கே!!!!!!!!!!!!!!!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதென்ன ப்ராக்கெட்டுக்குள்ள 'க்கா' ந்னு ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பின் கேப்ல கூட நுழைச்சுருவீங்க...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!!!

      ஒன்றுக்கு மேல் இட்டு அரட்டை அரங்கத்தை குறிப்பா பூஸாரை உசுப்பேத்தி அவரை ஜல் ஜல் பண்ண வைப்பது...என்னையும் ஏஞ்சலையும் கீதாக்காவையும் ஓட்டி அரட்டைல நீங்களுந்தேன்...ஸ்வாரஸ்யமாத்தான் இருக்குல்ல நெல்லை...!!? கீதாக்கா மிஸ்ஸிங்க்...பிஸி...

      கீதா

      நீக்கு
    2. யோசித்துப் பாருங்க கீதா ரங்கன்... உங்களைச் சந்திக்கும்போது, நீங்கள், வாக்கிங் ஸ்டிக்குடன் நடந்துவரும் வயதானவராக என்னைப் பார்த்தால், "இந்தாளா நம்மை க்கான்னு சொல்லிக் கலாய்த்தது என்று கோபம் வருமா வராதா? (ஐயையோ... கேள்விக் குறி போட்டுட்டேன்... புதன் கேள்வி பதிலுக்கு போயிடுமோ)

      நீக்கு
    3. புதன் பதிவில் கருத்துரைத்திருந்தால்தான் கே ப பகுதிக்குப் போகும்.

      நீக்கு
    4. நெல்லை மீண்டும் சிரிச்சுட்டேன்....

      கோபமா...நெவர்....ஹா ஹா ஹா நான் ஜஸ்ட் "நெல்லை அண்ணே நல்லாருக்கீங்களா!! நு கேட்டுருவேன்!!! அம்புட்டுத்தான்...!!

      இப்பவே ஸ்டிக்குன்னா....ஓ நோ நெவர்!!! என் அண்ணனா இருந்தாலும்.. தமன்னா ரசிகர்....அதிராவின் தம்பி!!!

      கீதா

      நீக்கு
    5. வாங்க நெல்லைத்தமிழன்... நான் சொல்லியிருப்பதை யோசித்துப் பாருங்கள்.

      நீக்கு
  17. அதிகாலை வணக்கத்தினோடு - அடியேன்...

    என்னையும் எழுதத் தூண்டிய அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..

    வித்தகர்கள் பலர் கூடியிருக்கும் மண்டபத்துள் எனக்கும் ஓரிடம் கிடைத்ததெனில்
    அதற்குக் காரணம் ஸ்ரீராம் அவர்களே!...

    அத்துடன் எனது பதிவுகளுக்கு (!) மனதார கருத்துரைகளை வாரி வழங்கி மேலும் சிறப்பித்து உற்சாகப் படுத்திய அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்...

    வாழ்க நலம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்... இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு சமீப காலமாக உங்களை மிஸ் செய்கிறோம்.

      //என்னையும் எழுதத் தூண்டிய அன்பின் ஸ்ரீராம்//

      அநியாயம். நீங்கள் எழுதாததா? வரகவி போல கவிமழை பொழிகிறீர்கள். எந்த விஷயம் எடுத்தாலும் அதைப் பற்றி நிறைய எழுதுகிறீர்கள்.

      நாம் இணைந்திருப்பதில் இருவருக்குமே மகிழ்ச்சி.

      நீக்கு
  18. இரவு இங்கு குளிர் 10 டிகிரி போய் காலையில் 10, 11, 12 என்று குறைந்து இப்ப 15 ல வந்து நிக்குது. இப்பத்தான் வெயில் வருது இருந்தாலும் சிலு சிலுன்னு.... இனிதான் வாக்கிங்க் போகனும்...இந்த வாரம் முழுவதும் 11 வரை போகும்ன்னு வெதர் சொல்லுது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்க சென்னையைவிட நல்லாத்தான் இருக்கு.... ஆனாலும்..... தமிழக என்வைரான்மென்ட் மிஸ்ஸ்ஸிங்.

      கீதா ரங்கன்... நான் மகாராஜபுரம் சந்தானம் பேரன் கச்சேரி கேட்டேன். நல்ல குரல். பெரிய ஆளா வரலாம். (அன்று மவுன்ட் பேட்டன் மணி ஐயர் ஜனவரி முநல் தேதி பார்த்தசாரதி சபால சாப்பிட்டேன்.... கட்டுப்படியாகுமான்னு யோசிக்கறேன்)

      நீக்கு
    2. ஆனாலும்..... தமிழக என்வைரான்மென்ட் மிஸ்ஸ்ஸிங்.//

      எனக்கு எல்லாமே ஒரே போலத்தான் இருக்கு நெல்லை. இங்கும் பிடிச்சுருச்சு.

      வாவ் சூப்பர் நெல்லை!!! மகாராஜபுரம் பேரன் கச்சேரி - கணேஷ் விஸ்வனாதன், மகாராஜபுரம் ஸ்ரீநிவாசனின் மகன்...நான் யுட்யூப்ல கேட்டுருக்கேன்...வாய்ஸ் நல்லாருக்கு...நன்றாகவும் பாடறார். ஃபேமிலி குரல் வந்திருக்கு..இன்னும் கொஞ்சம் எஃபோர்ட்ஸ் போட்டா.....யெஸ் நீங்க சொல்லிருப்பது போல் பெரிய ஆளா வரலாம்....

      மௌ பே ம ஐ ஹையோ கொள்ளை விலை....நல்லாருந்துச்சா?

      கீதா

      நீக்கு
    3. சென்னையிலும் குளிர் நன்றாகவே தெரிகிறது நெல்லை / கீதா ரங்கன்.

      நீக்கு
    4. நாங்க மைனஸ் ல இருக்கோம்.😃

      நீக்கு
    5. ஹா... ஹா... ஹா... அதுதான் ஆளையே காணோம்! வாங்கம்மா...

      நீக்கு
  19. வாழை மரம் செய்தி எனக்குப் புதுசு. நாமதான் வாழைத் தண்டையும் வீண்டிக்கறதில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட். நானும் அதைத்தான் நினைத்தேன்.

      நீக்கு
    2. வாழை நியூஸ் ரொம்பப்பழசு நெல்லை. எல்லா தண்டுகளையும் நாம் சமையலுக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. https://www.facebook.com/PasumaiVidiyal/photos/a.277700958954161/755122224545363/?type=1&theater
      வாழை மரத்தில் வீட்டுத்தோட்டம் அப்படின்னு நான் பசுமை விடியலில் போட்டேன் .இப்படி நிறைய அங்கே பதிவு எழுதியிருக்கேன் ..குப்பைவண்டி அப்படியே குப்பை அள்ற மாதிரி 30 /40 பதிவுகளை எடுத்துட்டு அவங்க பக்கம் போட்டதும் நடந்திருக்கு ..

      நீக்கு
  20. ஸ்ரீராம், சமையல்வித்தகின்னு சொல்லிட்டீங்களே என்னைப் போய்...கீதாக்கா, காமாட்சிமா, எல்லாரும் இருக்கறப்ப மீ நத்திங்க...ஸ்ரீராம்.

    நெல்லை கலக்குறார் சமையல்ல அவரை சமையல் வித்தகர்..னு சொல்லலாம்.

    நான் எல்லாம் ஜுஜூபிதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சமையல்வித்தகின்னு சொல்லிட்டீங்களே //
      அப்படி இல்லை கீதா... நான் ஏதோ புதுமையாய் ஏதோ செய்திருப்பதாய் நினைத்துக்கொண்டு ஒன்று செய்வேன். அதையும் சரி, நண்பர்கள் பகிரும் ரெசிப்பிகளையும் சரி நீங்கள் முன்னரே முயற்சித்திருப்பீர்கள். அதுவும் சிறந்த முறையில். இந்த கைராசி எல்லாம் எல்லோருக்கும் வராதே...

      நீக்கு
    2. ஸரி்யானபதில் அன்புடன்

      நீக்கு
    3. கீதாக்களுக்குதான் சமையல் வித்தகி ஸரியான பொருத்தம். நெல்லைத் தமிழன் நல்ல பொருத்தம். அன்புடன்

      நீக்கு
    4. //ஸரி்யானபதில் அன்புடன்//

      நன்றி அம்மா. அது உங்களுக்கும் பொருந்தும். உங்கள் அனுபவத்தில் நீங்கள் முயற்சிக்காததா?

      நீக்கு
  21. engalblog.com என்று மாற்ற வேண்டும்... அதாவது தனி Domain... பிறகு AdSense apply செய்ய வேண்டும்... நிற்க... (1)

    பணம் வரும் என்பது வேறு... பலரும் பயன் பெறுவார்கள் என்பதே எனது நோக்கம்... நிற்க (2)

    எப்போதாவது பகிர முடிகின்ற, சர்வ சாதாரண எனது வலைப்பதிவிற்கே, ஒரு நாளைக்கு 300 பார்வையாளர்கள்... நிற்க (3)

    அப்படி என்றால் எங்கள் blog...? (உட்கார்ந்து யோசிக்கலாம் 1)

    இதை தொடர்ந்து மற்ற தளங்களும் மாற வேண்டும்... (யோசிக்கிறேன் 2)

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க டிடி... காசு கொடுத்து சொந்தமாக்கச் சொல்கிறீர்களா? எல்லோருமே அப்படி வாங்கிக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறீர்களா?

      நீக்கு
    2. அன்பு டிடி ,நான் கேட்காமலே விளம்பரம் வந்து குதிக்கிறதே.
      இதை எப்படிச் செய்வது என்று சொல்லுங்கள்.

      நீக்கு
    3. வல்லிம்மா... உங்கள் தளத்தில் நான் விளம்பரங்கள் பார்த்ததில்லை.

      நீக்கு
    4. Sriram, I have seen ads in England’s blog too.pop ups. Very irritating ma!

      நீக்கு
  22. இன்று மதியம் எபியில் புயல் வந்தால் ஒரு பஞ்சாயத்து நடக்கும்!!!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா ..ஏன்ட் தெரியுமா ஸ்ரீராம்...இதோ இதுக்குத்தான்...

    //என்னுடைய நோக்கம் நேர்மை, வாய்மை//

    பூஸார்...எனக்கு நியாயம் நீதி நேர்மை எருமை எல்லாம் வேனுன்னு அடிக்கடி தேம்ஸில் குதிப்பேன்னு உண்ணாவிரதம் இருக்கும் ஆளாயிற்றே.....இன்னிக்கும் கேட்கப் போவ்து உறுதி ஆனா தேம்ஸ்ல இப்ப குதிக்க முடியாதே!!! ஹெ ஹெ ஹெ ஹெ ஹெ...

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... எனக்கும் அதை டைப்பும்போது அதே நினைவு வந்தது கீதா... இன்னும் ஆளைக்காணோம்!

      நீக்கு
  23. எதையும் விடாமல் படித்து எல்லாவற்றுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் (விட்டுப்போன கடந்தவாரப் பதிவுகளைக் கூடப் படித்து இப்போது கூட அரியர்ஸ் முடித்தார்!!) கோமதி அரசு அக்கா,//

    நன்றி நன்றி ஸ்ரீராம்.
    இணைய தொடர்பு சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு இணைய தொடர்ப்பு வைத்து இருக்கிறோம்.
    மிகவும் மெதுவாய் வேலை செய்கிறது.
    காலை, மார்கழி மாத கோவில் வழிபாடு, வீட்டில் வழிபாடு, வீட்டு வேலைகள், ஊர் பயணம் என்று இணைய பக்கம் வரும் நேரம் குறைவாய் இருக்கிறது.

    எல்லா தளங்களுக்கும் சென்று படித்து கருத்து சொல்கிறேன் முடிந்தவரை. அதை குறிப்பிட்ட உங்களுக்கு நன்றிகள் ஸ்ரீராம்.

    எங்கள் ப்ளாக் (364) சாதனை மிகவும் மகிழ்ச்சியான சாதனை ! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா.. சமீபத்தில் நீங்கள் வெளியூர் வேறு சென்று வந்தீர்கள். இணையம் எனக்கும் மாத ஆரம்பத்திலேயே கூட மெதுவாகத்தான் வேலை செய்கிறது. வாழ்த்துகளுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  24. பதில்கள்
    1. ஓ... பட்டாபிராமன் ஸார் தளம் பல்சுவை வாய்ந்தது. அருமையாக இருக்கும்.

      நீக்கு
  25. சூப்பர்....புள்ளி விவரங்களும் , கருத்துக்களும் ....

    தொடரட்டும் உங்கள் அன்பு பணி...


    முடிந்த அளவு திங்கள் மற்றும் செவ்வாய் பதிவுக்கு வந்துடுவேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி அனுபிரேம். தொடர்ந்து வாருங்கள். ஆதரவு தாருங்கள்.

      நீக்கு
  26. ஸ்ரீராம் , உங்கள் மழை கவிதையும் நன்றாக இருக்கிறது.
    மழை என்றாலே பயந்து விட்டதால் (வர்தாபுயல்) அதனால் பின்னால் தேவைபடும் போது மழை தரலாம் என்று ஆந்திரா பக்கம் போய் விட்டது. நாம் வேண்டி விரும்பி கேட்டால்தான் வருவார் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா. "சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ? என்று ஒருபாடல் உண்டு. மழைக்கு கறுப்புக்குடை காட்டி திருப்பி அனுப்ப மாட்டேன் என்று ஒரு வரி அதில் வரும். அது நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
  27. அன்போடும், நன்றியோடும் பார்த்த பழங்கணக்கு சுவை. உண்மையில் நாங்கள்தான் எ.பி.க்கு நன்றி சொல்ல வேண்டும். உங்களால் எங்களுக்கு கிடைத்திருக்கும் ஆதரவுக்காக மட்டும் இல்லை, அதன் மூலம் கிடைத்திருக்கும் நட்பிற்கும் மனமார்ந்த நன்றி.
    திரும்பி பார்க்கப்பட்ட பதிவுகளில் என்னுடையதும் இருப்பதில் கூடுதல் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ்ஸு பானுக்கா...அப்படியே இதை டிட்டோ செய்யுறேன்...

      கீதா

      நீக்கு
    2. வாங்க பானு அக்கா. ஒருவருக்கொருவர் நன்றி பாராட்டி தொடர்ந்து இணைந்திருப்போம். மகிழ்ச்சியான பொழுதுகளே லட்சியம். அதை எப்போதும் பெறுவோம் நிச்சயம்!

      நீக்கு
  28. ஸ்ரீராம் உங்கள் 'கசிந்துருகும் கண்ணீர் கவிதை' அருமையானா உண்மை!


    பதிலளிநீக்கு
  29. இடைக்கு இடையே இணையம் தகராறு செய்கிறது...

    எனவே கருத்துக்களை முழுமையாக சொல்ல இயலவில்லை....

    தங்களது அயராத உழைப்பும் ஊக்கமும் சிறகுகளாக - எபி எனும் முத்தமிழ்ப் பறவை வலைத்தள வானில் சிறகசைத்துப் பறக்கிறது..

    எபியின் ஆசிரியர் குழுவிற்கு அன்பின் நல்வாழ்த்துகள்...

    வாழ்க பல்லாண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்...

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      உங்கள் பிரச்னை என்ன ஆயிற்று என்று நீங்கள் அப்புறம் சொல்லவில்லையே.. சரியாகி விட்டதா? அங்கு உங்கள் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதா இல்லையா?

      நீக்கு
  30. பானுமதி சொன்னது போல் அன்பால் சேர்ந்த கூட்டம்.
    எங்கள் ப்ளாக், மற்றும் நட்புகளின் வலைத்தளங்களுக்கு வரவில்லை என்றால் என்ன ? ஏன் வரவில்லை நலம் தானே? என்று அன்பான விசாரிப்புக்கள் இப்படி அன்பு நிறைந்த கூட்டம்.
    அன்பு நிறைந்தவர் மத்தியில் இருப்பதால், கவலைகள் மறந்து மகிழ்ச்சியோடு இருக்கிறோம்.
    அதற்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​உண்மைதான் கோமதி அக்கா. ரெகுலராக வந்து கொண்டிருக்கும் ஒருவர் திடீரென காணோம் என்றால் என்ன ஆச்சோ என்று தோன்றுகிறதே.. இப்போது கீதா அக்கா வீட்டில் ச்ராத்தம் உள்ளிட்ட விசேஷங்களில் பிஸி என்று சொல்லி விட்டதால் காத்திருக்கிறோம். இல்லா விட்டால் என்ன ஆச்சு என்று கேட்கத் தோன்றும்.​

      நீக்கு
  31. சகோ துரைசெல்வராஜூ அவர்கள் சொன்னது போல் சில வேரம் இணையம் இணைய மறுப்பதால் பின்னூட்டங்கள் காண்மல் போய் விடுகிறது. இப்போது மின்னூட்டங்களை அடித்து விட்டு காப்பி செய்து கொள்கிறேன் முன் ஜாக்கிரைதாயாய்.
    தொடர்ந்து தளத்தில் பதிவுகளை போடுவதும் தினம் பின்னூட்டங்கள் கொடுப்பதும் பெரிய கலை. அதை சிற்ப்பாக செய்யும் ஆசிரியர் குழுவை பாராட்டவேண்டும்.
    வாழ்த்துக்கள் மீண்டும். வாழ்க வளமுடன்.
    இந்த ஆண்டும் வெற்றிநடை போடுங்கள் 365 நாளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா நானும் வேர்டில் அடித்து காப்பி செய்துதான் இங்கு போடுகிறேன். ஏனென்றால் இணையம் ப்ளாகர் எலலம் படுத்தும்...நீங்கள் செய்வது போலவே இங்கு அடித்து பப்ளிஶ் செய்யும் முன் காப்பி செய்துவிட்டு இது சில சமய்ம்...

      கீதா

      நீக்கு
    2. இந்த அனுபவங்கள் எனக்கும் முன்பு இருந்ததுண்டு. எனது டிராஃப்டில் நிறைய பின்னூட்டங்கள் ஜாக்கிரதைக்காக அபப்டியே இருக்கும். அப்புறம் இனி தேவை இல்லை என்று ஆகும்போது அவற்றை அழிப்பேன். இப்போது பரவாயில்லை.

      நீக்கு
  32. 2019ல நான் போட்டிக்கு வரேன். யார் அதிகமா பதிவு போடுறாங்கன்னு பார்க்கலாம்...

    என்ன பந்தயம் வச்சுக்கலாம் சகோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ உங்களைவிட அதிகம் பதிவு எழுதும் தன்நம்பிக்கை எனக்கு உண்டு ஆனால் அனைவரையும் வரவைப்பது எப்படி ?

      இதற்கு எனக்கு வழி தெரியவில்லை.

      தற்போது வருகையாளர்கள் மிகவும் குறைவாகி விட்டது.

      நீக்கு
    2. வாங்க ராஜி... நிறைய எழுதுங்கள். பந்தயம் என்ன இதில்? எழுதுவது அதிகரிக்க வேண்டும் என்பதுதானே நோக்கம்? உங்களைக் கூட முன்னர் கே வா போ வுக்கு கதை கேட்டிருந்தேன். நினைவிருக்கிறதா?

      நீக்கு
    3. கில்லர்ஜி.

      கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என்று தொடர்ந்து வருவதால் வருகை குறைந்திருக்கும். அவரவர்கள் விடுமுறையில் ஊறுகளுக்குச் செண்ள்வதில் பிசியாக இருப்பார்கள்.

      நீக்கு
    4. எனக்கு நிறைப் போஸ்ட் போடுவதை விட, ஒன்று போட்டாலும் அதில் எல்லோரும் கூடி மகிழ்ந்து பேச வேண்டும் அதுதான் மகிழ்ச்சி.

      நீக்கு
    5. சகோதரி ராஜி அவர்களுக்கு : இந்த தளம் அரட்டை அரங்கமாக மாறிக் கொண்டிருக்கிற ஒரு வாட்ஸ்-அப் தளம்... அவ்வளவே... போட்டி வேண்டாம்...

      புரிந்து கொண்டால் ஸ்ரீராம் சாருக்கு நன்றி...

      நீக்கு
  33. தொகுப்பு நன்றாக இருந்தது.

    'எங்கள் பிளாக்' வாசகர்கள், தங்கள் பிளாக்குகளுக்கு 'எங்கள் பிளாக்'கிலிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. வாசித்து முடித்ததும் மனசில் படிந்த கருத்து இது. யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...

      நன்றி. சுருக்கமாக முடித்துக் கொண்டீர்கள் போல...

      நீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    எ. பியில் சென்ற வருடம் சாதனை படைத்த பதிவுகளின் பட்டியல்கள் உங்கள் (எ.பி ஆசிரியர்கள்) அனைவருடைய திறமையான, அயராத உழைப்புக்களை,பறைசாற்றுகிறது. அதற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    வாரம் முழுவதும் ஒவ்வொரு விதமாக பதிவுகள் தந்து, அதில் எங்களுக்கும் நல்லதோர் வாய்ப்புக்கள் தந்து எங்களையும் ஊக்குவித்து ஒரே குடும்பமாக இணைந்து வலைத்தளத்தில் பயணிக்கச்செய்து, அனைவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக, நட்புக்கரம் கொண்டு பழகி வருவதற்கு காரணமாக இருக்கும் எ.பி.இன்னமும் மென்மேலும் புகழடைந்து, பல நூறு ஆண்டு காலம் சிறக்க வேண்டுமென நாங்கள் அனைவரும், உளமாற ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

    நன்றிகள் கலந்த நட்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      வாழ்த்துகளுக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

      நீக்கு
  35. //பதிவுகள் இப்போது எழுதா விட்டாலும் அவ்வப்போது பின்னூட்டமிடும், ஆனால் நம் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் (அப்படித்தானே மிகிமா?) மிடில்க்ளாஸ்மாதவி...// வம்பிழுத்து பின்னூட்டமிட வைத்து விட்டீர்கள்!!:))
    நிச்சயம் எல்லாப் பதிவுகளையும் படிக்கிறேன். என் மொபைலில் கருத்திட முடியவில்லை - சொந்தப் பெயரில் வந்து விடுகிறது!! செட்டிங்க்ஸ் மாற்றப் பொறுமையில்லை. காலையில் வேலை மும்முரத்தில் கம்ப்யூட்டரில் அமர முடியாததால் கருத்திட விட்டுப் போகிறது!! திருத்திக் கொள்கிறேன்.
    எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் பேரன்பிற்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க மிகிமா... உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. சந்தோஷமாயிருக்கிறது. எல்லாப் பதிவுகளையும் படித்து விடுகிறீர்கள் என்கிற தகவலுக்கும் நன்றி. உங்கள் தளத்தை எப்போது தூசு தட்டப் போகிறீர்கள்?

      நீக்கு
  36. பட்டும் படாமலும் பின்னூட்டம் அளிக்கக் கற்றுக் கொண்டதே எங்க ப்ளாக் மூலம் தான்நமக்குத் தோன்றியதை பின்னூட்டத்தில் வெளியிட்டால் சிலர் பொய்ங்குகிறர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி எம் பி ஐயா ... பொயிங்குவோரைப் பார்த்து நீங்கள் உங்கள் குணத்தை மாற்றலாமோ... குரைக்கிற பப்பீஸ் கடிக்காது தெரியுமோ?:)... நீங்க நிதானமாக நிண்டு ஒரு:) லுக்:) விட்டால் பொயிங்குவோர் எல்லாம் காலி ஹா ஹா ஹா:).

      நீக்கு
    2. வாங்க ஜி எம் பி ஸார்... வருகைக்கும் கருத்துக் பதிவுக்கும் நன்றி.

      நீக்கு
  37. அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்... எங்கள் புளொக்கின் வளர்ச்சிக்கும், மேலும் வளரவும் வாழ்த்துகிறேன்.

    எல்லோருக்கும் நல்ல தமிழில் எழுத வரவேண்டும் எனவும் வணங்குகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://i.ytimg.com/vi/Oxa3qyBr3Kg/hqdefault.jpg

      //எல்லோருக்கும் நல்ல தமிழில் எழுத வரவேண்டும் எனவும் வணங்குகிறேன்//


      இப்படிக்கு தமிழில் டீ குடித்த கம்பபாரதி :) அதிராமியாவ் என்று முடிக்கணும்

      நீக்கு
    2. அவ்வண்ணமே நானும் கோருகிறேன்!

      நீக்கு
    3. ///இப்படிக்கு தமிழில் டீ குடித்த கம்பபாரதி :) அதிராமியாவ் என்று முடிக்கணும் //

      அல்லோ சிறு திருத்தம்:).. டமிலில் டி எடுத்த.. எடுத்த:))..

      //
      ஸ்ரீராம்.3 ஜனவரி, 2019 ’அன்று’ பிற்பகல் 6:53
      அவ்வண்ணமே நானும் கோருகிறேன்!//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  38. ஶ்ரீராமின் முதல் கவிதையில் க் வந்திருக்கக்கூடாதே:)... இந்த வருடம் யாரும் சொற்பிழை பொருட்பிழை விட, நான் அனுமதிக்க மாட்டேன்:).. ஆஆஆ வழிவிடுங்கோ:)

    பதிலளிநீக்கு
  39. போலிச்சிரிப்புக் கவித அழகு... ஆனால் அதுக்கு ஊக்குவிக்க மாட்டேன்ன்... ஏனெனில் போலிச்சிரிப்பால் நாம் எதுக்கு அழவேணும்?:)... நல்லாயிருங்கோ எனச் சொல்லிக்கொண்டே நகர வேண்டும் ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையை தப்பாகப் புரிந்து கொண்டுள்ளீர்களோ... போலிச்சிரிப்பால் அழுகை இல்லை. அடிக்கடி போலிச்சிரிப்பை வழங்கும் ஒருவரின் ஒருநாளைய உண்மை உணர்வான கசிந்துருகும் கண்ணீர் அவரின் பல போலிச்சிரிப்புகளின் பாவத்தைக் கழுவி விட்டு விடுகிறது என்று பொருள் கொள்ளவும்.​ (ஹப்பா.....டி கோனார் நோட்ஸ் எல்லாம் போடவேண்டியிருக்கே,,,,)

      நீக்கு
    2. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி இப்போதான் அங்கே கேள்வி கேட்டு முடிச்சிட்டு வரேன் .
      அதே தான் ஸ்ரீராம் ..துக்கத்தை மறைத்து ஒருவர் போலியாய் சிறிது பிறகு அழுவதை சொன்னீர்கள் என்பது நேக்கு புரிஞ்சது :)

      நீக்கு
    3. 'துக்கத்தை மறைத்து' என்கிற வார்த்தையைக் கூட எடுத்து விடலா மே /மோ....

      நீக்கு
    4. https://data.whicdn.com/images/319768466/large.jpg

      நீக்கு
    5. ஓ அப்பூடியா:).. நான் கொஞ்சம் ரியூப் லைட் ஆகிட்டேன் இன்று மட்டும்:)).. நேரம் கிடைக்காதபோது கடகடவென படித்து.. கொமெண்ட்ஸ் போட்டு விட்டு ஓடிடுறேன்:)..

      நீக்கு
    6. //நான் கொஞ்சம் ரியூப் லைட் ஆகிட்டேன் இன்று மட்டும்:)).//

      https://i.pinimg.com/originals/b3/fd/18/b3fd1839d3567f49dbb78156909ac1e2.gif

      நீக்கு
    7. ஹா ஹா ஹா ஹா டமில்ல டி வாங்கினவங்களுக்கு எல்லாம் கோனார் நோட்ஸ் கொடுத்துத்தான் விளக்கணும் ஸ்ரீராம்!!! ஹா ஹா

      கீதா

      நீக்கு
  40. வணக்கம் சகோதரரே

    வாழை மரத்தின் பரந்த மனப்பான்மை வியக்க வைக்கிறது. தன் முடிவுக்குப் பின்னரும், தன் கிளை சாய்ந்து,மண் பார்த்த போதும், வாழையடி வாழையாக தன் குலம் நிமிர்த்திய பெருமை போதாதென, மற்ற பசுமைகளுக்கும் ஆதரவாய், அன்பாய்.. செழித்து வளர்ந்திட உதவியவாறு மண்ணோடு தஞ்சம் அடையும் வாழை மரத்திடம் நாம் கற்று கொள்ள ஏராளமானவை இருக்கிறதென எனக்குத் தோன்றுகிறது. புது செய்திக்கு நன்றிகள்.

    பாவ மன்னிப்பு கோறும் அந்த துளி கண்ணீரின் ஆறு வாக்கிய கவிதை மனதை நிறைத்தது. அருமையாய் உள்ளது.

    மழை கவிதை அருமையாக உள்ளது.
    காற்றழுத்ததிற்கு, தங்களின் நற்பண்புடன் கூடிய கவிதையின் தாக்கம் புரிந்து மனஅழுத்தம் தாங்காது திசை மாறி நகர்ந்து வந்து சோகம் மாற்றும்.(இன்றில்லாவிடினும் என்றேனும் ஓர் நாள்)

    பதிவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து பாராட்டி எழுதியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது போல் அதில் நானும் ஒரு அங்கமாகியிருப்பதில் பெரு மகிழ்ச்சியடைந்தேன். தங்களுக்கு மிக்க நன்றிகள்.

    சாகித்ய அகாதமி விருது பெற வேண்டுமென்பதே எல்லா எழுத்தாளர்களின் கனவு. என் குழந்தைகளிடமும் நானும் இந்த பிறவியில் இல்லையெனினும், அடுத்து வருவதிலாவது பிறவியிலேயே பிரபல எழுத்தாளராகி மேடை ஏறி அந்த விருதை வாங்க வேண்டுமென கூறியிருக்கிறேன்.
    இன்று தங்கள் பதிவு கண்டு அவர்களிடம் கூறும் போது, "இந்த பிறவியிலேயே, சமையல் மேடையில் நின்றபடியே, அந்த விருதை பெற்று விட்டாயே அம்மா!" என பாராட்டினார்கள். பெற்ற பாராட்டு தங்களால் என்பதால், தங்களுக்கும் மனது நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே... கமலா அக்கா இரண்டாம் முறையும் வந்து கமெண்ட் போட்டிருக்கிறீர்கள். நன்றி.

      வாழைத்தண்டில் பெருமை, கவிதை என்று ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு நன்றிகள்.

      மழை கவிதை பற்றி ஒருவரும் ஒரு விஷயம் பற்றி பேசவில்லை. அது "எங்கிருந்தாலும் வாழ்க" டியூனில் எழுத முயற்சித்திருப்பது.

      நீங்கள் பிரும்மரிஷியாய் இருக்கலாம். ஆனால் நான் வசிஷ்டர் இல்லை! பெரிய பாராட்டாய் நீங்கள் குறிப்பிட்டிருப்பது எங்கள் மேல் உள்ள ப்ரியத்தினால்.

      நீக்கு
  41. நான் முதலில் பார்ப்பது எங்கள் ப்ளாக். அம்மாதிரி ஒரு பாசம் எங்கள் ப்ளாகின் மீது. ஆனால் அதிகம் பின்னூட்டங்கள் கொடுக்க முடிவதில்லை. புதுமையான முறையில் எல்லோரையும் ஒரு பாசமுள்ள குடும்பமாக இணைத்து வரும் எங்கள் ப்ளாக் வாழ்கவாழ்கவே. ஆசிரியர் குழு எவ்வளவு பாடுபட்டு இவ்வளவு முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருப்பார்கள். ஒவ்வொரு இடுகையும் பாராட்டும் வகையில். அவர்கள் யாவரும் வெற்றியின் உதாரணங்கள். என் வயதிற்கு நமஸ்காரம் செய்த உங்கள் யாவருக்கும் என் இனிய பாராட்டுகளும் ஆசீர்வாதங்களும்.நன்றியும். வாசகர்களுக்கும் என் அன்பு.அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சி அம்மா. உங்கள் ஆசீர்வாதம் எங்களையும் உங்கள் வயதில் உங்களை போலவே உற்சாகமாய் வைத்திருக்க உதவும். உங்களிடம் இன்னும் கூட கதைகள் கேட்க, திங்கிற கிழமைக்கு கேட்க ஆவல்தான். உங்கள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தொந்தரவு செய்கிறோமோ என்று எண்ணி கேட்காமல் விட்டு விடுகிறேன்.

      நீக்கு
  42. பல்சுவை இதழாகப் பரிமளித்து வரும் எங்கள் ப்ளாக் இந்த ஆண்டிலும் தொடர்ந்து சிறப்பான, பயனுள்ள பதிவுகளை வழங்கிட நல்வாழ்த்துகள்!

    தங்களுக்கும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ராமலக்ஷ்மி. உங்களிடம் கதை கேட்டிருக்கிறேன்! நினைவில் வைத்துக் கொள்ளவும்!

      நீக்கு
  43. ’நீங்களும் எபி-க்கு கதையெழுதலாமே..’ என 2017 மார்ச்சிலோ என்னவோ ஸ்ரீராம் பிரஸ்தாபிக்க, ஏப்ரல் 2017-ல் எதையோ கிறுக்கி அனுப்பி, அது ஆகஸ்டிலோ செப்டம்பரிலோ வெளியாகி .. இடையில் தயக்கத்துடன் சில பின்னூட்டங்களுமிட்டு, பின் காக்காக்கவிதை போன்றெல்லாம் ஏதேதோ எழுதிப்போட்டு, அதையெல்லாம் ஸ்ரீராம் பெரியமனசுபண்ணி பிரசுரித்து உற்சாகமூட்டி, அதற்கெல்லாம்கூட சலிக்காமல் சுவாரஸ்யக் கமெண்ட்டுகள் வந்து, இடையிடையே அதிரா, கீதா. ஆர், கீதா. எஸ் போன்ற கமெண்ட்-குயின்களையும், நெல்லை போன்ற பின்னூட்டப் பிரபுக்களையும் படித்து மிரண்டு (பெரியோர் சபையாயிருக்கிறதே..), பின் ஏதோ சமாளித்து அவ்வப்போது சில பின்னூட்டமோ, பின்னோட்டமோ.. தொடர்ந்து, இடையிடையே எபி நண்பர்களில் சிலர் என் பக்கமும் எட்டிப்பார்க்குமாறு ஆகி (ஸ்ரீராமுக்குத்தான் எல்லாப் புண்ணியமும்), பிறகு மேலும் மேலும் நண்பர்கள்/நண்பிகள் எனப் பெருக, எபி அரட்டை அரங்கினில் லயித்து, அன்பினால் திக்குமுக்காடி… இப்படி கிட்டத்தட்ட 2 வருடமாகப்போகிறது எபி-யுடனான சம்பந்தம்.

    இதையெல்லாம் ஒருங்கே நிகழ்த்தி சாத்தியமாக்கிய ஸ்ரீராம் மற்றும் எங்கள் பிளாக் ஆசிரியர் குழுவிற்கும், ஒட்டுமொத்த எபி குடும்பத்திற்கும் நன்றிகள் என்கிறது இந்த இடத்தில் மனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏகாந்தன் ஸார்.

      //ஏதேதோ எழுதிப்போட்டு, //

      சுவையாய் எழுதி விட்டு அவையடக்கமாய் சொல்கிறீர்கள். உங்கள் கதைகளும் அப்படியே. ஆமாம், நீங்கள் கதை எழுதி நாளாச்சே... எப்போ அடுத்த கதை?

      ஹிஹிஹி...

      நீக்கு
  44. பதிவே எழுதாமல் அவ்வப்போது பதிவுலக ஜாம்பவான்களின் பதிவுகளுக்கு எதோ பின்னூட்டம் என்று பெயரில் தோன்றியதை எழுதிய என்னையும் நினைவில் வைத்து நன்றி கூறியமைக்கு நன்றி. 3049 ! தொடரட்டும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  45. விடுமுறையில நல்ல கும்மி அடிக்கலாம் என நினைச்சிருந்தேன் ஆனா வீட்டுக்குள் அடிப்பதிலேயே நேரமாகிடுது ... நினைப்பதை எல்லாம் எழுத முடியுதில்ல கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா நான் சொன்னது புரியேல்லை ஸ்ரீராமுக்கு.. வீட்டில் எல்லோரும் விடுமுறை என்பதால், கும்மி வீட்டுக்குள்ளேயே நடக்கிறது:))..

      இங்கு போஸ்ட் படிச்சதும் பல விசயம் சொல்ல வரும். ஆனா நேரம் கிடைக்காது.. நைட் ஆகிட்டால் சொல்லியும் பலனில்லை புதுப்போஸ்ட் வந்திடும் என விட்டு விடுவேன்ன்.. அதைச் சொன்னேன்:).

      நீக்கு
  46. அற்புதமான ஸ்டாடிக்ஸுடன் அருமையான பதிவு. ஸ்ரீராம் அண்ட் கௌதமன் ஜி
    என்னையும் கௌரவித்தது உங்கள் பெருந்தன்மையைக் காண்பிக்கிறது. எபி ஆரம்பித்த புதிதில் 24 மணி நேர ஆன்லைன் அரட்டை செய்தத்து கௌதமன் சாருக்கு நினைவிருக்கிறதான்னு தெரியவில்லை.

    இந்த முன் கை முழங்கை என்பதை நான் கடந்துவிட்டேன். கொண்டுவந்தால்
    சகோதரி மாதிரி இருக்க இஷ்டமில்லை.

    திரு பட்டாபி ராமன் பதிவுகளைப் படிக்கவில்லையே என்ற வருத்தத்தை
    இப்போது உணர்கிறேன்.மிக நன்றி ஸ்ரீராம்.

    எத்தனையோ என் பதிவில் எழுதினாலும், எபியில் வரும் feedback special thaan.
    அந்த அளவுக்கு நீங்கள் உயர்ந்திருக்கிறீர்கள்.
    அந்த உயர்வு உங்களைப் பாதிக்கவில்லை.
    இன்னும் அதே அடக்கம் ,அதே நல்ல வார்த்தை.

    என் தோழிகள் அனைவரையும் இங்கே பார்க்கிறேன்.
    எழுத ஆரம்பித்த நாட்களிலிருந்து தொடர்பவர்கள் கீதா சாம்பசிவம், ஏஞ்சல், அதிரா,
    துளசி,கோமதி அரசு,திண்டுக்கல் தனபாலன்,வெங்கட் நாகராஜ் என்று நீளும் பட்டியல்.

    இப்பொழுது சேர்ந்து கௌரவிக்கும் கீதா ரங்கன்,துளசிதரன்,நெல்லைத்தமிழன், தேவகோட்டை ஜி, துரை செல்வராஜு,கரந்தை ஜெயக்குமார்
    எல்லோருக்கும் என் நன்றி.

    நாளை பேரன் ,பேத்தி,மகன் ,மருமகள் கிளம்பி விடுவார்கள் அவர்கள் ஊருக்கு.
    பிறகு நேரம் கிடைக்கும். என் அன்பு உங்கள் எல்லோருக்கும் .வாழ்க வளமுடன் என்னாளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிம்மா...கௌ அங்கிள் ஆரம்ப காலத்தில் ஆன்லைன் அரட்டை செய்தது நினைவிருக்கிறது. அப்போது அரட்டையில் அதிகம் பேர் பங்கேற்கவில்லை. சாய்ராம் கோபாலன் பங்கேற்றதாய் நினைவு!

      //அதே அடக்கம் ,அதே நல்ல வார்த்தை.//

      இவை எல்லாம் மூத்தவர்கள் நீங்கள் கற்றுக் கொடுத்தது.

      மறுபடியும் நன்றி அம்மா.

      நீக்கு
  47. /// வார வம்பு பகுதிக்கு தொடர்ந்து 24 . 1. 18 அன்றும் 15 கமெண்ட் வந்ததால் பதிவாசிரியர் வெறுத்துப்போய் 31.1.18 புதன் அன்று மௌன (எழுதா) விரதம் மேற்கொண்டார். ///

    இஞ்ச விடுங்கோ என் கையை விடுங்கோ.. ஜொள்ள வந்ததை ஜொள்ளியே தீருவேன்ன்ன்.. என் செக் எங்கேஏஏஏஏஏஎ என் முன்னங் கையை மட்டும் கொஞ்சம் இறுக்கிப் பிடிச்சுக்கோங்க:)) ஆங்ங்ங்ங்:)..

    கெள அண்ணன் போஸ்ட்டைப் போட்டு விட்டு குல்ட்டுக்குள்ளே ஒளிச்சிருந்தால் எப்பூடிக் கொமெண்ட்ஸ் வரும்?:).. வருவோரைக் கெளரவிச்சு பொன்னாடை போர்த்தினால்தானே திரும்பவும் வந்து கும்மி அடிப்பினம்.. :)..

    அதில இன்னொரு குறையும் இருக்கு அதையும் சொல்லியே ஆகோணும்.. ஆராவது பெரிய புள்ளிகள் வந்தால் மட்டும் ஓடி வந்து வரவேற்பார்.. பதில் கொடுப்பார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நம்மை எல்லாம் பல சமயம் சொய்ஸ்ல விட்டிடுவார்ர்:)).. கெள அண்ணனை ஒரு நாளைக்கு கூட்டி வந்து தேம்ஸ்கரை சுத்திக் காட்டிப்போட்டு அனுப்போணும்:).. அப்போத்தான் பெரிய அதிகாரியில் இருந்து சாதாரண தொழிலாழி வரை யார் வந்தாலும்.. கியூவரிசையில:) நிண்டுதான் பொருட்கள் வாங்கலாம் எனத் தெரிஞ்சு கொள்ளுவார்ர்... இதை அஞ்சுதான் ஜொல்லச் சொன்னா:) [மீ ரொம்ப நல்ல பொண்ணு:)] ஆனா அனைத்தையும் வெளியே கொட்டிடுவேன்ன்.. :) ஆனா ஏனைய பிரித்தானிய மக்கள் உள்ளே மட்டும் பொயிங்கிங் ஆக்கும்:))..

    என்னைப்பொறுத்து வரவேற்றால்.. அனைவரையும் ஒரே விதமாக வரவேற்கோணும்.. முடியவில்லையா.. ரைம் போதவில்லையா.. யாரையும் வரவேற்காமல் விட்டால் குறையில்லை.. இதைக் கொஞ்சம் கடைப்பிடிச்சால் இன்னும் சிகரம் தொடலாம் என்பது பிரித்தானிய மக்களின் அபிப்பிராயம்:)..

    சரி சரி பெயரில பசு(கெள) இருக்கே அது காமதேனு ஆச்சே:) என நாம் பலசமயம் பொருட்படுத்துவதில்லை:).. இருப்பினும் நம் குறைகளையும் சொன்னால்தானே வெளியே தெரியும், மனதிலேயே வைத்திருப்பது எனக்குப் பிடிக்காது... இதைக் கெள அண்ணனின் பார்வைக்கு எடுத்துச் செல்லுமாறு.. அவரின் கடசி மருமகனை மிகவும் தாழ்மையாக வேண்டிக் கொள்கிறேன்..

    இப்படிக்கு பிரித்தானிய மக்கள் கூட்டணி:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதை அஞ்சுதான் ஜொல்லச் சொன்னா:) [மீ ரொம்ப நல்ல பொண்ணு:)] //

      grrrrrrrrrrrrrrr million times

      நீக்கு
    2. கும்மி ஆரம்பிச்சாச்சா! அடிங்க, அடிங்க!

      நீக்கு
  48. //என் செக் எங்கேஏஏஏஏஏஎ என் முன்னங் கையை மட்டும் கொஞ்சம் இறுக்கிப் பிடிச்சுக்கோங்க:)) ஆங்ங்ங்ங்:)..//

    emigrated to Antarctica

    பதிலளிநீக்கு
  49. ஹலோ மியாவ் ..புதன் கேள்விக்கு மனசில் தோணுவதையெல்லாம் வெளிப்படுத்துவது சரியான்னு கேள்வி ஒண்ணு எழுதி அப்புறம் 15 க்கு மேல் வந்ததால் விட்டேன் :) பார்த்தா இங்கே மியாவ் அதே கேள்வியை கேட்டுருக்கீங்க :)

    பதிலளிநீக்கு
  50. எங்கள் பிளாகின் வளர்ச்சியும் கருத்துகள் வருவதும் பிரமிப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
    வாழ்த்துகள்! பாராட்டுகள் ஸ்ரீராம்ஜி உங்களுக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும்.

    ஸ்வாரஸ்யமான பதிவுகளும், எல்லோரையும் ஊக்குவிக்கும் வகையில் கதைகள் எழுதச் சொல்லி அதைக் கேட்டு வாங்கிப் போடுவதும், திங்கள் கிழமையில் திங்க் என்று பல சமையல் குறிப்புகள் போட வைத்து அதிலும் பலரது சமையல் திறனை வெளிக் கொணர்வதும் (ஆண்களும் அதில் நளன் என்று நெல்லை தமிழனின் மூலம் சொல்லுவதும்..) வெள்ளி தோறும் பாடல்கள் அதுவும் நான் கேட்டுப் பல வருடங்கள் ஆன பாடல்கள் மற்றும் கேட்காத பாடல்கள் என்றும், மிகவும் வித்தியாசமான புதன் கிழமை கேள்வி பதில்கள், பதில் சொல்வது கடினம் என்றால் கேள்வி கேட்பதும் கடினம் தான், இப்படி ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு டாப்பிக் என்று வைத்துக் கொண்டு பிரமிக்கும் வகையில் பல வகையிலும் மிளிரும் எங்கள் ப்ளாக் இன்னும் மேலும் மேலும் வலையுலகச் சரித்திரத்தில் இடம் பெற்று சாதனை படைத்திட மனப்பூர்வமான வாழ்த்துகள்!

    (திங்க பதிவு ஒன்றுக்குத்தான் என்னால் எந்தக் கருத்தும் சொல்ல முடியவில்லை. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ஸ்ரீராம்ஜி. ஏனென்றால் அதில் பங்கு பெறும் அளவு எனக்கு கருத்துகள் இல்லாததால். எங்கள் வீட்டில் கேரளத்து சமையல் மட்டுமே. புதிதாக எதுவும் செய்வதில்லை. அதனால்தான்.)

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!