வெள்ளி, 25 ஜனவரி, 2019

வெள்ளி வீடியோ : வானத்திலிருந்து தேவதை இறங்கி... வந்து நின்றாளோ வளையல்கள் குலுங்கி...


1971 இல் வெளியான விருது பெற்ற திரைப்படம் வெகுளிப்பெண்.  தேவிகா, நிர்மலா, ஜெமினி, முத்துராமன் நடித்தது.  


இதே கதையில் சௌகார் ஜானகி தயாரித்து தோல்வியுற்ற படம் பற்றி முன்னர் கண்டோம்!   இந்தப்படம் விருது பெற்றது.வி குமாரின் இனிய டியூனில் கண்ணதாசன் பாடல் 

அந்தக் காலத்தில் மிக திரும்பி மறுபடி மறுபடி கேட்கவைத்த பாடல்.  டி எம் எஸ்ஸின் இனிய குரலில் அழகான பாடல்.  இரண்டாவது சரணம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  வேறு வழியில்லை, அந்த சரணத்தை நீங்களே பாடிக்கொள்ள வேண்டியதுதான்! எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ 
அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது 
என்னைத்தொட்ட எண்ணங்கள் 
மின்னல் இட்ட கன்னங்கள் 
என்னென்று நான் சொல்வதோ 

சுகமான இசைபாடும் இளமங்கை யாரோ 
பதமாக நடமாடும் அவள் வண்ணத்தேரோ 
வானத்திலிருந்து தேவதை இறங்கி 
வந்து நின்றாளோ வளையல்கள் குலுங்கி 
என்னைத்தொட்ட எண்ணங்கள் 
மின்னல் இட்ட கன்னங்கள் 
என்னென்று நான் சொல்வதோ 

கரைபோட முடியாத புது வெள்ளை ஆடை 
கலைமானும் அறியாத விழி வண்ணஜாடை 
பார்வையில் இளமை வார்த்தையில் மழலை 
கூந்தலும் வணங்கும் காலடி நிழலை 
என்னைத்தொட்ட எண்ணங்கள் 
மின்னல் இட்ட கன்னங்கள் 
என்னென்று நான் சொல்வதோ 


41 கருத்துகள்:

 1. இனிய மகிழ்வான காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஜர் வைச்சாச்சு பாட்டு அப்புறமாதான் கேட்க முடியும் கேட்டுட்டு வரேன்...என்ன பாட்டுனு பார்த்துட்டுருக்கேன்...

   கீதா

   நீக்கு
  2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   நீக்கு
  3. இந்தப் பாட்டு கேட்டிருக்கேனே ஸ்ரீராம். அழகான பாடல்!!! கல்.....ஆணி....கல்யாணி!!!(யமன் கூட ஒட்டிட்டுருக்கோன்னும் தோனுது)

   கீதா

   நீக்கு
  4. ஏஞ்சலுக்குப் பிடித்த முத்துராமன் அங்கிள் பாடலா!!!!!!

   கீதா

   நீக்கு
  5. ஆமாம் ஸ்ரீராம் முழு பாடலும் இல்லை டக்கென்று முடிவது போல இருக்கு

   கீதா

   நீக்கு
 2. மிக அருமையான பாடல்.முத்துராமனுக்கு ஏற்ற குரல். இசையும் அருமை.
  அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா... முழுப்பாடல் கிடைக்காததில் கொஞ்சம் வருத்தம்.

   நீக்கு
 3. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 4. இன்று தியாகபிரம்மம் ஆரதனை நாள். ராம ஜெபம் செய்ய வேண்டும் என்றதால் ஸ்ரீராம் முத்துராமன் பாடலை பகிர்ந்து விட்டார் போலும்.

  குமார் இசையப்பில் பாடல் இனிமை.

  இந்த படம் வெற்றிகரமான தோல்வியா?
  விருது பெற்று படம் ஓடவில்லை என்றால் அப்படித்தானே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் ஓடியது என்றுதான் கேள்வி. தியாகப்ரம்மம் ஆராதனையை இங்கு போட்டால் இரண்டு மூன்று பேர்கள்தான் கேட்பார்கள். (இப்போது மட்டும் என்னவாம் என்கிறீர்களா?!!)

   நீக்கு
 5. பாடல் கேட்டிருக்கிறேன். படம் பார்க்கவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் படம் பார்க்கவில்லை ரிஷபன் ஸார். பாடல் மட்டும் அவ்வப்போது வானொலியில் கேட்டிருக்கிறேன்.

   நீக்கு
 6. பாட்டு கேட்ட நினைவில்லை 1971 ம் வருடப்படமென்கிறீர்கள் எப்படி என் நினைவுக்கு வராமல் போயிற்று இதுஎவே முழுப்பாடல்மாதிரிதானே இருக்கிறது யமன் ஆணி என்றெல்ல்லாம் கீதா கூறுகிறார் ஒன்றுமே புரியவில்லை இசை சூன்யமோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எம் பி ஸார்... கீதா அது கல்யாணி மாதிரியும் இருக்கிறது. யமன் கல்யாணி வாசனையு அடிக்கிறது என்கிறார். இது அப்போதைய ஸூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று.

   நீக்கு
 7. வாழ்க நலம்...

  காலையிலேயே பார்த்து விட்டேன்..

  காலம் நமக்குத் தோழன் (முத்துராமன்/TMS) பாடலைப் போலவே
  இதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

  இன்று வெள்ளிக் கிழமை!.. விடுமுறை நாள் - எல்லாவற்றுக்கும் முந்திக் கொள்ள வேண்டும்...

  மதியத்துக்கான சாப்பாடு (கத்தரிக்காய் சாம்பார்)வரை முடித்துவிட்டு இப்பொழுது தான் வரமுடிந்தது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா கத்தரிக்காய் சாம்பாரா ஆஹா ! பார்சல் ப்ளீஸ்!!!!!

   கீதா

   நீக்கு
  2. வாங்க துரை செல்வராஜூ ஸார்... வெள்ளிக்கிழமையைக் கொண்டாடுங்கள்.

   கத்தரிக்காய் சாம்பாரா? பலே பலே...

   நீக்கு
 8. இந்தப் பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். நல்ல பாடல். படம் பார்த்த நினைவில்லை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 9. அருமையான பாடல் கேட்டு மகிழ்ந்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரமணி ஸார். மறந்து விட்ட சில இனிமையான பாடல்கள் இவை!

   நீக்கு
 10. பாடல் மிகவும் பிடித்த பாடல். கண்ணை மூடிக்கொண்டால் எம்ஜிஆர் படம்தான் (ஆனா எம்ஜிஆர் அப்ரூவ் பண்ணும் கருத்தில்லை) கேட்டுதான் பலப்பல வருடங்களாச்சு

  பதிலளிநீக்கு
 11. படம் பேர் நினைவிலிருக்கு. பாடல் கேட்டதாய் நினைவில் இல்லை சகோ

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  பாடல் கேட்டிருக்கிறேன். படம் பார்த்ததாய் நினைவில்லை. நல்ல பாடல். இப்போதும் கேட்டு ரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கமலா அக்கா... நான் கேட்கும் பல பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்களை நான் பார்த்திருக்க மாட்டேன்!

   நீக்கு
 13. முத்துராமன் மாமாவின் படம் எனில் எப்பவும் சூப்பராகவே இருக்கும்.. பார்க்கலாம்.. வெகுளிப்பெண்ணைப் பார்க்கோணும்.. ஆனா ஆகவும் கறுபு வெள்ளையாக இருக்கே.. கிளியரா இருக்குமோ தெரியவில்லை. இப்போதெல்லாம் பழைய படங்களை சூப்பராக்கி ஏச் டி மூவி என யூ ரியூப்பில் தருகிறார்கள்.

  இப்பாடல் கேட்டதாக நினைவில்லை... பெரும்பாலும் ரேடியோவில் போயிருக்கும்.

  ஆனா கேட்க நன்றாக இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரேடியோவில்தான் நானும் இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன். நானாய் நினைவுக்கு வந்ததும் விரும்பித் தேடி சென்ற வாரம்தான் கேட்டேன்.

   நீக்கு
 14. ஆவ் !! முத்துராமன் தாத்தா படம் முந்தியும் போட்டிருந்திங்க வேற பாட்டு :)
  இசை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு .நல்ல இருக்கு பாடல் .

  //எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
  அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது //

  இதெல்லாம் கொஞ்சம் அதிகமில்லையா :) 4 டைரக்க்ஷனிலிருந்தும் கேட்டா நாற்புறமும் ஓடுவராவ் ஹீரோ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது காதல் ஏஞ்சல்... காதலினால் அப்படி உருகுகிறார் நாயகன். நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 15. அஞ்சுவுக்கும் காதலுக்கும் வெகு தூரம்:) ஹையோ ஹையோ.. ஆவ்வ்வ்வ்வ் மீ ரன்னிங்:))..

  பதிலளிநீக்கு
 16. பாடல் கேட்டிருக்கிறேன்.

  இப்போது மீண்டும் கேட்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 17. படம் பார்த்த மாதிரியும் இருக்கு, பார்க்கலை போலவும் இருக்கு! வெகுளிப்பெண்ணாக தேவிகா? அவர் சகோதரியாக முதிர்ச்சி அடைந்த பாத்திரத்தில் வெ.ஆ.நி? ம்ம்ம்ம்ம்!

  பதிலளிநீக்கு
 18. ஹிஹிஹி,பாருங்க, நான் வரலைனா உங்களுக்குப் பின்னூட்ட எண்ணிக்கையும் குறைஞ்சுடுது! யாரானும் கவனிச்சீங்களா? :))))))

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!