மகனும் மருமகளும் உமானந்தா கோவிலுக்குள் சென்று வரகாத்திருந்த நேரத்தில் பிரம்மபுத்திரா நதியைச் சுற்றிலும் கண்ட காட்சிகளும் காத்திருத்தலும்...
கடைகள்...
விற்பனைக்குத் தயாராய் எடுத்து காட்சிப்படுத்தப்படும் மலர்கள்...
இப்படி கொஞ்ச தூரம் போயிட்டு வர்றேன்....
நான் இப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேனே...
அருகே வா... அழகே வா...
என்ன இப்போ?
வயதான இலைகளும் இளம் இலைகளும் ஒரே குடும்பமாய்.. ஒரே மரத்தில்...
அருகே சில....
தூரத்தே சில....
நீர்நிலை!
ரம்யம் என்றால்...
கண் பார்க்கும் பொய்க்காட்சி என்ன?
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். எங்கள் வீட்டில் இன்றைய காலை காஃபி ரொம்ப வாசனை!
நீக்குஅட! ஸ்ரீராம் என்ன ப்ரான்ட் காஃபியோ?!!! காஃபி பொடியோ? சொல்லுங்க அடுத்த முறை சென்னை வரப்ப வாங்கிடனும்...இருங்க யோசிக்கறேன் இதுல ஏதோ உள் சமாச்சாரம் இருக்காப்ல இருக்கே!!! ஹா ஹா ஹா
நீக்குகீதா
எனக்குப் புகைய கிளப்பி விட்டுட்டீங்களே!! ஸ்ரீராம்.....நீங்க சொன்ன காஃபி வாசனை ..சரி சரி நான் அடுத்த வாட்டி வரும் போது இதே வாசனையோடு காஃபி வேணும் பாஸ்கிட்ட சொல்லி வையுங்க!! ஹா ஹா ஹா
நீக்குகீதா
முன்னாலேயே சொல்லி இருக்கிறேன் கீதா... தி நகர் பஸ்ஸ்டேன்ட் அருகே இருக்கும் சுந்தரம் காஃபித்தூள்தான் எங்களுக்கு ஆகி வருகிறது! ஆனாலும் காஃபி எல்லா நாளும் சிறப்பான சுவையில் அமைந்து விடுவதில்லை.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்கு/ஆனாலும், காஃபி எல்லா நாளும் சிறப்பான சுவையில் அமைந்து விடுவதில்லை/
உண்மை.. ஒரு சில நாட்கள் நம்மை (அதாவது அனைவருக்கும் காஃபி தயாரித்து கொடுக்கும் நம்மை) உச்சாணிக்கிளையில் தூக்கி வைத்து பேச வைக்கும் அது மறுநாளே அதல பாதாளத்தில் தள்ளி விட்டும் வேடிக்கைப் பார்க்கும். காஃபி என்றில்லை... நாம் தயாரிக்கும் எதற்குமே நம் மேல் இனம் தெரியா வெறுப்பு ஒரு நாள் வந்து விடும். காரணம், (நாம் வாங்கி வந்த வரமா? இல்லை அதுவா?) வரம் வாங்குபவர்களின் அன்றைய தினத்தைக் பொறுத்துதான் எதுவுமே சிறப்பாக அமையும். இல்லையா?
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சுந்தரம் காஃபியில் எங்களுக்கு என்னமோ நல்லா இல்லைனு தோணும். இங்கேயும் இருக்கு! ஒரு முறை வாங்கிப் பார்த்துட்டு விட்டுட்டோம். :)
நீக்குகமலா ஹரிஹரன், நீங்க எங்கே பால் வாங்கறீங்க, எந்தப் பால்னு எல்லாம் தெரியாது. சென்னையில் ஆவின் நீலப் பாக்கெட்டில் காஃஃபி நன்றாகவே இருக்கும். ஆனால் பாலை யாரும் நன்றாகக் காய்ச்சுவது இல்லை. நன்கு காய்ச்சிய பின்னர் காஃபி கலந்தால் நன்றாகவே இருக்கும். பொடியும் காரணம் தான்! இங்கே எங்களுக்குக் கறந்த பால்! (எப்போதுமே கறந்த பால் தான்) பொடி ஒரு குறிப்பிட்ட கடையில் மட்டும் வாங்குவோம். இப்போக் கொலம்பியன் காஃபி பையர் கொண்டு வந்தார். அவ்வளவு நன்றாக இல்லை. :))))) இங்கே பொடியை வாங்கி அந்தக் கொலம்பியன் காஃபியோடு கலந்து இன்று டிகாக்ஷன் போட்டேன். காஃபி அபாரம்! :)))) கொலம்பியன் காஃபி திக்னெஸ் மட்டும் கொடுக்கிறது. நம்ம காஃபித்தூள் வாசனை தூக்கும். ஆகவே காஃபி டிகிரி காஃபி! :))))
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குகாஃபி பற்றிய தங்கள் அலசல் நன்றாக உள்ளது. நானும் தங்களைப் போல் பாலை கரண்டி உபயோகித்துதான் காய்ச்சுவேன். நாங்கள் சென்னையில் உள்ளவரை கறந்த பால்தான். வீட்டு பக்கத்திலேயே கறவை மாடுகளுடன் கூடிய பண்ணை ஒன்றை அதன் ஓனர் நடத்தி பால் வியாபாரம் செய்து வந்தார். மாடுகளை இஸ்டத்திற்கு தெருவில் விட்டு கண்டதையும் தின்ன விட மாட்டார். நல்ல கவனிப்பு.. திருமங்கலம் வந்த பின்பும் அக்கம் பக்கம் விசாரித்து கறந்த பால்தான். ஆனால் அந்த பால் சென்னை மாதிரி இல்லை. இங்கு வந்த பின் நந்தினி பால் பாக்கெட் தான். (அன்று கூட விழியால் கதை பேசி என் பதிவில் இடம் பெற்றதே) அதில் நீலகலர் பாக்கெட் தான் என்னைப் பொறுத்தவரை காஃபிக்கு உகந்தது. பச்சை, சிகப்பு பால் வாடை நிறைய வரும். காஃபி பொடியும், "காஃபி டே" பவுடர்தான். கடையிலேயே காஃபிகொட்டை வாங்கி அங்கேயே அரைத்து வாங்கி வருவது. வாசனை நன்றாக இருக்கும். நான் சொன்னது சமயத்தில் நம்மை மூக்கறுத்து விடும். எப்படியும் நாம்தான் பிறந்ததிலிருந்து அதற்கு அடிமை ஆகி விட்டோமே! காஃபி பற்றிய தங்களுடைய கருத்துகளுக்கு நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம், எந்தப் பாலாயிருந்தாலும் சமயத்தில் காலை வாரி விட்டு விடுகிறது.
நீக்குஅப்பால வரேன்
பதிலளிநீக்குகாஃபி...
கீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஅடடே.. இனிய காலை வணக்கம் நெல்லை.
நீக்கு"கண்டா காட்சி"யா?
பதிலளிநீக்குஉடனே திருத்தி விட்டு அடுத்த பதில் தந்திருக்கிறேன்! நன்றி.
நீக்குஹை வாங்க நெல்லைண்ணே!!! குட்மார்னிங்க்
நீக்குகீதா
"அண்ணா"வா? வேற யாரோட சிலையைனா வச்சு அண்ணாங்கறாங்க...
நீக்குநெல்லைண்ணே நம்மூர்ல எல்லாரையும் அண்ணேன்னு கூப்பிட்டுத்தானே வயக்கம் அதான்...ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
அண்ணா பிடிக்கவில்லை என்றால் மதுரை பாஷையில் (அல்லது செந்தில் போல) அண்ணே.... !!!!!!
நீக்குகடைசி படமும் முந்தய படமும் ரொம்ப அழகா இருக்கு..
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குரம்யம் அழகு...
பதிலளிநீக்குநன்றி DD. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நீக்குHappy Birthday DD and our blessings and prayers are with you.
நீக்குடிடி இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
நீக்குகீதா
அழகிய காட்சிகள் ரசித்தேன் ஜி
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். மிக மிக இனிமையான காட்சிகள். இந்தக்
பதிலளிநீக்குகாலை நேரத்துக்கு இதம் தரும் படங்கள். காணாத காட்சி என்ன தெரியவில்லையே. பக்கத்திலும் தூரத்திலும் தெரியும் மலைகள் மிக அருமை. படம் பிடித்தவருக்குப் பாராட்டுகள்.
வல்லிம்மா... உங்கள் பதிவுல பின்னூட்டம் கொடுக்கமுடியலை. நல்ல அனுபவப் பாடங்கள்.
நீக்குஅது மேல்கோட்டை பெருமாள் இல்லையோ? நம்பெருமாள்னு போட்டிருக்கு?
நன்றி வல்லிம்மா...
நீக்குமேல்கோட்டைப் பெருமாளா அவர்?????????????????????????? எனக்கு என்னமோ ஆண்டாள் விக்ரஹமும் அர்ச்சாவதார ஆண்டாளுமாகத் தெரிகின்றனர். அவர் பெருமாளே இல்லையே! நன்றாகப் பாருங்க நெ.த.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குவித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட படங்கள். ஒரு படம் அவுட் ஆஃப் ஃபோகஸ் போல தோன்றுகிறது.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்குரம்மியமான சூழல். அழகான படங்கள்.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅன்பினொடு வாழ்க நலம்....
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார். நன்றி.
நீக்குஅழகான படங்கள்...
பதிலளிநீக்கு/// வயதான இலைகளும் இளம் இலைகளும் ஒரே குடும்பமாய்...///
மனுசனா இருந்தா - தனிக்குடித்தனம்..
இல்லேன்னா முதியோர் இல்லம்...
மரங்களாச்சே!....
துரை அண்ணா ஹா ஹா ஹா ஆனா பாருங்க எல்லாமே ஒரே மரத்துல கூட்டுக் குடும்பமா கும்மி அடிக்குது காத்துல ஒன்னுக்கொன்னு உரசிக்கிட்டு!!! அழகுதானே இல்லையா
நீக்குகீதா
//மரங்களாச்சே!....//
நீக்குஅதானே!
படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன
பதிலளிநீக்குடிடி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
துளசிதரன்
நன்றி துளஸிஜி.
நீக்குஅருகே சில// அந்தப் படத்தில் ஸ்னோவா?!! சூப்பரா இருக்கு...
பதிலளிநீக்குநெல்லை அதை பார்க்கலையா? ஸ்னோ பாருங்க!
கீதா
மரத்தின் வேர்களில் பலகாட்சிகள்அருமை. படங்களெல்லாம் அழகு. நான் கௌஹாட்டியில் பத்துமாதம் இருந்திருக்கிறேன். ஆனால் இந்த இடம் போனதாக ஞாபகமில்லை. ருத்திராக்ஷக்கடைகள் காட்மாண்டுவை ஞாபகப்படுத்தியது. மஞ்சள் மலர்கள் நாம் உபயோகப்படுத்தாதது , வட இந்தியாவில் பூஜைக்கு அந்த மாலைகளே!
பதிலளிநீக்குவாங்க காமாட்சி அம்மா. நீங்க அங்கேயே இருந்தும் இதையெல்லாம் பார்த்ததில்லை என்பது ஆச்சர்யம்.
நீக்குதனபாலன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளும் ஆசிகளும். அன்புடன்
பதிலளிநீக்குAs you think the clock clicks என்பார்கள் கடைசி படத்தில் ஒரு குரங்கின் சேட்டை தெரிந்தது
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்.
நீக்குசகோதரர் தனபாலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். குறள் போல சிறப்போடும், புகழோடும் நீடுழி வாழ வாழ்த்துகிறோம்.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை. அந்த கேந்திப்பூ! வடக்கே அதிகம். அதில் தான் சுவாமிக்கு மாலையும் கட்டுவார்கள். நாமெல்லாம் தொடக் கூட மாட்டோம். நசிராபாத் மால்ரோடில் எங்க குடியிருப்பில் வாசல் லானில் சுற்றி கேந்தியும் நித்யகல்யாணியும், டேலியாப்பூக்களும் பார்டர் மாதிரி வைத்திருந்தோம். வாசலில் முல்லைக்கொடி! சென்னையில் அம்பத்தூர் வீட்டில் இருந்து கொண்டு சென்று நட்டது.
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.
நீக்குநல்லா ரசிச்சுப் படம் எடுத்திருக்காங்க. முதியோர்களும், இளையோர்களும் சேர்ந்து இருந்த காலத்தை நினைவூட்டும் இலைகள்! உண்மையிலேயே ரம்மியமான சூழ்நிலை தான். இதே போல் தான் மத்ராவில் யமுனைக்கரையில் கோகுலத்தில் பெரிய பெரிய ஆலமரங்கள் விழுதுகளோடு தொங்கும். ஆங்காங்கே பஞ்சகச்சம் கட்டிய சின்னப் பையர்கள் விழுதுகளில் தொங்கி ஊஞ்சலாடுவார்கள். உண்மையான கோகுலமாகவே இருக்கும் பார்க்க! பறவைகளின் கூச்சல் தாங்க முடியாது. இப்போ எப்படி இருக்கோ தெரியாது. போயிட்டு வந்து 20 வருஷம் ஆச்சு!
பதிலளிநீக்குநன்றி கீதா அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஞாயறு படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. இயற்கை வனப்புகள் கண்ணை கவர்கின்றன.
வயதான இலைகளும், இளம் இலைகளும் ஒரே குடும்பமாய் அழகாக உள்ளது. தனிக்குடித்தன விபரங்களை இன்னமும் மனிதர்களை பார்த்து கற்கவில்லை போலும்.. என்றுமே அதை கற்காமலே நலமுடன் இருக்கட்டும்.
மலைகளும், நீர் நிலைகளும் கண்களுக்கு என்றுமே ரம்யந்தான். அருமையாக உள்ளது.
மரக்கிளைகள் நிறைந்த படம் இயற்கையின் அற்புத வேலைப்பாடுகளை உள்ளடக்கியது. மனதில் எண்ணும் உருவங்களை தோற்று விப்பது.
சகோதரர் தனபாலன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை அன்புடன் கூறிக் கொள்கிறேன். இன்று போல் அவர் என்றும் சிறப்புடன் வாழ இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா..
நீக்குபிரம்மபுத்திரா!.... பெயரே அழகு தான்!
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார்.
நீக்குபடங்களே படைப்பாய்,படைப்பே படங்களாய்/வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குரசனையான புகைப்படங்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு// வயதான இலைகளும் இளம் இலைகளும் ஒரே குடும்பமாய்...///
பதிலளிநீக்குகேட்க அருமையாக இருக்கிறது.
படங்கள் எல்லாம் அழகு.
நதிக்கரையோரம் அழகுதான்.
நேற்று உறவினர் வருகை இணையம் பக்கம் வர முடியவில்லை.
பதிலளிநீக்குகாலை குழந்தைகள் பேசினார்கள். அதனால் தாமதமாய் புதியபதிவிலும்.