1) துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பதிலாக, வேறு வகையில் கலவரத்தை கட்டுப்படுத்தும் புதிய ரக துப்பாக்கியை, கும்பகோணத்தைச் சேர்ந்த இன்ஜினியர் கண்டுபிடித்துள்ளார். தஞ்சாவூர், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் சரவணன்....
2) பணத்தின் அளவு சிறிது. ஆனால் அந்தச் செயல் காட்டிய குணத்தின் அளவு பெரிது... கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பரங்கிப்பேட்டையில் பெட்ரோல் பங்க்கில் பணப்பையை பறிக்க முயன்ற கொள்ளையர்களை எதிர்த்துப் போராடிய ஊழியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
3) ரத்தவெள்ளத்தில் கிடந்த ஒரு போலீஸ்காரரை அனைவரும் சுற்றி நின்று வழக்கம்போல வீடியோ எடுத்துக் கொண்டிருக்க, நீலமங்களா - ஏலங்கா இடையே பேருந்து ஓட்டும் YN கங்காதர் நடத்துநர் ஸ்ரீநிவாஸுடன் சேர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி உள்ளார். (செய்தி உதவி கீதா ரெங்கன் - வாட்ஸாப் வழி)
4) அடுத்தவர் பணம் எனக்கு வேண்டாம். என் பணம் எனக்கு போதும். (செய்தி உதவி பானுமதி வெங்கடேஸ்வரன் - வாட்ஸாப் வழியாக)
5) புலிக்குதான் முறம்.. கொள்ளையர்களுக்கு அரிவாள்தான்...
அதிகாலை 2 மணிக்கு நாய்கள் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்தன. இதனால் கவிதாவின் தோழியான பக்கத்து வீட்டை சேர்ந்த கயல்விழி (42) என்ற பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் காட்டு யானைகள்தான் வந்துவிட்டது என்று நினைத்து, தனது வீட்டின் முன்பு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை கண்காணித்தார்.
அப்போது சீனிவாசபிரபு வீட்டின் கதவை உடைத்து 2 பேர் உள்ளே செல்வது தெரிந்தது. அப்போதுதான் கயல்விழிக்கு வீட்டில் யாரும் இல்லாதது தெரியவந்தது. உடனே அவர் கவிதாவுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். உடனே உஷாரான கயல்விழி சிறிதும் தாமதிக்காமல் தூங்கிக்கொண்டு இருந்த தனது கணவரை எழுப்பி, தகவல் தெரிவித்தார்.
பின்னர், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு திருடன், திருடன் என்று கத்தியபடி சீனிவாச பிரபு வீட்டின் முன்பு சென்றார். வீட்டின் வெளியே அரிவாளுடன் ஒரு பெண் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள், வீட்டைவிட்டு வெளியே வந்து ஓடினார்கள். எனினும் அவர்கள் இருவரையும் அந்த பெண் துணிச்சலுடன் துரத்தினார்....
6) பாபுராவின் இன்னொரு பக்கம் கருணை நிறைந்தது.பசியின் கொடுமையை உணர்ந்ததாலோ என்னவோ தனது கடை அமைந்திருக்கும் தெருவில் இருக்கும் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பணமில்லாத நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு காலை மற்றும் மதிய உணவை இலவசமாக கடந்த பத்து ஆண்டுகளாக வழங்கி வருகிறார்.
மேலும் குணமான நோயாளிகள் ஊர் திரும்புவதற்கு தேவையான பணத்தையும் இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான உதவியையும் இவரே செய்து வருகிறார்....
மேலும் குணமான நோயாளிகள் ஊர் திரும்புவதற்கு தேவையான பணத்தையும் இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான உதவியையும் இவரே செய்து வருகிறார்....
first
பதிலளிநீக்குவருக.. வருக...
நீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
பதிலளிநீக்குகீதா
என்ன ஆச்சு ஸ்ரீராம் உங்களைக் காணலை?!!!!!
நீக்குதுரை அண்ணா தாமதமாகும்ன்னு தெரியும்
கீதாக்கா பிசி
கீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்கு// என்ன ஆச்சு ஸ்ரீராம் உங்களைக் காணலை?! //
அமாவாசை!
ஹா சேர்ந்து குதிச்சப்பவும் ஹா ஹா
பதிலளிநீக்குகுமார்னிங்க் ஏஞ்சல்....
கீதா
Good morning geetha :)
நீக்குவருகைதரும் அனைவருக்கும் இனிய சாட்டர்டே வணக்கங்கள் :)
பதிலளிநீக்குஉங்களை எதிர்பார்த்தே வந்தேன்....ப்ளாக் க்ளிக் பண்ணிட்டு மேலும் படிக்கவை க்ளிக் செஞ்சு வரதுக்குள்ள மௌஸ் பிரச்சனை !!!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
பூஸாரும் எல்லாரும் தள்ளிப் போங்கோ....நான் குதிக்கனும் என்று முண்டி அடிச்சு எபிக்குள்ள குதிச்சுருவாரோனு கொஞ்சம் டெரரோடுதான் வந்தேன்...ஹா ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
அட எல்லோரும் எபி பாசிட்டிவ் செய்திகளில் பங்கு பெறத் தொடங்கியாச்சு!! மகிழ்வான விஷயம்!!
பதிலளிநீக்குஇன்ஸ்பிரேஷன் எபி!!! அதிலும் ஸ்ரீராமின் தந்தை இல்லையா ஸ்ரீராம்...
கீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் வெங்கட்.
நீக்குபுதிய துப்பாக்கி கண்டுபிடிப்பு - நல்ல விஷயம். சரவணன் அவர்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குபெட்ரோல் பங்க் ஊழியர் பாவம். அவர் விரைவில் குணமடைந்திட பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஇப்படி சிசிடிவி இருக்கும் பிடிபடுவோம் என்றும் எப்படி இப்படியான குற்றங்கள் நடக்கின்றன என்று என் மண்டைக்குப் புரியவில்லை...
கீதா
>>> இப்படி சிசிடிவி இருக்கும் பிடிபடுவோம் என்றும் எப்படி இப்படியான குற்றங்கள் நடக்கின்றன என்று என் மண்டைக்குப் புரியவில்லை...<<<
நீக்கு99 % கேமராக்கள் வேலைசெய்யாது ..ங்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்...
ஆனாலும் அதுல மாட்டிக்கிட்டது காலக்கெரகந்தான்!..
சிவசங்கரன் அவர்களின் தைரியம் பாராட்டுக்கு உரியது. செலவுகளை நிறுவனம் கவனித்துக் கொள்ளும் என நம்புவோம்.
பதிலளிநீக்குகலவரத்தை கட்டுப்படுத்த இந்த மாதிரி கண்டுபிடிப்பு நம்ம ஊருக்கு அவசியமே .
பதிலளிநீக்கு2800 ரூபாய்தான் ஆனாலும் தீமையை எதிர்த்து போராடியவர் பாராட்டுக்குரியவர்
போலீஸ்க்காரரை காப்பாற்றிய நல்லுள்ளம் கொண்ட நடத்துனர் ஓட்டுநர் இருவரும் வாழ்க .
ஒருவரின் கஷ்டத்தை வேடிக்கை பார்த்தது மட்டுமின்றி படமும் எடுத்தோர் கைகளில் ஸ்டிங்கிங் நெட்டில் /பூனைகாஞ்சான் செடியை வைத்து தேய்க்க .
நமக்கு உரிமை இல்லாதது நமக்கு வேண்டாம் அது எதனை மதிப்புள்ளதாயிருந்தாலும் நல்ல மனம் வாழ்க
அறிவால் தூக்கிட்டு கள்வரை துரத்தி ஓடிய பெண் செய்தி கேள்விப்பட்டது .
வாவ் பாபுராவ் ! நல்ல மனம் வாழ்க ,அது என்ன பேப்பர் பிளாஸ்க் ?
பகிர்வுக்கு நன்றி எங்கள் ப்ளாக்
ஏஞ்சல் இப்ப இங்க பேப்பர் ஃப்ளாஸ்க் வந்திருக்கு...இதோ லிங்க்
நீக்குhttps://lh3.googleusercontent.com/NdgDnMNN7UbJy5tRgNfLoG48QY76pJUYqeTnj-tRI19C9ZXhu5HbDLPXTDAjXMXFEiIW=s110
கீதா
இன்னொரு பக்கம் மனசு கேள்வி கேக்குதே...பேப்பர் கப்ஸ், பேப்பர் ஃப்ளாஸ்க்....எல்லாத்துக்கும் மரங்கள் தானே பேஸ் இல்லையோ? மரங்கள் நிறைய வெட்டப்படுமே...
நீக்குகீதா
ஓஹோ இதுதானா ,,தேங்க்ஸ் கீதா
நீக்குபெங்களூர் ஓட்டுனர் நடத்துனர் இருவரின் மமிதாபிமானமும் போற்றத்தக்கது. ஓட்டுனரைத் தாக்கிய மாக்கள்.... யாரையாவது அடிக்க வேண்டும் என்றால் இவர்களுக்கு மகிழ்ச்சி!: ( என்ன மனிதர்களோ?
பதிலளிநீக்குஏடிஎம் விஷயம் - செந்தில் அவருக்குப் பாராட்டுகள்...
பதிலளிநீக்குகூடவே ஒரு சின்ன பயமும் வருகிறதோ...இப்படியான டெக்னிக்கல் ஃப்ளா...
கயல்விழி நிஜமாகவே வீரப்பெண்மணி!!!!! பாராட்டுகள்!!
பாபுராவின் சேவை மிக மிகப் பாராட்டிற்குரியது...வாழ்த்துகள்!
கீதா
செய்திகளைப் படித்துக் கருத்துரை வழங்கிய ஏஞ்சல், கீதா, வெங்கட்...
பதிலளிநீக்குநன்றி நன்றி நன்றி.
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குநம் எண்ணங்களுக்கும் நேர்மறை எண்ணங்களை ஊட்டும் செய்திகள் ..
பதிலளிநீக்குஅருமை ..
கும்பகோணம் சரவணன் வியக்க வைத்துள்ளார் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஅருவாள் கொண்டு விரட்டியது ஸூப்பர்.
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகலவரத்தை கட்டுப்படுத்த உருளை, களிமண் துப்பாக்கி அருமை. கண்டுபிடித்த சரவணுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஉயிரை பொருட்ப்படுத்தாமல் போராட்டிய கடமை உணர்ச்சி கொண்ட பெட்ரோல் பங்க் ஊழியருக்கு வாழ்த்துக்கள்.
கீதாரங்கன் அனுப்பிய செய்தி, பானு அனுப்பிய செய்து எல்லாம் நல்ல உள்ளங்களை சொல்லுது.அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
கொள்ளையரை துரத்திய துணிச்சலான பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.
பாபுராவ் அவர்களின் நற் செயலுக்கு வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
பதிலளிநீக்குஇன்றைய செய்திகளில் சிலவற்றைப் படித்திருக்கிறேன்..
ஆனாலும் எபியின் வழியாக மீண்டும் படிக்கும்போது சொல்லவே வேண்டாம்!...
நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..
பாசிட்டிவ் செய்திகள் அதிகரித்தரிப்பது மகிழ்ச்சியளிக்குது..
பதிலளிநீக்குபெட்ரோல் பங்க்கில் நடந்த கதையை வீடியோவாய் பார்த்தேன்.
நல்ல மனங்கள் வாழ்க! வளர்க!
பதிலளிநீக்குஎல்லா செய்திகளுமே சிறப்புதான்,என்றாலும் அந்த பெட்ரோல் பங்க் ஊழியர் நெகிழ்த்துகிறார். அவர் பூரண குணம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன். நல்ல மனங்கள் வாழ்க!
பதிலளிநீக்குஅது சரி ஏஞ்சல் என்ன தூங்குவதே இல்லையா?
பதிலளிநீக்குஅது சரி ஏஞ்சல் என்ன தூங்குவதே இல்லையா?
பதிலளிநீக்குஅது பானுக்கா :) இனிமே இப்படி வர முடியாது ..மண்டெலாருந்து ஸ்கூல் ஸ்டார்ட் ஆகுது
நீக்குஸ்ரீராம், இன்று ஹனுமத் ஜெயந்தி. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றீர்களா? இன்றாவது பொங்கல் கிடைத்ததா?
பதிலளிநீக்குபொங்கல் தானே கிடைக்குது? அவர் ஏங்கறது புளியோதரைக்கு! ))))
நீக்குஹையோ பானுக்கா பொங்கல்தான் தினமும்...கீதாக்கா சொன்னது போல...அவர் புளியோதரை கிடைககதான்னு தானே ஏக்கம்!!!! ஹா ஹா ஹா
நீக்குகீதா
இம்மாதிரியான பாசிடிவ்வான செய்திகளைப் படிக்கும் போது நல்ல வேளை மனிதம் இன்னும் உயிருடந்தான் இருக்கிறதுஎன்பது தெரிகிறது
பதிலளிநீக்குகொள்ளையரை அரிவாளுடன் விரட்டிய பெண்ணிடம் அவர்கள் சிக்கினார்களா
பதிலளிநீக்குமக்கள் இன்னமும் மனிதத்தோடு வாழ்கிறார்கள் என்பது தெரிகிறது. காவல்துறை ஊழியரைக் காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துனர் பற்றிப் படிச்சேன்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய மாலை வணக்கம். நல்ல செய்திகளை அனுப்பிய கீதா ரங்கனுக்கும், பானுவுக்கும் மனம் நிறை வாழ்த்துகள். பெட் ரோல் பங்க் ஊழியர் விரைவில் நலம் பெற வேண்டும்.
பதிலளிநீக்குவலிமையான துப்பாக்கி கண்டுபிடித்த இளைஞருக்கு வாழ்த்துகள்.
அரிவாள் கொண்டு கொள்ளையரை விரட்டிய வீராங்கனை நிஜமாகவே பாராட்டப் படவேண்டியவர்.
தனக்கு உரிமையில்லாத பணத்தைக் கொண்டு வந்து கொடுத்த நல்ல மனிதர் என்றும் வாழ்க.
நான் சென்னை சென்ற போது என் கார்ட் வேலை செய்யவில்லை. எஸ்பி ஐ பதிலும் சொல்லவில்லை.
@துரை செல்வராஜு, இப்பொழுதும் எங்கள் வீட்டு சிசி காமிராவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரோடு முழுவதும் வாகன நெரிசல். அனுமத் ஜயந்தியை முன்னிட்டுக் கூட்டம். அத்தனை வண்டிகள் நடுவிலும் எங்கள் காம்பவுண்ட் சுவர் பப்ளிக் டாய்லெட்டாக உபயோகமாகிறது.
எங்கேயோ ஒருவருக்கு ஷாக் அடித்ததாம். அதுபோல மரண அடி இல்லாமல் ஒரு சின்ன வலி ஏற்படுத்தும் கருவி இருந்தால் இந்த அசிங்கங்களைத் தவிர்க்கலாம்.
இவர் இருக்கும் போது ஒரு சத்தம் போட்டால் ஓடிவிடுவார்கள்.
காம்பவுண்ட் சுவரில் பிள்ளையார் வரைந்து வைத்தார். அவர் மேலேயே
அழுக்கு செய்கிறார்கள் மனிதர்கள்.
Welcome back Geetha ma. எங்கள் வீடே காலியான மாதிரி இருக்கு. சின்னவன் குடும்பம் நேற்று
பதிலளிநீக்குஅவர்கள் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். அத்தையுடன் அத்தனை ஒட்டுதல். பாட்டியை அவ்வப்போது கண்டு கொண்டார்கள் ஹாஹா.
பாபுராவ் அவர்களின் இனிய உள்ளத்துக்கு மனம் நிறைந்த வந்தனங்கள்.
பதிலளிநீக்குஎத்தனை பெரிய உதவி இது.வளமுடன் வாழ்க அவர் செயல்கள்.
அனைத்துச் செய்திகளும் அருமையான செய்திகள். எல்லாச் செய்திகளும் வாசித்தேன் விரிவாகச் சொல்ல இயலவில்லை...
பதிலளிநீக்குதுளசிதரன்
உதவும் மனங்கள் இன்னும் இன்னும் இருக்கிறதுதான்,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அவர்களுக்கு.