புதன், 2 ஜனவரி, 2019

190102 புதன் : பசோமிசீதோ !


கீதா சாம்பசிவம் : 

? கல்யாண வரவேற்பு நிகழ்வுகளில் அமர வைத்துப் பரிமாறுவதை ஆதரிக்கிறீர்களா? அல்லது பஃபே முறையில் உணவுகள் வைத்திருப்பதையும் நாமே தேர்வு செய்து உணவு எடுத்துக் கொள்வதையும் ஆதரிக்கிறீர்களா?# Buffet  முறையில் சாப்பிடுவோருக்கு திருப்தி நிச்சயம். ஒரே உணவைக்கூட இரண்டு மூன்று முறை சாப்பிடலாம்.  

$ பந்தி பஃபே இரண்டில் நான் விரும்புவது பஃபே. நாம் உணவை வீணாக்காமல் சாப்பிட முடியும். ஈ மொய்த்தபடி பரிமாறப் பட்ட வரிசை தவிர்க்கலாம். வேண்டாததை விலக்கல் எளிது. நமக்குப் பிடித்தமான குழுவோடு சாப்பிடலாம். உணவை மடியில் கொட்டிக் கொள்ளும் வாய்ப்பு குறைவு.     

& இதுவா அல்லது அதுவா என்று யோசித்துக்கொண்டிராமல், பந்தியில் ஒருமுறை, பஃபேயில் ஒருமுறை என்று சாப்பிட்டுவிடுவேன். 
           
? பஃபே முறையில்   ஏற்கெனவே சாப்பிட்ட தட்டிலேயே மீண்டும் அனைத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும். இது பிடிக்குமா?
  
 # ஒவ்வொன்றாகக் காலி செய்து சாப்பிடுவதும் ஒரே இலையில் சாப்பிடுவதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தானே? 

$ தட்டேந்திப் போய் வாங்கிக் கொள்வதில் அகௌரவம் இல்லை என நினைக்கிறேன். 

& பிடிக்கும், பிடிக்கும்! தட்டையா சாப்பிடப்போறேன்? உணவைத்தானே! 
       
? இலையைப் போட்டு ஏற்கெனவே பரிமாறப்பட்டு இருக்கும் இலைகளில் உணவு உட்கொள்ளுவதைப் பிடிக்காவிட்டாலும் தவிர்க்க முடிவதில்லை.  இதற்கு உங்கள் கருத்து என்ன?  

# சமீபத்திய திருமண வரவேற்பில் வரவேற்பு மேடை, வாத்தியக் குழுவினரின் கச்சேரி, buffet தவிர இலை போட்டு சாப்பாடும் ஒரே நேரத்தில்.  அதிசயமாக இரைச்சல் இல்லாத சூழ்நிலை நன்றாக இருந்தது. 

& எல்லாம் ஏற்கெனவே பரிமாறப்பட்டிருந்தால்,  பெரிய சைஸ் ஸ்வீட் எந்த இலையில் இருக்கு என்று பார்த்து, தேர்ந்தெடுத்து, உட்கார்ந்து வெட்டலாம்! 

? பரிமாறினாலும் நாம் சாப்பிடுவதற்குள்ளாக அடுத்தடுத்து உணவு வந்து கொண்டே இருக்கும். சாப்பிட முடிவதில்லை!  அதிக உணவு மிஞ்சித் தான் போகிறது. அதை என்ன செய்வார்கள்?


# பரிமாறி சாப்பிடும் பந்திகளில் கொஞ்சம் அவசரமாக காருக்கு எரிபொருள் நிரப்புவது போல தோன்றுகிறது.

$ உணவு மிஞ்சியதை சரியாக பயன்படுத்துவது அசாத்தியம். அப்படி செய்யப்பட்டது என் வரை ஒருமுறை மட்டுமே. அதுவும் சிறு அளவுதான்.

? அநாதை ஆசிரமத்துக்கோ அல்லது முதியோர் இல்லத்துக்கோ கொடுக்க முடியாது. (அகாலமாக இருக்கும்) மறுநாள் காலை கொடுப்பதெனில் பல உணவுகள் வீணாகி இருக்கும். சொந்தக்காரங்க கல்யாணங்களிலே உணவைக் கீழே கொட்டுவதைப் பார்த்திருக்கேன். இது நல்லதா? தேவை தானா?


# மிஞ்சும் உணவை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து எடுத்துப் போய் விநியோகம் செய்ய சேவை நிறுவனங்கள் இருக்கின்றன.
கீழே கொட்டுவதைத் தவிர்த்து, Bokashi (** முறையில் எரு தயார் செய்யலாம் அல்லது தயார் செய்பவருக்குக் கொடுத்து விடலாம்.

** Bokashi composting is an anaerobic process that relies on inoculated bran to ferment kitchen waste, including meat and dairy, into a safe soil builder and nutrient-rich tea for your plants.

துளசிதரன் : 

? பள்ளிக் கூடம் படிக்கும் போது கிடைத்த விடுமுறை, கல்லூரிக் காலத்தில் கிடைத்த விடுமுறை, வேலைக்குச் சென்ற போது கிடைத்த/கிடைக்கும் விடுமுறை இதில் எது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது? (இதில் வழக்கமான விடுமுறை மற்றும் எதிர்பாராமல் கிடைத்த விடுமுறை இரண்டும் உண்டு.)


# விடுமுறையில் பல ரகம். எல்லாம் ஒரே மாதிரி வரவேற்பைப் பெறுவதில்லை.

$ படிப்பு நாட்களில் விடுமுறையின் அருமை தெரிவதைவிட அது முடியப் போவது குறித்த அதிருப்தி தான் மிகையாக இருந்தது. வேலை வந்தபின் "ஆகா இன்னும் இரண்டு நாள் ஜாலி" என்று தோன்றியது.

& முறையான விடுமுறைகள் முறையாக அமைந்ததால் முழுவதும் இனிக்கவில்லை. எதிர்பாராத விடுமுறைகள் திக்குமுக்காட வைத்ததுண்டு. அனுபவிக்க இயலாத விடுமுறைகள் தலைவர்களின் அகால மரணங்களால் கிடைத்தவை. 

ஏஞ்சல் : 


1,என்ன லைஃப் இது ? என்று அடிக்கடி வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் புலம்புவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ??

# புலம்புவோர் புலம்பிக் கொண்டுதான் இருப்பர். அவர்களை நாம் ஏன் பொருட்படுத்தவோ முன்னோடியாகக் கொள்ளவோ வேண்டும்?
 
$ எல்லாம் இருந்தும் புலம்புபவர்களிடம் இல்லாமற்போனது மனப் பக்குவம் என நினைத்துக் கொள்வேன்.

& என்ன 'லைஃப்' இது என்று புலம்புபவர்கள், ஒரு வேளை ஆங்கிலம் தெரியாதவர்களாக இருப்பார்களோ? 
2,ஒருவரை நல்வழிப்படுத்துவது எது ? பெற்றோர் வளர்ப்பா ,கல்வியா ? அல்லது சூழலா ?# நம் வீட்டு சாம்பாரில் எதனால் ருசி கூடித்தெரிகிறது?
உப்பு, உறைப்பு, புளிப்பு  இப்படி கேட்க முடியுமா! 
வளர்ப்பு, சூழல், கல்வி எல்லாம்தான் வேண்டும்.

$ நல்வழிப்படுத்துவது அவரவர் மன உந்துதல் மட்டுமே.

& பெற்றோர் வளர்ப்பு = 50%, கல்வி = 30%, சூழல் = 20% 

3,புத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பது அவசியமா ? உங்களது 2019 இற்கான தீர்மானங்கள் என்ன ? 2018 இல் எடுத்த தீர்மானங்களை செய்து முடித்தீர்களா ?


# புத்தாண்டு தீர்மானங்கள் வெகு நாட்களாகத் தள்ளிப் போடப்பட்ட வேலைகளின் புதுப்பிக்கப்பட்ட ஸ்டார்டிங் பாயிண்ட்.  
  
$ புத்தாண்டுத் தீர்மானங்கள் அவசியம் இல்லைதான். ஆனால் "இன்று முதல் இனி எப்போதும்..." என்பது புதுவருடப் பிறப்பு உள்பட எந்தநாளிலும் ஏற்புதான். புத்தாண்டு உறுதிகள் நான் எடுப்பதில்லை. இந்த 2019ல் முயன்று பார்க்கிறேன்.

& புத்தாண்டுத் தீர்மானங்கள் மிகவும் அவசியம். நான் நிறைய தீர்மானங்கள் எடுப்பேன். பிறகு அவைகளை ஒன்றொன்றாகக் காற்றில் பறக்கவிட்டு, சந்தோஷப்படுவேன். 

4, சதுர வடிவ floor ஸ்லாப்ஸ் எங்கு பார்த்தாலும் ஒவ்வொன்றிலும் கால் பதித்து நடக்க ஆசை தோன்றுவது உண்டா ? அப்படி நடத்திருக்கிறீர்களா? 


# முன்பு இரண்டு காலும் எழும்பிக் குதிக்க முடிந்த போது பாண்டி விளையாடுவது போல் குதித்துப் போனதுண்டு.
 
$ இல்லை. தாண்டிக் குதித்ததுண்டு மிக இள வயதில்.

& ஆமாம். சிறுவயதில் ஏரோப்ளேன் பாண்டி விளையாடிய நாட்களில்!  (பசங்க என்னை ஆட்டத்துக்கு சேர்த்துக்கொள்ளமாட்டாங்க - சேர்த்துக்கொண்டாலும் ஒப்புக்குச் சப்பாணி, ஊருக்கு மாங்கொட்டை என்று சொல்லி நிஷித்தம் செய்வார்கள்.) அதனால பொண்ணுங்க கூட பாண்டி விளையாடியது உண்டு. எங்கே சதுர வடிவு ஸ்லாப்ஸ் பார்த்தாலும், முள்ளை மிதிக்காமல், ஜாக்கிரதையாக கால் பதித்து, செல்வேன்! 

5,நல்ல நட்புக்கும் சிறந்த நட்புக்கும் வித்தியாசம் இருக்கா ?? அது என்ன ?


$ நீண்டு நிலைப்பது நல்ல நட்பு. நம்மை நல்வழிப் படுத்துமானால்  சிறந்த நட்பு.

&  நல்ல நட்பு, நாம் சொல்வதை எல்லாம் மறுத்துரைக்காமல் கேட்டுக்கொள்ளும். சிறந்த நட்பு, நாம் தவறிழைத்தால், தலையில் குட்டும். 

 
நெல்லைத் தமிழன் :

? இணையத்தின் மூலமா ஆர்டர் செய்து சாப்பிடும் கல்ச்சர் அதிகரித்துவிட்டது. இதைப்போன்றே மளிகை சாமான்கள் வாங்குவதும். இது எவ்வளவுதூரம், நன்மைகளை, பாதிப்புகளை அடுத்த 5-10 ஆண்டுகளில் கொண்டுவரும்?


# ஒரு நன்மை.  எப்போதும் வாங்கும் பண்டங்களுக்காக நாம் வாகனங்களை உபயோகித்தல் குறைந்து வருகிறது. சில்லறைப் பிரச்சனை இன்றி பணப்புழக்கம்.  

$ வசதியும் இருந்து, சோம்பலும் இருந்தால் இது எல்லாத் துறைகளிலும் அதிகரிக்கும்தான். கிடைத்த நேரம் எப்படிச் செலவாகிறது என்பதைப் பொறுத்து இது நல்லதா அல்லதா என்றறியப்படும்.

? ஆட்டோ காரர்கள் இஷ்டப்படி பணம் கேட்டதுபோக, அவங்களுக்குக் கடிவாளம் போடும் விதமா ஓலா, ஊபர் என்று வந்துள்ளதை நீங்கள் எப்படிப் பார்க்கறீங்க?

               
# ஓலா வந்த பின் கஷ்டம் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
            
$ ஓலா, உபெர் ஆகியவை ஆட்டோ பேராசைக்கு மாற்றுதான்.
       
? பெரிய கல்யாணங்களில் சமையல் பொறுப்பை ஏற்றுச் செய்பவர்களுக்கும், வீட்டில் போய் ரசம் சாதம், அப்பளாம், இல்லைனா மோர் சாதம் ஊறுகாய் சாப்பிட்டால் போதும் என்று ஏன் தோன்றுகிறது? (உடனே நடிகைகளின் வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு, பேசாமல் கிராமத்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் போதும் என்ற மனநிலை இருக்குமோ என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாதீர்கள், அதைச் சாக்கிட்டு பாவனா படம், அ படம் தடை செய்யப்படுகிறது)

& : 


$ Familiarity breeds contempt என்று பதில் சொல்லத் தோன்றினாலும், ஊறுகாய் மோர்சாதம் more familiar என்பதால் அது உண்மையில் staple என்று உணர்கிறோம்.

? விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற பழமொழி நமக்கு என்ன செய்தி சொல்கிறது?


$ விருந்து சென்று மூன்று நாட்களுக்கு மேல் தங்காதே, மூன்று நாட்களுக்குள் தீராத நோய்க்கு இடம் தராதே எனச் சொல்வதாக நினைக்கிறேன். 

& வாரத்தில் மூன்று நாட்கள் விருந்து சாப்பிட்டால், மூன்று நாட்கள் அஜீரண மருந்து சாப்பிடவேண்டும். ஞாயிற்றுக்கிழமை எல்லோருக்கும் லீவு. சரியா? 

? இந்த 'ஆர்கானிக் காய்கறி, சமையல் பொருட்கள்' என்று சொல்றாங்களே... இதில் எவ்வளவு தூரம் உண்மையிருக்கும்?


# ஆர்கானிக் காய்கறியில் சத்திருக்குமோ இல்லையோ பூச்சி இருக்கும் விலையும் அதிகமிருக்கும். தரமற்ற பொருட்கள் ஆர்கானிக் / ஆயுர்வேதம் போன்ற போர்வைக்குள் ஒளித்து விற்பனை செய்கிறார்களோ எனும் எண்ணம் தவிர்க்க முடிவதில்லை.

$ ஆர்கானிக் எனப்படும் பலவும் அப்படி இல்லை என்றே தோன்றுகிறது.

? சமீபத்தில் நீங்கள் சமையலறையில் டெஸ்ட் செய்து பார்த்த உணவு என்னது?# பனீர் பட்டர் மசாலா
மாங்கா இஞ்சி தொக்கு
வாழைப்பூ தொக்கு

$ நான் சமையலறையில் டீ  &  வெந்நீர் மட்டுமே தயாரிக்கிறேன். 

& ஆசார சீலர்கள் இந்த பதிலைப் படிக்காமல், கண்ணை மூடிக்கொண்டு கடந்துவிடவும். முதல்நாள் மிஞ்சி, நீரூற்றிய பழைய சாதத்தில், மிளகு, உப்பு போட்டு, மிக்சியில் நைசாக அரைத்து, நான் ஸ்டிக் தவாவில் 'சீவல்' தோசை செய்து சாப்பிட்டேன். டேஸ்ட் சூப்பராக இருந்தது. பசோமிசீதோ என்று இதற்குப் பெயர் வைத்தேன். (அரைத்த மாவு ரொம்ப நீர்க்க இருந்தால், கொஞ்சம் அரிசிமாவு சேர்த்துக்கொள்ளலாம் ) 
                                 
? வாட்சப், சமூக வலைத்தளம் போன்றவை நம்மை 'அடிக்ட்' ஆக்குவதை உணர்ந்திருக்கீர்களா? அதை எப்படி ஹேண்டில் செய்யணும்னு நீங்க நினைக்கறீங்க?


$ வாட்ஸப் இன்னபிற நேரவிரயம் என்பது உண்மை. அதில் பேச்சு சிக்கனம் தேவைதான். 2019ல் முயன்று பார்ப்போம்.

& நான் அடிக்ட் ஆவதில்லை. அன்றைய வேலைகளுக்கான நேரம் ஒதுக்கி, வேலைகளை முடித்தபின்னரே வாட்ஸ் அப், முகநூல் எல்லாம். நடுநடுவே நேரம் கிடைக்கும்போது வாட்ஸ் அப் பரிமாற்றங்கள். 

'? நாங்க அந்தக்காலத்தில்' என்று ஒருவர் ஆரம்பிக்கும்போதே, அவர் பழையகாலத்திலேயே இருக்கிறார், இந்த ஜெனெரேஷனை அவர் மனம் ஏற்கவில்லை, வயதாகிவிட்டது என்று உங்களுக்கும் தோன்றுமா?

# இந்தக் காலத்து நடைமுறைகள் திருப்தியாகப் படவில்லை என்று அர்த்தம்.  அந்தக் காலம் என்பது சில ஆண்டுகளிலிருந்து 2..3  தலைமுறை வரை இருக்கலாம். 

$ அந்தக்கால ஆள்தான் நான். அடுத்தவர் பதிலுக்குக் காத்திருக்கிறேன். அந்தக் கால நிலவரம் பற்றி அறிய ஆவல் எப்போதும் உண்டு.

& சில 'அந்தக் காலத்தில் ... ' கதை விடுபவர்கள் நல்ல ரீல் மாஸ்டர்களாக இருப்பார்கள். ஜூனியர் பாலிடெக்னிக் படித்த காலத்தில், கலியமூர்த்தி என்கிற மோல்டிங் வகுப்பு ஆசிரியரை (அவர் எங்களுக்கு எதுவும் அதிக வேலை கொடுக்கக்கூடாது என்பதற்காக) வாயைக் கிண்டி, அந்தக் காலத்தில் கதைகள் அவர் சொல்வதை எல்லாம் சுற்றி நின்றுக் கேட்டுக்கொண்டிருப்போம். எங்களுக்கு பதினைந்து / பதினாறு வயது. அவருக்கு அப்போ இருபத்து நான்கு வயதுதான் இருந்திருக்கும். ஆனாலும் அவர் விடுகின்ற ரீல்கள் கலர் கலராக இருக்கும். எங்களுக்கும் ஜாலி, அவருக்கும் சந்தோஷம்! 

? மொபைல், இணையம் இல்லாமல் ஒரு நாள் கழித்திருக்கிறீர்களா?

# மொபைல் டிவி செய்தித்தாள் வானொலி இவை இல்லாது 2/3 நாள் இருந்தால் பழகி விடுகிறது 14 நாள் இருந்திருக்கிறேன். 
   
$ மொபைல் இணையம் இதுவரை  தவிர்த்ததில்லை. பரிட்சிக்க ஆசை உண்டு.

& இல்லை. 

? பொதுவா, நமக்கு சில உணவு வகைகளைச் சாப்பிட்டுப்பார்க்கணும் என்று ஆசையா இருக்கும்போது (சிறிய வயதில்) அதற்கான வாய்ப்போ, பணமோ இல்லாமலிருந்துவிடுகிறது. பணம், மற்றும் 'நாம் நினைத்ததைச் செய்யலாம்' என்ற வயது வரும்போது, நம்மால் அப்படி பெரும்பாலும் சாப்பிடமுடியாமல் இருந்துவிடுகிறதே... அது எதனால்?

# இது தான் தவணை முறை விற்பனையில் துவக்கம்...
வாங்க வசதி வரும்போது வயது கூடிவிடும் தேவை மாறி விடும்.

$ எனக்கு இந்த அனுபவம் இல்லை. சில வகை உணவுகளை எப்படித்தான் இருக்கும் என்று எண்ணிப் பார்த்ததுண்டு ஆனால் ருசிக்க மனம் வரவில்லை.

& முதல் பகுதி சரிதான். ஆனால் இரண்டாம் பகுதி என்னைப் பொறுத்தவரை சரியில்லை. இப்போ நான் ஆசைப்படுவது எல்லாவற்றையும் சாப்பிடாமல் விடுவதில்லை. 

வாட்ஸ் அப் கேள்விகள் :

பானுமதி வெங்கடேஸ்வரன் : 


? சிறந்தவற்றை பட்டியலிடும் பொழுது டாப் 10 மூவிஸ், டாப் 10 பாடல்கள், பிடித்த 10 சினிமாக்கள், என்று 10ம் எண்ணை தேர்ந்தெடுக்கும் காரணம் என்ன?

$ மனிதன் எண்ணிக்கை கற்க அடிப்படையான இரு கை விரல் பத்து. 

# எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென்கீழ் கணக்கு, ஐம்பெரும் காப்பியங்கள், புற & அக நானூறு, முப்பெரும் தேவியர், முக்கனி,
இப்படி எவ்வளவோ வேறுபாடுகளுண்டே ! 

? கற்றதும், பெற்றதும் நூலின் இரண்டாம் பாகத்தில் சுஜாதா, "முத்தமிடும்பொழுது ஏன் கண்களை மூடிக்கொள்கிறார்கள்?" போன்ற விடை தெரியாத சில கேள்விகளை ஃப்ரஸ்டபில்ஸ் என்ற பெயரில் எழுப்பியிருந்தார். உங்களுக்கு அது போன்ற சந்தேகங்கள் வருவதுண்டா?

$ கண்ணை மூடின ரசனை டிஸ்ட்ராக்ஷன் இல்லாதது. 

& இந்த மாதிரி சந்தேகங்கள் எல்லாம் எனக்கு வருவதில்லை. 

? மேற்கண்ட கேள்வியை எழுதும் பொழுது தோன்றிய கிளை கேள்வி: சந்தேகத்தை கேள்வியாக வெளிப்படுத்துகிறோம். சந்தேகமில்லாத கேள்வி உண்டா?

$ அறிய ஆவல் அல்லது அறியாமை நீக்க முயற்சி இவையும் கேள்வி எழக் காரணம்தானே.

? எதிர்பாராத தருணத்தில், எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் பாராட்டு, இவர்கள் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்த்து கிடைக்காத ஏமாற்றம் இவைகளை எப்படி எதிர்கொள்வீர்கள்?

$ பாராட்டை எதிர்பார்ப்பதில்லை என்பதால் எல்லாமே இனிய வரவுகளே.

? சீனு மோகன், பிரபஞ்சன்.. நினைவுகள்...?(புது வருடத்தில் இரங்கல் செய்தியா என்று நினைத்தால் you can skip this question)

$ பல துறைகளிலும் வல்லுனர்கள் மரணம் ஒரு சோகம்தான். ஐராவதம் மகாதேவன், பத்து ரூபாய்க்கு வைத்தியம் செய்த மாமனிதர் இப்படி பலவும்.

? 2018ல் உலகளவில், அகில இந்திய அளவில் சிறந்த நிகழ்வு என்று எதை சொல்வீர்கள்?

$ சிறந்த நிகழ்வு என்றால் யோசிக்காமல் நினைவுக்கு வர வேண்டும்.
உலக அளவில் ஆகட்டும், இந்தியாவில் ஆகட்டும் அப்படி எதுவும் கிடைக்கவில்லை. வேண்டுமானால் பி வி சிந்து, சாய்னா, மேரி கோம் சாதனைகளைச் சொல்லலாம். 

& எங்கள் ப்ளாக் 365  நாட்களில்  364 பதிவுகள் வெளியிட்டதுதான் சிறந்த நிகழ்வு. விடுபட்ட அந்த ஒரு நாள் பதிவு, ஒரு புதன் பதிவு. 

 ===================================

Wish you all a very happy (International)  year of the periodic table! Thanks to Dmitry Mendeleev! 

===================================
           

81 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா அண்ட் பின் தொடரும் எல்லோருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஹை நான் தான் இன்னிக்கு ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ....தேம்ஸ் வரை இது கேக்கனுமே! இன்னிக்கு என்னை தள்ளிவிட ஆள் இல்லாம ஓடி வந்தாச்சூஊஊஊஊ.....ஹா ஹா ஹா....அப்புறம் கால் ல அடி மூக்குல அடினு வேற சொல்லுக்குவாங்க !!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேற்று புத்தாண்டு என்பதால் வருகை தந்த அதிரா இனி தமிழ்ப்புத்தாண்டிலோ தீபாவளி சமயத்திலோ மறுபடி இந்நேரத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!!

   நீக்கு
  2. ஹ அஹ ஹா அப்ப நாம ரெடியா இருந்துருவோம்ல!!

   கீதா

   நீக்கு
  3. புயல் என்ன டெய்லியா வரும்!!! ஆனா எதிர்பாராம வேகம் அதிகமா வந்து டமால்னு வந்து வீசிரும்...நான் எச்சரிக்கையாவே இருக்கேன்!!!

   கீதா

   நீக்கு
  4. நான் கூட ஒரு நாள் போன வருட துவக்கத்தில் அப்படித்தான்(புயலாக)
   வந்தேன். அப்போ யாருமே கண்டுக்கலே. காரணம் எனக்கு எந்த பெயரிட்டும், இந்த இடத்துல இது கரையை கடக்கலாம் என்று எச்சரித்தும் பீதியை கிளப்பவில்லை. நான் பேசாமல் வந்து "சிவான்னு" கரையை கடந்து போய் விட்டேன். ஹா ஹா ஹா ஹா. யாருக்கு எந்த பாதிப்போ இதுவரை எந்த செயதியும் வரவில்லை. ஜோக்.. ஜோக் இதுவும் ஜோக் நதியில் கரைந்தோடட்டும்.

   நீக்கு
  5. வணக்கம் சகோதரி.

   கும்மியை இப்பவும் கண்டுக்கவே இல்லையே...எனக்கு சரியா அடிக்கத் தெரியவில்லையோ?

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 3. ஆ! தமன்னா! நெல்லைக்கு இன்று ஒரே குஷிதான்...கூடவே அனுஷையும் போட்டிருக்கலாம்..ஹிஹிஹி

  அந்த இலங்கை தோசை கௌ அண்ணா தானே சுட்டது!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாத்தீங்களா எப்படியெல்லாம் எழுதி தமன்னா படத்தை வரவைக்க வேண்டியிருக்கு......

   நீக்கு
  2. நேராவே கேட்டிருக்கலாம்!//

   கௌ அண்ணா அப்படிப் போடுங்க!

   அதானே நேராவே கேட்கலாமே!!! ஹிஹிஹி

   தமன்னாவை போடணுன்றதுக்காக கீ சு வைப் போடாம இருக்கலாமோ?!!! இது உங்க டே அண்ணா!!! ஹா ஹா ஹ (போன வாரம் பாவனா போட்டாச்சு!!!)

   கீதா

   நீக்கு
 4. பழைய சோறு தோசையாவது இங்கும் நடக்குமே!

  ஆப்பம் மாவு அரைக்கும் போது மாவு பொங்காத குளிருக்கு இப்படி மீந்த சாதம் கொஞ்சம் போட்டு அரைத்தாலே ஈஸ்ட் தன் வேலையை காமிச்சுரும்...

  எங்க பிறந்த வீட்டுல களிக்கஞ்சி தோசைனு செய்வோம் கிட்ட்த்தட்ட இதேதான்..

  தோசை சூப்பரா இருக்கு...கௌ அண்ணா ..சரி முயற்சி செஞ்ச ரெசிப்பி எல்லாம் திங்கல போடலாம்ல......இல்லைனா நம்ம ஏரியாவுல போடலாம்ல.....ஏதாவது வித்தியாசமா இருந்தா எடுத்துக்குவோம்ல...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பசோமிசீதோ செய்யனும்...பல மாதங்களாகிவிட்டது...எங்க பிறந்த வீட்டுல பெரிய குடும்பம் கூட்டுக் குடும்பம்....ஸோ சில சமயம் சாதம் நிறைய மீந்துரும்...அப்ப களிக்கஞ்சி தோசையாக்கிடுவாங்க...எங்களுக்கு மட்டும் தான். பெரியவங்க சாப்பிட மாட்டாங்க. ஆசாரம்..

   மாமியார் வீட்டுல கண்டிப்பா செய்ய மாட்டாங்க. பழையது. அது பழையதாகவே தான் (மருமகள்களுக்கு மட்டும் தான் வரும்...ஆண்களுக்குப் போட மாட்டாங்க. இது என்னவோ தெரியலை.!!!!!!!!!!!!..)

   எங்க வீட்டுல சில சமயம் மீந்துருச்சுனா தோசை..இப்ப நினைவு படுத்திட்டீங்க..கண்டிப்பா செய்யனும்.பச்சை மிளகாய் போட மாட்டீங்களா? ப மி, கறிவேப்பிலை, பெருங்காயம், ப கொத்தமல்லி எல்லாம் போட்டு செஞ்சாலும் டேஸ்டியா இருக்கும்...

   கீதா

   நீக்கு
  2. //பசோமிசீதோ//
   ஓ இது ஒரு உணவுப்பெயரோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நான் கெள அண்ணன் இப்போ ச்சைனீஸ் பாசை படிச்சு முடிஞ்சு... உருது படிக்க்கிறாராக்கும் என நினைச்சேன்:).

   நீக்கு
 5. கீதாக்காவின் முதல் செட் கேள்விகளுக்கு பதில்கள் எல்லாமே ஸ்வாரஸ்யம்...

  //& இதுவா அல்லது அதுவா என்று யோசித்துக்கொண்டிராமல், பந்தியில் ஒருமுறை, பஃபேயில் ஒருமுறை என்று சாப்பிட்டுவிடுவேன். //

  ஹா ஹா ஹா ஹா ஹா இது கௌ அண்ணாதானே??!!!

  சரி சரி நான் அப்பால வரேன் இங்கு ஒத்தையா ஆட போரடிக்குது...

  கீதா

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் காலை வணக்கம். சற்று பொருத்து வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. @ நெ.த.: //.. பசோமிசீதோ என்று இதற்குப் பெயர் வைத்தேன்..\\

  சீதாப்பிராட்டிக்குக் கோபம் வரலாம். பசோமிமீதோ என்று இருந்தால் இந்த டிஷ்-க்குப் பொருத்தமாயிருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நான் இல்லை ஏகாந்தன் சார்... அனேகமா கேஜிஜி சாரா இருக்கும்.

   என் பதின்ம, வேலைக்குப் போகும் முந்தைய வயதில் காலை சாதம் இரவில் (ஜலம் விட்டு வைத்தது), மோர் அல்லது தயிர் விட்டு, தொட்டுக்க சூடா அப்போது செய்த மைதா அல்லது கோதுமை மாவு தோசை, இட்லி மிளகாய்ப்பொடி தொட்டு சாப்பிட எனக்குப் பிடிக்கும்.

   திருமணம் ஆனபிறகு இதெல்லாம் வழக்கொழிந்துவிட்டன. 10-15 வருடங்களுக்கு மேல், 4 மணி நேரம் ஆன உணவைச் சாப்பிடுவது வெகு வெகு அபூர்வம், இனிப்பு தவிர

   நீக்கு
  2. ஓ..நீங்களில்லையா அது! அப்பச்சரி..

   பால பருவத்தில் கிராமத்தில் வாழ்க்கை. வீட்டில் மதியம் செய்த சாதம் சாப்பிட்டதுபோக மீதமிருக்கும். கொஞ்சம் அதிகமாக சாதம் வெடிக்கக் காரணம், இரவில் யாராவது வாசலுக்கு வந்து அம்மா! என்றால் வீட்டில் சாதம் இருக்கவேண்டும் என்பது அம்மாவின் முடிவு. கொஞ்சம் மோரும் மீதமிருக்கும் -கலந்து போட. பொதுவாக இரவில் தோசை, அரிசி உப்புமா என செய்வதுண்டு விறகடுப்பில்.

   அப்படி மத்தியான சாதமும் மிஞ்சி ராத்திரி யாரும் வரவில்லையென்றால், வீட்டிலிருந்த மாக்கல் சட்டியில் சாதத்தைப்போட்டு தண்ணீர் விட்டு வைத்துவிடுவார். மாக்கல்சட்டியில் ஊறிய சாதமும் சாத்யார்த்தமும் (சாத தீர்த்தமும்) காலையில் லேசான புளிப்புடன் அமிர்தமாக மாறியிருக்கும். ’இட்லியோடு ஓடாதீங்கடா. நெஞ்சைக் கரிக்கும். கொஞ்சம் தயிர்சாதம் கலந்திருக்கேன்..போடவா..’ என்று அம்மா கேட்பார். பழையசாதம், புதிய தயிர், சாத்யார்த்தம், கல்லுப்பு லேசாகக் கலந்த வயிற்றுக்கு இதமான சங்கதி. மாவடு, நார்த்தங்காய் போன்ற ஊறுகாயோடு சொர்கத்தைக் காண்பித்துக்கொண்டே உள்ளே செல்லும். அது ஒரு காலம்..

   இப்போது நினைத்த நேரத்தில் வெளியே சாப்பாடு. என்னென்னமோ பேர், என்னென்னமோ சங்கதிகள் ..உள்ளே செல்கின்றன. பெருமையாக காசு இருக்கிறதென்று மோட்டா பில்லைக் கொடுத்துவிட்டு மீட்டா ஸோம்ஃபை வாயில் போட்டுக்கொண்டு வெளியே வருகிறோம். ஆனால் அந்த சொர்க்கம் மீளவில்லை..

   நீக்கு
  3. சூப்பர் மலரும் நினைவுகள், ஏகாந்தன்!

   நீக்கு
  4. ஏகாந்தன் சார்..... இப்போதுதான் படித்தேன்.

   அது, சாத்தூத்தம், சாத்தேர்த்தம். தூத்தம் ஐயர்கள் ஜலத்துக்குச் சொல்வது. தீர்த்தம் ஐயங்கார் உபயோகப் படுத்துவது. சாதம் + தூத்தம் அல்லது தீர்த்தம் சேர்த்தால் வரும் வார்த்தை. (சாத்யார்த்தம் அல்ல)

   பொதுவான வார்த்தை நீராகாரம்.

   நீக்கு
 8. கேள்விகளும் பதில்களும் அருமை...

  சந்தடி சாக்கில் தமன்னா...
  அதுவும் அருமை!...

  அதுசரி... அனுஷ்கா எங்கே!..
  மார்கழி விரதமா!?....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுஷ், ஸ்ரீராமைத் தேடி போயிருக்காங்க போலிருக்கு.

   நீக்கு
  2. ஹா அஹ ஹா ஹா துரை அண்ணா அப்ப மார்கழி விரதம் தமன்னாவுக்கு கிடையாதா?! சத்தமா சொல்லிடாதீங்க பாவம் நெல்லை ரொம்ப ஃபீல் பண்ணிடப் போறார்...ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  3. அனுஷ், ஸ்ரீராமைத் தேடி போயிருக்காங்க போலிருக்கு.//

   ஹா ஹா ஹா ஹா கௌ அண்ணா,, அதான் ஸ்ரீராம் தான் ரொம்ப பிஸி, நேரமே இல்லைன்னு சொன்னாரா...ஹா ஹா அப்ப நாளை அனுஷ் படம் எல்லாம் வரும்னு சொல்லுங்க!!!

   கீதா

   நீக்கு
 9. சுவாரஸ்யமான பதில்கள் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. // பந்தி பஃபே இரண்டில் நான் விரும்புவது பஃபே. நாம் உணவை வீணாக்காமல் சாப்பிட முடியும். ஈ மொய்த்தபடி பரிமாறப் பட்ட வரிசை தவிர்க்கலாம். வேண்டாததை விலக்கல் எளிது. நமக்குப் பிடித்தமான குழுவோடு சாப்பிடலாம். உணவை மடியில் கொட்டிக் கொள்ளும் வாய்ப்பு குறைவு.//

  வெளிநாட்டில் முத்லைல் எடுத்து சாப்பிட்ட தட்டை கழுவும் இடத்தில் போட்டு விட்டு மீண்டும் வேறு தட்டு எடுத்து கொள்ள வேண்டும்.
  அது எனக்கு பிடித்து இருந்தது.  $ நீண்டு நிலைப்பது நல்ல நட்பு. நம்மை நல்வழிப் படுத்துமானால் சிறந்த நட்பு.

  அருமையாக சொன்னீர்கள்.


  // மிஞ்சும் உணவை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து எடுத்துப் போய் விநியோகம் செய்ய சேவை நிறுவனங்கள் இருக்கின்றன.
  கீழே கொட்டுவதைத் தவிர்த்து, Bokashi (** ) முறையில் எரு தயார் செய்யலாம் அல்லது தயார் செய்பவருக்குக் கொடுத்து விடலாம்.//

  நல்ல யோசனை.

  பதிலளிநீக்கு
 11. 'பசோமிசீதோ" தோசை பெயரை ரசித்தேன்.
  சாதத்தை கையால் கரைக்கலாம், ஆனால் அரைக்ககூடாது என்பார்கள் அம்மா.
  அரைத்தால் கெடுதல் என்பார்கள்.

  பதிலளிநீக்கு
 12. //எங்கள் ப்ளாக் 365 நாட்களில் 364 பதிவுகள் வெளியிட்டதுதான் சிறந்த நிகழ்வு. விடுபட்ட அந்த ஒரு நாள் பதிவு, ஒரு புதன் பதிவு. //

  சிறந்த சாதனை தான்.
  வாழ்த்துக்கள்.

  கேள்விகளும், பதிலகளும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் கேஜி சகோதரரே

  கேள்விகளும், அதற்கேற்ற பதில்களும் மிக அருமை. கேள்விக்கேற்ற ஒரு நல்லதொரு பதிலை யார் மனமும் புண்படாத வண்ணம் நகைச்சுவை கலந்து தங்களால்தான் தரமுடியும் என நினைக்கிறேன். அனைத்தையும் ஒன்று விடாமல் படித்து ரசித்தேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. சொந்த அலுவல் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர இயலா நிலை. கேள்வி பதில்களை ரசித்தேன். 365 நாள்களில் 364 நாள்கள்...அப்பப்பா...உங்களின் உழைப்பினைக் கண்டு வியக்கிறேன். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 15. இன்று பல கேள்வி பதில்கள் ரசிக்கும்படி இருக்கு.

  அந்த தமனாக்கா.. அண்ணாஆஆஆஆஆஅ எனக் கூப்பிடுவது ஸ்ரீராமைப் பார்த்துத்தானே?:).. இல்லை எனில் நெல்லைத்தமிழன் இப்போ A& E [Accident & Emergency] இல் எல்லோ இருந்திருப்பார்ர்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா வாங்க நீங்க இதுக்கு வரனுன்னுதான் நான் வெயிட்டிங்க்...

   இல்லை அதிரா ஸ்ரீராம் இன்று பிஸியோ பிஸி பார்க்கலையா கௌ அண்ணா சொல்லிருக்கார் பாருங்க... அனுஷ் ஸ்ரீராமைத் தேடிப் போயிருக்காங்களாம்...

   அனுஷைப் போடலையே அப்ப நான் வரலாமான்னு கேக்குறாப்புல உங்களுக்குத் தோனலையா அதிரா??!!!

   கீதா

   நீக்கு
  2. இல்ல கீதா உண்மை அதுவல்ல:)) ஸ்ரீராம் இப்போ அனுக்காவைக் கழட்டி விட ட்றை பண்ணுவதாக அரசல்புரசலாகப் பேசப்படுகிறது:).. இதுக்கு நாங்க உடந்தையாக இருக்கக்கூடாது:)).. பெண்களுக்கு பெண்களே சப்போர்ட் பண்ணாட்டில் ஆரூ பண்ணுவா:)) பொயிங்குவோம் வாங்கோ:)) ஹா ஹா ஹா:).

   நீக்கு
  3. என்னாது அதிரா இப்படி அரசல் புரசலை வைச்சு குண்டைத் தூக்கிப் போடுறீங்க! பொயிங்கிட்டேன்...பொயிங்கிட்டேன்..!!! நோ அதிரா நோ...நாளை வியாழன் அனுஷ் இங்கு வருகை தருவார்னுல நினைச்சுருக்கேன்..இன்று ஸ்ரீராமைத் தேடி அனுஷ் போயிருக்கறதுனால இங்க நாளை வருவாங்கன்னு ஹையோ...இல்லை அதிரா நாளை அனுஷின் வருகை உண்டு....!!! இல்லைனா பொயுங்கிடுவோம் ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  4. தமன்னா நினைச்சுருப்பாங்க....ஹப்பா இன்று அனுஷ் இல்லை இருந்திருந்தா நம்மள யாரும் இன்று எபில கண்டுக்காம போயிருப்பாங்க....அதான் அந்தக் கேள்வி. கௌ அண்ணாவைப் பார்த்து...இன்னிக்கு இது கௌ அண்ணா டே அல்லோ...!!!..புரிஞ்சுச்சா..ஹா ஹா ஹா

   (அதுக்காகவே கௌ அண்ணா கீ சு வை இங்க வரவழைக்கலை பாருங்க!!)

   கீதா

   நீக்கு
  5. தமன்னாவின் அண்ணா நெ த அவர்கள்தான்.

   நீக்கு
  6. ஆ ஆ ஆ ஆ கௌ அண்ணா!!!

   //அந்த தமனாக்கா.. அண்ணாஆஆஆஆஆஅ எனக் கூப்பிடுவது ஸ்ரீராமைப் பார்த்துத்தானே?:).. இல்லை எனில் நெல்லைத்தமிழன் இப்போ A& E [Accident & Emergency] இல் எல்லோ இருந்திருப்பார்ர்:).//

   அண்ணே இது நான் சொல்லலை பூஸார் ஜொல்லிருக்காங்களாக்கும்!!

   சரி சரி குட் நைட் எல்லாருக்கும் ..

   கீதா

   நீக்கு
 16. ஆர்கானிக் என்பது அந்தப் பெயரில் விலை கூடுதல் என்பதைத் தவிர அதில் ஸ்பெஷலாக நம்பத் தகுந்த அளவில் இல்லை.

  நான் ஒரு சமயம் ஒரு விவசாய சிறிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டேன். அங்கு பேசியவர்கள் விவசாயம் படித்தவர்கள் மற்றும் பெரிய விவசாயியிகள். அவர்கள் சொன்னது இதுதான். கீரையை வாங்கும் போது பள பள என்று இருக்கு பூச்சியே இல்லை என்று வாங்காதீர்கள். ஒரு சில இலைகளில் ஓட்டைகள் இருந்தால் அந்தக் கீரை மருந்து தெளிக்கப்படாத கீரை என்றும், காய்களில் பூச்சிகள் இருந்தால் அதுவும் பூச்சி மருந்து தெளிக்கவில்லை என்றும் தெரிந்து கொள்ளலாம் என்று விவசாயம் படித்தவர்கள் பேசினார்கள்.

  எனவே இதற்காக ஆர்கானிக் என்று பெயர் சொல்லி விலை அதிகமாக விற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று விவசாயியிகள் சொன்னார்கள்..பூச்சி மருந்து தெளிக்கலைனாலே நார்மலாகவே பூச்சிகள் வரத்தான் செய்யும்....அதற்கு இயற்கையாகவே தீர்வுகளும் இருக்கின்றன..

  நான் இங்கு சாதாரணமாக சந்தையில் வாங்கும் காய்கள், கீரைகள் நல்ல ஃப்ரெஷ்ஷாக இருக்கும் அதே சமயம் ஒரு சிலவற்றில் பூச்சிகள்/புழுக்கள் இருந்தன....யாரும் ஆர்கானிக் என்று சொல்லி விலை கூட்டி விற்கவில்லை.

  இதுதான் சந்தைப் பொருளாதாரத்தில் பேசுறாங்க....பெரிய பெரிய கடைகள் ஆர்கானிக் என்ற பெயரில் இப்படியான சிறு வியாபாரிகளை முழுங்குகிறது..

  கீதா

  பதிலளிநீக்கு
 17. பானுக்கா கூட இன்று அவங்க பதிவுல சொல்லிருக்காங்க /லூலு, கேர்ஃபோர் போன்ற மெகா மார்க்கெட்டுகள் வந்து சிறிய கடைகளை முழுங்கின//

  இதுக்கு அவங்க பதிவுல கமென்ட் போடும் முன் கரன்ட் கட்...

  கீதா

  பதிலளிநீக்கு
 18. கேட்கும் கேள்விகளுக்கு நாம் விரும்பும்பதில் வந்தால் அது அற்ப சந்தோஷமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி எம் பி சார் அதுவும் ஒரு ஜாலி தான் சந்தோஷம் தான்....

   அதைக் கண்டு இன்னும் கொஞ்சம் ஜாலி அடிக்கலாம்...

   இங்கு சந்தோஷம் தானே சார் முக்கியம்...எபி ஆசிரியர்கள் இங்கு வரும் எல்லோரையும் எல்லாதரப்பினரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்களே சார்..சீரியஸ் பதில்கள், நாம் நினைக்கும் பதில்கள், நகைச்சுவைப் பதில்கள் என்று....அதுவே ஒரு பெரிய விஷயம் இல்லையா...

   நாம எஞ்சாய் செய்வோம் சார்...

   கீதா

   நீக்கு
  2. பசோமி சீதே. அழகானபெயர். கேள்வி பதில்கள். ரஸிக்கும்படி இரண்டு முறை படித்தேன், அருமை. அன்புடன்

   நீக்கு
 19. சதுர வடிவ floor ஸ்லாப்ஸ் எங்கு பார்த்தாலும் ஒவ்வொன்றிலும் கால் பதித்து நடக்க ஆசை தோன்றுவது உண்டா ? அப்படி நடத்திருக்கிறீர்களா? //

  பச்சையுடன் ஹைஃபைவ்!! நான் இப்பவும் முள்ளு மிதிக்காம தாண்டவோ குதிக்கவோ ஸ்ரெப் (ஆஆஆ இந்த அதிராவோடு பேசி பேசி அத்தமிழே வருதே!!!!) எடுத்து வைக்கவோ...செய்வதுண்டு...

  கீதா

  பதிலளிநீக்கு
 20. Bokashi composting//

  சூப்பர் !!!!! சூப்பர்!!! பொதுவாக வீட்டில் மீறாது. அப்படியே சில சமயம் மீந்து கெட இருந்ததை சென்னையில் இருந்த வரை அங்கு இத்துனூண்டு பால்கனி பசுமை விடியல் (ஹிஹிஹிஹி) செய்ய முயற்சி செய்தேன்...அதற்குள் பங்களூர் ஷிஃபிட்டிங்க்...பால்கனி தோட்டம் என்று ஆரம்பித்த போதுதான் நான் நெட்டில் தெரிந்து கொண்டேன்...ஆனால்முழுமையாகச் செய்ய இயலவில்லை...அங்கு குறிப்பிட்டிருக்கும் வகையில்...

  உங்கள் ஐடியா வெகு அருமை...ரசித்தேன்....பாராட்டுகள்

  கீதா

  பதிலளிநீக்கு
 21. பொக்காஷி பார்த்ததும் ஏஞ்சல் நினைவு!!! அவங்க வந்தா சொல்லுவாங்க இதைப் பத்தி...காணலை...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. https://www.facebook.com/PasumaiVidiyal/photos/a.277700958954161.65940.277620925628831/966569490067301/

   நீக்கு
  2. அந்த நாள் நினைவு :) பசுமை விடியலில் போட்ட பதிவு :) சேர்ச் பண்ணின் அதும் கிடைச்சு

   நீக்கு
 22. இணையம், மொபைல்ன்னு பொழுதன்னிக்கு அதுலயே இருக்கவும் முடியும். தூக்கிப்போட்டு அவை இல்லாம இருக்கவும் என்னால முடியும்.

  பஃபே சிஸ்டமே எனக்கும் பிடிக்கும். பரிமாறின இலையில் உக்கார விருப்பமில்லை

  பதிலளிநீக்கு
 23. சுவாரஸ்யமான கேள்வி பதில்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. உங்களுக்கும் அதே வாழ்த்துகள் எங்களிடமிருந்து!

   நீக்கு
 24. மாமியார் வீட்டுல கண்டிப்பா செய்ய மாட்டாங்க. பழையது. அது பழையதாகவே தான் (மருமகள்களுக்கு மட்டும் தான் வரும்...ஆண்களுக்குப் போட மாட்டாங்க. இது என்னவோ தெரியலை.!!!!!!!!!!!!..)Geetha super. ippadikkup paathikkap patta marumagal. haha.

  பதிலளிநீக்கு
 25. கேஜிஜி சாரின் பதில்களும், கீதாவின் பதில்களும் கேள்விகளும் சூப்பர்.
  பஃஃபே பிடித்த முறை.
  @ஏகாந்தன், சாத்தேர்த்த மகிமையைச் சொன்னதற்கு மிக மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 26. நல்ல நட்பு, சிறந்த நட்புக்கான பதில்கள் அருமை....

  & எங்கள் ப்ளாக் 365 நாட்களில் 364 பதிவுகள் வெளியிட்டதுதான் சிறந்த நிகழ்வு. விடுபட்ட அந்த ஒரு நாள் பதிவு, ஒரு புதன் பதிவு. //

  சூப்பர்!!! மேடை போட்டுருவோம்!!! யாரங்கே!!! மைக் செட்....பொக்கே....மேள தாளம்...எல்லாம் வாங்கப்பா...கோண்டாடுவோம்!!

  https://media.giphy.com/media/BpS7QWoAiaSrsBA07n/giphy.gif

  கீதா

  பதிலளிநீக்கு
 27. நான் கேள்விகளை யோசிச்சிட்டிருக்கேன் :) விரைவில் வரும்

  பதிலளிநீக்கு
 28. கேள்வி பதில்கள் அனைத்தும் மிகவும் சுவாரஸ்யத்துடனும், நகைச்சுவையுடனும் இருக்கின்றது.

  எனது கேள்விக்கான பதிலையும் ரசித்தேன். மிக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள். ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 29. 1, தம்மடிக்கும் காட்சி ,பியர் வாங்கும் காட்சி ஆண்களை டீஸ் செய்யும் காட்சிகள் போன்றவற்றை பார்க்கும்போது சில நேரங்களில் பெண்கள் தங்களை தாங்களே கேவலப்படுத்திக்கொள்வது போல் தோன்றுகிறது .இது போன்ற காட்சிகள் சினிமாவுக்கு அவசியமா ?

  2, தலைமுறை இடைவெளி இப்போ அதிகமா இருக்கா ? ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் சில பல புரிதல்கள் இல்லாமற்போவதன் காரணம் என்னவாயிருக்கும் ? யாரில் குறை இருக்கு ?

  3,adapting ,accepting இதில் நாம் பின்பற்றவேண்டியது எது ?

  4, யாராவது 5 பேரை உங்க வீட்டுக்கு டின்னர் சாப்பிட அழைக்கலாம் என்றால் உங்கள் சாய்ஸ் யார் ?
  யார் அந்த 5 அதிர்ஷ்டசாலிகள் ஏன் ? பதிலில் தமன்னா அனுஷ் கீ.சு போன்றோருக்கு தடை :)

  5, இளவயது அதாவது 10-15 வயதில் நீங்கள் அனுபவிக்க முடியாத இயலாமற்போன சந்தோஷம் ஏதாவது இருக்கா ?
  அப்படி உங்களுக்கு கூடாமற்போனதை உங்கள் வாரிசுகளுக்கு அனுமதித்தீர்களா ?

  6,உங்களை சமீபத்தில் உருகி அழ வைத்த சினிமா பாடல் எது ஏன் ?

  7, பழமொழிகள் /sayings அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் உள்ளவையா ?

  8, காரணமில்லாமல் காரியமில்லை என்பது என்ன ?

  9, நம்பிக்கைதானே வாழ்க்கை பார்க்க முடியாத ப்ளாக் ஹோலையும் எலெக்ட்ரான்சையும் நம்பும் சிலர் இறைவன் இருக்கார்னு நம்ப மாட்டேங்கிறாங்களே ?????

  10, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் மனுஷங்களோட சந்தோஷம் அதிகரிச்சிருக்கா ? இல்லை குறைந்திருக்கா ?

  11, அடம் ,பிடிவாதம் இரண்டும் ஒன்றா இல்லை வெவ்வேறா ?

  12,கெட்ட எண்ணங்கள் எங்கிருந்து உருவாகுது ?

  13, பணம் பொருள் அளவில்லாமல் பெற்ற பல பிரபலங்கள் பாதியிலேயே வாழ்வை தொலைத்ததேன் ?
  14, சில பாடகர்கள் அவர்களின் இனிய குரலால் மனதை கொள்ளை கொண்டாலும் பெருமளவில் பரிமளிக்க முடியாமல் போனதேன் ?
  15, இப்போதெல்லாம் நீல வண்ண நிற பதில்களை இங்கே பார்க்க முடிவதில்லையே ? ஏன்

  பதிலளிநீக்கு
 30. & இந்த பதில்கள் எல்லாம் கௌதமன் சார்! மற்றவை இரண்டும் திரு கேஜிஒய் மற்றும் கேஜிஎஸ் என நினைக்கிறேன்.)))) அவரவர் அனுபவங்கள் பதிலில் பேசுகின்றன.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!