சனி, 19 ஜனவரி, 2019

அந்தப் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி... இந்த அண்டத்தில் நாம் தனியாக இல்லை1)  ஒரு பக்கம் ஏராளமாய் வீணாகும் உணவு.  இன்னொருபக்கம் பசியால் வாடியிருக்கும் ஏராள மக்கள்.  இவர்களை இணைப்பது யார்?  இதோ ஒரு 16 வயதுப் பள்ளிச் சிறுமி தைரா....
2)  விடாமுயற்சி குற்றவாளியை பிடிக்க உதவியது...  தனக்கு நேர்ந்த நஷ்டம் (வழக்கம்போல காவல் நிலையத்தில் புகார் செய்தும் எதுவும் நடக்காத நிலையில்) மற்றவர்களுக்கும் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து கண்காணித்து குற்றவாளியைப் பிடித்துக் கொடுத்த ரெஹானா ஷேக்.


3)  இந்த அண்டத்தில் நாம் தனியாக இல்லை என்கிற சமிக்ஞை இரண்டாவது முறையாகக் கிடைத்திருக்கிறது என்கிற செய்தி - நாம் பார்க்கப்போவதில்லை என்றாலும் - நல்ல செய்திதானே?  


4)  கனடா டொராண்டோவிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் வந்த அந்தப் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி.  அவரின் மாத்திரைகள் ஓரிரண்டு நாட்கள் முன்னதாகவே தீர்ந்திருக்க, அவை என்ன மருந்து என்றும் தெரியாத நிலையில் அவர் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் பாயல் புரி ஷர்மா.

5)   ஆரிஃப் ரியாஸ், தவ்ஃபீக் அப்துல்...   இந்த இரு இளைஞர்களும் கோலாப்பூர் - ஹைதராபாத் எக்ஸ்பிரஸில் பயணித்தவர்களைக் காப்பாற்றிய வரலாறு...


6)  இந்த வயதிலும் உழைத்துப் பிழைக்க விரும்பும், அந்த பிழைப்பிலும் ஒரு நேர்மையை கடைபிடித்தபடி வாழும் பாண்டியம்மாளை மனதார வாழ்த்தலாம் மற்றபடி அவருடன் தொடர்பு கொள்ள வேறு எந்த வழியும் இல்லை நேராகப் போனால்தான் உண்டு.

எங்கள் மதுரையின் பெருமை!20 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம். கீதாக்கா மற்றும் கீதா அனைவருக்கும் நல்வரவு..

  பதிலளிநீக்கு
 2. இன்றைய தொகுப்பில் எல்லாமே அருமை.. ஆயினும்,

  அந்த மூதாட்டியின் நிலை மனம் கலங்கச் செய்தது....

  மீனாட்சி தான் காத்தருள வேண்டும்...

  பதிலளிநீக்கு
 3. பாண்டியம்மாளின் கொள்கை நெகிழ்ச்சியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. தெய்ரா பார்கவா மாதிரி பெண்களுக்கு இந்த வயதில் இந்தமாதிரி சிந்தனைகள் தோன்றுவது எப்படி? அவர்களின் பெற்றோரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

  பாண்டியம்மாள் (பேரே மதுரைனு சொல்லுது) என் மனதில் சலனத்தை ஏற்படுத்திவிட்டார்.

  பதிலளிநீக்கு
 5. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்...
  பாண்டியம்மாவை மனதார வாழ்த்துகிறேன்...

  பதிலளிநீக்கு
 6. அனைத்து செய்திகளும் மிக அருமை.
  கோவில் வாசலில், பஸ்நிலையத்தில் இப்படி எல்லா இடங்களிலும் இப்படி மிகவும் வயதான அம்மாக்கள் ஏதாவது விற்றுக் கொண்டு இருப்பார்கள்.
  அவர்கள் நம்மை கூப்பிடும் அழகே அழகு.
  நெல்லிக்காயை பள பள என்று துடைத்து வைத்து விற்பார்கள்.

  பதிலளிநீக்கு
 7. எல்லாமே அருமையான செய்திகள். மாணவி தைரா, மருத்துவர் பாயல், நெல்லிக்காய் விற்கும் பாண்டியம்மாள் மனதைக்கவர்ந்தனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. ஸ்ரீராம்! வாரம் ஒருநாள் மட்டும் பாசிட்டிவ் செய்திகள் என்றிருப்பதைக் கொஞ்சம் மாற்றி ஒவ்வொரு பதிவிலுமே ஓர் பாஸிட்டிவ் செய்தி வருகிறமாதிரி செய்தால் என்ன?

  பதிலளிநீக்கு
 9. நல்ல செய்திகளின் தொகுப்புக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. அருமையான செய்திகள். அதிலும் மாணவி தைராவும், மூதாட்டி பாண்டியம்மாளும் நெகிழ்த்துகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 11. இந்த முறை பாசிட்டிவ் செய்திகள் அதிகம்.

  பசிப்பிணியை போக்க பாலமாய் இருக்கும் தைராவுக்கு வாழ்த்துகள்.

  இந்த அண்டத்தில் நாம மட்டுமில்லியா?! பழைய செய்திதான். ஆனா எனக்கு கொஞ்சம் நம்பிக்கை இல்லை இந்த விசயத்தில்.. பாண்டியம்மா பாட்டிக்கு வணக்கங்கள்

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் மாலை வணக்கம்.
  அனைத்து செய்திகளும் படிக்க மனதை நெகிழ்த்துகின்றன. உணவு கொடுக்கும் தைராவுக்கும் ,மதுரை பாண்டி அம்மாளுக்கும் தொடர்பௌ இருந்தால் இன்னும் செழிப்பாக இருக்கும். இந்த வயதில் கௌரவமாக வாழும் இந்த அம்மாவிடம் தினம் பலர் நெல்லிக்கனியை வாங்கிக் கொண்டால் அவ்வை வாழ்த்துவாள்.

  நடுவானில் சிகித்சை கொடுத்த மருத்துவர் பாயலுக்கு மனம் நெகிழ் நன்றி.

  அனைத்து இடுகைகளும் பாராட்டப்பட வேண்டியவை.
  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 13. மதுரைக்குப் பெருமை சேர்க்கும் பாண்டியம்மாள் வாழ்க!

  மருத்துவர் பாயல் புரி, ஆரிஃப், தவ்ஃபீக், தைரா மற்றும் ரெஹானா...அனைத்து செய்திகளும் அருமை.

  துளசிதரன், கீதா..

  கீதா: அந்த அண்டம் பற்றிய செய்தி குறித்து நிறைய ஃபிக்ஷன் சினிமாக்கள் ஹாலிவுட் போட்டாங்கல்லையோ..அதான் அப்பப்ப ஏலியன் வைச்சு ஒரு சினிமா...

  மீக்கு அந்தச் செய்தி ஏதோ சொல்லுது பார்ப்போம்....ஹிஹிஹிஹி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!