யாரோ சொன்னாங்க..
தடை நீக்கும் பெருமாள். அவரைப் பார்த்து அப்ளிகேஷன் கொடுக்கப் போயிருந்தோம்.
மாங்காடு காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு சற்றேமுன்னதாக இருக்கிறது இந்தக் கோவில். வைகுந்தப்பெருமாள் ஆலயம். இவர்தான் தடை நீக்கும் பெருமாள் என்று அறியப்படுகிறார்.
நன்றி இணையம்.
சகோதரியான காமாட்சி அம்மன் திருமணத்துக்கு பூதேவி ஸ்ரீதேவியுடன் வரும் பெருமாள் திருமணம் தடைப்பட்டதால் கொண்டு வந்த கணையாழியுடன் இங்கே தங்கி அமர்ந்த கோலத்தில் கனகவல்லித் தாயார் சமேதராக அருள் பாலிக்கிறார். பக்கத்தில் ஜம்மென்று பார்க்க முடிந்தாலும் அவர் கையில் கணையாழியைத் தேடினேன். கண்ணில் தென்படவில்லை.
உள்ளே நுழைந்ததுமே வலப்புறம் விநாயகர், இடப்புறம் நாகர்.
பெரிய கோசாலை இருக்கிறது. தாயாருக்கு தனி சன்னதி.
சுற்றிவந்தபோது பிரகாரத்தில் நிறைய பேப்பர்கள் சுருட்டி மாலையாகக் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தன.
நன்றி இணையம்.
அங்கே வைத்திருந்த சிறு பலகையில் இந்த விவரங்கள் எழுதிவிட்டு, தடைகள் நீங்க இவரைப் பார்ப்பதோடு வெள்ளீஸ்வரரையும் சென்று பார்க்கவும் என்று குறிப்பு எழுதி இருந்தது. எனவே வெள்ளீஸ்வரர் எங்கே என்று தேடிக்கொண்டு கிளம்பினோம்.
அவர் காமாட்சி அம்மன் ஆலயத்துக்கு நேர் பின்னே இருந்தார். இவரையும் அருகே ஜம்மென்று தரிசிக்க முடிந்தாலும் அங்கிருக்கும் யாருக்கும் கோவிலின் காலம் பற்றி சரியாக சொல்லத் தெரியவில்லை. "பழமையான கோவில்... (அது எங்களுக்குத் தெரியாதா?) பலலவர் காலத்திலிருந்து இருக்கு" என்றார் இன்னொரு சக பட்டருடன் 'தொழில் ரீதியாக' பேசிக்கொண்டே....யிருந்த பட்டர். ஆனால் சோழர் கட்டிடக்கலை என்கிறது விக்கி.
என்னவோ போங்க.. ஆனால் பழைய கோவில். அழகாய் இருக்கிறது.
தவத்தில் இருக்கும் சண்டிகேஸ்வரரை கைகளை ஓசைப்படுத்தி எழுப்பக்கூடாது, சிவன் சொத்து எதையும் நான் என்னுடன் எடுத்துக் கொண்டு செல்லவில்லை என்று கைகளை ஓசைப்படுத்தாமல் வழித்துத் துடைத்துக் காட்டி விட்டுச் செல்லவேண்டும் என்று அறிவுறுத்துகிறது பலகை. இது தெரியாமல் சண்டிகேஸ்வரரை எழுப்பி, எழுப்பி விட்டுக் கொண்டிருந்திருக்கிறேன் இத்தனை நாளாய்... கோபமாய் இருந்திருப்பார் என்மேல்!
கோவிலைச் சுற்றிய களைப்பு கூட நம்முடன் வரக்கூடாது என்பதால்தான் சிவன் கோவிலில் கடைசியாக கொஞ்சம் அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு வரவேண்டும் என்பார்கள்.
அதேபோல பெருமாள் கோவில்களில் உள்ளே நுழையும்போதே கொடிக்கம்பம் அருகே நமஸ்காரம் செய்துவிட வேண்டும். சிவன் கோவிலில் வெளியில் வருவதற்குமுன் நமஸ்காரம் செய்யவேண்டும். சரியா கீதா அக்கா?
வெளியில் வந்தோம். அங்கே கண்ணில் பட்டது..
வலது கண்ணில் பிரச்னையா? இடது கண்ணில் பிரச்னையா?
கோவிலின் வரலாறு கேட்டால், அதெல்லாம் மாங்காடு கோவில் தலவரலாற்றிலேயே இருக்கும், இதற்கென்று தனியாகக் கிடையாது என்றார் குருக்கள். பெருமாள், வெள்ளீஸ்வரர், இவர்களோடு காமாட்சி அம்மனையும் காணவேண்டும் என்று ஒருவர் சொல்ல, அங்கும் விரைந்தோம். கூட்டம். முக தரிசனம்செய்யாமல் பிரகாரம் சுற்றி வெளியில் வந்தோம்.
தல வரலாறு புத்தகம் வாங்கினால், சிவனின் கண்களை பொத்திய பார்வதியின் கதை பற்றி இருக்கிறது. ஸ்தோத்திரங்கள் இருக்கிறது. வேறொன்.........றுமில்லை.
பிரசாத ஸ்டாலில்... ஆ.... புளியோதரை! 20 ரூபாய் கொடுத்து ஒன்று வாங்கி கொஞ்சம் டேஸ்ட் பார்த்தோம். பரவாயில்லை, சுமாராக இருந்தது.
அப்புறம் செல்ஃபி கடமைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம். அடுத்த வாரங்களிலும் அங்கே செல்ல ஐடியா. ஆஞ்சநேயரை அங்கேயே தரிசித்து விட முடிகிறது.
=========================================================================================================
டிஸம்பர் 28, 2013 இல் இந்து தமிழ்ப் பதிப்பில் வெளிவந்த கட்டுரையை முக நூலில் பகிர்ந்திருந்தேன். சுவாரஸ்யமான கட்டுரை.
சதாம் ஒரு குற்றவாளி; உண்மை தான், ஒரு கொலைகாரர்;உண்மை தான், படுகொலை புரிந்தவர்; உண்மைதான். ஆனால், அவர் தன் இறுதி நிமிடம் வரை துணிச்சல் காட்டினார். ஒரு போதும் வருத்தப்படவில்லை, வருத்தம் தெரிவிக்கவுமில்லை.
ஈராக் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் சதாம் ஹுசேன் தூக்கி லிடப்பட்டதை அருகிலிருந்து பார்த்தவரான மொவாபக் அல் ருபேய், சதாமின் இறுதி நிமிடங்கள் குறித்த நினைவைப் பகிர்ந்து கொண்டபோது சொன்னவைதான் மேற்சொன்ன வாக்கியங்கள்.
மொவாபக் அல் ருபேய் இராக்கின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர். கடந்த 2006 ஆம் ஆண்டு சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்டபோது அருகில் இருந்த ஒரே நபர். சதாம் தூக்கிலிடப்பட்ட வடக்கு பாக்தாத் நகரின் காதிமியா பகுதியில் உள்ள சிறைக்கு அருகே மொவாபாக்கின் அலுவலகம் இருக்கிறது.
அங்கு சதாம் ஹுசேன் தன் பிரத்யேக ராணுவ உடையில் கம்பீரமான பார்வையுடன் காணப் படும் மார்பளவுச் சிலை வைக்கப்பட்டிருக் கிறது. அச்சிலையின் கழுத்தைச் சுற்றி, சதாமைத் தூக்கிலிடப் பயன் படுத்தப்பட்ட உண்மையான கயிறு சுற்றப்பட்டுள்ளது. அதனைப் பார்த்த படி சதாமின் இறுதி நிமிடங்களை அவர் நினைவு கூர்ந்தார்.
“சிறைக் கதவு வழியாக சதாம் உள்ளே நுழைந்தார். அவரை எதிர்கொண்டு அழைத்தேன். எங்களுடன் அமெரிக்கரோ வேறு வெளி நாட்டவரோ வேறு யாரும் இல்லை. அவர் வெள்ளை நிறச் சட்டையும் மேலங்கியும் அணிந்திருந்தார். நிதானமாகவும் மிக இயல்பாகவும் இருந்தார். அவரிடம் பயத்துக்கான அறிகுறி சிறிதும் இல்லை.
அவர் மிகக் குழப்பமான மன நிலையில் இருந்தார் அல்லது அவருக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டிருந்தது என்று நான் சொல்ல வேண்டும் என சிலர் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நான் சொல்வதுதான் வரலாற்றுச் சம்பவம். அவரிடம் எவ்வித வருத்தத்தை யும் பார்க்க முடியவில்லை; வருத்தம் தெரிவிக்கவுமில்லை. கருணை காட்டும்படி கடவுளிடம் அவர் கோரிக்கை விடுக்கவில்லை; கடவுளிடம் மன்னிப்பும் கோர வில்லை. இறக்கும் தருவாயில் உள்ள மனிதர்கள் வழக்கமாக, “கடவுளே என் பாவங்களை மன்னி்ப்பீராக, நான் உம்மிடத்திலே வருகிறேன்” என்று சொல்வார்கள். ஆனால் இதுபோன்ற எதையும் அவர் கூறவில்லை.
அவரை நான் நீதிபதியின் முன் அழைத்துச் சென்றேன். அவருக்கு கைவிலங்கு இடப்பட்டிருந்தது. சதாம் குர்ஆன் வைத்து இருந்தார். நீதிபதி குற்றப்பத்திரிகையை வாசித் தார். “அமெரிக்காவும், இஸ்ரேலும் அழிந்து போகட்டும், பெர்ஸியன் மேகிக்கு (ஜூராஸ்ட்ரியனிசம்) மரணம் சம்பவிக்கட்டும். பாலஸ் தீனம் நீடூழி வாழட்டும்! என்றார்.
பேசுவதை நிறுத்திய அவர், தூக்குமேடையைப் பார்த்தார். பின் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டுச் சொன்னார்: ‘டாக்டர், இது மனிதர்களுக்கானது’ என்று.
அவரை தூக்குமேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்தது. அப்போதும் அவரின் கால்கள் மிக உறுதி யாக நிலைபெற்றிருந்தன. ஆகவே, நானும் வேறு சிலரும் தூக்குமேடையின் படிக்கட்டுகளை நோக்கி அவரை இழுத்துச் சென்றோம். இராக்கின் வலிமையான ராணுவ ஆட்சியாளரான சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்ட அறையை அடிக்கடி பார்த்தபடி, அவரின் இறுதி நிமிடங்கள் குறித்து மொவாபாக் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இராக்கின் அதிபராக 1979ஆம் ஆண்டு பொறுப்பேற்ற சதாம் ஹுசேன், சுமார் 24 ஆண்டுகள் அதாவது அமெரிக்கா தலைமை யிலான ராணுவப் படைகள் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில், பண்ணைவீட்டின் பதுங்கு குழியில் பதுங்கியிருந்த சதாமைக் கண்ட றியும் வரை அதிபராக நீடித்தார்.
மூன்று ஆண்டுகள் விசாரணைக் குப் பிறகு 2006 டிசம்பர் 30 ஆம் தேதி சதாம் தூக்கிலிடப்பட்டார். தான் அதிகாரத்தில் இருந்தவரை அமெரிக்காவுடனும், இஸ்ரேலுட னும் சதாம் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். 1982 ஆம் ஆண்டில் துஜைல் கிராமத்தைச் சேர்ந்த 148 ஷியா முஸ்லிம்களை கொன்ற குற்றச்சாட்டின் பேரில் சதாம் தூக்கி லிடப்பட்டார். இராக்கில் உள்நாட்டு ஸ்திரமற்ற தன்மையின்போது ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
==============================================================================================================
விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சு... விமர்சனத்துக்கு விமரிசனமும் ஆச்சு!........
==========================================================================================
வருத்தம் தந்த ஒரு நிகழ்வு...
=================================================================================================
நிலைமை இப்பவும் பெரிசா மாறவில்லை... என்ன, ரேடியோவுக்கு பதிலாக தொலைகாட்சி! இல்லையா ஏகாந்தன் ஸார்?!!
வாழ்க நலம்...
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
பதிலளிநீக்குஆஹா... இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். மறுபடி உங்களை இந்த நேரத்தில் இங்கு காண்பது மட்டில்லா மகிழ்ச்சி. உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்டதா?
நீக்குநலமே...
நீக்குஉடல் நலத்தில் என்றுமே குறைவில்லை....
பெருமாளே சரணம்!...
வேலை விஷய நிலவரம் என்னவோ...?
நீக்குஅனைவருக்கும் சாவகாசமாக வணக்கம் தெரிவிச்சுக்கறேன். வரவேற்ற வரவேற்கப் போகும் அனைவருக்கும் நன்றி. தி/கீதா, உடல்நலம் தேவலையா? துரைக்கு உடல்நலம், மன அமைதி கிடைக்கப் பிரார்த்தனைகள்.
நீக்குகீதாக்கா இப்ப பரவால்ல...பெட்டர்...சைனஸ்தான்!..முசுமுசுக்கீரை கஷாயம் சாப்பிடறேன்..சுக்குமல்லி என்று ...நன்றி கீதாக்கா
நீக்குகீதா
உடல்நிலை சரியில்லாத நண்பர்கள் எல்லோருக்கும் பனிக்கால தொந்தரவுதான் என்று தெரிகிறது. வெந்நீர் குடியுங்கள். ஆவி பிடியுங்கள். ஆவி பிடியுங்கள் என்ற வார்த்தையை வைத்து பழைய ஜோக் அடிப்பது தடை செய்யப்படுகிறது!!!!
நீக்குகாலைப் பொழுதில் பெருமாள் தரிசனம் நல்லபடியாக ஆயிற்று...
பதிலளிநீக்குஆமாம்...
அந்தக் கணையாழி எங்கே?...
//அந்தக் கணையாழி எங்கே?...//
நீக்குஅது தெரியாது! ஆனால் இந்தப் புத்தகக் கண்காட்சியில் 1965 முதல் 1970 வரையிலான கணையாழி புத்தகத்தை "அப்படியே" தொகுப்பாக ஐந்து பாகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள் என்று செய்தி படித்தேன்!!!
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஇன்னிக்குக் காலங்கார்த்தாலே வம்பிழுக்க பானுமதியும் வெங்கட்டும் அகப்பட்டாங்க. இன்னிக்குச் சாப்பாடு ஜீரணம் ஆயிடும்னு நினைக்கிறேன். :)
நீக்குநேத்துக் கேள்விபதில்ல இருந்து இன்றைய இடுகையை கவனிக்கலை..
பதிலளிநீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்
காலை வணக்கம் நெல்லை!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநேற்றைக்கு நான் சந்தித்த உபாசகர்/ஜோதிடர் சொன்னார், அருகிலிருக்கும் ஆஞ்சநேயரை (மற்ற பரிகாரத் தெய்வங்களை) வணங்காமல் தள்ளி உள்ள கோவில்களுக்கு போக்க்கூடாது என்றார். ஆஞ்சநேயரை சனிக்கிழமை தோறும் வணங்கணும்னா அருகிலுள்ள கோவிலுக்குப் போங்கன்னார் (மற்ற இடங்களுக்கும் போலாம், ஆனால் அந்த ஆஞ்சநேயர்தான் பவர்ஃபுல் அப்படீல்லாம் நினைக்கக்கூடாது என்றார்)
பதிலளிநீக்குநெல்லை எல்லா உம்மாச்சியுமே பவர்ஃபுல் தானே!! ஒரே போன்றுதானே!
நீக்குஇது எனது தனிப்பட்டக் கருத்து...எப்பவுமே...
கீதா
அருகில் இருக்கும் கோவிலை உதசீனம் செய்யக்கூடாது என்பார்கள்.
நீக்குநெல்லைத்தமிழன், கோமதி அக்கா...
நீக்குஅருகில் இருக்கும் கோவிலை "சே... நீ வேண்டாம்" என்று உதாசீனம் செய்து அங்கு போகவில்லை. அப்படிப் பார்த்தால் மற்ற எந்த கோவிலுக்குமே போகமுடியாது! மேலும் தடை நீக்கும் சக்தி பற்றி எல்லாம் எனக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. ஆனால் பாஸ் மேல் அன்பும் மதிப்பும் உண்டு. அவர் விரும்பும்போது மறுக்க முடியுமா? மட்டுமல்லாமல் எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' நிலை!
ஸ்ரீராம் நெல்லைத்தமிழன் அவர்களிடம் ஜோதிடர் சொன்னார் என்று சொன்னதால் சொன்னேன் பெரியவர்கள் அப்படி சொல்வார்கள் என்று.
நீக்குநீங்கள் உதாசீனம் செய்தீர்கள் என்று சொல்லவில்லை.உங்களை சொல்வதாக நினத்து விட்டீர்களா? மன்னித்துக் கொள்ளுங்கள்.
பாஸ் மேல் அன்பும் மதிப்பும் இருப்பது மகிழ்ச்சியே!
மீண்டும் சொல்கிறேன் எந்த் கோவிலுக்கும் நம்பிக்கையுடன் போனால் நல்லது நடக்கும். பாஸ் சொன்னார் என்று மட்டும் அல்லாமல் நீங்களும் மனதார நம்பி வழி படுங்கள்..
வழமை போல் சுவாரசியமான வியாழன்....
பதிலளிநீக்குகணையாழி எங்கே என்ற கேள்வி என்னிடத்திலும்.....
நன்றி வெங்கட். கணையாழி கையில் இருந்திருக்கும். ரொம்பப் பக்கத்தில் போய்ப்பார்த்தால் தெரிந்திருக்குமோ என்னவோ!
நீக்குவண்டி வச்சிருக்கீங்க போலிருக்கு. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு திசை நோக்கி உலா போறீங்க.
பதிலளிநீக்குஆமாம், ஆஸ்தான ஆட்டோ, ஊபர்... வண்டி வச்சிருக்கேன்!
நீக்குசதாம் ஹுசேன் பற்றிய ஒரு ஆங்கில நூல் என்னிடம் இருந்தது. படித்து அதிர்ச்சி அடைந்தது இப்போது நினைவில்....
பதிலளிநீக்குஓ... எனக்கு அவரைப் பிடிக்கும்.
நீக்குசதாம் தூக்கிலிடப்பட்ட (தலை தொங்கும்) கிளிப் அந்த சமயத்தில் எனக்கு வந்தது.
பதிலளிநீக்குசதாம் பல பெருமைகள் உடையவர். அவர்மீது பொலிடிகல் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. என்னைப் பொறுத்தவரை அவர் உதாரணத் தலைவர்தான்
இதை நான் சொல்லத் தயங்கி சொல்லவில்லை. ஏனோ எனக்கும் சதாம் மேல் மதிப்பு உண்டு.
நீக்குஹாஹா, வெங்கட் பயந்துட்டார் போல! தலையே காட்டலை! மிரட்டி வைச்சிருக்கேனாக்கும்! :)
பதிலளிநீக்குஆஹா... இணைய சதாம் வந்துவிட்டார் - அப்படீன்னு எழுதி காலையில் உங்களிடம் வம்பு வளர்க்க நான் தயார் இல்லை. வாழ்க வளமுடன் கீதா சாம்பசிவம் மேடம்.
நீக்குgrrrrrrrrrrrrrrrrr கமென்டறதுக்குள்ளே வந்துட்டாரா? அ.வ.சி. :)))))
நீக்குஜிவாஜி எம்ஜார் பத்தி படிச்சுட்டு இருந்தேன்.... அதான் லேட்.... :)
நீக்குகமெண்ட் பண்ணும் சமயம் கரண்ட் கட். நெட் அவுட்.... உங்களுக்கு போட்ட கமெண்டும் போகல!
அ.வ.சி.... ஹாஹா.....
நீக்குநெ.த. வேற வம்புக்கு இழுக்கறாரே.... ஹாஹா...
ஜிவாஜி எம்ஜியார் இனிதான் படிக்க வேண்டும். இன்று இங்கு 9 டு 5 பவர் கட்! இப்பதான் இணையம் வரமுடிந்தது!
நீக்குஶ்ரீராம்... ஒரு ரூபாய் போஸ்டல் ஆர்டர் இன்னைக்கு உங்களுக்கு அனுப்பறேன். புத்தகம் வாங்கி வைங்க. வந்து உங்கள்டேர்ந்து வாங்கிக்கறேன்.
பதிலளிநீக்குஹ ஹா ஹா இதனால்தான் நானும் கேட்டேன்ன் ஸ்ரீராம் என்ன சொல்ல வருகிறார் என:))
நீக்குஓகே. டன். செஞ்சுடலாம். ஒருரூபாய் போஸ்டல் ஆர்டரோட ஒரு கால யந்திரமும் அனுப்பி வைங்க.
நீக்குஸ்ரீராமுக்கு ஒரு சந்தோஷமான விஷயம்! மாங்காடுக்கே ஒரே ஒருமுறை தான் அவசரத்தில் போயிருக்கேன். சென்னையில் இருந்தவரை பலமுறை போக முயன்றும் போக முடியலை. ஆகவே ஸ்ரீராம் சொல்லி இருக்கும் மற்றக் கோயில்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் நான் அறியாதவை! புதிய கோயில்கள் அறிமுகத்துக்கு நன்றி. சென்னை வந்து தங்க நேர்ந்தால் இந்தக் கோயில்கள் செல்ல முயற்சி செய்யணும். பார்ப்போம்.
பதிலளிநீக்கு//ஸ்ரீராமுக்கு ஒரு சந்தோஷமான விஷயம்! மாங்காடுக்கே ஒரே ஒருமுறை தான் அவசரத்தில் போயிருக்கேன்//
நீக்குgrrrrrrrrrrr.... இதில் எனக்கென்ன சந்தோஷம்? அது சரி, உங்கள் பெயர் சொல்லி பதிவில் ஒரு கேள்வி கேட்டிருப்பதை நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை!!! அதற்கும் ஒரு கிர்ர்ர்ர்ர்ர்...
கணையாழி எங்கே? பொன்.மாணிக்கவேல் தான் வந்து கண்டு பிடிக்கணுமோ? சதாம் ஹூசேனின் மேல் எனக்கு மிகவும் மதிப்பு உண்டு. அது மாறலை. த,நா.குமாரசாமி, த.நா.சேனாபதி இருவரும் எழுதிய எழுத்துக்கள் நிறையப் படிச்சிருக்கேன். ரொம்பப் பிடிக்கும். பல ஆண்டுகள் கழிச்சு அவங்களைப் பற்றி இங்கே படிக்க நேர்ந்ததில் ரொம்பவே சந்தோஷம். த.நா.குமாரசாமி ஆனந்த விகடனில் கூட அந்தக்காலத்தில் ஓர் தொடர்கதை எழுதி இருந்தார். மார்க்கபந்து என்பவரின் இரு இளைய உறவினர்கள் பற்றிய கதை! அந்தக் காலகட்டத்தில் புரிந்தும், புரியாமலும் படித்த நினைவு. வீட்டுப்புறாவோ என்னமோ பெயரில் வந்ததுனு நினைக்கிறேன். சாரதி படங்கள் என நினைவு. ம்ம்ம்ம்? ரொம்பவே அந்தக்காலத்துக்குப் போயிட்டேனோ?
பதிலளிநீக்கு//சதாம் ஹூசேனின் மேல் எனக்கு மிகவும் மதிப்பு உண்டு. அது மாறலை.//
நீக்குஎனக்கும்! பதிவில் இதை நான் சொல்லத்தயங்கினேன்! நீங்கள் சொல்லி இருக்கும் எழுத்தாளர்கள் பற்றி யதும் அறிந்திலேன்!
///எனக்கும்! பதிவில் இதை நான் சொல்லத்தயங்கினேன்!...//
நீக்குgrrrrrrrrrrrrrrrrrr
எதுக்கு மற்றவர்களுக்குப் பயப்பிடோணும்[தயக்கம்:)] ஸ்ரீராம்.... உள்ளே என்ன ஜொள்ளுதோ அதை ஜொள்ளிடுங்கோ அதிராவைப்போல ஹா ஹா ஹா:))
நீக்குஅதானே :) என்ன பிரச்சினைனாலும் சொல்லுங்க ,தேஜாவ அனுப்பிட்டு ஒன் hour கழிச்சி அடிபட்ட தேஜாவை தூக்கிட்டு போக காஜா வருவாங்க
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எப்பவும் தூக்கிறதிலும் தள்ளுவதிலுமே குறி கர்ர்ர்ர்ர்ர்:))
நீக்குஆழ்வாரிடம் நான் புத்தகங்கள் வாங்கியதில்லை. அண்ணா ஆழ்வார்ப்பேட்டையில் இருந்தப்போத் தான் அவர் கடைக்கு அடிக்கடி போயிருக்கேன். புத்தகங்கள் வாங்கும் வசதி எல்லாம் அப்போ இல்லை. அதன் பின்னர் அங்கே போகும் சந்தர்ப்பமே கிட்டவில்லை. கிரிக்கெட் மோகம் மட்டும் என்றும், எப்போதும், எங்கேயும் குறைந்ததில்லை. ஆனால் யு.எஸ்ஸில் இந்த மோகம் இல்லை.
பதிலளிநீக்குஆழ்வார் கடை பற்றி நிறையாக கேள்விப்பட்டிருந்தும், அங்கு போகவேண்டும் என்ற எண்ணமிருந்தும் அந்த வாய்போப்பு எனக்கு அமையவில்லை. இப்போ அந்தக் கடை (எப்படி) இருக்கிறதோ?
நீக்கு//அப்புறம் செல்ஃபி கடமைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம்//
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. இது கடமையில் வந்து விட்டதா ?
சதாம் நல்லவரோ கெட்டவரோ எனக்கு பழக்கமில்லை ஆகவே தெரியாது ஆனால் துணிச்சலானவர்.
பக்ரீத் அன்று காலை திடீரென தூக்கிலிட்டு உலக இஸ்லாமியர்களை மனம் வருத்திய அந்நாளை உலகம் மறக்காது.
சதாம் நிலவறைக்குள் பிடிபட்டதும் இந்த நாட்டுக்காரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்களே...
நீக்குசதாமைப் பிடிப்பதற்கு எல்லா வகையான உதவிகளையும் செய்தவர்கள் யார்!?...
அவர்களும் இஸ்லாமிய நாடுகள்தான் ஜி
நீக்குஇவங்களுக்கு சதாம் அடி பணிய வில்லை...
நீக்குஅது பிடிக்காமல் போனதாலேயே
அதற்கு மேல் பலவித அரசியல் விளையாட்டுகள்....
சதாம் ப்பற்றிய ஒத்த கருத்துகள் மகிழ்ச்சியைத் தருகின்றன கில்லர்ஜி, துரை ஸார்.
நீக்குபிரசாத ஸ்டாலில் எல்லாம் பிரசாதம் வாங்கலாமோ? கோயில்லே அவங்களே கொடுத்தால் அதான் பிரசாதம். அதன் ருசி வேறே எங்கே கிடைக்கும்? கிடைக்கிற சமயமாப் பார்த்துப் போகணும் கோயிலுக்கு! :) இஃகி, இஃகி, இஃகி
பதிலளிநீக்குஅதே அதே அப்படியே வழி மொழிகிறேன் கீதாக்கா உங்க வரிகளை...
நீக்குகீதா
கோவில்ல எப்போ பிரசாதம் கொடுப்பங்களோ... அதுவும் என்னைக் கண்டதும் "எடுடா அந்த பொங்கலை" என்று சொல்லி விடுவார்கள். அம்மனையே பார்க்கவில்லை. பிரசாத்துக்கு....? ஸ்டாலில் வாங்கிய காரணம் அதுதான்!
நீக்குமார்கழிக்குப் பெருமாள் தரிசனம். ஆச்சு. மகளுக்குக் காமாட்சி மேல் தனிப் பாசம். அடிக்கடி போய் வருவாங்க.
பதிலளிநீக்குசதாம் ஹுசைன் மரணம் படிக்க என்னவோ போலிருந்தது.
ஆளுமை நிறைந்தவர்.
எங்கள் லஸ் ஆழ்வார் மிகுந்த புத்திசாலி. அதிகம் பேசி வீணாக்க மாட்டார்.
கல்லூரிப் புத்தகங்கள் அங்கே வாங்கி இருக்கிறார்கள்.
கிரிக்கெட் காமெண்ட்ரீ கார்ட்டூன் சுவை. நாங்களும் இப்படிக் கேட்டிருக்கிறோம்.
வாங்க வல்லிம்மா... லாஸ் ஆழ்வார் பற்றிநீங்களும் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தீர்கள். இது ஏற்கெனவே டுத்து வைத்திருந்த கட்டிங். சேர்த்து விட்டேன்!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். கோமதி,கீதா இவர்கள் ஜுரம் சரியாகி இருக்கும்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவல்லிமா நான் ஓகேயாகிவிட்டேன்...ஓ கோமதிக்காவுக்குமா...இப்ப சீசன் போல....துரை அண்ணா நலமாகிட்டார்..நானும்...கோமதிக்கா நலம் பெற பிரார்த்தனைகள்
நீக்குகீதா
கீதா, ஜூரம் இல்லை, இருமல் மட்டும் அதிகமாய் இருக்கிறது இருமி இருமி, மேல்வலி.
நீக்குடாகடரிடம் போய் மருந்து வாங்கி வந்து இருக்கிறேன். நேற்று இரவு தூங்கவே இல்லை இடைவிடாத இருமல். காலை கோவில் வழிபாடு பனி தலையில் இறங்கி இருக்கு. ஆச்சு இன்னும் நாலுநாள் அப்புறம் காலையில் கோவில் போவது இருக்காது, மெதுவாய் போய் கொள்ளலாம்.
வல்லி அக்கா, உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி.
நீக்குகோமதி அக்கா... இருமல் இருக்கும் நேரத்தில் அதிகாலை கோவிலுக்குப் போகவேண்டுமா? கொஞ்சம் மெதுவாகத்தான் போவது...
நீக்குமார்கழி மாதம் கோவில் போய் பழகி விட்டது.மனது ஆசைக்கு உடல் ஓத்துழைக்க மாட்டேன் என்கிறது.
நீக்குபழைய நினைப்பில் இருந்தால் அவதிபடவேண்டி இருக்கு. தலைக்கு ஸ்கார்ப் கட்டிக் கொண்டால் வேர்க்கிறது. கட்டவில்லைஎன்றால் பனி இறங்குது தலையில்.
உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி.
கோயில் தகவல்கள் ஸ்வாரஸ்யம்!
பதிலளிநீக்குசதாம் உசேன் ஹீரோவா வில்லனா என்பது அவரவர் நாட்டைப் பொறுத்த விஷயம். ஆனால் அந்தத் தூக்குக் கயிற்றை சிலையிலும் மாட்டி வைத்திருப்பது மன வக்கிரத்தையே காண்பிக்கிறது - என் அபிப்ராயம்
வாங்க மி கி மா ஒருத்தரைப்போல எல்லோருமே சதாம் பற்றி ஆதரவு கருத்துதான் கொண்டிருக்கிறோம்.
நீக்குஇனிய காலை வணக்கம் அனைவருக்கும்....
பதிலளிநீக்குநாளைலருந்து நான் காலைலயிலேயே வந்துருவேனாக்கும்...ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஉன்னு...
இன்று நிறைய விஷயங்கள் இருக்கு போலருக்கே...வரேன் வரேன்...தஞ்சையிலும் எட்டிப் பார்த்துட்டு வரேன்...பதிவுகள் நிறைய இருக்கு போல...
கீதா
நாளையிலிருந்து ஃபர்ஸ்ட்டா... வாங்க வாங்க...
நீக்குஓ ஸ்ரீராம் தடை நீக்கும் பெருமாளா அவர் பெயர்...யெஸ் மாங்காடு அம்மன் கோயிலுக்கு அருகில்...நான் போயிருக்கேனே ஆனால் தடை நீக்கும் பெருமாள்னு எல்லாம் தெரியலை...ஃபோட்டோ கூட எடுத்து வைச்சுருக்கேன்...ஆனா நான் தான் போடவே இல்லையே எதுவும்...ம்ம்ம் எந்த ஃபைல்ல இருக்குன்னு தேடி எடுக்கறேன்....
பதிலளிநீக்குஆனா நான் போட்டிருந்தா சும்மா பகிர்ந்து போட்டிருந்திருப்பேன்....தடை நீக்கும் பெருமாள்னு இப்பத்தான் தெரியுது உங்க பதிவு மூலமா....
கீதா
ஓ... நீங்களும் போயிருக்கீங்களா கீதா?
நீக்குமாங்காட்டில் இருக்கும் வெள்ளீஸ்வரர் ஆலயம் சென்னையில் இருக்கும் நவகிரக க்ஷேத்திரங்களில் சுக்கிரனுக்கு உரியது. சுக்கிரகவானுக்கு வெள்ளி என்று ஒரு பெயர் உண்டு.
பதிலளிநீக்குவாமனனாக வந்த மஹா விஷ்ணுவிற்கு மகாபலி தானம் செய்வதை தடுக்க ஒரு வண்டாக மாறி முயற்சித்த சுக்கிராச்சாரியாரின் கண்ணை தர்பையால் வாமன பகவான் குத்திவிட தன் பார்வையை இழந்து விடுகிறார் சுக்கிராச்சாரியார். அவர் இழந்த தன் பார்வையை பெற சிவ பெருமானை வழிபட்டு மீண்டும் பார்வை பெற்ற தலம் இது.
மாங்காடு காமாட்சியை வழிபட செல்பவர்கள் இங்கு வந்து சிவபெருமானை வணங்க வேண்டும் என்பது முறை. நாலைந்து முறை சென்றிருக்கிறேன். முதல் முறை சென்றபொழுது ஸ்வாமிக்கு புலித்தோல் போன்ற டிசைனில் வஸ்திரம் சாற்றி இருந்தார்கள். சிவபெருமான் நேரே உட்கார்ந்திருப்பது போல் இருந்தது. மெய் சிலிர்த்தது.
வைகுண்ட பெருமாள் கோவிலுக்குச் சென்றதில்லை.
இத்தனை தகவல்களெனக்குக் கிடைக்கவில்லை பானு அக்கா.. பதிவிலேயே சேர்த்திருப்பேன். நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஅவர் கையில் கணையாழியைத் தேடினேன். கண்ணில் தென்படவில்லை. //
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஸ்ரீராம் எனக்கு இந்தக் கதை நான் கோயிலுக்குச் சென்ற போது தெரிந்திருச்சுனா...கண்டுபிடிச்சு சொல்லிருப்பேனே!!! ஹிஹிஹிஹி....
என்னிடம் இருக்கும் குறையா என்னன்னு தெரியலை...நான் கோயில் போனா...இறைவனை நினைச்சு அப்படியே பார்த்துட்டே இருப்பேன்..கண் மூடியும்....வேற ஒன்னும் மனசுல ஏறாது..வேண்டுதலும் இருக்காது......குருக்கள் என்ன சொல்றார்னு கேட்க முனைந்ததே இல்லை...ஸ்ரீராம்...இனி அதையும் கவனிக்கனுன்னு நினைக்கிறேன்...பார்ப்போம்...இப்பத்தான் நீங்க சொல்லித்தான் கதை தெரியுது...
இதே கோயில்தான் படங்கள் பார்த்ததும் தெரியுது
அப்படியே மாங்காடும் போனேன்...பக்கத்துலதானே...
கீதா
எனக்கு இரண்டு வழக்கமும் உண்டு கீதா.
நீக்குஅந்த போர்டையும் நான் வாசிக்காம விட்டுருக்கேன் பாருங்க.....ஃபோட்டோ எடுத்தேனா நினைவில்லை...பாருங்க இப்படித்தான் நான்...
பதிலளிநீக்குகீதா
நான் கூட கோவிலுக்கும் போட்டோ எடுக்கவில்லை கீதா.. தடை செய்யப்பட்டுள்ளது.
நீக்குஉள் ஃபோட்டோஸ் போர்ட் எல்லாம் இணையத்துலருந்தா...
பதிலளிநீக்குகீதா
என்னவோ போங்க.. ஆனால் பழைய கோவில். அழகாய் இருக்கிறது. //
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா அதானே!!!!
வெள்ளீஸ்வரர் கோயில் போகவில்லை..இருந்ததைப் பார்த்தேன்...மாங்காடு கோயில் பின்னால்....
கீதா
சதாம் ஹுசைனுக்கு இந்தியா மீது மதிப்பு உண்டு. இஸ்லாமிய நாடுகளின் மீட்டிங்கில் காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு ஆதரவாக பேசிய ஒரே ஒரு இஸ்லாமிய தலைவர். அதனால்தான் கல்ஃப் வார் சமயத்தில் அமெரிக்க போர் விமானங்கள் இந்தியாவிற்கு வந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டு சென்றபொழுது தான் மிகவும் ஏமாற்றமடைந்ததாக தெரிவித்தார்.
பதிலளிநீக்குஉலகிற்கே சட்டாம்பிள்ளையாக விளங்கும் அமெரிக்காவை தட்டி கேட்டதர்காகவே பழிவாங்கப்பட்டவர்.
சதாமுக்கு இந்தியாவின் செயல் கட்டாயம் ஏமாற்றமாய்த்தான் இருந்திருக்கும். நமக்கு நம் நியாயங்கள், பயங்கள்!
நீக்குகிரிக்கெட் கமெண்ட்ரி கேட்கும் சிறுவர்கள் கார்ட்டூன் அமர்க்களம். அமரர் ராஜூவினுடையதா? சுவற்று கடிகாரம் காட்டும் மணியை கவனித்தீர்களா?
பதிலளிநீக்குகடிகாரம் காட்டும் மணிதான் சுவாரஸ்யமே! அதைப் பார்க்காமலா!
நீக்குசண்டிகேஸ்வரர் உங்களிடம் சண்டி செய்யமாட்டார் ஸ்ரீராம்!!... நல்லதே செய்வார்...கண்டிப்பாக!
பதிலளிநீக்குஓ கொடிமர நமஸ்காரம் பற்றி இப்பத்தான் தெரியுது...இப்படியும் இருக்குன்னு ....போனேன்னா அப்படியே இறைவன் இறைவி பாதத்தில் விழுந்துவிடுவது...அம்புட்டுத்தான் நீயே பாத்துக்கப்பான்னு...
கீதாக்கா, துரை அண்ணா, கோமதிக்கா, இப்ப நீங்க தரும் விஷயங்கள்லருந்துதான் தெரிஞ்சுக்கறேன்...
மாங்காட்டில் புளியோதரை ..பயங்கர உதிர் உதிரா இருக்குமே...கொஞ்சம் மென்னை அடைப்பது போல்...எங்க போனாலும் நானும் பிரசாதம் மட்டும் மனசும் கண்ணும் தேடும். கீதாக்கா சொல்லிருக்காப்புல கோயில்ல நைவேத்தியம் செஞ்சு கொடுத்தாங்கன்னா அது ரொம்ப சந்தோஷமா இருக்கும் ரொம்ப நல்லாருக்கும்....
கீதா
மாங்காட்டில் புளியோதரை பரவாயில்லை ரகம்! நமக்கு நாக்கு நாலு முழம் ஆச்சே!!
நீக்குமாங்காட்டில் தம்பி இருக்கிறான், அவன் மகள் கல்யாணநிச்சியம் செய்யும் சமயம் போன போது பெருமாள் கோவில் பெருமாளையும், வெள்ளீஸ்வரரையும் , சேக்கிழார் கோவில், குன்றத்தூர் குமரனையும் பார்த்து வந்தோம். குற்த்தூர் மட்டும் பதிவு போட்டேன். பெருமாள் கோவில் , வெள்ளீஸ்வரர் எல்லாம் முகநூலில் போட்டதுதான்.
பதிலளிநீக்குஓ... நீங்களும் இங்கெல்லாம் சென்று வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது கோமதி அக்கா.
நீக்குபழைய கோவில் என்றாலும் அழகாக இருக்கிறது...
பதிலளிநீக்குதொலைக்காட்சியா...? இப்போது மூன்றாவது கை...
வாங்க டிடி... ஆமாம், கோவில்(கள் எப்பவுமே அழகு. மூன்றாவது கை?
நீக்குசுந்தரர் தேவாரம்.சிவபெருமானிடம் கண்களை ஏன் குருடாக்கினீர் என்று பாடி திருவாரூரில் ஒரு கண்ணை பெருவார்.
பதிலளிநீக்குவலகண் பெறுகிறார்.
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே
விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன்
விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை
கொத்தை யாக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே
திருவாரூர் பதிகம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஒற்றியூரில் சங்க்கிலி நாச்சியாரை இரண்டாவதாகத் திருமணம் புரிந்து கொள்கிறார், அவ்வாறு மணம் புரியும் பொழுது சங்க்கிலியாரை விட்டுப் பிரியேன் என்று சத்தியமும் செய்து கொடுக்கிறார்.
காலம் செல்ல செல்ல திருவாரூர்ப் ப்ருமானை கண்டு வணங்கும் ஆசை மிகுகிறது. சுந்தர்மூர்த்திக்கு
திருஒற்றியூர் விட்டுப் புறபடுகிறார், எல்லையைத் தாண்டிய உடன் கண்களை இழக்கிறார். காஞ்சீபுரம் வருகிறார். அங்க்குள்ள திருவேகம்பப் பெருமானை வேண்டி, பதிகம் பாடி இடக் கண்பார்வை பெறுகிறார்.
ஆலந்தான் உகந்து அமுது செயதானை
ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாரே"..
இந்த பாடல் பாடி கண் பெருகிறார்.
ஓ இதில் முதல் பாடல் தெரிந்ததாக இல்லை கோமதி அக்கா, இரண்டாவது ஸ்கூலில் படிச்ச நினைவு..
நீக்குபள்ளியில் படித்த் பாடல் நினைவு இருப்பது மகிழ்ச்சியே அதிரா.
நீக்குபாடல்கள் பகிர்வுக்கு நன்றி கோமதி அக்கா.
நீக்குமற்றவைகளை படிக்க பின் வருகிறேன் மருத்துவரிடம் போகிறேன்.
பதிலளிநீக்குஎதுக்கு மருத்துவர் கோமதி அக்கா?.. இந்த நாட்களில் வரும் இருமல் காச்சலுக்கு மருந்து, நிறைய வாம் வோட்டர் குடிக்கோணும்.. நன்கு ரெஸ்ட் எடுக்கோணும்.. தேவைப்பட்டால் பனடோல்/பரசிட்டமோல் எடுத்தால் போதும். ஒரேஞ் யூஸ் குடிங்கோ.
நீக்குஇருமலுக்கு இல்லை அதிரா, கணுக்கால்வலிக்கு.
நீக்குசளி, இருமல், காய்ச்சலுக்கு எல்லாம் மருந்து எடுத்துக் கொள்ள மாட்டேன்.
நீக்குசுக்குகாப்பி, தூதுவளை பொடி , ரசம் இப்படி எடுத்துக் கொள்வேன்.
கால்வலிக்கு டாகடரிடம் காட்டவேண்டிய நாள். ஹோமியோ மருந்துதான் .
நன்றி அதிரா , அன்பான குறிப்புக்கு.
ஓ கோமதி அக்கா, உங்களுக்கு கால் ஜொயிண்ட்டுகளில் பெயின் இருக்கோ? மூட்டு வலி? அப்படியாயின் அதுக்கு ஒரு மருந்திருக்கு இந்திய பாமசிகளில் கிடைக்குது.. அது சமைக்கும் மஞ்சளில்தான் செய்தது, அதனாலதான் மஞ்சள் கரைத்துக் குடிக்கச் சொன்னேன் முன்பு.. இது இப்போ குளிசையாகக் கிடைக்குது அங்கு வாங்கிப் போட்டால் வலி வராது இனிமேல் காலங்களில்.. பெயர் பின்னர் விசாரிச்சுச் சொல்றேன்ன். இது, இதைப் பாவிச்சு பலன் பெற்ற அனுபவசாலி சொன்னதால் நம்பிப் பாவிக்கலாம்.
நீக்குஉடல் நலத்தில் கவனம் வையுங்கள் கோமதி அக்கா.
நீக்குஅதிரா... பாராசிட்டமால் காய்ச்சல் தலைவலிக்கில்லையோ? இருமலை அது என்ன செய்யும்!
sriram it can relieve cold related symptoms
நீக்குஅதிரா, இடதுகாலில் கணுக்கால் வலி.
நீக்குநீங்கள் சொன்னது போல் மஞ்சள் கரைத்து குடிக்கிறேன்.
பொங்கல் சமயத்தில் மஞ்சள், அருகம்புல், விபூதி மூன்றும் ஒரு தட்டில் வைத்து சூரியனை வணங்கி மூன்று அல்லது 11 முறை சுற்றி வந்து முடிந்தவுடன். அந்த மஞ்சளை கரைத்து குடிக்க கொடுப்பார்கள்.
குளிரால் ஏற்படும் உடல்வலிக்குதான் போலும்.
நன்றி அதிரா. மருந்தின் பேர் கேட்டு சொல்லுங்கள்.
உடல் நலத்தில் கவனம் வைக்கிறேன் ஸ்ரீராம். உங்கள் அன்பான வேண்டுகோளுக்கு நன்றி.
நீக்குசிலநேரங்களில் உடல் சொல்லும் மொழியை கேட்க வேண்டி இருக்கிறது. நாம் சொல்வதை அது கேட்பது இல்லை. இருமி இருமி மேல் வலிக்கிறது தலை வலி என்றாதால் அதிரா பாராசிட்டமால் சொல்லி இருப்பார்.
கோவில் தரிசனம் நன்று ..
பதிலளிநீக்குநன்றி அனுராதா பிரேம்குமார்.
நீக்குஸ்ரீராம்! இப்போதெல்லாம் ஸ்தல புராணங்கள் என்பது அப்பட்டமான ஈயடிச்சான் காப்பி விளம்பரங்கள் போல ஆகிவிட்டன, hard selling their kind of brand like! அத்தையெல்லாம் நம்பினால் எத்தைத்தின்றால் பித்தம்தெளியும் என்று மறைகழன்று நிற்க வேண்டியதுதான்! இங்கே மதுரையில் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு முக்தி கொடுக்கச் சித்ரா பவுர்ணமியன்று வைகைக்கு எழுந்தருள்வதை, என்னமோ மீனாட்சி கல்யாணத்துக்கு வந்து அது முன்னதாகவே நடந்துவிட்டதால் ஆற்றின் அக்கரையோடேயே போய்விடுகிற கதையாகச் சொன்ன அரதப்பழசான டெக்னிக்கை இப்போது காமாட்சி கல்யாணத்துக்கும் காப்பியெடுத்துச் சொல்கிறார்களாக்கும்!
பதிலளிநீக்குவாங்க கிருஷ் ஸார்... ஆமாம், அந்தக் கதை படித்தபோது எனக்கும் இந்த நினைவுதான் வந்தது. எனினும் ஸ்தலபுராணம் என்கிற வகையில் கோவிலின் காலம் தெரியவருமே என்கிற ஆசைதான்.
நீக்குசதாம் எப்படிப்பட்டவர் என்று பல செய்திகள் உள்ளதால் நல்லவரா கெட்டவரா என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால் இச்செய்தி ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. இப்படி தூக்கிலடப்பட்டவர்களின் கடைசி தருணங்கள் என்னவாக இருந்திருக்கும் என்று அறிய ஆவலும் உண்டு
பதிலளிநீக்குமாதங்கி அக்கால விமர்சனம் புத்தகம் சுவாரஸ்யமாக இருக்கிறதே.
ஆழ்வார் தாத்தாவை பார்த்திருக்கிறேன். அப்போது பெயர் தெரியாது. இப்பத்தான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். நான் பழையபுத்தகங்கள் மகனுக்காக வாங்கச் சென்ற போது அறிவேன். சமீபத்தில் சென்னையி இருந்தப்ப அங்கு பெண்கள் தான் இருந்தார்கள். புத்தகம் உடன் தேடி எடுக்க முடியவில்லை என்றால் குறித்துக் கொண்டு நம் மொபைல் எண்ணையும் வாங்கி வைத்துக் கொள்வார்கள். கிடைத்ததும் தெரியப்படுத்த. நாமும் பேசி தெரிந்து கொள்ளலாம். இப்போதும் அப்போது போலத்தான் இருக்கு கடை. ஆனால் பாடப் புத்தகங்கள் என்பது குறிப்பாக எஞ்சினீயரிங்க், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் நிறைய கிடைக்கும்...ஆங்கிலக் கதை புத்தகங்கள், இலக்கியப்புத்தகங்கள் கிடைக்கும். கொஞ்சம் தள்ளிச் சென்றால் பழையபுத்தகங்கள் கடை என்று நல்ல கடையாகவே போட்டிருப்பார்கள். ஆனால் இவர் கடை மட்டும் நடைபாதையில் இங்கு சொல்லியுள்ளபடிதான் இருக்கும். விலையும் மற்ற கடைகளை விட குறைவாகத்தான் இருக்கும்.
கீதா
சதாம் - 'நல்லவன் எனக்கு நானே நல்லவன்' டைப்! நமக்கெல்லாம் அவரது துணிச்சலும் தைரியமும் பிரமிப்பு.
நீக்குஅந்தக் காலத்தில் அதாவது எனக்குத் தெரிந்த அந்தக்காலத்தில் கோயில்களுக்கு போனால் பட்டர் கோயில் புராணம் மற்றும் கோயிலைப் பாடியவர்களையும் உட்சவங்கள் பற்றிய விவரங்களையும் விவரிப்பார். ஆனால் தற்போது ஒரு ஸ்பெஷல் பதவி கொடுத்து ஈசனை தடை நீக்கும் பெருமாள், விசா பாலாஜி, வழக்குக்குறை ஈஸ்வரர், திருமணம் நிறைவேற்றும் ஈஸ்வரன், எம பயம் நீக்கும் ஈஸ்வரன் என்று ஒரு தனித்தன்மையும் சேர்த்துக்கொள்கிறார்கள். இது உண்மையோ பொய்யோ, ஆனால் கடவுள் பக்தி பரவவும் யாத்ரீகர்கள் நிறைய வரவும், கோயில்களின் வருமானம் பெருக்கவும் உதவுகிறது என்பது உண்மை.
பதிலளிநீக்குகோயில்கள் பற்றிய அறிவு மிகுந்த கீதா மாமி ஒரு தொடர் பதிவு எழுதலாம் எந்த கோயில் எதற்கு சிறப்பு என்று.
அப்பாடா எப்படியோ கீசாக்காவை வம்பில் மாட்டிவிட்டேன்.
Jayakumar
@ ஜேகே அண்ணா! அது யாரு கீதா மாமி? புதுசா இருக்காங்க! வலைப்பதிவு எழுதறாங்களா? சுட்டி கொடுங்க பார்ப்போம்! :P:P :P:P:P:P
நீக்குஆவ்வ்வ்வ்வ் கீசா மாமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ :)) சே..சே.. இந்த ஐடியா எனக்கு வராமல் போயிட்டுதே:) அவசரப்பட்டு கீசாக்காஆஆஆஆஆஆ என்றிட்டேனோ:).
நீக்குபட்டர்கள் இப்போதும் எல்லா வைணவக் கோவில்களிலும் வரலாறு சொல்கின்றனர் ஜேகே ஸார். இங்கே இவர்தான் ஏதோ சொந்தக்கதை சோகக்கதை பேசிக்கொண்டிருந்தார்!
நீக்குஇந்த மாங்காடு கோவிலில்தானே ஊசி மேல் தவம் செய்யும் அம்மன சிலை இருக்கிறதுஒரு முறை ஆட்டோவில் ஐந்து பேர் பயணப் பட்டபோதுஇக்கோவில் அம்மன்சிலைபற்றி பேசினோம் பிரிட்டீஷ் காரர்களுக்க்கு பகத் சிங் தேச விரோதி ஆனால் நமக்கு அவர் சுதந்திர வீரர் அது போல்தான் சதாமுமென்று தோன்றுகிறது குறிப்பிட்ட படல்களைப் படித்து எவரும் அண்பிரச்சனை இல்லாமல் இருக்கலாமே மக்களின் gullibility எங்கெல்லாம் பிரயொசனப்படுஇறது
பதிலளிநீக்குவாங்க ஜி எம் பி ஸார்.. ஆமாம் நீங்கள் சொல்வது சரி. பார்வைகள் மாறுபடும். ஒருவருக்கு ஹீரோ இன்னொருவருக்கு ஜீரோ!
நீக்குகோவில் தகவல்கள் படித்தேன் ..கர்ர்ர் :) எதுக்கு சண்டிகேஸ்வரரை எழுப்பினீங்க ..அதாவது எதுக்கு கைதட்டினீங்க ??
பதிலளிநீக்குஅப்புறம் பார்வதி எதற்கு சிவபெருமான் கண்களை மூடினார் ?
ஹா ஹா ஹா அஞ்சு.. அவர் எப்பவும் கும்பகர்ணன் போலத்தான் இருப்பார்ர்.. அவரைக் கை தட்டி எழுப்பிக் கூப்பிட்டுத்தான் நம் கோரிக்கைக?ளை நிறைவேற்றச் சொல்லோணும்.. அவர் கிட்டத்தட்ட அக்கோயிலின் மூலஸ்தானக் கடவுளின் செக்கரெட்டரி போல:)) ஹா ஹா ஹா..
நீக்குஅவரை எழுப்பக் கூடாதாம் அதிரா, .ஏஞ்சல்.. சத்தமில்லாமல் கைதுடைத்துவிட்டு வரவேண்டுமாம்.
நீக்குரேடியோ டிவிலாம் போய் இப்போ போனில்தானே எல்லாம் பார்க்கிறாங்க :)
பதிலளிநீக்குபோனிலும் பார்க்கிறாங்க....!
நீக்குஎனக்கு சதாம் பிடிக்கும் எதுக்குன்னு தெரியாது ..எனது குர்திஷ் தோழி ஒருவர் சொன்னது அமெரிக்கா என்ற ஆமை புகும் வரை அத்தனை அழகாம் ஈராக் .
பதிலளிநீக்குஎனக்கும் பிடிக்கும்!
நீக்குஅவரவர் சிறு வயதில் பட்ட வலி களும் வேதனைகளும் பின்னாளில் வேறு விதமா வெளிப்படுத்து சதாமோ ஹிட்லரோ யாரா இருந்தாலும் அவர்களுக்குள்ளும் இதயம் ஈரம் இருந்திருக்கும் ..அவர்களை கொண்டாட வேண்டாம் அனால் அவங்களும் மனுஷங்களே எதோ கெட்ட நேரம் அவ்ளோதான் சொல்ல முடியும் :(
பதிலளிநீக்குமுன்பு விகடன் /குமுதம் எதோ ஒன்றில் படித்தேன் சதாம் கிட்ட வேலை செஞ்ச ஒரு வருக்கு தீவிர அவசரக்காலத்தில் போர் நடக்கும்போது பணம் பெட்டியில் போட்டு சென்னைக்கு அனுப்பி வைத்தாராம் .
இது புதிய தகவல்!
நீக்குஅவர் திருவல்லிக்கேணி /சிந்தாதிரிப்பேட்டை இந்த இடத்தில டி ஷாப் திறந்து லாட்ஜில் சதாமின் படத்தை மாட்டி வச்சிருந்தார் அதையும் படிச்சேன் :) ..2000 ஆம் ஆண்டு நிறைய புக்ஸ் வாங்கிட்டு வருவார் என் கணவர் :) அட்டையை வீட்டுக்கு வரும் குட்டீஸ் அவற்றின் அண்ணன் தம்பி பிள்ளைங்க பிச்சிடுவாங்க அப்படி மிஞ்சினத்தில்படிச்சது அதான் எந் புக்னு தெரில ,
நீக்குரீராம் இப்படி படிக்கிறதெல்லாம் மைண்டில் பதிஞ்சிடும் எனக்கு அது எங்காவது நினைவுக்கு 10 வருஷம் கழிச்சி வரும் :) ..இம்ரான்கான் கிரிக்கெட் பாலில் சோடா கார்க் வச்சு tampering செஞ்சாறனா என் கணவருக்கு நம்பிக்கை வராது .நம்பவே இல்லை எனக்கு கிரிக்கெட் பிடிக்காது :) ஆனா நான் பேப்பரில் படிச்சேனே :)
நீக்கு2000 -2007 ..after that we stopped buying books :) internet irukke :)
நீக்கு//என்னன்னு...
பதிலளிநீக்குதடை நீங்க ஒரு வழி...!
தடை நீக்கும் பெருமாள். அவரைப் பார்த்து அப்ளிகேஷன் கொடுக்கப் போயிருந்தோம். //
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) போனீங்க சரி.. பெருமாள் படத்தைப் போட்டிருந்தால் அதிராவும்.. இங்கின சில தடைகள் இருக்கு நீக்கி விடுங்கோ எனக் கேட்டிருப்பேனெல்லோ??? கோபுரத்தைப் பார்த்துக் கேட்டால் நீக்கி விடுவாரோ?...இப்போ என்ன பண்ணுவேன்ன்.. கைக்கு எட்டியது வாய்க்கெட்டாமல் போயிடப்போகுதே பெருமாளே....
கோபுரத்தைப் பார்த்துக் கேட்டாலும் நீக்கிவிடுவார் அதிரா.
நீக்குஅவர்தான் தூணிலும் துரும்பிலும் இருப்பவர் ஆச்சே!
கோபுரத்திலும் இருப்பார்.
ஓ கோமதி அக்கா அப்பூடியா? இப்பவே கேட்டிடுறேன்ன்:)..
நீக்கு////என்னன்னு...
நீக்குதடை நீங்க ஒரு வழி...!//
அதிரா... இது ஒரு பாடல்.
"யாரோ சொன்னாங்க... என்னன்னு... ஒரு வண்ணக்கிளி ..' என்று ஒருபாக்யராஜ் படப்பாடல் வரும். அதையாராவது சொல்கிறார்களா என்று பார்த்தேன்! ஊ...ஹூம்!
விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சு... விமர்சனத்துக்கு விமரிசனமும் ஆச்சு!...//
பதிலளிநீக்குகதை நன்றாக இருக்கும் போலவே படிக்க ஆர்வம் வருகிறது..
அப்படியா சொல்கிறீர்கள்? உங்களிடம் இருக்குமே!
நீக்கு//அதெல்லாம் மாங்காடு கோவில் தலவரலாற்றிலேயே இருக்கும், இதற்கென்று தனியாகக் கிடையாது என்றார் குருக்கள்//
பதிலளிநீக்குஹா ஹா ஹா பாவம் குருக்கள்.. அவரிடம் போய் தல வரலாற்றை எல்லாம் கேட்டுக்கொண்டு... மாங்காடு எனும் பெயரே பேமஸ் தானே?
பெயர் பேமஸ்த்தான். காலம் தெரியவேண்டுமே!
நீக்குஅந்த பெரியவர் கடைக்கு மைலாப்பூரில் நான் போயிருக்கிறேன் .ஆனா நான் தேடிய புக் கிடைக்கலை ..ஆனா நிறைய பேர் பயன்பெற்றார்கள் என்பது தெரியும் அவரால் ..இறைவன் பாதத்தில் இளைப்பாறட்டும்
பதிலளிநீக்குஅட... ஏஞ்சல்! நீங்கள் கூட பார்த்திருக்கிறீர்களா?
நீக்குயெஸ்ஸ்ஸ் :) ஆனா நான் தேடின மைக்ரோ பயாலஜி கிடைக்கலை அதனால் கொஞ்சம் தள்ளி ஒரு ஹோட்டலில் அப்பா கூட போய் வாழை இலையில் இட்லி சாம்பார் மெதுவடை சாப்பிட்டேன்
நீக்கு// பெருமாள், வெள்ளீஸ்வரர், இவர்களோடு காமாட்சி அம்மனையும் காணவேண்டும் என்று ஒருவர் சொல்ல, அங்கும் விரைந்தோம்.//
பதிலளிநீக்குஆவ்வ்வ்வ்வ் அம்மன் இல்லாமல் பெருமாளோ.. அழகிய கோபுரம்.. இன்னும் கொஞ்சம் குளோஸப்பில் படமெடுத்திருக்கலாமே..
//சிவனின் கண்களை பொத்திய பார்வதியின் கதை பற்றி இருக்கிறது.//
ஹா ஹா ஹா இது என்ன புதுக்கதை? இது எப்போ நடந்தது? கேள்விப்படவே இல்லை.. அக் கதையையும் சோட் அண்ட் சுவீட்டாகப் பகிர்ந்திருக்கலாம்..
உள்ளே படம் எடுக்க தடை செய்யப்பட்டிருக்கிறது அதிரா... வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் 'மூலவர் தானத்தில் படம் எடுக்க வேண்டாம், வெளியில் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார் குருக்கள்.
நீக்குஆழ்வாரைப் பற்றி வல்லி அக்கா முகநூலில் பகிர்ந்து இருந்ததை படித்தேன்.
பதிலளிநீக்குஆழ்வாரின் புத்தககடையைப் பற்றி மேலும் விவரங்கள் அறிந்தேன்.
நன்றி கோமதி அக்கா.
நீக்கு//டிஸம்பர் 28, 2013 இல் இந்து தமிழ்ப் பதிப்பில் வெளிவந்த கட்டுரையை முக நூலில் பகிர்ந்திருந்தேன். சுவாரஸ்யமான கட்டுரை.//
பதிலளிநீக்குஇது சுவாரஸ்யம் என எப்படிச் சொல்வது.. நெஞ்சை என்னமோ பண்ணுது... அவர் எப்படிப் பட்டவராகவும் இருந்திட்டுப் போகட்டும்.. ஆனால் அவரும் ஒரு மனிதர்தானே.. நம்மைப்போல அவருக்கும் குடும்பம் மனம் எல்லாம் இருக்குதுதானே.. அந்தக் கடசி நிமிடம் எப்படி இருந்திருக்கும்..
அவரைத் தூக்கிலிட்டதை இங்கு நியூஸில் எல்லாம்.. அட்வடைஸ் போட்டு.. வெளியிட்டார்கள்.. பார்த்தோம்ம்.. அன்று நான் சமைக்கவே இல்லை தெரியுமோ.. அமெரிக்கரைத் திட்டிக் கொண்டிருந்தேன்ன்:(.
உருக்கம்தான். அதுவும் சுவாரஸ்யம்தானே அதிரா? அதைத்தான் சொன்னேன். நாங்களும் அன்று மனம் கனமாகவே உணர்ந்தோம்.
நீக்குஆனால் அதில் நான் கேள்விப்பட்ட ஒரு நியூஸ், அந்த குகையிலே பதுங்கி ஒளித்திருந்த ஒரு நாள் இரவிலேயே அவரின் தலைமயிர் எல்லாம் கலர் மாறிவிட்டதாம் என. அப்போ அவர் பயப்பிட்டாரொ இல்லையோ, நிறைய யோசித்திருக்கிறார்ர்..
பதிலளிநீக்குஉங்களுக்குத் தெரியும்தானே... நமக்கு அதிக கவலை யோசனை வந்தால் நம் தலைமயிர் படக்கென வெள்ளையாக மாறும்.. பின்பு கவலை தீர்ந்ததும் பழையபடி கறுப்பாகும்.. அவதானித்தால் தெரியும்.. முளு மயிரும் அல்ல.. அங்காங்கு தென்படும்.. இது இயற்கை.. மனதுக்கும் தலை மயிருக்கும் நிறைய தொடர்பிருக்கும்.. கொட்டுபடுவதும் அப்படித்தான்..
யாராவது பயப்படாமல் இருப்பார்களோ.. தலைக்கு மேல வெள்ளம் போனபின்னர்.. எல்லாம் அவன் செயல் என மனதை அடக்கியிருப்பார்ர்... பல வருட ஆட்சியில் இருந்த அதிபராச்சே.. வைராக்கியம் இருக்கும்தானே..
தலைமயிர் வெளுத்த தகவல் நானும் படித்தேன். நம்பவில்லை. வெளுக்கலாம், ஆனால் மறுபடி கருக்குமோ? டவுட்டு!
நீக்கு//ஆனால் மறுபடி கருக்குமோ? டவுட்டு!//
நீக்குநிட்சயம் கறுக்கும்.. ஆனா அது வயசையும் பொறுத்தது:).
வலது கண்ணில் பிரச்னையா? இடது கண்ணில் பிரச்னையா?
பதிலளிநீக்குசுந்தரர் தேவாரங்களை பாடி கண்பெற்றதால் பல அன்பர்கள் நம்பிக்கியயுடன் இந்த பதிகங்க்களை பாடி கண் பெற்றதாய் வரலாறு சொல்கிறது.
கண் பார்வை பெற உதவும் பதிகம் என்று சொல்வார்கள்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குரேடியோவிற்கு பதில் தொலைக்காட்சிபெட்டி உதவுகிறது.குழந்தைகளின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும் போல படம் அழகு.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஆவ்வ்வ் எங்கின விட்டேன்ன் ஜாமீ.. இடையில ஓட வேண்டியதாப்போச்சு. ஓடிப்போய் வந்துட்டேஎன்ன்ன்:).
பதிலளிநீக்குசதாம் எவ்வளவு அழகான மனிசன்.. சிலையில அந்த அழகும் கம்பீரமும் இல்லை... எதுக்காக தூக்குக் கயிற்றைப் போட்டு வச்சிருக்கினமோ..
நினைவு "படுத்து"கிறார்களாம்!
நீக்கு//விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சு... விமர்சனத்துக்கு விமரிசனமும் ஆச்சு!........//
பதிலளிநீக்குஇதிலிருந்து தாங்கள் ஜொள்ள வருவது?:)
எல்லோரும் விளம்பரத்தை பார்த்து கதை விமர்சனம் படித்து பார்த்தால் புத்தகம் வாங்கி படிக்க தோன்றும் தானே! அதுதான் நான்
நீக்குஜொள்ள வருவது அதிரா.
பழைய விளம்பரம் ஒன்றை பதிவில் இட சாக்கு!!!
நீக்குமயிலாப்பூர் புத்தகக்கடை ஓனர்., அவர் என்றென்றும் பல மக்களின் மனதில் நிறைந்திருப்பார்ர்..
பதிலளிநீக்கு//நிலைமை இப்பவும் பெரிசா மாறவில்லை... என்ன, ரேடியோவுக்கு பதிலாக தொலைகாட்சி! இல்லையா ஏகாந்தன் ஸார்?!!//
பதிலளிநீக்குஇப்போ எதுக்கு சிவனே என இருக்கும் ஏ அண்ணனை வம்புக்கு இழுக்கிறீங்க?:).. அவர் எப்பவும் ரிவிக்கு முன்னாலயே இருப்பது உண்மைதான்.. அதுக்காக மச் பார்க்காமல் இருக்க முடியுமோ?:) ஹா ஹா ஹா முந்தி மச் முடிவுகள் ரேடியோவில்தானே சொல்லுவார்கள்..
அஞ்சு மேலே சொன்னதைப்போல இப்போ ரிவி யார் பார்க்கிறார்கள்.. எல்லோரும் ஃபோன் உடன் தான் குடும்பம் நடத்துகின்றனர்.. இதுக்காகவே சில புரோகிராம்ஸ் ஐ கஸ்டப்பட்டு குடும்பத்தோடு பார்க்க வேண்டி இருக்கு.
எங்கள் ஸ்கூலில் ஒரு மாஸ்டர் சொன்னார்.. அவருக்கு இரு மகன்கள் இருவரும் யுனியிலாம்.. அப்போ அவர்களும் விரும்பும் ஒரு புரொகிராமை, தான் ரெக்கோர்ட் பண்ணி வச்சிடுவாராம்.. வாரம் ஒருநாள் விடுமுறையில் அவர்களோடு சேர்ந்து தாமும் ஃபமிலியாக வோச் பண்ணுவார்களாம்.. வெள்ளையர்கள் இவ்விசயத்தில் கொஞ்சம் நல்ல பழக்க வழக்கம்.. இதுபோல.. காலையிலிருந்து பரபரப்பாக ஓடினாலும் டினருக்கு எல்லோரும் ஒன்றுகூடியே சாப்பிடுவார்கள். இந்தப் பரபரப்பான உலகில்.. இப்படித்தான் ஒவ்வொரு ரூல் பண்ணி ஒன்று சேர முடியுது..
மேட்ச் பார்க்காத நானே இந்த மேட்சிங் கடைசி இரண்டு நாட்களுக்காகக் காத்திருந்தேன் அதிரா... என் அதிருஷ்டம் மழைபெய்து ஆட்டம் நின்று விட்டது.
நீக்கு//கோவிலைச் சுற்றிய களைப்பு கூட நம்முடன் வரக்கூடாது என்பதால்தான் சிவன் கோவிலில் கடைசியாக கொஞ்சம் அமர்ந்து ஓய்வெடுத்து விட்டு வரவேண்டும் என்பார்கள்.//
பதிலளிநீக்குஇது சிவன் கோயிலுக்கு மட்டுமோ? நான் அறிஞ்சு எந்தக் கோயில் போனாலும்.. அப்படியே வெளியே வராமல்.. சற்று நிமிடமாவது கீழே கால் மடித்து இருந்துவிட்டு வெளியே வர வேண்டும் என...
//அதேபோல பெருமாள் கோவில்களில் உள்ளே நுழையும்போதே கொடிக்கம்பம் அருகே நமஸ்காரம் செய்துவிட வேண்டும். சிவன் கோவிலில் வெளியில் வருவதற்குமுன் நமஸ்காரம் செய்யவேண்டும்//
இது அனைத்தும் புதிசாக இருக்கு. கோபுரத்தைப் பார்த்ததுமே கைகூப்பிக்கொண்டே உள்ளே நுழையவேண்டும் என சின்னனில் சொல்லித்தந்தார்கள்.
மாங்காடு பலமுறை போயுள்ளேன். ஆனால் இந்தத் தடை நீக்கும் பெருமாளைப் பார்க்கவில்லை. பலகோயில்களுக்குப் போகத்திட்டமிடுவார்கள் பெண் வீட்டில். உங்கள்பதிவின் மூலம் இன்று இவரையும் மானஸீகமாகத் தரிசிக்க முடிந்ததில் ஒரு திருப்தி. சென்னையைச் சுற்றியே நிறைய கோயில்கள். மிகவும் பழைய பெரிய கோயில்களில் படிதாண்டும்போது வயதானவர்களுக்குசிரமம் ஏற்படுவதை நினைத்தே சிலஸமயம் வேண்டாம் என்று சொல்லிவிட்டது எல்லாம் எவ்வளவு தவறு என்று தோன்றுகிறது.
நீக்குஸதாம் உசேனை அவர் அந்தியக்கால படங்களை, அவர் விஷயங்களைத் தேடித்தேடி படித்ததெல்லாம் ஞாபகப்படுத்தி விட்டீர்கள். மற்றும் பதிவுகளில் பின்னூட்டங்களின் மூலமும் பல விஷயங்கள் அறிய முடிகிறது. உடல் நலம் யாவரும் நன்றாகக் கவனிக்க வேண்டும் பனிக்காலம். நேற்றைய கேள்வி பதில்கள் அருமை. இன்று எழுதுகிறேனா? எங்கள் ப்ளாகை ஸமயம் கிடைத்தபோது பாராட்டுகிறேன். அதாவது எழுத முடிந்த போது. அன்புடன்
அதிரா... இது என் பாசுக்குச்சொல்வார். அவர் இதில் எல்லாம் பார்த்துப் பார்த்து செய்வார். தினசரி கோவில் சென்று வரும் பழக்கமுடையவர்.
நீக்குவாங்க காமாட்சி அம்மா. உங்கள் பின்னூட்டம் பார்த்து சந்தோஷம் வந்தது. சதாம் தகவல்கள் தேடித்தேடிப் பார்த்தீர்களா? அப்போது மிகவும் பரபரப்பாக இருந்த நேரம். நன்றி அம்மா.
நீக்குஆஆ மீ 112 ஊஊஊஊ
பதிலளிநீக்குஆ....
நீக்குஸ்ரீராமுக்கு இப்போதான் கரண்ட் வந்திருக்காம் இனி எப்போ பதில்கள் குடுத்து எப்போ நித்திரையாகி எப்போ அலாம் அடிச்சு எழும்பி வேலைக்குப் போவதாம்ம்ம் ஹா ஹா ஹா:))..
பதிலளிநீக்குவேகமா பதில்கள் கொடுத்துட்டேன்னு நினைக்கறேன்!
நீக்குஆஆஆஆஆஆஆ நெருங்கிட்டார்ர் நெருங்கிட்டார்ர் கொமெண்ட்ஸ் போட்டு முடிச்சிடபோறார்ர் ஹா ஹா ஹா ஏன் ஸ்ரீராம் நாளைக்கு லீவு எடுக்கப்பிடாதோ?:) ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குநாளைக்கு வேலையும் இருக்கிறது! அடுத்த பதிவும் இருக்கிறதே அதிரா...!!!!
நீக்குஆஆஆஆஆஆ அஞ்சு ஓடிக் கமோன்ன்.. கடகடவெனப் போட்டு விட்டு ஷட்டரை இழுத்து மூடிடப் போறார்ர்.. விடாதீங்க:))
பதிலளிநீக்குஅச்சச்சோ... நான் கீதாஅக்காவோட ஜிவாஜி எம்ஜார் படிக்கப் போகோணும்!
நீக்குஹா ஹா ஹா ஓடுங்கோ ஓடுங்கோ இல்லாட்டில் கீசாக்கா கூச்சல் போடுவா...:).
நீக்குபடிச்சு கமெண்ட் பண்ணியாச்சு...
நீக்கு@ sriram
பதிலளிநீக்குhttp://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3012485.stm
இந்தியன் பிரியாணியை அவர் ரசித்ததால்தான் இந்தியா காஷ்மீருக்கு ஆதரவாகப் பேசினாரோ...!!!
நீக்குஇருக்கலாம் :) சதாமுக்கு இந்திரா காந்தி அம்மையாரை பிடிக்கும் நம்மூர் சமோசாவும் பிடிக்குமாம்
நீக்குhttp://ennamumezuththum.blogspot.com/2007/01/blog-post_14.html
பதிலளிநீக்குஹாஆ ஹா வெற்றி அது குமுதம் புக்குதான்
வாவ்வ்வ் பார்த்தேன் சூப்பர் அஞ்சு... அதை நம்பலாமோ??
நீக்குஹலோ எதை நம்பலாமா ?? பிபிசி அண்ட் குமுதம் அதோடா அவரது இன்டர்வ்யூவும் இருக்கு ..
நீக்குஎங்க ஊரில் முன்பு திருவாரூர் கீழக்கரைக்காரங்க நிறையபேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு போனாங்க
ஆனாலும் உங்கள் நினைவுத்திறனும், உடனே அதை எடுக்கும் திறனும்... ஏஞ்சல்... எங்கேயோ இருக்கீங்க!
நீக்குஆராட்சி அம்புஜம் எனப் பெயர் வச்சேன் ஆனா அதுக்கு மேலால உழைக்கிறாவே:)..
நீக்கு///ஏஞ்சல்... எங்கேயோ இருக்கீங்க!///
நீக்குவேறெங்கும் இல்லை ஶ்ரீராம்:)... அந்த மே மே க்கு தண்ணி குடுக்கிறா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்:)
thanks sriram :)
நீக்குநீங்க வேற தூங்கும் போது கூட எல்லா நினைவும் வருது :)மியாவ்
கீழக்கரை ராமநாதபுரம் ஜில்லாவிலே இருக்கு ஏஞ்சல். திருவாரூர்க்காரங்களும் கீழக்கரைக்காரங்களும் போனாங்கனு வந்திருக்கணுமோ? !!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குஆமாங்க்கா அது ராம்நாட் தான் //இராமநாதபுரம் தான் வரும் :) அது அவசரவசரமா டைப்பும்போது கமா விட்டுப்போச்சு ஹீஹீ பூனைக்கு நம்ம நாட்டு டிஸ்ட்ரிக்ட்லாம் தெரியாது அதனால் தப்பிச்சேன்
நீக்குஹையோ ஸ்ரீராம் எனக்கு அந்த சமையற்காரர் சதாம் பற்றி சொன்னது நேற்று நினைவுக்கு வந்தது ஆனால் எதில் வாசித்தேன் என்ற நினைவு இல்லாததால் போடாமல் விட்டுவிட்டேன்...நேற்று எனக்கு வேறு வேலைகள் வேறு இருந்ததால் ரொம்ப கான்செட்ரேட்டும் செய்ய முடியலை...இப்ப ஏஞ்சல் நீங்க கொடுத்த லிங்க் பார்த்ததும் அப்படியே நினைவுக்கு வந்துச்சு...நானும் வாசித்துருக்கேன் ஆனால் பாருங்க நான் எப்பவாச்சும் யார் வீட்டுக்காவது போனாத்தான் அங்கு இப்படியான புத்தகங்கள் இருந்தா எடுத்து வாசிப்பதால் அப்புறம் விட்டுப் போயிடும்...
நீக்குஎனக்கு அது நெட்டில் தேடினால் கிடைக்குமோன்னு நினைச்சுட்டு வேலைல மூழ்கிடவும் மறந்தே போச்சு...
சூப்பர் ஏஞ்சல் இதே தான்....இதே தான்...எனக்கு அதை ஆத்தெண்டிக்கா சொல்ல முடியாததால் நேற்று சொல்லாமல் போயிட்டேன்...
கீதா
எனக்கு நினைவு இருந்தாலும் கரெக்டா டக்குன்னு அந்த சம்யத்துல சொல்லிட முடியலை பல சமயங்கள்ல அந்த சமயத்துல மூளைல வெளிச்சம் போட்டாத்தான் சொல்ல முடியுது ஸோ ஏஞ்சல் இனி நானும் உங்களை போல வல்லாரை ஸ்மூதி குடிக்க வேண்டியதுதான் கரெக்ட்டான டயத்துல நினைவு பளிச்சிட!!!!! ஹா ஹா ஹா
நீக்குகீதா
ஹலோவ்வ் மீ 170 :)
பதிலளிநீக்குஅல்லோஒ அவ்ளோ வயசாகிட்டுதோ? மறதியில முன்னுக்கு ஒன்று போட்டிட்டீங்க:)
நீக்குசென்னையில் உள்ள கோயில்கள் பற்றி அறிந்து கொண்டேன். சில விஷயங்கள் புதிதாக அறிகிறேன்.
பதிலளிநீக்குஎங்கள் ஊரில் சதாம் பற்றி நல்லதும் சொல்லிக் கேட்டிருக்கிறேன், அங்கிருந்துவந்தவர்கள். அவரது கடைசி தருணச் செய்தி இப்போதுதான் வாசிக்கிறேன் ஸ்ரீராம்ஜி.
இங்கெல்லாம் பழைய புத்தகக்கடைகள் என்பது இல்லை. சென்னையில் உண்டு என்பது தெரியும்..அங்கிருந்துதான் இப்போது நான் கல்லூரியில் எடுக்கும் பாடத்திற்கான சில புத்தகங்களை வரவழைத்துவந்தேன். இப்போது பங்களூரிலிருந்து வரவழைக்கிறேன்.
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகோவில்களின் விபரங்கள் புதிது. மாங்காடு இரண்டு முறை சென்னையிலிருந்த போது சென்றிருக்கிறேன். இந்த கோவில்களுக்கு சென்றதில்லை. கோபுர தரிசனம் அருமை.
சதாம் பற்றி அறிந்தேன்.
பழைய விளம்பரம் நன்றாக உள்ளது.
வருத்தம் தரும் நிகழ்வு வருந்த வைத்தது.
கார்டூன் பிரமாதம். ரேடியோவுக்கு பதிலாக தொலைக்காட்சியில் இன்றும் உற்சாகம் இருப்பது இந்த விளையாட்டின்பால் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை குறிக்கிறது. அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி
(நல்லவேளை.. 200 ஐ தாண்டவில்லை. இல்லையெனில் அடுத்த பக்கத்தில் நானிருப்பேன்.)
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.