துரை செல்வராஜூ :
1) கேள்விக்கும் பதிலுக்கும் எவ்வளவு தூரம்?..
# நம் வரை கேள்விக்கும் பதிலுக்கும் ஒரு வாரம். புதன் முதல் செவ்வாய் வரை.
2) உலகின் மிகச் சிறந்த பதிலாக யுதிஷ்ட்ரர் கூறியதைக் கருதுகிறேன்.. தாங்கள்?..
# யுதிஷ்டிரர் கூறிய பதில்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவை மிகச் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை. சாக்ரடீஸ் போன்றவர்கள் கேள்வி-பதில் முறையிலேயே தம் கொள்கைகளை பரப்ப முன்வந்தனர். நம் கிரந்தங்களிலும் ப்ரச்னோத்தர மஞ்சரி பிரசித்தி பெற்றது. மிகச்சிறந்த கேள்வி, மிகச்சிறந்த பதில்கள் யாவை என்பதை சரியாக நிர்ணயிக்க நமக்கு அவை பற்றிய அறிவு போதுமான அளவு இல்லை.
& இருக்கலாம். (யுதிஷ்டிரர் யாருங்க? யுவராஜ் சிங்கின் அண்ணனா?)
3) திருவள்ளுவர் கேட்கும் கேள்விகளுள் உங்களுக்குப் பிடித்தமானது எது?..
# இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பானும் இன்றிக் கெடும்.
& செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
(இதை சங்கீத சபா காண்டீனில், பக்கச்சுவரில் எழுதி வைத்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனையும் தோன்றும்!)
4) அநாச்சாரமான காட்சிகளைத் திரைப்படத்தில் சேர்ப்பவர்கள் ஆண்கள் தான் ... ஆயினும் - அதீத ஆர்வத்துடன் பங்களிப்பு செய்யும் பெண்களை என்னவென்று சொல்வது?
# பிழைப்புக்காக சில நிர்ப்பந்தங்களுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். இந்த அளவு தரம் தாழ்ந்து போக வேண்டுமா என்று நானும் நினைப்பது உண்டுதான். ஆனால் கூடாத செயல்களை ஆண்கள் செய்யலாம் பெண்கள் செய்யக் கூடாது என்பது நியாயம் இல்லை அல்லவா?
$ பணம் பத்தும் செய்யும்; பங்களிப்பும் செய்யும்!
நெல்லைத்தமிழன் :
ஜோதிடம், ஜாதகம் எவ்வளவு தூரம் நம்பிக்கைக்கு உரியது?
# பொதுவாக 10 பலன்கள் சொன்னால் அதில் மூன்று நான்கு பலிக்கும். ஜோசியம் ஜாதகம் இவற்றை பொருத்தவரை இந்த மூன்று நான்கை அதீதமாக பிரபலப்படுத்தி ஜோசியம் ஜாதகம் இவற்றை உயர்த்தி சொல்வது மனித இயற்கை. எனக்கு ஜோசியம் ஜாதகம் இவற்றில் நம்பிக்கை கிடையாது. சொல்லப்படும் சில கதைகளை கேட்டு வியந்தது உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
& என் அப்பா சொன்ன பல ஜாதக பலன்கள் பலித்ததை, கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அவர் ஜோதிடர் இல்லை, ஜோசியத்தை வைத்துப் பிழைத்தவரும் இல்லை. ஜாதகப் பலன் சொல்வதை, பணத்துக்காக செய்யும்போது, அது நம்பகத்தன்மை இழந்துவிடுகிறது.
ஆயிரம் வருடத்தைய பழைய கோவில்களுக்கு, நாம் படித்த மன்னர்கள் வாழ்ந்த இடத்திற்கு, கட்டிய கோவில்களுக்குச் செல்லும்போது வரும் தனிப்பட்ட உணர்வை அனுபவித்திருக்கிறீர்களா?
# ஆயிரம் ஆண்டு பழமையானது எதுவுமே நமக்கு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்த முடியும்.50 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் பார்த்த ஒரு பழைய பத்திரிக்கை என்பது நம்மை எவ்வளவு கவர்கிறது பார்த்திருக்கிறீர்கள் அல்லவா ? அப்படி இருக்கும்போது ஆயிரம் வருஷத்துப் பழைய கோயில்கள் நமக்கு சிலிர்ப்பை உண்டாக்குவதில் ஆச்சரியமில்லை. கேரளாவில் வயநாடு அருகே 6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர் வாழ்ந்த குகை ஒன்றை பார்த்தேன். அதில் ஆதி மனிதன் ஒரு ஆணி போன்ற எதையோ வைத்து கிறுக்கிய சில எழுத்துக்கள் சில சித்திரங்கள் எனக்கு நம்பமுடியாத அளவு ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
ஒரு இடத்திற்கு போகும்போது முன்பின் அறிமுகமில்லாதவரோடு பேச்சு கொடுத்து தகவல் பறிமாற்றம் செய்திருக்கிறீர்களா?
ஒரு இடத்திற்கு போகும்போது முன்பின் அறிமுகமில்லாதவரோடு பேச்சு கொடுத்து தகவல் பறிமாற்றம் செய்திருக்கிறீர்களா?
# தேவை இருக்கும் போது, பொது இடத்தில் அறிமுகம் இல்லாத மனிதர்களுடன் நட்பாக பேசி தகவல் பெறுவது எனக்குப் பிடித்த ஒன்று. இதற்கெல்லாம் கூச்சப்படுவதில்லை. உண்மையில் ரசிப்பேன்.
# நெருக்கத்தில் நிகழ்ந்த ஒன்றிரண்டு காதல் திருமணங்களில் ஒன்று நான் மிகவும் விரும்பியது, ஆதரித்தது. இன்னும் சில மனதளவில் நான் ஏற்காதது. அதற்கான காரணங்கள் காலப்போக்கில் சரியானவை என்று ஆனது.
காதல் திருமணம் என்ற ஒரே காரணத்துக்காக திருமணத்தை எதிர்ப்பது / காதல் திருமணம் என்பதால் மட்டும் தீவிரமாக ஆதரிப்பது இரண்டுமே தவறு தான்.
காதல் திருமணம் பற்றிய என் கருத்துக்கள் இளவயதில் ஒரு மாதிரியாகவும், வயது வந்தபின் வேறு மாதிரி ஆகவும் இருந்ததில்லை.
உண்மையான அன்பா, கவர்ச்சியால் ஏற்பட்ட காதலா, வெறியால் வரும் விபரீதமா என்பதுதான், ஒரு காதல் திருமணம் சரியா அல்லவா என்பதை நிர்ணயிக்கும்.
சின்னச் சின்ன பொருட்களை, அது தரும் நினைவுக்காகப் பாதுகாக்கறீங்ககளா, பாதுகாத்திருக்கீங்களா? (பையன் தந்த பேனா, அப்பா எழுதிய லட்டர் போன்று)
# சின்ன சின்ன பொருட்களை அதன் பின்னணி காரணமாக சேமித்து வைப்பதும் பார்த்து மகிழ்வதும் எல்லாருக்கும் இருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக ஒன்றை பாதுகாப்பாக வைக்கும் வழக்கம் எனக்கு இருந்ததே இல்லை. வைத்திருக்கலாமே என்று வருந்துவது உண்டு. வைத்திருப்போரை வியந்து பார்த்தது உண்டு.
& உண்டு. அந்தப் பழைய, சின்னப் பொருட்களைப் பார்க்கும்போதெல்லாம், பழைய நினைவுகளில் மூழ்கி, என்னை மறந்தது உண்டு.
நம் குழந்தைகளுக்கு என்று விருப்பு, வெறுப்பு, இன்டிபென்டன்ட் திங்கிங் வரும்போது அதை இயல்பா ஏற்றுக்கொள்ள முடிந்திருக்கா? சின்னப் பசங்களா நம் விருப்பத்தை ஒட்டி அவங்க செய்வாங்க... அப்புறம் அவங்க எண்ணப்படி செய்ய ஆரம்பிப்பாங்க.
# அடுத்த தலைமுறையின் நியாயமான நிலைப்பாடுகளை எப்போதும் ஆதரித்து மட்டுமே வந்திருக்கிறேன். அடுத்தவர் விருப்பம் காரணமாக எனக்கு சங்கடம் ஏதும் ஏற்பட்டதில்லை.
& குழந்தைகளின் இன்டிபென்டன்ட் திங்கிங் எனக்குப் பிடிக்கும். எங்கள் அப்பா, எங்களுடைய சுய சிந்தனைகளை எப்படி இரசித்தாரோ, அந்த அளவுக்கு மேலாகவே, என் பையன், பெண் இருவரின் சுயசிந்தனைகளை, சந்தோஷமாகப் பாராட்டி, இரசித்துள்ளேன்.
ஒரு இடத்துக்குப் போனால் அங்க என்ன உணவு ஸபெஷல், போய் ருசிக்கணும் என்றெல்லாம் ஆசைப்படுவீங்களா?
ஒரு இடத்துக்குப் போனால் அங்க என்ன உணவு ஸபெஷல், போய் ருசிக்கணும் என்றெல்லாம் ஆசைப்படுவீங்களா?
# ஒரு இடத்திற்குப் போகும் போதே அங்குள்ள ஸ்பெஷல் உணவை தேடி பார்த்து ருசிக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை - ஆனால் அது மாதிரியான உணவு வழங்கப்படும் போது அதை ரசித்து சாப்பிடுவது உண்டு.
வெளியூர் பயணம் போனால் (3-8 நாட்கள்), ஓரளவு முழுமையாத் திட்டமிடுவீங்களா? (நான் ஒவ்வொரு முறை பயணத்தின்போதும், அந்த அந்த நாளில் roughஆ என்ன பண்ணப்போறேன், உணவு எங்க சாப்பிடுவேன், அந்த ஊரில் பார்க்க வேண்டியது, வாங்க, சுவைக்க வேண்டியதுன்னு குறிப்புகள் எடுத்துப்பேன். ஒரு நாள் உங்களைச் சந்திக்க வரணும்னாலும் basic plan இருக்கும்)
வெளியூர் பயணம் போனால் (3-8 நாட்கள்), ஓரளவு முழுமையாத் திட்டமிடுவீங்களா? (நான் ஒவ்வொரு முறை பயணத்தின்போதும், அந்த அந்த நாளில் roughஆ என்ன பண்ணப்போறேன், உணவு எங்க சாப்பிடுவேன், அந்த ஊரில் பார்க்க வேண்டியது, வாங்க, சுவைக்க வேண்டியதுன்னு குறிப்புகள் எடுத்துப்பேன். ஒரு நாள் உங்களைச் சந்திக்க வரணும்னாலும் basic plan இருக்கும்)
# வெளியூர் பயணங்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச்செல்ல மறக்காமல் இருப்பதோடு சரி. மற்றபடி எங்கே போகிறோம் என்ன செய்யப்போகிறோம் என்பதெல்லாம் அங்கே போன பின் அவ்வப்போது முடிவு செய்வதுதான்.
# பணியில் இருந்தபோது ரயில்வே கேன்டீன்களில் உணவு சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும், சாப்பிடுவதும் உண்டு. ஓய்வு பெற்றபின் அம்மாதிரியான சூழ்நிலை ஏற்படவில்லை.
ரயில்வே கேன்டீன்களில் நுங்கம்பாக்கம் பொதுவாக எல்லா உணவு வகைகளும். நங்கநல்லூரில் தோசை வடை, பீச் ஸ்டேஷனில் கிச்சடி, ஐஸ்கிரீம் ரொம்ப புகழ் பெற்றவை.
& பணிபுரிந்த நாட்களில், (கல்யாணம் ஆகுமுன்பு) பல சமயம், ஒரு வெற்று டிஃபன் பாக்சைக் கையில் எடுத்துக்கொண்டு, குரோம்பேட்டையிலிருந்து போகும்போது, பார்க் ஸ்டேஷனில் ரயில்வே காண்டீனில் அதைக் கொடுத்து, இருபத்தைந்து பைசாவுக்கு பொங்கல் அதில் சுடச்சுட நிரப்பிக்கொண்டு, சென்டிரல் ஸ்டேஷன் சென்று, எலாவூர் / கும்மிடிப்பூண்டி லோக்கல் டிரைன் பிடித்து, அலுவலகம் சென்றவுடன், பொங்கலை இரசித்துச் சாப்பிட்டது உண்டு. சில நாட்களில், அதே போன்று, இட்லி + வடைகறி.
ரேவதி நரசிம்ஹன் :
கேள்வி கேட்பதே மற்றவர்களுக்குப் பிடிப்பதில்லையே அது ஏன்?
(இதுவே என் கேள்வி)
# கேள்வி கேட்பது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? எல்லா பத்திரிக்கைகளிலும் கேள்வி-பதில் என்பது மிகவும் விரும்பி படிக்கப்படுகிறதே!
& பதில் சொல்லத் தெரியாதவர்களுக்குத்தான் கேள்வி கேட்பவர்களைக் கண்டால் பிடிக்காது. எங்களுக்கு அப்படி இல்லை.
மன்னிக்கணும் நீலவண்ணக் கண்ணன் என்றால் யார்?
# நீலவண்ண கண்ணன் என்றால் blue eyed boy. செல்லப்பிள்ளை. எவரானாலும் யாரோ ஒருவருக்கு செல்லப் பிள்ளை தானே.
& நீலவண்ணக்கண்ணன் பதில் சொல்ல ஆரம்பித்த அந்த புதன் பதிவின் பின்னூட்டங்களில் இதற்கான பதில் உள்ளது. உங்கள் தோழி கீ சா அவர்களிடம், தனிப்பட்டமுறையில், கேட்டுத் தெரிந்துகொள்ளவும். மற்றபடி, இங்கே பெரும் அளவில் கும்மி அடிப்பவர்களுக்கும் தெரியும்.
வாட்ஸ் அப் கேள்விகள் :
பானுமதி வெங்கடேஸ்வரன் :
1970களில் இப்படி இருந்தோம், 80களில் அப்படி இருந்தோம்,அந்த காலங்கள்தான் சொர்க்கம் என்று வாட்ஸ்ஆப்பிலும், ஃபேஸ் புக்கிலும் புலம்புகிறார்களே, அவர்கள் அந்த சமயத்தில் தாங்கள் சொர்கத்தில் இருக்கிறோம் என்று உணர்ந்திருப்பார்களா?
$ பின்நோக்கிப் பார்க்கும் போது 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னிருந்த வாழ்க்கை சொர்க்கமாகத் தெரிந்தால், அவர் இப்போது மிகவும் கஷ்டப் படுகிறார் என்று கொள்ளலாம்.
# இந்த மனப்பான்மை எல்லாத் தலைமுறைக்கும் பொது. அந்த சமயம் அதன் சிறப்புகள் உறைப்பதில்லை என்பதும் உண்மை.
இந்த காலத்திலும் மாட்டை அடக்குவதை வீரம் என்று சொல்ல முடியுமா?
$ எந்தக் காலத்திலும் மாட்டை அடக்குவது வீரச்செயல் தான். அது முட்டாள்தனமானதா இல்லையா என்பது விளைவுகளால் தெரியும்.
# தனியாக மாட்டை எதிர்த்து "அடக்குவது" வீரம் தான். அதனால் பயன் உண்டா என்பது சிக்கலான கேள்வி. அந்த மனோதிடம் விரும்பத் தக்கதுதானோ ?
ஜல்லிக்கட்டு நேரில் பார்த்திருக்கிறீர்களா?
$ 1950..60 களில் ஊருக்கு ஊர் சிறிய அளவில் நடந்து கொண்டிருந்தபோதே அலங்காநல்லூர் பிரசித்தம். எங்களூரில் 2 அல்லது 3 மாடுகளுடன் மற்ற வாண்டுகளுடன் பார்த்திருக்கிறேன் கொம்புகளுக்கு இடையே ஒரு சுருக்குப் பையில் நாணயங்களை போட்டு கட்டி வைப்பார்கள்.
# இல்லை. அலங்கரிக்கப்பட்ட மாடுகள் வண்டியில் பூட்டியோ, கூட்டமாகவோ, தனியாகவோ தெருக்களில் ஆரவாரத்துடன் விரட்டப் படுவதைப் பார்த்ததுண்டு - நானும் விரட்டியதுண்டு.
டைம் மிஷினில் ஏறி கடந்த காலத்திற்கு சென்று வரலாம் என்றால் எந்த நூற்றாண்டிற்கு சென்று யாரைப்பார்க்க விரும்புவீர்கள்?
$ Time machine என்ற பின் கடந்த காலம் என்று ஏன் reverse gear..?
# ராஜ ராஜ சோழன் . டைம் மெஷினில் அவ்வளவு பெட்ரோல் கொள்ளுமா ?
& என் தாத்தா சுப்ரமணியன். அவருடைய தாத்தாவும் ஒரு சுப்பிரமணியன், எள்ளுத் தாத்தா வாழ்ந்த பதினெட்டாம் நூற்றாண்டுக்குச் சென்று, அவருடைய தாத்தா, தாத்தாவின் தாத்தா பெயர், அவர்கள் வாழ்ந்த காலம் எல்லாம் தெரிந்துகொண்டு, அந்த நூற்றாண்டுக்குச் சென்று, .......... அப்படியே போய், கௌதம கோத்திரத்து கௌதம மகரிஷி வரையிலும் போய்ப்பார்க்க ஆசை!
எங்கள் கேள்வி :
தமிழ் சினிமாவில், உங்களுக்கு ரொம்பப் பிடித்த நகைச்சுவைக் காட்சி எது? (ஏன்?) ==================================
மீண்டும் சந்திப்போம்!
இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.__/\__
நீக்குஆஹா.... இன்றைய கேள்வி பதில் சிறப்பாக இருக்கிறது....
பதிலளிநீக்குநகச்சுவை காட்சி பல பிடிக்கும். குறிப்பாக ஒன்றை மட்டுமே சொல்வது கடினம்.
// ரொம்பப் பிடித்த... //
நீக்கு// நகச்சுவை !// ஹாஹா !!!
நீக்குவாழ்க நலம்...
பதிலளிநீக்குஉங்கள் கேள்விதான் முதலில்!
நீக்குஅன்பின் KGG, ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குநன்றி. வாழ்க வளமுடன்!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். அன்பு சகோதரர்களுக்கு கனுப்பொங்கல் வணக்கங்களும், வாழ்த்துக்களும். பின்னர் வருகிறேன்.
பதிலளிநீக்குநன்றி, மீண்டும் வருக!
நீக்குநல்ல பதில் கிடைத்தது மிக மகிழ்ச்சி.
பதிலளிநீக்குகௌதமன் ஜி.
அனைவரும் பொங்கல் விழாக் களைப்பிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பார்கள்.
எல்லோருக்கும் காலை வணக்கம்.
நகைச்சுவை மூன்று நான் ரசிப்பது,
1 தங்கவேலு முத்துலக்ஷ்மி.....அறிவாளி
2, திருவிளையாடல் தருமி,ஈசன் உரையாடல்,
3,
சபாஷ் மீன சந்திரபாபு. ஆள்மாறாட்டத்தில் அகப்பட்டுக் கொள்வது.
ஆஹா! இவை யாவுமே எனக்கும் பிடித்தவை!
நீக்குநாடி ஜோஸ்யத்தில் நம்பிக்கை உண்டா. இது ஒரு கேள்வி.
பதிலளிநீக்கு2,நாடி ஜோஸ்யம் நிஜமா.
சொல்வோம்.
நீக்குவல்லிம்மா... நாடி ஜோஸ்யத்தில் நான் அடுத்த பிறவியில் திருவாரூரில் பிறப்பேன். திருமணம் கிடையாது. கடைசி பிறப்புன்னு சொல்லியிருக்காங்க.
நீக்குஇதை நம்பினா, அவனுக்கு (அடுத்த பிறவியில் பிறப்பவனுக்கு) எப்படி பணம் எழுதி வைக்கலாம் என்று யோசிக்கணும்.
நீங்க என்ன ஐடியா தருவீங்க எனக்கு?
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஒரு நகைச்சுவைக் காட்சி என்று சொல்வது முடியாது. பல காட்சிகளை அவ்வப்போது பார்க்கும்போது ரசிக்க வைக்கும்.
ரொம்பப் பிடித்த என்றுதான் கேட்டிருக்கிறோம்!
நீக்குரசிக்க வைத்தன பதில்கள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி !
நீக்குகௌதமன் சார், ரேவதி கேள்விக்கு (நீலவண்ணக்கண்ணர்) என்னை மாட்டி விட்டது சரியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
பதிலளிநீக்குசரி, சரி, அது போகட்டும், பல சமயங்களில் செய்யாத ஒரு காரியத்துக்கு/குற்றம்/தவறான காரியம் ஏதோ ஒண்ணு அதுக்கு நம்மை மாட்டிவிட்டுத் தப்பிப்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நீங்கள் அது மாதிரி மாட்டிக்கொண்டு விழித்திருக்கிறீர்களா?
மாட்டிவிட்டவரிடம் கோபம் வருமா? வந்தது உண்டா? நகைச்சுவைக்காக எனில் சாதாரணமாய் எடுத்துக்கொள்வோம். ஆனால் தவறுகள் செய்துவிட்டு மாட்டிவிட்டால்?
இது அலுவலகங்களில் கூட நடக்கும் ஒன்று. மேலதிகாரிகளிடம் நம்மை மாட்டி விட்டுடுவாங்க! சில சமயம் நாம் காட்டிக்கொடுக்கும் நிலைமையிலும் இருக்க மாட்டோம்.
சொல்கிறோம்.
நீக்குநாகேஷ் நடிச்ச எல்லாப் படங்களின் காமெடியும் பிடித்தமானவையே என்றாலும், "சோப்பு, சீப்பு, கண்ணாடி" படத்தில் மூன்று வீட்டுச்சாவிகளை வைத்துக் கொண்டு நடக்கும் காமெடி! அருமை!
பதிலளிநீக்குஅதே போல் சபாஷ் மீனாவில் சந்திரபாபு இரட்டை வேடத்தில் அருமையான காட்சிகள்
பார்த்திபன், வடிவேலு காம்பினேஷனில் எல்லாக் காமெடிகளும் பிடிக்கும்.
அப்படியா? எனக்கு பார்த்திபனை ஒரு நகைச்சுவை நடிகராக ரசிக்கமுடிவதில்லை.
நீக்குபார்த்திபன் நடித்த படங்கள் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் அந்த துபாய் காமெடி வரும் அல்லவா? அது போல் ஒன்றிரண்டு படங்களில் எல்லாம் காமெடிக்காட்சிகள் ஒளிபரப்பும்போது பார்த்தவை தான். :)
நீக்குகாதல் திருமணங்கள் வெற்றிகரமாக முடியுமா இல்லையா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பீர்கள்? எல்லோருமே காதலுக்கு உயிரைக் கொடுப்பதாகத் தான் சொல்கின்றனர்.
பதிலளிநீக்குசொல்வோம்.
நீக்குசொல்றதுக்கு முன்னாடி ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னால் ஆனந்த விகடனில் மெரீனா எழுதிய காதலென்ன கத்தரிக்காயா நாவலைப் படிச்சதுண்டா? படிச்சுட்டு பதில் சொன்னால் கொஞ்சம் நியாயமாக இருக்கும்!
நீக்குஅப்போ படிச்சது; இப்போ மறந்து போயிடுச்சு!
நீக்குசில கேள்விகளுக்கு $ பதில் வரலை. $ மதிப்பு அதிகம் என்பதாலா? இஃகி, இஃகி, சில கேள்விகளுக்கு & பதில் இல்லை. எல்லாக்கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருப்பவர் # மட்டுமே!
பதிலளிநீக்கு$ பதில்கள் முதலில் வந்தவை. # பதில்கள் அதற்குப் பின்பு. & பதில் சொல்லும்பொழுது, முந்தைய பதிலோடு ஒத்துப்போகும் கருத்தாக இருந்தால், மௌனமாகிவிடுவார்!
நீக்குஎப்போவுமே ஜாக்கிரதையாக இருப்பீங்க போல! பதில் சொல்லும்போது கூட யார் # யார் $ யார் & என்பதைக் காட்டிக்கலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஆனால் நான் கண்டுபிடிச்சுட்டேனே! சொல்ல மாட்டேனே! :)
நீக்குபதில்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி தனபாலன் அவர்களே!
நீக்குமுதியோர் இல்லம் பெருகி வருவது குறித்து உங்கள் கருத்து என்ன? இது மறைமுகமாகக் கூட்டுக்குடும்ப வாழ்க்கையைச் சிதைப்பது போல் எனக்குத் தெரிகிறது.
பதிலளிநீக்குஅவரவராக விரும்பி எல்லாப் பெற்றோரும் முதியோர் இல்லத்தை நாடுவதில்லை என்றே நினைக்கிறேன். உங்கள் கருத்து?
இந்தக் குழந்தைகளைப் பெற்றோராகிய நாமே வளர்க்கிறோம். அவங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்ததும் நாம் தான். ஆனாலும் அவங்களுக்குக் கல்யாணம் ஆனதும் அவங்க ஏதோ ஒரு தீவிலும் பெற்றோர் எங்கோ ஓர் தீவிலும் இருப்பது ஏன்? ஒரு சிலருக்குப் பெண், மாப்பிள்ளை ஆனாலும் ஒத்துவரதில்லை. பெரும்பாலும் பெண்கள் பெற்றோரை ஆதரித்தாலும் அம்மா+பெண் இடையேயும் மோதல்கள் ஏற்படுவதைக் கண்டிருக்கேன்? ஏன்? நாம் வளர்த்த குழந்தைகள் தானே? எங்கே தப்பு நடந்தது? அல்லது நடக்கிறது? சகிப்புத் தன்மை யாருக்கு வேண்டும்? நான் இதைப் பத்தி 3,4 பதிவுகள் போடும் அளவுக்கு விஷயங்கள் சேகரித்து வைத்திருக்கேன். :))) போட முடியுமா பார்ப்போம். உங்கள் கருத்தைப் பகிரவும்.
ஏஞ்சல் வந்து கேள்விகளை அடுக்கும் முன்னர் கேட்டுட்டு ஓடிடணும் :))))
பதிலளிநீக்குபாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பது நல்லதா? அல்லது இந்தக் காலத்துக்குப் பொருந்தாததா? உதாரணமாக இப்போதெல்லாம் கணுப்பிடி என்பது ஏன் வைக்கிறோம் என்பதே இளைஞர்கள், இளம்பெண்களுக்குத் தெரிவதில்லை. அவங்க பெற்றோரும் ஏதோ நம் அப்பா, அம்மா சொன்னாங்க செய்தோம். இது தான் வழக்கம் என்னும் போக்கையே கடைப்பிடிக்கிறாங்க. காரண, காரியங்களை எடுத்துச் சொல்லுவது சரியா தவறா?
நெல்லைத் தமிழர் உடனே வந்து நீங்க இன்னும் "எம்.கே.டி" காலத்திலேயே இருக்கீங்கனு சொல்லப் போறார். :P
உறுப்பு தானம் பற்றி உங்கள் கருத்து என்ன? பெரும்பாலும் விபத்துகளில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளே தானமாகப் பெறப்படுவதாய்ச் சொல்கின்றனர். ஆனாலும் சமீபத்தில் நன்றாக இருந்த ஒரு வாலிபரின் உறுப்புகள் திட்டமிட்டு தானமாகப் பெறப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதெல்லாம் சரியா?
பதிலளிநீக்குகேள்விகளுக்கு நன்றி. பதில்கள் பகிர்வோம்.
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடித்த காமெடி காட்சிகள்
பதிலளிநீக்குதிருவிளையாடல் படத்தில் தருமி அரசவையில் பாடலை படிக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து அவர் கோவிலில் புலம்பும் காட்சியும். காரணம் பிரமாதமான நாகேஷின் உடல் மொழி மற்றும் நடிப்பு.
பாமா விஜயத்தில் ஆங்கிலம் தெரியாது என்று தன்னை அவமானப்படுத்திய காஞ்சனவை எனக்கு ஹிந்தி தெரியும் உனக்கு தெரியுமா? என்று பழைய ஹிந்தி படங்களின் பெயர்களை வரிசையாக கேட்டு சௌகார் மிரட்டும் காட்சி. சௌகார் ஜானகி என்றாலே அழுகை என்று எல்லோரும் சொல்லும் பொழுது தன் நகைச்சுவை நடிப்பால் அவர் மிரட்டியது மிகவும் பிடித்திருந்தது.
ஊட்டி வரை உறவில் வி.கே.ராமசாமி வரும் காட்சிகள்.
திருவிளையாடலில் பாலையா திமிரும்,ஆணவமுமாக பேசும் காட்சி.
தில்லானா மோகனாம்பாளில் வைத்தியாக வரும் நாகேஷின் சவடால் நடிப்பு.(நம்மாத்து கொழந்த ஆடறா.. எங்க உட்கார்ந்தா என்ன? சண்முகசுந்தரம் கை நீட்டி காசு வாங்கிட்ட, ஊதன்னா, ஊத வேண்டியதுதானே..?)
பஞ்ச தந்திரத்தில் அடுக்கடுக்காக பொய்களை அடுக்கி கமல் சமாளிக்கும் காட்சி, முன்னாடி, பின்னாடி கன்ஃப்யூஷன், நாகேஷை கழட்டி விட நண்பர்கள் சொல்லும் பொய் அப்போது கமலின் ஆக் ஷனுக்கு ஜெயராமின் ரியாக் ஷன்)
மணல் கயிறு படம் மொத்தமும்.
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மனோரமா கிஷ்மு சம்பந்தப்பட்ட காட்சி.
அடேடே! அதே, அதே, சூப்பர். நானும் இவை யாவையும் ரசித்துள்ளேன். அதே காரணங்களுக்காக. + காதலிக்க நேரமில்லை படம் முழுவதும்.
நீக்கு//காதலிக்க நேரமில்லை படம் முழுவதும்.// இது கிளாசிக் வகை! எப்போப் பார்த்தாலும் ரசிக்கலாம். மேலே பானுமதி சொன்ன காமெடி காட்சிகளை நானும் ரசித்திருக்கிறேன். மணல் கயிறு 2 தான் பார்க்கலை, பார்க்கணும்னு நினைச்சுத் தேடிப் பார்த்தும் கிடைக்கலை. :)
நீக்குமணல் கயிறு சுமார். நகைச்கு சில காட்சிகள் ஓகே (காது கேட்காத நடிப்பு). மற்றபடி நாடகத்தனம். மணல்கயிறு 2, இன்னும் சுமார். மைக்கேல் மதனகாமராஜன்ல பாலக்காட்டு கமல், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, உள்ளத்தை அள்ளித்தா, வடிவேலு அர்ஜுன் காமெடிகள், இன்றுபோய் நாளைவா, நிறைய இருக்கு, சர்வர் சுந்தரம் உள்பட
நீக்குமுக்கியமான காட்சியை மறந்து விட்டேனே. தில்லு முல்லு படத்தில் ரஜினியை தேங்காய் சீனிவாசன் இண்டர்வியூ பண்ணும் காட்சி.
பதிலளிநீக்குகண்ணாமூச்சி ஏனடா படத்தில் கிராமத்தில் மயக்க மருந்து அம்பு தாறுமாறாக எல்லோர் மீதும் பாய, ஆளாளுக்கு உளரும் காட்சி.
"கோல்மால்" பார்க்கலைனா தில்லுமுல்லு பிடிச்சிருக்கலாமோ என்னமோ! ஒரிஜினல் பார்த்துட்டதால் காப்பி பிடிக்கலை! என்றாலும் ஒரு முறை ரசிக்கலாம். ரஜினியின் வித்தியாசமான நடிப்பு. எஸ்.வி.ரங்காராவும் காமெடியில் நன்றாக நடிப்பார்.
நீக்குதில்லு முல்லு படத்தில் எஸ் வி ரங்காராவா! பூர்ணம் விஸ்வநாதன் அல்லவா?
நீக்குகண்ணாமூச்சி ஏனடா படம் பார்த்தது இல்லை என்று நினைக்கிறேன்.
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் ""பொதுவாக ஹாஸ்ய நடிப்பில் தேர்ந்தவர்களில்"" எஸ்.வி.ரங்காராவும் ஒன்று என எழுதி இருந்தேன். அந்த வார்த்தைகளைக் காணோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அர்த்தமே மாறிப் போச்சு!
நீக்கும்ம்ம்ம் கண்ணாமூச்சி ஏனடா? படம்? கிடைச்சால் பார்த்துடறேன். :) தகவலுக்கு நன்றி.
நீக்குகீதா அக்கா மணல் கயிறு 2 எல்லாம் பார்க்காதீர்கள்.
நீக்குதில்லு முல்லுவில் நடித்தது தேங்காய் சீனிவாசன், தேங்காய் சீனிவாசன், தேங்காய் சீனிவாசன். நீங்கள் எஸ்.வி.ரங்காராவ் என்கிறீர்கள் கௌதமன் சார் பூர்ணம் என்கிறார்.
ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் தில்லுமுல்லுவில் எஸ்.வி.ரங்காராவ் என்றெல்லாம் சொல்லலை! பொதுவான நகைச்சுவை நடிகர்களில் அவரும் ஒருவர் என்பதே என் கருத்து. சுரதாவில் தட்டச்சியதில் சில வரிகள் விட்டுப் போயிருக்கிறது. புதுக்கணினியில் நேரடியாகத் தட்டச்ச முடியறதில்லை. இது பழைய மடிக்கணினி! இதில் நேரே தட்டச்சலாம்.
நீக்குபொதுவாப் படங்களைத் தேடிக் கொண்டு போய்ப் பார்ப்பதில்லை. எஸ்.பாலச்சந்தரின் பொம்மை தான் பார்க்க ஆசை! ஆனால் அது கிடைக்கவில்லை. ஆகவே வாய்ப்புக் கிடைத்தால் மணல் கயிறு 2 பார்ப்பேன். அப்போ வேறே ஏதும் வேலை இல்லாமல் இருந்தால். நான் நாள், நக்ஷத்திரம் எல்லாம் பார்த்துக் கொண்டு மத்தியானம் கிடைக்கும் நேரத்தில் மட்டுமே படம் பார்ப்பேன். அதையும் தொடர்ந்து பார்க்கணும்! இல்லைனா பின்னர் பார்க்கப் பிடிக்காது. இத்தனை ஆட்டபாட்டங்களோடும் ஆர்ப்பாட்டங்களோடும் படம் பார்க்கணும் என்னும்போது எங்கே உட்கார முடியும்! இஃகி, இஃகி, இஃகி!
நீக்குகேள்விக்கான பல பதில்கள் மிகவும் ஆச்சர்யத்தைத் தருவனவாக உள்ளன. கேள்வி கேட்பது எளிது. பதில் சொல்வது கடினம் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது.
பதிலளிநீக்குஅதுவும் சரிதான் ஐயா.
நீக்குஆ! நான் உலகப்புகழும் சாகா வரமும் பெற்ற வாழைப்பழ காமமெடியை மறந்தால் நகைச்சுவை உலகம் என்னை மன்னிக்காது. அசறாத செந்திலின் அப்பாவித்தனம் ரசிக்கக்கூடியது. கரககாட்டகாரன் படத்தில் காமெடி காட்சிகள் எல்லாமே சூப்பர்.
பதிலளிநீக்குஎன்ன படம் என்று தெரியவில்லை,"நான் ஏழாங்க்ளாஸ் பாஸ், நீங்கள் ஒன்பதாவது ஃபெயில், பாஸ் பெரிசா? ஃபெயில் பெரிசா?" என்று கவுண்டமணியை கதற அடிக்கும் செந்தில். வேறு சில படங்களிலும் இந்த ஜோடியின் காமெடியை ரசித்திருக்கிறேன்.
நகைச்சுவை என்றால் காதலிக்க நேரமில்லையை எப்படி விட முடியும்?
//நான் ஏழாங்க்ளாஸ் பாஸ், நீங்கள் ஒன்பதாவது ஃபெயில், பாஸ் பெரிசா? // கிரேசி மோகனின் நாடகங்களில் வரும் வசனம் இது! நகைச்சுவைன்னா அதெல்லாம் நகைச்சுவை! எஸ்.வி.சேகர் காமெடியும் பிடிக்கும். என்றாலும் பொடி வைத்து வசனம் பேசுவார்.
நீக்குஆம். செந்தில் கவுண்டமணி ஜோடி காமெடிகளில் பல ஹிட் காமெடிகள் இருக்கு. காமெடிகளில் பல வித்தியாசமான நடிப்பு காட்டி நடித்தவர் என்று பார்த்தால், வடிவேலு முதல் ஆளாக வருகிறார். மற்ற எல்லா காமெடி நடிகர்களும் சற்றேறக்குறைய ஒரே மாதிரி நடித்திருந்த சமயத்தில், காமெடியில் வித்தியாசமான வெரைட்டி காட்டியவர், வடிவேலு என்று சொல்வேன்.
நீக்குபெண்ணைப் பெண்ணே தாக்குவது குறித்து உங்கள் கருத்து என்ன? உதாரணமாக மாமியார், மருமகள், மருமகள், மாமியார்! உலகப்பிரசித்தி பெற்ற பிரச்னை! ஏன்?
பதிலளிநீக்குஇப்போதைய செய்தி ஒன்றில் சபரிமலைக்குள் ரகசியமாக அரசால் நுழைக்கப்பட்ட கனகதுர்கா என்னும் பெண்ணை அவர் மாமியார் ஆக்ரோஷமாகத் தாக்கி இருக்கார். என்னதான் அவர் செய்த்து தவறாகவே இருந்தாலும் தாக்கி இருக்கக் கூடாது என்பதே என் தனிப்பட்ட கருத்து. அதுவும் அவர் நரம்புகள் பாதிப்படையும் வண்ணம் தாக்கி இருக்கார். மாமியார் எனில் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இத்தகைய வன்முறைகள் இப்போதும் நடப்பதன் காரணம் என்ன? மாமியாருக்கு மருமகளைப் பிடிக்காமல் போவதிலும் மருமகளுக்கு மாமியாரைப்பிடிக்காமல் போவதிலும் உள்ள அடிப்படைக் காரணம் என்ன?
சின்னச் சின்ன பொருட்களை, அது தரும் நினைவுக்காகப் பாதுகாக்கறீங்ககளா, பாதுகாத்திருக்கீங்களா? (பையன் தந்த பேனா, அப்பா எழுதிய லட்டர் போன்று)//
பதிலளிநீக்குஎன் அப்பாவின் கடிதங்க்களை எனக்கு திருமணம் ஆனபின் அப்பா எனக்கு எழுதிய கடிதங்களை பத்திரபடுத்தி வைத்து இருந்தேன். (அத்தனை கடிதங்களையும்) ஒன்பது மாதங்களில் அப்பா எழுதிய கடிதம் மிக அதிகம்.
ஒரு சமயத்தில் எல்லா கடிதங்க்களையும் கிழித்து போடும் போது அப்பாவின் கடிதங்களை சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை கிழித்து விட்டேன்.
இப்போது நினைத்தாலும் மிக வருத்தமாய் இருக்கும். எவ்வளவு வேண்டாத பொருட்களை சேமித்து வைத்துக் கொண்டு இருக்கிறோம் இடத்தை அடைக்காத காலத்தின் நினைவுகளை சொல்லிக் கொண்டு இருக்கும் கடிதங்களை கிழித்து விட்டதை நினைத்து நினைத்து வருந்திய நாட்கள் அதிகம்.
அப்பா முதன் முதலில் வாங்கி தந்த வாட்சை இன்னும் பத்திரமாய் வைத்து இருக்கிறேன்.
அப்பா எழுதி தந்த பஜனை பாடல்கள் ஜன்னலில் வைத்து இருந்தேன், ஒரு வருடம் வந்த புயல் மழையில் அந்த டைரியில் அப்பா எழுதி தந்த பாடல்கள் அழிந்து விட்டன. அன்று அழுத அழுகை சொல்ல முடியாது.
வருத்தமான விஷயம்தான்.
நீக்குகேள்விகளை, பதில்களை ரசித்தேன்.
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை.
நன்றி திருமதி அரசு.
நீக்குகேள்வி பதில்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கின்றன...
பதிலளிநீக்குஇப்போது எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் நீங்கள் முன்பு பள்ளி,கல்லூரி, அல்லது வேலைக்குச் சென்ற காலத்தில் ஒரு நாளேனும் ஆசிரியராக இருந்த அனுபவம் உண்டா? (ஒரு நாள் முதலவன் போல)
துளசிதரன்
கேள்விகள் சிறப்பு என்றால் பதில்களும் சிறப்பு. வழக்கம் போல் சில சிரிக்க வைத்தன.
பதிலளிநீக்குநானும் சில பொக்கிஷங்கள் என்று வைத்துப் பாதுகாப்பதுண்டு. ஒரு சில பல ஊர்கள், பல வீடுகள் மாறியதில் தொலைந்து போனது வருத்தம்....
எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவைக் காட்சி என்றால் தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல் படத்தில் தருமி வரும் சீன்....அப்புறம் பார்த்திபன் வடிவேலு காமெடி (இதில் வெற்றிக் கொடி கட்டு தவிர வேறு படங்கள் தெரியாது. நகைச்சுவைக்காட்சிகள் மட்டும் நகைச்சுவை சேனலில் மாமியார் வீட்டில் இருந்தப்ப பார்த்ததால்...)
கீதா
1. வெளியில் பேங்கில், அலுவலகத்தில் மிக முக்கியமான நேரத்தில் எழுதுவதற்குப் பேனாவை பாக்கெட்டில் தேடி கிடைக்காமல் அருகில் யாரிடமாவது கேட்கலாமா என்று தயங்கி வெட்கப்பட்டு கேட்ட தர்மசங்கடமான அனுபவம் உண்டா?
பதிலளிநீக்கு2. இப்படி வேறு ஒருவர் பேனா இல்லாமல் உங்களிடம் கேட்ட அனுபவம்? அப்போது கொடுத்துவிட்டு அவர் தரும் வரை காத்திருந்து வாங்கியிருக்கீங்களா அல்லது உங்கள் வேலை முடிந்தும் அவர் தரவில்லை என்றால் அப்படியே வந்ததுண்டா?
3. நெருங்கிய உறவு/நண்பர் கல்யாணம் அல்லது அப்படியான விழாக்களில் முகூர்த்தத்திற்குச் செல்ல முடியாமல்/தவறவிட்டு சாப்பாட்டு நேரத்திற்குச் சென்று அப்புறம் மொய் வைத்து அட்டெண்டன்ஸ் வைத்தாச்சு என்பது போன்ற அனுபவங்கள் உண்டா? அப்போது எப்படி ஃபீல் செஞ்சீங்க?
4. பல வருடங்களுக்குப் பிறகு நீங்கள் சிறு வயதில் வளர்ந்த அல்லது பிறந்து வளர்ந்த உங்கள் ஊருக்குச் சென்ற அனுபவம் இருந்தால் - இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் - அப்படிச் சென்ற போது ரிட்டையர் ஆன பின் நம்ம ஊர்லயே இருந்திடலாமா என்று உங்களுக்குத் தோன்றியதுண்டா?
கீதா