“அடடே! மாலா! வா வா”
சித்தப்பா முகத்தில் சந்தோஷம். 85 வயது. காது கேட்காது. தொலை/அலை பேசியில் பேச முடியாது. எனவே கடிதம் போட்டிருந்தார். உன்னைப் பார்த்து நாளாச்சு. ஏன் வரவில்லை என்று.
வெயில் சுட்டெரித்தது. புடவைத் தலைப்பால் விசிறி துடைத்துக் கொண்டாள்.
“பயங்கர வெயில். இந்தா தண்ணி குடி. எளைச்சு, கருத்துப் போயிட்டியே. எங்க வேலைக்குப் போற?”
சொன்னாள்.
“எங்களால வெளில எங்கயும் போக முடில. எப்பவும் வர நீ இப்ப கொஞ்சநாளா வரலியா… சித்தப்பா தவிச்சுப் போயிட்டார்” - சித்தி
“நீங்க பெரியவா. என் தம்பி, தங்கைகள் சின்னவா எங்காத்துக்கு வரலாமே.”
“இவாளுக்கு டைமே இல்லை. எல்லாரும் ரொம்ப பிஸி. தினம் அலைச்சல். இன்னிக்கு ஞாயித்துக் கிழமை ஒரு நாள் தான் ரெஸ்ட்.”
மாலா சிரித்துக் கொண்டாள். அவளுக்கு அந்த ஒரு நாள் ரெஸ்டும் கிடையாது. நேரமும் தான். அவள் பணி அப்படி. ரயில் அல்லது பஸ்ஸில், அதுவும் நடந்துதான் ஏற வேண்டும்.
“இல்லைக்கா. டைம் இல்லைனோ, ரெஸ்ட்னோ இல்லை. சோம்பேறித்தனம் தான்.” தம்பி மனைவி உண்மையைச் சொன்னாள்.
பொதுவான குடும்ப விசாரிப்புகள்.
“வெத்தலை பாக்குல ஏதாவது வெச்சுக் கொடுத்தாலும் நீ வாங்கிக்க மாட்ட. என்ன உதவி வேணும்னாலும் கேளு மாலா. நாம எல்லாம் ஒரே ஆத்துல என் பொண்கள் ரெண்டு பேரும் உன் மடிலதான் படுத்துப்பா. மறக்க முடியுமா பழச. நீ உடம்பால எவ்வளவோ செஞ்சுருக்க எங்களுக்கு”
மாலாவின் கழுத்தில் தாலிக்கொடி மஞ்சள் கயிறாகியிருந்தது அவர்கள் கண்ணில் படாமல் இருக்குமா? அதனால்தானே இதுவரை வராமல் தவிர்த்துவந்தாள்.
“எனக்கு உங்க அன்பும், ஆசிர்வாதமும் தான் வேணும். அதுதான் முக்கியம் சித்தி.”
பேசினார்கள். சிரித்தார்கள். ஒரு மணி நேரம் கடந்ததே தெரியவில்லை.
“சரி. சாப்பிட வா. பசிக்கும். 8, 9 கி மீ தான் உங்க ஏரியா இங்கருந்து. ஆனா ட்ராஃபிக். பஸ்ஸோ, ரயிலோ…..வெயிட்டிங்க் டைம், நடை எல்லாம் சேர்த்தா ஒரு மணி நேரம் ஆகும்”
தம்பியின் மனைவி நன்றாகவே சமைத்திருந்தாள். சாம்பாரின் மணம் சித்தியின் சாம்பார் பொடியின் அளவைக் கேட்க வைத்தது. கை மணமோ?
நான்கைந்து தெரு தள்ளியிருந்த சித்தப்பா பெண்ணும், பேத்தியும் இங்கேயே வருவதாகச் சொல்லியிருந்தார்கள்.
“மாலா பயங்கர வெயில். எங்களால அங்க வர முடியலை. நீ இங்க வந்துரு.”
சுட்டெரிக்கும் வெயிலில் மீண்டும் நடை. தங்கை பெண் தற்போது ஏதோ ஆர்கானிக் ப்ராடெக்ட்ஸ் ப்ரமோ, பிசினஸ் என்று இறங்கியிருப்பதாகச் சொன்னாள். நல்ல வேலையை விட்டுவிட்டாளா என்று கேட்டதற்குச் சரியான பதில் இல்லை.
“மாலா, நீயும் பாட் பெயின்டிங்க், ஜ்வெல்லரி, ஊறுகாய், ரெடிமேட் பொடி எல்லாம் நிறைய செய்வியே! ஆன்லைன்ல போடலாம். எல்லாம் செமை விலைக்குப் போகும்.”
மாலாவுக்குச் சிரிப்புதான் வந்தது. அவளிடம் யாரும் அத்தனை ரூபாய் கொடுத்து வாங்குவதில்லை. அந்த சாமர்த்தியம் இருந்திருந்தால் இன்று எங்கோ போயிருப்பாள். அதற்கு பிஸினஸ் மனம் வேண்டும். அவளுக்குத் தெரிந்த ஒன்று உழைப்பும், அன்பும் மட்டுமே. அதிர்ஷ்டம்? அது தனி ப்ரான்ட்!
“வீட்டுக்கு அப்பப்ப வந்துட்டுப் போ. டெய்லி இங்க வந்தா பிஸினஸ்ல சேர்ந்துக்கலாம். இங்கதான் மெட்டீரியல் எல்லாம் சீப். இல்லைனா வாரம் ஒரு தடவை இங்க வந்து நீ செய்யறத கொடுத்துட்டுப் போ”
“ஸாரிபா. என்னால இப்ப இன்வெஸ்ட் பண்ண முடியாது. ஹான்….உன் ப்ராடெக்ட்ஸ் விக்க…. என் ரிலேட்டிவ் ரோகிணி தெரியும்லியா? அவளைப் பிடி. அவ ஃபினான்சியல் லைன்லயும் இருக்கா. பெரிய சர்க்கிள். எல்லாம் ஹைஃபை.”
மாலா வீட்டருகில் ரயில்வே கேட்டைக் கடந்தால் ரோகிணியின் வீடு. ரோகிணியின் நம்பரை கொடுத்தாள்.
“நீங்க வீட்டுக்கு வரதே இல்லையே. ரெண்டுபேரும் மாப்பிள்ளையையும் கூட்டிட்டு வாங்கப்பா வீட்டுக்கு.”
“ஹையோ உங்க வீடு ரொம்ப தூரம். வரது கஷ்டம்ப்பா”
மறு நாள் ரோகிணியின் அழைப்பு.
“மாலா உன் கஸின் பொண்ணு கூப்பிட்டா. வேலையை விட்டுட்டு ஏதோ ஆர்கானிக் ப்ராடெக்ட் பிஸினஸ் பண்றாளாம். ஃபினான்ஸியல் லைன்லயும் இருக்காளாமே. அவ ஹஸ்பன்டு சி ஏ வாமே. என் கூட பேச இன்னிக்கு இங்க வரேனு சொல்லிருக்கா”
“மாலா உன் கஸின் பொண்ணு கூப்பிட்டா. வேலையை விட்டுட்டு ஏதோ ஆர்கானிக் ப்ராடெக்ட் பிஸினஸ் பண்றாளாம். ஃபினான்ஸியல் லைன்லயும் இருக்காளாமே. அவ ஹஸ்பன்டு சி ஏ வாமே. என் கூட பேச இன்னிக்கு இங்க வரேனு சொல்லிருக்கா”
"ஓ!" மாலாவின் அந்த ஓ வில் ஆச்சரியமும் வேதனையும் கலந்திருந்தது.
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குஸ்ரீராம் அண்ட் எபி ஆசிரியர்களுக்கு மிக்க மிக்க நன்றி கதையை வெளியிட்டமைக்கு!!
நீக்குகீதா
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவெங்கட்ஜி காலை வணக்கம்....
நீக்குகீதா
இனிய காலை வணக்கம் வெங்கட்.
நீக்குஆஹா... இன்றைக்கு கீதாஜி எழுதிய கதையா..... மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஓஹோ இக்கதைதான்!!
பதிலளிநீக்குகீதா
மனிதர்கள் பல விதம். பெரும்பாலான மனிதர்கள் opportunistஆகவே இருக்கிறார்கள் என்பது அவ்வப்போது கிடைக்கும் பாடம்.
பதிலளிநீக்குநல்ல கதை. பாராட்டுகள் கீதாஜி.
மிக்க நன்றி வெங்கட்ஜி!!! கருத்திற்கு...
நீக்குவேலை முடித்து அப்புறமா வரேன்...
கீதா
ஆமாம் வெங்கட்ஜி! சுற்றிலும் நடப்பதைக் காணும் போது மனித மனம் எப்படி எல்லாம் மாறுகிறது என்று தெரிகிறது. மற்றவர்களின் அனுபவமும் நமக்குப் பாடமாகித்தான் போகிறது. நாம் அப்படி இருக்கக் கூடாது என்ற பாடமும் கற்க முடிகிறது.
நீக்குமிக்க நன்றி ஜி
கீதா
அந்த புகைப்படத்தின் வரியில் கதையின் வலி...
பதிலளிநீக்குநிலை தாழ்ந்து போனால் உறவுகள் தரம் தாழ்ந்து போகும் நிதர்சனம்...
சுயநலம் = பிஸினஸ்!!
வாழ்த்துக்கள் கீதா ரெங்கன்ஜி!
வாங்க மி கி மா... கீதா அப்புறம் விரிவாய் பதில் அளிப்பார்!
நீக்குவாங்க மிகிமா! இப்போது பலரும் பிஸினஸில் இறங்குவதைக் காண முடிகிறது. அப்படி இறங்கும் போது ஒரு சிலரே மனிதத்தையும் கூடவே கொண்டு செல்கின்றார்கள்.
நீக்குசமீபத்தில் வாட்சப்பில் ஒரு காணொளி வந்தது. ரட்டன் டாட்டாவின் வரிகள் என்று மிக அருமையான வரிகள்...இக்கதையின் சாராம்சம் பொருந்தியதாக..
மிக்க நன்றி மிகிமா கருத்திற்கு
கீதா
சுயநலம்=பிஸினஸ்//
நீக்குஅதுவும் செய்யும் பிஸினஸ் ஒரு வீட்டுக்குச் சென்றால் நடக்கும் என்றால் உறவும் நட்பும் தொடரப்படுகிறது இல்லை என்றால் இல்லை என்பதே...அப்புறம் எப்போதேனும் ஒரு ஹாய் கூடச் சொல்வதில்லை எப்படி இருக்கின்றீர்கள் என்பது கூட இருப்பதில்லை...இதெல்லாம் நம் நட்பு உறவு வட்டத்தில் பார்த்து வருகிறோமே...மிக்க நன்றி மிகிமா
கீதா
ரட்டன் டாட்டாவின் வரிகள்..//
நீக்குஅது ரத்தன் டாட்டா (Ratan =ரத்தன் என ஹிந்தி உச்சரிப்பு)
அனைவருக்கும் கதாசிரியர் கீதாவுக்கும் ஸ்பெஷல் வணக்கம்.
பதிலளிநீக்குமாலா வைரம். மற்றவர்கள் பித்தளை. பிசினஸ் நன்றாக விளங்குகிறது. மனம் கனக்கிறது. பாவம் மாலா.
காலை / மாலை வணக்கம் வல்லிம்மா.
நீக்குமிக்க நன்றி வல்லிம்மா கருத்திற்கு..
நீக்குஎனக்குத் தெரிந்து ஒருவர் புடவை மற்றும் சுரிதார், மெட்டீரியல் பிசினஸ் செய்பவர் சென்னையில். முதலில் மிக மிக நன்றாகப் பேசுவார் எல்லாரிடத்தும். நல்ல ஃப்ரென்ட் அடுத்த வீடு... நாத்தனார் அவரிடம் ஓரிரு முறை வாங்கியிருக்கிறார் அதன் பின் தேவை இல்லாததால் வாங்கவில்லை. . அப்புறம் தெருவில் பார்த்தால் கூட நின்று ஒரு ஹலோ ஹாய் சொல்லாமல் செல்வார் என்று என் நாத்தனார் (இப்போது அவர் இல்லை..) சொல்லுவார். இப்படியும் சில மனிதர்கள்.
கீதா
அனைவருக்கும் காலை வணக்கம். கீதா ரங்கன் கதையா? வருகிறேன்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குபானுக்கா காலை வணக்கம்....மெதுவா வாங்க...அவசரமே இல்லை
நீக்குகீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரி கீதா ரங்கன் எழ்திய கதையா?
அருமை.. அவர் எழுத்துக்கள் சிறப்பாக நிதர்சனத்தை உணர வைக்கும் விதமாக இருக்கும்.முழுவதும் மடமடவென ஆர்வத்துடன் படித்து விட்டேன். கதை அருமை. எங்களுக்கு பகிர்ந்தளித்திற்கு தங்களுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காலை வணக்கம் கமலா அக்கா.
நீக்குமிக்க நன்றி கமலாக்கா உடனே படித்தமைக்கும் கருத்திற்கும் கீழே கருத்தும் உள்ளதே!
நீக்குகீதா
வாழ்க வளமுடன்.....
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஇனிய காலை வணக்கம் துரை அண்ணா
நீக்குகீதா
கீதா அவர்களின் கதை என்றாலே கொஞ்சம் படபடப்பு இருக்கும்....
பதிலளிநீக்குஇதுவும் அப்படித்தான்....
மெல்லிய நூலில் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும் கல்லைப் போல!....
மனிதர்களிடம் விலையாகிப் போன அன்பு
நாலு கால் செல்லங்களிடம் தான் ஊற்ராகச் சுரந்து கொண்டிருக்கிறது - என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறதோ..
அந்தப் படம்!?..
ஆ ஆ ஆ அண்ணா படபடப்பு? முடிவு பற்றியா?!!!!
நீக்குமெல்லிய நூலில் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும் கல்லைப் போல!//
அண்ணா புரியலையே...
//மனிதர்களிடம் விலையாகிப் போன அன்பு
நாலு கால் செல்லங்களிடம் தான் ஊற்ராகச் சுரந்து கொண்டிருக்கிறது - என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறதோ..//
உண்மைதானே அண்ணா. சிலர் சொல்லுவாங்க இதுங்க சாப்பாடு போடறதுனாலதான் வருதுங்க அதாவது அவற்றின் அன்பு சாப்பாடு பேஸ்ட் 50% என்று....இருக்கலாம்...கொடியது கொடியது வறுமை கொடியதுனு ஔவைப்பாட்டி ரெண்டுகால் ஆறு அறிவுகளுக்கு மட்டும் சொல்லலை எல்லா உயிருக்கும் பொருந்துவது போலத்தான் சொல்லிருக்காங்க...சிலர் சொல்லுவது இருந்தாலும்...நான் பார்த்து பழ்கிய வரையில் செல்லம் இருக்கே அதைத் தடவிக் கொடுத்து நாலு வார்த்தை கொஞ்சினால் போதும் சாப்பாட்டைக் கூட மறந்துவிடும். மீண்டும் வந்து நம்மை நக்கும். ஒரு தடவ சாப்பாடு போட்டா போதும் நம்மைப் பார்க்கும் போதெலாம் வாலை ஆட்டி ஆட்டி அதன் அன்பைத் தெரிவிக்கும் பாருங்க!! அதன் முன்னே நாமெல்லாம் யார்?!
மிக்க நன்றி துரை அண்ணா கருத்திற்கு
கீதா
மனிதர்களை மனப்போக்கை காலமும் மாற்றி விட்டது உண்மையே...
பதிலளிநீக்குவண்டிபாதை தெரு எந்த ஏரியா ?
நீக்குஉண்மைதான் கில்லர்ஜி என்றாலும் மனிதம் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது...
நீக்குவண்டிப்பாதை தெரு உங்களுக்கு நன்றாகவே தெரிந்த தெருதான். இத் தெருவின் அருகில் தானே ரங்கராஜபுரம் இரு சக்கரவாகன சுரங்கப்பாதை இருக்கு. சுரங்கப்பாதையில் இறங்கி ஏறினால் புலவர் இராமானுசம் ஐயா அவர்களின் வீடு இருக்கிறதே! இப்ப நினைவுக்கு வருதா ஜி?!!!!
இப்படத்தை மாமியார் வீட்டுக்குச் சென்று வந்த போது எடுத்தேன்..
மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு
கீதா
வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி.
பதிலளிநீக்குகதை மிகவும் அருமையாக இருக்கிறது சகோதரி. உறவில் வசதி குறைவானவர்களின் நிலையை பார்த்த பின், உறவென இருக்கும் மனித மனத்திற்குள் ஏற்படும் குறைகளை அருமையாக சுட்டி காட்டி இருக்கிறீர்கள்.
அன்பு, பாசம் எல்லாமே பணத்திற்கு முன் நுனிப்புல்தான்.
/அவளிடம் யாரும் அத்தனை ரூபாய் கொடுத்து வாங்குவதில்லை. அந்த சாமர்த்தியம் இருந்திருந்தால் இன்று எங்கோ போயிருப்பாள். அதற்கு பிஸினஸ் மனம் வேண்டும். அவளுக்குத் தெரிந்த ஒன்று உழைப்பும், அன்பும் மட்டுமே. அதிர்ஷ்டம்? அது தனி ப்ரான்ட்/
அருமையான வரிகள். அதிர்ஷ்டம் இருந்தால்தான், எந்த உழைப்புக்கும் தகுந்த பலன் கிடைக்கும்.
ஒருவேளை சுயநலமாக இருப்பவர்களுக்கு மட்டுந்தான் இந்த அதிர்ஷ்டம் என்றுமே பக்க பலமாக இருக்குமோ? விரிவாக சிந்திக்க வைத்த குடும்ப கதை.
கதை அருமை. நன்றாக எழுதிய தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலாக்கா..
நீக்குசுற்றுவட்டத்தில் பார்த்து வருகிறோமே. இப்படியான நிகழ்வுகளை. உறவுகள் நட்புகள் என்று. சிலர் விரைவிலேயே உணர்ந்தும் விடுகிறார்கள்.
மிக்க நன்றி கமலாக்கா கருத்திற்கும் பாராட்டுகளுக்கும்
கீதா
இப்போவும் கிடைக்கும் அனுபவம். நம் உழைப்பை ஏற்றுக்கொண்டு அதில் வாழ்ந்துவிட்டு இப்போதும் ஒதுக்கி விடும் அவலம்! தொடர்கிறது! மனிதர்கள்! சில நேரங்களில் சில மனிதர்கள்! :(
பதிலளிநீக்குஆமாம் அக்கா பல குடும்பங்களில் நடப்பதுதான். அதே சிநேசிம!!!
நீக்குமிக்க நன்றி கீதாக்கா கருத்திற்கு
கீதா
மனம் வருந்தும் வாழ்க்கை பாதை...
பதிலளிநீக்குநிதர்சன உண்மை ...
அருமை கீதா க்கா..
மிக்க நன்றி அனு கருத்திற்கு.
நீக்குகீதா
நல்ல கதை... வாழ்த்துக்கள் கீதா அக்கா.
பதிலளிநீக்குமிக்க நன்ரி குமார் கருத்திற்கு..
நீக்குகீதா
உறவையும்,பாசத்தையும் பணம் பின்னுக்குத் தள்ளி விடும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் கீதா. பாராட்டுகள்.
பதிலளிநீக்குஉண்மைதான் பானுக்கா....எல்லாரும் அப்படி இல்லை என்றாலும் இப்போதெல்லாம் ஏதேனும் தேவை இருந்தால், நமக்குக் காரியம் ஆகும் என்றால் மட்டுமே...
நீக்குமிக்க நன்றி பானுக்கா கருத்திற்கு
கீதா
இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது... இன்றைய நிலையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்...
பதிலளிநீக்குடிடி உங்கள் கருத்து புரிந்து கொள்ள முடியும் நான் எதிர்பார்த்தேன் அதே உங்க கருத்தும்
நீக்குமிக்க நன்றி டிடி கருத்திற்கு
கீதா
மனுஷாள்ளாம் அவ்வளவுதான் இப்படி ஒரு வார்த்தை உண்டு. இது ஒரு வார்த்தை. இன்னமாதிரி மனுஷாள் எங்கே பாக்கிறதே அரிது. இப்படியும் வார்த்தை உண்டு. கதை அருமை. அன்புடன்
நீக்குமிக்க நன்றி காமாட்சிம்மா கருத்திற்கு...
நீக்குகீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகீதா , அருமையான கதை.
பதிலளிநீக்குஉறவுகளின் உண்மையான நேசிப்பு எதில் என்பதை அழகாய் சொன்னீர்கள்.
முன்பே பணம் பந்தியிலே!, குணம் குப்பையிலே என்று பாடி இருக்கிறார்கள் கீதா.
முன்பு செய்த உதவிகளை, அன்பை இப்போது நினைவில் வைத்துக் கொள்வதும் இல்லை.
//“மாலா உன் கஸின் பொண்ணு கூப்பிட்டா. வேலையை விட்டுட்டு ஏதோ ஆர்கானிக் ப்ராடெக்ட் பிஸினஸ் பண்றாளாம். ஃபினான்ஸியல் லைன்லயும் இருக்காளாமே. அவ ஹஸ்பன்டு சி ஏ வாமே. என் கூட பேச இன்னிக்கு இங்க வரேனு சொல்லிருக்கா”//
மாலா வீடு தூரம், ரோகிணி வீடு பக்கம் ஏனென்றால் பிஸினஸ் .
அன்பின் மதிப்பு குறைந்துதான் போனது. எல்லாமே பிஸினஸ் !
மனிதர்களின் மனநிலையை படம் பிடித்துக் காட்டிய கதை .
வாழ்த்துக்கள் கீதா.
மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்கு.
நீக்கு//மாலா வீடு தூரம், ரோகிணி வீடு பக்கம் ஏனென்றால் பிஸினஸ் .
அன்பின் மதிப்பு குறைந்துதான் போனது. எல்லாமே பிஸினஸ் !//
யெஸ் இதுதான் கதையின் பொருளே!!!
மிக்க நன்றி கோமதிக்கா கரீக்ட்டா பிடிச்சதுக்கு..
கீதா
முடியல்ல கீதா மன்னிச்சுக்கோங்க... லேட்டா அல்லது நைட்தான் வருவேன் கதை படிக்க, மோனிங் எழும்ப வேறு லேட்டாயிட்டுது... படியால இறங்காமல் பாய்ந்தடிச்சே ஓடி வந்தேன் ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குவாங்க அமுதசுரபி!!! மெதுவா வாங்க நோ ப்ராப்ளம் ஓட்டப்பயந்தயத்தில் வின் செய்த பூஸாரே பாயந்தடிச்சு ஓடி வந்தாலும் தடுக்கி விழுந்துராம வாங்க...அப்புறம் உங்க மசாஜர் பத்தி இங்க விளம்பரம் வைக்கனுமாயிடும் ஹா ஹா
நீக்குகீதா
இம்முறை மிகவும் குட்டிக்கதைபோல தெரியுதே கீதாவால எப்பூடி இவ்ளோ குட்டியா??? கவ் கீதா கெளவ்வ்வ்வ்வ்வ்?:)
பதிலளிநீக்குகொவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கௌவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ// ஹா இதுக்கு முன்னாலயும் ஓரிரண்டு குட்டிக் கதைகள் எழுதியிருக்கோம்ல...இன்னும் வரும்...ஹா ஹா ஹா ...நீளமாகவும் வரும் எச்சரிக்கையும் சைக்கிள் காப்ல சொல்லிடுறேன்...பூஸார் மயங்கிடாம இருக்கத்தான்..!!!!
நீக்குகீதா
டொண்ட் வொர்ரி.. அமுதசுரபி அதிராவுக்காக, இன்று நான் போடும் கொமெண்ட்ஸ் எல்லாம் அதிரா பெயரில் வரவு வைக்கப்படும்...
பதிலளிநீக்குஇப்படிக்கு அதிராவின் செக் :) ஆகிய ஏஞ்சலின் என்கிற அஞ்சு:). (
அமுதசுரபினு போட்டுட்டு கமென்ட்ஸும் அமுதசுரபிலருந்துதானே வரனும் எதுக்கு செக்??!!!
நீக்குஏஞ்சல் நோட் இட்..பூஸாரின் வாலை கொஞ்சம் பிடிச்சுக்கோங்க..கணக்கு குழப்பம்!!!!
கீதா
கீதாக்கு புரியல்ல:)... எஞ்சலின் என வரும் கொமெண்ட்D எல்லாம் அதிரா போட்டதாகக் கணக்கெடுக்கவும் எனச் சொன்னேன்:)..
நீக்குநம்மைச் சுற்றி என்னவேல்லாமோ நடக்கிறது அதில் நாமுமிருக்கிறோம் இல்லையா பிசினஸ் செய்ய ஒரு முனைப்பு வேண்டும் இல்லாவிட்டால் மற்றவரை குறை சொல்லியே போவொம்
பதிலளிநீக்குஉங்கள் கருத்து எனக்குப் புரியவில்லை ஜிஎம்பி ஸார்.
நீக்குமிக்க நன்றி சார்...
கீதா
பலமுறை நான் குழம்பியதுண்டு சில எழுத்துகளைப் படிக்கும்போது ஏதோ எனக்குப் புரிந்தவரை கருத்திட்டிருக்கிறேன் பிசினெஸ் சரியாகப்போகவில்லை என்றால் நாமும்காரணாமாயிருக்கலாம் என்று தோன்றியது
நீக்கு/வெத்தலை பாக்குல ஏதாவது வெச்சுக் கொடுத்தாலும் நீ வாங்கிக்க மாட்ட. /எங்க வீட்டில் நீங்லளெல்லாம் சாப்பிட மாட்டீர்கள் போல ...!
பதிலளிநீக்குசார் மீண்டும் புரியலை...
நீக்குஅந்த வரிக்கும் உங்கள் கருத்துக்கும் தொடர்பே இல்லையே சார். நாங்கள் பங்களூர் வந்திருந்த போது உங்கள் வீட்டில் சாப்பிட்டோமே...
சென்னையிலும் சாப்பிட்டேன்...
வெத்தலைபாக்குல சிலர் ஏதாவது பரிசுப் பொருள் அல்லது பணம் வைத்துக் கொடுப்பார்கள். குறிப்பாக உறவினர்கள். அதுவும் உதவி செய்வதை வெறுமனே பணத்தைக் கையில் கொடுத்தால் வாங்குவதற்கு ஏதோ போல இருக்கும் என்பதால் வெத்தலைபாக்கு என்று கொடுப்பார்கள் இல்லையா அது சிலருக்கு அப்படி பணம் வைத்துக் கொடுத்தலை ஏற்க அவர்களது சுயமரியாதை இடம் கொடுக்காது என்பதைத்தான் சொல்லியிருக்கேன் சார்.
மிக்க நன்றி சார்
கீதா
ஜிஎம்பி சார் சொல்ல வருவது சிலர் உதட்டளவில் தான் உபசாரம் செய்வார்கள், மனப்பூர்வமாகச் செய்ய மாட்டார்கள் என்பதே! சிலருக்கு நாம் போனால் சாப்பாடு போட மனமிருக்காது! அதே சமயம் அதை வெளிப்படையாகச் சொல்லாமல் நீங்கல்லாம் எங்க வீட்டில் சாப்பிடுவீங்களானு கேட்டுச் சமாளிப்பாங்க! அப்படிக் கேட்டவங்க கிட்டே சாப்பிடறோம்னு சொன்னால்? அதே போல் வெற்றிலை, பாக்கில் வைச்சுக் கொடுங்கனு சொல்லிட்டால்? :)))))
நீக்குஓ! கீதாக்கா இதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?!!!!!!!!!! இப்பத்தான் புரியுது அக்கா!
நீக்குமிக்க நன்றி கீதாக்கா விளக்கத்திற்கும்....அண்ட் ஜிஎம்பி சார் உங்கள் கருத்திற்கும்...ஸார் ஆனால் அந்த வரி அந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டதில்லை. மாலாவின் சுயமரியாதை கேரக்டர் தெரிந்து சொல்லுவது போலத்தான் அந்த வரியை எழுதினேன்...
மிக்க நன்றி சார்
கீதா
எனக்கு யாராவது ஏதும் தந்தால் நோ சொல்லவே மாட்டேன்ன்ன்ன்... மறுக்க சங்கடமாக இருக்கும் எனக்கு... பெரும்பாலும் என் வாழ்க்கையில் நான் நோ சொல்வது குறைவு... வேலையிலும் அப்படித்தான்... நோ சொல்ல மாட்டேன் ஆனா சொல்லியிருக்கலாமோ சிலதுக்கு எனக் குழம்புவேன்.... முகத்துக்கு நேரே மறுப்பது என்னால முடியாத ஒன்று...
நீக்குகீதா ரங்கன்.. இன்னும் எந்தக் கருத்துரைகளையும் படிக்கலை. பாதிக் கதை படிக்கும்போதே கதை எதை நோக்கிச் செல்லுது எனத் தெரிந்துவிட்டது.
பதிலளிநீக்குஉலகம் சுயநலமிகளால் ஆனது. மாலா போன்றவர்கள் பாயசத்தில் அகப்படும் முந்திரி, சாம்பாரில் இருக்கும் தான் போன்று வெகு குறைவாகத்தான் இருப்பார்கள்.
கதை ஏற்படுத்திய சலனத்தை பிறகு எழுதறேன்.
தெய்வ தரிசனப் பயணம்
ஆமாம் நெல்லை நீங்கள் ஆன்மீகச் சுற்றுலாவுல இருக்கீங்கன்னு அமுதசுரபியாய்.....இட்லி வடிவில் ஒரு குழிப்பணியார வடிவில் கேக் பேக் செய்த தளத்தில் பார்த்தும் காஜா தேஜா குழப்பத்தில் அங்க உங்களை வாழ்த்த மறந்தே போயிட்டேன்!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குஅப்புறமா மெதுவா எழுதுங்க நேரம் கிடைக்கும் போது...
உங்க தெய்வ தரிசனம் நன்றாக அமைந்திடட்டும்!!! எங்க எல்லாருக்காகவும் உம்மாச்சிகிட்ட ஒரு பெரிய கும்பிடு சமர்ப்பிச்சுருங்க!
கீதா
நெல்லை சொல்ல மறந்துட்டேன்...எங்க என்ன பிரசாதம் நல்லாருந்துச்சு, வெளில சாப்பாடு நல்லாருந்துச்சுன்னு மறக்காம ஒரு கேப்ல எபி திங்க/வியாழன் பதிவுலயோ இல்லை கீதாக்கா அடிக்கடி பிரசாதம் பத்தி போடறதுனால அங்கயோ சொல்லிடனும் சொல்லிப்புட்டேன்...
நீக்குகீதா
என்னாது நெ தமிழன் ஆன்மீகச் சுற்றுலாவோ? நோஓஓ மீ நம்பமாட்டேன் அவர் பொய் சொல்லிப்போட்டு தேன் மூன் சுற்றுலாவுக்குப் போயிருப்பார்ர்ர்ர்:)... இல்லாட்டில் ஞானி ஆகிட்டாரோ:)..
நீக்குஎன்னை மன்னிச்சுக்கோங்க....அதிரா, ஜீவி அண்ணா,மற்றும் இனி யாரேனும் கருத்திட்டால்....நாளை உங்கள் கருத்துகளுக்கு பதில் தரேன்...கொஞ்சம் உடம்பு முடியலை...சொல்ல வேண்டாம்னு இருந்தேன் இப்ப கருத்துகள் பார்த்தப்ப பதில் கொடுக்க முடியாததால்...சொல்லறேன்..
நீக்குஇவ்வளவு நேரம் தாக்கு பிடிக்க முடிந்தது..இப்ப ஜுரம் கொஞ்சம் கூடுது...ஸோ நாளை...
மிக்க நன்றி
கீதா
அதிரா... உங்களுக்காக எழுதறேன்.
நீக்குதிருமணத்துக்கு முன் 1 1/2 வருடங்கள் அந்நிய மண்ணில் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். வருடத்துக்கு ஒரு தடவைதான் இந்தியா வந்ததாலும், எப்படியும் என்னோடத்தானே வெளிநாட்டில் தனியா இருக்கப் போறாளேன்னு எண்ணி, திருமணமாகி இந்தியாவில் இருந்த 20-25 நாளும் என் பெற்றோர்களுடன்தான் இருந்தோம், திருவண்ணாமலைக்கு உறவினரின் திருமணத்துக்கு, அப்புறம் உறவினர்களோடு 2 நாள் வெளியீர் கோவிலுக்குப் போனதைத் தவிர. அதாவது ஹனிமூன் போனதே இல்லை.
இதை நான் தவறு என ரொம்ப வருடங்கள் நினைக்கவே இல்லை. என் மனைவிக்கு இது ஒரு குறைனு எனக்குத் தெரியவே பல வருடங்களாய்விட்டது.
இதுல, தேனாம்... மூனாம்.... ம்ஹும்
ஹா ஹா ஹா நெல்லைத் தமிழன், ஊரில் இருந்த நாட்களில் அப்பா அம்மாவுடன் சேர்ந்திருக்க நினைச்சீங்க அதில் தப்பில்லை, ஆனா வெளிநாடு வந்த பின்பும் ஹனிமூன் போகாமல் விட்டீங்களே..... அந்த இடத்திலதான் தேம்ஸ்ல தள்ளோணும் உங்களை ஹா ஹா ஹா:).
நீக்குஆனா எதுக்கு அண்ணி அமைதியா இருந்தா? வெளியே சொன்னால்தானே மனதில் இருப்பது புரியும்..
. நான் எண்டால் உடனேயேயே அடிச்சுப் பிடிச்சு சொல்லி, ஒரு 50 ... 100 சொறிகளையும்:) வாங்கிக் காண்ட்பாக்கில போட்ட பின்பே ஓவ் ஆவேன் ஹா ஹா ஹா:)..
///பிஸினஸ்
பதிலளிநீக்குகீதா ரெங்கன்///
ஓஓஓஒ கீதா எப்போ பிஸ்னஸ் தொடங்கினா?:) ஜொள்ளவே இல்ல கர்ர்ர்ர்ர்ர்:).... நா ஒத்துக்க மாட்டேன்ன்ன் தலைப்பின் கீழே பெங்களூர்க் கீதாவின் படம் வந்திருக்கோணும்:)...
///85 வயது. காது கேட்காது. தொலை/அலை பேசியில் பேச முடியாது. ///
பதிலளிநீக்குஹா ஹா ஹா இப்போ இந்த வயசிலதான் இவை இரண்டும் ஒழுங்கா வேர்க் பண்ணுதாக்கும் இக் காலத்தில்:)..
ஓஒ ஒண்ணும் தெரியாதெனச் சொல்லிப்போட்டு பின்பு தானே பிஸ்னஸ் ஆரம்பித்துவிட்டாவோ அந்த பெண்.... சீட்டிங்... இங்கேயும் சீட்டிங்.. அங்கேயும் அகத்தியர் சீட்டிங் கர்ர்ர்ர்ர்:)..
பதிலளிநீக்குஇல்லை அதிரா மாலா தொடங்கவில்லையே....அவளின் தங்கையின் மகள்தான்...
நீக்குமிக்க நன்றி அதிரா
கீதா
சோட் அண்ட் சுவீட்டாகக் கதை எழுதியிருக்கிறீங்க கீதா, சின்னதா முடிவில் ஒரு ருவிஸ்ட்... ஆனாலும் உறவு முறை ... பேச்டு வழக்கில் குழம்பி , 2,3 தடவை முதல் 4 பராக்களை ரிப்பீட்டில் படிச்சேன்... போனில் படிப்பதால் குழம்பினேனோ த்ர்ரியல்ல...
பதிலளிநீக்குமிக்க நன்றி அதிரா கருத்திற்கு...
நீக்குசித்தி, சித்தப்பா, அவர்கள் குழந்தைகளைத் தம்பி தங்கைகள் என்று அவ்வளவுதானே..
மிக்க நன்றி அதிரா..
கீதா
கான்வர்ஸேஷனில் (உரையாடலில்) கதை சொல்ல எல்லோராலும் முடியாது. அந்தக் கலை உங்களுக்குக் கை வந்திருக்கு.
பதிலளிநீக்குஉறவுமுறைகளை எளிதாகப் புரியவைக்க கொஞ்சம் சிரமப்பட்டிருக்கலோமோ என்று தோன்றியது.
“நீங்க பெரியவா. என் தம்பி, தங்கைகள் சின்னவா எங்காத்துக்கு வரலாமே.”
-- இந்த இடத்தில் ஒரு சின்ன தயக்கம், அடுத்து நகர்வதற்குள். யார் சொல்றாங்க இதை?.. எழுதியது விட்டுப் போயிடுத்தா?..
எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ முடியுமா?-- தெரிலே. அப்படி வாழ்ந்தால் நல்லது என்று மட்டும் தெரிகிறது.
அந்த நல்லதுக்கு மாலா நல்ல உதாரணம். வாழ்க்கையே சக்கரம் தான். கீழே, மேலே தாழ்த்தியும் உயர்த்தியும் கொண்டு போகிற சக்கரம். இன்றைய கீழ் நாளைய மேல் ஆகலாம். அதற்கும் மாலா நல்ல உதாரணமாகலாம்.
மிக்க நன்றி ஜீவி அண்ணா கருத்திற்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கும்.
நீக்கு//“நீங்க பெரியவா. என் தம்பி, தங்கைகள் சின்னவா எங்காத்துக்கு வரலாமே.”
-- இந்த இடத்தில் ஒரு சின்ன தயக்கம், அடுத்து நகர்வதற்குள். யார் சொல்றாங்க இதை?.. எழுதியது விட்டுப் போயிடுத்தா?..//
இல்லை அண்ணா எதுவும் விட்டுப் போகலை. இது மாலாவின் வார்த்தைகள். பெரியவங்கனால வரமுடியலைன்றது ஓகே சின்னவங்க அவளின் சித்தப்பா குழந்தைகள் வந்து செல்லலாமேன்னு ஓர் ஆதங்கம் அவளுக்கு...
//உறவுமுறைகளை எளிதாகப் புரியவைக்க கொஞ்சம் சிரமப்பட்டிருக்கலோமோ என்று தோன்றியது.//
நோட்டட் அண்ணா...
மிக்க நன்றி ஜீவி அண்ணா கருத்திற்கு
கீதா
அந்த 85 வயது குழந்தை சிரிப்பு தாத்தாவுக்கு மாலாவின் மேல் அதிக பிரியம்னு நினைக்கிறேன் .மாலா அவருக்காகவே அடிக்கடி போகலாம் அங்கே ..முழு கதையும் வாசிச்சாத்து ..கொஞ்சம் மயங்கி விழுற உணர்வு பிக்காஸ் :) குட்டி கதை ஆனா மனதை கனமாகிடுச்சி
பதிலளிநீக்குஅந்தத்தாத்தாவுக்கு மாலா என்றால் ஸ்பெஷல்...
நீக்குஹா ஹா ஹாஅ ஹா ஹா ஆ குட்டிக்கதை...ஆஆஆ கீதா என்றாலே பெரிய கதைன்னு ஆயிடுச்சு போல...சின்னதா எழுதினாலும் அது கீதாவின் பெயரில் அட்டாச் ஆக மாட்டேங்குது!!! இதுக்கு முன்னாடியும் எழுதின கதைகள் எல்லாமே சின்னதுதானே அந்த ரயில் பாட்டி தாத்தா எல்லாம்.... ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
மிக்க நன்றி ஏஞ்சல்...கருத்திற்கு
கீதா
மாலா சுயமரியாதை உள்ள கேரக்டர் ..பிஸினஸாய் போன உலகில் அன்பின் மதிப்பும் மகத்துவமும் குறைந்துதான் போயிருக்கு .
பதிலளிநீக்குமக்கள் உடை ,நகை வாகனம் இதை வச்சுத்தான் மனிதர்களை மதிக்கிறார்கள் எடைபோடுகிறார்கள் என்பது வேதனையான விஷயம் .கதை வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தியது கீதா ..வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
ஆமாம் ஏஞ்சல்....அதுவும் சமீபத்தில் ரொம்பவே மாறியிருக்கு ஏஞ்சல்...
நீக்குமிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு...
கீதா
மாலாவில் எங்க கீதா ரங்கன்(க்கா) சாயல் தெரியுதோ? என் மனசுல அப்படி ஒரு சம்சயம்
பதிலளிநீக்குஹா ஹா ஹா நெல்லை....நீங்க அப்படியே நினைத்து வாசிக்கறீங்கன்னு நினைக்கிறேன்...ஒரு வேளை எழுதுபவரின் சில சிந்தனைகள், எண்ணங்கள், கேரக்டர் சில கதாபாத்திரங்களில் வரலாம்...
நீக்குஆனால் இது என் மாமியாரின் வீட்டிற்கு முன்பு அதாவது கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் ரெகுலராக வரும் அப்பளம், ஊதுபத்தி, சுண்டை, மணத்தக்காளி வத்தல் எல்லாம் விற்க வந்தவர். நம்மை விட ஒரு 5 வயது மூத்தவரா இருக்கலாம்....வீடு வீடாக விற்று வருவார். நம் வீட்டில் வரும் போது அப்பளம் மட்டுமே வாங்குவோம். வற்றல் எல்லாம் வீட்டிலேயே போட்டதால்..மாங்கோ ஜெல்லி எல்லாம் கூடப் போடுவார். நான் அவரிடம் கற்றுக் கொண்டேன்...நம் வீட்டிற்கு விற்பனைக்கு வரும் போது நான் அவருக்குத் தண்ணீர், மோர், சில சமயம் சாப்பாடும் கொடுத்ததுண்டு..பாவம்..ரொம்ப உழைப்பாளி, மிக மிக அன்பானவர். நாம் சும்மா பைசா கொடுத்தால் கூட வாங்க மாட்டார். மாமியார் நவராத்திரிக்கு வெத்தலைபாக்கில் வைத்துக் கொடுத்தால் அவர் உடனே ஒரு அப்பளக்கட்டை சும்மாகொடுப்பார். அதற்கு பைசா வாங்கிக் கொள்ளமாட்டார். அதனால் அத்ன் பின் ஏதாவது பொருள் வைத்துக் கொடுப்பது வழக்கமாக இருந்தது. அவருக்குப் பயன்படும் வகையில் ஆனால் அதுவுமே அவர் வாங்கிக் கொள்ள மாட்டார். ரொம்பவே சுயமரியாதை.
கீதா
அப்பெண்மணியைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது...ஆனால் இப்ப என்னால் அடிக்க முடியவில்லை நெல்லை...
நீக்குமிக்க நன்றி நெல்லை கருத்திற்கு
கீதா
ஏழையின் வீட்டுக்கு எவர் வருவார்? எவர்தான் வந்திருக்கிறார்? இப்படித்தான் நீளும் காலம்..
பதிலளிநீக்குஅது சரி, சுருக்கி வரைக.. என்று யார் உங்களிடம் சொன்னார்கள்!
மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா கருத்திற்கு
நீக்கு//அது சரி, சுருக்கி வரைக.. என்று யார் உங்களிடம் சொன்னார்கள்!//
ஹா ஹா ஹா ஹா...
கீதா
நல்ல கதை
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு
நீக்குகீதா
எல்லாம் வணிகமாய் போனது கருத்தாய் மிளிர்கிறது பாராட்டுகள்
பதிலளிநீக்கு