வருஷ ஆரம்பத்தை பக்தியோடு ஆரம்பிப்போமா?!
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் இந்தப் பாடல் எனக்குமிகவும் பிடிக்கும். கீதா அக்கா, ரிஷபன் ஜி இந்தப் பதிவைப் பார்த்தால் அவர், அனுராதா பிரேம்குமார், முதலானவர்கள் அதிகமாக ரசிக்கக் கூடும்.
ஆம், ஸ்ரீரங்கனைப்பற்றிய பாடல் இது.
பாடலை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ரொம்ப வருஷங்களுக்கு முன்னிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் இது. இதுவும் நாராயணா என்னும் பாராயணம் எனும் பாடலும் ஜோடிப்பாடல்கள் மாதிரி. சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களில் இன்னொரு ரசிக்க வைக்கும் பாடல் "கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்"
ஆழமான பக்தி பாவம் கொண்ட மெலடி வகை சார்ந்த இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பக்திப் பாடல்களில் ஒன்று.
காவிரி சூழ்பொழில்... சோலைகள் நடுவினில்..
கருமணி துயில்கின்றது...
கண்ணனின் நித்திரை வண்ணங்கள் காட்டிடும்
ஸ்ரீரங்கம் தெரிகின்றது... ஸ்ரீரங்கம் தெரிகின்றது
மாவிலைத் தோரண வாயில்கள் தாண்டிட
கோயில் ஒளிர்கின்றது
மாவிலைத் தோரண வாயில்கள் தாண்டிட
கோயில் ஒளிர்கின்றது
மத்தளம் மேளங்கள் கொட்டிமுழக்கிட
மத்தள, மேளங்கள் கொட்டிமுழக்கிட
மண்டபம் மலர்கின்றது - மணி
மண்டபம் மலர்கின்றது
ஆறெங்கும் சுற்றினும் அவனருள் கிட்டிடும்
ஓரிடம் ஸ்ரீரங்கமே ஓரிடம் ஸ்ரீரங்கமே
ஆறெங்கும் சுற்றினும் அவனருள் கிட்டிடும்
ஓரிடம் ஸ்ரீரங்கமே ஓரிடம் ஸ்ரீரங்கமே
அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்
அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்
அவன்தான் வைகுண்டனே அவன்தான் வைகுந்தமே
போனது போகட்டும் இனியாகிலும் நெஞ்சம்
புனிதம் ஆகட்டுமே
போனது போகட்டும் இனியாகிலும் நெஞ்சம்
புனிதம் ஆகட்டுமே
புன்னகை புரிந்திடும் மன்னவன் பொற்பாதம்
கண்கள் காணட்டுமே...
புன்னகை புரிந்திடும் மன்னவன் பொற்பாதம்
கண்கள் காணட்டுமே...
கண்களும் காணட்டுமே...
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
பதிலளிநீக்குகீதா
haahaaaaaaaaaaaaaaaa :) we both came first
நீக்குஹை ஏஞ்சல் வாங்க பாருங்க நாம கை கோர்த்து இங்க குதிச்சாச்சு...
நீக்குகுட்மார்னிங்க்!!
கீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். ராஜியின் காணாமல் போன பக்கங்கள் பக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்தவனை ஏஞ்சலின் கமெண்ட் ''அட, ஆறாயிடுச்சா?" என்று கேட்கவைத்து இழுத்து வந்துவிட்டது!
நீக்குfirst
பதிலளிநீக்குநாம சேர்ந்து வரது பாருங்க பூஸாரின் காதில் புகை வரட்டும்!!!
நீக்குஹா ஹா ஹா
கீதா
இனிய காலை வணக்கம் ஏஞ்சல். எதிர்பார்த்தேன், தேவதையின் சமையல் பக்கத்தில் என் கமெண்ட் வெளியானது பார்த்து!
நீக்குநாங்க இப்போ தான் தூங்கப்போறோம் தேஷ் போர்டில் பார்த்திட்டு உடனே பப்லிஷ் பண்ணிட்டேன் ...பதிவுக்கு காலைல வரேன் :)
நீக்குGood Night Angel!
நீக்குதேவதையின் சமையல் பக்கத்துல வந்துருக்கா...எனக்கு செய்தி என் பெட்டிக்கும் வரலை ப்ளாகர்லயும் காட்டலையே!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....பார்க்கறேன் ஏஞ்சல்...
நீக்குகுட்னைட்...
கீதா
கீதா... எங்கள் பக்கத்தில் இடது பக்கம் 'உங்கள் பிளாக் எங்கள் விருப்பம்' லிஸ்ட்டில் இருக்கே...
நீக்குசே..சே... நித்திரை கொள்ளுங்கோ அஞ்சு.. எனச் சொன்னால் கேட்டாத்தானே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தேவையில்லாமல் முழிச்சிருந்து செக்கண்டா ஓடிவந்து.. மீ த 1ஸ்ட்டெனக் கூவுவதே வேலையாப்போச்ச்ச்ச்ச்ச்ச் ஹா ஹா ஹா அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே:)..
நீக்குஎனக்கு புகை வரல்ல கீதா/,... சூடுதான் வருது:) ஹா ஹா ஹா கொஞ்சம் தடிமன் காச்சலா இருக்கு..
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நான் புது வருடத்தில போஸ்ட் பற்றி மட்டும்தான் பேசுவேனாக்கும்:).. இல்லை எனில் ஜி எம் பி ஐயா கோபிப்பார்ர்...:).
//நான் புது வருடத்தில போஸ்ட் பற்றி மட்டும்தான் பேசுவேனாக்கும்:).. இல்லை எனில் ஜி எம் பி ஐயா கோபிப்பார்ர்...:).//
நீக்குஹா... ஹா... ஹா... சிவனேன்னு இருப்பவரை ஏன் வம்புக்கிழுக்கிறீர்கள்?
கீதா... எங்கள் பக்கத்தில் இடது பக்கம் 'உங்கள் பிளாக் எங்கள் விருப்பம்' லிஸ்ட்டில் இருக்கே...//
நீக்குஅதானே!!! என் கண்ணு முதல்ல அங்க போக மாட்டேங்குது...இனி போகனும்....எங்க ப்ளாக் நான் ஓபன் பண்ணி வைச்சா பார்க்கலாம் தான்...
இப்ப அங்க போட்டாச்சு...
இனி எபி வரும் போது அந்தப் பக்கமும் கண்ணு போனும்...அது இங்க கும்மி அடிப்பதிலேயே பொழுது ஓடிடுதா...அதான்..
கீதா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் வெங்கட்.
நீக்குஆஹா.... ரசிப்பவர்கள் லிஸ்ட்டில் உங்கள் பெயரை விட்டுவிட்டேனே....
ஹாஹா.... பரவாயில்லை.
நீக்குஓ வருஷத் தொடக்கம் என்பதால் பக்தி மணம்!!!
பதிலளிநீக்குஎனக்கு சீர்காழியின் குரல் பிடிக்கும் கணிர் குரல்...பக்திப்பாடல்களுக்கு ஏற்ற குரல்...
பாட்டு கேட்டுட்டு அப்புறம் வரேன்..
கீதா
கீதா... ஒரு ரகசியம்... எங்கள் ஆசிரியர்களில் ஒருவருக்கு சீர்காழி குரல் அவ்வளவாகப் பிடிக்காது. நான் சொன்னது வெளியில் தெரியவேண்டாம்...!!
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சுட்டேன்...
நீக்குஎபி போர்ட்ல எல்லாரும் ரகசியம் எல்லாம் ரகசியமா போடுறோம்!!!!!
கீதா
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ரகசியம் எண்டால்.. அதிராவைப்போல, காதில மட்டும்தான் சொல்லோணும் ஸ்ரீராம்:)..
நீக்குசரி, புரிந்துகொண்டேன் அதிரா... இனி அவ்வண்ணமே செய்கிறேன்!
நீக்குஎன்னது இது சைக்கிள் காப்ல பூஸார் எட்டிப் பார்த்துட்டு...போயிருக்கார்
நீக்குஅது சரி ரகசியம் எல்லாம் அதிரா போல காதுல மட்டும் நா...எபி காதுலதானே!!!
கீதா
பாடல் நன்றாக இருக்கிறது. பாடலை முன்னர் கேட்டதாக நினைவு இல்லை.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.
ஆ... ஸ்ரீரங்கம்வாசியாக இருந்துகொண்டு கேட்டதில்லையா? என்ன ஆச்சர்யம்! எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
நீக்குஎன்னது... இந்தப் பாடல் கேட்டதில்லையா? பக்திப் பாடல்கள் லிஸ்டில் இதுவும் பல இடங்களில் ஒலிக்கும் பாடலாயிற்றே.
நீக்குஅருமையான தேர்வு ஶ்ரீராம். சீர்காழி குரல் மிக அருமை. சீர்காழியின் பாடல்கள் பலவற்றையும் கேட்பேன். (எல்லாம் மனதில் தங்கினாலும், பன்னிரு விழிகளிலே... மிகவும் பிடித்தது, அதுவும் ஆரம்ப வரிகள்)
ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கீதாக்கா ரிஷபன் அண்ணா, அனு எல்லாம் சொல்லிட்டு, குறிப்பா இந்தப் பாட்டுக்கு நெல்லையை சொல்லாம விட்டுட்டீங்களே!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
நீக்குநெல்லை காவிரிக்கரைக்குப் போய் தர்ணா பண்ணப் போறேன்னு தேம்ஸ்காரங்க போல சொல்லலை!!!!!!! ஹா ஹா ஹா
இதை காலைலெயே அடிச்சுட்டு பப்ளிஷ் பண்ணாம போயிருந்திருக்கேன் ஹிஹிஹி.....
கீதா
அப்படி இல்லை கீதா... ஸ்ரீரங்கம் வாசிகளாக தேர்வு செய்து சொன்னேன். அதனால்தான் வெங்கட்டை விட்டுவிட்டனே என்று சொன்னேன். பார்த்தால் மி கி மாவையும் விட்டிருக்கிறேன்!
நீக்குஓ!! ஓகே ஸ்ரீரங்கம் வாசிகள்...ஓ மிகிமா ஸ்ரீரங்கமா!!
நீக்குகீதா
ஹை அகத்தியர் அங்கிள் :) காலைல வந்து ரசித்து பின்னூட்டமிடறேன்
பதிலளிநீக்குஅகத்தியர் அங்கிள்! ஹா.. ஹா.. ஹா....
நீக்குஅகத்தியர் அங்கிளா!!! அப்ப பூசாருக்கு அண்ணனா இருக்கலாம் பூஸார் ஞானியாச்சே!!!!
நீக்குஏஞ்சல் எனக்கு ஸ்ரீராமுக்கு நெல்லைக்கு எல்லாம் அவர் முப்பாட்டன்!!!
கீதா
ஆ ஆ ஆ குழந்தை கீதாக்காவை லிஸ்ட்ல சேர்த்துக்காம விட்டுட்டேன்....அவங்களையும் சேர்த்துத்தான்..ஹிஹிஹி
நீக்குகீதா
அகத்தியர் மச்சான்:)!!!!.. பின்ன எல்லோரும் அங்கிள் எண்டால்ல்.. மீ இனி நமித்தா ஆன்ரி ஸ்டைலுக்கு தாவிடப்போறேன்ன்:)) ஹா ஹா ஹா இப்போ என்ன பண்ணுவீங்க?:)..
நீக்குஹையோ மீ போஸ்ட் பற்றி மட்டும்தான் பேசுவேன்ன்ன்ன்:)).. அடிக்கடி என் ரெயின், ட்றக்கை விட்டு மாறப்பார்க்குதே ஹா ஹா ஹா:).
// ஹையோ மீ போஸ்ட் பற்றி மட்டும்தான் பேசுவேன்ன்ன்ன்:)). //
நீக்குஹா.. ஹா... ஹா...
haaaa haaa :))))))))))))
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஇந்தப் பாட்டு கேட்டதுண்டு...எங்க ஊர் கோயில்ல போடுவாங்களே!!!
பதிலளிநீக்குஹையோ ஸ்டார்ட்டிங்க் ம்யூஸிக் வேறு ஒரு பாட்டுல அப்படியே வருமே இருங்க கொஞ்சம் ஓசிச்சு சொல்லுறேன்....
கீதா
இன்னும் நினைவுக்கு வரவில்லையா கீதா?!!!
நீக்குஸ்ரீராம் ஸ்டார்ட்டிங்க் கேட்டதும் உடனே நான் கங்கை யமுனை இங்குதான் சங்கமம்னு பாட வந்துச்சு....தெரியலை ஆனா முதல் பிட் அப்ப்டியே வேற ஒரு பாட்டுல வரும்னு தோனிச்சு...
நீக்குகீதா
அப்படியா... எனக்கு அப்படித் தோன்றவில்லையே...
நீக்கும்ம்ம்ம் ஸ்ரீராம் ஆனா ஏதோ ஒரு பாட்டு அந்த ஃபர்ஸ்ட் பிட்...
நீக்குகங்கை யமுனை கேட்டேன் ஒரே ஒரு சின்ன பிட் வருது ஆனா இந்தப் பாட்டுல இருக்கற ஃபர்ஸ்ட் ஸ்டார்ட்டிங்க் ம்யூஸிக் அப்படியே ஏதோ ஒரு பாட்டை கொண்டு வருது ஆனா அது என்ன பாட்டுனு ஹையோ மண்டைல வரல...
கீதா
வெங்கலக்குரலோனின் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குஸ்ரீரங்கமும், சீர்காழியும் பிடிக்காதவர்கள் யார்.
சீர்காழி பாடும்போதே கண்ணில் அரங்கன் தரிசனம் தருவான்.
கண்ணபுரம் வந்தேன் பாடலும் மிக இனிமை.
வெள்ளிக்கிழமை ரங்கசேவை இனிமை.
மிக நன்றி ஸ்ரீராம்.
வாங்கம்மா... காலை வணக்கம். ஆமாம், அதுவும் மிகவும் நல்ல பாடல்.
நீக்குஅருமையான பாடல்...
பதிலளிநீக்குஆமாம். நன்றி DD.
நீக்குஅன்பினோர் அனைவருக்கும் வணக்கம்...
பதிலளிநீக்குவாழ்க நலம்!...
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்கு//வருஷ ஆரம்பத்தை பக்தியோடு ஆரம்பிப்போமா?!//
பதிலளிநீக்குலாமே.....:)))
//கீதா அக்கா, ரிஷபன் ஜி இந்தப் பதிவைப் பார்த்தால் அவர், அனுராதா பிரேம்குமார், முதலானவர்கள் அதிகமாக ரசிக்கக் கூடும்//
பதிலளிநீக்குஏன் இதுக்குள் துரை அண்ணன் அடக்கமில்லையோ...
>>> ஏன் இதுக்குள் துரை அண்ணன் அடக்கமில்லையோ.. <<<
நீக்குஅதானே...
இப்புடிக் கேள்வி கேக்கறதுக்கும் ஒரு ஒடம்பொறப்பு வேணுமில்லா!...
ஹா ஹா ஹா கலா அண்ணிக்காகக் கேட்டேனாக்கும்:))
நீக்குநான் மேலே சொல்லியுள்ளபடி ஸ்ரீரங்கம் வாசிகளைத் தெரிவு செய்தேன். ரசிப்பவர்களைத் தெரிவு செய்தால் நேற்றைய பதிவு போல எல்லோரையும் சொல்ல வேண்டும்! யாருக்குதான் இந்தப் பாடல் பிடிக்காது?!!
நீக்குயார் எழுதியதெனத் தெரியாது எனச் சொல்லிக்கொண்டே கண்ணதாசன் அங்கிளைப் போட்டிருக்கிறீங்க.. அவராக இருக்கும் எனும் டவுட்டோ?.. அவர் இப்படிப் பக்திப் பாடல்களுமா எழுதியிருக்கிறார்ர்?..
பதிலளிநீக்கு>>> அவர் இப்படிப் பக்திப் பாடல்களுமா எழுதியிருக்கிறார்ர்?...<<<
நீக்குஎன்ன இப்பிடிக் கேட்டுட்டீங்க!..
கவியரசரும் மெல்லிசை மன்னரும் சேர்ந்து வழங்கிய கிருஷ்ண கானம் கேட்டதில்லையா?..
உலகம் அழிந்தாலும் அழியாததாயிற்றே!..
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.. - TMS.,
குருவாயூருக்கு வாருங்கள்.. - P.சுசீலா.,
ஆயர்பாடி மாளிகையில்.. - SPB.,
கோகுலத்துப் பசுக்கள் எல்லாம்.. - S.ஜானகி.,
கோதையின் திருப்பாவை.. - K. வீரமணி.,
கோபியரே.. கோபியரே.. - LR.ஈஸ்வரி.,
என்ற பாடல்கள் எல்லாம் மிகவும் உன்னதமானவை...
கோதையின் திருப்பாவை - என்ற பாடலில்
மார்கழிப் பனி நாளில்
மங்கையர் இளந்தோளில்
கார்குழல் வடிவாகக்
கண்ணன் வந்தான் - என்று பக்தியின் உயர் நிலைக்கே சென்றிருப்பார் கவியரசர்..
கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் - என்ற பாடலில்
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்துக்கே பொருள் விளங்குது.. - என்று உருகியிருப்பார்...
குருவாயூருக்கு வாருங்கள்.. - என்ற பாடலுக்குள் ஆழ்ந்து விட்டால்
நம்முடைய மடியின் மீது க்ருஷ்ணபாலன் வந்து அமர்ந்து கொண்டு
ஒரு வாய் சோறு வாங்கிக் கொள்வது போலவேயிருக்கும்!..
கவியரசர் காட்டாத பொருளில்லை -
காதலிலிருந்து பக்தி வரைக்கும்!...
ஓ... ஆவ்வ்வ்வ்வ் துரை அண்ணன் நிங்கள் குறிப்பிட்ட அத்தனை பாடல்களும் மிக மிகப் பிடிச்ச பாடல்களே. யாருக்குத்தான் அவை பிடிக்காது.. ஓ அவை எல்லாம் க அங்கிளுடையதோ... எனக்கு தெரியாமலேயே ஒரு பாடல் பிடித்துவிட்டதெனில் அதை ஆராய்ந்தால்.. பெரும்பாலும் அது கண்ணதாசன் அங்கிளுடையதாக இருக்கும் ... உண்மைதானே அவர் சகலகலா வல்லவர் ஆச்சே...
நீக்குகண்ணதாசன் நிறைய எழுதி இறுக்கினார் என்பதை துரை செல்வராஹு ஸார் சொல்லி விட்டார். இந்தப் பாடல் கண்ணதாசனாக இருக்குமோ ங்கிற ஐயத்தில்தான் அவர் படம் வெளியிட்டேன்.
நீக்கு//எழுதி இறுக்கினார்// //செல்வராஹு//
நீக்குஹையோ... ஹையோ... "இருக்கிறார், செல்வராஜூ ஸார்" என்று திருத்தி படித்துக் கொள்ளவும்.
ஆவ் பூசாரே கண்ணதாசன் அங்கிள் நிறைய எழுதியிருக்கார்...
நீக்குஸ்ரீராம்....//ஹையோ... ஹையோ... "இருக்கிறார், செல்வராஜூ ஸார்" என்று திருத்தி படித்துக் கொள்ளவும்.//
இல்லேனா டமில்ல டி/டீ வாங்கினவங்ககிட்ட மாட்டிக்கனும்!!!!!!!!!!
கீதா
துரை சார், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் என் நினைவைத் தட்டி எழுப்பிவிட்டது. கல்லூரி ஹாஸ்டல் முதல் வருட பாட்டுப்போட்டி. மரங்கள் சூழ்ந்த இடத்தில் மேடை. எல்லோரும் பரவலா எதிரே அமர்ந்திருக்கிறார்கள் (சேர்லாம் இல்லை, தரைல, மரத்துக்குக் கீழே குழுவாக என்றெல்லாம்). நான் பாடுகிறேன். மரத்துக்குக் கீழே ஊளையிடறாங்க. பாதீல நிறுத்திட்டு, “நீங்கள்லாம் ஆம்பிளைனா மேடைல வந்து பாட வேண்டியதுதானே. ஏன் மறைவா நின்னுக்குட்டுக் கத்தறீங்க”னு சொன்னேன். சப்தமுல்லை. பாடலைத் தொடர்ந்து முடித்தேன். பிறகு மனதில் பயம். ஏகப்பட்ட சீனியர்கள். மறுநாள் மாலை ஒரு சீனியர் என்னிடம் வந்து, கல்லூரினா ஜாலியா ஊளையிடுவாங்க. நீங்க அப்படிப் பேசினது தவறுன்னார்.
நீக்குநேரமில்லாத்தால் சுருக்கா ஒன்றைச் சொல்லியிருக்கேன். இது 1980ல்
ஓ.. இது வேறயா!...
நீக்குஇருந்தாலும் நயம்!..
அகத்தியர் அங்கிள்!...
பதிலளிநீக்குநல்லவேளை...
அகத்தியர் தாத்தா.. என்று போடவில்லை!...
அப்படியே போட்டாலும் குற்றம் ஏதுமில்லை.. கொற்றவனே!...
குற்றம் ஏதுமில்லை!...
(ராத்திரி செம்பகப் பாண்டியன் கனவுல வந்தாரு.. அதான்!...)
சீர்காழியார் அவர்களை இருமுறை பார்த்திருக்கிறேன்...
பதிலளிநீக்குஅவருடைய ஆஸ்தானக் கவிஞர் உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்களது கைவண்ணமாக இருக்கலாம்... இன்னொரு கவிஞரும் இருக்கின்றார் - நெல்லை அருள்மணி என்று நினைக்கின்றேன்!...
உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் தெரியும். நெல்லை அருள்மணியா அல்லது வேறு பெயர் வருமா? யார் எழுதியிருந்தாலும் அருமையான பாடல்.
நீக்குசீர்காழி/டி எம் எஸ் அவர்களின் குரலுக்கு நான் சின்ன வயசிலிருந்தே அடிமை.. அது கோயில்களில் போட்டுப் போட்டே நமக்கு அக்குரல்களில் ஆசையை ஊட்டி விட்டார்கள் என நினைக்கிறேன்ன்.. ஆனா இந்தப் பாடல் .. கொஞ்சம் ஸ்லோவாக இருப்பதைப்போல ஒரு ஃபீலிங்...
பதிலளிநீக்கு>>> ஆனா இந்தப் பாடல் .. கொஞ்சம் ஸ்லோவாக இருப்பதைப்போல ஒரு ஃபீலிங்..<<<
நீக்குவயசாகியிருக்கோணும்...
இல்லேன்னா... வெயிட் கூடியிருக்கோணும்!...
கோயிலைச் சுத்திப் பாக்குற மாதிரி -
அறிவுரை சொல்ற மாதிரியான பாட்டு...
இதுக்கு
அரபுக் குதிரை தாண்டிக் குதிச்சு ஓடுற மாதிரி மியூஜிக் போட முடியுமா!...
அப்பிடிப் போட்டுருந்தா அப்பவே இந்தப் பாட்டு ஓடியேப் போயிருக்கும்!..
ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 துரை அண்ணன்.. இல்ல சீர்காழி அவர்களின் கணீர்க் குரலில் இதைவிட எத்தனையோ மனதுக்குப் பிடிச்ச பல பாடல்கள் இருக்கு என்பதைத்தான் கொஞ்சம் மாற்றி இப்படி எழுதினேன்ன்:))
நீக்கு//இதைவிட எத்தனையோ மனதுக்குப் பிடிச்ச பல பாடல்கள்//
நீக்குநான் அப்படி நினைக்கவில்லை அதிரா... இதனுடன் என்று மாற்றிச் சொல்லலாம்!
அருமையான பாடல்!! இது...சின்ன வயசுல கோயில்ல போட்டு கேட்டு கேட்டு அப்புறம் ரொம்ப நாளாச்சு ஸ்ரீராம் இப்ப நீங்க இங்க போட்டதும் மீண்டும் நினைஉ இதோ இப்ப கூட கேட்டுட்டுருக்கேன்...
நீக்குகீதா
காவிரிசூழ் பொழில் சோலைகள் நடுவினில்
பதிலளிநீக்குகருமணி துயில்கின்றது...
என்ற இந்தப் பாடலும்
கண்ணபுரம் செல்வேன்.. கவலையெல்லாம் மறப்பேன்..
என்ற பாடலும் எனக்கு மனப்பாடம்...
கீதை சொன்ன கண்ணன் வண்ணத்
தேரில் வருகிறான்!..
- என்ற பாடலின் இசை ரணுவ மிடுக்குடன் கம்பீரமாக இருக்கும்...
சீர்காழியாருடைய தனிப்பாடல்களுக்கு T.R. பாப்பா அவர்கள் தான் இசையமைப்பார்..
ஆனாலும் இந்த இசைத் தொகுப்பு
குன்னக்குடியார் அவர்களுடையது என்று நினைக்கிறேன்...
பக்திப் பாடலைக் கேட்கும்போதே - தோள் முறுக்கேறும் என்றால் அது -
வண்ணத் தேரில் வரும் கண்ணன் பாட்டுக்குத்தான்...
நாமளும் ஒரு வேல்கம்பைத் தூக்கிக்கிட்டுப் போய் நிக்கலாமா.. ந்னு இருக்கும்...
இன்றைய பதிவிலுள்ள ஸ்ரீரங்கத்துப் பாடல்
நல்ல சொல்லாடல்களுடன் கூடியது..
மாவிலைத் தோரண வாயில்கள் தாண்டிட...
மத்தளம் மேளங்கள் கொட்டி முழக்கிட...
ஆர் எங்கு சுற்றினும்..
ஆறு எங்கு சுற்றினும்..
அந்தரங்கம் எல்லாம் அந்த ரங்கன் அறிவான்!...
ஆகா...
அந்தரங்கம் எல்லாம் அந்த ரங்கன் அறிவான்..
- என்பதைப் புரிந்து கொண்டால் எந்த ஒரு மனிதனும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறு செய்யவே மாட்டான்!...
சீர்காழியாரின் - சிறப்பான இன்னொரு பாடல்
முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே!...
கேட்டுப் பாருங்கள்... சஹஸ்ராரத்தில் தேனூறும்..
1970 களில் சீர்காழியார், TMS, சூலமங்கலம் சகோதரிகள் ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது...
நல்ல தமிழ்ப் பாடல்களுடன் ஆன்மீகப் பயிர் வளர்த்த அவர்களை மனதார வணங்குவதில் தவறேதும் இருக்க முடியாது...
//சீர்காழியாரின் - சிறப்பான இன்னொரு பாடல்
நீக்குமுதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே!.//
இதைக் கேட்காதோர் உண்டோ...
//1970 களில் சீர்காழியார், TMS, சூலமங்கலம் சகோதரிகள் ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது...//
இப்பவும் என்னிடம் இவர்களின் பக்திப்பாடல் சிடி வைத்துக் கேட்கிறேன்ன்...
எனக்கு சூலமங்கலம் சகோதரிகளின் ஒரு பாடல் மிகவும் பிடிக்கும்.. பாடமாகி நானும் அப்பப்ப பாடுவதுண்டு என் தேன் குரலில்:))..
வேல் வந்து வினை தீர்க்க .. மயில் வந்து வழிகாட்ட.. கோவிலுக்குச் சென்றேனடி.. குமரன் கொலுவிருக்கக் கண்டே..னடி....
பால் கொண்டு நீராட்டிப் பழம் தந்து தாலாட்டிப் பூமாலை போட்டே.னடி ஒரு புகழ்மாலை சே..ர்த்தேனடி...
சீர்காழி பாடல்களில் நிறையவே பிடித்த பாடல்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் காலை வேளைகள் பெரும்பாலும் வானொலி மூலமாக இவர்கள் பாடலுடனேயே விடியும்.
நீக்குஸ்ரீரங்கத்தைப் பற்றிய அருமையான பாடலுக்கு
பதிலளிநீக்குகுடந்தை ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயிலின் படம் அருமை.. அழகு!..
ஹிஹிஹிஹிஹி....
நீக்குஅனைவருக்கும் வணக்கம் . வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.
நீக்குஎனக்கு மிகவும் பிடித்த பாட்டு.
பதிலளிநீக்குரேடியோசிட்டியில் அடிக்கடி காலை வைக்கும் பாடல்.
சிர்காழி கோவிந்தராஜன் பாடல்கள் சேகரிப்பு கேஸட்டில் நான் சேர்த்து வைத்து இருக்கும் பாடல்.
பகிர்வுக்கு மிகவும் நன்றி.
கேட்டு மகிழ்ந்தேன்.
நான் எஃப் எம் ரேடியோவெல்லாம் கேட்பதே இல்லை கோமதி அக்கா. பேசிப்பேசிக் கொல்வார்கள் என்பதால் பொறுமையே இருக்காது!!!
நீக்குகாலை 5மணியிலிருந்து 7மணிவரை பேசிக் கொல்வது இல்லை.
நீக்குந்னறாக இருக்கும். அத்தனை பாட்டும் நமக்கு மிகவும் பிடித்த பாடல்.
ஒரு முறை கேட்டுப்பாருங்கள்.
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்
பதிலளிநீக்குவாழ்வின் பெரும்பான்மை நாட்களை ஸ்ரீரங்கத்தில் செலவழித்தவர்களுக்கு இந்தப் பாடல் மற்றும் இத்தொகுப்புப் பாடல்கள் மனப்பாடம்!!
பதிலளிநீக்குஒரு வருடம் போல் தெற்குச் சித்திரை வீதி மாடி போர்ஷனில் தங்கியிருந்த காலத்தில், கோரதத்தில் பெருமாள் வீதியுலா வர, என் கணவர் டேப் ரிகார்டரில் ஓட விட்டிருந்த 'கீதை சொன்ன கண்ணன்' பாடல் கேட்டதை நினைத்தால் இப்போதும் மெய் சிலிர்க்கும்!
வாங்க மி கி மா. நீங்களும் சுரங்கம் வாசி என்பதை மறந்து விட்டேன் பாருங்கள். கீதை சொன்ன கண்ணன் பாடலும் அருமையான பாடல். இதற்கு ஜோடிப்படலாக சின்னஞ்சிறு பெண்போலே பாடலை என் மனதில் ஞாபகம் வைத்துக்கொள்வேன். என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். அது அப்படிதான்!
நீக்குசுரங்கமா அல்லது ஸ்ரீரங்கமா?
நீக்குச்சே... எனக்கு சந்திராஷ்டமம்!!!!! ஸ்ரீரங்கம்தான்!
நீக்குஸ்ரீரங்கம் ஒரு சுரங்கம்னும் சொல்லலாமே!! சுரங்கம்தான்! அருள், பக்தி புகழ் வற்றா சுரங்கம்!!
நீக்குகீதா
அழகும் சேர்க்க மறந்து போச்சு. அழகான கோயில் (இப்ப இருக்கறதை சொல்லலை...)
நீக்குகீதா
சீர்காழியின் கம்பீரக் குரலும் ராகத்தின் இனிமையும் மனதை ஈர்க்கிறது! மிக அருமை!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு//கீதா அக்கா, ரிஷபன் ஜி இந்தப் பதிவைப் பார்த்தால் அவர், அனுராதா பிரேம்குமார், முதலானவர்கள் அதிகமாக ரசிக்கக் கூடும்.//
பதிலளிநீக்குஎனக்கும் ஸ்ரீரங்க சம்பந்தம் உண்டு ஸ்ரீராம்.
ஆஹா!! ஸ்ரீராம் லிஸ்ட் நீளுது பாருங்க!!! நெல்லை வேற ஸ்ரீரங்கத்துவாசியாகலாமான்னு யோசிக்கிறார்...
நீக்குகீதா
ஆஹா... பானு அக்கா... கடைசியில் பார்த்தால் நான் மட்டும்தான் வெளியூர்க்காரனாக இருப்பேன் போலிருக்கே...
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்கமட்டுமா ஸ்ரீராம்? தேம்ஸ் காரங்க, என்னை விட்டுட்டீங்களே..!!!
நீக்குகீதா
எழுத்து கண்ணதாசனைத்தான் நினைவு படுத்தியது
பதிலளிநீக்குஆமாம், அதனால்தான் அவர் படம் போட்டிருக்கேன் ஜி எம் பி ஸார்.
நீக்குநடு இரவில் பாட்டு கேக்க முடில :) இப்போ கேட்டேன் அழகான குரல் ..சீர்காழி தாத்தாவுக்கு ..நான் சிவசிதம்பரம் அங்கிளோட அப்பா அகத்தியார்னு சொல்ல வந்து குயம்பிட்டேன் தூக்க கலக்கத்தில் :)))))))))
பதிலளிநீக்குஎனக்கு காவிரினு அராம்பிச்சா அகத்தியர் தாத்தாவின் பாட்டு நடந்தாய் வாழி காவேரி நினைவுக்கு வரும் ..
அழகான தெய்வீக சிரிப்பு புன்னகை அவருக்குண்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் சீர்காழி அவர்களின் பாடல்கள் எல்லாமே
// ..சீர்காழி தாத்தாவுக்கு ..நான் சிவசிதம்பரம் அங்கிளோட அப்பா அகத்தியார்னு சொல்ல வந்து குயம்பிட்டேன் தூக்க கலக்கத்தில் :)))))))))//
நீக்குஹா ஹா ஹா ஹா ஏஞ்சல்...
கீதா
ஹா... ஹா.. ஹா...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவெள்ளி பாடல் அருமை. சீர்காழியின் குரல் வளத்தில் நானும் கட்டுண்டவள். கம்பீரமான குரலில் அவருடைய பக்திப் பாடல்கள் எவருக்குத்தான் பிடிக்காது. அனைத்து பாடல்களும் புகழ் வாய்ந்தவைதான். திரைப்படங்களிலும் அவர் பாடல்கள் நன்றாக இருக்கும். "திருச்செந்தூரில், கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்"என்று டி எம் எஸ் உடன் இணைந்து பாடிய பாடலும், கர்ணன் படத்தில் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" பாடலும் மிகவும் அருமையாக இருக்கும். பட்டியலிட முடியாத வண்ணம் பக்தி ரசம் சொட்டும் பாடல்கள் இன்னும் நிறைய இருக்கிறது. பாடல் கேட்டு மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... சீர்காழி குரலில் நான் முன்பு T 60 கேசெட் இரண்டு வைத்திருந்தேன், சினிமா பாடல்கள் மட்டும்! எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான், ஆண்டுக்கு ஆண்டு போன்ற பாடல்கள் அதில் அடக்கம்!
நீக்குபுத்தாண்டின் முதல் வெள்ளி பக்திவெள்ளியானதில் சந்தோஷம்.
பதிலளிநீக்குஇந்தப் பாடலை இப்போதுதான் கேட்கிறேன். ஏனோ தொடவில்லை என்னை.
கோவிந்தராஜனின் பக்திப்பாடல்களில் எனக்குப் பிடித்தது, சிறுவயதில் யாருமில்லாத நேரத்தில் நான் பாடிப் பார்த்துக்கொண்டது இந்தப் பாடல்:
தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை..
பாவிகள்மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணியோசை..
(கண்ணதாசன்/ விஸ்வனாதன்-ராமமூர்த்தி/ படம்: மணியோசை (1963)
தான் பாடவிருக்கும் பாடல் மங்களச் சொற்களால் ஆக்கப்பட்டிருக்கிறதா என்று முதலில் படித்துப் பார்த்துக்கொள்வாராம் கோவிந்தராஜன். கச்சேரிகளில் பாட நேர்கையில், பாடலாசிரியர் பெயரை முதலில் குறிப்பிட்டு அவரைப் புகழ்ந்து இரண்டு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் குறிப்பிட்ட பாடலைப் பாட ஆரம்பிப்பாராம். பாடலாசிரியருக்குத் தன் கைப்படக் கடிதம் எழுதிப் பாராட்டுவாராம். பண்பாளர் கோவிந்தராஜன் என வாரியார் சுவாமிகளும் சொல்லியிருக்கிறார், ஒரு இடத்தில்.
வாங்க ஏகாந்தன் ஸார்... நீங்கள் சொல்லி இருக்கும் பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அவர் குணங்கள் அப்ற்றி நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்கள் புதிது, சுவாரஸ்யம்.
நீக்குஏகாந்தன் அண்ணா வாவ்!! சீர்காழி பற்றி அருமையான தகவல்...இதுவரை அறியாத தகவல்...என்ன பண்பாளர் இல்லையா?!! அட அவரும் சொல் முகூர்த்தம் பார்ப்பவரா சூப்பர்!! ஸ்ரீராம் நோட் பண்ணினீங்களா!!
நீக்குகீதா
கீதா அக்கா, ரிஷபன் ஜி இந்தப் பதிவைப் பார்த்தால் அவர், அனுராதா பிரேம்குமார், முதலானவர்கள் அதிகமாக ரசிக்கக் கூடும். ....
பதிலளிநீக்குஆஹா..
எனக்கும் இந்த பாடல் புதியதே...கேட்டு ரசிக்கிறேன் ...
நன்றி அனுராதா பிரேம்குமார்.
நீக்குசீர்காழியின் குரலில் அருமையான பாடல்
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குகண்ணதாசனின் ஆழமான அர்த்தபூர்வமான வரிகள் மிஸ்ஸிங். 'அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்' என்பதும் ஏதோ வாலியின் மடக்கிப் போட்ட வரி போல இருக்கிறது.
பதிலளிநீக்குவாலி எழுதிய பாடலாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? நன்றி ஜீவி ஸார்.
நீக்குஇல்லை. கண்ணதாசனுக்கும் வாலிக்கும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக.
நீக்கு//குடந்தை ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயிலின்... //
பதிலளிநீக்குஇப்பொழுதெல்லாம் சிட்டி யூனியன் பாங்க்கை வைத்துத் தான் குடந்தையையே அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?
பதிலளிநீக்குஉலகம் சமனிலை பெற வேண்டும் - அகத்தியர் படப் பாடல். அருமையான வரிகள் இவர் குரல் கணீர்னு இருக்கும்.
நடந்தாய் வாழி காவேரி - பாடல் இதே படத்தில் (இன்று நீங்கள் ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்கள் என்று சொல்லியிருப்பதால் இந்தப் பாடலும் பொருந்தும் இல்லையா ஸ்ரீராம்ஜி!)
அறுபடை வீடு கொண்ட திருமுருகா, ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாடலும் மிகவும் பிடிக்கும். தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீராம்ஜி உங்க ஊர்ப்பாட்டு மதுரை அசராளும் மீனாட்சி இப்படி நிறைய சொல்லலாம் இல்லையா.
அருமையான பாடல். பல வருடங்கள் கழித்து சீர்காழியின் குரல் கேட்டேன் ஸ்ரீராம்ஜி உங்கள் தயவால். தமிழ்நாட்டில் இருந்த நினைவுகள் பல வந்தன.
மிக்க நன்றி.
துளசிதரன்
சீர்காழியின் குரலில், "சின்னஞ்சிறு பெண் போலே!" பாட்டுக்கு ஈடு, இணை ஏதும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து! என்றாலும் இங்கே சீர்காழி என்பதால் உடனே வந்தேன். அதோடு ஶ்ரீரங்கம் வேறே! அநேகமா எல்லாப் பாடல்களும் கேட்டிருப்பதோடு, சீர்காழியின் கச்சேரிகளைப் பல முறை மதுரையில் இருந்தப்போ நேரிலேயே கேட்டிருக்கேன். சின்னஞ்சிறு கிளி போல பாடலில் சிவகங்கைக்குளத்தருகே என்பதை, பொற்றாமரைக் குளத்தருகே! என மாற்றிப் பாடுவார். அப்போது தான் ஒரு கச்சேரியில் சுபதினம் சினிமாப்பாடலை, "ஆண்டுக்கு ஆண்டு" எனத் துவங்கும் பாடலைச் சில வரிகள் மாற்றிப் பாடினார், சுபதினம் பற்றிய குமுதம் விமரிசனத்துக்குப் பிறகு!
பதிலளிநீக்கு