மனசோடு பேசும் மண்ணோட வாசம்..
துரை செல்வராஜூ
****************************** *********
1977..
வெதுவெதுப்பான கோடையின் ஒருநாள்...
சற்றே பெரிய கிராமம்..
இரண்டு பள்ளிக்கூடங்கள்.. ஒரு மருத்துவமனையுடன் பரபரப்பாக இருக்கின்றது..
அதன் பிரதான தார்ச்சாலையில்
அவ்வப்போது இப்படியும் அப்படியுமாக பேருந்துகள்...
பாரம் ஏற்றிய இரட்டை மாட்டு வண்டிகள் ஊர்ந்து கொண்டிருக்க -
சவாரிக்கான ஒற்றை மாட்டு வண்டிகள் கடகடத்துக் கொண்டிருந்தன..
தெற்கேயிருந்து சாம்பல் நிற பேருந்து வந்தது...
நிழல் விரித்திருந்த புளிய மரத்தடியில் நின்றது...
மாயவரம்... மாயவரம்!.. - நடத்துனர் சத்தம் போட்டார்..
பயணியர் மூட்டை முடிச்சுகளுடன் ஏறி இறங்கியதும் புறப்பட்டுச் சென்றது..
அந்தப் பேருந்திலிருந்து இறங்கிய அவர் -
கையில் இருந்த சிறிய தாளை எடுத்து ஒருதரம் சரி பார்த்துக் கொண்டார்...
அரசினர் உயர்நிலைப் பள்ளி...
வடகரை மேல்பாதி...
தஞ்சாவூர் மாவட்டம்..
மாணவ மாணவியருடைய சத்தத்தால்
அதிர்ந்து கொண்டிருந்தது சுற்றுப்புறம்...
ஆமாம்!... இந்தப் பள்ளிக்கூடந்தான்!...
பஸ்டாண்டுக்குப் பக்கத்தில....ன்னு சொன்னாங்களே!...
அதற்குள், அந்தப் பள்ளியின்
வேலிப் படலைக் கடந்து சென்ற பணியாளர் -
என்னாங்க... யாரப் பார்க்கணும்!?.. - என்றார்..
குமாரு... குமாரவேலு!...
யாரு.. பையனா?.. வாத்தியாரா?...
வாத்தியாரு தான்...
நாலஞ்சு மாசத்துக்கு முன்னால கல்யாணம் ஆச்சுங்களே!...
ஆகா!.. எஸ்கே.. சார்!.. அவங்களுக்கு நீங்க என்னா வேணும்?..
அவரு எங்க மாப்பிள்ளை!...
அந்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போன பணியாளர் -
ஐயா.. வாங்க.. வாங்க... உள்ள வாங்க!.. இந்தப் பலகையில உக்காருங்க...
நான் இதோ ஓடிப் போயி சாரைக் கூப்பிட்டு வர்றேன்...
உள்ளுக்குள் ஓடினார்...
வேணாம்... வேணாம்... பாடம் நடத்துறப்போ தொந்தரவு செய்யாதீங்க...
பெரியவர் ரங்கசாமி பதறினாலும் பயனின்றிப் போனது...
சில விநாடிகளில் குமாரவேல்... ஓட்டமும் நடையுமாக!..
மாமா!.. வாங்க... வாங்க!.. வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா!...
முத்து... ஓடிப் போய் காளிமார்க் ஒன்னு வாங்கிட்டு வா!...
மாப்ளே!.. அதெல்லாம் எதுக்கு?..
பானைத் தண்ணி இருந்தா ஒரு வாய் கொடுங்க!..
நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்...
நீங்க தான் ஒரு சுத்து எளைச்ச மாதிரி தெரியுது!..
அதற்குள் காளிமார்க் வந்து விட்டது...
சாவியைப் போட்டு மூடியைத் திறந்தான்..
ட்டுஸ்ஸ்... - என்றது பாட்டில்... பணிவுடன் நீட்டினான் குமாரவேல்!...
மாப்ளே... சாப்பாடு நேரத்துல.. இதெல்லாம் எதுக்கு?..
- என்றாலும், பாட்டிலை வாங்கிப் பருகினார் ரங்கசாமி...
அந்த அளவுக்கு வேர்வை... வேக்காளம்...
காலையில் புறப்பட்டு வேகாத வெயிலில்
முப்பது மைல் பயணித்து மாப்பிள்ளையையும் மகளையும்
காண வந்திருக்கின்றார் - கையில் பையுடன்!...
அதென்ன மாமா கையில பை!?..
பாருங்க மாப்ளே.. சொல்ல மறந்துட்டேன்...
இன்னைக்கு கொல்லையில கடலைக்காய் தட்டுனது...
மண் வாசத்தோட திங்கறதுன்னா அமுதாவுக்கு பிடிக்கும்...
அதான் பச்சைக் கடலைய எடுத்துக்கிட்டு ஓடியாந்தேன்!...
சிரித்துக் கொண்டான் குமாரவேல்..
சரி.. வாங்க மாமா.. வீட்டுக்குப் போகலாம்!...
அப்போ பள்ளிக்கூடம்!?...
மத்தியானத்துக்கு லீவு சொல்லிட்டேன்...
முத்து.. கேரியர்..ல சாப்பாடு இருக்கு!..
தலையை ஆட்டினான் முத்து..
சாப்பிட்டு முடித்து விடுகிறேன் - என்று அதற்கு அர்த்தம்...
ஸ்கூட்டரைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தான் குமாரவேல்..
மாப்ளே... ரெண்டு பக்கம் கால் போட்டு ஒக்கார்றது கஷ்டமாச்சே!...
நீங்க ஒரு பக்கமாவே உட்காருங்க மாமா!...
அவர் கையிலிருந்த கடலை மூட்டையை வாங்கி
முன்பக்கம் வைத்துக் கொண்டான்...
மெல்ல புறப்பட்ட ஸ்கூட்டர் -
புழுதிச் சாலையில் இரண்டு மைல் ஓடியது...
ஸ்கூட்டரின் சத்தத்தைக் கேட்டதுமே
வீட்டுக்கு வெளியே ஓடி வந்தாள் - அமுதா...
என்ன இது இந்த நேரத்துல!... - சந்தேகித்த அமுதா - பின்னிருக்கையில்
தகப்பனைக் கண்டதும் சந்தோஷத்துக்குள்ளானாள்...
அப்பா!... - தாய்ப் பசுவைக் கண்ட கன்றாக ஓடிவந்தாள்...
அம்மா... நல்லா இருக்கியாடா!... - தகப்பனின் கண்களில் நீர்துளிகள்...
தாய்க்குத் தாயாய் வளர்த்தெடுத்த தகப்பனை ஆரத்தழுவிக் கொண்டாள்...
ஏன்டா தங்கம்.. எதுக்குக் கலங்கறே!.. கண்ணத் தொடச்சுக்க!...
காமாச்சியயும் கூட்டிட்டு வந்திருக்கலாம்....ல..
சம்முவம் என்ன பண்றான்?...
இன்னைக்கு கொல்லையில கடலைக் காய் தட்றது...
காமாச்சி, சம்முவம் எல்லாரும் அங்க தான் இருக்காங்க...
ஒனக்குப் பிடிக்குமே..ன்னு கடலைக் காய் கொண்டுக்கிட்டு ஓடி வந்தேன்...
அமுதா.. என்னா சமையல்?... மீன் வாங்கிக்கிட்டு வரவா!...
மாப்ளே.. அதெல்லாம் வேணாம்.. விட்டாச்சு!...
கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடலாம்... இப்பத் தானே கலர் குடிச்சது!..
வீட்டுக்குள் நுழைந்து கட்டிலில் அமர்ந்தார் - ரங்கசாமி...
இன்னும் நாலு மைல் போனா உங்க சொந்த வீடு.. கடலாட்டம் கிடக்கு...
அதை விட்டுட்டு வாடகை வீட்டுக்குள்ள இருந்துக்கிட்டு என்ன கோலம்?..
சம்பந்தி அவுங்க தப்பா ஏதும் நெனைக்காம இருந்தா சரி...
மாமா... அவங்க தானே.... தனியா இருந்து பாருங்க..
அப்பதான் உலகம் தெரியும் ..ன்னு அனுப்பி வைச்சாங்க!...
தனிக் குடித்தனம் எல்லாம் நம்ம நோக்கமே இல்லை!...
எனக்குத் தெரியாதா.. உங்க மனசு... ஏதோ காலம் போற போக்கு!..
அப்பா... என்ன... சாப்பிடலாமா!..
ஏங்க.. நீங்களும் வாங்க... வேட்டிய மாத்திக்கிட்டு!...
என்னம்மா... இன்னைக்கு சமையல்?...
முருங்கக்காய் சாம்பார்.. உருளைக்கிழங்கு வறுவல்...
அப்பளம் பொரிச்சிருக்கேன்... சாப்பிடுறதுக்குள்ளே ரசம்...
கொஞ்சம் பொறும்மா... பஸ்...ல வந்தது கசகச..ன்னு இருக்கு...
நாலு வாளி இறச்சி தலைல ஊத்திக்கிட்டு வந்திடறேன்...
ரங்கசாமி புழக்கடைக்கு ஓடினார்...
கிணற்றில் கர....கர.... - என்று நீரிறைக்கும் சத்தம் கேட்டது...
அப்பனே.. முருகா!... - பூசை மாடத்து திருநீற்றைப் பூசிக் கொண்டு வந்தார்...
என்னங்க... அப்பா குளிச்சிட்டு வந்துட்டாங்க!...
நீங்களும் வாங்க.. கையக் கழுவிட்டு!...
கிழக்கு முகமாக உட்கார்ந்தார் ரங்கசாமி...
என் தங்கம்!... உங்க அம்மா இருந்த வரைக்கும்
நீ கறுத்துப் போயிடுவே....ன்னுட்டு
உன்னய அடுப்படி பக்கமே விட்டதில்லை...
இன்னைக்கு நீயா எல்லாம் கத்துக்கிட்டு...
தொண்டையை அடைத்தது ரங்கசாமிக்கு...
சிறிது நேரம் மௌனம்..
மாமா!.. - என்றபடி வந்தமர்ந்தான் மருமகன்..
தலை வாழையிலையில் மணக்க மணக்க சோறு, முருங்கைக்காய் சாம்பார் ...
கையில் அள்ளிய முதல் கவளத்தை இலையின் ஓரமாக வைத்து விட்டு
ஒரு வாய் சாப்பிட்ட ரங்கசாமி - அப்படியே பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனார்...
அப்படியே.. உங்க அம்மாவோட கைப்பக்குவம்!...
உங்க அம்மா வெக்கிற சாம்பாரும் இப்படித்தான் மணக்கும்!...
ரசித்து ருசித்து சாப்பிட்டு முடிக்கவும் -
வாசல் பக்கமாக பக்கத்து வீட்டு ஆத்தா!..
வேலு!.. யாரு விருந்தாளி?...
வாங்க ஆத்தா.. மாமா வந்திருக்காங்க!..
அப்படியா... சேதி தெரிஞ்சுதான வந்திருக்காங்க!...
திடுக்கிட்டார் ரங்கசாமி...
சேதியா.. என்னது?..
சட்டென எழுந்த அமுதா பின்கட்டுக்குள் ஓடிப் போனாள்...
குமாரவேல் முறுவலித்துக் கொண்டிருக்க
திண்ணையில் அமர்ந்திருந்த ஆத்தா சிரித்தாள்..
வேற என்ன ... நீங்க தாத்தா ஆயிட்டீங்க!...
தாத்தாவா... எங்கண்ணு... ராசாத்தீ!...
வயித்தில பால வார்த்தீங்களே தங்கமே!...
என்ன மாப்ளே சொல்லவேயில்லையே!...
நேத்து காலைல கொஞ்சம் சுணக்கமா இருந்தா...
சின்ன ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனேன்..
அங்க தான் சொன்னாங்க.. இப்படி..ன்னு..
உங்களுக்கு உடனே லட்டர் எழுதிப் போட்டேன்...
இன்னைக்கு அங்கே கிடைச்சிருக்கும்!...
அம்மாடி.. அமுதா.. இங்க வாம்மா!...
இதெல்லாம் கேக்கவும் பாக்கவும்
அவளுக்குக் கொடுத்து வெக்கலையே!...
மாப்ளே.. திருநீறு எடுத்துக்கிட்டு வாங்க!..
அருகில் வந்து நின்ற அமுதா மெல்ல விசும்பினாள்...
கட்டுக்கிழத்தி கண்ணு கலங்குறதாவது?...
இந்தா பக்கத்தில ஆத்தா இருக்காங்க...
பெத்த தாய் மாதிரி மாமியார் இருக்காங்க...
பெரியாயி, சின்னாயி எல்லாரும் இருக்காங்க!..
எதுக்கு வருத்தம்.. என்னாத்துக்கு கலக்கம்!..
ஆதரவாகப் பேசிய ரங்கசாமி -
மக்களப் பெத்து மனையப் பெத்து
மக்க வயித்துல வம்சத்தைப் பெத்து
நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழ வேணும்... நூறு வயசு வாழ வேணும்...
ஆயீ.. மகமாயீ!.. புள்ளைங்களக் காப்பாத்தடி.. தாயே!
மகளையும் மருமகனையும் மனதார வாழ்த்தி திருநீறு பூசினார்...
சரி... நீங்க பேசிக்கிட்டு இருங்க... நான் போயி ஆடு விரட்டிக்கிட்டு வரணும்!...
பக்கத்து வீட்டு ஆத்தா புறப்பட்டுப் போனாள்...
மாப்ளே.. மனசுக்கு சந்தோசமா இருக்கு...
உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லீட்டீங்களா!..
நான் போய் நேத்து சொன்னேன்...
சாயங்காலம் வந்து பார்த்துட்டுப் போனாங்க!..
அப்புறம் நான் வந்தது கூட நல்ல சேதி ஒன்னு சொல்லத்தான்...
ரெண்டு எடத்தில இருந்து காமாட்சிய பொண்ணு கேட்டு வந்தாங்க...
அதைக் கேட்டுப் பரவசமான அமுதா
தகப்பனின் அருகில் வந்து தோளில் சாய்ந்து கொண்டாள்..
ஒன்னு பினாங்கு வாசம்... அது வேணாம்.... ன்னுட்டேன்...
மத்தது என்னோட பழைய சிநேகிதம்... சொந்தமா ரைஸ் மில்லு...
நமக்கு சரியான எடந்தான்.. ஆனாலும் ஒரே வார்த்தை...
எங்க மருமகப்புள்ள தான் முன்னால நின்னு பேசணும்..ன்னு!..
ஏன் மாமா!... நான் எதுக்கு?.. நீங்க பெரியவங்க!...
பெரிய மாமா சின்ன மாமா எல்லாருமா இருந்து பேச வேண்டியது தானே!...
அதென்ன மாப்ளே அப்படி சொல்லிட்டீங்க !...
சபையில நீங்க இல்லாம ஒரு சேதி பேசலாமா!..
அது மரியாதை ஆகுமா?... ஊரு உலகம் என்ன சொல்லும்?...
நாளைக்கு கல்யாணம்...ன்னா நீங்க தானே மாலை எடுத்துக் கொடுக்கணும்!..
இருந்தாலும் இன்னும் ஒரு வருசம் போகட்டும்... ன்னு சொல்லிட்டேன்..
ஏம்ப்பா!... - அமுதா பதற்றமானாள்...
பதினேழு வயசு தானம்மா ஆகுது...
அதுவுமில்லாம காமாட்சிக்கு ஒத்த நாடி ஒடம்பு...
இன்னும் ஒருவருசம் போன எல்லாம் சரியாயிடும்...
சம்பந்தம் கேட்டவங்க என்ன சொன்னாங்க?...
அவந்தான் பழைய கூட்டாளி ஆச்சே...
கட்டுனா எம்மகனுக்கு உம்மவளைத்தான்
கட்டுவே...ன்னு தீர்மானமா சொல்லிட்டான்..
அப்படியே சண்முகத்துக்கும்
நல்ல இடமா பார்த்து முடிச்சிட வேண்டியது தான்!.. - என்றான் மருமகன்...
மாப்ளை சொல்றதும் மனசுக்குள்ள கிடக்கு...
ஆனாலும் முந்தாநாள் ஒரு சேதி சொன்னான் சம்முவம்!..
என்ன மாமா.... எதும் பிரச்னையா!..
பிரச்னை ஒன்னும் இல்லே...
அவனோட கூட்டாளிங்க ரெண்டு பேரு
அரேபியாவுக்குப் போயிருக்கானுங்க...
அதனால அவனும் போவணுமாம்!..
வேற யாரு.. நம்ம வாத்தியாரு மகன் பெரியவன்...
இன்னொருத்தன் தேங்காக் கடைக்காரன்!..
நான் கேட்டேன்... ஏம்பா... நமக்கு என்ன குறைச்சல்...
வயக்காடு, கொல்லைக்காடு.. ந்னு இருக்கிறத விட்டுப்போட்டு
ஒன்னுமில்லாத மொட்டை மண்ணுல என்ன செய்யப் போறீங்க... ந்னு...
இப்போ அந்த அரேபியாவுல
பெரிய பெரிய பங்களா கட்டுறாங்களாம்..
பாலம், ரோடு எல்லாம் போடறாங்களாம்..
அதுக்கெல்லாம் ஆளுங்க வேணுமாம்...
ஆளுங்களுக்கு நல்ல சம்பளமும் தர்றாங்களாம்!..
- அப்படின்னு சொன்னான்...
அதுக்கு நான் சொன்னேன்...
சம்முவம்... உன்னைய படிக்கச் சொன்னேன்..
பத்தாவதோட போதும்....ன்னு நீ நின்னுட்டே...
வயக்காட்டைத் தவிர வேறொன்னும் உனக்குத் தெரியாது...
தெரியாத ஊர்ல சித்தாளு வேலைக்குப் போவியாக்கும்!..
இன்னைக்கு இப்படித்தான் சொல்லுவானுங்க..
அரேபியாவுக்கு கூட்டிக்கிட்டுப் போயி
அங்கே சொல்லு மாத்தி சொல்லிட்டா எங்கே போவீங்க!..
அந்தப் பொட்டல்ல புல்லு புடுங்க விட்டா என்ன செய்வீங்க!...
இந்த மண்ணு நம்ம பாட்டன் முப்பாட்டனோடது...
காவேரித் தண்ணி மட்டும் இதுல இல்லே...
அவங்களோட வேர்வையும் ரத்தமும் கலந்து தான் கிடக்கு...
காடாக் கிடந்த பூமியை இப்படி கழனியா மாத்துனாங்களே
அவங்களுக்கு நாம துரோகம் செய்யலாமா!...
குடியானவன் கையி ரெண்டும் பிறத்தியார்கிட்ட வாங்குறதுக்கா?...
அவங் கையி ரெண்டும் ஊருக்கெல்லாம் கொடுக்குறதாச்சே!...
இந்த அருமை பெருமை எல்லாம் புரியாம -
ஏதோ ஒரு தேசத்துல போயி கஷ்டப்படுறது எதுக்கு?..
வெள்ளாமை.. ந்னா அப்படியும் இப்படியுந் தான் இருக்கும்...
அதுக்காக விட்டுட்டுப் போயிடறதா?..
பெத்த தாய் இல்லையா இந்தப் பூமி...
எல்லாரும் இப்படி சாகுபடிய விட்டுட்டுப் போனா
கடைசியில சந்தியில தான் நிக்கணும்!...
ஊரு கெடக்கட்டும் ஊரு!...
நம்ம வயத்துப் பாட்டுக்காவது
நாம கலப்பை புடிக்க வேணாமா.. மகனே!..
இப்படி வாய்க்காலும் வரப்பும் தோட்டமுந் துரவும்
எல்லாருக்கும் அமைஞ்சிடாது... சம்முவம்!...
வயக்காட்டைச் சுத்தி வர்ற காத்துல
பாட்டன் முப்பாட்டனோட மூச்சும் பேச்சும்
கலந்து இருக்குன்னு நெனைச்சுக்கங்க!.. அப்படி...ன்னேன்!..
அப்பவே சொல்லிட்டான்...
சரிப்பா... நா எங்கேயும் போகலை....
நாலு செவலப் பசு வாங்கிக் கொடுங்க...
பால் ஏவாரமும் சேர்த்து செஞ்சிடுவோம்...ன்னு!..
எம் மனசெல்லாம் குளுந்து போச்சு!...
பெருமிதமாகச் சொன்னார் ரங்கசாமி..
இருந்தாலும் நாலு இடத்துக்குப் போனா
நல்லது கெட்டது தெரிஞ்சுக்கலாம் தானே.. மாமா!...
- என்றான் மருமகன்..
இதுவரைக்கும் தெரிஞ்சுக்கிட்டவன் எல்லாம்
என்னா செஞ்சிருக்கான் இந்த பூமிக்கு?..
பாஷாண உரத்தைப் போட்டு பூமிய பாழாக்கி வெச்சிருக்கான்...
அதையும் நல்லது....ன்னு நம்பிக்கிட்டு இருக்குறான் சாகுபடிக்காரன்...
நாம இந்த அவுரி, கொளுஞ்சி, நரிப்பயிறு, வேப்பம்புண்ணாக்கு....ன்னு
ஒரமாப் போட்டு வெள்ளாமையக் காபந்து பண்ணிக்கிட்டு இருக்கோம்!...
இனிமே வரப் போற காலம் எப்படி இருக்குமோ...
பொளச்சிக் கிடந்தா பார்த்துக்கலாம்!...
சரிம்மா... நாங்கிளம்பறேன்..
அஞ்சு மணிக்கு சத்தி விலாஸ் வரும்...
அதுல போன சரியா இருக்கும்...
ஒருபொழுது இருந்துட்டுப் போகலாம்!..
சரி.. அங்கேயும் வேலை நடக்குது தானே!..
அமுதா... மாமாவுக்கு காப்பி போடு!...
நாளைக்கு காமாச்சியும் சம்முவமும் வருவாங்க...
பெரியவர் வீட்லயும் சின்னவன் வீட்டுலயும்
தென்னந்தோப்புல கல்லு போட்டு கம்பி வேலி கட்டுறாங்க...
ரெண்டு நாள் கழிச்சு வருவாங்க ஒன்னைப் பாக்குறதுக்கு...
காராம்பசுவிடம் கறந்த பால்.. மணக்கும் காப்பியுடன் வந்தாள் - மகள்...
ருசித்துப் பருகினார் ரங்கசாமி...
அமுதா!.. தைரியமா இருக்கணும் தெரியுதா!..
அப்பா... கெளம்பட்டுமா... தங்கம்!..
சரிங்க.. அப்பா!...
ஸ்கூட்டர் மெல்ல நகர்ந்து வேகமெடுத்தது...
புழுதிச் சாலையிலிருந்து புறப்பட்ட
மண்ணின் வாசம் மனசோடு கலந்து நின்றது...
ஃஃஃ
இனிய பொங்கல் உழவர் திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குகீதா
மகிழ்வான காலை வணக்கம் மற்றும் வாழ்த்துகள்! ஸ்ரீராம் துரை அண்ணா அக்காஸ், அண்ணாஸ், தம்பிஸ் நட்பூஸ் அனைவருக்கும்!
நீக்குகீதா
ஓ இன்று துரை அண்ணாவின் கதை!! வரேன் வரேன் அப்புறமா...
நீக்குகீதா
வாழ்த்துகளுக்கு நன்றி. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
தம்பீஸா? நான் ஒரு தம்பிதானே உண்டு. அக்காஸ் சரிதான். ஏஞ்சலின், அதிரா, கீசா, பா.வெ என்று பலர் வருவாங்க.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குநண்பர்கள் அனைவருக்கும் மன் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி. இனிய காலை வணக்கம்.வெங்கட் .
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
இன்றைக்கு தில்லில இருக்கீங்கன்னா, சர்க்கரைப் பொங்கல் பண்ணுவீங்களா வெங்கட்? இல்லைனா நண்பர்கள் வீட்டுக்கு உணவுக்குக் கூப்பிட்டிருக்காங்களா?
நீக்குஇனிய பொங்கல் தின வாழ்த்துகள்.
தலைநகரில் தான்.
நீக்குபொங்கல் ஒரு ஆளுக்காக செய்யப் போவது இல்லை.
உணவு நளபாகம் வழக்கம் போல....
நன்றி நெல்லைத் தமிழன்.
ஆஹா... இன்றைக்கு துரை செல்வராஜூ ஐயாவின் கதையா? மகிழ்ச்சி.... இதோ படிக்கிறேன்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களோடு கூடிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி. இனிய காலை வணக்கம். பானு அக்கா.
நீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
அருமையான கதை.
பதிலளிநீக்குமண் மணம் கமழும் கதை. பாராட்டுகள்....
அன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..,
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் மற்றும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஇன்னும் எனது கதையைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...
பதிலளிநீக்குபொங்கல் சமயத்தில் மண்வாசனையுடன் கூடிய கதை. மிகவும் ரசிக்கும்படியான உரையாடல். கதையைப் படிக்கும்போதே கண் முன் விரியும் காட்சிகள்.
பதிலளிநீக்குநான் ஓவியனாக இருந்தால் இந்தக் கதைக்கு மாருதி பாணி ஓவியம்தான். அதலும் மாருதி குடியானவத் தகப்பன் முகத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார்
நேற்றுதான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்... எதை எதை இந்த 60 வருட இடைவெளியில் மக்கள் இழந்துவிட்டார்கள் என்று. பெரும்பாலானவர்களுக்கு தங்கள் கோவில் என்பதே இல்லாதுபோய் விட்டது.
அன்பின் நெ.த.,
நீக்குதங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவயல் வயல் சார்ந்த இடங்கள் அருகி வரும் இந்த வேளையில் நம் உணவுக்கு ஆதாரமான எளிய மக்களைப் பற்றிய கதை எழுதியதற்கு முரை செல்வராஜு சாருக்கு பாராட்டுகள்.
அன்பின் நெ.த.,
நீக்குதங்களது பாராட்டுரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
மண்ணின் மணத்தோடு கூடிய கதை மனதை இதமாக்கியது ஜி.
பதிலளிநீக்கு//இதுவரைக்கும் தெரிஞ்சுக்கிட்டவன் எல்லாம் என்ன செஞ்சிருக்கான் இந்த பூமிக்கு ?//
நியாயமான கேள்வி
அன்பின் ஜி...
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...
நண்பர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இதயங்கனிந்த் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅன்பின் இனிய வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஅருமையான கதை...
பதிலளிநீக்குஇனிய தமிழ்த் திருநாள் வாழ்த்துகள்...
அன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
பொங்கல் திரு நாளுக்கான
பதிலளிநீக்குமண்ணின் பெருமை சொல்லும்
அற்புதமான கதை
பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் பொங்கல் திரு நாள்
நல்வாழ்த்துக்கள்
மண்ணின் வாசனையுடன் கதையின்நடை போட்டி போடுகிறது. கருத்தான,பாசமான கதை. அதுவும் பொங்கல் தினத்தில் அருமையான தேர்வு. துரைசெல்வராசு அவர்களுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். அன்புடன்
நீக்குஅம்மா அவர்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்கு//மண்ணின் வாசம் மனசோடு கலந்து நின்றது..//
மண்ணின் மனமும்,
கண்களில் ஆனந்த கண்ணீரும் நிறைந்து விட்டது.
தொடக்கம் முதல் நிறைவு வரை அருமையான கிராமிய மணம்.
தகப்பன், மகள் பாசம், மாமனார், மருமகன் மரியாதை, அன்பு
பக்கத்து வீட்டு அம்மவின் பாசம், நேசம் அவர்களின் வேலை என்று அருமையாக பின்னி கிடக்கிறது கதையில்
நிஜமாக கண் முன் பாத்திரங்களை கண்டு களித்தேன்.
சண்முகம் முடிவு சரியான முடிவு. சகோ துரைசெல்வாராஜூ அவர்களுக்கு
வாழ்த்துக்கள், அருமையான கதைக்கு.
ஸ்ரீராமுக்கு நன்றி.
தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
நீக்குவாழ்த்துரைக்கு நன்றி...
உழவர் திருநாளுக்கு ஏற்ற கதை.
பதிலளிநீக்குகதையை அனுப்பிய பிறகு கிடைத்த தேதியை வைத்து மாட்டுப் பொங்கலாக இருக்கும் என்று தான் நினைத்தேன்...
நீக்குபுது வருஷ நாட்காட்டியைப் பார்த்த பிறகே தெரிந்தது பொங்கல் நாள் என்று..
மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான கதை...
பதிலளிநீக்குஐயாவுக்கு வாழ்த்துக்கள்.
நட்புக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
அன்பின் குமார்..
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி..
நல்ல கதை,சம்பவக்கோர்வைகள் கண்ணிச்சங்கிலியாய்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தைத்திருநாள் சிறக்க,,/
அன்பின் விமலன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இன்றைய தினத்துக்கு ஏற்ற அருமையான கதை. மண்ணின் வாசத்தோடு மணக்கிறது. கதையும் இனிமை பொங்கலைப்போல!
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குபொங்கல் அன்று மண்ணின் மணத்தோடு அருமையான கதை. படிக்கும்பொழுதே காட்சிகள் மனதில் விரிகின்றன. எழுதிய துரை செல்வராஜ் அவர்களுக்கும், வெளியிட்ட எ .பி.க்கும் பாராட்டுகள். வாழ்க நலம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பு வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குபாராட்டுரைக்கு நன்றி..
மண்மணம் கமழும் இனிய கதை .மனதை தொட்ட கிராமிய நிகழ்வுகள் வாழ்த்துக்கள் துரை அண்ணா
பதிலளிநீக்கு.பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக் .இங்கு வருகை தரும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி. நன்றி..
நீக்குபொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..
//காராம்பசுவிடம் கறந்த பால்.. மணக்கும் காப்பியுடன்// - நான் நெல்லையின் கிராமத்துக்கு சில மாதங்களுக்கு முன்னால் போயிருந்தேன். அப்போ என் உறவினர், பால் சாப்படறயாடா? என்றார். என்ன என்னவோ சாப்பிட்டுவிட்டேன் 25 வருடங்களாக. அதனால் பால்லாம் சாப்பிடறதுல ஆர்வம் காட்டலை. ஆனாலும் அவர் 'கறந்த பால்' என்று சொல்லி இரண்டு டம்ளர்கள் கொடுத்தார். அவ்வளவு ருசியாக இருந்தது. சமீபத்தில் கும்பகோணத்தில் கார் டிரைவர் என்னை காபி கடைக்கு அழைத்துச் சென்று, இங்கு கறந்த பாலில் காபி, டீ தருவார்கள் என்றார். எனக்கு காபி, டீயில் ஆர்வமே கிடையாது. இருந்தாலும் சொல்றார் என்பதால் காபி சாப்பிட்டேன்.
பதிலளிநீக்குகறந்த பால் என்பது ஸ்பெஷல்தான். அவ்வளவு ருசியானதுதான்.
கறந்த பால் என்றாலே சிறப்பு தான்..
நீக்குஅதனால் தானே -
கறந்தபால் கன்னலொடு
நெய் கலந்தாற் போல..
என்று, மாணிக்கவாசகர் அருளினார்..
புத்தம்புது பொங்கலுக்கான இனிமை வாழ்த்துகள் அனைவருக்கும். அன்பு துரை செல்வராஜு
பதிலளிநீக்குமண்ணின் அருமை தெரிந்த மனிதருக்கு
மகனை நிறுத்த குரல் இருந்தது அவனும் கேட்டான்.
கதை எனினும் இனிமை நிறைந்தது. மகள் தந்தை பாசம்
மணிலாக் கொட்டையின் வாசம் இங்கே வந்தது.
மண் பாசம் ஓங்கட்டும். பாசம் எனும் நீர் இறைத்தால் பூமித்தாய்
நம்மை ஏமாற்ற மாட்டாள்.
அனைவரும் நலம் பெறு அன்பு வாழ்த்துகள்.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குதங்களது கருத்துரையில் மனம் நெகிழ்ந்தது..
வாழ்த்துரைக்கு நன்றி...
அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குதங்களது கருத்துரையில் மனம் நெகிழ்கின்றது...
எல்லாருக்கும் நலம் விளைய வேண்டும்..
அன்பின் பிரார்த்தனைகளுடன்
வாழ்த்துரைக்கு நன்றி..
மண்ணின் வாசம் மனதோடு பேசியது. மிக அருமை.
பதிலளிநீக்குஅனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்.
தங்கள் அன்வின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குமண் மனம் கமழும் கிராமத்துக் கதை அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குதுரை அண்ணனின் கதைக்கு உடனே வர முடியாமல் போனமைக்கு வருந்துகிறேன், மன்னிக்கவும்.
பதிலளிநீக்கு///தெற்கேயிருந்து சாம்பல் நிற பேருந்து வந்தது...
நிழல் விரித்திருந்த புளிய மரத்தடியில் நின்றது...//
ஆரம்பமே அழகாக இருக்கு... நிழல் விரித்திருந்த புளியமரம்... சூப்பரா இருக்கு வரிகள்..
ஓ மாயவரம் பஸ்சில ஏறினால், தஞ்சாவூர் போகலாமோ...
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்கு>>> ஓ.. மாயவரம் பஸ்சில ஏறினால், தஞ்சாவூர் போகலாமோ..<<<
ஆமாம்.. அது நீண்ட நெடுஞ்சாலை... தஞ்சாவூர் - மாயவரம் வழித்தடம்.. இந்த ஊர்களுக்கு நடுவில் தான் கும்பகோணம்.. மாயவரத்துக்கு அந்தப் பக்கமாக சீர்காழி, சிதம்பரம்!..
ஒருமுறை வந்து பாருங்கள்...
கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
//அதென்ன மாமா கையில பை!?..//
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மாப்பிள்ளைக்கு ஆர்வக்கோளாறு ஹா ஹா ஹா..
//கடலைக்காய் தட்டுனது...//
ஹா ஹா ஹா இப்பூடிச் சொல்வதில்லையே துரை அண்ணன்:) புதுசா இயற்றிச் சொல்றீங்களோ? கடலைக்கு ஏது காய்?:)). பச்சைக் கடலை:))
>>> மாப்பிள்ளைக்கு ஆர்வக்கோளாறு.. <<<
நீக்குபின்னே.. வயசான காலத்துல மாமனார் கையில் பையைத் தூக்கிக் கொண்டு வருகிறார் என்றால் என்ன.. ஏது .. என்று விசாரிக்க வேணாமா?... அது தானே பாசமுள்ள மாப்பிள்ளைக்கு லட்சணம்!...
>>> புதுசா இயற்றிச் சொல்றீங்களோ? ..<<<
எங்க ஊர் பக்கம் இப்படித்தானே சொல்கிறார்கள்...
அழகிய ஒரு குடும்பக் கதை, பெரும்பாலும் மகள் திருமணமாகிப் போயிட்டால், மாமியார் கொடுமை, கணவன் கொடுமை, பெண் வீட்டை மதிக்காமை.. இப்பூடித்தான் அதிகம் கதைகள் வரும், நீங்க மாறாக, அழகிய ஒரு மருமகனையும், மாப்பிள்ளை குடும்பத்தையும் காட்டி எழுதியிருப்பது மனதுக்கு மகிழ்வாக இருக்கு.. கொடுத்து வைத்த தந்தை.
பதிலளிநீக்குஅமுத சுரபியின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி..
நீக்குஇப்படியெல்லாம் வந்து அனைவரும் அன்பின் இனிய கருத்துரை சொல்வதற்கு பெரும் பேறு செய்திருக்க வேண்டும்..
மீண்டும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் துளசிதரன்... தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி...
நீக்குஅழகான கருத்துரைக்கு நன்றி.. நன்றி..
மிகவும் அருமையான கதை துரை செல்வராஜு ஐயா. வழக்கமான உங்கள் மண்ணின் கதை மட்டுமின்றி ஸாஃப்ட் சொற்களின் ஆட்சி!
பதிலளிநீக்குஎந்த ஆர்பாட்டமும் இல்லாமல் ஒரு அமைதியான நதிபோல தவழ்ந்து செல்லும் கதை.
துளசிதரன்
அன்பின் துளசிதரன்... தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி...
நீக்குஅழகான கருத்துரைக்கு நன்றி.. நன்றி..
துரை அண்ணா கரெக்ட்டா உங்க கதைய ஸ்ரீராம் பொங்கலன்னிக்கு போட்டுருக்கார்!!! சூப்பர். அன்றே வாசிக்க முடிந்தது ஆனா என்னாலதான் வந்து கருத்து போட முடியலை..கோயில் போய்ட்டு வந்ததும் உடம்பு மீண்டும் படுத்தல்...
பதிலளிநீக்குஅதுவும் கடலைக்கா சீசன் இப்ப...ஆரம்பமே சூப்பர். மாமனார் மருமகனைக் காண பள்ளிக்கூடத்துக்குப் போவதை வாசித்ததும்...ஹையோ துரை அண்ணாவின் கதையிலும் பிரச்சனை வருதா வீட்டுல மகளுக்கும் மாப்பிளைக்கும் ஏதாவது பிரச்சனை வந்துருச்சோ அதைத் தீர்க்கத்தான் மாமனார் முதலில் மாப்பிள்ளைய காண வருகிறாரோ அப்படினு தோணிடிச்சு. அப்புறம் மாப்பிள்ளை வருகை அவர் உபசாரம் எல்லாம் வாசித்ததும் ஹப்பாடா ஒன்றுமில்லை என்று சமாதானம் அடைந்தது.
மகள் மீது பாசமான தந்தனை...தந்தையின் மீது பாசமான மகள். மருமகனை அன்பும் மரியாதையும் கலந்து நடத்தும் பண்பாடு அதே போல மருமகனும் மாமனாரை நடத்தும் பண்பாடு என்று கலக்கல்.
அருமையான கதை. பளிங்கு போல்....அதாவது ஆற்றின் சுனையில் நீர் தெளிந்து அடியில் இருக்கும் கற்கள் கூட பளிங்கு போலத் தெரியுமே அது போன்று பளிச் அன்பும் பாசமும் கலந்த கதை.
அருமை அண்ணா..
கீதா
அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி...
நீக்குதாங்கள் இந்தப் பதிவினை வாசித்தீர்களோ இல்லையோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..
இனிய குடும்பம்.. கோயிலுக்கு இணை என்பார்கள்...
அன்பு, பண்பு இவையிரண்டும் தான் இந்தக் கதைக்கு அடிப்படை..
தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி...
நீக்குதாங்கள் இந்தப் பதிவினை வாசித்தீர்களோ இல்லையோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்..
இனிய குடும்பம்.. கோயிலுக்கு இணை என்பார்கள்...
அன்பு, பண்பு இவையிரண்டும் தான் இந்தக் கதைக்கு அடிப்படை..
தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..