வியாழன், 11 ஜூன், 2020

சொந்தமாக ஒரு ரயில்  - டீனேஜ் ஆசை

எனது டீனேஜ் பருவத்தில் ரகம் ரகமான நண்பர்கள் எனக்கு இருந்தனர். ​ 

'எல்லோருக்கும் அப்படித்தான்...'  என்று ஏதோ குரல் கேட்கிறது!  யாரது நெல்லையா?​

ஒரு நண்பன் அவனது வேலைக்கு அப்ளிகேஷன் டைப் செய்ய என்னை உபயோகித்துக் கொள்வான்.  நான் டைப்ரைட்டிங் கிளாஸ் சென்று பாஸ் செய்த காரணத்தால் அவன் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுவேன்.  

​அவன் அப்பா வீட்டில் ஒரு சிறு டைப்ரைட்டர் வைத்திருந்தார்.  அதில் அவனுக்கு டைப் அடித்துக் கொடுப்பேன்.  அழகான Facit டைப்ரைட்டர் அது.​

என் அப்பாவின் நண்பரும் ஒரு சிறு டைப்ரைட்டர் வைத்திருந்தார்.  அதில் டைப் அடித்தால் எழுத்துகளை சேர்த்து எழுதுவது போல (Cursive writing) டைப் ஆகும்.  அழகாக இருக்கும்.  



நான் பயின்று கொண்டிருந்த டைப்ரைட்டிங் கிளாஸில் திடீரென என் வகுப்புத் தோழன் ஒருவன் வந்து சேர்ந்தான்.  அவனுக்கு இதெல்லாம் தேவையே இல்லையே...  ஏன் வந்து சேர்கிறான் என்று எனக்கு ஐயம்.  அவன் தந்தை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி.  செ துட்டுப் பார்ட்டி.  ஆனால் என் வகுப்புத் தோழன் ​துட்டுப் பார்ட்டி ​இன்னொருவனும் இருந்தான்.  தாசில்தார் பையனான அவன் வகுப்பில் முன் பெஞ்சு மாணவன்.  அவனும் டைப்ரைட்டிங் கிளாஸ் வந்தான் என்றாலும் அவன் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது.  பள்ளி செல்லும்போதும் வரும்போதும், தட்டச்சுப் பயிற்சி வகுப்புக்கும் எங்களுடன் சைக்கிளில் குழுவில் அவனும் வருவான் என்றாலும் நேரே வீடு சென்று விடுவான்.  நாங்கள் அடிக்கும் வெட்டி அரட்டையில் கலந்துகொள்ள மாட்டான்.  அதனாலேயே இப்போது  நல்ல நிலையிலும் இருக்கிறான்!

ஆனால் இந்த வட்டாரப் போக்கு வரத்து அதிகாரி பையன்  என் பக்கத்து இருக்கையை எடுத்துக்கொண்டு மெஷினை 'டபடப' என்று சப்தப்படுத்துவான்.  டப்பு டுப்பென்று அடித்தால் இன்ஸ்டிரக்டர் அருகில் வந்து விடுவார்.   "தம்பி...   மெஷின் பத்திரம்....".  அவர் கவலை அவருக்கு.  அதை வைத்துதானே அவர் பிழைப்பே...  அதிகாலை வகுப்புகளுக்குப் போகும்போது அவர் ஒவ்வொரு மெஷினையும் துடைத்து, தடவி தயார்  செய்ய வேண்டுமே...


அவன் வந்து சேர்ந்ததற்கு காரணம் பின்னால் தெரிந்தது!  பள்ளி இறுதி வகுப்புப் படித்துக் கொண்டிருந்த ஒரு பெண்.  ஆனால் பாருங்கள் அவள் இவனை லட்சியமே செய்வதில்லை.  அவள் வரும் நேரம் என் பயிற்சி நேரமாக இருந்திருக்கிறது.  அவளுக்குப் பின்னே இருக்கும் மெஷினை எடுத்துக் கொண்டான் இவன்.

ஒரு விசேஷம் என்ன என்றால் இரண்டு இரண்டு வயது குறைவில் அவள் வீட்டில் ஒரே ஜாடையில் ஜெராக்ஸ் மெஷினில் எடுத்தது போல பெண்கள் இருப்பார்கள்.  அதில் இவன் ஆள் மாறாட்டத்தில் இங்கு வந்து இணைந்தது  ஒரு கதை என்றால்  அங்கு வகுப்பில் மூன்றாவதாக இன்னொரு பெண் இவனை நோட்டமிட ஆரம்பித்ததோடு, அதன் காரணமாகவே ஒரு அடிதடி, பஞ்சாயத்து நடந்ததுதான் சுவாரஸ்யம்.   எங்களுக்குள்ளான எல்லை பஞ்சாயத்தில் கூட்டம் காட்டும் சைக்கிள் குழுவில் என்னையும் அழைத்துப் போயிருந்தான்.  முடிந்தவரை தள்ளி நின்றிருந்தேன்!  ஒரு ஆபத்து என்றால் அப்படியே சைக்கிளைத் திருப்பிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடலாம் பாருங்கள்....

அந்த டைப்ரைட்டிங் தேறியது வேலையில் சேர்வதில் எனக்கு எந்த பயனும் தரவில்லை.  ஆனால் சேர்ந்த வேலையில் பல சமயங்களில் நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கிறது.  தமிழ் ஆங்கிலம் இரண்டுமே ஹையர் பாஸ்.  ஹிந்தி டைப்ரைட்டிங்கும் செல்ல ஆரம்பித்தபோது வந்தது வினை.  அது வேறு கதை!  அது ஆரம்பத்திலேயே நின்று போனது.   




பாரதியாருக்கு கணக்கு பிணக்கு போல எனக்கு வராதது சுருக்கெழுத்து!  எவ்வளவு முயன்றும் அந்த நுணுக்கமான வளைவுகள் எனக்கு வரவில்லை.  இன்ஸ்டிரக்டர் வெறுத்துப் போனதுதான் மிச்சம்.  கூரான பென்சில் எடுத்துக்குங்க...   இவ்வளவுதான் இழுக்கணும், கொஞ்சம் மாறினா எழுத்து மாறிடும் என்றெல்லாம் சொல்ல குழப்பம்தான் மிச்சம்!  

டைப்ரைட்டிங் கற்றுக்கொண்ட காலங்களில் ஏ பி சி டி யைத் தலைகீழாக அடிப்பது ஒரு பயிற்சி என்பதால் அதை தலைகீழாகச் சொல்வது எளிதாக வரும்.  அதை வைத்து வெட்டியாகக் கொஞ்ச காலம் அலட்டிக் கொண்டது நினைவுக்கு வருகிறது!  என் சகோதரி டைப்ரைட்டிங் வகுப்பு செல்லாமலேயே ஏ பி சி டியை தலை கீழாகச் சொல்லி என் பெருமை வேருக்கு வெந்நீர் ஊற்றினாள்!

கல்லூரிக் காலங்களில் வேலைக்குப் போவது தவிர ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெவ்வேறு சிறு ஆசைகள் இருக்கும்.  சிலபேர் நல்ல சைக்கிள் வாங்கி சுற்றவேண்டும் என்றோ, பைக் வாங்கி அலப்பறை கொடுக்கவேண்டும் என்றோ சின்னச்சின்ன ஆசைகள் இருக்கும்.    சிலர் நோட்டும் கையுமாக அலைவார்கள்.  எங்கெங்கு மரங்கள் தென்படுகிறதோ அங்கு அமர்ந்து அந்த நோட்டில் கவிதை எழுத ஆரம்பித்து விடுவார்கள்!



அதில் தப்பில்லை.  ஆனால் அதைப் படிக்கும் வாசகர்களாக நம்மை மாற்றும்போதுதான் கொஞ்சம் கஷ்டம்.  

"அதை யார் சொல்வது" என்று கீதா அக்காவின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது!  இப்போது நான் எழுதுவதை நீங்கள் படிக்கா விட்டால் எனக்குத் தெரியப் போவதில்லை.  ஆனால் அப்போது இரண்டு மூன்று நண்பர்களுக்கிடையே இருக்கும்போது அதைப் படித்தே ஆகவேண்டும்.  அபிப்ராயம் சொல்லியே ஆகவேண்டும்!  படிக்கும் காலத்தில் உங்கள் அனைவருக்குமே இல்லாத அனுபவங்களா?!!

என் நண்பன் புகழேந்தி என்று ஒருவன் இருந்தான்.  அவன் ஒவ்வொரு பாடநோட்டிலும் "பிடியிழந்த அரிவாள் போல பிறை நிலவு தோன்றுதம்மா" என்று எழுதி, ஒரு அரைச்சந்திரன் வரைந்து வைத்திருப்பான்.  நான் அந்த வரிகளில் கவர்ந்துபோய் "எங்கேடா ப/பிடிச்சே?" என்று கேட்கப்போக, என்னை முறைத்தவன் அதை அவனே எழுதியதாகச் சொன்னான்.  இதை முன்னரேயும் சொல்லி இருக்கிறேன்.  அப்போது கூகுள் எல்லாம் இல்லாததால் என்னால் தேடிப்பார்க்க முடியவில்லை!  நம்பவும் முடியவில்லை.

நான் கொஞ்சம் பாடுவேன்.  ஆனால் நண்பர்களிடம் பாடிக்காட்ட மாட்டேன்.  ஒருமுறை நான் "அந்தப் பக்கம் வாழ்ந்தது ரோமியோ" பாடலைப் பாடிக்கொண்டிருந்ததைக் கேட்ட என் நண்பன் "அப்படியே பாடறேடா" என்றதும் புளங்காகிதமாகிப் போனது நினைவுக்கு வருகிறது.  தேடிச்சென்று யாரையும் துன்புறுத்தியதில்லை!

என் நண்பர்கள் இருவர் இருந்தனர்.  ஒருவன் ராமமூர்த்தி.  இன்னொருவன் ப்ரகாஷுபாபு.  

இருவருக்குமே ஒரே மாதிரி லட்சியம் அல்லது ஆசை.    பேச்சாளர்கள்!  


அவர்களைக் கண்டாலே நாங்கள் ஓடி சந்தில் மறைந்துவிடுவோம்!  எங்களை முன் நிறுத்திக் கொண்டு எங்களைப் பார்வையாளர்ர்களாக்கிக் கொண்டு கையைக் காலை  ஆட்டி பேச ஆரம்பித்து விடுவார்கள்.  முன்னால் கற்பனையாக ஒரு மைக்.

இதில் ராமமூர்த்தி  ஆவேசப் பேச்சாளர்.  ஆரம்பிக்கும்போதே சீற்றத்துடன் ஆரம்பிப்பான்.  போகப்போக பேச்சில் வெறி ஏற்றிக்கொள்வான்.    பேச்சுப்போட்டியா ஏச்சுப்போட்டியா என்று சந்தேகிக்கும் அளவுக்கு சமயங்களில் ஏசுவான்!  அவன் முடிக்கும் நேரத்துக்காக நாங்கள் பயத்துடன் காத்துக் கொண்டிருப்போம்.

ப்ரகாஷுபாபு நேர் எதிர்..  சௌராஷ்டிரப் பையன்.  அமைதியான உருவம்.  பேச்சும்!  ஆனால் நகைச்சுவை கலந்து பேசுகிறேன் என்று எங்களைப் படுத்துவான்.  பெரும்பாலும் அவன் நகைச்சுவைகளுக்கு அவன்தான் சிரிப்பான்.  மாட்டிக்கொள்ளும் நாங்கள் உம்மென்றிருந்து எங்கள் மௌன எதிர்ப்பைத் தெரிவித்துத் தப்பிக்கப் பார்ப்போம். 

ஆனால் ஒன்று.   இருவருமே பள்ளியின் சார்பில் ஆங்காங்கே நடக்கும் பேச்சுப்போட்டிகளில் பங்குகொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.  ராமமூர்த்தி சில பரிசுகளும் வாங்கி இருக்கிறான்.  பள்ளி இலக்கிய விழாக்களில் பேசும்போது, பேச்சை முடித்து ஆவேசம் தணிந்து நெற்றியில் ஒரு முடிக்கற்றை புரள அவன் மேடையிலிருந்து இறங்கி வந்து எங்களுடன் பேச ஆரம்பிப்பான்.  "எப்படிப் பேசினேன்டா....?"

அது மாதிரி சந்தர்ப்பங்களில் நாங்கள் இருவரையுமே ஊக்கப்படுத்தத் தவறுவதில்லை. எங்களுக்கு பிரமிப்பாகவும் இருக்கும்.

இந்த வகையில் என்று சொல்லாமல் எனக்கும் ஒரு ஆசை இருந்தது.  

=======================================================================

இதோ வரப்போகிறது என்றார்கள்.  அடுத்த இரண்டு நாட்கள் சென்னை உட்பட தமிழகம் நனையும் என்றார்கள்.  வழக்கம்போலவே காணாமல் போனது புயலும் மழையும்...  மேற்கு வங்கம் மாட்டியது!

இங்கு வேண்டாம்...
இங்கில்லை...
இங்கும் வேண்டாம்..
எங்கு பொழியவேண்டும்
என்கிற முடிவு
தங்களிடம் இருப்பதாகவே
நம்பி
நகர்ந்துகொண்டிருக்கின்றன மேகங்கள்.



============================================================================

பொக்கிஷம் :

இது என்ன பாடல் காட்சி என்று சொல்ல முடிகிறதா?



=============================================================================

சொந்தமா சைக்கிள் வைத்துப் பார்த்திருப்பீர்கள்.... பைக் வைத்துப் பார்த்திருப்பீர்கள்... விதம் விதமாக கார் வைத்துப் பார்த்திருப்பீர்கள்.. சிலர் சொந்தமாக ஆட்டோ வைத்திருப்பார்கள்.. ஏன், சிலர் லாரி கூட வைத்திருப்பார்கள்.... இப்போதெல்லாம் சொந்த பிளேன் கூட வைத்திருக்கிறார்கள்!
ஆனால்,
சொந்தமாக ரயில் வைத்திருந்து பார்த்திருக்கீங்களா? பார்த்திருக்கீங்களா? பார்த்திருக்கீங்களா?!!!



===========================================================================

இந்த ஓவியத்தை வரைந்தது யாராயிருக்கும் என்று யூகிக்க முடிகிறதா? நா(ன்)ம் நகைச்சுவைத் துணுக்குகளை மட்டுமே படம் வரைந்து பார்த்திருந்த வாணி! அவர் வரைந்திருப்பது அஷோக் மேத்தாவை.


============================================================================


இதே மாதம்... ஆனால் 25 ஆம் தேதி... நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்...


=============================================================================

புத்தக விமர்சனம்
இரா. அரவிந்த்

இரு வீடு ஒரு வாசல்: வெற்றிகரமான மணவாழ்வின் எளிய சூத்திரம்: நாடக அறிமுகம்


"வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்என்பது அனுபவம் நிறைந்த பெரியோரின் வழக்கமான சொல்லாடல்எக்காலத்திலும் எல்லாரிடமும் எழும் விவாதம், "திருமணவாழ்வு வெற்றிகரமாக அமையும் ரகசியம் என்ன என்பதே.

பெற்றோர் தீர்மானிக்கும் திருமணங்களை விரும்பாமல் காதல் திருமணங்கள் பெருகிவரும் பொருளியல் சுதந்திரம் மிகுந்துள்ள  இன்றைய சமூகத்தில்தான் மணமுறிவுகளும் பெருகுவதோடு அது இருவகை திருமணங்களிலும் கணிசமாக நிகழ்வதுதான் விந்தையான வேதனை.

மகிழ்ச்சியான மணவாழ்வு நடத்துபவர்களாலும் எளிதில் விளக்கிவிட முடியாத இச்சிக்கலான சமூக அமைப்பின் மர்ம முடிச்சுகளை அநாயசமாக அவிழ்த்திருக்கிறது திரு பாம்பே கண்ணன் அவர்கள்  1980 களில் எழுதி இயற்றிய "இரு வீடு ஒரு வாசல்" நாடகம்.

"கடவுள் நிறைய மூளைய குடுத்திருக்கார். அதுதான் பிரச்சனையே." என கதாநாயகனை விவரிக்கும் கதாசிரியர் குரலான தரகர் ராஜுவின் வசனத்திற்கேற்ப நாயகன் ரமேஷ், "காதல் கல்யாணம் காமத்தை அடியொற்றியது, பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமோ முகம் தெரியாத எவளையோ தலையில் கட்டிவைப்பது. எனவே கல்யாணத்திற்கு முன் ஒத்திகை" என்னும் புது யுக்தி/உத்தியைச் சொல்கிறார்.

அதற்குச் சிறிதும் சளைக்காத பொருளியல் சுதந்திரம் மிக்க வங்கி அதிகாரி நாயகி மைதிலியோ, தம் பணிமாறுதலுக்கேற்ப மாப்பிள்ளை தம் பின் வரவேண்டும் என்று தொடங்கி ஏட்டிக்குப் போட்டியாகப் பல நிபந்தனைகளை வைக்க இவர்களுக்குத் திருமண வாழ்வின் சூட்சமங்களைப் புரியவைப்பதில் தரகர் ராஜு எந்த அளவு வெற்றி பெறுகிறார் என்பதே நகைச்சுவை நிறைந்த இந்நாடகத்தின் சுவாரசியம்.

பட்டப்படிப்பு முடித்தவர் தம் படிப்பிற்கு சம்பந்தமில்லாத பணியில் சேர்வது, கை நிறைய சம்பாதிக்கும் பெண்ணிற்கு ஏற்ற மாப்பிளையைத் தேடுவது போன்ற இன்றைய நடைமுறைச் சிக்கல்களைக் கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்கு முன்பே திரு பாம்பே கண்ணன் அவர்கள் எடுத்துக்காட்டிய நாடகம் இன்றைய முகத்திற்கும் பொருந்துவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

ஒரே மாதிரியான குணாதிசயங்களைக் கொண்டோரே சிறந்த தம்பதிகளாவர் என்று நம்பும் இளைஞர்கள் புரிந்துகொள்ளத் தவறுவதைச் சுட்டிக்காட்டுவது "உப்பு புளி காரம் மூணும் சேர்ந்தாதான் குடும்பம் என்கிற சாம்பார் மணக்கும். வெல்லமும் சக்கரையும் தித்திப்புதான். ரெண்டும் சேர்த்து பாயசம் வச்சா திகட்டிரும் என்ற தரகர் ராஜுவின் வசனம்.

"ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிட்டுதான் கல்யாணம் பண்ணிக்கணும்னா, அந்த ஆதாம் ஏவாளுக்கு அப்பறம் யாருமே கல்யாணம் பண்ணியிருக்க மாட்டாங்க" என்று தொடங்கி இறுதிக் காட்சியில்  வரும் வாழ்வின் எதார்த்தத்தைப் பதார்த்தமாக புரியவைக்கும் வசனங்கள் எல்லோருக்கும் எக்காலத்திலும் பாடமாக அமையும்

அனுபவப் பதிவுகள்.

"பொருட்களை வாங்கும் முன் மாதிரியைச் சோதிக்கும் உத்தி வாழ்வின் அனைத்துக் கட்டங்களுக்கும் பொருந்துமா"? "இரு வீடுகளுக்கு ஒரு வாசலை உருவாக்கும் திருமணத்தின் வெற்றிக்கான எளிய சூத்திரம் என்ன"? அறிய அனைவரும் இந்நாடகத்தை இணையம் மூலமே வாங்கி, கேட்டு, மகிழ கீழ் காணும் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.



திரு பாம்பே கண்ணன் அவர்கள்:    +91 9841153973.

நட்புடன்

இரா. அரவிந்த்.

175 கருத்துகள்:

  1. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்...

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலங்கள் யாவும் பெருகட்டும்.

      நீக்கு
    2. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
      கேடும் நினைக்கப் படும்
      (அதிகாரம்:அழுக்காறாமை குறள் எண்:169)

      பொழிப்பு (மு வரதராசன்): பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. டைப் ரைட்டிங் க்ளாஸ் அனுபவங்கள் நெஞ்சில் நிறைந்தன...

    பதிலளிநீக்கு
  4. என் தந்தை என்னை டைப்பிங் கற்றுக் கொள்ளுமாறு மிகவும் வற்புறுத்தினார்...

    என்னவோ எனக்கு அதில் அப்போது விருப்பம் இல்லாமல் போயிற்று...

    அவர் சொன்னதைக் கேட்காமல் விட்டோமே - என்று இப்போதும் நெஞ்சில் வருத்தமுண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது எல்லா வீட்டிலும் பதினைந்து வயதைத் தாண்டும்போது இந்த வகுப்பில் சேர்த்து விடுவது என்பது வழக்கமாகவே இருந்தது!

      நீக்கு
    2. என் வீட்டில் டைப் ரைட்டிங் ஷார்ட் ஹாண்ட் என் அண்ணனோடு நின்று கொண்டது. நான் எனக்காகவே சில ஷார்ட் ஹாண்ட் குறிப்புகள் தயார் செய்து, அதை பாலிடெக்னிக் வகுப்பில் நோட்ஸ் எடுத்துக்கொள்ளும்போது பயன் படுத்தினேன். உதாரணமாக : + the, obj = object, Pf = proof, h2o = water, இதுபோன்ற பல வார்த்தை சுருக்கங்கள் பயன் படுத்தி நோட்ஸ் எழுதுவேன்.

      நீக்கு
    3. இப்படி நமக்கு வசதியான சில சொந்த சாஹித்தியங்கள் நாம் எல்லோருமே இயற்றிக்கொள்வோம்...  இல்லையா கேஜிஜி?!!

      நீக்கு
    4. நான் தான் டைப்ரைட்டிங் கிளாஸுக்கே போகலையே!...

      நீக்கு
  5. படித்தால் மட்டும் போதுமா..
    படத்தின் பாடல் காட்சியா?....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ' நான் கவிஞனும் இல்லை ' பாடல் என்றுதான் நினைத்தேன்.

      நீக்கு
    2. படம் ஆலயமணி.  பாடல் பொன்னை  விரும்பும் பூமியிலே...!!!

      நீக்கு
    3. அதுதானே....

      பமபோ. வில்தான் மீசை இப்படியிருக்கும் என்று நினைத்தேன்...

      ஆலயமணியிலுமா!..

      நீக்கு
    4. நல்லவேளையாப் படத்தின் பெயரைச் சொல்லிட்டீங்க! எங்கே ஜிவாஜி ரசிகர்களைக் காணோமே?

      நீக்கு
    5. ஸ்ரீராம் சார்... "பொன்னை விரும்பும் பூமியிலே" பாடலில், நீங்கள் இணைத்த படம் எங்கு வருகிறது என்பதை, எனக்கு புலனத்தில் அனுப்பவும்... நன்றி...

      நீக்கு
    6. DD கேட்டதும் மறுபடி சென்று சோதித்ததில் துரை செல்வராஜு ஸார் சொல்லியிருப்பதும், கேஜிஜி சொல்லி இருப்பதும்தான் சரி என்று தெரிகிறது. இரண்டு பாடல்களையும் ஜனவரியில் போட்டோ எடுத்து நண்பர்கள் க்ரூப்பில் போட்டு கேட்டிருந்தேன். இந்த ஒரு போட்டோ கண்ணில் பட்டதும் எடுத்துப் போட்டு பாட்டை மாற்றி விட்டேன் போல..!

      நீக்கு
    7. சிவாஜி ரசிகர்களா!...

      அவர் உயிரைக் கொடித்து நடிச்சிருந்தாலும் மிகை நடிப்பு.. மிகை நடிப்பு..ந்னு சொல்லி...

      இயக்குனர்கள் கேட்டதை நடித்துக்கொடுத்து விட்டுப் போனார்...

      எல்லாரும் ஆஹா..ஓஹோ..ந்னு விழுந்து எந்திரிச்ச மலைச்சாமி பாத்திரம் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது..

      குன்றேறி நின்ற யானையை
      கோழி முட்டைக்குள் அடைத்த மாதிரி...

      நீக்கு
    8. யார் என்ன சொன்னாலும் சிவாஜியை ரசிப்பவர்கள் ரசித்துக்கொண்டுதான் இருப்போம்!!

      நீக்கு
    9. ஹாஹா, துரை, அவர் என்னத்துக்கு அப்படிக் கஷ்டப்பட்டுக்கொண்டு நடிக்கணுமாம்? :))))))))

      ஸ்ரீராம், ரசிங்க, ரசிங்க!

      நீக்கு
    10. நான் நினைச்சது ஜிவாஜி, பாலாஜியோடு சேர்ந்து பாடும், "பெண்ணொன்று கண்டேன்." பாடலாக இருக்குமோ என! சொன்னால் நீங்கல்லாம் ஜினிமாவே பார்க்கலை, ஜிவாஜி படமே பார்க்கலைனுட்டுச் சொல்றியானு கேட்பீங்களே! அதான் பேசாம இருந்துட்டேன். மீ த எஸ்கேப்பு! வரேன், நாளைக்கு!

      நீக்கு
    11. //ஸ்ரீராம், ரசிங்க, ரசிங்க!//

      ரசிக்காமல் இருக்க முடியவில்லைக்கா...    அப்படியே பழகி விட்டேன்!

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   நல்வரவு, வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. இரு வீடு ஒரு வாசல் ...

    புரியவில்லை... இதன் அடிப்படை விஷயத்தை உள் வாங்கிக் கொள்ள முடியவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://www.youtube.com/watch?v=nVCE0qC0FjU
      https://www.youtube.com/watch?v=UT8xQh0cA48
      இரு வீடு ஒரு வாசல் நாடகத்தின் part 1, 2 சுட்டிகள்
      பாம்பே கண்ணன், என்னுடைய & என் அண்ணனின் நாகப்பட்டினம் நண்பர்.
      நான் ஐந்தாம் வகுப்பு படித்த நாட்களில் அவர் வீட்டுக்குப் போய், கண்ணன் பத்திரிகைகள் எல்லாவற்றையும் வரிசையாகப் படித்துவிட்டு வருவேன்.
      இப்பொழுதும் தொடர்பில் இருந்துகொண்டிருக்கிறார்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பால்ய கால நினைவுகள் அருமை. அப்போது கவலைகள் ஏதுமற்ற, அன்று நடப்பதை மட்டும் ரசிக்கும் பருவம் இல்லையா? அது நிச்சயம் திரும்பவும் வராது.

    உங்களின் டைப்பிங் கால நினைவுகள் சுவாரஷ்யமாக இருக்கிறது. தங்கள் நண்பரின் டைப்பிங் ஆர்வமும், அதை நீங்கள் நகைச்சுவையாக விவரித்த தும் அருமை. அதை படிக்கும் போது "விதி" சினிமா நினைவுக்கு வந்தது. நல்ல நகைச்சுவையாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.

    மழைக் கவிதை நன்றாக உள்ளது. நமக்கென்று ஒரு விருப்பம் உள்ளது போல், மேகங்களுக்கும் தனிவிருப்பம் என்று இருக்குமல்லவா! அவற்றின் ரசனையை, அதன் மனதை அழகாக படம்பிடித்தாற்போல நல்ல கவிதை. ரசித்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா...  இன்று காலை முதல் இங்கும் மழை- லேசாக!

      நீக்கு
    2. இங்கே சூரியனார் விடுமுறை. முழு விடுமுறையா, 2 மணிக்கப்புறமா வருவாரா, தெரியலை. ஆனால் சூடு இல்லை. மெல்லிய காற்று வீசிக் கொண்டிருக்கிறது. மின் விசிறிக்குக் கீழே காற்று இதமாக வருகிறது.

      நீக்கு
    3. இங்கு இதோ...   இதுவரையிலும் சூரியன் வரவில்லை!

      நீக்கு
    4. 3 மணிக்கப்புறமாப் பேருக்குத் தலையைக் காட்டி இருக்கார். ஆனாலும் வெயில் சூடு எல்லாம் இல்லை.

      நீக்கு
    5. இங்கு அவர் முழுநாள் லீவு போட்டு விட்டார்.     மழையும் லீவுதான்!

      நீக்கு
  9. வியாழனின் காலை வணக்கம் அனைவருக்கும்.
    அருமையான டைப் ரைட்டிங்க் அனுபவங்கள்.

    பல காதல்கள் அங்கே நிகழ்வதைப்
    பார்த்திருக்கிறேன்:)
    25 வயதில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான பிறகு சிங்கம்,
    சொன்னதால் போனேன்.மூன்று மாதங்களுக்குள் அலுத்துவிட்டது.

    அவர் கம்பெனி வேலையைப் பார்த்துக் கொள்ள
    ஒரு இளைஞனை வைத்துக் கொண்டார்.
    வரவு செலவுக்கணக்கை மட்டும் நான் பார்த்துக் கொண்டேன்:)

    கல்லூரி வாழ்க்கை, பேச்சாளர் தோழர்கள் எல்லாமே இனிமைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்ன மேகங்கள் மயிலையில்
      பெய்து கொண்டிருக்கின்றன.
      யாரோ ஒருவரை ஏமாற்றீ யாரோ ஒருவருக்கு நன்மை செய்கிறது
      மழை.

      நீக்கு
    2. ஜூன் 1975 நன்றாக நினைவில் இருக்கிறது.
      நாங்கள் திருச்சியில் இருந்தோம்.
      வாழ்க்கையில் ஒன்றும் மாற்றம் இல்லை.

      நீக்கு
    3. இனிய வணக்கம் வல்லிம்மா...    வாங்க...
      ஓ...நீங்களும் டைப்பிங் க்ளாஸ் சென்றிருக்கிறீர்களா?  

      நீக்கு
    4. //நீங்கள் சொன்ன மேகங்கள் மயிலையில்
      பெய்து கொண்டிருக்கின்றன.
      யா//

      எங்கள் ஏரியாவில் தூறல் இருந்தது.

      நீக்கு
    5. // ஜூன் 1975 நன்றாக நினைவில் இருக்கிறது.
      நாங்கள் திருச்சியில் இருந்தோம். //

      அப்போதைய மாற்றங்கள் உங்களுக்குத் தெரியவில்லை அல்லது எங்களை பாதிக்கவில்லை!

      நீக்கு
    6. //உங்களுக்குத் தெரியவில்லை//

      * எங்களுக்குத் தெரியவில்லை என்றிருக்க வேண்டும். 

      எங்களுக்கு என்று அடித்தால் கூகுள் முதலில் உங்களுக்கு என்றுதான் ஆப்ஷன் தருகிறது!

      நீக்கு
    7. ஸ்ரீராம்... இப்போ ஒரு மணி நேரம், காற்றும் மழையும் செமையா இங்க இருந்தது. ஒரு பால்கனி, மழைத்தண்ணீர் நிறைய வந்தது. குளிரவும் ஆரம்பித்தது. மழையைக் கண்டால் மனதில் மகிழ்ச்சிதான்.

      நீக்கு
  10. சிவாஜியைப் பார்த்ததும் நான் கூட துரை நினைத்த போலத்தான் முடிவு செய்தேன்.
    பலே பாண்டியாவோ, இல்லை சாந்தி படமாகவோ,
    பந்த பாசமாகவோ இருக்க சந்தர்ப்பம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆலயமணி அம்மா...   பொன்னை விரும்பும் பூமியிகளே...

      நீக்கு
    2. விடை படித்தால் மட்டும் போதுமா அம்மா... மேலே சொல்லி இருப்பது தவறு.

      நீக்கு
  11. எனக்கும் இந்தக் கதையின் தலைப்பு
    பிடிபடவில்லை.
    பாலச்சந்தர் படம் ஒன்று நினைவுக்கு வந்தது.
    குமரேஷ், கணேஷ் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாலச்சந்தர் படம் : ஒரு வீடு; இருவாசல்.
      பாம்பே கண்ணன் நாடகம் : இரு வீடு; ஒரு வாசல்.

      நீக்கு
    2. ஆமாம்...   அந்தப் படத்துடன் குழப்பம் வரும்தான்!

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    தலைப்பு அருமை. முதலில் வந்த பகுதியில் அதற்கு பொருத்தமாக தங்கள் நினைவுகளில் ஏதும் சொல்லவில்லையே என படித்துக் கொண்டே வந்தேன். இறுதியில் உங்கள் ஆசை என சொல்லாமல் முடித்து விட்டீர்கள்.நானும் அதுதானோ என நினைத்து விட்டேன்.

    ஆனால் தலைப்பு வேறொருவரின் கனவு நனவானதை படித்தேன். தானே சொந்தமாக ரயில் எஞ்சின் வைத்துக்கொண்டு தண்டவாளங்களை அமைத்துக் கொண்டு காஃபி கடை வரை தன் சொந்த வாகனத்தில் பயணித்து இருக்கிறார். வியப்பான தகவல். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. தொடர்ந்து படித்து புரிந்து, கருத்திட்டமைக்கு நன்றி கமலா அக்கா.  ஆம்.  அது அதுதான் அந்த ஆசையோ என்று நினைக்க வைப்பதற்காகத் தரப்பட்டது.

      நீக்கு
  14. இன்றைக்கு கதம்பம் தொகுப்பு - சற்றே நீஈஈஈஈளம்! :) ஆனாலும் சுவையில் குறைவில்லை. இளமைக்கால நினைவுகள் நன்று. உங்கள் ஆசையைச் சொல்லவில்லையே....

    சொந்தமாக இரயில் இஞ்சின்! ஆஹா.....

    மற்ற விஷயங்களும் சிறப்பு.

    நண்பர் அரவிந்த் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி வெங்கட்ஜி !

      நீக்கு
    2. வாங்க வெங்கட்... 

      துரை செல்வராஜூ ஸாரும் கூட பதிவு இன்று சற்று நீளம் என்று சொல்லி இருந்தார்.  ஆனாலும் சுவையில் குறையில்லை என்று சொன்னது சந்தோஷம்.  எனது ஆசை?  அது அடுத்த வாரம் வெளியாகும்!!!

      நீக்கு
  15. //இதோ வரப்போகிறது என்றார்கள்.  அடுத்த இரண்டு நாட்கள் சென்னை உட்பட தமிழகம் நனையும் என்றார்கள்.  வழக்கம்போலவே காணாமல் போனது புயலும் மழையும்...// 
    சென்னையில் மழை என்று காட்டினார்களே!

    என்னுடைய தந்தை ஒரு டைப்பிஸ்ட் தான். என்னையும் தெரிந்த ஒருவர் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்தார். 4 ரூபாய் பீஸ். 10 நாள்தான். அதன் பின் போகவில்லை. ஒரு விரல் கோபுவாக உள்ள நான் தற்போது வருந்துகிறேன்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் ஹந்த்ரசேகர் ஸார்...

      ஆமாம்.  போன வாரமும் சென்னையில் மழை பெய்தது.  இன்றும் காலை தூறிக் கொண்டிருந்தது.  இப்போது மழையும் இல்லை, வெயிலும் இல்லை!!

      டைப்பிங் டியூட்டர் என்று ஒரு சாப்டவெர் இருக்கிறது.  அதை இன்ஸ்டால் செய்து இப்போதும் நாம் ஃபிங்கரிங் பழகலாம்.

      நீக்கு
    2. *சந்திரசேகர் ஸார் என்று படிக்கவும்.  

      நீக்கு
  16. சொந்தமா ரயில் வச்சிருந்த தகவல் புதுசு..

    ஒரு வீடு இரு வாசல்.. இந்த தலைப்பில் பாலச்சந்தர் படம் வந்துச்சே. எனக்கு பிடிக்கும் முன்னலாம் தூர்தர்ஷனில் அதிகமா இந்த படம் போடுவாங்க.

    பதிலளிநீக்கு
  17. சொந்தமாக ரயில் எஞ்சின் வித்தியாசமான ஆசை அவர் ரயில் மெக்கானிக்காக இருந்ததும் காரணமாக இருக்கலாம்.
    அரவிந்துக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. கல்லூரி காலத்தில் தட்டச்சுப் பயிலச் சென்ற அனுபவங்கள் நினைவில் வந்தன
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  19. நான் என் இரண்டு குழந்தைகளும் பள்ளி செல்ல ஆரம்பித்தபின் சென்றேன்.

    தமிழ், ஆங்கிலம் இரண்டும் ஒரே நேரத்தில் படித்தேன். தமிழில் பாஸ் செய்து விட்டேன், ஆங்கிலத்தில் இன்ஸ்டிரக்டர் பேச்சை கேட்டு இரண்டையும் லோயர், ஹையர் இரண்டையும் எழுதினேன் என் பலம் உணராமல் ஆங்கிலத்தில் கோட்டு.

    சின்ன பிள்ளைகளுடன் கற்றுக் கொண்டது மகிழ்ச்சியான தருணங்கள். காலை சார் கல்லூரி சென்றபின், குழந்தைகள் பள்ளி சென்ற பின் காலை புறப்பட்டு போவேன், 9.30 டைப்பிங்க் கிளாஸ், அப்புறம் தையல் வகுப்பு இரண்டும் முடித்து மதியம் வீட்டுக்கு வருவேன். குடை, புத்தகம் அடங்கிய கைபையுடன் வெளியே போகும் போது குழந்தைகள் எல்லாம் டீச்சர் டீச்சர் என்று அழைப்பார்கள், வணக்கம் சொல்வார்கள் வெட்கமாய் இருக்கும். ஆனால் மனம் மகிழ்ச்சி அடையும் அந்த குழந்தைகளின் அன்பை கண்டு.. எதிரில் ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி இருந்தது. ஆண்கள் பள்ளியில்தான் பரீட்சை எழுதினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யம் கோமதி அக்கா.்்்். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் வகுப்புகளுக்குப் போவதில் தயக்கம் இருக்கும். உங்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வம் மெச்சத் தக்கது.

      நீக்கு
  20. மழை கவிதையும் கொண்டல் மேகத்தின் படமும் நன்றாக இருக்கிறது.

    நான் கவிஞனும் இல்லை பாடல் என்று நினைத்தேன்.
    பொன்னை விரும்பு பூமியிலே சக்கர நாற்கலியில் அல்லவா வருவார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அக்கா... மாற்றி சொல்லியதை மாற்றிச் சொல்லி விட்டேன்!!!

      நீக்கு
  21. என் மகன் ஊர் சுற்றிப்பார்க்கும் போது ஒரு தங்கும் விடுதி ரயில் பெட்டி போல் இருப்பதில் தங்கி வந்தான் .

    சொந்தமாக ரயில் வாங்கியது போல்தான் மகிழ்ந்தான்.
    ஜினோ தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் தன் 50 வயதில் பாராட்டவேண்டும்.

    பொக்கிஷ பகிர்வுகள், (மும்பை)பாம்பே கண்ணன் அவர்ளின் நாடக, புத்தக விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறார் அரவிந்த் அவர்கள்.

    பதிலளிநீக்கு
  22. அந்தக் கால Remington, Halda, Facit typewriters கண்முன் நிழலாடுகின்றன. எந்த மெஷினையும் கற்றுக்கொள்ளும் ஆசை எப்போதும் உண்டு. இருந்தும் வேலைவாய்ப்பிற்காக டைப்பிங் கற்றுக்கொள் என என் அப்பா அனுப்பியபோது, நான் சோர்ந்துபோயிருந்தேன். ”டைப்பிஸ்ட்! - கடைசியில் இவ்வளவுதானா நான்..” என ஓடிக் களைக்கவைத்த சிந்தனை.

    இருந்தும் டைப் இன்ஸ்ட்டிடியூட் அனுபவம் சுவாரசியம். கற்றது, பிறகு வெவ்வேறு கட்டங்களில் உபயோகமாக இருந்தது. நல்லதுதான் நடந்திருக்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்... ரெமிங்டன் எனும் பெயர் இந்தப் பதிவை எழுதும்போது எனக்கு நினைவில் வராமல் இருந்தது. நாங்கள் அதை பழைய மாடலாகவும், facit ல் அடிப்பதைப் பெருமையாகவும் கருதினோம்!

      ஆம் டைப்பிங் கற்றது இப்போது வேறு வகையில் உதவுகிறது.

      நீக்கு
  23. டைப்ரைட்டர் காலத்து நண்பர்களின் நினைவுகள் இனிமை...

    இரா. அரவிந்த் அவர்களின் புகைப்படத்தை பார்த்தவுடனேயே "இரு வீடு ஒரு வாசல்" புரிகிறது...!

    என்ன பாடல் காட்சி...? இதோ காணொளி இணைப்பு : https://www.youtube.com/watch?v=o17JQ6TWP30

    watch @ 4.04 to 4.20

    விரல்கள் கூட நடிக்கும் இந்தப்பாடலை மறக்க முடியாதே... குருவிக்கூடு முடியையும்...!

    பொன்னை விரும்பும் பூமியிலே பாடல் முழுக்க Outdoor சூட்டிங்...!

    பதிலளிநீக்கு
  24. அனைவருக்கும் வணக்கம். காலை வந்து பாதி படிச்சேன்.ஏதோ புதிதான வைரஸ் ஊடுருவி இருப்பதாகச் சொல்கின்றனர். ஆனால் உடல் நிலை தேறி மருத்துவமனையிலிருந்து விடுபட்டுச் செல்பவர்களும் அதிகம் ஆகி இருப்பது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது. அனைத்துப் பிரச்னைகளில் இருந்தும் மக்களைக் காப்பாற்ற அம்பிகையைப் பிரார்த்திக்கிறேன். காலையில் கொஞ்சம் படித்ததோடு சரி! அப்புறமாத் தொடர முடியலை. வேலை! தட்டச்சுக் கற்ற அனுபவங்கள் அருமையா இருக்கு. ஸ்ரீராமுக்கு ஹிந்தி தெரியாதுனு நினைச்சிருந்தேன். அவர் என்னடான்னா ஹிந்தித் தட்டச்சுக்கெல்லாம் போயிருக்கார். நான் பள்ளிக்காலத்தில் இருந்தே ஹிந்தி கற்றிருந்தாலும், பள்ளியில் பத்தாம் வகுப்பில் இருந்தே தட்டச்சு கற்றிருந்தாலும் ஹிந்தித் தட்டச்சுப் போகவில்லை. என்னமோ தோணலை. ஆங்கிலச் சுருக்கெழுத்துத் தெரியும். தமிழ், ஆங்கிலத்தட்டச்சுத் தெரியும். மற்றவை எல்லாம் நான் படித்துக் கொண்டிருந்த D.Com., படிப்புக்கானவை. ஆனால் அது முழுமை பெறவில்லை. மதுரைக்கல்லூரிக்கு எதிரே இருந்தது மகளில் பாலிடெக்னிக். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் ஒவ்வொருவரும் நம்மைப்பொறுத்த அளவில் எச்சரிக்கையாக இருப்போம் கீதா அக்கா...

      நான் உங்கள் அளவு ஹிந்தி படிக்கவில்லை.  அலலது நீங்கள் வடக்குப் பக்கம் இருந்த காரணத்தால் ஹிந்தி சரளமாக வரும் என்று நினைக்கிறேன்.  நான் ஹிந்தி மத்யமா வரை மட்டுமே பாஸ் செய்தேன்.  ராஷ்டிரபாஷா போகும் சமயம் ஒரு சம்பவம் நடந்தது.  அதனால் அது அதோடு போயிற்று.  டைப்ரைட்டிங் ஆங்கிலம், தமிழ் பாஸ் செய்த கர்வத்தில் ஹிந்தி சேர முயற்சித்தேன்.  தொடரவில்லை.  ஆரம்பத்தோடேயே நின்று போனது.

      நீக்கு
  25. மழைக்கவிதை நன்றாக உள்ளது. இந்த வாரப் பதிவு கொஞ்சம் நீளம் என்றாலும் திரு அரவிந்த் அவர்களின் விமரிசனம் இடம் பெற்றுள்ளது என்பதால் நீளம் எனப் புரிந்தது. விமரிசனம் நன்றாக இருக்கிறது. அவர் கொடுத்த எண்ணில் தொடர்பு கொண்டால் தான் குறும்படத்தைப் பார்க்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...  ஹா...  ஹா...   திரு பாம்பே கண்ணனை நீங்களும் அறிவீர்கள்தானே?  சமீபத்தில் பொன்னியின் செல்வன் ஒலி வடிவில் கொடுத்தார்.  நம் அனன்யா மகாதேவன் கூட அதில் குரல் கொடுத்திருந்தார்.

      நீக்கு
    2. எனக்கு அவரைப் பரிச்சயம் இல்லை. ஆனால் பொன்னியின் செல்வன் பற்றியும் அனன்யா குரல் கொடுத்தது பற்றியும் அறிவேன்.

      நீக்கு
    3. என்னிடம் டிவிடி இருக்கிறது.  ஆனால்...

      நீக்கு
  26. மஹாராஜா ரஞ்சித் சிங்/பஞ்சாப்? அல்லது வேறே ஏதோ ராஜஸ்தான் ராஜாவா? நினைவில் இல்லை. சமையலறையிலிருந்து உணவு வர ஓர் குட்டி ரயிலை தண்டவாளங்கள் அமைத்துச் சமையலறையிலிருந்து சாப்பிடும் மேஜை வரை கொண்டுவரும்படியான ஏற்பாடு செய்திருப்பார்கள். எங்கேனு நினைவில் இல்லை! இஃகி,இஃகி,இஃகி! வடமாநிலத்து ராஜா தான் யாரோ! அது தான் ஸ்ரீராம் சொல்லி இருக்கார்னு முன்னே ஒருதரம் அவர் முகநூலில் போட்டப்போவும் நினைச்சேன். இன்னிக்கும் அதே நினைவு. முகநூலில் பார்த்தது நினைவில் வரலை. சாப்பாடு கொண்டு வரும் ரயில் என்று நினைச்சேன். :)))))) இது புதுசு!

    பதிலளிநீக்கு
  27. எமர்ஜென்சி சமயத்தில் நசிராபாதில் இருந்தோம். முதல் முதல் தகவல் தெரிந்ததும் வீட்டில் ரேடியோவைச் சின்னதாக வைத்து பிபிசி கேட்டோம். மற்றும் சில வெளிநாட்டு ரேடியோக்கள் மூலம் தகவல்கள் அறிந்து கொண்டோம். திக், திக், திக் தான். அப்போது பிளிட்ஸ் என்னும் வாராந்தரி ஆங்கிலப் பத்திரிகை வரும். ஆர்.கே. கராஞ்சியா என்பவரால் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போதுள்ள இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் எல்லாம் ஒண்ணுமே இல்லை என்று சொல்லும்படி பல தகவல்களைக் கொண்டு வந்தது. அவற்றில் பல உண்மையாகவும் இருந்தன. முக்கியமாய் சஞ்சய் காந்தி பற்றியவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மத்தியப் பிரதேசம் சிந்தியாவின் அரண்மனையில் உணவுக்கூடத்தில் சாப்பாட்டு மேசை, தண்டவாளம், உணவுப்பொருட்களை எல்லா விருந்தினர்களுக்கும் கொண்டுசெல்லும்படியான இரயில்.

      சமையலறையிலிருந்து இல்லை. சாப்பாட்டு மேசையிலேயே (நூறு விருந்தினர்கள் உட்கார்ந்து சாப்பிடும்படியான பெரிய மேசை

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம்ம் க்வாலியர் (Gwalior) அரண்மனையிலா? இல்லைனு நினைக்கிறேன். எதுக்கும் ரங்க்ஸ் எழுந்துண்டதும் கேட்கிறேன்.

      நீக்கு
    3. https://venkatnagaraj.blogspot.com/2011/08/blog-post_26.html?m=1

      மேலுள்ள பதிவில் இந்த இரயில் பற்றி எழுதி இருக்கிறேன். ரொம்பவே அழாகான இரயுல்.

      நீக்கு
    4. நன்றி வெங்கட்...   பதிவைச் சென்று படித்து வந்தேன்.  கீதா அக்கா அங்கும் விவரங்கள் கொடுத்திருக்கிறார்.

      நீக்கு
    5. கடைசியில் (ஆரம்பத்திலிருந்தே) அது சிந்தியா தானா? எப்படியோ மறந்துவிட்டது. இதுக்குத் தான் அதிகம் அரண்மனை வாசம் செய்யக் கூடாதுனு சொல்லுவாங்களோ? :))))))))))

      நீக்கு
    6. சிந்தாமல் சிதறாமல் அது சிந்தியாதான்!

      நீக்கு
  28. இன்றைய கதம்பம் ரசித்தேன். அதில் புதிய பகுதியை (புத்தக விமர்சனம் போல) சேர்க்காதீர்கள். ரொம்பவே அயர்ச்சியாக அமைந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லை.  புத்தக விமர்சனத்தை எங்கு சேர்ப்பது என்பதில் குழப்பம் வருகிறது.  அடுத்த வாரம் வெள்ளியில் சேர்க்கிறேன்.  அல்லது புத்தக விமர்சனம் இடம்பெறும் கதம்பத்தில் சில பகுதிகளைக் குறைக்கணும்!

      நீக்கு
  29. நான் எனக்கு நானே தட்டச்சு பழகிக்கொண்டேன்.
    இன்றுவரை வேகமாக செய்யத்தெரியும் ஆனால் முறையானது அல்ல...
    கதம்பம் பெரிதாக இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர் ஜி...   நிறைய பேர்கள் தானாகப் பழகிக்கொள்வதுதான் தட்டச்சு.  இரண்டு அல்லது மூன்று விரல்களால் வேகமாக அடிக்கிறார்கள்!

      நீக்கு
  30. டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டிடியூட் காதல்கள்.... பலவற்றை நினைக்கவைத்துவிட்டீர்கள்.

    நான் டைப்ரைட்டிங் ஹையர் படித்துக்கொண்டிருந்தபோது இன்ஸ்ட்டிடியூட்டில் திருத்துவதற்காக வந்திருந்த ஹையர் பேப்பர்களைத் திருத்தியிருக்கிறேன்.

    கற்றுக்கொண்டிருந்த சமயத்திலேயே அந்த instituteன் ஓனர், அங்கேயே வேலைக்குச் சேரச் சொன்னார். (எல்லாம் செய்தொழில் நேர்த்திதான்). ஐயோ என மனதில் அலாரம் அடிக்க, ஹையர் எழுதியதும் அந்த இடத்துக்கே போகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..   ஹா..  ஹா...   நீங்கள் எழுதிய கதை ஒன்றில் வரும் இல்லை?  பேப்பர் திருத்தும் வேலைகள் எங்களுக்கும் தரப்பட்டன.  நான் எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம்!

      நீக்கு
    2. நான் மதுரையில் படித்த தட்டச்சுப் பள்ளியின் உரிமையாளரின் அக்கா பையர் அங்கே படிக்க வந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவங்க இருவரும் சுருக்கெழுத்துக்கான கண்ணாடி அறையில் பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

      நீக்கு
    3. ஹையோ...   எங்கள் வகுப்புகளிலும் நிறைய காதல் கதைகள் இருந்தன!

      நீக்கு
  31. கவிதை அருமை. இங்கும் கரு மேகங்கள், காற்றினால் மெதுவாகச் செல்லும்போது, அட்டா... இங்கு பெய்யவில்லையா என இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  இங்கு காலை கொஞ்சம் தூறல் போட்டதே தவிர, அப்புறம் மழை இல்லை.  வெயிலும் இல்லை.  ஆனால் குளுமையாக இருக்கிறது!  ஏ ஸி போடவேண்டிய தேவை இல்லை!

      நீக்கு
    2. இங்கே மேகங்கள் மூடிக்கொண்டு அசையாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. இங்கும்தான்!  இதில் ஏன் கீதா அக்கா கர்ர்ர்ர்ர்ர்...?  நல்லாதானே இருக்கு கிளைமேட்?

      நீக்கு
  32. ஹை ஸ்பீட் டெஸ்டுக்கு பழகுகிறவர்களுக்கு சுலபமான ஆனால் அரதப் பழசான டைப்ரைட்டிங் மெஷினைக் கொடுத்து பயிற்சி ஆரம்பிப்பதும் நினைவுக்கு வந்தது.

    சுருக்கெழுத்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தாலும் வாய்ப்பு முழுமையாகவில்லை. கற்றுக்கொண்டிருந்தால் நிறைய உபயோகமாக ஆகியிருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதன்முதலாக தட்டச்சு பழக வருபவர்கள் மெஷினைப் பாடாய்ப்படுத்துவார்கள் என்பதால் பழைய மெஷினை அவர்களுக்குத் தருவார்கள்.  பழகியதும் புது மெஷின் கிடைக்கும் - நாம் சரியாக அடித்தால்!  ஆனால் புது மெஷினில் அடிக்கும்போது வெண்ணெயாக வழுக்கிச் செல்லும்.  ஸ்பீடும் கூடும்!

      நீக்கு
    2. ஹைஸ்பீட் (நிமிடத்துக்கு 60 வார்த்தைகள்) பழக, வேகமாக தட தடவென தட்டச்சு பழகணும். (ஹையர் முடித்த பிறகுதான்). ஆனாலும் ஜாக்கிரதை உணர்வால் கொஞ்சம் லூசாக உள்ள பழைய மெஷிந்தான் தருவார்கள்.

      நீக்கு
  33. /ஏன், சிலர் லாரி கூட வைத்திருப்பார்கள்.... இப்போதெல்லாம் சொந்த பிளேன் கூட வைத்திருக்கிறார்கள்// - என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. கே.ஆர். விஜயா (சுமதீ...எப்படீம்மா இருக்க..சீன் நினைவுக்கு வருதா?) சொந்தமாக ப்ளேன் ஒன்று அந்தக் காலத்திலேயே வைத்திருந்தாரே.

    மற்றவர்கள் இதனைக் குறிப்பிடலையே.... ஆச்சர்யமாக இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரோ நடிகை சொந்த விமானம் வைச்சிருந்தார்ங்கற வரை நினைவு வந்தது. யார்னு தெரியாததால் சொல்லலை. அது கே.ஆர். விஜயாவா?

      நீக்கு
    2. வைத்திருப்பார்கள் என்று நானே பொதுவாகச் சொல்லி இருப்பதால் யார் யார் என்னென்ன வைத்திருந்தார்கள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்!

      நீக்கு
    3. செந்தில் கவுண்டமணியிடம் அடிவாங்கும் ஜோக் ஞாபகம் வருது. ('அது ஏண்டா அந்தக் கேள்விய என்னைப் பாத்துக் கேட்டே!')

      நீக்கு
  34. முதல் முறையாக நானும் நெல்லை தமிழனும் ஒரு கருத்தில் உடன்படுகிறோம். புதிய பகுதியை இதில் சேர்க்க வேண்டாம், அல்லது வேறு எதையாவது குறைக்கப் பாருங்கள். அதிக நீளம் அயர்ச்சியைத் தருகிறது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைக்கு நான் தந்திருக்கும் பதிலைப் படித்திருப்பீர்கள் பானு அக்கா. 

      நீக்கு
    2. ஶ்ரீராம்... சனிக்கிழமை, பாசிடிவ் செய்திகளோடு விருந்தினர் பக்கம் போட்டுடுங்க (ஞாயிறில் போடுவது கஷ்டம்னு எனக்குத் தெரியும்). அனுப்பற ஆர்டர்ல கோத்துடுங்க. வியாழன், புதன், கேவாபோ, தி பதிவுல எதையும் நுழைக்காதீங்க. பாடல், சுனிமா சம்பந்தப்பட்டதென்றால் (சிவாஜிக்கு இரங்கல், டி எம் எஸ் நூறாண்டு வாழ்த்து போன்று) வெள்ளில கோர்த்துவிடுங்க. புதன் கேஜிஜி சார் ஏரியா, வியாழன் ஶ்ரீராம் - இரண்டு ரசனைப் பகுதிலயும் கை வைக்காதீங்க

      To be fair, today I don’t have mood to read anything here other than what you write. கேவாபோ கதைக்குப் பிறகு அங்கேயே

      நீக்கு
    3. இல்லை நெல்லை...   சனிக்கிழமைகளில் ரமா கட்டுரை வருகிறது.  எனவே சனிக்கிழமையில் சேர்ப்பிப்பது மறுபடியும் இதே புகார் வரும்.

      நீக்கு
    4. ஓ... அது பெர்மனண்ட் பகுதியா? அப்போ நிஜமாகவே ஞாயிறை விட்டால் இடம் இல்லைதான்.

      நீக்கு
  35. கவிதையில் பொருள் குற்றம் இருப்பது போல் தோன்றுகிறது.
    சிவாஜி இத்தனை கொண்டாக இருந்தது ஏதோ 'பா' சீரிஸ் படம் என்று நினைத்தேன். ஆலயமணி என்று நீங்கள் சொன்னது சரி என்று டி.டி. வேறு சான்றும் கொடுத்து விட்டார்.
    ரயில் சொந்தக்காரரைப் பற்றி படித்த நினைவு.
    பள்ளி நினைவுகள் சுவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேகங்களால் முடிவு செய்ய முடியாது என்று சொல்கிறீர்களா?  அதைத்தான் நானே குறிப்பிட்டிருக்கிறேன். ஆலயமணி என்கிற பதில் தவறு என்று மேலே நான் திருத்தம் கொடுத்திருக்கிறேன்.  பார்க்கவில்லையா?

      நீக்கு
  36. *குண்டாக என்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  37. எங்கோ வெளியில் போய் விட்டு வந்த என் அண்ணா, "இந்திரா காந்தி எம்ர்ஜென்சி டிக்ளேர் பண்ணியிருக்கா" என்ற கூறியதும், ரேடியோவை போட்டு நிச்சயம் செய்து கொண்டோம். அப்போது வெளியான துக்ளக் இதழ்களை பாருங்கள் சவ சவ என்று இருக்கும். "ரயில்கள் சரியான நேரத்தில் கிளம்பி, சரியான நேரத்தில் வருகின்றன" என்று சிலர் எமர்ஜென்சியை ஆதரித்தார்கள்.1975ஆம் ஆண்டு International Women's year.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எமெர்ஜென்சியை ஆதரித்தவர்கள் நிறைய பேர்கள் இருந்தார்கள்.  துக்ளக் இதழ்கள் சவசவ என்றிருக்காது.  மறைமுகமாக பல விஷயங்கள் சொன்னார் சோ.  சில சமயங்களில் வெறும் தாளாய் இருக்கும்!

      நீக்கு
    2. எமர்ஜென்சியை தமிழகம் மற்றும் சில தென் மாநிலங்கள் ஆதரித்தன. வடமாநிலம் வெகுண்டு எழுந்து அவருக்கு பாடம் கற்பித்தது

      நீக்கு
  38. எப்படியோ...

    படித்தால் மட்டும் போதுமா.. என்று சொன்னது சரியாய் இருந்து விட்டது...

    எத்தனை தடவை இந்தப் படத்தையும் ஆலய மணியையும் பார்த்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  39. என்னால் இப்போதுதான் தளத்திற்கு வர முடிந்தது.
    நான் ஜனவரி டு ஜனவரி ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் 11வது வரைப் பயின்றதால், கல்லூரி சேர 6 மாதங்கள் இடைவெளி இருந்தது. அந்த 6 மாதக் காலத்தில் டைப்பிங்க் ஹையர், சுறுக்கெழுத்து ஹை ஸ்பீட் வரை முதல் க்லாஸிலேயே பாஸ் செய்ததுதான் எனக்கு பிற்கால அரசு வேலைக்கு உதவியாக இருந்தது. ஸ்டெனோவாகச் சேர்ந்து, ஸெக்ரடரியாகி இப்போது ஸீனியர் பிரைவேட் ஸெக்ரடரியாக அடுத்த மாதம் ஓய்வு பெருகின்றேன். திரும்பிப் பார்ப்பதற்குள் வாழ்க்கை ஓடிப் போய் விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சபாஷ் ரமா ஸ்ரீநிவாசன்.  கமெண்ட்டுக்கு நன்றி.

      நீக்கு
  40. ஹை அரவிந்த்! உங்க விமர்சனம் இங்கும் வரத் தொடங்கியது மிக்க சந்தோஷம். விமர்சனம் மிக நன்றாக உள்ளது அரவிந்த்.

    அரவிந்த்தைப் பற்றிய ஒரு நல்ல செய்தி. பா ராகவன் அவர்கள் எழுதிய "தூணிலும் இருப்பான்" புத்தக விமர்சனத்தை அரவிந்த் முகநூலில் பகிர, தற்போது பா ராகவன் அவர்கள் விமர்சனம் கண்டு அரவிந்த்தை சந்திக்க விரும்புவதாக அவருக்குச் செய்தி அனுப்பியுள்ளார்.

    அரவிந்த் பாராட்டுகள், வாழ்த்துகள்! மேன்மேலும் உங்கள் வாசிப்பும் எழுத்தும் வள்ர வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, அப்படியா?   நல்ல செய்தி.  பாராட்டுகள் அரவிந்த். அரவிந்த் அநியாயத்துக்கு நிறைய புத்தகங்கள் படிப்பபவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் அதே அதே.புத்தகம் மட்டுமின்றி நிறைய செய்திகளும் நல்ல ஆர்ட்டிக்கிள் எல்லாமும் வாசிப்பார். எனக்கு ஷேர் செய்வார். சில சமயம் நாங்கள் அது பற்றி பேசியும் கொள்வோம். விஷயம் தெரிந்தவர் ஆனால் அது கொஞ்சமும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். தன்னடக்கம் மிக்கவர். மிகவும் சிறியவர் இளைஞர்!

      கீதா

      நீக்கு
  41. என்ன இது கருத்து போட்டுவிட்டு பப்ளிஷ் ஆனதும் பார்த்தால் கீழே கமென்ட் பாக்ஸ் கீழே லாட்டின் ரோமன் லெட்டரில் எழுத்துகள் html வருது....ஏதோ ஒரு கருத்தின் ஹெடிஎம் எல் போல் இருக்கு ஹிந்தி எல்லாம் வருது...
    பேயார் வந்துவிட்டாரா உள்ளே?!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, ஹையா, ஜாலியோ ஜாலி! நல்வரவு பேயாரே!

      நீக்கு
    2. எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே...

      நீக்கு
  42. ஸ்ரீராம் டைப்ரைட்டிங்க் அனுபவங்கள் நல்லாருக்கு. எனக்கும் என் டைப்ரைட்டிங்க் நினைவுகள். நான் படித்த இன்ஸ்டிட்யூட்டிலும் இந்த ஆண் பெண் சந்திப்புகள் எல்லாம் நடக்கும். நாம் தானே பேப்பர் கொண்டு செல்ல வேண்டும் ஸோ பசங்க தட்டி பரிமாற்றம் ந்டைபெறும்!! ரவுன்ட் வரும் சாருக்குத் தெரியாமல்.

    நானும் ஹையர் பாஸ். ஷார்ட் ஹேன்ட் படிக்க சேர்ந்த போது மத்திய அரசு வேலை கிடைத்திருக்கு என்று செய்தி வர. (டைப்பிங்க் டெஸ்ட் அதிலும் உண்டு!!) ஆர்டர் வர ஒரே ஒரு மாதம் ஆனதால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எல்லாமே மாறிப் போச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நாம்தான் பேப்பர் கொண்டுபோகவேண்டும்.  இன்ஸ்டிரெக்டர் பார்க்காதபோது வேறு சில விஷயங்கள் அடிப்பவர்களும் இருக்கிறார்கள்.  சமயங்களில் இன்ஸ்டிரெக்டர்  நம்மை வேறு மெஷினுக்கு மாற்றி விட்டு அவர் அதில் ஜாப் டைப்பிங் செய்வார்.  மதிய நேரங்களில் சென்றால் உள் ரூமில் அமர்ந்து நம் இஷ்டத்துக்கு ஏதாவது அடிக்கலாம்.  எப்போதுமே பேப்பர் திருத்த மாட்டார்கள்.  இன்ஸ்டிரெக்டர் லேசான உறக்கத்தில் இருப்பார்!

      நீக்கு
  43. ஆனால் சேர்ந்த வேலையில் பல சமயங்களில் நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கிறது. தமிழ் ஆங்கிலம் இரண்டுமே ஹையர் பாஸ். ஹிந்தி டைப்ரைட்டிங்கும் செல்ல ஆரம்பித்தபோது வந்தது வினை. அது வேறு கதை! //

    கதை வருமோ?!!!!! ஸ்ரீராம்?

    ஒரு விசேஷம் என்ன என்றால் இரண்டு இரண்டு வயது குறைவில் அவள் வீட்டில் ஒரே ஜாடையில் ஜெராக்ஸ் மெஷினில் எடுத்தது போல பெண்கள் இருப்பார்கள். அதில் இவன் ஆள் மாறாட்டத்தில் இங்கு வந்து இணைந்தது ஒரு கதை என்றால் அங்கு வகுப்பில் மூன்றாவதாக இன்னொரு பெண் இவனை நோட்டமிட ஆரம்பித்ததோடு, அதன் காரணமாகவே ஒரு அடிதடி, பஞ்சாயத்து நடந்ததுதான் சுவாரஸ்யம். //

    ஹா ஹா ஹா கதையே எழுதலாம் போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கதையை எல்லாம் இங்கே எழுத முடியாது கீதா!!!

      நீக்கு
  44. ஒரு ஆபத்து என்றால் அப்படியே சைக்கிளைத் திருப்பிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடலாம் பாருங்கள்....//

    ஹா ஹா ஹா ஹா...

    எங்கெங்கு மரங்கள் தென்படுகிறதோ அங்கு அமர்ந்து அந்த நோட்டில் கவிதை எழுத ஆரம்பித்து விடுவார்கள்!//

    ஹிஹிஹி நானும் ஒரு காலத்தில் இதில் அடக்கம்!! அப்புறம் நாடகம் எழுதுவது, அல்லது ஏற்கனவே உள்ள கதைகளை ஸ்டேஜ் ட்ராமாவிற்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதுவது இயக்குவது என்று எல்லாமே போதி மரத்தடியில்!!!!!! இப்ப சுத்தம்!!!

    அதுவும் பி ஏ படிக்கும் போது கல்லூரியில் முந்திரிக்காடு உண்டு. அதற்குள் புகுந்தால் தேடத்தான் வேண்டும். அக்காட்டுக்குள் நான் மட்டும் அல்லது எங்கள் குழு இருக்கும் இப்படி ஏதேனும் ட்ராமா ப்ராக்டிஸ் அது இது என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிட்டத்தட்ட எல்லோரும் இந்த வயதில் இப்படிதான் இலக்கின்றி எல்லாம் முயற்சிப்போம் போல!  அப்புறம் எது சரியாய் வருகிறதோ அதில் செட்டில் ஆகிவிடலாம்!

      நீக்கு
  45. "பிடியிழந்த அரிவாள் போல பிறை நிலவு தோன்றுதம்மா" //

    வாவ் அழகான கவிநய வரிகள் ஸ்ரீராம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யப்பா புகழேந்தி...  நீ எங்க இருக்கிறயோ...   இதோ பாரப்பா உன் வரிகளை ரசிக்கிறார் கீதா...!

      நீக்கு
  46. நான் கொஞ்சம் பாடுவேன். ஆனால் நண்பர்களிடம் பாடிக்காட்ட மாட்டேன். ஒருமுறை நான் "அந்தப் பக்கம் வாழ்ந்தது ரோமியோ" பாடலைப் பாடிக்கொண்டிருந்ததைக் கேட்ட என் நண்பன் "அப்படியே பாடறேடா" என்றதும் புளங்காகிதமாகிப் போனது நினைவுக்கு வருகிறது. தேடிச்சென்று யாரையும் துன்புறுத்தியதில்லை!//

    இப்பவும் நல்லாத்தான் பாடறீங்க!!(ஹப்பா யாருக்குப் போட்டுக் கொடுக்கணுமோ அவங்களுக்குப் போட்டுக் கொடுத்தாச்சு!!) ஏன்ன நீங்க ப்ராக்டீஸ் செய்யாம விட்டுட்டீங்க! அவ்வளவுதான்...

    எங்கள் பள்ளி, கல்லூரியிலும் கூட ஆவேசமாகப் பேசும் பெண்கள் இருந்தாங்க. உணர்ச்சி பொங்க பேசுவாங்க. மேசை அல்லது டயஸ் இருந்தா அதைத் தட்டிப் பேசுவாங்க!!!!!

    நானும் நிறைய பேச்சுப் போட்டிகளில் கட்டுரைப் போட்டிகளில், எக்ஸ்டெம்போ எல்லாம் கலந்து கொண்டிருக்கிறேன் மாவட்ட அளவில் கூட பரிசுகள் வாங்கியிருக்கிறேன் ஹிஹிஹி!!! விவேக் ஜோக் இங்கு!! இப்பவும் சர்ட்டிஃபிக்கேட்ஸ் என்னைப் பார்த்து இளிக்கிறது. இதைப் பற்றி ஒரு பதிவும் போட்ட நினைவு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா...  நண்பர்கள் நண்பர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.  மனம் வருந்தவும் செய்ய மாட்டார்கள்.  எனவே நீங்கள் பாராட்டுகிறீர்கள்.  பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டது இல்லை.  தொடைகள் ஆட ஆரம்பித்துவிடும்!

      நீக்கு
  47. கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம் ரசித்தேன்.

    ஏதோ ஒன்று அது என்னவென்று சொல்லத் தெரியலை...சின்னதா குறையுது போலத் தெரியுது..

    இதே போன்ற எண்ணம் தான் நேத்து எனக்கு மாலை வாக்கிங்க் போகும் போது கருப்பா மேகக் கூட்டம் இதோ பொழிந்திடுவேன்னு கூடியது நானும் என் ஹியரிங்க் எய்டை எடுத்து பத்திரப்படுத்தி வைக்க அந்தக் கூட்டம் ஓ இங்கில்லை நம்ம ட்யூட்டி வேற இடம்னு சொல்லி கொஞ்சம் கொஞ்சமாகக் கழண்டு கேரளப்பக்கம் நகர்ந்தது....

    கீதா

    பதிலளிநீக்கு
  48. ஆஹா இன்று போஸ்ட் பார்க்க “வியாழன் ஸ்குயார்” போல தெரிகிறதே, போன கிழமையையும் இங்கு இணைத்துவிட்டீங்கள் போலும்.

    அந்த நாள் நினைவுகள் என்றுமே இனியவைதான்.. சொல்லி முடியாதது.

    சோட்காண்ட் பெண்களுக்கே.. கூடப் பொருந்தும் என நான் நினைப்பதுண்டு, பொறுமை அதிகம் வேண்டும்..

    நகரும் மேகங்கள்.. கவிதை?.. அழகிய கற்பனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...   நல்வரவு.  போன வியாழன்தான் இந்த வ்வியாழனாகி இருக்கிறது.  இரண்டு வியாழன் ஒன்றாகவில்லை!!!

      நீக்கு
  49. என்னால் எதையும் ஊகிக்க முடியவில்லை, பொக்கிஷம் அழகு..

    காதலோ, அரேஞ் மரீச்சோ.... எதுவாயினும் அவரவர் தலைவிதிப்படியேதான் நடக்கும்.. இரண்டில் எது சிறந்தது, எது கூடாது எனச் சொல்லவே முடியாது, இரண்டிலும் நல்லா வாழ்வோரும் உண்டு, பொருந்தாமல் கெட்டு நொந்து போவோரும் உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில், திறமையில்!  நன்றி அதிரா.

      நீக்கு
  50. சரியாக பதினாறு வயசில் எஸ்.எஸ்.எல்.ஸி. முடிவதாக இருக்கும். எந்த அரசு வேலையிலிலும் சேர குறைந்தபட்சம் 18 வயது ஆகியிருக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் பாலைவனச் சோலையாக இருந்தது டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டியூட்கள் தாம்.

    பாலைவனச் சோலைகள்?.. எஸ். என் காலத்தில் கோ-எஜூகேஷன் அறவே கிடையாது. ஆனால் டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டியூட்களில் ரிப்பன் துணையில் மடித்துக் கட்டிய இரட்டை ஜடைகளுடன் பக்கத்து பக்கத்து ஸ்டூல்களில் அமர்ந்து கொண்டு தட்டச்சு செய்கிற த்ரில் இருந்தது. இரண்டு வெள்ளைத் தாள்களை சுருட்டிக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே டை.இன்ஸ்ட்டியூட்டுக்கு கிளம்பும் படபடப்பு மனசை ஆக்கிரமித்திருந்த காலம் அது. ASDF :LKJ பயிற்சி இன்றும் உதவியாக இருக்கும் அதிசயம்.

    குறைந்தபட்சம் லோயர் பரிட்சைக்கு ஆறுமாதம், ஹையர் பயிற்சிக்கு ஆறுமாதம் வேண்டும். ஆக ஹையர் பாஸ் பண்ண ஒரு வருடம் எப்படியும் ஆகும் என்றிருந்தது.
    பள்ளிகளுக்கு விடுமுறை காலத்தில் தட்டச்சுக்கான பொதுத்தேர்வு வரும். பரிட்சைக்கு டைப்ரைட்டர் சப்ளை பண்ண இன்ஸ்ட்டியூட்டிலேயே ஒரு தொகை கட்டினால் பரிட்சை ஹாலுக்கு நாம் பயிற்சி மேற்கொண்ட மெஷினே வந்து விடும். 'என் மெஷினே எனக்கு வேண்டும்' என்று நான் இதில் குறியாக இருந்தேன். வேறு புது மெஷின் என்றால் சில நடைமுறை தொந்தரவுகள் உண்டு தான். பரிட்சை ஹாலில் ஸ்பீடு டெஸ்ட் போது ஸ்டார்ட் என்று தேர்வு கண்காணிப்பாளர் சொன்னதும், அந்த ஹாலில் தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் உபயத்தில் அதே நொடியில் 'ஜோ..'வென்று பெரும் மழை பொழியத் தொடங்கிய மாதிரி டைப்பிங் ஓசை கேட்டது 60 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நினைவில் படிந்திருக்கிறது. டைப்ரைட்டிங் பழகிய காலத்தில் அரும்பு விட்ட உணர்வுகளை வைத்து ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்று ஆசை இன்று ஏற்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டீன் ஏஜில் தட்டச்சு வகுப்புப் போகும் ஆர்வத்தை புட்டுப்புட்டு வைத்து விட்டீர்கள்!  ஏதோ பெரிய காரியம் சாதிக்கிற மாதிரி இருக்கும் அங்கு சென்று வருவது...   அதுவும் சைக்கிளில் சென்று இறங்கி, ஹேண்டில்பாரிலிருந்து பேப்பரை உருவிக்கொண்டு நடக்கும் கெத்தே தனிதான்!!!

      நன்றி ஜீவி ஸார்.

      நீக்கு
  51. ரயில் வைத்திருக்கும் மனிதர் வியப்புதான்.

    என் நினைவு சரியாக இருந்தால்,....வெங்கட்ஜி எழுதியிருக்காரோ? அப்படி நினைவு.. அவரது பழைய பதிவுகளில் ஒன்று என்று நினைவு. அப்போது வலைத்தளம் வந்ததில்லை. அவர் தளம் அறிமுகம் ஆகி அப்போது பழையதைத் தோண்டிய போது கிடைத்து வாசித்தது.!!!

    ஓவியம் ரொம்ப நல்லாருக்கு.

    எமர்ஜென்சியின் போது நான் ஆறாப்பு! ஸோ ரொம்பத் தெரியாது. ஆனால் வீட்டில் ஏதோ பேச்க் கொண்டார்கள்.

    கீதா

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிர்ர்ர்....   கீதா...  மேலே வெங்கட் லிங்கே கொடுத்திருக்கிறார்.

      நீக்கு
    2. ஓ!! பார்த்துவிட்டேன் ஸ்ரீராம்!! ஹா ஹா கருத்துகள் எதுவும் பார்க்கலை....இருக்கும் நேரத்தில்,, நெட் வரும் நேரத்தில் எல்லாம் வாசிக்கும் ஸ்பீடில் ஓடிவிட்டேன் ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  52. கவிதை படித்தேன். 'மின் நிலா'வில் என்று கவிதை பக்கங்கள் ஆரம்பிக்கப் போகிறார்களோ, தெரியவில்லை!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேஜிஜி விரைவில் மேடைக்கு வருவார்!

      நீக்கு
    2. மின்நிலா 004 இதழில் ஜீவி சார் கவிதை இடம் பெறுகின்றது.

      நீக்கு
    3. கேட்டதும் கொடுப்பவரே .... ....

      நீக்கு
  53. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  54. திரு. இரா. அரவிந்த் எங்கள் பிளாக் வாசகர்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கும் ஆரம்ப பதிவு இது. அவரை வாழ்த்தி வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது...   இது...  இதைத்தான் நண்பர்களிடம் எதிர்பார்க்கிறோம்.  நண்பரை வரவேற்பதில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.

      நீக்கு
  55. //இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.//

    காரணம் வேறொன்றுமில்லை. பின்னூட்டைப் பிரசுரிக்கும் பொழுது இடைவெளி ஏகத்துக்கும் அதிகமாக ஏற்பட்டு எ.பி.க்கு அசெளகரியம் ஏற்படுகிற மாதிரி தோற்றம் கொடுத்ததால் நீக்கியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓஹோ! நான் என்னவோ ஏதோ என்று குழம்பிப் போயிட்டேன்!

      நீக்கு
  56. உங்கள் டைப்பிங்க் அனுபவம் ஸ்வாரஸ்யம். இதெல்லாம் அப்போதே தெரிந்திருந்தால் நானும் டைப்பிங்க கற்றிருந்திருக்கலாம்!.

    உங்கள் கல்லூரி அனுபவம் போல நண்பர்கள் இடையே ஆன அனுபவங்கள் நிறைய உண்டு. கல்லூரி நாட்கள் மிக மிக இனிமையான நாட்கள் ஸ்ரீராம்ஜி. பேச்சுப் போட்டி, மோனோ ஆக்டிங்க், ட்ராமா ரைடிங்க் என்று நிறைய அனுபவங்கள் நிழலாடின.

    உங்கள் கவிதை அம்சமாக இருக்கிறது. அங்கு மிகப் பொருத்தமாகிறதோ? இங்கு நல்ல மழை பெய்கிறது.

    ரயில் வைத்திருப்பவர் செய்தி வியப்பு. ஸ்வாரஸ்யம்.

    எமர்ஜென்சி பீரியட் நல்ல நினைவு இருக்கிறது.

    அரவிந்தின் விமர்சனம் அருமை. இங்கு புதிய அறிமுகம். அவரின் விமர்சனம் நிறைய வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  57. ரசிக்க தக்க பல அனுபவங்கள், நிகழ்வுகள், குறியீடுகள். அருமை

    பதிலளிநீக்கு
  58. வணக்கம்.
    வாழ்த்தி வரவேற்க்கும் அணைவருக்கும் மிக்க நன்றி.
    இந்த நூல் ஆடியோ ஃபார்மேட்டில் கூகிள் டிரைவில் சுட்டியாக தரப்படுகிறது, காரில் பயனம் செய்யும்போது குடும்பத்துடன் ரசிக்கலாம்.
    நிச்சயம் நல்ல நூல்களை அறிமுகம் செய்வோம்.
    டைப்ரைட்டிங் அணுபவங்கள் அருமை. எனக்கு அணுபவம் இல்லை. நேரடியாக கணிணியில் அமர்ந்த தலைமுறை நாங்கள்.
    இருப்பினூம் சமீபத்தில் நான் பார்த்த விதி பட டைப் ரைட்டிங் கிளாஸ் காதல் சீன்ஸ் நினைவில் வந்தன.
    தநி ரயில் சூப்பர், வெங்கட் சாரின் மத்தியப் பிரதேசம் நூலில் படித்து ரசித்தோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!