வெள்ளி, 5 ஜூன், 2020

வெள்ளி வீடியோ : தோளிலே மாலையாய் ஆடும் ராஜா ஆரீரோ ... + சிறப்புச் சிறுகதை 

1980 இல் வெளிவந்த இந்தத் திரைப்படம்,  ஹிட்ச்காக் திரைப்படமான சைக்கோவை பெருமளவு தழுவி எடுக்கப் பட்டிருந்தாலும், 1978 இல் வெளியான ராஜேந்திர குமாரின் நாவலான 'இதுவும் விடுதலைதான்' நாவலுக்குதான் க்ரெடிட் கொடுத்திருந்தார் பாலு மஹேந்திரா.  


இதைத்தவிர 1963 இல் வெளியான The Collector என்னும் John Fowels எழுதிய நாவலிலிருந்தும் எடுத்தாளப்பட்டிருந்தது என்கிறார்கள்.  சிகப்பு ரோஜாக்களும், 100 வது நாளும் இதே போன்ற கதை அமைப்பு கொண்ட படங்கள்.





​அவரின் மூன்றாவது தமிழ்த் திரைப்படம்.  மைக் மோகன் அப்போது கோகிலா மோகன் என்று அறியப்பட்டார்.  அவர் ஒரு சிறு பாத்திரத்தில் இந்தப் படத்தில்தான் அறிமுகமானார்.​  பிரதாப் போத்தனும் மஹாலக்ஷ்மி மேனனும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.  

மஹாலக்ஷ்மி மேனன்?  



அதுதான் ஷோபாவின் இயற்பெயர்!  பற்பல விருதுகளை மிக இளம் வயதிலேயே பெற்ற மிகத் திறமையான நடிகை, மிக இளம் வயதிலேயே தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டது ஒரு சோகம்.  அதன் மர்மம் இன்று வரை தொடர்வது இன்னும் சோகம்.  இதை வைத்து அப்புறம் சில திரைப்படங்கள் யூகங்களாக வந்தன. (லேகாயுண்டே மரணம் - ஒரு பிளாஷ்பேக்.)  அந்தச் சிறு வயதுக்குள் எத்தனை எத்தனை படங்கள்..   விருதுகள்...



பெருமளவு வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.   200 நாட்களையும் கடந்து ஓடி சாதனை படைத்தது.   

இளையராஜாவின் 100 வது திரைப்படம்.  பாலு மஹேந்திராவுடன் அவருக்கு முதல் படம்.  அப்புறம் அவர் இசையில்தான் பாலுவின் படங்கள் யாவும்!  இந்தப் படத்தில் அவரது பின்னணி இசை, ரீ ரெக்கார்டிங் பாடல்கள் அத்தனையும் பாராட்டப்பட்டன.



இன்னொரு சுவாரஸ்யம்.  ஏ ஆர் ரெஹ்மான் முதன்முதலில் தமிழ்த் திரை உலகில் கீபோர்ட் பிளேயராக அடி எடுத்து வைத்த படம்.  அவர் பெயர் அப்போது திலீப்.  வயது 13.  அதற்கு காரணம் ஏற்கெனவே கீபோர்ட் வாசித்துக் கொண்டிருந்தவர் குடித்து விட்டு வந்து கொண்டிருந்ததால் அவரை வெளியேற்றி விட்டாராம் இளையராஜா.  சிந்துபைரவி நினைவுக்கு வருகிறதா?!!

தன் மனைவிக்கு கச்சிதமான பாத்திரம் கொடுத்திருப்பதாகச் சொன்னாராம் பா ம.  டைட்டிலில் ஷோபா மஹேந்திரன் என்றே போட்டார்களாம்.  இதுதான் அவர் தற்கொலை செய்து கொள்ளும் முன் கடைசியாக நடித்த திரைப்படம்.

ஷோபாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் (அனுராதா ராஜகிருஷ்ணா) அது சரியாகப் பொருந்துவதற்காக வேண்டி நிறைய நாட்கள் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருந்தாராம்!

இந்தத் திரைப்படத்தில் மூன்று - சொல்லப்போனால் நான்கு - பாடல்கள்.  அதில் இரண்டை இங்கு பகிர்கிறேன். 

முதல் பாடல் கே ஜே யேசுதாஸ் பாடிய புகழ்பெற்ற பாடல்  நடபைரவி ராகத்தில் அமைந்த பாடலாம்.  இந்தப் படத்தின் இன்னொரு பாடலான பருவ காலங்களின் கனவு பாடலும் இதே ராகம்தானாம்.



பாலு இளையராஜாவிடம் காட்சியைச் சொல்லி பிரதாப் கிடாருடன் பாடுவதாக சொன்னவுடன் இளையராஜா முதலில் வாசித்துக் காட்டிய ட்யூன் "இளையநிலா பொழிகிறது".  அது மஹேந்திராவுக்குப் பிடிக்காமல் போக இந்த ட்யூனை வாசித்துக் காட்டினாராம்.

பாடலை எழுதி இருப்பவர் கங்கை அமரன்.

என் இனிய பொன் நிலாவே - பொன் 
நிலவிலென் கனாவே 
நினைவிலே புது சுகம் 
தததாத்ததா 
தொடருதே தினம் தினம் 
  தததாத்ததா  

பன்னீரைத் தூவும் மழை.. 
ஜில்லென்ற காற்றின் அலை 
சேர்ந்தாடும் இந்நேரமே 
என் நெஞ்சில் என்னவோ 
எண்ணங்கள் ஆடும் நிலை 
என் ஆசை உன்னோரமே 

வெண் நீல வானில் 
அதில் என்னென்ன மேகம் 
ஊர்கோலம் போகும் 
அதில் உண்டாகும் ராகம் 
புரியாதோ என் எண்ணமே 
அன்பே...

பொன்மாலை நேரங்களே 
என் இன்ப ராகங்களே 
பூவானக் கோலங்களே 
தென்காற்றின் இன்பங்களே 
தேனாடும் ரோஜாக்களே 
என்னென்ன ஜாலங்களே 
கண்ணோடு தோன்றும் 
சிறு கண்ணீரில் ஆடும் 
கைசேரும் காலம் 
அதை என் நெஞ்சம் தேடும் 
இதுதானே என் ஆசைகள் 
அன்பே...





இரண்டாவது பாடல் உமா ரமணன் பாடியது.  எழுதியது யார் என்று போடவில்லை என்பதால் எளிமையான அந்த இரண்டு வரிகளை இளையராஜாவே அமைத்திருக்கக்கூடும்.  என்ன ஒரு மெலடி...   உமா ரமணன் குரலை அப்படியே இழைத்திருக்கிறார்.  இந்தப் பாடலாலேயே பிரதாப் மேல் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு அனுதாபம் வந்துவிடும்.

ஆசை ராஜா ஆரீரோ 
அம்மா பொண்ணே ஆரீரோ 
தோளிலே மாலையாய் 
ஆடும் ராஜா ஆரீரோ ...



=================================================================================================

சிறப்புச் சிறுகதை :  நெல்லைத்தமிழன் 


நான் பத்திரிகை படிக்க ஆரம்பித்த காலங்களிலேயே எழுத்தாளர் 'கடுகு/அகஸ்தியன்' கதை வந்திருந்தால் முதலில் அதைத்தான் படிப்பேன். அவர் கதைகளுக்கான படங்களை ஓவியர் நடனம் அல்லது செல்லம் வரைந்ந்திருந்ததாக நினைவு. அப்படிப்பட்ட நான் ரசித்த எழுத்தாளருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இணையத்தால் கிடைத்தது.  ஒரு தடவை அவரிடமே, அவர் பாணியில் தொச்சு கதை எழுதப்போகிறேன் என்றேன். அவர், தாராளமாக எழுதுங்கள் என்றார். அவரிடம் அப்போது சொல்லியிருந்த கதைக்கரு எனக்கு இப்போது நினைவில் இல்லை. கடுகு-அகஸ்தியன் - திரு பி.எஸ். ரங்கநாதன் அவர்களுடைய நினைவைப் போற்றும் விதமாகவும், அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர் பாணியில் தொச்சு கதை எழுத முயன்றிருக்கிறேன்.





கொரோனாவால் வந்த லாபம்

 - நெல்லைத்தமிழன் -



கையில் காபியை எடுத்து தலைப்புச் செய்திகளைப் பார்க்க ஆரம்பித்த தட்சணம், 'அத்திம்பேர்... அத்திம்பேர்' என்ற கூச்சல் வாசலிலிருந்து வந்தது.  பூஜை வேளையில் கரடி என்றெல்லாம் சொல்லமுடியாது. எந்த வேளையிலும் கரடி இந்த தொச்சு என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் அப்படி நினைத்தாலே கமலாவுக்கு வியர்த்துவிடும். அன்று முழுவதும் நேரிடையாக, மறைமுகமாக, நேரிடை மறைமுகமாக என்று வித விதமாக ஏதேனும் புலம்பித் தள்ளிவிடுவாள் என் அருமை மனைவி கமலா.

இப்போதெல்லாம் அழைப்பு மணியை அழுத்தக்கூட பொறுமை இல்லை போலிருக்கு இந்த தொச்சுவுக்கு.  இனி பேப்பரைப் படித்த மாதிரிதான்.

"வா வா தொச்சு.... இப்போதான் நீ உன் வீட்டுக்குப் போன மாதிரி இருக்கு. அதுக்குள்ளே ஏன் வெளி வாசலிலிருந்தே என்னை ஏலம் போட்டுக்கொண்டு வர்றே?"



கழுகுக்கு மூக்கில் வேர்க்கிறதோ இல்லையோ கமலாவுக்கு வேர்த்துவிடும்.



"உங்க அக்கா ஊரிலிருந்து கிளம்பி வரப்போறேன்னு ஒரு லெட்டர் போட்டாப் போதும்...உடனே குடையும் கையுமாக வாசலிலேயே உட்கார்ந்துகொண்டு, எப்போ வரப்போறா..எப்போ வரப்போறா, எந்தன் கலி தீரன்னு காத்திண்டிருப்பேள். என் தம்பின்னா மட்டும் இளக்காரம். உங்களுக்குச் சேவை செஞ்சுண்டு  தன் வீட்டைக் கூட கவனிக்காமஅத்திம்பேர்.....அத்திம்பேர்னு காலைச் சுற்றிச் சுற்றி வந்தா, ஏன் இப்படி கரிச்சுக்கொட்ட மாட்டீங்கநானே, அடடா தொச்சு போய் மூணு நாளாயிடுத்தே...இன்னும் வரக்காணோமே...அங்கச்சியையும் காணோமே... என்னாச்சுன்னு பரிதவிச்சுப் போயிருக்கேன். நீங்க என்னடான்னா"




வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல, கதவுக்குப் பின்னாலிருந்து என் அருமை மாமியார் மெதுவாகக் கனைத்தாள். "ஏண்டீ  காலைல மாப்பிள்ளையை ஏதேனும் சொல்ற? அவருக்கு, அவர் ஆத்து மனுஷாதான் முக்கியமாப் படறது. நம்பாத்து மனுஷா, தேகம் ஒடிய சிச்ருஷை செய்தாலும் அலட்சியமாப் போயிடறது" என்று சந்தடி சாக்கில் கந்தகப் பொடியை வைத்தார். மாமியார்.

"அக்கா..கொஞ்சம் சும்மா இருக்கயா... அம்மா...சும்மா இரு. என்னோட அத்திம்பேர்தானே.. அவர் என்னைச் சொல்றதுக்கு உரிமை இல்லையா என்ன?"  டீப்பாயில் தொடாமல் வைத்திருந்த காபியை எடுத்து மடக் மடக் என்று குடித்தவாறே..

"பாவம்... நாம பேசினதுல அத்திம்பேரோட காபி ஆறிப்போயிடுத்து போலிருக்கு. அவருக்கு சூடா ஒரு கப் காபி போட்டு எடுத்துண்டுவாயேன் அக்கா... அப்படியே எனக்கும் கொஞ்சூண்டு கொண்டுவா. இந்தக் காபி ஆறியிருந்ததால, காபி சாப்பிட்ட திருப்தியே இல்லை"

தொச்சு கொஞ்சூண்டு என்று சொல்லிக்கொண்டே விரலை அரை அடி உயரத்துக்குக் காண்பித்ததிலேயே, அவனுடைய இந்த விசிட் அரை அடி டம்ளர் காபியோடு போகுமா இல்லை வேறு ஏதானும் எனக்குச் செலவு வைக்கும் பெரிய திட்டத்தோடு வந்திருக்கிறானா என்ற யோசனை வந்து என் வயித்தைக் கலக்க ஆரம்பித்தது.




அத்திம்பேர்.. சும்மா வேலை மெனெக்கெட்டு இப்போ நான் வரலை.  காசு கொறச்சலா இருக்கேன்னு எப்போப் பார்த்தாலும் நம்ம அத்திம்பேர் கவலைப்படறாரே.. செலவழிக்க அஞ்சறாரே.. அத்திம்பேரிடம் லட்சக்கணக்குல பேங்குல காசு இருந்தா இப்படி கவலைப்படுவாரா?  சும்மா ஜாம் ஜாம்னு செலவழிச்சு நம்மைப்போல கலகலன்னு இருப்பாரேன்னு தோணித்து"

"என்னை மாதிரி இளிச்சவாய் அத்திம்பேரும், ஈஷிக்கொள்கிற அக்காவும் இருக்கும்போது உனக்கு கலகலன்னு இருக்கறதுக்கு  என்ன கொறைச்சல்? அடுத்தவன் காசில் மஞ்சக்குளிக்கிறவங்களுக்கு கவலை எங்கேர்ந்து வரும்?" என்று அவனிடம் உடனே சொல்லியிருப்பேன் என்றுதானே நீங்க நினைக்கறீங்க?  இல்லை இல்லை..எப்போதும்போல மனசுக்குள்ளேயே நினைத்துக்கொண்டு வெளியே புன்னகைத்தேன்.

"என்னடா தொச்சு..இப்போ என்ன புது ஐடியாவோட வந்திருக்க?"

புது ஐடியாவோடு தொச்சு வந்திருக்கிறான் என்றதும், மாமியார் கதவின் பின்னாலிருந்து காதை மட்டும் ஹாலுக்குள் நீட்டியது தெரிந்தது.

"இந்த பாருங்கோ அத்திம்பேர்..எங்க தெருல ரெண்டு பேர் இப்படித்தான்..காசு இல்லை, காசு இல்லைனு ரொம்ப கஞ்சத்தனமா இருந்தாங்க. அப்புறம் யாரோ சொல்லி, இந்த ஷேர் மார்கெட்ல அவங்க கிட்ட இருந்த பத்தாயிரம் ரூபாயை இன்க்வெஸ்ட் பண்ணாங்க. சும்மா ரெண்டு வருஷத்துல எங்கயோ போயிட்டாங்க"

"அது இன்க்வெஸ்ட் இல்லை தொச்சு.. இன்வெஸ்ட்.  நீ சொல்றதைப் பார்த்தால் ஏதோ கோர்ட் கேஸ்னுனா அர்த்தம் வருது"

"தன்னாத்து மனுஷாள்கிட்ட எப்போவுமே உதவின்னு கேட்க நினைச்சாலே, அவாள்ளாம் உதவி கேட்கிறவர் பக்கமே தலைவச்சுப் படுக்க மாட்டா.. ஆனா இவர்ட்டேர்ந்து சுருட்டணும்னா மட்டும் நீலிக்கண்ணீர் வடிச்சுக்கிட்டு கடுதாசி போட்டுடுவா.  மச்சினன், நம்ம அத்திம்பேர் நன்னா இருக்கணுமேன்னு அல்லாடினா, எதையாவது சொல்லி அவனுக்கு இங்கிலீஸ் தெரியலைனு குத்திக் காண்பிக்கவேண்டியது.  ஆண்டவன், இப்படித்தாண்டீ உன் வாழ்க்கைனு என் தலைல எழுதிவச்சுட்டான்"  காபி டம்ளரோடு வந்த கமலா கடுகடுத்தாள்.

இன்னும் நான் ஏதும் சொல்லாமல் இருந்தால், அவள், டிசம்பர் சீசன் கச்சேரி போல, செஞ்சுருட்டியில் அழ ஆரம்பித்து, ஆரபி, பைரவி என்று ஆலாபனை பண்ண ஆரம்பித்துவிடுவாள்.

சிரித்த முகத்தோடு தொச்சுவைப் பார்த்து, "சொல்லு தொச்சு.. என்ன ஐடியாவோட இப்போ வந்திருக்கே? உங்க தெரு ஆட்கள் எங்கேயோ போன மாதிரி என்னையும் எங்கேயோ அல்லாடவிடப் போறயா?  அப்புறம் கமலா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாள்? உனக்கும்தான் எப்படிப் பொழுது போகும்?"

"ஹா ஹா ஹா... என்னதான் சொல்லுக்கா.. நகைச்சுவையா பேசறதுல அத்திம்பேரை அடிச்சுக்க ஆளே கிடையாது. அதனால்தான் நான் முந்தி, நீ முந்தினு அத்திம்பேர் கதை எழுதின உடனேயே பிரசுரிக்க பத்திரிகை ஆபீஸ்ல இருந்து ஓடோடி வந்துடறாங்க"

"அக்கா.. உன் கைமணம் நீ போடற காப்பிலயே தெரியறது..ஆஹா.. அதுக்குள்ள தோசைக்கல் போட்ட வாசனை வர்றதே.. என்ன தோசை? வெந்தய தோசையா?"  காபியை லபக்கிக்கொண்டே கொக்கி போட்டான் தொச்சு.

"நம்மாத்து மனுஷாள்லாம் சுருசியோட சம்ப்ரமா சாப்பிடறவா. கரெக்டா கண்டுபிடிச்சுட்டயேடா... இவாள்ளாம் தட்டுல என்ன போட்டிருக்கு, எப்படிப் பண்ணியிருக்கா, பாராட்டுவோமேன்னு ஒரு அக்கறையும் கிடையாது. பேசாம பேப்பரைக் கைல வச்சிண்டு தட்டுல உள்ளதைச் சாப்பிடவேண்டியது. இல்லைனா டி.வி.ல போடற உகாண்டா நியூஸை ஏதோ பக்கத்துத் தெருவில் நடந்துட்டா மாதிரி வெறிச்சுன்னு பாத்துண்டிருக்கவேண்டியது"

"என்ன அக்கா இப்படிச் சொல்லிட்ட?  நீ மட்டும் பத்து நிமிஷம் முன்னாலேயே தோசைக்கல்லைப் போட்டிருந்தாயானா(ல்), தெரு முனைல வரும்போதே எனக்குத் தெரிஞ்சிருக்கும்... இது அக்கா பண்ணற வெந்தயத் தோசை வாசனைனான்னு.  பாவம்  அங்கச்சிக்கும், 'பப்ளி'க்கும் நீ பண்ணற தோசைன்னா உசிர். நான் போம்போது அவாளுக்கு மட்டும் ஒரு சின்ன டிபன் கேரியர்ல மிளாப்பொடி தடவி  தோசை பத்துப் பன்னெண்டு கொடுத்துடு.  எனக்கு கேரியர்ல வச்சுடாதே. நான் இங்கேயே சாப்டுட்டுப் போறேன். இல்லைனா அத்திம்பேர் வருத்தப்படுவார்"



ஓஹோ...காலைல பல் தேச்ச உடனேயே சாப்பாட்டுக்கு இங்க வந்துட்டானா? நல்லவேளை மூட்டை முடிச்சோட வரலையேன்னு பாத்தா, காலை டிபன் இங்கேர்ந்து அவாத்துக்கு கேரியர்ல போறதா?  இவன் சின்ன டிபன் கேரியர்னு சொன்னா அது எத்தனை பெருசுன்னு எனக்குத்தானே தெரியும். பேஷ் பேஷ்  என்று எப்போதும்போல மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

"அத்திம்பேர்...ஒண்ணும் வேண்டாம்.. சும்மா பிச்சாத்து காசு ஒரு லட்சத்தை எடுத்து ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணுங்கோ. ரெண்டே வருஷத்துல 20 லட்சமா ஆயிடும்.  அப்புறம் புதுக்கார் வாங்கறதா இல்லை புது வீடே வாங்கறதான்னு உங்களுக்கு கன்ஃப்யூஷன் வருமே தவிர,  அதை வாங்க காசு இருக்கா இதை வாங்க காசு இருக்கான்னு கவலையே வராது"

ஏதோ ஒரு லட்சத்தை தரையில் கிடக்கிற காசு மாதிரி தொச்சு சொன்னதைக் கேட்டு விக்கித்துப் போனேன். யார் தொச்சுகிட்ட சொல்லியிருப்பா, எனக்கு பேங்க் லோன் சாங்க்‌ஷன் ஆயிடுத்துன்னு?  கமலா கிட்ட, யார்ட்டயும் மூச்சு விடக்கூடாதுன்னு சொல்லியிருந்தேனே.... எப்போதும் போல, "நீங்களும் யார்கிட்டயும் மூச்சு விட்டுடாதீங்கோ"ன்னு ஊர் ஃபுல்லா எல்லார்கிட்டயும் சொல்லியிருப்பாளோ?

"இந்த பாரு தொச்சு.. இந்த ஷேர் மார்க்கெட்லாம் ஏறும்..இறங்கும். பணம் வரும், போகும்.. இதெல்லாம் சூதாடறது மாதிரி. நமக்கு அந்த பிஸினெஸெல்லாம் வேண்டாம்.  பேசாம, பேங்க்லயே காசு இருந்தா, கொஞ்சூண்டு வட்டி வந்தாலும் முதலுக்கு மோசம் வந்திடாது"

கமலா சீறிக்கொண்டு வந்தாள். "ஒன்னோட அத்திம்பேர் நாலு காசு சம்பாதிச்சு ராஜா மாதிரி இருக்கணும்னு நீ அல்லாடறது அவருக்கு எங்க புரியுது தொச்சு. எனக்கென்னவோ விதி.. ஒரே குடிசைல வாழ்க்கை பூரா ஓட்டணும்னு. அதை விட்ட ஓட்டல் உடைசலான கார்ல வருஷத்துக்கு ரெண்டு தடவை அவர் அம்மா வீட்டுக்குக் கூட்டிண்டு போவார். இந்தக் காசும் பேங்கிலேவா இருக்கும்?  பருந்துக்கு எலிக்குஞ்சு கண்ல படறமாதிரி அவர் அம்மாகிட்டேர்ந்து "வீட்டுக் கூரை ஒழுகறது, சுவர் இடியறது"ன்னு தாக்கல் வர ஆரம்பிச்சுடும். இல்லை இருக்கவே இருக்கா அவர் அக்கா சரோஜா.... பத்து வரில பாராட்டி, சொந்தம் கொண்டாடி, தன்னோட கஷ்டங்களை ஒரு பாட்டம் சொல்லி அழுது செலவுக்கு பணம் கேட்க.. ம்ம்ஹும்.ப்ச்"

கமலாவை விட்டால் உடனே பிலாக்கணம் பாட ஆரம்பிச்சுடுவாள். கூடவே அவள் அம்மாவும் அப்போ அப்போ தவில் வாசிக்க ஆரம்பித்தால் என் தலைதான் உருளும். முதலில் உடனடி பிரச்சனையிலிருந்து விடுபடுவோம் என்ற ஞானோதயம் எனக்கு வந்தது.



"சரி தொச்சு... ஷேர்ல இன்வெஸ்ட் பண்ண யார்கிட்ட கன்சல்ட் பண்ணணும்னு பார்க்கிறேன். ஷேர் மார்க்கெட்டையும் விட்டு வைப்பானேன். அதிலும் தொபுகடீர்னு குதிச்சுப் பாத்துடலாம்"




"இது என்ன யாரோ எவரோன்னு தேடிண்டு போய் கன்சல்ட் பண்றதுஅத்திம்பேர்.. தொச்சா கொக்காநான் எல்லாத்துக்கும் சொலூஷனோடதான் வந்திருக்கேன். எங்க தெரூலயே பட்டாம்பி ஐயர்னு எக்ஸலெண்ட் இன்வெஸ்ட்மெண்ட் கன்சல்டண்ட் இருக்கார். அவர் சொல்லி நாம ஷேர் வாங்கி, அவர் சொல்லும்போது வித்தா சுளையா 60%க்கு மேல லாபம் கிடைக்கிறதாம். யார் யாரோ அவர் வீட்டுக்கு வந்து தவம் கிடக்கறாஅவர்ட்ட இன்னைக்கே பேசிடறேன். இந்த வாரமே அவரைக் கூட்டிண்டு வந்துடறேன்இன்வெஸ்ட் பண்ணறதுக்கு முதல்ல, எல்லாம் நல்லபடியா முடிஞ்சு அத்திம்பேர் கோடீஸ்வரராயிடணும்னு நாம எல்லாரும் அங்கச்சி பசங்களோட நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போயி கும்பிட்டுட்டு வந்து இன்வெஸ்ட்மெண்டை ஆரம்பிச்சுடுவோம். என்ன சொல்றீங்க?"

அடப்பாவீ... இவன் ஏதோ குடும்பத்தோட நேர்ந்துகொண்டதற்கு நம்ம செலவிலேயே குலதெய்வம் கோவிலுக்குப் போக ப்ளான் பண்றானே  என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.

எங்க நான் பின்வாங்கிடுவேனோ என்ற பதட்டத்தில் கமலா பேச்சில் நுழைந்தாள்.

"என்ன யோசனை? தொச்சு சொன்னா அது சூப்பர் ப்ளானாத்தான் இருக்கும். அஞ்சு வருஷம் முன்னால கோவிலூர்ல ஒரு இடம் வாங்கிப்போட்டு பிறகு வித்து நமக்கு சுளையா எம்பதாயிரம் லாபம் வந்ததே.. தொச்சு ஃப்ரெண்ட் மூலமா தில்லிலேர்ந்து ஃபர்னிசர்லாம் வரவழைச்சதுல நமக்கு பத்தாயிரம் ரூபாய் மிஞ்சித்தேகமலா வாயெல்லாம் பல்லாகப் பேசினாள். அவள் மறந்தும்கூட தொச்சு சொல்லி நஷ்டமானவைகளைப் பத்திப் பேச மாட்டாள். ரெண்டு லாபம்னா எட்டு நஷ்டம் என்பது எனக்கு மட்டும்தானே நினைவிலிருக்கும்.

உரலுக்குள் தலையைக் கொடுத்தாகிவிட்டது..இனி இடிக்குப் பயந்தால் ஆகுமா?

"சரி..பட்டாம்பியைக் கூட்டிண்டு வா. பேசி இன்வெஸ்ட் பண்ணிடுவோம்"

"அக்கா..ஜோசியர் சொன்னாரோல்யோ..அத்திம்பேருக்கு நல்ல காலம் ஆரம்பிச்சுடுச்சுன்னு. ஏதோ சின்னப் பையன்..அணில் மாதிரி என்னாலான உதவி. நீயெல்லாம் பங்களால இருந்தா எனக்குத்தானே பெருமை. எங்க அக்கா பெரீய இடத்துல இருக்கா. புதுக்கார்லாம் வச்சிண்டிருக்கான்னு"

சரி.. தோசை ரெடியானா சொல்லு. எடுத்துண்டு கிளம்பறேன். அங்கச்சி காத்துண்டிருப்பா.

**

என்னதொச்சுவின் ஷேர் மார்க்கெட் யோசனையில் எவ்வளவு இன்வெஸ்ட் பண்ணினேன், அதில் எத்தனை லாபம்னு தெரிஞ்சுக்க ஆசைப்படறேளா?

தொச்சுட்ட சரின்னு சொல்லி, அவன் கன்சல்டண்டை கூட்டிக்கொண்டு வர்றதுக்குள்ள, கவர்மெண்டு திடுதிப்புனு, 'கொரோனா' என்ற பேரைச் சொல்லி ஊரடங்கு அனொன்ஸ் பண்ணிட்டாங்க. அப்புறம்தான் ஷேர் மார்க்கெட் டபக்குனு கீழ இறங்கி, அதுல இன்வெஸ்ட் பண்ணினவாளுக்கெல்லாம் லட்சம் நஷ்டம், கோடி நஷ்டம்னு அவனவன் கதர்றானே... ஆனானப்பட்ட வாரனுக்கே 50 பிலியன் டாலர் நஷ்டமாயிடுத்தாமே...  இனியும் ஷேரைப் பத்தி தொச்சு பேச்செடுப்பான்னு நீங்க நம்புறீங்க?


எனக்கு தலைக்கு வந்த கத்தி தலைப்பாகையோட போயிடுத்துன்னு நானே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, வீட்டுக்குள்ளேயே நிம்மதியா பேப்பர் படிச்சுக்கிட்டு, சந்தை கிந்தை எங்கும் போகாமல், தொச்சு கும்பலின் வரவு (அது எங்க... அவா வந்தாலே செலவுதான்.. இது என் மனசு) இல்லாமல் இந்த மூணு மாசமா அக்கடான்னு இருக்கேன்இதுல ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மெண்ட் என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க வந்திருக்கீங்களே.




பின்குறிப்பு:  கதைகளுக்கான படங்களை கடுகு சாரின் தளத்திலிருந்தே எடுத்திருக்கிறேன். வரைந்த ஓவியர்களுக்கு நன்றி.

192 கருத்துகள்:

  1. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    பதிலளிநீக்கு
  2. தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதன் அர்த்தத்தை யோசித்துப் பாருங்கள். பிறப்பு நம் கையில் இல்லை. அதனால் வள்ளுவர், பிறப்பை நினைத்து இந்தக் குறளை எழுதியிருக்க மாட்டார்.

      நீக்கு
  3. ஓ!..
    இந்தப் பாடல் கங்கை அமரன் அவர்களுடையதா!...

    இன்னமும் இந்தப் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறை என்னிடமிருந்து மாறுபட்ட பதில்! நான் படம் பார்த்து விட்டேன்!!

      நீக்கு
  4. எனினும் பாடல்களை இன்னும் கொஞ்சம் நேரம் கழித்துத் தான் கேட்க வேண்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க... மெதுவா வாங்க.. ஒரு சிறப்புச் சிறுகதை வேற இருக்கு!

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மூடுபனி நல்ல படம் தான். எனக்கென்னவோ ஷோபா ஒரே மாதிரி சிரிச்சு ஒரெ
    மாதிரி தலையைக் கோதுகிறது மாதிரி இருக்கும்.
    இந்தப் பாடல் அப்போது ஹிட்.

    அடுத்த பாடல் சோகத்தில் தோய்ந்த தாலாட்டாக வந்தாலும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய வணக்கம் வல்லிம்மா... வாங்க.. சோகம் அதிகமாக தாக்கம் படம்.

      நீக்கு
    2. //எனக்கென்னவோ ஷோபா ஒரே மாதிரி சிரிச்சு ஒரெ
      மாதிரி தலையைக் கோதுகிறது மாதிரி இருக்கும்.// என்ன வல்லி அக்கா இப்படி சொல்லிட்டீங்க? உணர்வுகளை முகமாக வெளிப்படுத்தக் கூடிய மிக அருமையான நடிகையாயிற்றே ஷோபா. முள்ளும் மலரில் தூங்கி கொண்டிருக்கும் தங்கை ஷோபாவுக்கு அண்ணன் ரஜினிகாந்த் மருதாணி வைத்து விடும் காட்சியில் முகத்தில் ஒரு சிலிர்ப்பை காட்டுவாரே அது ஒன்று போதாதா?   



      நீக்கு
    3. 'உணர்வுகளை நுணுக்கமாக வெளிப்படுத்தக் கூடியவர்' என்று வந்திருக்க வேண்டும். 

      நீக்கு
    4. அன்பு பானுமா. நான் எழுதினது இந்தப் பாடலைப் பற்றி:)

      இந்த ஸ்டைலை நீங்கள் பாலு மஹேந்த்ராவின் எல்லாக் கதானாயகிகளிடமும் காணலாம்.
      ஷோபா மிகச் சிறந்த நடிகை என்பதில் எனக்கொரு
      சந்தேகமும் இல்லை.

      சட்டென்று மின்னி மறைந்த சூப்பர் ஸ்டார் நடிகை.
      பாவம்.:(

      நீக்கு
    5. //அது ஒன்று போதாதா?// - நடிப்பு என்று வந்தால் சாவித்ரி, சாரதா என்று பலப் பல நடிகைகள் இருக்கின்றனர். ஆனா நாங்க 'நடிப்பு'க்காக யாரின் ரசிகராகவும் ஆக மாட்டோம்.

      நீக்கு
    6. //ஆனா நாங்க 'நடிப்பு'க்காக யாரின் ரசிகராகவும் ஆக மாட்டோம்.//


      அப்படீன்னா?

      நீக்கு
  6. மூடுபனி சிறப்பான திரைப்படம்
    சிறப்பான சிறுகதை
    தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
  7. நெல்லைத் தமிழனின் கதை அப்படியே கடுகு சார் எழுதின மாதிரியே இருக்கு.
    அவர் கொஞ்சம் வாக்கியங்களைக் குறைத்திருப்பாரோ.

    தொச்சு ஐடியா வொர்க் அவுட் ஆகாமல் கொரோனா வந்தது தான் நன்மை.
    வீட்டுக்கு வீடு இது போல நிகழ்வுகள் அசட்டு அம்மாஞ்சிகள்,சுய நல
    விரும்பிகள் இருப்பது சகஜம் தான்.

    மிகக் கோர்வையாக எழுதி இருக்கிறீர்கள் முரளிமா.
    கதவிடுக்கிலிருந்து காதை நீட்டுகிற மாமியாருக்கு இதில் என்ன ஷேர் போயிருக்கும்:)

    எடுத்துப் போட்ட படம் என்றாலும் நன்றாக இருக்கிறது.
    அப்படியே அந்த டிபன் காரியரையும் போட்டிருக்கலாம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கருத்தும் அதே... அதே...

      நீக்கு
    2. நன்றி வல்லிம்மா.

      என் கருத்தில், பொதுவா பிராமண சமூகத்தில் இந்த மாதிரி கேரக்டர்களைப் பார்ப்பது சகஜமாக இருக்கும். அதனால் அவர்கள் இந்த மாதிரி கதையை இன்னும் ரசிப்பார்கள் என்பது என் எண்ணம்.

      இன்னொரு ஒபினியனும் உண்டு. வெளிப்படையா சொல்றேன். இந்த டைப் கதைகள், பெரும்பாலும் மேல் ஷாவனிஸ்ட் நிலையில் எழுதப்படுவதாகத் தெரிந்துவிடுமோ? மனைவி, மாமியார், அவர்கள் குடும்பத்தை கொஞ்சம் வம்பு செய்து எழுதுவதால் ஒரு சாராரால் ரசிக்க முடியாதோ என்று நினைத்திருக்கிறேன்.

      உங்கள் கருத்து மகிழ்ச்சி தருகிறது.

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா இந்த ஜூன் மாதத்தில் இருந்து காணாமல் போகலாம் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையாக இருக்கப் பிரார்த்திக்கிறேன். அனைவர் வாழ்க்கையிலும் இந்தக் கொரோனா, ஊரடங்கு என்னும் பிரச்னை ஓய்ந்து எப்போதும்போல் இருக்கவும் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜுனுடன் போய்விடுமா?  இதென்ன கதை!

      நீக்கு
    2. வணக்கம் கீதா அக்கா..   வாங்க...

      நீக்கு
    3. ஜூன் மாதத்து கிரஹணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் என கிரஹ நிலைமை சொல்கிறதாம்! டிசம்பரில் 2019 ஆம் வருடம் வந்த சூரிய கிரஹணத்துக்குப் பின்னரே கொரோனாவின் தாக்கம் அதிகம் என்று சொல்கின்றனர். அப்போதைய கிரஹ நிலைமை அப்படி இருந்திருக்கு. அந்த கிரஹணம் ரொம்பவே தாக்கம் அதிகமா இருக்கும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போது கிரஹங்களின் இடங்கள் மாறுகிறதாம். இது முழுக்க முழுக்க ஜோசியத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் தான் முன்னர் எழுதினப்போ அதிகம் விவரிக்கவில்லை. :)

      நீக்கு
    4. கீசா மேடம்... உங்களுக்கு என் ஜாதகத்தை அனுப்பியிருக்கேன். 7 1/2 எப்போ போகும், மத்த பண வரவு பற்றில்லாம் ஜோசியம் சொல்லுங்க. உங்களுக்கான ஃபீஸை என் அக்கவுண்டுக்குச் செலுத்திவிட்டேன்.

      நீக்கு
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஃபீஸ் ஒழுங்கா வந்தாலே சொல்லி இருக்கப் போறதில்லை. இந்த அழகிலே ஃபீஸை உங்க கணக்கிலே போட்டுண்டா?

      நீக்கு
    6. நாங்கல்லாம் (எங்க வீட்டிலே மட்டும் நான், மாமா, பையர், மாப்பிள்ளை, கடைசிப்பேத்தி) ஏழரையைச் சகிச்சுட்டு இருக்கலை? டிசம்பர் வரை நீங்களும் அப்படியே இருங்க!

      நீக்கு
    7. எனக்கு இரண்டாவது 2 1/2 நடக்குது. ஆனால் இந்த 7 1/2 எனக்கு வாழ்க்கையில் பெரிய மாறுதலைக் கொண்டுவந்துவிட்டது. வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்டது. சும்மாச் சொல்லிட்டீங்க 'சகிச்சுக்கோங்க' என்று. முடியுமா?

      நீக்கு
    8. கீதா அக்கா....   எனக்கு கடகம்.  எனக்கு எப்படி இருக்கும்னு சொல்லுங்க...   ஆபீஸ்ல சாண் ஏறினா முழம் வழுக்குது...!!

      நீக்கு
    9. இருக்கற இடத்துல இருக்கணும்னா, 'சாணே' ஏறக்கூடாதுன்னு புதுசா ஜோசியம் சொல்லிடப்போறாங்க கீசா மேடம்.

      உங்க கேள்விக்கு நாளை காலைலதான் பதில் சொல்லுவாங்க. இன்றைய அலாட்டட் நேரம் (இணையத்துக்கான) ஓவர்.

      நீக்கு
  9. வழக்கம்போல் படமும் பார்க்கலை, பாடலும் கேட்கலை. இஃகி,இஃகி, மத்தியானமா வந்து பாட்டைக் கேட்கிறேன். நெல்லைத்தமிழன் எழுதி இருக்கும் கதை கொஞ்சம் நீளம் ஜாஸ்தி. உரையாடல்கள் இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாமோ? எனினும் நல்ல முயற்சி. ஓரளவுக்குக் கடுகு சாரின் எழுத்துக்களை நினைவூட்டுகிறாப்போல் எழுதி இருக்கார். எழுத்துப் பிழைகள் நிறைய இருப்பதால் சுட்டிக்காட்ட முடியலை. ஸ்ரீராமின் பாடல் பகிர்வுப் பதிவில் இருந்து நெல்லைத்தமிழர் கதை வரை இம்முறை எழுத்துப் பிழைகள் அதிகம். கவனிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தவரை திருத்தி இருக்கிறேன்.

      நீக்கு
    2. வாங்க கீசா மேடம்.... டக்குப் பக்கென்று கதை எழுதினேன் (காரணம் அஞ்சலி செலுத்தணும் என்ற ஒன்றேதான். கதை என்று எழுத நினைத்தால் கே.வா.போ செவ்வாய் அன்றுதானே வெளியிடுவார்கள்). குறைகள் மலிந்திருக்கும். தட்டச்சு பிழை என்பது ஆச்சர்யமாக இருக்கு (நான் என் தட்டச்சில் கர்வம் கொண்டவன், வெகு வேகமாக தட்டச்சு செய்வேன் என்பதிலும் தற்பெருமை-ஹா ஹா உண்டு. எனக்கு நிமிடத்துக்கு 60 வார்த்தைகள் என்ற ஹையருக்கு அடுத்த லெவல் பரீட்சை எழுதணும்னு ரொம்ப ஆசை. ஆனால் எழுத வாய்ப்பு வரலை. எங்கேயோ தற்பெருமையா இழுத்துண்டு போறது. இந்த தட்டச்சு வேகத்தால், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்களை மனசு நினைக்க நினைக்க 'COBOL' மொழியில் அந்தக் காலத்தில் அதே வேகத்தில் தட்டச்சு செய்வேன் - ஆனா லாஜிக்கும் யோசித்துக்கொண்டேதான் ப்ரோக்ராம் எழுதமுடியும். ஒரு இரவில் 4000 வரிகள் கொண்ட ப்ரோக்ராம்லாம் எழுதியிருக்கேன். ஒரு தடவை தாய்வான் கம்ப்யூட்டர் எக்சிபிஷனில், கம்ப்யூட்டர் கேம்ஸ் கவுண்டரில் ஒருவர் மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்தார். நான் போட்டிபோட முயன்று அவர் வேகத்தில் 50% கூட வரமுடியலை. அசந்துபோய்விட்டேன். போதும் இந்தக் கதை)

      நேற்று தெக்கினிக்கு காரணமாக, இதனை மறுபடியும் மெயிலில் தட்டச்சு செய்து 9 மணிக்குள் அனுப்பவேண்டியிருந்தது. அதனால் ஒரு சில தட்டச்சுப் பிழைகள் வந்திருக்கலாம். அவை என்ன என்று நீங்கள் சுட்டிக்காண்பியுங்கள். எப்படி அவை மிஸ் ஆகின என்று யோசிக்கிறேன்.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நெ தமிழன், படித்த உடனேயே என் கண்ணில இது பட்டது, ஆனால் தட்டச்சுப்பிழை நோர்மல்தானே, இனிச் சொன்னாலும் திருத்துவதற்கு ஸ்ரீராம் எல்லோ வரவேண்டும் என விட்டு விட்டேன்.. அதிராக்கு டமில்ல டி எல்லோ:))..

      //தொச்சு என்று சொல்லாத்தான் ஆசை/// ல வுக்குப் பதில் லா...

      நீக்கு
    4. //ல வுக்குப் பதில் லா...// - ஓ...இணைய நக்கீரருக்குப் போட்டியா? ஆனா பாருங்க...நான் படித்துக்கொண்டேதான் தட்டச்சு செய்யறேன். ஒரு வாக்கியம் முடிக்கும்போதும் படிக்கிறேன். கண்ணில் தட்டுப்படுவதில்லை. ஒருவேளை மனம் ஒருமுகப்பட்டு படிப்பதில்லையோ என்னவோ

      நீக்கு
    5. முடிந்தவரை திருத்தி விட்டேன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்!

      நீக்கு
  10. இரண்டும் சூப்பர் பாடல்கள் நிறைம தகவல்கள் ஷோபா கொலையா ? தற்கொலையா ? இன்னும் தீர்வில்லை.

    கதையை படித்த பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொலை என்று நிரூபிக்கப்படாத வரை தற்கொலைதான்!

      நன்றி ஜி.

      நீக்கு
  11. மூடுபனி! பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். டெல்லியில் ’இண்டியா இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில்’, ‘இண்டியன் பனோரமா’ செக்‌ஷனில் முன்னாலேயே நின்று டிக்கட் வாங்கி (இதெல்லாம் பொதுவாக நான் செய்யும் காரியமேயல்ல!), நண்பன் ஒருவனுடன் பார்த்த தமிழ்ப்படம். இயக்கம்:பாலுமகேந்திரா -என்றிருந்ததால்தான் சென்றிருந்தேன். ‘இயக்குனர்’ யார் எனப் பார்த்துத் தேடிப் படம் பார்த்தோம் நாங்கள் -மொழி எதுவாயினும்.

    அப்போதெல்லாம் சில நல்லபடங்கள் தமிழிலும் வந்துகொண்டிருந்தன. பாலச்சந்தரோடு, பாலுமகேந்திரா, மகேந்திரன், ஜான் ஆப்ரஹாம் போன்ற இயக்குனர்கள் தமிழ் சினிமாவை ’மற்றவர்களும்’ திரும்பிப் பார்க்குமாறு செய்துகொண்டிருந்த காலகட்டம்.

    ஷோபா: சாதாரண முகம். அசாதாரண திறன். சட்டெனப்போய்விட்டது, சாப்பிடும் தட்டு தட்டிவிடப்பட்டதுபோன்ற ஒரு அதிர்ச்சி.. கலாரசிகர்களுக்கு.

    என் இனிய பொன் நிலாவே ! ஆஹா.. ஆனந்தமாகப் பாடியிருக்கிறார் கேஜே யேசுதாஸ். இளையராஜாவின் இளமை கொஞ்சும் இசை.

    80-களின் தமிழ் சினிமாவில், பொதுவாக இந்திய சினிமாவில், உயிரோட்டம் நிறைய இருந்தது. திரையில் ’கலை’ மிளிர்ந்த காலகட்டம்..



































    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்...   ஆம், இது தரமான படங்களில் ஒன்று.  இளையராஜாவின் பங்கும் அதிகம் இந்தப் படத்தில்.

      நீக்கு
  12. மீண்டும் இனிய பாடலைக் கேட்டதில் மகிழ்ச்சி....

    கடுகு சார் அவர்களது கைவண்ணம் போல
    அன்பின் நெல்லை அவர்களது முயற்சி வாழ்க...

    கடுகு சார் அவர்களது கதைகள் அதிகம் படித்ததில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முன்பு வாராந்தரிகளில் வந்தபோது படித்திருக்கிறேன்.

      நீக்கு
    2. நானும்! எதிலே வந்தாலும் தேடிப்பிடித்துப் படித்துவிடுவேன். பி.எஸ்.ரங்கநாதன் என்னும் பெயரில் குமுதத்திலோ என்னமோ ஏதோ ஒரு பக்க மூலைக்கு விஷயங்கள் தானம் செய்து கொண்டிருந்தார். அறுபதாம் பக்க மூலைனோ என்னமோ வரும்.

      நீக்கு
    3. வாங்க துரை செல்வராஜு சார்.... நான் அவர் கதைகளை விரும்பிப் படிப்பேன் (சின்ன வயதிலேயே). எனக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளர் வாண்டுமாமா.

      நீக்கு
    4. என்னிடம் இப்போது அவர் எழுதிய "ஐயோ பாவம் சுண்டு" என்கிற புத்தகம் இருக்கிறியாது.  படிக்க வேண்டும்.

      நீக்கு
  13. கதை அருமை...

    மனதை கொள்ளை கொள்ளும் இசையுடன் என்றும் ரசிக்கும் பாடல்...

    இரண்டாவது காணொளி மட்டும் வரவில்லை... (Video unavailable
    Watch this video on YouTube.
    Playback on other websites has been disabled by the video owner.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க டிடி...   இப்போது இரண்டாவது பாடலுக்கு வேறு சுட்டி கொடுத்துள்ளேன்.  கேட்டுப்பாருங்கள்.  நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் சென்று காட்சியைப் பார்த்து கலங்கி வந்தேன்.

      நீக்கு
    2. நன்றி திண்டுக்கல் தனபாலன்

      நீக்கு
    3. இரண்டாவது பாடல் இப்போது வருகிறது...

      முதல் பாடல் எந்தளவு மனதில் உற்சாகம் தருகிறதோ, அதற்கு நேரெதிராக இரண்டாவது பாடல்...

      என்னவென்று சொல்ல தெரியாத நிலையில் மனம்... ஏன் என்று தெரியவில்லை... உமா ரமணன் அவர்களின் குரலா...? இசையா...? ம்ஹிம்... புரியவேயில்லை...

      நீக்கு
    4. உண்மை டிடி...    அதை உணர்ந்து சொல்லி இருக்கிறீர்கள்.  தாலாட்டுதான்.  ஆனால் இவ்வ்ளவு சோகமான தாலாட்டு வேறெங்கும் கேட்டிருக்க மாட்டோம்.  மனதை என்னவோ செய்யும் இசை, டியூன்.

      நீக்கு
  14. மூடுபனி, ஷோபாவிற்காக, நான் ரசித்த படங்களில் ஒன்று. சிறுகதையினை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. கதை அருமை. ரசித்துப் படித்தேன். சொந்தங்கள் என்றாலே சிக்கல்தானே? கதைகளை தனியாகவே பதிவிடுவது சிறப்பாக இருக்கும்.

    படம் பார்த்த ஞாபகமில்லை. பார்க்கலாம்.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
  16. நல்ல சுவாரஸ்யமான அக்ரஹாரக்கதை ரசித்தேன். அங்கச்சி என்றால் தங்கையா ?

    உகாண்டா செய்தி என்றால் கதாசிரியருக்கு இளக்காரமாக போய் விட்டது போலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி... கடுகு சாரின் இந்த மாதிரியான கதையில், கணவன், மனைவி கமலா, அவளின் தம்பி தொச்சு, தொச்சுவின் மனைவி அங்கச்சி, அவர்கள் குழந்தை ப்ப்ளி, போன்றவர்கள் கேரக்டர்ஸ். இது தவிர கணவனுன் அக்கா சரோஜா.

      இதனைக் குறிப்பிட விட்டுப்போய்விட்டது

      நீக்கு
    2. அங்கச்சி எனக் கூப்பிடும் பெயராகவும் இருப்பது உண்டு கில்லர்ஜி! தொச்சுவும் அப்படிக் கூப்பிடும் பெயர் தான். அம்மாப்பொண்ணு, பட்டு, பட்டம்மா, குஞ்சம்மா, என்றெல்லாம் செல்லமாக அழைப்பதைப் போல் அங்கச்சி என்றும் தொச்சு என்றும் அழைப்பார்கள்.

      நீக்கு
  17. ஷோபா நிஜமாகவே அருமையான நடிப்புத்திறன் கொண்டவர் .கிட்டத்தட்ட 40 வருடம் முந்தைய நினைவுகளில் கொஞ்ச நேரம் சஞ்சரித்தேன்

    பதிலளிநீக்கு
  18. முதல் பாடல் மிகவும் பிடித்த பாடல். இரண்டாவது பாடலை இங்கே கேட்க முடியவில்லை. யூவில் தான் கேட்க முடிந்தது. இரண்டாம் பாடல் கேட்ட நினைவில்லை.

    கடுகு ஐயாவின் பாணியில் நெல்லைத் தமிழனின் கதை. நன்றாக இருக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்.  இரண்டாம் பாடலுக்கு சுட்டி மாற்றிக் கொடுத்துள்ளேன்.

      நீக்கு
    2. நன்றி வெங்கட்.

      Of late, எனக்கு நகைச்சுவைக் கதைகள், இயல்பான கிராமீய நடை அல்லது எளிமையான நடையில் எழுதுவது (கிரா பாணி, எஸ்.ரா பாணி), அனுபவங்களை ரசனையாக வட்டார மொழியில் எழுதுவது (பத்மனாபன்-உங்க அண்ணாச்சி ஹா ஹா, மற்றும் அவரைப் போன்ற ஸ்டார்கள் இணையத்தில் இருக்கிறார்கள்) இந்த மாதிரி கதைகள்தான் படிக்கப் பிடித்திருக்கிறது.

      நீக்கு
  19. சிறப்புச் சிறுகதை என்பதினால் அங்கேயே கவனம் பாய்ந்தது.

    தலைப்பைப் பார்த்தால் கதையாகத் தெரியவில்லை. 'சிக்'கென்று ஒரு கதைக்கான தலைப்பு ஏன் இல்லை என்று ஆரம்பத்திலேயே சந்தேகம்.

    நாலாவது வரியிலேயே 'தொச்சு' என்று ஒரு வார்த்தைப் பிரயோகம். தொச்சு என்றால் என்னவென்று தெரியாமல் இந்தக் கதையையே வாசிக்க முடியாதோ என்ற மிர்ட்சி ஏற்படுகிற அளவுக்கு நிறைய 'தொச்சு'கள்.

    மைத்துனனை 'தொச்சு' என்கிறார்களோ என்று இடையில் லவலேச சம்சயம். இருந்தாலும் மேற்கொண்டு படித்து ஊர்ஜிதம் பண்ணிக் கொள்ளலாம் என்று மேலே தொடர்ந்தால்...

    கதவுக்குப் பின்னால் இருந்து கொண்டு மாமியார் என்று திடீர் குழப்பம். அவர் உபயோக்கிற 'அவ ஆத்து' 'மாப்பிள்ளை' என்ற வார்த்தைகள் அவர் மாமியாராத் தெரிலே. பார்த்தா கமலாவின் தாயார் போல மறுபடியும் ஒரு சம்சயம்.

    தொடர்ச்சியா, 'அங்கச்சி' 'பப்ளி' என்று பி.எஸ்.ஆரின் கதைகளைப் படித்திருக்கிறவர்களுக்கே புரிபடுகிற வார்த்தைகள். கமலா, சரோஜா எல்லாம் கூட அவர் கேரக்டர்கள் பேர் தான் போலிருக்கு.

    எனக்கு பழக்கமான சப்ஜெக்ட் ஷேர் மார்க்கெட் வேறே. கொரானா சாக்கில் அந்த சப்ஜெக்ட்டும் போச்சா..

    திருப்பியும் தலைப்புக்குப் போனால் 'கொரானாவால் வந்த லாபம்' என்றால் ஷேர் மார்க்கெட் போகாமலிருந்ததைத் தான் லாபம் என்று கதாசிரியர் நினைத்தால்
    'கொரானாவினால் வந்த நஷ்டம்' என்று கூட தலைப்பிடலாம் என்று தோன்றியது.

    மொத்தத்தில் நெல்லை கிச்சு கிச்சு மூட்ட இன்னும் நிறைய முயற்சித்திருக்கலாம் என்று தோன்றியது.

    ஆனால் அவரின் உடனடியான முயற்சியை பாராட்டவே வேண்டும். இன்னும் இன்னும் என்று அவர் கதை சொல்ற திறமை கூடட்டும்..

    இன்னொரு கதையை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறேன், நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. //மைத்துனனை 'தொச்சு' என்கிறார்களோ /ஆம், இதிலே எந்தக் குழப்பமும் இல்லை. கடுகு சார் தன் மைத்துனனைத் தான் "தொச்சு" என்று அறிமுகம் செய்திருப்பார்.

      //அவ ஆத்து' 'மாப்பிள்ளை' என்ற வார்த்தைகள் அவர் மாமியாராத் தெரிலே. பார்த்தா கமலாவின் தாயார் போல மறுபடியும் ஒரு சம்சயம்.// கமலாவின் தாயாரே தான், கமலாவுடன் தான் இருப்பார். அதைச் சாக்கு வைத்துக்கொண்டு தொச்சுவும் அங்கச்சியும் அடிக்கடி அங்கே வந்து போவதும் அதனால் ஏற்படும் ரகளைகளுமே முக்கியமான கரு. அதைத் தான் நெல்லையும் எடுத்து ஆண்டிருக்கிறார். இதில் குழப்பமே இல்லை.

      நீக்கு
    2. வாங்க ஜீவி ஸார்...   நீங்கள் கடுகு ஸாரின் இந்தத்தொடர் படித்ததில்லை என்று தெரிகிறது.  இது அவரே எழுதியதா என்று எண்ணும் அளவு நெல்லை எழுதி இருப்பதாக எனக்குத்தோன்றியது.

      நீக்கு
    3. அதான் சொல்லியிருக்கிறேனே! அவர் எழுதியவைகளை அவ்வளவாகப் படித்ததில்லை. அதனால் தான் 'தொச்சு' எல்லாம் அன்னியப்பட்ட வார்த்தைகளாக இருந்தன. கதைப் போக்கில் நானாகவே அதந்தற்கு மைத்துனன் என்று அர்த்தம் கொண்டேன்.

      இந்த 'தொச்சு' என்ன, ஏதாவது மொழி சார்ந்த வார்த்தையா? தொத்தா (சித்தி, சின்னம்மா) என்பது போல?..

      நீக்கு
    4. தொச்சு மைத்துனனே தான். அதான் அக்கா, அத்திம்பேர் என்று கூப்பிடுகிறானே! :))))))) மாமியார், மைத்துனன், மைத்துனன் மனைவி இவர்கள் தொல்லை விடவில்லை என நகைச்சுவையாகச் சொல்லுவார் கடுகு சார். நெல்லையும் அதில் குறை வைக்கவில்லை. நீளம் அதிகம் என்பதைத் தவிர.

      நீக்கு
    5. வாங்க ஜீவி சார். உங்க பின்னூட்டங்கள் படித்தேன். உங்கள் கருத்து சரிதான்.

      சில வருடங்களுக்கு முன்பு, இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் எடுத்த டைரக்டர், இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் என்று ஒரு படம் எடுத்திருந்தார். அமெரிக்காவில் கெளபாய் படங்களைப் போன்ற தீம் அது. அதற்கு மதன் விமர்சனம் எழுதும்போது, படம் நல்லா இருக்கு, ஆனா இதை தமிழகத்தில் எத்தனைபேர் இந்த நகைச்சுவை பாணியைப் புரிந்துகொண்டு ரசிப்பார்கள் என்று எழுதினார். அதன்படி படம் ப்ளாப் ஆகிவிட்டது.

      கடுகு சார் என் ஆதர்ச நகைச்சுவை எழுத்தாளர். அவரின் மறைவு எனக்கு ஏற்படுத்திய தாக்கத்தால் அவர் பாணியில் உடனடி கதை எழுதியிருந்தேன் (நேற்று). கடுகு/அகஸ்தியன் கதைகளை ரசித்திராவிட்டால் (கமலா டைப் கதை), இந்தக் கதை ரசிக்கமுடியாது. இந்தக் கதைகளின் தீம், அப்பாவிக் கணவன், மனைவி கொஞ்சம் டாமினேட்டிங், மாமியாரும் தன் மாப்பிள்ளை வீட்டிலேயே இருக்கிறார். கமலாவின் தம்பி துரைசாமி என்ற தொச்சு, அவன் மனைவி, குழந்தை குடும்பம் அருகில் இருக்கிறது. அவ்வப்போது தொச்சு, கடுகு வீட்டிற்கு வந்து ஏதாவது உதவி செய்வதுபோல் உபத்திரவம் செய்வதும், அவனை, அவர் மனைவி+மாமியார் சப்போர்ட்டால் கடுகு தவிர்க்க முடியாதது போலவும், கடைசியில் தொச்சுவால் தொந்தரவுதான் வருவதுபோலவும் கதை எழுதுவார்.

      அவர் பாணி கதை எழுதினேன் என்ற பெருமை, அவர் இருக்கும்போது அனுப்பியிருந்தால், அவரிடமிருந்து பாராட்டு கிடைத்திருக்கலாம். அப்படி எழுதப் போகிறேன் என்று அவரிடமும் தெரிவித்திருந்தேன். இந்தக் கதை என் மன ஆறுதலுக்காக எழுதினேன்.

      நீக்கு
    6. @கீசா மேடம் - கடுகு சாரிடமும் நிறையதடவை சொல்லியிருக்கிறேன் (எழுதியிருக்கிறேன்). சில கதைகளில், அந்த சம்பவங்களை இன்னும் நீட்டி இருக்கலாம் என்பது மாதிரி. அவர் எப்போதும் சொல்வது, நகைச்சுவைக் கதையை நீட்டினால் நீர்த்துவிடும்.

      நான் முதன் முதலில் (கடைசியுமாக என்று நினைக்கிறேன்) கடுகு சார் பாணியில் எழுதியது. அதனால் முற்றிலும் சரியாக வர வாய்ப்பில்லை. அவர் ஜாம்பவான். நான் காப்பி அடிக்க முயன்றவன்.

      நீக்கு
    7. //Geetha Sambasivam5 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 4:01
      தொச்சு மைத்துனனே தான். அதான் அக்கா, அத்திம்பேர் என்று கூப்பிடுகிறானே! :)))))))//

      கீசாக்கா, நீங்கள் சொன்னதைப்போல் கதையில் எந்தக் குழப்பமும் இல்லை, தொச்சு என்பது, அவரின் பெயர்... இப்படித்தான் நான் எடுத்துக் கொண்டேன்..

      நீங்கள், உங்கள் பேச்சுமொழியில் எழுதியிருக்கிறீங்க நெல்லைத்தமிழன்.. நான் மிகவும் ரசிச்சேன் கதையை.

      நீக்கு
    8. நன்றி அதிரா மேடம்....

      நாலு புல்லை வெட்டிவிட்டு நானும் 'விவசாயி' என்று பட்டம் வைத்துக்கொண்டு வடிவேலு சொல்லும் 'நானும் ரெளடிதான்' என்பதை நினைவுபடுத்துகிறீர்களே

      நீக்கு
    9. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நான் மேடம் இல்லையாக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))...நான் ராசியைச் சொன்னேன்ன்ன்:)).. எனக்குத்தான் செவின் பொயிண்ட் 5 கடைக்கூறு நடக்குது ஜாக்ர்ர்ர்ர்தையா இருக்கச் சொல்லி அம்மம்மா சொன்னவ:))

      நீக்கு
    10. இடைக்கூறே எனக்கு ரொம்பவே படுத்திவிட்டது. (முதல்கூறின் கடைசியிலிருந்து). 7 1/2 கடைசிக்கூறை பாதசனி என்று சொல்வார்கள். கால் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரும் என்பார்கள், அதிலும் இரண்டாவதாக 7 1/2 சனியைச் சந்திப்பவர்கள் (30 வருடத்துக்கு ஒரு முறை). நீங்கதான் இரண்டு 7 1/2 ஆச்சே (நான் 15 வயசைச் சொன்னேன். ஹா ஹா)

      நீக்கு
    11. இந்த செவின் பொயிண்ட் 5 அங்கிளை.. மங்குசனி பொங்குசனி மரணச் சனி என்பினமெல்லோ.. அப்போ சின்னனில் நான் நினைச்சேன்.. முதல்கூறு மங்குசனி.. கடைக்கூறு மரணச்சனியாக்கும்[ஒரு 7.5 இலேயே:)]. ஹையோ கடசிக்கூறு வந்தால் நான் இறந்திடுவேனோ ஆண்டவா என்றெல்லாம் பயந்தேன் தெரியுமோ ஹா ஹா ஹா.. எனக்குச் சாகிறதெண்டால் சரியான பயம் பாருங்கோ:))

      நீக்கு
    12. இந்த 'பொங்குசனி' என்று யார் சொன்னார்கள் என்று கண்டுபிடித்து அழைத்து வாருங்கள். நல்லா ஒரு 'அறை' கொடுக்கறேன்.

      பொதுவா நீங்க சொன்ன மாதிரி முதல் 7 1/2 மங்குசனி (அப்போ நம் வளர்ச்சி படிப்பு மங்கும்), இரண்டாவது 7 1/2 பொங்குசனி - முதல் 5 வருடம் படுத்திவிட்டு பிறகு நல்லது செய்துவிட்டுப் போகும், கடைசி 7 1/2யில் பொதுவாக மரணம் அல்லது அதற்கு இணையான கஷ்டம் வரும்.

      ஒரு 7 1/2லிலேயே முதல் 2 1/2, நடு 2 1/2 , கடைசி 2 1/2 என்று பலன்கள் மாறும். கடைசி 2 1/2 பாதச் சனி என்பார்கள்.

      'இறப்பு' ஒன்றுக்குத்தான் நமக்கு பயம் இருக்கக்கூடாது. நாம் இருக்கும் வரை அது வரவே வராது. அது வந்தபோதுதான் நாம் இருக்கமாட்டோமே.

      நீக்கு
  20. கடுகு சார் கதைகளை நினைவில் கொள்கிற அளவுக்கு நான் படித்ததில்லை. அதனால் வந்த குழப்பம். அவர் கதைகளைப் படித்தவர்களுக்குத் தான் இந்தக் கதை புரியும் என்று முன் குறிப்பு கொடுத்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பு கொடுக்க வேண்டாம்.  ஆனால் அதைப் படிக்காதவர்களுக்கும் புரியும் வண்ணம் உள்ளதாகவே நான் நினைக்கிறேன் ஜீவி ஸார்.

      நீக்கு
    2. எல்லோருக்கும் புரியும் வண்ணமே இருக்கிறது.

      நீக்கு
    3. அப்போ துரைசாமி என்ற பெயர் தான் தொச்சு ஆயிடுத்தா? யாருமே சொல்லலே பாருங்கோ நன்றி நெல்லை. கடுகு சார் எழுத்தை அழமாகத்தான் படிச்சிக்கிருக்கீங்க.

      நீக்கு
  21. கொரோனா வந்ததில் தொச்சுவுக்குத்தான் சந்தோஷமாக இருந்திருக்கிறது :) சூப்பர்.

    கதையை நன்கு நகர்த்தி சென்றிருக்கிறீர்கள். சுவாரஸ்யம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையைத் தானே சொல்லுவதாக எப்போதும் கடுகு சார் அமைப்பார். அப்படியே நெல்லையும் அமைத்திருக்கிறார்.ஆகவே கதவிடுக்கிலிருந்து எட்டிப் பார்ப்பது அவர் மாமியார்/அதாவது தொச்சுவின் அத்திம்பேரின் மாமியார்/தொச்சு, கமலாவின் தாயார். சரியாகவே நெல்லை எழுதி இருக்கார்.

      நீக்கு
    2. நன்றி கீசா மேடம். I appreciate and thank you.

      நீக்கு
  23. 'தொச்சுவுக்குத்தான்' மன்னிக்கவும் பிழையான தட்டச்சு அத்திம்பேருக்குத்தான் என வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  24. அனைவருக்கும் மதிய வணக்கங்கள்.
    முதலில் இன்று மஹாபெரியவாளின் அனுஷ ஜெயந்தி. ஆகவே, யாவரையும் தொனைக்கும் இக்கொரோனா வெகு விரைவில் காணாமல் போய் விட வேண்டும் என்று பிரார்த்தித்து ஆரம்பிக்கின்றேன்.

    மூடுபனியின் இந்த முதல் பாடல் மிகவும் இனியதும், சுகமானதுமாகும். என்றும் ரசிக்க வைக்கும் ஒன்று.

    நெல்லை தமிழன் சார், டப்பென்று ஓர் நகைச்சுவையான அதே சமயம் எல்லோர் வீட்டிலும் லைவர் படும் அவஸ்தையையும் படம் பிடித்து காட்டுவது போல் அமர்க்களமான ஒரு கதையை எழுதித் தள்ளி விட்டீர்கள். மிகப் பிரமாதம் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரமா...   இரண்டாவது பாடலைக் கேட்டீர்களா?  கேட்டீர்களா?  கேட்டீர்களா?!!

      நீக்கு
    2. நன்றி ரமா ஸ்ரீநிவாசன் அவர்கள்

      நீக்கு
  25. என்ன இது தலைப்பிற்குள் ஏதோ நுழைந்திருக்கிறதே எனப் பார்த்தால்.. நெலைத்தமிழன் கதை எழுதியிருக்கிறார்.. சிறுகதை ஓகே.. அது என்ன “சிறப்புச்..” ... ஹா ஹா ஹா படிச்சால்தான் தெரியுமோ...

    இது நல்ல ஐடியாத்தான், பாட்டுக்கு என்ன் சொல்வதென்று புரிவதில்லை வெள்ளிகளில்.. பிடிச்சிருக்கு, கேட்ட பாடல், நல்லா இருக்கு.. நல்லா இல்லை... கேட்டதாக இல்லை.. இப்படிப் போடுவதைத்தாண்டி எதுவும் சொல்ல வருவதில்லை ஹா ஹா ஹா.. அதனால வெள்ளிக்கிழமையை.. பாட்டுக்கு மட்டுமில்லாமல் இப்பூடிக் “கோலமும்”.. போட உபயோகிப்பது நல்லதே:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...   ஆனாலும் பெரும்பாலும் பாட்டு மட்டும்தான் வரும்!  ஹிஹிஹிஹி...

      நீக்கு
  26. மூடுபனி.. பார்க்க நினைத்த படம், ஆனால் என்னவெனில் பல நல்ல படங்கள் பார்க்க முடியாமல் இருக்குது, வீடியோத் தெளிவாக வருவதில்லை...

    நெட்பிளிக்ஸில் பழைய படங்கள் வருவதில்லையோ என எனக்குச் சந்தேகம்...
    அமேசன் பிறைம் இருக்குது, ஆனா இன்னமும் மூவி பார்க்க அதனைப் பாவிக்கத்தொடங்கவில்லை, தொடங்கோணும்...

    ///மஹாலக்ஷ்மி மேனன்? //

    என்ன இது ஷோபா போல இருக்கே, ஆனா வேறு பெயர் போட்டுவிட்டீங்களே எனப் பதறிட்டேன்..:).. எனக்கு ஷோபாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.. பிரதாப் ஐப் பிடிக்காது ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படம் பார்க்கவில்லை என்றால் நம்பிப் பார்க்கலாம் அதிரா..   நல்ல படம்.  இளையராஜாவும் தூள் பண்ணி இருப்பார்.

      நீக்கு
    2. பிரதாப்புக்கு என்ன குறை? அவரையும் ராதிகாவையும் பற்றி இங்கு கிசுகிசு எழுதுவதாக இல்லை. எனக்கு ஷோபாவை, அவர் பெயர் பெற்ற அளவு ரசிக்கமுடிவதில்லை. பாலுமகேந்திரா நாட்டுக்கு ஒரு படமும் தனக்கு ஒரு குடும்பமும் தேடிக்கொண்டாரோ?

      நீக்கு
    3. //நெல்லைத் தமிழன்5 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 6:18
      பிரதாப்புக்கு என்ன குறை?//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நெல்லைத்தமிழன், அவரில் குறை இல்லை, ஆனா எனக்கென்னமோ அவரை ஒரு நடிகராக ஏற்றுக் கொள்ளவே முடிவதில்லை:(..

      //பாலுமகேந்திரா நாட்டுக்கு ஒரு படமும் தனக்கு ஒரு குடும்பமும் தேடிக்கொண்டாரோ?//

      ஹா ஹா ஹா ஏன் இப்பூடிப் புகையுது:))

      நீக்கு
    4. பிரதாப்புக்கும் ராதிகாவுக்கு பிறந்த பெண் இப்போது ராதிகாவுடன் இருக்கிறார்.  ரேயானோ என்னவோ பெயர்.

      நீக்கு
    5. ஸ்ரீராம்.... வரலாற்றுப் பிழையாகிடுச்சே உங்க தகவல்.

      ராதிகாவின் இரண்டாவது (?) கணவர் (வெளிநாடு). அவருக்குப் பிறந்தது இந்த ரேயான். பிரதாப் போத்தனுடனான திருமணம் வெற்றிகரமாக இல்லை. மூன்றாவது சரத்குமார். அது நல்லா போயிக்கிட்டு இருக்கு.

      நீக்கு
    6. அப்படியா...    மறுபடி கன்ஃபியூஸ் ஆகி விட்டேனா?  நானெல்லாம் கிசுகிசுவுக்கு லாயக்கில்லை!

      நீக்கு
    7. Nellai is right. That girl is married some years ago.

      நீக்கு
  27. என் இனிய பொன்னிலாவே.. மிக மிக அழகான பாடல், பூஸ் ரேடியோவில் அடிக்கடி போகும், போகும்போதெல்லாம் ரசிப்பேன்... ஆரம்பம் முதல் முடிவுவரை பாட்டை ரசிக்கலாம்..

    2 வது பாடல் புரியவில்லை... கேட்டதாகவும் இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாவது பாடல் இங்கு ஓடவிலை என்றதும் சுட்டி மாற்றி உள்ளேன்.  கேட்டுப்பாருங்கள்.  நான்கு வரி தாலாட்டு...

      நீக்கு
    2. நான்கே நான்கு வரியில் ஒரு பாட்டோ.. சோகமாக இருக்கும்போல...

      போனமுறையும் ஒரு குட்டிப் பாட்டுப் போட்டீங்கள்...

      நீக்கு
  28. அகஸ்தியன் ஹாஸ்யமாக எழுதுகிறவர் எனத் தெரிந்திருந்ததே தவிர, அவர் கதைகள் எதையும் நான் படித்ததில்லை.
    இந்த தொச்சு, கொத்சு மனதில் இறங்க கொஞ்சம் நேரமாயிற்று. மற்றபடி ஹாஸ்யக் கதை வகைமையில் முதல் முயற்சி எனில், நெல்லைக்குப் பாராட்டு!
    அவரிடமிருந்து மேற்கொண்டு வரும் எழுத்துக்கள் மேலும் மெருகோடு இருக்கும் என நம்பலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் சார்...இந்த பாணி கதைகள் இனி வராது. அது கடுகு சாரோடு போயிற்று. நேரம் கிடைக்கும்போது அவரது தளத்தில் ஏதாவது ஒரு கதையைப் படித்துப் பாருங்கள்.

      நீக்கு
  29. ஹா ஹா ஹா கதை படிச்சிட்டேன்...

    //உரலுக்குள் தலையைக் கொடுத்தாகிவிட்டது..இனி இடிக்குப் பயந்தால் ஆகுமா?
    //
    ஆஆஆஆ இது என் கொப்பி வலதுப்பயமொயி ஆக்கும்:)) ஹா ஹா ஹா..

    “தொச்சு”.. இவர்தானே இக்கதையின் மெயின் கரெக்டர்... ஹா ஹா ஹா நன்றாகத்தான் பேசுகிறார். கதையின் எழுத்துநடை மிக நன்றாக இருக்கிறது.

    எங்கிருந்து தொச்சு... பொச்சு என்பதைப்போல எடுத்தீங்கள் இப்பெயரை நெ தமிழன் ஹா ஹா ஹா, ஆளின் கரெக்ட்டருக்கேற்ற பெயர்:).

    இப்படிப் பல தொச்சுக்கள் ஊரில் உள்ளார்கள்தான், அதாவது வஞ்சகம் சூது இல்லாமல், நோ வெயிக்கம் நோ ரோசம் என வாழ்வோர்.. ஹா ஹா ஹா.

    இப்படியானோர், வீட்டுக்கு வந்து போகும்போது, ஹையோ ஏன் வருகிறாரோ என இருக்கும், ஆனால் ஒருநாள் அவர்கள் வராதுவிட்டாலும் நமக்கு வேலை ஓடாது, காணவில்லையே என மனம் தவிக்கும்...

    அத்திம்பேர் விபரமான ஆள்தான்:)).. அழகான கதை ரசிச்சேன்.

    நானும் என் பெயரில ஒரு ஷெயார் மார்கட் ஓபின் பண்ணி ஒரு கோடி போடலாம் என நினைக்கையில:)) இக்கதையை எழுதி வெளியிட்டிருக்கிறீங்கள்? இப்போ நான் போடலாமொ வாணாமோ என ஓசிக்கிறேன்ன்:)).. ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கதை எழுதும் பாணி, மறைந்த கடுகு சாருடையது. அந்த பாணி கதைகள் (in my opinion) ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மற்றவர்களைவிட அதிகமாகப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், they can relate.

      நன்றி விவசாயி கமக்காரி

      நீக்கு
    2. //நெல்லைத் தமிழன்5 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 6:15
      இந்தக் கதை எழுதும் பாணி, மறைந்த கடுகு சாருடையது.//

      ஓ அதனாலென்ன, நாம் ஆருடன் அதிகம் பழகுகிறோமோ, ஆருடைய கதைகளை அதிகம் படிக்கிறோம், காதில் கேட்கிறோமோ.. அந்த ஸ்டைல் நமக்குள் ஓட்டமெட்டிக்கா வருவது இயல்புதானே..

      //நன்றி விவசாயி கமக்காரி///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அது கமக்கார அதிராவாக்கும்:))

      நீக்கு
  30. இது ஒரு ஒபிசல் கடிதம்.....:)

    இலக்கம் 22,
    குறுக்கு வீதி,
    தேம்ஸ்கரை,
    பிரித்தானியா.
    05.06.2020.

    எங்கள் புளொக்கின், முதலாவது மற்றும் 3 வது ஆசிரியர்களுக்கு,

    புளொக் இப்பொழுது அழகாகவும், வேகமாகவும் இருக்கிறது, அதுக்கு எங்கள் பாராட்டுக்கள்.



    ஆனால் நெல்லைத்தமிழனின் கதையின் வரிகளுக்கான இடைவெளி போதவில்லை, எழுத்துக்கள் ஒன்றுக்கு கீழே ஒன்று ஒட்டியிருப்பதைப்போல இருந்து என் கண்ணுக்கு இடைஞ்சலை உண்டுபண்ணுது. இப்போ கண்ணில ஏதும் பிரச்சனை எனில், கண் டொக்டர் வந்திடாதே எனச் சொல்லிட்டார்ர்.. கொரோனாப் பயமாம்:))..

    அதனால என் கண்ணுக்கு ஏதும் பிரச்சனை வந்திட்டால், கண்ணாடிக்கான செலவை நீங்கள் தரவேண்டும் என மனுக் குடுக்கிறேன்:)...

    இப்படிக்கு,

    உண்மையான:), நேர்மையான:)..
    எங்கள்புளொக் நேயர்களில் ஒருவரான..
    நான்:)).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் அனுப்பி இருந்த Fonts அப்படி..  இங்கு என்ன செய்தும் சரியாய் வரவில்லை.  முழுசும் நானே டைப் பண்ணிப் போட்டால் சரியாய் வரும்!

      நீக்கு
    2. //கண்ணாடிக்கான செலவை நீங்கள் தரவேண்டும் என மனுக் குடுக்கிறேன்:)...//
      பேரு பிஞ்சு பெதுமபை ஆனா கண் தெரிலயாம் :))))@ நெல்லைத்தமிழன் அந்த தொச்சுவின் அம்மா போட்டிருந்த கண்ணாடியை பிஞ்சுவுக்கு பார்சல் பண்ணிவிடவும் 

      நீக்கு
    3. //எழுத்துக்கள் ஒன்றுக்கு கீழே ஒன்று ஒட்டியிருப்பதைப்போல இருந்து என் கண்ணுக்கு இடைஞ்சலை உண்டுபண்ணுது.//

      இறைவாஆஆஆ..... கதை படிக்க கண் தெரியலைனா பரவாயில்லை. பெஸ்டிசைடுகளுக்குப் பதில் வேறு ஏதாவது இந்த விவசாயி செடிகளுக்குத் தெளித்துவிட்டால் (கண் தெரியாததால்) அந்தச் செடிகள் என்ன ஆகும்?

      15 1/2 வயசுலயே இந்த நிலைமையா?

      நீக்கு
    4. // முழுசும் நானே டைப் பண்ணிப் போட்டால் சரியாய் வரும் //

      ஸ்ரீராம் சார்... அனுப்புபவர்கள் பயன்படுத்தும் முறை பொறுத்து, Fonts மாறித்தான் இருக்கும்... நீங்கள் வருவதை அப்படியே copy செய்து Ms-word file-ல் paste செய்து விட்டு, பதிவு முழுவதையும் தேர்வு செய்து விட்டு (Alt-A) Styles எனும் option-ல் Normal என்பதை சொடுக்கிவிட்டு, அதன் பின் பதிவை, நம் தளத்தில் போட்டு விட்டால் சரியாகி விடும்...

      நீக்கு
    5. ///பேரு பிஞ்சு பெதுமபை ஆனா கண் தெரிலயாம் :))))///

      //15 1/2 வயசுலயே இந்த நிலைமையா?//
      ஸ்ரீராம், உங்கள் புளொக்கில வச்சு ஒரு சுவீட் 16 ஐ[என்னைச் சொன்னேன்:)] அடிஅடியென அடிக்கீனம்:)),, இதைப்பார்த்தபின்பும் எப்பூடி நீங்கள் நாலு கேள்வி கேட்காமல் இருக்கிறீங்கள் இவர்கள் இருவரையும் பார்த்து கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... விடுங்கோ நான் காசிக்குப் போகிறேன்ன்.. பிளேன் ஃபிரீயாப் போகுதாமே:))

      நீக்கு
    6. எனக்கும் வாக்கியங்கள் ஒன்று மேல் ஒன்று ஒட்டித்தான் தெரியுது. ஸ்ரீராமுக்குத் தனியாச் செய்தி அனுப்பிச் சரி செய்யச் சொன்னேன். அவரால் முடியலைனார். :)))))

      நீக்கு
    7. //பிளேன் ஃபிரீயாப் போகுதாமே// - ஆம்...இப்போ ப்ளேனில் பறப்பது ஃப்ரீதான். இறங்க மட்டும் காசு கேட்பினம். காசு குறைவாக் கொடுத்தால் 'கொ..னா' கொடுப்பினம். ஹா ஹா

      நீக்கு
    8. //செய்தி அனுப்பிச் சரி செய்யச் சொன்னேன். அவரால் முடியலைனார். :)))))//

      கீசாக்கா, அவர் முடியவில்லை எனச் சொன்னாரா?:) இல்லை முடியாது எனச் சொன்னாரோ?:) எனக்குத் தெளிவான பதில் தேவை:)).. ஹையோ என் வாய்தான் நேக்கு எதிரி:)) நான் நாட்டில இல்லை.. இல்லை இல்லை:))..

      மிச்சக்காசுக்குக் கொரோனாவோ நெல்லைத்தமிழன் ஹா ஹா ஹா:))..

      டிடி சொன்னதைப்போல வேர்ட் ஐ இறக்குமதி செய்திட்டால், ஸ்ரீராமுக்கு வேலை ஈசி:))

      நீக்கு
    9. முடியலைனு தான் சொன்னார். அவருக்கு நேரமும் இல்லையே! பாவம்!

      நீக்கு
    10. ஹா ஹா ஹா கீசாக்கா சீரியசாகப் பதில் சொல்லியிருக்கிறா:))

      நீக்கு
    11. ஸ்ரீராம் நான் சொல்ல வந்ததை டிடி சொல்லிவிட்டார். அதே தான் வேர்ட் ஃபைலில் காபி செய்து...

      ஆனால் எனக்கு வரிகள் சரியாக வந்ததே. ஓவர் லேப் ஆகவில்லை

      கீதா

      நீக்கு
    12. கதையின் கடைசிப் பகுதிகளை இப்படிச் செய்து வெளியிட்டிருக்கிறேன்.  ஏதாவது மாறுதல் தெரிகிறதா?

      நீக்கு
    13. பெதும்பை அதிராவுக்கு. ctrl + அழுத்தி பெரிதாகி படிக்கவும். Jayakumar

      நீக்கு
  31. தொச்சு அங்கச்சி :) மாமியார் என  அதகளப்படுத்திவிட்டீர்கள் ..மனசு லேசானாற்போன்ற உணர்வு .வாழ்த்துக்கள் நெல்லைத்தமிழன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @நெல்லைத்தமிழன் விரிவா ரசிச்சி பின்னூட்டமிட முடியலை ..வேலைக்கு புறப்படறேன் .

      நீக்கு
    2. ஏஞ்சலின்.... நன்றி... ஆனால் இந்த டைப் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது.

      நீக்கு
    3. ///ஆனால் இந்த டைப் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது.//

      ஏன் நெல்லைத்தமிழன், நீங்க எதையோ மனதில வச்சுக்கொண்டு வெளியே மறைமுகமாகச் சொல்றீங்கள் போல இருக்குது.. மீ ஒரு அப்பாவி ஆக்கும் நேரிடையாகச் சொன்னால்தான் புரியும்.. இங்கு என்ன நாம் தெரிந்தவர்கள் மட்டும்தானே:) படிக்கிறோம்:))ஹா ஹா ஹா உள்ளபடி சொன்னால் என்னவாம்:))[ஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் சொன்னதையே சொல்லிட்டேன்ன்ன்ன்ன்]..

      நீக்கு
    4. இல்லை அதிரா..உண்மையாவே... சில டைப் கதைகள் சிலருக்குப் பிடிக்கும். ஹாரர் மூவி, காமெடி, கெளபாய் மூவி, த்ரில்லர், ரொமான்ஸ் என்று ஒவ்வொரு ஜோனர், சிலருக்குப் பிடிக்காதல்லவா? அதைச் சொன்னேன்.

      கதைக்களம், எந்தச் சூழல் என்று புரிந்தால் எல்லாரும் ரசிக்கலாம்.

      எனக்கு சில வட்டார வழக்குக் கதைகள் புரியாது, ரசிக்காது.

      நீக்கு
  32. அம்மம்மா ஷோபாவின் கள்ளமற்ற புன்னகை அழகோ அழகு தாசேட்டானின் குரல் இழைத்து குழைத்து சூப்பர் பாட்டு மிக பிடிச்சது 

    பதிலளிநீக்கு
  33. பாடல்கள் அருமை.
    படம் பார்க்கவில்லை பார்க்க வேண்டும்.
    அதிரா "பொன்நகரம்" படத்தில் இருந்து இரண்டு பாட்டு போட்டார், அதில் ஷோபா நடித்து இருந்தார் ,அவரை பார்க்கவே அந்த படத்தை தேடிப் பார்த்தேன்.
    நடிப்பது போலவே தெரியாமல் யதார்த்தமாக நடிப்பார்.முள்ளும் மலரும் படம் ஷோபா மிகவும் பிடிக்கும் எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னகரம் படத்தில்  இரண்டு பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  முள்ளும் மலரும் அப்படத்தில் ஜென்சி பாடல் ரொம்பப்பிடிக்கும்.

      நீக்கு
    2. ஆஆஆ கோமதி அக்காவும் பொன்னகரம் பார்த்துவிட்டா...

      நீக்கு
  34. துரைசாமி என்னும்பெயரெ தொச்சு ஆயீற்றோ என்பதே அடியேனின் சந்தேகம் கடுகு கதைகளைப் படித்திருகிறேன் ஏறக்குறைய ஸ்டீரியோ டைப்ப்ட் மூடுபனி ஷோப அவி நடிப்பு பிடிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொச்சு என்பதற்கு பெயர் விளக்கமே கடுகு ஸார் கொடுத்திருக்க மாட்டார் என்று ஞாபகம்.  அதேபோல அங்கச்சிக்கும்.  

      நன்றி ஜி எம் பி ஸார்.

      நீக்கு
    2. துரைசாமிதான் தொச்சு. எங்கள் வீட்டில்:)
      தங்கச்சி தான் அங்கச்சி.
      தம்பி அம்பி ஆவது போல.

      நீக்கு
    3. இப்படீல்லாம் யோசித்ததில்லை ஜி.எம்.பி சார்...ஆனால் நீங்கள் மற்றும் வல்லிம்மா சொல்லியுள்ளது சரி.

      நீக்கு
    4. வல்லிம்மா... எங்க ஊரில் என் நண்பன் ஒருவனை அவர்கள் வீட்டில் அம்பி என்று அழைப்பார்கள். நாங்களும் அப்படி அழைப்போம் (அவன் பெயர் மகரபூஷணம்). இப்போதுதான் 'தம்பி' என்ற அர்த்தத்தில்தான் அவன் அக்காக்கள் அம்பி என்று கூட்டிருக்கிறார்கள் என்று. இது கீழநத்தத்தில்.

      நீக்கு
    5. என் பெரிய மைத்துனரை (எங்க மதுரை வழக்கில் கொழுந்தன்) அம்பி என்றே வீட்டில் அனைவரும் அழைப்பார்கள்.

      நீக்கு
    6. எங்க ஊர்லயும் நிறைய அம்பிக்கள் உண்டு. நாங்க எந்த வீட்டு அம்பி என்று சொல்லி வேறுபடுத்திக் கொள்வோம்.

      தொச்சு என்பது போல் எங்கள் ஊரில் அங்கச்சின்னே உண்டு. அப்படிச் சொல்லி அவர் ஏன்னைவிடப் பெரியவர் ஸோ நான் அங்கச்சி அக்கா என்றே சொல்லும்படி ஆகிவிட்டது!!!!!!!!!!!!!!

      கிருஷ்ணச்வாமி - கிச்சாமி/கிச்சா, பார்த்தசாரதி - பாச்சு/பாச்சா, பத்மநாபன் - பத்து, வெங்கட என்று தொடங்கும் பெயர் உடையவரள் வெங்கிடி, வெங்கட், வெங்கி, சீதாலக்ஷ்மி - சீச்சு, விசாலாட்சி - விசாலி, விஸ்வநாதன் - விச்சு, நரசிம்மன் - நச்சா, நரஸ், நரசி இப்படி நிறைய உண்டு.

      கீதா

      நீக்கு
    7. விசாலாட்சி - சாலா (இது நகரத்தார் சமூகத்தில் வைக்கும் பெயர். ஷார்ட்டா இப்படிக் கூப்பிடுவாங்க). மீனாட்சி-மீனா, நாராயணன் - நாணா என்று நிறைய உண்டு.

      நீக்கு
    8. அண்ணா அய்யங்கார் தம்பு அய்யங்கார் தாத்தா சாரியார் அம்பி அய்யர் என்ற நிஜப்பெயர்களை கொண்ட பெரியவர்களை எனக்கு தெரியும். 

      நீக்கு
  35. அப்போதெல்லாம் என்மகன் அவர்களது ஆர்கெஸ்ட்ராவில் பாடும்பாடல் மிகவும்ரசிப்பேன்

    பதிலளிநீக்கு
  36. நெல்லைத்தமிழன் அவர்கள் கதை மிகவும் நன்றாக இருக்கிறது. கடுகு சார் போலவே எழுதி இருக்கிறார். படங்கள் நன்றாக இருக்கிறது.

    ரசித்த வரிகள் :-

    //"ஏண்டீ காலைல மாப்பிள்ளையை ஏதேனும் சொல்ற? அவருக்கு, அவர் ஆத்து மனுஷாதான் முக்கியமாப் படறது. நம்பாத்து மனுஷா, தேகம் ஒடிய சிச்ருஷை செய்தாலும் அலட்சியமாப் போயிடறது" என்று சந்தடி சாக்கில் கந்தகப் பொடியை வைத்தார். மாமியார்.//

    நல்ல வெடிக்குமே!

    //"என்னை மாதிரி இளிச்சவாய் அத்திம்பேரும், ஈஷிக்கொள்கிற அக்காவும் இருக்கும்போது உனக்கு கலகலன்னு இருக்கறதுக்கு என்ன கொறைச்சல்? அடுத்தவன் காசில் மஞ்சக்குளிக்கிறவங்களுக்கு கவலை எங்கேர்ந்து வரும்?"//

    அத்திம்பேர் இருக்கும் போது தொச்சுக்கு கவலை ஏன்?

    //எனக்கு தலைக்கு வந்த கத்தி தலைப்பாகையோட போயிடுத்துன்னு நானே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, வீட்டுக்குள்ளேயே நிம்மதியா பேப்பர் படிச்சுக்கிட்டு, சந்தை கிந்தை எங்கும் போகாமல், தொச்சு கும்பலின் வரவு (அது எங்க... அவா வந்தாலே செலவுதான்.. இது என் மனசு) இல்லாமல் இந்த மூணு மாசமா அக்கடான்னு இருக்கேன். இதுல ஷேர் மார்க்கெட் இன்வெஸ்ட்மெண்ட் என்னாச்சுன்னு தெரிஞ்சுக்க வந்திருக்கீங்களே.//

    நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டு இருப்பவரை கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம்.

    இனி அடிக்கடி இப்படி நகைச்சுவை கதைகள் எழுதலாம் நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அரசு மேடம்... எனக்கும் கதை எழுதும் திறமைக்கும் வெகு தூரம். என் ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவரான கடுகு சாருக்கு அஞ்சலி செய்யும் நோக்கம்தான் இதில்.

      நீக்கு
  37. மூடு பனி படம் பார்த்திருக்கிறேன். என்னை பெரிதாக கவரவில்லை. ஷோபாவிற்கு மாடர்ன் அவுட்ஃபிட் பொருந்தவில்லை என்று தோன்றியது. இந்தப் படம் வெளியான பொழுது "மாமா அம்மா மாமா அம்மா" என்று  கிளைமாக்சில்  பிரதாப் கூறுவதை வைத்து நிறைய ஜோக்குகள் வந்தன. அது மீம்ஸ் இல்லாத காலமாச்சே. நீங்கள் பகிர்ந்திருக்கும் முதல் பாடல் இனிமை! இரண்டாம் பாடல் கேட்ட நினைவு இல்லை. 



    பதிலளிநீக்கு
  38. அகஸ்தியன் பாணியில் நெல்லை தமிழன் எழுதியிருக்கும் கதை என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஏன் அவரைப்  போலவே எழுத வேண்டும்? நெல்லை எழுதியிருக்கும் இந்த கதை இன்னும் சில நாட்களில் கடுகு சார் எழுதிய கடைசி கதை என்று வாட்ஸாப்பில் வலம் வராமல் இருக்க வேண்டும். 
    உங்களை குறை கூற வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை நெல்லை. படைப்பாளிகளுக்கு முக்கியம் தனித்தன்மை. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடுகு சாரை நினைவுகூறும் விதத்திலும் அஞ்சலி செய்யும் விதத்திலும் நேற்று எழுதிய கதை.

      நீக்கு
    2. //சில நாட்களில் கடுகு சார் எழுதிய கடைசி கதை என்று வாட்ஸாப்பில் வலம் வராமல் இருக்க வேண்டும். // - ஹா ஹா.... அப்படி வந்தால் அதைவிட பெருமை வேறு என்ன இருக்கிறது?

      நான் வாட்சப்பில் திருநாங்கூர் கோவில் தொடர்பான, அங்கு வேலை செய்யும் ஒருவர் பற்றியதான நகைச்சுவை எழுத்தைப் படித்தேன். மிகவும் ரசித்தேன் (பார்ட் 2 இன்னும் வந்த மாதிரி தெரியலை). நேட்டிவிட்டி எழுத்து. @ganeshamarkalam எழுதியது. நான் முகநூலில் இல்லாததால் இந்தமாதிரி ரசனையான எழுத்துக்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

      நீக்கு
    3. ஏற்கெனவே பாக்கியம் ராமசாமி என்கிற ஜராசு இறந்ததும் அப்புசாமி, சீதாப்பாட்டியை வைத்து அதே மாதிரி நகைச்சுவையை ஒருத்தர் முகநூலில் எழுதி வருகிறார். பெயர் நினைவில் இல்லை. நந்து - சுந்துவாக இருக்குமோ? அப்புசாமியும் கொரோனாவும் என்னும் தலைப்பில் கூட வந்தாச்சு!

      நீக்கு
  39. ஆசை ராஜா ஆரீரோ பாடல் கேட்டதே இல்லை.

    முதல் பாடல் கேட்காதவர்களே இருக்கமாட்டார்கள்.

    படம் பார்த்த நினைவு இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் பார்க்கலாம்.   அந்தத் தாலாட்டு மனதை என்னவோ செய்யும் தாலாட்டு.

      நீக்கு
  40. வெளியிட்ட எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்கு நன்றி. எனக்கு மனதில் கடுகு சாருக்கு அஞ்சலி செலுத்தின நிம்மதி.

    கடுகு சாரின் மகள் ஆனந்தி அவர்கள், என் மனைவிக்கு கடுகு சாரின் மறைவைத் தெரிவித்திருந்தார்கள் (காண்டாக்ட்ஸில் அந்த எண் இருந்திருக்கும். நான் அப்போது இந்தியாவில் இல்லையே. இப்போ பழைய நம்பரும் இல்லை).

    கடுகு சாரின் பாணி, அவருக்கு மட்டுமே உரியது. அதை நான் எடுத்தாட்கொண்டு வரும் காலத்தில் கதை எழுதுவது சரியாக இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///கடுகு சாரின் பாணி, அவருக்கு மட்டுமே உரியது. அதை நான் எடுத்தாட்கொண்டு வரும் காலத்தில் கதை எழுதுவது சரியாக இருக்காது.//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லைத்தமிழன், நாளைக்கு கண்ணதாசன் அங்கிளைப்போல நான் எழுதினால்.. திட்டுவீங்க போல இருக்கே:))ஹா ஹா ஹா.. நமக்குப் பிடித்தவர்கள் நம் ரோல் மொடல் தானே, அவர்கள் பாணியில் எழுதுவதில் என்ன தப்பிருக்குது..

      எல்லோருக்கும் அப்படி.. மிமிகிரி போல, ஒருவர் பாணியில் எழுதவராதே.. அந்தத் திறமை உங்களிடம் உள்ளது... அதைப் புரிஞ்சுகொள்ளாமல். .. இப்பூடி டக்குப் பக்கென வாபஸ் கடிதம் நீட்டப்பிடாது கர்ர்ர்:))

      நீக்கு
    2. //நாளைக்கு கண்ணதாசன் அங்கிளைப்போல நான் எழுதினால்.. //

      நல்லவேளை... எழுத்துதானே.... சிலர் பாடல் எழுதும் முன்னரே, கண்ணதாசனை விட நான் பெரியவன் என்ற அர்த்தத்தில் கவிப்பேரரசுன்னு வச்சுக்கிட்டு விளம்பரம் தேடிக்கிட்டாங்க. ஹா ஹா

      நீக்கு
  41. அருமையான பாடல்
    கேட்கும் பொழுதிலெல்லாம் மனதைக் கொள்ளைக் கொள்ளும் பாடல்

    பதிலளிநீக்கு
  42. கதை மிக மிக நன்றாக இருக்கிறது. கடுகு பாணி நகைச்சுவை அவர் பாத்திரங்களை வைத்தே அரங்கேற்றியது சிறப்பு.அவரின் பாணியிலேயே எழுதப்பட்ட கதையை அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுதியதற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கெளதமன் சார். உற்சாகப்படுத்துவதற்கு நன்றி.

      நீக்கு
  43. மூடுபனி பார்த்திருக்கிறேன். நல்ல படம்.

    நல்ல பாடல்கள். ரசித்தேன் ஸ்ரீராம்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  44. மூடுபனி படம் பார்த்ததில்லை ஆனால் இந்தப் பாடல் பல முறை கேட்டிருக்கிறேன் என் இனிய பொன் நிலாவே செம பாட்டு

    ஆரம்பம் பேஸ்....சரணம் எடுப்பது ஹை பிச்...பாடிவிட்டு மீண்டும் என் இனிய பொன் நிலாவே முதலில் எடுத்த அதே ஸ்ருதியில் எடுப்பது மேடையில் பாடுவோர்க்குக் கொஞ்சம் கஷ்டப்படுவார்கள்..நான் கேட்ட வரையில் அதே போல என் இனிய பொன் நிலாவே பாடிவிட்டு சரணம் ஹை பிச் அதற்கு இணையான ஸ்ருதியில் எடுக்க சிரமப்ப்டுவார்கள்....சில மேடைக் கச்சேரிகளில் இதை எடுத்துப் பாடுபவர்களளுக்குக் கொஞ்சம் ஸ்ருதி மாறிப்போகும். நான் கேட்ட மேடைக் கச்சேரிகளில். ப்ரொஃப்ஷனலாகப் பாடுபவர்களைச் சொல்லவில்லை..

    ரொம்பப் பிடித்த பாட்டு.

    ஷோபா நல்ல நடிகை.

    இரண்டாவது பாட்டு கேட்டதில்லை

    இப்பத்தான் கேட்கிறேன் ஸ்ரீராம். ஆனால் உமா ரமணன் சூப்பரா பாடிருக்காங்க.

    குரல் குழைவு எக்ஸ்ப்ரெஷன்ஸ்..

    கீதா

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் சகோதரரே

    காலையில் முதல் ஆளாக நான்தான் வந்தேன். ஆனால் பதிவுக்குள் வர இயலவில்லை. என் கைப்பேசியில் ஏதோ சில பிரச்சனை.இப்போது சரியாகி விட்டது.

    மூடுபனி படம் பார்த்ததாக நினைவில்லை. ஆனால், பிரதாப்போத்தனும், ஷோபாவும் நடிப்பத்திறன் மிகுந்த திறமையான கலைஞர்கள்.ஷோபாவின் நடிப்பு எனக்கும் பிடிக்கும். முள்ளும் மலரும் படத்தில் அவ்வளவு நன்றாக நன்றாக நடித்திருப்பார். அவரின் இழப்பு கேட்டு நானும் அப்போது அதிர்ச்சியடைந்திருக்கிறேன்.

    முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். இரண்டாவது இப்போது கேட்டு ரசித்தேன். இரண்டுமே நன்றாக உள்ளது. படத்தைப்பற்றி நீங்கள் சேகரித்து தந்த விபரங்களுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  46. கடுகு அவர்களின் கதைகள் ரொம்பப் பிடிக்கும் நகைச்சுவை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதால்..

    நெல்லை கதை நன்றாக வந்திருக்கிறது. அவரது அதே ஸ்டைலில். அதே கேரக்டர்கள்...பாராட்டுகள்!

    நல்ல முயற்சி. இதே பாணியில் இல்லை என்றாலும், நெல்லை நீங்கள் நகைச்சுவையும் எழுத முயற்சி செய்யலாமே...

    நகைச்சுவை எழுதுவது என்பது எளிதல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன். நான் ஒரு சீரியஸ் டைப் ஆள். எனக்கு நகைச்சுவைக் கதைகள் படிக்கப் பிடிக்குமே தவிர, எழுத வராது.

      இப்போதுதான் கணிணி கிடைத்ததா?

      நீக்கு
    2. எனக்கு நகைச்சுவை(யும்) வராது.   அந்த ரசத்தில் எழுதுபவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

      நீக்கு
    3. நெல்லை 4 மணிக்கு கிடைத்துவிட்டது. வேலை முடித்து நேற்று முந்தைய நாள் விட்ட பதிவுகள் வாசித்து பதில் கொடுத்து, இடையில் வாக்கிங்க்....சப்பர்....அப்புறம் நெட் ஸ்லோ ஸ்லோ ...ஒரு பதிவு வர 2 நிமிடம் எடுக்கிறது. பதில் பாக்ஸ் க்ளிக் செய்தால் உடனே வருவதில்லை..டைம் எடுக்குது....

      நானும் 4 நாட்களாக பதிவு போட முயற்சி செய்தும் முடியவில்லை. ப்ளாக் சுத்தவே டைம் போய்விடுகிறது. குறிப்பாக நெட் வராமல் படுத்தலால் அப்புறம் எபிக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி அதுவும் முடியவில்லை.

      நெல்லை நான் சிரித்துக் கொண்டே இருந்தாலும் இப்போதெல்லாமெ எழுத வருவதில்லை. நானும் நகைச்சுவை ரொம்ப ரொம்ப ரசிப்பேன். முன்பு கொஞ்சம் எழுத முடிந்தது இப்போது சுத்தமாக வருவதில்லை நகைச்சுவை.....

      கீதா

      நீக்கு
    4. //எபிக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி // - நானும் அனுப்பவேண்டியது நிறைய இருக்கு. என் பெண் மசாலா பன் செய்தாள், வெறும் பன் அட்டஹாசமா செய்தாள், ஒரு நாள் பாகற்காயினுள் மசாலா வைத்து, பாகற்காயை நூலைக்கொண்டு கட்டி, எண்ணையில் வதக்கி என்னவோ செய்தாள், ரொம்பப் பிடித்திருந்தது. எழுதலாம், படங்களை எனக்கு அனுப்பு என்று கேட்டால், முதல்ல அனுப்பின படங்களுக்கு செய்முறை எழுதுங்க என்கிறாள்.

      நீக்கு
    5. ஸ்டஃப்ட் கரேலா, ரொம்பப் பிடிக்கும். அம்பேரிக்காவில் மாட்டுப் பெண் அடிக்கடி பண்ணுவாள்.

      நீக்கு
    6. கீசா மேடம்.... வெளில சொல்லவே தயக்கமா இருக்கு. யாரேனும் அதனைச் செய்து எ.பிக்கு அனுப்பிட்டா? ஹா ஹா. இப்போ பாருங்க... நான் கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு அழகா பரோட்டா (முதல் முறையா) பசங்களுக்காகச் செய்தேன். படங்கள்லாம் எடுத்தேன். பண்ணி 3 வாரம் ஆச்சு. இன்னும் எ.பிக்கு அனுப்பலை. ம்ம்ம்ம்ம் அந்த சோகக் கதையை எப்படிச் சொல்றது? ஹா ஹா ஹா

      நீக்கு
  47. நெல்லைத்தமிழன் உங்களுக்கு நகைச்சுவை மிக நன்றாக வருகிறது. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஸ்வாரஸ்யமாக தொய்வு இல்லாமல் எழுதியிருக்கிறீர்கள். மேலும் மேலும் எழுதுங்கள்.

    பாராட்டுகள், வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துளசிதரன். நீங்கதான் பதிவுகள் எழுதுவதில்லை (ஓய்வுபெற்ற பிறகும்). உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாமே.

      நீக்கு
  48. வணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரரே

    நீங்கள் எழுதிய கதையை இப்போதுதான் படித்தேன். மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள். திரு அகஸ்தியன் அவர்கள் கதை முன்பு பத்திரிக்கைகளில் படித்துள்ளேன். அவரின் வலைதளம் பார்த்ததில்லை. நீங்கள் நேற்று அவரைப்பற்றி இரங்கல் பதிவில் எழுதியிருந்ததை படித்ததும் அவர் பதிவுக்குச் சென்று படித்தேன்.அதில் நான் ஏற்கனவே படித்ததும் இருந்தது. மற்றும் எத்தனை சிறப்பான பதிவுகள்..! நல்ல அற்புதமான நகைச்சுவையுடன் எழுதும் ஒரு சிறந்த எழுத்தாளரின் மறைவு நேற்றெல்லாம் மனதிற்கு வருத்தமாக இருந்தது.

    சிறப்பான எழுத்தாளருடன் தாங்கள் பழகிய பழக்கத்திற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவரின் பாணியில், புது விதமாக இன்றைய சூழ்நிலையை பயன்படுத்தி, நகைச்சுவையாக நல்லதொரு கதையை தந்தமைக்கு நாங்கள் மட்டுமல்ல..! அவர் ஆன்மாவும் மிகவும் சந்தோஷம் அடைந்திருக்கும். அவருடனான நல்ல நட்புக்கு உங்களாலான பரிசை அவருக்கு நிறைவாக தந்து விட்டதாய் உங்கள் மனமும் உங்களை கண்டிப்பாக பாராட்டும். உங்களுக்கு எனது பாரட்டுகளும், வாழ்த்துகளும்.. எனது தாமதத்திற்கு விளக்கமாக முந்தைய கருத்தில் தெரிவித்துள்ளேன். இருப்பினும் கடைசியாக தந்த என் கருத்துக்கு மனச்சங்கடங்களுடன் வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். மொபைலிலேயே இவ்வளவு பெரிய பின்னூட்டங்களை நீங்கள் தருவது எனக்கு ஆச்சர்யத்தையே உண்டாக்குகிறது.

      இணைய உலகில் நாம் தொடரும் தளங்களைச் சேர்ந்தவர்கள் நல்லா இருக்கணும் என்றே எப்போதும் மனது விரும்புகிறது.

      பாராட்டுக்கு நன்றி.....

      நீக்கு
  49. கொஞ்சம் லேட். 
    நெல்லை சார் என்னைப்போல் ஒரு COBOLஅர் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. நானும் ஒரு COBOLஅன் தான் (36 வருடம்). கடுகு சார் நடையில் கதை நன்றாக உள்ளது. இதே போல் சுஜாதா சார் நடையில் ஒரு கதை எழுதுங்கள். ஆர்.வெங்கட்சுப்பிரமணியன் என்ற பெயரில் ஒரு பிளாக்கர் இருந்தார் நினைவு இருக்கிறதா? (rvsm.in). 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் சார்... நான் COBOLன் கடைசி காலத்தில் program செய்தேன் என்று நினைக்கிறேன். அதற்கு அப்புறமே RDBMS வந்துவிட்டது. Ingresல் சில வருடங்கள். அப்புறம் எங்கேயே திசை மாறி, பிறகு Informix, அப்புறம் எங்கேயோ வாழ்க்கை திசை மாறிப்போய்விட்டது. ஆனா தட்டச்சு ரொம்ப உபயோகமாக இருந்தது. பக்கத்துல பேசிக்கிட்டே, டக் என்று ப்ரோக்ராமில் உள்ள தவறுகளைச் சரி செய்து, எங்க தவறு என்று அவர்களை உடனே கேட்டு ப்ரமிப்பில் ஆழ்த்துவேன்.

      கதை எழுதறதே எனக்குத் தெரியாத கலை. ஸ்ரீராம் 'கேவாபோ'க்காக ரொம்ப கேட்பார். மனசுல அதை சேலஞ்சாக எடுத்துக்கொண்டால்தான் எழுத வரும்.

      கிரேசி மோகனின் ஒரு டிராமாவில் சொல்வது போல, 'அமிதாப்பச்சன். அங்கன ஆஹாயம். நான் இங்கன பாதாளம்'.

      என் சில கதைகளிலேயே நான் அனுபவப்பட்டது, ஒரு கதை, தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் என்பதுதான். சொன்னால் விசித்திரமாக இருக்கும்.

      நீக்கு
    2. //தன்னைத் தானே எழுதிக்கொள்ளும் என்பதுதான். சொன்னால் விசித்திரமாக இருக்கும்.// அதுதான் உண்மை. என்னையும் ஒருத்தர் ரொம்ப வற்புறுத்தினார் ஒரு கதை எழுதினப்போ! இந்தப் பாத்திரத்தை இப்படி மாற்றுங்கள் என்றெல்லாம் சொன்னார். நான் "ம்ஹூம்! அது எப்படிப் போறதோ எனக்கே தெரியாது!" என்றேன்.

      நீக்கு
    3. கதை எழுதுகையில் அதன் போக்குபற்றி நீங்கள் (NT & GS) சொல்லியிருப்பது சுவாரஸ்யம். சுஜாதா ஏற்கனவே இதனை அனுபவித்திருக்கிறார். எழுதியிருக்கிறார்!

      நீக்கு
  50. நெல்லை சார். COBOLஅன் ஆக இருந்தும் நான் இப்போதும் ஒருவிரல் கோபு தான். Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க அப்பா என்னை டைப்பிங் கிளாஸுக்குப் போ என்று நான் கல்லூரி படித்தபோது சொன்னார். அதுக்கு என் உடனடி பதில், 'நான் என்ன டைப்பிஸ்டாவா ஆகப்போறேன்' என்று.

      சிலர் ஒரு விரலிலும் வேகமாக தட்டச்சு செய்வார்கள். எனக்கு அலைபேசியில் தட்டச்சு செய்ய வராது. பெண்ணோ பையனோ என்னைவிட ரொம்ப வேகமாக அலைபேசியில் மெசேஜ் எழுதுவாங்க.

      நீக்கு
    2. பதில்களுக்கு நன்றி  சார். 

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!