ஞாயிறு, 4 அக்டோபர், 2020

மைசூர் அரண்மனைக் காட்சிகள்

 

அரண்மனை ஓவியக்காட்சியில் 



தேடித் தேடிப்பார்த்தோம் 


ஜயசாம்ராஜ வாடியார் தவிர 


யாரையும் தெரியவில்லை 


வேறொரு இடத்தில் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனங்கள் இயற்றியிருப்பதாக சொன்னார்கள் . அவற்றில் நிறைய சமஸ்க்ரிதக் கிருதிகளாம் 


ஆமாம் இவங்க என்ன பண்ணறாங்க இங்கே?


Humpty Dumpty had  a great fall  னு ஒருவர் நம் கையை இடித்துவிட்டு போட்டோவில் 


இப்படி group photo எடுக்காமல் கிட்டே போய் விவரமாக எடுக்க முடியவில்லை 


ஒவ்வொன்றையும் செதுக்கி முடிக்க வாரங்கள், மாதங்கள் 


காவலர் அமர ஒரு மர / உலோக நாற்காலி போ ட்டிருக்கலாமோ?


நிறைய வெளிச்சமும் காற்றும் 




நிறைய மக்கள் கூடுமிடத்தில் 


இப்படி 'வெறிச்'சென்று .. ! 


ஒரு சமயம் கிடைத்தால் 


தந்த ஸிம்ஹாஸனம் 


அந்த சுருள் படிகளை வைத்து கோணத்தை தீர்மானிக்கலாம் 


இவை இரண்டும் எந்த மிருக வகை?

========

39 கருத்துகள்:

  1. படங்கள் அழகு. ராஜாவாக இருப்பது கடினமா சுலபமா? சந்தோஷமா துக்கமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு சந்தோஷம். அவர் பங்காளிகளுக்குக் கடினம். மக்களுக்கு துக்கம்!

      நீக்கு
    2. இந்திய மகாராஜாக்கள் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பல்லுப் பிடுங்கப்பட்ட பாம்புகள்தான் !

      நீக்கு
    3. பாம்புகளுக்குப் பல் பிடுங்கியவர் படேல்.

      நீக்கு
    4. NO. Actually he promosed them. But it was Indira Gandhi who pidunged the teeth of Maharajas. :)

      நீக்கு
    5. ஒருத்தர், நீங்க எது செய்தாலும் அவரைச் சுற்றி ஆட்கள் இருப்பது, சயன அறைக்கு வெளியிலும் காவலர்கள் இருப்பது, இஷ்டப்படி எங்குமே செல்ல முடியாது, சின்னச் சின்ன ஆசைகளெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முடியாது, சகோதர சகோதரிகள், பெற்றோர், பசங்க இவங்களிடமும் பாலிடிக்ஸ் பண்ண வேண்டிய நிலை - இவைகளெல்லாம் எப்படி சந்தோஷமாகத் தோன்றும்?

      நீக்கு
    6. @நெல்லைத் தமிழுன்: நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. ஜெய்பூர் அரண்மனைக்குச் சென்ற பொழுது அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அதில் நிச்சயமாக இங்கு அரசியாக வாழும் கொடுமை நேர்ந்துவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். அந்த அரசிகள் கோடையில் வசிக்கும் இடத்திலிருந்து, குளிர் காலத்தில் வசிக்கும் இடத்திற்கு செல்வது பெரிய ஊர்வலமாக நடத்தப்படுமாம். தொலைவு எவ்வளவு என்கிறீர்கள்? ஐம்பதடி இருந்தால் அதிகம். பிறகு ஏன் ஊர்வலம்? அவர்கள் பயணிப்பதே அவ்வளவுதான். தங்கக் கூண்டில் வசிக்கும் கிளிகள்.

      நீக்கு
    7. நான் சொல்ல வந்தது/சொல்லாமல் போனது படேல் இந்திய மஹாராஜாக்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதி! நேரு இருக்கும்வரை/சாஸ்திரி வரையிலும் கூட அவை கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இந்திரா காந்தி பிரதமர் ஆனதும் மன்னர் மானியத்தை மட்டுமில்லாமல் எல்லாவற்றையும் ரத்து செய்து விட்டார்.

      நீக்கு
    8. அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு என்னன்ன வாக்குறுதிகள் என்று தெரிந்தால் அசந்து போவீர்கள். இவ்வளவு தூரம் சொல்லி விட்டு அதைச் சொல்லாமல் விடுவதிலும் அர்த்தமில்லை.

      நீக்கு
  2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. சில பார்த்த நினைவு, சில நினைவில் இல்லை. ஆனாலும் விஸ்தாரமான, விசாலமான அரண்மனை! ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போகவே உள்ளுக்குள் வண்டி இருந்தால் நல்லா இருந்திருக்குமோ? படம் ஆடியதும் ஓர் அழகாய்த் தான் இருக்கிறது. அதற்கான விளக்கங்கள் எல்லாம் கேஜிஜி எழுதினதோ? பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜாக்குதான் பாவம்... நடந்து மாளாது.

      நீக்கு
    2. கிருஷ்ண தேவராயருக்கு இதுக்காகவே பெண் பணியாளர்கள் உண்டாம். டக் என்று ராஜாவை உப்புமூட்டை ஏற்றிக் கொண்டு அரண்மணைக்குள் ஒங்வொரு இடம் சென்றுவர.... (தோளில், இடுப்பில் ஏற்றிக்கொண்டு என ராகிர எழுதியிருப்பார்)

      நீக்கு
  4. மைசூர் அரண்மனையைப் பற்றித்
    தங்களால் தெரிந்து கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. மைசூர் அரண்மணையில் மைசூர்பாக் கிடைத்ததா என்பதை எழுதலையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லையாரே, மைசூர் அரண்மனை பாகசாலையில் தான் (சமையலறை) முதல் முதல் மைசூர்ப்பாகு செய்யப்பட்டது. இதைப் பற்றி ஒருதரம் எழுதி இருந்தேன்! எதிலே? மரபு விக்கி? அல்லது என்னோட பதிவிலா? நினைவு வரலை. தேடிப் பார்த்துச் சுட்டி தரேன். (ஹிஹிஹி, விட மாட்டோமுல்ல!)

      நீக்கு
    2. http://geetha-sambasivam.blogspot.com/2012/11/blog-post_15.html#comment-form ஹிஹிஹி, அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவேனா என்ன?இங்கே போய்ப் பாருங்க, மைசூர்பாகின் கதையோடு கிடைக்கும்.

      நீக்கு
  7. படத்தோடு வர்ணனைகள் நன்று ஜி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    மைசூர் அரண்மனை காட்சிகள் நன்றாக உள்ளது. பொருத்தமான வாசகங்கள். ரசித்தேன்."ஒரு சமயம் கிடைத்தால்,தந்த ஸிம்ஹாஸனம்" இந்த இரண்டுக்குமிடேயே ஒரு படம் விட்டுப் போய் விட்டதோ?இல்லை, அதில் அமர்ந்து பார்க்கலாம் என்ற கருத்தா? ஹா ஹா.(விளையாட்டுக்குத்தான் கேட்டேன். தவறாக நினைக்க வேண்டாம்.) கலைப் பொருட்கள் படங்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. அந்த விலங்குகள் சிறுத்தையின் வகைகளில் ஒன்றோ?

    நாங்கள் இங்கு வத்த புதிதில் எப்போதோ போனது. என் மகனின் கைப்பேசியில் எடுத்த படங்களும் வந்தவுடன் கணினியில் ஏற்றியிருந்தோம். அதுவும் காலப் போக்கில் பாரங்களை சுமக்க முடியவில்லையென உயிரை விட்டு விட்டது .எனவே சுத்தமாக மறந்து விட்டது. தங்கள் பகிர்வு களை பார்க்கும் போது சற்று நினைவுகளுக்கு வருகிறது. இன்றைய பகிர்வு எல்லாமே நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    படத்துக்கு கொடுத்த வாசகங்கள் நல்லா இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. மைசூர் அரண்மனை காட்சிகள் அழகு.

    கொரோனா மீண்டும் வந்துவிட்டது :(
    பாடசாலைகள் மூடப்பட்டு விட்டன. சில இடங்களும் . மீண்டும் பயமுறுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  11. மிக மிக அழகான ஓவியங்கள்.
    அரண்மனைக் குழந்தைகளை ஓவியமாக வரைந்தவர் யாரோ.
    எத்தனை அடக்க ஒடுக்கம்.
    இந்தப் படங்களைத்தொடரும் பின்னூட்டங்களில்
    அறியப் படும் உண்மைகள்.

    அந்த சுழல் படிகள் இங்குள்ள ஃபயர் எஸ்கேப்
    மாதிரி என்று நினைக்கிறேன்.
    சிம்மாசனம் வெகு அழகு.
    எத்தனை யானைகள் இறந்தனவோ.!!
    1969 இல் சென்ற இடம். பனிமூட்டமாக
    நினைவில்.

    படங்களுக்கு வாசகங்களுக்கும் மிக நன்றி கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!