புதன், 7 அக்டோபர், 2020

படிப்பறிவு, பட்டறிவு - அதிகம் பயன்படுவது எது?



கீதா சாம்பசிவம் : 

எல்லோருக்கும் பல்வேறு பிரச்னைகள் இருக்கும். அதில் தீர்க்க முடியாத பிரச்னையாக நீங்கள் கருதுவது என்ன?

# மனிதர்களுக்கிடையே சரியான புரிதல் இல்லாததால் ஏற்படும் பிளவு.

& மாமியார் vs மருமகள் பிரச்னைகள்தான். 

இந்த கோவிட்- 19 குடும்ப நபர்களிடையே இடைவெளியை அதிகரித்துள்ளதா? குறைத்துள்ளதா?

# கோவிட் காரணமாக வீட்டுக்குள் என்பது குடும்பத்தில் உள்ள நெருக்கத்தை ஊக்குவிக்கிறதாகவே நான் நினைக்கிறேன்.

& பௌதீக அளவில் அதிகரித்துள்ளது. மன அளவில் குறைத்துள்ளது. 

எஸ்பிபி இறந்த பின்னர் இத்தனை சர்ச்சைகள் தேவையா? அவருடைய ஆஸ்பத்திரிச் செலவை எல்லாம் தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? மக்கள் ஏன் இவற்றில் அதீத ஈடுபாடு காட்டுகிறார்கள்?
அதே போல் இந்த நடிகர் வந்தார், அந்த நடிகர் வரலை இதெல்லாமும் தேவையா? இதனால் எல்லாம் எஸ்பிபி பிழைத்து வரப் போகிறாரா?

# ஊடகங்களில் கவனிக்கப் படுவதை விரும்புகிறவர்களின் விபரீதப் போக்குதான். 

& பிழைத்து வரமாட்டார்; இப்படி எல்லாம் தன் இறப்பை வைத்து sensational  செய்திகள் பரப்புகிறார்கள் என்று தெரிந்தால்,  பிழைத்தாலும் வரமாட்டார். 

அவரை அடக்கம் செய்ததோ, எரித்ததோ அது அவர் சொந்த விருப்பம். அவங்க குடும்பத்தினரின் சொந்த விருப்பம். குடும்பத்தினர் விருப்பம். இதில் எல்லாம் பொதுமக்கள் கருத்துத் தேவையா?

# தகனமில்லை அடக்கமென்றதும் இந்து இல்லையோ என்று எண்ணிவிடுவார்கள் போலும்.

& நாட்டிலே சமூக தளங்கள் பெருக்கியவுடன், கருத்து கந்தசாமிகளும் அதிகமாகிவிட்டனர். எல்லா நிகழ்வுகளுக்கும் ஏதேனும் ஒரு கருத்து சொல்வது என்பது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. 

சமீபகாலமாகப் பிறந்த குழந்தைகளை எரித்துக் கொல்வது, குத்திக் கொல்வது, பொட்டலமாய்க் கட்டிப் போடுவது என அதிகரித்து வருகிறது. தாய், தாய்மை எல்லாம் பொய்யோ எனவும் தோன்றுகிறது. ஒரு தாய் தன் இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டுத் தானும் எரித்துக் கொண்டிருக்கிறாள். இத்தகைய வன்முறைக்கு என்ன காரணம்?

# தாயே சிசுக்கொலை செய்தால் மான அவமானம் அல்லது வறுமை காரணமாக இருக்கலாம்.

& அங்கே இங்கே எப்போதாவது நடக்கும் நிகழ்வுகளை வைத்து (அவைதான் செய்தித்தாள்களில் போடுவார்கள்) அதுதான் உலகமெங்கும் நடக்கிறது என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள். 

உதாரணமாக : 

" 6.10.2020 - இன்று காலை பத்து மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் - ஒரு எண்பத்து  ஐந்து வயது முதியவர் சாலையை பத்திரமாக கடந்து எல் ஐ சி அலுவலகம் சென்றார். "

" 7.10.2020 - இன்று காலை ஐந்தரை மணிக்கு 'சமீப காலமாகப் பிறந்த'(😜) தன் குழந்தையை, ஒரு தாய் அன்போடு அரவணைத்து சிரித்தாள். " 

இப்படி எல்லாம் செய்திகள் வெளியிட்டால், அதைப் படித்துவிட்டு என்ன சொல்வீங்க? 

வரவர மனிதர்களுக்கு மனிதத் தன்மையே இல்லாமல் போகிறது. இதன் முக்கியக் காரணம் என்ன? வளர்ப்பா? சந்தர்ப்ப சூழ்நிலையா? அந்த நேரத்து மனோபாவமா?

# உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாதவர்களால் செய்யப்படும் கொடூரங்கள் ஒரு மைனாரிட்டி தறுதலைத்தனம்தான். வெளிச்சம் போட்டு விளம்பரம் செய்வதன் காரணமாக, விபரீதமாகத் தெரிகிறது.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

பத்திரிகைகளில் இடம் பெற்ற கேள்வி பதில்களில் நீங்கள் அதிகம் ரசித்தது,ரசிப்பது யாருடைய பதில்களை?

குஷ்வந்த் சிங்,
சோ,
குருமூர்த்தி,
அரசு,
மதன்.

# எல்லாமே ரசனைதான். அரசு பதில்களில் கவர்ச்சி என்ற போர்வையில் ஆபாசம் தவிர்த்த பிற. 

தமிழ்வாணன் பாபுராவ் படேல் Dear Abby விட்டு விட்டீர்கள்.

& எனக்குப் பிடித்தவை என்று சொன்னால் 
1 ) சோ 
2 ) சுஜாதா (ஏன், எதற்கு, எப்படி)
3 ) அரசு 
4 ) தமிழ்வாணன் 
5 ) மதன் 

படிப்பறிவு, பட்டறிவு(அனுபவம்) இந்த இரண்டில் நமக்கு அதிகம் பயன்படுவது எது?

$ படிப்பும் அனுபவமும் கலந்த கலவை. 
தேன் இனிக்கும் என்ற பாடமும் உண்டதில் இனித்தது எது என்றறிய முடியாத அனுபவக்குறைவும் பயனற்றவை
 
# இரண்டும்தான். சில சமயம் இது; வேறு சமயம் அது. 

எனினும் படிக்காத மேதைகளும், படிக்காத வெற்றி வீரர்களும் அனுபவ அறிவுக்கு சற்றே ஏற்றம் அதிகமென உணர்த்துகிறது.

சாமர்செட் மாம் கதை The Verger படித்திருக்கிறீர்களா ?

& இந்த இரண்டில் என்னைக் கேட்டால், அனுபவ அறிவுதான் முதலிடம். " ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது " 

ஆனால், அனுபவ அறிவு உள்ளவர்கள் அந்தந்தத் துறைகளில் மட்டுமே வல்லுனராக இயலும். படிப்பறிவு பெற்றவர்கள், அனுபவஸ்தர்களிடமிருந்து சுலபமாக பாடம் கற்று, எந்தத் துறையிலும் முன்னேற முடியும். அனுபவ அறிவு உள்ளவர்கள் பெரும்பாலும் படிப்பறிவு உள்ளவர்களிடம் கற்பதற்கு ஒன்றும் இல்லை. 

====
எல்லோரும் மின்நிலா 020 படித்துவிட்டீர்களா? (திங்கள் பதிவில் link உள்ளது) 

மின்நிலா 021 இதழுக்காக, உங்களுக்குப் பிடித்த பண்டிகை எது, ஏன் என்று இங்கே கருத்துரை கூறுங்கள். எல்லோருடைய கருத்துகளையும் தொகுத்து வெளியிடுகிறேன். 

நன்றி. 

==== 
 

64 கருத்துகள்:

  1. இன்றைய கேள்வி பதில்கள் ரசிக்கும்படி இருந்தது.

    தீர்க்கமுடியாத பிரச்சனைகள் வெட்டி ஈகோவினால் மனிதர்களிடையே வரும் பிரச்சனை இல்லையோ? இது மாமியார் மருமகள் இடையே இருந்தால் என்ன இல்லை இரண்டு பேர் இடையில் இருந்தால் என்ன

    பதிலளிநீக்கு
  2. எனக்குப் பிடித்தவை என்று சொன்னால்.... என கேள்வி பதிலுக்கு நீங்கள் கொடுத்துள்ள வரிசை அருமை, எனக்கும் அதே வரிசையில்தான் பிடிக்கும். ஒரே ஒரு கரெக்‌ஷன். அந்தக்கால அரசு, தமிழ்வாணன் பதில்கள் என இருக்க வேண்டும். சமீப குமுதம் சில இதழ் ஓசியில் பார்த்தேன். பத்திரிகைகள் வாங்குவதை நிறுத்தி சில பல ஆண்டுகள் ஆகின்றன. அது அருமையான முடிவு எனத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  3. அனுபவ அறிவு உள்ளவர்கள், படிப்பறிவு உள்ளவர்களிடம் கற்க ஒன்றுமில்லை. ரசித்த வரி. உண்மைதான்

    பதிலளிநீக்கு
  4. மனிதர்களுக்கு மனித்த் தன்மை இல்லாமல் போக ஒரே ஒரு காரணம்தான் உண்டு. சுயநலம். அதைக் குறிப்பிட மறந்துவிட்டீர்களே

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். கேள்வி பதில்கள் அனைத்தும் சுவாரஸ்யம்.. கேட்க வேண்டுமே என்று கேட்கவில்லை. நான் கேட்க நினைத்த கேள்வியைக் குறித்து வைக்க மறந்து விட்டேன்.

    இதையே கேள்வியாகக் கேட்கிறேன். மறதி என்பது கவனக் குறைவினாலா? இல்லை செயல்பாடு குறைவதிலா.

    பதிலளிநீக்கு
  6. மின் நிலா இன்று தான் பார்த்தேன்.கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அன்பு கீதா,அன்பு பானு இவர்களின் கேள்விகள் பயனுள்ளவை.
    நெல்லைத் தமிழன் சொல்வது போல் அந்தக் கால அரசு, மற்றும் சோ!

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மருந்து கண்டு பிடிச்சாச்சு/பிடிக்கலை/இரு ஆண்டுகள் ஆகும் எனப் பற்பல செய்திகள். எல்லாவற்றையும் கடந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள் ஆரோக்கியமான நல்வாழ்வு வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  10. பெரும்பாலும் படிப்பறிவு தான் ஏற்கப் படுகிறது. அனுபவ அறிவுள்ளவர்களைக் கேலி செய்து தான் பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை அனுபவங்கள் கற்பிக்கும் பாடங்களே சிறப்பானவை. இதில் மாற்றுக்கருத்தும் கட்டாயம் இருக்கும். பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏட்டறிவு எப்போதும் உதவாது.
      மக்களோடு பழகி அடையும் அனுபவங்களே நம்மை முன்னிறுத்தும் என்று நானும் நினைக்கிறேன்.

      நீக்கு
    2. கீசா மேடம் சொல்வது சரி. அனுபவ அறிவு இருந்தாலும் படிப்பறிவுதான் வேலைக்கு, அலுவலக முன்னேற்றத்துக்குக் காரணியாக இருக்கும். அனுபவ அறிவு உள்ளவர்களை ஒரு லெவலில் நிறுத்தி, நிறைய வேலை வாங்கிக்கொண்டு, அவரது அனுபவத்தை ஏணியாக்க் கொண்டு பலர் நல்ல பொசிஷனுக்கு வந்துவிடுவார்கள்.

      ஜி எம் பி சார் நிறைய தடவை இதைப்பற்றி எழுதி குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார்

      நீக்கு
    3. நெல்லை சொல்லுவது போல் எனக்கும் நடந்திருக்கிறது. இது தான் மனித மனம்!

      நீக்கு
  11. Sensational news இப்போது அதிகமாகி இருக்கிறது.
    அதுவும் நிறைய வெளிப் போக்குவரத்து இல்லாதபோது
    வீட்டில் அடைந்து கிடந்தால் இவை
    ராட்சச ரூபம் எடுக்கின்றன.

    பதிலளிநீக்கு
  12. எஸ்பி பி
    அவர்களை நிம்மதியாக விடை பெற விடாமல்
    மூக்கை நுழைத்து அசிங்கப் படுத்தி விட்டார்கள்.

    அவர்தான் பெரிய மனது கொண்டு மன்னிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் எப்பொழுதுமே பெரிய மனது கொண்டவர். நிச்சயம் மன்னிப்பார்.

      நீக்கு
  13. மின் நிலா வின்
    புதிய தகவல் அருமை. மைசூர் அரண்மனை 30 மில்லியனா.
    அட.!!!!
    நல்ல இஞ்சினீயர்கள்,
    நல்ல கட்டிட அமைப்பு அப்போது சாத்தியப்
    பட்டது. நன்றி ஜி.மஞ்சள் மலர்கள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  14. இன்றைய பதிவில் திரு. SPB அவர்களது மறைவிற்குப் பிறகு சிலர் செய்து வரும் விஷமத் தனங்களைக் குறித்த பதில்கள் நன்று..

    புறம் பேசித் திரிவோர் பக்கத்தில் போகாதிருப்பது நலம்...

    குரங்கின் கையில் கொள்ளிக் கட்டை கிடைத்ததைப் போல் ஆகிவிட்டது -

    பதிலளிநீக்கு
  15. இருவரது கேள்விகளுமே ஆழமானவை. பதில்கள் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் காலை வணக்கம். கேள்வி பதில்கள் சுவாரஸ்யம்.
    ஊடகங்களில் காணப்படும் வன்முறை குறித்த கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில்கள் சிறப்பு. குறிப்பாக & அவர்களின் பதில் உண்மை நிலையை சொல்கிறது. யானை நடந்தால் செய்தி அல்ல, விழுந்தால்தான் செய்தி என்பது ஜர்னலிசத்தின் பால பாடம் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யானை நடந்தால் செய்தி அல்ல, விழுந்தால்தான் செய்தி என்பது// - அது சரிதான். ஆனால் தற்காலங்களில் யானை நடக்கும்போதே, அது விழுந்துவிட்டது, பிறகு ஒரு எறும்பு வந்து அதனை எழுப்பி நடக்கவைத்தது என்றுதானே எல்லாத் தொலைக்காட்சிகளும் கதை விடுகின்றன. அவங்க சொல்வதில் 10 சதவிகிதம் கூட உண்மை இருப்பதாகத் தெரியவில்லையே. இந்த ஜர்னலிஸத்துக்கு அவங்க எங்க படிச்சுட்டு வந்தாங்களோ

      நீக்கு
  17. தங்கள் அனுபவங்களை பாடமாக படிப்பவர்கள் வெற்றி அடைகிறார்கள் எனலாமா?

    பதிலளிநீக்கு
  18. //தகனமில்லை அடக்கமென்றதும் இந்து இல்லையோ என்று எண்ணிவிடுவார்கள் போலும்.//இந்துக்களில் இரண்டும் உண்டே! குடும்ப வழக்கத்தைப் பொறுத்து மாறுபடும். மேலும் சந்நியாசம் வாங்கினவர்களை அடக்கம் தான் செய்வார்கள். சமீபத்தில் இறந்த வீரத்துறவி ஸ்ரீஶ்ரீ ராமகோபாலன் அவர்களை அரசே எரிக்கவேண்டாம், உடல் பாதிப்பு அதிகம் உள்ளதால் அடக்கம் செய்யச் சொன்னதாகத் தகவல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னெல்லாம் இதை எல்லாம் பற்றி அதிகம் பேச்சுக்களோ/எழுதுவதோ இருக்காது. ரொம்ப யோசிப்போம். இந்தக் கொரோனா வந்து எல்லாவற்றையும் மாற்றி விட்டது! :(

      நீக்கு
  19. கேள்விகளும் பதில்களும் நன்றாக இருக்கிறது.

    நீங்கள் சொல்வது போல் மனிதர்களுக்கிடையே சரியான புரிதல் இல்லாததால் ஏற்படும் பிளவுதான் அதிகம்.

    பின்னூட்டங்களும் நனறாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. மின் நிலா பார்த்தேன். நன்றாக இருக்கிறது.
    என் பகிர்வும் இருப்பது மகிழ்ச்சி, நன்றி.

    பதிலளிநீக்கு
  21. நீங்கள் வரைந்த காந்தி படமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. கேட்கும் கெள்விகளுக்கு ஓரள்வு பதில் தெரிந்து தான் கேட்கிறார்கள் போல் இருந்தாலும் நம் பதிலோடு ஒத்துப்போனால் ஒரு திருப்தி

    பதிலளிநீக்கு
  23. நல்ல கேள்வி பதில்கள்.
    அனுபவ அறிவுதான் சிறப்பானது என நினைக்கிறேன்.

    தாங்கள் மேதாவிகள் என்ற நிலையில் பலரும் கருத்துக்கள் கூறுவதில்தான் சிக்கல்களே உருவாகிறது.

    பதிலளிநீக்கு
  24. பட்டறிவுதான் வாழ்வைத் திறம்பட நடத்த உதவும்

    பதிலளிநீக்கு
  25. // & மா vs மரு பிரச்னைகள்தான்... //

    சரியான புரிதல் கொண்டவர் கடவுள் மட்டுமே...!

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. சுவாரஸ்யமான கேள்விகளுக்கு சுவையான பதில்கள். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  27. கேள்விகளும் பதில்களும் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!