வெள்ளி, 27 நவம்பர், 2020

சுகங்களின் ஸ்வரங்களிலே ஸ்ருதி லயம் சேர்ந்திருக்க... 

 யாருக்கு யார் காவல்?  எனக்குத் தெரிந்து படத்தின் பெயர் இதுதான்.  ஆனால் அப்புறம் பெண்ணுக்கு யார் காவல் என்று மாற்றினார்கள் போலும்.

சிவகுமார், ஸ்ரீகாந்த் ஸ்ரீப்ரியா நடித்திருக்கிறார்கள் என்பது தெரியும். இது சுஜாதாவின் ஜன்னல் மலர் கதையை திரைப்படமாக எடுக்கப்பட்டது.​  படம் ஒன்றும் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.  அந்தப் படத்தில் இடம்பெற்ற இந்த எஸ் பி பி பாடல் இன்று பகிர்வாக..

வாலியின் பாடலுக்கு கே ஜே ஜாய் இசை.  இது ஜாய் மலையாளத்தில் இசை அமைத்த ஒரு பாடலின் தமிழ் வடிவம் என்கிறார்கள் ரசிகர்கள்.  1979 இல் வெளிவந்த படம்.

எஸ் பி பாலசுப்ரமணியம் - பி சுசீலா  குரலில் பாடல்.






============================================================================================

21 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

    பதிலளிநீக்கு
  2. இனிய நாளாகட்டும்.
    அன்பு ஸ்ரீராம் எல்லோரும் க்ஷேமமாக இருக்க இறைவனிடம்
    பிரார்த்தனைகள்.
    துயரம் கொண்ட மனங்களுக்கு மருந்திட
    அவனால் தான் முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அம்மா.   மனங்களுக்கு மருந்திட அவனன்றி யாரால் முடியும்?

      நீக்கு
  3. மிக நல்ல பாடல்.
    இருவரின் குரல்களும் இழைந்து பாடி இருக்கின்றன.

    மிக நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  4. சென்னையில் எல்லோருக்கும் கரண்ட்
    இருக்கா. சில மொபைலுக்கு செய்தி போகவில்லை.
    சார்ஜ் செய்ய முடியவில்லையோ என்னவோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் பாதிப்பில்லா இடங்களுக்கு கரண்ட் இருக்கிறது.  எங்களுக்கு புயலடித்த இரவில் கரண்ட் இரவு எட்டு மணிக்கு கட் செய்து மறுநாள் காலை எட்டு மணிக்கு கொடுத்து விட்டார்கள்.  நான் இருந்த பழைய வீட்டில் முதல் நாள் காலை சென்ற கரண்ட் நேற்றிரவுதான் வந்ததாம்.  

      நீக்கு
  5. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    நலம் என்றென்றும் வாழ்க...

    பதிலளிநீக்கு
  6. கால சூழ்நிலை சரியில்லாத இவ்வேளையில் அவரவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டிக் கொள்வோம்...

    புயலும் மழையும் மக்களைக் கஷ்டப்படுத்தாத படிக்கு அமையட்டும்...

    எல்லாவற்றுக்கும் இறைவன் ஒருவனே துணை..

    பதிலளிநீக்கு
  7. புயல் மழையைக் காரணம் காட்டி
    தஞ்சாவூரை அடுத்துள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் அடர்ந்து விரிந்து உயர்ந்திருந்த மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளி விட்டார்களாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவிகளா...  சுயநலமிகள்.

      நீக்கு
    2. அனாவசியமாக, அல்லது ஆதாயத்துக்காக அடர்ந்து செழித்த மரத்தையெல்லாம் அலட்சியமாக வெட்டித்தள்ளுபவர்கள், தங்களையே வெட்டிக்கொள்கிறார்கள் எனப் புரிந்துகொள்ளமுடியாத மடையர்கள்.

      இந்தக் கொடுமைகள் இந்த நாட்டைவிட்டு என்று ஒழியுமோ..

      நீக்கு
    3. இதை ஒரு தொழிலாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. வார்தா புயலின் போது விழுந்த மரங்களுடன் விழாது நின்றிருந்த மரங்களையும் வெட்டி வீழ்த்தினார்கள் என்று செய்திகள் வந்தன..

      கணினி யுகத்தின் காட்டுமிராண்டிகள்!..

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம்.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று தான் வலையுலகம் பக்கம் வருகிறேன்.

    பாடல் கேட்டதாக தெரியவில்லை. கேட்டுப் பார்க்கிறேன்.

    மரம் வெட்டி வீழ்த்தப்பட்ட செய்தி - கொடுமை! இப்படியும் சில சுயநலவா(வியா)திகள்.

    பதிலளிநீக்கு
  9. பாடல் கேட்கவில்லை.

    மரம் வெட்டுபவர்கள் :( சுயநலவாதிகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!