வியாழன், 9 டிசம்பர், 2021

கல்யாண அனுபவங்கள் - மழையின் நடுவே ஒரு மஜா பயணம்!

திருத்தணிக்கு சென்று வந்த அண்ணன் மகன் கல்யாண அனுபவங்களை எதிர்பார்த்து வந்தேன் என்று கீதா அக்கா சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் சொல்லி இருந்தார்.  இதை எல்லாம் எழுத வேண்டுமா என்று எண்ணியிருந்தேன்.  சரி எழுதலாமே என்று...

சென்ற வாரமே தொடங்கி இருக்கலாம்.  கொஞ்சம்தான் எழுத முடிந்தது.  மட்டுமில்லாமல் சென்ற வாரம் வியாழன் தலைப்பும், வெள்ளி பாடல் வரியும் முடித்து விடுவோம் என்று தோன்றியது.  கொஞ்சம் பழசு அது.

நிச்சயதார்த்தம் நடந்த சத்திரம் அவ்வளவு சரியில்லை என்று மாப்பிள்ளையின் மாமாக்களும், அத்தையும் புகார் செய்திருக்க, கல்யாணத்துக்கு நல்ல சத்திரம் புக் செய்யவேண்டும் என்று பெண் வீட்டாரிடம் சொல்லப்பட்டிருந்தது.  நிச்சயதார்த்தம் நடந்தது ஏப்ரலில்.

முதல்நாள் மாலை சென்று மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம் என்று தொடங்கி மறுநாள் மாலை திருமணம் முடிந்த கையோடு பெண்ணை அழைத்துக் கொண்டு கட்டுசாதம் வரை காத்திருக்காமல் ஊர் கிளம்பி விடுவதென்று பேசி இருந்தோம்.  திருமணம் பற்றியும், சத்திரம் பற்றியும் பெண் வீட்டாருடன் தொடர்ந்து நடந்த சில காரசார உரையாடல்கள் காரணமாக விளைந்தது அது.

அவர்களும் இரண்டாம் நாள் மாலை கிளம்பும்போதே கட்டுசாதம் கொடுத்து விடுவதாய்ச் சொல்லி இருந்தார்கள்.

ஏப்ரலில் நிச்சயதார்த்தம் முடித்து, நவம்பரில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது வெவ்வேறு காரணங்களுக்காக.  ரொம்பத் தள்ளியோ என்று தோன்றினாலும் கொரோனா பயமுறுத்தல்கள், செலவினங்கள், அலைச்சல்களை யோசித்து சரி என்று பேசிக்கொண்டோம்.

அதே போல லாக் டவுன் போன்ற சிரமங்களுக்கிடையில் சில வேலைகளை முடித்து, மாளயபட்சம் முடிந்த உடன் பத்திரிகை அடிக்க ஏற்பாடு செய்து, ஜவுளி, நகை வேலைகளை அப்புறம் முடித்து...   சரியாகவே இருந்தது நேரம்.

கல்யாண மண்டப கலாட்டாக்கள் தனிக்கதை.  நாங்களும் வந்து பார்க்கவேண்டும் என்று சொல்லப்பட்டாலும், ஒரே நாள் என்பதால் நாங்கள் எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொள்வோம் என்று சொல்லி, மண்டபம் பார்க்க வரவில்லை என்று கழண்டு கொண்டோம்.  குறை சொன்ன இருவரை சென்று பார்த்து வரச்சொன்னால் அவர்கள், நாங்கள் செல்லவில்லை என்றால், தாங்களும் செல்லவில்லை என்று கூறிவிட,  மணமகனும் அவன் அப்பாவும் (அண்ணன்) மட்டுமே சென்று பார்த்து வந்தனர்.

இதையெல்லாம் நீட்டி முழக்கிச் சொன்னால் நாவல்தான் எழுத வேண்டும்!

ஏதோ பத்திரிகை கொடுக்கிறார்களா, கல்யாணத்துக்குப் போனோமா, மொய் எழுத்தினோமா, சாப்பிட்டோமா என்று இருந்தது போக, கல்யாண மண்டபம் என்றால் என்னென்ன செய்கிறார்கள் என்று இப்போதுதான் அனுபவபூர்வமாக பார்த்தேன்.  வருஷ ஆரம்பத்திலேயே இந்த வருடம் 2015 ஐ பீட் அடிக்கும் மழை வெள்ளம் என்று படித்திருந்தாலும் ரொம்ப நம்பவில்லை, மனத்திலும் நிற்கவில்லை.  திருமண சமயம் மழை பயமுறுத்தல் தனிரகமாயிருந்தது.  இவ்வளவு மழை பயமுறுத்தல் எதிர்பார்த்திருக்கவில்லை.

சொன்ன மாதிரி 2015 ன் ரிப்பீட்டாக இருந்தது/இருக்கிறது  இந்த வருடம்.   அதைவிட கூடுதலாகவே பொழிந்து விட்டது என்றும் பின்னர் படித்தேன்.

திருத்தணி செல்ல எத்தனைபேர் அமரக்கூடிய வண்டிக்குச் சொல்வது என்று தொடங்கி ஏகப்பட்ட குழப்பங்கள். யார் வருவார்கள், யார் எங்களுடன் வருவார்கள் என்கிற தகவல்கள் தெரியாத நிலை.  நாற்பது பேர் அமரக்கூடிய  பஸ்ஸுக்கு சொல்லியிருந்தேன்.  இருபது பேர் அமரக்கூடிய வண்டி இரண்டாகச் சொல்லி இருக்கலாமோ என்று முன்னரும் பின்னரும் தோன்றியது.  இதுவும் பல்வேறு சாதக பாதகங்களுக்காக ஒரே பஸ்ஸாக சொல்ல முடிவானது.  அது வேறு சிரமத்தைக் கொண்டு வந்தது!  சனிக்கிழமை 20ஆம் தேதி காலை ஐந்தரைக்கு வரச்சொல்லி இருந்தேன்.  அப்போதுதான் ஆறறைக்காவது வருவார் என்று முன்னரே கிளம்பும் நேரம் என்று சொல்லி இருந்தேன்.

ஓட்டுநருக்கு அதிகாலை போன் செய்தால் எங்கள் ஏரியா மெயின்ரோடில் நின்றிருப்பதாகவும் உள்ளே வரமுடியாது, பாதை குறுகலாய் இருக்கிறது என்று குண்டைத்தூக்கிப் போட்டார். சிடுசிடுவென்று பேசினார்.  பெரிய பஸ் என்பதால் அகலம் அதிகமாம்.  வராதாம்.  நாங்கள் 32 பேர்கள் இங்கு காத்திருந்தோம் - லக்கேஜுகளுடன்.

பஸ் வரக்கூடிய அளவில் அகலமாக வேறு பாதை இருக்கிறதா என்று என் ஆஸ்தான ஆட்டோக்காரரை அழைத்துக் கேட்டேன்.  போர்வைக்குள்ளிருந்து குரல் கேட்டது.  லீவு என்றேன் என்று போர்வைக்குள் குளிருக்கு அடக்கமாய்த் தூங்கிக் கொண்டிருந்தவர்,  எனக்காக பஸ் டிரைவரிடம் பேசி இருக்கிறார்.  அவர் ஒத்துவராததால் இவரே கிளம்பிச் சென்று அவரை பஸ்ஸுடன் அழைத்து வந்து விட்டுச் சென்றார்.  "சின்னப்பையன் ஸார்..  கிளீனர் வேறு இல்லை.  இவ்வளவு பெரிய வண்டிக்கெல்லாம் கிளீனர் இல்லாமல் வரக்கூடாது..  எப்படி அனுப்புகிறார்களோ..  இவரே கிளீனர் வேண்டாம் என்று சொல்லி விடுவார்.  அவர்க்கு தனியாய்க் காசு கொடுக்க வேண்டுமே..."  என்றார்.

நாங்கள் இருக்கும் தெருவும் இப்படிப்பட்ட பஸ்கள் திரும்பும் அளவு பெரிதல்ல.

சரியாக அந்த நாளில் முந்தைய நாள் உருவாகி ஒரு புயல் இருக்கிறது என்று சொல்லி இருந்தார்கள்.  நல்லவேளை, அது தாமதப்படுத்தி விலகிச் சென்றிருக்க, மழைத் தொந்தரவு இல்லாமல் கிளம்புகிறோம் என்கிற திருப்தி இருந்தது.  அது வழியில் உடைந்தது.

செல்லும் வழி என்பது திருமழிசை, மணவாளநகர், திருவள்ளூர் வழியாக செல்வது சுலப வழி.  ஆனால் வழியில் திருவாலங்காடு அருகே பாலாறு பொங்கி ஆற்றுப்பாலத்தை மூடிவிட்டதால் அங்கு டைவர்ஷன் எடுத்து 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டி இருக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது.  கடைசி நிமிடத்தில் அந்தப் பாதையே  வேண்டாம், அரக்கோணம் வழியாக வந்து விடுங்கள் என்று சொல்ல, ஒன்றரை மணிநேர பிரயாணம் என்பது இரண்டரை மணி நேர பிரயாணமானது.

இந்தத் தாமதம் காரணமாக ஒன்பது மணிக்கு முன்னால் சத்திரத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட, பத்தரைக்கு மேல் உள்ளே சென்று விரதம் தொடங்கி முடிக்க ஒரு மணியானது.  

விரதம் காலை ஏழு மணிக்கு என்று சொல்லப்பட்டிருந்ததால் முதல் முடிவின்படி காலை நான்கு மணிக்கே கிளம்புவதாய் இருந்தோம்.  சாஸ்திரிகள் திருப்பதியில் மாட்டிக் கொண்டதால் வர ஒன்பது மணிக்கு மேலாகி விடும் என்று சொன்னதால் கொஞ்சம் மெதுவாகக் கிளம்பினோம்.  திருப்பதி வெள்ளம் வீடியோ வாட்ஸாப்பில், ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள்.

ஒன்பதரைக்கு உள்ளே சென்று விட்ட மற்றவர்கள் சிற்றுண்டி முடித்துவிட, நாங்கள் மட்டும் அதை ஸ்கிப் செய்து நேராக சாப்பாட்டுக்குச் செல்ல வேண்டி இருந்தது.  என்ன கொடுத்தார்கள் என்று கேட்டுக்கொண்டேன்!  பொங்கல், சாம்பார் வடையாம்!                                                              - தொ -ட-ரு- ம் -

=======================================================================================================

வாட்ஸாப்பில் வந்தது..  டிசம்பர் பதினொன்றுக்கு வாகாய் அமைந்தது!

நண்பர் சதுர்புஜன் அனுப்பியது.

*காசியில் பாரதியார் பேரன்:-
பாரதி இங்கேதான் கொஞ்ச வருஷம் இருந்தாராம். அவரோட வீட்டை பார்க்கணும்டா.
எந்த பாரதி?

மகாகவி சுப்ரமணிய பாரதிடா..
ஓ! இந்த சந்து,பொந்துல எங்கே இருந்தாரோ?! எப்படி அதையெல்லாம் கண்டு பிடிக்கிறது என்றான் இளங்கோ.
அதெல்லாம் தெரியாது. தேடிப் பார்க்கலாம்.
சரி! வா..
சொன்னா கேக்கவா போறே?
சின்ன, சின்ன சந்துகள். குப்பைகள்.
எல்லாவற்றையும் தாண்டி, நாங்கள் தேடிச் செல்லும் வழியிலேயே, ஒர் ஜிலேபிக் கடை. சுடசுட ஜிலேபிகளை வாணலியில் பார்த்து விட்டால், அதை வாங்கி சாப்பிடாமல் தாண்டிச் செல்வதில்லை என்பதை காசியில் ஒரு கொள்கையாகவே கடைபிடித்தேன்.
ஜிலேபி சாப்பிட்டு விட்டு, கை கழுவும் இடத்தில் நிமிர்ந்து பார்த்தால், நேரெதிரில் ஒரு சின்ன இடத்தில் மகாகவியின் மார்பளவு சிலை.
இது நான் (ஸ்ரீராம்) காசி சென்றபோது எடுத்த படம்.

காசி நகராட்சி வைத்திருந்தது. பராமரிப்பு என்பதெல்லாம் இல்லாத இடம்.
இதுவும் நான் (ஸ்ரீராம்) காசி சென்றபோது எடுத்த படம்.
குப்பைகளைத் தாண்டிச் சென்று, அவர் முகத்தை உற்றுப் பார்த்தேன்.
" நரைக் கூடி கிழப் பருவமெய்தி
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென நினைத்தாயோ?"
என்றது அவரது முகம்.
அத்தனை தொலைவில், எனது ஆதர்ச நாயகனைப் பார்த்ததும், கண்கள் கலங்கி விட்டன.
அந்த இடத்திலிருந்தே மெல்ல விசாரித்து, சிவ மடம் என்று பெயரிட்ட, பாரதி வசித்த வீட்டை சென்றடைந்தோம்.
உள்ளே ஒருவர், யாரு? என்ன வேணும்? என்று சத்தமாகக் கேட்டார்.
அவர் அருகில் சென்று, அதை விட சத்தமாக, பாரதியோட வீடு இதுதானா?
பார்க்க வந்தோம் என்றோம்.
ஆமாமாம்! உட்காருங்கோ.. இதுதான் பாரதி இருந்த வீடு.
*நான் கே.வி.கிருஷ்ணன்.*
*பாரதியோட பொண்ணு தங்கம்மா பாரதி இருந்தாளோன்னா, அவளோட மகன். அதாவது பாரதியாரோட பேரன்.*
அடுத்த இரண்டு மணி நேரம் சென்றதே தெரியாமல் பேசிக் கொண்டே இருந்தார் அந்த என்பத்தியாறு வயது பழத்த மனிதர்.
மிக,மிக சுவாரஸ்யமான மனிதரும்கூட.
பெரிய குடும்பம், பேரன்,பேத்திகள் என்று இருந்தாலும், முதுமையின் தனிமை என்ற வழமையான மனசிக்கலில் இருப்பது நன்றாக புரிந்தது.
காசி பனாரஸ் பல்கலைகழகத்தில் டெபுடி ரிஜிஸ்டாராக இருந்து ரிடையர் ஆகியுள்ளார்.
இசை, பாடல், பாரதி என அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு பட்டாசா வெடிச்சுத் தள்ளினார். அதிலிருந்து சில முத்துக்கள்..
வடக்கே எந்த வித்வான் கச்சேரிக்கு வந்தாலும், அப்போவெல்லாம் மிருதங்கத்துக்கு ஆளை அழைச்சுண்டு வரமாட்டா..
அதான் காசியிலே கிருஷ்ணன் இருக்காரோன்னா,
என கடுதாசு போட்டுருவா.
நாந்தான் அவங்க எல்லோருக்கும் மிருதங்கம்.. இந்துஸ்தானி என்றால் தபேலா..
ஒருமுறை எனக்கு ப்ரொஃபஸர் ப்ரமோஷனுக்கான எக்ஸாம்.
உள்ளே போனா, பாலக்காடு மணி ஐயர் எக்ஸாமினரா வந்திருக்கான்.
நான் எழுந்து வந்துட்டேன்.
பின்னே! என்னவிட ரெண்டு செட் ஜூனியர் என்னை எக்ஸாமின் பண்றதா?
அவன் மாமா!மாமா! உங்களுக்குன்னு தெரியாதுன்னு பின்னாடியே ஓடி வரான்..
நான் டைகர் வரதாச்சாரிக்கு வாசிச்சவனாக்கும்..
ஆமா! உங்களுக்கு டைகர் வரதாச்சாரி தெரியுமோன்னா?
(சிங்காரவேலன் படத்துல, கமல் பாடும் பாட்டு ஒன்றில்
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க்க பாட்டு ஒண்ணு புடிச்சேன்.
ஒரு டைகர் ஆச்சாரி, வரதாச்சாரி போல படிச்சேன்னு வரும்.
நான் கவிஞர் வாலி அதை எதுகை மோனைக்கு எழுதியிருக்காருன்னு நெனைச்சேன்.
அப்படின்னா, டைகர் வரதாச்சாரின்னு நெஜமாலுமே ஒரு பெரிய வித்வான் இருந்திருக்காரு!)
இங்கே யுனிவர்ஸிடியிலதான், அனிபெஸன்ட் அம்மையாரோட நிறைய லெக்சர் எல்லாம் நடக்கும்.
பல சமயம் விவேகானந்தர் இங்கே வந்து தங்கி மாணவர்களோட பேசுவார்.
அதையெல்லாம் போய் பார்த்ததாலதான், பாரதிக்கு ஒரு விசாலமான தேசியப் பார்வை வந்தது.
விவேகானந்தர் இங்கே தங்கியிருக்கும் போதுதான், நிவேதிதா தேவி அவரைப் பார்க்க வந்தாள்.
இது தெரியுமோன்னா? ஒருமுறை விவேகானந்தரோட அறையில நிவேதிதா என்னை முழுசா எடுத்துக்கோங்கா.
என்று அவரிடம் போய் நின்னா! சுவாமியோ.. அவளிடம், அம்மா, நீங்கள் வெளிநாட்டுப் பெண்.
நானோ காவி அணிந்த இந்தியன்.
எங்க நாட்டுல துறவு எடுத்தால் அதுக்கப்புறம் பெண்கள் எல்லாம் துறவிகளுக்கு தெய்வம் அல்லது தாய்.
நீ எனக்கு தாய்! என்றாராம்.
நிவேதிதா தேவி அப்படியே அவரோட காலில் விழுந்து அவரோட சிஷ்யை ஆனாங்களாம்.
இப்போவெல்லாம் காவி துணி போட்டிருக்கவங்க லட்சணம் தெரியுமோன்னா? என்று கேட்டார்.
அந்த நிவேதிதா தேவிதான் பாரதியோட ஞான குரு.
அந்தம்மாவிடம் பேசி,பேசித்தான் பாரதிக்கு பெண்கள் சுதந்திரம், உரிமை, சுயமரியாதை என பல விஷயங்கள் தெரிய வந்தது.
இன்னும் எவ்வளவோ பேசினார்.
பாரதியைப் பற்றி. அவரோட அம்மாவைப் பற்றி.. பாரதியின் பாடல்கள் குறித்து..
பாரதி அங்கு சின்ன வயதில் பாரதி அமர்ந்து படிச்ச அவரோட சின்ன மேசை, அவர் சங்கீதம் கத்துக்கிட்ட ஆர்மோனியம், அவர் ரயிலுக்கு எடுத்துட்டுப் போற பெட்டியெல்லாம் பாதுகாப்பா வைத்திருந்து காட்டினார்.
இதெல்லாம் அடுத்த தலைமுறை வச்சிருப்பாளோ? இல்லையோ? அதை நினைச்சாதான் எனக்கு கவலையா இருக்கு என்றார்.
சார்! இதெல்லாம் பாரதியோட நினைவுக்கு சாட்சி இல்லை.
இன்னும் எத்தனையோ நூறு வருஷம் ஆனாலும், அவரோட கவிதைகளும், பாடல்களும் என்னைப் போல ஆயிரக்கணக்கான பேரோட வாழ்க்கையை மாற்றும் பாருங்க! அதுதான் சார் பாரதியோட நினைவு என்றேன்.
சந்தோஷமா தலையசைத்துச் சிரித்தார்.
அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தோம்.
வாசலில் இருந்து உள்ளே பார்த்தால், தொலைவில் பாரதியோட ஒரு சின்ன புகைப்படம் மாட்டப் பட்டிருப்பது தெரிந்தது.
*'இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே!*
*உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!"*
என கம்பீரமாக தலைநிமிர்த்திப் பாடிக் கொண்டே, அடுத்த ஜிலேபிக் கடைக்குச் சென்றோம்.
நன்றி : திரு. எஸ்கேபி. கருணா.

=====================================================================================

இன்றைய தலைமுறையில் எத்தனைபேர் இவரைப்பற்றி அறிவார்கள்?

நீலகண்ட பிரம்மச்சாரி


வாஞ்சிநாதனால் ஆஷ் துரை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியாக கருதப்பட்டு கைதாகி ஏழு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவர், கைதாகும் போது இவருக்கு வயது 21 தான்.


இந்திய சுதந்திரத்துக்காக புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர்.


சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'புரட்சி இயக்க' நாயகனாகத் திகழ்ந்த ஒரு தியாக புருஷன்.
பாரதியின் உற்ற நண்பர்,மகாத்மா காந்தி இவரை சந்தித்து பேசுவதற்ககாக மலையடிவாரத்தில் காத்திருந்தார்.அகில இந்திய தலைவர்கள் பலரது அன்பையும் நட்பையும் பெற்றவர் ஆனாலும் யாரிடமும் எதற்கும் போய் நிற்காதவர் உடுத்திய உடையுடன் கையில் பைசா காசு இல்லாமல் கிடைக்கும் உணவை சாப்பிட்டபடி ஒரு தேசாந்திரியாக வாழ்ந்தவர் தனது இளைமைக்காலத்தை நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் கழித்தவர் இவர் பத்து நிமிடம் யாரிடம் பேசினாலும் அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிரான போராளியாகிவிடுவர் எனப் பயந்த பிரிட்டிஷாரால் பெரும்பாலும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு வாடியவர்.


நாடுதான் பெரிது நான் அல்ல என்று சொல்லி தனக்கான எந்த அடையாளத்தையும் விட்டுச் செல்லாதவர் அவரைப் போன்றவர்களின் வரலாறு இன்றைய இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.


1889ம் வருஷம் டிசம்பர் மாதம் 4ம் தேதி சீர்காழியை அடுத்த எருக்கஞ்சேரி எனும் கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் சுப்புத்தாயி தம்பதியினரின் மூத்த மகனாகப் பிறந்தார். 2 தம்பிகள் 5 தங்கைகள் என்று பெரிய குடும்பத்தில் பிறந்தவர் இவரது குடும்ப சொத்து என்பது வறுமைதான்.


உள்ளூர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர் ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் ஊர் ஊராகச் சென்றார் சென்னையில் விபின் சந்திர பால் எனும் புரட்சிகர தேசபக்தர் பேச்சைக் கேட்டபிறகு புரட்சிகர இளைஞர்களாக மாறியவர்களில் இவரும் ஒருவர்.


1907ல் இவருக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு அவர் மூலமாக வ.உ.சியின் அறிமுகம், வங்காளத்து புரட்சி வீரரான சந்திரகாந்த் சக்ரபர்த்தியுடனான நட்பு என்று எல்லாம் சேர்ந்து அவரை கனன்று எரியும் புரட்சியாளராக மாற்றியது.


குடுமியை நீக்கி கிராப் வைத்துக் கொண்டார்.1908ல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று 'அபினவ பாரத இயக்கத்தைத்' தொடங்கி வைத்தார். அதற்காக இவர் திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களுக்கும் சென்று ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இதில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்தனர்.


அந்த இளைஞர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர்.ஆனால் நீலகண்டனுக்கு தனிநபரை கொல்வதில் எப்போதும் உடன்பாடு இருந்தது இல்லை ஒரு இயக்கமாக இயங்கி வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.


இருந்தும் வாஞ்சிநாதன் சம்பவத்தில் முதல் குற்றவாளியகாக நீலகண்டன் கைது செய்யப்பட்டார்.சிறையில் பல வகையில் கொடுமைப்படுத்தப்பட்டார். அவர் தற்கொலைக்கு முயலும் அளவிற்கு மன உளைச்சலை ஏற்படுத்தினர். சிறையில் அவர் நேர்மையாக இருந்த காரணத்தால் நாலாண்டு காலத்தில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்திருக்கப்பட வேண்டும் அனால் விடுதலை செய்யும் நேரதில் சிறையில் இருந்து தப்பமுயன்றார் என்று குற்றம் சுமத்தி மேலும் மூன்றரை ஆண்டுகாலம் சிறையில் பூட்டி அவரை பிரிட்டிஷ் அரசு வாட்டியது.


தண்டனை முடிந்து 1919 ஆகஸ்ட் 14ம் தேதி இவர் விசாகப்பட்டினம் சிறையிலிருந்து விடுதலையானார். அங்கிருந்து இவர் சென்னை திரும்பி பாரதியாருடனும் வறுமையுடனும் தொடர்பில் இருந்தார் பல நாள் பச்சைத்தண்ணீர்தான் உணவு.ஆனாலும் விடுதலை உணர்வு மட்டும் மங்கிவிடவில்லை.


தேசபக்தர் சிங்காரவேலரின் புரட்சிப் பிரசுரங்களை வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு மீண்டும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார்.அவர் எங்கு இருக்கிறார் என்பதையே தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக ரங்கூன் முதல் பர்மா வரை பல சிறைகளில் அவர் அடைக்கப்பட்டு வதைக்கப்பட்டார்.


சிறை அவரது உடலையும் உள்ளத்தையும் உருக்கிவிட்டதால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 1931ல் தேசாந்தரம் செய்யப் புறப்பட்டுவிட்டார். தனக்கென்று ஒரு அடையாளம், பெயர் எதுவுமின்றி ஊர் ஊராகப் பயணித்துக் கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தார்.


புகழ்,பெருமை,கீரிடம்,குடும்பம் என்று எதுவுமற்ற இந்த துறவு வாழ்க்கை அவருக்கு பிடித்துப் போனது ஒரு கட்டத்தில் ஊர் சுற்றியது போதும் என முடிவு செய்து மைசூரு நந்தி மலையடிவாரத்தில் வாழ்ந்து வந்தார்.


அவரது தேஜஸான முகத்தை பார்த்து அவரைப் பார்க்க மக்கள் கூடினர் உங்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை தண்ணீர்தான் இருக்கிறது என்று குகையருகே ஓடிய சுனை நீரைக் கொடுத்தார் அவர் தந்த அந்த சுனை நீரால் தங்கள் வியாதிகள் குணமானதாக மக்கள் செய்தி பரப்ப கூட்டம் திரண்டது கூடிய மக்கள் அவரது பக்தர்களாயினர் அவர் எப்போதும் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்ததினால் சுவாமி ஒம்காராணந்தா என்று அழைக்கப்பட்டார்.


இது அவருக்கு பிடிக்கவில்லை எதுவுமே வேண்டாம் என்றுதானே இந்த மலையடிவாரத்திற்கு வந்தோம் இங்கே இது என்ன புது பதவி புகழ் என்று வெறுத்தவர் மக்கள் எளிதில் வரஇயலாதபடி அந்த மலையின் உச்சிக்கு சென்றுவிட்டார் அந்தப் பகுதியில் கிடைத்த பழங்களை மட்டுமே உண்டு யாருடைய தொடர்பும் இன்றி தியான வாழ்வை மேற்கொண்டார்.சதா காலமும் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்தபடி இருந்ததினால் இவர் ஒம்காரனாந்தா என்று அழைக்கப்பட்டார்.


இவரது மன உறுதி, தவத் தோற்றம் இவற்றால் கவரப்பட்ட விஜயநகர ராஜகுடும்பத்து ராணி குப்பம்மாள் என்பவர் இவரை மரியாதையுடன் வரவேற்று உபசரித்து அரண்மனையில் இருக்க கேட்டுக் கொண்டார் இந்தப் பரதேசிக்கு இதெல்லாம் ஒத்துவராது என்று சொல்லிவிட்டு திரும்ப மலை மீது ஏறிக்கொண்டார்.


இப்படி நாற்பத்தி நான்கு ஆண்டுகள் புரட்சி வாழ்க்கையையும் ,நாற்பத்தி நான்கு ஆண்டுகள் தவ வாழ்க்கையும் வாழ்ந்த வாழ்ந்த நீலகண்ட பிரம்மச்சாரி அரசியல்,பொதுவாழ்வு ஆன்மீகம் பற்றி மூன்று நுால்களை எழுதியுள்ளார்.அவரைப் பற்றிய புத்தகங்களும் குறிப்புகளுமே சொற்பமாக இருக்கும் இந்நாளில் அவர் எழுதிய புத்தகங்களை தேடிப்பிடிப்பது சிரமமே.
துள்ளித்திரியும் இளம் வயதில் புரட்சிக்காரனாக மலர்ந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய நீலகண்ட பிரம்மச்சாரி பின்னர் ஆன்ம விசாரணையில் ஈடுபட்டு சுவாமி ஓம்காரானந்தாவாக மிளிர்ந்து ஞான ஒளி பரப்பிய அந்த மகான், 1978 மார்ச் மாதம் 4ம் தேதி இறந்தார்.


மறுநாள் ஆயிரக்கணக்கானவர்கள் அழுதபடி கூடியிருக்க அவரது பூதவுடல் அக்னிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.


பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிரான சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இந்த மாபெரும் புரட்சிக்காரர் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் விதைத்த விதையும் சுதந்திரம் பெற ஒரு காரணம் என்று தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.இருந்தும் இன்றைய தேதிக்கு இவரது பெயருக்கு பெரிய மரியாதை எதுவும் நாட்டில் இல்லை என்பதுதான் உண்மை.
நீலகண்ட பிரம்மாச்சாரியின் 132 வது பிறந்த நாள் டிசம்பர் ஐந்தாம் தேதி.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஈரமான நினைவுகள்!


எந்தத் தெரு வழியாகவும் எங்கள் வீட்டுக்குச் செல்ல முடியாதபடி சுற்றிலும் சூழ்ந்திருந்த மழை நீர். இப்போது வடிந்து விட்டது.ஆஸ்தான ஆட்டோ முதல்நாள் இந்தத் தண்ணீரில் மாட்டி எஞ்ஜின் அணைத்துவிட அன்று மாற்று வண்டி பிடித்து கொட்டும் மழைக்கு நடுவே அலுவலகம் செல்வதற்குள்....


கழிவு நீரும் கலந்த நீர்! இதில் கால் வைத்து நடந்து வந்த இரவுதான் பாஸுக்கு குளிர் ஜுரம் தொடங்கியது.

==================================================================================================

அப்பாவின் கலெக்ஷனில் நான் முன்பு படித்து, இப்போது காணாமல் போன புத்தகம். நான் சென்னையிலும், அவர் மதுரையிலும் இருந்தபோது யாரோ எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.பாலில் தண்ணீர்... தண்ணீருக்கு பதில் பால்...!


165 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  சென்னையிலிருந்து இப்போ திரும்பினேன்.

  மழை, தண்ணீர் எனப் படங்கள் வந்த இடமா? மொட்டை வெயில், ரோடுகளில் சொட்டுத் தண்ணீர் இல்லை. எல்லாம் கம்ப்யூட்டர் ஜெனெரேட்ட் படங்களாக இருந்திருக்குமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம்.

   இப்போ சென்னையில் பல இடங்கள் சரியாகி விட்டாலும், இன்னும் சில இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. எங்கள் தெரு சரியானாலும், எங்கள் பக்கத்து தெருக்கள் சிலவற்றில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. ஏன், கோடம்பாக்கம், மாம்பலம் உட்பட நிறைய இடங்களில் உல்லெ இருக்கும் இடங்களில் இன்னும் தண்ணீர் அப்படியே இருக்கிறது.

   நீக்கு
 2. பாரதி பற்றிய நினைவு நெகிழ்ச்சி.

  காசிக்குப் போறவங்க சத்திரத்தில் தங்கி அடுத்த தெருவில் உள்ள இச் சிலையைப் பார்க்காமல் வர இயலாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் பகிர்ந்துள்ள சம்பவத்தில் சொல்லப்பட்டிருப்பது போல நானும் எதிரே உள்ள கடையில் தேனீர் அருந்தும்போது யதேச்சையாகத்தான் பார்த்தேன்!

   நீக்கு
 3. நீங்கள் எழுதியருப்பதுபோல நான் எதிர்பார்த்து, தண்ணீரில் கஷ்டப்படப் போகிறோமே என நினைத்துத் திருமணத்திற்குச் சென்றால்..

  நல்ல வெயில் மழை பெய்த சுவடே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெயில் தொடங்கி விட்டதுதான். ஆஅனால் இன்னமும் படல இடங்களில் தண்ணீர் நிற்கிறது. நீங்கள் சென்ற இடம் அப்படி இருந்திருக்கலாம். அடையாற்றில் இன்னும் தளும்ப தண்ணீர் ஒடுகிறது. வற்றி மணல் தெரியவில்லை.

   நீக்கு
  2. நெல்லை எங்கள் ஊரில் எல்லாம் தண்ணீர் தேக்கமே கிடையாது தண்ணீர் ஓடிக் கொண்டே வடிந்துகொண்டே இருந்ததால் மறுநாள் காலை இங்கா நேற்று தண்ணீர் வந்தது என்று இருக்கும்...ஆனால் தெருவில் ஆற்று மணல் மட்டும் எஞ்சியிருக்கும் அடையாளமாய். அதையும் உடனே வாரி எடுத்துப் போட்டாயிற்று. வீட்டிற்குள் வந்த தண்ணீர் ஓரிரு மணி நேரங்களில் வெளியோ போயாச்சு. சேறு மட்டுமே..

   கீதா

   நீக்கு
 4. என்ன ஈரமான நினைவோ... ஒரு காட்சியும் சென்ற இரு நாளில் காணவில்லை.

  ஒரு பழைய வங்கி லாக்கர் அறைக்குள் சென்றால் தரை முழுதும் தண்ணீர் ஊற்றியது போல வழுக்கினது. நல்ல மழையில் எப்படி இருந்திருக்குமோ எனத் தோன்றியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான்... ஏதோ சொல்வார்களே.. ஆடி முடிஞ்சு அமாவாசையில் கோழி வெட்டிக் கும்பிட்டான் என்று!

   நீக்கு
 5. காலை வணக்கம் எல்லோருக்கும்.

  இந்தக் கல்யாண நிகழ்வுப் பிரச்சனைகள் எல்லார் குடும்பங்களிலும் இருக்கும்தான் என்று தோன்றுகிறது. நம் கல்யாண வகைகள் நிகழ்வுகள் என்றுதான் மாறுமோ? சிம்பிளாக முடிந்தால் யாருக்கும் அதிகச் செலவும் இருக்காது, குற்றம் குறைகள் மனத்தாங்கல்கள் இல்லாமல் போகும். இதனால் குடும்பத்தில் மனப் பிரச்சனைகள் பிரிதல்கள் என்று ஏனோ (கல்யாணம் என்றில்லை மற்ற நிகழ்வுகள், சாதாரண நாட்களிலும் தான்) நாம் வாழும் நாட்களில் மகிழ்வாக மனத்தாங்கல்கள் இல்லாமல் என்று என் மனம் அடிக்கடி யோசிக்கும்.......இது என் தனிப்பட்டக் கருத்து.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிம்பிளாக என்று சொன்னதால் ஏற்பட்ட அனுபவங்கள் நிரைய கீதா... அதை எல்லாம் இங்கே சொன்னால் யா த த தா ம அ போ மாதிரி இருக்கும்!

   நீக்கு
  2. இன்னிக்கு அடுத்த சுருக்கெழுத்து புதிரா !!

   நீக்கு
  3. சட்டெனப் புரியுமே...//

   ஸ்ரீராம் நேற்றும் புரியவில்லை, இன்றும் புரியவில்லை!!! அந்தளவுக்கு என் மூளை வேலை செய்யவில்லையோ?!!!!

   கீதா

   நீக்கு
 6. எப்படிப்பட்ட கல்யாணம் என்றாலும் உறவினர்கள் கூட்டம் கொஞ்சம் கூடுதல் ஆகிவிடுகிறது. இனிமேல் கேரளா கல்யாணங்கள் போல் வந்தோம் சென்றோம் ஒரு வேளை சத்ய சாப்பாடு சாப்பிட்டோம் என்று வைத்தால் நேரமும் செலவும் மிச்சம் என்று தோன்றுகிறது. 

  நேற்று முளைத்ததுகள் 1947ல் பெற்ற சுதந்திரம் பிச்சை என்று கேவலப்படுத்தும்போது பாரதியையும் நீலகண்ட பிரம்மச்சாரியையும் போற்றி எழுதியது நன்று. 

  பேசாமல் முன்பே ஜோக் இட்டது போன்று ஒரு inflatable boat வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சென்னையில் அவசியம் என்று தோன்றுகிறது. 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊறவினர் கூட்டம் வந்தது. பெண் வீஎட்டார் யாரும் மாஸ்க் போடவில்லை. அலட்சியமாகவெ இருந்தனர். நல்லவேளை இத்தனை நாட்கள் கழிந்தும் ஒன்றும் ஆகவில்லை!

   இப்படி மழை பெய்யாமல் சாதாரணமாக பெய்தால் சென்னை ஒன்றும் பாதிக்காது. 2015க்குப் ப்பின் இந்த வருடம் படுத்தி இருக்கிறது. இனி மறுபடி எப்போதோ...

   நீக்கு
 7. போர்வைக்குள்ளிருந்து குரல் கேட்டது. லீவு என்றேன் என்று போர்வைக்குள் குளிருக்கு அடக்கமாய்த் தூங்கிக் கொண்டிருந்தவர், எனக்காக பஸ் டிரைவரிடம் பேசி இருக்கிறார். அவர் ஒத்துவராததால் இவரே கிளம்பிச் சென்று அவரை பஸ்ஸுடன் அழைத்து வந்து விட்டுச் சென்றார். //

  ஆபந்தபாந்தவனாய் ஆட்டோக்காரர்! வாழ்க! நல்ல உள்ளம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், மிக நல்லவர், நியாயவான். ஆட்டோக்காரருக்கு இருக்காத நியாய உணர்வு இவரிடம் உண்டு.

   நீக்கு
 8. இதையெல்லாம் நீட்டி முழக்கிச் சொன்னால் நாவல்தான் எழுத வேண்டும்!//

  அம்மாடியோவ்! யோசித்துப் பார்த்த போது அத்தனை பேரும் எழுதத் தொடங்கினால் உலகம் கொள்ளா அளவுக்கு வந்துவிடுமே!!! ஹாஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் எல்லாமே வேடிக்கை நமக்கு... அதில் வேறென்ன இருக்கு...?!!!"

   நீக்கு
  2. ஆஹா பாட்டா...அப்ப நாளைய பகிர்வு!!?? தலைப்பு இன்று வெளியீடு?

   இது என்ன பாட்டு என்று கூகுளில் போட்டுத் தெரிந்துகொண்டுவிட்டேனே!!!

   கீதா

   நீக்கு
  3. கூகுளில் போட்டுதான் தெரிந்து கொண்டீர்களா?!!

   நீக்கு
  4. அதே போல ஜி எம் பி ஸார் பதிவில் சொன்ன வரிகளை கூகுள் பண்ணிப் பார்த்தீர்களோ?

   நீக்கு
  5. கூகுளில் போட்டுதான் தெரிந்து கொண்டீர்களா?!!//

   ஆமாம் ஸ்ரீராம் பாடல் ட்யூன் நினைவிருந்தால் வரிகள் நினைவுக்கு வராது பல சமயங்களில் இதிலும் டக்கென்று பிடிபடவில்லை. கேட்டதும் அட கேட்டிருக்கிறோமே என்று ஆமாம் ஸ்ரீராம் ஜி எம் பி சார் பதிவிலும் கூட நீங்கள் சொல்லியிருந்த வரிகளை நான் கருத்தில் சொன்ன பிறகு கூகுளில் போட்டுப் பார்த்து ...அட இதுவும்கேட்ட பாடலே என்று சொல்லிக் கொண்டேன்...ஒரு சில பாடல்களைத் தவிர ட்யூனும் பாட்டின் வரிகளும் சேர்ந்தார் போல ஸ்ட்ரைக் ஆக மாட்டேங்குதேன்னு...

   ஆனால் (யாதோ) ரமணி சகோ பதிவில் நீங்கள் சொல்லியிருந்த ஆட்டுவித்தால் யாரொருவர் ....அது உடன் கிட்டி!!! கேட்டோ!!!! கூகுள் போகாமலேயே!!! ஆனா என்ன படம்னு லாம் தெரியாது!! ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
 9. கேரள டைப் கல்யாணங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப சிம்பிள். ஒரு சில மணி நேரங்களே. வருடங்களுக்கு முன்பு திருச்சூரில் என் நண்பர் ஒருவரின் கல்யாணம் ஜஸ்ட் 3 மணி நேரமே நடந்தது. கோயிலில் சாமி கும்பிட்டு, மாலை மாற்றல். (சிலர் இதோடே முடித்துக் கொண்டுவிடுவார்கள் அங்கேயே முகூர்த்தமும் முடித்து) நண்பர் கல்யாணத்தில் அதன் பின் கோயிலை ஒட்டிய மண்டபத்தில் சின்ன சம்பிரதாய நிகழ்வுகள், முகூர்த்தம், கல்யாண ரெஜிட்ரேஷன். அவ்வளவே அதன் பின் சாப்பாடு. மூட்டைய கட்டியாச்சு. அன்பளிப்புப் பொருள்கள் கூட யாரும் கொடுத்ததாகத் தெரியவில்லை. அதே போன்று துளசியின் சுற்றத்தில் ஒரு கல்யாணம் அதுவும் அங்ங்கனமே. பெண்ணை/மாப்பிள்ளையை வரவேற்க தாலம் பெண்கள் கையில் தாலம் விளக்கு ஏந்தி வர வேற்பார்கள். அதாவது ட்ரெடிஷனலாகச் செய்பவர்கள். இப்போதெல்லாம் அங்கும் ரிசெப்ஷன் ப்ஃபே என்று வந்துவிட்டது. அன்பளிப்புகள் கொடுத்து ஃபோட்டோ ஷூட் நடக்கிறது.

  ஆனால் அவர்கள் கல்யாணத்தைப் பொருத்த வரை கல்யாணம் சிம்பிள் கல்யாணம் சிம்பிளாக இருந்தாலும் வெளியில் தெரியாமல் பெண் வீட்டிடமிருந்து செய்யப்படும் சீர் அதிகமோ அதிகம் பெரும்பாலும். (சீர் என்பது நிலம், தோட்டம், பவுன், கேஷ்)

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேரளா டைப் கல்யாணம் நான் ஒரு கிறித்துவத் திருமணமும், ஒரு இந்துத் திருமணமும் அட்டெண்ட் செய்திருக்கிறேன். நீங்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் சிம்பிள்தான். உங்கள் இரண்டாவது பாராவை அப்படியே டிட்டோ செய்கிறேன்!

   நீக்கு
  2. கேரளாவில் திருமண மண்டபத்தில் பரிசு கொடுக்க மாட்டார்களாமே? திருமணத்திற்கு முன்பே வீட்டில் சந்தித்து பரிசு கொடுத்து விடுவார்களாம். கேரள பெண்ணை தன் பையனுக்கு திருமணம் செய்து வைத்த எங்கள் உறவினர் கூறினார். 

   நீக்கு
  3. நமக்கென்ன தெரியும்? நான் சென்ற கல்யாணங்களில் நம் வழக்கப்படி எந்த நேரத்தில் பரிசளிப்போமோ அந்த நேரத்தில்தான் கொடுத்தோம்.

   நீக்கு
  4. பானுக்கா அண்ட் ஸ்ரீராம், பானுக்கா சொன்னது போலத்தான் ஆமாம் வீட்டில் சென்று கொடுப்பதுண்டு.

   நான் முதலில் இருந்தே இப்படித்தான் கல்யாணங்களில் மேடை ஏறும் வழக்கம் இல்லை. எந்த நிகழ்வுக்குமே. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே யாருடனேனும் செல்ல நேரும் போது மட்டும் அதுவும் தவிர்க்க முடியாமல் போனால் மட்டுமே மேடை ஏற வேண்டியதாகிவிடும். தனியாகச் சந்தித்துக் கொடுத்துவிடுவதே என் விருப்பம். ஃபோட்டோ/வீடியோ ஷூட் தவிர்த்தும் விடலாம்!!!

   கீதா

   நீக்கு
  5. கே.. சில சமயங்களில் மேடை ஏறுவதை நானும் தவிர்க்க நினைத்து பாஸை மட்டும் மேடையேற விட்டு நழுவியதுண்டு!

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 11. செல்லும் வழி என்பது திருமழிசை, மணவாளநகர், திருவள்ளூர் வழியாக செல்வது சுலப வழி. ஆனால் வழியில் திருவாலங்காடு அருகே பாலாறு பொங்கி ஆற்றுப்பாலத்தை மூடிவிட்டதால் அங்கு டைவர்ஷன் எடுத்து 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டி இருக்கும் என்று முதலில் சொல்லப்பட்டது. கடைசி நிமிடத்தில் அந்தப் பாதையே வேண்டாம், அரக்கோணம் வழியாக வந்து விடுங்கள் என்று சொல்ல, ஒன்றரை மணிநேர பிரயாணம் என்பது இரண்டரை மணி நேர பிரயாணமானது.//

  ஓ! திருவள்ளூரிலிருந்து திருத்தணிக்கு நல்ல ஒரு ஹைவே 4 வழிச்சாலை அதன் வழியாகத்தான் நானும் மகனும் சென்றோம். இரு முறையும். அந்த வழியில் ஆமாம் திருவாலங்காடு செல்வதற்குப் பாதை வரும்...ஆனால் ரோடு நன்றாக இருக்கும் அங்கா ஆறு மூடிக் கொண்டது?!!! ஆ!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். அந்த இடத்தில் ஒரு சிறு பாலம் வரும். அது அடித்துச் செல்லப்பட்டதாம். எனவே இரண்டு கிலோமீட்டர் பாதையைச் சுற்றிவர இருபது கிலோமீட்டர் சுற்றவேண்டி இருந்தது.

   நீக்கு
 12. பாரதி பற்றிய செய்தி மனதை நெகிழ்த்திவிட்டது. அவர் பேரன் சொன்னவை குறிப்பாக.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அந்தத் தகவல்கள் சரியான நேரத்தில் கிடைத்தன. பொருத்தமாக உபயோகித்துக் கொள்ள முடிந்தது.

   நீக்கு
 13. நீலகண்ட பிரம்மச்சாரி //

  இதோ இப்போது கூட நம் வீட்டில் மாமானாரின் தொகுப்பான ஆஷ் கொலை வழக்கு - ரகமி பைன்ட் புத்தகத்தை அப்பாவும் , நானும் மாறி மாறி வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

  இவரைப் பற்றி முன்பே எபியில் பதிவிலோ, கருத்துகளிலோ என்று நினைக்கிறேன் வாசித்த நினைவு, பனிப்படலமாய்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், அந்தப் புத்தகதிலும் கூட இவர் பற்றி சுருக்கமாகத்தான் இருக்கும். இங்கு அதிக விவரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக அவரின் பிற்கால வாழ்க்கை பற்றி.

   முன்பு எபியில் எப்போதோ இவர் பற்றிய பேச்சு வந்திருக்கிறது.

   நீக்கு
  2. ஆமாம் அவரைப் பற்றி அதில் இல்லாத தகவல்கள் இங்கு வந்துள்ளன.

   ஹப்பா என் மெமரி ஓகே!!! எபியில் முன்பு வந்திருப்பது குறித்து நீங்களும் சொன்னது பார்த்தவுடன் ஒரு சின்ன சந்தோஷம்!!

   கீதா

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  கதம்பம் அருமை. நவம்பரில் நடைபெறும் கல்யாண அவதிகள் கஸ்டமாகத்தான் இருந்திருக்கும்.ஆனாலும் சுவாரஸ்யமாக எழுதி உள்ளீர்கள். அடுத்த பகுதிக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  இந்த தடவை மழை அதிகந்தான். தாங்கள் பகிர்ந்த படங்களில் இன்னமும் மழை வெள்ளநீர் வற்றாமல் உள்ளதே..

  அதிகாலை நேரத்திலும் உதவிக்கு வந்த உங்கள் ஆஸ்தான ஆட்டோகார நண்பரை மனதாற பாராட்டுவோம்.

  வாட்சப் தகவல் படித்தேன். வரும் பதினொன்றாம் தேதிக்கு பொருத்தமான பதிவு. பாரதியாரின் பேரனின் பேட்டி நன்றாக இருந்தது. எத்தனை விஷயங்கள்... சிருங்கார வேலன் கமல் பாடிய வரிகளும் நினைவுக்கு வந்தது.

  தியாகி, சுதந்திர போராட்டம் வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி அவர்களைப்பற்றிய தகவல்கள் நன்று. முன்பு நானும் என்றோ இவரைப் பற்றி படித்த நினைவு.

  தண்ணிப்பால் ஜோக் நன்று. இப்ப வரைக்கும் நாமும் இந்த தண்ணிப்பால்தான் உபயோகித்து வருகிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்யாண விவரங்களில் நிறைய பாலிடிக்ஸை விட்டு விட்டேன்! பக்கத்து வீட்டுக் கல்யாணம் என்றால் நாக்குல பல்லைப் போட்டு பேசலாம்!!! எங்கூட்டுக் கல்யாணமாச்சே...

   நான் பகிர்ந்துள்ல இடங்களில் இப்போது நீர் வற்றி விட்டது. ஆனால் அருகிலேயே சில இடங்கள் அப்படியே நிற்கிறது.

   ஆட்டோக்காரர் நல்லவர். என்ன காரணமாயிருந்தாலும் சமயங்களில் அவர் வராமல் போவதுதான் சிரமம்.

   ஆம், எனக்கும்! கமல் பாட்டின் அந்த வரி அவர் சொல்வது போலதான் நானும் நினைத்திருந்தேன்.

   நீலகண்ட ப்ரம்மச்சாரி பற்றிய தகவல்கள் வெளியில் அதிகம் கிடைப்பதில்லை.

   நன்றி கமலா அக்கா.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   /கல்யாண விவரங்களில் நிறைய பாலிடிக்ஸை விட்டு விட்டேன்! பக்கத்து வீட்டுக் கல்யாணம் என்றால் நாக்குல பல்லைப் போட்டு பேசலாம்!!! எங்கூட்டுக் கல்யாணமாச்சே.../

   கல்யாணத்தில் என்ன அரசியல்..? குற்றம் குறைகளா? அது இயல்புதானே.. சம்பந்தி சண்டைகள் (கருத்து உரசல்கள்) ஒரு சிலவாவது இருந்தால்தானே கல்யாணம் சோபிக்கும். சம்பந்திகள் சமரச மனப்பான்மையுடன் இருந்தால், அவர்களின் உறவுகள் சாம்பிராணி தூவுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் இந்த மாதிரி சண்டையிட கூட நேரமில்லை. எல்லோரும் அவரவர் கையிலிருக்கும் ஆயுதத்துடன் (அதுதான் செல்ஃபோன்) அவர்களுக்குள்ளேயே சண்டையிட நேரம் சரியாக இருக்கிறது.:)

   உங்கள் பாஸ் இப்போது உடல் நலமாகி இருப்பது மகிழ்வான விஷயம். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்

   நீக்கு
  3. சில மனவருத்தங்கள் நிரந்தரமாக மனதில் இடம்பெற்று விடுவதோடு, சங்கடங்கள் தொடரவும் செய்கின்றன. அதுதான்.

   நீக்கு
 15. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவரும் ஆரோக்கியம்
  அமைதியுடன் இருக்கவும்,
  புதிய தொற்று பரவாமல் இருக்கவும் இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 16. மஹாகவி பாரதியின் தினத்தை ஒட்டிய பதிவு மிக இனிமை. அவருடைய பேரன் காசியில் இருக்கிறாரா.
  இதுவே பெரிய செய்தி.

  சொல்லி இருப்பது போல அவரது பாடல்களே அவர் பெருமை பேசும். வேறென்ன வேண்டும்!!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ஃபேஸ்புக்கிலிருந்து எடுத்து நான் பகிர்ந்தது அம்மா. அதிலிருக்கும் போட்டோக்கள் மட்டும் நான் எடுத்தவை. படையப்பா ஷர்ட் மாதிரி!

   நீக்கு
 17. உங்கள் வீடே ஒரு சிறு தீவு போல ஆகி விட்டது போலிருக்கிறதே. நீலகண்ட பிரும்மச்சாரியைப் பற்றிய செய்தி கேள்விப்படாதது. சும்மா வரவில்லை சுதந்திரம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது ரொம்பவே பரவாயில்லை. பக்கத்துத் தெருக்கள் இன்னமும் கடக்க முடியாத நீருக்கு நடுவே இருக்கின்றன!

   நீக்கு
 18. திருத்தணி திருமணத்தில் இத்தனை நிகழ்வுகளா.!!!
  மழையில் சிக்காமல் போய் வந்ததே
  பெரிய அதிசயம் தான். அதுவும் பாலாறு பொங்கி வந்த வேளையில்:(

  நீலகண்ட பிரம்மச்சாரி பற்றி இதுவரை அறிந்திராத செய்திகள். எத்தனையோ
  உயர்ந்தவர்கள் செய்த தியாகத்தில் நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம்.
  இது மாசில்லாமல் கிடைக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //திருத்தணி திருமணத்தில் இத்தனை நிகழ்வுகளா.!!!//

   சொன்னதைவிட சொல்லாதது அதிகம்!!

   சுதந்திரம் கிடைத்த அருமை நமக்குத் தெரியவில்லைதான்.

   நீக்கு
  2. நமக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறோம்.

   நம் நாட்டைப் போல இத்தனை சுதந்திரம் வேறு எந்த நாட்டிலும் உண்டா?

   ரோட்டில் துப்பலாம். மூத்திரம் அடிக்கலாம், கழிக்கலாம். புகைப்பிடிக்கலாம், ஆற்றில் அருவியில் ஷாம்பூ சோப் போட்டுக் குளிக்கலாம், அடுத்த வீட்டில் யாருமில்லை என்றால் குப்பையைப் போடலாம். தண்ணி அடித்துவிட்டு ரோட்டில் உருளலாம். டிக்கெட் இல்லாமல் பயணிக்கலாம். திருடலாம். ஏமாற்றலாம். வெள்ளம் வரும் ஏரியாவில் வீட்டைக் கட்டிக் கொண்டு பணமும் பெற்றுக் கொள்ளலாம். அந்த வீடுகளின் கழிவு நீரை ஆற்றிக் கலக்கலாம், தொழிற்சாலைக் கழிவுகளை ஆற்றில் கலக்கலாம் விஷமாக்கலாம் சாயம் ஏற்றலாம், கொள்ளை அடிக்கலாம், கொலையும் செய்யலாம்...

   நல்லகாலம் உயர்ந்தவர்கள் நீலகண்ட பிரம்மச்சாரி, பாரதியார், வ உ சி இன்னும் பல தியாகிகள் எல்லாம் இப்போதுஇருந்திருந்தால் இதற்கா சுதந்திரத்திற்கு நாம் பாடுபட்டோம் என்று நொந்து போயிருந்திருப்பார்கள்.

   கீதா

   நீக்கு
  3. ஜனநாயகம் கீதா ஜனநாயகம்! அதுதான் நம்மை பல சமயங்களில் பலமாகவும், சில சமயங்களில் பலவீனமாகவும் ஆக்குகிறது.

   நீக்கு
  4. ஜனநாயகம் என்பது சரிதான் ஸ்ரீராம். ஆனால் நம் நாட்டில் ஜனநாயகம் என்பதை விட ஜனநாயகச் சட்டம் வலுவாக இல்லை. பல நாடுகளிலும் ஜனநாயகம் தான் ஆனால் அங்கு சட்டம் வலுவாக இருக்கிறது அப்படி வலுவாக இருப்பதால் ஜனநாயகம் பாதிக்கப்படவில்லை சுதந்திரமாக ஆனால் சட்டத்தை மதிக்கும்/ஏற்கும் சுதந்திரமாக இருப்பதால் சுதந்திரம் பாதிக்கப்படவில்லை. மாறாக அவர்களும் சட்டத்தின் வாயிலாகப் பிரச்சனைகளை அணுக முடிகிறது. இது பெரிய சுதந்திரம் இல்லையா?

   கீதா

   நீக்கு
  5. உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா. சட்டங்கள் வலுவாக இருக்கின்றன என்று உடனே அமுல்படுத்த முடியாது.

   நீக்கு
 19. மழைப்படங்கள் ,தண்ணீர் தேங்கிய நிலை
  எல்லாமே அவதிதான்.
  பாஸ் அவர்கள் உடல் நிலை இப்போது
  சரியாக இருக்கிறது என்று நம்புகிறேன்.

  பிஎஸ் ராமையாவின் கதை நினைவில்லை. படம் மிக மிக அழகாக
  இருக்கிறது.
  நல்லதொரு பதிவுக்கு நல் வாழ்த்துகள் ஸ்ரீராம்.
  சுருக்கெழுத்துதான் புரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்னபாலான ஏரியாக்களில் மழைத்தண்ணீர் நிலை இப்பொது தேவலாம். மயிலையில் உங்கள் வீட்டு நிலவரம் எப்படி?

   பாஸ் உடல்னிலை இப்போது தேவலாம்.

   பி எஸ் ராமையாவின் அந்தக் கதைக்கு ஓவியம் வரைந்திருப்பது ஜெயராஜ். தெரிகிறதா?

   நன்றி அம்மா. சுருக்கெழுத்து?

   நீக்கு
 20. ஒரு வாக்கியத்தைச் சுருக்கி எழுதி இருக்கிறீர்கள் .அதைச் சொன்னேன் மா.
  மயிலையில் சாலை மேடாகி இருப்பதால் ஒரு நாள் தண்ணீர் தேங்கியது.
  பிறகு வடிந்திருக்கிறது. இப்போது வெய்யில் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் இல்லையென்று நினைக்கிறேன். கமெண்ட்டிலோ? கீத ரெங்கனுக்கு சொன்ன பதில்?

   உங்கள் ஏரியாவில் தண்ணீர் தேக்கம் இல்லை என்பது நிம்மதி!

   இதோ இப்பொது சென்னையில் வெயிலும், மழையும் சேர்ந்து...

   நீக்கு
 21. பனாரஸில் பாரதியின் சிலை, மகாகவியின் பேரன் BHU கிருஷ்ணன், உத்திரப்பிரதேச வாணலியிலிருந்து கோணமானல் ஜிலேபி! வாஞ்சிநாதன், நீலகண்ட ப்ரம்மச்சாரி, ஓம்.. கதம்ப விஷயங்கள். சமீபத்தில் டெல்லி ராமர் கோவிலில் சீதாராம கல்யாண உத்சவத்திற்க்ப் பின் குளிரான காலையில் சாப்பிட்ட சூடான கதம்ப சாதப் ப்ரசாதம், லட்டு, தயிர் சாதம் நினைவில்!

  பிஎஸ் ராமையா கதை சரி.. ஓவியம் ஜெயராஜா? இன்னொரு ஜெயராஜ் இருந்தாரோ என்னவோ !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை.  அதெ ஜெ..தான்.    அப்போது அப்படி வரைந்திருந்தார்.

   நீக்கு
  2. ஏகாந்தன் அண்ணாவை என்னடா காணவில்லை என்று நினைத்தேன் கிரிக்கெட் பதிவுக்கு அப்புறம் காணவில்லை இங்கும் பார்க்கவில்லையே என்று. தற்காலிக தில்லி விசிட்?

   கீதா

   நீக்கு
 22. நீலகண்ட பிரம்மாச்சாரி அவர்கள் என்றும் போற்றத்தக்கவர்...

  படகு போக்குவரத்து தேவைப்படும் போல...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த ஆறு வருடங்களுக்கு கவலை இல்லை என்று நினைக்கிறேன்!

   நீக்கு
  2. 2015-2021-2027??

   pattern அடிப்படையிலா!! இது போட்டித் தேர்வில் ஒரு கேள்வி வருமே இப்படி பேட்டர்ன் அடிப்படையில் இதற்கு அடுத்து என்ன என்று...அப்படி இருக்கிறது!!! ஹாஹாஹாஹா

   ஆனா ஸ்ரீராம் இந்த இயற்கையை நம்பமுடியாதாக்கும் தன் பேட்டர்னை திடீரென்று மாற்றிக் கொண்டுவிடும்.

   கீதா

   நீக்கு
  3. அதற்கு ஒரு சுனாமி வரவேண்டுமாக்கும்! அட, சும்மா மனசை காம்ப்ரமைஸ் செய்துகொள்ள விட மாட்டீங்களே..!!!


   திண்டுக்கல்லார் ஏன் 7 என்று சொல்லி இருக்கிறார் என்று புரியவில்லை!

   நீக்கு
  4. அவர் 27 என்பதை 7 என்று சொல்லியிருக்கிறாரோ என்னவோ?

   கீதா

   நீக்கு
 23. ஸ்ரீராம் சென்னைத் தண்ணீரில் அதிகம் சாக்கடை நீர் என்பதால் பல இன்ஃபெக்ஷன் வர சான்ஸ் உண்டு அதுதான் காரணமாக இருந்திருக்கும் பாஸின் உடல் நிலைக்கு. இப்போது சரியாகிவிட்டார் என்பதும் தெரிந்து கொண்டேன்.

  பல இடங்களிலும் தண்ணீர் தான் கோடம்பாக்கம் வீட்டிலும் உள்ளே 5 அடி தண்ணிர். மூன்று முறை வந்திருந்ததாம் இப்போதைய மழையில். 4 ஆம் முறையும் எதிர்பார்த்து நல்லகாலம் வரவில்லை என்று நினைக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். பாஸுக்கு மட்டுமல்ல யாரைக் கேட்டாலும் இந்த கம்ப்ளைன்ட் சொன்னார்கள். இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. நினைவுக்கு வருது. பல வருடங்கள் முன் இப்படி மழைக்காலத்தில் வெள்ளம் எல்லாம் வந்தால் எங்கள் ஊர்ப் பகுதிகளில் பப்ளிக் ஹெல்த் சேவகர்கள் வந்துவிடுவார்கள். காலரா, காய்ச்சல் இருக்கா என்று சோதிக்கவும், வந்தால் பார்க்கச் சொல்லியும் மாத்திரைகளும் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். நான் சொல்வது என் பள்ளிக்காலத்தில்.

   கீதா

   நீக்கு
  3. ஆம். முன்னால் எல்லாம் ஊர் நன்றாய் இருந்தது!

   நீக்கு
 24. ஆனால் சென்னை போல எங்க ஊர் ஆகிடாம இருக்கணும் என்று ரொம்ப தோன்றுகிறது. உங்க வீட்டுத் தெரு தண்ணீரில் ஏதோ கவர் மிதக்கிறதே!!

  எங்கள் ஊர் தேரேகாலில் "ஆரோக்யா" மிதந்தது!!!! படம் இருக்கிறது அப்புறம் போட வைத்திருக்கிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உங்க வீட்டுத் தெரு தண்ணீரில் ஏதோ கவர் மிதக்கிறதே!!/

   இன்னும் கொஞ்சம் போயிருந்தால் காம்பௌண்ட் சுவரே மிதந்திருக்கும்!

   நீக்கு
 25. பதில்கள்
  1. //பவர் இல்லை. இனி வந்த பிறகுதான்...//

   ஓ... அதுதான் தளங்கள் நீங்கள் ரோபோ இல்லை என்று நிரூபியுங்கள் என்கிறதோ!

   நீக்கு
  2. ஹாஹாஹா ஸ்ரீராம்.

   ரோபோக்கு என்னிடம் பயம் போல! என்னிடம் நிரூபிக்கச் சொல்லிக் கேட்கவே இல்லையாக்கும்.

   கீதா

   நீக்கு
 26. கல்யாண கலாட்டாக்கள்.

  பாரதியாரின் பேரன் மூலம் வேறொரு பார்வை அறிந்தோம். பாரதியாரின் பேத்தி ஒருவர் எனது சிறுவயதில் எங்கள் குடும்பக் கோவிலுக்கு வந்து பேசி இருக்கிறார்.

  மழை வெள்ளம் பார்க்கவே பயமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட... அப்படியா? வங்கியில் பணிபுரிபவரா? நன்றி மாதேவி.

   நீக்கு
  2. தெரியவில்லை. பெயரும் தெரியாது சிறுவயது என்பதால் கனவுகண்டதுபோல நினைவு.

   நீக்கு
 27. ஜோக் ரசித்தேன் ஸ்ரீராம்.

  நீங்கள் காசிக்குச் சென்றிருந்த போது எடுத்த படங்கள் இப்பொது இங்கும் பகிர்ந்திருப்பது நினைவிருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
 28. என்னாச்சு கீதாக்காவை காணவில்லை? மதியமாவது வந்திடுவாங்களே.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் மதியமே எதிர்பார்த்தேன். காணோம். ஃபேஸ்புக் பக்கம் வந்திருந்தார்கள்.

   நீக்கு
  2. ஓ அப்ப கீதாக்கா ஓகே!!! மகிழ்ச்சி!

   கீதா

   நீக்கு
  3. அது மொபைல் வழியாகப் பார்க்கலாமே! கொஞ்சமானும் பார்த்துக்கலாம்னு தான்.

   நீக்கு
  4. ஓகே ஓகே நீங்கள் வேறு வேலையில் பிஸி என்று நினைத்தேன். இப்போ வலி தேவலாமா?

   நீக்கு
 29. பதில்கள்
  1. நான் இருக்கிறேன்..  சாதாரணமாக நீங்கள் மதியம் மூன்றரை மணிக்கு மேல்தான் வருவிர்கள் என்பதால் காத்திருந்தேன்.  (சமாளிச்சுட்டேனா?!)

   இனி உங்களுக்கெல்லாம் வாரத்துக்கு ஐந்தரை நாட்கள்தான் வேலை நேரம் என்று கேள்விப்பட்டேன்...  உண்மையா?

   நீக்கு
  2. ஊருக்கு போய் விட்டீர்கள் என்று நினைத்தேன், அதுதான் இங்கு வரவில்லை என்று நினைத்தேன்.

   நீக்கு
  3. நானும் அவர் இந்தியா வரும் நேரம் எப்போ என்று துரை அண்ணனிடம் கேட்டு அலுத்து விட்டேன். பதிலே சொல்ல மாட்டேன் எங்கிறார்!

   நீக்கு
  4. துரை அண்ணா, கீதாக்காவுக்கு அப்புறம் உங்களைக் கேட்டு கொடுத்திருந்த கருத்து வரவில்லை என்பது இப்போதுதான் தெரிந்தது இங்கு வந்த போது.

   அதற்கு முன் துளசியின் கருத்தைப் பதிந்துவிட்டு மேலே பார்த்தால் நீங்கள் தாயகம் திரும்பியதைப் பார்த்துவிட்டேன். அதனாலதான் உங்களைக் காணவில்லை என்று தெரிந்தது ஆனால் திரும்பியது மகிழ்ச்சி!! நான் இடையில் உங்களுக்கு உடல்நலம் சளி என்றெல்லாம் சொல்லியிருந்தீங்க இல்லையா அதனால் அதையும் சொல்லிக் கேட்டிருந்த கருத்து அது...

   உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி அண்ணா

   கீதா

   நீக்கு
  5. அட? துரை இந்தியா வந்திருக்காரா? நல்வரவு, நல்வரவு. உங்கள் உடல் நலன்/மன நலம் அத்தனையும் இங்கே வந்து நெருங்கியவர்களைப் பார்த்ததும் முற்றிலும் தீர்ந்து மன மகிழ்ச்சி அதிகரிக்கப் பிரார்த்திக்கிறேன்.

   நீக்கு
 30. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 31. கல்யாண அனுபவங்கள் நிறைய இருக்கும்தான், அதுவும் மழை வேறு. போய் வரும் சிரமம் வேறு . கல்யாண ஆல்பம் நிதானமாக பார்த்து மகிழ வேண்டிய ஒன்று. அதில் எல்லோரும் மூகமூடி அணிந்து இருந்தால் யார் யார் என்று அடையாளம் தெரியாது என்று பெண் வீட்டார் அணியவில்லை போலும்.

  இந்த கோரானாவும் , மழையும் நிறைய கல்யாணங்களை , நல்ல குடும்ப விழாக்களை ரசிக்க முடியாமல் செய்து இருக்கிறது.

  உங்கள் வீட்டுக்கு போகும் பாதையில் நிற்கும் மழை நீரை பார்க்கும் போது நீங்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டபட்டு இருப்பீர்கள் என்று தெரிகிறது.

  உங்களுக்கு உதவிய உங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரரை பாராட்டி வாழ்த்த வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புகைப்படம் எடுக்கும் சமயம் மட்டும் மாஸ்க்கை எடுக்கும் வண்ணம் இருந்தால் நன்றாயிருந்திருக்கும்! ஆனால் இப்போது தமிழகத்தில் எல்லொருமே ஒரு அலட்சியத்தில்தான் இருக்கிறார்கள்.

   நீக்கு
 32. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 33. பாரதி, விவேகானந்தர்,
  நீலகண்ட பிரம்மச்சாரி இவர்களை பற்றிய செய்திகள் அருமை.
  அதுவும் நீலகண்ட பிரம்மச்சாரியின் பிற்கால வாழ்க்கை தவ வாழ்க்கை .
  இவர்களை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பி.எஸ் .ராமையா அவர்கள் புத்தகம் உங்களுக்கு கிடைத்தால் கதை என்ன என்று தெரியும் எங்களுக்கு.

  நகைச்சுவை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதை நானும் எப்பொழுதோ சிறு வயதில் படித்திருக்கிறேன். இப்பொழுது நினைவில்லை.

   நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 34. @ ஸ்ரீராம்..

  // நானும் அவர் இந்தியா வரும் நேரம் எப்போ என்று துரை அண்ணனிடம் கேட்டு அலுத்து விட்டேன். பதிலே சொல்ல மாட்டேன் எங்கிறார்!.. //

  வந்துட்டேனே...
  ஊருக்கு வந்துட்டேனே!..

  செவ்வாய் விடியலில் புறப்பட்டு நள்ளிரவு சென்னையில் தரையிறங்கி -

  புதனன்று காலையில் Chozhan superfast ல் மதியம் தஞ்சைக்கு வந்துட்டேனே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி.. இதையல்லவோ முதலில் சொல்லியிருக்கவேண்டும்... எத்தனை நாட்களுக்குப்பின் குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு... எத்தனை நாட்கள் விடுப்பு?

   நீக்கு
  2. விடுப்பு எல்லாம் இல்லை..
   அறுபது வயதீக் கடந்தவர்களுக்கு இனி விசா இல்லை என்று சென்ற ஆண்டு அறிவித்ததை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கின்றது நிறுவனம்..

   இதற்குள் நிறைய கிளைச் சம்பவங்கள் உள்ளன..

   நான் சென்ற மாதமே நீட்டிப்பு வேண்டாம் என எழுதிக் கொடுத்திருந்தேன்.. அதன்படி 15 நாள் சொல்லி விட்டு ஒரு வாரத்தில் பயணச் சீட்டைக் கொடுத்து விட்டனர்..

   நல்லபடியாக வந்து சேர்ந்து விட்டேன்..

   இதற்குமேல் நாரணன் செயல்!..

   நீக்கு
  3. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

   தாங்கள் இந்தியா வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. குடும்பத்தினருடன் சந்தோஷமாக நாட்களை கழிக்க என் வாழ்த்துகள். நன்றி.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. ஓ... இனி தாய்நாட்டில்தானா? மகிழ்ச்சி.

   நீக்கு
  5. ஓ துரை அண்ணா தாயகம் திரும்பியாச்சா? அதான் காணவில்லையா உங்களை இங்கு பயண ஏற்பாடுகளில் இருந்திருப்பீர்கள்.

   நலம் தானே அண்ணா?

   கீதா

   நீக்கு
  6. வாழ்த்துக்கள், தம்பி

   தங்கள் ஓய்வு கால வாழ்க்கை இனிமையாகக் கழிய இறைவன் அருளட்டும்..

   நீக்கு
  7. நான் கேட்ட மாதிரி ஊருக்கு வந்து விட்டீர்களா? மகிழ்ச்சி.
   குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்
   வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

   நீக்கு
  8. @துரை செல்வராஜ்! இறை அருளால் உங்களின் பணி ஓய்வு நாட்கள் நல்லபடியாகக் கழியப் பிரார்த்திக்கிறேன். முக்கியமாய் நீங்கள் சாப்பிடும் அழகைப் பற்றி எழுதும்போதெல்லாம் மனம் நொந்து போகும். இனி ஒரு வாய்ச் சாப்பாடானாலும் வீட்டில் சமைத்தவை என்னும் நிம்மதியோடு ஆற அமரப் பிடுங்கல்கள் இல்லாமல் சாப்பிட வேண்டும். எல்லாம் வல்ல இறை அருள் இவற்றை நடத்தித் தரும்.

   நீக்கு
 35. திருமணங்களில் எளிமையானதாக நடத்தப்பட்டாலும் சரி, ஆடம்பரமாக நடத்தப்பட்டாலும் சரி இரண்டிற்கும் இடையிலானாலும் சரி குழப்பங்கள், வருத்தங்கள் பிரச்சனைகள் இல்லாத திருமணங்கள் இல்லை என்றே தோன்றுகின்றன.

  ஸ்‌ரீராம் ஜி!, உங்கள் வீட்டுத் திருமணம் மழை வெள்ளம் சூழவா நடந்தது? போகும் ரோட்டில் ஆறு பெருக்கெடுத்திருந்திருக்கிறதே.
  நீங்கள் சென்ற சாலைகள் பற்றி வாசித்த போது நான் சென்னை வந்திருந்த போது அங்கெல்லாம் சென்ற நினைவுகளும் வந்தது. ஆனால் அப்போது மழைக்காலம் இல்லை.

  துளசிதரன்


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை துலஸிஜி.. கல்யாண சமயம் மழை இல்லை. செல்லும் வழியில் ஓரிடதில் பாலம் மூழ்கியதால் ப்ரச்னை. அவ்வளவுதான்.

   நீக்கு
  2. கல்யாண சமயம் மழை இல்லாதது நல்ல காலம். இறையருளால் நல்லபடியாக நடந்தேறியிருப்பது மகிழ்ச்சி.

   உங்கள் வீடு மேல் தளம் என்று அறிந்தேன். அப்போது வீட்டிற்குள் தண்ணீர் வந்திருக்காது. அதுவும் நல்லதாயிற்று. ஆனால் வெளியில் எப்படியோ சமாளித்துச் சென்று வந்திருக்கிறீர்கள். தவிர்க்க முடியாத நிலை.

   சென்னையில் குடியிருக்க நினைப்பவர்கள் இனி இரு மாடிகளுக்கு மேலான தளத்தில் தான் குடியிருக்க விரும்புவார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

   துளசிதரன்

   நீக்கு
 36. உங்கள் வீட்டருகில் இவ்வளவு தண்ணீரா? எப்படிச் சமாளித்தீர்கள் ஸ்ரீராம்ஜி? இந்தத் தண்ணீரில் இறங்கித்தானே வெளியில் சென்றிருந்திருக்க முடியும்? டிவி செய்திகளில் பார்த்திருந்தாலும், இங்கு நீங்கள் படத்துடன் சொல்லியிருக்கும் போது அதன் தாக்கம் அதிகமாகத் தெரிகிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். மழை பெய்த சமயம் மிகவும் சிரமப்பட்டுப் போனேன். இப்பொழுது தேவலாம்.

   நீக்கு
 37. நீலகண்ட பிரம்மச்சாரி அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். எவ்வளவு உயர்ந்த மனிதர், தியாகமனப்பான்மை! இப்படியான உயர்ந்த உள்ளங்கள் வாழ்ந்த பூமியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறு புறம் நாம் அவர்களின் கால் தூசிக்குக் கூட பொருத்தமானவர்கள் இல்லை என்பதும் எழுகிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. எதையும் திர்பாராமல் தேச சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். அவரையும் இப்பொழுது தவறாகப் பேசுவதற்கு ஆட்கள் இருப்பார்கள்!

   நீக்கு
 38. கல்யாண அனுபவங்களை வழமை போல மிக சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளீர்கள்.

  நீலகண்ட பிரம்மச்சாரி பற்றி அறிந்து கொண்டேன்.

  சென்னையில் பல இடங்களில் சாலைகளில் இப்படி நீர் தேங்கியதாக அறிந்தேன். மழை நேரங்களில் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 39. ஸ்ரீ நீலகண்ட ப்ரம்மசாரி அவர்களைப் பற்றிய தகவல்கள் புதியவை...

  கப்பலோட்டிய தமிழன் படத்தின் வாயிலாக அறிந்திருந்தவை மட்டுமே..

  அவரைப் பற்றிய செய்திகளை பள்ளிகள் கூட தந்ததில்லை..

  என்ன செயவது?..
  அவர் ...வி,...வி, ..வி - என்று இருந்திருந்தால் தமிழகம் ஒத்துக் கொண்டிருக்குமோ என்னவோ!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கப்பலோட்டிய தமிழன்? அதில் சுப்ரமணிய சிவா பற்றிதான் காட்டியதாக நினைவு.

   நீக்கு
  2. கலெக்டரைப் பழி வாங்குவதற்கு காளி குகையில் நடக்கும் ஆலோசனையில் நீலகண்டரைப் பற்றிய பேச்சு வரும்..

   நீக்கு
  3. ஓஹோ...  காட்சியமைப்பாய் இல்லாமல் வசன அளவில்..

   நீக்கு
 40. //அண்ணன் மகன் கல்யாணத்தை..//

  சிலர் தங்கள் மகனையே, பையர் என்கிறார்கள். நீங்கள் என்னவென்றால்... :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரியாதை காட்டுபவர்களை மதிக்கிறேன் ஜீவி சார்.

   நீக்கு
  2. அண்ணன் என்பது அன்பும் உரிமையும் கொண்ட சொல். மரியாதை இல்லாத சொல் அல்ல.

   இந்தக் காலத்தில் கைக்கழ்ந்தைகளைக் கூட அவர், இவர் என்று அழைக்கிறார்கள்.
   நீங்கள் டிவி சீரியல்கள் பார்ப்பதில்லையா, ஸ்ரீராம்?

   கிடைத்த சைக்கிள் கேப்பில்:

   விஜ்ய் டிவி பாண்டியன் ஸ்டோரும், பாக்கிய லஷ்மியும் என்னை மிகவும் கவர்ந்த சீரியல்கள்..

   நீக்கு
  3. நான் சீரியலே பார்ப்பதில்லை.

   மரியாதை மதுரைப்பக்கம் அதிகம். குழந்தைகளைக்கூட அவங்க இவங்க என்று சொல்வார்கள்.

   அண்ணர் என்று சொல்லட்டுமா?!!!

   நீக்கு
  4. அண்ணர் என்று....

   எதுக்கும் அக்காகிட்டே கேட்டுக்கோங்க..

   நீக்கு
 41. திருமுருகன் சந்நிதானத்தில் கல்யாணம் என்று பெண் வீட்டாருக்கு வேண்டுதலா? இல்லை அவர்கள் ஊரே திருத்தணியா?
  (ஹிஹி.. இத்தனை பின்னூட்டங்களுக்குப் பிறகும் யாரும் கேட்காத கேள்விகளைக் கேட்கணுங்கற ஆசை தான். தப்பா எடுத்தாக்காதீங்க.. )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //திருமுருகன் சந்நிதானத்தில் கல்யாணம் //

   கல்யாண மண்டபம் என்று பதிவில் சொல்லி இருக்கிறேனே ஜீவி ஸார்? சன்னிதானத்தில் அல்ல.

   நீக்கு
  2. திருத்தணியே அருள்மிகு முருகன் சந்நிதானம் தான். அந்தப் புனித அர்த்தத்தில் கல்யாண சத்திரத்தில் என்று தெரிந்திருந்தும் சொல்லியிருக்கிறேன்.

   நீக்கு
 42. எனது 'யுகபுருஷன் பாரதி' நூலில்
  (கிண்டிலில் கிடைக்கும்) இன்னும் விவரமாக பாரதியாருக்கும் பிரம்மச்சாரியாருக்கும் இருந்த நெருங்கிய தொடர்பை பிரதானப்படுத்தி எழுதியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிண்டிலில் எனக்கு கணக்குக் கிடையாது ஜீவி ஸார்.

   நீக்கு
  2. ஒரு தகவலுக்காக. கணக்கு உள்ள வேறு யாரேனும் கூட வாசிக்கலாம் இல்லையா?

   நீக்கு
 43. ஸ்ரீராம், காலையிலேயே தோன்றியது

  திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!!!!!! என்று யார் எந்த மகான் சொன்னாரோ??!!!! ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரியவில்லையே... சொர்க்கம் என்பதைப் பற்றி அவர் என்ன அபிப்ராயத்தில் இருந்தாரோ...!

   நீக்கு
  2. 'காலையிலேயே தோன்றியது' ---
   (அக்கா போலவே தங்கையும்) :))

   நீக்கு
  3. அக்காவுக்கு சையாடிக்கா வலி என்பதால் வரமுடியவில்லை என்பதைத் தெரிவித்திருக்கிறார்.

   நீக்கு
 44. பி.எஸ். ராமையாவின் (B.S.Ramaiah) பிறந்த ஊர் வத்தலகுண்டு.

  B stands for Battalagundu.

  வங்காளம், பெங்கால் மாதிரி.

  பதிலளிநீக்கு
 45. 'இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்'--
  பாடல் நினைவில் இருக்கா?..
  ஸ்ரீதரின் போலிஸ்காரன் மகள் திரைப்படம். இது பி எஸ். ராமையாவின் நாடகம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். நினைவிருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறேன்.

   நீக்கு
  2. ஒரு வெள்ளிக்கிழமைக்கு 'இந்த மன்றத்தில் ஓடிவரும்' பாடலை ஒளிபரப்புங்கள், ஸ்ரீராம்.

   அண்ணன் தங்கைக்காக பாடல் கண்ணதாசனின் அருமை பாடல் இது.

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  4. முன்னர் ஒருமுறை பகிர்ந்திருக்கிறேன்.  எனினும் மறுபடி ஒருமுறை பகிர்கிறேன் ஜீவி ஸார்.

   நீக்கு
 46. பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், நாலு வேலி நிலம், தேரோட்டி மகன், பூவிலங்கு, மல்லியம் மங்களம், பாஞ்சாலி சபதம் -- எல்லாமே மேடையேறிய ராமையா அவர்களின் நாடகங்கள். சேவா ஸ்டேஜ் எஸ்.வி.சகஸ்ரநாமம் இவரது நெருங்கிய நண்பர். எல்லாவற்றிற்கும் மேலாக அந்தக் கால 'மணிக்கொடி' பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்த பெருமைக்குரியவர் ராமையா அவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்களுக்கு நன்றி ஜீவி ஸார்.  முன்னர் இதே தளத்தில் பி எஸ் ஆர் பற்றி மணிக்கொடி காலம் என்கிற தலைப்பில் ஒரு பதிவு வந்துள்ளது.

   நீக்கு
  2. மணிக்கொடி காலம் இரு பாகங்களாகப் புத்தகமாக வெளிவந்து நான் ஹூஸ்டன் மீனாக்ஷி கோயில் நூலகத்தில் இருந்து எடுத்துப் படித்திருக்கிறேன் என்பதையும் முன்னர் எழுதி இருந்தேன். எந்த வருஷம்னு தேடிப் பார்க்கணும். அதே போல் சி.சு.செல்லப்பாவின் "சுதந்திர தாகம்" புத்தகமும் தேடிப் படித்தேன். அதில் என் அம்மாவழித் தாத்தாவின் தம்பி "சங்கு நாராயணன்" பற்றியும் குறிப்பிட்டிருப்பார். அப்போது என் தாத்தாவின் தம்பி இளைஞர். கடைசிவரை திருமணம் செய்து கொண்டதில்லை. சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்குக் கொடுத்த நிலத்தை வேண்டாம்னு சொல்லிவிட்டார். சுத்தானந்த பாரதியார் பசுமலையில் இருந்த நாட்களில் அங்கிருந்து நடந்தே டிவிஎஸ் நகரில் எங்க தாத்தாவோடு இருந்த சின்னத்தாத்தாவைக் கண்டு பேசிவிட்டுப் போவார். காவி ஜிப்பாவுடன் காட்சி அளித்த திரு சுத்தானந்த பாரதியார் தன் காவி ஜிப்பாப் பைக்குள் கைவிட்டு ஆரஞ்சு மிட்டாய்களை எடுத்து எங்களுக்கெல்லாம் கொடுப்பார். சாக்லேட் சாப்பிடக் கூடாது என்றும் அறிவுறுத்துவார். அந்தச் சின்ன வயசில் இவர்களில் அருமை, பெருமை எல்லாம் தெரியவில்லை/புரியவில்லை.

   நீக்கு
  3. ஆம்.  முன்னரே இதுபற்றி பேசி இருக்கிறோம்.  கடைசி வரை என் அப்பா ஆசைப்பட்ட 'சுதந்திர தாகம்' படிக்கும் ஆவல் அவருக்கு நிறைவேறவில்லை.  தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
 47. நான் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கக் கல்யாண அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஶ்ரீராம். நேற்று வரமுடியவில்லை. கணினியில் உட்காரவே நேரமும் கிடைக்கவில்லை. மொபைல் மூலம் முகநூலைப் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா அக்கா..  உங்கள் அளவு அனுபவங்கள் இருக்காது என்று முதலில் எழுதத் தோன்றவில்லை.

   நீக்கு
  2. அட? எல்லோருக்கும் ஒரே மாதிரியா அனுபவங்கள் ஏற்படும்? உங்கள் அனுபவங்களிலும் நீங்கள் சொல்லக் கூடியவற்றை மட்டும் சொல்லுகிறீர்கள் என நினைக்கிறேன் இல்லையா? பலருக்கும் பல்வேறு விதங்களில் அனுபவங்கள் ஏற்படுகின்றன. ஓகே. கடமை அழைப்பதால் பின்னர் வருகிறேன். இன்னிக்கு வெள்ளிக்கிழமை. ராகுகால விளக்கு ஏத்தணும்.

   நீக்கு
  3. //சொல்லக் கூடியவற்றை மட்டும் சொல்லுகிறீர்கள்//

   ஆம்.  ஆம்.   அதே..  அதே...

   நீக்கு
 48. நீலகண்ட பிரம்மசாரி பற்றிப் பள்ளி நாட்களிலேயே அறிந்திருந்திருக்கிறேன். என் தாத்தா (அம்மாவின் அப்பா) இவர்களை எல்லாம் பற்றி நிறையச் சொல்லுவார். அவர் பின்னாட்களில் சந்நியாசம் வாங்கிக் கொண்டதும் ஓரளவு அறிந்ததே! சமீபத்தில் ஒரு சிலர் முகநூல் பதிவுகளிலும் அவரைப் பற்றிச் சொல்லி இருந்தனர். என்றாலும் ஆஷ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் பலரும் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கின்றனர் என்பதே உண்மை. கிட்டத்தட்ட அவங்களை எல்லாம் தேசத் துரோகி என்பவர்களும் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.  ஆஷ் கொலைவழக்கு என்னுடைய புத்தக பைண்டிங்கில் எங்கேயோ இருக்கிறது.  60 களில் வந்ததாய் இருக்கும்.

   நீக்கு
 49. பி.எஸ்.ராமையாவின் இந்தக் கதையைக் குமுதம் பைன்டிங்கில் எப்போவோ படிச்ச நினைவு. ஆனால் கதை நினைவில் வரலை. தேடிப் பார்க்கணும். படம் வரைந்தது ஜெயராஜ் என்பதும் இப்போத் தான் தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுவயதில் சுவாரஸ்யமாய்ப் படித்த நினைவு இருக்கிறது.  இப்போது புத்தகம் யாரிடம் இருக்கிறதோ!

   நீக்கு
 50. உங்கள் தெருவின் மழைநீர்த்தேக்கம் பார்த்தால் கவலையும், கோபமும் வருது. உங்க பாஸுக்கு இப்போ உடம்பு தேவலையா? என்னதான் மழைநீரில் இறங்காமல் இருக்கப் பிரயத்தனப்பட்டாலும் அவசியத்துக்கு இறங்கித் தான் ஆகணும். நல்லவேளையாக
  இப்போச் சென்னை மழைநீரில் நடக்காமல் இருக்க முடிகிறது. அம்பத்தூரில் எங்க வீடு இருந்த தெருவிலேயே இருக்கும் என் நாத்தனார் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து அதோடு பாம்பு, மீன்கள், புழுக்கள், பூச்சிகள் என வீட்டில் கூடாரம் போட்டுக்கொண்டு ஒரு வாரம் ஆச்சு எல்லாம் சரியாக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாஸ் உடல்நிலை தேவலாம்.  நல்லவேளை. இரண்டாவது மாடியென்பதால் தண்ணீர் வீட்டுக்குள் புகும் அபாயம் எல்லாம் இல்லை

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!