திங்கள், 27 டிசம்பர், 2021

நேபாளத்து இனிப்பு. லாகமாரி. காமாட்சி மகாலிங்கம் ரெஸிபி

 

அவ்விடம் நம் இனிப்பு வகைகள்  சற்று மாறு பெயர்களுடன்  இனிக்கிது! அவ்வளவுதான். அம்மாதிரி வகைகளில் லாகமாரி என்பதும் ஒன்று


லாகமாரி 

அதிக இனிப்பு இல்லாமல் சாப்பிட ருசியாகத்தான் இருக்கிது. வேண்டிய பொருட்களும் அதிகமில்லை. செய்வதும் கஷ்டமில்லை. பார்ப்போமா?

வேண்டிய பொருட்கள்: 

கோதுமைமாவு----ஒரு கப்.  

மைதா  ஒருகப்.

நெய் அல்லது எண்ணெய் ------1/2  கப்.

பேக்கிங்சோடா 1/2 டீஸ்பூன்

சோம்பு  ஒரு டீஸ்பூன்.  

உப்பு 1/4டீஸ்பூன்   

சர்க்கரை ஒருகப்.  

ஏலக்காய்ப் பொடி சிறிது

பொரிக்க-- வேண்டிய எண்ணெய்.

செய்முறை : 

ஒரு அகலமான பாத்திரத்தில் சலித்த இரண்டு மாவுகளையும் சேர்த்துக் கலக்கவும். பேக்கிங் ஸோடா, உப்பு, ஸோம்பு இவைகளையும் சேர்த்துக் கலந்து,  அரைகப் எண்ணெயும் நெய்யுமாக சிறிது, சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும்.  மாவுக்கலவை கையால் பிடித்தால் சேர்ந்தும், விட்டால் உதிராகவும் இருக்க வேண்டும்.


இப்போது 1/2கப் தண்ணீரைத் தெளித்தமாதிரி சிறிது,சிறிதாகச் சேர்த்து மாவை அழுத்தமாக நன்றாகப் பிசையவும். போதாவிட்டால் இன்னும் சிறிது நீர் தெளித்துப் பிசையவும். மாவு கெட்டியாக  இருக்கவேண்டும். மாவு மெத்தென்று  ஆகும்படி  ஒரு பத்து நிமிஷ நேரம் அதில் செலவிடவேண்டும்.  மாவைப் பாத்திரத்திலேயே  வைத்து அழுந்த மூடிவைக்கவும். இப்படி ஒரு பதினைந்து நிமிஷங்கள் ஊறட்டும்.


றிய மாவுக்கலவையை ஐந்து, ஆறு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும்.. மாவைச் சின்ன உருண்டைகளாகச்   செய்து கொண்டு நீண்ட உருளைகளாக விரல் பருமனுக்கு கையால் திரட்டவும். அப்பளம் இடும் மணையில், கைகளினால் ரோலாகத் திரட்டி நீண்டதாகச் செய்து கொள்ளவும். ஒரே அளவுள்ளதாகப்  பிரித்துத் துண்டுகளாக்கவும்.. இரண்டு அங்குல நீளம் போதும். இப்படியே எல்லா மாவையும் மெல்லிய உருளைகளாகச் செய்யவும்.

இப்போது நிதான தீயில் அகலமான வாணலியில் எண்ணெயைக்  காயவைத்து விரல்போன்ற உருளைகளைப் பொரித்து எடுக்கவும். அவரம் கூடாது. நிதானமாக  வேகவைத்தால்தான் உள்ளும் புறமும் ஒரேமாதிரி வேகும். சிவக்க எடுக்கவும். கிறிவிட்டு ஒரேமாதிரி பதத்தில் எடுக்கவும் கரகரப்பாக இருக்கும்.


இன்னொரு அகலப் பாத்திரத்தில் சர்க்கரையில் அது மூழ்கும்படி  அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாகக் கிளறிவிட்டுப் பாகு காய்ச்சவும். முன்பெல்லாம் அழுக்கு நீக்க வேண்டும். இப்போது சுத்தமாக இருக்கிது. கம்பிப் பதமாகக் காய்ச்சி  இக்கவும். ஏலப்பொடி சேர்க்கவும். இதை முன்னாடியேவும் செய்து கொள்ளலாம்.


பாகில் நிதானமாகப்  பொரித்து வைத்திருக்கும், உருளைகளைச் சேர்க்கவும். மேலே பாகு படும்படி நிதானமாகத் திருப்பவும். ஒவ்வொன்றாகப் திருப்பி விடவும்.


சற்று ஆறினவுடன் தட்டில்  எடுத்து அடுக்கவும். சர்க்கரை பூத்துக் கொண்டு சாப்பிட ருசியாக இருக்கும். அதிக இனிப்பும் இல்லைலாகமாரி தயார்.

 

= = = = =

73 கருத்துகள்:

 1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  இறைவன் அருளால் தொற்று இல்லாத வாழ்வு
  அனைவருக்கும் கிடைத்து ஆரோக்கியமாக
  இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் காமாட்சி அம்மாவின் சிற்றுண்டி இன்று. மிக இனிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். நெ த செய்து பார்த்து, எனக்கு அனுப்பினால் வரவேற்பேன்.

   நீக்கு
  2. எல்லோருக்கும் வணக்கம் சித்திரை மலருக்கு அனுப்பிய இது ஜனவரி வருஷ ஆரம்பத்திற்கு முதலாகவே வந்து யாவருக்கும் வரவேற்பு கொடுக்கிறது இதை வெளியிட்டு கௌரவப்படுத்திய கவுதமன் ஜி அவர்களுக்கு மிக்க நன்றி அன்புடன்

   நீக்கு
 3. "லாகமாரி", பார்க்கவே அருமையாக இருக்கிறது.
  உப்பும் சிறிது சேர்த்து, சர்க்கரைப் பாகும் அளவோடு செய்து

  பொரித்த மாவுத்துண்டங்களைப்
  பிரட்டி எடுப்பது அருமையாக வந்திருக்கும்.'

  இதே போல நம்மூரிலும் வேறேதாவது பெயரில்
  பார்த்த நினைவு.

  செய்து பார்க்க ஆசையாக இருக்கிறது.
  அனுமதி கிடைத்தால் செய்யலாம்.
  மிக மிக நன்றி அன்பு காமாட்சிமா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யார் அனுமதி கொடுக்கணும்?

   நீக்கு
  2. சர்க்கரை சேர்த்த எதுவும் உடனே அப்ப்ரூவல்
   கிடைக்காது ஜி:)

   நீக்கு
  3. திருவாதிரைக் களி செய்ய நாலு நாள் முன்னாலேயே

   கேட்டு வைத்துக் ஒண்டேன்.:0)

   நீக்கு
  4. கௌ அண்ணா நான், வல்லிம்மா, மதுரை, டிடி எல்லாரும் ச்சோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஸ்வீட்டு!!!! அதான்!!

   கீதா

   நீக்கு
  5. ஆமாம் வல்லினம் பெரியவர்களும் சுவைக்கும் படிதான் இருக்கும் அதிகம் செய்யாவிட்டாலும் ஒரு கரண்டி மாவு சேர்த்து சிறிய அளவில் செய்து பாருங்கள் எதுவும் கட்டாயமில்லை நானும் எழுதி இருக்கிறேன் என்ற முறையில் இவ்விடம் வந்து பதில் சொல்ல முடிந்தது எனக்கு ஒரு சந்தோஷம் உங்களுக்கு எல்லாம் தெரியாதது எதுவும் இல்லை நெல்லைத் தமிழன் அவர்கள் ஏதாவது நேபாள இனிப்பு எழுதுங்கள் என்று சொல்லுவார் அதெல்லாம் மனதில் வைத்து எழுதினேன் மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு அன்புடன்

   நீக்கு
  6. வல்லிம்மா என்று வாசிக்கவும்

   நீக்கு

 4. நேரம் கிடைத்தால் செய்து பார்க்க வேண்டிய பட்சணம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து பார்க்கவேண்டும் என்று நினைத்தால் நேரம் கிட்டும் இந்த அளவு பதில் எழுதியது எனக்குப் பெருமை மிக்க நன்றி அன்புடன்

   நீக்கு
 5. இது கடந்த புதன் கிழமை பதிவில் பல முறை முயன்றும் போட முடியாத கருத்து 10 15 தடவை முயறி செய்தும் போட முடியவில்லை

  திங்கள் கிழமை பதிவில் பெரும்பாலும் பெரியவர்களின் ரிசிப்பியே வருகிறது அதில் சின்ன மாற்றம் செய்து பெரியவர்களின் வீட்டு பிள்ளைகள் செய்யும் ரிசிப்பிகளை பகிரலாம்... குறிப்பாக பாணுமதி அவர்களின் பெண் செய்யத குறிப்பு வித்தியாசமாக இருந்தது இந்த வாரம் அது போல தொடரலாம் அப்படி வரும் பதிவுகளை நாம் பாராட்டி எழுதும் போது அதை அவர்கள் படிக்க நேர்ந்தால் அல்லது அவர்களுக்கு இப்படி எல்லாம் நல்ல விமர்சனங்கள் உன்ணுடைய ரிசிப்பிக்கு வந்து இருக்கிறது என்று சொன்னால் அவர்களுக்கு நிச்சயம் சந்தோஷமாக இருக்கும்.. அது அவர்களை ஊக்கபடுத்திமேலு ஏதாவது செய்து பதிவிட தூண்டலாம். அதுமட்டுமல்ல நாம் வீட்டில் செஞ்சு கூட பார்த்து இருக்க மாட்டோம் ஆனால் பல ரிசிப்பிகளை நாம் படித்து இருப்போம் அல்லது பார்த்து இருப்போம் அப்படிபட்ட வித்தியாசமான ரிசிப்பிகளையும் நாமிங்கு பகிரலாமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 2022 ல் அந்த முயற்சிகள் ஆரம்பம் ஆகப் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.

   நீக்கு
  2. எனக்குத் தோன்றும் பேத்திகள் செய்வது புதியது புதியதாக இருக்கும் அவர்களே போடலாம் என்று நினைத்தேன் அன்புடன்

   நீக்கு
 6. படத்தை பார்க்கவே அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சாப்பிட்டால்தான் தெரியும் ருசி மிக்க நன்றி அன்புடன்

   நீக்கு
  2. முடிந்தபோது சுவைத்துப் பார்த்து ருசித்துப்பாருங்கள் பிரமாதம் ஒன்றும் இல்லை மிக எளிமையான குறிப்பு உங்கள் யாவருக்கும் மிக்க நன்றி அன்புடன்

   நீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம்.
  லாகமாரி - கிட்டத்தட்ட நம் ஊர் ஜீரா பூரி மாதிரி இருக்கிறது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அதே சுருள் பூரி அல்லது காஜா என்று சொல்வதுண்டே அது போல அல்லது மைதா சிப்ஸ் சர்ர்க்கரை பாகில் போடுவோமே அது போல....

   வித்தியாசம் சோம்பு பௌடர். நான் செய்து படமும் எடுத்து வைத்திருந்தேன்...ஏன் அனுப்ப முடியவில்லை..கீழே கருத்து போட்டாச்சு!!..

   கீதா

   நீக்கு
  2. உங்களுக்கு போட்டியாக நானா கோதுமை மைதா கலவைகள் பொரித்து எடுத்தது சர்க்கரை பாகில் ஊற வைத்தால் ஒரே மாதிரி சாயலில் ருசியை உணர முடிகிறது இதுதான் இதில் உள்ள ஒற்றுமை உங்கள் மூவரின் பதில்களும் ஒற்றுமையாக இருக்கிறது நானும் ஆமோதிக்கிறேன் நன்றி அன்புடன்

   நீக்கு
  3. காமாட்சி அம்மா உங்களை இங்கு பார்ப்பதிலே ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நமஸ்காரம் அம்மா.

   கீதா

   நீக்கு
  4. போட்டி என்னம்மா....எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் லாக்காமரி लाखामरी என்று ஹிந்தியில் எழுதிக் காட்டிச் சொல்லி மைதா வெண்ணை எல்லாம் சேர்த்து ஜிலேபி ஷேப்பில் கூடச் செய்யலாம் என்றும் சொல்லிக் கொடுத்தார்.

   கீதா

   கீதா

   நீக்கு
  5. ஆசிகளும் அன்பும் யாவருக்கும் ஒவ்வொருவர் சொல்லிக் கொடுப்பதில் சற்று வேறு மாதிரிகள் அப்படித்தான் இருக்கும் இதுவும் அதில் ஒன்று அன்புடன்

   நீக்கு
  6. பானுமதி வெங்கடேஸ்வரன் மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு அன்புடன்

   நீக்கு
  7. அழகான படஙாகளோடூ எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு நானல்லவோ நன்றி கூற வேண்டும்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. ஆமாம் ஆமாம் கொஞ்சம் வேற மாதிரி அருமை என்ற வார்த்தை கேட்க மிக்க சந்தோஷம் அன்புடன்

   நீக்கு
 9. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. சொல்லுகிறேனில் இருந்து செய்கிறேனுக்கு வந்துவிட்டார்கள் காமாட்சி அம்மா. அடுத்தது சாப்பிடுகிறேன் என்று எழுதுவார்களோ?

  திங்ககிழமையில் சாப்பிட்ட பிடித்த பதார்தங்களைப் பற்றியும் எழுத அனுமதிக்கலாம் (செய்முறை தேவை இல்லை).

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல யோசனையாக இருக்கிறதே! திங்க கிழமை + தின்ற கிழமை !!

   நீக்கு
  2. சாப்பிடுகிறேன் என்று எழுத முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும் கம்ப்யூட்டரே தூக்கிப போட்டாகிவிட்டது

   நீக்கு
  3. சாப்பிட்டதை பற்றி எழுத ஏக போட்டி இருக்கும் நல்ல யோசனை அன்புடன்

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  இன்றைய திங்களில் சகோதரி காமாட்சி மகாலிங்கம் அவர்களின் நேபாள சிற்றுண்டி லாகமாரி படங்கள் செய்முறைகளுடன் நன்றாக உள்ளது. அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி மிக்க சந்தோஷம் அன்புடன்

   நீக்கு
  2. விரிவாக பாராட்டும் யாவருக்கும் சின்ன அளவில் பதில் கொடுத்திருக்கிறேன் எல்லோருக்கும் மிகவும் நன்றி அன்புடன்

   நீக்கு
  3. வணக்கம் காமாட்சி மகாலிங்கம் சகோதரி.

   உங்களை இன்று இங்கு நல்ல விதமான ஒரு இனிப்புடன் பார்த்ததே எங்களுக்கு மிகவும் மகிழ்வை தருகிறது. வரும் வருடங்களில் விதவிதமான ரெசிபியுடன் உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
   உங்கள் அன்பான உடனடி பதில்களுக்கு மிக்க நன்றிம்மா.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 12. ஆஹா லாகமாரி!!!!!!! காமாட்சி அமமவின் செய்முறை செமையா இருக்கும்...அழகா சொல்லுவாங்க. இதுவும் அப்படியே...

  இப்போது எதுக்கு இந்த் ஆஹா லாகமாரி?!!! ஒன்றுமில்லை நான் பூட்டான் சமையல் அனுப்பி இன்னும் சில பன்னாட்டு குறிப்புகள் உண்டு வரும் என்று சொல்லியிருந்ததில் இதுவும் ஒன்று. அது போல் துப்கா சூப் என்று சில பல வகைகள்.

  இதுவும் அந்த லிஸ்டில் உண்டு. செய்து படங்கள் எடுத்துவைத்திருந்த அத்தனையும் இப்போது ரிப்பேர் ஆன ஹார்ட் டிஸ்கில். இன்னும் அதிலுள்ள டேட்ட ரெக்கவர் செய்ய வில்லை. அதனால் குறிப்புகள் அனுப்ப முடியவில்லை. இனி செய்து படம் எடுத்தால்தான் அனுப்ப இயலும்.

  காமாட்சி அம்மா ரொம்ப நன்றாக இருக்கிறது லாகமாரி. எளிமையா அழகாகச் சொல்லியிருக்கீங்க. மிக்க நன்றி அம்மா.

  கீதா

  பதிலளிநீக்கு
 13. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 14. வித விதமான சமையல் குறிப்புகள்..

  எபி.. களை கட்டுகின்றது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பதிவு எப்படி இருக்கிறது அன்புடன்

   நீக்கு
  2. அருமையா இருக்கு அம்மா. சோம்பு ஒண்ணுதான் புதிது. நான் செய்து பார்த்துட்டு எழுதலாம்னு இருக்கேன்.

   நீக்கு
 15. மிக அருமையான குறிப்பு! படங்களும் அழகு! சர்க்கரைப்பாகில் தோய்த்து மட்டுமே எடுப்பதால் அவ்வளவாக அதிகம் இனிக்காது. சர்க்கரை நோய் உள்ளவர்களும் கொஞ்சமாக சாப்பிடலாம். நம் ஊர் இனிப்பு சேவு, பேணி எல்லாமே நினைவுக்கு வருகிறது. சோம்பு பவுடர் மட்டுமே இதில் வித்தியாசம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோருக்கும் பதில் அளித்து வருகைகள் உங்களது விட்டுப் போய்விட்டது இப்போது கவனித்தேன் நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் சரி உருவத்தில் சற்று மாறுபட்டது தவிர ருசியில் இந்தியன் இனிப்பு தான் மிக்க நன்றி உங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு அன்புடன்

   நீக்கு
 16. காமாட்சி அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் மைதா மட்டும் தான் பயன்படுத்தியிருந்தார்...கோதுமை மாவு மட்டும் கூடப் போட்டுச் செய்யலாம் என்று என் பரீட்ச்சார்த்தத்தில் தெரிந்தது.

  இப்போது நீங்கள் உங்கள் //நானா கோதுமை மைதா கலவைகள் பொரித்து எடுத்தது சர்க்கரை பாகில் ஊற வைத்தால்//

  சொல்லியிருக்கும்படி இரண்டும் கலந்தும் செய்துவிடலாம்..புதுவருடம் வருகிறதே!!

  உங்கள் செய்முறையில் கூடவே அன்பும் இழையையும் உணர முடிகிறது. பதிவை வாசிக்கும் போது எங்களோடு பேசிக் கொண்டே செய்து சொல்லிக் கொடுப்பது போன்ற விஷுவல் வருகிறது மனதுள். மிக்க நன்றி அம்மா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உன்னுடைய விரிவான பாராட்டுதல்கள் எல்லாம் மனதை நெகிழச் செய்து விடுகிறது இப்படியாக நம்முடைய சந்திப்புகள் யாவரிடமும் இருப்பது மிக்க மகிழ்ச்சி புதுவருஷம் ஸ்பெஷல் இதுவாக இருக்கட்டும் அன்புடன்

   நீக்கு
 17. காலம்பர மொபைலில் இருந்து இதுக்கு "ஜீரா போளி" மாதிரி இருக்குனு (ஆங்கிலத்தில்) கருத்துப் போட்டிருந்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது போகவே இல்லை போல! :( ஜீரா போளியும் இப்படித்தான். இதைத் தவிர்த்துச் சுருள் பூரி, பாம்பே காஜா, சிரோட்டி போன்றவையும் இப்படித் தான் செய்வோம். சிரோட்டி ரவையில் செய்வது. சிரோட்டி ரவை என்றே அங்கெல்லாம் கடைகளில் கிடைக்கும். :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எதுவும் வரவில்லை நீங்கள் எழுதி இருப்பது எல்லாம் நீங்கள் எழுதட்டும் என்று விட்டுவிட்டேன் செய்து பார்த்து எழுதுங்கள் அன்புடன்

   நீக்கு
  2. ம்ம்ம்ம் ஏன் வரலைனு தெரியலை. போகட்டும். இது ஒரு நாள் செய்து பார்த்துட்டுப் போடணும். சோம்புப் பொடி என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் முழு சோம்பு தான் போட்டிருக்கிறாப்போல் தெரிகிறது.

   நீக்கு
  3. சோம்பு பெருஞ்சீரக பொடி நான் எழுதியது சேம்பு பொடி என்று எதுவும் இல்லை புரிந்து கொண்டது அப்படி போல அன்புடன்

   நீக்கு
 18. கோமதி அரசு எங்கே காணோம்? பயணத்தில் இருக்காரா? ஶ்ரீராமையும் பார்க்க முடிவதில்லை. பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணப் போறாரா? அல்லது பெண் தேடுவதில் மும்முரமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களையும் காணோமே என்று பார்த்தேன் நீங்கள் வந்ததில் சந்தோஷம் மற்றவர்களையும் நெல்லை அவர்களையும் காணவில்லை கட்டாயம் வந்து ஏதாவது பதில் கொடுப்பார்கள் நன்றி அன்புடன்

   நீக்கு
  2. நெல்லை பக்திச் சுற்றுலாவில் திருநெல்வேலி (பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள்) போயிருக்கார். இங்கே வந்திருக்கார் போன வாரம். ஆனால் நாங்க அன்னிக்குத் தான் குலதெய்வம் கோயிலுக்குப் போனோம்னு நினைக்கிறேன். ஆகவே பார்க்கவில்லை.

   நீக்கு
  3. பேத்தி வந்து இருக்கிறதா அன்புடன்

   நீக்கு
  4. ஆமாம் அம்மா ஐந்து வயது. ஆனாலும் இன்னமும் பால் குடிக்க, சாப்பாடு சாப்பிடப் பிடிவாதம். எங்கள் நாலு பேரையும் நன்றாக வேலை வாங்குகிறாள். :))))) குழந்தை ஊருக்குப் போனால் வெறிச்சென்று இருக்கும். :(

   நீக்கு
  5. தனிப்பட்டு வளரும் குழந்தைகளுக்கு இதுவே பெரிய கஷ்டம் இன்னும் சற்று வளர்ந்த பிறகு சரியாகப் போய்விடும் அன்புடன்

   நீக்கு
  6. நான் பத்து நாட்கள் பக்திச்சுற்றுலா (ஸ்ரீரங்கத்தில் ஆரம்பித்து பாண்டிய நாடு, சேரநாடு விஷ்ணு கோவில்கள்) சென்றிருந்தேன். இன்றுதான் வந்தேன். பயணத்தில் ஏகப்பட்ட புகைப்படங்கள் எடுக்கவேண்டியிருந்ததாலும், போனில்/ஜியோ கனெக்‌ஷனில் பிரச்சனை என்பதால் உடனுக்குடன் அன்றைய daily GB quota முடிந்துவிட்டதாலும் எந்தத் தளத்திற்கும் போகவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

   நீக்கு
  7. //இன்னமும் பால் குடிக்க, சாப்பாடு சாப்பிடப் பிடிவாதம். எங்கள் நாலு பேரையும் நன்றாக வேலை வாங்குகிறாள்.// - முதலில் நாம் எப்படி இருந்தோம் அந்த வயசுல என்று நம் பெற்றோர்/தாத்தா-பாட்டியிடம் கேட்டால் தெரிந்துவிடும். அப்படித்தான் நான் என்னைப்பற்றியும் நினைத்துக்கொள்வேன். சின்னக் குழந்தை உங்களை வேலை வாங்குவது உங்களுக்கும் சந்தோஷம்.. படிக்கும் எனக்கும் சந்தோஷம். சும்மா கஞ்சி, சொப்பில் செய்த சாதம் குழம்பு என்று இருக்காமல், அடுத்த/அல்லது அதற்கு அடுத்த வருடம் வரும்போது இன்னமுமே உங்களை வேலை வாங்கணும். இதைப் பண்ணு அதைப் பண்ணு என்று

   நீக்கு
  8. ஹாஹாஹா, நெல்லை! குழந்தை அப்படிக் கேட்டு வாங்கிச் சாப்பிடும்படியான நாட்கள் உங்கள் வாய் முஹூர்த்தத்தில் உடனே வரட்டும். ஆனால் நான் சின்னக் குழந்தையாக இருந்தப்போவிருந்தே அதிகம் படுத்தவில்லை என என் அம்மா/அப்பா, மாமா வீடுகளில் சொல்லுவார்கள். அதிலும் சாப்பாடு சாப்பிட. நம்ம ரங்க்ஸும் சாப்பிடப் படுத்தினதில்லை என்பார்கள். கு.கு. அவங்க அத்தையைக் கொண்டிருக்குப் போல. எங்க பெண் தான் சாப்பிடப் படுத்துவாள்/இன்னமும்/ நேரத்துக்குச் சாப்பிடவே மாட்டாள். இப்போதுள்ள பிரச்னையே அவளுக்கு அதனால் தான் என்று நாங்க சொல்கிறோம். அவள் அதுக்கும் ஒத்துக்க மாட்டாள்! :(

   நீக்கு
 19. ​நீங்கள் சொல்லி இருப்பது போல பெயர்தான் மாறி வருகிறது அம்மா. பெயரும் நன்றாகத்தான் இருக்கிறது. சர்க்கரைப் பாகில் போட்ட இனிப்பு. பிரிபிரியாக வந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என்னவோ.. ​ அபப்டி வருவதற்கு பரோட்டாவுக்கு அப்பளம் இடுவது போல மடித்து மடித்த்து உருட்ட வேண்டுமோ... சர்க்கரைப் பாகு கம்பி பதம் வேண்டுமா, சர்க்கரை ஜஸ்ட் கரைந்தாலே போதுமா? கம்பிப்பகு என்றால் சற்று லேட்டானால் கட்டியாகி விடாதா?

  ஒருமுறை செய்து பார்த்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கம்பிப் பாகு தான் போட்டு உடனே எடுத்து விடுவதால் பூத்துக் கொண்டு நன்றாக இருக்கும் எனக்கு பாதுஷா மாதிரி ஒரு ருசி தோன்றும் சரியோ தவறோ அடிக்கடி செய்வது இல்லை அதுவும் இப்போது எதுவுமே இல்லை சிறிய அளவில் செய்து பார்க்கலாம் இதுவும் போன வருஷம் அனுப்பியது உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி அன்புடன்

   நீக்கு
 20. இந்த இனிப்பு செய்முறை நன்றாக இருக்கு. சில இந்திய இனிப்புகளை நினைவுபடுத்துகிறது.

  ஏன் சோம்பு சேர்க்கணும்? சோம்பு பொதுவா ஆமைவடைக்கு/மசால் வடைக்குத்தானே சேர்ப்பார்கள். எந்த இனிப்புக்காவது சோம்பு சேர்ப்பார்களா? அதுக்குப்பதில் ஏலக்காய் விதைகள் உபயோகிக்கலாம்னு தோணுது.

  காமாட்சியம்மாவின் செய்முறை ரொம்பவே சந்தோஷத்தைத் தருது (கொஞ்சம் உடம்பு தளர்ந்த நிலையிலும் ஆர்வமாக அனுப்பியதற்கு).

  லாகமாரி - பெயரே ரொம்ப நன்றாக இருக்கிறது.

  பாராட்டுகள் காமாட்சியம்மா. அதிலும் ஆர்வமாக நெடிய மறுமொழிகளுக்கு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!