ஜோதிலக்ஷ்மியின் முதல் தமிழ்ப்படத்திலிருந்து ஒரு பாடல் இன்று பகிரப்போகிறேன் என்று சொன்னால் அடிக்க வருவீர்கள். ஆனால் உண்மையைத்தான் சொல்கிறேன்.
உண்மைச் சம்பவங்களிலிருந்து சில உண்மைகளை மறைத்து படம் எடுப்பதுபோல அல்லாமல் ஒரு சிறு உண்மையைத்தான் சொல்கிறேன்!
1963 ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ராமண்ணாவின் படமான 'பெரிய இடத்துப் பெண்' படம்தான் ஜோதிலக்ஷ்மி அறிமுகமான முதல் படம்.
தெலுங்கிலும் ஹிந்தியிலும் பின்னர் இந்தப் படம் எடுக்கப்பட்டது. அப்புறம் பார்த்தால் மறுபடி தமிழிலேயே எடுக்கப்பட்டது. அதுதாங்க.. சகலகலா வல்லவன்! பெரிய இடத்துப் பெண் எப்படி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோ அதே அளவு சகலகலா வல்லவனும் வெற்றி பெற்றது.
எம் ஜி ஆரும் சரோஜாதேவியும் நடித்த இந்தப் படத்துக்கான பாடல்களை கண்ணதாசன் எழுத, விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசை.
இந்தப் படத்தை நான் ஹவுசிங் யூனிட் மாதாந்திர பட பட்டியலில் பார்த்திருக்கிறேன். மிகவும் ரசித்த எம் ஜி ஆர் படங்களில் ஒன்று.
கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களுமே இந்தப் படத்தில் பிரபலம்தான் என்றாலும் எனக்கு இந்தப் படத்தில் மிகவும் பிடித்த கட்டோடு குழல் ஆட ஆட பாடலைப் பகிர்கிறேன். இந்தப் படத்தின் 'அன்று வந்தததும் இதே நிலா' பாடல் பிறிதொரு நாள் பகிர்கிறேன்!
ஆரம்ப இசையே பாடலுக்கான கட்டியத்தைக் கூறிவிடும்!
கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட ஆட
பொட்டோடு நகை ஆட ஆட ஆட கொண்டாடும் மயிலே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட
பாவாடை காத்தோடு ஆட ஆட காலோடு கால் பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட
முதிராத நெல் ஆட ஆட ஆட முளைக்காத சொல் ஆட ஆட ஆட
உதிராத மலர் ஆட ஆட சதிராடு தமிழே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட
தென்னை மரத் தோப்பாக தேவாரப் பாட்டாக
புன்னை மரம் பூசொரிய சின்னவளே நீ ஆடு
கண்டாங்கி முன் ஆட கன்னி மனம் பின் ஆட
கண்டு கண்டு நான் ஆட செண்டாக நீ ஆடு
செண்டாக நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட பெண் ஆட கண் என்ற மீன் ஆட ஆட
பச்சரிசி பல் ஆட பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட
வட்டமிட்டு நீ ஆடு
வள்ளி மனம் நீராட தில்லை மனம் போராட ரெண்டு பக்கம் நான் ஆட
சொந்தமே நீ ஆடு சொந்தமே நீ ஆடு
கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட பொட்டோடு நகை ஆட ஆட ஆட கொண்டாடும் மயிலே நீ ஆடு கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட
1959 ல் வெளியான படம் பாகப்பிரிவினை. பீம்சிங் இயக்கத்தில் ஜி என் வேலுமணி தயாரிப்பில் சிவாஜி கணேசனும், சரோஜாதேவியும் நடித்த இந்தத் திரைப்படத்துக்கு இசை விஸ்வநாதன் ராமூர்த்தி. இன்று பகிரப்போகும் பாடலை எழுதி இருப்பவர் கண்ணதாசன். அவரைத்தவிர வேறு யாரால் இப்படி ஒரு பாடலை எழுதி இருக்க முடியும்...
இதுவரை இந்தப் படத்தைப் பார்த்ததில்லை. ஹவுசிங் யூனிட் காரர்களைத்தான் குறை சொல்லவேண்டும். இந்தப் படத்தைக் காட்ட மறந்து விட்டார்களே...
பாடல் ஆரம்ப ஹம்மிங் முடிந்ததும் சிவாஜி ஒரு குதியலோடு என்ட்ரி ஆகிறார் பாருங்கள்.. தொடர்ந்த நடை..
சிவாஜியின் இந்த ஸ்டைலை தான் கமல் தனது 16 வயதினிலே படத்தில் காபி செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலும் இந்தக் காட்சியின் இன்ஸ்பிரேஷனில்தான் உருவாகி இருக்க வேண்டும். கொஞ்சம் இருங்கள்.. இரண்டு பாடல் டியூனும் கூட கொஞ்சம் ஒத்து போகிறதோ...
தந்ததான தானதந்தா...ஆ...
தந்ததான தா... ஆ...தந்தானே...
தானே தந்தினன்னா... ஓ... ஓ...
தானானெனோ... ஏ...
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
என்னம்மா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமாய் குணமிருக்கு
குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா
கன்னையா
இந்த ஏழைகளுக்கென்ன வேணும்
சொல்லையா
சொல்லையா
தாயாரின் சீதனமும் ஓ... தம்பிமார் பெரும் பொருளும் ஓ...
தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா அது
மானாபி மானங்களை காக்குமா
மானாபி மானங்களை காக்குமா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது
என்னம்மா
மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம்
மானமே ஆடைகளாம் மரியாதை பொன் நகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
அங்கம் குறைந்தவனை... ... அங்கம் குறைந்தவனை... ஓ...
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண் மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா
வீட்டில் மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்து படர்வதில்லை
மண் பார்த்து விளைவதில்லை
மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா
இந்த ஏழைகளுக்கென்ன வேணும்
சொல்லையா
தாழையாம் பூ முடிச்சு
தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
தந்தனனனே... ஏ... தானேனன்னே...
பிற்சேர்க்கை : துரை செல்வராஜூ ஸாரின் நேயர் விருப்பத்திற்காக...
1987 ல் வெளியான திரைப்படம் உள்ள கவர்ந்த கள்வன். பாண்டியராஜன், ரேகா நடித்த இத்திரைபபடம் ஹிந்தி சிட்ச்சோரின் தழுவல். படத்தில் அதைச் சொல்லி இருக்க மாட்டார்கள். அமோல்போலேகர் நடித்த வேடத்தில் பாண்டியராஜன். அஸ்ரானி வேடத்தில் நிழல்கள் ரவி.
இளையராஜா இசையில் இனிமையான பாடல்கள் உண்டு. பாடல்கள் பஞ்சு அருணாச்சலம், மற்றும் இளையராஜா. இயக்கம் அசோக்குமார்.
துரை செல்வராஜூ ஸார் விரும்பிக் கேட்டது தேன் பாடல் ஒன்று. அவரும் மற்றவர்களும் விரும்பிக் கேட்டவை முன்னரே பகிரப்பட்டிருந்ததாலும், நான் யாரும் நினைக்காத பாடல் ஒன்றைப் பகிர எண்ணியதாலும் சென்ற வாரத்தை விட்டு இந்த வாரம் இந்த 'தேன் பாடலை'ப் பகிர்கிறேன். எஸ் பி பி குரலில் தேன் சொல்லும் பாடல்.
தேனே செந்தேனே
மானே பொன் மானே
மலரும் பூவே வளரும் காற்றே
மலரும் பூவே வளரும் காற்றே
தேனே செந்தேனே
மானே பொன் மானே
ஆசையில் ஆடினேன் துணை தேடினேன்
என் வாழ்விலே ஹோய்
ஆனந்தம் பாடினேன் மலர் சூடினேன்
பொன் மாலையில்
ஆயிரம் ஜாடை சிந்தும் பார்வை
ஊடல் நாடகம்
அழகிலே தோன்றும் வண்ணக் கோலம்
காதல் காவியம்
தேவி உன் கோவில் தேடி
தீபம் ஏற்றினேன் பூஜை காணவே
வானவில் ஊஞ்சலில் இளம் ஜோடிகள்
பண்பாடுது ஹா
மௌனமே ராகமாய்
சுகம் கோடியே கொண்டாடுது
வாசனை மோகம் தந்த தேகம்
போதை ஊட்டுது
பூச் சரம் போலே வந்த வேகம்
எல்லை மீறுது
ராணி எந்தன் காதல் ராணி
பட்டம் சூட்ட வா என்னை ஆள வா
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் என்றும் நிறைவோடு வாழ
இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குநல்ல பாடல்களுக்கு மிக நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குமதுரை பழங்கானத்தத்தில் தாத்தா வீட்டுக்குப் பக்கத்தில்
அறுவடைக்குப் பின்னான வயலில்
டெண்ட் கொட்டகை போட்டு முதன் முதலில் இந்தப்
பாட்டைக் கேட்டேன்.
தன்னன தானனா ,.......கணீரென்று
லௌட்ஸ்பீக்கரில் கேட்டதும் அசந்துதான்
போனேன்.
பழைய படங்களாக ராஜா ராணி ஓடிக்கொண்டிருந்த காலம்
1960 என்று நினைக்கிறேன்.
வீட்டு ஜன்னலில் உட்கார்ந்து ரசித்த பாடல்.
அருமையான இசை. அருமையான குரல்கள்.
எத்தனையோ நினைவுகளைக் கொண்டு வந்த பாடல்.
என்றும் ரசிக்கும் பாடல்.
ஆமாம் வல்லிம்மா... பிசிறடிக்காமல் இடைவெளி விடாமல் தன்னன தானனா வந்த பிறகு ஒரு இசை வரும் பாருங்கள்.. நடப்பதற்கு ஒரு இசை!
நீக்குபாடலைக் கேட்டதும் சட்டென வயது குறைந்து விடுகிறது பாருங்கள்...
கீசா மேடம் இந்தப் பாடலைக் கேட்டு, அவருக்கும் வயது குறைந்தால், இன்னும் பிறக்கவேயில்லை என்று சொல்லிடுவாரோ?
நீக்கு💛💛💛💛💛💛💛💛💛💛💛💛👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
நீக்குஅன்பு முரளிமா,
நீக்குஇசைக்கு அந்த மகிமை உண்டு.
இந்தப் பாடல் வந்த காலத்தில் நாங்கள்
பதின்ம வயதுக்குக் கூடப் போகவில்லை.
இருந்தும் பொருள் புரிந்தோ புரியாமலயோ
அப்படி மயங்கினோம்.
அவ்வளவு பவர்ஃபுல் வரிகள். அதற்கேற்ற
இனிமை கொட்டும் இசை.
வல்லிம்மா...
நீக்குஆரம்ப குரல் எம் எஸ் வியா என்பது சந்தேகம். மதுரை பொன்னுசாமி என்ற ஒருவர் குரல் கொடுப்பார். அவராய் இருக்கலாம்.
ஹா.. ஹா.. ஹா.. நெல்லை...
நீக்குஇளமைக்கு காலத்தில் இது மாதிரி பாடல்கள் மனதில் பதிந்து விடுவதால் வரிகளும் மனப்பாடமாகி விடுகின்றன!
பிறகு படம் பார்த்தோம். அந்த இசைக்கும் தாளத்துக்கும் சிவாஜி
பதிலளிநீக்குஆடி வரும் காட்சி அற்புதம்.
டி எம் எஸ், பி லீலா குரல்கள். முதலில் ஒலிக்கும்
எம் எஸ்வி குரல் என்று நினைக்கிறேன்.
haunting music.
16 வயதினிலே கமல் நடைக்கெல்லாம் இந்த நடை முன்னோடி! ஹிந்தியிலும் பின்னர் இந்தப் படத்தை எடுத்தார்கள்.
நீக்கு''பாடல் ஆரம்ப ஹம்மிங் முடிந்ததும் சிவாஜி ஒரு குதியலோடு என்ட்ரி ஆகிறார் பாருங்கள்.. தொடர்ந்த நடை.."
பதிலளிநீக்குஅதிசயம் , இதையே நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள்.ஹை ஃபைவ்:)
ஆஹா... அதை யார்தான் ராசிக்காமலிருப்பார்?
நீக்குமுதல் இரண்டு பாட்டும் சூப்பரோ சூப்பர்.
பதிலளிநீக்குஎத்தனையோ தடவை கேட்டு ரசித்த பாடல்.
மூன்றாவது பாடல், சேரவில்லை. கேட்டதும் வெகு வெகு அபூர்வம்.
நல்ல தலைவாழை இலை விருந்தில், பிட்சா பீஸ் ஒன்றும் பரிமாறியது போல ஆகிவிட்டது என்றால் துரை செல்வராஜு சார் கோபித்துக்கொள்வாரோ?
சேரவில்லை என்பதை ஒத்துக் கொள்ளலாம். பீட்ஸா அளவுக்கு நாகரிகம் இல்லை. ஆனால் இனிமையான பாடல். நம்ப மாட்டீர்கள். நான் முதல் கமெண்ட்டைக் கொடுத்ததும் போன். யாரென்று பார்த்தால் என் அக்கா. மூன்றாவது பாடல் இதுவரை நான் கேட்டதில்லை. ஆனால் ரொம்ப இனிமை என்றார். அவர் ஒரு நேயர் விருப்பம் சொல்லி விட்டு போனை வைத்தார்.
நீக்குஅதாவது முதலிரண்டுக்கும் மூன்றாவது பாடலுக்கும் தலைமுறை இடைவெளி.
நீக்குஇசையமைப்பாளர் அநிருத் பாடல்கள், இந்தக் கால இளைஞர்களின் ரசனையை ப்ரதிபலிக்கிறது. இதில் இசையமைப்பாளர்கள் பாவமா இல்லை ரசிகர்களா அல்லது எப்போதாவது கேட்கும் என்னைப்போன்றவர்களா என்பது பிடிபடவில்லை.
வேற வேற ஜானர் என்று சொல்லலாமா? அநிருத் பாடல்கள் சில நன்றாகவே இருக்கும். என் இளையவன் அநிருத்தின் மாபெரும் ரசிகன்.
நீக்கு//அநிருத் பாடல்கள் சில நன்றாகவே இருக்கும்.// Yes
நீக்குஆம்.
நீக்குஆமாம் அனிருத் பாடல்கள் சில நன்றாக இருக்கின்றன.
நீக்குஇமான் இளையராஜா இன்ஸ்பிரேஷனில் போடுவதாகத் தெரிகிறது. பல பாடல்கள் நல்ல ராகங்களில் இசை அமைக்கிறார். எனக்கு இவரது இசையமைப்பும் பிடித்திருக்கிறது.
கீதா
மூன்றாவது பாடலில் திடீரென்று
பதிலளிநீக்குஇந்தக் காலத்துக்கு வந்து விட்டேன்.
இப்படி வைத்துக் கொள்ளலாமா. :)
மூன்று பழைய பாடல்கள். ஒரு வாரம். மூன்று புதிய
பாடல்கள் அடுத்த வாரம்.
இந்தப் பாடலைக் கேட்டதில்லை.
எஸ்பிபி குரலில் எல்லாமே இனிமைதான்.
படம் பார்க்காமல் அவரை மட்டும் ரசிக்கலாம்.
அருமையான பாடல் மா.
மனம் நிறை வாழ்த்துகள்.
காட்சியையும் ரசிக்கலாம் அம்மா.. அசோக்குமார் கேமிரா. எஸ் பி பி நடுவில் ஒரு சிரிப்பு சிரிப்பார். குரலில் குழைவார்... மாயக்கள்ளன் அவர்!
நீக்குகாட்சி அமைப்புக்கு ஏற்ற பாடல் வரிகள், மனதை அந்தச் சூழ்நிலைக்கே கொண்டுபோவது... இப்படியெல்லாம் யோசித்து யோசித்து மெருகேற்றினார்கள்.
பதிலளிநீக்குஇப்போதைய படங்களில் அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது. டாஸ்மாக் காட்சிகளுக்கும் வெட்டுக்கிளி நடனங்களுக்கும் இசையோ வரிகளோ அவசியமில்லையல்லவா
ஆமாம். சமந்தாவே இப்போது ஒரு தெலுங்குப் படத்தில் ஐட்டம் டான்ஸ் செய்திருக்கிறாராம். இவற்றை எல்லாம் மீறி சில மெலடிகள் அத்தி பூத்தது போல வந்து மனதை வருடுவதுண்டு. என் இளையவன் பெரும்பாலும் மெலடிகளின் ரசிகன்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் கோமதி அக்கா.. வாங்க..
நீக்குமுதல் இரண்டு பாட்ல்களும் அடிக்கடி கேட்டவை. பழைய பாடல்கள் நிகழச்சியில் பலரும் விரும்பி கேட்டவை. வானொலி, தொலைக்காட்சியில் எல்லாம்.
பதிலளிநீக்குகடைசி பாடல் கேட்ட நினைவே இல்லை. பாடல் இனிமைதான்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். புதிய தொற்றினால் அதிகம் ஆபத்தில்லை என அறிவிக்கப்பட்டாலும் முற்றிலும் அழிந்து ஒழிந்து அனைவரும் மன நிம்மதியோடு வாழப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா அக்கா.. வாங்க...
நீக்குஆஹா! எல்லாமே அருமையான பாடல்கள். அடிக்கடி அந்தக் காலங்களில் கேட்டு ரசித்த பாடல். அதிலும் "தாழையாம் பூ முடிச்சு" பாடல் அந்தக் காலத்தில் திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் ஆனந்த விகடனில் சிலாகித்துச் சொல்லப்பட்ட பாடல். பெரிய இடத்துப் பெண்/பாகப்பிரிவினை இரண்டுமே தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். மூன்றாவது படம்/பாடல் இரண்டுமே புதிது. அதிலும் உயரமான ரேகா பாண்டியராஜனுக்கு ஜோடியாக! :))))
பதிலளிநீக்குமுதல் இரண்டும் மறக்க முடியாத பாடல்கள். காலத்தால் அழியாத பாடல்கள். அதோடு கம்பேர் செய்யும்போது மூன்றாவது ஓரிரு மாற்று குறைவு. ஆனால் இனிமையான பாடல்!
நீக்கு//அதிலும் உயரமான ரேகா பாண்டியராஜனுக்கு ஜோடியாக! :))))// ரேகாவை விட உயரமான இளவரசி பாண்டியராஜனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தவிர இது ஒன்றும் புதிதல்ல. குள்ளமான டி.ஆர்.ராமசந்திரனுக்கு ஜோடியாக அவரை விட உயரமான பத்மினி, வைஜெயந்தி மாலா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள்.
நீக்குசூர்யா-ஜோதிகா, சூர்யா-அனுஷ்கா, பிரசாந்த்-ஐஸ்வர்யா ராம் இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம். தபு பல கதாநாயகர்களை விட உயரமானவர்.
உங்கள் வரிக்கு நீங்களே விளக்கம் கொடுத்துள்ளீர்கள்! கமல் கூட குள்ளம்தான். சூர்யா குள்ளம். சிம்ரன் காஜல் போன்றோர் உயரம் அதிகம்.
நீக்குஎன் வரிகள் இல்லை ஸ்ரீராம். கீதா அக்காவின் வரிகள்.
நீக்குச்சே... மேலே என்று பார்த்தும் குழம்பியிருக்கிறேன். என்ன கவனமோ! Sorry!
நீக்குஅன்று வந்ததும் அதே நிலா! பாடல் இரு முறை வரும் இல்லையோ? ஒன்று மகிழ்ச்சி, இன்னொன்று சோகம்.
பதிலளிநீக்குஆம். அதுவும் இன்னும் சில இனிமையான பாடல்களும் பெரிய இடத்துப் பெண்ணில் உண்டு!
நீக்குநேற்று என்னைத் தேடிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். முதலிரண்டும் அருமையான பாடல்கள். மூன்றாவது கேட்ட நினைவே இல்லை.
பதிலளிநீக்குசித்சோரின் தழுவலா? அமோல் பலேகர் இடத்தில் பாண்டியராஜனா? நல்ல வேளை நான் பார்க்கவில்லை.
வாங்க பானு அக்கா.. வணக்கம். போர் அடித்த ஒரு நாளின் தனிமை மாலையில் நான் 'உள்ளம் கவர்ந்த கள்வனை' மதுரை லட்சுமி திரையரங்கில் பார்த்தேன்! கேமிராவும், இசையும் கவர்ந்தன.
நீக்குகட்டோடு குழலாட ஆட.. ஆட..
பதிலளிநீக்குஆஹா! பொழுது நன்றாக விடிந்துவிட்டது இன்று. Fully energised..
விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசை என்றாலே போதும். ஆனந்தமாக உட்கார்ந்து கேட்கலாம்.
முதிராத நெல் ஆட ஆட .. முளைக்காத சொல் ஆட ஆட ...
- கண்ணதாசா! எங்களோடு கொஞ்சநாள் இருந்தாய் நீ என்பதே தொடரும் ஆனந்தம் எங்களுக்கு.
என்றும் இனிமை பாடல்கள்.
நீக்குவெல்டன் ஏகாந்தன் சார்! இலக்கியம், கவிதை சமாச்சாரங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டோருக்கு தாம் கொண்ட உணர்வுகள் அப்படி அப்படியே வெளிப்பட்டு விடும்.
நீக்குகொத்தமங்கலம் சுப்பு அவர்கள் 'தாழையாம் பூ முடிச்சு' பாடல் திரையில் இசைத்துக் கொண்டிருந்த பொழுது படம் பார்த்துக் கொண்டிருந்த அவர் திடீரென்று எழுந்திருந்து "டே கண்னதாசா! உன்னை அடிச்சிக்க ஆளே இல்லைடா!" என்று உரக்கக் கத்தினாரம். பாரதியாரும் இதே மாதிரி பல தடவைகள் தன் உணர்வுகளை அடக்க முடியாமல் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தாழையாம் பூ முடிச்சு பாடல் 'மாண்டு' ராகம்.
பதிலளிநீக்குகீதா ரெங்கனுக்கு வாய்ப்பு போச்!
நீக்குஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் 'செஞ்சுருட்டி' ராகம் என்கிறார் கூகிள் ஆண்டவர்.
நீக்குசெஞ்சு உருட்டி விட்டுட்டார் போல இளசு!
நீக்குSo, இதன் மூலம் தாங்கள் சொல்ல வரும் கருத்து / தீர்ப்பு ஒரே மாதிரி டியூன் இல்லை என்பதே.. இல்லையா?!
நீக்குஅதே, அதே !!
நீக்குகீதா ரெங்கனுக்கு வாய்ப்பு போச்!//
நீக்குஹாஹாஹாஅ....
கௌ அண்ணா ஆஆஆஅ என்னது தாழையாம் பூ முடிச்சு பாட்டூ மாண்டு ராகமா?!!!!!!!!!!!!! சாயல் கொஞ்சம் கூட இல்லையே...
கீதா
சப்பாஷ்... சரியான போட்டி!
நீக்குலால்குடி ஜயரமானின் மாண்டு ராக தில்லானா youtube ல தேடி கேட்டுப்பாருங்கள். தாழையாம் பூ முடிச்சு பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் போல இருக்கும்.
நீக்குநான், லால்குடி ஜெயராமன் அவர்களின் தில்லானாக்கள் எல்லாமே கேட்டிருக்கிறேனே...இதோ மீண்டும் கேட்டுப் பார்த்து வருகிறேன், கௌ அண்ணா
நீக்குகீதா
கௌ அண்ணா என் சிற்றறிவிற்கு எட்டியவரை இந்தப் பாடல் ஹரிகாம்போஜி/தி பேஸ்
நீக்குகீதா
மாண்டு ராகம், ஹரிகாம்போதி ஜன்யம் என்று இருந்தால், கைஸிகி நிஷாதம் வரும். ஆனால், மாண்டு ராகத்தில் வருவது, காகலி நிஷாதம். மற்ற ஸ்வரங்கள் மாறாமல், இந்த நிஷாதம் மட்டும் மாறுவதால், மாண்டு ராகம், தீரசங்கராபரண ஜன்யம் ஆகிறது. தாழையாம் பூ முடிச்சு மாண்டு அல்லது மிஸ்ர மாண்டுவாக இருப்பதற்கு, சாத்தியக்கூறுகள் அதிகம்.
நீக்குஎமக்கு தலை சுற்றுகிறது... ஃபியூ....
நீக்குஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
நீக்குஸ்ரீராம் எனக்கு நீங்க ஒரு ஓ போட்டே ஆக வேண்டும். முதல் இரண்டு பாடல்களும் உடனே டக்கென்று பாட வந்துவிட்டதே!! தெரிந்துவிட்டதெ. பல முறை கேட்டு ரசித்த பாடல்கள் உபயம் இலங்கை வானொலி.
பதிலளிநீக்குமூன்றாவது பாடல் கேட்டதாக நினைவே இல்லை
கீதா
அடடே... ஆனா பாருங்க.. அநேகமா வெங்கட் தளம் போனதும் கூகுள் உதவி தேவையாய் இருக்கும் உங்களுக்கு!
நீக்குஓஹோ பார்க்கிறேன்...பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன்..
நீக்குகீதா
வெங்கட்ஜி தளத்தில்....பேசு மனமே பேசு...பாட்டு கூகுளில் கண்டுபிடித்தேன் ஸ்ரீராம். பாட்டு நிறைய தடவை கேட்டிருக்கிறேன் ஆனால் இந்த வரிகள் சரணம் எல்லாம் நினைவில்லை எனவே டக்கென்று கண்டுபிடிக்க முடியவில்லை..
நீக்குகீதா
கீதா
திருமதி வெங்கட் சொல்லி இருக்கும் உணர்வுகளுக்கேற்ற பாடல் வரிகள் அவை கீதா.
நீக்குஆமாம் ஸ்ரீராம் புரிந்தது. நல்லா எழுதறாங்க.
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல்கள் இனிமையானவை. முதலிரண்டு பாடல்களும் எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்டு ரசிக்கலாம். அந்த படங்களும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.
நடிகர் திலகத்தின் நடிப்பை அந்த படத்தில் பார்த்து பிரமித்துள்ளேன். அவ்வளவு தத்ரூபமாக நடித்திருப்பார். மூன்றாவதான படத்தை இதுவரை பார்த்ததில்லை. பாடலும் பார்க்கும் போது கேள்விப்பட்ட மாதிரி தெரியவில்லை. பிறகு கேட்டு விட்டு சொல்கிறேன்.எஸ்.பி பியின் குரல் வளத்தில் நன்றாகத்தான் இருக்கும். அனைத்துப் பாடல்களையும் கேட்கிறேன்.
என் பதிவுக்கு வந்து கருத்துக்கள் அளித்த உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எனது கைப்பேசியின் பிரச்சனைகள் இப்போது கொஞ்சம் தீர்வு கண்டுள்ளது. நன்றி. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆமாம். காட்சிகளோடு சேர்த்து ரசிக்கக் கூடிய பாடல்கள்.
நீக்குநன்றி கமலா அக்கா.
"பட்டிக்காடா பட்டணமா" திரைப்படம்தான் "சகலகலா வல்லவன்" என்று கேள்வி.
பதிலளிநீக்குஇல்லை ஜி. பெரிய இடத்துப் பெண்தான் சகலகலா வல்லவன்.
நீக்குஎன்ன ஜி...
நீக்குகுழம்பி விட்டீர்களா?..
பெரிய இடத்துப் பெண் - கதை தான் உருட்டல் புரட்டல்களுக்குப் பிறகு சகல கலா வல்லவன் என்ற போர்வையுடன் வந்தது..
பட்டிக்காடா பட்டணமா .. கதையும் பின்னாளில் மறுபடியும் அவிக்கப்பட்டு சந்திரசேகர் மற்றுமொரு காமெடியன் நடிப்பில் குப்பையாக வந்தது..
முத்தான மூன்று பாடல்கள்... ஆகா...!
பதிலளிநீக்குஆஹா.. நன்றி DD.
நீக்குபாடல் ஆரம்ப ஹம்மிங் முடிந்ததும் சிவாஜி ஒரு குதியலோடு என்ட்ரி ஆகிறார் பாருங்கள்.. தொடர்ந்த நடை..
பதிலளிநீக்குசிவாஜியின் இந்த ஸ்டைலை தான் கமல் தனது 16 வயதினிலே படத்தில் காபி செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன். //
நிச்சயமாக என்று சொல்லலாம். சிவாஜியின் அந்த ஸ்டைல் ரொம்ப நல்லாருக்கும். அந்த சீனுக்கு ஏற்ற்படி...
கீதா
ஆம். ரசனை. நன்றி கீதா.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குஇன்றைய மூன்று பாடல்களும் கேட்டிருக்கிறேன். என்பதில் எனக்கே ஆச்சரியம்.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குதேன் எனும் பாடல் வரிசையில் நான் எதிர்பார்த்த பாடல் வேறு..
பதிலளிநீக்குஆனாலும் இன்றைய பாடல் இசைத்தேன்.. ரசித்தேன்..
// நான் எதிர்பார்த்த பாடல் வேறு../
நீக்குபதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்!
இன்றைய பாடலையும் ரசித்தமைக்கு நன்றி.
பாவாடை காற்றோடு ஆட - ஆட
பதிலளிநீக்கு*** *** *** *** ***
காலோடு கால் பின்னி ஆட - ஆட
கள்ளுண்ட வண்டாக ஆடு...
கட்டோடு குழலாட - ஆட - ஆட கண் என்ற மீன் ஆட ஆட.
நீங்களுமா ஸ்ரீராம்!?..
சில வரிகள் அப்படி அமைந்து விடுகின்றன. அதனால் ஒரு நல்ல பாடலையே ஒதுக்கி வைப்பதில் இஷ்டமில்லை. முன்னர் பேஸ்புக்கில் ஒரு பாடல் பகிர்ந்திருந்தேன். 1940 களில் வந்த பாடல் என்று நினைவு. இந்த வரிகளை எல்லாம் பீட் அடித்து விடும்!
நீக்குதேனே செந்தேனே பாட்டும் இனிமையாக இருக்கிறது. எஸ்பிபி வாய்ஸ் சொல்லணுமா அவருக்கே உரித்தான கிமிக்ஸ் - அந்த தேகம்.....வேகம் வரை.. ஒருவிதமாகச் சொல்வது, ஆயிரம் ஜாடை சிந்தும் எனும் இடம்...அந்த தேகம்...பட்டம் சூட்டவா க்கு முன்னர் ஒரு சிறு சிரிப்பு.!!!!!
பதிலளிநீக்குமுடிப்பதற்கு முன் பல்லவியில் சங்கதில்கள் பேசுகின்றன!
அவரின் குரல் பாட்டின்முதல் வரிக்குப் பொருந்திப் போகுதே....!!!!
கீதா
ஆம், அந்தக் குழைவைக் குறிப்பிட்டேன். சிரிப்பைச் சொல்லலாமா என்று பார்த்து விட்டு விட்டு விட்டேன்!
நீக்குஎப்போதுமே தன் வனப்பு தமக்கு!..
பதிலளிநீக்குஅது எல்லா உயிர்களுக்கும் இயல்பு!..
அதைத் தான் / இளங்கன்னியரது கர்வத்தைத் தான் -
கவியரசர் இலை மறைவாக சொல்லி வைத்தார்..
அது அன்றைய தணிக்கையாளர்களுக்குப் பிடிக்கவில்லை.. ஆதிசேஷன் அவதாரம் செய்தது போல் ஆகி விட்டார்கள்..
இன்றைக்கு துச்சாதனர்கள் துகில் பற்றி இழுக்கும் போதும் பீஷ்மரைப் போல் வாளாவிருக்கின்றனர் இவர்களுக்கு என்று ஒரு சிகண்டி பிறந்து வர வேண்டும்..
இன்றைய பாடல்களிள் வரியெல்லாம் காதில் விழுகிறதா உங்களுக்கு? இரைச்சல்தான் தெரிகிறது!
நீக்குமுதல் இரு பாடல்களும் மனம் கவர்ந்த பாடல்கள். ரசித்த பாடல்கள். படமும் பார்த்திருக்கிறேன்.
பதிலளிநீக்குமூன்றாவது பாடலான தேனே செந்தேனே கேட்ட நினைவு இல்லை. 1987 ல் வெளி வந்த படம் என்பதால் பெயரும் தெரியவில்லை. கேரளத்தில் அப்போது பி எட் அதன் ஆங்கில மொழி இலக்கிய சிறப்புப் பயிற்சி என்று காலம் சென்று கொண்டிருந்ததாலும் என் ஊரான நிலம்பூரில் இருந்ததாலும் தமிழ்ப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.
இந்தப் பாட்டு இப்போதுதான் கேட்கிறேன். நல்ல இனிமையான பாடல்.
மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
நன்றி துளஸிஜி. இளையராஜா பாடல்தான் அது. அதுவும் முதல் பத்து வருடங்களுக்குள் வந்த பாடல் என்பதால் நன்றாகவே இருக்கும்!
நீக்குகட்டோடு குழலாட!..
பதிலளிநீக்குதமிழில் சொல் வளங்களை அள்ளிக் கொட்டும் திரையிசைப் பாடல்களுள் இதுவும் ஒன்று..
குழாயடிக் காணொளியில் வரி நீக்கம் செய்யப்பட்ட பாடலே இருந்தாலும் - பழைய இசைத் தட்டில் இருந்து ஒலியேற்றம் செய்யப்பட்ட பாடல் முழுமையாகவே இருக்கின்றது..
நான் அவ்வளவு ஊன்றிப் பார்த்து எடுக்கவில்லை. மேலும் சில சுட்டிகள் இங்கு வேலை செய்யாமல் போய் வெற்றிடத்தைக் காட்டும். இதை சோதித்து பார்த்து, வேலை செய்ததுமே அப்பாடா, என்று இணைப்பேன்!
நீக்குகீதாக்கா சியாட்டிக்கா வலி தேவலாமா? உங்களுக்குக் கால் நரம்பு பிரச்சனை கொஞ்சம் பெட்டராகி இருந்ததே மீண்டும் தலை தூக்கிவிட்டதா?
பதிலளிநீக்குஇப்போதுதான் பார்த்தேன் முந்தைய பதிவில் ஸ்ரீராம் சொல்லியிருந்ததை.
கீதா
ம்ம்ம்ம், கேட்டால் விதம் விதமாய் வலி சொல்லலாம். :)))) கால் பாதத்தில் வெரிகோஸ் வெயின்ஸில் அடைப்பு ஏற்பட்டு வீக்கம், வலி வந்திருந்தது. படுக்கையில் போட்டு விட்டது. இந்த வலி குதிகால் வரையும் தான் பரவுது. ஆனாலும் அதிகம் நிற்காமல் சமாளித்துக் கொண்டு இருக்கேன். ஏற்கெனவே வலப்பக்கம் இடுப்பில் ஏணி மேலிருந்து கீழே விழுந்து, அதன் பின்னர் சில ஆண்டுகளில் மாடு முட்டி, அதன் பின்னர் கயிலை யாத்திரையின் போது குதிரையிலிருந்து கீழே விழுந்து என ஒரே பக்கம்/ஒரே இடத்தில் அடி பட்டுக் கொண்டிருந்தது. அதன் பின்னர் ஒரு நாள் வீட்டில் வாசல் தெளிக்கப் போகும்போது வழுக்கிக் கீழே விழுந்து வீங்கி அடிபட்டு எக்ஸ்ரே எல்லாம் அமர்க்களப்பட்டுப் பின்னர் ஒரு மாதம் படுத்ததோடு சரியாச்சு. அப்போத்தான் எங்க பையருக்குத் திருமணம் நிச்சயம் செய்திருந்தோம்.
நீக்குசியாட்டிக்கா முதுகுப் பகுதியில் தொடங்கி குதிகால் வரை நீளும் நரம்பாச்சே அதன் வலி தாங்க முடியாமல் இருக்குமே. அலுப்பும் இருக்குமே எப்படிச் சமாளிக்கின்றீர்கள்?
பதிலளிநீக்குகீதா
கட்டோடு குழலாட - பாடலில் துப்பறிந்து நறுக்கியெறிந்த தணிக்கையாளர்கள் - கவியரசரின் வேறொரு பாடலில் கோட்டை விட்டது தான் வேடிக்கை..
பதிலளிநீக்குஅந்தப் பாடல் இடம் பெற்றிருக்கும் படம் - நெஞ்சம் மறப்பதில்லை..
என்ன பாடல்? என்ன வரிகள்? எனக்கு வேறொரு படப் பாட்டு நினைவுக்கு வருகிறது. கதவுகள் இல்லாத கோட்டை!
நீக்குகாதல் கோட்டையா? சில நாட்கள் முன்னர் தான் இந்தப் படத்தைப் பற்றி நினைத்துக் கொண்டேன். வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கணும்னு! :))))) எவ்வளவு சீக்கிரம்னும் நினைச்சேன். விமரிசனம் எழுதினால் எல்லோரும் என்ன சொல்வாங்க என்றும் அவரவர் பாணியில் யோசித்தேன். :)))))))
நீக்குஇல்லை! காட்டுராணி தோட்டம்!
நீக்குதாழையாம் பூமுடித்து -
பதிலளிநீக்குதங்கத் தமிழின் தனி மரபினைக் கூறும் பாடல்..
இப்பாடலைக் குறித்து பல ஆண்டுகளுக்கு முன் கவியரசர் பிறந்த நாளில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கின்றேன்..
அப்போதெல்லாம் தங்களது நட்பு வளையத்துக்கு வெளியில் இருந்தேன்..
ஓ... அப்படியா? சுட்டி தந்தால் படித்து மகிழலாமே...
நீக்குமீண்டும் ஒரு பதிவாகவே தருகின்றேன்..
நீக்குகரும்பு தின்னக் கூலியா!..
ஆஹா... காத்திருக்கேன்
நீக்கு@ ஸ்ரீராம்...
பதிலளிநீக்கு//என்ன பாடல்?.. என்ன வரிகள்?.. //
இந்தப் பாடல் தாங்கள் அறிந்ததே!..
முந்தானை பந்தாட
அம்மானை பாடுங்கடி..
முத்தோடு கொண்டாடி
கொத்தோடு ஆடுங்கடி..
ஓஹோ... ஆனால் இதை வெல்லும் வரிகள் நிறைய இருக்கின்றன துரை செல்வராஜூ ஸார்..
நீக்குஇருக்கலாம்..
நீக்குகவியரசரின் கவி நயத்துக்காக ஒன்றை மட்டும் குறித்தேன்..
அன்றைக்கு மலைத்தேன் என்று மலைத்ததும் நினைத்தேன்..
அமுதெனும் தமிழினில் திளைத்தேன்..
@கீதாக்கா
பதிலளிநீக்குதிருச்சியில் ECHS இருக்கிறதா? மருத்துவ செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?
Jayakumar