கயா :மலையில் பெய்யும் மழை நீர் தன் கிராமத்துக்கு கிடைக்கும் வகையில், 3 கி.மீ., துாரத்துக்கு தனியாளாக கால்வாய் வெட்டிய, பீஹாரைச் சேர்ந்த 'கால்வாய் மனிதர்' புதிய கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துஉள்ளது. இங்குள்ள கயா மாவட்டம் கோத்திலாவா பகுதியைச் சேர்ந்தவர் லாங்கி புய்யன். அருகில் உள்ள மலைப் பகுதிக்கு கால்நடைகளை மேய்க்க அழைத்துச் சென்று வந்த அவர், அங்கு பெய்யும் மழை நீர் வேறு பகுதிக்கு செல்வதை பார்த்தார்.அந்த மழை நீரை தன் கிராமத்துக்கு திரும்பும் வகையில், கால்வாய் அமைக்க முடிவு செய்தார்.கடந்த, 30 ஆண்டுகளாக, தனியாளாக மலையில் இருந்து தன் கிராமத்துக்கு கால்வாயை அவர் அமைத்தார். கடந்தாண்டு இந்தப் பணியை அவர் முடித்தார். தற்போது அவருடைய கிராமத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்து வருகிறது.இந்நிலையில், அருகில் உள்ள ஐந்து கிராமங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில், மற்றொரு கால்வாயை அமைக்கும் பணியை அவர் துவக்கியுள்ளார்.'போதிய தண்ணீர் கிடைத்தால், அந்த கிராமங்களில் விவசாயம் செழிக்கும். மக்களும் வறுமையில் இருந்து மீள்வர்' என, புய்யன் கூறியுள்ளார்.
=============================================================================================================
நியூயார்க் ;“எங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள 'பாக்ஸ்லோவிட்' மாத்திரையை எடுத்துக் கொண்டால், 'ஒமைக்ரான்' வகை கொரோனா வைரசின் பாதிப்பில் இருந்து தப்பலாம்,” என, 'பைசர்' நிறுவன சி.இ.ஓ., ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து இயங்கும் பைசர் நிறுவனம் கொரோனா வைரசுக்காக, பாக்ஸ்லோவிட் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது.கொரோனா அறிகுறிகள் தென்பட்ட மூன்று நாட்களில் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் விகிதம் 89 சதவீதம் குறைந்து
விடும்.ஐந்து நாட்களுக்குள் இந்த மாத்திரை வழங்கப்பட்டால், அந்த ஆபத்து 88 சதவீதமாக குறைந்துவிடும் என, பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பரிசோதனைக்காக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 2,246 பேருக்கு, இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் 0.7 சதவீதம் பேர் மட்டுமே 28 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. இந்த மாத்திரை நல்ல செயல்திறனுடன் இருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே மரபணு மாறிய ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதை தடுப்பூசி செலுத்துவதால் கட்டுப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் நிலவிவருகிறது.
இந்நிலையில் பைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் போர்லா கூறியதாவது:பாக்ஸ்லோவிட் மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஒமைக்ரான் உள்ளிட்ட மோசமான அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
==================================================================================================================================
நான் படிச்ச புத்தகம்
- ஜீவி -
உங்கள் பிறந்த தேதியும் வாழ்க்கை ரகசியங்களும்
எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்வதில் நம்மில் யாருக்குத் தான் ஆசையில்லை?
அப்படியான ஆசை வயப்பட்டோருக்காகவே இந்தப் புத்தகம்.
'நடக்கப் போவதைத் தெரிந்து கொண்டால் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற
நிம்மதியும் போய் விடும். ஆளை விடுங்க சாமி..' என்று கழண்டு கொள்கிற ஆசாமியா நீங்கள்?... அப்போ ஜோரா ஒரு தடவை கைதட்டி விட்டு இதற்கு மேல் வாசிப்பதை தவிர்த்து விடுங்கள்.
94 பக்கங்கள் தான். இந்த குட்டிப் புத்தகத்தைப் பற்றி ஒரு சின்ன அறிமுகத்திற்குப் பிறகு விஷயத்திற்கு வருகிறேன்.
உங்கள் பிறந்த தேதி அல்லது உங்களுக்குச் சூட்டப் பட்டிருக்கும் பெயரை வைத்து உங்கள் வாழ்க்கை அமைப்பு எப்படி இருக்கும் என்று கணிக்கக் கூடிய எண் கணித அடிப்படையிலான மிகப் பழமையான ஆனால் இன்றும் எல்லோரையும் கவரக் கூடிய ஆய்வு சம்பந்தப்பட்ட நூல் இது.
விண்வெளி கிரகங்களுக்கும், 1 முதல் 9 வரையிலான எண்களுக்கும் உள்ள தொடர்பை ஊர்ஜிதப்படுத்திய ஞானம் தான் இந்த ஆய்விற்கான அடிப்படை.
பைதாகரஸ் என்ற கிரீஸ் தேசத்து வேதாந்தி இந்த ஆய்வை முறைப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அறிஞர் வில்லியம் ஜான் வார்னர் (எண் கணித மேதை சீரோ என்று சொன்னால் தான் பலருக்கும் சட்டென்று நினைவுக்கு வரும்) இன்னொருவர். தமக்கான வாழ்நாள் பங்களிப்பை இந்த ஆய்வில் செலுத்தியவர் இவர்.
முதலில் பிறந்த தேதியை வைத்து எப்படி பலனைக் கணிப்பது என்று பார்ப்போம்.
ஒருவரின் பிறந்த தேதி 1-2-1982 என்று வைத்துக் கொள்வோம். பிறந்த தேதியில் உள்ள எண்களைக் கூட்டி அதை ஒற்றைப்படை எண்ணுக்கு கொண்டு வர வேண்டும்.
1+2+1+9+8+2 = 23 = 5. ஆக அவர் எண் 5-க்கு சொந்தக்காரர்.
1 முதல் 9 எண் வரை ஒவ்வொரு எண்ணையும் சார்ந்தவர்கள் இப்படியானவர்கள், பிறப்பு முதல் இறப்பு வரை இப்படியான பலன்களை அடைந்தே தீருவர் என்று வரையறுத்த கணிப்புகள் உண்டு. அவர் தோற்றம், குண நலன்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்தியம், உடல் ஆரோக்கியம், செல்வ நிலை, அவருக்கான அனுகூல -- பிரதியனுகூல தேதிகள் போன்றவை கணிப்புகளில் முக்கியமானவை.
பிறந்த தேதியை வைத்து பலன்கள் கணிப்பது போல ஆங்கில எழுத்துகளுக்கான எண் கணித எண் கொண்டு அவரவருக்கு உரிய பெயர் கொண்டும் பலன் கணிக்கலாம்.
A, I, J,Q,Y. = 1
B,K,R = 2
C, G, L, S. = 3
D, M, T = 4
E, H, N, X = 5
U, V, W = 6
O, Z = 7
F, P = 8
G. RAJAN என்பது ஒருவர் பெயர் என்றால்,
3+2+1+1+1+5 = 13 = 4
G. Rajan -னின் எண் 4 என்று கொள்ள வேண்டும்.
பிறந்த தேதியை மாற்ற முடியாது. ஆனால் பெயரை மாற்றிக் கொள்ளலாம் என்பதினால் சிலர் தங்கள் வாழ்க்கையில் தாம் வேண்டும் சுகத்திற்கேற்ப எண்களைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ற மாதிரி தம் பெயரை மாற்றி வைத்துக் கொள்கின்றனர்.
எண்களும் அந்த ஒவ்வொரு எண்ணையும் ஆட்சி செய்யும் அதிபதி கிரகங்கள் என்னன்ன என்று பார்க்கலாம்.
1 - சூரியன், 2- சந்திரன், 3 - குரு, 4 - ராகு, 5 - புதன், 6 - சுக்கிரன், 7 - சந்திரன்,
8 - சனி, 9 - செவ்வாய்
ஒன்று எண் கொண்டவர் ஆணோ, பெண்ணோ மாற்று எண் கொண்டவரை மணக்க வேண்டும் என்றும்,
இரண்டு எண்காரர்கள் சுதந்திர வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆகையால் பிறருக்கு அடங்கி இருப்பர் என்றும்,
மூன்று எண் கொண்டவர் செல்வத்தில் திளைத்து இருப்போர் என்றும்
நான்கு எண் கொண்டவர் எதையும் உடனே நம்பி செயல்பட மாட்டார்கள் என்றும்
ஐந்து எண் காரர்கள் பிறர் பாராட்டும் அளவுக்கு வாக்கு சாதுர்யமாக பேசும் திறமை கொண்டவர்கள் என்றும்
ஆறு எண் கொண்டவர்கள் ஆணாயின் ஆணழகர்களாகவும், பெண்களாயின் பெண் தேவதைகளாகவும் இருப்பவர் என்றும்
ஏழாம் எண் காரர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டால் மிகுந்த செல்வம் ஈட்டுவர் என்றும்,
எட்டாம் எண் கொண்டவர்கள் உடல் உழைபுக்கு அஞ்சமாட்டார்கள் என்றும்
ஒன்பதாவது எண் கொண்டவர் புதிய ஆராய்ச்சிகளில் மோகம் கொண்டவராய் இருப்பர்
--- என்றும் குறிப்பான பலன்கள் சொல்லப்படுகிறது. கட்டுரையின் சுருக்கத்திற்காக பெரும்பாலான பலன்களைத் தவிர்த்திருக்கிறேன்.
பெயர் எண்களைப் பொறுத்த மட்டில் தங்கள் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டு அதற்கேற்ப வேண்டுகிற சுகங்களை அனுபவிக்க வழியிருக்கிறது.
எனக்குத் தெரிந்தவர் ஒருவர் விஷயத்திலேயே இப்படி நடந்திருக்கிறது.
காதலித்துக் கைப்பிடித்த திருமணம். கல்யாணம் முடிந்த ஆறே மாதங்களில் எந்த விஷயத்திலும் இருவருக்கும் ஒத்த கருத்து அமையாமல் இரண்டு பேரும் அமைதியையே இழந்து போனார்கள். அவர்கள் அதிர்ஷ்டம். எண் சாத்திர ஆங்கில புத்தகம் ஒன்றை தற்செயலாக வாசிக்கக் கிடைத்து, தங்கள் இருவருக்குமே 1-ம் எண் என்று தெரிந்தது. இருவரில் ஒருவரின் பெயரை மாற்றி வைத்துக் கொண்டால் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று தெரிந்து மனைவி பெயர் சிறு ஸ்பெல்லிங் மாற்றத்துடன் மாற்றப்பட்டது.
இணக்கமான தம்பதிகளுக்கு எடுத்துக் காட்டாக இன்று அவர்கள் வாழ்கிறார்கள்.
ஜீவி சாரின் புத்தக அறிமுகம் இன்டெரெஸ்டிங்.
பதிலளிநீக்குஅது சரி எனக்கு எண் நெல்லைத்தமிழன், ஒரிஜினல் பெயர், கூப்பிடும் பெயர்... எதை வைத்து ஜோதிடம் பார்க்கணும்?
ஒவ்வொன்றாய்ப் பார்த்து எது நன்றாயிருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்! இல்லாவிட்டால் எல்லாவற்றிலிருந்தும் பாஸிட்டிவ் பாயிண்ட்ஸ் மட்டும் தேவிக்கொள்ளவே வேண்டியதுதான்!
நீக்குநெல்லை! பிறந்த தேதி பலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே சந்தோஷ்த்தைக் கொடுத்தால் பெயர் பலனுக்குப் போகவே வேண்டாம்.
நீக்குபெயர் பலனுக்குப் போக வேண்டும் என்றால் ஆவணங்களில் ஆங்கிலத்தில் நீங்கள் எப்படி கையெழுத்திடுவீர்களோ அப்படி.
நீக்குஇன்ஷியலோடு முழுப்பெயர் இதில் இருப்பதால் அப்பாவின் சந்ததித் தொடர்புச் சங்கிலி (மாற்றவே முடியாமல்) கூடவே வருகிறது.
தி. கீதா சொல்லும் இம்மை, மறுமை இந்திய தத்துவ -- இந்துத்வா -- கருத்தியல் என்றாலும் இந்தத் தொடர்புச் சங்கிலியில் அதற்கான பதிலும் இருக்கிறது.
பெற்றோர் வைத்த பெயரே மறந்து போகும் அளவுக்கு சிலர் பிற்காலத்தில் கொண்ட புனைபெயர்களால் அறியப்படுகிறார்கள். (உதா: கண்ணதாசன், எழுத்தாளர் சுஜாதா.)
நீக்குஇப்படியானவர்கள் கொண்ட புனைப்பெயர்கள் நிச்சயம் இவர்கள் விஷயத்தில் பலனளித்திருக்கிறது என்றே கொள்ள வேண்டும்.
லாங்கி புய்யன் என்ற ஓர் தனி மனிதரால் இது சாத்தியம் என்றால் அரசாங்கத்தால் எவ்வளவு சாதிக்கலாம் ???
பதிலளிநீக்குசோசிய புத்தகத்தின் தகவல்கள் ஆச்சரியம் அளிக்கிறது.
உண்மைதான். நன்றி ஜி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குலாங்கி புய்யன் அவர்களின் சாதனை ஆச்சர்யமானது போற்றுதலுக்குரியது. நம் நாட்டில் மக்கள் பிரதிநிதிகள் சாதிக்காததை தனி மனிதர்கள் சாதிப்பது வியப்பாக இருக்கிறது.
கால்வாய் மனிதர் லாங்கி பூய்யன் அவர்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன். ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் செய்யாததை ஒரு தனி மனிதர் செய்து காட்டுகிறார்! வியப்பாக இல்லை? இதை ஒட்டி என் மனதில் அருமையான கருத்து ஒன்று வந்தது. அது பின்னர்.
பதிலளிநீக்குசமீபத்தில் தான் கிராமத்தில் வாய்க்கால் பகுதிகளில் வீடுகள் உருவாகி வருவதைக் கண்டு மனம் வேதனை அடைந்து வந்தேன். இம்மனிதர் மகிழ்ச்சியைத் தருகிறார்!
கீதா
கால்வாய் வெட்டிய லாங்கி புய்யன் கதை பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் திரைப்படத்தை நினைவூட்டியது.
பதிலளிநீக்குஇதே போன்று மலையை வெட்டி ரோடு போட்ட தனிமனிதரின் கதை முன்பே பாசிட்டிவ் செய்திகளில் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
Jayakumar
ஆனால் பெயரை மாற்றிக் கொள்ளலாம் என்பதினால் சிலர் தங்கள் வாழ்க்கையில் தாம் வேண்டும் சுகத்திற்கேற்ப எண்களைத் தேர்ந்தெடுத்து அதற்கேற்ற மாதிரி தம் பெயரை மாற்றி வைத்துக் கொள்கின்றனர்.//
பதிலளிநீக்குஎனது கேள்வி. நாம் நம் வாழ்க்கையில் நடப்பதற்கு நம் வினைகளைக் காரணமாகச்சொல்வதுண்டு இல்லையா? நமக்கும் மிஞ்சிய சக்தி, அலல்து விதி, கர்மா இவைதான் நம் வாழ்க்கையை வகுக்கிறது என்றும் சொல்வதுண்டு. அப்படி இருக்க நாமே நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியுமா? மாற்றிக் கொள்ள முடியுமா?
அப்படி என்றால் நம்மை மீறிய சக்தி என்பது அடிபட்டுப் போகிறது இல்லையா?
கீதா
//அப்படி என்றால் நம்மை மீறிய சக்தி என்பது அடிபட்டுப் போகிறது இல்லையா?//
நீக்குஇல்லை. ஒத்துப்போகிறது அல்லது இணங்கி வருகிறது என்று கொள்ளலாம் அல்லவா?
புதன் கேள்விகளா?
நீக்குஇல்லை. ஒத்துப்போகிறது அல்லது இணங்கி வருகிறது என்று கொள்ளலாம் அல்லவா?//
நீக்குஅதாவது காலம் கனிகிறது என்று இல்லையா.
சரி அந்தக் காலம் கனிவதற்கும் காலம் வர வேண்டும் இல்லையா? அதாவது நம் மனதில் அப்படித் தோன்றுவதற்கும்...அதாவது இங்கே சொல்லப்பட்டிருப்பதையே எடுத்துக் கொள்கிறேன்....நம் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அல்லது வழிகாட்டல் நமக்குக் கிடப்பதற்கும் தோன்றுவதற்கும் கூட காலம்/நேரம் வர வேண்டும் இல்லையா? அதுவும் நமக்கு நடக்கும் என்று இருந்தாலொழிய வராது இல்லையா?
சிலருக்கு அந்த நேரம்/காலம் கனியாமலேயே போய்விடுகிறது இல்லையா?
ஒருவேளை பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாமலேயே அல்லது தோன்றாமலேயே போயிருந்தால்?
அதற்குத்தானே நாம் நேரம்/காலம் வாய்க்க வேண்டும் என்று சொல்கிறோம். இது எல்லோருக்கும் வாய்க்கிறதா?
கீதா
கீதா
கௌ அண்ணா புதன் கேள்விகளாகவும் கொள்ளலாம்.
நீக்குகீதா
என் சிற்றறிவிற்கு எட்டியவரை எதுவுமே நடக்க வேண்டும் என்றிருந்தால் மட்டுமே, காலம் கைகூடி வந்தால் மட்டுமே நடக்கும் என்பது.
நீக்குகீதா
சிற்றறிவு என்ன சொல்ல வேண்டாம் சகோதரி...! அது :-
நீக்குநில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை
அப்புறம் :-
அருவினை என்ப உளவோ (?) கருவியான்
காலம் அறிந்து செயின்
அறிந்து - தெரிந்து - புரிந்து :-
எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெற காலம் கருதிச் செய்ய வேண்டும்... அதையும் முறையான கருவிகளைக் கையாண்டு செய்தால் ஆற்றல் பெருகி அரிய செயல்களை முடிக்க முடியும்... தகுந்த காலம் அறிந்து - உரிய கருவிகளைத் தேர்வு செய்து - அவற்றை இயக்கும் வழிமுறைகளை உணர்ந்து - செயல் புரிந்தால்...?
(?) = செய்தற்கரிய செயல்கள் என்று சொல்லப்படுவன உளவோ?
ஆனால் :-
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
என்ன செய்வது...? ம்...
என்னது பெயரை மாற்றுவதா...? ஹஹா ஹா... முருகா...!
உங்கள் மனதில் கிளர்ந்தெழும் கேள்விக்கு நீங்கள் தான் விடை தேடித் தெளிய வேண்டும். அது தான் கன்வின்ஸிங்காகவும் இருக்கும். இன்னொருத்தரின் பதில் என்பது அந்த இன்னொருத்தர் அந்த விஷயத்தை புரிந்து கொண்ட அள்வில் என்றும் குறைபாடாகவே இருக்கும்.
நீக்குதன்னைத் தோண்டி ஞானம் காண்பது என்பது இது தான். அதனால் உங்களுக்குள்ளேயே கேள்விகள் கேட்டு பதில் காண முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் பதில் கிடைக்கும்.
மேலே இருப்பது சகோ. தி. கீதாவிற்கான ஆலோசனை.
நீக்குடிடி உங்கள் விரிவான அழகான பதிலுக்கு மிக்க நன்றி டிடி. நீங்கள் ஐயனின் குறள்களோடு மேற்கோள் காட்டிச் சொல்லியிருப்பது மிக நன்று
நீக்குஆனால் எனக்கு அதிலும் கேள்விகள் உண்டு.
//எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெற காலம் கருதிச் செய்ய வேண்டும்... அதையும் முறையான கருவிகளைக் கையாண்டு செய்தால் ஆற்றல் பெருகி அரிய செயல்களை முடிக்க முடியும்... தகுந்த காலம் அறிந்து - உரிய கருவிகளைத் தேர்வு செய்து - அவற்றை இயக்கும் வழிமுறைகளை உணர்ந்து - செயல் புரிந்தால்...?//
எல்லோருடைய அறிவும் ஒரே போன்று இல்லையே டிடி சிந்திப்பதற்கு. மூளை என்பது ஆழ்கடல் மற்றும் அதிலுள்ள உணர்ச்சிகளின் பார்ட் அது தனி.
இங்கு அது குறித்து எழுதினால் பதிவு போல் ஆகிவிடும் எனபதால் விரிவாக எழுத முடியவில்லை.
மிக்க நன்றி டிடி.
கீதா
உங்கள் மனதில் கிளர்ந்தெழும் கேள்விக்கு நீங்கள் தான் விடை தேடித் தெளிய வேண்டும். அது தான் கன்வின்ஸிங்காகவும் இருக்கும்.//
நீக்குஆம் ஜீவி அண்ணா. டிட்டோ.
இது நான் அடிக்கடி சொல்வதும் (செய்வதும்).
மிக்க நன்றி ஜீவி அண்ணா.
கீதா
நான் கல்யாணம் ஆனதுமே என்னோட கடைசி மைத்துனர் மற்றும் நாத்தனார் ஆகியோர் தஞ்சை ஜில்லா வழக்கப்படி என் பெயரை மாற்றியே ஆகணும்னு இரண்டு கால்களாலேயும் நின்றார்கள். ஆனால் என்னோட பெயரை மாற்றவே முடியலை. ஆதலால் என்னைப் பொறுத்தவரை பெற்றோர் வைத்த பெயரே அதிர்ஷ்டமானது தான். :)))) எண் கணித பலன்கள் எனக்கு என்னோட பதின்ம வயசிலேயே ஒரு சிநேகிதனும், அதன் பின் வேலைக்குப் போகும்போது ஒரு சிநேகிதியும் விபரமாகச் சொல்லி இருக்காங்க. பெரும்பாலானவை பலித்துள்ளன.
நீக்குஜீவி சார் இம்முறை நான் படிச்ச கதை என்பதற்கு பதிலாக நான் படிச்ச புத்தகம் என்று சமாளித்து விட்டார். கதை என்றால் numerology ஒரு கதையாகக் கருதப்படுமோ என்று அவருக்கும் தோன்றியிருக்கிறது.
பதிலளிநீக்குஹா ஹா ஹா
Jayakumar
இம்தப் பகுதியை பலரும் பங்கு கொள்ளும் வகையில் வைரைட்டியாக கொண்டு வர வேண்டும் என்பதற்கான முயற்சி தான் ஜே.ஸி. சார். எல்லோரும் இந்தப் பகுதிக்கு எழுதினால் பிரமாதமாய் களை கட்டும்.
நீக்குஒமைக்ரான் தடுப்பு வந்து விட்டது...! இனி இதுபோல் தொடரும்... என்னமோ போங்க...
பதிலளிநீக்குசான்றுடன் எண் ஆராய்ச்சி செய்ய வேண்டும் - திருக்குறள் எழுத்துகளின் கணக்கியல்...!
பதிலளிநீக்குஎழத்துகள் / சொற்கள் - இவற்றின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அதன் மூல எண்ணை (// ஒற்றைப்படை எண்ணுக்கு கொண்டு வர வேண்டும் //) கணக்கிட்டால் ஏழு...! அவ்வாறு தான. கட்டமைக்கப்பட்டுள்ளது முப்பால்...! அது தான் :-
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்
ஓ மை....இப்படி நாம் சொல்லிக் கொண்டேதான் இருக்கப் போகிறோம். இது தொடர்ந்துஜ்கொண்டே தான் இருக்கப் போகிறது. மருந்துக் கம்பெனிகளும் லாபம் பார்க்க வேண்டாமா? பலிகடா ஆடுகள், கினிபிக்ஸ் இருக்கும் போது என்ன கவலை?
பதிலளிநீக்குகவனித்துப் பார்த்தால் 'உருவாக்கப்பட்டு வெளியிட்ட போது' அதன் வீரியம் ரொம்பக் கூடுதலாக இருந்தது. அப்புறம் கொஞ்சம் குறைந்தது....தற்போது இதன் வீரியம் அத்தனை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இப்படியே மங்கிவிட்டால் போதும்.
கொரோனா ஓ மை என்ற பெயரில் இப்போது தீபாவளிக்கு ட்ரெய்லர்தான் விட்டிருக்கு. முழுவதும் புதுவருடம் அல்லது பொங்கல் ரிலீஸாக இருக்குமோ? என்னவோ போங்க...
கீதா
அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
தனியொரு மனிதராக தங்கள் கிராமத்திற்கு கால்வாய் ஏற்படுத்தி தந்த சாகச மனிதரை போற்றுவோம். தொற்றுக்கு மருந்து மாத்திரை வடிவில் வந்து குணமாகிறது என்பது சந்தோஷமான நல்ல தகவல். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
‘1 - சூரியன், 2- சந்திரன், 3 - குரு, 4 - ராகு, 5 - புதன், 6 - சுக்கிரன், 7 - சந்திரன்,
பதிலளிநீக்கு8 - சனி, 9 - செவ்வாய்’
சந்திரன் இரு முறை வருகிறது. ‘கேது’ 7ம் எண்ணுக்கு உரியவர்.
சந்திரன் இருமுறை வருவதற்கான காரணம் கீழாத்தூர் ஸ்ரீநிவாச்சார்யார் எழுதிய அந்த புத்தகத்தில் இருக்கிறது. நீண்ட விவரங்கள் வேண்டுவோர் இதற்கான நூல்களைத் தேடிப் படித்தால் ஆரம்ப பின்னூட்டத்தில் நெல்லை சொன்னது போல சுவாரஸ்யமான சப்ஜெக்ட் இது.
பதிலளிநீக்குஅடுத்தவர் நலன் நினைத்து உழைத்த நல்ல மனிதர் வாங்கி புய்யனை சிரம் தாழ்த்தி வணங்கத்தோன்றுகிறது!
பதிலளிநீக்கு@ சகோதரி கீதா
பதிலளிநீக்கு// கால்வாய் மனிதர் லாங்கி பூய்யன் அவர்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன். ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் செய்யாததை ஒரு தனி மனிதர் செய்து காட்டுகிறார்!..//
ஆட்சியாளர்களும் அரசு அலுவலர்களும் வெட்கப்பட வேண்டிய விஷயம்...
செய்யாத வேலைக்கு சம்பளம் மட்டும் சரியாக எடுத்துக் கொண்டிருப்பார்களே!..
ஆம் துரை அண்ணா. இதை ஆமோதிக்கிறேன்.
நீக்குகீதா
@ ஜீவி அண்ணா..
பதிலளிநீக்கு// தன்னைத் தோண்டி ஞானம் காண்பது என்பது இது தான்..//
மண்ணைத் தோண்டி
ஞானம் தேடும்
அன்புத் தங்கச்சி..
என்னைத் தோண்டி
ஞானம் கண்டேன்
இதுதான் எங்கட்சி!..
- கவியரசர்..
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத்தங்கச்சி என்பதுனா பாடல்
நீக்குஆமாம்.. ஆமாம்...
நீக்குமண்ணைத் தோண்டி
தண்ணீர் தேடும்
அன்புத் தங்கச்சி!.. என்பது தான் சரி..
பெரிய கோயிலுக்குச் சென்று வந்த பின் கருத்துரை பகுதிக்கு வந்ததால் இப்படி ஆயிற்று!..
:))
..என்னைத் தோண்டி ஞானம் கண்டேன், இதுதான் எங்கட்சி! //
நீக்குகவிஞரும் பாவம், ஏதாவதொரு கட்சியில் எப்போதும் மாட்டிக்கொண்டு...!
இந்த வாரம் கேள்விப் படாத நல்ல செய்தி. திரு புய்யன் அவர்களுக்கு விருது ஏதேனும் அர்சு சார்பில் கொடுக்கலாம். ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி ஒருத்தராவது இருந்தால் போதுமானது.
பதிலளிநீக்குஎண் கணிதத்தின் இந்தப் புத்தகம் நம்ம ரங்க்ஸ் கிட்டே இருந்தது/இருக்கிறது. அவர் தான் ஜோசியத்தில் பித்து! காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரை ஜோசியம் பார்த்துக்கொண்டே இருந்தார்/இருப்பார்/இருக்கிறார். :)))) நானெல்லாம் நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்னும் ரகம்.
எண் 1 சூரியன்.
பதிலளிநீக்குஎண் 2 சந்திரன்.
ராகு, கேது இருவரும் சாயா நிழல்) கிரகங்கள்.. வீடற்றவர்கள்..
எனவே பழைய பகையை மனதில் கொண்டு ராகு (4#1) சூரியனுக்கும் கேது (7#2) சந்திரனுக்கும் குடைச்சல் கொடுப்பர்..
25/27 வயதுகளில் நானும் எண் கணிதத்தில் ஈர்க்கப்பட்டேன்... இதில் உள் நுழைந்து தேடும்போது ப்ச்ல அற்புத விஷயங்களைக் கண்டு கொண்டேன்...
பதிலளிநீக்குஇவ்வகையில் மிகப் பெரிய உண்மை ஒன்று உணர்த்தப்பட்ட பிறகு யாருக்கும் பலன் செல்வதில்லை.. ஆனாலும் உபாச மூர்த்தியிடம் கேட்டு சிலருக்கு உதவிகள் செய்திருக்கின்றேன்..
இவ்வாறு செய்யும்போது அவர்களது வீட்டின் அடையாளங்கள் சொல்லப் படும்.. சமீபத்தில் கேரளத்து நண்பர் ஒருவருக்கு இவ்வாறு உதவி செய்ய அவரது திருமணம் கூடி வந்தது.. எல்லாம் ஈசன் செயல்..
ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு என்னுடன் ஒரே தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு உதவி கேட்டு வந்தார்..
பதிலளிநீக்குவராஹி அன்னையின் அருளால் அவரது மகளுக்கு ஏற்பட்டிருந்த மண வாழ்வின் மன வலி தீர்ந்து வேறு சுமுகமான சூழல் நிலவிடலாயிற்று..
இது நிகழ்ந்த மறு மாதம் நான் குவைத்திலிருந்து தஞ்சைக்குத் திரும்பும் நிலையில் அடுத்த 15 நாட்களில் அவரும் ஊருக்கு விடுப்பில் திரும்புகின்றார்..
அவரது ஊரில் சிவாலமும் திவ்ய தேசமும் எதிர் எதிரே.. அங்கு சென்று தரிசிக்க எனக்கு ஆவல்..
அப்படியே அவரது வீட்டிற்கும் சென்று வரலாம் என்று எண்ணி முகவரி கேட்டேன்.. ஆனால் அவர் தரவில்லை.. நானும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அந்த திவ்ய தேசத்துக்குச் செல்லும் வாய்ப்பும் அமைய வில்லை..
மீண்டும் குவைத்துக்குத் திரும்பிய நாலைந்து மாதங்களில் மீண்டும் அவர் வந்தார் வேறொரு பிரச்னையுடன்..
பிரச்னையை உள் நோக்கியபோது
- அந்த விடுமுறையில் அவரது வீட்டுக்கு நான் வருவதை அவர் விரும்பவில்லை என்பது தெரிய வந்தது..
எல்லாம் அன்னை அவளது அருள்..
உங்களது அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. இதுபோன்றவைபற்றி நீங்கள் மேலும் எழுதினால் நன்றாக இருக்குமெனத் தோன்றுகிறது.
நீக்குஅன்பின் ஏகாந்தன் அவர்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஎனக்கும் சில ஆண்டுகளாகவே தம்பி துரை அவர்கள் தன் ஆன்மிக அனுபவங்களைப் பகிர வேண்டும் என்னும் ஆவல் உண்டு. அவருக்கு எப்போது நேரம் வாய்க்குமோ!
நீக்குஅக்கா அவர்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. சில நாட்களாக மார்கழிப் பதிவுகளுக்குக் கூட என்னால் வர இயலவில்லை.. எல்லாம் இன்னும் சில நாட்களில் சரியாகும் என எண்ணுகின்றேன்..
நீக்குகாலம் கனியும் ... அன்பின் அதிர்வுகளை நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்..
மகிழ்ச்சி.. நன்றி..
//மலையில் பெய்யும் மழை நீர் தன் கிராமத்துக்கு கிடைக்கும் வகையில், 3 கி.மீ., துாரத்துக்கு தனியாளாக கால்வாய் வெட்டிய, பீஹாரைச் சேர்ந்த 'கால்வாய் மனிதர்' புதிய கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.//
பதிலளிநீக்குதன்னலம் இல்லாமல் பொது நலம் பார்க்கும் உயர்ந்த மனிதரை வணங்கி வாழ்த்துகிறேன். அவரின் மன உறுதி எடுத்த காரியத்தை வெற்றிபெற செய்ய வேண்டும்.
//லோவிட் மாத்திரையை எடுத்துக் கொண்டால் ஒமைக்ரான் உள்ளிட்ட மோசமான அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.//
நம்பிக்கை பலிக்கட்டும். இறையருளால் ஒப்புதல் கிடைக்கட்டும்.
இந்த செய்தியால் நம்பிக்கை ஒளி தெரிகிறது, நன்றி.
ஜீவி சார் படித்த புத்தகம் சொல்லும் செய்தியை படித்தேன், அதற்கு நண்பர்கள் கொடுத்து இருக்கும் கருத்துக்களை படித்தேன். நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஆராய்ச்சிக்கு உதவும்.
அரசும் தலைவர்களும்தான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்காமல் தனி நபரால்கூட பலர் பயன் பெறும் வகையில் நல்லது செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக லாங்கி புய்யன் செயல்பட்டு இருக்கிறார். இப்படி ஒவ்வொரு மனிதர்களும் சிறி சிறு அளவில் மற்றவர்கலுக்கு நல்லது செய்யும் முயற்சியில் ஈடுபட்டாலே உலகம் மகிழ்ச்சியாக இருக்கும்
பதிலளிநீக்கு