நட்புகள், உறவுகள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ஆங்கிலப் புத்தாண்டுக்கு பாடல்கள் போடவேண்டுமென்றால் ஒரு நான்கு பாடல்கள்தான் மறுபடி மறுபடி பகிரவேண்டும் என்பதால் வாழ்த்தோடு நிறுத்திக்கொண்டு வழக்கம்போல என் தெரிவில் பாடல் தெரிவிற்கு செல்கிறேன்.மோகன் ஷர்மா - யாராகுடிப்பாடி வேங்கடமஹாலக்ஷ்மியின் பெண் சாந்த மீனா 1989 லேயே தெலுங்கில் அறிமுகமாகி விட்டாலும், இரண்டு வருடங்கள் கழித்து தமிழில் 'நியாயங்கள் ஜெயிக்கட்டும்' என்ற படத்தில் அறிமுமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்த பிறகு இந்தப் படத்தில் நடித்தார்.
1990 ல் வெளியான 'என் காதல் கண்மணி'தான் ஜான் கென்னெடி விக்டர் தமிழில் நடித்த முதல் படம். பிறகு சிறுசிறு வேடங்களில் நடித்தாலும் கவனிக்கப்படாத அவர் பாலாவின் படத்தில் நடித்ததும் பரபரப்பான நடிகரானார்.
இந்த இருவரும் இணைந்து நடித்து 1992 ல் வெளிவந்த படம், பி சி ஸ்ரீராம் முதன் முதலான இயக்குனரான மீரா திரைப்படம். இந்தப் படத்தின் கதையை எம் ஆர் பாரதி எழுதி இருந்தாலும், நகைச்சுவைப் பகுதியை மட்டும் கிரேசி மோகன் எழுதி இருக்கிறார்! ஆனால் நகைச்சுவைக்கு சின்னி ஜெயந்த் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.
இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் இன்று..
வாலியின் பாடல்கள். இசை இளையராஜா. பாடகி மின்மினி இந்தப் படத்தில்தான் அறிமுகம்.
முதல் பாடல் யேசுதாஸ் குரலில்.. பெரிய அளவு குரலை உயர்த்தாமல் கீழேயும் இறக்காமல் நடு மத்திய உயரத்திலேயே பாடல் முழுவதும் பாடி இருப்பார் ஜேசுதாஸ். பாட வைத்திருப்பார் இளையராஜா! சரணங்கள் மட்டும் கொஞ்சம் விவி! பி ஸி ஸ்ரீராம் காட்சி அமைப்பையும் கண்கவரும் வகையில் அமைத்திருப்பார். சரணங்கள் மனதை மயக்கும், வளையும் டியூனில் கிறங்கடிக்கும்.
படம் வெளியானதா என்ன? என்று ரசிகர்களைக் கேட்க வைக்கும் படம். ஆனால் பாடல்கள் ரசிகர்களை கட்டிப்போட்டு, இந்தப் படத்தை நினைவுபடுத்தின.
புது ரூட்டுலத்தான் நல்ல ரோட்டுலத்தான்
நின்றாடும் வெள்ளிநிலவு
இந்த ராத்திரியில் ஒரு யாத்திரையில்
பூவோடு காத்தும் வருது
நிலவெங்கே சென்றாலும்
நிழல் பின்னால் வராதா
நீ வேண்டாமென்றாலும்
அது வட்டம் இடாதா
புது ரூட்டுலத்தான் நல்ல ரோட்டுலத்தான்
நின்றாடும் வெள்ளிநிலவு
பூத்திருக்கும் வைரமணித் தாரகைகள்தான்
ராத்திரியில் பார்த்ததும் உண்டோ
காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல்
பாட்டிசைக்க கேட்டது உண்டோ
நீ வாழ்ந்து வளர்ந்த இடம் வேறு
நேரங்கள் உனக்கு இதற்கேது
நீ இன்று நடக்கும் தடம் வேறு
நானன்றி உனக்கு துணை யாரு
நீ தடுத்தாலும் கால் தடுத்தாலும்
நாள் முழுக்க நான் வருவேன் மானே
புது ரூட்டுலத்தான்
மண் குடிசை வாசலிலே சந்திரன் தான் விடிவிளக்கு
என் மடிதான் பஞ்சு மெத்தை கண்மணியே நீ உறங்கு
வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு
நானும் வந்தால் என்னடி அம்மா
தென்மதுரை சேரும் வரை ஆண் துணயாக
ஏழை என்னை ஏற்று கொள்ளம்மா
ஓடாதே கிளியே தனியாக ஏதேனும் நடக்கும் தவறாக
ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக ஒன்றாக நடப்போம் மெதுவாக
காலடி நோக நாலடி போக
பாதையிலே பூ விரிப்பேன் நானே
அடுத்த பாடல் நம்ம தலைவர் எஸ் பி பி - அவருடன் ஆஷா போன்ஸ்லே இணைந்து பாடியது. இந்த இரண்டு பாடல்களுமே ஒரு மாதிரி ஸ்லோ டெம்போவில் மனதை மயக்கும் பாடல்கள். இந்தப் பாடலில் பல்லவியின் நான்காவது வரியிலேயே உயரே போய்விடுவார் எஸ் பி பி .சரணங்கள் கடைசி வரியும் அப்படியே... வரிகளில் உணர்வு இழைய இழைய பாடியிருப்பார் எஸ் பி பி.
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
அருகில் நீ வருவாயோ
உனக்காகத் திறந்தேன் மனதின் கதவை
ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை வா வா
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
ஏன் விரித்தாய் சிறகை
எனையும் தான் உன்னைப் போலே
படைத்தானே இறைவன் எனும் ஓர் தலைவன்
நெருங்கும் போது அகப்படாமல் பறந்து போகிறாய்
நிழலைப் போல தொடரும் என்னை மறந்து போகிறாய்
ஆஹா உனக்கு யாரும் தடையும் இங்கு விதிப்பதில்லையே
ஆஹா எனக்கும் கூட அடிமைக் கோலம் பிடிப்பதில்லையே
உனை நான் சந்தித்தேன் உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை சேரும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
ஆஹா.... ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை
மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல் கேட்கும் எனது ஜீவனே
ஆஹா விழிகள் நூறு கடிதம் போட்டும் பதில்கள் இல்லையே
விரக தாபம் அனலை மூட்டும் பருவம் தொல்லையே
உனை நான் கொஞ்சத்தான் மடிமேல் துஞ்சத்தான்
தினம் நான் எதிர்பார்க்கும் திருநாள் வருமோ பட்டர்பிளை பட்டர்பிளை
இன்றும் என்றும் வாழ்வில் நன்மைகள் பெருக
பதிலளிநீக்குஇறைவன் துணை நிற்க வேண்டும்.
வெளிச்சம் நிறைந்து மழை இருள் போக வேண்டும். என்றும் நிறை பிரார்த்தனைகளோடு எங்கள் ப்ளாக் செழிக்க , அனைத்து உயிர்களும்
நல் வாழ்வு பெற வேண்டுகிறேன்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குஅனைவருக்கும் இனிய புத்தாண்டு 2022க்கான
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள்.
நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள் மா
நீக்குமிக இனிமையான பாடல்கள். இப்போதான் கேட்க மனம் வந்தது.
பதிலளிநீக்குஸ்ரீராம் மிக நன்றி. என்றும் நன்மைகளும் நல்ல செய்திகளும் நம்மை வந்து அடைய வேண்டும்.
எனக்கும் என் டென்ஷன் ஒன்று இப்போதுதான் நீங்கியது! நன்றி அம்மா.
நீக்குஅன்புள்ளங்கள் என்றும் நலமோடு இருந்தால் தான்
நீக்குநம் வாழ்வும் சிறக்கும் அப்பா.
இறைவன் நல்லவன். நன்மைகள் தொடரட்டும்.
__/\__
நீக்குஎல்லோருக்கும் காலை வணக்கம் ப்ளஸ் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎல்லார் வீட்டிலும் நாட்டிலும் உலகிலும் எல்லா உயிர்களுக்கும் நல்லது நடக்க வேண்டும்.
கீதா
அட்வான்ஸ் வாழ்த்துகள் கீதா.. வாங்க.
நீக்குபட்டர் ஃப்ளை பாட்டு செம பாட்டு. எஸ்பிபி செமையா இழைச்சு இழைச்சு பாடியிருப்பார். மாட்யுலேஷன்ஸ் எல்லாம் செமையா இருக்கும். ரசிக்கும் பாடல். இசையும் செமையா இருக்கும்...
பதிலளிநீக்குஎஸ்பிபியின் குரலில் எண்டிங்க் நோட்ஸ் அவர் ஸ்டைல் கிமிக்ஸில் செமையா இருக்கும்
முதல் பாட்டு வரிகள் பார்த்து நினைவுக்கு வரலை. கேட்கிறேன் ஸ்ரீராம்
கீதா
எஸ் பி பி பாட்டு எவ்வளவு ஸ்பெஷலோ அவ்வளவு ஸ்பெஷல் யேசுதாஸ் பாடலும். கேட்டுப்பாருங்க...
நீக்குமீரா படம் பி சி ஸ்ரீராம் என்பது தெரியும். படம் சக்ஸஸ் இல்லை வந்ததா என்றும் தெரியவில்லை. இந்தப் பாடல்கள் அந்தப் படம் என்பதும் கூடத் தெரியலை ஹிஹிஹி இப்ப நீங்க சொல்லித்தான் அந்தப் படம் என்றும் தெரிகிறது.
பதிலளிநீக்குகீதா
சரிதான்.. அப்பாவியா இருக்கீங்களே! ஹா.. ஹா.. ஹா..
நீக்குமுதல் பாட்டு கேட்டதில்லை ஸ்ரீராம். இப்பத்தான் கேட்கிறேன். ஆரம்பம் செமையா இருக்கு. இடையிலும் ஹொய்யா செமையா இருக்கு
பதிலளிநீக்கு.. ரசித்தேன்
பிசி ஸ்ரீராமின் கேமரா செமையா விளையாடுது!!
கீதா
ஒரு லோ ப்ரொஃபைலிலேயே வரும் பாடல். திறமையான இனிமை!
நீக்குஇது கீதா ரங்கன் பதில் மாதிரித் தெரியலையே. அவர் பின்னூட்டம் போட்டால்,
நீக்குமுதல் பாட்டில் கல்யாணியில் ஆரம்பித்து மதுவந்தியைக் குழைத்து, தமயந்தியோ என்று நம்மை நினைக்கும்படி இசையமைத்திருக்கிறார். இரண்டாவது பாடல் தோடி.. ஆனால் அசாமின் பஃகூலா ராகம் மாதிரியே இருக்கும்
என்பது மாதிரினா எழுதியிருப்பார்.
வந்தாச்சா?
நீக்குஹாஹாஹாஹாஹா நினைச்சேன் வந்தாச்சா நெல்லை!!!!
நீக்குஉங்களுக்காகவே சொல்றேன்
பட்டர்ஃப்ளை பாட்டு நடபைரவி பேஸ்
கீதா
வந்துவிட்டேன் கீசா மேடம். நம் இரண்டு பேருக்கும் ரிஸ்க் இருக்கக்கூடாது என்று நான் உங்களைப் பார்க்கவரவில்லை. உங்க வளாகத்திலிருந்து 10 மீட்டர்களுக்கு உள்ளாகவே நான் இருந்தேன் (ஐந்து நிமிடங்கள்)
நீக்குஎங்களுக்கு பைரவி-ரஜினி நடித்த படம் மட்டும்தான் தெரியும் என்ற தைரியத்தில் இந்த கீதா ரங்கன் சொல்வதையெல்லாம் கேட்டுக்க வேண்டியிருக்கே.. இறைவா... ஈதென்ன சோதனை
நீக்குஇரண்டுமே வெகு இனிமையான பாடல்கள்.
பதிலளிநீக்குபடம் வந்தது. பாடல்கள் வெற்றி .தொலைக்காட்சியில்
வந்து கொண்டே இருக்கும்.
இளமையான விக்ரம், ஐஷ்வர்யா.
ஆஷா பான்ஸ்லே எஸ்பி பியின்மிகப் பிரபலமான
பாடல்.
ஆமாம் அம்மா. முதல் பாடல் கேட்டீர்களா?
நீக்குஓ கேட்டேனே அப்பா.
பதிலளிநீக்குஎன்ன ஒரு ஒளிப்பதிவு. அந்த மரத்தின் நிழல் நீளும் காட்சி.
ஐஸ்வர்யாவின் பிடிவாத முகம். விக்ரமின் கனிவு குறும்பு எல்லாம் அப்பவும் பிடித்தது. இப்பவும் பிடிக்கிறது.
பட்டர்ஃப்ளை பாட்டில் வரும் வண்ணங்கள் மிக மிக இனிமை. இது வேறெதோ ஆங்கிலப்
படத்தில் இருக்க வேண்டிய காட்சி. அதை அப்படிப் படமாக்கி இருக்கிறார் நம் பி சி ஸ்ரீராம்.
absolutely marvellous. Very good selection ma.
ஆமாம் அம்மா.. காட்சியியும் ரசிக்கலாம், பாடலையும் ரசிக்கலாம் ரகம் இரண்டு பாடல்களும்.
நீக்கு//விக்ரமின் கனிவும் குறும்பும்// புதன் கேள்வி.. அப்புறம் ஏன் விக்ரம் மட்டும் சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை என தெளிவுபடுத்துங்கள்.
நீக்குஇந்த இருவரும் இணைந்து நடித்து 1992 ல் வெளிவந்த படம், பி சி ஸ்ரீராம் முதன் முதலான இயக்குனரான மீரா திரைப்படம். இந்தப் படத்தின் கதையை எம் ஆர் பாரதி எழுதி இருந்தாலும், நகைச்சுவைப் பகுதியை மட்டும் கிரேசி மோகன் எழுதி இருக்கிறார்! ஆனால் நகைச்சுவைக்கு சின்னி ஜெயந்த் மட்டும்தான் என்று நினைக்கிறேன். """"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" எல்லாமே செய்திதான் எனக்கு. மிக மிக நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி அம்மா..
நீக்குவல்லிம்மா.... நீங்க என்னதான் முயற்சி செய்தாலும் எபியின் பால்யூ பானுமதி மேடத்தின் இடத்திற்கு உங்களை கன்சிடர் செய்ய மாட்டாங்க. ஹாஹா
நீக்குஹா.. ஹா.. ஹா.. நெல்லை... புள்ளி விவரம் சொல்லி இருப்பது நான்!!!
நீக்குநன்றி நெல்லை.
நீக்குநான் யார் ஸ்தானத்துக்கும் ஆசைப்படலை:)
தெரிந்ததை ஒழுங்காக எழுதவே எனக்கு சிரமம்!!!!!
நற்புத்தாண்டு நம் வாழ்வைப் புதுப்பிக்கட்டும்.
வாழ்த்துகள் மா.
@ஸ்ரீராம்... காலையில் நான் பாடல் மட்டும்தான் கேட்டேன். மற்றபடி எழுத்தைப் படிக்கலை. இன்னும் படிக்கலை. படித்து முடித்தபிறகுதான் அதற்கான பின்னூட்டம்.
நீக்குஇந்த வாரத்தின் திங்கள்...வியாழன் படிக்கணும். எப்போ படித்து எப்போ எழுதப்போறேனோ
@வல்லிம்மா... //யார் ஸ்தானத்துக்கும் ஆசைப்படலை// - நான் எழுதினதைச் சரியா எழுதலை. அதுனால நீங்க ஆசைப்படுவதுபோல வந்துவிட்டது.
நீக்கு/யார் என்னதான் எழுதினாலும் எபியின் பால்யூ பானுமதி மேடத்திற்கு இப்போதைக்கு ரிடைர்மெண்ட் கிடையாது/ என்று எழுதியிருக்கணும்.
குமுதத்தில் சினிமா செய்திகளை வினோத் என்ற பெயரில் எழுதியவர் ரா.கி.ரங்கராஜன்தான். மாத்யூ இல்லை.
நீக்குலைட்ஸ் ஆன் என்ற பெயரில் உள்ள அப்பகுதியை வினோத் என்ற பெயரில் எழுதியவர் ரா கி ர. சில பேட்டிகள், புகைபபடங்கள் எடுத்தவர் பால்யூ. (மாத்யூ அல்ல! கார் கரெக்ஷன்! எப்பவும் ஆட்டோ கரெக்ஷன் என்றுதான் சொல்ல வேண்டுமா... கொஞ்சம் முன்னேறலாம் என்று!)
நீக்குஇரண்டுமே கேட்ட நல்ல பாடல்களே...
பதிலளிநீக்குஅப்படியா? ஓகே ஜி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல்கள் பகிர்வு அருமை. படங்களின் விபரங்களை அலசி ஆராய்ந்து பகிர்ந்த விதமும் நன்றாக உள்ளது. முதல் பாடல் கேட்ட நினைவில்லை. இரண்டாவது பாடல் வரிகள் வானொலியில் கேட்ட நினைவு உள்ளது. இரண்டையும் கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி அக்கா. உங்களுக்கும் வாழ்த்துகள்.
நீக்குநன்றி.
நீக்குஇரண்டு பாடல்களும் என்றும் ரசிக்கத்தக்கவை...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குதீநுண்கிருமியின் தாக்குதலில் இருந்து நம்மை நாமே காத்துக் கொள்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பானாக..
பதிலளிநீக்குஅதே...
நீக்குIt is very difficult. I took risk in my train journeys (onward and return). அங்க எப்படி நம்மைத் தற்காத்துக்கொள்வது? மாஸ்குடன் எப்படித் தூங்குவது? எத்தனையோ கேள்விகள். இதில் 30 சதத்துக்கு மேல் மாஸ்க் இல்லை. 60 சதத்துக்கு மேல் மாஸ்க் மூக்குக்குக் கீழ். இதுல நம்மை எப்படி தற்காத்துக்கொள்வது?
நீக்குஓமிக்ரான் மிக வேகமாகப் பரவுகிறது. மக்களுக்கு பொறுப்போ அக்கறையோ இல்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. மிக அலட்சியமாக இருக்கிறார்கள்.
நீக்குகோவிட்ல, முப்பது பில்லியன் லாபம் சம்பாதித்தவர்கள் (இந்தியாவிலும் விற்பனை செய்திருந்தால் இன்னொரு முப்பது பில்லியன்) ஓமிக்ரானை ஆவலோடு வரவேற்கிறார்களா இல்லை அனுப்பியிருக்கிறார்களா என புதன் கேள்வி பதில் பகுதியில் தெளிவுபடுத்தணும்
நீக்குநேற்றைய மின்னஞ்சல்!?..
பதிலளிநீக்குதாச்சுபார்த்!
நீக்குஅப்போ க்ளைமாக்ஸ் பகுதி முதலிலும் ஆரம்பப் பகுதி பின்னாலும் ஶ்ரீராம் மாற்றி வெளியிடப் போகிறாரோ?
நீக்குசென்னை - மயிலாப்பூருக்கு மேலாக மேக வெடிப்பு என்கின்றனர்.. வரலாறு காணாத மழை என்று செய்திகள்.. இவர்கள் காண வில்லையே தவிர காலம் கண்டிருக்கும்..
பதிலளிநீக்குஇப்போதைய சீரழிவுக்குக் காரணம் இயற்கையா?..
ஊழல் பிடித்த அரசியல் வாதிகளும் அயோக்கியத்தனம் நிறைந்த அலுவலர்களும் தான்!..
இவர்களை அமர வைத்த மக்கள் காரணவாதிகள் இல்லையா ஜி ?
நீக்குஜி..
நீக்குதாங்கள் சொல்வதும் சரியே..
மக்கள் காரணமாகி பல வருடங்கள் ஆகி விட்டன. டிசம்பர் தொடக்கத்தில் பெய்த மழைநீரே இன்னும் வடிந்த பாடில்லை. மீடியாவின் கன்னுக்குத் தெரியும் இடங்களில் எல்லாம் வடித்திருப்பார்கள். உள்ளங்களில் பல திங்களில் இன்னும் தண்ணீர் இருக்க நேற்று இயற்கை ஆடிய ஆட்டம் ஆக்ரோஷ நடனம். ஏதோ.. இன்று இப்போது வெயில் வந்திருக்கிறது. மதியத்துக்கு மேல் என்ன ஆகுமோ...
நீக்குகில்லர்ஜி... ஓட்டுப்போடறவங்கள்ல பெரும்பாலும் ஊழல்வாதிகள். எனக்கு ரேஷன் கடைல 2000 ரூ கொடு, சீரியல்கள் இலவசமாப் போடு, நீ என்ன வேணும்னாலும் கொள்ளையடி என்று சொல்றவங்கதானே ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கறாங்க.
நீக்குஇதுலவேற... காமராசர், ரொம்ப நல்லா ஆட்சி பண்ணினார்.. ஏழைப் பங்காளன்னு சொல்ற தகுதி அருகதை விருதுநகர், சிவகாசியைச் சேர்ந்தவங்களுக்கு இருக்கா என்ன? தமிழகத்தை நாசமாக்கியதில் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவங்கதான் முதலிடத்தில் (காமராசரை, அவருடைய கட்சியைத் தோற்கடித்தவங்க)
வேதனையான உண்மை.
நீக்குதிரு.நெல்லையார்...
நீக்குசரியான கேள்வி தமிழரே...
இதுக்குத்தான் எங்க ஊர் மாதிரி, தாழக்குடி, பூதப்பாண்டி, இறைச்சகுளம் அழகியபாண்டிபுரம் மாதிரி ஊரா இருக்கணும்..தண்ணி தேங்காம ஓடிப் போயிடும்...திசாரம் கெடத் தொடங்கி இருக்கு...சுத்துப்பட்டு எல்லாம் இன்னும் அப்படியேதான் பச்சை வயலும் வாய்க்காலுமா இருக்கு. நல்லகாலம் யாரும் கைவைக்கலை. எங்க ஊரில் கை வைப்பு மெதுவா இறங்கியிருக்கு
நீக்குகன்னியாகுமரிய அரசியல்வாதிகள் கண்டுக்கவே மாட்டேங்கறாங்கன்னு ஒரு குறை உண்டு. என்னைக் கேட்டால் வேண்டவே வேண்டாம். ஏற்கனவே ஆரல்வாய் மொழி, காவல்கிணறு, ஒழுகினசேரி பகுதிகள் எல்லாம் கல்லூரிகள் முளைச்சு வயல் எல்லாம் வடிகால் பகுதி எல்லாம் போச்சு. கண்டுக்கவே வேண்டாம். அப்புறம் இருக்கற பச்சை எல்லாம் கல்லூரிகளாகவும் பில்டிங்காகவும் ரியல் எஸ்டேட்டாவும் போயிடும்..கடவுளே நாஞ்சில் கிராமங்கள் தோவாளைப்பகுதி இவங்க கண்ணுல படாம....அந்த பச்சையும் தண்ணியும் கண் பட்டு பட்டுப் போகாம, கண் திருஷ்டிப்படாமல் இருக்கணும்!
கீதா
என்னை மட்டும் க்யூவைத் தாண்டி, உள்ள விட்டுவிடு, மத்தவங்கள்லாம் வரிசைப்படிதான் வரணும், என் நிலத்தை plot போட்டுக்குங்க, ஆனால் மத்தவங்கள்லாம் விளைநிலத்தை விற்பதைப் பற்றிக் கவலைப்படுவது, ஏன்.. என் வீட்டுக் குப்பையை வெளில போட்டுட்டு, மத்தவங்கள்லாம் கரெக்டா குப்பைத் தொட்டில போடணும் என்று எதிர்பார்ப்பது போன்றுதான் நம் மக்களின் எண்ணம் இருக்கு. அப்புறம் எப்படி மாற்றம் வரும்?
நீக்குதிருக்குறுங்குடில, மக்கள் குப்பையை தெருவில் போடுவதில்லை. 500 ரூபாய் fine. எங்க குழுவில், ஒருவர் தவறுதலாக, நல்லது செய்யறோம்னு, உணவு/சமையல் குப்பைகளை, கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருந்த சந்தில் மறைவாகப் போட்டுட்டு வந்தார், இதைப் பார்த்துவிட்ட குழுத் தலைவர், வேகவேகமாகச் சென்று அந்தக் குப்பைகளை அள்ளி, தனியான அதற்கு உரிய இடத்தில் குப்பை டப்பாவுடன் வைத்துவிட்டார். இப்படியெல்லாம் awareness மக்களுக்கு இருந்தால் (fine காரணமாக ஆனாலும்) அதில் கிடைக்கும் சந்தோஷம் அளப்பரியது. இதையெல்லாம் முதலில் சென்னையில் செய்யாமல், சிங்கப்பூராக மாறும், சந்திரன் மாதிரி மாறும் என்று வெறும் வாயில் வடை சுடுபவர்களுக்குத்தான் காலமாக இருக்கிறது. சம்பந்தமில்லாத ஒரு செய்தினாலும் இன்று படித்ததைப் பகிர்கிறேன் (உங்களுக்குத் தெரிந்திருக்கும்).
அவரது 67வது வயசுக் கொண்டாட்டத்திற்காக, ஒரு கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதியும், அவர் வரணும் என்பதற்கான உத்திரவாதமும் பெற்றுக்கொண்டனர். காமராசரை நன்றாகப் பார்க்கணும் என்று ஒருவன் பக்கத்தில் எலெக்ட்ரிக் கம்பத்தில் ஏறி அங்கிருந்து பார்த்தானாம். காமராசர் சிரித்துக்கொண்டே கீழ வரச்சொன்னாராம். அவனும் சந்தோஷப்பட்டு அவரிடம் சென்றபோது பளார் என்று கன்னத்தில் விட்டாராம். அட மடப்பயலே..இந்த 67 வயசுக்கிழவனுக்காக உன் வாழ்க்கையைப் பணயம் வைக்கறயே.. நீ விழுந்துவிட்டால், உன் குடும்பத்துக்கு எவ்வளவு கஷ்டம் என்று யோசிக்கவேண்டாமா என்றாராம்
திருக்குறுங்குடில, மக்கள் குப்பையை தெருவில் போடுவதில்லை. 500 ரூபாய் fine.//
நீக்குஹை சூப்பர்!!! சூப்பர்!! வாழ்க நம்பி!!
திருவண்பரிசாரத்துல குப்பையைப் பார்த்திருப்பீங்களே! ஒரு வேளை நெல்லை வரார்னு ஊர்ல குப்பைய மறைச்சு வைச்சிருந்தாங்களோ என்னவோ?
// இப்படியெல்லாம் awareness மக்களுக்கு இருந்தால் (fine காரணமாக ஆனாலும்) அதில் கிடைக்கும் சந்தோஷம் அளப்பரியது.//
டிட்டோ..
எங்கூர்ல சொல்லிவிட்டு வந்தேன்.
காமராஜர் தலவைர்!!!! நீங்கள் சொன்னதையும் வாசித்திருக்கிறேன். இப்போதெல்லாம் அப்படியான தலைவரை எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. எதிர்பார்த்தால் நாம் தான் முட்டாள்கள். முதல் பாராவை யும் டிட்டோ..
கீதா
//என்னை மட்டும் க்யூவைத் தாண்டி, உள்ள விட்டுவிடு, மத்தவங்கள்லாம் வரிசைப்படிதான் வரணும், என் நிலத்தை plot போட்டுக்குங்க....//
நீக்குநெல்லை.. முதல் பாரா பொது மனித பலவீனம்!
அன்பின் ஸ்ரீராம்..
பதிலளிநீக்குதாங்கள் அனுப்பிய பதிலை இது வரையிலும் மின்னஞ்சல் தரவில்லை..
இணைய வேகத்தில் இது ஒரு பிரச்னை..
வாழ்க நலம்..
வந்திருக்குமே...
நீக்குமுதல் பாடல் - வரிகள் கேட்ட மாதிரியே இல்லை. நல்லாவும் இல்லை. பிறகு பாடலைக் கேட்டேன். நன்றாக இருக்கு. Picturizationக்கு மெனெக்கெட்டிருக்கார்.
பதிலளிநீக்குஇரண்டாவது பாடல் மிகவும் ரசிக்கக்கூடிய பாடல்.
இரண்டு பாடல்களுமே சுவை நெல்லை. பயணங்கள் இனிது முடிந்ததா?
நீக்குபயணம் முடிந்து இன்று வீடு வந்து சேர்ந்தேன். சாப்பிட்ட பிறகு, 6 மணி நேரத்துக்கு மேல் தூங்கினேன். நாளையிலிருந்து என்னுடைய ரொட்டீன் வேலைகள் ஆரம்பிக்கணும்.
நீக்கு//நாளையிலிருந்து என்னுடைய ரொட்டீன் வேலைகள் ஆரம்பிக்கணும்.// அதாவது மற்றவர்களை கலாய்த்தல், அப்படித்தானே? :)
நீக்கு:)))))))
நீக்குஹாஹாஹா பானுக்கா நாளைலருந்து எங்க? இன்னிலருந்தே தொடங்கியாச்சே!! ஹாஹாஹா
நீக்குகீதா
அதுக்கு நேரம் மிக்க் குறைவு பானுமதி மேடம். நான் அசைன்மென்ட் எழுதணும் (படிச்சு, ரெஃபர் பண்ணி). இன்னும் பதினைந்து நாட்களுக்குள். (திவ்யப்ப்ரபந்தம்). சிலவற்றை இனித்தான் படித்துப் புரிந்துகொள்ளணும். பத்து நாட்கள் யாத்திரையில் போய்விட்டது. (ஹையா ஜாலி தப்பித்தோம் என எனக்குக் கேட்பது அனைவரின் குரஙாகத் தெரிகிறதே)
நீக்குதொடர்கதை எழுதினது யார் என்று நான் ஒருத்தன்தான் சரியாச் சொல்லியிருந்தேன். மற்றவர்கள் பிறந்தால் ஆண், இல்லைனா பெண், தப்பினா திருநங்கை என்ற ரீதியில் அடிச்சுவிட்டிருந்தாங்க.
பதிலளிநீக்குஇதுல உள்ளூர் ஓட்டப் பந்தயத்துல பார்வையாளர்களுக்கும் பரிசு கொடுப்பதுபோல (சோப்பு டப்பான்னாலும்) நீயும் நல்லா ஓடின என்று இழுத்துவச்சுப் பரிசு கொடுப்பது நல்லாவா இருக்கு?
இதை ஶ்ரீராம்கூட கேட்காம விட்டுட்டாரே
//இதை ஶ்ரீராம்கூட கேட்காம விட்டுட்டாரே//
நீக்குஆ......
ஆ.. ஆ!..
நீக்குகர்ர்ர்ர்ர்ர் நெல்லை இப்ப என்னன்றேன் உங்களுக்கு?!!!!!!
நீக்குபங்கு பெற்றவங்களுக்குக் கொடுத்தா என்னன்றேன்!!! உங்களுக்கு வேணா கூட 2 கௌ அண்ணாவ கொடுக்கச் சொன்னா போச்சு!!! தருமி ஸ்டைல்ல கொஞ்சம் குறைச்சு எங்களுக்குப் போட்டுக் கொடுங்கன்னு சொல்லிக்கறோம்.......ஹாஹாஹாஹா...ஏதோ பிள்ளைங்க இம்புட்டாவது பங்கெடுத்துருக்கேன்னு சந்தோஷ்மா ஒரு ஊக்கப் பரிசா அவங்க கொடுத்தா உங்களுக்கென்னன்றேன்..!!
எப்பவுமே க்ளாஸ்ல கொஞ்சம் பின்னாடி இருக்கறவங்களதான் ஊக்கப்படுத்தி தட்டிக் கொடுக்கணுமாக்கும்!!!! ஹாஹாஹாஹா
கீதா
//பங்கு பெற்றவங்களுக்குக் கொடுத்தா என்னன்றேன்!!!// - அப்படி இல்லை கீதா ரங்கன். தனிப்பட்ட முறைல இந்த முறை பிடிக்கலைனு சொல்றேன். பரீட்சைல, எல்லோருக்கும் முதல் மதிப்பெண் கொடுத்துவிட்டால், அதற்கு அப்புறம் எந்தக் குழந்தையாவது படிக்கும்னு நினைக்கறீங்க?
நீக்குஎல்லோருக்கும் பரிசு என்று அறிவிக்கவில்லை. கதை எழுதியவர் பெயரை அடித்துச் சொன்னவருக்கும், துவைத்துச் சொன்னவர்களுக்கும் மட்டுமே கொடுக்க இருக்கிறோம். தவறாக சொன்னவர்களுக்கு நான் சொல்லும் பரிசு (இந்தத் தலைப்பிற்காக ) கிடையாது. வேறு வகையில் கிடைக்கலாம். நாளைய பதிவில் விவரங்கள் வரும்.
நீக்குநெல்லை மார்க் ஆங்கிள்ல நான் சொல்லலை நான் சொன்னது ஜஸ்ட் ஊக்கப்படுத்தல்...தட்டிக் கொடுத்தல்...நீங்கள் சொன்னதைத் தவறு என்றெல்லாம் சொல்லலை!!!
நீக்குகீதா
கதை எழுதியவர் பெயரை அடித்துச் சொன்னவருக்கும், துவைத்துச் சொன்னவர்களுக்கும் மட்டுமே கொடுக்க இருக்கிறோம்.//
நீக்குஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன்...
நெல்லை அலசிப் பிழிஞ்சிருந்தார்!!!! ஹப்பா கௌ அண்ணா காயப்போட்டு, நெல்லையிடமிருந்து காப்பாற்றியதற்கு மிக்க நன்றி!!! ஹாஹாஹா
கீதா
:))
நீக்கு@ திரு.நெல்லைத் தமிழன்..
பதிலளிநீக்கு// காமராஜரை ஏழைப் பங்காளன்னு சொல்ற தகுதி அருகதை விருதுநகர், சிவகாசியைச் சேர்ந்தவங்களுக்கு இருக்கா என்ன?..//
தங்களது கருத்தினை வரவேற்கின்றேன்..
நெல்லை ஜெபமணி, கிராமணியார் என்று பல நல்லவர்களை 'முதல் வேலையா' அரசியல் அட்ரஸ் இல்லாமல் செய்தது இந்த மக்கள்தான். அப்புறம் அவங்க, ஆட்சியாளர்களைக் குறை சொல்ல என்ன அருகதை உண்டு துரை செல்வராஜு சார்? இவங்களுக்கு நல்ல அரசியல்வாதிகள் வேணும், ஆனால் தாங்கள் தேர்ந்தெடுத்து வாக்களிப்பது "...." களுக்கு. அப்புறம் எப்படி மாற்றம் வரும்?
நீக்குரூட்டுல.. ரோட்டுல..
பதிலளிநீக்குநாட்டுல.. காட்டுல..
முதல் பாட்டு பிடிப்பதேயில்லை.
ஹா.. ஹா.. ஹா... எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
நீக்குஓ.. வண்ணத்துப் பூச்சி..
பதிலளிநீக்குஇசை மனதை அள்ளிக் கொண்டு போகும்.. ஆனால் பாடல் வரிகள் தெரியாது...
ஆம், மிக மென்மையான பாடல்.
நீக்குகவியரசர் எழுதிய பாடல்கள் எத்தனை.. எத்தனை!..
பதிலளிநீக்குஅதில் இந்த மாதிரி வார்த்தை எத்தனை பாடல்களில்?..
இந்த மாதிரி கோஷ்டி தலையெடுத்ததும் -
வடகம் கடகம்
விரகம் நரகம்!..
அடக் கஷ்டமே!..
வாலி சளைத்தவரல்ல துரை செல்வராஜூ ஸார்..
நீக்குஇந்தப் பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள்.. எளிமையான சுவாரஸ்யம். வயசுப்பையன் மனம் கவர்ந்த பெண்ணுக்கு அவள் பாதுகாப்புக்காக அவள் கூட செல்கிறான். அவள் அவனை ஒதுக்குவது கண்டு வேதனை... "வானமும் மேகமும் உன் கூட வரலாம், நான் வரக்கூடாதா? என்ன நியாயம் இது?; என்று கேட்கிறான்... சுவாரஸ்யம்.
@ அன்பின் நெல்லை..
பதிலளிநீக்கு// உள்ளூர் ஓட்டப் பந்தயத்துல பார்வையாளர்களுக்கும் பரிசு.. //
என்ன ஒரு நகைச்சுவை..
ஆனாலும் வேற வழி!?..
இல்லை, இது வேற மாதிரி...
நீக்கு
பதிலளிநீக்குசாந்த மீனா பாஸ்கர் மகள். மோகன் ஷர்மா கல்யாணத்திற்கு முன்பே லட்சுமிக்கு மகள் உண்டு
முதலில் மோகன் ஷர்மா, அப்புறம் பாஸ்கர், அப்புறம் சிவச்சந்திரன்... வரிசை சரிதானே?
நீக்குதப்பு. முதலில் பாஸ்கர். ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்யாணம். லக்ஷ்மியின் திடீர் திரை உலகப் பிரவேசத்தால் தள்ளிப் போனது. அதன் பிறகு ஒரு மலையாளப்படத்தில் மோகனைக் காதலிக்கும் ஒரு கிறிஸ்தவப்பெண்ணாக நெருக்கமாக நடித்த லக்ஷ்மிக்கு மோகனோடு தவறான பழக்கம் ஏற்பட அதைக் கண்டித்த பாஸ்கரை விவாகரத்து செய்துவிட்டு மோகனை மணந்தார். பின்னர் அவரிடமும் மன வேற்றுமை/ அப்போது சாந்த மீனா என்ற ஐஸ்வர்யா குழந்தை தான். அதனால் மோகன் தான் தன் தகப்பன் என்றே நினைத்திருந்தார். அவருடைய பருவ வயதில் தான் மோகனையும் விவாகரத்து செய்துவிட்டு சிவச்சந்திரன். ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் நடந்து ஒரு பேத்தியும் பிறந்த பின்னர் லக்ஷ்மி ஓர் பெண் குழந்தையைத் தத்து எடுத்தார். ஐஸ்வர்யா கோவித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் நடந்தவை வெள்ளித்திரையில். ட்ட்ட்ட்டட்ட்ட்ட்ட டய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்!
நீக்குஎன்ன கீசா மேடம்... பாதி சொல்வோம் மீதி என்ன? என்ற பாணியில் எழுதியிருக்கீங்க? ஐஸ்வர்யா கதையையும் அவர் தப்பித்து வந்ததையும் எழுதலையே
நீக்குஅதான் மீதி வெள்ளித்திரையில் காண்க! என்று சொல்லி இருக்கேனே! :)))))
நீக்குஜான் கென்னெடி விக்டர்//
பதிலளிநீக்குவிக்ரம் என்று சினிமாவுக்காகப் பெயர் மாற்றப்பட்டது இல்லையா?
பெயர் பார்த்ததுமே தெரிந்துவிட்டது. சினிமா தகவல்கள் இப்போதுதான் முழுவதும் வாசிக்கிறேன். //என் காதல் கண்மணி// தான் அவருக்கு முதல் படமா? தகவல் எனக்கு!!
கீதா
மோகன் ஷர்மா - யாராகுடிப்பாடி வேங்கடமஹாலக்ஷ்மியின் பெண் சாந்த மீனா//
நீக்குஐஸ்வர்யா தானே?! அவங்க பாஸ்கரோட - லக்ஷ்மி பொண்ணு.
ஸ்ரீராம், இன்று எல்லாரோடயும் ஒரிஜினல் பெயர் போட்டிருக்கீங்க போல!!!
இந்த மோஹன் ஷர்மா ஒரு யுட்யூப் சானல் கூட நடத்துகிறார் - சமையல்-கேரளத்து சமையல்! பாலக்காட்டுக்காரர்!
கிராமம்-நம்ம கிராமம் நு ஒரு படம் கூட இயக்கி அதில் நடித்தும் இருக்கிறார். இதெல்லாம் லேட்டஸ்டா தெரிஞ்ச விஷயம்.
கீதா
எல்லோருக்கும் புரியும் என்று விளக்கம் சொல்லவில்லை!!
நீக்குமீரானு பி.சி.ஶ்ரீராம் இயக்கத்தில் படம் வந்தது தெரியும். ஆனால் எனக்கு பி.சி.ஶ்ரீராம் என்றால் உடனே அவர் மகள் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தது தான் நினைவில் வருது. இப்போதெல்லாம் "மதன்"பெயரைப் படித்தால் அவர் மருமகன் மரணம் நினைவில் வருது.:(
பதிலளிநீக்குநாளையிலிருந்து எங்க கீசா மேடம், நல்லதை மட்டுமே நினைவுகூறுவார்.
நீக்குநல்லவேளை பாடகி சித்ராவின் குழந்தைக்கு நடந்ததையும் இங்க சொல்லலை. சாவி வாழ்வில் நடந்த அதிசயத்தையும் குறிப்பிடலை. பாலசந்தர் குழந்தைக்கு நடந்ததையும் சொல்லலை
:))))
நீக்குதப்புத்தப்பா ஞாபகம் வச்சுக்கறீங்க கீதா அக்கா...!!!!! மதன் என்றால் ஜோக்ஸ், லட்சுமி என்றால் மெச்சூர்ட் நடிப்பு...
நீக்குநாளையிலிருந்து எங்க கீசா மேடம், நல்லதை மட்டுமே நினைவுகூறுவார்.//
நீக்குகர்ர்ர்ர்ர்ர் நெல்லை ...இத மட்டும் சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே கூடவே கீழ இது எதுக்கு?
//நல்லவேளை பாடகி சித்ராவின் குழந்தைக்கு நடந்ததையும் இங்க சொல்லலை. சாவி வாழ்வில் நடந்த அதிசயத்தையும் குறிப்பிடலை. பாலசந்தர் குழந்தைக்கு நடந்ததையும் சொல்லலை//
நீங்க அதையும் சொல்லிட்டு இதையும் கீதாக்காவுக்கு எடுத்துக் கொடுக்கறீங்க!! இதுக்குப் பெயர் என்ன தெரியுமா?!!!!! ஹாஹாஹா
கீதா
பாடகி சித்ராவின் குழந்தைக்கு நடந்ததை நினைத்து அழுதிருக்கேன். உண்மையாவே! சாவி வாழ்வில் நடந்தது இறை அருளால் நடந்த அதிசயம். பாலசந்தர் குழந்தைக்கு நடந்தது குறித்து எதுவும் தெரியாது. :)
நீக்குஇதைப்பற்றி நான் நிறைய யோசித்திருக்கேன். இறைவன் கொடுக்க நினைக்கலை. வலிய எடுத்துக்கொண்டதையும் (அதாவது விதியை மீறி) இறைவன் ரசிக்கவில்லை என்றே நினைத்தேன்.
நீக்குஎல்லோருக்கும் சூப்பர் சிங்கரில் சித்ராவின் புன்னகை சந்தோஷ முகம் தெரித்திருக்கும். என் பெண் ஆறு வயதாக இருந்தபோது சென்னை விமான நிலையத்தின் உள், பாடகி சித்ராவைப் பார்த்து, என் பெண்ணுடன் அருகில் சென்று பேசியபோது அவரின் சிடு சிடுத்த குணம் தெரியவந்தது. வெளியில் பார்ப்பது வேஷம் என மனதில் தோன்றியது.
நீக்குஅன்னிக்கு இருந்ததை மட்டும் வைத்துச் சொல்ல முடியாது நெல்லை, அவங்களுக்கு என்ன மனக்கஷ்டமோ!
நீக்குஅனைவருக்கும் வணக்கம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! எல்லா வகையிலும் நம்பிக்கை தரும் ஆண்டாக அமைய வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குவணக்கம். வாங்க... நன்றி.
நீக்குஇரு பாடல்களில் இரண்டாவது பாடல் கேட்டதுண்டு. படம் பற்றி இப்போதுதான் அறிகிறேன். இப்படி ஒரு படம் வந்ததும் தெரியாது.
பதிலளிநீக்குமுதலாவது பாடலும் இப்போது கேட்டேன். நன்றாக இருக்கிறது. இரு பாடல்களையும் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி
நடிகர்கள், நடிகைகள் பெயர் முதலில் பிடிபடவில்லை. கொஞ்சம் நேரம் யோசித்ததும் புரிந்துவிட்டது, யாரென்பது.
துளசிதரன்
ஹிஹிஹி.. சும்மா ஜாலிக்கு.. நன்றி துளஸிஜி.
நீக்குமுதல் பாடல் கேட்ட நினைவு இல்லை. இரண்டாவது பாட்டு நிறைய முறை கேட்டிருக்கிறேன். எஸ்.பி.பியின் குரல் கிடார் கம்பியின் மீட்டலைப் போல ஒலிக்கிறது.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்குஸ்ரீராம் முதல் பாட்டும் நல்லாருக்கு. ஆமாம் ரொம்ப மேலும் இல்லை கீழும் நோட்ஸ் இல்லை மத்தியமாவே போகிறது. இப்போது இப்பாடல்தான் மனதில் ஓடுகிறது! வேறு ஒரு பாடலையும் நினைவு படுத்துகிறது இந்த ட்யூன் ஆனால் வழக்கம் போல வார்த்தைகள் நினைவுக்கு வரவில்லை.
பதிலளிநீக்குகீதா
உங்க பின்னூட்டம் சூப்பர். நாங்க எல்லாரும் மியூசிக் காலேஜ்ல படித்து குறைந்தபட்சம் பி ஏ. மியூசிக் பட்டம் வைத்திருப்பதுபோல நினைத்துக்கொள்கிறீர்களே.. அது அதைவிட சூப்பர்
நீக்கு