இந்தத் திருமணத்தில் ஒரு சிரிப்பான நிகழ்வு. ஒவ்வொருவரிடமும் சொல்லும்போதும் நானும் பாஸும்தான் தாரை வார்த்துக் கொடுப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருந்தேன். யாரும் ஒன்றும் திருத்தவில்லை. .
கீதா அக்காவிடம் சொல்லும்போது அவர்தான் திருத்தினார். நீங்கள் தாரை வாங்குகிறீர்கள். நீங்கள் மணமகன் பக்கம். மணமகளைத்தான் தாரை வார்த்துக் கொடுப்பார்கள் என்று.. அதுவரை நானும் தவறாகத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் திருத்திக் கொண்டேன்!
இந்த நாகவல்லி பானை ஒன்றை வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டால் திருமணம் தாமதம் ஆகும் நபர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆகும் எங்கிற நம்பிக்கை ஒன்று உண்டு. நாங்களும் ஒன்று வாங்கி வைத்துக் கொண்டோம்.
நாங்கள் நாலரைக்கு முன்பே கிளம்புவோம் என்று சொல்லி இருந்தது நடக்காது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆறு மணிக்கு மேல்தான் கிளம்புவோம் என்றும் ஒரு சம்சயம் எங்களுக்கிருந்தது. . அதற்குக் காரணம் பேக் செய்யப்பட வேண்டிய ஏராளமான பொருட்கள். திருமணநாள் முழுவதும் மழை இல்லை என்பது ப்ளஸ். திருமணம் முடிந்த அன்றே கிளம்பினாலும், கட்டுசாதம் கட்டிக் கொடுத்து விட்டார்கள்.
சிடுசிடு என்றிருந்த எங்கள் பஸ் டிரைவர் டிரைவர் இந்த இரண்டு நாளில் என்மேல் செம அன்பாகி விட்டார்!! எல்லோருமே செய்யக்கூடியதுதான் நானும் அல்லது நாங்களும் செய்திருந்தோம். நேரத்துக்கு அவரை அழைத்துச் சாப்பிடச் சொன்னது எங்களுடனேயே அமரவைத்து சாப்பிடச் சொன்னது என்று செய்ததில் நெகிழ்ந்து 'அப்பா அப்பா' என்று அழைக்க தொடங்கினார். அதை அவரே சொல்லிய பின்தான் தெரியும். அதுவரை மெட்றாஸ் பாஷையில் 'ப்பா' போட்டு பேசுகிறார் என்று நினைத்திருந்தேன்! ஒருபக்கம் இதைதான் அவர் எல்லா பயணங்களிலும் எல்லோரிடமும் சொல்வார் என்று வந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியவில்லை!
பஸ்ஸில் ஏற்றும்போது நம் லக்கேஜ்களை எண்ணி வைக்க வேண்டுமே.. எண்ணினால் எனக்கு மறந்து போகும் என்று படம் எடுத்து வைத்துக் கொண்டேன்!
நாங்கள் மட்டும் வந்த பஸ்ஸில், எங்கள் வீட்டுக்கு ஒரு மஹாலக்ஷ்மியையும் அழைத்துக்கொண்டு திரும்பினோம். அந்நாளில் மழை இல்லை, பாதை சரியாகி விட்டது என்று என்று மதியம் முதலே சொல்லிக் கொண்டிருந்ததால் அந்த வழியிலேயே வந்தோம். ஆனால் எங்கள் நேரம் வழியில் ஒரு தடை காத்திருந்தது. திருவாலங்காடு அருகில் முன்னர் சொன்ன டைவர்ஷன் இருந்தது. அதில் திரும்பி பத்து நிமிடம் ஆகியிருந்திருக்கும். சாலையில் நீண்ட கியூ.
எல்லா வண்டிகளும் நின்றிருக்க, சற்று காத்திருத்தலுக்குப் பின் என்ன காரணம் என்று அறிய இறங்கி முன்னே சென்றால் சாலை மறியல்! காலை வெள்ள நிவாரணம் கேட்டு நடந்த சாலை மறியலில் ஒரு குறிப்பிட்ட குழுவின் தலைவரை கைது செய்து விட்டார்கள் என்றும், எனவே சாலை மறியல் என்றும், வெள்ளநிவாரணம் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு கிடைக்கவில்லை, எனவே சாலை மறியல் என்றும் சொன்னார்கள். சம்பவம் நடந்த இடம் சந்தை வேறு. சாலையிலேயே இருபுறமும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக கடைகள். சுமார் அரை மணியில் போக்குவரத்து நகர ஆரம்பித்தாலும், இந்த சந்தை, மக்கள் நடமாட்டம் காரணமாக மேலும் தாமதம். ஒன்றரை மணிநேர பிரயாணம் என்பது மூன்று மணி நேர பிரயாணமானது. அரக்கோணம் சுற்றி வந்திருந்தால் கூட முக்கால் மணி நேரம் முன்னதாகவே வந்திருப்போம். கட்டு சாதம் கொடுத்திருந்ததால் இரவு அதைச் செலவு செய்தோம்.
பயணத்தின்போது, போக்குவரத்துத் தடையில் காத்திருந்த நேரத்தில் டிரைவருக்கு ஃபோன் வந்தது. அவர் மனைவி பேச, அவர் இவரை 'சாப்பிட்டியா' என்று கேட்டிருப்பார் போலும். அப்போதுதான் அவர் "என்னை இங்கே உனக்கெல்லாம் மேலே பார்த்துக் கொண்டார் ஒருத்தர்" என்று சொல்லி என்னைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு "அப்பா.. வொய்ஃப் கிட்ட உங்களைத்தான் சொல்கிறேன்" என்றார். விடைபெறும்போது காசு அதிகம் கேட்கப் போகிறார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்!
அப்புறம் அவர், அவர் தொழில் ரகசியங்கள் சிலவும் சொன்னார். நான் ஒரு ஏஜென்சியிடம் சொல்லிதான் பஸ் ஏற்பாடு செய்தேன். ஆரம்பத்தில் அவர் கேட்ட தொகை சற்றே தலைசுற்றியது. கிளம்ப வேண்டிய நாளுக்கு முதல் நாள் அதில் சட்டென ஐந்தாயிரம் குறைத்தார். நான் சுதாரித்து, "எனக்கு உண்மையான ரேட் தெரியும். இன்னும் குறைக்கணும் நீங்க.. நான் பணம் செட்டில் செய்யும்போது பேசறேன்" என்று சொல்லி இருந்தேன். நான் இல்லாதபோது தனியே வந்து பேசச்சொல்லி அந்த ஏஜென்சிக்காரர் சொல்லி இருப்பதாகப் போட்டு உடைத்த டிரைவர், இதற்கு உண்மையாய் எவ்வளவு ஆகும், அவர் எவ்வளவு கூட கேட்கிறார், தனக்கு எவ்வளவு கொடுப்பார் என்றெல்லாம் பேசினார். அநியாயமாய் இருந்தது.
நான் மிச்ச பணத்தை செட்டில் செய்யும்போது ஏஜென்சிக்காரரிடம் "உங்கள் பெயருக்கு ஜி பே போக மாட்டேன் என்கிறது.. என்ன செய்ய?" என்று கேட்டு அவர் சொன்னபடி, டிரைவர் பெயருக்கு பணம் அனுப்பினேன். இப்போது டிரைவர் தான் எவ்வளவு எடுத்துக் கொள்ள முடியும் என்பதை அவரே தீர்மானித்து, எடுத்துக்கொண்டு, அவருக்கு மிச்சம் அனுப்ப முடியும். ஏனென்றால் மொத்தம் நான் எவ்வளவு கொடுத்திருக்கிறேன் என்பது டிரைவருக்கும் தெரியும் என்றாவதால். நானும் இன்னும் மூவாயிரம் குறைத்துக் கொண்டேன். 'அரக்கோணம் எல்லாம் சுற்றியதால் அதிக பணம் கொடுக்கவேண்டும்' என்றவரிடம், 'அதனால்தான் மூவாயிரம் கூட கொடுக்கிறேன். இல்லாவிட்டால் இது கொடுக்கவே கூட தேவை இல்லை' என்றதும் அவர் கப்சிப்பானது டிரைவர் சொன்னதை ஊர்ஜிதப்படுத்தியது.
இப்படியாகத்தானே எங்கள் வீட்டுக் கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது! எங்கள் இல்லத்தில் ஒரு தேவதையின் ப்ரவேசம் நடந்தது.
சென்னை வந்து இரண்டு நாளில் சென்னையில் ஒரு மண்டபத்தில் ஒரு திருமணம் அட்டென்ட் செய்தோம், நானும் பாஸும். மண்டபம் மிக அழகாய் இருந்தது.
மேடையேறும் பொறுப்பில்லாமல் சும்மா விருந்து மட்டும் உண்ணுவதில் புதிய சுகம் தெரிந்தது.
காலை அங்கு பரிமாறப்பட்ட சிற்றுண்டி! முதலில் பரிமாறப்பட்ட அசோகாவை கபளீகரம் செய்த பின்தான் போட்டோ எடுக்கும் எண்ணம் வந்தது! கப்பில் இருப்பது காஃபி அல்ல, சாம்பார்! இதன்பின்னர் சுடச்சுட பூரி வேறு வந்ததது! ஆனால் சுவையின் சுவாரஸ்யத்திலும் அதை மட்டும் எடுத்தால் நன்றாய் இருக்காது என்பதாலும் உண்பதில் கவனமானேன்!
'கல்யாணம் செய்துபார்' என்று சும்மாவா சொன்னார்கள்! இப்படி விருந்தினராய் சென்று மொய் வைத்துவிட்டு சாப்பிட்டு வருவது சுகம்தான், என்ன சொல்கிறீர்கள்?!
========== ========================== ======================== =======
ஒரு சின்னஞ்சிறு மின்னம் மினி கதை... எழுதியது ஸ்ரீராம்...ஸ்ரீராம்.. ஸ்ரீராம்...
தலைப்பு என்ன வைக்கலாம்? என் மனதில் ஒரு தலைப்பு இருக்கிறது.
"தேவகாந்தாரி பாடவும்"
துண்டு சீட்டில் வந்திருந்த வரிகளை படித்ததும் நிமிர்ந்து பார்த்தார் அப்போதுதான் 'கொலுவையுன்னாடே' என்று பாடி முடித்திருந்த பாடகர்.
எதிரே அந்த பிரபல விமர்சகர் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.
==========================================================================================================
அனைவருக்கும் 'ஹெல்த் பாலிசி' எடுங்கள்!
யார், எவ்வளவு தொகைக்கு மருத்துவ காப்பீடு எடுக்க வேண்டும் என ஆலோசனை கூறும், நிதி ஆலோசகர் சிவகாசி மணிகண்டன்:
'கோவிட் - 19' பாதிப்பு அனைவரது மத்தியிலும் மருத்துவ காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. திடீர் மருத்துவ செலவு வரும் போது உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்குவர். அந்த கடனிலிருந்து மீண்டு வர, பல ஆண்டுகள் ஆகின்றன. சேமிப்பையும், முதலீட்டையும் அவசர மருத்துவ செலவுக்கு பயன்படுத்துபவர்கள் மீண்டும் அந்த சேமிப்பையும், முதலீட்டையும் சேர்க்க பல ஆண்டுகள் பாடுபட வேண்டியிருக்கிறது. பலர், தனக்கு மட்டும், 'ஹெல்த் பாலிசி' எடுத்து விட்டு, வீட்டில் இருக்கும் குடும்ப தலைவி, பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தேவையில்லை என்று நினைத்து, எடுக்காமல் விட்டு விடுகின்றனர். மனைவி அல்லது பிள்ளைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டால், செலவு செய்யப்போவது குடும்ப தலைவர் தான் என்பதை நினைவில் வைத்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரது பெயரிலும் ஹெல்த் பாலிசி எடுக்க வேண்டும். விபத்து, நோய் பாதிப்பால் சில சமயங்களில் தற்காலிக அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த நிலைமையை சமாளிக்கவும், மருத்துவ பாலிசிகள் இருக்கின்றன. உடல் நலம் பாதிப்பால் சிறிது காலம் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், சம்பள இழப்பையும் சில பாலிசிகள் ஈடு செய்யும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது, இதர செலவுக்கு தேவையான தொகை, தீவிர நோய்க்கான சிகிச்சை போன்றவற்றுக்கும் இருக்கின்றன. அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்ளலாம். எவ்வளவு தொகை, 'பிரீமியம்' கட்ட முடியுமோ, அந்த அளவு தொகைக்கு பாலிசியை எடுத்துக் கொள்வது நல்லது.பாலிசியின் நிபந்தனையை பொறுத்து, குறைந்தபட்சம் 24 மணி நேரம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே 'க்ளெய்ம்' கிடைக்கும்; எனவே, பாலிசியின் நிபந்தனைகளை சரியாக பின்பற்றுவது மிக முக்கியம்.அனைத்து செலவுகளுக்கும் மருத்துவ காப்பீட்டில் இழப்பீடு கிடைக்காது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் செலவு தொகை அனுமதிக்கப்படும். உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்க்கு மருத்துவமனையில் பாலிசி எடுத்து, சிறிது காலத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் க்ளெய்ம் கிடையாது. ஆனால், நிபந்தனைக்கு உட்பட்டு சில பாலிசிகளில் ஏற்கனவே உள்ள நோய்க்கு பாலிசி எடுத்து, சில ஆண்டுகள் கழித்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், க்ளெய்ம் பெற முடியும்.பாலிசி விபர புத்தகத்தில் எந்தெந்த சிகிக்சைக்கு எல்லாம் இழப்பீடு கிடைக்கும், கிடைக்காது என்கிற பட்டியல் இருக்கும். அதை முன்கூட்டியே அறிந்து பாலிசி எடுப்பது நல்லது!
தினமலரிலிருந்து....
=================================================================================================================================
சிலர் கிண்டலடித்து சிரிக்கவும், சிலர் மனப்பூர்வமாக ரசிக்கவும்...!!
===========================================================================================================
திருப்பரங்குன்றத்தில் பார்த்த காட்சியைப் படமெடுத்து இப்படித் தலைப்பிட்டுப் போட்டிருந்தேனா..
அதற்கு ஜவர்லாலின் கமென்ட்...!
====================================================================================================
மத்யமரில் அவரவர் பெயர்க் காரணம் பற்றி எழுதிக் கொண்டிருந்தார்கள். பானு அக்கா கூட ஒரு போஸ்ட் போட்டிருந்தார். நான் முதலில் எங்கள் தளத்தில் கொஞ்சம் விரிவாகவும், பேஸ்புக்கில் இப்படியும் பகிர்ந்திருந்தேன்...
காலை வணக்கம் எல்லோருக்கும்
பதிலளிநீக்குஸ்ரீராம்உங்கள் கதை கண்ணில் பட்டுவிட்டது முதலில்...என்ன தலைப்பு
கீதா
வணக்கம் கீதா.. வாங்க..
நீக்கு//ஸ்ரீராம்உங்கள் கதை கண்ணில் பட்டுவிட்டது //
படிக்க ஆரம்பிப்பதற்குள் முடிந்துவிடும்!
என்ன தலைப்பு வைக்கலாம்? சொல்லுங்கள்!
மகனோடு இதைச் சொல்லி பேசிக் கொண்டிருக்கிறேன்...
நீக்குஎன்னோடு அவனும் சிரித்து விட்டான்
அவனும் தலைப்பு யோசிக்கிறான்...
எனக்குத் தோன்றீய்து...நையாண்டி
கீதா
நக்கல் என்கிறான் மகன்
நீக்குகீதா
பாவம் பாடகர்!
நீக்குகீதா
ஓ.. என் கதை கடல்கடந்து சென்று விட்டதா?
நீக்குஆமாம் ....விமர்சகரே அனுப்பிவிட்டு!! சர்காஸ்டிக் புன்னகையுடன்??!!!
நீக்குசுப்புடு நினைவுக்கு வந்தார்!!
உங்கள் தலைப்பு என்னன்னு சொல்லுங்க ஸ்ரீராம் அப்புறம்....
கீதா
என்ன நினைத்தேன் என்பதை மறுபடி நினைவுகளில் தேட வேண்டும்!
நீக்குஎனக்கும் சுப்புடு தான் நினைவில் வந்தார்.
நீக்கு"தேவகாந்தாரி பாடவும்"
பதிலளிநீக்குதுண்டு சீட்டில் வந்திருந்த வரிகளை படித்ததும் நிமிர்ந்து பார்த்தார் அப்போதுதான் 'கொலுவையுன்னாடே' என்று பாடி முடித்திருந்த பாடகர்.
எதிரே அந்த பிரபல விமர்சகர் புன்னகையுடன் அமர்ந்திருந்தார்.//
ஹாஹாஹா
எல்லாருக்கும் புரியுமா ஸ்ரீராம்?
கீதா
புரியும்! சென்ற மாதம் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.
நீக்குஓ...ஓகே
நீக்குகீதா
கொலுவையுன்னாடே - தியாகராஜர் கிருதி - பைரவி ராகம்தானே?
நீக்குhttps://www.youtube.com/watch?v=07Jt6hK8vdk
நீக்குhttps://www.youtube.com/watch?v=07Jt6hK8vdk
https://www.youtube.com/watch?v=wSVatG3cTjk
தியாகராஜ கிருதிகளில் கொலுவையுன்னாடே கோதண்டபாணி என்னும் பல்லவியுடன் தொடங்கும் இரண்டு கிருதிகள் உள்ளன. ஒன்று பைரவி ராகம் மற்றது தேவகாந்தாரி ராகம். அதிக பிரபலமானது பைரவி ராக பாடல். இரண்டு கிருதிகளுக்கும் அனுபல்லவியும் சரணமும் வேறு.
நீக்குபல்லவியை மட்டும் குறிப்பிட்டதால் வந்த குழப்பம்.
ஆமாம் கௌ அண்ணா ...இரண்டும் இருக்கு...நான் கீழ சொல்லிவிட்டுவந்தேன்...
நீக்குகீதா
பேசாமல் எல்லோருக்கும் தெரிந்த 'க்ஷீரஸாகர சயனா' பாடலைக் குறிப்பிட்டிருக்கலாம். அந்த ஒரு பாடலைத்தான் சொல்ல வேண்டுமா என்று யோசித்து இந்தப் பாடலைச் சொன்னது வம்பாபோச்!
நீக்கு:)) நானும் அப்படி நினைத்தேன்!!
நீக்குஅம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி!
நீக்குமினி கதை செம...ரசித்தேன்
பதிலளிநீக்குசிந்துபைரவி படக்காட்சி கூடவே நினைவுக்கு வந்தது!!!
கீதா
அந்த நாலு வரி கதையை விட்டு இன்னும் வெளிவரவில்லையா கீதா?!!!
நீக்குஇப்ப வந்துவிட்டேன்...
நீக்குமகனோடு பேசிக் கொண்டே இங்கு தட்டினேன்
கீதா
அன்பின் ஸ்ரீராம், கீதா இன்னு வரப்போகும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். என்றும் ஆரோக்கியம் அமைதி நிறைந்திருக்க இறைவன் அருள வேண்டும்.
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குஸ்ரீராம் நீங்கள் தாரை வாங்குவதாகத்தானே எழுதியிருந்த நினைவு!
பதிலளிநீக்குகீதா
அது இப்போ... எல்லோரிடமும் சொல்லும்போது அப்படி சொல்லிக் கொண்டிருந்தேன்!!
நீக்குஹாஹாஹாஹா!
நீக்குகொலுவைஉன்னாடே கோதண்டபாணி
பதிலளிநீக்குதேவ காந்தாரி தானே.
அதையே பாடச் சொல்பவர் விமர்சகரா!!!
சரியாப் போச்சு.
:>))
நீக்கு"இந்த நாகவல்லி பானை ஒன்றை வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டால் திருமணம் தாமதம் ஆகும் நபர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆகும் எங்கிற நம்பிக்கை ஒன்று உண்டு. நாங்களும் ஒன்று வாங்கி வைத்துக் கொண்டோம்.
நீக்குஉங்கள் பக்க கல்யாணங்கள் அலங்காரத்தோடு அழகாக
இருக்கிறது.
யானைக் கோலம் மிக அருமை.இதற்கெல்லாம்
என்ன அர்த்தம் . மஞ்சள் யானை ஒன்று வெள்ளையானை ஒன்று. !!
உங்கள் பிரார்த்தனை நிறைவேறட்டும்.
நீக்குமணமக்கள் இருவரும் இந்தப் பக்கமும் அந்தப்பக்கமும் மாறி மாறி எதிரெதிரே நின்று கொண்டு உப்பு யானையையும் பருப்பு யானையையும் எக்ஸ்சேஞ் செய்து கொள்ளலாமா என்று கேட்கும் விளையாட்டு. அதெல்லாம் நாகவல்லி பொட்டு கட்டியபிறகு..
நீக்குகௌதம் அண்ணா, தேவகாந்தாரியிலும் பாடுவதுண்டு
நீக்குhttps://www.youtube.com/watch?v=Xcz6-TWKW70
http://www.shivkumar.org/music/koluvaiyunnade.htm
இரண்டாவது லிங்க் ஸ்வரமோடு இருப்பது நான் எடுத்து வைத்தது.
கீதா
கௌ அண்ணா ஆனால் வேறு வேறு தொடக்கம் ஒன்றே ஆனாலும் சரணம் வேறு
நீக்குபைரவி, தேவகாந்தாரி
கீதா
நாகவல்லி என் அப்பா வீட்டுக்கல்யாணங்களிலும் இடம் பெற்றிருக்கிறது. அத்தை கல்யாணத்தில் கூட இருந்ததாக அப்பா சொல்வார். ஆனால் அவரே பார்க்கலை. எனெனில் அத்தையின் முதல் பையர் அப்பாவை விடப் பெரியவர்! :)))) பின்னாட்களில் நாகவல்லி விடுபட்டு விட்டது. சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்.
நீக்குநாகவல்லி தமிழ் சம்பிரதாயங்களில் உண்டா என்று தெரியவில்லை. சில வீடுகளில் வழக்கமோ என்னவோ..
நீக்குஹிஹிஹி, நான் தான் எங்க குடும்பம் பூர்விகம் நர்மதை நதிக்கரையிலிருந்து வந்தவங்கனு சொல்லி அதைப் பற்றி ஒரு பதிவே போட்டிருக்கேனே! நினைவுக்கு வரலையா? அல்லது நீங்க படிச்சிருக்க மாட்டீங்க. அப்பாவோட கொள்ளுப்பாட்டியோ கேரள நம்பூதிரிப் பெண்ணாம். ஆகவே எங்க வீட்டில் யுகாதி, விஷுக்கனி, தமிழ் வருஷப்பிறப்பு எல்லாமும் உண்டு! :))))))
நீக்குகல்யாணத்தில் எடுத்த படங்கள் தரையில் உள்ள கோலங்கள் வித்தியாசமாக இருக்கின்ற்ன இதுவரை இப்படிப் பார்த்ததில்லை
பதிலளிநீக்குதுவரம் பருப்பு, உப்பு இவற்றில் ஃபில்லிங்க்!
கீதா
அது ஊரு சுவாரஸ்யமான விளையாடல் மற்றும் சம்ப்ரதாயம். நாகவல்லி என்று சொல்வார்கள்.
நீக்குஇந்த நாகவல்லி பானை ஒன்றை வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டால் திருமணம் தாமதம் ஆகும் நபர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆகும் எங்கிற நம்பிக்கை ஒன்று உண்டு. நாங்களும் ஒன்று வாங்கி வைத்துக் கொண்டோம்.//
நீக்குஇப்பதான் இங்கு வருகிறேன் ஹாஹாஹாஹா
பார்த்துவிட்டேன் விள்கக்ம. இங்கும் பதிவிலும்...
சீக்கிரமாக உங்கள் வீட்டிலும் கெட்டிமேளம் சத்தம் கேட்கட்டும்! நடக்கும்!
கீதா
நன்றி கீதா.
நீக்குஇந்த சம்பிரதாயத்தில் மாப்பிள்ளையையும் பெண்ணையும் வைத்து நடக்கும் விளையாட்டும் சுவாரஸ்யமாக இருக்கும்!
ஓ!!! சுவாரசியம்..பார்க்க எனக்கு சான்ஸ் கிடைக்கும்!!!!!
நீக்குகீதா
விரைவில் கிடைக்க பிரார்த்தியுங்கள்!!
நீக்கு//அண்டமாட்டம் காரணமாக// நடமாட்டம்?
நீக்கு//அது ஊரு// அது ஒரு?
ஆமாம், மன்னிக்கவும்!
நீக்குஸீ தேர், சா தேர் நல்ல சுவை.
பதிலளிநீக்குஆமாம்... ஜவஹர் டக்கென அடித்தார் ஒரு கமெண்ட்!
நீக்குநீங்கள் சொல்லி இருப்பதற்காகவே
பதிலளிநீக்குதில்லானா மோஹனாம்பாள் மீண்டும் பார்க்க ஆசை. அந்த ரயில் சீனில்
பாலையா, சிவாஜி அடிக்கும் லூட்டி.
இந்த நலம் தான பாடல்..சிங்கத்துக்கும் மிகவும் பிடிக்கும்.
எல்லா வீட்டிலயும் சிவாஜி ஏதாவது ஒரு ரூபத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்:)
அருமையான செய்தி அவரைப் பற்றி. நன்றி ஸ்ரீராம்.
ஹா.. ஹா.. ஹா...
நீக்கு"ஆட்டம் அதிகமா இருக்கே" என்பார் பாலையா இரண்டு அர்த்தத்தில்!
நன்றி வல்லிம்மா.
நாகவல்லி என்றதும் இரண்டு நினைவுக்கு வந்தன ஒன்று தெலுங்கு படம்...
பதிலளிநீக்குமற்றொன்று மணிச்சித்திரத்தாழ் படத்தில் வரும் அந்த கேரக்டர்!!
கீதா
ஓ... அப்படியா? எனக்குத் தெரியாது.
நீக்குஉங்கள் அண்ணா மகன் திருமணத்தில்
பதிலளிநீக்குமணையில் உட்கார்ந்ததை நானும் சொல்லி இருந்தேனே.
பாணிகிரஹணம் செய்து தருவது என்று:)
ஆமாம் அம்மா... நான் உயோகித்த தாரை வார்த்துக் கொடுப்பது என்பதில் திருத்தம்!
நீக்குபெண்ணைத் தான் பாணிகிரஹணம் செய்து பிள்ளைக்குத் தருவார்கள்.
நீக்குடிரவர் - தெக்கினிக்கி அதே தான் நம் வீட்டிலும் அவரை நம்மோடு அமர வைத்து உண்பது...வீட்டில் நடக்கும் நிகழ்வுகளிலும் கூட. எங்களில் ஒரு சிலர் மட்டும்...ஒரு குழு இருக்கு அவங்க இதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க ஸோ அவங்களை முதல்ல வைச்சு சாப்பாடு போட்டுவிட்டு அப்புறம் நாங்க யாரெல்லாம் எங்க கட்சியோ நாங்க எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுவது வழ்க்கம். இவர்கள் உட்கார்ந்தால் பரிமாறமாட்டேன் என்பவர்களும் உண்டுஎன்பதால் எங்களில் நான் மற்றும் ஓரிருவர் பரிமாறுவோம் அல்லது நபர்கள் குறைவு என்றால் நடுவில் வைத்துக் கொண்டு செல்ஃப் செர்வீஸ் செய்துகொண்டு பரிமாறிக் கொண்டும் சாப்பிட்டுவிடுவோம்...
பதிலளிநீக்குகீதா
இப்போதெல்லாம் அப்படி பரிமாறமாட்டேன் சொல்வதில்லை என்று நினைக்கிறேன் எல்லா பந்திகளிலும் அவரவர்கள் அவரவர்கள் வந்த வண்டியின் டிரைவர்களையும் உட்காரச் சொல்லி விடுவார்கள்.
நீக்குஆமாம் ஸ்ரீராம் அது கல்யாண நிகழ்வுகளில்...
நீக்குநான் குறிப்பிட்டது வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வுகளில்...
கீதா
நாங்க எப்போவுமே உட்காரச் சொல்லிடுவோம். பயணங்களின் போது கூட நாங்க சாப்பிடும் ஓட்டலிலேயே டிரைவரையும் சாப்பிடச் சொல்லுவோம். கையில் கொண்டு போனால் காசு கொடுப்போம். பெரும்பாலான டிரைவர்கள் நாம் கையில் கொண்டு போகும் உணவைப் பகிர்ந்து கொள்ளச் சம்மதிப்பதில்லை.
நீக்குபஸ்ஸில் ஏற்றும்போது நம் லக்கேஜ்களை எண்ணி வைக்க வேண்டுமே.. எண்ணினால் எனக்கு மறந்து போகும் என்று படம் எடுத்து வைத்துக் கொண்டேன்!//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா ஹைஃபைவ்!! மீ டூ....இப்ப மொபைல் ஸோ படம் எடுத்துவிடுவது. முன்பு எழுதுவேன் ஒரு பேப்பரில். இதுல என்னாகும்னா எழுதி வைச்சுருப்பேன். திடீர்னு பாத்தீங்கனா மூட்டை மாறும்..இரண்டாகும் இல்லேனா ஒன்றாகும்...மீண்டும் எழுதணும்...கலர் சைஸ் குறியீடு என்று..இப்ப எல்லாம் முடித்த பிறகு படம்...தங்கை பெண்கள் கல்யாணத்தில் இப்படித்தான்.
இந்த என் மறதிக்குத் திட்டு செமையா கிடைக்கும்.....
கீதா
ஏற்றவேண்டிய கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட போட்டோ அது! நாங்கள் காசி சென்றபோது எங்கள் குடும்ப அங்கத்தினர்கள் பெட்டிகளில் ஒரு சிகப்பு நிற ரிப்பனை இணைத்து விட்டோம் - அடையாளத்துக்கு.
நீக்குதிருமணம் இத்தனை களெயபரமாகச் சுற்றி வந்து முடிந்தது
பதிலளிநீக்குநன்மைதான். வந்த தேவதைக்கு வாழ்த்துகள்..
பஸ் எடுத்துச் செல்லும் போது இவ்வளவு தொந்தரவா!!
நல்ல வேளை டிரைவர் சொன்னாரோ,
ஏதோ சில ஆயிரங்களாவது மிச்சம் ஆனது.
மகன் கள் கல்யாணத்தின் போதெல்லாம்
பணம் செலவழிக்க மட்டும் எனக்கு உரிமை
சலுகை இருந்தது.
செக் எழுதிக் கொடுத்ததெல்லாம் பசங்களும் சிங்கமும் தான்.:)
ஆர்கனைசிங்க் மகள் பொறுப்பு.
சூட்கேஸ், லக்கேஜ்களைப் படம் எடுத்துவைப்பது
மிக நல்ல ஏற்பாடு.
எந்த கல்யாணத்தில்தான் கலாட்டா இல்லாமல் இருக்கும் இல்லையா? இதுபோன்ற நிகழ்வுகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் சரியாய் இருக்கும்தான்.
நீக்குஉங்கள் வீட்டுதேவதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
நீக்குநன்றி.
நீக்குஅவர் இவரை 'சாப்பிட்டியா' என்று கேட்டிருப்பார் போலும். அப்போதுதான் அவர் "என்னை இங்கே உனக்கெல்லாம் மேலே பார்த்துக் கொண்டார் ஒருத்தர்" என்று சொல்லி என்னைப் பார்த்துப் புன்னகைத்து விட்டு "அப்பா.. வொய்ஃப் கிட்ட உங்களைத்தான் சொல்கிறேன்" என்றார்.
பதிலளிநீக்குஸ்ரீராம் உங்களை இதற்கு கன்ன பின்னாவென்று வாழ்த்துகிறேன்!!!
//விடைபெறும்போது காசு அதிகம் கேட்கப் போகிறார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்!//
ஹாஹாஹாஹா....இது பலருக்கும் தோன்றும் இல்லையா..
கீதா
அது சரி அந்த கன்னா பின்னாவுக்கு என்ன அர்த்தம்?
நீக்குவாழ்த்துவதற்கு கூடவா கன்னா பின்னா?
நன்றி கீதா. அந்த டிரைவர் சுமைகளை இறக்கி வைத்து வீட்டுக் கிளம்பும் சமயம் பால் வாங்கவேண்டும் என்று பாஸ் சொல்லிக்கொண்டே இருக்க, அவர் சட்டென சென்று இரண்டு பாக்கெட் பால் வாங்கிக்கொண்டுவது பாஸிடம் கொடுத்து வீட்டுக் கிளம்பி விட்டார். அவர் காசில்!
நீக்குஜீவி அண்ணா அது தப்பான வார்த்தையா என்று தெரியாது...ஆனால் அளவில்லா என்று சொல்வதற்கு வீட்டில் என் மகனை அவன் சகோதரிகள் எல்லாம் கன்னாபின்னானு பாராட்டறோண்டா உன்னை என்று சொல்வதுண்டு. ஜாலிக்கு இளையவர்கள் பயன்படுத்தி அது சிலசமயம் ரொம்ப ரசித்த விஷயத்திற்கு இப்படிப் பயன்படுத்திட்டேன். அதைத்தான் இங்கு ஸ்ரீராம், நட்பு என்பதால் பயன்படுத்தினேன்.
நீக்குகீதா
அவர் சட்டென சென்று இரண்டு பாக்கெட் பால் வாங்கிக்கொண்டுவது பாஸிடம் கொடுத்து வீட்டுக் கிளம்பி விட்டார். அவர் காசில்!//
நீக்குஅதான் கிவ் அன்ட் டேக்!! நாம் அன்பு காட்டிவிட்டால் அது நமக்கு இரண்டு மடங்கில் வரும் என்று சொல்லப்படுவதுண்டு. எல்லாருக்கும் பொருந்தாது என்றாலும் ஓரளவு வோர்க்கவுட் ஆகும்.
கீதா
//அன்பு காட்டிவிட்டால் அது நமக்கு இரண்டு மடங்கில் வரும்//
நீக்குஅதுதான் இரண்டு பாக்கெட் பாலோ?!!!
கன்னா பின்னான்னு ஆதரிக்கிறேன், கன்னா பின்னான்னு ஆதரிக்கிறேன் என்பதெல்லாம் சும்மா ஜாலியான வார்த்தைகள்.
நீக்குசிலசமயங்களில் கிண்டலாக, கலாய்ப்பாக இப்படியும் சொல்வதுண்டு..."ஆழ்ந்த மகிழ்ச்சி!
கன்னாபின்னா என்றால் வரம்பில்லாமல் என்று கொள்ளலாமா?
நீக்குதிட்டுவதற்கு தான் இதை உபயோகித்திருக்கிறோம். இந்தக் காலத்தில்ப வாழ்த்துவதற்கும் என்றால்
டபுள் ஓக்கே.
ஆமாம் வரம்பில்லாமல் என்றும் சொல்லலாம்...
நீக்குகன்னபின்னா என்று திட்டுதல் பயன்பாடு நீங்கள் சொல்லியிருப்பது ஆம் நாம் அப்படித்தான் பயன்படுத்டியிருக்கிறோம். அந்த வார்த்தைகள் என்ன என்று சொல்லாமல் அல்லது சொல்ல வராமல் கன்னாபின்னான்னு திட்டியதாகத்தான் சொல்லுவோம்...அது போல அதாவது பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று சொல்வதைக் கூட இப்படி...என்றும் கொள்ளலாம்..
நன்றி ஜீவி அண்ணா
கீதா
அதுதான் இரண்டு பாக்கெட் பாலோ?!!!//
நீக்குஹாஹாஹா.....நீங்க அவருக்கு எத்தனை டீ/காபி வாங்கிக் கொடுத்தீங்க!!!!?
கீதா
ஸ்ரீராம் சொல்லியிருக்கும் கன்னாபின்னாவென்று ஆதரிக்கிறேன்...அதே...
நீக்குகீதா
கன்னாபின்னா என இந்தக் "கன்னாபின்னா"வை ஆதரிக்கிறேன். ஆரம்ப காலங்களில் நாங்க ஒருத்தருக்கொருத்தர் இப்படித் தான் ஆதரவு தெரிவித்திருக்கோம். இப்போல்லாம் குறைந்து விட்டது. நான் மட்டுமே சொல்லணும். மத்தவங்க புரிஞ்சுக்கணுமே!
நீக்குஆமாம். உங்கள் ஞாபகம்தான் முதலில் வரும்.
நீக்குதொழில் ரகசியங்கள் ஏஜன்சி அநியாயங்கள், கப்சிப் ஆனது... //
பதிலளிநீக்குஆமாம் இப்படித்தான் பல ஏஜன்சிகள். பல இடங்களில் டிரைவர்கள் பாவம். அதனால்தான் சிலர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள்.
அப்படிப் பேசத் தெரிய வேண்டும் அதாவது ஏஜன்சியிடம் அவர் கப்சிப் ஆவது போல.
கீதா
டிரைவர்கள், வண்டிகள் நம்பர்களை வாங்கி வைத்துக் கொண்டு கமிஷன் பேஸிஸில் இவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். நேரடியாக வண்டிக்கு காரர்களையே பிடித்து விட்டால் செலவு கம்மி.
நீக்குமேடையேறும் பொறுப்பில்லாமல் சும்மா விருந்து மட்டும் உண்ணுவதில் புதிய சுகம் தெரிந்தது. //
பதிலளிநீக்கு!!!!!!!!!!!!! அனுபவம்!!!?
மினி டிஃபன் போல...சின்ன ஊத்தப்பம், சின்ன தோசை, கொஞ்சம் பொங்கல், இரு இட்லி....அப்புறம் பூரியா? ரொம்ப ஹெவி இல்லையோ??
கீதா
கொஞ்சம் ஹெவிதான். இப்போதெல்லாம் சில திருமணங்களில் இப்படிதான் அமைகிறது. மதியம் ஒரு மணி போல சாப்பாடு சாப்பிட ஏதுவாக இருக்கும்!
நீக்குஇப்படி விருந்தினராய் சென்று மொய் வைத்துவிட்டு சாப்பிட்டு வருவது சுகம்தான், என்ன சொல்கிறீர்கள்?!//
பதிலளிநீக்குடிட்டோ...
கீதா
ரைட்டோ!
நீக்குகோலத்தில் உள்ள அரிசி பருப்புகளை என்ன செய்வார்கள்? தானம் கொடுக்கப்படுமா?
பதிலளிநீக்குதாரை வாங்கியதற்கு பரிசு பானை!
ஸீ தேர்
சிறையில் தேர்
சா தேர்
சாரம் கட்டிய தேர்
வெண்ட் தேர்
வெறும் தேர்
பல இன்சூரன்ஸ் கம்பெனிகளும் பாலிசிகளை விற்பதே குறியாக உள்ளன. தொடர் சேவை கிளைம் செட்டில்மென்ட் போன்றவை எப்போதும் தாமதம், மற்றும் ஏமாற்றுதல்.
மைத்துனர் சமீபத்தில் ஆசுபத்திரியில் இறந்தார். இன்சூரன்ஸ் உண்டு. ஆசுபத்திரி அதை பொருட்படுத்தவில்லை. cash and carry என்று சொல்லிவிட்டார்கள். பின்னர் இன்சூரன்ஸ் கம்பெனியை சமீபித்தபோது, ஒன்றும் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இதில் யாரை குற்றம் சொல்வது. வக்கீல் வழக்கு என்று மேலும் செல்ல முடியவில்லை. இன்சூரன்ஸ் எடுத்தவர் உயிரோடு இல்லை.
Jayakumar
இதுமாதிரி அட்றாஸிட்டி செய்யும் நிறுவனங்களும் உண்டுதான். ஆனால் அதே சமயம் இந்த பாலிஸிகள் நிச்சயம் ஓரளவுக்காவது உதவும். பாலிஸி போடத்தொடங்கிய முதல் மூன்று வருடங்களுக்கு நாள்பட்ட நோய்களுக்கு பணம் வராது என்பார்கள்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா.. வாங்க..
நீக்குசிவாஜியைப் பற்றி யூ ட்யூபில் கேட்கும் விஷயங்கள் அவர் மீது பிரமிப்பை அதிகரிக்கின்றன.
பதிலளிநீக்குசுவாரஸ்யமாகவும் இருக்கும்.
நீக்குஉங்கள் செயல் - ஓட்டுநர் மனமாற்றம் - அருமை...
பதிலளிநீக்குசூட்கேஸ் படம் - அடடே ஐடியா...!
ஐடியா ஓகே. ஆனால் செல்ஃபோனில் டேட்டா இருக்க வேண்டும், சார்ஜ் இருக்க வேண்டும். ஒரு முறை ரயிலில் ஏறி விட்டோம். டி.டி.யிடம் டிக்கெட் காண்பிக்க வேண்டிய நேரத்தில் என்க்ஷ கணவரின் செல்ஃபோனில் சார்ஜ் காலி. ரயிலில் சார்ஜ் போட்டு அதை காண்பிக்கும் வரை பதட்டம். இன்னொரு முறை ஏர்போர்ட்டில் நெட்வொர்க் கிடைக்காமல் சுற்றிக் கொண்டே இருந்து படுத்தியது.
நீக்குநன்றி DD.
நீக்குஎடுத்த படத்தை உடனே இரண்டு மூன்று பேர்களுக்கு பார்வேர்ட் செய்து விட்டால் போச்சு..
சிக்கல் ஷண்முகசுந்தரமாக அவர் வாழ்ந்திருந்ததற்கு ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என்று ஆச்சர்யமாக இருக்கும். நாதஸ்வர வித்வானின் மேனரிஸங்களை(துண்டை கையில் வைத்துக் கொண்டு பேசுவது உள்பட) அப்படியே செய்திருப்பார்.
பதிலளிநீக்குதில்லானா மோகனாம்பாள் படத்திற்கு நாம் கொடுக்கும் காசு நலந்தானா பாடலுக்கு முன் ஆடிக்கொண்டை வரும் பத்மினி சிவாஜியிடம் கண்ணாலேயே நலமா என்று கேட்க, அதற்கு சிவாஜி மிக அழகாக தலையசைக்கும் காட்சிக்கே சரியாகிவிடும்.
ஆமாம், ரசிக்கவேண்டிய காட்சிகள்.
நீக்குபானுக்கா அதே அதே. நான் மிகவும் ரசித்த படம் இது. நாதஸ்வர வித்வான் கேரக்டரில் வாழ்ந்திருப்பார்
நீக்குகீதா
ஜிவாஜியை வேணா ரசிச்சிருக்கலாம். ஆனால் பத்மினி? ஹிஹிஹி! நாட்டியமா அது? இதில் நாட்டியப் பேரொளினு பட்டம் வேறே! :)))) க்ரேஸ் எனப்படும் எழிலே/நளினமே இல்லாத நடிகை. :( நடிப்பில் பெயர் வாங்கினார் என்பது வேறு விஷயம்.
நீக்குஅந்த உடம்பை வைத்துக்கொண்டு ஆடினாரே.. பாராட்ட வேண்டும்.
நீக்குஅது சரி! :)))))
நீக்குஉண்மைதான் உறவுகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வது சந்தோஷமான விசயம்தான் ஜி ....
பதிலளிநீக்குஉண்மை. தங்கள் கருத்துரைக்கு நன்றி தேவகோட்டை ஜி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்.
நீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.
நீக்குஇமயம் போல் நடிகர் திலகம்!..
பதிலளிநீக்குஆனாலும்,
இதெல்லாம்!.. என்று
இளக்காரமாத் தான் சொல்லுவோம்...
அப்பதான் எங்களுக்கு குஷி..
:>))
நீக்குகாப்பீடு நல்லாருக்குதான்
பதிலளிநீக்குஆனால் டயபெட்டிக் இருப்பவர்களுக்குக் கிடைப்பது சிரமம்...ஆனால் இல்லாதது போலச் சொல்லி எடுப்பதும் நடக்கிறதுதான்.
கீதா
Yes, எல்லாவற்றுக்கும் ஏகப்பட்ட விதிகள் வைத்திருக்கிறார்கள்.
நீக்குபஸ் டிரைவர் பற்றித் தான். எல்லாவற்றையும் எப்படி இப்படி பொது வெளியில் வெள்ளந்தியாகப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஎன் எழுத்தாள அனுபவம் பிறர்
பற்றி எது எழுதினாலும் யார் என்ன என்று தெரியாதவாறு
மறைத்து விடுவேன்.
நானும் அப்படிச் செய்வதுண்டு. எங்கள் இல்லத்திருமணம் பற்றிச் சொல்லும்போது எப்படி மறைக்க?
நீக்குவண்டி டிரைவர் சம்பந்தப்பட்டவை பற்றித் தானே குறிப்பிட்டிருந்தேன்?
நீக்குஓ.. அதிலென்ன பெரிய ரகசியம் என்று நினைத்தேன்
நீக்குஹெல்த் பாலிஸி பற்றி பொத்தாம் போக்கில் ஏதாவது எழுதுவதற்கு உதாரணம் அந்த தினமலர் கட்டுரை.
பதிலளிநீக்குஎல்லோரும் ஹெல்த் பாலிசி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது என்பது அதன் சாராம்சம். நான் மூன்று வருடங்களாகத்தான் பாலிஸி எடுத்து வைத்திருக்கிறேன்
நீக்குஎல்லோருக்குமானவை அல்ல அவை. குறிப்பாக 75 வயது மேலானவர்களுக்கு உபயோகமான ஹெ. பாலிசி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.
நீக்குஎல்லாம் நீ அவலைக் கொண்டு வா. நான் உமியைக் கொண்டு வருகிறேன் கதை தான்.
உண்மைதான். அதுவும் வயது ஏற ஏற சலுகைகள் குறைகின்றன.
நீக்குமுன்னாடி ஒரு தடவை, இப்போ ஒரு தடவை ஜவர்லால் எபியில் வந்து விட்டார்.
பதிலளிநீக்குஅவரும் எபிக்கு வந்தால் நன்றாகத் தான் இருக்கும்.
ஹா.. ஹா... ஹா...
நீக்குஅவர் ஒரு சுதந்திரப் பறவை. இங்கெல்லாம் வரமாட்டார்.
முக நூல் பிரியர்களுக்கு பிலாக் சகவாசம்லாம் ஒத்துவராது என்று சொல்லியிருந்தாலும் புரிந்து கொள்ள முடிந்திருக்கும்.
நீக்குஉபரி தகவல்: எனக்கு மிகவும் பிடித்த முக நூலார் நம்ப மும்பை மோகன் தான். தன்னை ஃபேஸ் புக்குக்காக மாற்றிக் கொள்ளாமல் அங்கேயும் இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கும்
அற்புத எழுத்துக் கலைஞர் அவர்.
உண்மக. அவர் தமிழறிஞர். சுவைபட எழுதுபவர்.
நீக்குஅன்பிற்கு நன்றி ஜீவி சார் மற்றும் ஶ்ரீராம். உண்மையில் முகநூலில் இயங்கத் தொடங்கியபின் பிளாக் பக்கம் வருதல் குறைந்து விட்டது.
நீக்குஉற்சாகமான பெரிய குழுவாக இயங்கிய நண்பர்கள் பெரும்பாலானவர்கள் பிளாகை விட்டு முகநூலுக்கு சென்று விட்ட சோர்வும், நிறைய பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டதால் உருவான நேரமின்மையும் காரணம். ஒரு சுபயோக சுபதினத்தில் மீள் பிரவேசம் பண்ணுவது 2022க்கான பிரதிஞை 👍
திருமணம், அதற்கான பயணம், டிரைவர் மஹாத்மியம் யாவுமே சுவாரஸ்யம்.
நாகவல்லி விவரங்களுக்கு, நானும் ‘மனவாடு’ என்ற முறையில் பாராட்டுகளைத் தெரிவித்தும் கொள்கிறேன்.
“ மா இண்ட்டி பப்பு இஸ்தானு!
மீ இண்ட்டி உப்பு தெஸ்தாவா?”
இந்தக் கொடுக்கல் வாங்கலே சம்சார பந்தத்தின் சாரம்
ஓ. நம்ப மோகன் இங்கு வந்து பார்த்து படித்து கருத்தையும் பகிர்ந்து விட்டாரே! என்னே எபியின் மஹாத்மியம்..!!
நீக்கு'22-ல் நீங்கள் சொன்னது நடக்கட்டும், மோகன் ஜி! உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம் ஜி!!
நன்றி மோகன் அண்ணா, ஜீவி ஸார்.. சந்தோஷமாக இருக்கிறது.
நீக்குஹாட்ஸ் ஆஃப் டு சிவாஜி!!! என்ன உழைப்பு இல்லையா? இப்படித்தான் ஒரு கலைஞன் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குபியானோ வாசிப்பதும் நாதஸ்வரம் வாசிப்பதும் பெட்டிச் செய்தியில் சொல்லியிருப்பதை டிட்டோ செய்கிறேன்.
பொதுவாகப் படத்தில் நடிகர்கள் வாசிப்பதை சும்மா கொஞ்சம் செகன்ட்ஸ் காட்டிவிட்டு கேமரா சுற்றத் தொடங்கிவிடும். ஆனால் சிவாஜி சீன் பார்த்தீர்கள் என்றால் காமரா அவரையே சுற்றி வாசிப்பதையும் காட்டுவாங்க...
சிவாஜிய நாம அவர் எக்ஸ்ப்ரெஷன்ஸ் ஓவர்னு சொல்லிக் கிண்டல் பண்றோம்...பல பாடகர்கள் பாடும் போது கொடுக்கும் எக்ஸ்ப்ரஷன்ஸ்? அவங்க அதுல லயிச்சு செய்யறாங்க....கொஞ்சம் நேரம்முன்னர்தான் ராஜேஷ் வைத்தியா வீணை பந்துவராளி வாசிப்பு வீடியோ ஒன்று மகன் எனக்கு அனுப்பியிருந்ததைப் பார்த்தேன்...அதில் அவர் எக்ஸ்ப்ரஷன்ஸ் வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பந்துவராளியின் பல ரகசியகங்களை அள்ளித் தெளிக்கிறார். நான் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்..
அது போல மாயோன் டைட்டில் பாடல்!! செம! ராஜா செமையா போட்டிருக்கார். அந்தப் பாட்டு ராக அமைப்பு டிஸ்கஷந்தான் இன்று மகனோடு, என் தம்பி, தங்கையோடு போய்க் கொண்டு இருக்கிறது.
அந்தப் பாடல் வீடியோவில் கூடப் பார்த்தால் ராஜா, ரஞ்சனி காயத்ரி எக்ஸ்பெர்ஷன்ஸ் பார்க்கலாம். லயிப்பு!!
அது போல சிவாஜியும் என்றுதான் நான் எடுத்துக் கொள்வது.
கீதா
சென்னையில் ஒரு அமெரிக்கக் குழு வண்டுக்கு இசை நிகழ்ச்சி செய்து விட்டுப்போனநேரம் சிவாஜி அதைப் பொய் பார்த்து வந்தாராம். அதை உபயோகப்படுத்திதான் புதிய பறவை படத்தில் "எங்கே நிம்மதி" பாடல் காட்சியில் நடித்தாராம். மேலும் ஒரு தகவல். அதற்கு எப்படி லிரிக்ஸ் எழுதுவது என்று கிடைக்காமல் இருக்கும்போது (காட்சி அமைப்பு சொல்லியிருக்கும்படியால்) சிவாஜியிடம் இந்தக் காட்சிக்கு என்ன மாதிரி பாவம் கொடுப்பீர்கள் என்று கேட்டார்களாம். அவர் செய்து காண்பித்ததும் பாடல் வரிகள் எழுதப்பட்டதாம்.
நீக்குஎங்கே நிம்மதி பாடல் - தகவலுக்கு நன்றி ஸ்ரீராம் அவர் தனக்குக் கொடுக்கப்படும் கேரக்ட்டரை இப்படிப் பார்த்து மேனரிஸம் எல்லாம் கூர்ந்து பார்த்துச் செய்வதுண்டு என்பதும் மட்டுமல்ல அவர் நினைவுத்திறன் பற்றியும் வியப்பு!! கடைசி வரி.....அவர் எக்ஸ்ப்ரஷன் வைச்சு பாட்டு!! நிஜமாகவே அவர் அசாத்திய கலைஞர் - ஸ்டால்வெர்ட் என்பதை மறுக்க முடியாதுதான்.
நீக்குகீதா
🍀🍀🙏🌼🌼👍
நீக்குதில்லானா மோகனாம்பாள் படம் நல்ல படம். எங்கள் ஊர்த் தேரடியில் ரசித்துப் பார்த்த படம்.
பதிலளிநீக்குஆஹா தேரடி என்று எழுதிவிட்டுக் கீழே பார்த்தால் அங்கும் ஒரு தேரடி!!!
சீ தேர் சிறையில் தேர்!!!! ரசித்து முடியலை எப்படி இப்படி உங்களால் டக்கென்று இவ்வளவு அழகாகச் சொல்ல முடிகிறது என்று!!
அதுக்கு இணையாக ஜவஹர் அவர்களின் சா தேர் சாரம் கட்டின தேர்!!
மருமகனும் மாமனு ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை!!!!!! இரண்டையும் ரசித்தேன்..
கீதா
கூடவே சிரிப்பும் வந்தது!!!!
நீக்குகீதா
ரசித்திருப்பதறகு நன்றி கீதா.
நீக்குகீதா சகோ.
நீக்குதில்லானா மோகனாம்பாள் தொடர்கதை கொத்தமங்கம் சுப்பு அவர்களின் அற்புத படைப்பு. ஆ.வி.யில் வெளிவந்தது. கிடைத்தால் விடாதீர்கள்.
கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்
நீக்குகலைமணி என்ற பெயரில் அந்த நாவலை எழுதியிருந்தார்.
என்னிடம் பி டி எஃபாக இருக்கிறது.
நீக்குதி/கீதா, என்னிடமும் உள்ளது. ஆனால் சித்தப்பாவிடம் அந்தக் காலத்து கோபுலு படங்களோடு இருந்தது. கடைசியில் அதை வாங்கிப் போனது தி.மோ.தயாரிப்பாளர்கள் தாம். பின்னர் திரும்ப வரவில்லை. அதில் முதல் அத்தியாயம் "அழகுமலைப்பாதை" என வரும். தமிழ் கொஞ்சி விளையாடும். அதிலும் சங்கீத பாஷையில் வரதன் என்னும் மிருதங்கக்காரரும் மோகனாவும் பேசிக்கொள்வது இருக்கே! அபாரம்!
நீக்குஎன் மகனின் நண்பர் பெயர் 'கலைஞன்'. அவர் மகன் பெயர் 'அறிவன்'
பதிலளிநீக்குகீதா
தமிழ்க்குடும்பமோ...!!
நீக்குஆமாம்...!!!!
நீக்குகீதா
அறிவன் அறிவன் என்னும் ஒரு பதிவுலக நண்பர் மலேசியாவிலோ/சிங்கப்பூரிலோ வாழ்பவர் எனக்குப் பத்தாண்டுகளுக்கும் மேலாக அறிமுகம். அவர் மகன் மூன்று வயதிலேயே தேவாரப் பாடல்களைப் பாடுவார்.
நீக்குநான் இப்போது செல்ஃபோனில் தான் குப்பை கொட்டுகிறேன். பெயர் பற்றிய உங்கள் முகநூல் தகவல் பகுதியை பெரிதாக்க முடியவில்லை.
பதிலளிநீக்குமதியம் முதல் நானும் அவ்வண்ணமே.. கணினியில் இணையத் தொடர்பு வரவில்லை.
நீக்குகாலையிலேயே சொல்ல விட்டுப் போச்சு ஸ்ரீராம்!! பதிவின் ஆகக் கடைசி!
பதிலளிநீக்குஹலோ என் பெயர்
கேள்விக்குறி!!!
கீதா
:-))
நீக்கு// எங்கள் வீட்டுக்கு ஒரு மஹாலக்ஷ்மியையும் அழைத்துக்கொண்டு திரும்பினோம்.//
பதிலளிநீக்குவீட்டுக்கு வந்த மஹாலக்ஷ்மிக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
பொருட்களை போட்டோ எடுத்து வைத்து கொண்டது, டிரைவரிடம் மிக கவனமாக இருந்தது எல்லாம் எடுத்து கொண்ட பொறுப்பை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சி தெரிகிறது.
//இந்த நாகவல்லி பானை ஒன்றை வீட்டில் வாங்கி வைத்துக்கொண்டால் திருமணம் தாமதம் ஆகும் நபர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆகும் எங்கிற நம்பிக்கை ஒன்று உண்டு. நாங்களும் ஒன்று வாங்கி வைத்துக் கொண்டோம்.//
நாகவல்லி சடங்கு படம் அருமை.
என்ன நினைத்து வாங்கி வைத்து கொண்டீர்களோ அந்த எண்ணம் நடக்க வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கும் நன்றி கோமதி அக்கா.
நீக்குஒரு சின்னஞ்சிறு மின்னம் மினி கதை, சாரம் கட்டினத்தேர் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஇன்று பதிவுகளுக்கு கொடுத்த கருதக் போகவில்லை.
பதிலளிநீக்கு*கருத்து
பதிலளிநீக்குஏன்? இந்தக்கருத்து வந்திருக்கிறதே.. என்ன கருத்து கொடுத்தீர்கள்?
நீக்குசுவாரஸ்யமான பகிர்வு.
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
நீக்குமணமக்களுக்கு நல்வாழ்த்துகள்! அனுபவப் பகிர்வு மிக சுவாரஸ்யம்:)!
பதிலளிநீக்குதொகுப்பு நன்று.